கை – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 200
கை-தன்னால் 1
கை-இடை 1
கைகள் 3
கைகளால் 2
கைகளை 1
கைகூட 1
கைகொடா 1
கைசெய்தாரே 1
கைசெய்து 3
கைத்தண்டு 1
கைத்தல 1
கைத்தலத்தின் 2
கைத்தலத்து 2
கைத்தலம் 3
கைத்தாய் 2
கைத்து 1
கைத்தொகு 1
கைதை 1
கைதொழ 2
கைதொழு 1
கைதொழுதாள் 1
கைதொழுதான் 1
கைதொழுது 9
கைதொழுவேன் 1
கைந்நொண்டன 1
கைப்பட 1
கைப்படு 1
கைப்படுதி 1
கைப்படும் 1
கைப்படை 1
கைப்பழம் 1
கைப்பொடி 1
கைப்பொருள் 1
கைபுனைந்து 1
கைபோய் 1
கைம்மக 1
கைம்மறித்த 1
கைம்மா 1
கைம்மாறு 2
கைம்மிக 1
கைம்மேல் 1
கைய 2
கையகப்படுத்தது 1
கையகப்படுத்தலோடும் 1
கையது 1
கையரி 1
கையவாம் 1
கையற்று 2
கையறவு 1
கையாத்து 1
கையாய் 1
கையார் 4
கையால் 30
கையான் 1
கையானும் 1
கையில் 5
கையின் 10
கையினர் 1
கையினால் 7
கையினாலும் 2
கையினான் 1
கையினீரே 1
கையினும் 1
கையினுள்ளும் 1
கையினை 1
கையும் 5
கையுள் 4
கையுற 1
கையுறை 1
கையெறிந்து 2
கையை 2
கையொடு 1
கையோடும் 1
கைவல்லான் 1
கைவலத்து 1
கைவிட்டால் 1
கைவிடா 1
கைவிடாது 2
கைவிடின் 1
கைவிடுதல் 1
கைவிளக்கு 1
கைவினை 6

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கை (200)

கை நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி – சிந்தா:0 17/2
மலை பட அரிந்து கூன் குயம் கை மாற்றினார் – சிந்தா:1 56/4
கை புனை சாந்தமும் கடி செய் மாலையும் – சிந்தா:1 80/1
பிடி நலம் தழீஇ வரும் பெரும் கை குஞ்சரம் – சிந்தா:1 81/2
மாகம் நீள் மணிமுடி மாரி வண் கை மாசு இல் சீர் – சிந்தா:1 141/2
துணி கதிர் வளை முன் கை தொகு விரல் செங்காந்தள் – சிந்தா:1 170/3
அம் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ் – சிந்தா:1 172/1
வேழ வெண் திரள் தட கை வெருட்டி மற்று இளம் கன்னி – சிந்தா:1 174/1
வலம்புரி பொறித்த வண் கை மதவலி விடுப்ப ஏகி – சிந்தா:1 204/1
கை மலர் காந்தள் வேலி கண மலை அரையன் மங்கை – சிந்தா:1 208/1
நாம வேல் தட கை வேந்தே நாம் இது தெரியின் என்றான் – சிந்தா:1 210/4
தூம்பு உடை நெடும் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல் – சிந்தா:1 232/1
கண் எரி தவழ வண் கை மணி நகு கடகம் எற்றா – சிந்தா:1 258/3
எரி முயங்கு இலங்கு வாள் கை ஏற்று இளம் சிங்கம் அன்னான் – சிந்தா:1 272/4
கை முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான் – சிந்தா:1 282/4
கரும் கை களிறும் கம்பலமும் காசும் கவிகள் கொள வீசி – சிந்தா:1 308/3
சிலம்பு இரங்கி போற்று இசைப்ப திருவில் கை போய் மெய் காப்ப – சிந்தா:1 340/1
வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே – சிந்தா:1 341/4
அஞ்சி வருத்து நுசுப்பினாள் வளை கை உடைத்து மணி காந்தள் – சிந்தா:1 351/3
பிடி கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கி பிணை அன்னாள் – சிந்தா:1 353/1
சேல் அடு கண்ணி காந்தள் திரு மணி துடுப்பு முன் கை
வால் அடகு அருளி செய்ய வனத்து உறை தெய்வம் ஆனாள் – சிந்தா:1 354/3,4
கை கவி நறு நெய் பெய்து கன்னல் அம் குடங்கள் கூட்டி – சிந்தா:1 400/1
கை வரை அன்றி நில்லா கடும் சின மடங்கல் அன்னான் – சிந்தா:1 407/1
இன் பால் அடிசில் இவர்கின்ற கை பேடி போலாம் – சிந்தா:2 443/2
கை விசை முறுக்கி வீசும் கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப – சிந்தா:2 448/1
கை நூறு வில்லும் கணையும் அறுத்தான் கணத்தின் – சிந்தா:2 453/3
கட்டு அழல் எறிப்ப நின்றார் கை வளை கழல நின்றார் – சிந்தா:2 468/4
சாறு எங்கும் அயர புக்கு நந்தகோன் தன் கை ஏந்தி – சிந்தா:2 489/2
பொன் அவிர் கழல் கொள் பாதம் பொழி மழை தட கை கூப்ப – சிந்தா:3 542/3
கார் கலந்த கை கணி சீர் கலந்து செப்பினான் – சிந்தா:3 576/2
மற்று அவள் தந்தை நாய்கன் வண் கை சீதத்தன் என்பான் – சிந்தா:3 607/1
நிண கொழும் குருதி வாள் கை நிலம் புடைபெயர்க்கும் ஆற்றல் – சிந்தா:3 610/2
அம் கை குழியா அரக்கு ஈத்த செம் தளிர் நெய் தோய்த்த போலும் – சிந்தா:3 643/3
கண்டு ஆனா மட பெடை கிளி என போய் கை அகல – சிந்தா:3 649/2
மாதர் யாழ் தடவர வந்த மைந்தர் கை
கீதத்தான் மீண்டன கேள்வி கின்னரம் – சிந்தா:3 660/1,2
கை அமை சிலையினாற்கு கந்துகன் இதுவும் கூறும் – சிந்தா:3 667/4
காற்கு ஒசி கொம்பு போல போந்து கை தலங்கள் காட்டி – சிந்தா:3 675/2
ஏதம் ஒன்று இல்லை சேறும் என்றலும் இலங்கு வாள் கை
போது உலாம் கண்ணி மைந்தர் போர் புலி குழாத்தின் சூழ்ந்தார் – சிந்தா:3 694/3,4
பொறா மன பொலிவு எனும் மணி கை மத்திகையினால் – சிந்தா:3 703/3
கனை வண்டு ஓதி கை தொழும் கடவுள் கண்ணில் கண்டவர் – சிந்தா:3 709/3
கண் எனும் வலையின் உள்ளான் கை அகப்பட்டு இருந்தான் – சிந்தா:3 713/1
பண் ஒன்று பாடல் அது ஒன்று பல் வளை கை
மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின் மேல் நடவா – சிந்தா:3 735/1,2
தடாம் பிறை மருப்பு திண் கை அபரகாத்திரங்கள்-தம்மால் – சிந்தா:3 806/3
கை கிழி கொடுக்கப்பட்டார் கலம் பல நல்கப்பட்டார் – சிந்தா:3 818/4
கையுறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து – சிந்தா:3 829/1
ஆழி வாய் விரலில் காமன் அம்பொடு சிலை கை ஏந்த – சிந்தா:3 833/3
கடைந்து பெய் மணி கை செம்பொன் காசு அறு தட்டின் சூழ்ந்து – சிந்தா:3 839/1
வார் தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர் – சிந்தா:4 881/2
கார் தங்கு வண் கை கழல் சீவகன் காண்-மின் என்றார் – சிந்தா:4 881/4
வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர் – சிந்தா:4 882/1
கை புனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே – சிந்தா:4 907/4
தட கை மீளிமை தாங்கு-மின் அன்று-எனின் – சிந்தா:4 940/3
பொன் தரு மாரி வண் கை புரவலன் புகன்று நோக்கி – சிந்தா:4 956/2
கலி வளர் களிறு கை நீர் சொரிவ போல் முத்த மாலை – சிந்தா:4 968/1
கத்தி கை கண்ணி நெற்றி கைதொழு கடவுள் அன்ன – சிந்தா:4 971/1
ஒருங்கு கை உச்சி கூப்பி களிற்று எதிர் இறைஞ்சி நின்றாள் – சிந்தா:4 975/4
ஒரு கை இரு மருப்பின் மும்மதத்தது ஓங்கு எழில் குன்று அனைய வேழம் – சிந்தா:4 985/1
வழங்க நீண்ட கை வணிகர்க்கு ஏறு அனான் – சிந்தா:4 987/2
கை செய் மாலை போல் கரிந்து பொன் நிறம் – சிந்தா:4 988/2
கண்ணும் வாள் அற்ற கை வளை சோருமால் – சிந்தா:4 998/1
கை இலங்கு எஃகினாய் காண வந்ததே – சிந்தா:4 1023/4
கண்டாள் நெடிது உயிர்த்தாள் கைதொழுதாள் கை அகத்தே – சிந்தா:4 1039/1
கடல் சூழ் வையம் கை படுத்தான் போன்று இது கூற – சிந்தா:4 1058/2
இரும்பு செய் குழவி திங்கள் மருப்பு-இடை தட கை நாற்றி – சிந்தா:4 1076/3
காய்ந்திடு வெகுளி நீக்கி கை கட்டி இவனை உய்த்தால் – சிந்தா:4 1089/2
வான் தரு மாரி வண் கை மதவலி பிணிக்கப்பட்டான் – சிந்தா:4 1091/4
வினையது விளைவு காண்-மின் என்று கை விதிர்த்து நிற்பார் – சிந்தா:4 1108/1
போர் முகத்து அழலும் வாள் கை பொன் நெடும் குன்றம் அன்னான் – சிந்தா:4 1116/2
அற்றம் இல் மணியை அம் கை கொண்டு அவர் கண்டு காட்ட – சிந்தா:4 1129/2
சிலை தொழில் தட கை மன்னற்கு இற்றென செப்புகின்றான் – சிந்தா:4 1161/4
நெடும் கை மான் குரல் மணி அருவி நீள் குரல் – சிந்தா:5 1202/2
கை அடு சிலையினர் காட்டுள் வாழ்பவர் – சிந்தா:5 1205/1
கை மலர்ந்து அனைய காந்தள் கடி மலர் நாறு கானம் – சிந்தா:5 1214/1
கண்ணொடு புருவம் கை கால் கலை அல்குல் நுசுப்பு காமர் – சிந்தா:5 1255/2
மாண் இழை வளை கை தம்மால் வட்டணை போக்குகின்றாள் – சிந்தா:5 1257/3
கை வளர் கரும்பு உடை கடவுள் ஆம் எனின் – சிந்தா:5 1263/1
கை தரு மணியின் தெள் நீர் மது கலந்து ஊட்டி மாலை – சிந்தா:5 1267/3
அந்தரத்து அறுவை வைப்பார் அந்தணர் அம் கை கொட்டி – சிந்தா:5 1279/3
மன்னவன் சிறுவன் வண் கை புடைத்து மாழாந்து சொன்னான் – சிந்தா:5 1282/2
பூசறுத்து அம் கை நீரை மும்முறை குடித்து முக்கால் – சிந்தா:5 1302/2
காசு அற துடைத்த பின்றை கை விரல் உறுப்பு தீட்டி – சிந்தா:5 1302/3
தூசினால் அம் கை நீவி இருந்தனன் தோற்றம் மிக்கான் – சிந்தா:5 1302/4
கயல் மணி கணின் நல்லவர் கை தொழ – சிந்தா:5 1310/2
அணி உடை கமலம் அன்ன அம் கை சேர் முன்கை-தன் மேல் – சிந்தா:5 1344/3
கணவன் அகலின் உயிர் கை அகறல் – சிந்தா:5 1378/2
வெய்யவன் கதிர்கள் என்னும் விளங்கு ஒளி தட கை நீட்டி – சிந்தா:5 1406/2
வானின் வழங்கும் வண் கை மணி செய் ஆர மார்பின் – சிந்தா:6 1412/1
கை நிகர் அமைந்த வேல் கமழும் தாரினான் – சிந்தா:6 1449/3
சோர் புயல் தொலைத்த வண் கை சுபத்திரன் மனைவி பெற்ற – சிந்தா:6 1450/2
கடிப்பகை நுழைவு அற கதிர்த்த கை விரல் – சிந்தா:6 1464/3
கண்ணுற காளையை காண்டலும் கை வளை – சிந்தா:6 1472/1
ஊன் கறி கற்ற காலன் ஒள் மணி தட கை வை வேல் – சிந்தா:6 1487/2
கூன் பிறை நுதல் ஓர் கூற்றம் குவி முலை நமன் கை பாசம் – சிந்தா:6 1487/3
கழலும் நெஞ்சொடு கை வளை சோருமால் – சிந்தா:6 1511/1
புண் அவாம் புலவு வாள் கை பொலன் கழல் புனைந்த பை தார் – சிந்தா:6 1528/1
கை அரிக்கொண்டும் காணாள் காளையும் காலின் சென்றான் – சிந்தா:6 1540/4
எய்த அ இடத்து நின்றே எய்த அ தட கை கொண்டாற்கு – சிந்தா:7 1641/3
மரா மரம் ஏழும் எய்த வாங்கு வில் தட கை வல் வில் – சிந்தா:7 1643/1
பின்னிவிட்ட பிடி தட கை இரண்டு போன்று திரண்டு அழகார் – சிந்தா:7 1658/1
அணுகி முன் நின்ற அநங்கவிலாசினி அம் கை கூப்பி – சிந்தா:7 1668/1
குலிகம் ஆர்ந்த கொழும் தாமரை அன்ன வண் கை நீட்டி – சிந்தா:7 1670/1
தடி சுவைத்து ஒளிறும் வேலான் தன் கையால் முன் கை பற்றி – சிந்தா:7 1685/3
கான்ற மென் பஞ்சி ஆர்ந்த மெல்லணை யாழ் கை நீக்கி – சிந்தா:7 1701/3
கை விலும் கணையும் இல்லா காமன் போந்து இருக்க என்ன – சிந்தா:7 1704/3
கற்பக மாலை வேய்ந்து கரும் குழல் கை செய்வானை – சிந்தா:7 1710/2
வெய்ய வாள் தட கை வீரன் இருத்தலும் விசயன் என்பான் – சிந்தா:7 1717/2
திரு மலர் தட கை கூப்பி சேவடி தொழுது வீழ்ந்தான் – சிந்தா:7 1724/4
தாமரை தட கை கூப்பி தாள் முதல் கிடந்த தம்பி – சிந்தா:7 1725/1
உருகி நைந்து உடன்று முன் கை வளை உக மெலிய வேண்டா – சிந்தா:7 1740/2
காதல் நம் சுற்றம் எல்லாம் கை இலங்கு எஃகம் ஏந்தி – சிந்தா:7 1748/3
கை வளர் கோதை கரந்து எழுத்திட்டாள் – சிந்தா:7 1767/4
முந்தி பெறப்பட்ட மகன் மூரி சிலை தட கை
சிந்திப்பவர் அவலம் அறு சீவகன் என் தோழன் – சிந்தா:7 1797/2,3
கை மாண் கடல் படையுள் காவலனை ஆண்டு ஒழிய – சிந்தா:7 1801/1
வண் தாரார் வண் கடகம் மின்ன தம் கை மறித்து – சிந்தா:7 1809/2
வெறி கமழ் சோலை நண்ணி வேண்டிய அடிசில் கை தொட்டு – சிந்தா:7 1818/3
அம் கை அம் தலத்தினால் அப்புது ஆது ஐ என – சிந்தா:7 1834/1
வெள்ள நீர் பெரும் சனம் வியந்து கை விதிர்த்ததே – சிந்தா:7 1841/4
ஏத்தரும் சிலை கை வாள் இலங்கு வேல் ஏந்தினார் – சிந்தா:7 1845/4
நெறிமையின் இழிந்து மைந்தன் மணி கை மத்திகையை நீக்கி – சிந்தா:8 1908/2
தங்கு ஒளி தட கை கூப்பி தொழுது அடி தழுவி வீழ்ந்தான் – சிந்தா:8 1910/3
மாலையுள் கரந்த பந்து வந்து கை தலத்தவாம் – சிந்தா:8 1954/1
ஏற்ற கை தொடி வீழ்ந்து என ஏந்தலை – சிந்தா:8 1979/1
கை சோர்ந்து அணல் ஊன்றி கண்ணீர் கவுள் அலைப்ப – சிந்தா:9 2050/2
கை சிலை கணையோடு ஏந்தி காமன் இ கடையை காப்பான் – சிந்தா:9 2090/4
அழுத கண்ணீரினாலே கை கழீஇ அவலிக்கின்ற – சிந்தா:9 2095/3
செயிர் தீர் திரள் கை சிறு பிடி கேள்வன் – சிந்தா:10 2126/2
அரும் பனை தட கை அபரகாத்திரம் வாய் வால் எயிறு ஐந்தினும் கொல்வ – சிந்தா:10 2154/1
கார் மதம் கடந்த வண் கை காம்பிலி காவல் மன்னன் – சிந்தா:10 2183/2
பனை கை யானை மன்னர் பணிய பைம்பொன் முடியில் – சிந்தா:10 2194/1
இலையார் கடக தட கை புடைத்து மெய் சோர்ந்து இருந்தான் – சிந்தா:10 2197/4
கை அமைத்து இளைஞரும் கருவி வீசினார் – சிந்தா:10 2214/4
மாலை வாய் நெடும் குடை மேல் மத யானை கை துணிந்து – சிந்தா:10 2238/1
கை படை ஒன்றும் இன்றி கை கொட்டி குமரன் ஆர்ப்ப – சிந்தா:10 2259/1
கை படை ஒன்றும் இன்றி கை கொட்டி குமரன் ஆர்ப்ப – சிந்தா:10 2259/1
கை படு பொருள் இலாதான் காமம் போல் காளை மீண்டான் – சிந்தா:10 2259/4
கரு வலி தட கை வாளின் காளையை வெளவினானே – சிந்தா:10 2269/4
காமுகன் களத்து வீழ கை விரல் நுதியின் சுட்டி – சிந்தா:10 2270/2
சென்றது தட கை தூணி சேந்த கண் புருவம் கோலி – சிந்தா:10 2272/1
தன் இரு கையினாலும் தட கை மால் யானையாலும் – சிந்தா:10 2274/2
கை தலத்து எஃகம் ஏந்தி காளை போய் வேறு நின்றான் – சிந்தா:10 2277/3
பூரணசேனன் வண் கை பொரு சிலை ஏந்தினானே – சிந்தா:10 2280/4
வண்டு அலை மாலை தாழ மது உண்டு களித்து வண் கை
புண் தலை வேலை ஏந்தி போர்க்களம் குறுகி வாழ்த்தி – சிந்தா:10 2282/1,2
திரு மணி செம்பொன் மார்பின் சீவகன் சிலை கை ஏந்தி – சிந்தா:10 2295/2
ஆடவர் ஆண்மை தோற்றும் அணி கிளர் பவழ திண் கை
நீடு எரி நிலை கண்ணாடி போர்க்களத்து உடைந்த மைந்தர் – சிந்தா:10 2299/1,2
அஞ்சன கலுழி அம் சேறு ஆடிய கடக வண் கை
வெம் சிலை கொண்டு வெய்ய உரும் என முழங்கி சொன்னான் – சிந்தா:10 2318/3,4
கண் ஆடு யானை அவர் கை தொழ சென்று புக்கான் – சிந்தா:11 2327/4
அம்பு கை கொண்டால் ஆர் இவற்கு ஈண்டு நிகர் ஆவார் – சிந்தா:11 2332/2
அம்பு கை காணாம் ஐயனை கையில் தொழுது என்பார் – சிந்தா:11 2332/4
காய் பொன் கடிகை கதிர் கை விளக்கு ஏந்தி மள்ளர் – சிந்தா:11 2350/2
சேய் பொன் கமல மகள் கை தொழ சென்று புக்கான் – சிந்தா:11 2350/4
கார் மீது ஆடி கலம் பொழியும் கடக தட கை கழலோனை – சிந்தா:11 2359/3
வெருவி மாநகர் மாந்தர்கள் வியந்து கை விதிர்ப்ப – சிந்தா:11 2366/1
மின்னும் கடல் திரையின் மா மணி கை வெண் கவரி விரிந்து வீச – சிந்தா:11 2369/1
பால் வெண் திங்கள் மணி கை படுத்தவை – சிந்தா:12 2397/1
விரை தலை மாலை சூட்டி மின் அனார் அம் கை சேப்ப – சிந்தா:12 2414/1
கை அணி குழல் மாலை கதிரி முலையவர் சூழ்ந்தார் – சிந்தா:12 2434/4
கை வளை அலங்காரமாலையும் கமழ் கோதை – சிந்தா:12 2435/3
கை நூல் திறத்தின் கலப்ப வாரி கமழும் நான கலவை – சிந்தா:12 2437/2
துணித்து அடி விளிம்பு சேர்த்தி தொழுதக செய்த வண் கை
மணி சிரல் சிறகு நாண வகுத்த சாந்து ஆலவட்டம் – சிந்தா:12 2478/2,3
வளமை மல்கி எரிய மட மந்தி கை காய்த்துவான் – சிந்தா:12 2491/2
வாய்ந்த கை புரட்டி மாதோ மருள்தக பற்றினானே – சிந்தா:12 2496/4
அநந்தன் அன்ன கை யானை ஏறினான் – சிந்தா:12 2521/3
கண்டிலேன் என் மாமை கை வளையொடு என்பார் – சிந்தா:12 2550/2
தலை நிலம் புரள வெண் கோடு உண்டதே போன்று தன் கை
சிலை இடம் பிடித்த ஞான்றே தெவ்வரை செகுத்த நம்பி – சிந்தா:12 2554/2,3
கை நிகர் இல் வேந்தர் தொழ போந்ததுவும் கண்டால் – சிந்தா:12 2555/3
வளர்த்த கை தாயர் தம்மை வருக என அருளி தங்கள் – சிந்தா:12 2570/1
கண்கள் துஞ்சா கதிர் முத்தமே காலும் கை ஆர் வளை கழலுமால் – சிந்தா:12 2589/1
அம் கை சேப்ப குருகு இரங்க அலங்கல் அம் பூம் குழல் துயல் வர – சிந்தா:12 2592/1
வெம்பி பசி நலிய வெம் வினையின் வேறாய் ஓர் அகல் கை ஏந்தி – சிந்தா:13 2624/2
நண்ணா சிறு கூறை பாகம் ஓர் கை பாகம் உடுத்து நாளும் – சிந்தா:13 2625/2
கை திரண்ட வேல் ஏந்தி காமன் போல் காரிகையார் மருள சென்றார் – சிந்தா:13 2626/2
கூந்தலை ஒரு கை ஏந்தி குங்கும தாரை பாய – சிந்தா:13 2660/1
பூம் துகில் ஒரு கை ஏந்தி புகும் இடம் காண்டல் செல்லார் – சிந்தா:13 2660/2
பெண் உரை பிடி கை கூந்தல் பொன் அரி மாலை தாழ – சிந்தா:13 2663/3
பிடி கை வென்று கடைந்தன போல் பஞ்சி ஆர்ந்த திரள் குறங்கு – சிந்தா:13 2695/1
கழு மணி செம்பொன் ஆழி கை விரல் உகிரின் கிள்ளி – சிந்தா:13 2716/3
காட்டினார் தேவர் ஆவர் கை விளக்கு அதனை என்று – சிந்தா:13 2729/3
கை நிறை எஃகம் ஏந்தி கன மணி குழை வில் வீச – சிந்தா:13 2730/1
கரும கடல் கடந்த கை வல செல்வன் – சிந்தா:13 2741/1
தாங்கும் மா வண் கை சக்கரம் மிக்கு உயர் பிறரும் – சிந்தா:13 2761/3
வேள்வி-வாய் கண்படுத்தும் வெவ்வினை செய் ஆடவர் கை
வாளின்-வாய் கண்படுத்தும் வாரணத்தின் ஈர் உரி போல் – சிந்தா:13 2787/1,2
தந்தீக எனா முன் கை வீக்க தளர்வுற்றும் – சிந்தா:13 2794/3
கண் சூன்றிடப்பட்டும் கால் கை களைந்து ஆங்கே – சிந்தா:13 2795/1
கடிப்பு வார் அங்குலி கொளீஇய கை துரந்து – சிந்தா:13 2830/1
கை படுத்து அலங்கல் ஆழி காவலர் ஆவர் கோவே – சிந்தா:13 2843/4
கதிர் விடு திரு மணி அம் கை கொண்டது ஒத்து – சிந்தா:13 2850/1
அணி சேர் இட கை விரலால் வல தோள் – சிந்தா:13 2866/1
கை தவம் நுனித்த கவறு ஆடல் ஒழிக என்றான் – சிந்தா:13 2873/4
வாளி வில் தட கை மைந்தன் வாய்விட்டு புலம்பி காம – சிந்தா:13 2882/2
வலி உடை மருப்பின் அல்லால் வாரணம் தட கை வையாது – சிந்தா:13 2904/2
புல் உயிர் புகைந்து பொங்கு முழங்கு அழல் இலங்கு வாள் கை
மல்லல் அம் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய் – சிந்தா:13 2908/2,3
பேசி பாவாய் பிச்சை என கை அகல் ஏந்தி – சிந்தா:13 2929/3
காதல் கொண்டு இருந்த காமர் கை விரல் அளிய நீரும் – சிந்தா:13 2948/3
கழித்த கடி பிணையும் கை வளையும் மாலையும் களைந்து முத்தும் – சிந்தா:13 2969/1
கை பலி உண்டியானும் வெள்ளில் மேல் கவிழ நீரும் – சிந்தா:13 2984/2
கலம் சொரி காவலன் கடக கை இணை – சிந்தா:13 2995/2
வனை கதிர் தட கை வைத்து இருந்த வாமனார் – சிந்தா:13 3008/2
வாள் கை அம் மைந்தர் ஆயும் வன முலை மகளிர் ஆயும் – சிந்தா:13 3106/1
கலந்த கள்ளினை கை செய்து ஐயென – சிந்தா:13 3130/2
கலவி தூது ஆகிய காம கை காய்த்தி – சிந்தா:13 3140/2

TOP


கை-தன்னால் (1)

முருக்கி தேர் தட கை-தன்னால் முழங்கி பாய் மாக்கள் காலின் – சிந்தா:3 807/2

TOP


கை-இடை (1)

கால்-இடை கரக்குமாறும் கை-இடை திரியுமாறும் – சிந்தா:7 1677/2

TOP


கைகள் (3)

காள மேகங்கள் சொல்லி கருனையால் குழைக்கும் கைகள்
வாள் அமர் நீந்தும்-போழ்தின் வழு வழுத்து ஒழியும் என்றான் – சிந்தா:1 257/3,4
முறுவல் திங்கள் முக அரங்கின் மேல் முரிந்து நீண்ட புருவ கைகள்
நெறியின் வட்டித்து நீண்ட உண்கண் சென்றும் வந்தும் பிறழ்ந்தும் ஆட – சிந்தா:12 2594/1,2
மின் சொரி வெண் கலம் வீசும் வண் கைகள்
பொன் சொரி தாமரை போது போன்றவே – சிந்தா:13 2996/3,4

TOP


கைகளால் (2)

வலி உடை கைகளால் மலர்ந்த தாமரை – சிந்தா:1 56/1
கண்ட ஞான்று தன் கண் எனும் கைகளால்
நொண்டு கொண்டு பருகிய நோக்கம் ஒன்று – சிந்தா:7 1630/2,3

TOP


கைகளை (1)

களிற்று உகிர் பிறழ் பல் பேய்கள் கைகளை உச்சி கூப்பி – சிந்தா:3 804/2

TOP


கைகூட (1)

மண் முழுது அன்றி வானும் வந்து கைகூட தந்தாய் – சிந்தா:7 1684/2

TOP


கைகொடா (1)

காதல் மிக்குழி கற்றவும் கைகொடா
ஆதல் கண்ணகத்து அஞ்சனம் போலுமால் – சிந்தா:7 1632/1,2

TOP


கைசெய்தாரே (1)

தம் களி செய்ய கூட்டி தையலார் கைசெய்தாரே – சிந்தா:12 2473/4

TOP


கைசெய்து (3)

கண்ணி வேய்ந்து கரும் குழல் கைசெய்து
வண்ண மாலை நடு சிகையுள் வளைஇ – சிந்தா:5 1333/1,2
கருப்பு சாற்றொடு கலந்து கைசெய்து
புரிந்த தெங்கு இளநீரும் பூரிப்பார் – சிந்தா:12 2402/3,4
கைசெய்து கமழும் நூறும் காழ்க்கும் வெள் இலையும் காமம் – சிந்தா:12 2474/1

TOP


கைத்தண்டு (1)

கண் நவிர் குடையினன் கைத்தண்டு ஊன்றினன் – சிந்தா:9 2010/3

TOP


கைத்தல (1)

வள்ளல் கைத்தல மாந்தரின் மால் வரை – சிந்தா:1 36/1

TOP


கைத்தலத்தின் (2)

கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும் – சிந்தா:1 151/2
திண் புகழ் அறிவன் பாதம் திருந்து கைத்தலத்தின் ஏற்றி – சிந்தா:5 1241/3

TOP


கைத்தலத்து (2)

கைத்தலத்து அகன்ற பந்தின் கைப்படும் கவல வேண்டா – சிந்தா:5 1395/2
கைத்தலத்து எஃகம் ஏந்தி காமுகன் கண்டு காய்ந்தான் – சிந்தா:10 2266/4

TOP


கைத்தலம் (3)

கைத்தலம் கடுத்து அடித்த பந்து நீக்கி வந்து அவண் – சிந்தா:4 1101/3
கைத்தலம் தீண்டப்பெற்றும் கனிந்தன மலர்ந்த காண்க – சிந்தா:8 1907/2
கைத்தலம் மந்தி கொண்ட கைம்மக போன்று தன்-கண் – சிந்தா:12 2571/1

TOP


கைத்தாய் (2)

இரு நில மடந்தை ஈன்றது இரு விசும்பு என்னும் கைத்தாய்
திரு நலம் மின்னு பொன் ஞாண் முகில் முலை மாரி தீம் பால் – சிந்தா:3 720/1,2
ஊன் நைந்து உருகி கைத்தாய் உள் நிறை உவகை பொங்க – சிந்தா:4 1051/2

TOP


கைத்து (1)

கைத்து எடுத்தலின் காமம் தாழ்ந்ததே – சிந்தா:13 2683/4

TOP


கைத்தொகு (1)

சூடகம் அணிந்த முன் கைத்தொகு விரல் சேப்ப எற்றி – சிந்தா:7 1697/3

TOP


கைதை (1)

கள் அவிழ் கைதை வேலி காசு இல் காந்தார நாட்டு – சிந்தா:3 546/2

TOP


கைதொழ (2)

தோற்று வந்து என் சிலம்பு அடி கைதொழ
நோற்பல் நோற்றனை நீ என ஏகினாள் – சிந்தா:4 899/3,4
காவலன் ஆதியா கணங்கள் கைதொழ
பாவம் இல் சுதன்மரால் பாடப்பட்டதே – சிந்தா:13 3061/3,4

TOP


கைதொழு (1)

கத்தி கை கண்ணி நெற்றி கைதொழு கடவுள் அன்ன – சிந்தா:4 971/1

TOP


கைதொழுதாள் (1)

கண்டாள் நெடிது உயிர்த்தாள் கைதொழுதாள் கை அகத்தே – சிந்தா:4 1039/1

TOP


கைதொழுதான் (1)

கரி மாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான் கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின் – சிந்தா:1 294/2

TOP


கைதொழுது (9)

ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது
ஆலும் இ மஞ்ஞை அறிந்து அருள் என்றான் – சிந்தா:1 236/3,4
கதிர் முடி மன்னர் சூழ்ந்து கைதொழுது இறைஞ்சி மாலை – சிந்தா:3 613/1
காட்டி எம்மை கொன்றாய் என கைதொழுது
ஓட்டை நெஞ்சினராய் உழல்வார்களும் – சிந்தா:3 642/3,4
போவர் பொன் அனையாய் என கைதொழுது
ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள் – சிந்தா:4 891/2,3
காமனை என்றும் சொல்லார் கணவன் கைதொழுது வாழ்வார் – சிந்தா:7 1598/3
கள் உருவ மாலையவர் கைதொழுது நின்றார் – சிந்தா:12 2488/4
இருந்து அறம் பகர்வுழி இழிந்து கைதொழுது
ஒருங்கு எமை உய கொண்-மின் அடிகள் என்றாள் – சிந்தா:13 2631/2,3
காற்கு ஒசி கொம்பு போல கைதொழுது இறைஞ்சி மாதோ – சிந்தா:13 2826/4
கைவினை செய்த சொல் பூ கைதொழுது ஏத்தினனே – சிந்தா:13 3145/4

TOP


கைதொழுவேன் (1)

கால் அவியா பொன் விளக்கும் தந்து உம்மை கைதொழுவேன்
கோல் அவியா வெம் சிலையான் சொல் குன்றான் ஆக எனவே – சிந்தா:4 1045/2,3

TOP


கைந்நொண்டன (1)

கைந்நொண்டன கவற்சி நனி வருத்த கலுழ்ந்து ஆற்றாள் – சிந்தா:7 1783/4

TOP


கைப்பட (1)

கைப்பட எடுத்திட்டு ஆடும் பொலம் கழற்காயும் ஒத்தான் – சிந்தா:10 2287/4

TOP


கைப்படு (1)

கைப்படு சாந்தும் பூவும் கொண்டு அலால் கலக்கல் ஆகா – சிந்தா:13 2938/2

TOP


கைப்படுதி (1)

புனை செய் கோல் வளையை கைப்படுதி என்று ஆங்கு அவன் போதலும் – சிந்தா:7 1600/3

TOP


கைப்படும் (1)

கைத்தலத்து அகன்ற பந்தின் கைப்படும் கவல வேண்டா – சிந்தா:5 1395/2

TOP


கைப்படை (1)

கைப்படை மன்னன் நிற்ப கதுப்பு அயல் மாலை வாங்கி – சிந்தா:13 2665/2

TOP


கைப்பழம் (1)

கைப்பழம் இழந்த மந்தி கட்டியங்காரன் ஒத்தது – சிந்தா:13 2726/1

TOP


கைப்பொடி (1)

கைப்பொடி சாந்தம் ஏந்தி கரக நீர் வீதியில் பூசி – சிந்தா:13 2736/1

TOP


கைப்பொருள் (1)

கைப்பொருள் கொடுத்தும் கற்றல் கற்ற பின் கண்ணும் ஆகும் – சிந்தா:7 1595/1

TOP


கைபுனைந்து (1)

இன்பம் செய் காம சாந்தின் கைபுனைந்து ஏற்ற மாலை – சிந்தா:7 1596/2

TOP


கைபோய் (1)

கட்டழகு அமைந்த கண்ணாள் நிறை எனும் சிறையை கைபோய்
இட்ட நாண் வேலி உந்தி கடல் என எழுந்த வேட்கை – சிந்தா:3 710/2,3

TOP


கைம்மக (1)

கைத்தலம் மந்தி கொண்ட கைம்மக போன்று தன்-கண் – சிந்தா:12 2571/1

TOP


கைம்மறித்த (1)

தக்கார் போல் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே – சிந்தா:5 1227/3

TOP


கைம்மா (1)

தூம்பு ஆர் நெடும் கைம்மா தீம் கரும்பு துற்றாவாய் – சிந்தா:13 2980/2

TOP


கைம்மாறு (2)

கண் முழுது உடம்பில் பெற்றேன் காளை கைம்மாறு காணேன் – சிந்தா:7 1684/3
இல்லையே கைம்மாறு என்று இன்பம் எல்லாம் அவர்க்கு ஈந்தாள் – சிந்தா:13 2602/3

TOP


கைம்மிக (1)

கட்டு அழல் எவ்வம் கைம்மிக நீக்கி களிகூர – சிந்தா:1 360/2

TOP


கைம்மேல் (1)

ஒற்றுபு திருத்தி கைம்மேல் உருட்டுபு நேமி சேர்ந்து ஆங்கு – சிந்தா:10 2191/2

TOP


கைய (2)

மேல் எழுந்த மீ நிலத்த விரல கைய ஆகுமே – சிந்தா:8 1954/4
கைய வளை மைய குழல் ஐ அரிய வாள் கண் – சிந்தா:9 2017/1

TOP


கையகப்படுத்தது (1)

கதி அமை தோளினானை கையகப்படுத்தது அன்றே – சிந்தா:4 982/4

TOP


கையகப்படுத்தலோடும் (1)

கையகப்படுத்தலோடும் கார் மழை மின்னின் நொய்தா – சிந்தா:4 983/1

TOP


கையது (1)

காது சேர்ந்த கடி பிணை கையது
தாது மல்கிய தண் கழுநீர் மலர் – சிந்தா:5 1323/1,2

TOP


கையரி (1)

காடு கையரி கொண்டு கவர்ந்து போய் – சிந்தா:1 38/2

TOP


கையவாம் (1)

கையவாம் சிலையினானை கண்டு வந்து அருகு சேர்ந்தான் – சிந்தா:7 1717/3

TOP


கையற்று (2)

மால் உற்ற மன்னர் தங்கள் மனம் கையற்று ஒழிந்த வள்ளல் – சிந்தா:3 797/3
கண்ணீர் கவுள் அலைப்ப கையற்று யாம் இனைய – சிந்தா:9 2050/3

TOP


கையறவு (1)

களி கொள் காமத்தில் கையறவு எய்தி தன் – சிந்தா:4 1001/3

TOP


கையாத்து (1)

நிலவு உறழ் பூணினானை நெடு நகர் இரங்க கையாத்து
அலபல செய்து கொல்வான் அருளிலான் கொண்ட போழ்தில் – சிந்தா:4 1131/1,2

TOP


கையாய் (1)

மணம் மல்கு பூம் தார் மழை தழீஇய கையாய் – சிந்தா:13 2779/4

TOP


கையார் (4)

கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலை மேல் ஆரம் பரிந்து அலறுவார் – சிந்தா:1 295/1
கையார் இலங்கு எஃகின் கந்து கடன் கொடுபோய் – சிந்தா:7 1802/1
கையார் வளையார் புலி கண்ணுற கண்டு சோரா – சிந்தா:11 2342/3
வளை கையார் கவரி கொண்டு எறிய மன்னனே – சிந்தா:13 2867/4

TOP


கையால் (30)

வளை கையால் கடைசியர் மட்டு வாக்கலின் – சிந்தா:1 50/1
குஞ்சி மாண் கொடி கையால் கூவி விட்டது ஒத்ததே – சிந்தா:1 143/4
வண் கையால் கலி மாற்றி வை வேலினால் – சிந்தா:1 158/1
மையார் கடி பிணையும் வார் குழையும் களைந்திடுவார் கையால் வயிறு அதுக்குவார் – சிந்தா:1 295/3
வனை மலர் தாரினான் மறைத்து வண் கையால்
துனை கதிர் முகந்து என முகப்ப தும்மினான் – சிந்தா:1 323/2,3
குல பிறப்பு என்னும் கையால் கோல பாசம் கொளுத்தி – சிந்தா:3 711/2
வடி கயிறு ஆய்ந்து முள் கோல் வல கையால் தாங்கி வென்றி – சிந்தா:3 794/1
வள்ள நீர் அரமங்கையர் அம் கையால்
உள்ளம் கூர திமிர்ந்து உகுத்து இட்ட சாந்து – சிந்தா:4 857/1,2
கூற்று என முழங்கி கையால் கோட்டு-இடை புடைப்ப காய்ந்து – சிந்தா:4 981/1
தத்தை அம் கிளவி கையால் செவி முதல் அடைச்சி சொன்னாள் – சிந்தா:4 1048/4
தவழ் கதிர் முத்தம் பாய்த்தி தன் கையால் தீண்டி நல் நாள் – சிந்தா:5 1268/2
தட கையால் கொடுத்து புல்லும் தவழ் மத களிறு நீங்கின் – சிந்தா:6 1529/2
கையால் பொதி துணையே காட்ட கயல் கண்ணாள் அதனை காட்டாள் – சிந்தா:6 1553/1
தடி சுவைத்து ஒளிறும் வேலான் தன் கையால் முன் கை பற்றி – சிந்தா:7 1685/3
வான் இழிந்து ஆங்கு கண்ணீர் மார்பகம் நனைப்ப கையால்
ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் ஒற்றி மற்று இதனை சொன்னான் – சிந்தா:7 1759/3,4
தங்கிய பயிர் தொழில் தட கையால் செய்ததே – சிந்தா:7 1834/4
கட்டினான் கரு வலி தட கையால் தோட்டியும் – சிந்தா:7 1835/2
கலுழ தன் கையால் தீண்டி காதலின் களித்து நோக்கி – சிந்தா:8 1926/2
நனை மலர் தாமரை நக்க வண் கையால்
புனை கதிர் திருமுகம் கழுவி பூ மழை – சிந்தா:8 1943/2,3
இறங்கிய மாதர்-தன்னை எரி மணி கடக கையால்
குறங்கின் மேல் தழுவி வைத்து கோதை அம் குருதி வேலான் – சிந்தா:9 2067/1,2
தோளினால் எஃகம் ஏந்தி தும்பி மேல் இவர கையால்
நீள மா புடைப்ப பொங்கி நிலத்து அவன் கவிழ்ந்து வீழ – சிந்தா:10 2248/1,2
நாண் அட நடுங்கி கையால் நகை முகம் புதைத்த தோற்றம் – சிந்தா:12 2461/3
இறைஞ்சி முடி துளக்கி ஏத்தி கையால் தொழுதானே – சிந்தா:12 2560/4
பண் உறு சுளைகள் கையால் பகுத்து உண கொடுத்தது அன்றே – சிந்தா:13 2724/4
கண் ஆர் மறி அறுத்து கையால் உதிரம் தூய் – சிந்தா:13 2780/2
அண் பல் இற கையால் ஆற்ற தகர் பெற்றும் – சிந்தா:13 2795/2
மணி துணர் அனைய தம் குஞ்சி வண் கையால்
பணித்தனர் பறித்தலின் பரவை மா நிலம் – சிந்தா:13 2820/1,2
தொடி கையால் தொழுது வாழ்த்தி தூ மணி நிலத்துள் ஏற்றி – சிந்தா:13 2827/1
மைந்தர் தம் வண் கையால் முன் மணி வள்ளத்து எடுத்த தேறல் – சிந்தா:13 2973/1
நீடு அகம் வெகுண்டும் கையால் பிடித்து நீறு அட்டி இட்டேம் – சிந்தா:13 2989/3

TOP


கையான் (1)

கற்பக மரமும் செம்பொன் மாரியும் கடிந்த கையான் – சிந்தா:5 1222/4

TOP


கையானும் (1)

மலை புறம்கண்ட மார்பின் வாங்கு வில் தட கையானும்
இலை புறம் கொண்ட கண்ணி இன் தமிழ் இயற்கை இன்பம் – சிந்தா:9 2063/2,3

TOP


கையில் (5)

தார் பொலி மார்பன் ஓர்த்து தன் கையில் வீணை நீக்கி – சிந்தா:3 758/3
அம் முடி அரசிர்க்கு எல்லாம் என் கையில் அம்பு தந்து – சிந்தா:3 771/3
உள் ஆவி உள்ளாய் நீ ஒழிந்தாய் அல்லை என கையில்
புள் ஆவி செம் கழுநீர் குவளை செய்தாள் புனை பூணாள் – சிந்தா:7 1887/3,4
அம்பு கை காணாம் ஐயனை கையில் தொழுது என்பார் – சிந்தா:11 2332/4
தேள் கையில் கொண்டது ஒக்கும் நிச்சம் நோய் செற்ற புன் தோல் – சிந்தா:13 3106/3

TOP


கையின் (10)

தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய – சிந்தா:4 930/1
அலங்கலும் குழலும் தோழி அம் கையின் அடைச்சி அம் பூம் – சிந்தா:5 1397/1
உருவு கொள் தட கையின் உருவு கொண்டவே – சிந்தா:6 1462/4
இறும் மருங்குல் போது அணியின் என்று இனைந்து கையின்
நறு மலர்கள் சிந்துவார் நண்ணார் துறந்தார் – சிந்தா:7 1698/1,2
கையின் தொழுதார் கழிய மூப்பின் செவி கேளார் – சிந்தா:9 2013/1
அணி மலர் குவளை பைம் போது ஒரு கையின் அருளி அம் பொன் – சிந்தா:9 2083/2
கள் உயிர் உண்ணும் மாலை கதுப்பு ஒரு கையின் ஏந்தி – சிந்தா:12 2532/3
முத்தார் மருப்பின் இடை வளைத்த முரண் கொள் யானை தட கையின்
ஒத்தேர் உடைய மல்லிகையின் ஒலியல் மாலை உறுப்பு அடக்கி – சிந்தா:13 2693/1,2
அடி கையின் தொழுது பூ தூய் அஞ்சலி செய்து வீடே – சிந்தா:13 2808/3
கடி விம்மு தாரான் கழல் கையின் தொழுது சேர்ந்தான் – சிந்தா:13 2865/4

TOP


கையினர் (1)

கல்லொடு வன் தடி கையினர் காற்றினும் – சிந்தா:4 935/1

TOP


கையினால் (7)

கையினால் அடி தைவர கண் மலர்ந்து – சிந்தா:1 345/2
களன் என கரையும் அல்குல் கையினால் தீண்டப்பெற்றேன் – சிந்தா:3 684/2
கையினால் தொழுதார் கமழ் கோதையார் – சிந்தா:4 886/4
கையினால் சொல கண்களின் கேட்டிடும் – சிந்தா:4 997/1
கையினால் தொழுதாள் கயல் கண்ணினாள் – சிந்தா:5 1366/4
காந்தள் அம் முகிழ் விரல் கையினால் பிடித்து – சிந்தா:8 1992/3
காலனை அளியன் தானே கையினால் விளிக்கும் என்னா – சிந்தா:10 2148/2

TOP


கையினாலும் (2)

இறைவி தன் சிறுவர்-தம்மை இரு கையினாலும் புல்லி – சிந்தா:8 1917/2
தன் இரு கையினாலும் தட கை மால் யானையாலும் – சிந்தா:10 2274/2

TOP


கையினான் (1)

அம் சுடர் தாமரை கையினான் மணி – சிந்தா:13 3031/1

TOP


கையினீரே (1)

என் உங்கட்கு உள்ளம் இலங்கு ஈர் வளை கையினீரே
மன் இங்கு வாழ்வு தருதும் அவற்றானும் வாழ்-மின் – சிந்தா:11 2347/1,2

TOP


கையினும் (1)

புள்ளுவர் கையினும் உய்யும் புள் உள – சிந்தா:13 2931/1

TOP


கையினுள்ளும் (1)

தொழுத தம் கையினுள்ளும் துறு முடி அகத்தும் சோர – சிந்தா:8 1891/1

TOP


கையினை (1)

கடி மலர் கமலத்து அன்ன கையினை மறித்து கொள்ளான் – சிந்தா:13 3073/3

TOP


கையும் (5)

தாழ் இரும் தட கையும் மருப்பும் தம்பியர் – சிந்தா:3 775/1
தன் இரு கையும் கூப்பி தையல் ஈது உரைக்கும் அன்றே – சிந்தா:9 2056/4
ஒருக்கு அவன் கையும் வாயும் உளம் கிழித்து உடுவம் தோன்ற – சிந்தா:10 2275/2
அம் மலர் அடியும் கையும் அணி கிளர் பவழ வாயும் – சிந்தா:12 2446/1
அம் கையும் அடியும் நோக்கில் தாமரை அலர்ந்தது ஒக்கும் – சிந்தா:13 2801/1

TOP


கையுள் (4)

செம் கண் தீ விழியா தெழித்தான் கையுள்
அம் கண் போது பிசைந்து அடு கூற்று அனான் – சிந்தா:2 431/3,4
வாங்குபு நபுலன் கையுள் வார் புரி நரம்பு கொண்டான் – சிந்தா:3 721/4
அச்சு உற முழங்கி ஆரா அண்ணல் அம் குமரன் கையுள்
நச்சு எயிற்று அம்பு தின்ன நாள் இரை ஆகல் உற்றார் – சிந்தா:10 2303/3,4
தீவினை குழவி செற்றம் எனும் பெயர் செவிலி கையுள்
வீ வினை இன்றி காம முலை உண்டு வளர்ந்து வீங்கி – சிந்தா:13 3098/1,2

TOP


கையுற (1)

கருவி தேன் கலை கையுற கீண்டுடன் – சிந்தா:7 1606/1

TOP


கையுறை (1)

கையுறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து – சிந்தா:3 829/1

TOP


கையெறிந்து (2)

நாடகம் நாங்கள் உற்றது என்று கையெறிந்து நக்கார் – சிந்தா:3 582/4
நிலமகள் நெஞ்சு கையெறிந்து நையவும் – சிந்தா:10 2221/3

TOP


கையை (2)

வீரம் பட கையை மெய்-வழி வீசி – சிந்தா:3 631/2
ஒளிர் வளை கையை செல்வன் விடுத்து அவள் இடக்கை பற்றி – சிந்தா:12 2468/3

TOP


கையொடு (1)

கையொடு கண்டம் கோப்பார் கனை சுடர் உறுப்பின் வைப்பார் – சிந்தா:5 1278/1

TOP


கையோடும் (1)

தாழ் இரும் தட கையோடும் தட மருப்பு இரண்டும் அற்று – சிந்தா:10 2298/3

TOP


கைவல்லான் (1)

கண் கூடா கடை புடைத்து கைவல்லான் எழுதிய போல் – சிந்தா:1 166/3

TOP


கைவலத்து (1)

திரிதரு நோக்கம் தீது இலார் நோக்கி நெய்தலும் கைவலத்து ஒழிந்தார் – சிந்தா:10 2103/4

TOP


கைவிட்டால் (1)

கானில் வாழ் குறவன் சொல்லும் கள்ளொடு ஊன் தேன் கைவிட்டால்
ஏனை எம் உடம்பு வாட்டல் எவன் பிழைத்தும்-கொல் என்றான் – சிந்தா:5 1234/3,4

TOP


கைவிடா (1)

தொடர்ந்து கைவிடா தோழிமாரொடும் – சிந்தா:4 990/2

TOP


கைவிடாது (2)

கான் சேர் கமழ் கோதை கால் தொடர்ந்து கைவிடாது அரற்றுகின்ற – சிந்தா:3 637/3
கற்பக மரத்தை புல்லி கைவிடாது ஒழிந்து காம – சிந்தா:7 1691/3

TOP


கைவிடின் (1)

காதலாள் உடலுள் உயிர் கைவிடின்
ஏதம் என் உயிர் எய்தி இறக்கும் மற்று – சிந்தா:7 1631/1,2

TOP


கைவிடுதல் (1)

சிறியார் இனத்து சேர்வு இன்மை சினம் கைவிடுதல் செருக்கு அவித்தல் – சிந்தா:13 2816/3

TOP


கைவிளக்கு (1)

ஏறு அனாற்கு இருளை நீங்க கைவிளக்கு ஏந்திய ஆங்கு – சிந்தா:6 1542/1

TOP


கைவினை (6)

ஒத்து ஒளிர் பவள வாய் ஓவ கைவினை
தத்தரி நெடும் கணாள் தன்னொடு ஆடும் நாள் – சிந்தா:4 1075/2,3
விளிம்பு முத்து அழுத்திய யவன கைவினை
தெளிந்த பொன் அடைப்பையுள் பாகு சென்றவே – சிந்தா:6 1479/3,4
குறைவு இல் கைவினை கோலம் ஆர்ந்ததே – சிந்தா:12 2428/4
விழுத்தகு மணி செவி வெண்பொன் கைவினை
எழில் பொலி படியகம் இரண்டு பக்கமும் – சிந்தா:12 2472/1,2
மத்தக மயிர் என வளர்த்த கைவினை
சித்திர காவகம் செல்வன் எய்தினான் – சிந்தா:13 3026/3,4
கைவினை செய்த சொல் பூ கைதொழுது ஏத்தினனே – சிந்தா:13 3145/4

TOP