ஒ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்கல் 1
ஒக்கின்ற 1
ஒக்கும் 5
ஒக்குமேல் 1
ஒக்குவல் 1
ஒட்டார் 1
ஒடுக்கி 2
ஒடுங்க 1
ஒடுங்கும் 1
ஒண் 4
ஒத்த 4
ஒத்தவா 1
ஒத்தன 1
ஒத்திட 1
ஒத்து 8
ஒதுக்கி 1
ஒதுங்க 1
ஒதுங்கி 1
ஒதுங்குகின்றாள் 1
ஒப்பாய் 1
ஒப்பாள் 1
ஒப்பு 1
ஒப்புற்று 1
ஒர் 11
ஒரு 10
ஒருகால் 2
ஒருங்கு 5
ஒருங்கே 2
ஒருத்தன் 2
ஒருத்தி 1
ஒருநாள் 1
ஒருபாலவள் 1
ஒருவர் 6
ஒருவன் 9
ஒருவனது 1
ஒருவி 1
ஒல்கி 2
ஒல்குதலால் 1
ஒல்லை 2
ஒலி 1
ஒழிந்த 1
ஒழிந்தது 1
ஒழிந்தனம் 1
ஒழிந்து 1
ஒழிய 1
ஒழியாது 1
ஒழியாய் 1
ஒழியாவிடின் 1
ஒழியின் 2
ஒழியும் 1
ஒழிவது 1
ஒழிவர்-கொல்லோ 1
ஒழிவாய் 1
ஒழிவீர் 1
ஒழுக 1
ஒழுகுவது 1
ஒள் 6
ஒள்_நுதல் 2
ஒள்_நுதலே 2
ஒள்வன் 1
ஒளி 18
ஒளி_இழையே 1
ஒளிகள் 1
ஒளித்த 1
ஒளித்து 1
ஒளியே 1
ஒளியோன் 1
ஒளிர் 4
ஒளிர்கின்றது 1
ஒளிர்கின்றதே 1
ஒளிர்வனவே 1
ஒளிர்வோன் 1
ஒளிரும் 2
ஒளிறு 1
ஒற்றை 2
ஒறும் 1
ஒன்ற 1
ஒன்றாதன 1
ஒன்றாம் 2
ஒன்றாய் 1
ஒன்றாவதும் 1
ஒன்றில் 1
ஒன்றின் 1
ஒன்று 23
ஒன்றும் 2
ஒன்றே 2
ஒன்னார் 2

ஒக்கல் (1)

கார் அணி கற்பகம் கற்றவர் நல் துணை பாணர் ஒக்கல்
சீர் அணி சிந்தாமணி அணி தில்லை சிவனடிக்கு – திருக்கோ:400/1,2
மேல்


ஒக்கின்ற (1)

ஒக்கின்ற ஆர் அணங்கே இணங்கு ஆகும் உனக்கு அவளே – திருக்கோ:68/4
மேல்


ஒக்கும் (5)

ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:103/2
அசும்பினில் துன்னி அளை நுழைந்தால் ஒக்கும் ஐய மெய்யே – திருக்கோ:149/2
செலவு அன்பர்க்கு ஒக்கும் சிவன் தில்லை கானலில் சீர் பெடையோடு – திருக்கோ:155/2
ஆனந்த வெள்ளத்திடை திளைத்தால் ஒக்கும் அம்பலம் சேர் – திருக்கோ:307/2
சரம் அன்றி வான் தருமேல் ஒக்கும் மிக்க தமியருக்கே – திருக்கோ:321/4
மேல்


ஒக்குமேல் (1)

கண் ஒக்குமேல் கண்டு காண் வண்டு வாழும் கரும்_குழலே – திருக்கோ:162/4
மேல்


ஒக்குவல் (1)

உணங்கல் அஞ்சாது உண்ணலாம் ஒள் நிண பலி ஒக்குவல் மா – திருக்கோ:235/3
மேல்


ஒட்டார் (1)

சிலம்பா வடி_கண்ணி சிற்றிடைக்கே விலை செப்பல் ஒட்டார்
கலம் பாவிய முலையின் விலை என் நீ கருதுவதே – திருக்கோ:197/3,4
மேல்


ஒடுக்கி (2)

கோலி திகழ் சிறகு ஒன்றின் ஒடுக்கி பெடை குருகு – திருக்கோ:318/1
பெற்றவளே எனை பெற்றாள் பெடை சிறகான் ஒடுக்கி
புற்று இல வாள் அரவன் தில்லை புள்ளும் தம் பிள்ளை தழீஇ – திருக்கோ:320/2,3
மேல்


ஒடுங்க (1)

உறும் கள் நிவந்த கணை உரவோன் பொடியாய் ஒடுங்க
தெறும் கண் நிவந்த சிற்றம்பலவன் மலை சிற்றிலின்-வாய் – திருக்கோ:95/1,2
மேல்


ஒடுங்கும் (1)

ஊழி ஒன்றாதன நான்கும் ஐம்பூதமும் ஆறு ஒடுங்கும்
ஏழ் இயன்ற ஆழ் கடலும் எண் திசையும் திரிந்து இளைத்து – திருக்கோ:339/2,3
மேல்


ஒண் (4)

உறைவான் உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீம் தமிழின் – திருக்கோ:20/2
உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து – திருக்கோ:77/3
நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம் – திருக்கோ:95/3
ஒளி நீள் கரி குழல் சூழ்ந்த ஒண் மாலையும் தண் நறவு உண் – திருக்கோ:122/2
மேல்


ஒத்த (4)

அயல் உளவே முத்தம் ஒத்த நிரை அரன் அம்பலத்தின் – திருக்கோ:35/2
நூல் ஒத்த நேர் இடை நொய்ம்மை எண்ணாது நுண் தேன் நசையால் – திருக்கோ:45/3
பால் ஒத்த நீற்று அம்பலவன் கழல் பணியார் பிணி வாய் – திருக்கோ:238/1
வேல் ஒத்த வெம் பரல் கானத்தின் இன்று ஓர் விடலை பின் போம் – திருக்கோ:238/3
மேல்


ஒத்தவா (1)

மதுவினில் கைப்பு வைத்தால் ஒத்தவா மற்று இ வான் புனமே – திருக்கோ:146/4
மேல்


ஒத்தன (1)

கால் ஒத்தன வினையேன் பெற்ற மாண்_இழை கால் மலரே – திருக்கோ:238/4
மேல்


ஒத்திட (1)

ஒன்று ஒத்திட உடையாளொடு ஒன்றாம் புலியூரன் என்றே – திருக்கோ:246/2
மேல்


ஒத்து (8)

எயில் குலம் முன்றும் இரும் தீ எய்த எய்தவன் தில்லை ஒத்து
குயில் குலம் கொண்டு தொண்டை கனி வாய் குளிர் முத்தம் நிரைத்து – திருக்கோ:36/1,2
அரு நாண் அளிய அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றதே – திருக்கோ:44/4
உய்வான் புக ஒளிர் தில்லை நின்றோன் சடை மேலது ஒத்து
செ வான் அடைந்த பசும் கதிர் வெள்ளை சிறு பிறைக்கே – திருக்கோ:67/3,4
ஒத்து அகம் சேர்ந்து என்னை உய்ய நின்றோன் தில்லை ஒத்து இலங்கு – திருக்கோ:106/2
ஒத்து அகம் சேர்ந்து என்னை உய்ய நின்றோன் தில்லை ஒத்து இலங்கு – திருக்கோ:106/2
ஒத்து ஈர்ம் கொடியின் ஒதுங்குகின்றாள் மருங்குல் நெருங்க – திருக்கோ:121/3
முன்னோன் மணிகண்டம் ஒத்து அவன் அம்பலம் தம் முடி தாழ்த்து – திருக்கோ:210/1
நன்று ஒத்து எழிலை தொழ உற்றனம் என்னது ஓர் நன்மைதான் – திருக்கோ:246/3
மேல்


ஒதுக்கி (1)

பாம் அரை மேகலை பற்றி சிலம்பு ஒதுக்கி பையவே – திருக்கோ:164/3
மேல்


ஒதுங்க (1)

உகல் இடம் தான் சென்று எனது உயிர் நையாவகை ஒதுங்க
புகலிடம் தா பொழில்-வாய் எழில் வாய் தரு பூம்_கொடியே – திருக்கோ:42/3,4
மேல்


ஒதுங்கி (1)

கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை குஞ்சரம் கோள் இழைக்கும் – திருக்கோ:21/1
மேல்


ஒதுங்குகின்றாள் (1)

ஒத்து ஈர்ம் கொடியின் ஒதுங்குகின்றாள் மருங்குல் நெருங்க – திருக்கோ:121/3
மேல்


ஒப்பாய் (1)

ஒருங்கு வளை கரத்தான் உணராதவன் தில்லை ஒப்பாய்
மருங்கு வளைத்து மன் பாசறை நீடிய வைகலுமே – திருக்கோ:331/3,4
மேல்


ஒப்பாள் (1)

ஊதைக்கு அலமரும் வல்லி ஒப்பாள் முத்தன் தில்லை அன்னாள் – திருக்கோ:239/2
மேல்


ஒப்பு (1)

தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை தண் அனிச்ச – திருக்கோ:228/1
மேல்


ஒப்புற்று (1)

ஒப்புற்று எழில் நலம் ஊரன் கவர உள்ளும் புறம்பும் – திருக்கோ:354/2
மேல்


ஒர் (11)

வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற ஒர் வஞ்சி மருங்குல் – திருக்கோ:22/3
சூழும் எழுதி ஒர் தொண்டையும் தீட்டி என் தொல் பிறவி – திருக்கோ:79/2
போழும் எழுதிற்று ஒர் கொம்பர் உண்டேல் கொண்டு போதுகவே – திருக்கோ:79/4
கான் உழை வாழ்வு பெற்று ஆங்கு எழில் காட்டும் ஒர் கார் பொழிலே – திருக்கோ:116/4
துன்னும் ஒர் இன்பம் என்று ஓகை தம் தோகைக்கு சொல்லுவ போல் – திருக்கோ:160/3
யாழ் இயல் மென் மொழி வல் மன பேதை ஒர் ஏதிலன் பின் – திருக்கோ:230/1
எதிரே வருமே சுரமே வெறுப்ப ஒர் ஏந்தலோடே – திருக்கோ:243/4
நொதுமலர் நோக்கம் ஒர் மூன்று உடையோன் தில்லை நோக்கலர் போல் – திருக்கோ:275/3
ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆருயிர் ஈர் உரு கொண்டு – திருக்கோ:307/1
பூணும் புணர் முலையும் கொண்டு தோன்றும் ஒர் பூம்_கொடியே – திருக்கோ:341/4
வருந்தேல் அது அன்று இதுவோ வருவது ஒர் வஞ்சனையே – திருக்கோ:394/4
மேல்


ஒரு (10)

ஒருங்கு அளி ஆர்ப்ப உமிழ் மும்மதத்து இரு கோட்டு ஒரு நீள் – திருக்கோ:52/3
மருங்கண் அனையது உண்டோ வந்தது ஈங்கு ஒரு வான் கலையே – திருக்கோ:53/4
மண்ணை மடங்க வரும் ஒரு காலத்தும் மன்னி நிற்கும் – திருக்கோ:75/2
ஒரு குதலை சின் மழலைக்கு என்னோ ஐய ஓதுவதே – திருக்கோ:104/4
ஓங்கும் ஒரு விடம் உண்டு அம்பலத்து உம்பர் உய்ய அன்று – திருக்கோ:158/1
மண்டலமே பணியாய் தமியேற்கு ஒரு வாசகமே – திருக்கோ:177/4
ஒரு ஆகம் இரண்டு எழிலாய் ஒளிர்வோன் தில்லை ஒள்_நுதல் அங்கராகம் – திருக்கோ:194/1
கதிர் ஏய் சடையோன் கர மான் என ஒரு மான் மயில் போல் – திருக்கோ:243/3
இடம்-தொறும் பார்க்கும் இயவு ஒரு நீ எழில் வேலின் வந்தால் – திருக்கோ:253/2
வண்டல் உற்றேம் எம்-கண் வந்து ஒரு தோன்றல் வரி வளையீர் – திருக்கோ:290/1
மேல்


ஒருகால் (2)

வரை அன்று ஒருகால் இரு கால் வளைய நிமிர்த்து வட்கார் – திருக்கோ:152/1
உள்ளம் புகும் ஒருகால் பிரியாது உள்ளி உள்ளு-தொறும் – திருக்கோ:379/3
மேல்


ஒருங்கு (5)

ஒருங்கு அளி ஆர்ப்ப உமிழ் மும்மதத்து இரு கோட்டு ஒரு நீள் – திருக்கோ:52/3
ஒருங்கு அட மூவெயில் ஒற்றை கணை கொள் சிற்றம்பலவன் – திருக்கோ:55/1
உழை கொண்டு ஒருங்கு இரு நோக்கம் பயின்ற எம் ஒள்_நுதல் மாம் – திருக்கோ:65/3
ஒருங்கு அழி காதர மூவெயில் செற்ற ஒற்றை சிலை சூழ்ந்து – திருக்கோ:190/2
ஒருங்கு வளை கரத்தான் உணராதவன் தில்லை ஒப்பாய் – திருக்கோ:331/3
மேல்


ஒருங்கே (2)

தரியாமையும் ஒருங்கே நின்று சாற்றினர் தையல் மெய்யின் – திருக்கோ:311/2
உடுத்து அணி வாள் அரவன் தில்லை ஊரன் வர ஒருங்கே
எடுத்து அணி கை ஏறு இன வளை ஆர்ப்ப இள மயில் ஏர் – திருக்கோ:352/1,2
மேல்


ஒருத்தன் (2)

உணர்ந்தார்க்கு உணர்வு அரியோன் தில்லை சிற்றம்பலத்து ஒருத்தன்
குணம் தான் வெளிப்பட்ட கொவ்வை செ வாய் இ கொடி இடை தோள் – திருக்கோ:9/1,2
ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர் குடுமி – திருக்கோ:62/2
மேல்


ஒருத்தி (1)

அரவு அணையும் சடையோன் தில்லை ஊரனை ஆங்கு ஒருத்தி
தர அணையும் பரிசு ஆயினவாறு நம் தன்மைகளே – திருக்கோ:360/3,4
மேல்


ஒருநாள் (1)

ஒருநாள் பிரியாது உயிரின் பழகி உடன் வளர்ந்த – திருக்கோ:44/3
மேல்


ஒருபாலவள் (1)

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபாலவள்
அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் அன்று உரித்தது அன்ன – திருக்கோ:112/1,2
மேல்


ஒருவர் (6)

தேதே எனும் தில்லையோன் சேய் என சின வேல் ஒருவர்
மாதே புனத்திடை வாளா வருவர் வந்து யாதும் சொல்லார் – திருக்கோ:82/2,3
அணி ஆர் கயிலை மயில்காள் அயில் வேல் ஒருவர் வந்தால் – திருக்கோ:145/3
முன்னும் ஒருவர் இரும் பொழில் மூன்றற்கு முற்றும் இற்றால் – திருக்கோ:160/1
பின்னும் ஒருவர் சிற்றம்பலத்தார் தரும் பேர் அருள் போல் – திருக்கோ:160/2
கோள் அரிக்கு நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர் தார் – திருக்கோ:225/3
சின களி யானை கடிந்தார் ஒருவர் செ வாய் பசிய – திருக்கோ:293/3
மேல்


ஒருவன் (9)

ஒளி வளர் தில்லை ஒருவன் கயிலை உகு பெரும் தேன் – திருக்கோ:16/3
முழை கொண்டு ஒருவன் செல்லாமை நின்று அம்பலத்து ஆடும் முன்னோன் – திருக்கோ:65/2
தழை கொண்டு ஒருவன் என்னா முன்னம் உள்ளம் தழைத்திடுமே – திருக்கோ:65/4
ஏகத்து ஒருவன் இரும் பொழில் அம்பலவன் மலையில் – திருக்கோ:71/3
தெரியேம் உரையான் பிரியான் ஒருவன் இ தேம் புனமே – திருக்கோ:83/4
தாங்கும் ஒருவன் தட வரை-வாய் தழங்கும் அருவி – திருக்கோ:158/2
ஓரளவு இல்லா ஒருவன் இரும் கழல் உன்னினர் போல் – திருக்கோ:308/3
ஊணும் திருத்தும் ஒருவன் திருத்தும் உலகின் எல்லாம் – திருக்கோ:341/2
மலரை பொறா அடி மானும் தமியள் மன்னன் ஒருவன்
பலரை பொறாது என்று இழிந்து நின்றாள் பள்ளி காமன் எய்த – திருக்கோ:367/1,2
மேல்


ஒருவனது (1)

ஒருவனது அன்பரின் இன்ப கலவிகள் உள் உருக – திருக்கோ:281/2
மேல்


ஒருவி (1)

பிழை கொண்டு ஒருவி கெடாது அன்பு செய்யின் பிறவி என்னும் – திருக்கோ:65/1
மேல்


ஒல்கி (2)

மரு வளர் மாலையர் வல்லியின் ஒல்கி அன நடை வாய்ந்து – திருக்கோ:1/3
மயில் என பேர்ந்து இள வல்லியின் ஒல்கி மெல் மான் விழித்து – திருக்கோ:224/1
மேல்


ஒல்குதலால் (1)

வாம் பிணையால் வல்லி ஒல்குதலால் மன்னும் அம்பலவன் – திருக்கோ:38/2
மேல்


ஒல்லை (2)

ஈண்டு ஒல்லை ஆயமும் ஒளவையும் நீங்க இ ஊர் கவ்வை தீர்த்து – திருக்கோ:214/1
ஆண்டு ஒல்லை கண்டிட கூடுக நும்மை எம்மை பிடித்து இன்று – திருக்கோ:214/2
மேல்


ஒலி (1)

பெரும் பொறையாட்டியை என் இன்று பேசுவ பேர் ஒலி நீர் – திருக்கோ:353/2
மேல்


ஒழிந்த (1)

இறுமாப்பு ஒழிய இறுமாப்பு ஒழிந்த இணை முலையே – திருக்கோ:373/4
மேல்


ஒழிந்தது (1)

ஆளா ஒழிந்தது என் ஆருயிர் ஆர் அமிழ்தே அணங்கே – திருக்கோ:47/2
மேல்


ஒழிந்தனம் (1)

நாமே நடக்க ஒழிந்தனம் யாம் நெஞ்சம் வஞ்சி அன்ன – திருக்கோ:344/3
மேல்


ஒழிந்து (1)

அடலை உற்றாரின் எறிப்பு ஒழிந்து ஆங்கு அருக்கன் சுருக்கி – திருக்கோ:218/3
மேல்


ஒழிய (1)

இறுமாப்பு ஒழிய இறுமாப்பு ஒழிந்த இணை முலையே – திருக்கோ:373/4
மேல்


ஒழியாது (1)

அருளாது ஒழியின் ஒழியாது அழியும் என் ஆருயிரே – திருக்கோ:73/4
மேல்


ஒழியாய் (1)

பேர்த்தும் இரைப்பு ஒழியாய் பழி நோக்காய் பெரும் கடலே – திருக்கோ:173/4
மேல்


ஒழியாவிடின் (1)

பெயர்ந்தும் ஒழியாவிடின் என்னை பேசுவ பேர்ந்து இருவர் – திருக்கோ:287/2
மேல்


ஒழியின் (2)

அருளாது ஒழியின் ஒழியாது அழியும் என் ஆருயிரே – திருக்கோ:73/4
துயர்ந்தும் பிறிதின் ஒழியின் என் ஆதும் துறைவனுக்கே – திருக்கோ:287/4
மேல்


ஒழியும் (1)

இறுமாப்பு ஒழியும் அன்றே தங்கை தோன்றின் என் எங்கை அம் கை – திருக்கோ:373/1
மேல்


ஒழிவது (1)

சீலத்தை நீயும் நினையாது ஒழிவது என் தீவினையே – திருக்கோ:27/4
மேல்


ஒழிவர்-கொல்லோ (1)

அகன்றார் அகன்றே ஒழிவர்-கொல்லோ நம் அகன் துறையே – திருக்கோ:184/4
மேல்


ஒழிவாய் (1)

ஊர்வாய் ஒழிவாய் உயர் பெண்ணை திண் மடல் நின் குறிப்பு – திருக்கோ:80/1
மேல்


ஒழிவீர் (1)

ஊர் என்ன என்னவும் வாய் திறவீர் ஒழிவீர் பழியேல் – திருக்கோ:56/3
மேல்


ஒழுக (1)

பதி உடையான் பரங்குன்றினில் பாய் புனல் யாம் ஒழுக
கதி உடையான் கதிர் தோள் நிற்க வேறு கருது நின்னின் – திருக்கோ:292/2,3
மேல்


ஒழுகுவது (1)

அறிவாள் ஒழுகுவது அஞ்சனம் அம்பலவர் பணியார் – திருக்கோ:334/3
மேல்


ஒள் (6)

உழை கொண்டு ஒருங்கு இரு நோக்கம் பயின்ற எம் ஒள்_நுதல் மாம் – திருக்கோ:65/3
உறு-கால் பிறர்க்கு அரியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:126/4
ஒளிரும் சடைமுடியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:193/4
ஒரு ஆகம் இரண்டு எழிலாய் ஒளிர்வோன் தில்லை ஒள்_நுதல் அங்கராகம் – திருக்கோ:194/1
உணங்கல் அஞ்சாது உண்ணலாம் ஒள் நிண பலி ஒக்குவல் மா – திருக்கோ:235/3
ஓவியம் கண்டு அன்ன ஒள் நுதலாள் தனக்கு ஓகை உய்ப்பான் – திருக்கோ:384/2
மேல்


ஒள்_நுதல் (2)

உழை கொண்டு ஒருங்கு இரு நோக்கம் பயின்ற எம் ஒள்_நுதல் மாம் – திருக்கோ:65/3
ஒரு ஆகம் இரண்டு எழிலாய் ஒளிர்வோன் தில்லை ஒள்_நுதல் அங்கராகம் – திருக்கோ:194/1
மேல்


ஒள்_நுதலே (2)

உறு-கால் பிறர்க்கு அரியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:126/4
ஒளிரும் சடைமுடியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:193/4
மேல்


ஒள்வன் (1)

ஒள்வன் படை_கண்ணி சீறடி இங்கிவை உங்குவை அ – திருக்கோ:237/3
மேல்


ஒளி (18)

பரும் குன்ற மாளிகை நுண் களபத்து ஒளி பாய நும் ஊர் – திருக்கோ:15/3
ஒளி வளர் தில்லை ஒருவன் கயிலை உகு பெரும் தேன் – திருக்கோ:16/3
ஒளி சென்ற செம் சடை கூத்தப்பிரானை உன்னாரின் என்-கண் – திருக்கோ:50/2
ஒளி அமர்ந்த ஆங்கு ஒன்று போன்று ஒன்று தோன்றும் ஒளி முகத்தே – திருக்கோ:64/4
ஒளி அமர்ந்த ஆங்கு ஒன்று போன்று ஒன்று தோன்றும் ஒளி முகத்தே – திருக்கோ:64/4
இருளாய் இருக்கும் ஒளி நின்ற சிற்றம்பலம் எனல் ஆம் – திருக்கோ:73/2
அழல்-வாய் அவிர் ஒளி அம்பலத்து ஆடும் அம் சோதி அம் தீம் – திருக்கோ:94/2
உற்றிலள் உற்றது அறிந்திலள் ஆகத்து ஒளி மிளிரும் – திருக்கோ:97/3
உவவின நாள் மதி போன்று ஒளிர்கின்றது ஒளி முகமே – திருக்கோ:108/4
பாசத்தின் கார் என்று அவன் தில்லையின் ஒளி போன்று அவன் தோள் – திருக்கோ:109/2
ஒளி நீள் கரி குழல் சூழ்ந்த ஒண் மாலையும் தண் நறவு உண் – திருக்கோ:122/2
உன்னும் அதற்கு தளர்ந்து ஒளி வாடுதிர் உம்பர் எலாம் – திருக்கோ:131/2
சீர் அம்பரத்தின் திகழ்ந்து ஒளி தோன்றும் துறைவர் சென்றார் – திருக்கோ:182/2
உறு வல கானகம் தான் படர்வான் ஆம் ஒளி_இழையே – திருக்கோ:227/4
வேய் இன மென் தோள் மெலிந்து ஒளி வாடி விழி பிறிதாய் – திருக்கோ:282/1
பிறப்பின் துனைந்து பெருகுக தேர் பிறங்கும் ஒளி ஆர் – திருக்கோ:328/2
நீர் உக ஒளி வாடிட நீடு சென்றார் சென்ற நாள் – திருக்கோ:345/3
ஊழின் வலியது ஒன்று என்னை ஒளி மேகலை உகளும் – திருக்கோ:350/2
மேல்


ஒளி_இழையே (1)

உறு வல கானகம் தான் படர்வான் ஆம் ஒளி_இழையே – திருக்கோ:227/4
மேல்


ஒளிகள் (1)

அலர் ஆர் கழல் வழிபாடுசெய்தாற்கு அளவில் ஒளிகள்
அலராவிருக்கும் படை கொடுத்தோன் தில்லையான் அருள் போன்று – திருக்கோ:180/2,3
மேல்


ஒளித்த (1)

ஆவி அன்னாய் கவலேல் அகலேம் என்று அளித்து ஒளித்த
ஆவி அன்னார் மிக்க அவாவினராய் கெழுமற்கு அழிவுற்று – திருக்கோ:37/1,2
மேல்


ஒளித்து (1)

மொய் மலர் காந்தளை பாந்தள் என்று எண்ணி துண்ணென்று ஒளித்து
கை மலரால் கண்புதைத்து பதைக்கும் எம் கார்_மயிலே – திருக்கோ:233/3,4
மேல்


ஒளியே (1)

உருகுதலை சென்ற உள்ளத்தும் அம்பலத்தும் ஒளியே
பெருகுதலை சென்று நின்றோன் பெருந்துறை பிள்ளை கள் ஆர் – திருக்கோ:104/1,2
மேல்


ஒளியோன் (1)

பூண திருத்திய பொங்கு ஒளியோன் புலியூர் புரையும் – திருக்கோ:215/2
மேல்


ஒளிர் (4)

உய்வான் புக ஒளிர் தில்லை நின்றோன் சடை மேலது ஒத்து – திருக்கோ:67/3
கொங்கம் பழனத்து ஒளிர் குளிர் நாட்டினை நீ உமை கூர் – திருக்கோ:100/2
ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:103/2
நன் பணை தண் நறவு உண் அளி போன்று ஒளிர் நாடகமே – திருக்கோ:219/4
மேல்


ஒளிர்கின்றது (1)

உவவின நாள் மதி போன்று ஒளிர்கின்றது ஒளி முகமே – திருக்கோ:108/4
மேல்


ஒளிர்கின்றதே (1)

உரு வளர் காமன்-தன் வென்றி கொடி போன்று ஒளிர்கின்றதே – திருக்கோ:1/4
மேல்


ஒளிர்வனவே (1)

உரை என்னவோ சிலம்பா நலம் பாவி ஒளிர்வனவே – திருக்கோ:152/4
மேல்


ஒளிர்வோன் (1)

ஒரு ஆகம் இரண்டு எழிலாய் ஒளிர்வோன் தில்லை ஒள்_நுதல் அங்கராகம் – திருக்கோ:194/1
மேல்


ஒளிரும் (2)

ஒளிரும் சடைமுடியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:193/4
பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ் குழல் பூம்_கொடியே – திருக்கோ:312/4
மேல்


ஒளிறு (1)

ஒளிறு உற்ற மேனியின் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:254/3
மேல்


ஒற்றை (2)

ஒருங்கு அட மூவெயில் ஒற்றை கணை கொள் சிற்றம்பலவன் – திருக்கோ:55/1
ஒருங்கு அழி காதர மூவெயில் செற்ற ஒற்றை சிலை சூழ்ந்து – திருக்கோ:190/2
மேல்


ஒறும் (1)

தொடர்ந்து ஒறும் துன்பு என்பதே அன்ப நின் அருள் தோன்றுவதே – திருக்கோ:253/4
மேல்


ஒன்ற (1)

கிழி ஒன்ற நாடி எழுதி கை கொண்டு என் பிறவி கெட்டு இன்று – திருக்கோ:76/2
மேல்


ஒன்றாதன (1)

ஊழி ஒன்றாதன நான்கும் ஐம்பூதமும் ஆறு ஒடுங்கும் – திருக்கோ:339/2
மேல்


ஒன்றாம் (2)

ஒன்று ஒத்திட உடையாளொடு ஒன்றாம் புலியூரன் என்றே – திருக்கோ:246/2
ஒன்றாம் இவட்கும் மொழிதல் இல்லேன் மொழியாதும் உய்யேன் – திருக்கோ:288/3
மேல்


ஒன்றாய் (1)

தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்ப துன்பங்களே – திருக்கோ:71/4
மேல்


ஒன்றாவதும் (1)

பிரியாமையும் உயிர் ஒன்றாவதும் பிரியின் பெரிதும் – திருக்கோ:311/1
மேல்


ஒன்றில் (1)

தன் நிறம் ஒன்றில் இருத்தி நின்றோன்-தனது அம்பலம் போல் – திருக்கோ:58/2
மேல்


ஒன்றின் (1)

கோலி திகழ் சிறகு ஒன்றின் ஒடுக்கி பெடை குருகு – திருக்கோ:318/1
மேல்


ஒன்று (23)

வரும் குன்றம் ஒன்று உரித்தோன் தில்லை அம்பலவன் மலயத்து – திருக்கோ:15/1
உயிர் ஒன்று உளமும் ஒன்று ஒன்றே சிறப்பு இவட்கு என்னோடு என்ன – திருக்கோ:18/1
உயிர் ஒன்று உளமும் ஒன்று ஒன்றே சிறப்பு இவட்கு என்னோடு என்ன – திருக்கோ:18/1
செயிர் ஒன்று முப்புரம் செற்றவன் தில்லை சிற்றம்பலத்து – திருக்கோ:18/3
நிணம் தாழ் சுடர் இலை வேல கண்டேன் ஒன்று நின்றதுவே – திருக்கோ:34/4
அளிய மன்னும் ஒன்று உடைத்து அண்ணல் எண் அரன் தில்லை அன்னாள் – திருக்கோ:64/1
ஒளி அமர்ந்த ஆங்கு ஒன்று போன்று ஒன்று தோன்றும் ஒளி முகத்தே – திருக்கோ:64/4
ஒளி அமர்ந்த ஆங்கு ஒன்று போன்று ஒன்று தோன்றும் ஒளி முகத்தே – திருக்கோ:64/4
பேய் கண்டு அனையது ஒன்று ஆகி நின்றான் அ பெருந்தகையே – திருக்கோ:84/4
கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்று ஆங்கு அதும் காட்டிடு என்று – திருக்கோ:86/3
என்னால் அறிவு இல்லை யான் ஒன்று உரைக்கிலன் வந்து அயலார் – திருக்கோ:89/2
பெற்றில மென் பிணை பேச்சு பெறா கிள்ளை பிள்ளை இன்று ஒன்று
உற்றிலள் உற்றது அறிந்திலள் ஆகத்து ஒளி மிளிரும் – திருக்கோ:97/2,3
சிலை ஒன்று வாள்_நுதல் பங்கன் சிற்றம்பலவன் கயிலை – திருக்கோ:101/1
மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய் கணை மண் குளிக்கும் – திருக்கோ:101/2
கலை ஒன்று வெம் கணையோடு கடுகிட்டது என்னில் கெட்டேன் – திருக்கோ:101/3
கொலை ஒன்று திண்ணியவாறு ஐயர் கையில் கொடும் சிலையே – திருக்கோ:101/4
உரு பனை அன்ன கை குன்று ஒன்று உரித்து உரவு ஊர் எரித்த – திருக்கோ:137/1
பொருப்பர்க்கு யாம் ஒன்று மாட்டோம் புகல புகல் எமக்கு ஆம் – திருக்கோ:143/1
பற்று ஒன்று இலார் பற்றும் தில்லை பரன் பரங்குன்றில் நின்ற – திருக்கோ:178/1
புற்று ஒன்று அரவன் புதல்வன் என நீ புகுந்து நின்றால் – திருக்கோ:178/2
ஒன்று ஒத்திட உடையாளொடு ஒன்றாம் புலியூரன் என்றே – திருக்கோ:246/2
ஆழி ஒன்று ஈர் அடியும் இலன் பாகன் முக்கண் தில்லையோன் – திருக்கோ:339/1
ஊழின் வலியது ஒன்று என்னை ஒளி மேகலை உகளும் – திருக்கோ:350/2
மேல்


ஒன்றும் (2)

வாழும் படி ஒன்றும் கண்டிலம் வாழி இ மாம் பொழில் தேன் – திருக்கோ:322/1
வயம் தலை கூர்ந்து ஒன்றும் வாய்திறவார் வந்த வாள் அரக்கன் – திருக்கோ:383/2
மேல்


ஒன்றே (2)

உயிர் ஒன்று உளமும் ஒன்று ஒன்றே சிறப்பு இவட்கு என்னோடு என்ன – திருக்கோ:18/1
காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்த ஆங்கு இருவர் – திருக்கோ:71/1
மேல்


ஒன்னார் (2)

அரும்பெறல் தோழியொடு ஆயத்து நாப்பண் அமரர் ஒன்னார்
இரும்பு உறு மா மதில் பொன் இஞ்சி வெள்ளி புரிசை அன்று ஓர் – திருக்கோ:167/2,3
ஏது-கொலாய் விளைகின்றது இன்று ஒன்னார் இடும் மதிலே – திருக்கோ:316/4

மேல்