நூ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நூகு 3
நூகு-தம் 2
நூகு-வயின் 1
நூதன 2
நூந்து 1
நூல் 46
நூல்கள் 5
நூலவர் 1
நூலவர்கட்கு 1
நூலளவெனினும் 1
நூலால் 1
நூலிடத்தும் 1
நூலில் 2
நூலின் 2
நூலினில் 1
நூலினும் 1
நூலும் 2
நூலே 1
நூலோ 1
நூலோர்-தமக்கு 1
நூற்கு 1
நூற்றிருபத்துமூன்றினில் 1
நூற்றிருபது 1
நூற்றின் 2
நூற்றினும் 1
நூற்று 1
நூற்றெண்பது 1
நூற்றைம்பதின் 2
நூற்றைம்பது 2
நூற்றொன்றாயினும் 1
நூற்றோர் 1
நூறதாக 1
நூறாய் 1
நூறாயிரத்து 2
நூறாயிரம் 3
நூறி 1
நூறின 1
நூறு 4
நூறுபேருடன் 1
நூறும் 1
நூன்முறை 1

நூகு (3)

புக்கு மூன்றினின் நூகு நல் நபி மன பொலிவாய் – சீறா:192/2
விரிந்த காரண நூகு தம் காலத்தில் விண் மட்டு – சீறா:1223/3
இறந்திடா வகை நூகு நல் நபி இனிது அளித்தார் – சீறா:1849/2

மேல்


நூகு-தம் (2)

வரிசையும் இமையோர் துதிசெயும் பரிசும் வரப்பெறு நூகு-தம் மதலை – சீறா:143/1
பிறந்து நூகு-தம் பதினொரு தலைமுறை பின்னர் – சீறா:1224/2

மேல்


நூகு-வயின் (1)

திரு மக நூகு-வயின் உறைந்திருந்து சிறந்த பேரொளியினால் அவர்க்கும் – சீறா:142/2

மேல்


நூதன (2)

நூற்கு இது பொருந்துமோ இ நூதன செய்கை யாவும் – சீறா:1344/3
நூல் கடல் கரைகண்டவர்கள்-பால் அடுத்து கேட்டலும் நூதன நபியாய் – சீறா:2899/2

மேல்


நூந்து (1)

திகை-தொறும் தெரிய எரிந்த செம் நெருப்பு தேய்ந்து நூந்து அழிந்தன அன்றே – சீறா:259/4

மேல்


நூல் (46)

தெரிந்த செவ்வியர் முறை வழி தெளிந்தவர் செம் நூல்
சொரிந்த நாவினர் முதியவர் திரண்ட சொல் ஓதை – சீறா:96/1,2
துய்ய நூல் விரித்து அன நரை துலங்கிட கூனி – சீறா:458/3
அறிவு அக முகம்மதை கூட்டி ஆதி நூல்
நெறி தரு மக்க மா நகரை நீங்கியே – சீறா:483/2,3
அண்டர் நாயக நபி உண்டு என்று ஆதி நூல்
விண்டது தவறுறா மெய் என்று ஓதுவார் – சீறா:509/3,4
திறன் உறு செய்தி கேட்டு இதுவும் செவ்வி நூல்
இறை நபி பொருட்டு அலாது இலை என்று ஓதினார் – சீறா:533/3,4
முடிவில் எய்துவர் என்றனன் நீதி நூல் முறையால் – சீறா:576/4
விரிந்த நூல் உரையும் பொய்யா விளங்கு ஒளிர் வடிவது ஆக – சீறா:642/2
செல் நெறி வேத நல் நூல் தெளிந்து அறி இசுறா என்போன் – சீறா:807/2
காய் சின ஏறு போன்றான் கவலும் நூல் புலமையோனே – சீறா:813/4
விரியும் நூல் கடல் செவிமடுத்து உண்ட மெய் தவத்தோன் – சீறா:835/4
உறைகுவன் ஒருவன் உண்டு அணித்து என்று ஓதும் நூல்
துறைவலார் நாள்-தொறும் சொற்ற சொற்படி – சீறா:905/2,3
கடந்த நூல் முறையினாலும் கல்வியோர் கேள்வியாலும் – சீறா:1057/2
மீட்டும் மெய்ம்மறை நூல் மாற்றம் விரித்து எடுத்து இயம்பும் என்றார் – சீறா:1265/4
திரு கிளர் புவியில் விண்ணோர் தெளிதரும் அறிவும் முன் நூல்
இருக்கினில் அறிவும் தோன்றி இடன் அற பெருகி நல்லோர் – சீறா:1266/2,3
இறையவன் நபி இவர் என்ன வேத நூல்
துறையொடும் ரகசிய சொல்லில் சொல்லினார் – சீறா:1314/3,4
கனத்த நூல் முறையின் நுட்பம் கண்ட வல்லவர்கள் அன்றே – சீறா:1357/4
கடந்த நூல் மறை பெரியவர் இரு செவி கசப்ப – சீறா:1367/3
இறுத்து நூல் இரட்டை நா எடுத்து இயம்புமால் – சீறா:1628/4
ஆதி நூல் உரை தெரிதரு ஹபீபு அரசு அறிக – சீறா:1684/1
அபுஜகில் தடுத்தனன் என்ன ஆதி நூல்
புவியினில் விளக்கி நல் புகழ் நடாத்திய – சீறா:1993/2,3
கனத்த நூல் முறையின் வாய்த்த நபி கலிமாவை ஓதி – சீறா:2378/3
பலன் பெற மெய் நூல் ஆர வேய்ந்தது பரிவின் அன்றே – சீறா:2570/4
முகம்மது இருக்கும் சார்பில் சிலம்பி நூல் மறைப்ப ஓர்பால் – சீறா:2571/1
வரை முழை சிறு வாயிலில் சிலம்பி நூல் மறைப்ப – சீறா:2615/1
புதிய சித்திரம் என புரி நூல் உடை குயவன் – சீறா:2654/1
புரி வெண் நூல் குழல் முதியவள் மனையில் புக்கு இருந்து – சீறா:2697/3
என் உளம் பொருந்தும் நூல் மற்று எவை அவை தெருள்பவன் மன்னோ – சீறா:2783/4
ஒப்ப அரும் மறை நூல் உரைத்தவை கேட்டும் உளத்து அறிவொடும் இருந்தனனால் – சீறா:2896/4
நூல் கடல் கரைகண்டவர்கள்-பால் அடுத்து கேட்டலும் நூதன நபியாய் – சீறா:2899/2
பகும் மனத்து அறிவோர்க்கு உரைத்தும் அங்கு அவர்கள் தெரிந்து நூல் படிப்படி கேட்டும் – சீறா:2904/2
விரிதரு வெள்ளிடை படர்ந்து வேத நூல்
உரைதரும் திரு நபியிடத்தின் ஓர் நொடி – சீறா:2957/2,3
அரிந்து வெம் குபிரை ஓதும் ஆதி நூல் கலிமா வித்தி – சீறா:3068/1
முறை என தலைமேல் கொண்டேன் முன்னர் நூல் முழுதும் வல்லீர் – சீறா:3085/3
நூல் எனும் மருங்குல் பேதை நுவல அரும் உவகை எய்தி – சீறா:3090/2
சொல்லுடன் பொருள் என சுருதி நூல் முறை – சீறா:3260/1
தலைவருக்கு இ மொழி சாற்றி வேத நூல்
மலிதரும் கேள்வி அபாசல்மா-தமை – சீறா:3300/1,2
பொழியும் நல் மறை நாவினர் புகலும் நூல் எவையும் – சீறா:3362/3
சுருதி நூல் முறை பெருக்கிய நாவினர் சூழ – சீறா:3469/2
விரியும் நூல் கலை யாவும் ஈமானுமே வேண்டி – சீறா:3859/2
சிறிய நூல் இடை தெரிவைமார்களும் – சீறா:3970/1
போற்றும் வேத நூல் புண்ணியர் – சீறா:4140/1
ஆதி நூல் சமயம் வீணில் தேய்வுற அழகு இலாது – சீறா:4381/1
நோக்கினார் கரும் பாறையை இறுக நூல் கலையை – சீறா:4409/1
சாகை நூல் தழும்பு நாவார் கேட்ப வார்த்தைப்பாடு ஈது என்று – சீறா:4906/3
சொற்பொருள் சிதகா பாயிரம் பாகை சுருதி நூல் வல்லவர்-தம்பால் – சீறா:5011/1
சுருதி நூல் மறாத நாவால் சொற்றனர் அவர்கட்கு அன்றே – சீறா:5014/4

மேல்


நூல்கள் (5)

பின் அணித்து ஆதி தூதர் பிறப்பர் என்று ஆதி நூல்கள்
பன்னியது உளது இன்று எங்கள் பார்வைகள் குளிர கண்டேம் – சீறா:2267/1,2
முன்னவர் ஓதும் வேத மூன்றினும் தெரிந்த நூல்கள்
பல் நெறி ஞான நூல்கள் இனையன பலவும் தொக்க – சீறா:2783/1,2
பல் நெறி ஞான நூல்கள் இனையன பலவும் தொக்க – சீறா:2783/2
செப்ப அரு நூல்கள் பலபல உணர்ந்தும் செவி வழி ஒழுகிட பெரியோர் – சீறா:2896/3
குறைஷி அம் குலத்தில் உதித்து நல் நூல்கள் கோது அற தெரிந்து நம் நயினார் – சீறா:2900/2

மேல்


நூலவர் (1)

விதி மறை நூலவர் விருத்தர் மன்னவர் – சீறா:536/1

மேல்


நூலவர்கட்கு (1)

அலங்கரித்து அயினி சுழற்றி நூலவர்கட்கு அரு நிதி மணியொடும் வழங்கி – சீறா:3160/1

மேல்


நூலளவெனினும் (1)

நூலளவெனினும் நெகிழ்ந்தில அதனின் வலியினை நுவலுதற்கு அரிதே – சீறா:2310/4

மேல்


நூலால் (1)

செருகிய கடத்தும் தேடி சேரலர் சிலம்பி நூலால்
புரை அற போர்த்து வைகும் பொதும்பரின் வாயில் வந்தார் – சீறா:2573/3,4

மேல்


நூலிடத்தும் (1)

தெரிதரு மறைகள் மூன்றினும் பெரியோர் செய்யுளில் கணித நூலிடத்தும்
அருளினில் உருவாய் தோன்றியே ஆதத்து ஐம்பதின் தலைமுறை பின்னர் – சீறா:2897/1,2

மேல்


நூலில் (2)

கருக்கு மை விழி துயில்தரு பொழுது ஒரு கனவு கண்டனர் நூலில்
சுருக்கு நுண் இடை பொலன் தொடி திருந்து இழை சுடர் மணி கதிஜாவே – சீறா:647/3,4
பல்வித நூலில் தேர்ந்து பல சமயங்களாக – சீறா:791/1

மேல்


நூலின் (2)

மறு இலா வேத நூலின் முகம்மதின் கலிமா ஓதி – சீறா:2826/1
கொத்து அலர் குழலும் செம்பொன் குவி முலை சுணங்கும் நூலின்
எய்த்த சிற்றிடையும் காந்தி வளை நிரைத்து எடுத்த கையின் – சீறா:3193/2,3

மேல்


நூலினில் (1)

அம்மல் ஓதி வெண் நூலினில் பிறங்கிட அழகு ஆர் – சீறா:2682/1

மேல்


நூலினும் (1)

நூலினும் வழக்கினும் நுவலுகின்றதே – சீறா:2448/4

மேல்


நூலும் (2)

நெருங்கிய சிலம்பி நூலும் நீள் சிறை புறவின் கூடும் – சீறா:2577/3
வேதமும் கலையும் ஞான விளக்கமும் மனுவின் நூலும்
காதலில் பயந்த மைந்தர் கருத்தினில் சிறப்ப செய்தல் – சீறா:2805/2,3

மேல்


நூலே (1)

நொடி நொடிப்பது போலும் ஒத்து இருந்தது என் நூலே – சீறா:20/4

மேல்


நூலோ (1)

சினவு வில் காமன் மலைக்கும் தன் மனைக்கும் சேர்த்திய மய நடு நூலோ
இனனுடன் அழகு நிறை குடியிருந்த இவள் வயிறு அணி மயிர் ஒழுங்கே – சீறா:1968/3,4

மேல்


நூலோர்-தமக்கு (1)

முதிர் கலை நூலோர்-தமக்கு எடுத்து இசைத்து முன் மறை விளக்கமும் விளக்கி – சீறா:1927/3

மேல்


நூற்கு (1)

நூற்கு இது பொருந்துமோ இ நூதன செய்கை யாவும் – சீறா:1344/3

மேல்


நூற்றிருபத்துமூன்றினில் (1)

ஐயம் இல் ஆறாயிரத்தினில் ஒரு நூற்றிருபத்துமூன்றினில் அழகா – சீறா:1251/2

மேல்


நூற்றிருபது (1)

இசையும் நூற்றிருபது வருடமும் கசுறசு – சீறா:2149/1

மேல்


நூற்றின் (2)

மறு அற உலகில் நில்லா வயது ஒரு நூற்றின் மேலும் – சீறா:1755/1
மின் அவிர் பேழை நூற்றின் மேலும் உண்டு அரும் காப்பு இன்றி – சீறா:2783/3

மேல்


நூற்றினும் (1)

மின்னும் வெம் கதிர் வேலவர் நூற்றினும் மேலார் – சீறா:2704/2

மேல்


நூற்று (1)

தெள்ளிய மதியின் கதிரினை நூற்று செய்து எனும் துகில் இடை சேர்த்தி – சீறா:3154/2

மேல்


நூற்றெண்பது (1)

இருவருக்கு இருந்த அமுதினால் ஒரு நூற்றெண்பது பெயர்க்கு இனிது அருத்தி – சீறா:2866/2

மேல்


நூற்றைம்பதின் (2)

பலிசையும் முதலும் நூற்றைம்பதின் கலம் ஆகும் எண்ணி – சீறா:4288/1
விதம் பெறும் குவையின் மற்று ஓர் குவையினின் வேண்டு நூற்றைம்பதின்
கல பழமும் காபிர் பண்புடன் அளந்தும் நீடு அற்புதம் – சீறா:4293/1,2

மேல்


நூற்றைம்பது (2)

பத்து இரண்டு நூற்றைம்பது என்றிடும் எடைப்படியே – சீறா:2945/2
பொருவு இல் நூற்றைம்பது புரவி-தம்மொடும் – சீறா:3301/3

மேல்


நூற்றொன்றாயினும் (1)

அன்னவர் திறமை நூற்றொன்றாயினும் அமைத்தாமின்றே – சீறா:4380/3

மேல்


நூற்றோர் (1)

பாதியில் பாதி நூற்றோர் பங்கினில் செம்பொன்_நாட்டின் – சீறா:3045/2

மேல்


நூறதாக (1)

புடைபடும் இறும்பும் கல்லும் பொடிபடு நூறதாக
திடர் இடம் குழியதாக குழியிடம் திடர்-அதாக – சீறா:3413/2,3

மேல்


நூறாய் (1)

நொந்திருந்து அழுதேன் பூட்டும் தளை எல்லாம் நுறுங்கி நூறாய்
சிந்தின மனத்தில் கூண்ட துன்பமும் சிதறிற்று அன்றே – சீறா:2845/3,4

மேல்


நூறாயிரத்து (2)

ஆராய்வில் மிக்கபேர் நூறாயிரத்து நாலாறாயிரத்து நபிமார் – சீறா:8/3
நீடு இலக்க நூறாயிரத்து ஒன்பதினாயிரம் நிறை தேர்ந்த – சீறா:659/3

மேல்


நூறாயிரம் (3)

பெயர் நிறை உண்டு என்ன இயம்பி நூறாயிரம் பேர்க்கு – சீறா:421/2
இன்னமும் இவை போல் நூறாயிரம் விதம் கண்ணுற்றாலும் – சீறா:1553/1
ஐயனுக்கு ஒன்று நூறாயிரம் என அமைந்த ஏவல் – சீறா:3370/2

மேல்


நூறி (1)

நொந்து நோக்கிடின் அவை எலாம் ஒருங்குடன் நூறி
வெந்து தாழ்ந்து ஒரு நொடியினில் துகள்-அதாய் வீழும் – சீறா:4278/3,4

மேல்


நூறின (1)

ஆன வேகமும் அவிய நூறின
சோனை மாரியில் சோரி வீழ்தர – சீறா:3963/2,3

மேல்


நூறு (4)

மா தவன் முகம்மது என்போன் வளர்த்த வஞ்சனைக்குள் நூறு
பேதம் ஒன்றதற்கு காணாது இதனை நீர் பிதற்றி பேச – சீறா:1552/2,3
முரணில் நூறு பங்கினில் ஒன்றும் காணாது – சீறா:1756/2
உங்கள்-தமக்கு அருள்வேன் நூறு ஒட்டகை ஈது ஒட்டம் என உரைப்ப நோக்கி – சீறா:2172/2
அரு வரை நேர் ஒட்டகம் நூறு அடல் அரி ஏறு என்னும் அபூபக்கர்க்கு அன்றே – சீறா:2173/4

மேல்


நூறுபேருடன் (1)

குசை பரி கொற்றவ நூறுபேருடன்
இசைத்து எனை விட்டிரால் அவர் பின் ஏகியே – சீறா:4993/3,4

மேல்


நூறும் (1)

பரிவினில் மற்ற நூறும் தம்வசப்படுத்தினாரால் – சீறா:3675/4

மேல்


நூன்முறை (1)

உலகில் நூன்முறை அடு தொழில் புது மணம் ஊட்டி – சீறா:3139/3

மேல்