தெ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கம்பழம் 1
தெங்கொடு 1
தெண் 1
தெம் 1
தெய்வ 1
தெய்வம் 7
தெய்வமே 1
தெரியின் 1
தெரியேம் 1
தெருட்டின் 1
தெருட்டும் 1
தெருவிடை 1
தெவ்வம் 1
தெவ்வரை 1
தெள் 4
தெள்ளம் 1
தெள்ளி 1
தெளி 2
தெளிசென்ற 1
தெளித்து 1
தெளிதரல் 1
தெளியலள் 1
தெளியும் 1
தெளிவித்து 1
தெளிவு 1
தெறு 2
தெறுக 1
தெறும் 1
தென் 12
தென்னம் 3
தென்னவன் 1
தென்னா 1

தெங்கம்பழம் (1)

தெங்கம்பழம் கமுகின் குலை சாடி கதலி செற்று – திருக்கோ:100/1
மேல்


தெங்கொடு (1)

தூண்டில் எடுத்த வரால் தெங்கொடு எற்ற பழம் விழுந்து – திருக்கோ:249/3
மேல்


தெண் (1)

வாங்கு இரும் தெண் கடல் வையமும் எய்தினும் யான் மறவேன் – திருக்கோ:46/2
மேல்


தெம் (1)

மன்னவன் தெம் முனை மேல் செல்லுமாயினும் மால் அரி ஏறு – திருக்கோ:306/1
மேல்


தெய்வ (1)

குரு வளர் பூம் குமிழ் கோங்கு பைம் காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ
மரு வளர் மாலையர் வல்லியின் ஒல்கி அன நடை வாய்ந்து – திருக்கோ:1/2,3
மேல்


தெய்வம் (7)

விளைவை அல்லால் வியவேன் நயவேன் தெய்வம் மிக்கனவே – திருக்கோ:6/4
நற்பால் வினை தெய்வம் தந்து இன்று நான் இவள் ஆம் பகுதி – திருக்கோ:8/2
மன் நெறி தந்தது இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே – திருக்கோ:49/2
தெய்வம் தரும் இருள் தூங்கும் முழுதும் செழு மிடற்றின் – திருக்கோ:212/2
தெய்வம் பணி கழலோன் தில்லை சிற்றம்பலம் அனையாள் – திருக்கோ:304/1
தெய்வம் பணிந்து அறியாள் என்றும் நின்று திறை வழங்கா – திருக்கோ:304/2
முன்னவன் மூவல் அன்னாளும் மற்று ஓர் தெய்வம் முன்னலளே – திருக்கோ:306/4
மேல்


தெய்வமே (1)

மதி உடையார் தெய்வமே இல்லை-கொல் இனி வையகத்தே – திருக்கோ:292/4
மேல்


தெரியின் (1)

தேயத்ததாய் என்றன் சிந்தையதாய் தெரியின் பெரிதும் – திருக்கோ:39/3
மேல்


தெரியேம் (1)

தெரியேம் உரையான் பிரியான் ஒருவன் இ தேம் புனமே – திருக்கோ:83/4
மேல்


தெருட்டின் (1)

தெருட்டின் தெளியலள் செப்பும் வகை இல்லை சீர் அருக்கன் – திருக்கோ:270/2
மேல்


தெருட்டும் (1)

நின்னுடை நீர்மையும் நீயும் இவ்வாறு நினை தெருட்டும்
என்னுடை நீர்மை இது என் என்பதே தில்லை ஏர் கொள் முக்கண் – திருக்கோ:28/1,2
மேல்


தெருவிடை (1)

பொழிகின்ற சாரல் நும் சீறூர் தெருவிடை போதுவனே – திருக்கோ:76/4
மேல்


தெவ்வம் (1)

தெவ்வம் பணிய சென்றாலும் மன் வந்து அன்றி சேர்ந்து அறியான் – திருக்கோ:304/3
மேல்


தெவ்வரை (1)

தெவ்வரை மெய் எரி காய் சிலை ஆண்டு என்னை ஆண்டுகொண்ட – திருக்கோ:114/1
மேல்


தெள் (4)

சிந்தாமணி தெள் கடல் அமிர்தம் தில்லையான் அருளால் – திருக்கோ:12/1
தெள் வன் புனல் சென்னியோன் அம்பலம் சிந்தியார் இனம் சேர் – திருக்கோ:237/1
சேணும் திகழ் மதில் சிற்றம்பலவன் தெள் நீர் கடல் நஞ்சு – திருக்கோ:341/1
தெள் நீர் அணி சிவன் சிற்றம்பலம் சிந்தியாதவரின் – திருக்கோ:345/1
மேல்


தெள்ளம் (1)

தெள்ளம் புனல் கங்கை தங்கும் சடையன் சிற்றம்பலத்தான் – திருக்கோ:379/1
மேல்


தெள்ளி (1)

தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலை சிலம்பா – திருக்கோ:128/2
மேல்


தெளி (2)

தெளி வளர் வான் சிலை செம் கனி வெண் முத்தம் திங்களின் வாய்ந்து – திருக்கோ:16/1
தெளி நீ அனைய பொன்னே பன்னு கோலம் திரு_நுதலே – திருக்கோ:122/4
மேல்


தெளிசென்ற (1)

தெளிசென்ற வேல் கண் வருவித்த செல்லல் எல்லாம் தெளிவித்து – திருக்கோ:50/3
மேல்


தெளித்து (1)

துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து அளிப்ப – திருக்கோ:332/3
மேல்


தெளிதரல் (1)

தெளிதரல் கார் என சீர் அனம் சிற்றம்பலத்து அடியேன் – திருக்கோ:324/1
மேல்


தெளியலள் (1)

தெருட்டின் தெளியலள் செப்பும் வகை இல்லை சீர் அருக்கன் – திருக்கோ:270/2
மேல்


தெளியும் (1)

மொய் வந்த வாவி தெளியும் துயிலும் இ மூதெயிலே – திருக்கோ:212/4
மேல்


தெளிவித்து (1)

தெளிசென்ற வேல் கண் வருவித்த செல்லல் எல்லாம் தெளிவித்து
அளி சென்ற பூம் குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே – திருக்கோ:50/3,4
மேல்


தெளிவு (1)

சுணங்கு உற்ற கொங்கைகள் சூது உற்றில சொல் தெளிவு உற்றில – திருக்கோ:283/1
மேல்


தெறு (2)

தெறு வல காலனை செற்றவன் சிற்றம்பலம் சிந்தியார் – திருக்கோ:227/3
தெறு கட்டு அழிய முன் உய்ய செய்தோர் கருப்பு சிலையோன் – திருக்கோ:313/2
மேல்


தெறுக (1)

யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர் நகுக – திருக்கோ:289/1
மேல்


தெறும் (1)

தெறும் கண் நிவந்த சிற்றம்பலவன் மலை சிற்றிலின்-வாய் – திருக்கோ:95/2
மேல்


தென் (12)

பூம் கனை ஆர் புனல் தென் புலியூர் புரிந்து அம்பலத்துள் – திருக்கோ:19/1
வீசின போது உள்ளம் மீன் இழந்தார் வியன் தென் புலியூர் – திருக்கோ:74/2
வழங்கும் பிரான் எரியாடி தென் தில்லை மணி நகர்க்கே – திருக்கோ:127/4
விடை ஆர் மருப்பு திருத்திவிட்டார் வியன் தென் புலியூர் – திருக்கோ:136/3
மொய் மலர் ஈர்ம் கழல் அம்பலத்தோன் மன்னு தென் மலயத்து – திருக்கோ:153/2
மண்ணுக்கு நாப்பண் நயந்து தென் தில்லை நின்றோன் மிடற்றின் – திருக்கோ:162/2
சிறந்து எரியாடி தென் தில்லை அன்னாள் திறத்து சிலம்பா – திருக்கோ:213/2
பொன் ஆர் அணி மணி மாளிகை தென் புலியூர் புகழ்வார் – திருக்கோ:217/3
முன்னும் கடு விடம் உண்ட தென் தில்லை முன்னோன் அருளால் – திருக்கோ:236/1
கொந்து ஆர் நறும் கொன்றை கூத்தன் தென் தில்லை தொழார் குழு போல் – திருக்கோ:276/3
தென் மா திசை வசை தீர்தர தில்லை சிற்றம்பலத்துள் – திருக்கோ:338/1
கொக்கின் இறகு-அது அணிந்து நின்று ஆடி தென் கூடல் அன்ன – திருக்கோ:376/2
மேல்


தென்னம் (3)

சென்று உன்னிய கழல் சிற்றம்பலவன் தென்னம் பொதியில் – திருக்கோ:392/2
திருந்தேன் உய நின்ற சிற்றம்பலவர் தென்னம் பொதியில் – திருக்கோ:394/1
செயல் மன்னும் சீர் கழல் சிற்றம்பலவர் தென்னம் பொதியில் – திருக்கோ:395/2
மேல்


தென்னவன் (1)

தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றை தேவர்க்கு எல்லாம் – திருக்கோ:306/3
மேல்


தென்னா (1)

தென்னா என உடையான் நடம் ஆடு சிற்றம்பலமே – திருக்கோ:217/4

மேல்