ஈ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

ஈ (3)

ஈ விளையாட நற விளைவு ஓர்ந்து எமர் மால்பு இயற்றும் – திருக்கோ:133/1
தந்து ஈ வரன் புலியூர் அனையாய் தடம் கண் கடந்த – திருக்கோ:163/2
சந்து ஈ வர முறியும் வெறி வீயும் தருகுவனே – திருக்கோ:163/4
மேல்


ஈங்கு (4)

தேம்பு அல் அம் சிற்றிடை ஈங்கு இவள் தீம் கனி வாய் கமழும் – திருக்கோ:11/3
ஈங்கு எனை யார் தடுப்பார் மட_பாவையை எய்துதற்கே – திருக்கோ:19/4
மருங்கு அளியா அனல் ஆட வல்லோன் தில்லையான் மலை ஈங்கு
ஒருங்கு அளி ஆர்ப்ப உமிழ் மும்மதத்து இரு கோட்டு ஒரு நீள் – திருக்கோ:52/2,3
மருங்கண் அனையது உண்டோ வந்தது ஈங்கு ஒரு வான் கலையே – திருக்கோ:53/4
மேல்


ஈங்கோய் (1)

ஏறும் அரன் மன்னும் ஈங்கோய் மலை நம் இரும் புனம் காய்ந்து – திருக்கோ:113/3
மேல்


ஈங்கோயில் (1)

வேயின் சிறந்த மென் தோளி திண் கற்பின் விழுமிதன்று ஈங்கோயில்
சிறந்து சிற்றம்பலத்து ஆடும் எம் கூத்தப்பிரான் – திருக்கோ:204/2,3
மேல்


ஈசர் (5)

திரு வளர் தாமரை சீர் வளர் காவிகள் ஈசர் தில்லை – திருக்கோ:1/1
சீர் வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசர் தில்லை – திருக்கோ:80/2
படுத்த நல் நீள் கழல் ஈசர் சிற்றம்பலம் தாம் பணியார்க்கு – திருக்கோ:267/3
ஈற்றா என நீர் வருவது பண்டு இன்று எம் ஈசர் தில்லை – திருக்கோ:382/3
மது தங்கிய கொன்றை வார் சடை ஈசர் வண் தில்லை நல்லார் – திருக்கோ:396/3
மேல்


ஈசற்கு (1)

ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று அவன் வாங்கிய என் – திருக்கோ:109/1
மேல்


ஈசன் (5)

இகல் குன்ற வில்லில் செற்றோன் தில்லை ஈசன் எம்மான் எதிர்ந்த – திருக்கோ:4/3
விடம் கால் அயில்_கண்ணி மேவும்-கொலாம் தில்லை ஈசன் வெற்பில் – திருக்கோ:31/3
இகல் இடம் தா விடை ஈசன் தொழாரின் இன்னற்கு இடமாய் – திருக்கோ:42/2
புனைவித்த ஈசன் பொதியின் மலை பொருப்பன் விருப்பின் – திருக்கோ:140/2
ஆயின ஈசன் அமரர்க்கு அமரன் சிற்றம்பலத்தான் – திருக்கோ:282/3
மேல்


ஈசன (1)

ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து ஓர் கிழி பிடித்து – திருக்கோ:74/3
மேல்


ஈட்டிய (1)

பொன் அணி ஈட்டிய ஓட்டரும் நெஞ்சம் இ பொங்கு வெம் கானின் – திருக்கோ:342/1
மேல்


ஈடு (1)

இழை காண் பணைமுலையாய் அறியேன் சொல்லும் ஈடு அவற்கே – திருக்கோ:111/4
மேல்


ஈண்டு (2)

எது நுமக்கு எய்தியது என் உற்றனிர் அறை ஈண்டு அருவி – திருக்கோ:146/3
ஈண்டு ஒல்லை ஆயமும் ஒளவையும் நீங்க இ ஊர் கவ்வை தீர்த்து – திருக்கோ:214/1
மேல்


ஈர் (6)

தொடுக்கோ பணியீர் அணி ஈர் மலர் நும் கரி குழற்கே – திருக்கோ:63/4
இரங்கிடு எந்தாய் என்று இரப்ப தன் ஈர் அடிக்கு என் இரண்டு – திருக்கோ:86/2
இடையார் மெலிவும் கண்டு அண்டர்கள் ஈர் முல்லை வேலி எம் ஊர் – திருக்கோ:136/2
இளையாள் இவளை என் சொல்லி பரவுதும் ஈர் எயிறு – திருக்கோ:294/1
ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆருயிர் ஈர் உரு கொண்டு – திருக்கோ:307/1
ஆழி ஒன்று ஈர் அடியும் இலன் பாகன் முக்கண் தில்லையோன் – திருக்கோ:339/1
மேல்


ஈர்கின்றதே (1)

என் அனை போக்கு அன்றி கிள்ளை என் உள்ளத்தை ஈர்கின்றதே – திருக்கோ:231/4
மேல்


ஈர்ந்தழையன் (1)

எரி சேர் தளிர் அன்ன மேனியன் ஈர்ந்தழையன் புலியூர் – திருக்கோ:83/2
மேல்


ஈர்ந்துறைவர்க்கு (1)

ஏது உற்று அழிதி என்னீர் மன்னும் ஈர்ந்துறைவர்க்கு இவளோ – திருக்கோ:174/3
மேல்


ஈர்ம் (11)

என் இடம் யாது இயல் நின்னை இன்னே செய்த ஈர்ம்_கொடிக்கே – திருக்கோ:28/4
இயல் உளவே இணை செப்பு வெற்பா நினது ஈர்ம் கொடி மேல் – திருக்கோ:35/3
பேர் என்னவோ உரையீர் விரை ஈர்ம் குழல் பேதையரே – திருக்கோ:56/4
இ வரை மேல் சிலம்பன் எளிதில் தந்த ஈர்ம் தழையே – திருக்கோ:114/4
வரல் வேய்தருவன் இங்கே நில் உங்கே சென்று உன் வார் குழற்கு ஈர்ம்
குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தட மலர் கொண்டுவந்தே – திருக்கோ:119/3,4
இடம் ஆ இருக்கலுற்றோ தில்லை நின்றவன் ஈர்ம் கயிலை – திருக்கோ:120/3
ஒத்து ஈர்ம் கொடியின் ஒதுங்குகின்றாள் மருங்குல் நெருங்க – திருக்கோ:121/3
மொய் மலர் ஈர்ம் கழல் அம்பலத்தோன் மன்னு தென் மலயத்து – திருக்கோ:153/2
பயின்று அமிழ்தம் பொதிந்து ஈர்ம் சுணங்கு ஆடகத்தின் – திருக்கோ:194/2
இல் பந்தி வாய் அன்றி வைகல் செல்லாது அவன் ஈர்ம் களிறே – திருக்கோ:305/4
இராப்பகல் நின்று உணங்கு ஈர்ம் கடை இத்துணை போழ்தின் சென்று – திருக்கோ:362/3
மேல்


ஈர்ம்_கொடிக்கே (1)

என் இடம் யாது இயல் நின்னை இன்னே செய்த ஈர்ம்_கொடிக்கே – திருக்கோ:28/4
மேல்


ஈற்றா (1)

ஈற்றா என நீர் வருவது பண்டு இன்று எம் ஈசர் தில்லை – திருக்கோ:382/3
மேல்


ஈன் (2)

தொத்து ஈன் மலர் பொழில் தில்லை தொல்லோன் அருள் என்ன முன்னி – திருக்கோ:121/1
முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி தன் ஏர் அளப்பாள் – திருக்கோ:121/2

மேல்