ற – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

றக்அத்தின் (1)

ஈங்கு இயற்றியது இரண்டு றக்அத்தின் கசுறாம் அன்றே – சீறா:4202/4

மேல்


றக்அத்தை (1)

ஆங்கு இவர் எழுந்து இரண்டாம் றக்அத்தை அடுத்து செய்து – சீறா:4202/1

மேல்


றகாகு (1)

அதிர்தரு மதீன மூதூர் அண்ணல் தாத்துற் றகாகு
பதியினில் வாழும் கத்துபான் எனும் கேளிர்-தம் மேல் – சீறா:4178/2,3

மேல்


றக்ஆத்து (1)

நின்று இரண்டு றக்ஆத்து நல் நெடியனை வணங்கி – சீறா:1871/2

மேல்


றகுமான் (1)

மடம் அபுதுற் றகுமான் இறந்திட – சீறா:4973/1

மேல்


றகுமானுடன் (1)

அரும் புவிக்கு அரசு அபுதுர் றகுமானுடன்
தரும் புகழ் சுபைறு தல்காவும் சகுதுவும் – சீறா:1318/3,4

மேல்


றகுமானும் (3)

தட வெண் கவிகை சுபைறொடு தல்காவும் அப்துர் றகுமானும்
புடை விட்டு அகலா செழும் தேனை பொருத்தும் சிறை வண்டு என தொழுதார் – சீறா:1337/3,4
மாண் தயங்கிய வேல் உயையினாவும் போர் மல்கு அபுதுற் றகுமானும்
தாண்டு வாம் பரியின் விறலினர் வெற்றி தலைவர் நாற்பதின்மருமாக – சீறா:4926/2,3
சாற்று அபுதுற் றகுமானும் சார்ந்தனன் – சீறா:4966/4

மேல்


றசூல் (1)

முச்சகமும் புகழ் முகம்மது றசூல் தம் இதழினில் புன்முறுவல் தோன்றி – சீறா:1652/2

மேல்


றப்பனா (2)

ஆதியே ஹக்கா றப்பனா இறையே அழிவு இலா பேரின்ப வாழ்வே – சீறா:132/1
மோகமுற்ற தனி றப்பனா உனது முனிவினால் இவர்கள்-தங்களை – சீறா:1437/2

மேல்


றபாகும் (1)

மனையினுக்கு உரியனாக வந்தவன் றபாகும் வெற்றி – சீறா:4918/3

மேல்


றபீயு (1)

ஆசிலாதவரொடும் றபீயு லவ்வலின் – சீறா:2727/1

மேல்


றபீயுல் (2)

அம் மதி மாச தொகையினில் றபீயுல் அவ்வலில் பனிரண்டாம் தேதி – சீறா:254/2
வையகம் மதிக்கும் முகம்மதின் வயது நாற்பதில் றபீயுல் அவ்வலினில் – சீறா:1251/3

மேல்


றபீவுல் (2)

வரிசை நேர் றபீவுல் அவ்வல் மாதம் ஈரைந்து நாளில் – சீறா:1256/1
வரும் முறை பதினான்கு ஆண்டினில் மாச தொகையினில் றபீவுல் அவ்வலினில் – சீறா:2530/2

மேல்


றமலால் (1)

பெறு கதி றமலால் என்ன பெருகிய நோன்பு-தன்னை – சீறா:3352/2

மேல்


றவுலாவில் (1)

வில் பொதி தவள வெண் நிலா மணியால் வியன் உற திருத்திய றவுலாவில்
புகுந்து இருந்தார் இமையவர் பணி கேட்டு இறைஞ்சிட வரும் இறசூலே – சீறா:5011/3,4

மேல்