ஆ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 2
ஆக்கி 1
ஆக்கிய 3
ஆக்கும் 4
ஆக்குவித்து 1
ஆக 2
ஆகத்து 1
ஆகத்துள் 1
ஆகம் 3
ஆகா 1
ஆகி 2
ஆகும் 9
ஆகுவர் 1
ஆங்கு 18
ஆசையினால் 1
ஆட்கொண்ட 2
ஆட்கொள்ளுமவரில் 1
ஆட்சியில் 1
ஆட்செய் 1
ஆட்டி 1
ஆட்டு 2
ஆட 4
ஆடகத்தின் 1
ஆடல்செய்யார் 1
ஆடவன் 1
ஆடவைத்தோன் 1
ஆடி 8
ஆடு 6
ஆடுகின்றார் 1
ஆடும் 9
ஆடுவதே 1
ஆண்ட 5
ஆண்டகையே 1
ஆண்டவன் 1
ஆண்டான் 1
ஆண்டு 10
ஆண்டுகொண்ட 2
ஆண்டுகொண்டு 2
ஆண்டுகொண்டோன் 2
ஆண்டோன் 1
ஆண்தகையே 1
ஆத்தின்னி 1
ஆதரவு 1
ஆதரிக்க 1
ஆதரியா 1
ஆதியை 1
ஆதும் 1
ஆம் 27
ஆம்-கொல் 1
ஆம்பல் 1
ஆமே 1
ஆமோ 1
ஆய் 3
ஆய்ந்த 1
ஆய்பவரை 1
ஆய 2
ஆயத்ததாய் 1
ஆயத்து 3
ஆயத்தை 1
ஆயம் 2
ஆயமும் 1
ஆயவன் 2
ஆயிரம் 3
ஆயின் 1
ஆயின 3
ஆயினர் 2
ஆயினவாறு 1
ஆயும் 1
ஆர் 65
ஆர்_குழல் 1
ஆர்க்க 1
ஆர்க்கும் 4
ஆர்கலியும் 1
ஆர்த்தர் 1
ஆர்த்தவன் 1
ஆர்த்தன 1
ஆர்த்து 2
ஆர்ந்த 1
ஆர்ந்து 2
ஆர்ப்ப 8
ஆர 4
ஆரம் 2
ஆரும் 1
ஆருயிர் 4
ஆருயிரே 1
ஆரேனும் 1
ஆல் 2
ஆலத்தினால் 1
ஆலம் 1
ஆலிக்கும் 1
ஆலும் 2
ஆவ 1
ஆவம் 1
ஆவா 3
ஆவி 9
ஆவியும் 4
ஆவியை 2
ஆழ் 3
ஆழம்-மன்னோ 1
ஆழி 5
ஆள் 2
ஆள்வது 1
ஆளா 1
ஆளி 3
ஆற்றல் 2
ஆற்று 1
ஆற்றுவனோ 1
ஆற்றேன் 1
ஆறு 4
ஆறும் 1
ஆனந்த 5
ஆனைகள் 1

ஆ (2)

சொல் இலன் ஆ கற்ற வா கடவான் இ சுனை புனமே – திருக்கோ:60/4
இடம் ஆ இருக்கலுற்றோ தில்லை நின்றவன் ஈர்ம் கயிலை – திருக்கோ:120/3
மேல்


ஆக்கி (1)

பட மாசுண பள்ளி இ குவடு ஆக்கி அ பங்கய கண் – திருக்கோ:120/1
மேல்


ஆக்கிய (3)

களம் ஆம் விடம் அமிர்து ஆக்கிய தில்லை தொல்லோன் கயிலை – திருக்கோ:22/2
ஆலத்தினால் அமிர்து ஆக்கிய கோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:27/1
அழிகின்றது ஆக்கிய தாள் அம்பலவன் கயிலை அம் தேன் – திருக்கோ:76/3
மேல்


ஆக்கும் (4)

துணர் போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:17/2
முடி சந்த மா மலர் ஆக்கும் முன்னோன் புலியூர் புரையும் – திருக்கோ:78/2
படிச்சந்தம் ஆக்கும் படம் உளவோ நும் பரிசகத்தே – திருக்கோ:78/4
முடிக்கு அலர் ஆக்கும் மொய் பூம் துறைவற்கு முரி புருவ – திருக்கோ:291/2
மேல்


ஆக்குவித்து (1)

பேய்-வயினும் அரிது ஆகும் பிரிவு எளிது ஆக்குவித்து
சேய்-வயின் போந்த நெஞ்சே அஞ்சத்தக்கது உன் சிக்கனவே – திருக்கோ:343/3,4
மேல்


ஆக (2)

கோலத்தினாள் பொருட்டு ஆக அமிர்தம் குணம் கெடினும் – திருக்கோ:27/2
பல் இலன் ஆக பகலை வென்றோன் தில்லை பாடலர் போல் – திருக்கோ:60/1
மேல்


ஆகத்து (1)

உற்றிலள் உற்றது அறிந்திலள் ஆகத்து ஒளி மிளிரும் – திருக்கோ:97/3
மேல்


ஆகத்துள் (1)

ஆகத்துள் ஓர் உயிர் கண்டனம் யாம் இன்று யாவையும் ஆம் – திருக்கோ:71/2
மேல்


ஆகம் (3)

ஒரு ஆகம் இரண்டு எழிலாய் ஒளிர்வோன் தில்லை ஒள்_நுதல் அங்கராகம் – திருக்கோ:194/1
கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்த தில்லை – திருக்கோ:209/1
சிலை மலி வாள் நுதல் எங்கையது ஆகம் என செழும் பூண் – திருக்கோ:397/1
மேல்


ஆகா (1)

இயல் இது அன்றே என்னல் ஆகா இறை விறல் சேய் கடவும் – திருக்கோ:285/2
மேல்


ஆகி (2)

மாயத்தது ஆகி இதோ வந்து நின்றது என் மன் உயிரே – திருக்கோ:39/4
பேய் கண்டு அனையது ஒன்று ஆகி நின்றான் அ பெருந்தகையே – திருக்கோ:84/4
மேல்


ஆகும் (9)

பயில்கின்ற கூத்தன் அருள் எனல் ஆகும் பணி_மொழிக்கே – திருக்கோ:18/4
ஒக்கின்ற ஆர் அணங்கே இணங்கு ஆகும் உனக்கு அவளே – திருக்கோ:68/4
உழை காண்டலும் நினைப்பு ஆகும் மெல்நோக்கி மன் நோக்கம் கண்டால் – திருக்கோ:111/3
குழல் தலை சொல்லி செல்ல குறிப்பு ஆகும் நம் கொற்றவர்க்கே – திருக்கோ:206/4
நம்பன் சிவநகர் நல் தளிர் கல் சுரம் ஆகும் நம்பா – திருக்கோ:209/2
மருந்தும் அமிர்தமும் ஆகும் முன்னோன் தில்லை வாழ்த்தும் வள்ளல் – திருக்கோ:272/2
பேய்-வயினும் அரிது ஆகும் பிரிவு எளிது ஆக்குவித்து – திருக்கோ:343/3
அரும் பொறை ஆகும் என் ஆவியும் தேய்வுற்று அழிகின்றதே – திருக்கோ:353/4
இவ்வாறு அருள் பிறர்க்கு ஆகும் என நினைந்து இன்_நகையே – திருக்கோ:366/4
மேல்


ஆகுவர் (1)

ஏர் அளவு இல்லா அளவினர் ஆகுவர் ஏந்து_இழையே – திருக்கோ:308/4
மேல்


ஆங்கு (18)

ஆங்கு இற்பழி ஆம் எனவோ அறியேன் அயர்கின்றதே – திருக்கோ:13/4
ஆங்கு எனை ஆண்டுகொண்டு ஆடும் பிரான் அடி தாமரைக்கே – திருக்கோ:19/2
பாம்பை பிடித்து படம் கிழித்து ஆங்கு அ பணை முலைக்கே – திருக்கோ:21/2
புணர்ந்து ஆங்கு அகன்ற பொரு கரி உன்னி புனத்து அயலே – திருக்கோ:34/2
ஒளி அமர்ந்த ஆங்கு ஒன்று போன்று ஒன்று தோன்றும் ஒளி முகத்தே – திருக்கோ:64/4
காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்த ஆங்கு இருவர் – திருக்கோ:71/1
சேய் கண்டு அனையன் சென்று ஆங்கு ஓர் அலவன் தன் சீர் பெடையின் – திருக்கோ:84/2
கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்று ஆங்கு அதும் காட்டிடு என்று – திருக்கோ:86/3
பூசு அ திருநீறு என வெளுத்து ஆங்கு அவன் பூம் கழல் யாம் – திருக்கோ:109/3
கான் உழை வாழ்வு பெற்று ஆங்கு எழில் காட்டும் ஒர் கார் பொழிலே – திருக்கோ:116/4
எழுந்து ஆங்கு அது மலர்த்தும் உயர் வானத்து இள மதியே – திருக்கோ:166/4
ஆங்கு அணைந்தார் நின்னையும் உளரோ சென்று அகன்றவரே – திருக்கோ:179/4
அடலை உற்றாரின் எறிப்பு ஒழிந்து ஆங்கு அருக்கன் சுருக்கி – திருக்கோ:218/3
ஆங்கு அயிலால் பணிகொண்டது திண் திறல் ஆண்தகையே – திருக்கோ:245/4
கொல் பா இலங்கு இலை வேல் குளித்து ஆங்கு குறுகியதே – திருக்கோ:310/4
நெருப்பு இனம் மேய் நெடு மால் எழில் தோன்ற சென்று ஆங்கு நின்ற – திருக்கோ:319/3
ஆங்கு வளைத்துவைத்து ஆரேனும் கொள்க நள்ளார் அரணம் – திருக்கோ:357/2
அரவு அணையும் சடையோன் தில்லை ஊரனை ஆங்கு ஒருத்தி – திருக்கோ:360/3
மேல்


ஆசையினால் (1)

அன்னாள் அரும்பெறல் ஆவி அன்னாய் அருள் ஆசையினால்
பொன் ஆர் மணி மகிழ் பூ விழ யாம் விழை பொங்கு இருளே – திருக்கோ:210/3,4
மேல்


ஆட்கொண்ட (2)

கோங்கு அரும்பும் தொலைத்து என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே – திருக்கோ:46/4
ஆய் தந்த அன்பு தந்து ஆட்கொண்ட அம்பலவன் மலையில் – திருக்கோ:130/3
மேல்


ஆட்கொள்ளுமவரில் (1)

உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆட்கொள்ளுமவரில்
ஓர் கூட்டம் தந்தான் குனிக்கும் புலியூர் – திருக்கோ:185/1,2
மேல்


ஆட்சியில் (1)

சேயினது ஆட்சியில் பட்டனளாம் இ திருந்து_இழையே – திருக்கோ:282/4
மேல்


ஆட்செய் (1)

மொய் என்பதே இழை கொண்டவன் என்னை தன் மொய் கழற்கு ஆட்செய்
என்பதே செய்தவன் தில்லை சூழ் கடல் சேர்ப்பர் சொல்லும் – திருக்கோ:277/1,2
மேல்


ஆட்டி (1)

பந்து ஆர் விரலியை பாய் புனல் ஆட்டி மன் பாவி எற்கு – திருக்கோ:391/2
மேல்


ஆட்டு (2)

இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர் எம் உடையர் – திருக்கோ:57/1
கவலம் கொள் பேய் தொகை பாய்தர காட்டிடை ஆட்டு உவந்த – திருக்கோ:389/1
மேல்


ஆட (4)

மருங்கு அளியா அனல் ஆட வல்லோன் தில்லையான் மலை ஈங்கு – திருக்கோ:52/2
அ குன்ற ஆறு அமர்ந்து ஆட சென்றாள் அங்கம் அவ்வவையே – திருக்கோ:68/3
களி தர கார் மிடற்றோன் நடம் ஆட கண் ஆர் முழவம் – திருக்கோ:324/2
மூவர் நின்று ஏத்த முதலவன் ஆட முப்பத்துமும்மை – திருக்கோ:337/1
மேல்


ஆடகத்தின் (1)

பயின்று அமிழ்தம் பொதிந்து ஈர்ம் சுணங்கு ஆடகத்தின்
பராகம் சிதர்ந்த பயோதரம் இ பரிசே பணைத்த – திருக்கோ:194/2,3
மேல்


ஆடல்செய்யார் (1)

சோதி வரிப்பந்து அடியார் சுனை புனல் ஆடல்செய்யார்
போது இவர் கற்பக நாடு புல்லென்ன தம் பொன் அடி பாய் – திருக்கோ:40/2,3
மேல்


ஆடவன் (1)

அன்பு அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் நீடு அவன்-தன் – திருக்கோ:219/1
மேல்


ஆடவைத்தோன் (1)

அயல் வந்த ஆடு அரவு ஆடவைத்தோன் அம்பலம் நிலவு – திருக்கோ:381/3
மேல்


ஆடி (8)

திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி சிலம்பு எதிர் கூய் – திருக்கோ:62/3
ஆர தழை அரா பூண்டு அம்பலத்து அனல் ஆடி அன்பர்க்கு – திருக்கோ:91/1
புயல் வளர் ஊசல் முன் ஆடி பொன்னே பின்னை போய் பொலியும் – திருக்கோ:117/1
கூளி நிரைக்க நின்று அம்பலத்து ஆடி குறை கழல் கீழ் – திருக்கோ:151/1
காயும் கடத்திடை ஆடி கடப்பவும் கண்டு நின்று – திருக்கோ:241/2
அல் படு காட்டில் நின்று ஆடி சிற்றம்பலத்தான் மிடற்றின் – திருக்கோ:348/1
கொக்கின் இறகு-அது அணிந்து நின்று ஆடி தென் கூடல் அன்ன – திருக்கோ:376/2
என்பிடை வந்து அமிழ்து ஊற நின்று ஆடி இரும் சுழியல் – திருக்கோ:377/2
மேல்


ஆடு (6)

அளி வளர் வல்லி அன்னாய் முன்னி ஆடு பின் யான் அளவா – திருக்கோ:16/2
ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் சேர்வர்-கொல் அம்பலத்து எம் – திருக்கோ:37/3
ஆனந்த மா கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன பொன்னின் – திருக்கோ:147/1
தென்னா என உடையான் நடம் ஆடு சிற்றம்பலமே – திருக்கோ:217/4
நறை கள் மலி கொன்றையோன் நின்று நாடகம் ஆடு தில்லை – திருக்கோ:258/1
அயல் வந்த ஆடு அரவு ஆடவைத்தோன் அம்பலம் நிலவு – திருக்கோ:381/3
மேல்


ஆடுகின்றார் (1)

தண் நறும் தாது இவர் சந்தன சோலை பந்து ஆடுகின்றார்
எண்ணிறந்தார்அவர் யார் கண்ணதோ மன்ன நின் அருளே – திருக்கோ:107/3,4
மேல்


ஆடும் (9)

ஆங்கு எனை ஆண்டுகொண்டு ஆடும் பிரான் அடி தாமரைக்கே – திருக்கோ:19/2
வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இள வல்லி அன்னீர் – திருக்கோ:53/2
முழை கொண்டு ஒருவன் செல்லாமை நின்று அம்பலத்து ஆடும் முன்னோன் – திருக்கோ:65/2
அழல்-வாய் அவிர் ஒளி அம்பலத்து ஆடும் அம் சோதி அம் தீம் – திருக்கோ:94/2
சினை வளர் வேங்கைகள் யாங்கள் நின்று ஆடும் செழும் பொழிலே – திருக்கோ:154/4
சிறந்து சிற்றம்பலத்து ஆடும் எம் கூத்தப்பிரான் – திருக்கோ:204/3
வென்றவர் முப்புரம் சிற்றம்பலத்தில் நின்று ஆடும் வெள்ளி – திருக்கோ:280/1
அரசு அம்பலத்து நின்று ஆடும் பிரான் அருள் பெற்றவரின் – திருக்கோ:299/3
என் மா தலை கழல் வைத்து எரி ஆடும் இறை திகழும் – திருக்கோ:338/2
மேல்


ஆடுவதே (1)

அம் மலர் வாள் கண் நல்லாய் எல்லி-வாய் நுமர் ஆடுவதே – திருக்கோ:153/4
மேல்


ஆண்ட (5)

பயங்கரமாக நின்று ஆண்ட அவயவத்தின் – திருக்கோ:33/2
மாவை வந்து ஆண்ட மெல்நோக்கி-தன் பங்கர் வண் தில்லை மல்லல் – திருக்கோ:200/1
கோவை வந்து ஆண்ட செ வாய் கரும்_கண்ணி குறிப்பு அறியேன் – திருக்கோ:200/2
பரிந்து எனை ஆண்ட சிற்றம்பலத்தான் பரங்குன்றில் துன்றி – திருக்கோ:279/3
பெரும் தேன் என நெஞ்சு உக பிடித்து ஆண்ட நம் பெண் அமிழ்தம் – திருக்கோ:394/3
மேல்


ஆண்டகையே (1)

ஆவா மணி வேல் பணி கொண்ட ஆறு இன்று ஓர் ஆண்டகையே – திருக்கோ:72/4
மேல்


ஆண்டவன் (1)

அழுந்தாவகை எனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய் – திருக்கோ:124/3
மேல்


ஆண்டான் (1)

ஆண்டான் அரு வரை ஆளி அன்னானை கண்டேன் அயலே – திருக்கோ:244/3
மேல்


ஆண்டு (10)

உளம் ஆம் வகை நம்மை உய்ய வந்து ஆண்டு சென்று உம்பர் உய்ய – திருக்கோ:22/1
பொருளா எனை புகுந்து ஆண்டு புரந்தரன் மால் அயன்-பால் – திருக்கோ:73/1
தெவ்வரை மெய் எரி காய் சிலை ஆண்டு என்னை ஆண்டுகொண்ட – திருக்கோ:114/1
பரிவு செய்து ஆண்டு அம்பலத்து பயில்வோன் பரங்குன்றின்-வாய் – திருக்கோ:144/1
ஆண்டு ஒல்லை கண்டிட கூடுக நும்மை எம்மை பிடித்து இன்று – திருக்கோ:214/2
ஆண்டு எல்லை தீர் இன்பம் தந்தவன் சிற்றம்பலம் நிலவு – திருக்கோ:214/3
ஆண்டு இல் எடுத்தவர் ஆம் இவர் தாம் அவர் அல்குவர் போய் – திருக்கோ:249/1
கொல் ஆண்டு இலங்கு மழு படையோன் குளிர் தில்லை அன்னாய் – திருக்கோ:387/1
வில் ஆண்டு இலங்கு புருவம் நெரிய செ வாய் துடிப்ப – திருக்கோ:387/2
கல் ஆண்டு எடேல் கரும் கண் சிவப்பு ஆற்று கறுப்பது அன்று – திருக்கோ:387/3
மேல்


ஆண்டுகொண்ட (2)

தெவ்வரை மெய் எரி காய் சிலை ஆண்டு என்னை ஆண்டுகொண்ட
செ வரை மேனியன் சிற்றம்பலவன் செழும் கயிலை – திருக்கோ:114/1,2
அழுந்தேன் நரகத்து யான் என்று இருப்ப வந்து ஆண்டுகொண்ட
செழும் தேன் திகழ் பொழில் தில்லை புறவில் செறு அகத்த – திருக்கோ:166/1,2
மேல்


ஆண்டுகொண்டு (2)

ஆங்கு எனை ஆண்டுகொண்டு ஆடும் பிரான் அடி தாமரைக்கே – திருக்கோ:19/2
அடி சந்தம் மால் கண்டிலாதன காட்டி வந்து ஆண்டுகொண்டு என் – திருக்கோ:78/1
மேல்


ஆண்டுகொண்டோன் (2)

பாச தளை அறுத்து ஆண்டுகொண்டோன் தில்லை அம்பலம் சூழ் – திருக்கோ:115/1
தொகை தணித்தற்கு என்னை ஆண்டுகொண்டோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:314/3
மேல்


ஆண்டோன் (1)

பொதுவினில் தீர்த்து என்னை ஆண்டோன் புலியூர் அரன் பொருப்பே – திருக்கோ:146/1
மேல்


ஆண்தகையே (1)

ஆங்கு அயிலால் பணிகொண்டது திண் திறல் ஆண்தகையே – திருக்கோ:245/4
மேல்


ஆத்தின்னி (1)

பொய் கொண்டு நிற்கல் உற்றோ புலை ஆத்தின்னி போந்ததுவே – திருக்கோ:386/4
மேல்


ஆதரவு (1)

கார் வாய் குழலிக்கு உன் ஆதரவு ஓதி கற்பித்து கண்டால் – திருக்கோ:80/3
மேல்


ஆதரிக்க (1)

நாம் ஆதரிக்க நடம் பயில்வோனை நண்ணாதவரின் – திருக்கோ:263/2
மேல்


ஆதரியா (1)

யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலம் ஆதரியா
கூழின் மலி மனம் போன்று இருளாநின்ற கோகிலமே – திருக்கோ:322/3,4
மேல்


ஆதியை (1)

நெருப்பனை அம்பலத்து ஆதியை உம்பர் சென்று ஏத்தி நிற்கும் – திருக்கோ:137/2
மேல்


ஆதும் (1)

துயர்ந்தும் பிறிதின் ஒழியின் என் ஆதும் துறைவனுக்கே – திருக்கோ:287/4
மேல்


ஆம் (27)

நற்பால் வினை தெய்வம் தந்து இன்று நான் இவள் ஆம் பகுதி – திருக்கோ:8/2
ஆங்கு இற்பழி ஆம் எனவோ அறியேன் அயர்கின்றதே – திருக்கோ:13/4
ஆம் பொன் தட மலர் சூடும் என் ஆற்றல் அகற்றியதே – திருக்கோ:21/4
உளம் ஆம் வகை நம்மை உய்ய வந்து ஆண்டு சென்று உம்பர் உய்ய – திருக்கோ:22/1
களம் ஆம் விடம் அமிர்து ஆக்கிய தில்லை தொல்லோன் கயிலை – திருக்கோ:22/2
கொல் வினை வல்லன கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல – திருக்கோ:26/2
விழியால் பிணை ஆம் விளங்கு இயலான் மயில் ஆம் மிழற்று – திருக்கோ:29/1
விழியால் பிணை ஆம் விளங்கு இயலான் மயில் ஆம் மிழற்று – திருக்கோ:29/1
மொழியால் கிளி ஆம் முது வானவர்-தம் முடி தொகைகள் – திருக்கோ:29/2
கொழியா திகழும் பொழிற்கு எழில் ஆம் எம் குலதெய்வமே – திருக்கோ:29/4
ஆகத்துள் ஓர் உயிர் கண்டனம் யாம் இன்று யாவையும் ஆம்
ஏகத்து ஒருவன் இரும் பொழில் அம்பலவன் மலையில் – திருக்கோ:71/2,3
இருளாய் இருக்கும் ஒளி நின்ற சிற்றம்பலம் எனல் ஆம்
சுருள் ஆர் கரும் குழல் வெள் நகை செ வாய் துடியிடையீர் – திருக்கோ:73/2,3
கடன் ஆம் உருவத்து அரன் தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை – திருக்கோ:77/2
உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து – திருக்கோ:77/3
பை நாண் அரவன் படு கடல்-வாய் படு நஞ்சு அமுது ஆம்
மை நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்த பொன் இ – திருக்கோ:81/1,2
ஆம் என்று அரும் கொடும்பாடுகள் செய்து நும் கண் மலர் ஆம் – திருக்கோ:90/3
ஆம் என்று அரும் கொடும்பாடுகள் செய்து நும் கண் மலர் ஆம்
காமன் கணை கொண்டு அலைகொள்ளவோ முற்ற கற்றதுவே – திருக்கோ:90/3,4
அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் அன்று உரித்தது அன்ன – திருக்கோ:112/2
அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் அன்று உரித்தது அன்ன – திருக்கோ:112/2
பொருப்பர்க்கு யாம் ஒன்று மாட்டோம் புகல புகல் எமக்கு ஆம்
விருப்பர்க்கு யாவர்க்கும் மேலவர்க்கு மேல் வரும் ஊர் எரித்த – திருக்கோ:143/1,2
உறு வல கானகம் தான் படர்வான் ஆம் ஒளி_இழையே – திருக்கோ:227/4
மை மலர் வாள்_கண்ணி வல்லள்-கொல் ஆம் தில்லையான் மலை-வாய் – திருக்கோ:233/2
ஆண்டு இல் எடுத்தவர் ஆம் இவர் தாம் அவர் அல்குவர் போய் – திருக்கோ:249/1
படிக்கு அலர் ஆம் இவை என் நாம் மறைக்கும் பரிசுகளே – திருக்கோ:291/4
விட களி ஆம் நம் விழு நகர் ஆர்க்கும் வியன் முரசே – திருக்கோ:297/4
அன்னவன் தேர் புறத்து அல்கல் செல்லாது வரகுணன் ஆம்
தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றை தேவர்க்கு எல்லாம் – திருக்கோ:306/2,3
யாய் ஆம் இயல்பு இவள் கற்பு நல் பால இயல்புகளே – திருக்கோ:374/4
மேல்


ஆம்-கொல் (1)

பண் நுழையா மொழியாள் என்னள் ஆம்-கொல் மன் பாவியற்கே – திருக்கோ:347/4
மேல்


ஆம்பல் (1)

ஆம்பல் அம் போது உளவோ அளிகாள் நும் அகன் பணையே – திருக்கோ:11/4
மேல்


ஆமே (1)

ஆமே நடக்க அருவினையேன் பெற்ற அம் அனைக்கே – திருக்கோ:228/4
மேல்


ஆமோ (1)

பொன் நிற அல்குலுக்கு ஆமோ மணி நிற பூம் தழையே – திருக்கோ:58/4
மேல்


ஆய் (3)

மெல் நனை ஆய் மறியே பறியேல் வெறி ஆர் மலர்கள் – திருக்கோ:125/3
ஆய் தந்த அன்பு தந்து ஆட்கொண்ட அம்பலவன் மலையில் – திருக்கோ:130/3
அகிலின் புகை விம்மி ஆய் மலர் வேய்ந்து அஞ்சனம் எழுத – திருக்கோ:165/1
மேல்


ஆய்ந்த (1)

உறைவான் உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீம் தமிழின் – திருக்கோ:20/2
மேல்


ஆய்பவரை (1)

வந்து ஆய்பவரை இல்லா மயில் முட்டை இளைய மந்தி – திருக்கோ:276/1
மேல்


ஆய (2)

கொடுக்கோ வளை மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றேவல் செய்கோ – திருக்கோ:63/3
அணியுற கொண்டவன் தில்லை தொல் ஆய நல்லார்கள் முன்னே – திருக்கோ:359/3
மேல்


ஆயத்ததாய் (1)

ஆயத்ததாய் அமிழ்தாய் அணங்காய் அரன் அம்பலம் போல் – திருக்கோ:39/2
மேல்


ஆயத்து (3)

செழும் தாது அவிழ் பொழில் ஆயத்து சேர்க திரு தகவே – திருக்கோ:124/4
அரும்பெறல் தோழியொடு ஆயத்து நாப்பண் அமரர் ஒன்னார் – திருக்கோ:167/2
வாள் அரி_கண்ணி கொண்டாள் வண்டல் ஆயத்து எம் வாள்_நுதலே – திருக்கோ:225/4
மேல்


ஆயத்தை (1)

சூழ் உடை ஆயத்தை நீக்கும் விதி துணையா மனனே – திருக்கோ:7/3
மேல்


ஆயம் (2)

நாள் ஆர் மலர் பொழில்-வாய் எழில் ஆயம் நணுகுகவே – திருக்கோ:47/4
துறு கான் மலர் தொத்து தோகை தொல் ஆயம் மெல்ல புகுக – திருக்கோ:126/2
மேல்


ஆயமும் (1)

ஈண்டு ஒல்லை ஆயமும் ஒளவையும் நீங்க இ ஊர் கவ்வை தீர்த்து – திருக்கோ:214/1
மேல்


ஆயவன் (2)

அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் தில்லை சிந்தாமணி – திருக்கோ:5/1
சூளாமணி உம்பர்க்கு ஆயவன் சூழ் பொழில் தில்லை அன்னாய்க்கு – திருக்கோ:47/1
மேல்


ஆயிரம் (3)

செம் மலர் ஆயிரம் தூய் கரு மால் திரு கண் அணியும் – திருக்கோ:153/1
அலர் ஆயிரம் தந்து வந்தித்து மால் ஆயிரம் கரத்தால் – திருக்கோ:180/1
அலர் ஆயிரம் தந்து வந்தித்து மால் ஆயிரம் கரத்தால் – திருக்கோ:180/1
மேல்


ஆயின் (1)

நனை கெட செய்தனம் ஆயின் நமை கெட செய்திடுவான் – திருக்கோ:141/3
மேல்


ஆயின (3)

ஆயின ஈசன் அமரர்க்கு அமரன் சிற்றம்பலத்தான் – திருக்கோ:282/3
உலவு இயலாத்தனம் சென்று எய்தல் ஆயின ஊரனுக்கே – திருக்கோ:365/4
கூற்று ஆயின சின ஆளி எண்ணீர் கண்கள் கோள் இழித்தால் – திருக்கோ:382/1
மேல்


ஆயினர் (2)

கலர் ஆயினர் நினையா தில்லை அம்பலத்தான் கழற்கு அன்பு – திருக்கோ:259/1
இலர் ஆயினர் வினை போல் இருள் தூங்கி முழங்கி மின்னி – திருக்கோ:259/2
மேல்


ஆயினவாறு (1)

தர அணையும் பரிசு ஆயினவாறு நம் தன்மைகளே – திருக்கோ:360/4
மேல்


ஆயும் (1)

ஆயும் மனனே அணங்கு அல்லள் அம் மா முலை சுமந்து – திருக்கோ:3/3
மேல்


ஆர் (65)

பொற்பு ஆர் அறிவார் புலியூர் புனிதன் பொதியில் வெற்பில் – திருக்கோ:8/3
தேவரில் பெற்ற நம் செல்வ கடி வடிவு ஆர் திருவே – திருக்கோ:14/1
பூம் கனை ஆர் புனல் தென் புலியூர் புரிந்து அம்பலத்துள் – திருக்கோ:19/1
காவி நின்று ஏர்தரு கண்டர் வண் தில்லை கண் ஆர் கமல – திருக்கோ:41/1
ஆளா ஒழிந்தது என் ஆருயிர் ஆர் அமிழ்தே அணங்கே – திருக்கோ:47/2
நாள் ஆர் மலர் பொழில்-வாய் எழில் ஆயம் நணுகுகவே – திருக்கோ:47/4
கரும் களி ஆர் மத யானை உண்டோ வர கண்டதுவே – திருக்கோ:52/4
ஒக்கின்ற ஆர் அணங்கே இணங்கு ஆகும் உனக்கு அவளே – திருக்கோ:68/4
கரும் கண் சிவப்ப கனி வாய் விளர்ப்ப கண் ஆர் அளி பின் – திருக்கோ:70/3
சுருள் ஆர் கரும் குழல் வெள் நகை செ வாய் துடியிடையீர் – திருக்கோ:73/3
ஆர் வாய்தரின் அறிவார் பின்னை செய்க அறிந்தனவே – திருக்கோ:80/4
பொன் ஆர் சடையோன் புலியூர் புகழார் என புரி நோய் – திருக்கோ:89/1
ஆர் அ தழை கொடு வந்தார் என வரும் ஐயுறவே – திருக்கோ:91/4
யாழ் ஆர் மொழி மங்கை பங்கத்து இறைவன் எறி திரை நீர் – திருக்கோ:93/1
சூழ் ஆர் குழல் எழில் தொண்டை செ வாய் நவ்வி சொல் அறிந்தால் – திருக்கோ:93/3
மற மனை வேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:96/2
ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:103/2
பெருகுதலை சென்று நின்றோன் பெருந்துறை பிள்ளை கள் ஆர்
முருகு தலைச்சென்ற கூழை முடியா முலை பொடியா – திருக்கோ:104/2,3
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும் – திருக்கோ:112/3
துவள தகுவனவோ சுரும்பு ஆர் குழல் தூ_மொழியே – திருக்கோ:112/4
குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தட மலர் கொண்டுவந்தே – திருக்கோ:119/4
வடம் ஆர் முலை மடவாய் வந்து வைகிற்று இ வார் பொழிற்கே – திருக்கோ:120/4
எழுந்து ஆர் மதி கமலம் எழில் தந்து என இ பிறப்பில் – திருக்கோ:124/2
மெல் நனை ஆய் மறியே பறியேல் வெறி ஆர் மலர்கள் – திருக்கோ:125/3
அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன் அணி ஆர்
துறு கான் மலர் தொத்து தோகை தொல் ஆயம் மெல்ல புகுக – திருக்கோ:126/1,2
படை ஆர் கரும்_கண்ணி வண்ண பயோதர பாரமும் நுண் – திருக்கோ:136/1
விடை ஆர் மருப்பு திருத்திவிட்டார் வியன் தென் புலியூர் – திருக்கோ:136/3
வடிவு ஆர் வயல் தில்லையோன் மலயத்து-நின்றும் வரு தேன் – திருக்கோ:139/1
மணி ஆர் பொழில்காள் மறத்திர் கண்டீர் மன்னும் அம்பலத்தோன் – திருக்கோ:145/2
அணி ஆர் கயிலை மயில்காள் அயில் வேல் ஒருவர் வந்தால் – திருக்கோ:145/3
முழங்கு ஆர் அரி முரண் வாரண வேட்டை செய் மொய் இருள்-வாய் – திருக்கோ:157/3
கான குறவர்கள் கம்பலை செய்யும் வம்பு ஆர் சிலம்பா – திருக்கோ:159/2
சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் சிறு கண் பெரு வெண் – திருக்கோ:161/2
கோடு ஆர் கரி குரு மா மணி ஊசலை கோப்பு அழித்து – திருக்கோ:161/3
தோடு ஆர் மது மலர் நாகத்தை நூக்கும் நம் சூழ் பொழிற்கே – திருக்கோ:161/4
நாகம் வர எதிர் நாம் கொள்ளும் நள்ளிருள்-வாய் நற ஆர்
நாகம் மலி பொழில்-வாய் எழில் வாய்த்த நின் நாயகமே – திருக்கோ:171/3,4
இன் நறவு ஆர் பொழில் தில்லை நகர் இறை சீர் விழவில் – திருக்கோ:175/1
அலர் ஆர் கழல் வழிபாடுசெய்தாற்கு அளவில் ஒளிகள் – திருக்கோ:180/2
எல் ஆர் மதியே இது நின்னை யான் இன்று இரக்கின்றதே – திருக்கோ:192/4
பொற்பு ஆர் திரு நாண் பொருப்பர் விருப்பு புகுந்து நுந்த – திருக்கோ:208/2
கற்பு ஆர் கடும் கால் கலக்கி பறித்து எறிய கழிக – திருக்கோ:208/3
பொன் ஆர் மணி மகிழ் பூ விழ யாம் விழை பொங்கு இருளே – திருக்கோ:210/4
பொன் ஆர் அணி மணி மாளிகை தென் புலியூர் புகழ்வார் – திருக்கோ:217/3
மடலை உற்று ஆர்_குழல் வாடினள் மன்னு சிற்றம்பலவர்க்கு – திருக்கோ:218/2
விண்ணும் செலவு அறியா வெறி ஆர் கழல் வீழ் சடை தீ – திருக்கோ:256/1
மை ஆர் கதலி வனத்து வருக்கை பழம் விழு தேன் – திருக்கோ:262/1
மொய் ஆர் வளர் இள வேங்கை பொன் மாலையின் முன்னினவே – திருக்கோ:262/4
அடுத்தன தாம் வரின் பொல்லாது இரவின் நின் ஆர் அருளே – திருக்கோ:267/4
மல் ஆர் கழல் அழல் வண்ணர் வண் தில்லை தொழார்கள் அல்லால் – திருக்கோ:271/3
கொந்து ஆர் நறும் கொன்றை கூத்தன் தென் தில்லை தொழார் குழு போல் – திருக்கோ:276/3
குன்று ஆர் துறைவர்க்கு உறுவேன் உரைப்பன் இ கூர் மறையே – திருக்கோ:288/4
ஆர் அளவு இல்லா அளவு சென்றார் அம்பலத்துள் நின்ற – திருக்கோ:308/2
கருப்பு இனம் மேவும் பொழில் தில்லை மன்னன்-கண் ஆர் அருளால் – திருக்கோ:319/1
களி தர கார் மிடற்றோன் நடம் ஆட கண் ஆர் முழவம் – திருக்கோ:324/2
பிறப்பின் துனைந்து பெருகுக தேர் பிறங்கும் ஒளி ஆர்
நிற பொன் புரிசை மறுகினின் துன்னி மட நடை புள் – திருக்கோ:328/2,3
நெறி ஆர் அரும் சுரம் செல்லல் உற்றார் நமர் நீண்டு இருவர் – திருக்கோ:333/2
எரி ஆர் எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் எவர்க்கும் – திருக்கோ:340/3
புற்று அங்கு உதர்ந்து நல் நாகொடும் பொன் ஆர் மணி புலம்ப – திருக்கோ:346/3
பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர புலம்பாய் நலம் பாய் – திருக்கோ:355/3
சிவன் செய்த சீர் அருள் ஆர் தில்லை ஊர நின் சே இழையார் – திருக்கோ:358/3
சிவந்த பைம் போதும் அம் செம் மலர் பட்டும் கட்டு ஆர் முலை மேல் – திருக்கோ:361/3
மஞ்சு ஆர் புனத்து அன்று மாம் தழை ஏந்தி வந்தார் அவர் என் – திருக்கோ:378/2
பஞ்சு ஆர் அமளி பிரிதல் உண்டோ எம் பயோதரமே – திருக்கோ:378/4
பந்து ஆர் விரலியை பாய் புனல் ஆட்டி மன் பாவி எற்கு – திருக்கோ:391/2
கொந்து ஆர் தடம் தோள் விடம் கால் அயில் படை கொற்றவரே – திருக்கோ:391/4
மேல்


ஆர்_குழல் (1)

மடலை உற்று ஆர்_குழல் வாடினள் மன்னு சிற்றம்பலவர்க்கு – திருக்கோ:218/2
மேல்


ஆர்க்க (1)

தோரணம் நீடுக தூரியம் ஆர்க்க தொல் மால் அயற்கும் – திருக்கோ:296/2
மேல்


ஆர்க்கும் (4)

சீர் அம்பர் சுற்றி எற்றி சிறந்து ஆர்க்கும் செறி கடலே – திருக்கோ:182/4
புள்ளும் திரையும் பொர சங்கம் ஆர்க்கும் பொரு கடலே – திருக்கோ:185/4
குறவரை ஆர்க்கும் குளிர் வரை நாட கொழும் பவள – திருக்கோ:260/2
விட களி ஆம் நம் விழு நகர் ஆர்க்கும் வியன் முரசே – திருக்கோ:297/4
மேல்


ஆர்கலியும் (1)

திறம் திரிந்து ஆர்கலியும் முற்றும் வற்றும் இ சேண் நிலத்தே – திருக்கோ:213/4
மேல்


ஆர்த்தர் (1)

ஆர்த்தர் அங்கம் செய்யுமால் உய்யுமாறு என்-கொல் ஆழ் சுடரே – திருக்கோ:187/4
மேல்


ஆர்த்தவன் (1)

பணங்கள் அஞ்சு ஆலும் பரு அரவு ஆர்த்தவன் தில்லை அன்ன – திருக்கோ:235/1
மேல்


ஆர்த்தன (1)

துளி தரல் கார் என ஆர்த்தன ஆர்ப்ப தொக்கு உன் குழல் போன்று – திருக்கோ:324/3
மேல்


ஆர்த்து (2)

ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து அவம் நீ – திருக்கோ:173/3
கள் இனம் ஆர்த்து உண்ணும் வண் கொன்றையோன் தில்லை கார் கடல்-வாய் – திருக்கோ:295/1
மேல்


ஆர்ந்த (1)

கடன் ஆம் உருவத்து அரன் தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை – திருக்கோ:77/2
மேல்


ஆர்ந்து (2)

கலை கீழ் அகல் அல்குல் பாரம் அது ஆரம் கண் ஆர்ந்து இலங்கு – திருக்கோ:59/1
நிலவி நிறை மது ஆர்ந்து அம்பலத்து நின்றோன் அருள் போன்று – திருக்கோ:365/3
மேல்


ஆர்ப்ப (8)

ஒருங்கு அளி ஆர்ப்ப உமிழ் மும்மதத்து இரு கோட்டு ஒரு நீள் – திருக்கோ:52/3
புள் இனம் ஆர்ப்ப பொரு திரை ஆர்ப்ப புலவர்கள்-தம் – திருக்கோ:295/2
புள் இனம் ஆர்ப்ப பொரு திரை ஆர்ப்ப புலவர்கள்-தம் – திருக்கோ:295/2
வள் இனம் ஆர்ப்ப மதுகரம் ஆர்ப்ப வலம்புரியின் – திருக்கோ:295/3
வள் இனம் ஆர்ப்ப மதுகரம் ஆர்ப்ப வலம்புரியின் – திருக்கோ:295/3
வெள் இனம் ஆர்ப்ப வரும் பெரும் தேர் இன்று மெல்_இயலே – திருக்கோ:295/4
துளி தரல் கார் என ஆர்த்தன ஆர்ப்ப தொக்கு உன் குழல் போன்று – திருக்கோ:324/3
எடுத்து அணி கை ஏறு இன வளை ஆர்ப்ப இள மயில் ஏர் – திருக்கோ:352/2
மேல்


ஆர (4)

ஆர தழை அரா பூண்டு அம்பலத்து அனல் ஆடி அன்பர்க்கு – திருக்கோ:91/1
ஆர தழை அன்பு அருளி நின்றோன் சென்ற மா மலயத்து – திருக்கோ:91/2
ஆர தழை அண்ணல் தந்தால் இவை அவள் அல்குல் கண்டால் – திருக்கோ:91/3
பண் கட மென் மொழி ஆர பருக வருக இன்னே – திருக்கோ:220/2
மேல்


ஆரம் (2)

கலை கீழ் அகல் அல்குல் பாரம் அது ஆரம் கண் ஆர்ந்து இலங்கு – திருக்கோ:59/1
ஆரம் பரந்து திரை பொரு நீர் முகில் மீன் பரப்பி – திருக்கோ:182/1
மேல்


ஆரும் (1)

கார் என்ன ஆரும் கறை மிடற்று அம்பலவன் கயிலை – திருக்கோ:56/2
மேல்


ஆருயிர் (4)

தொல்வினையால் துயரும் எனது ஆருயிர் துப்புறவே – திருக்கோ:26/4
ஆளா ஒழிந்தது என் ஆருயிர் ஆர் அமிழ்தே அணங்கே – திருக்கோ:47/2
ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆருயிர் ஈர் உரு கொண்டு – திருக்கோ:307/1
செப்பு உற்ற கொங்கையர் யாவர்-கொல் ஆருயிர் தேய்பவரே – திருக்கோ:354/4
மேல்


ஆருயிரே (1)

அருளாது ஒழியின் ஒழியாது அழியும் என் ஆருயிரே – திருக்கோ:73/4
மேல்


ஆரேனும் (1)

ஆங்கு வளைத்துவைத்து ஆரேனும் கொள்க நள்ளார் அரணம் – திருக்கோ:357/2
மேல்


ஆல் (2)

பண்டு ஆல் இயலும் இலை வளர் பாலகன் பார் கிழித்து – திருக்கோ:105/1
வண்டு ஆல் இயலும் வளர் பூம் துறைவ மறைக்கின் என்னை – திருக்கோ:105/3
மேல்


ஆலத்தினால் (1)

ஆலத்தினால் அமிர்து ஆக்கிய கோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:27/1
மேல்


ஆலம் (1)

அருந்து ஏர் அழிந்தனம் ஆலம் என்று ஓலமிடும் இமையோர் – திருக்கோ:329/1
மேல்


ஆலிக்கும் (1)

அணிவார் முரிசினொடு ஆலிக்கும் மாவோடு அணுகினரே – திருக்கோ:330/4
மேல்


ஆலும் (2)

பணங்கள் அஞ்சு ஆலும் பரு அரவு ஆர்த்தவன் தில்லை அன்ன – திருக்கோ:235/1
எண் நுழையா தழை கோலி நின்று ஆலும் இன மலர் வாய் – திருக்கோ:347/2
மேல்


ஆவ (1)

அனிச்சம் திகழும் அம் சீறடி ஆவ அழல் பழுத்த – திருக்கோ:211/2
மேல்


ஆவம் (1)

அம்பு அஞ்சி ஆவம் புக மிக நீண்டு அரி சிந்து கண்ணாள் – திருக்கோ:209/3
மேல்


ஆவா (3)

ஆவா இருவர் அறியா அடி தில்லை அம்பலத்து – திருக்கோ:72/1
ஆவா மணி வேல் பணி கொண்ட ஆறு இன்று ஓர் ஆண்டகையே – திருக்கோ:72/4
ஆவா கனவும் இழந்தேன் நனவு என்று அமளியின் மேல் – திருக்கோ:355/2
மேல்


ஆவி (9)

ஆவி அன்னாய் கவலேல் அகலேம் என்று அளித்து ஒளித்த – திருக்கோ:37/1
ஆவி அன்னார் மிக்க அவாவினராய் கெழுமற்கு அழிவுற்று – திருக்கோ:37/2
ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் சேர்வர்-கொல் அம்பலத்து எம் – திருக்கோ:37/3
ஆவி அன்னான் பயிலும் கயிலாயத்து அரு வரையே – திருக்கோ:37/4
ஆவி அன்றே அமிழ்தே அணங்கே இன்று அழிகின்றதே – திருக்கோ:41/4
அன்னாள் அரும்பெறல் ஆவி அன்னாய் அருள் ஆசையினால் – திருக்கோ:210/3
தருவன செய்து எனது ஆவி கொண்டு ஏகி என் நெஞ்சில் தம்மை – திருக்கோ:281/3
அயர்ந்தும் வெறி மறி ஆவி செகுத்தும் விளர்ப்பு அயலார் – திருக்கோ:287/1
வீழும் வரி வளை மெல் இயல் ஆவி செல்லாத முன்னே – திருக்கோ:350/3
மேல்


ஆவியும் (4)

அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் தில்லை சிந்தாமணி – திருக்கோ:5/1
காயமும் ஆவியும் நீங்கள் சிற்றம்பலவன் கயிலை – திருக்கோ:207/1
சீர் இயல் ஆவியும் யாக்கையும் என்ன சிறந்தமையால் – திருக்கோ:301/1
அரும் பொறை ஆகும் என் ஆவியும் தேய்வுற்று அழிகின்றதே – திருக்கோ:353/4
மேல்


ஆவியை (2)

பூணின் பொலி கொங்கை ஆவியை ஓவிய பொன் கொழுந்தை – திருக்கோ:23/3
ஆவியை வெல்ல கறுக்கின்ற போழ்தத்தின் அம்பலத்து – திருக்கோ:349/2
மேல்


ஆழ் (3)

என் ஆழ் துயர் வல்லையேல் சொல்லு நீர்மை இனியவர்க்கே – திருக்கோ:89/4
ஆர்த்தர் அங்கம் செய்யுமால் உய்யுமாறு என்-கொல் ஆழ் சுடரே – திருக்கோ:187/4
ஏழ் இயன்ற ஆழ் கடலும் எண் திசையும் திரிந்து இளைத்து – திருக்கோ:339/3
மேல்


ஆழம்-மன்னோ (1)

ஆழம்-மன்னோ உடைத்து இ ஐயர் வார்த்தை அனங்கன் நைந்து – திருக்கோ:61/1
மேல்


ஆழி (5)

ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து – திருக்கோ:186/1
ஆழி திருத்தும் மணல் குன்றின் நீத்து அகன்றார் வருக என்று – திருக்கோ:186/2
ஆழி திருத்தி சுழி கணக்கு ஓதி நையாமல் ஐய – திருக்கோ:186/3
ஆழி தந்தான் அம்பலம் பணியாரின் அரும் சுரமே – திருக்கோ:230/4
ஆழி ஒன்று ஈர் அடியும் இலன் பாகன் முக்கண் தில்லையோன் – திருக்கோ:339/1
மேல்


ஆள் (2)

ஏழு உடையான் பொழில் எட்டு உடையான் புயம் என்னை முன் ஆள்
ஊழ் உடையான் புலியூர் அன்ன பொன் இ உயர் பொழில் வாய் – திருக்கோ:7/1,2
ஆள் அரிக்கும் அரிதாய் தில்லை யாவருக்கும் எளிதாம் – திருக்கோ:225/1
மேல்


ஆள்வது (1)

ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே – திருக்கோ:247/4
மேல்


ஆளா (1)

ஆளா ஒழிந்தது என் ஆருயிர் ஆர் அமிழ்தே அணங்கே – திருக்கோ:47/2
மேல்


ஆளி (3)

ஆளி நிரைத்து அடல் ஆனைகள் தேரும் இரவில் வந்து – திருக்கோ:151/3
ஆண்டான் அரு வரை ஆளி அன்னானை கண்டேன் அயலே – திருக்கோ:244/3
கூற்று ஆயின சின ஆளி எண்ணீர் கண்கள் கோள் இழித்தால் – திருக்கோ:382/1
மேல்


ஆற்றல் (2)

ஆம் பொன் தட மலர் சூடும் என் ஆற்றல் அகற்றியதே – திருக்கோ:21/4
தீயினது ஆற்றல் சிரம் கண் இழந்து திசைதிசை தாம் – திருக்கோ:234/3
மேல்


ஆற்று (1)

கல் ஆண்டு எடேல் கரும் கண் சிவப்பு ஆற்று கறுப்பது அன்று – திருக்கோ:387/3
மேல்


ஆற்றுவனோ (1)

அம் தாமரை அன்னமே நின்னை யான் அகன்று ஆற்றுவனோ
சிந்தாகுலமுற்று என்னோ என்னை வாட்டம் திருத்துவதே – திருக்கோ:12/3,4
மேல்


ஆற்றேன் (1)

ஆற்றேன் அரிய அரிவைக்கு நீ வைத்த அன்பினுக்கே – திருக்கோ:150/4
மேல்


ஆறு (4)

அ குன்ற ஆறு அமர்ந்து ஆட சென்றாள் அங்கம் அவ்வவையே – திருக்கோ:68/3
ஆவா மணி வேல் பணி கொண்ட ஆறு இன்று ஓர் ஆண்டகையே – திருக்கோ:72/4
ஊழி ஒன்றாதன நான்கும் ஐம்பூதமும் ஆறு ஒடுங்கும் – திருக்கோ:339/2
ஆறு ஊர் சடை முடி அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும் – திருக்கோ:398/1
மேல்


ஆறும் (1)

நைகின்ற திங்கள் எய்ப்பு ஆறும் பொழில் அவை ஞாங்கர் எங்கும் – திருக்கோ:223/2
மேல்


ஆனந்த (5)

ஆனந்த மா கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன பொன்னின் – திருக்கோ:147/1
ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆருயிர் ஈர் உரு கொண்டு – திருக்கோ:307/1
ஆனந்த வெள்ளத்திடை திளைத்தால் ஒக்கும் அம்பலம் சேர் – திருக்கோ:307/2
ஆனந்த வெள்ளத்து அறை கழலோன் அருள் பெற்றவரின் – திருக்கோ:307/3
ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இ அணி நலமே – திருக்கோ:307/4
மேல்


ஆனைகள் (1)

ஆளி நிரைத்து அடல் ஆனைகள் தேரும் இரவில் வந்து – திருக்கோ:151/3

மேல்