ஓ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

ஓகை (2)

துன்னும் ஒர் இன்பம் என்று ஓகை தம் தோகைக்கு சொல்லுவ போல் – திருக்கோ:160/3
ஓவியம் கண்டு அன்ன ஒள் நுதலாள் தனக்கு ஓகை உய்ப்பான் – திருக்கோ:384/2
மேல்


ஓங்கு (8)

குரு வளர் பூம் குமிழ் கோங்கு பைம் காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ – திருக்கோ:1/2
ஓங்கு அணை மேவி புரண்டு விழுந்து எழுந்து ஓலமிட்டு – திருக்கோ:179/2
அகல் ஓங்கு இரும் கழி-வாய் கொழு மீன் உண்ட அன்னங்களே – திருக்கோ:188/4
புயல் ஓங்கு அலர் சடை ஏற்றவன் சிற்றம்பலம் புகழும் – திருக்கோ:327/1
மயல் ஓங்கு இரும் களி யானை வரகுணண் வெற்பின் வைத்த – திருக்கோ:327/2
கயல் ஓங்கு இரும் சிலை கொண்டு மன் கோபமும் காட்டி வரும் – திருக்கோ:327/3
செயல் ஓங்கு எயில் எரி செய்த பின் இன்று ஓர் திரு முகமே – திருக்கோ:327/4
ஓங்கு வளை கரத்தார்க்கு அடுத்தோம் மன் உறாவரையே – திருக்கோ:357/4
மேல்


ஓங்கும் (4)

தார் என்ன ஓங்கும் சடை முடி மேல் தனி திங்கள் வைத்த – திருக்கோ:56/1
ஓங்கும் ஒரு விடம் உண்டு அம்பலத்து உம்பர் உய்ய அன்று – திருக்கோ:158/1
வில் பகைத்து ஓங்கும் புருவத்து இவளின் மெய்யே எளிதே – திருக்கோ:168/2
உன்னாதவர் வினை போல் பரந்து ஓங்கும் எனது உயிரே – திருக்கோ:210/2
மேல்


ஓட்ட (1)

கல் பாவிய வரைவாய் கடிது ஓட்ட களவகத்தே – திருக்கோ:8/4
மேல்


ஓட்டரும் (1)

பொன் அணி ஈட்டிய ஓட்டரும் நெஞ்சம் இ பொங்கு வெம் கானின் – திருக்கோ:342/1
மேல்


ஓடி (1)

கித்த கருங்குவளை செவ்வி ஓடி கெழுமினவே – திருக்கோ:388/4
மேல்


ஓடியவாறு (1)

ஊட்டி அன்றே நிற்பது ஓடியவாறு இவள் உள்ளம் எல்லாம் – திருக்கோ:284/2
மேல்


ஓதல் (1)

ஓதல் உற்றார் உற்று உணர்தல் உற்றார் செல்லல் மல் அழல் கான் – திருக்கோ:309/3
மேல்


ஓதாது (1)

காவல் தழீஇயவர்க்கு ஓதாது அளிய களி அன்னமே – திருக்கோ:191/4
மேல்


ஓதி (3)

கார் வாய் குழலிக்கு உன் ஆதரவு ஓதி கற்பித்து கண்டால் – திருக்கோ:80/3
ஆழி திருத்தி சுழி கணக்கு ஓதி நையாமல் ஐய – திருக்கோ:186/3
சொல் பா விரும்பினர் என்ன மெல்_ஓதி செவி புறத்து – திருக்கோ:310/3
மேல்


ஓதிடம் (1)

பொய் குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடமும் – திருக்கோ:223/3
மேல்


ஓதியை (1)

பாப்பணியோன் தில்லை பல் பூ மருவு சில்_ஓதியை நல் – திருக்கோ:196/1
மேல்


ஓதுங்கள் (1)

உன்னுங்கள் தீது இன்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே – திருக்கோ:236/4
மேல்


ஓதுநர்க்கே (1)

உறை வில் குலா நுதலாள் விலையோ மெய்ம்மை ஓதுநர்க்கே – திருக்கோ:266/4
மேல்


ஓதுவதே (1)

ஒரு குதலை சின் மழலைக்கு என்னோ ஐய ஓதுவதே – திருக்கோ:104/4
மேல்


ஓம்ப (1)

கரும் தினை ஓம்ப கடவுள் பராவி நமர் கலிப்ப – திருக்கோ:279/1
மேல்


ஓம்பும் (1)

மந்தியின் வாய் கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம் கனிய – திருக்கோ:99/3
மேல்


ஓர் (20)

வில் இலன் நாக தழை கையில் வேட்டை கொண்டாட்டம் மெய் ஓர்
சொல் இலன் ஆ கற்ற வா கடவான் இ சுனை புனமே – திருக்கோ:60/3,4
ஆகத்துள் ஓர் உயிர் கண்டனம் யாம் இன்று யாவையும் ஆம் – திருக்கோ:71/2
ஆவா மணி வேல் பணி கொண்ட ஆறு இன்று ஓர் ஆண்டகையே – திருக்கோ:72/4
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து ஓர் கிழி பிடித்து – திருக்கோ:74/3
பெண்ணை மடல் மிசை யான் வர பண்ணிற்று ஓர் பெண் கொடியே – திருக்கோ:75/4
சேய் கண்டு அனையன் சென்று ஆங்கு ஓர் அலவன் தன் சீர் பெடையின் – திருக்கோ:84/2
வாய் வண்டு அனையது ஓர் நாவல் கனி நனி நல்க கண்டு – திருக்கோ:84/3
இரும்பு உறு மா மதில் பொன் இஞ்சி வெள்ளி புரிசை அன்று ஓர்
துரும்பு உற செற்ற கொற்றத்து எம்பிரான் தில்லை சூழ் பொழிற்கே – திருக்கோ:167/3,4
தீங்கு அணைந்து ஓர் அல்லும் தேறாய் கலங்கி செறி கடலே – திருக்கோ:179/3
ஓர் கூட்டம் தந்தான் குனிக்கும் புலியூர் – திருக்கோ:185/2
மறப்பான் அடுப்பது ஓர் தீவினை வந்திடின் சென்றுசென்று – திருக்கோ:205/3
வேல் ஒத்த வெம் பரல் கானத்தின் இன்று ஓர் விடலை பின் போம் – திருக்கோ:238/3
பத்தியர் போல பணைத்து இறுமாந்த பயோதரத்து ஓர்
பித்தி தன் பின் வர முன் வருமோ ஓர் பெருந்தகையே – திருக்கோ:242/3,4
பித்தி தன் பின் வர முன் வருமோ ஓர் பெருந்தகையே – திருக்கோ:242/4
நன்று ஒத்து எழிலை தொழ உற்றனம் என்னது ஓர் நன்மைதான் – திருக்கோ:246/3
உண்டல் உற்றேம் என்று நின்றது ஓர் போழ்து உடையான் புலியூர் – திருக்கோ:290/2
கண்டல் உற்று ஏர் நின்ற சேரி சென்றான் ஓர் கழலவனே – திருக்கோ:290/4
முன்னவன் மூவல் அன்னாளும் மற்று ஓர் தெய்வம் முன்னலளே – திருக்கோ:306/4
செயல் ஓங்கு எயில் எரி செய்த பின் இன்று ஓர் திரு முகமே – திருக்கோ:327/4
செம் தார் நறும் கொன்றை சிற்றம்பலவர் தில்லை நகர் ஓர்
பந்து ஆர் விரலியை பாய் புனல் ஆட்டி மன் பாவி எற்கு – திருக்கோ:391/1,2
மேல்


ஓர்ந்து (1)

ஈ விளையாட நற விளைவு ஓர்ந்து எமர் மால்பு இயற்றும் – திருக்கோ:133/1
மேல்


ஓரளவு (1)

ஓரளவு இல்லா ஒருவன் இரும் கழல் உன்னினர் போல் – திருக்கோ:308/3
மேல்


ஓரி (1)

நிழல் தலை தீ நெறி நீர் இல்லை கானகம் ஓரி கத்தும் – திருக்கோ:206/1
மேல்


ஓலமிட்டு (1)

ஓங்கு அணை மேவி புரண்டு விழுந்து எழுந்து ஓலமிட்டு
தீங்கு அணைந்து ஓர் அல்லும் தேறாய் கலங்கி செறி கடலே – திருக்கோ:179/2,3
மேல்


ஓலமிட (1)

மாற்றேன் என வந்த காலனை ஓலமிட அடர்த்த – திருக்கோ:150/1
மேல்


ஓலமிடும் (1)

அருந்து ஏர் அழிந்தனம் ஆலம் என்று ஓலமிடும் இமையோர் – திருக்கோ:329/1
மேல்


ஓலுறுத்த (1)

வாயும் திறவாய் குழை எழில் வீச வண்டு ஓலுறுத்த
நீயும் நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள் குரவே – திருக்கோ:241/3,4
மேல்


ஓவிய (1)

பூணின் பொலி கொங்கை ஆவியை ஓவிய பொன் கொழுந்தை – திருக்கோ:23/3
மேல்


ஓவியம் (2)

ஓவியம் தோன்றும் கிழி நின் எழில் என்று உரை உளதால் – திருக்கோ:88/2
ஓவியம் கண்டு அன்ன ஒள் நுதலாள் தனக்கு ஓகை உய்ப்பான் – திருக்கோ:384/2

மேல்