தொ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்கு 2
தொகு 1
தொகை 3
தொகைகள் 1
தொடர்ந்து 2
தொடரேல் 1
தொடல் 2
தொடிக்கே 1
தொடியாய் 1
தொடியாள் 1
தொடியீர் 1
தொடியே 3
தொடு 1
தொடுக்கோ 1
தொடுத்த 1
தொடுத்தன 1
தொடை 1
தொண்டால் 1
தொண்டு 2
தொண்டை 4
தொண்டையும் 1
தொத்தி 1
தொத்து 3
தொல் 10
தொல்லை 3
தொல்லோன் 9
தொல்லோனை 1
தொல்வினையால் 1
தொலைத்தாற்கு 1
தொலைத்து 1
தொழ 2
தொழாது 1
தொழார் 1
தொழார்கள் 1
தொழாரின் 4
தொழில் 1
தொழுது 1
தொழுதே 1
தொழும் 1
தொழும்பில் 2
தொழும்பின் 1
தொழுவார் 1
தொன்மை 1
தொன்மைக்கு 1

தொக்கு (2)

துளி தரல் கார் என ஆர்த்தன ஆர்ப்ப தொக்கு உன் குழல் போன்று – திருக்கோ:324/3
கண் நுழையாது விண் மேகம் கலந்து கண மயில் தொக்கு
எண் நுழையா தழை கோலி நின்று ஆலும் இன மலர் வாய் – திருக்கோ:347/1,2
மேல்


தொகு (1)

சூழும் தொகு நிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றியதே – திருக்கோ:350/4
மேல்


தொகை (3)

பல் நிற மாலை தொகை பகலாம் பல் விளக்கு இருளின் – திருக்கோ:175/2
தொகை தணித்தற்கு என்னை ஆண்டுகொண்டோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:314/3
கவலம் கொள் பேய் தொகை பாய்தர காட்டிடை ஆட்டு உவந்த – திருக்கோ:389/1
மேல்


தொகைகள் (1)

மொழியால் கிளி ஆம் முது வானவர்-தம் முடி தொகைகள்
கழியா கழல் தில்லை கூத்தன் கயிலை முத்தம் மலைத்தேன் – திருக்கோ:29/2,3
மேல்


தொடர்ந்து (2)

துடிக்கின்றவா வெற்பன் சொல் பரிசே யான் தொடர்ந்து விடா – திருக்கோ:32/2
தொடர்ந்து ஒறும் துன்பு என்பதே அன்ப நின் அருள் தோன்றுவதே – திருக்கோ:253/4
மேல்


தொடரேல் (1)

கால் தான் தொடல் தொடரேல் விடு தீண்டல் எம் கைத்தலமே – திருக்கோ:390/4
மேல்


தொடல் (2)

நவம் செய்த புல்லங்கள் மாட்டேம் தொடல் விடு நல் கலையே – திருக்கோ:358/4
கால் தான் தொடல் தொடரேல் விடு தீண்டல் எம் கைத்தலமே – திருக்கோ:390/4
மேல்


தொடிக்கே (1)

பணையும் தடமும் அன்றே நின்னொடு ஏகின் எம் பைம்_தொடிக்கே – திருக்கோ:202/4
மேல்


தொடியாய் (1)

பொய் என்பதே கருத்தாயின் புரி குழல் பொன் தொடியாய்
மெய் என்பது ஏது மற்று இல்லை-கொலாம் இ வியல் இடத்தே – திருக்கோ:277/3,4
மேல்


தொடியாள் (1)

பறை கண் படும்படும்-தோறும் படா முலை பைம் தொடியாள்
கறை கண் மலி கதிர் வேல் கண் படாது கலங்கினவே – திருக்கோ:258/3,4
மேல்


தொடியீர் (1)

மின் நிற நுண் இடை பேர் எழில் வெள் நகை பைம் தொடியீர்
பொன் நிற அல்குலுக்கு ஆமோ மணி நிற பூம் தழையே – திருக்கோ:58/3,4
மேல்


தொடியே (3)

பை தயங்கும் அரவம் புரையும் அல்குல் பைம்_தொடியே – திருக்கோ:199/4
பாவை தந்தாள் பைம் கிளி அளித்தாள் இன்று என் பைம்_தொடியே – திருக்கோ:200/4
போதில் பொலியும் தொழில் புலி பல் குரல் பொன்_தொடியே – திருக்கோ:239/4
மேல்


தொடு (1)

சுரும்பு இவர் சந்தும் தொடு கடல் முத்தும் வெண் சங்கும் எங்கும் – திருக்கோ:248/1
மேல்


தொடுக்கோ (1)

தொடுக்கோ பணியீர் அணி ஈர் மலர் நும் கரி குழற்கே – திருக்கோ:63/4
மேல்


தொடுத்த (1)

நல்லாய் நமக்கு உற்றது என் என்று உரைக்கேன் நமர் தொடுத்த
எல்லா நிதியும் உடன் விடுப்பான் இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:271/1,2
மேல்


தொடுத்தன (1)

தொடுத்தன நீ விடுத்து எய்த துணி என்னை தன் தொழும்பில் – திருக்கோ:267/2
மேல்


தொடை (1)

மான் அமர் நோக்கியர் நோக்கு என மான் நல் தொடை மடக்கும் – திருக்கோ:274/2
மேல்


தொண்டால் (1)

தொண்டால் இயலும் சுடர் கழலோன் தொல்லை தில்லையின்-வாய் – திருக்கோ:105/2
மேல்


தொண்டு (2)

தொண்டு இனம் மேவும் சுடர் கழலோன் தில்லை தொல் நகரில் – திருக்கோ:302/1
நாய்-வயின் உள்ள குணமும் இல்லேனை நல் தொண்டு கொண்ட – திருக்கோ:343/1
மேல்


தொண்டை (4)

குயில் குலம் கொண்டு தொண்டை கனி வாய் குளிர் முத்தம் நிரைத்து – திருக்கோ:36/2
சூழ் ஆர் குழல் எழில் தொண்டை செ வாய் நவ்வி சொல் அறிந்தால் – திருக்கோ:93/3
கனி தொண்டை வாய்ச்சி கதிர் முலை பாரிப்பு கண்டு அழிவுற்று – திருக்கோ:132/3
சூழும் முக சுற்றும் பற்றினவால் தொண்டை அம் கனி வாய் – திருக்கோ:322/2
மேல்


தொண்டையும் (1)

சூழும் எழுதி ஒர் தொண்டையும் தீட்டி என் தொல் பிறவி – திருக்கோ:79/2
மேல்


தொத்தி (1)

என் அங்கு அலமரல் எய்தியதோ எழில் முத்தம் தொத்தி
பொன் அங்கு அலர் புன்னை சேக்கையின்-வாய் புலம்புற்று முற்றும் – திருக்கோ:172/2,3
மேல்


தொத்து (3)

தொத்து ஈன் மலர் பொழில் தில்லை தொல்லோன் அருள் என்ன முன்னி – திருக்கோ:121/1
துறு கான் மலர் தொத்து தோகை தொல் ஆயம் மெல்ல புகுக – திருக்கோ:126/2
மின் தொத்து இடு கழல் நூபுரம் வெள்ளை செம்பட்டு மின்ன – திருக்கோ:246/1
மேல்


தொல் (10)

சூழும் எழுதி ஒர் தொண்டையும் தீட்டி என் தொல் பிறவி – திருக்கோ:79/2
துறு கான் மலர் தொத்து தோகை தொல் ஆயம் மெல்ல புகுக – திருக்கோ:126/2
சுற்றும் சடை கற்றை சிற்றம்பலவன் தொழாது தொல் சீர் – திருக்கோ:134/1
தொழுவார் வினை நிற்கிலே நிற்பதாவது இ தொல் புனத்தே – திருக்கோ:142/4
சோத்து உன் அடியம் என்றோரை குழுமி தொல் வானவர் சூழ்ந்து – திருக்கோ:173/1
தோரணம் நீடுக தூரியம் ஆர்க்க தொல் மால் அயற்கும் – திருக்கோ:296/2
தொண்டு இனம் மேவும் சுடர் கழலோன் தில்லை தொல் நகரில் – திருக்கோ:302/1
சுற்றம் பலம் இன்மை காட்டி தன் தொல் கழல் தந்த தொல்லோன் – திருக்கோ:346/1
சுரும்பு உறு கொன்றையன் தொல் புலியூர் சுருங்கும் மருங்குல் – திருக்கோ:353/1
அணியுற கொண்டவன் தில்லை தொல் ஆய நல்லார்கள் முன்னே – திருக்கோ:359/3
மேல்


தொல்லை (3)

தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லை தில்லை – திருக்கோ:2/3
துங்க மலிதலை ஏந்தலின் ஏந்து_இழை தொல்லை பல் மா – திருக்கோ:85/3
தொண்டால் இயலும் சுடர் கழலோன் தொல்லை தில்லையின்-வாய் – திருக்கோ:105/2
மேல்


தொல்லோன் (9)

துளை வழி நேர் கழி கோத்து என தில்லை தொல்லோன் கயிலை – திருக்கோ:6/2
துணர் போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:17/2
களம் ஆம் விடம் அமிர்து ஆக்கிய தில்லை தொல்லோன் கயிலை – திருக்கோ:22/2
நடன் நாம் வணங்கும் தொல்லோன் எல்லை நான்முகன் மால் அறியா – திருக்கோ:77/1
தொத்து ஈன் மலர் பொழில் தில்லை தொல்லோன் அருள் என்ன முன்னி – திருக்கோ:121/1
தொல்லோன் அருள்கள் இல்லாரின் சென்றார் சென்ற செல்லல் கண்டாய் – திருக்கோ:192/3
சொல்லிய சீர் சுடர் திங்கள் அம் கண்ணி தொல்லோன் புலியூர் – திருக்கோ:201/3
கெடுத்தான் கெடல் இல் தொல்லோன் தில்லை பல் மலர் கேழ் கிளர – திருக்கோ:226/2
சுற்றம் பலம் இன்மை காட்டி தன் தொல் கழல் தந்த தொல்லோன்
சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று திண் கோட்டின் வண்ண – திருக்கோ:346/1,2
மேல்


தொல்லோனை (1)

காட்டி அன்றே நின்ற தில்லை தொல்லோனை கல்லாதவர் போல் – திருக்கோ:284/3
மேல்


தொல்வினையால் (1)

தொல்வினையால் துயரும் எனது ஆருயிர் துப்புறவே – திருக்கோ:26/4
மேல்


தொலைத்தாற்கு (1)

ஏறும் மலை தொலைத்தாற்கு என்னை யாம் செய்வது ஏந்து_இழையே – திருக்கோ:113/4
மேல்


தொலைத்து (1)

கோங்கு அரும்பும் தொலைத்து என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே – திருக்கோ:46/4
மேல்


தொழ (2)

நாகம் தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன் – திருக்கோ:171/1
நன்று ஒத்து எழிலை தொழ உற்றனம் என்னது ஓர் நன்மைதான் – திருக்கோ:246/3
மேல்


தொழாது (1)

சுற்றும் சடை கற்றை சிற்றம்பலவன் தொழாது தொல் சீர் – திருக்கோ:134/1
மேல்


தொழார் (1)

கொந்து ஆர் நறும் கொன்றை கூத்தன் தென் தில்லை தொழார் குழு போல் – திருக்கோ:276/3
மேல்


தொழார்கள் (1)

மல் ஆர் கழல் அழல் வண்ணர் வண் தில்லை தொழார்கள் அல்லால் – திருக்கோ:271/3
மேல்


தொழாரின் (4)

வில் வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கி – திருக்கோ:26/3
இகல் இடம் தா விடை ஈசன் தொழாரின் இன்னற்கு இடமாய் – திருக்கோ:42/2
கொல் நுனை வேல் அம்பலவன் தொழாரின் குன்றம் கொடியோள் – திருக்கோ:231/1
நன்றா அழகிது அன்றே இறை தில்லை தொழாரின் நைந்தும் – திருக்கோ:288/2
மேல்


தொழில் (1)

போதில் பொலியும் தொழில் புலி பல் குரல் பொன்_தொடியே – திருக்கோ:239/4
மேல்


தொழுது (1)

சுனை வளம் பாய்ந்து துணை மலர் கொய்து தொழுது எழுவார் – திருக்கோ:118/2
மேல்


தொழுதே (1)

கழி கட்டு இரவின் வரல் கழல் கை தொழுதே இரந்தேன் – திருக்கோ:255/3
மேல்


தொழும் (1)

தனித்து உண்டவன் தொழும் தாளோன் கயிலை பயில் சிலம்பா – திருக்கோ:132/2
மேல்


தொழும்பில் (2)

தொடுத்தன நீ விடுத்து எய்த துணி என்னை தன் தொழும்பில்
படுத்த நல் நீள் கழல் ஈசர் சிற்றம்பலம் தாம் பணியார்க்கு – திருக்கோ:267/2,3
சொரிந்தன கொண்மூ சுரந்த தன் பேர் அருளால் தொழும்பில்
பரிந்து எனை ஆண்ட சிற்றம்பலத்தான் பரங்குன்றில் துன்றி – திருக்கோ:279/2,3
மேல்


தொழும்பின் (1)

சுழியா வரு பெரு நீர் சென்னி வைத்து என்னை தன் தொழும்பின்
கழியா அருள் வைத்த சிற்றம்பலவன் கரம் தரும் மான் – திருக்கோ:261/1,2
மேல்


தொழுவார் (1)

தொழுவார் வினை நிற்கிலே நிற்பதாவது இ தொல் புனத்தே – திருக்கோ:142/4
மேல்


தொன்மை (1)

தோயீர் புணர் தவம் தொன்மை செய்தீர் சுடர்கின்ற கொலம் – திருக்கோ:370/2
மேல்


தொன்மைக்கு (1)

தோலா கரி வென்றதற்கும் துவள்விற்கும் இல்லின் தொன்மைக்கு
ஏலா பரிசு உளவே அன்றி ஏலேம் இரும் சிலம்ப – திருக்கோ:110/1,2

மேல்