மை – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மை 49
மைக்கு 1
மைத்து 1
மைத்துன 3
மைத்துனற்கு 1
மைத்துனன் 3
மைத்துனனே 1
மைந்த 2
மைந்தர் 32
மைந்தர்-தம்மை 1
மைந்தர்கள் 1
மைந்தரும் 7
மைந்தருள் 1
மைந்தரை 1
மைந்தரோடு 1
மைந்தற்கு 3
மைந்தன் 22
மைந்தன 1
மைந்தனுக்கு 1
மைந்தனும் 2
மைந்தனே 1
மைந்தனை 10
மைந்தனோ 2
மைந்து 1
மைந்துற்று 2
மைப்படு 1
மைய 1
மையல் 11
மையல்கொண்டிருப்ப 1
மையலவர் 1
மையார் 2
மையில் 3

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மை (49)

மை நீர் நெடும் கண் இரு மங்கையர் தம்முள் மாறாய் – சிந்தா:0 12/3
மை நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணி – சிந்தா:0 17/3
மை மலர் கோதை பாகம் கொண்டதே மறுவது ஆக – சிந்தா:1 208/2
மை முகம் அணிந்த மத யானை தவ நூறி – சிந்தா:1 282/3
மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே – சிந்தா:1 367/2
மை வரை மார்பினாற்கும் மனம் உற தேற்றி இட்டான் – சிந்தா:1 407/4
மை நூறு வேல் கண் மடவார் மனம் போல மாய்ந்தார் – சிந்தா:2 453/4
மை விரி குழலினாளை மங்கல கடிப்பு சேர்த்தி – சிந்தா:2 488/2
கலங்குவார் மை பருகி நீண்டு மதர்த்த உண்கண் வாள் ஏறு பெற்று நைவார் மா நாகத்தின் – சிந்தா:3 682/2
மை மலர் தடம் கண் நங்கை மரை மலர் தேவி என்றான் – சிந்தா:3 739/4
மை அறு மணியின் செய்த வலம்புரி அதன் நீர் கொண்டான் – சிந்தா:3 821/3
மை தலை நெடும் கணாரும் மைந்தரும் மறலி ஆட – சிந்தா:4 963/3
மை நீர் நெடும் கண் புருவங்கள் மலங்க – சிந்தா:4 1067/3
மை தலை நெடும் தடம் கண் மங்கையர் மயங்கினர் – சிந்தா:4 1101/4
மணம் கொள் பூ மிசை மை வரை மைந்தனோ – சிந்தா:5 1311/2
மை இல் வாள் நெடும் கண் வளராதன – சிந்தா:5 1366/1
அஞ்சனத்தொடு மை அணி-மின் என – சிந்தா:5 1373/3
மை இருள் போர்வை நீக்கி மண்ணக மடந்தை கோலம் – சிந்தா:5 1406/3
மை நிகர் மழை கணார் மருட்ட வைகுவான் – சிந்தா:6 1449/4
மை இரும் குழலினாள் தன் மைந்தனை வலையின் சூழ்ந்து – சிந்தா:6 1540/3
மை விலை பெற்ற கண்ணாள் மைந்தனை மருண்டு நோக்கி – சிந்தா:7 1704/2
மை வழி நெடும் கணாளை தந்தனன் மதலை என்றான் – சிந்தா:7 1758/4
மை எழுத்து ஊசியின் மாண்டது ஓர் தோட்டு-இடை – சிந்தா:7 1767/3
மை நுண் குழல் சிறுவன் மனம் வருத்த வடி வேல் கண் – சிந்தா:7 1783/3
முழை உறை சிங்கம் பொங்கி முழங்கி மேல் பாய்ந்து மை தோய் – சிந்தா:8 1928/3
மை தோய் வரையின் இழியும் புலி போல மைந்தன் – சிந்தா:10 2135/1
மை பூத்து அலர்ந்த மழை கண் மாழை மான் நேர் நோக்கின் – சிந்தா:10 2198/1
மை படை நெடும் கண் மாலை மகளிர் தம் வனப்பின் சூழ்ந்து – சிந்தா:10 2259/3
மை ஆர் விசும்பின் மதி வீழ்வது போல வீழ்ந்தான் – சிந்தா:10 2322/4
மை துன நீண்ட மா மணி மாடம் மிசை ஏறி – சிந்தா:11 2333/1
மை துன நீண்ட மா மணி வண்ண அவன் ஒத்தான் – சிந்தா:11 2333/4
மை ஆர்ந்த கண்ணீர் மணி பூண் முலை பாய விம்மா – சிந்தா:11 2338/3
மை ஆர் அணல மணி நாகம் கலுழன் வாய்பட்டு – சிந்தா:11 2345/3
மை அணி மத யானை மத்தக அகல் அல்குல் – சிந்தா:12 2434/1
மை விளை கழுநீர் கண் விலாசியும் அணி அல்குல் – சிந்தா:12 2435/2
மை நூற்று அனைய மா வீழ் ஓதி வகுத்தும் தொகுத்தும் விரித்தும் – சிந்தா:12 2437/1
உற்று மை கலந்து கண்கள் வெம் பனி உகுத்த அன்றே – சிந்தா:12 2508/4
மை திரண்ட வார் குழல் மேல் வண்டு ஆர்ப்ப மல்லிகை மெல் மாலை சூடி – சிந்தா:13 2626/1
ஐ ஆண்டு எய்தி மை ஆடி அறிந்தார் கலைகள் படை நவின்றார் – சிந்தா:13 2706/1
மை நிற மணி வண்டு ஆர்ப்ப வார் தளிர் கவரி வீச – சிந்தா:13 2730/2
மை வரை மாலை மார்பன் வான் சுவை அமிர்தம் உண்டான் – சிந்தா:13 2735/4
மை படு மழை கண் நல்லார் மணி செப்பின் வாசம் நீட்ட – சிந்தா:13 2736/2
வழு இல் பொய்கையுள் மலர் என வளர்ந்து மை ஆடி – சிந்தா:13 2756/3
மை படும் வினை துகள் வழக்கு நெறி மாயம் – சிந்தா:13 2873/2
மை பொலி கண்ணின் நீரால் மனை அகம் மெழுகி வாழ – சிந்தா:13 2984/3
மை இல் தாமரை மத்தகம் சேர்ந்தவே – சிந்தா:13 3005/4
மை பொதி குவளை வாள் கண் மல்லிகை கோதை நல்லார் – சிந்தா:13 3049/1
மை அவாம் குழல் மடந்தை குண்டலம் – சிந்தா:13 3128/3
மை வினை மறு இலாத மதி எனும் திங்கள் மாதோ – சிந்தா:13 3145/2

TOP


மைக்கு (1)

மைக்கு இழிந்து ஒழுகும் கண்ணீர் மா நிலத்து உகுக்கப்பட்டார் – சிந்தா:3 818/3

TOP


மைத்து (1)

மைத்து உன நீண்ட வாள் தடம் கண்ணார் மலர் தூவ – சிந்தா:11 2333/2

TOP


மைத்துன (3)

மைந்தனை மகிழ்வ கூறி மைத்துன தோழன் என்றான் – சிந்தா:5 1264/4
மைத்துன மன்னர் மால் களிறு ஏறி புடை சூழ – சிந்தா:11 2333/3
மைத்துன மன்னர்க்கு எல்லாம் வள நிதி மணி செய் மான் தேர் – சிந்தா:12 2571/3

TOP


மைத்துனற்கு (1)

மையல் அம் களிறு போலும் மைத்துனற்கு இதனை சொன்னான் – சிந்தா:7 1718/4

TOP


மைத்துனன் (3)

மைத்துனன் வனப்பின் மிக்கான் வளர் நிதி கிழவன் காளை – சிந்தா:4 1048/1
மலை தொகை யானை மன்னன் மைத்துனன் மதனன் என்பான் – சிந்தா:4 1161/1
கழுமிய கற்பினாய் நின் மைத்துனன் ஐயன் என்ன – சிந்தா:7 1730/2

TOP


மைத்துனனே (1)

உருள் தேர் உயர் கொற்றவன் மைத்துனனே – சிந்தா:5 1381/4

TOP


மைந்த (2)

வாழ்க நின் கழல் அடி மைந்த என்னவே – சிந்தா:4 1021/1
தழும் மாவலி மைந்த என தளரா – சிந்தா:5 1384/1

TOP


மைந்தர் (32)

கல் சுணம் செய்த தோள் மைந்தர் காதலால் – சிந்தா:1 91/1
தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது புலம்பு எய்தி மைந்தர் மாழ்க – சிந்தா:1 290/1
வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய வெம் நுனை பகழி மைந்தர்
மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம் கொண்டு வைக செம் நா – சிந்தா:2 435/1,2
மன் நிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாள் கண் – சிந்தா:2 440/1
வளையவள் எழாலின் மைந்தர் பாடுக வல்லை என்றாள் – சிந்தா:3 651/4
மாதர் யாழ் தடவர வந்த மைந்தர் கை – சிந்தா:3 660/1
எரி மலர் பவள செம் வாய் இன் நரம்பு உளர மைந்தர்
புரி நரம்பு இசை கொள் பாடல் உடைந்தனர் பொன் அனாட்கே – சிந்தா:3 662/3,4
போது உலாம் கண்ணி மைந்தர் போர் புலி குழாத்தின் சூழ்ந்தார் – சிந்தா:3 694/4
இறக்கினரோடு தேர் மைந்தர் இன் உயிர் – சிந்தா:3 781/3
சோரும் செம் குருதியுள் மைந்தர் தோன்றுவார் – சிந்தா:3 790/2
உடலின் மேல் திரியும் திண் தேர் காண்டலும் மைந்தர் நெஞ்ச – சிந்தா:3 805/3
வார் தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர் – சிந்தா:4 881/2
வார் தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர்
ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர் – சிந்தா:4 881/2,3
வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர்
தாள் மின்னு வீங்கு கழலான்-தனை சூழ மற்ற – சிந்தா:4 882/1,2
வார் விளையாடிய மென் முலை மைந்தர்
தார் விளையாட்டொடு தங்குபு பொங்கிய – சிந்தா:4 915/2,3
கூந்தல் மா மகளிர் மைந்தர் கொண்டுகொண்டு எறிய ஓடி – சிந்தா:4 967/3
குலிக நீர் நிறைந்த பந்தின் கொம்பனார் ஓச்ச மைந்தர்
மெலிவு கண்டு உவந்து மாதோ விருப்பொடு மறலினாரே – சிந்தா:4 968/3,4
எண் அரும் திறத்து மைந்தர் எதிரெதிர் எறிய ஓடி – சிந்தா:4 969/2
வான் நிகர் இல்லா மைந்தர் கருதியது அதுவும் நிற்க – சிந்தா:4 1152/2
தொடை மாலை மென் முலையார் தோள் தோய்ந்த மைந்தர்
கடை மாலை மற்று அவரே கண் புதைப்ப செல்லும் – சிந்தா:7 1574/2,3
நிலை உணர் மைந்தர் நீக்கி நெறியினால் புணர்ந்தது ஒப்ப – சிந்தா:7 1625/2
தானையை உடைக்கும் வெம் போர் தருக்கினார் மைந்தர் என்று – சிந்தா:7 1679/3
மான் நக்க நோக்கின் மடவார் தொழ மைந்தர் ஏத்த – சிந்தா:7 1866/3
மல்லார் திரள் தோள் மருமான் முகம் நோக்க மைந்தர்
எல்லாம் அடிகள் எனக்கு இன்னுயிர் தோழர் என்றான் – சிந்தா:7 1868/3,4
பொருவரும்-குரைய மைந்தர் பொம்மென உரறி மற்று இ – சிந்தா:8 1930/1
குஞ்சி சூட்டிய மைந்தர் குழாம் அலால் – சிந்தா:8 1947/3
விளை மது கண்ணி மைந்தர் விளிக என தோழி கூற – சிந்தா:9 2042/2
நீடு எரி நிலை கண்ணாடி போர்க்களத்து உடைந்த மைந்தர்
காடு எரி கவர கல் என் கவரிமா விரிந்த வண்ணம் – சிந்தா:10 2299/2,3
மங்குல் மின் என வள்ளல் தேர் மைந்தர் தேரொடு மயங்கலின் – சிந்தா:10 2307/3
மைந்தர் ஆர்த்து அவர் வாய் எலாம் நிறைய வெம் சரம் கான்ற பின் – சிந்தா:10 2309/2
மைந்தர் தம் வண் கையால் முன் மணி வள்ளத்து எடுத்த தேறல் – சிந்தா:13 2973/1
வாள் கை அம் மைந்தர் ஆயும் வன முலை மகளிர் ஆயும் – சிந்தா:13 3106/1

TOP


மைந்தர்-தம்மை (1)

வீட்டினார் மைந்தர்-தம்மை விளிந்த மா கவிழ்ந்த திண் தேர் – சிந்தா:2 436/3

TOP


மைந்தர்கள் (1)

மற்று அவள் சொல்ல கேட்ட மைந்தர்கள்
இற்ற தம் உயிர் இயல்பின் பேர்த்து அவண் – சிந்தா:7 1764/1,2

TOP


மைந்தரும் (7)

மைந்தரும் இரும்பும் ஒவ்வா வான் புலம் காவல் கொண்டார் – சிந்தா:3 793/4
மை தலை நெடும் கணாரும் மைந்தரும் மறலி ஆட – சிந்தா:4 963/3
காதல் மகளிரும் மைந்தரும் காணிய – சிந்தா:10 2119/2
மான் அமர் நோக்கினாரும் மைந்தரும் குழீஇய போருள் – சிந்தா:10 2281/3
மாரி மா மயில் அனாரும் மைந்தரும் மயங்கினாரே – சிந்தா:12 2543/1
மைந்தரும் மகளிரை மருங்கு சேர்கிலார் – சிந்தா:13 2936/4
வடி மலர் நெடும் கணாரும் மைந்தரும் வரவு பார்த்து அங்கு – சிந்தா:13 3073/1

TOP


மைந்தருள் (1)

மைந்தருள் காமன் அன்னான் மகளிருள் திரு அனாளை – சிந்தா:3 840/3

TOP


மைந்தரை (1)

மைந்தரை பார்ப்பன மா மகள் மா குழாம் – சிந்தா:8 1902/1

TOP


மைந்தரோடு (1)

மைந்தரோடு ஊடிய மகளிரை இளையவர் – சிந்தா:1 121/1

TOP


மைந்தற்கு (3)

அனையல் ஆகா உருவ நோக்கி மைந்தற்கு இரங்கி – சிந்தா:6 1417/2
வடி மலர் கோதையை மைந்தற்கு என்பவே – சிந்தா:6 1490/4
மது முகத்து அலர்ந்த கோதை மாற்றம் மைந்தற்கு உரைப்பாள் – சிந்தா:7 1708/1

TOP


மைந்தன் (22)

உரை விளையாமை மைந்தன் கேட்கிய உவந்து நோக்கி – சிந்தா:1 397/1
கோள் வாய் மதியம் நெடியான் விடுத்த ஆங்கு மைந்தன்
தோள் வாய் சிலையின் ஒலியால் தொறு மீட்டு மீள்வான் – சிந்தா:2 454/2,3
நோற்றனள் நங்கை மைந்தன் இள நலம் நுகர்தற்கு என்பார் – சிந்தா:3 702/2
தேம் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன்
வாங்குபு நபுலன் கையுள் வார் புரி நரம்பு கொண்டான் – சிந்தா:3 721/3,4
ஆகத்து பூட்டி மைந்தன் அடி தொழுது இறைஞ்சி நின்றாள் – சிந்தா:3 738/3
முளி மர காடு மேய்ந்த முழங்கு அழல் போன்று மைந்தன்
தெளி நல குமரர் கூற்றின் தெழித்தனர் பகழி சிந்தி – சிந்தா:3 813/1,2
வடி மலர் கோதையோடும் வளைத்தலின் மைந்தன் சீறி – சிந்தா:4 1137/2
மனத்து-இடை மகிழ்ந்து கேட்டு மைந்தன் நந்தட்டனே ஆம் – சிந்தா:7 1723/2
தார் மலி மார்பன் திண் தேர் தோன்றலும் தறு கண் மைந்தன்
சீர் மலி பகழி ஏந்தி பதுமுகன் சிலை தொட்டானே – சிந்தா:7 1862/3,4
மலை விரவு நீள் மார்பின் மைந்தன் தோழர் முகம் நோக்கி – சிந்தா:7 1885/2
எண்ணம் வெளிப்பட்டான் கரந்த மைந்தன் எரி செம்பொன் – சிந்தா:7 1886/2
நெறிமையின் இழிந்து மைந்தன் மணி கை மத்திகையை நீக்கி – சிந்தா:8 1908/2
நூற்றைவரோடு நடந்தாள் நுதி வல் வில் மைந்தன்
காற்றில் பரிக்கும் கலிமான் மிசை காவல் ஓம்பி – சிந்தா:8 1933/2,3
மண்-பால் இழிந்த மலர் ஐ கணை மைந்தன் என்றாள் – சிந்தா:8 1961/4
வரி மல்கி வண்டு உண்டு அறை மா மலர் கண்ணி மைந்தன்
எரி மல்கு செம்பொன் இலம் மாமனொடு ஏறினானே – சிந்தா:8 1974/3,4
பாசிலை சுருட்டி மைந்தன் கொடுக்கிய பரந்து மின்னும் – சிந்தா:8 1987/1
அழுத கண்ணீர்கள் மைந்தன் ஆவி போழ்ந்திட்ட அன்றே – சிந்தா:9 2087/4
மை தோய் வரையின் இழியும் புலி போல மைந்தன்
பெய் தாம மாலை பிடியின் இழிந்து ஏகி மன்னர் – சிந்தா:10 2135/1,2
அப்பு அணை கிடந்த மைந்தன் அரு மணி திருவில் வீசும் – சிந்தா:10 2287/2
வளை மயங்கு உருவ மென் தோள் வாய் நலம் பருகி மைந்தன்
விளை மது தேறல் மாந்தி வெற்றி போர் அநங்கன் ஆனான் – சிந்தா:13 2857/3,4
வாளி வில் தட கை மைந்தன் வாய்விட்டு புலம்பி காம – சிந்தா:13 2882/2
மான் மட நோக்கின் மாதர் மாலை நாள் பயந்த மைந்தன்
கால் நடந்து அனைய மான் தேர் காளையை காவல் மன்னன் – சிந்தா:13 2912/2,3

TOP


மைந்தன (1)

மைந்தன தார் குழைந்து உடைய வாய் திறந்து – சிந்தா:6 1493/3

TOP


மைந்தனுக்கு (1)

மையல் அம் களிற்று வேந்தன் மைந்தனுக்கு உரை-மின் என்றான் – சிந்தா:5 1411/4

TOP


மைந்தனும் (2)

கண்ணாளும் வார் கயல் மைந்தனும் ஆயிடை – சிந்தா:5 1347/2
மட்டார் கோதை மனை துறந்தாள் மைந்தனும் மங்கை மேலே – சிந்தா:7 1601/3

TOP


மைந்தனே (1)

மலைக்கணத்து-இடை மகிழ்ந்து அனைய மைந்தனே – சிந்தா:7 1811/4

TOP


மைந்தனை (10)

மட்டு அவிழ் கோதை மாதர் மைந்தனை கொண்டு புக்கார் – சிந்தா:2 472/4
குரை கழல் மைந்தனை கொண்டு பறந்தான் – சிந்தா:3 521/4
மகர வெல் கொடி மைந்தனை வாட்டிய – சிந்தா:4 912/1
மறுக்கு உற்று மள்ளர் நீங்க மைந்தனை கொண்டு போகி – சிந்தா:4 1142/3
மன்னனால் சீறப்பட்ட மைந்தனை கொல்ல போந்தாம் – சிந்தா:4 1162/1
மைந்தனை மகிழ்வ கூறி மைத்துன தோழன் என்றான் – சிந்தா:5 1264/4
மை இரும் குழலினாள் தன் மைந்தனை வலையின் சூழ்ந்து – சிந்தா:6 1540/3
மை விலை பெற்ற கண்ணாள் மைந்தனை மருண்டு நோக்கி – சிந்தா:7 1704/2
தேன் நெடும் கோதை நல்லார் மைந்தனை தெருவில் எய்ய – சிந்தா:8 1951/2
கடி அறை மருங்கில் நின்ற மைந்தனை கண்டு நாணி – சிந்தா:9 2059/2

TOP


மைந்தனோ (2)

மணம் கொள் பூ மிசை மை வரை மைந்தனோ
நிணந்து என் நெஞ்சம் நிறை கொண்ட கள்வனை – சிந்தா:5 1311/2,3
மன்னும் ஐ கணை வார் சிலை மைந்தனோ
என்னனோ அறியோம் உரையீர் எனா – சிந்தா:8 1948/2,3

TOP


மைந்து (1)

விட்டாள் ஆர்வம் அவன்-கண் இவன் மேல் மைந்து உறவினால் – சிந்தா:7 1601/2

TOP


மைந்துற்று (2)

வண்டும் தேனும் பாட மாதர் பந்து மைந்துற்று ஆடுமே – சிந்தா:8 1955/4
பந்து மைந்துற்று ஆடுவாள் பணை முலையின் குங்குமம் – சிந்தா:8 1956/1

TOP


மைப்படு (1)

மைப்படு மழை கண் நல்லார் வாய் கொண்ட அமுதம் ஒப்பான் – சிந்தா:13 2881/4

TOP


மைய (1)

கைய வளை மைய குழல் ஐ அரிய வாள் கண் – சிந்தா:9 2017/1

TOP


மையல் (11)

மையல் யானையின் மு மதம் ஆர்ந்து தேன் – சிந்தா:1 37/1
மையல் கொள் நெஞ்சில் கல்லா மந்திரி விழுங்கப்பட்டான் – சிந்தா:1 385/4
மையல் மத யானை நிரை மன்னவன் மகிழ்ந்து ஆனா – சிந்தா:3 589/1
மையல் அம் களிற்றொடு பொருத வண் புகழ் – சிந்தா:4 1023/1
மையல் அம் கோயில் மாக்கள் மடைதிறந்திட்டது ஒத்தார் – சிந்தா:5 1278/4
மையல் அம் களிற்று வேந்தன் மைந்தனுக்கு உரை-மின் என்றான் – சிந்தா:5 1411/4
மையல் நெஞ்சொடு வண்டு இமிர் தாரினான் – சிந்தா:7 1711/2
மையல் அம் களிறு போலும் மைத்துனற்கு இதனை சொன்னான் – சிந்தா:7 1718/4
மையல் யானையின் படு மதம் கெட பகட்டு அரசன் – சிந்தா:11 2365/1
மையல் ஐம்பொறி மதம் வாட்டி வைகலும் – சிந்தா:13 2819/3
மையல் விளை மா நரக கோபுரங்கள் கண்டீர் – சிந்தா:13 2869/3

TOP


மையல்கொண்டிருப்ப (1)

மையல்கொண்டிருப்ப அப்பால் குமரி தன் மதியின் சூழ்ந்தாள் – சிந்தா:9 2072/4

TOP


மையலவர் (1)

மையலவர் போல மனம் பிறந்த வகை சொன்னார் – சிந்தா:9 2013/2

TOP


மையார் (2)

மையார் கடி பிணையும் வார் குழையும் களைந்திடுவார் கையால் வயிறு அதுக்குவார் – சிந்தா:1 295/3
மையார் நெடும் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து – சிந்தா:3 736/1

TOP


மையில் (3)

மையில் வானவர்-தம் மகளே-கொல் என்று – சிந்தா:3 639/3
மையில் கொட்டை அம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையால் – சிந்தா:10 2311/3
உள்ளம் பருகி மதர்த்த வாள் கண் உருவம் மையில் புனைந்தாள் – சிந்தா:12 2439/4

TOP