பே – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சு 1
பேசல் 3
பேசலன் 1
பேசலாம் 1
பேசலாமே 1
பேசலாமோ 1
பேசலோடும் 1
பேசன்-மின் 1
பேசா 2
பேசார் 1
பேசி 1
பேசிய 2
பேசில் 2
பேசின் 8
பேசினன் 2
பேசினாய் 1
பேசினால் 1
பேசினான் 1
பேசினேன் 1
பேசு 1
பேசுகின்றதே 1
பேசுகின்றான் 1
பேசும் 1
பேசுவல் 3
பேடி 3
பேடியோ 2
பேடை 2
பேடையொடு 1
பேண 2
பேணல் 3
பேணி 8
பேதாய் 1
பேது 7
பேதுற்று 2
பேதுற 2
பேதுறவு 1
பேதுறாது 1
பேதுறு 1
பேதுறுக்கும் 1
பேதுறுகின்ற 1
பேதுறுத்தும் 1
பேதுறும் 1
பேதை 11
பேதைமை 2
பேதையார் 1
பேதையேன் 1
பேம் 1
பேய் 10
பேய்க்கு 1
பேய்கள் 3
பேய்காள் 1
பேயும் 2
பேயை 1
பேர் 37
பேர்க்குநர் 1
பேர்த்தனிர் 1
பேர்த்தான் 1
பேர்த்து 1
பேர்ந்து 1
பேர்ப்பார் 1
பேரவே 1
பேரறிவு 1
பேரா 1
பேராத 1
பேராது 1
பேரான் 1
பேரினம் 4
பேரினும் 1
பேரும் 1
பேரூர் 1
பேரோர் 1
பேழ் 5
பேழை 5
பேழையும் 1
பேறு 2

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பேச்சு (1)

பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம் – சிந்தா:4 993/3

TOP


பேசல் (3)

வாளினால் பேசல் அல்லால் வாயினால் பேசல் தேற்றேன் – சிந்தா:1 257/2
வாளினால் பேசல் அல்லால் வாயினால் பேசல் தேற்றேன் – சிந்தா:1 257/2
பெரு விறல் வேந்தர் வேந்தற்கு உற்றது பேசல் உற்றேன் – சிந்தா:11 2377/4

TOP


பேசலன் (1)

பின்னதனால் பயன் பேசலன் விட்டான் – சிந்தா:1 225/4

TOP


பேசலாம் (1)

புழுங்கு கோதை பொற்பின் திறம் பேசலாம்
விழுங்கு மேகம் விடாது தழீஇ கிடந்து – சிந்தா:12 2504/2,3

TOP


பேசலாமே (1)

பின்னா விளைவித்து பிறவா உலகு எய்தல் பேசலாமே – சிந்தா:6 1548/4

TOP


பேசலாமோ (1)

பித்து அலர்-ஆயின் பேய்கள் என்று அலால் பேசலாமோ – சிந்தா:8 1907/4

TOP


பேசலோடும் (1)

பெரியவன் யாவன் என்ன நீ என பேசலோடும்
சொரி மலர் தாரும் பூணும் ஆரமும் குழையும் சோர – சிந்தா:1 389/2,3

TOP


பேசன்-மின் (1)

பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்-மின் – சிந்தா:7 1815/4

TOP


பேசா (2)

மான மகளிர் போல மணி மேகலைகள் பேசா
தானம் தழுவி கிடப்ப செல்வோள் தன்மை காண்-மின் – சிந்தா:4 923/3,4
உடுத்த பட்டு ஒளிப்ப ஒண் பொன் மேகலை ஒன்றும் பேசா
கிடப்ப மற்று அரசன் நோக்கி கெட்டது உன் துகில் மற்று என்ன – சிந்தா:13 2666/2,3

TOP


பேசார் (1)

பிற அறம் அல்ல பேசார் பேரறிவு உடைய நீரார் – சிந்தா:1 406/2

TOP


பேசி (1)

பேசி பாவாய் பிச்சை என கை அகல் ஏந்தி – சிந்தா:13 2929/3

TOP


பேசிய (2)

பெருகும் கணியின் கணி பேசிய பேது இல் நாளால் – சிந்தா:4 1062/3
பேசிய பெயரினாளை பேதுறாது ஒழிவேன்-ஆகில் – சிந்தா:9 2002/3

TOP


பேசில் (2)

பின்னை யான் பலவும் பேசில் தான் ஒன்று மிழற்றும் பைம் பூண் – சிந்தா:7 1626/2
பேசில் செம் தலைய வெண் கறைய புன்கம் பொரி அணிந்தவே – சிந்தா:7 1649/4

TOP


பேசின் (8)

பெண்மை நாண் வனப்பு சாயல் பெரு மட மாது பேசின்
ஒண்மையின் ஒருங்கு கூடி உருவு கொண்ட அனைய நங்கை – சிந்தா:1 356/1,2
பேசின் தான் பெரிதும் தோன்ற பிழைத்து உய்ய போதல் அஞ்சி – சிந்தா:4 1164/3
பெறும் அன்பினள் என்பது பேசின் அலால் – சிந்தா:6 1516/1
பிறங்கின கெடுங்கள் யாவும் புணர்ந்தவர் பிரிவர் பேசின்
இறங்கின வீழும் மேலாய் ஓங்கிய எண்ணில் யோனி – சிந்தா:6 1535/1,2
பேசின் ஓர் பிணையல் மாலை பிசைந்திடப்பட்டது ஒத்தாள் – சிந்தா:6 1539/3
பின் நிலம் பெருக ஈனும் பெறல் அரும் கொடையும் பேசின்
புன் நிலத்து இட்ட வித்தின் புற்கென விளைந்து போகம் – சிந்தா:13 2823/2,3
பெரும் கடி நகரம் பேசின் இராசமாகிருகம் என்பர் – சிந்தா:13 3043/3
பிளிறி வீழ் பேடி பெண் நோய் அறு வகை துவர்ப்பும் பேசின்
அளிபடு சிந்தை என்னும் ஆழி-வாய் வீழ்ந்த அன்றே – சிந்தா:13 3076/3,4

TOP


பேசினன் (2)

பின் அவன் விருந்து பேணி பேசினன் பிறங்கு தாரான் – சிந்தா:3 536/4
பெற்றேன் என்ன பேசினன் வாசம் கமழ் தாரான் – சிந்தா:4 1057/4

TOP


பேசினாய் (1)

என்னொடு பேசினாய் தவிர் மற்று ஈங்கு என – சிந்தா:7 1620/2

TOP


பேசினால் (1)

இன்று எலாம் எம் மருங்கு இருந்து பேசினால்
வென்று உலாம் வேல் கணீர் விழுத்தக்கீர்களே – சிந்தா:13 2937/3,4

TOP


பேசினான் (1)

பேசினான் அன்று கொண்டு பெரு விருந்து ஓம்புகின்றான் – சிந்தா:6 1451/4

TOP


பேசினேன் (1)

பிணி உயிர் இறுதியா பேசினேன் இனி – சிந்தா:13 3111/3

TOP


பேசு (1)

பெரும நீ கொணர்க என பேசு காஞ்சுகி – சிந்தா:13 2862/2

TOP


பேசுகின்றதே (1)

பெரு மண கிழமை யாம் பேசுகின்றதே – சிந்தா:3 822/4

TOP


பேசுகின்றான் (1)

விரைவொடு சென்ற ஒற்றாள் விளைந்தவா பேசுகின்றான் – சிந்தா:4 1135/4

TOP


பேசும் (1)

பின்னை இவள் போகுதிறம் பேசும் என எண்ணி – சிந்தா:9 2028/3

TOP


பேசுவல் (3)

பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு – சிந்தா:1 163/3
பின்றையும் நிகழ்வது உண்டு பேசுவல் கேள் இது என்றான் – சிந்தா:4 1130/4
பெருமை வீட்டொடும் பேசுவல் கேள் இது பெரியோய் – சிந்தா:13 2748/4

TOP


பேடி (3)

இன் பால் அடிசில் இவர்கின்ற கை பேடி போலாம் – சிந்தா:2 443/2
விளை மது கண்ணி வீணாபதி எனும் பேடி வேல் கண் – சிந்தா:3 651/2
பிளிறி வீழ் பேடி பெண் நோய் அறு வகை துவர்ப்பும் பேசின் – சிந்தா:13 3076/3

TOP


பேடியோ (2)

ஏஏ இவள் ஒருத்தி பேடியோ என்றார் – சிந்தா:3 652/4
எரி மணி பூண் மேகலையாள் பேடியோ என்றார் – சிந்தா:3 652/5

TOP


பேடை (2)

பீலி மஞ்ஞை நோக்கி பேடை மயில் என்று எண்ணி – சிந்தா:4 919/2
அண்ணல் அம் புள்ளோடு அல்லா ஆயிரம் பேடை சேவல் – சிந்தா:8 1893/3

TOP


பேடையொடு (1)

அன்ன பேடையொடு ஆற்ற கழறினாள் – சிந்தா:5 1365/4

TOP


பேண (2)

பிழி மது கோதையர் பேண இன் அமுது – சிந்தா:8 1939/2
பின்பனி தலை பேண வந்ததே – சிந்தா:13 2684/4

TOP


பேணல் (3)

பிழைப்பிலான் புறம் தந்தானும் குரவரை பேணல் செய்யா – சிந்தா:1 252/3
குரவரை பேணல் இன்றி குறிப்பு இகந்து ஆய பாவம் – சிந்தா:7 1728/1
உறுவர் பேணல் உவர்ப்பு இன்மை உலையா இன்பம் தலை நிற்றல் – சிந்தா:13 2816/1

TOP


பேணி (8)

பின் அவன் விருந்து பேணி பேசினன் பிறங்கு தாரான் – சிந்தா:3 536/4
கொம்பு அடு நுசுப்பினாய்க்கு தந்தனென் பேணி கொண்டாய் – சிந்தா:4 1128/4
வெம் திறல் இயக்கி தோன்றி விருந்து எதிர்கொண்டு பேணி
தந்து அவள் அமிர்தம் ஊட்ட உண்டு அவள் பிரிந்த-காலை – சிந்தா:5 1178/2,3
சாறு அயர்ந்து இறைவன் பேணி சார்பு அறுத்து உய்தி என்று – சிந்தா:5 1221/3
பிறரும் உளரோ பெறுநர் பேணி மொழிக என்ன – சிந்தா:9 2021/2
மாடம் புக்கு அநங்கன் பேணி வரம் கொள்வல் நாளை என்றாள் – சிந்தா:9 2052/4
பேணி நல்லார் கழுத்து அணிந்து பெரும் கண் கருமை விருந்து ஊட்டி – சிந்தா:13 2697/2
பேணி நீர் எழுதி ஓம்பி பேர் இன்பம் கொண்டு தந்தீர் – சிந்தா:13 2953/3

TOP


பேதாய் (1)

பெற்ற கூழ் உண்டு நாளும் பிணி உழந்து இருத்தும் பேதாய்
முற்றிமை சொல்லின் நங்கை மூன்று நாள் அடிசில் காட்டாள் – சிந்தா:12 2511/1,2

TOP


பேது (7)

பெருகும் கணியின் கணி பேசிய பேது இல் நாளால் – சிந்தா:4 1062/3
பெரிய கண் போலவும் பேது செய்யுமே – சிந்தா:6 1484/4
பெடை மயில் சாயலாள் தன் பேது கண்டு ஆங்கு மீண்டேன் – சிந்தா:7 1744/4
பேது செய்து பிளந்திடல் பெட்டதே – சிந்தா:8 1920/4
பின்னும் முன்னும் நோக்குவார் பேது சால எய்துவார் – சிந்தா:9 2036/3
விண்ணாறு செல்வார் மனம் பேது உற போந்து வீங்கி – சிந்தா:10 2134/1
பேது செய் பிணி பெரும் புலி பாய்ந்திட பிணம் ஆம் – சிந்தா:13 2759/3

TOP


பேதுற்று (2)

பிரிந்தவற்கு இரங்கி பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள் – சிந்தா:5 1391/1
பிணை மலர் கோதை கீதம் பாட யான் பெரிதும் பேதுற்று
இணை மலர் கண்ணிக்கு ஒவ்வா இளி வரு கிளவி சொன்னேன் – சிந்தா:7 1746/3,4

TOP


பேதுற (2)

பாவை பேதுற பாயலின் நீங்கி நீ – சிந்தா:5 1364/2
அங்கு அதற்கு இரங்கின ஆரும் பேதுற
கங்குல் போய் நாள்கடன் கழிந்தது என்பவே – சிந்தா:8 1991/3,4

TOP


பேதுறவு (1)

பெருகு நீர்மையின் பேதுறவு எய்தி நின்று – சிந்தா:5 1306/2

TOP


பேதுறாது (1)

பேசிய பெயரினாளை பேதுறாது ஒழிவேன்-ஆகில் – சிந்தா:9 2002/3

TOP


பேதுறு (1)

பெண்டிரும் ஆண்மை வெஃகி பேதுறு முலையினாளை – சிந்தா:3 587/3

TOP


பேதுறுக்கும் (1)

உயிரை பேதுறுத்தும் மாந்தர் உயிரை பேதுறுக்கும் ஆறே – சிந்தா:13 2766/4

TOP


பேதுறுகின்ற (1)

பேதுறுகின்ற போன்ற பெரு மழை கண்கள் மாதோ – சிந்தா:12 2544/4

TOP


பேதுறுத்தும் (1)

உயிரை பேதுறுத்தும் மாந்தர் உயிரை பேதுறுக்கும் ஆறே – சிந்தா:13 2766/4

TOP


பேதுறும் (1)

பிணை அனாள் அருகு சேரின் பேதுறும் நுசுப்பு என்று எண்ணி – சிந்தா:9 2083/3

TOP


பேதை (11)

பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே – சிந்தா:1 183/4
பேதை நீ பெரிதும் பொல்லாய் பெய் வளை தோளி என்றான் – சிந்தா:1 269/4
பெண் உடை பேதை என்று ஓர் நாள் முற்றும் பிதற்றினானே – சிந்தா:4 1082/4
காமர் பேதை தன் கண்தரு காமநோய் – சிந்தா:5 1315/3
பிணிக்கும் பீடு இனி என் செயும் பேதை தன் – சிந்தா:5 1348/2
பின்னிவிட்டு அன குழல் பெரும் கண் பேதை ஊர் – சிந்தா:6 1457/3
பெண் நலம் கிடந்த பேதை பெண் நலம் கனிய நின்றாள் – சிந்தா:7 1571/4
பிணி எழுந்து அவலிக்கின்ற பேதை நீ கேள் இது என்றான் – சிந்தா:7 1582/4
தெரிவில பேதை முல்லை பூத்தன தெளி இது என்றான் – சிந்தா:7 1740/4
பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்-மின் – சிந்தா:7 1815/4
பெண் உடை பேதை நீர்மை பெரும் தடம் கண்ணிற்று அம்மா – சிந்தா:12 2458/4

TOP


பேதைமை (2)

பேதைமை என்னும் வித்தில் பிறந்து பின் வினைகள் என்னும் – சிந்தா:5 1389/1
பேதைமை பிறரை உள்ளி அழுபவர் சேர்தல் என்றாள் – சிந்தா:12 2506/3

TOP


பேதையார் (1)

பீடு அழிந்து உருகும் பெண்ணின் பேதையார் இல்லை என்றாள் – சிந்தா:5 1388/4

TOP


பேதையேன் (1)

பின்னுறு பரிவு செய்தேன் பேதையேன் கவலல் என்றான் – சிந்தா:7 1726/4

TOP


பேம் (1)

பேம் தரு பேய் வனம் பெரிய காண்டியே – சிந்தா:5 1181/4

TOP


பேய் (10)

தோற்றமுறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும் – சிந்தா:1 101/3
ஒவ்வா சுடுகாட்டு உயர் அரங்கில் நிழல் போல் நுடங்கி பேய் ஆட – சிந்தா:1 309/2
ஊழ் பெற அணிந்து சூல் பேய் ஆட கண்டு உவந்து நக்கான் – சிந்தா:3 803/4
ஒருக்கி பேய் பாடி ஆட உறு சிலை உடன்று கொண்டான் – சிந்தா:3 807/4
பேம் தரு பேய் வனம் பெரிய காண்டியே – சிந்தா:5 1181/4
கண்ட பேய் நகரின் நீங்கி காவதம் கடந்து தோன்றும் – சிந்தா:5 1184/1
ஒன்றே எயிற்றது ஒரு பெரும் பேய் உலகத்தை அங்காந்து – சிந்தா:7 1660/1
பார் நனை மதத்த பல் பேய் பருந்தொடு பரவ செல்லும் – சிந்தா:10 2219/1
பிண மாலை பேய் மகட்கு பெரு விருந்து அயர்ந்தனரே – சிந்தா:10 2235/4
உவந்து பேய் கணம் ஆடவும் ஓரி கொள்ளை கொண்டு உண்ணவும் – சிந்தா:10 2310/2

TOP


பேய்க்கு (1)

சூழ் குடர் பிணங்கள் மல்க விளைத்த பின் தொழுதி பல் பேய்க்கு
ஊழ்படு குருதி நெய்யின் இறைச்சி சோறு ஊட்டி வென்றி – சிந்தா:3 757/2,3

TOP


பேய்கள் (3)

களிற்று உகிர் பிறழ் பல் பேய்கள் கைகளை உச்சி கூப்பி – சிந்தா:3 804/2
பிழிந்து உயிர் உண்டிடும் பேய்கள் ஆபவே – சிந்தா:5 1183/4
பித்து அலர்-ஆயின் பேய்கள் என்று அலால் பேசலாமோ – சிந்தா:8 1907/4

TOP


பேய்காள் (1)

அழுங்க சென்று அணைதல் பேய்காள் அநங்கற்கும் ஆவது உண்டோ – சிந்தா:3 752/4

TOP


பேயும் (2)

மஞ்சு சூழ்வதனை ஒத்து பிண புகை மலிந்து பேயும்
அஞ்சும் அ மயானம் தன்னுள் அகில் வயிறு ஆர்ந்த கோதை – சிந்தா:1 301/1,2
பெண் நலம் காதலின் பேயும் ஆயினான் – சிந்தா:9 2010/4

TOP


பேயை (1)

நாடி யார் பேயை காண்பார் நங்கைகாள் இதுவும் ஆமே – சிந்தா:9 2046/3

TOP


பேர் (37)

பெண்டிர்-தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர்
விண்டலர் கோதைக்கு விசயை என்பவே – சிந்தா:1 182/3,4
பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள் – சிந்தா:1 198/2
பேர் அறிவு உடையை நீயும் பிணை அனாட்கு அவலம் செய்யும் – சிந்தா:1 212/3
பேர் இயல் பெரும் களிறு பின்னி வந்து அடைந்தவே – சிந்தா:1 277/4
பேர் அமருள் அன்று பெரும் தாதையொடும் பேரா – சிந்தா:1 288/3
பிறந்த நீயும் பூம் பிண்டி பெருமான் அடிகள் பேர் அறமும் – சிந்தா:1 311/1
அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம் – சிந்தா:1 335/4
பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும் – சிந்தா:1 377/1
பிறையார் திரு நுதலும் பேர் அமர் உண்கண்ணும் – சிந்தா:3 733/1
சுண்ணம் என்பது ஓர் பேர் கொடு சோர் குழல் – சிந்தா:4 876/1
நாய் உடம்பு இட்டு இவண் நந்திய பேர் ஒளி – சிந்தா:4 943/1
புகழ் கொடி நங்கை தன் பேர் பொறித்தது ஓர் கன்னி முல்லை – சிந்தா:5 1268/3
கல் செய் தோளவன் காமரு பேர் உணர்வு – சிந்தா:5 1329/3
முலை கொள் பேர் அணி முற்றிழை சிந்தினாள் – சிந்தா:5 1371/4
பெறல் அரும் திரு அனார் அமுதம் பேர் ஒலி – சிந்தா:6 1446/3
பேர் நலம் பொறித்த பெண்மை பெரு விளக்கு ஆகி நின்றாள் – சிந்தா:6 1450/4
பேர் இசை வீணையில் சூட்டி பெண் கொடி – சிந்தா:6 1466/3
பிரிவில் தோன்றிய பேர் அன்பு எனப்படும் – சிந்தா:7 1627/3
முன்னுற இதனை ஓரேன் மூரி பேர் ஒக்கல் எல்லாம் – சிந்தா:7 1726/3
பவழமே அனையன பல் மயிர் பேர் எலி – சிந்தா:8 1898/2
பெரும் திருவி யார் மகள்-கொல் பேர் யாதாம்-கொல்லோ – சிந்தா:8 1969/4
பேர் கொடுத்தார் பெண் என்றார் கூற்றமே என்றிட்டால் – சிந்தா:8 1970/2
உண்டது காற்றி ஆண் பேர் ஊட்டுவல் உருவ காமன் – சிந்தா:9 2003/3
பேர் இசையான் இசை கேட்டலும் பெய்ம் முகில் – சிந்தா:10 2208/3
பேர் இடர் தன்-கண் நீக்கி பெரும் புணை ஆய தோழற்கு – சிந்தா:12 2573/1
பெண்மையை பெண்மை என்னார் பேர் உணர்வு உடைய நீரார் – சிந்தா:13 2611/3
முழுதும் பேர் பெறும் எல்லையுள் முரியினும் முரியும் – சிந்தா:13 2756/2
யாங்கணார் அவர் ஊரொடு பேர் எமக்கு உரையாய் – சிந்தா:13 2761/4
செம் கயல் பேர் இனம் இரிய செவ்வனே – சிந்தா:13 2859/3
பேர் அறைந்து உலகம் உண்ண பெரு நம்பி ஆக வென்றான் – சிந்தா:13 2913/4
உள் வளர்ந்து ஒரு வழி தோன்றி பேர் அறம் – சிந்தா:13 2933/2
பேணி நீர் எழுதி ஓம்பி பேர் இன்பம் கொண்டு தந்தீர் – சிந்தா:13 2953/3
பெரும் கிடுகு என்னும் கோல பேர் இமை பொருந்தி மெல்ல – சிந்தா:13 2975/2
நலிந்து மின் நகு மணி நன் பொன் பேர் இழை – சிந்தா:13 3029/2
ஒடிவறு பேர் ஒளி உட்கத்தக்கதே – சிந்தா:13 3057/4
இன்பம் மற்று என்னும் பேர் ஆன் எழுந்த புல் கற்றை தீற்றி – சிந்தா:13 3105/1
இலங்கு கொம்பு அனார் காமம் என்னும் பேர்
கலந்த கள்ளினை கை செய்து ஐயென – சிந்தா:13 3130/1,2

TOP


பேர்க்குநர் (1)

பின்னை தன் குலம் பேர்க்குநர் இல்லையே – சிந்தா:1 245/4

TOP


பேர்த்தனிர் (1)

கடுக்க பேர்த்தனிர் தம்-மின் கலாய்க்குறின் – சிந்தா:4 940/2

TOP


பேர்த்தான் (1)

பத்திர கடிப்பு மின்ன பதுமுகன் பகடு பேர்த்தான் – சிந்தா:10 2276/4

TOP


பேர்த்து (1)

இற்ற தம் உயிர் இயல்பின் பேர்த்து அவண் – சிந்தா:7 1764/2

TOP


பேர்ந்து (1)

இலங்க பேர்ந்து இன மலர் சிதறி ஏகினாள் – சிந்தா:4 1019/4

TOP


பேர்ப்பார் (1)

வடு_உரை யாவர் பேர்ப்பார் வாய் பறை அறைந்து தூற்றி – சிந்தா:1 211/2

TOP


பேரவே (1)

இறைமகன் வினாயினான் என்ன பேரவே
துறை வளர் நாட்டொடு நகரம் சொல் என – சிந்தா:7 1618/2,3

TOP


பேரறிவு (1)

பிற அறம் அல்ல பேசார் பேரறிவு உடைய நீரார் – சிந்தா:1 406/2

TOP


பேரா (1)

பேர் அமருள் அன்று பெரும் தாதையொடும் பேரா
போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான் – சிந்தா:1 288/3,4

TOP


பேராத (1)

பலி கொண்டு பேராத பாசம் இவள் கண் – சிந்தா:3 653/1

TOP


பேராது (1)

உயிர் செகுத்து முன் ஒன்றி பின் பேராது உரு அமைந்த – சிந்தா:1 168/2

TOP


பேரான் (1)

சேய் அனான் திருவின் பேரான் செழும் சிலை பகழியாலே – சிந்தா:3 788/4

TOP


பேரினம் (4)

நீள் நில வேந்து எனும் வேழ பேரினம்
பூண் முலை பிடிக்கு அவாய் போர் செய்குற்றவே – சிந்தா:3 774/3,4
பொங்கிய முழக்கில் வேழ பேரினம் புலம்பினால் போல் – சிந்தா:3 811/3
செறி எயிற்று ஆளி வேழ பேரினம் செகுத்தது அன்றே – சிந்தா:3 814/3
வெம் களி விடும் மத வேழ பேரினம்
தங்கிய காடு அது தனி செல்வார் இலை – சிந்தா:5 1179/2,3

TOP


பேரினும் (1)

பேரினும் பெண்டிரை பொறாது சீறுவாள் – சிந்தா:4 1018/1

TOP


பேரும் (1)

பெரு நாட்டு அரும் கலங்கள் சுமந்து பேரும் இடம் பெறாஅது – சிந்தா:12 2582/3

TOP


பேரூர் (1)

புல்லும் பேரூர் புகழ் தத்தன் காதல் சின தத்தைக்கும் – சிந்தா:7 1591/2

TOP


பேரோர் (1)

நிரோதனை அம்பின் கொன்றான் நித்தை நீள் பசலை பேரோர்
விராகு எனும் வேலின் வீழ வெகுண்டனன் அவரும் வீழ்ந்தார் – சிந்தா:13 3080/3,4

TOP


பேழ் (5)

நீர் கடல் மகர பேழ் வாய் மதனன் மற்று இதனை சொன்னான் – சிந்தா:1 256/4
நங்கையை காக்கும் வண்ணம் நகா நின்று மொழிந்து பேழ் வாய் – சிந்தா:3 765/2
பிறை எயிற்று எரி கண் பேழ் வாய் பெரு மயிர் பைம்பொன் பன்றி – சிந்தா:10 2180/1
கேழ் கிளர் எரி கண் பேழ் வாய் கிளர் பெரும் பாம்பினோடும் – சிந்தா:10 2298/1
துடி குரல் குரல பேழ் வாய் தொடர் பிணி உறுத்த செந்நாய் – சிந்தா:13 2767/1

TOP


பேழை (5)

கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே – சிந்தா:1 35/4
பொன் சொரி கதவு தாளின் திறந்து பொன் யவன பேழை
மின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்து பின்னும் – சிந்தா:1 114/1,2
அரு மணி வயிரம் வேய்ந்த அரும் கல பேழை ஐந்நூறு – சிந்தா:3 557/1
எரி மணி செம்பொன் ஆர்ந்த ஈர்_ஆயிரம் யவன பேழை
திரு மணி பூணினாற்கு சினம் தலை மழுங்கல் இன்றி – சிந்தா:3 557/2,3
கூன்களும் குறளும் அஞ்சி குடர் வெந்து கொழும் பொன் பேழை
தான் கொள பாய ஓடி சாந்து கோய் புகிய செல்வ – சிந்தா:3 764/1,2

TOP


பேழையும் (1)

அழுங்கும் மாந்தர்க்கு அணிகல பேழையும்
தழங்கு வெம் மது தண்டும் தலைத்தலை – சிந்தா:4 863/2,3

TOP


பேறு (2)

பேறு இலாள் அல்லள் பெற்ற உயிர் சென்று பிறக்கும் என்றேன் – சிந்தா:4 1127/4
உணர்வொடு காட்சி பேறு என்று இடை உறு கோக்கள் ஏற்றார் – சிந்தா:13 3081/2

TOP