நி – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 6
நிகழ்த்தின் 1
நிகழ்ந்தது 1
நிகழா 1
நிகழும் 1
நிண 1
நிணம் 2
நித்தில 1
நிதி 1
நிதிக்கு 1
நிதியின் 1
நிதியும் 1
நிதியே 1
நிதியோடு 2
நிமிர்த்து 1
நிரம்பிய 1
நிருத்தம் 1
நிருத்தன் 1
நிரை 4
நிரை_வளையே 1
நிரைக்க 1
நிரைத்து 2
நில் 1
நில்லா 2
நிலத்து 3
நிலத்தே 1
நிலம் 1
நிலவி 2
நிலவு 2
நிலனும் 2
நிலாவிடும் 1
நிலை 1
நிவந்த 2
நிழல் 2
நிழல்-வாய் 1
நிழலில் 1
நிற்க 1
நிற்கல் 1
நிற்கலுற்று 1
நிற்கிலே 1
நிற்கும் 4
நிற்குமாறு 1
நிற்பதாவது 1
நிற்பது 2
நிற்பர் 1
நிற்பவன் 1
நிற்பித்த 1
நிற்பின் 1
நிற்றல் 1
நிற 13
நிறம் 2
நிறமும் 1
நிறை 4
நிறைத்த 1
நிறையும் 1
நிறைவிற்கும் 1
நின் 25
நின்-வாய் 1
நின்ற 14
நின்றது 3
நின்றதுவே 1
நின்றவர் 2
நின்றவர்க்கோ 1
நின்றவன் 1
நின்றார் 2
நின்றார்கள் 1
நின்றால் 1
நின்றாள் 1
நின்றான் 2
நின்று 42
நின்றே 1
நின்றேமுக்கு 1
நின்றோன் 12
நின்றோன்-தனது 1
நின்றோனை 1
நின்னின் 1
நின்னுடை 1
நின்னை 4
நின்னையும் 1
நின்னொடு 1
நின 1
நினக்கு 1
நினது 2
நினை 1
நினைந்து 1
நினைந்தோ 1
நினைப்பின் 1
நினைப்பு 1
நினையா 1
நினையாது 1
நினையின் 1
நினைவார் 1
நினைவித்து 1

நிகர் (6)

மாடம் செய் பொன் நகரும் நிகர் இல்லை இ மாதர்க்கு என்ன – திருக்கோ:129/1
பாண் நிகர் வண்டினம் பாட பைம்பொன் தரு வெண் கிழி தம் – திருக்கோ:183/1
சேண் நிகர் காவின் வழங்கும் புன்னை துறை சேர்ப்பர் திங்கள் – திருக்கோ:183/2
வாள் நிகர் வெள் வளை கொண்டு அகன்றார் திறம் வாய்திறவாய் – திருக்கோ:183/3
பூண் நிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர் கடலே – திருக்கோ:183/4
கோள் அரிக்கு நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர் தார் – திருக்கோ:225/3
மேல்


நிகழ்த்தின் (1)

நிகழும் நிகழா நிகழ்த்தின் அல்லால் இது நீ நினைப்பின் – திருக்கோ:181/2
மேல்


நிகழ்ந்தது (1)

நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய – திருக்கோ:289/2
மேல்


நிகழா (1)

நிகழும் நிகழா நிகழ்த்தின் அல்லால் இது நீ நினைப்பின் – திருக்கோ:181/2
மேல்


நிகழும் (1)

நிகழும் நிகழா நிகழ்த்தின் அல்லால் இது நீ நினைப்பின் – திருக்கோ:181/2
மேல்


நிண (1)

உணங்கல் அஞ்சாது உண்ணலாம் ஒள் நிண பலி ஒக்குவல் மா – திருக்கோ:235/3
மேல்


நிணம் (2)

நிணம் தாழ் சுடர் இலை வேல கண்டேன் ஒன்று நின்றதுவே – திருக்கோ:34/4
நிணம் குற்ற வேல் சிவன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:283/3
மேல்


நித்தில (1)

வடுத்தன நீள் வகிர்_கண்ணி வெண் நித்தில வாள் நகைக்கு – திருக்கோ:267/1
மேல்


நிதி (1)

குன்றம் கிடையும் கடந்து உமர் கூறும் நிதி கொணர்ந்து – திருக்கோ:268/1
மேல்


நிதிக்கு (1)

வறியார் இருமை அறியார் என மன்னும் மா நிதிக்கு
நெறி ஆர் அரும் சுரம் செல்லல் உற்றார் நமர் நீண்டு இருவர் – திருக்கோ:333/1,2
மேல்


நிதியின் (1)

கதுமென போக்கும் நிதியின் அருக்கும் முன்னி கலுழ்ந்தால் – திருக்கோ:275/2
மேல்


நிதியும் (1)

எல்லா நிதியும் உடன் விடுப்பான் இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:271/2
மேல்


நிதியே (1)

முன் கடை-கண் இது காண் வந்து தோன்றும் முழு நிதியே – திருக்கோ:298/4
மேல்


நிதியோடு (2)

மேவிய மா நிதியோடு அன்பர் தேர் வந்து மேவினதே – திருக்கோ:349/4
சூழும் தொகு நிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றியதே – திருக்கோ:350/4
மேல்


நிமிர்த்து (1)

வரை அன்று ஒருகால் இரு கால் வளைய நிமிர்த்து வட்கார் – திருக்கோ:152/1
மேல்


நிரம்பிய (1)

அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐய மெய்யே – திருக்கோ:202/2
மேல்


நிருத்தம் (1)

நிருத்தம் பயின்றவன் சிற்றம்பலத்து நெற்றி தனி கண் – திருக்கோ:62/1
மேல்


நிருத்தன் (1)

தீ மேவிய நிருத்தன் திருச்சிற்றம்பலம் அனைய – திருக்கோ:344/1
மேல்


நிரை (4)

அயல் உளவே முத்தம் ஒத்த நிரை அரன் அம்பலத்தின் – திருக்கோ:35/2
நிரை அன்று அழல் எழ எய்து நின்றோன் தில்லை அன்ன நின் ஊர் – திருக்கோ:152/2
கொடி தேர் மறவர் சூழாம் வெம் கரி நிரை கூடின் என் கை – திருக்கோ:216/1
நின்றவர் தூது-கொல்லோ வந்து தோன்றும் நிரை_வளையே – திருக்கோ:280/4
மேல்


நிரை_வளையே (1)

நின்றவர் தூது-கொல்லோ வந்து தோன்றும் நிரை_வளையே – திருக்கோ:280/4
மேல்


நிரைக்க (1)

கூளி நிரைக்க நின்று அம்பலத்து ஆடி குறை கழல் கீழ் – திருக்கோ:151/1
மேல்


நிரைத்து (2)

குயில் குலம் கொண்டு தொண்டை கனி வாய் குளிர் முத்தம் நிரைத்து
அயில் குல வேல் கமலத்தில் கிடத்தி அனம் நடக்கும் – திருக்கோ:36/2,3
ஆளி நிரைத்து அடல் ஆனைகள் தேரும் இரவில் வந்து – திருக்கோ:151/3
மேல்


நில் (1)

வரல் வேய்தருவன் இங்கே நில் உங்கே சென்று உன் வார் குழற்கு ஈர்ம் – திருக்கோ:119/3
மேல்


நில்லா (2)

நில்லா வளை நெஞ்சம் நெக்குருகும் நெடும் கண் துயில – திருக்கோ:192/1
என் செய்த நெஞ்சும் நிறையும் நில்லா எனது இன் உயிரும் – திருக்கோ:278/2
மேல்


நிலத்து (3)

தோயும் நிலத்து அடி தூ மலர் வாடும் துயரம் எய்தி – திருக்கோ:3/2
தனி தரும் இ நிலத்து அன்று ஐய குன்றமும் தாழ் சடை மேல் – திருக்கோ:98/2
நெருப்பர்க்கு நீடு அம்பலவருக்கு அன்பர் குலம் நிலத்து
கரு பற்று விட்டு என கொய்தற்றது இன்று இ கடி புனமே – திருக்கோ:143/3,4
மேல்


நிலத்தே (1)

திறம் திரிந்து ஆர்கலியும் முற்றும் வற்றும் இ சேண் நிலத்தே – திருக்கோ:213/4
மேல்


நிலம் (1)

விண் இறந்தார் நிலம் விண்டலர் என்று மிக்கார் இருவர் – திருக்கோ:107/1
மேல்


நிலவி (2)

பொன்னி வளைத்த புனல் சூழ் நிலவி பொலி புலியூர் – திருக்கோ:317/1
நிலவி நிறை மது ஆர்ந்து அம்பலத்து நின்றோன் அருள் போன்று – திருக்கோ:365/3
மேல்


நிலவு (2)

ஆண்டு எல்லை தீர் இன்பம் தந்தவன் சிற்றம்பலம் நிலவு
சேண் தில்லை மா நகர்-வாய் சென்று சேர்க திரு தகவே – திருக்கோ:214/3,4
அயல் வந்த ஆடு அரவு ஆடவைத்தோன் அம்பலம் நிலவு
புயல் வந்த மா மதில் தில்லை நல் நாட்டு பொலிபவரே – திருக்கோ:381/3,4
மேல்


நிலனும் (2)

புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்பும் தன் பூம் கழலின் – திருக்கோ:17/1
எண் நீர்மையின் நிலனும் குழியும் விரல் இட்டு அறவே – திருக்கோ:345/4
மேல்


நிலாவிடும் (1)

நீயும் நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள் குரவே – திருக்கோ:241/4
மேல்


நிலை (1)

இயல் மன்னும் அன்பு தந்தார்க்கு என் நிலை இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:395/1
மேல்


நிவந்த (2)

உறும் கள் நிவந்த கணை உரவோன் பொடியாய் ஒடுங்க – திருக்கோ:95/1
தெறும் கண் நிவந்த சிற்றம்பலவன் மலை சிற்றிலின்-வாய் – திருக்கோ:95/2
மேல்


நிழல் (2)

விரை என்ன மெல் நிழல் என்ன வெறியுறு தாது இவர் போது – திருக்கோ:152/3
நிழல் தலை தீ நெறி நீர் இல்லை கானகம் ஓரி கத்தும் – திருக்கோ:206/1
மேல்


நிழல்-வாய் (1)

எ மலர் சூடி நின்று எ சாந்து அணிந்து என்ன நல் நிழல்-வாய்
அம் மலர் வாள் கண் நல்லாய் எல்லி-வாய் நுமர் ஆடுவதே – திருக்கோ:153/3,4
மேல்


நிழலில் (1)

செழும் குலை வாழை நிழலில் துயில் சிலம்பா முனை மேல் – திருக்கோ:250/2
மேல்


நிற்க (1)

கதி உடையான் கதிர் தோள் நிற்க வேறு கருது நின்னின் – திருக்கோ:292/3
மேல்


நிற்கல் (1)

பொய் கொண்டு நிற்கல் உற்றோ புலை ஆத்தின்னி போந்ததுவே – திருக்கோ:386/4
மேல்


நிற்கலுற்று (1)

யான் இற்றை யாமத்து நின் அருள் மேல் நிற்கலுற்று சென்றேன் – திருக்கோ:159/3
மேல்


நிற்கிலே (1)

தொழுவார் வினை நிற்கிலே நிற்பதாவது இ தொல் புனத்தே – திருக்கோ:142/4
மேல்


நிற்கும் (4)

மண்ணை மடங்க வரும் ஒரு காலத்தும் மன்னி நிற்கும்
அண்ணல் மடங்கல் அதள் அம்பலவன் அருள் இலர் போல் – திருக்கோ:75/2,3
நெருப்பனை அம்பலத்து ஆதியை உம்பர் சென்று ஏத்தி நிற்கும்
திரு பனையூர் அனையாளை பொன் நாளை புனைதல் செப்பி – திருக்கோ:137/2,3
நணி நிற்கும் இது என் என்பதே இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:342/2
நெல் படு வான் பலி செய்து அயரா நிற்கும் நீள் நகர்க்கே – திருக்கோ:348/4
மேல்


நிற்குமாறு (1)

வந்தார் பரிசும் அன்றாய் நிற்குமாறு என் வள மனையில் – திருக்கோ:391/3
மேல்


நிற்பதாவது (1)

தொழுவார் வினை நிற்கிலே நிற்பதாவது இ தொல் புனத்தே – திருக்கோ:142/4
மேல்


நிற்பது (2)

இவ்வாறு இருக்கும் என்றே நிற்பது என்றும் என் இன் உயிரே – திருக்கோ:169/4
ஊட்டி அன்றே நிற்பது ஓடியவாறு இவள் உள்ளம் எல்லாம் – திருக்கோ:284/2
மேல்


நிற்பர் (1)

வேரியம் சந்தும் வியல் தந்து என கற்பின் நிற்பர் அன்னே – திருக்கோ:301/3
மேல்


நிற்பவன் (1)

ஏத்தும்படி நிற்பவன் தில்லை அன்னாள் இவள் துவள – திருக்கோ:173/2
மேல்


நிற்பித்த (1)

பாலன் புகுந்து இ பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே – திருக்கோ:286/4
மேல்


நிற்பின் (1)

கிளியை மன்னும் கடிய செல்ல நிற்பின் கிளர் அளகத்து – திருக்கோ:64/2
மேல்


நிற்றல் (1)

முலை கீழ் சிறிது இன்றி நிற்றல் முற்றாது அன்று இலங்கையர்_கோன் – திருக்கோ:59/2
மேல்


நிற (13)

கரும் குன்றம் வெள் நிற கஞ்சுகம் ஏய்க்கும் கனம்_குழையே – திருக்கோ:15/4
வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்_இயலை மல்லல் – திருக்கோ:58/1
வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்_இயலை மல்லல் – திருக்கோ:58/1
மின் நிற நுண் இடை பேர் எழில் வெள் நகை பைம் தொடியீர் – திருக்கோ:58/3
பொன் நிற அல்குலுக்கு ஆமோ மணி நிற பூம் தழையே – திருக்கோ:58/4
பொன் நிற அல்குலுக்கு ஆமோ மணி நிற பூம் தழையே – திருக்கோ:58/4
செ நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:69/1
அம் நிற மேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும் – திருக்கோ:69/2
மை நிற வார் குழல் மாலையும் தாதும் வளாய் மதம் சேர் – திருக்கோ:69/3
பல் நிற மாலை தொகை பகலாம் பல் விளக்கு இருளின் – திருக்கோ:175/2
கொன் நிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே – திருக்கோ:175/4
நிற வரை மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:260/3
நிற பொன் புரிசை மறுகினின் துன்னி மட நடை புள் – திருக்கோ:328/3
மேல்


நிறம் (2)

தன் நிறம் ஒன்றில் இருத்தி நின்றோன்-தனது அம்பலம் போல் – திருக்கோ:58/2
நிறம் மனை வேங்கை அதள் அம்பலவன் நெடு வரையே – திருக்கோ:96/4
மேல்


நிறமும் (1)

இ நிறமும் பெறின் யானும் குடைவன் இரும் சுனையே – திருக்கோ:69/4
மேல்


நிறை (4)

அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன் அணி ஆர் – திருக்கோ:126/1
அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன் அணி ஆர் – திருக்கோ:126/1
துணிய கருதுவது இன்றே துணி துறைவா நிறை பொன் – திருக்கோ:195/3
நிலவி நிறை மது ஆர்ந்து அம்பலத்து நின்றோன் அருள் போன்று – திருக்கோ:365/3
மேல்


நிறைத்த (1)

தூளி நிறைத்த சுடர் முடியோய் இவள் தோள் நசையால் – திருக்கோ:151/2
மேல்


நிறையும் (1)

என் செய்த நெஞ்சும் நிறையும் நில்லா எனது இன் உயிரும் – திருக்கோ:278/2
மேல்


நிறைவிற்கும் (1)

நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின் அல்லால் நினையின் – திருக்கோ:266/2
மேல்


நின் (25)

காலத்தினால் மழை மாறினும் மாறா கவி கை நின் பொன் – திருக்கோ:27/3
மா இயன்று அன்ன மெல் நோக்கி நின் வாய் திறவாவிடின் என் – திருக்கோ:41/3
அம் நிற மேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும் – திருக்கோ:69/2
கழிகின்ற என்னையும் நின்ற நின் கார் மயில்-தன்னையும் யான் – திருக்கோ:76/1
ஊர்வாய் ஒழிவாய் உயர் பெண்ணை திண் மடல் நின் குறிப்பு – திருக்கோ:80/1
ஓவியம் தோன்றும் கிழி நின் எழில் என்று உரை உளதால் – திருக்கோ:88/2
எண்ணிறந்தார்அவர் யார் கண்ணதோ மன்ன நின் அருளே – திருக்கோ:107/4
வழியும் அது அன்னை என்னின் மகிழும் வந்து எந்தையும் நின்
மொழியின் வழிநிற்கும் சுற்றம் முன்னே வயம் அம்பலத்து – திருக்கோ:135/1,2
நிரை அன்று அழல் எழ எய்து நின்றோன் தில்லை அன்ன நின் ஊர் – திருக்கோ:152/2
யான் இற்றை யாமத்து நின் அருள் மேல் நிற்கலுற்று சென்றேன் – திருக்கோ:159/3
வண்ண குவளை மலர்கின்றன சின வாள் மிளிர் நின்
கண் ஒக்குமேல் கண்டு காண் வண்டு வாழும் கரும்_குழலே – திருக்கோ:162/3,4
இந்தீவரம் இவை காண் நின் இருள் சேர் குழற்கு எழில் சேர் – திருக்கோ:163/3
நாகம் மலி பொழில்-வாய் எழில் வாய்த்த நின் நாயகமே – திருக்கோ:171/4
குற பாவை நின் குழல் வேங்கை அம் போதொடு கோங்கம் விராய் – திருக்கோ:205/1
அடி தேரலர் என்ன அஞ்சுவன் நின் ஐயர் என்னின் மன்னும் – திருக்கோ:216/3
கண்கள் தம்மால் பயன் கொண்டனம் கண்டு இனி காரிகை நின்
பண் கட மென் மொழி ஆர பருக வருக இன்னே – திருக்கோ:220/1,2
நின் போல் நடை அன்னம் துன்னி முன் தோன்றும் நல் நீள் நகரே – திருக்கோ:222/4
நீயும் நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள் குரவே – திருக்கோ:241/4
அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு என்னோ நின் அருள் வகையே – திருக்கோ:250/4
தொடர்ந்து ஒறும் துன்பு என்பதே அன்ப நின் அருள் தோன்றுவதே – திருக்கோ:253/4
குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும் நின் குலத்திற்கும் வந்தோர் – திருக்கோ:266/1
அடுத்தன தாம் வரின் பொல்லாது இரவின் நின் ஆர் அருளே – திருக்கோ:267/4
கண்டின மேவும் இல் நீ அவள் நின் கொழுநன் செழும் மெல் – திருக்கோ:302/2
போதல் உற்றார் நின் புணர் முலை உற்ற புரவலரே – திருக்கோ:309/4
சிவன் செய்த சீர் அருள் ஆர் தில்லை ஊர நின் சே இழையார் – திருக்கோ:358/3
மேல்


நின்-வாய் (1)

மை கொண்ட கண்டர் வயல் கொண்ட தில்லை மல்கு ஊரர் நின்-வாய்
மெய் கொண்ட அன்பினர் என்பது என் விள்ளா அருள் பெரியர் – திருக்கோ:386/1,2
மேல்


நின்ற (14)

வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற ஒர் வஞ்சி மருங்குல் – திருக்கோ:22/3
இருளாய் இருக்கும் ஒளி நின்ற சிற்றம்பலம் எனல் ஆம் – திருக்கோ:73/2
கழிகின்ற என்னையும் நின்ற நின் கார் மயில்-தன்னையும் யான் – திருக்கோ:76/1
ஏழாய் எழு பொழிலாய் இருந்தோன் நின்ற தில்லை அன்ன – திருக்கோ:93/2
வெற்பக சோலையின் வேய் வளர் தீ சென்று விண்ணின் நின்ற
கற்பகச்சோலை கதுவும் கல் நாட இ கல் அதரே – திருக்கோ:168/3,4
பற்று ஒன்று இலார் பற்றும் தில்லை பரன் பரங்குன்றில் நின்ற
புற்று ஒன்று அரவன் புதல்வன் என நீ புகுந்து நின்றால் – திருக்கோ:178/1,2
காட்டி அன்றே நின்ற தில்லை தொல்லோனை கல்லாதவர் போல் – திருக்கோ:284/3
காலன் புகுந்து அவிய கழல் வைத்து எழில் தில்லை நின்ற
மேலன் புகுந்து என்-கண் நின்றான் இருந்த வெண் காடு அனைய – திருக்கோ:286/2,3
கண்டல் உற்று ஏர் நின்ற சேரி சென்றான் ஓர் கழலவனே – திருக்கோ:290/4
ஆர் அளவு இல்லா அளவு சென்றார் அம்பலத்துள் நின்ற
ஓரளவு இல்லா ஒருவன் இரும் கழல் உன்னினர் போல் – திருக்கோ:308/2,3
நெருப்பு இனம் மேய் நெடு மால் எழில் தோன்ற சென்று ஆங்கு நின்ற
பொருப்பு இனம் ஏறி தமியரை பார்க்கும் புயல் இனமே – திருக்கோ:319/3,4
கொற்றம் மருவு கொல் ஏறு செல்லா நின்ற கூர்ம் செக்கரே – திருக்கோ:346/4
தக்கு இன்று இருந்திலன் நின்ற செ வேல் எம் தனி வள்ளலே – திருக்கோ:376/4
திருந்தேன் உய நின்ற சிற்றம்பலவர் தென்னம் பொதியில் – திருக்கோ:394/1
மேல்


நின்றது (3)

மாயத்தது ஆகி இதோ வந்து நின்றது என் மன் உயிரே – திருக்கோ:39/4
தீங்கை இலா சிறியாள் நின்றது இவ்விடம் சென்று எதிர்ந்த – திருக்கோ:245/2
உண்டல் உற்றேம் என்று நின்றது ஓர் போழ்து உடையான் புலியூர் – திருக்கோ:290/2
மேல்


நின்றதுவே (1)

நிணம் தாழ் சுடர் இலை வேல கண்டேன் ஒன்று நின்றதுவே – திருக்கோ:34/4
மேல்


நின்றவர் (2)

மாதோ மட மயிலோ என நின்றவர் வாழ் பதியே – திருக்கோ:2/4
நின்றவர் தூது-கொல்லோ வந்து தோன்றும் நிரை_வளையே – திருக்கோ:280/4
மேல்


நின்றவர்க்கோ (1)

கட களி யானை கடிந்தவர்க்கோ அன்றி நின்றவர்க்கோ
விட களி ஆம் நம் விழு நகர் ஆர்க்கும் வியன் முரசே – திருக்கோ:297/3,4
மேல்


நின்றவன் (1)

இடம் ஆ இருக்கலுற்றோ தில்லை நின்றவன் ஈர்ம் கயிலை – திருக்கோ:120/3
மேல்


நின்றார் (2)

வாம் மாண் கலை செல்ல நின்றார் கிடந்த நம் அல்லல் கண்டால் – திருக்கோ:263/3
திறல் இயல் யாழ் கொண்டுவந்து நின்றார் சென்று இரா திசை போம் – திருக்கோ:375/2
மேல்


நின்றார்கள் (1)

சென்றார் திருத்திய செல்லல் நின்றார்கள் சிதைப்பர் என்றால் – திருக்கோ:288/1
மேல்


நின்றால் (1)

புற்று ஒன்று அரவன் புதல்வன் என நீ புகுந்து நின்றால்
மல் துன்று மா மலர் இட்டு உன்னை வாழ்த்தி வந்தித்தல் அன்றி – திருக்கோ:178/2,3
மேல்


நின்றாள் (1)

பலரை பொறாது என்று இழிந்து நின்றாள் பள்ளி காமன் எய்த – திருக்கோ:367/2
மேல்


நின்றான் (2)

பேய் கண்டு அனையது ஒன்று ஆகி நின்றான் அ பெருந்தகையே – திருக்கோ:84/4
மேலன் புகுந்து என்-கண் நின்றான் இருந்த வெண் காடு அனைய – திருக்கோ:286/3
மேல்


நின்று (42)

வளை பயில் கீழ் கடல் நின்று இட மேல் கடல் வான் நுகத்தின் – திருக்கோ:6/1
பயங்கரமாக நின்று ஆண்ட அவயவத்தின் – திருக்கோ:33/2
இவளை கண்டு இங்கு நின்று அங்கு வந்து அத்துணையும் பகர்ந்த – திருக்கோ:33/3
தாது இவர் போது கொய்யார் தையலார் அங்கை கூப்ப நின்று
சோதி வரிப்பந்து அடியார் சுனை புனல் ஆடல்செய்யார் – திருக்கோ:40/1,2
காவி நின்று ஏர்தரு கண்டர் வண் தில்லை கண் ஆர் கமல – திருக்கோ:41/1
முழை கொண்டு ஒருவன் செல்லாமை நின்று அம்பலத்து ஆடும் முன்னோன் – திருக்கோ:65/2
அயல் வளர் குன்றில் நின்று ஏற்றும் அருவி திரு உருவின் – திருக்கோ:117/2
கூடம் செய் சாரல் கொடிச்சி என்றோ நின்று கூறுவதே – திருக்கோ:129/4
தீ விளையாட நின்று ஏ விளையாடி திருமலைக்கே – திருக்கோ:133/4
பொருப்பனை முன் நின்று என்னோ வினையேன் யான் புகல்வதுவே – திருக்கோ:137/4
தாதிடம் கொண்டு பொன் வீசி தன் கள் வாய் சொரிய நின்று
சோதிடம் கொண்டு இது எம்மை கெடுவித்தது தூ_மொழியே – திருக்கோ:138/3,4
கடிவார் களி வண்டு நின்று அலர் தூற்ற பெருங்கணியார் – திருக்கோ:139/2
நினைவித்து தன்னை என் நெஞ்சத்து இருந்து அம்பலத்து நின்று
புனைவித்த ஈசன் பொதியின் மலை பொருப்பன் விருப்பின் – திருக்கோ:140/1,2
செழு வார் கழல் தில்லை சிற்றம்பலவரை சென்று நின்று
தொழுவார் வினை நிற்கிலே நிற்பதாவது இ தொல் புனத்தே – திருக்கோ:142/3,4
கூளி நிரைக்க நின்று அம்பலத்து ஆடி குறை கழல் கீழ் – திருக்கோ:151/1
எ மலர் சூடி நின்று எ சாந்து அணிந்து என்ன நல் நிழல்-வாய் – திருக்கோ:153/3
சினை வளர் வேங்கைகள் யாங்கள் நின்று ஆடும் செழும் பொழிலே – திருக்கோ:154/4
சுரும்பு உறு நீலம் கொய்யல் தமி நின்று துயில் பயின்மோ – திருக்கோ:167/1
புகழும் பழியும் பெருக்கின் பெருகும் பெருகி நின்று
நிகழும் நிகழா நிகழ்த்தின் அல்லால் இது நீ நினைப்பின் – திருக்கோ:181/1,2
விளரும் விழும் எழும் விம்மும் மெலியும் வெண் மா மதி நின்று
ஒளிரும் சடைமுடியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:193/3,4
கோப்பு அணி வான் தோய் கொடி முன்றில் நின்று இவை ஏர் குழுமி – திருக்கோ:196/3
நயம் பற்றி நின்று நடுங்கி தளர்கின்ற நல் நெஞ்சமே – திருக்கோ:198/4
குன்றம் கடந்து சென்றால் நின்று தோன்றும் குரூஉ கமலம் – திருக்கோ:221/2
காயும் கடத்திடை ஆடி கடப்பவும் கண்டு நின்று
வாயும் திறவாய் குழை எழில் வீச வண்டு ஓலுறுத்த – திருக்கோ:241/2,3
நீயும் நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள் குரவே – திருக்கோ:241/4
பூண்டார் இருவர் முன் போயினரே புலியூர் எனை நின்று
ஆண்டான் அரு வரை ஆளி அன்னானை கண்டேன் அயலே – திருக்கோ:244/2,3
நறை கள் மலி கொன்றையோன் நின்று நாடகம் ஆடு தில்லை – திருக்கோ:258/1
இற வரை உம்பர் கடவுள் பராய் நின்று எழிலி உன்னி – திருக்கோ:260/1
வென்றவர் முப்புரம் சிற்றம்பலத்தில் நின்று ஆடும் வெள்ளி – திருக்கோ:280/1
அரசு அம்பலத்து நின்று ஆடும் பிரான் அருள் பெற்றவரின் – திருக்கோ:299/3
தெய்வம் பணிந்து அறியாள் என்றும் நின்று திறை வழங்கா – திருக்கோ:304/2
தரியாமையும் ஒருங்கே நின்று சாற்றினர் தையல் மெய்யின் – திருக்கோ:311/2
நெருங்கு வளை கிள்ளை நீங்கிற்றிலள் நின்று நான்முகனோடு – திருக்கோ:331/2
மூவர் நின்று ஏத்த முதலவன் ஆட முப்பத்துமும்மை – திருக்கோ:337/1
எண் நுழையா தழை கோலி நின்று ஆலும் இன மலர் வாய் – திருக்கோ:347/2
அல் படு காட்டில் நின்று ஆடி சிற்றம்பலத்தான் மிடற்றின் – திருக்கோ:348/1
எவம் செய்து நின்று இனி இன்று உனை நோவது என் அத்தன் முத்தன் – திருக்கோ:358/2
இராப்பகல் நின்று உணங்கு ஈர்ம் கடை இத்துணை போழ்தின் சென்று – திருக்கோ:362/3
வல்லை பொலிவொடு வந்தமையான் நின்று வான் வழுத்தும் – திருக்கோ:368/2
கொக்கின் இறகு-அது அணிந்து நின்று ஆடி தென் கூடல் அன்ன – திருக்கோ:376/2
என்பிடை வந்து அமிழ்து ஊற நின்று ஆடி இரும் சுழியல் – திருக்கோ:377/2
எதிர்த்து எங்கு நின்று எ பரிசு அளித்தான் இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:396/2
மேல்


நின்றே (1)

புரை சந்த மேகலையாய் துயர் தீர புகுந்து நின்றே – திருக்கோ:299/4
மேல்


நின்றேமுக்கு (1)

தினை வித்தி காத்து சிறந்து நின்றேமுக்கு சென்றுசென்று – திருக்கோ:140/3
மேல்


நின்றோன் (12)

கரும் கண்ணனை அறியாமை நின்றோன் தில்லை கார் பொழில்-வாய் – திருக்கோ:53/1
உய்வான் புக ஒளிர் தில்லை நின்றோன் சடை மேலது ஒத்து – திருக்கோ:67/3
ஆர தழை அன்பு அருளி நின்றோன் சென்ற மா மலயத்து – திருக்கோ:91/2
பெருகுதலை சென்று நின்றோன் பெருந்துறை பிள்ளை கள் ஆர் – திருக்கோ:104/2
ஒத்து அகம் சேர்ந்து என்னை உய்ய நின்றோன் தில்லை ஒத்து இலங்கு – திருக்கோ:106/2
கீடம் செய்து என் பிறப்பு கெட தில்லை நின்றோன் கயிலை – திருக்கோ:129/3
மாது இடம் கொண்டு அம்பலத்து நின்றோன் வட வான் கயிலை – திருக்கோ:138/1
நிரை அன்று அழல் எழ எய்து நின்றோன் தில்லை அன்ன நின் ஊர் – திருக்கோ:152/2
மண்ணுக்கு நாப்பண் நயந்து தென் தில்லை நின்றோன் மிடற்றின் – திருக்கோ:162/2
பிரியாமை செய்து நின்றோன் தில்லை பேர் இயல் ஊரர் அன்ன – திருக்கோ:311/3
அறியா அளவு நின்றோன் தில்லை சிற்றம்பலம் அனைய – திருக்கோ:333/3
நிலவி நிறை மது ஆர்ந்து அம்பலத்து நின்றோன் அருள் போன்று – திருக்கோ:365/3
மேல்


நின்றோன்-தனது (1)

தன் நிறம் ஒன்றில் இருத்தி நின்றோன்-தனது அம்பலம் போல் – திருக்கோ:58/2
மேல்


நின்றோனை (1)

மூவாயிரவர் வணங்க நின்றோனை உன்னாரின் முன்னி – திருக்கோ:72/2
மேல்


நின்னின் (1)

கதி உடையான் கதிர் தோள் நிற்க வேறு கருது நின்னின்
மதி உடையார் தெய்வமே இல்லை-கொல் இனி வையகத்தே – திருக்கோ:292/3,4
மேல்


நின்னுடை (1)

நின்னுடை நீர்மையும் நீயும் இவ்வாறு நினை தெருட்டும் – திருக்கோ:28/1
மேல்


நின்னை (4)

அம் தாமரை அன்னமே நின்னை யான் அகன்று ஆற்றுவனோ – திருக்கோ:12/3
என் இடம் யாது இயல் நின்னை இன்னே செய்த ஈர்ம்_கொடிக்கே – திருக்கோ:28/4
வாழச்செய்தாய் சுற்று முற்றும் புதை நின்னை வாள்_நுதலே – திருக்கோ:43/4
எல் ஆர் மதியே இது நின்னை யான் இன்று இரக்கின்றதே – திருக்கோ:192/4
மேல்


நின்னையும் (1)

ஆங்கு அணைந்தார் நின்னையும் உளரோ சென்று அகன்றவரே – திருக்கோ:179/4
மேல்


நின்னொடு (1)

பணையும் தடமும் அன்றே நின்னொடு ஏகின் எம் பைம்_தொடிக்கே – திருக்கோ:202/4
மேல்


நின (1)

நரல் வேய் இன நின தோட்கு உடைந்து உக்க நல் முத்தம் சிந்தி – திருக்கோ:119/1
மேல்


நினக்கு (1)

தூயன் நினக்கு கடும் சூள் தருவன் சுடர்_குழையே – திருக்கோ:289/4
மேல்


நினது (2)

இயல் உளவே இணை செப்பு வெற்பா நினது ஈர்ம் கொடி மேல் – திருக்கோ:35/3
நீர் உறு கான்யாறு அளவில நீந்தி வந்தால் நினது
போர் உறு வேல் வய பொங்கு உரும் அஞ்சுக மஞ்சு இவரும் – திருக்கோ:176/2,3
மேல்


நினை (1)

நின்னுடை நீர்மையும் நீயும் இவ்வாறு நினை தெருட்டும் – திருக்கோ:28/1
மேல்


நினைந்து (1)

இவ்வாறு அருள் பிறர்க்கு ஆகும் என நினைந்து இன்_நகையே – திருக்கோ:366/4
மேல்


நினைந்தோ (1)

நெடுமால் என என்னை நீ நினைந்தோ நெஞ்ச தாமரையே – திருக்கோ:120/2
மேல்


நினைப்பின் (1)

நிகழும் நிகழா நிகழ்த்தின் அல்லால் இது நீ நினைப்பின்
அகழும் மதிலும் அணி தில்லையோன் அடி போது சென்னி – திருக்கோ:181/2,3
மேல்


நினைப்பு (1)

உழை காண்டலும் நினைப்பு ஆகும் மெல்நோக்கி மன் நோக்கம் கண்டால் – திருக்கோ:111/3
மேல்


நினையா (1)

கலர் ஆயினர் நினையா தில்லை அம்பலத்தான் கழற்கு அன்பு – திருக்கோ:259/1
மேல்


நினையாது (1)

சீலத்தை நீயும் நினையாது ஒழிவது என் தீவினையே – திருக்கோ:27/4
மேல்


நினையின் (1)

நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின் அல்லால் நினையின்
இறை வில் குலா வரை ஏந்தி வண் தில்லையன் ஏழ் பொழிலும் – திருக்கோ:266/2,3
மேல்


நினைவார் (1)

நற பாடலம் புனைவார் நினைவார் தம்பிரான் புலியூர் – திருக்கோ:205/2
மேல்


நினைவித்து (1)

நினைவித்து தன்னை என் நெஞ்சத்து இருந்து அம்பலத்து நின்று – திருக்கோ:140/1

மேல்