நொ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நொச்சி (1)

நொச்சி மா மலர் நிறத்தன நொடி வரும் முந்நீர் – சிந்தா:10 2163/1

TOP


நொசி (1)

நொசி தவன் சொற்கள் என்றும் நோன் புணை தழுவி நெஞ்சில் – சிந்தா:4 1132/3

TOP


நொசித்த (1)

நுண் துகில் அகல் அல்குல் நொசித்த வெம் முலை – சிந்தா:3 654/1

TOP


நொசிந்த (1)

நுண் நவிர் அறுவையன் நொசிந்த நோக்கினன் – சிந்தா:9 2010/2

TOP


நொடி (1)

நொச்சி மா மலர் நிறத்தன நொடி வரும் முந்நீர் – சிந்தா:10 2163/1

TOP


நொடித்தான் (1)

நொய்தின் மனை எய்தி இது செய்க என நொடித்தான்
மொய் கொள் முலை பாய முகை விண்டு அலர்ந்த தாரான் – சிந்தா:3 589/3,4

TOP


நொடிப்பின் (1)

நொடிப்பின் மாத்திரை நூற்று வில் ஏகுவ – சிந்தா:7 1773/3

TOP


நொடிப்பினில் (1)

நூல் படு தேரும் நொடிப்பினில் பண்ணி – சிந்தா:10 2209/2

TOP


நொடியல் (1)

நொடியல் ஓர் எழுத்தும் பொய்யை நுண் கலை நீத்தம் நீந்தி – சிந்தா:13 2911/3

TOP


நொடியின் (1)

கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்று ஓர் – சிந்தா:3 836/2

TOP


நொடிவாம் (1)

எரி பொன் மேகலை இலக்கணை கடிவினை நொடிவாம் – சிந்தா:12 2385/4

TOP


நொண்டு (4)

நோக்கினாள் நெடும் கண் என்னும் குடங்கையால் நொண்டு கொண்டு – சிந்தா:5 1258/1
நொண்டு கொண்டு பருகிய நோக்கம் ஒன்று – சிந்தா:7 1630/3
மாடகம் நொண்டு கொண்டு மாத்திரை நிறைய வீக்கி – சிந்தா:7 1697/2
குடங்கையின் நொண்டு கொண்டு பருகுவார் குவளை கொம்பின் – சிந்தா:12 2553/2

TOP


நொந்த (2)

நூபுரம் திருத்தி சேந்த நுதி விரல் நொந்த என்பார் – சிந்தா:4 1111/2
முத்து உடை முலை கண் கண் நொந்த என்று – சிந்தா:13 2683/2

TOP


நொந்தார் (2)

நொந்தார் கடந்தான் கொடுத்தான் பின்னை நூறு மூதூர் – சிந்தா:12 2564/2
நொந்தார் குடி செல்வர் நோன்மை நுகம் பூண்டார் – சிந்தா:13 2794/4

TOP


நொந்திட்டு (1)

நொந்திட்டு முனிய வேண்டா துறந்திலம் நும்மை என்ன – சிந்தா:13 2648/3

TOP


நொந்து (19)

உம்மை வினை நொந்து புலந்து ஊடல் உணர்வு அன்றே – சிந்தா:3 495/4
அம் மலர் அனிச்சத்து அம் போது அல்லியோடு அணியின் நொந்து
விம்முறு நுசுப்பு நைய வீற்றிருந்து அணங்கு சேர்ந்த – சிந்தா:3 606/1,2
ஒளிக்கும் இன்று ஆடவர் உயிர்கள் என்ன நொந்து
அளித்து அவை இரங்க சென்று அணையில் ஏறினான் – சிந்தா:3 655/3,4
சுரந்து வானம் சூல் முதிர்ந்து மெய் நொந்து ஈன்ற துளியே போல் – சிந்தா:3 717/1
கையுறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து – சிந்தா:3 829/1
நொந்து ஆங்கு அழ முயன்று நோற்றானும் எய்துவனே – சிந்தா:4 1036/4
நொந்து வைத்து நூபுரம் ஒலிப்ப ஓடி நோக்கினார் – சிந்தா:4 1099/4
இட்டு இடை நுடங்க நொந்து இரியல் உற்ற மஞ்ஞையின் – சிந்தா:4 1107/2
புனை தார் பொர நொந்து பொதிர்ந்த என – சிந்தா:5 1380/1
நோக்கு அணங்காய் மனநோய் செய நொந்து அவன் – சிந்தா:6 1473/2
நொந்து எடுக்கலாது வீங்கும் வன முலை நுசுப்பின் தேய்ந்த ஓர் – சிந்தா:6 1532/1
திருவடி மிசையின் வைத்து சிலம்ப நொந்து அழுதிட்டானே – சிந்தா:7 1728/4
நுண் துகில் நெகிழ்ந்த அல்குல் மணி பரந்து இமைப்ப நொந்து
கண்களை இடுக கோட்டி காமத்தில் செயிர்த்து நோக்கி – சிந்தா:9 2086/1,2
பாவியேன் என்று நொந்து பரிந்து அழுது உருகி நைய – சிந்தா:9 2099/2
நெஞ்சு நொந்து அமுத கண்ணீர் துடைத்தலின் நிறைந்த கோல – சிந்தா:10 2318/2
ஏறியும் இழிந்தும் ஊழ்ஊழ் புருவங்கள் முரிய நொந்து
தேறு நீர் பூத்த செந்தாமரை முகம் வியர்த்து நின்றாள் – சிந்தா:12 2507/3,4
சிலம்பு நொந்து இரங்க தேன் தார் பரிந்து தேன் எழுந்தது அன்றே – சிந்தா:12 2516/4
மருங்கு நொந்து ஒழிய வீதி மடந்தையர் இடம் கொண்டாரே – சிந்தா:12 2534/4
பூணினால் நெருங்க நொந்து பொதிர்த்தன வெம்பி என்று – சிந்தா:13 2953/1

TOP


நொந்தேன் (1)

நொந்தேன் பல-காலும் நோயோடே வீகின்றேன் – சிந்தா:7 1806/3

TOP


நொய்தா (8)

மழை-இடை மின்னின் நொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர் – சிந்தா:3 816/2
எண்ணினன் எண்ணி நொய்தா இன மலர் மாலை சுற்றா – சிந்தா:4 978/2
கையகப்படுத்தலோடும் கார் மழை மின்னின் நொய்தா
மொய் கொள பிறழ்ந்து முத்தார் மருப்பு-இடை குளித்து கால் கீழ் – சிந்தா:4 983/1,2
மாற்றவர் மலைப்பின் ஆங்கே வாள் கடா கொண்டு நொய்தா
வேற்று உலகு ஏற்றி நும் பின் விரை தர்வேன் உலகிற்கு எல்லாம் – சிந்தா:4 1143/1,2
நீர் மலி கடாத்த கொண்மூ நெற்றி மேல் மின்னின் நொய்தா
தார் மலி மார்பன் திண் தேர் தோன்றலும் தறு கண் மைந்தன் – சிந்தா:7 1862/2,3
நினைத்து தான் நெடிதல் செல்லாது என் சொலே தெளிந்து நொய்தா
சின களி யானை மன்னன் வருக என செப்பினானே – சிந்தா:10 2147/3,4
விட்டு அழல் சிந்தி வெள் வேல் விசும்பின் வீழ் மின்னின் நொய்தா
கட்டு அழல் நெடும் கண் யாதும் இமைத்திலன் மகளிர் ஓச்சும் – சிந்தா:10 2291/1,2
நோக்கலன் நுனித்து நொய்தா இட கவுள் உறுத்தினானே – சிந்தா:12 2495/4

TOP


நொய்தில் (2)

நொய்தில் தேர்ந்து உரை நூல் கடல் என்று தம் – சிந்தா:4 886/3
நோக்கினாள் நிறையும் நாணும் மாமையும் கவினும் நொய்தில்
போக்கினாள் வளையும் போர்த்தாள் பொன் நிற பசலை மூழ்கிற்று – சிந்தா:5 1291/1,2

TOP


நொய்தின் (4)

நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய் எல்லாம் வியர்த்து நொய்தின்
வண் முத்தம் நிரை கொள் நெற்றி வார் முரி புருவம் ஆக்கி – சிந்தா:1 258/1,2
நொய்தின் மனை எய்தி இது செய்க என நொடித்தான் – சிந்தா:3 589/3
நொய்தின் உரை பொருள் உண்டு எனின் நொய்து என – சிந்தா:7 1767/2
செய்வது உரை நொய்தின் என சேறும் எழுக என்றாள் – சிந்தா:9 2017/4

TOP


நொய்து (1)

நொய்தின் உரை பொருள் உண்டு எனின் நொய்து என – சிந்தா:7 1767/2

TOP


நொய்ம்மை (1)

நுரை கிழித்து அனைய நொய்ம்மை நுண் துகில் மருங்குல் சேர்த்தி – சிந்தா:3 699/3

TOP


நொய்ய (4)

விம்ம பல் கலம் நொய்ய மெய் அணிந்து – சிந்தா:4 991/2
காசு இல் கடி மாலை கலம் நொய்ய மதி கவற்கும் – சிந்தா:9 2033/2
பால் நுரையின் நொய்ய அணை பைம் கதிர்கள் சிந்தி – சிந்தா:12 2490/1
கொம்மென நாவி நாறும் கூந்தலை உலர்த்தி நொய்ய
அம் மலர் உரோம பூம் பட்டு உடுத்த பின் அனிச்ச மாலை – சிந்தா:13 2667/2,3

TOP


நொய்யவர் (1)

அம்பின் நொய்யவர் ஆண் உடை தானையர் – சிந்தா:3 633/2

TOP


நொய்யன (1)

காலின் நொய்யன கண் வெளவு காட்சிய – சிந்தா:7 1774/3

TOP


நொய்யீராகி (1)

தாளினால் நொய்யீராகி தரணி-தாம் விடும்-மின் என்றான் – சிந்தா:3 749/4

TOP