நோ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

நோ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோக்க 10
நோக்க-மாதோ 1
நோக்கத்து 1
நோக்கப்பெற்றும் 1
நோக்கம் 10
நோக்கமும் 1
நோக்கமோ 1
நோக்கமோடு 2
நோக்கல் 3
நோக்கலள் 1
நோக்கலன் 1
நோக்கலின் 1
நோக்கலும் 1
நோக்கவே 1
நோக்கன்-மின் 1
நோக்கா 7
நோக்காது 3
நோக்காய் 2
நோக்காள் 1
நோக்கான் 4
நோக்கி 178
நோக்கிய 1
நோக்கியர் 5
நோக்கியும் 1
நோக்கியே 1
நோக்கில் 3
நோக்கிற்று 1
நோக்கின் 21
நோக்கின 1
நோக்கினரே 1
நோக்கினவர் 1
நோக்கினள் 1
நோக்கினள்-மாதோ 1
நோக்கினன் 1
நோக்கினார் 9
நோக்கினாரும் 1
நோக்கினாரை 1
நோக்கினால் 1
நோக்கினாள் 6
நோக்கினாளே 2
நோக்கினான் 6
நோக்கினானே 2
நோக்கினில் 1
நோக்கினின் 1
நோக்கினீர் 1
நோக்கினும் 1
நோக்கீர் 1
நோக்கு 12
நோக்கு-மின் 1
நோக்கு-மினே 1
நோக்குகிற்பார் 1
நோக்குகின்றான் 2
நோக்குநர் 2
நோக்கும் 12
நோக்குமே 2
நோக்குவார் 1
நோக்குவாள் 1
நோக்குவேற்கு 1
நோக்கொடு 1
நோக்கோடு 1
நோதல் 1
நோதலும் 1
நோம் 6
நோய் 41
நோய்க்கு 1
நோய்களும் 1
நோய்களையும் 1
நோய்செய்வான் 1
நோயில் 1
நோயின் 1
நோயினுள் 1
நோயும் 5
நோயுறு 1
நோயே 1
நோயேன் 1
நோயொடும் 1
நோயோடே 1
நோவ 16
நோவது 2
நோற்கும் 2
நோற்ப 1
நோற்பல் 1
நோற்பவர்க்கு 1
நோற்பான் 1
நோற்ற 4
நோற்றல் 1
நோற்றலாள் 1
நோற்றவாறும் 1
நோற்றவே 1
நோற்றன 1
நோற்றனள் 2
நோற்றனை 1
நோற்றாள் 1
நோற்றான் 1
நோற்றானும் 1
நோற்றிட்டு 2
நோற்றிலர் 1
நோற்றிலாதேன் 1
நோற்று 5
நோன் 10
நோன்-மின் 1
நோன்மை 1
நோனான் 4

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நோக்க (10)

நெடும்தகை நின்று நோக்க நீள் கடல் பிறந்த கோல – சிந்தா:5 1290/1
கண்டவன் கண்ணின் நோக்க நடுங்கி தன் காதில் தாழ்ந்த – சிந்தா:7 1570/1
கொழுநனை குறிப்பினாலே குமரன் யார் என்று நோக்க
கழுமிய கற்பினாய் நின் மைத்துனன் ஐயன் என்ன – சிந்தா:7 1730/1,2
மல்லார் திரள் தோள் மருமான் முகம் நோக்க மைந்தர் – சிந்தா:7 1868/3
எழு முற்றும் தோளார் தொழுதார் இன்னர் என்று நோக்க
கழுமிற்று காதல் கதிர் வெள் வளை தோளினாட்கே – சிந்தா:7 1870/3,4
அன்னம் அன மெல் நடையினாள் அமர்ந்து நோக்க
பின்னை இவள் போகுதிறம் பேசும் என எண்ணி – சிந்தா:9 2028/2,3
வடியுறு கடைக்கண் நோக்க நெஞ்சு துட்கென்ன வார் பூம் – சிந்தா:9 2059/3
பண்ணாறு சொல்லாள் முலை பாரித்த என்று நோக்க
கண்ணாறு சென்ற களி ஐங்கணை காமன் அன்ன – சிந்தா:10 2134/2,3
வான் முகம் புதைத்த பல் மீன் மதி என மருண்டு நோக்க
தேன் முகம் புதைத்த மாலை குடை நிழல் திருவில் தந்தார் – சிந்தா:12 2415/3,4
ஏதிலன் ஆயினாலும் இறைவர் தம் அறத்தை நோக்க
காதலன் அடிகள் என்ன கண் கனிந்து உருகி காசு இல் – சிந்தா:13 2644/1,2

TOP


நோக்க-மாதோ (1)

வஞ்சம் வழங்காதவன் கண்களின் நோக்க-மாதோ
தஞ்சம் வழங்கி தலைக்கொண்டது காம வெம் தீ – சிந்தா:8 1964/3,4

TOP


நோக்கத்து (1)

அருகு உலாம் புலவி நோக்கத்து அமிர்தம் இன்று உகுப்ப-கொல்லோ – சிந்தா:3 769/2

TOP


நோக்கப்பெற்றும் (1)

நித்தில முலையினார் தம் நெடும் கணால் நோக்கப்பெற்றும்
கைத்தலம் தீண்டப்பெற்றும் கனிந்தன மலர்ந்த காண்க – சிந்தா:8 1907/1,2

TOP


நோக்கம் (10)

விள்ளா விழு சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம்
உள் ஆவி வாட்ட உயிர் ஒன்று ஒத்து உறைந்தவாறும் – சிந்தா:0 20/2,3
வம்பு உடை முலையினாள் என் மட மகள் மதர்வை நோக்கம்
அம்பு அடி இருத்தி நெஞ்சத்து அழுத்தி இட்டு அனையது ஒப்ப – சிந்தா:2 478/1,2
நல்லவள் நோக்கம் நாய்கன் தேர்ந்து பூம் குவளை போதின் – சிந்தா:3 669/1
கன்னியை கடித்த நாகம் கன்னியே கன்னி நோக்கம்
அன்னதே அரசர் சாதி மூன்று எயிறு அழுந்தி ஆழ்ந்த – சிந்தா:5 1288/1,2
உற்ற நோக்கம் உறாதது ஓர் நோக்கினில் – சிந்தா:5 1295/2
பூம் கண் அவ்வயின் நோக்கம் பொறாத போல் – சிந்தா:5 1305/1
அருகும் நோக்கம் என் ஆவி அலைக்குமே – சிந்தா:5 1306/4
உருகும் நோக்கம் உளம் கிழித்து உள் சுட – சிந்தா:5 1321/2
நொண்டு கொண்டு பருகிய நோக்கம் ஒன்று – சிந்தா:7 1630/3
திரிதரு நோக்கம் தீது இலார் நோக்கி நெய்தலும் கைவலத்து ஒழிந்தார் – சிந்தா:10 2103/4

TOP


நோக்கமும் (1)

இலங்கு பூம் கொடி அன ஏழை நோக்கமும்
உலம் கொள் தோள் உறு வலி நோக்கும் ஒத்தவே – சிந்தா:6 1471/3,4

TOP


நோக்கமோ (1)

மாது உலாம் மொழியோ மட நோக்கமோ
யாது நான் அறியேன் அணங்கு அன்னவள் – சிந்தா:5 1308/2,3

TOP


நோக்கமோடு (2)

வடி தலை கண் மலர் வளர்த்த நோக்கமோடு
அடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே – சிந்தா:1 194/3,4
முன்னமே வந்து என முறுவல் நோக்கமோடு
என்னை-கொல் வரவு என இனிய செப்பினான் – சிந்தா:4 1022/3,4

TOP


நோக்கல் (3)

நோய் முதிர் குரங்கு போல நுகர்ச்சி நீர் நோக்கல் வேண்டா – சிந்தா:6 1435/1
வினை பெரும் தச்சன் நல்லன் மெய்ம்மை நாம் நோக்கல் உற்றால் – சிந்தா:7 1578/1
அரிது இவன் முகத்து நோக்கல் அழகு ஒளி அன்ன என்றான் – சிந்தா:13 3058/4

TOP


நோக்கலள் (1)

என்றவள் அரசன் தன்னை நோக்கலள் இவன்-கண் ஆர்வம் – சிந்தா:3 685/1

TOP


நோக்கலன் (1)

நோக்கலன் நுனித்து நொய்தா இட கவுள் உறுத்தினானே – சிந்தா:12 2495/4

TOP


நோக்கலின் (1)

உடம்பு வேர்த்து இன மழை உரறி நோக்கலின்
நடுங்குபு நல் வரை மாடத்து உச்சியில் – சிந்தா:1 88/2,3

TOP


நோக்கலும் (1)

பிணையல் நீட்ட பெரும் தகை அஃது ஏலான் முகம் நோக்கலும்
துணையில் தோகை என் நங்கைக்கு தொங்கல் தொடுப்பாயும் நீ – சிந்தா:7 1668/2,3

TOP


நோக்கவே (1)

நோக்கவே தளிர்த்து நோக்காது இமைப்பினும் நுணுகும் நல்லார் – சிந்தா:7 1880/1

TOP


நோக்கன்-மின் (1)

நோக்கன்-மின் நாணும் கண்டீர் நுதி கொள் நாகரிகன் என்பார் – சிந்தா:4 1110/4

TOP


நோக்கா (7)

நூல் அடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்கா
சேல் அடு கண்ணி காந்தள் திரு மணி துடுப்பு முன் கை – சிந்தா:1 354/2,3
வாடி இருந்தான் வரும் கலம் நோக்கா – சிந்தா:3 516/4
செறிந்தது ஓர் மலரை கிள்ளி தெறித்திடா சிறிய நோக்கா
நறும் புகை தூதுவிட்டு நகை முகம் கோட்டி நின்றாள் – சிந்தா:7 1568/3,4
பெண் எனப்படுவ கேண்மோ பீடு இல பிறப்பு நோக்கா
உள் நிறை உடைய அல்ல ஓர் ஆயிரம் மனத்தவாகும் – சிந்தா:7 1597/1,2
பின்னை தான் பிறரை நோக்கா பெரு மட மாது-தன்னை – சிந்தா:7 1599/2
விண்டுவும் உடைய வாலின் வெடித்துராய் வெகுண்டு நோக்கா
எண்திசையோரும் எள்க குஞ்சரம் இரிய பாயும் – சிந்தா:7 1749/2,3
ஒழி படை களிறு போல உயங்கவும் உருகி நோக்கா
பிழிபடு கோதை போல் ஆம் பெண்டிரை கெட பிறந்தாள் – சிந்தா:12 2512/3,4

TOP


நோக்காது (3)

பூ மாண் புனை தாராய் நோக்காது போதியோ – சிந்தா:7 1805/4
நோக்கவே தளிர்த்து நோக்காது இமைப்பினும் நுணுகும் நல்லார் – சிந்தா:7 1880/1
நுனித்து கண் அரக்கி நோக்காது ஒசிந்து நின்றார்கள் அன்றே – சிந்தா:12 2541/3

TOP


நோக்காய் (2)

முரிந்த நம் பிறவி மேல் நாள் முற்றிழை இன்னும் நோக்காய்
பரிந்து அழுவதற்கு பாவாய் அடியிட்டவாறு கண்டாய் – சிந்தா:5 1391/3,4
நீக்கி நீ எம்மை நோக்காய் நீத்தியோ நீயும் என்பார் – சிந்தா:13 2951/4

TOP


நோக்காள் (1)

புண் மேல் புடையில் புகைந்து ஆண் உரு யாதும் நோக்காள்
கண் நோக்கு உடைந்து கடி_மாடம் அடைந்தவாறும் – சிந்தா:0 13/3,4

TOP


நோக்கான் (4)

நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழி-மின் என துறந்தாள் – சிந்தா:1 352/4
திங்கள் வாள் முகமும் நோக்கான் திரு முலை தடமும் நோக்கான் – சிந்தா:7 1705/1
திங்கள் வாள் முகமும் நோக்கான் திரு முலை தடமும் நோக்கான்
அம் கதிர் கலாபம் மின்னும் அணி அல்குல் பரப்பும் நோக்கான் – சிந்தா:7 1705/1,2
அம் கதிர் கலாபம் மின்னும் அணி அல்குல் பரப்பும் நோக்கான்
செம் கயல் கண்ணினாள் தன் சீறடி சிலம்பு நோக்கி – சிந்தா:7 1705/2,3

TOP


நோக்கி (178)

மூரி தேம் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கி
பாரித்தேன் தரும நுண் நூல் வழக்கு அது ஆதல் கண்டே – சிந்தா:1 214/1,2
வெலற்கு அரும் தானை நீத்த வேந்தனை வெறுமை நோக்கி
குலத்தொடும் கோறல் எண்ணி கொடியவன் கடிய சூழ்ந்தான் – சிந்தா:1 261/3,4
ஒலி கழல் மன்னர் உட்கும் உரு சுடர் வாளை நோக்கி
கலிக்கு இறை ஆய நெஞ்சின் கட்டியங்காரன் நம் மேல் – சிந்தா:1 266/2,3
பூம் கழல் குருசில் தந்த புதல்வனை புகன்று நோக்கி
தேம் கமழ் ஓதி திங்கள் வெண் கதிர் பொழிவதே போல் – சிந்தா:1 305/1,2
ஒல்கி ஓர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள் – சிந்தா:1 319/4
நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழி-மின் என துறந்தாள் – சிந்தா:1 352/4
மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்று – சிந்தா:1 359/2
மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்று – சிந்தா:1 359/2
நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து தீமை – சிந்தா:1 374/1
நோற்று அவன் வலையை நீங்கி நுகர்ச்சியில் உலகம் நோக்கி
ஆற்றுற போதல் தேற்றாம் அளியமோ பெரியமே காண் – சிந்தா:1 376/3,4
கவ்விய எஃகின் நின்ற கயக்கம் இல் நிலைமை நோக்கி
அவ்வியம் அகன்று பொங்கும் அழல் படு வெகுளி நீக்கி – சிந்தா:1 394/2,3
உரை விளையாமை மைந்தன் கேட்கிய உவந்து நோக்கி
வரை விளையாடு மார்பன் யார் அவன் வாழி என்ன – சிந்தா:1 397/1,2
இடை கழி நின்ற என்னை நோக்கி போந்து ஏறுக என்றான் – சிந்தா:1 399/3
மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கி
காற்றின் விரைந்து தொறு மீட்க என காவல் மன்னன் – சிந்தா:2 432/2,3
அம் முலை அமுதம் அன்னார் அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கி
தம் உறு விழும வெம் நோய் தம் துணைக்கு உரைத்து நிற்பார் – சிந்தா:2 465/3,4
வார் செல செல்ல விம்மும் வன முலை மகளிர் நோக்கி
ஏர் செல செல்ல ஏத்தி தொழுது தோள் தூக்க இப்பால் – சிந்தா:2 469/1,2
வண்ண வன முலை மாதர் மட நோக்கி
கண்ணும் கருவிளம் போது இரண்டே கண்டாய் – சிந்தா:2 480/3,4
கோட்டு இளம் களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி
மோட்டு இள முலையினாள் நின் மட மகள் எனக்கு மாமான் – சிந்தா:2 484/1,2
தழை தவழ் சந்தன சோலையின் நோக்கி
இழை தவழ் மார்பன் இனிதின் உவந்தான் – சிந்தா:3 524/3,4
நல் நகர் நோக்கி நாய்கன் நாகம்-கொல் புகுந்தது என்ன – சிந்தா:3 536/1
சந்தனம் தளிர்த்ததே போல் சீதத்தன் தளிர்த்து நோக்கி
எந்தைக்கு தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப – சிந்தா:3 545/2,3
உழந்தவரும் நோக்கி மகிழ் தூங்க ஒளி வாய்ந்து – சிந்தா:3 597/1
வாள் வயிரம் விற்கும் மட நோக்கி யார்-கொலோ பெறுவார் என்பார் – சிந்தா:3 645/4
சொல்லும் என்றும் ஆய்ந்து கொண்டு துகிலிகை கணக்கு நோக்கி
வல்லிதின் சலாகை சுற்றி ஓலையை வாசிக்கின்றான் – சிந்தா:3 669/3,4
மேல் பட வெருவி நோக்கி தானையை விட்டிட்டு ஒல்கி – சிந்தா:3 675/3
நெடியான் மகன் சிலையும் அம்பும் வைத்த நிழல் மதியோ வாள் முகமோ நோக்கி காணீர் – சிந்தா:3 681/4
பை பருகு அல்குல் இலயம் பற்றி பதன் அமைத்த பாவை நிருத்தம் நோக்கி
மெய் உருகி கண் உருகி நெஞ்சு உருகி காம வெயில் வெண்ணெய் பாவை போல் மெலிகின்றாரே – சிந்தா:3 682/3,4
அறா மலர் தெரியலான் அழன்று நோக்கி ஐ என – சிந்தா:3 703/2
இருந்த முலையாள் நின்றாளை நோக்கி இசையின் இது சொன்னான் – சிந்தா:3 717/4
பண்ணிய இலயம் பற்றி பாடிய வனப்பும் நோக்கி
விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் – சிந்தா:3 727/2,3
ஊழ் மணி மிடறும் ஒன்றாய் பணி செய்தவாறு நோக்கி
தாழ் மணி தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே – சிந்தா:3 728/3,4
செம் மலர் அடியும் நோக்கி திரு மணி அல்குல் நோக்கி – சிந்தா:3 739/1
செம் மலர் அடியும் நோக்கி திரு மணி அல்குல் நோக்கி
வெம் முலை தடமும் நோக்கி விரி மதி முகமும் நோக்கி – சிந்தா:3 739/1,2
வெம் முலை தடமும் நோக்கி விரி மதி முகமும் நோக்கி – சிந்தா:3 739/2
வெம் முலை தடமும் நோக்கி விரி மதி முகமும் நோக்கி
விம்மித பட்டு-மாதோ விழுங்குவான் போல ஆகி – சிந்தா:3 739/2,3
இங்கித நிலைமை நோக்கி முறுவலித்து எரி பொன் மார்பன் – சிந்தா:3 765/1
உள் உறுத்து எழுந்து பொங்கி உடல் சினம் கடவ நோக்கி
முள் எயிறு இலங்க நக்கு முடி குழாம் மன்னர் கேட்ப – சிந்தா:3 768/2,3
ஏண் இகந்து இலேசு நோக்கி இரு முதல் கெடாமை கொள்வார் – சிந்தா:3 770/3
தம்பியை சீவகன் நோக்கி சாமரை – சிந்தா:3 792/1
கண்ணதே செவி அது என்பார் கலங்க நூல் கழிய நோக்கி
பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றினானே – சிந்தா:3 795/3,4
எள்ளுநர்கள் சாய என தோள் இரண்டு நோக்கி
வெள்ளி மலை முழுதும் கொடி எடுத்தது இகல் ஏத்தி – சிந்தா:3 847/1,2
ஒத்ததோ என நோக்கி நும் நங்கைமார்க்கு – சிந்தா:4 895/3
நிழல் செய் நீர் கொண்டு ஈர்ப்ப நெடும் கண் இணையின் நோக்கி
குழையும் பூணும் நாணும் கொழுநன் உவப்ப அணிக என்று – சிந்தா:4 918/2,3
பீலி மஞ்ஞை நோக்கி பேடை மயில் என்று எண்ணி – சிந்தா:4 919/2
சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்-மின் – சிந்தா:4 919/4
தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்-மின் – சிந்தா:4 932/4
நவை இல் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம் – சிந்தா:4 933/4
சென்று உகு நீரொடு செம்மலை நோக்கி
ஒன்றுபு வால் குழைத்து உள் உவப்பு எய்தலும் – சிந்தா:4 944/2,3
குன்று என திரண்ட தோளான் குறுகலும் குமரன் நோக்கி
நின்றவன் நெடும் கண் ஒன்றும் இமைப்பு இல நிழல் இல் யாக்கை – சிந்தா:4 954/1,2
பொன் தரு மாரி வண் கை புரவலன் புகன்று நோக்கி
வென்றவர் உலகம் பெற்ற வேந்து உடை இன்பம் எல்லாம் – சிந்தா:4 956/2,3
பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி
மின்னு போல் நுடங்கி நின்றாள் வீ ததை பொன் கொம்பு ஒப்பாள் – சிந்தா:4 976/3,4
பெண் உயிர் அவலம் நோக்கி பெருந்தகை வாழ்வில் சாதல் – சிந்தா:4 978/1
நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே – சிந்தா:4 1004/1
நேர் மலர் பாவையை நோக்கி நெய் சொரி – சிந்தா:4 1018/2
மாகமே நோக்கி மடவாளே அவ்விருந்தாள் – சிந்தா:4 1038/3
பால் மடுத்து தீம் தேன் பருகுவாள் போல் நோக்கி
சேல் படுத்த கண்ணீர் சுமந்து அளைஇ மெய்ம்மகிழ்ந்து – சிந்தா:4 1044/2,3
நவ்வியம் பிணை கொள் நோக்கி நகை முக விருந்து செய்தான் – சிந்தா:4 1046/4
மிகை நிற களிற்றை நோக்கி வேழம் என் உற்றது என்றான் – சிந்தா:4 1077/4
கொற்றவன் குறிப்பு நோக்கி குஞ்சர பாகன் கூறும் – சிந்தா:4 1078/1
ஈண்டு அழல் குட்டம் போல எரி எழ திருகி நோக்கி
கோண் தரு குறும்பர் வெம் போர் கோக்குழாம் வென்றது உள்ளி – சிந்தா:4 1079/1,2
அங்கு அவர் உகுத்த கண்ணீர் அடி துகள் அவிப்ப நோக்கி
பொங்கு அமர் உழக்கும் வேலான் புலம்பு கொண்டு அழேற்க என்றான் – சிந்தா:4 1113/3,4
ஊறு இலா உணர்வின் நோக்கி உரை-மதி எவன்-கொல் மக்கள் – சிந்தா:4 1127/3
சுற்றினார் முகத்தை நோக்கி சூழி மால் யானை அன்னான் – சிந்தா:4 1139/2
நோம் என் நெஞ்சம் என நோக்கி நின்றாள் சிறைப்பட்ட தன் – சிந்தா:4 1151/3
நடலை நோக்கி கதிர் நாணுவது ஒப்ப மறைந்த பின் – சிந்தா:4 1157/3
நலத்தகை அவனை காணான் நஞ்சு உயிர்த்து அஞ்சி நோக்கி
சிலை தொழில் தட கை மன்னற்கு இற்றென செப்புகின்றான் – சிந்தா:4 1161/3,4
இன் இசை கூத்து நோக்கி இருந்தனன் திலகம் அன்னான் – சிந்தா:5 1170/4
இந்திரன் தன்னை நோக்கி இயக்கியர் குழாத்தை நோக்கி – சிந்தா:5 1219/3
இந்திரன் தன்னை நோக்கி இயக்கியர் குழாத்தை நோக்கி
சிந்தையின் செல்வல் என்றான் தேவனும் செலவு நேர்ந்தான் – சிந்தா:5 1219/3,4
ஊழின் நீர் உண்பது என் என்று உரைத்தலும் உவந்து நோக்கி
மோழலம் பன்றியோடு முளவுமா காதி அட்ட – சிந்தா:5 1233/1,2
ஒள்_நுதல் கொண்ட ஆடல் தொட்டிமை உருவம் நோக்கி
வெண்ணெய் தீ உற்ற வண்ணம் ஆடவர் மெலிகின்றாரே – சிந்தா:5 1255/3,4
யாது இவள் கண்டது என்று ஆங்கு அரசனும் அமர்ந்து நோக்கி
மீது வண்டு அரற்றும் கண்ணி விடலையை தானும் கண்டான் – சிந்தா:5 1262/2,3
அந்தரகுமரன் என்று ஆங்கு யாவரும் அமர்ந்து நோக்கி
இந்திர திருவற்கு உய்த்தார்க்கு இறைவனும் எதிர்கொண்டு ஓம்பி – சிந்தா:5 1264/2,3
நங்கை தன் முகத்தை நோக்கி நகை மதி இது என்று எண்ணி – சிந்தா:5 1271/1
கதுமென சென்று நோக்கி காய் சினம் கடிதற்கு ஒத்த – சிந்தா:5 1273/3
இறை வளையவரை நோக்கி என் கொடிது உற்றது என்றான் – சிந்தா:5 1283/4
கிளைநரில் பிரிவும் நோயில் காலத்து நோயும் நோக்கி
விளை மது கமழும் கோதை வேலினும் வெய்ய கண்ணாய் – சிந்தா:5 1394/2,3
முடி பொருள் பறவை கூற முற்றிழை நின்னை நோக்கி
கடியது ஓர் கௌவை செய்யும் கட்டு எயிற்று அரவின் என்றேன் – சிந்தா:5 1396/2,3
பையவே பரந்து நோக்கி பனி வரை நெற்றி சேர்ந்தான் – சிந்தா:5 1406/4
துனிவு தீர நோக்கி தோன்றல் செல்லும் முன்னால் – சிந்தா:6 1414/3
அனையல் ஆகா உருவ நோக்கி மைந்தற்கு இரங்கி – சிந்தா:6 1417/2
நுண் துகில் வேதல் அஞ்சி நெருப்பு அகம் பொதிந்து நோக்கி
கொண்டுபோய் மறைய வைத்தால் கொந்து அழல் சுடாதும் ஆமே – சிந்தா:6 1434/1,2
நிதி அறை திறந்து நோக்கி அன்னது ஓர் நீர்மை எய்தி – சிந்தா:6 1447/3
புரி குழல் பொன் செய் பைம் பூண் புனை_இழை கோலம் நோக்கி
தரிக்கிலாது உருகி நையும் தட மலர் கோதை நற்றாய் – சிந்தா:6 1454/3,4
ஏ அடு பிணையின் நோக்கி இறை வளை கழல நின்ற – சிந்தா:6 1455/3
இனத்து-இடை ஏறு அனையான் எழில் நோக்கி
புன கொடி பொற்பொடு புண்ணிய நம்பி – சிந்தா:6 1475/2,3
பரந்து எலா திசையும் நோக்கி பையவே பரிவு கொண்டாள் – சிந்தா:6 1507/4
இல் உறை தெய்வம் நோக்கி இரங்கி நின்று உரைக்கும் அன்றே – சிந்தா:6 1527/4
பிறந்தவர் சாவர் செத்தார் பிறப்பவே என்ன நோக்கி
கறங்கு இசை வண்டு பாடும் கோதை நீ கவலல் என்றாள் – சிந்தா:6 1535/3,4
மானின் நோக்கியர் நோக்கி வழி-தொறும் ஈவது அ வழியே – சிந்தா:7 1562/4
பணிவரும் சிங்க நோக்கில் பணை எருத்து உறழ நோக்கி
மணி மலர் நாகம் சார்ந்து வழையோடு மரவ நீழல் – சிந்தா:7 1569/2,3
எண் திசை மருங்கும் நோக்கி இயக்கி-கொல் இவள் மற்று என்றான் – சிந்தா:7 1570/4
மடத்தகை குறிப்பு நோக்கி மனத்து இது சிந்திக்கின்றான் – சிந்தா:7 1573/4
செயிர்ப்பொடு சிவந்து நோக்கி சேவலின் அகல சேவல் – சிந்தா:7 1624/1
குலவிய புணர்ச்சி நோக்கி குன்று அனான் சிந்திக்கின்றான் – சிந்தா:7 1625/4
பூம் கழலானை புண்ணிய நம்பி முகம் நோக்கி
ஈங்கு இது நின் நாடு இ பதி நின் ஊர் இது நின் இல் – சிந்தா:7 1639/1,2
எய்த அ சிலையின் எல்லை அணுகலும் ஏந்தல் நோக்கி
எய்த அ இடத்து நின்றே எய்த அ தட கை கொண்டாற்கு – சிந்தா:7 1641/2,3
கண்டு எலாம் வியந்து நோக்கி வில் உடை கடவுள் என்றான் – சிந்தா:7 1642/4
பூ மென் குழலார் புறம் நோக்கி நகுவார் நகுவது ஆயினேன் – சிந்தா:7 1663/2
காவலன் மக்கள் ஆக்கம் கண்டு கண் குளிர்ந்து நோக்கி
ஏவலான் அரசன் ஒன்றோ இரு_பிறப்பாளன் அல்லார்க்கு – சிந்தா:7 1682/1,2
மை விலை பெற்ற கண்ணாள் மைந்தனை மருண்டு நோக்கி
கை விலும் கணையும் இல்லா காமன் போந்து இருக்க என்ன – சிந்தா:7 1704/2,3
செம் கயல் கண்ணினாள் தன் சீறடி சிலம்பு நோக்கி
எங்கு உளார் அடிகள் என்னா இன்னணம் இயம்பினானே – சிந்தா:7 1705/3,4
முற்பட கண்டு நோக்கி முறுவல் கொள் முகத்தன் ஆகி – சிந்தா:7 1710/3
திருமுகம் சுடர நோக்கி சீவகன் சென்று சேர்ந்தான் – சிந்தா:7 1724/2
சொல்லிய என்னை நோக்கி துளங்கல் நும் அடிகள் பாதம் – சிந்தா:7 1747/1
கொந்து அழல் காட்டு தீயால் வளைப்புண்ட குழாத்தை நோக்கி
சிந்தித்து கவன்று நிற்ப திரு மழை பொழிந்தது அன்றே – சிந்தா:7 1753/3,4
மாவடு நோக்கி உள் மகிழ்ந்து கூறினாள் – சிந்தா:7 1812/4
உருத்து எரி தவழ நோக்கி உடல் சினம் கடவ சொன்னான் – சிந்தா:7 1857/4
தொடு கழல் குருசில் நோக்கி தூ துகில் வீசினானே – சிந்தா:7 1863/4
செல்லும் மதி நோக்கி பகலே சிறியை என்னும் – சிந்தா:7 1877/2
பல் கதிரை நோக்கி மதியே பெரியை என்னும் – சிந்தா:7 1877/3
புலவி சொல் பொறித்த ஓலை திரு முடி துளக்கி நோக்கி
தலை வைத்த காப்பு விஞ்சை கொண்ட பின் தாமம் சூழ்ந்து – சிந்தா:7 1881/2,3
எய்தா இடர் உளவே எங்கு எங்கு என்று அ திசை நோக்கி
வெய்தா அடி தொழுது வேந்தன் கோயிற்கு எழுந்தானே – சிந்தா:7 1884/3,4
மலை விரவு நீள் மார்பின் மைந்தன் தோழர் முகம் நோக்கி
கொலை விரவு கூர் நுதி வேல் குமரன் என்ன குருகுலத்தான் – சிந்தா:7 1885/2,3
மான் நலம் கொண்ட நோக்கி மகன் மனம் மகிழ சொன்னாள் – சிந்தா:8 1915/4
கலுழ தன் கையால் தீண்டி காதலின் களித்து நோக்கி
வலி கெழு வயிர தூண் போல் திரண்டு நீண்டு அமைந்த திண் தோள் – சிந்தா:8 1926/2,3
மான் நெடு மழை கண் நோக்கி வானவர் மகளும் ஒப்பாள் – சிந்தா:8 1951/3
மா உண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கி
கோ உண்ட வேலான் குழைந்து ஆற்றலன் ஆயினானே – சிந்தா:8 1965/3,4
செயிர்த்தவள் சிவந்து நோக்கி சீறடி சென்னி சேர்த்தி – சிந்தா:8 1989/1
கண்டு கடை காவலர்கள் கழற முகம் நோக்கி
பண்டை இளம்-கால் உவப்பன் பாலடிசில் இ நாள் – சிந்தா:9 2012/2,3
சால முது மூப்பு உடைய சாமி முகம் நோக்கி
காலும் மிக நோம் சிறிது கண்ணும் துயில்குற்றேன் – சிந்தா:9 2029/2,3
செயிர் இல் வாள் முகத்தை நோக்கி தேன் பொதிந்து அமுதம் ஊற – சிந்தா:9 2048/3
புண் நக்க வேலான் புகழ நாணி பூ நோக்கி பூக்கு ஒசிந்த கொம்பு ஒத்தாளே – சிந்தா:9 2066/4
வட்டிகை பாவை நோக்கி மகிழ்ந்திருந்திலிரோ என்னா – சிந்தா:9 2085/1
கண்களை இடுக கோட்டி காமத்தில் செயிர்த்து நோக்கி
குண்டலம் இலங்க கோதை கூந்தலோடு அவிழ்ந்து சோர – சிந்தா:9 2086/2,3
எழுதிய பாவை நோக்கி இமை அவித்து இருப்ப கண்டேன் – சிந்தா:9 2087/2
இச்சையும் குறிப்பும் நோக்கி எய்வதே கருமம் ஆக – சிந்தா:9 2090/3
புரவியும் களிரும் நோக்கி பொன் நெடும் தேரும் நோக்கி – சிந்தா:9 2095/1
புரவியும் களிரும் நோக்கி பொன் நெடும் தேரும் நோக்கி
இரவினும் பகலும் ஓவாது என் மகன் யாண்டையேன் என்று – சிந்தா:9 2095/1,2
வரி வளை சூழும் வலம்புரி இனத்துள் சலஞ்சலம் மேய்வன நோக்கி
அரிது உணர் அன்னம் பெடை என தழுவி அன்மையின் அலமரல் எய்தி – சிந்தா:10 2103/2,3
திரிதரு நோக்கம் தீது இலார் நோக்கி நெய்தலும் கைவலத்து ஒழிந்தார் – சிந்தா:10 2103/4
பொறி திரிவதனை நோக்கி பூ முடி துளக்கி நின்றார் – சிந்தா:10 2180/4
சிலை வைத்த மார்பின் தென்னன் திரு மணி பன்றி நோக்கி
தலை வைத்தது அம்பு தானும் தரணி மேல் பாதம் வைத்தான் – சிந்தா:10 2190/3,4
வில் திறல் விசயன் என்பான் வெம் கணை செவிட்டி நோக்கி
ஒற்றுபு திருத்தி கைம்மேல் உருட்டுபு நேமி சேர்ந்து ஆங்கு – சிந்தா:10 2191/1,2
புல்லான் கண்ணின் நோக்கி புலி காண் கலையின் புலம்பி – சிந்தா:10 2196/3
சூர்த்துடன் வீழ நோக்கி சுடு சரம் சிதற வல்லான் – சிந்தா:10 2200/3
நடத்துவான் அவனை நோக்கி நகா சிலை பாரித்தானே – சிந்தா:10 2285/4
வெம் சமம் நோக்கி நின்று மிறைக்கொளி திருத்துவான் கண்டு – சிந்தா:10 2293/3
வில் வாள் அழுவம் பிளந்திட்டு வெகுண்டு நோக்கி
கொல் யானை உந்தி குடை மேலும் ஓர் கோல் தொடுத்தான் – சிந்தா:10 2319/3,4
புண் கொண்டு போற்றி புறம் செய்க என பொற்ப நோக்கி
பண் கொண்ட சொல்லார் தொழ பாம்பு அணை அண்ணல் போல – சிந்தா:11 2353/2,3
தார் பிணி தாம மார்பன் தம்பியை முகத்துள் நோக்கி
ஊர் பிணி கோட்டம் சீப்பித்து உறாதவன் ஆண்ட நாட்டை – சிந்தா:11 2372/2,3
போலும் ஆடியில் நோக்கி பொலம் கல – சிந்தா:12 2397/2
பூண் சுமக்கலாத பொன் ஞாண் வடத்தொடு புரள நோக்கி
பாண் குலாய் வண்டு பாடும் படு கணை மறந்து காமன் – சிந்தா:12 2443/2,3
வாள் மதர் மழை கண் நோக்கி வரு முலை தடமும் நோக்கி – சிந்தா:12 2447/1
வாள் மதர் மழை கண் நோக்கி வரு முலை தடமும் நோக்கி
காண் வர அகன்ற அல்குல் கண் விருப்புற்று நோக்கி – சிந்தா:12 2447/1,2
காண் வர அகன்ற அல்குல் கண் விருப்புற்று நோக்கி
பாணு வண்டு அரற்றும் கோல சிகழிகை படியும் நோக்கி – சிந்தா:12 2447/2,3
பாணு வண்டு அரற்றும் கோல சிகழிகை படியும் நோக்கி
ஆண் விருப்புற்று நின்றார் அம் வளை தோளினாரே – சிந்தா:12 2447/3,4
கோனார் மகள் தன் வடிவும் நோக்கி குடை மன்னர் – சிந்தா:12 2456/3
உள் உருக நோக்கி உயர் உழுத்து அகலும் ஏந்தி – சிந்தா:12 2488/3
நச்சு எயிற்று அரவின் நோக்கின் மன்னரை நடுங்க நோக்கி
வச்சிர வண்ணன் காப்ப வாழியர் ஊழி என்னா – சிந்தா:12 2494/1,2
மாதர் தன் வனப்பு நோக்கி மகிழ்ந்து கண் இமைத்தல் செல்லான் – சிந்தா:12 2506/1
பூவையும் கிளியும் கேட்டு புழை முகம் வைத்து நோக்கி
காவலன் மடந்தை உள்ளம் கல்-கொலோ இரும்பு-கொலோ – சிந்தா:12 2510/1,2
கன்னியர் ஆடி நோக்கி தம்மை தாம் கண்டு நாணி – சிந்தா:12 2538/3
முகில் கிழி மின்னின் நோக்கி முரிந்து இடை குழைந்து நின்றார் – சிந்தா:12 2540/4
கொற்றவி மகனை நோக்கி கூறினள் என்ப நும் கோக்கு – சிந்தா:13 2609/1
முன்னுபு கீழ் திசை நோக்கி மொய் மலர் – சிந்தா:13 2636/1
படிமம் போன்று இருப்ப நோக்கி பம்மை தான் சொல்லினாளே – சிந்தா:13 2642/4
நந்தட்டன் தன்னை நோக்கி நங்கையார் அடிகள் சொன்னார் – சிந்தா:13 2648/2
வேந்தனை சரண் என்று எய்த விம்முறு துயரம் நோக்கி
காய்ந்து பொன் சிவிறி ஏந்தி கார் மழை பொழிவது ஒத்தான் – சிந்தா:13 2660/3,4
கிடப்ப மற்று அரசன் நோக்கி கெட்டது உன் துகில் மற்று என்ன – சிந்தா:13 2666/3
வரவு நோக்கி வயா மரங்கள் இலை ஊழ்த்து இணர் ஈன்று அலர்ந்தனவே – சிந்தா:13 2690/4
பிடி மகிழ்ந்து ஓப்ப நின்ற பெரும் களிற்று அரசு நோக்கி
வடி மதர் மழை கண் நல்லார் மன்னனை மகிழ்ந்து நின்றார் – சிந்தா:13 2715/3,4
ஈகு இனி என்னை நோக்கி எவன் செய்தி எனக்கு வாழ்நாள் – சிந்தா:13 2723/1
நன் கனி சிலதன் உண்ண நச்சு வேல் மன்னன் நோக்கி
என்பொடு மிடைந்த காமம் இழிபொடு வெறுத்து நின்றான் – சிந்தா:13 2725/2,3
மெள்ளவே புருவம் கோலி விலங்கி கண் பிறழ நோக்கி
முள் எயிறு இலங்க செ வாய் முறுவல் தூது ஆதி ஆக – சிந்தா:13 2732/1,2
நா புடை பெயர்த்தல் ஆற்றார் நயந்து நீர் வேட்டு நோக்கி
பூ புடை அணிந்த பொய்கை புக்கு நீர் உண்ணல் உற்றால் – சிந்தா:13 2772/1,2
தம்மை நிழல் நோக்கி தாங்கார் மகிழ் தூங்கி – சிந்தா:13 2790/1
வெம் கடை மழை கண் நோக்கி வெய்துற திரண்ட அன்றே – சிந்தா:13 2801/4
தூக்கி இ இரண்டும் நோக்கி தொல் வினை என்று தேறி – சிந்தா:13 2825/3
நூல் கதி கொண்டு கண்ணால் நுகத்து அளவு எல்லை நோக்கி
மேல் கதிக்கு ஏணி ஆய விழுத்தவர் மனையில் வந்தால் – சிந்தா:13 2826/2,3
கோல் வளையாமல் காத்து உன் குடை_நிழல் துஞ்ச நோக்கி
நூல் விளைந்து அனைய நுண் சொல் புலவரோடு அறத்தை ஓம்பின் – சிந்தா:13 2906/2,3
வாய் அழல் உயிர்க்கும் ஆழி மன்னவன் குறிப்பு நோக்கி
வேய் அழ திரண்ட மென் தோள் வெம் முலை பரவை அல்குல் – சிந்தா:13 2923/1,2
தனி சித்தம் வைத்தல் தேற்றாம் தளர்ந்து கண் பரப்பி நோக்கி
பனித்தும் என்று உற்ற-போழ்தே பழுது இலா அறிவின் என் ஆம் – சிந்தா:13 2939/3,4
பாம்பு உடைய நோக்கி பதுமை பவள வாய் – சிந்தா:13 2958/2
இல் எலி பார்த்து நோக்கி இறப்பின் கீழ் இருத்தல் உண்டே – சிந்தா:13 2985/2
திருந்திய கீழ் திசை நோக்கி செவ்வனே – சிந்தா:13 3030/1
நும் கடை நோக்கி நாம் வாழும் வாழ்க்கையம் – சிந்தா:13 3033/3
கண் வெறி போக ஆங்கு ஓர் கடும் தவன் உருவம் நோக்கி
ஒண் நெறி ஒருவி கோமான் ஒளி திரண்டு இருந்ததாம்-கொல் – சிந்தா:13 3054/1,2

TOP


நோக்கிய (1)

பாதம் நோக்கிய பால் மதி வாள் முகம் – சிந்தா:12 2498/3

TOP


நோக்கியர் (5)

மடங்கல் நோக்கியர் வாள் முகம் போலும் என்று – சிந்தா:3 529/2
மானின் நோக்கியர் நோக்கி வழி-தொறும் ஈவது அ வழியே – சிந்தா:7 1562/4
மான் அயா நோக்கியர் மருங்குல் போல்வது ஓர் – சிந்தா:7 1822/1
மானை நோக்கியர் வாய் மது ஆடின – சிந்தா:12 2578/2
மான் அறா மட நோக்கியர் என்பவே – சிந்தா:13 2674/4

TOP


நோக்கியும் (1)

கூறியும் குளிர் நாடகம் நோக்கியும்
ஊறு இன் வெம் முலையால் உழப்பட்டும் அ – சிந்தா:5 1351/2,3

TOP


நோக்கியே (1)

நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே
மகிழ்ந்து வீழ் மணி குழல் மாலை கால் தொடும் – சிந்தா:4 1004/1,2

TOP


நோக்கில் (3)

பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய் – சிந்தா:1 209/2
பணிவரும் சிங்க நோக்கில் பணை எருத்து உறழ நோக்கி – சிந்தா:7 1569/2
அம் கையும் அடியும் நோக்கில் தாமரை அலர்ந்தது ஒக்கும் – சிந்தா:13 2801/1

TOP


நோக்கிற்று (1)

ஒட்டி யான் நோக்கிற்று என்றான் ஒரு பிடி நுசுப்பினாட்கே – சிந்தா:9 2085/4

TOP


நோக்கின் (21)

வெம் கண் நோக்கின் குப்பாய மிலேச்சனை – சிந்தா:2 431/2
இழுது ஒன்று வாள் கண் இளையார் இளையார்-கண் நோக்கின்
பழுது இன்றி மூழ்கும் பகழி தொழில் வல்ல காளை – சிந்தா:2 445/1,2
மருளி மான் பிணை நோக்கின் நல்லார் முகத்து – சிந்தா:3 532/3
சேல் கடை மதர்வை நோக்கின் சில் அரி தடம் கண் நங்கை – சிந்தா:3 554/3
மென் புனம் மருளின் நோக்கின் மான் இனம் ஆதி ஆக – சிந்தா:3 564/3
வெய்ய நோக்கின் விச்சாதரியே-கொலோ – சிந்தா:3 639/2
வெந்தனம் மனம் என வெள்ளை நோக்கின் முள் எயிற்று – சிந்தா:4 1099/1
மான் சென்ற நோக்கின் மாதே மாய்ந்து போம் மக்கள் யாக்கை – சிந்தா:5 1390/3
சொரிந்தவை தொகுத்து நோக்கின் தொடு கடல் வெள்ளம் ஆற்றா – சிந்தா:5 1391/2
மாவடு மருட்டும் நோக்கின் மதி முகம் மழை கண் மாசு இல் – சிந்தா:6 1455/1
தன்னை யான் முகத்தை நோக்கின் தான் முலை முகத்தை நோக்கும் – சிந்தா:7 1626/1
மான் நக்க நோக்கின் மடவார் தொழ மைந்தர் ஏத்த – சிந்தா:7 1866/3
மா உண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கி – சிந்தா:8 1965/3
மை பூத்து அலர்ந்த மழை கண் மாழை மான் நேர் நோக்கின்
கொய் பூம் கோதை மடவார் கொற்றம் கொள்க என்று ஏத்த – சிந்தா:10 2198/1,2
மான் வயிறு ஆர்ந்து நோக்கும் வெருவுறு மருளின் நோக்கின்
தேன் வயிறு ஆர்ந்த கோதை தீம் சொலார் கண்கள் போலும் – சிந்தா:10 2290/1,2
வண்ணித்தல் ஆவது இல்லா வரு முலை மதர்வை நோக்கின்
பெண் உடை பேதை நீர்மை பெரும் தடம் கண்ணிற்று அம்மா – சிந்தா:12 2458/3,4
நச்சு எயிற்று அரவின் நோக்கின் மன்னரை நடுங்க நோக்கி – சிந்தா:12 2494/1
வெள்ளைமை கலந்த நோக்கின் கிண்கிணி மிழற்றி ஆர்ப்ப – சிந்தா:12 2529/1
மான் மட நோக்கின் மாதர் மாலை நாள் பயந்த மைந்தன் – சிந்தா:13 2912/2
உருவினோடு ஒளியும் நோக்கின் ஒப்புமை உலகின் இல்லை – சிந்தா:13 3058/2
மருவினார் இமைத்து நோக்கின் மனம் பிறிது ஆகி நிற்பார் – சிந்தா:13 3058/3

TOP


நோக்கின (1)

பிறங்கிய உறுப்பின் மேல் பெரிய நோக்கின
கறங்கு இசை மணி முழா எருத்தம் காண்தகு – சிந்தா:6 1461/2,3

TOP


நோக்கினரே (1)

கண் மல்கு நீரார் முக முகங்கள் நோக்கினரே – சிந்தா:7 1808/4

TOP


நோக்கினவர் (1)

மாதுபடு நோக்கினவர் அவர் வாள் கண் வடு உற்ற – சிந்தா:3 499/2

TOP


நோக்கினள் (1)

படத்து-இடை பாவை போன்று ஓர் நோக்கினள் ஆகி நிற்ப – சிந்தா:7 1573/2

TOP


நோக்கினள்-மாதோ (1)

மன் ஆர்ந்து மதர்ப்பொடு நோக்கினள்-மாதோ – சிந்தா:4 1072/4

TOP


நோக்கினன் (1)

நுண் நவிர் அறுவையன் நொசிந்த நோக்கினன்
கண் நவிர் குடையினன் கைத்தண்டு ஊன்றினன் – சிந்தா:9 2010/2,3

TOP


நோக்கினார் (9)

உண்டு என தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம் – சிந்தா:1 172/3
கருதி வந்தது என்று தம் கண்கள் கொண்டு நோக்கினார் – சிந்தா:3 706/4
நொந்து வைத்து நூபுரம் ஒலிப்ப ஓடி நோக்கினார் – சிந்தா:4 1099/4
நூல் மலிந்த நுண் நுசுப்பு நோவ வந்து நோக்கினார் – சிந்தா:4 1105/4
ஐயம் உற்று எவர்களும் அமர்ந்து நோக்கினார் – சிந்தா:5 1263/4
கோவனும் மக்களும் குளிர்ந்து தோள் நோக்கினார்
ஓ என வையகத்து ஓசை போய் உயர்ந்ததே – சிந்தா:7 1843/3,4
மான் நிரை இனம் மருளும் நோக்கினார்
ஊன் உயிர் உணும் ஒருவன் ஆயினான் – சிந்தா:12 2520/3,4
மாழை நோக்கினார் மேனி மாசு கொண்டு – சிந்தா:13 3120/3
மாது அணிந்த நோக்கினார் அல்குல் காசும் மணி மழலை கிண்கிணியும் சிலம்பும் ஏங்க – சிந்தா:13 3136/3

TOP


நோக்கினாரும் (1)

மான் அமர் நோக்கினாரும் மைந்தரும் குழீஇய போருள் – சிந்தா:10 2281/3

TOP


நோக்கினாரை (1)

ஒரு மகள் நோக்கினாரை உயிரொடும் போகொடாத – சிந்தா:10 2177/2

TOP


நோக்கினால் (1)

கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்து காதல் நீர் – சிந்தா:1 180/3

TOP


நோக்கினாள் (6)

புது தளிர் அனையவள் புலந்து நோக்கினாள் – சிந்தா:4 1014/4
தேம்பா எழுத்து ஓலை செவ்வனே நோக்கினாள் – சிந்தா:4 1040/4
நோக்கினாள் நெடும் கண் என்னும் குடங்கையால் நொண்டு கொண்டு – சிந்தா:5 1258/1
நோக்கினாள் நிறையும் நாணும் மாமையும் கவினும் நொய்தில் – சிந்தா:5 1291/1
போழ்ந்து அகன்ற கண்ணி வந்து பூம் கொடியின் நோக்கினாள் – சிந்தா:8 1958/4
தே மலர் மார்பினானை நோக்கினாள் செல்வன் மற்று அ – சிந்தா:10 2133/3

TOP


நோக்கினாளே (2)

காண் வரு குவளை கண்ணால் காளை மேல் நோக்கினாளே – சிந்தா:5 1257/4
குடங்கையின் நெடிய கண்ணால் குமரன் மேல் நோக்கினாளே – சிந்தா:5 1290/4

TOP


நோக்கினான் (6)

நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான்
ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே – சிந்தா:1 321/3,4
கிடந்த ஞானத்து எல்லையை கிளக்கல் உற்று நோக்கினான் – சிந்தா:3 716/4
உயிர் அனானை நினைந்தான் உற்றது ஓதியின் நோக்கினான்
மயில் அனார்க்கு படி வைத்தவன் மால் விசும்பு ஏறினான் – சிந்தா:4 1156/3,4
அணி தகை உடம்பு எனக்கு அருளி நோக்கினான்
கணிப்பு அரும் குண தொகை காளை என்றனன் – சிந்தா:5 1172/2,3
உட்பட உரைத்தனன் உறுதி நோக்கினான் – சிந்தா:5 1216/4
சிறந்த செல்வனும் சிந்தையின் நோக்கினான் – சிந்தா:5 1325/4

TOP


நோக்கினானே (2)

நின்று இரண்டு உருவம் ஓதி நேர் முகம் நோக்கினானே – சிந்தா:5 1289/4
முகில் கிழி மதியம் போலும் முனி குழாம் நோக்கினானே – சிந்தா:13 3053/4

TOP


நோக்கினில் (1)

உற்ற நோக்கம் உறாதது ஓர் நோக்கினில்
சுற்றி வள்ளலை சோர்வு இன்றி யாத்திட்டாள் – சிந்தா:5 1295/2,3

TOP


நோக்கினின் (1)

உள் நீர்மை எல்லாம் ஒரு நோக்கினின் கவர்ந்த – சிந்தா:8 1968/3

TOP


நோக்கினீர் (1)

நோக்கினீர் என்னை என்றான் நுதி அழல் குட்டம் ஒப்பான் – சிந்தா:7 1727/4

TOP


நோக்கினும் (1)

எங்கெங்கே நோக்கினும் அங்கங்கே தோன்றுமே – சிந்தா:8 1971/4

TOP


நோக்கீர் (1)

வருந்துமால் என்று நோக்கீர் வாடுமால் ஆவி என்னீர் – சிந்தா:13 2947/3

TOP


நோக்கு (12)

கண் நோக்கு உடைந்து கடி_மாடம் அடைந்தவாறும் – சிந்தா:0 13/4
நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன் – சிந்தா:1 148/3
நோக்கு அணங்கு அனையார் நுகர்வு எய்தலின் – சிந்தா:4 871/2
அரியல் ஆர்ந்து அமர்த்தலின் அனந்தர் நோக்கு உடை – சிந்தா:5 1249/1
நாறு பூம் கொம்பு அனாளை நோக்கு என நம்பி சொன்னான் – சிந்தா:5 1284/4
வாள் கண் நோக்கு எனும் வை எயிற்று ஆர் அழல் – சிந்தா:5 1292/3
நோக்கு அணங்காய் மனநோய் செய நொந்து அவன் – சிந்தா:6 1473/2
ஏதின்மைபட கரந்திட்ட வாள் கண் நோக்கு
ஓத நீர் அமுதமும் உலகும் விற்குமே – சிந்தா:6 1485/3,4
கொங்கு உண் குழல் தாழ கோட்டு எருத்தம் செய்த நோக்கு
எங்கெங்கே நோக்கினும் அங்கங்கே தோன்றுமே – சிந்தா:8 1971/3,4
நோக்கு ஒழிந்து ஒடுங்கினீர்க்கும் நோய் கொள சாம்பினீர்க்கும் – சிந்தா:11 2376/1
வெண் நுரை உடுத்து நின்றார் வேந்தன் நோக்கு உண்ண நின்றார் – சிந்தா:13 2663/4
உலவு கண் மலர் ஊடல் செவ்வி நோக்கு
இலை கொள் பூணினார் இதயம் போழ்ந்ததே – சிந்தா:13 3123/3,4

TOP


நோக்கு-மின் (1)

நும்முடை திருவும் தேசும் நோக்கு-மின் கொள்வல் என்றான் – சிந்தா:3 771/4

TOP


நோக்கு-மினே (1)

நூல் அவையார் போல் நீங்கள் நோக்கு-மினே என்றாள் – சிந்தா:4 1045/4

TOP


நோக்குகிற்பார் (1)

விழித்து யார் நோக்குகிற்பார் பிள்ளையார் கண்ணுள் காக்கை – சிந்தா:7 1584/3

TOP


நோக்குகின்றான் (2)

மன்னிய குருசில் கொண்டு மரபினான் நோக்குகின்றான் – சிந்தா:3 842/4
பொருந்தார் பொறியை புறம் நீக்குபு நோக்குகின்றான் – சிந்தா:7 1872/4

TOP


நோக்குநர் (2)

நுண்ணிய வரியொடு திரண்டு நோக்குநர்
கண் மனம் கவற்றிய காமர் தொண்டை வாய் – சிந்தா:7 1702/1,2
நுதி முகம் முத்தம் சூடி நோக்குநர் ஆவி வாட்ட – சிந்தா:13 2838/3

TOP


நோக்கும் (12)

நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சி பூ போல் – சிந்தா:2 461/3
கடுகிய இளையர் நோக்கும் கண்ணிய பொருளும் எண்ணி – சிந்தா:4 1086/1
சூழ் வளை தோளி செம்பொன் தூணையே சார்ந்து நோக்கும்
ஊழ்படு காதலானை ஒரு பிடி நுசுப்பினாளே – சிந்தா:6 1452/3,4
உலம் கொள் தோள் உறு வலி நோக்கும் ஒத்தவே – சிந்தா:6 1471/4
தன்னை யான் முகத்தை நோக்கின் தான் முலை முகத்தை நோக்கும்
பின்னை யான் பலவும் பேசில் தான் ஒன்று மிழற்றும் பைம் பூண் – சிந்தா:7 1626/1,2
கொண்டு கோதை மலர் எழுத்து மெல் விரலின் மேல் தாங்கி நோக்கும்
வண்டு சேர்ந்த குழலாள் வரும் முலைகள் பாய வண் தார் – சிந்தா:7 1655/1,2
விருந்தினராய் வந்தாரை வெற்று உடலாம் நோக்கும்
பெரும் திருவி யார் மகள்-கொல் பேர் யாதாம்-கொல்லோ – சிந்தா:8 1969/3,4
அன்னம் மெல் நடையும் நோக்கும் சாயலும் அணியும் ஏரும் – சிந்தா:9 2100/1
மான் வயிறு ஆர்ந்து நோக்கும் வெருவுறு மருளின் நோக்கின் – சிந்தா:10 2290/1
வான் ஆர் மதி வாள் முகமும் மட மான் மதர் நோக்கும்
கோனார் மகள் தன் வடிவும் நோக்கி குடை மன்னர் – சிந்தா:12 2456/2,3
சீர் நிறைய வரை அகலம் திருத்த திரு நோக்கும்
வார முறை கருவி வடக்கு இருந்தன கண் மாதோ – சிந்தா:12 2489/3,4
ஏதிலான் முகம் நோக்கும் இளிவினும் – சிந்தா:12 2498/2

TOP


நோக்குமே (2)

இரவி என்ன விளங்கும் ஒளி இறைவன் கொண்டு ஆங்கு அது நோக்குமே – சிந்தா:12 2586/4
அங்காந்து அழுகின்றது ஆர் கண்ணே நோக்குமே – சிந்தா:13 2781/4

TOP


நோக்குவார் (1)

பின்னும் முன்னும் நோக்குவார் பேது சால எய்துவார் – சிந்தா:9 2036/3

TOP


நோக்குவாள் (1)

உழல் எனா நோக்குவாள் மதி கண்டு ஊடினாள் – சிந்தா:13 2677/4

TOP


நோக்குவேற்கு (1)

கூட நீர் நின்ற பெற்றி கண்டு இப்பால் நோக்குவேற்கு ஓர் – சிந்தா:7 1751/1

TOP


நோக்கொடு (1)

நறை வெல்லும் நாக மாலை நோக்கொடு பூ கொண்டானே – சிந்தா:3 668/4

TOP


நோக்கோடு (1)

நுண் தூவி இளம் சேவல் நோக்கோடு விளி பயிற்றி – சிந்தா:3 649/3

TOP


நோதல் (1)

சாம் எனில் சாதல் நோதல் தன்னவன் தணந்த-காலை – சிந்தா:7 1598/1

TOP


நோதலும் (1)

நோதலும் பரிவும் எல்லாம் நுண் உணர்வு இன்மை அன்றே – சிந்தா:1 269/3

TOP


நோம் (6)

நோற்றிலர் மகளிர் என்பார் நோம் கண்டீர் தோள்கள் என்பார் – சிந்தா:4 1109/1
நோம் என் நெஞ்சம் என நோக்கி நின்றாள் சிறைப்பட்ட தன் – சிந்தா:4 1151/3
புல்லும் போழ்தின் நும் பூண் உறின் நோம் என – சிந்தா:5 1363/1
வண்டு ஊத அம் மருங்குல் நோம் என்று பூ மாலை – சிந்தா:7 1700/1
காலும் மிக நோம் சிறிது கண்ணும் துயில்குற்றேன் – சிந்தா:9 2029/3
மெய்ப்படு தாரை வீழின் நோம் இவட்கு என்ன அஞ்சி – சிந்தா:13 2665/1

TOP


நோய் (41)

குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய் – சிந்தா:1 253/4
மருள் உடை மாதர் உற்ற மம்மர் நோய் மறைந்தது அன்றே – சிந்தா:1 304/4
விம்முறு விழும வெம் நோய் அவண் உறை தெய்வம் சேர – சிந்தா:1 315/1
தம் உறு விழும வெம் நோய் தம் துணைக்கு உரைத்து நிற்பார் – சிந்தா:2 465/4
ஒரு நலம் கவின் ஊட்ட உண்டு நோய் நான்கும் நீங்கி – சிந்தா:3 720/3
கன்னியர் உற்ற நோய் கண் அனார்க்கும் அஃது – சிந்தா:4 1028/1
மன்னும் யான் உணரலேன் மாதர் உற்ற நோய்
துன்னி நீ அறிதியோ தோன்றல் என்றதே – சிந்தா:4 1028/3,4
விடுந்த சிறு கிளியால் விம்மல் நோய் தீர்ந்தேன் – சிந்தா:4 1041/3
காலனை சூழ்ந்த நோய் போல் நபுல மா விபுலர் சூழ – சிந்தா:4 1144/1
பிணி குலத்து அக-வயின் பிறந்த நோய் கெடுத்து – சிந்தா:5 1172/1
ஒருங்கு நோய் தீர்ப்பது ஒன்று அமிர்தம் அல்லது ஒன்று – சிந்தா:5 1204/3
பகைய வாய் படர் நோய் பயக்கின்றவே – சிந்தா:5 1307/4
அண்ணல் அவ்வழி ஆழ் துயர் நோய் உற – சிந்தா:5 1309/1
பரிவு ஒன்றிலிரால் படர் நோய் மிகுமால் – சிந்தா:5 1377/3
நோய் முதிர் குரங்கு போல நுகர்ச்சி நீர் நோக்கல் வேண்டா – சிந்தா:6 1435/1
துன்னி நோய் உற்ற மஞ்ஞை தோற்றம் போல் இருந்த நங்கை – சிந்தா:7 1743/3
ஆய்ந்தவன் சிறப்பு செய்தான் அவல நோய் அவரும் தீர்ந்தார் – சிந்தா:7 1864/4
ஒன்றே உலகத்து உறு நோய் மருந்து இல்லது என்றாள் – சிந்தா:8 1962/4
காம கடு நோய் கனல் சூழ்ந்து உடம்பு என்னும் மற்று இ – சிந்தா:8 1966/1
நாவி நோய் செய்த நறும் குழலாள் நாண் நீல – சிந்தா:8 1967/1
காவி நோய் செய்த கரும் கயல் கண் பூம் கொடி என் – சிந்தா:8 1967/2
ஆவி நோய் செய்த அணங்கு என்று அறியாதேன் – சிந்தா:8 1967/3
மேவி நோய் தீர வினா தருவார் இல்லையே – சிந்தா:8 1967/4
புள்ளி வாழ் அலவன் பொறி வரி கமம் சூல் ஞெண்டினுக்கு உய்த்து நோய் தணிப்பான் – சிந்தா:10 2109/2
நோக்கு ஒழிந்து ஒடுங்கினீர்க்கும் நோய் கொள சாம்பினீர்க்கும் – சிந்தா:11 2376/1
மருள்கலாதவர்களும் மருள்வர் மம்மர் நோய்
இருள் இலார் எங்ஙனம் உய்வர் இன்னதால் – சிந்தா:12 2448/2,3
வெம் தடி தின்ற வெம் நோய் வேகத்தால் மீட்டு மாலை – சிந்தா:13 2765/1
வீர நோய் வெகுளி தோற்றி விழுப்பு அற அதுக்கி இட்டு – சிந்தா:13 2771/2
வீழ் பிடிகள் சிந்தித்தும் வெம் நோய் தம் உள் சுட வெந்து – சிந்தா:13 2785/3
எல்லாம் கிளை பிரித்திட்டு ஏமுறு நோய் செய்பவே – சிந்தா:13 2788/4
அட்டும் உயவு நோய் அல்லா பிற நோயும் – சிந்தா:13 2798/3
இப்படித்து இது என்று அஞ்சி பிறவி நோய் வெருவினானே – சிந்தா:13 2881/3
அல்லல் நோய் உற்றாளுக்கு அன்று களிறு அடர்த்து – சிந்தா:13 2957/2
பிண்டியின் கொழு நிழல் பிறவி நோய் கெட – சிந்தா:13 3013/1
வெய்ய வெம் நோய் வினை உதைப்ப வீழ்ந்து துன்ப கடல் அழுந்தி – சிந்தா:13 3019/3
நில விலகி உயிர் ஓம்பி நிமிர்ந்து ஒளிர்ந்து பசி பகை நோய்
உலகம் இருள் கெட விழிக்கும் ஒண் மணி அறவாழி – சிந்தா:13 3023/1,2
பிளிறி வீழ் பேடி பெண் நோய் அறு வகை துவர்ப்பும் பேசின் – சிந்தா:13 3076/3
தா வினை இன்றி வெம் நோய் கதிகளுள் தவழும் என்ற – சிந்தா:13 3098/3
வேட்கையை மிகுத்து வித்தி பிறவி நோய் விளைத்து வீயா – சிந்தா:13 3106/2
தேள் கையில் கொண்டது ஒக்கும் நிச்சம் நோய் செற்ற புன் தோல் – சிந்தா:13 3106/3
நெருப்பு உயிர்க்கு ஆக்கி நோய் செய்யின் நிச்சமும் – சிந்தா:13 3108/1

TOP


நோய்க்கு (1)

இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகள் ஆவார் – சிந்தா:1 252/4

TOP


நோய்களும் (1)

கடும் திறல் நோய்களும் கெடுக்கும் வேண்டிய – சிந்தா:5 1218/3

TOP


நோய்களையும் (1)

காலனொடு சூழ்ந்த கடு நோய்களையும் ஒப்பார் – சிந்தா:10 2165/1

TOP


நோய்செய்வான் (1)

மழை கண் மாதரை மாலுறு நோய்செய்வான்
முழை-கண் வாள் அரி ஏறு அன மொய்ம்பினான் – சிந்தா:9 2004/2,3

TOP


நோயில் (1)

கிளைநரில் பிரிவும் நோயில் காலத்து நோயும் நோக்கி – சிந்தா:5 1394/2

TOP


நோயின் (1)

மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ – சிந்தா:1 311/4

TOP


நோயினுள் (1)

நோவது பெரிதும் துன்ப நோயினுள் பிறத்தல் துன்பம் – சிந்தா:13 2811/3

TOP


நோயும் (5)

வாடியவாறு நோயும் உரைத்து வார் கொடி அனாளே – சிந்தா:3 683/4
கிளைநரில் பிரிவும் நோயில் காலத்து நோயும் நோக்கி – சிந்தா:5 1394/2
பொன்றுக பசியும் நோயும் பொருந்தல் இல் பகையும் என்ன – சிந்தா:11 2375/3
பருவரு பகையும் நோயும் பசியும் கெட்டு ஒழிய இப்பால் – சிந்தா:11 2377/3
அட்டும் உயவு நோய் அல்லா பிற நோயும்
பட்டார் உறு துன்பம் பன்னி சொலலாமோ – சிந்தா:13 2798/3,4

TOP


நோயுறு (1)

ஒன்று உண்டாயிற்று அவள் உள் அழி நோயுறு காளையை – சிந்தா:4 1159/3

TOP


நோயே (1)

நோயே முலை சுமப்பது என்றார்க்கு அருகு இருந்தார் – சிந்தா:3 652/3

TOP


நோயேன் (1)

பிணி செய் நோயேன் யான் கிடப்ப பிறர்-வாய் அது கேட்டலும் – சிந்தா:7 1589/2

TOP


நோயொடும் (1)

பருகினேற்கு ஒளித்து நீ பசலை நோயொடும்
உருகி போய் இன்னும் அற்று உளை என்று உள் சுட – சிந்தா:13 2678/1,2

TOP


நோயோடே (1)

நொந்தேன் பல-காலும் நோயோடே வீகின்றேன் – சிந்தா:7 1806/3

TOP


நோவ (16)

நும் அனைமார்களை நோவ அதுக்கி – சிந்தா:2 425/2
மின் இவர் நுசுப்பு நோவ விடலையை காண ஓடி – சிந்தா:2 457/3
நோவ என் உள்ளம் யாத்தாய் நின்னையும் மாலையாலே – சிந்தா:3 714/3
நுண் தார் பசுங்கிளியை நோவ அகட்டு ஒடுக்கி – சிந்தா:4 1039/3
நூல் மலிந்த நுண் நுசுப்பு நோவ வந்து நோக்கினார் – சிந்தா:4 1105/4
மருங்குல் நோவ வளர்ந்த வன முலை – சிந்தா:5 1372/3
நுன சீறடி நோவ நடந்து செலேல் – சிந்தா:6 1517/1
ஊட்டு அரக்கு உண்ட செந்தாமரை அடி நோவ என்றாள் – சிந்தா:8 1913/4
நூலின் நேர் நுசுப்பு நோவ உச்சி மாலை உள்ளவாம் – சிந்தா:8 1954/3
பாவம் இது நோவ உரையன்-மின் முது பார்ப்பார் – சிந்தா:9 2016/1
இட்டு இடை நோவ நில்லாது எழுக என ஏந்தல் தோழன் – சிந்தா:9 2058/2
செருக்கு அற்ற பஞ்சி மலர் சீறடி நோவ சென்றார் – சிந்தா:11 2339/4
நுண் கேழ் நுசுப்பின் மடவீர் நும்மை நோவ செய்யேன் – சிந்தா:11 2346/2
நாண் சுமக்கலாத நங்கை நகை மின்னு நுசுப்பு நோவ
பூண் சுமக்கலாத பொன் ஞாண் வடத்தொடு புரள நோக்கி – சிந்தா:12 2443/1,2
நுண் சாந்து அரைப்பார் போல் நோவ முழங்கையால் – சிந்தா:13 2795/3
மின்னின் இடை நோவ மிளிர் மேகலைகள் மின்ன – சிந்தா:13 2921/2

TOP


நோவது (2)

நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழி-மின் என துறந்தாள் – சிந்தா:1 352/4
நோவது பெரிதும் துன்ப நோயினுள் பிறத்தல் துன்பம் – சிந்தா:13 2811/3

TOP


நோற்கும் (2)

வெம் சினம் குறைந்து நீங்க விழு தவம் தொடங்கி நோற்கும்
வஞ்சம் இல் கொள்கையாற்கு பாவம் வந்து அடைந்தது ஆக – சிந்தா:1 396/1,2
தவம் புரிந்து அடங்கி நோற்கும் தத்துவர் தலைப்பட்டு ஓம்பி – சிந்தா:3 605/1

TOP


நோற்ப (1)

சொல்லிய வகையின் நோற்ப துணியும் வெம் வினைகள் என்னின் – சிந்தா:6 1430/2

TOP


நோற்பல் (1)

நோற்பல் நோற்றனை நீ என ஏகினாள் – சிந்தா:4 899/4

TOP


நோற்பவர்க்கு (1)

நோற்பவர்க்கு உரிய ஆகும் நோன்-மின் நீரும் என்றான் – சிந்தா:13 2986/4

TOP


நோற்பான் (1)

பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான் – சிந்தா:1 408/4

TOP


நோற்ற (4)

வீரன் தாள் நிழல் விளங்க நோற்ற பின் – சிந்தா:2 409/2
மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில் – சிந்தா:4 1005/2
துகள் மனத்து இன்றி நோற்ற தொல் வினை பயத்தின் அன்றே – சிந்தா:4 1052/1
ஓசை போய் உலகு உண்ண நோற்ற பின் – சிந்தா:13 3121/2

TOP


நோற்றல் (1)

நெறியினால் நோற்றல் என்றோ நீள் எரி புகுதல் ஒன்றோ – சிந்தா:7 1706/3

TOP


நோற்றலாள் (1)

செய்வது என் நோற்றிலாதேன் நோற்றலாள் திறத்தின் என்று – சிந்தா:9 2072/3

TOP


நோற்றவாறும் (1)

வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்றவாறும் – சிந்தா:0 10/4

TOP


நோற்றவே (1)

அடி மலர் தாமரை சிலம்பு நோற்றவே – சிந்தா:4 1005/4

TOP


நோற்றன (1)

புடை திரள் வன முலை பூணும் நோற்றன
அடி மலர் தாமரை சிலம்பு நோற்றவே – சிந்தா:4 1005/3,4

TOP


நோற்றனள் (2)

நோற்றனள் நங்கை மைந்தன் இள நலம் நுகர்தற்கு என்பார் – சிந்தா:3 702/2
பாவையே நோற்றனள் பாரின் மேல் என்மரும் – சிந்தா:7 1843/2

TOP


நோற்றனை (1)

நோற்பல் நோற்றனை நீ என ஏகினாள் – சிந்தா:4 899/4

TOP


நோற்றாள் (1)

பிழி பொலி கோதை போல் ஆம் பெண்டிரில் பெரியள் நோற்றாள்
சுழித்து நின்று அறாத கற்பின் சுநந்தையே ஆக என்பார் – சிந்தா:12 2551/3,4

TOP


நோற்றான் (1)

குரல் சிலம்பு ஒலிப்ப சென்னி குஞ்சி மேல் மிதிப்ப நோற்றான்
திருக்குலாய் கிடந்த மார்பின் சீவகன் நாங்கள் எல்லாம் – சிந்தா:12 2459/2,3

TOP


நோற்றானும் (1)

நொந்து ஆங்கு அழ முயன்று நோற்றானும் எய்துவனே – சிந்தா:4 1036/4

TOP


நோற்றிட்டு (2)

பட நாகம் தோல் உரித்தால் போல் துறந்து கண்டவர் மெய் பனிப்ப நோற்றிட்டு
உடன் ஆக ஐம்பொறியும் வென்றார்க்கு உவந்து ஈதல் தானமாகும் – சிந்தா:6 1546/1,2
ஆக நோற்றிட்டு அடங்கல் ஆண்மைக்கு அழகு என்பவே – சிந்தா:7 1657/4

TOP


நோற்றிலர் (1)

நோற்றிலர் மகளிர் என்பார் நோம் கண்டீர் தோள்கள் என்பார் – சிந்தா:4 1109/1

TOP


நோற்றிலாதேன் (1)

செய்வது என் நோற்றிலாதேன் நோற்றலாள் திறத்தின் என்று – சிந்தா:9 2072/3

TOP


நோற்று (5)

நோற்று அவன் வலையை நீங்கி நுகர்ச்சியில் உலகம் நோக்கி – சிந்தா:1 376/3
வேய் முதிர் வனத்தின் வென்றான் உருவொடு விளங்க நோற்று
போய் முதிர் துறக்கத்து இன்பம் பருகுவ புரி-மின் என்றான் – சிந்தா:6 1435/3,4
பொறி தவ நெருங்க நோற்று புகர் அற நிறைந்த கொள்கை – சிந்தா:7 1818/1
கலி அது பிறவி கண்டாம் காலத்தால் அடங்கி நோற்று
நலிவு இலா உலகம் எய்தல் நல்லதே போலும் என்றான் – சிந்தா:13 2727/3,4
கொல்லை சூழ் குன்றத்து உச்சி குருசில் நோற்று உயர்ந்தவாறும் – சிந்தா:13 3062/2

TOP


நோன் (10)

கள் அணி மாலை மோந்து கனை கழல் இலங்கும் நோன் தாள் – சிந்தா:3 614/2
நுரைத்து நோன் சிறை வண்டொடு தேன் இனம் – சிந்தா:4 970/3
நொசி தவன் சொற்கள் என்றும் நோன் புணை தழுவி நெஞ்சில் – சிந்தா:4 1132/3
வணங்கு நோன் சிலை வார் கணை காமனோ – சிந்தா:5 1311/1
நடு ஒசி நோன் சிலை புருவத்தால் புடைத்து – சிந்தா:6 1482/2
பரு சுதர் பவழம் நோன் தாழ் பல் மணி கதவு சேர்ந்தான் – சிந்தா:6 1504/4
கழல் அவாய் கிடந்த நோன் தாள் காளை தன் காதலாரை – சிந்தா:7 1865/1
வணங்கு நோன் சிலை என வளைந்த யாக்கையன் – சிந்தா:9 2009/2
புரி கழல் அணிந்த நோன் தாள் போதனபுரத்து வேந்தன் – சிந்தா:10 2189/2
திரை செய் தென் கடல் இட்டது ஓர் நோன் கழி சிவணி – சிந்தா:13 2749/2

TOP


நோன்-மின் (1)

நோற்பவர்க்கு உரிய ஆகும் நோன்-மின் நீரும் என்றான் – சிந்தா:13 2986/4

TOP


நோன்மை (1)

நொந்தார் குடி செல்வர் நோன்மை நுகம் பூண்டார் – சிந்தா:13 2794/4

TOP


நோனான் (4)

கை முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான் – சிந்தா:1 282/4
அடு களிற்று அசனி வேகம் அலமர அதனை நோனான் – சிந்தா:10 2145/4
ஆடு எழு அனைய திண் தோள் அவந்தியன் அதனை நோனான்
நாடு எழுந்து ஆர்ப்ப மற்று அ நன் சிலை முறித்திட்டு அம்பை – சிந்தா:10 2185/2,3
பெரு வலி அதனை நோனான் பிண்டிபாலத்தை ஏந்தி – சிந்தா:10 2269/1

TOP