நு – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுகர் 1
நுகர்தல் 1
நுகர்ந்த 1
நுகர்ந்தான் 1
நுகர்ந்திட 1
நுகர்வோர் 1
நுகைமு 5
நுங்க 1
நுங்கட்கு 4
நுங்கள் 5
நுங்கிய 1
நுட்ப 4
நுட்பம் 1
நுடங்க 4
நுடங்கி 2
நுடங்கிய 1
நுடங்கு 3
நுடங்கும் 3
நுண் 8
நுண்ணிடையார் 1
நுண்ணிடையார்-தம்மிடத்து 1
நுண்ணிடையீர் 1
நுணங்கி 1
நுணங்கு 1
நுதல் 28
நுதலார் 2
நுதலாள் 1
நுதலிடத்து 2
நுதலிடை 1
நுதலியர் 2
நுதலில் 1
நுதலின் 1
நுதலினில் 1
நுதலும் 3
நுதற்கு 5
நுதி 2
நுதிகள் 1
நும் 78
நும்-தம் 15
நும்-பால் 9
நும்-வயின் 2
நும்பொருட்டால் 1
நும்மால் 1
நும்மிடத்தில் 1
நும்மிடத்தினில் 2
நும்மிடத்து 2
நும்மிடம் 2
நும்முழை 1
நும்மை 2
நும்மொடும் 1
நும்மோடு 1
நுமக்கு 7
நுமது 2
நுமர் 3
நுமர்க்கு 1
நுமர்களுக்கு 1
நுமுறூது 1
நுமையிலாவை 1
நுரை 9
நுரைத்து 1
நுரைதர 1
நுலறு 1
நுவணையும் 2
நுவல 2
நுவலுகின்றதே 1
நுவலுதற்கு 2
நுவன்றாள் 1
நுழைத்திடுவார் 1
நுழைந்து 2
நுழைபவரை 1
நுளைந்தது 1
நுறுங்கி 1
நுறுங்கியது 1
நுறுங்கில 1
நுறுங்கின 2
நுனி 3
நுனை 15

நுகர் (1)

திரை நுகர் கரும் சூல் கனம் கிடந்து அலற திகைத்து எழும் பிடி மடி சுரந்த – சீறா:4921/1

மேல்


நுகர்தல் (1)

அனைய நல் பிசுமில் ஓதி அமுது என நுகர்தல் செய்தார் – சீறா:2246/4

மேல்


நுகர்ந்த (1)

மா தவ முகம்மதின் வனப்பினை நுகர்ந்த
தூதன் ஒரு வில்லினிடு தூரம்-அதில் நின்று – சீறா:1779/1,2

மேல்


நுகர்ந்தான் (1)

வண்டு என மலர் கர வனப்பினை நுகர்ந்தான் – சீறா:1778/4

மேல்


நுகர்ந்திட (1)

நென்னலில் அடும் கஞ்சத்தை நுகர்ந்திட நேர்ந்தேனல்லால் – சீறா:4954/3

மேல்


நுகர்வோர் (1)

இடம் அற விருந்து விருந்தொடு நுகர்வோர் மனை இடம் எண்ணினை மறைக்கும் – சீறா:90/2

மேல்


நுகைமு (5)

நடை உணர் நாயக நாளும் குறித்து உரைக்கும் நாமமோ நுகைமு என்போன் – சீறா:4535/4
தலைவர் என்று ஏத்திய நுகைமு சார்ந்தனர் – சீறா:4542/4
மொழி கொடுத்து அடல் வலி நுகைமு மொய் இருள் – சீறா:4562/1
மா தவன் நுகைமு சொல் வாய்மை உண்மை என்று – சீறா:4566/3
நய நுகைமு சொல் சொற்படி முகம்மதின் நளின – சீறா:4618/1

மேல்


நுங்க (1)

நுரை இரு கரைகளும் நுங்க மால் நதி – சீறா:733/3

மேல்


நுங்கட்கு (4)

குறைபட நினைக்கின்றீரால் குடி குடி வடுவும் நுங்கட்கு
இறையவன் முனிவும் பாரில் எண்ணிலா பழியும் சூழும் – சீறா:413/2,3
வித்தகர் முகம்மதின்னை விடும் எனை நுங்கட்கு ஏற்ற – சீறா:415/3
இறையவன் விதித்த வண்ணத்து இறந்தது என்பவையும் நுங்கட்கு
உறை பசிக்கு உணவு என்று அன்பாய் ஓதினர் கேட்டு மீட்டு – சீறா:2290/2,3
அயல் அகல்வதுவே நுங்கட்கு அடவு என அறிய வேண்டும் – சீறா:2371/4

மேல்


நுங்கள் (5)

தொட நினைத்தவரும் இல்லை தொடர்ந்து கை பற்றி நுங்கள்
இடம் உற இருத்தல் செய்தீர் ஏது காரணமோ எங்களுடன் – சீறா:412/2,3
மாறுபாடு அன்றி நுங்கள் வாகனத்து உணவே என்ன – சீறா:2291/3
பிடித்து ஒரு மொழியில் நெஞ்சம் பேதுற அவனை நுங்கள்
இடத்தினில் வரச்செய்வேன் யான் இதத்தொடும் இனிய மாற்றம் – சீறா:2382/1,2
அருந்திட உடலம் வீழ்த்தி ஆர் உயிர் பறித்து நுங்கள்
பெரும் தமர்-தமக்கும் கூட பிழை விளைத்திடுவன் மாதோ – சீறா:2390/3,4
அடிகளா வலம் கொடுத்த ஆண்டவன் ஆணை நுங்கள்
உடல் செறி உயிரை எல்லாம் ஓட்டுவன் கணை ஒன்றாலே – சீறா:4953/2,3

மேல்


நுங்கிய (1)

நுங்கிய இருளிடை நோக்கினான் அரோ – சீறா:3640/4

மேல்


நுட்ப (4)

புதியது ஓர் கனவின் நுட்ப பொருளினை தேர்ந்து சோதி – சீறா:1059/1
சொல்லின் உட்பொருளின் நுட்ப துடர் அறிந்து உரைக்கவேண்டின் – சீறா:1076/2
விதியின் நுட்ப மறை கற்றவன் புகழின் மிக்கனான அபுகைசவன் – சீறா:1424/3
வாள் திறத்து அறபி வீரர் மகிழ்ந்து எமர் வழக்கின் நுட்ப
பூட்டு அறுத்து உரைக்க வேண்டும் என புகழ்ந்து இருக்கும் காலை – சீறா:1558/2,3

மேல்


நுட்பம் (1)

கனத்த நூல் முறையின் நுட்பம் கண்ட வல்லவர்கள் அன்றே – சீறா:1357/4

மேல்


நுடங்க (4)

மின் இடை நுடங்க சிலம்பு ஒலி சிலம்ப மேகலை திரள் மணி கதிர் செம்பொன்னொடும் – சீறா:82/1
பல்லியம் கறங்க கொடி திரள் நுடங்க பால் நிற கவரிகள் சுழற்ற – சீறா:1010/1
சேனையில் திரளில் செம்பொன் செழும் கொடி நுடங்க வெற்றி – சீறா:1717/1
கரு முகில் உற கதலிகை திரள் நுடங்க
இருள் அறு மதி கவிகை எங்கணும் இலங்க – சீறா:4125/2,3

மேல்


நுடங்கி (2)

தேர் இனம் திரண்டு கூடி செழும் கொடி நுடங்கி நிற்ப – சீறா:928/2
புனை மணி பிறழ மின் என நுடங்கி புதுமையில் தோன்ற நின்றனளால் – சீறா:1973/4

மேல்


நுடங்கிய (1)

தட துகில் கொடி நுடங்கிய மதிள் புறம் சார்ந்தான் – சீறா:1699/4

மேல்


நுடங்கு (3)

நுடங்கு இடை மடவார் கருத்தினை கவரும் நுலறு எனும் அழகுறும் அரசர் – சீறா:159/2
விரி கதிர் மணிமேகலை நடு கோத்து விளங்கிட நுடங்கு மெல் இழையோ – சீறா:1969/2
நீக்கினர் வேலை அறல் அற பருகும் நிழல் மழை தவழ் கொடி நுடங்கு
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார் – சீறா:5022/3,4

மேல்


நுடங்கும் (3)

துகில் கொடி நுடங்கும் வெள்ளி வரை என கதை கொள் மாடம் – சீறா:920/2
படர் கொடி நுடங்கும் முல்லை பரப்பையும் நீந்தி ஈந்தின் – சீறா:1723/3
வெருவுறும் வங்கூழ் ஆட்டிட நுடங்கும் வெண் கொடி மாடமும் சிறந்து – சீறா:5010/2

மேல்


நுண் (8)

கொடி என வயங்கு நுண் இடை அலிமா கொவ்வை அம் கனி இதழ் திறந்து – சீறா:387/2
வாடு மெல் இழை பாதி நுண் இடை மயில் அலிமா – சீறா:436/1
ஓங்கு மும்மறை நுண் பொருள் அனைத்தையும் உணர்ந்து – சீறா:553/2
சுருக்கு நுண் இடை பொலன் தொடி திருந்து இழை சுடர் மணி கதிஜாவே – சீறா:647/4
கொம்பு என ஒசிந்த நுண் இடை கதீஜா குறித்திடு கனவினை தேர்ந்து – சீறா:991/2
தெறித்த நுண் துளி முகில் குடை முகம்மதை செகுப்ப – சீறா:1541/2
சோனை மா முகில் கவிகை நுண் துவலைகள் தூற்ற – சீறா:2705/3
அருகு நுண் இடை ஒடிந்திடும் எனும்படிக்கு அசைய – சீறா:3146/3

மேல்


நுண்ணிடையார் (1)

பணி தொகை சுமத்தி இளைத்த நுண்ணிடையார் பங்கய கர பனிநீரால் – சீறா:1200/1

மேல்


நுண்ணிடையார்-தம்மிடத்து (1)

வஞ்சி நுண்ணிடையார்-தம்மிடத்து உறையார் முகம்மது மனத்திடத்து உறைந்தார் – சீறா:1015/4

மேல்


நுண்ணிடையீர் (1)

எய்த்த நுண்ணிடையீர் வேந்தர் ஏறு அலி அகலாது என்-தன் – சீறா:3200/1

மேல்


நுணங்கி (1)

கோடுகின்ற துளை மூரல் நெட்டு உடல் குழைத்து இ வெம்மையில் நுணங்கி வெம் – சீறா:4215/3

மேல்


நுணங்கு (1)

மின் நுணங்கு வேல் ஆரிதை வெற்றியால் வியத்தி – சீறா:350/3

மேல்


நுதல் (28)

சிந்துர பிறை நல் நுதல் கரும் கூந்தல் செ வரி தடங்கண்ணார் நெருக்கும் – சீறா:85/2
இந்து வாள் நுதல் ஆமினா மனை வெறுத்து இருந்தார் – சீறா:226/2
சிலை நுதல் கயல் கண் ஆமினா என்னும் செவ்வி பூத்திருந்த பொன் மடந்தை – சீறா:281/1
பிறை நுதல் கரும் குழல் பெண்கள் யாவரும் – சீறா:316/1
திங்கள் வாள்_நுதல் அளித்தியேல் செல்வமும் செருக்கும் – சீறா:442/3
சிலை நுதல் ஆமினா இறந்த செய்தியின் – சீறா:522/1
சிலை நுதல் பவள செ வாய் அனை எனும் செம் பொன் பூவில் – சீறா:609/3
சிலை_நுதல் தெளிய தேர்ந்து ஓர் செவ்வியோன்-தன்னை கூவி – சீறா:630/2
ஊறிய தொண்டை செ வாய் ஒள்_நுதல் மனையில் அன்றே – சீறா:633/4
வில்லின் மேல் பிறை தோற்றியது என நுதல் விளங்கிய மட_மானே – சீறா:662/4
பகுத்த நல் நுதல் துலங்கிட சுடிகைகள் பதிப்பார் – சீறா:1119/2
சிறுபிறை நுதல் கதீஜா திரு மனையிடத்தும் வெற்றி – சீறா:1128/1
சிறு நுதல் பெரும் கண் குவி முலை செ வாய் சேடியர் இரு மருங்கு ஈண்டி – சீறா:1205/3
சிலை என வளைந்த சிறு நுதல் கதீஜா திருமனை இடத்தினில் வருவார் – சீறா:1246/4
சிந்திட கரும் பிருகுடி நுதல் செல சினந்து – சீறா:1528/3
சிலை நுதல் கதீஜா கேள்வன் செய் தொழில் வஞ்சம்-தானோ – சீறா:1549/3
தரையின் நுதல் தைவரலாய் அடிக்கடி தாழ்ந்து எழுந்து இரு கை-தன்னை ஏந்தி – சீறா:1647/3
செய்ய வாய் ஒளி வெண் மூரல் சிறு நுதல் பெரிய கண்ணால் – சீறா:1750/1
வரி விழி சிறு நுதல் மடந்தை நல் நெறி – சீறா:1975/1
மறையவர் உரைத்த மாற்றம் மதி நுதல் மடந்தை கேட்டு இன்று – சீறா:3085/1
சொரிந்த பூம் குழல் மதி நுதல் கயல் விழி துவர் வாய் – சீறா:3134/1
பேசுவார் சிலர் சிறு நுதல் பெரிய கண் மடவார் – சீறா:3148/4
சிற்றிடை ஒசிய சோதி சிறு நுதல் வெயர்ப்ப வாய்ந்த – சீறா:3181/1
நுதல் பிறை கதிர்கள் ஓடி மேகத்தில் நுளைந்தது என்ன – சீறா:3212/1
இந்து எனும் நுதல் மனை இருந்த யாவையும் – சீறா:3249/3
இலகு நல் நுதல் சிற்றிடையவர் பலாண்டு இசைப்ப – சீறா:3841/3
சுரி குழல் பணை தோள் பிறை நுதல் கனி வாய் துணை முலை கொடி இடை கரிய – சீறா:4117/3
கரிய குழல் பிடியின் நடை சிலையின் நுதல் செழுமை தரும் கணிப்பில் மாதர் – சீறா:4304/2

மேல்


நுதலார் (2)

பிணையை நேர் விழி கனி மொழி சிறு பிறை நுதலார்
அணையும் தம்-வயின் துனி பல அகற்றினர் அன்றே – சீறா:1277/3,4
நனி புதுமை குரிசில் உரைதர மகிழ்ந்து கனி_மொழி நல் நுதலார் நின்ற – சீறா:3755/1

மேல்


நுதலாள் (1)

தோற்றிட தோற்றி விளங்கும் நல் நுதலாள் சுடரும் முள் வாரணத்து அலகும் – சீறா:1957/2

மேல்


நுதலிடத்து (2)

எழில் தரு திரு நுதலிடத்து இலங்குமே – சீறா:173/4
எங்கள் நாயகர் அப்துல்லா நுதலிடத்து இருந்து – சீறா:181/3

மேல்


நுதலிடை (1)

திவளும் நல் ஒளி நுதலிடை திலதங்கள் அணிவார் – சீறா:1121/3

மேல்


நுதலியர் (2)

சிந்துர பிறை நல் நுதலியர் திளைத்த சிற்றிலும் பேரிலும் தேடார் – சீறா:1014/2
இந்து எனும் நுதலியர் இயம்ப செவ்விய – சீறா:3244/3

மேல்


நுதலில் (1)

தாது அவிழ் மலர் தார் ஆத நல் நுதலில் தண்ணெனும் கதிர்கள் விட்டு ஒழுகும் – சீறா:126/1

மேல்


நுதலின் (1)

நடந்து எதிர் வர கண்டு அம்ம நின் நுதலின் நலம் கிளர் பேரொளி ஒன்று உண்டு – சீறா:274/3

மேல்


நுதலினில் (1)

கண்களில் சேப்பும் நுதலினில் வியர்ப்பும் கரிய மை மீசையின் முறுக்கும் – சீறா:3581/1

மேல்


நுதலும் (3)

தேம் கமழ் குழலும் சோதி சிறுபிறை நுதலும் வாய்ப்ப – சீறா:116/1
பிஞ்சு நல் நுதலும் கண்டு உளத்து அடக்கி பெற்றவாறு என்-கொல் என்று எண்ணி – சீறா:275/3
வெல்லும் சசி முகமும் வளை வில்லின் தர நுதலும்
செல்லும் பிடி நடையும் துவழ் சின்னஞ்சிறிது இடையும் – சீறா:4348/1,2

மேல்


நுதற்கு (5)

மதி_நுதற்கு உரைத்து போற்றி மனம் மகிழ்ந்து எழுந்து வீரம் – சீறா:1059/2
வாள் நுதற்கு அணி கடு வரி விழிக்கு மை வரை-மின் – சீறா:1101/4
பொருத்து இளம் பிறையில் விரிச்சிகன் கதிர்கள் புரண்டு என நுதற்கு அணி புனைந்தார் – சீறா:1202/4
வாள்_நுதற்கு உரைதர மறுப்பர் தம் உளம் – சீறா:1323/1
எடுத்தது ஓர் கரத்தில் தண்டால் இளம் பிறை நுதற்கு மேல்-பால் – சீறா:1570/3

மேல்


நுதி (2)

நுதி தரும் வேலீர் ஆசு உறா நோன்பு நோற்பதை நோக்குவீர் எனவும் – சீறா:2875/4
நுதி கொளும் கதிர் வேல் காபிரை பதுறில் அடர்ந்த முந்நூற்றுடன் பதினான்கு – சீறா:3596/1

மேல்


நுதிகள் (1)

நுதிகள் வேல் வலம் தாங்கு சல்மான்-தனை நோக்கி – சீறா:2937/3

மேல்


நும் (78)

மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே – சீறா:277/3
மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே – சீறா:277/3
உறுவதோ நும் மனம் என்ன ஓதினார் – சீறா:324/4
வாட்டம் இல்லது ஓர் நும் பதி செல்க என வகுத்தார் – சீறா:344/4
அரு மறை முகம்மதே நும் அகத்தினில் அஞ்சல் வேண்டாம் – சீறா:424/1
நாடி நும் மனை புகும் என தமர்களை நடத்தி – சீறா:436/3
உங்கள்-தம் மனைக்கு உளது ஒரு குழந்தை நும் உயிர் போல் – சீறா:442/1
நன்று நும் மனத்து எண்ணிய உவகையால் நடுக்கம் – சீறா:443/1
புகன்ற புன்மொழி போதும் நும் பதி புக போதும் – சீறா:444/1
பிறந்த ஊர் குலம் நும் பெயர் இ பெரும் பெயரோடு – சீறா:557/3
திரும்பும் நும் மனை சென்ம் என உரைத்தனன் திறலோன் – சீறா:560/4
கலைவது அன்றி நும் இடர் தவிர்த்திடுவதும் கடிதே – சீறா:564/4
தவிரும் நும் பதி புகும் என உரைத்தனன் தவத்தோன் – சீறா:565/4
விடுத்திர் நும் மன நினைவு என காபிர்கள் விரைவின் – சீறா:568/3
குறைவு_இலாதவன் விதித்தனேல் நீவிர் நும் குலத்துக்கு – சீறா:575/2
அமிழ்த்திட வருவது-கொல் சார்ந்த நும்
இனமுடன் எழுக என்று இலங்கும் வள்ளல்-தம் – சீறா:729/2,3
கோல வார் கழல் குரிசில் நும் அடி கொழும் கமலத்தால் – சீறா:778/1
பிறந்த நாள் தொடுத்து இற்றை நாள் வரைக்கும் நும் பெயரை – சீறா:779/1
வீட்டினில் புகு-மின் பாரம் வீழ்த்து-மின் என்னும் நும் சொல் – சீறா:946/3
மிக்க வார்த்தையில் விளம்புவது என்-கொல் நும் வினையால் – சீறா:954/3
பெரும் தாரணி-தனில் நும் பதி குலம் பேர் அவை அனைத்தும் – சீறா:984/3
புவியினும் வானும் போற்ற பொருந்தல் நும் பொன்னே என்ன – சீறா:1060/2
மாற்றுரை நும் கருத்தில் உறும்படி கேட்டு வருதி என மறு இலாது – சீறா:1083/1
கடி ஆரும் மலர் சூட்டி நும் இடத்தில் தருக மனம் கருதியிற்று என்றே – சீறா:1085/4
எம் மனத்தின் உறும் களிப்பு நும் துணைவர்க்கு இயம்பி நுமது இனத்துளானோர்-தம் – சீறா:1086/1
படியிடத்தில் நும் இனத்தவர் பெரும் பகை விளைத்தும் – சீறா:1292/3
கரத்தினை பொருத்திய காவலாள நும்
வரத்தினை எவரினும் வகுக்கற்பாலதோ – சீறா:1306/3,4
பரிவினில் பொறுத்திருந்தும் நும் இரு செவிப்படுத்தி – சீறா:1378/2
பொருது அடக்கினும் நும் மனம் பொருந்திலாதிருந்தும் – சீறா:1383/4
பிறரும் இல்லை நும் போல் பெரியோர்களே – சீறா:1399/4
அரிவை நும் மனைக்குள் நீவிர் அடிக்கடி ஓதியோதி – சீறா:1571/3
மரை மலர் செவ்விய வதன நோக்கி நும்
உரை மறுத்திலன் எனக்கு உண்மையாக இ – சீறா:1615/2,3
அண்டர்கள் பரவும் நும் அடியை நாள்-தொறும் – சீறா:1624/1
உரிய நும் ஒளிவினில் உள்ள உண்மையில் – சீறா:1629/2
புகர் அற நும் மனத்து ஆய்ந்து தெளியும் என மறுத்தும் உரை புகல்கின்றானால் – சீறா:1645/4
இருமையினும் கதி தரும் நும் புது மொழியை எனது செவிக்கு இயைவதாக – சீறா:1654/3
மதி_வலோம் யாம் அலம் இனம் நும் மதிக்கு இயைய – சீறா:1673/2
இருள் அற நும் விரும்பு ஏவல் செய்திட – சீறா:1801/3
ஈது எலாம் முடித்திடுவிரேல் நும் உரைக்கு இணங்கி – சீறா:1863/1
தமரொடு நரகில் புகுவர் நும் அரிய தண்ணளி எவர் அறிகுவர் இ – சீறா:1931/2
உற்ற நும் மனது உடன்பட உறைபவருடனும் – சீறா:2020/1
இனத்தினை தவிர்த்து அபூசல்மா என்பவன்-தனை நும்
மனைத்தலத்தில் வைத்திருப்பது பழுது என வகுத்தார் – சீறா:2044/3,4
வைத்திருந்தனை அபூசல்மா-தனையும் நும் மனைக்குள் – சீறா:2045/2
பெருகு தீன் முகம்மதே நும் பெயரினை போற்றல் செய்தேன் – சீறா:2070/3
வடிவு உடை குரிசிலே நும் மலர் பத செவ்வி நோக்கி – சீறா:2083/2
வள்ளல் நும் மதுர வாய்மை மறுத்திலேன் விடுத்திர் என்றான் – சீறா:2098/4
பவம் அற நும் வழி படுவன் யான் என்றான் – சீறா:2130/4
விள்ளும் நும் கருத்து என வினவ நல் மொழி – சீறா:2156/3
இந்த மா நிலத்து இற்றை நும் இனத்தவர் இடரால் – சீறா:2228/2
அத்தன் என்னை நும் ஏவலுக்கு அருளினன் அதனால் – சீறா:2235/2
இருந்த ஊர் எவை பகைத்தவர் யாவர் நும் இதயம் – சீறா:2236/2
மங்குலின் கவிகையோய் நும் மலர் பதம் கண்டு தீனின் – சீறா:2275/2
இனத்தவர் குழுவினை நோக்கி என்னை நும்
மனத்தினில் எவர் என மதிக்கின்றீர் சொலும் – சீறா:2403/1,2
ஊக்கமுற்று எமது உளத்து உள்ளுமாறு நும்
வாக்கினில் உரைத்தனிர் மதிக்கு மேலவன் – சீறா:2429/1,2
வரம் உறும் செல்வ நும் வசனத்தால் எமர்க்கு – சீறா:2442/1
ஆன நும் திரு நாமத்தை அடிக்கடி உரையாநின்றேன் – சீறா:2797/3
கன கரும் கவிகை வள்ளல் நும் பெயர் கருத்துள் நாட்டி – சீறா:2802/3
பெறு கதி பெறுவதல்லால் பேசும் நும் மாற்றம்-தன்னால் – சீறா:2826/2
வரிசை நம் நபியே நும் பேர் பற்பல் கால் வழுத்தி வாழ்த்தி – சீறா:2835/3
கரந்து ஒரு பால் நின்று என்னை நோக்கினன் ஹபீபே நும் பேர் – சீறா:2838/2
அந்த வல் இருளின்-கண்ணே ஐய நும் திருநாமத்தை – சீறா:2845/1
உன்னி நும் திசையை நாடி நடப்பம் என்று உள்ளத்து எண்ணி – சீறா:2846/2
சிறிய பாத்திரத்தின் இருந்த போனகம் நும் திரு கையால் தீண்டிட பெருகி – சீறா:2861/1
நறை கமழ் புயத்தோய் நும் வழிப்படுதற்கு இருந்தனர் பெரியர்கள் நால்வர் – சீறா:2900/4
சிறக்கும் நும் புதுமை காரணம் அனைத்தும் செப்பி நல் வழிக்கு உரியினராய் – சீறா:2903/3
விடுத்து உரைத்திலன் நும் பெரும் தீன் நிலை விருப்பால் – சீறா:2916/3
மன்னர்_மன்னவ நும் பதம் அடைந்தனன் மனத்தில் – சீறா:2924/3
பொறை வளை கடல் பார் எங்கும் போற்றும் நும் புதல்வி உள்ளத்து – சீறா:3089/1
விழைவுடன் கொடுத்திடவேண்டும் என்று நும்
பழமறை வாக்கினால் பகர்ந்ததால் அரோ – சீறா:3246/2,3
காரண குரிசில் நும் கமல மா மலர் – சீறா:3332/1
காலம் மூன்றையும் தெரிந்த நும் கருத்தினுக்கு இசைவ – சீறா:3432/3
விடு-மின் என்றலும் விடுகுவம் நும் திருவுளத்தால் – சீறா:3433/4
மன்ன நும் பெயரும் கூறும் வாய்மையும் மதித்திடாமல் – சீறா:3667/3
மிக்க நும் கடமை யாவும் விருப்புற எவரும் காண – சீறா:4292/2
கருத்தினுள் தெளிந்து நினைத்த இ சூழ்ச்சி காட்சியீர் நும் பொருட்டோ தீன் – சீறா:4471/1
ஆதி-தன் கிருபை ஆணை நும் ஆணை என்று உரைத்தருளினர் அன்றே – சீறா:4476/4
இன்னும் தீர்ந்தில நும் பறக்கத்தினால் எளியேன் – சீறா:4614/2
அஃது நும் தலைவர்க்கு அறைவீர் என – சீறா:4653/2

மேல்


நும்-தம் (15)

முதிர் கதிர் விளங்கி நும்-தம் முதுகிடத்து இருக்கையாலே – சீறா:124/2
கனம் தரு கொடையாய் அரசர் நாயகமே கருதலர் கசனியே நும்-தம்
மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே – சீறா:277/2,3
அரும் பெரும் தவமே நும்-தம் மனையிடத்து எழுக என்றார் – சீறா:639/4
வருந்திடாது அகலும் நும்-தம் மனத்து உறை வழக்கின் சொல்லை – சீறா:1563/1
கேட்பது எவ்வழிக்கும் நும்-தம் கிளர் ஒளி திரு வாய் விண்டு – சீறா:1733/2
அறுபதும் இருந்தோய் நும்-தம் அறிவினால் அறியாது இல்லை – சீறா:1755/2
பெரிது அளித்திடுதல் நும்-தம் பெருமையில் பெருமை என்றான் – சீறா:2118/4
கைப்பட நும்-தம் கரம் கொடுத்து உயிரை காப்பது கடன் என கரைந்தான் – சீறா:2324/4
அடிமையில் சிறியேன் வாழும் அகத்தினில் இருந்து நும்-தம்
கடி மலர் பதத்தை போற்றி கட்டுரை கலிமா வாழ்த்தி – சீறா:2772/1,2
தினம் இது தொழிலோ நல்லோர் செவிக்கு இது தகுமோ நும்-தம்
மன வெகுளியையும் மாற்றி தண்டனை மறுத்திடு என்றார் – சீறா:2815/3,4
புந்தியது அன்று நும்-தம் குலத்துக்கும் புகழ்-அது அன்றே – சீறா:2818/4
பூரண மதியம் தோன்றி முகம்மதை புகழ்ந்து நும்-தம்
ஆரண கலிமா யானும் அறைந்தன் என்று உரைத்து போமால் – சீறா:2823/2,3
ஈது எலாம் அறிந்தும் என்-தன் இதயம் வேறு ஆகி நும்-தம்
போதனைக்கு அடங்கேன் ஆவி பொன்றினும் தாதைக்கு ஏற்ப – சீறா:2825/1,2
சாலையை விடுத்து காலி தொறுவர் கை சாட்டி நும்-தம்
பாலினில் கொடுபோய் ஏற்ற வேலை உட்படுத்தும் என்ன – சீறா:2840/2,3
காதலித்திருந்த நெஞ்சும் கண்களும் களிப்ப நும்-தம்
பாத பங்கயத்தை கண்டேன் பருவரல் தவிர கண்டேன் – சீறா:2847/2,3

மேல்


நும்-பால் (9)

வரமுறு புதுமை நும்-பால் வருவது உண்டு அனேகம் அந்த – சீறா:424/2
உற தடவி முத்தி சஞ்சலம் வேண்டா நும்-பால்
கன புதுமைகள் உண்டு என்றோர் காரண பெயருமிட்டார் – சீறா:433/3,4
ஏதம் இன்றி நும்-பால் அடைந்தோம் என இசைத்தார் – சீறா:572/4
இடம் கொள் வானகத்தின் பேறும் எளிதினில் நும்-பால் செல்வம் – சீறா:641/3
விண் தலம் பரவும் வேத நபி எனும் பட்டம் நும்-பால்
கொண்டலே குதா இன்று ஈந்தான் எனும் மொழி கூறி பின்னும் – சீறா:1261/2,3
தரும் கரதலத்தோய் நும்-பால் சகத்தினும் விண்ணும் ஒவ்வா – சீறா:1581/2
பரிவுடன் நும்-பால் வெற்றி பதவிகள் அளித்தது யாவும் – சீறா:1728/3
நானிலத்து அரிய வேத நபி எனும் பட்டம் நும்-பால்
ஆனதற்கு உரித்தாய் எங்கள் அகத்தினில் களங்கம் என்னும் – சீறா:2278/2,3
இந்த நல் மொழியை நும்-பால் இயம்பு என இறைவன் ஏவ – சீறா:3073/1

மேல்


நும்-வயின் (2)

எவ்வையும் படைத்தோன் என்னை வகுத்து நும்-வயின் செல்க என்றான் – சீறா:117/3
சொல்லிய விலை பொருள் தொகையை நும்-வயின்
ஒல்லையின் உதவுதற்கு உறுதியாகவே – சீறா:915/1,2

மேல்


நும்பொருட்டால் (1)

குலங்களும் அறியேன் இன்று நும்பொருட்டால் கொடிப்புலி கானகத்து உரைத்த – சீறா:2890/2

மேல்


நும்மால் (1)

முகம்மது பேரில் நும்மால் வடு வருமாகில் இந்த – சீறா:414/1

மேல்


நும்மிடத்தில் (1)

விகட விக்கினம் விளையும் முன் விலக நும்மிடத்தில்
புகலுதற்கு ஒரு கருமம் உண்டு என புகலுவரால் – சீறா:1365/3,4

மேல்


நும்மிடத்தினில் (2)

மலையல் வள்ளல் நும்மிடத்தினில் வரை மிசை அடைந்த – சீறா:1291/1
அடுத்து இரண்டொரு தினத்தில் நும்மிடத்தினில் அணுகி – சீறா:2219/2

மேல்


நும்மிடத்து (2)

தோற்றம் நும்மிடத்து அலது வேறு இலை சுடும் கனலை – சீறா:969/1
இன்னல் வந்து உறாதிலது நும்மிடத்து இடர் அணுகா – சீறா:1294/2

மேல்


நும்மிடம் (2)

புதியவன் எமக்கு விலை கொடுத்து அருள்வன் நும்மிடம் பொருள் கொளோம் என்ன – சீறா:2852/3
வேலையும் மறந்து நும்மிடம் சார வேண்டும் என்று எண்ணினன் அதற்கு – சீறா:4103/3

மேல்


நும்முழை (1)

திரு நபி முகம்மதும் திருந்த நும்முழை
வருவது சரதம் அ மதீனம்-தன்னினும் – சீறா:2426/1,2

மேல்


நும்மை (2)

ஈனம் அற நும்மை வர என்றனர்கள் என்றான் – சீறா:1781/4
வர கருணை குரிசில் நும்மை தொடர்வதிலை இகல் மறுத்து மக்க மீதில் – சீறா:2657/3

மேல்


நும்மொடும் (1)

இடும் பகு வாய் திறந்து இனிதினாக நும்மொடும்
பகர்ந்திடின் மறுத்து உரைப்பது இல்லையே – சீறா:1617/3,4

மேல்


நும்மோடு (1)

ஒரு நெறி தொடுத்தீர் நும்மோடு உற்றவர்க்கு எல்லாம் நம்-தம் – சீறா:1351/3

மேல்


நுமக்கு (7)

பத்தியின் நுமக்கு இடு பெயர் இவை படிப்படியாய் – சீறா:973/3
புரை அற நுமக்கு சொல்வது ஒன்று உளது கேண்-மின் என்று அன்பொடு புகல்வான் – சீறா:989/4
எண்ணம் என் நுமக்கு என இயம்பி யாவர்க்கும் – சீறா:1327/3
போதல் வேண்டுமால் நுமக்கு என மறுத்து உரை புகலும் – சீறா:1525/4
அணவது நுமக்கு என்று ஓதி அடர்த்ததை விலக்காநின்றார் – சீறா:1569/4
பரிசனத்தொடு நுமக்கு அனுப்பினர் என பகர்ந்த – சீறா:2010/4
உறுபவர் நுமக்கு எதிர் ஒருவர் இல்லையால் – சீறா:2419/2

மேல்


நுமது (2)

நிலைதரும் கதிர் படு முனம் தருகுவம் நுமது
நலிதலை தவிர் என திசைதிசை-தொறும் நடந்தார் – சீறா:472/3,4
எம் மனத்தின் உறும் களிப்பு நும் துணைவர்க்கு இயம்பி நுமது இனத்துளானோர்-தம் – சீறா:1086/1

மேல்


நுமர் (3)

கொடியார் கழல் அடலோய் நுமர் குலம் ஏது என நவில – சீறா:986/2
குலனுடன் நுமர் பதிக்கு அடைந்திடும் என குறித்து – சீறா:2037/3
எமக்கு அணு எனும் இடர் இயையுமேல் நுமர்
தமக்கு வந்தவை எனும் தகைமை வேண்டுமால் – சீறா:2433/1,2

மேல்


நுமர்க்கு (1)

உரைத்தல் என் நுமர்க்கு உற்ற சொல் என் மனம் – சீறா:1400/1

மேல்


நுமர்களுக்கு (1)

நுமர்களுக்கு இடுக்கண் செய்தீர் நோற்ற நோன்பு-அதனை மாய்த்தீர் – சீறா:1352/2

மேல்


நுமுறூது (1)

கரிசமும் கபடும் இடையறா கொடிய கனை நுமுறூது செய் வினையின் – சீறா:149/2

மேல்


நுமையிலாவை (1)

நுமையிலாவை முன் நோக்கி உரைத்து அவர்-தமை – சீறா:4805/3

மேல்


நுரை (9)

பரந்த வெள் நுரை துகில் உடுத்து அறல் குழல் பரப்பி – சீறா:31/1
கன்னல் மால் நதி வெண் திரை நுரை கரைபுரள – சீறா:35/1
விரித்த வெண் நுரை போல் வெண் துகில் அடுக்கால் விரை செறி அம்பரின் திடரால் – சீறா:86/3
சிந்து நேர் கடுப்ப நுரை திரை பிறங்க செழித்து எழுந்தது நதி பெருக்கே – சீறா:696/4
நுரை இரு கரைகளும் நுங்க மால் நதி – சீறா:733/3
உவரி மெல் நுரை போலும் வெண் துகில் விரித்து உடுப்பார் – சீறா:1121/1
ஒள் நிற பசலை கால ஒளிர் நுரை மாலை சிந்த – சீறா:3174/3
சேறு கொண்டன வாசியின் வாய் நுரை சிதறி – சீறா:3803/2
உலகில் கான்று என வாய் நுரை தரும் பரி உடன்ற – சீறா:3858/2

மேல்


நுரைத்து (1)

நுரைத்து தூங்கு இதழ் ஒட்டை வாய் திறந்து எனை நோக்கி – சீறா:2001/3

மேல்


நுரைதர (1)

வீதி-வாய் நுரைதர வரு பாகு எழ வீசி – சீறா:30/2

மேல்


நுலறு (1)

நுடங்கு இடை மடவார் கருத்தினை கவரும் நுலறு எனும் அழகுறும் அரசர் – சீறா:159/2

மேல்


நுவணையும் (2)

தாங்கு வெள் நிண தசையொடு நுவணையும் சமையாது – சீறா:4416/3
வெள் நிறம் தரு நுவணையும் சுடச்சுட மேன்மேல் – சீறா:4421/1

மேல்


நுவல (2)

நூல் எனும் மருங்குல் பேதை நுவல அரும் உவகை எய்தி – சீறா:3090/2
நொவ்விதில் திறந்து உள் ஆய கரப்பை யார் நுவல வல்லார் – சீறா:3702/4

மேல்


நுவலுகின்றதே (1)

நூலினும் வழக்கினும் நுவலுகின்றதே – சீறா:2448/4

மேல்


நுவலுதற்கு (2)

நூலளவெனினும் நெகிழ்ந்தில அதனின் வலியினை நுவலுதற்கு அரிதே – சீறா:2310/4
நுவலுதற்கு அரும் உயிர் எனும் துணைவரை நோக்கி – சீறா:3451/2

மேல்


நுவன்றாள் (1)

நொந்து இருந்தவாறு ஏது என பூம்_கொடி நுவன்றாள்
கந்து அடர் கய களிறு எனும் முகம்மதை கானில் – சீறா:459/2,3

மேல்


நுழைத்திடுவார் (1)

வாடுவர் துகில் கீழ் படுத்தி ஒட்டகத்தின் வயிற்றிடை தலை நுழைத்திடுவார்
தேடிடும் பொருட்கோ உயிர் இழப்பதற்கோ செறிந்து இவண் அடைந்தனம் என்பார் – சீறா:690/3,4

மேல்


நுழைந்து (2)

சினவு வேல் கரும் கண் பாவை செவி நுழைந்து அகத்தில் புக்கி – சீறா:1049/2
புழை வழி நுழைந்து அது பொருந்தி நின்றதே – சீறா:2138/4

மேல்


நுழைபவரை (1)

ஊன் அருந்திய வேல் நுழைபவரை ஒத்திருந்தார் – சீறா:1511/4

மேல்


நுளைந்தது (1)

நுதல் பிறை கதிர்கள் ஓடி மேகத்தில் நுளைந்தது என்ன – சீறா:3212/1

மேல்


நுறுங்கி (1)

நொந்திருந்து அழுதேன் பூட்டும் தளை எல்லாம் நுறுங்கி நூறாய் – சீறா:2845/3

மேல்


நுறுங்கியது (1)

அற்று இறுந்தது அ தண்டமும் நுறுங்கியது அன்றே – சீறா:3535/4

மேல்


நுறுங்கில (1)

பட்டதன்றி எள்ளளவினும் நுறுங்கில பாறை – சீறா:4406/4

மேல்


நுறுங்கின (2)

கொடி ஒடிந்தன விரி குடை நுறுங்கின குணிலால் – சீறா:3494/1
பிதிர்விட்டு ஓடின தகர்ந்தன நுறுங்கின பெரும் தூள் – சீறா:4411/3

மேல்


நுனி (3)

பெருகிய கழுத்தின் நரம்புகள் விறைப்ப பிளந்து வாய் நா நுனி புரட்டி – சீறா:1439/3
இலை நுனி பனியின் ஆக்கை இறத்தலே நலத்தன் மன்னோ – சீறா:2082/4
பட்டியின் வாய் நுனி படரும் மானின் வால் – சீறா:2970/1

மேல்


நுனை (15)

கொல் நுனை வெள் நிற கோட்டு வாரண – சீறா:169/1
இடு குறு நுனை முள் வேலி இடையர்-தம் பாடி ஏங்க – சீறா:1723/2
கொடி நுனை மேய்ந்து நீரும் குடித்து அறியாது பாவி – சீறா:2086/2
தெறு நுனை புரை பல் புண் நா சிறு பொறி படத்த செம் சூட்டு – சீறா:2582/3
கொல் நுனை வேல் கொடு தாக்கி முகம்மதினை தரை வீழ்த்தி கொல்வேன் என்ன – சீறா:2659/3
உள் ஒடுங்கு அகட்ட ஓநாய் ஒன்று ஒள் நுனை
முள் அரை கானிடை கிடந்து மூரி வெம் – சீறா:2966/2,3
கொதி நுனை பகு வாள் வள்ளல் எழுந்து இரு குவவு திண் தோள் – சீறா:3078/3
கொதி நுனை வேலினோரும் கொடும் கனவு அடுப்ப கண்டார் – சீறா:3418/4
குதித்த கொட்பினும் வீதியில் திரிந்தும் கொல் நுனை வாள் – சீறா:3486/2
கொல் நுனை கதிர் வாளினில் தாங்கினர் கொதித்து – சீறா:3536/3
கொதி நுனை வடி வேல் மன்னவர் சூழ குதிரையின் தொகுதிகள் ஈண்ட – சீறா:3593/3
கொல் நுனை வேலினும் குளித்து நின்றதே – சீறா:3622/4
கொல் நுனை வாளொடும் குந்தம் ஏந்தி பின் – சீறா:3634/2
புண்ணும் கண்டார் கொல் நுனை அம்பில் புழைபட்ட – சீறா:3925/3
செம் புண் நீர் ஆடி புலால் மணம் கமழும் திறல் நுனை கடுத்தலை தாங்கி – சீறா:4443/1

மேல்