பை – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

பை (4)

பை தட பணி நெளிதர விண் துகள் பரப்ப – சீறா:559/1
புள்ளி பூத்திருந்த பை தலை பாந்தள் புறம் திரிந்து உறைந்திடாது இறந்து – சீறா:686/2
இலங்கு இழை மடவார் அடை பை கோடிகம் சாந்து இரு மருங்கினும் எடுத்து ஏந்த – சீறா:3160/2
பை அராவு பகர கிருபைசெய் – சீறா:4777/2

மேல்


பைங்கூழ் (1)

பாரினில் எழுந்த பைங்கூழ் பசை அற கருகி கானல்தேர் – சீறா:4743/2

மேல்


பைத்தல் (1)

பைத்தல் சூழி படு மலர் யாவையும் – சீறா:4829/2

மேல்


பைத்தலம் (2)

பைத்தலம் நெளிதர படை கொண்டு ஈண்டியே – சீறா:3630/3
பைத்தலம் கீழ் உற நெளிய திரண்டு நடந்தன உததி பதாதி மன்னோ – சீறா:4311/4

மேல்


பைத்துகள் (1)

தெரு எலாம் மண பைத்துகள் சொலிச்சொலி திரிவார் – சீறா:3149/4

மேல்


பைத்துல் (1)

கவின் உறும் பைத்துல் முகத்திசு என்னும் அ – சீறா:2953/2

மேல்


பைதலுற்று (1)

பைதலுற்று இ உரை பகர்தல் ஆயினர் – சீறா:4648/4

மேல்


பைம் (45)

இலங்கு பைம் கனி சிதறிட தருக்களை இடறி – சீறா:27/3
நலம் கொள் பைம் கதிர் கிரியிடை சரிந்தன நாரம் – சீறா:27/4
பனை_மது தேக்கி இரு விழி சேப்ப பைம் கழை நிகர்த்த தோள் அசைய – சீறா:51/1
தாறு கொண்ட பைம் கதலி தேமா பலா தரு தேன் – சீறா:72/1
நிரைத்த பைம் கதிர் ஆர் மரகத மணியால் நீள் நிலா கருப்புர தகட்டால் – சீறா:86/1
பைம் கடல் பிறந்து வணிகர் கை புகுந்த பரு மணி நித்தில குவையும் – சீறா:87/1
இருந்த பைம் கூழ் எலாம் கருகி எங்கணும் – சீறா:298/3
எரியும் நெய்யிடை இட்ட பைம் தளிர் என இருந்த – சீறா:454/3
பாடு உறு மாசு அணுகாது பைம் துணர் – சீறா:490/3
பைம் கடல் உடுத்த பாரில் பல் மணி வரையில் தீவில் – சீறா:608/1
பத்திர கரும் கண் செ வாய் பைம் தொடி பதுமராக – சீறா:634/2
கொடு வல் இருள் உண்டு கொழும் கதிர் பைம்
கடல் அம் தரை மீது எழு காரணம் உற்று – சீறா:705/1,2
படர்தரு திரை வயிறு அலைத்த பைம் புனல் – சீறா:732/1
நிறைந்தன ஈன்ற பைம் காய் நெருங்கின கனிகள் எங்கும் – சீறா:800/3
அடுக்கிய துணர் பைம் காவில் அகுமது என்று ஒருவன் அல்லால் – சீறா:812/2
பாத தாமரையில் தாழ்ந்து பைம் துணர் மௌலி சேர்த்தான் – சீறா:821/4
பைம் கதிர் விரித்து ஒளி பரப்பு மணி மாடம் – சீறா:878/4
பாய் திரை அமுது என பிறந்த பைம்_தொடி – சீறா:1029/2
உடல் குழைத்து எழுந்து செம் தேன் ஒழுக்கிய மலர் பைம் காவில் – சீறா:1034/1
விரி கதிர் உமிழும் பைம் பூண் மின் அகத்திடத்தில் சார்ந்தார் – சீறா:1272/4
விரி கதிர் மணி பைம் பூணார் வெகுளி உள் அடங்க ஏங்கி – சீறா:1571/2
மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில் – சீறா:1638/3
கொண்டல் கண் தூங்கும் செம் தேன் கொழும் கனி குழை பைம் காவும் – சீறா:1719/2
அறைதரும் திரை முத்து இறைத்த பைம் சலதி அகட்டிடையிருந்து வெண் கலைகள் – சீறா:1914/2
துன்னிட திரண்டு பைம் புல் துறை-தொறும் மேய்ந்து நாளும் – சீறா:2069/2
துடித்திட வேகத்தோடும் சென்றனன் துணர் பைம் காவை – சீறா:2384/2
வீங்கு திரை பைம் கடல் குண-பால் வெய்யோன் கரத்தின் விளர்த்தனவால் – சீறா:2556/4
முகில் அடைந்து கண்படுத்த பைம் பொழில்களும் முன்னி – சீறா:2706/2
பைம் தொடி கரிய கூந்தல் பாத்திமா பொருட்டால் வானில் – சீறா:3070/2
ஏர் அணிந்து இலங்கும் பைம் பூண் இளம் சிங்கம் இருந்தது ஒத்தே – சீறா:3079/4
திருத்திய கனக பைம் பூண் சே_இழை வதுவை வேட்டு – சீறா:3082/1
விடுத்து அதை விரித்து பைம் பொன் வரி முறை விளங்க நோக்கி – சீறா:3097/2
மரகத வரையில் சந்தொடு மருவி வந்ததோ வளைந்த பைம் கடலில் – சீறா:3157/1
வண்ண ஒண் புய பைம் கஞ்சுகியிடத்தின் வால் மணி தரள மாலிகையின் – சீறா:3158/1
முத்து அணி நிரைத்து துகிர் மணி சிறு கால் முறைபட நிறுவி பைம் கதிர் ஆர் – சீறா:3167/2
பத சிலம்பு அலம்ப சூழ்ந்த பைம் பொன் மேகலைகள் ஆர்ப்ப – சீறா:3172/1
சிலம்புகள் சிலம்ப பைம் பொன் சே_இழையவர்கள் கூடி – சீறா:3208/2
பல்லவ துணர் பைம் காவும் வீதியும் பல்பல் கோடி – சீறா:3225/3
தச்ச வாளியும் வேலும் பைம் குருதிகள் சாய்ப்ப – சீறா:3502/2
முருகு இருந்த பைம் தொடையலும் சருவந்த முடியும் – சீறா:3550/1
நிலவு வெண் கவிகை இடையிடை பதிந்து நிறைந்து இலங்குவன பைம் தடத்துள் – சீறா:3575/2
அரசர்கள் அணிந்த முத்த வெண் மணிகள் உதிர்ந்து பைம் குருதி அம் சேற்றில் – சீறா:3576/1
பத்தி பாய் ஒளி பைம் பொன் ஆரமும் – சீறா:3967/2
பறித்தனர் தட குவளை பைம் கமல நெய்தல் – சீறா:4130/2
நேய பைம் நாக மணியினை மருத நிலத்தினில் தொகுத்து நெல் குவி மேல் – சீறா:4755/3

மேல்


பைம்_தொடி (1)

பாய் திரை அமுது என பிறந்த பைம்_தொடி
காய் கனல் மெழுகு என கருத்து சிந்திட – சீறா:1029/2,3

மேல்


பைம்பொன் (3)

கருதிய வரத்தினாலும் கதிர் உமிழ்ந்து ஒழுகும் பைம்பொன்
வரையினின் மணி கொம்பு என்ன வரும் ஒரு மகவை ஈன்றான் – சீறா:606/3,4
இணை விழி பெற்றேன் என்ன இரு கையால் தழுவி பைம்பொன்
மணம் மலி பீடத்து ஏற்றி முகம்மதை இனிது போற்றி – சீறா:1038/2,3
தேம் குழல் கதீஜா பைம்பொன் சீறடி வணக்கம் செய்தான் – சீறா:1041/4

மேல்


பைய (3)

பைய நோக்கினன் கடுத்திலன் பாவையர் படை கண் – சீறா:3893/3
தூசை ஒதுக்கி பைய ஒர் மாற்றம் சொல்கின்றார் – சீறா:3927/4
வாலினை பைய ஆட்டி வாய் என தொனி வழங்கி – சீறா:4431/3

மேல்


பையப்பய (1)

பையப்பய அ எல்லியும் பட கீழ் திசை விளர்த்த – சீறா:4329/4

மேல்


பையப்பைய (1)

பாரிடை பையப்பைய செல் என பரிவில் சொல்வார் – சீறா:1158/2

மேல்


பையல்களோடும் (1)

பையல்களோடும் தாம் அ பதியிடை இருக்கும் காலை – சீறா:3684/3

மேல்


பையினை (1)

பருகு நீர் அற்ற தோல் துருத்தி பையினை
திருமுனம் வைத்தனர் தொட்டு செவ்வியோர் – சீறா:3287/2,3

மேல்


பையுடன் (1)

கடந்த செம் மணி பையுடன் கொடு கடல் ஏற – சீறா:32/3

மேல்