சூ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூகை 5
சூகைகொள் 1
சூசியும் 1
சூட்ட 1
சூட்டி 3
சூட்டிய 1
சூட்டினாரால் 1
சூட்டினான் 1
சூட்டு 6
சூட்டும் 3
சூட்டை 1
சூடி 6
சூடிய 2
சூடியே 1
சூடியோர் 1
சூடினர் 1
சூடினான் 1
சூடு 1
சூடுபடும் 1
சூடும் 3
சூத்திர 1
சூத 1
சூதங்கள் 1
சூதம் 1
சூதர் 6
சூதர்-தம்மொடும் 1
சூதர்_கோனிடத்து 1
சூதர்கள் 5
சூதரில் 4
சூதரும் 1
சூதன் 2
சூதன்-தன் 1
சூதன்-தன்னொடு 1
சூதினன் 1
சூது 6
சூதுடன் 1
சூதும் 2
சூதோ 1
சூமர் 1
சூமன் 4
சூமன்-தன் 2
சூமனும் 1
சூர் 2
சூர 2
சூரம் 1
சூரமும் 1
சூரர் 2
சூரர்கள் 1
சூரலும் 1
சூரன் 1
சூரனும் 1
சூரியன் 1
சூல் 24
சூல்வலி 1
சூலத்தினும் 1
சூலத்தை 1
சூலம் 7
சூலமும் 1
சூலாய் 1
சூலில் 2
சூலின் 1
சூலினை 1
சூலுமாய் 1
சூழ் 72
சூழ்ச்சி 13
சூழ்ச்சித்து 4
சூழ்ச்சியாக 1
சூழ்ச்சியாம் 1
சூழ்ச்சியார் 1
சூழ்ச்சியால் 3
சூழ்ச்சியாலே 1
சூழ்ச்சியானும் 1
சூழ்ச்சியில் 3
சூழ்ச்சியின் 4
சூழ்ச்சியினன் 1
சூழ்ச்சியும் 5
சூழ்ச்சியே 1
சூழ்ச்சியை 3
சூழ்ச்சியோ 1
சூழ்தர 29
சூழ்தரு 9
சூழ்தரும் 1
சூழ்ந்த 33
சூழ்ந்தது 1
சூழ்ந்ததோ 1
சூழ்ந்தவர் 2
சூழ்ந்தனர் 1
சூழ்ந்தனவே 1
சூழ்ந்தார் 1
சூழ்ந்திடும் 1
சூழ்ந்திருந்து 1
சூழ்ந்து 24
சூழ்ந்தே 2
சூழ்வர 11
சூழ்வீர் 1
சூழ 82
சூழல் 1
சூழலும் 2
சூழவரல்லால் 1
சூழவே 2
சூழி 2
சூழு 2
சூழுடன் 1
சூழும் 6
சூழுமால் 1
சூழுமே 1
சூறத்தில் 1
சூறத்திலிருந்து 1
சூறத்தின் 1
சூறத்து 2
சூறைகள் 1
சூறையாடி 1
சூறையாடியபோது 1
சூறையாடினார் 2
சூறையிட்டு 1
சூறையிடல் 1
சூறையில் 3
சூறையின் 2
சூறைவளி 1
சூனியம் 1

சூகை (5)

உடல் பருத்து இலது ஒரு முலையும் சூகை இ – சீறா:319/1
உலந்த சூகை மென் முலை திரண்டு அழகு ஒழுகினவே – சீறா:336/4
சூகை மென் முலை திரண்டதும் பால் துளும்பியதும் – சீறா:338/2
முன் பெரும் சூகை வடுவையும் தவிர்ந்தேன் முக மலர் தர வடிவு ஆனேன் – சீறா:364/3
சுரந்திடும் சூகை முலை அமுது அருந்தி துயில்தரும் காலையில் எடுத்தும் – சீறா:366/3

மேல்


சூகைகொள் (1)

உடல் உலர்ந்து ஒடுங்கி ஓர் முலையும் சூகைகொள்
மட_மயில் கூலி பால் வழங்குவோம் என – சீறா:321/1,2

மேல்


சூசியும் (1)

சூசியும் கடுதாசியும் எடுத்து மை தோய்த்து – சீறா:1682/3

மேல்


சூட்ட (1)

பனி மலர் செருகும் கூந்தல் பாவை-தம் எழிலும் சூட்ட
நனை தரும் வதுவை வேண்டி நாள்-தொறும் கெஞ்சிக்கெஞ்சி – சீறா:3067/2,3

மேல்


சூட்டி (3)

கடி ஆரும் மலர் சூட்டி நும் இடத்தில் தருக மனம் கருதியிற்று என்றே – சீறா:1085/4
எஞ்சல் இல் வெண் கதிர் திரண்டு வந்திருந்தது என சருவந்து இலங்க சூட்டி
கஞ்ச மலர் என சேந்த கண் இணையில் சுறுமாவும் கவின செய்தார் – சீறா:1130/3,4
கதிர் மணி குயிற்றி கும்ப கனக மா மகுடம் சூட்டி
விதிர் இள நிலவு கான்ற மேனிலை மாடம் யாவும் – சீறா:3132/2,3

மேல்


சூட்டிய (1)

சூட்டிய சலவாத்து ஈரைந்து உரை என இறைவன் சொன்னான் – சீறா:120/4

மேல்


சூட்டினாரால் (1)

சுடர் மணி சதங்கை தண்டை பாடகம் சூட்டினாரால் – சீறா:3216/4

மேல்


சூட்டினான் (1)

பொன் அடி தன் முடி பொலிய சூட்டினான் – சீறா:900/4

மேல்


சூட்டு (6)

விள்ள அரும் சிர சூட்டு ஒரு கதிரினும் விளங்க – சீறா:773/4
சூட்டு நீர் மலர் நில மலர் வாசமும் தூர்த்து – சீறா:866/2
குருதி கொப்பிளித்த வேதின சூட்டு குக்குடம் திசை-தொறும் கூய – சீறா:1937/4
தெறு நுனை புரை பல் புண் நா சிறு பொறி படத்த செம் சூட்டு
எறுழ் வலி கரிய பாந்தள் இரும் தலை நீட்டிற்று அன்றே – சீறா:2582/3,4
விரித்த சூட்டு எரி கண் பாந்தள் விளங்கி அ வளையை நீங்கி – சீறா:2602/3
பூ விரிந்த சூட்டு அளகொடும் புள் இனம் புலம்ப – சீறா:2634/3

மேல்


சூட்டும் (3)

பொறை பொரு தனத்தில் சூட்டும் பொன் அணி ஒரு கை ஏந்தி – சீறா:3177/2
சூட்டும் மோலியர் சொல்லினார் – சீறா:4155/4
மண்ணிடம் செறிந்து செல்ல வாய்மையே சிரசில் சூட்டும்
உண் நிறை உடைய வேந்தர் ஒண் திறல் பரியில் சூழ – சீறா:4182/2,3

மேல்


சூட்டை (1)

சூட்டை ஒன்றெடுத்தாம் நம்மை போல் எவர் துணிய வல்லார் – சீறா:4364/4

மேல்


சூடி (6)

கொத்து அலர் சூடி அரை துகில் இறுக்கி குட மது கை மடுத்து அருந்தி – சீறா:57/1
மண மலர் மாலிகை சூடி வான் தொடு – சீறா:503/2
சுடர் பிறை வடத்தை சூடி சொரி கதிர் வடங்கள் சேர்த்து – சீறா:3213/3
தேட அரும் வெற்றி மாலை சென்னியின் இலங்க சூடி
ஆடல் அம் பரியின் ஏறி சைபத்தும் அவணின் வந்தான் – சீறா:3402/3,4
தேம் கண்ணி சூடி அரி என இருந்தான் தீனரும் முன்னர் ஈண்டினரால் – சீறா:4092/4
தும்பையும் சூடி அகுத்தபு பவத்தில் தோன்றிய குயையும் ஏகினனால் – சீறா:4443/4

மேல்


சூடிய (2)

சூடிய கிரீட பதி நபி அமரர் துரைகள் நாயகம் எனும் இறசூல் – சீறா:134/3
சூடிய உரை வழி துணி-மின் என்றரோ – சீறா:3318/4

மேல்


சூடியே (1)

தேட அரும் வாகை சூடியே விரைவில் சென்றனர் ஒரு தனி சிங்கம் – சீறா:4933/4

மேல்


சூடியோர் (1)

ஆரண வெற்றி வெள் அலங்கல் சூடியோர்
வீர வேல் எனும் கதிர் பிசுமில் ஏந்தி நல் – சீறா:1806/2,3

மேல்


சூடினர் (1)

சூடினர் நடந்த செய்தி சொல்லினர் மகிழ்ந்து எழுந்தே – சீறா:4722/4

மேல்


சூடினான் (1)

தூதுவர் உண்மை என்று அடியை சூடினான் – சீறா:2139/4

மேல்


சூடு (1)

சூடு சுட்டு மிகவே குதித்து மறி சோபமுற்று அடிகள் பாவ மா – சீறா:4211/1

மேல்


சூடுபடும் (1)

சூடுபடும் அழல் குழி வெவ்விட பாந்தள் பகு வாயின் துளை பல் பூண – சீறா:2667/3

மேல்


சூடும் (3)

நல தகைமை தலக்கேடும் பிறர் சூடும் பெரும் பகையும் நடவா முன்னம் – சீறா:1650/3
மதிகளை ஒத்த சூடும் சருவந்த மௌலி அன்றே – சீறா:3854/4
சூடும் நன்மையில் தோன்றிய தீனரை – சீறா:4499/3

மேல்


சூத்திர (1)

சூத்திர பாவை போன்றும் வயின்வயின் துலங்கும் அன்றே – சீறா:3131/4

மேல்


சூத (1)

சூத மென் பொழில் வளைதரு ஷாமினை சூழ்ந்த – சீறா:572/2

மேல்


சூதங்கள் (1)

நறவு சிந்திட கனியொடு சூதங்கள் நடுவார் – சீறா:1106/1

மேல்


சூதம் (1)

தறித்தனர் சினை பலவு தாழை பனை சூதம்
குறித்து வயல் நெல் கதிர்கள் கொய்து குவை செய்தார் – சீறா:4130/3,4

மேல்


சூதர் (6)

சூதர் பாசறை சூறையாடியபோது – சீறா:3973/1
தீயினும் கொடிய தன்மையர் எவர்க்கும் செம்மை இலாத வெம் சூதர்
ஏயிடத்து ஒரு மா மனையிடத்து இருந்தார் என விட பணி விரிச்சிகமும் – சீறா:4082/2,3
சூதர் உறைகின்ற எயில் சுற்றினும் இருப்ப – சீறா:4133/2
சூதர் எகூதியர்க்கு ஆதி தோன்றல் என்று – சீறா:4556/1
கதமொடும் இகல்செய சூதர் காளையர் – சீறா:4565/2
தூதினன் உணர்ந்து போய் சூதர்_கோனிடத்து – சீறா:4566/1

மேல்


சூதர்-தம்மொடும் (1)

சூதர்-தம்மொடும் இருப்பதும் இனம் என சூழ்ந்தவர் வரலாறும் – சீறா:665/4

மேல்


சூதர்_கோனிடத்து (1)

தூதினன் உணர்ந்து போய் சூதர்_கோனிடத்து
ஓதினன் இ மொழி உளைய கேட்டவன் – சீறா:4566/1,2

மேல்


சூதர்கள் (5)

சூதர்கள் கூண்டு இனிது உரைத்த சொல்லை ஓர் – சீறா:908/1
கொடிய சூதர்கள் வன் நசுறானியின் குலத்தோர் – சீறா:966/1
கோன்_நகர் மதீனத்து உற்ற சூதர்கள் குழூஉக்கொண்டு ஏத்தும் – சீறா:2779/3
எல்லையில் வேந்தர் சூதர்கள் யாரும் இருந்தனர் அவரொடும் இனிய – சீறா:4080/2
துறுமிய கபடம் புணர் பனீக்குறைலா சூதர்கள் உறைந்து அவை வினவ – சீறா:4462/3

மேல்


சூதரில் (4)

கார் உறை பொழில் சூழ் மதீன மா நகரில் சூதரில் கயினுக்காகு என்னும் – சீறா:3608/2
சூதரில் கொடிய சூதன்-தன் செய்கை துன்புற யாவையும் தொகுத்து – சீறா:4086/3
சூதரில் கொடிய பாதகன் இருந்த சுடர் மனை கடைத்தலை புகுந்தார் – சீறா:4091/4
துனி கிடந்து உழன்ற வஞ்ச சூதரில் ஒருவன் நாளும் – சீறா:4194/1

மேல்


சூதரும் (1)

சூதரும் உடன்று செய்யா துன்பமே செய்ய சொல்-மின் – சீறா:2825/3

மேல்


சூதன் (2)

சூதன் என்றிடும் பேர் என சொல்லினான் – சீறா:1416/4
புறத்திடை சூழ ககுபு எனும் சூதன் புரவியின் ஏறி அங்கு எளிதில் – சீறா:4078/2

மேல்


சூதன்-தன் (1)

சூதரில் கொடிய சூதன்-தன் செய்கை துன்புற யாவையும் தொகுத்து – சீறா:4086/3

மேல்


சூதன்-தன்னொடு (1)

சூதன்-தன்னொடு பொருந்தியவாறு அது என் தொலையா – சீறா:2475/2

மேல்


சூதினன் (1)

இறும் மொழி சூதினன் மசுதிய் என்பவன் – சீறா:3271/4

மேல்


சூது (6)

சூது அர மொழியார் ஆமினாவிடத்தில் தோன்றலை கொடுத்து அகன்றனரே – சீறா:264/4
சூது அற விரிந்த மணி வாய் புதைத்து சொல்வான் – சீறா:1779/4
சூது வஞ்சனை தொழிலொடு மாய்ந்திட துணிந்து – சீறா:2469/3
சூது அர மொழியார் சிந்தை தொட்ட மெய் எழில் சேர் வள்ளல் – சீறா:3359/3
துன்னு காபிரில் தோன்றும் ஒருத்தன் சூது
உன்னு வஞ்ச நிறைந்த உளத்தினன் – சீறா:4219/2,3
சூது அமைத்து இத்துணை இவண் மேவலால் – சீறா:4230/2

மேல்


சூதுடன் (1)

கயில் வெம் சூதுடன் எனை ஒப்புக்கொடுத்தனன் காண் என்று – சீறா:4618/2

மேல்


சூதும் (2)

பொய்யும் வஞ்சகமும் கொலையொடு சூதும் பொருந்திய செறுநர் உண்டு அதலால் – சீறா:4112/2
சூதும் பொய் மன நன்மையும் சூழுமால் – சீறா:4249/4

மேல்


சூதோ (1)

மாயமோ கபடோ சூதோ வஞ்சமோ மதித்திடாத உபாயமோ – சீறா:4204/1

மேல்


சூமர் (1)

சொல்லொணா பெரும் பாதகம் விளைத்திடும் சூமர் – சீறா:2224/4

மேல்


சூமன் (4)

வள்ளலும் பிரத்தி உரைத்து இவன் சூமன் வங்கிசத்து உளன் ஒரு வேடத்து – சீறா:2300/3
சூமன் அபாசுபியான் வன் சொல்லினால் – சீறா:3613/3
எள்ளளவு இரக்கம் இல்லாது இடும்புகள் விளைத்த சூமன் – சீறா:3690/4
கொடிய வஞ்சக சூமன் வந்து அழுது இவை கூற – சீறா:3987/2

மேல்


சூமன்-தன் (2)

மிக்க சூமன்-தன் கலைப்பினில் அகப்பட்டு வெகுண்டும் – சீறா:3864/2
முற்றும் தீனவர் சூமன்-தன் வாய்மையின் முறிய – சீறா:3988/1

மேல்


சூமனும் (1)

சூமனும் மகிழ்வுற சூழ்ச்சி சொல்லுவன் – சீறா:4055/4

மேல்


சூர் (2)

சூர் மலிந்து விளையாடல் மிஞ்சு கழல் தோய்வு அரும் கொடிய கானமே – சீறா:4209/4
சூர் தட குழுவும் பயந்து ஒளித்திட தோன்றி – சீறா:4573/3

மேல்


சூர (2)

அமரில் எதிர்த்தோர்கள் ஆவி எம திசையை தேடி ஓட அடரும் அடல் சூர வீர வேள் – சீறா:10/1
நடமிடு கடின வாசி மிசை வரு சமர சூர நரர் புலி அலியை ஓதுவாம் – சீறா:12/4

மேல்


சூரம் (1)

சூரம் மிகுத்த காபிர்கள் எல்லாம் தொலையாத – சீறா:3920/2

மேல்


சூரமும் (1)

சூரமும் இருப்ப தேரும் சூழ்ச்சியும் இருப்ப காபிர் – சீறா:4378/1

மேல்


சூரர் (2)

சுற்றிய திறல் படை சூரர் யாரையும் – சீறா:3022/3
தூண்டிய சீற்ற தீ ஒன்று தாங்கி ஏகினர் மிடல் உடை சூரர் – சீறா:4447/4

மேல்


சூரர்கள் (1)

சொரிந்திட எறிந்து நின்றார் சூரர்கள் திலதம் அன்னார் – சீறா:3713/4

மேல்


சூரலும் (1)

வீரையும் கரிய ஓமையும் நெடிய வேரலும் முதிய சூரலும்
சீரையும் சிறிய பூளையும் சினைய மரவமும் பசிய குரவமும் – சீறா:4210/2,3

மேல்


சூரன் (1)

சோரி கொட்டிட புடைத்தனன் அதில் ஒரு சூரன் – சீறா:3501/4

மேல்


சூரனும் (1)

கள்ளம் உறும் உள்ளனும் வெம் சூரனும் வேதாளமும் வீழ் கழுகும் காக – சீறா:4316/3

மேல்


சூரியன் (1)

வால சூரியன் என நின்ற வீரர் கை வாளால் – சீறா:3491/4

மேல்


சூல் (24)

பெருகு சூல் முதிர்ந்து ஈன்று ஆர் அமுது உறைந்து பிடர் குனிதர குலை சேந்து – சீறா:56/2
மாதர் சூல் அகட்டுள் தோன்றா மனு நெறி ஆதமே நின் – சீறா:109/1
சூல் முதிர் மழை கை ககுபு கண்மணியாய் தோன்றிய முறத்திடத்து உறைந்த – சீறா:162/3
இருந்த சூல் வலம்புரியினை சூழ்ந்த சங்கு இனங்கள் – சீறா:210/3
சூல் முதிர் ஆமினா மனையிடத்தில் சூழ்ந்தனர் விண்ணவர் மகளிர் – சீறா:237/4
சூல் முதிர் குட வளை தொனியும் வைகிய – சீறா:492/3
துன்னிய துயரொடும் எழுந்து சூல் முகில் – சீறா:1324/3
முதிரும் கரும் சூல் சலதரத்தை முடியில் தாங்கி செழும் தேனை – சீறா:1584/1
விரி கடல் பெரு நீர் உண்டு சூல் உளைந்த விசும்பிடை உதித்த மின் குலம் போல் – சீறா:1954/2
சொரி நறை கமழ்ந்த மெய்யும் சூல் முகில் கவிகையோடும் – சீறா:2059/2
உரு அமைந்து இளம் சூல் முற்றி உதரமும் வளர்ந்தது அன்றே – சீறா:2070/4
சூல் முகில் கவிகையில் பல்லர் சூழ்வர – சீறா:2716/1
சுரி முக குட வளை குலம் சூல் உளைந்து ஈன்ற – சீறா:2907/1
சூல் முகில் குலவிய வரையின் சுற்று எலாம் – சீறா:2962/1
சூல் அடுத்த மை மின்னினும் சுடர் இலங்கியதே – சீறா:3509/4
சூல் உறு மஞ்சின் மின் என வீசும் சுடர் வாளால் – சீறா:3917/4
சூல் படைத்த மை வரை நிகர் துணை புய வேந்தர் – சீறா:4251/3
அலையொடு தழுவி சூல் முதிர்ந்து எழுந்தே அழகு உற விளங்கும் மை மாரி – சீறா:4753/1
திரை நுகர் கரும் சூல் கனம் கிடந்து அலற திகைத்து எழும் பிடி மடி சுரந்த – சீறா:4921/1
தொறுவினை விட்டு இழிந்து ஓடி சூல் முகில் – சீறா:4943/1
சூல் முகில் குடை நிழற்றிட சுற்றி எம்மருங்கும் – சீறா:4985/1
முலை மறா பறழும் புனிற்று இளம் கன்றும் மோட்டு இள மேதியும் கமம் சூல்
அலைவு உற கிடந்து மறிந்து உளைந்து அலறும் மான் இனம் பலவும் கண்டனரால் – சீறா:5004/3,4
வெண் நிற பேழ் வாய் கருமுகை சங்கம் விளைந்த சூல் முதிர்ந்து உளைந்து அலறி – சீறா:5009/1
சூல் படு மேகம் பொழிந்தன என்ன சொரிந்தனர் வாய் வெரீஇயினர் நல் – சீறா:5027/3

மேல்


சூல்வலி (1)

பெற்ற சூல்வலி அடிக்கடி பெரிது என பதறி – சீறா:231/3

மேல்


சூலத்தினும் (1)

நெட்டு இலை தலை சூலத்தினும் தசை நிறைந்த – சீறா:3991/2

மேல்


சூலத்தை (1)

மறம் தரும் படை சூலத்தை மாட்டிட – சீறா:3905/3

மேல்


சூலம் (7)

நெட்டு இலை சூலம் கோல் பாலம் நேமி சூழ் – சீறா:3006/3
மணம் கமழ் அயில் நெய் உண்டு வாய் கிடந்து எரியும் சூலம்
தணிவு இலா திறம் செய் தண்டம் சேவகர் தாங்கினாரால் – சீறா:3847/3,4
சூலம் வாள் தனு சக்கரம் பத்திரம் சுரிகை – சீறா:3889/1
மெய்த்தலத்தில் கஞ்சுகியும் மேல் கவசமும் விசித்து விரி தீ சூலம்
நெய் தலை வேல் மறித்தறிகை தண்டு தனு சக்கரம் மின் நெடிய வாளும் – சீறா:4311/1,2
கனல் முகம் தெரியும் கவட்டு இலை சூலம் கை விசைத்து எறி கதிர் வேலும் – சீறா:4442/1
உரம் பெறும் பாலம் நெட்டு இலை சூலம் ஓங்கு தோமரம் கதிர் எழு வாள் – சீறா:4938/3
நிறைத்த வில் கதிர் வாள் கணை கவண் சூலம் நேமி தோமரம் மழு தாங்கி – சீறா:5021/3

மேல்


சூலமும் (1)

வேலும் மழுவும் சூலமும் ஓட்டி விறல் செய்யும் – சீறா:3921/1

மேல்


சூலாய் (1)

சொரிந்த தேன் மொழி ஆமினா வயிற்றினில் சூலாய்
இருந்த நாள் எலாம் கனவு அலால் ஒழிந்த நாள் இலையே – சீறா:221/3,4

மேல்


சூலில் (2)

கூடிய இருவர் தாமும் சுத்தாவில் குடியிருந்து இருபது சூலில்
நாடிய பொருள் போல் நாற்பது பெயரை நன்குற பெற்றதின் பின்னர் – சீறா:134/1,2
நீடிய ஒளியும் சிறந்து ஒரு சூலில் நிலம் மிசை சீது உதித்தனரே – சீறா:134/4

மேல்


சூலின் (1)

சூலின் வான மின் எனும் கதிர் வேல் அபாசுபியான் – சீறா:3785/2

மேல்


சூலினை (1)

சூலினை தரித்த கொண்டல் சுகைபு நல் நபி-தம் செம்பொன் – சீறா:1762/1

மேல்


சூலுமாய் (1)

சூலுமாய் சிறிது பாலுமாய் முலைக்கண் சுரப்பெடுத்து அற சொரிந்திடலாய் – சீறா:368/3

மேல்


சூழ் (72)

வட_வரை புடை சூழ் நிலத்து எழு தீவும் வரவழைத்து ஒரு தலத்து இருத்தி – சீறா:79/1
சொரி மது சிந்தும் சந்த துடவை சூழ் மதினா-தன்னில் – சீறா:99/2
காடும் கானமும் கடந்து செம் தேம் பொழில் கனி சூழ்
நாடு அடைந்து போய் புகுந்தனர் மதீன மா நகரில் – சீறா:204/3,4
சொரியும் பூம் துகள் துடவை சூழ் சாமினில் தோன்றல் – சீறா:223/1
கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின் – சீறா:246/3
தே மலர் பொழில் சூழ் சுவன நாட்டு அரசை திசை-தொறும் விளக்கு நாயகத்தை – சீறா:289/1
கனை கடல் திரை ஆடை சூழ் பாரினில் கவின் கொண்டு – சீறா:297/1
புரிசை சூழ் பதி புகுவம் என்று உரைத்தனர் புகழ்ந்தே – சீறா:343/4
நிலைபெறும் சுரமும் கடந்து அவர் நடந்து நீள் வரை அனைய மா மதிள் சூழ்
பலபல மனையும் தெரிதர நோக்கி பதி எனும் குனையினை அடைந்தார் – சீறா:360/3,4
புரிசை சூழ் மக்கம்-தன்னில் போந்து அவண் இருந்தும் பின்னர் – சீறா:391/1
தாம ஒண் புயத்தினர் நசுறானிகள் தடம் சூழ்
பூ மலர் பொழில் குனையின் வந்தடைந்தனர் புதிதாய் – சீறா:438/3,4
கொடி மிடைந்து அசை புரிசை சூழ் நகரினை குறுகி – சீறா:478/2
மரு கமழ் சோலை சூழ் மக்க மா நகர் – சீறா:912/1
பௌவ நதி சூழ் பாரை புரந்து அளிக்கும் பெரும் பதவி படைத்தேன் செல்வம் – சீறா:1093/3
பண்ணை சூழ் நகரும் பல சோலையும் – சீறா:1180/3
கலன் சூழ் கிரண மணி நாப்பண் இருந்த கதிர் மா மணி குறைஷி – சீறா:1331/1
குலம் சூழ் வரிசை நபிக்கு அமரர் கோமான் சலாம் முன் கூறிய பின் – சீறா:1331/2
நிலம் சூழ் பரவை புறப்புவியும் இறைஞ்ச நெடியோன் திருவருளால் – சீறா:1331/3
உறை வார் பொழில் சூழ் வரையினிடத்து உற்றார் உமறு கத்தாபே – சீறா:1585/4
தோம் அகல் முகம்மது நபியும் சூழ் வர – சீறா:1601/1
மரை மலர் தடம் சூழ் திமஸ்கு அதிபதி மாலிக் – சீறா:1678/2
சோதி மதிள் சூழ் திமஸ்கினுக்கு இறை சொல்வானால் – சீறா:1768/4
எனும் மத கரி மருங்கு சூழ் வர – சீறா:1807/2
மெய்மை சூழ் கடலினும் விளங்கி தோன்றுமால் – சீறா:1818/2
கன்னல் அம் கழனி சூழ் திமஸ்கு காவலன் – சீறா:1833/1
மது விரி பொழில் சூழ் வரையிடை நோக்கி வந்து மா மறை முகம்மதுவை – சீறா:1920/2
மடல் அவிழ் கமல வாவி சூழ் திமஸ்கு மன்னவன் மகவு என பிறந்து – சீறா:1950/2
நனி பல சூழ் வர நகரை நண்ணினார் – சீறா:1987/3
துனி பல அகற்றினேன் முன் சூழ் வினை அறிகிலேனே – சீறா:2071/4
பீடு உடை பெரும் புகழ் பெருகி சூழ் திசை – சீறா:2163/3
வால் வளை தரளம் சிந்தும் வாவி சூழ் மதீனா வாழும் – சீறா:2349/1
மரு பொதி துடவை சூழ் மதீன மன்னவர் – சீறா:2425/1
விதுவும் சூழ் உடு இனமும் ஒத்து இருந்தனர் விளங்கி – சீறா:2462/4
நகரை விட்டு அகன்று கான் சூழ் நகத்திடத்து உறைந்து தேடும் – சீறா:2580/1
வட்ட வாருதி சூழ் எட்டு திக்கினும் அணி வானத்தும் – சீறா:2603/3
நனை மலர் வாவி சூழ் றாத்தூனா என – சீறா:2733/3
சொன்னவை அறியான் ஊழில் சூழ் விதி துன்பம் மாற்ற – சீறா:2827/2
பாரிசு என்று உரைக்கும் வளமை நாடு உடுத்த புரிசை சூழ் பதியினில் பிறந்தோன் – சீறா:2895/3
பல் நெடும் காலம் அழுந்துவர் எனவும் தெரிந்தனன் பரவை சூழ் புவியின் – சீறா:2898/3
நகர் விடுத்து அணி மதினாவை நண்ணி சூழ்
புகழொடும் தீன் நெறி புரந்து வைகும் நாள் – சீறா:2955/2,3
நெட்டு இலை சூலம் கோல் பாலம் நேமி சூழ்
கட்டு பத்திரம் சரம் சுழற்று கை கவண் – சீறா:3006/3,4
திரை மணி கொழிக்கும் வாவி சூழ் மதீன திரு நகர் சிறப்பு இயற்றிய பின் – சீறா:3152/2
பரல் அழல் பாலையை போக்கி பண்ணை சூழ்
மருத நல் நிலம் என வளம் உண்டாயதே – சீறா:3292/3,4
பரவை சூழ் நிலத்தில் நம்-தம் படைக்கலன் சுமந்த கையின் – சீறா:3394/3
அரும்பு மென் மலர் வாவி சூழ் ஷாமிருந்து அடுப்ப – சீறா:3426/1
சொல் விதம் விடுத்து பவம் எடுத்தனையே சூழ் வினை-தனை அறிந்திலையே – சீறா:3582/4
நறவு கொப்பிளிக்கும் துடவை சூழ் நகரில் நண்ணினர் முகம்மது நபியே – சீறா:3598/4
மடல் அவிழ் வனச வாவி சூழ் மதினா வந்த பின் மற்றை நாள் பதுறில் – சீறா:3600/1
கார் உறை பொழில் சூழ் மதீன மா நகரில் சூதரில் கயினுக்காகு என்னும் – சீறா:3608/2
நனை பொழில் சூழ் இறாக்கு நாட்டுக்கும் வரிசை மக்கம் – சீறா:3683/3
ஏட்டு அலர் சோலை சூழ் இறாக்கு மா நகரை சார்ந்த – சீறா:3687/1
தூசியின் தொறுவினோடும் கரந்து சூழ் புரிசை புக்கார் – சீறா:3697/4
சங்கு ஆமையின் மேல் தவழ்கின்ற தடம் சூழ் மக்க மா நகரில் – சீறா:4028/3
சாலை பொழில் சூழ் இறவுகா என்னும் தலத்தின் வந்தனனால் – சீறா:4034/4
பண்ணை சூழ் சுகுறா எனும் நகர் ஏகி பாவையர்க்கு அணி விளக்கு என்ன – சீறா:4081/2
நறை மலர் தடம் சூழ் வண்மை நசுதின் ஈண்டினர்கள் என்ன – சீறா:4185/3
அலகில் கீர்த்தி சூழ் முகம்மது விடுத்தலும் அவனும் – சீறா:4264/3
திருந்தி நாள்-தொறும் கேளிர் சூழ் வாழ் பதி சேர்ந்தான் – சீறா:4265/4
ஒண்ணுமோ மற்று யாவர்க்கும் உததி சூழ் உலகில் – சீறா:4272/4
கால் பாயும் கரை தடம் சூழ் முறைசீகு எனும் நகரில் கணிப்பிலாத – சீறா:4296/2
அடி துமிந்த சில உளையின் களம் துமிந்த சில மணி சூழ் அணியின் வேய்ந்த – சீறா:4314/2
அரிந்து சூழ் அகழ் கிடங்கினை அழகு உற திருத்தி – சீறா:4437/2
குரம்பையும் குடில் சூழ் முல்லையும் நீந்தி கொடி நகர் மதீன நாடு அடைந்தார் – சீறா:4452/4
புடையினில் பரிவேடம் சூழ் வளைந்தது போல – சீறா:4594/2
சிந்து சோலை சூழ் மதீனத்து பள்ளியில் சேர்ந்தார் – சீறா:4641/4
மைந்தர்கள் துயரம் என்-தன் வருத்தமும் அவர் சூழ் சொன்ன – சீறா:4789/1
மா தவத்தொடு சூழ் வர மக்கத்தில் – சீறா:4800/2
தொழும் தனி படை வீரர்கள் சூழ் வர – சீறா:4827/2
புரிசை சூழ் மக்க மா நகர் காபிர் முன் போரில் – சீறா:4839/1
துடவை சூழ் மக்கம் என்னும் தொல் நகர்க்கு ஏகும் என்ன – சீறா:4903/3
செந்நெல் சூழ் நகரம் காண்பது அரிது என செப்பினாரால் – சீறா:4954/4
எண்ணுற நிவந்த புரிசை சூழ் மதீனத்து ஏகினர் இடு முகில் கவிப்ப – சீறா:5009/4

மேல்


சூழ்ச்சி (13)

வல்லமை அறிவில் தேர்ந்த வார்த்தை உத்தரத்தில் சூழ்ச்சி
சொல்லின் உட்பொருளின் நுட்ப துடர் அறிந்து உரைக்கவேண்டின் – சீறா:1076/1,2
சிந்தையில் சூழ்ச்சி ஒன்று உன்னி தேறினார் – சீறா:1474/4
விச்சை என தெளிந்து பலபல சூழ்ச்சி விரித்து அறத்தை விளங்கி என்னோடு – சீறா:1652/3
புதிய சூழ்ச்சி ஒன்று உரைத்தியேல் எங்கள் புந்தியிற்கும் – சீறா:1673/3
கொல் வித சூழ்ச்சி இது-கொல் என்று உரைப்பார் குதா திருவருளினால் வானில் – சீறா:1907/3
பன்னுவது என்-கொல் சூழ்ச்சி தருமத்தால் பகர்ந்தேன் என்றான் – சீறா:2372/3
முறை ததும்பியதை நினைப்பது என் இனிமேல் முடித்திடும் சூழ்ச்சி ஈது என்ன – சீறா:2516/1
தீட்டு வெண் புகழீர் மறுத்து ஒரு சூழ்ச்சி செப்பும் என்று உரைத்தனன் தீயோன் – சீறா:2521/4
சூழ்ச்சி ஒன்று உள கேண்-மின் என அபூஜகல் பகர்ந்திடுவான் – சீறா:2522/4
சூமனும் மகிழ்வுற சூழ்ச்சி சொல்லுவன் – சீறா:4055/4
தங்கிய சூழ்ச்சி வல்லோர் போர் உடை தலைவர் மாறாது – சீறா:4361/2
பற்று இலாத பல் குலத்தையும் சூழ்ச்சி உள்படுத்தி – சீறா:4399/3
கருத்தினுள் தெளிந்து நினைத்த இ சூழ்ச்சி காட்சியீர் நும் பொருட்டோ தீன் – சீறா:4471/1

மேல்


சூழ்ச்சித்து (4)

தொகு விடத்தை தோற்றரவில் பரிகரித்தல் யாவருக்கும் சூழ்ச்சித்து ஆகும் – சீறா:1667/2
துனிப்படல் அறிவு எனும் சூழ்ச்சித்து அன்று அரோ – சீறா:1791/4
தொடுத்து எடுத்து உரைத்த வாய்மை எங்கட்கு சூழ்ச்சித்து ஆகும் – சீறா:2373/2
தொட்டு அமர் விளைத்திடல் சூழ்ச்சித்து அன்று என – சீறா:3038/3

மேல்


சூழ்ச்சியாக (1)

வன் மன கொடிய காபிர் மனத்து உறு சூழ்ச்சியாக
மின் ஒளி கரக்கு மாட மேனிலை செறித்த கல்-பால் – சீறா:940/2,3

மேல்


சூழ்ச்சியாம் (1)

துரகதத்தின் பதத்தினை பூ பிடித்திருப்பது அகுமது-தம் சூழ்ச்சியாம் என்று – சீறா:2657/1

மேல்


சூழ்ச்சியார் (1)

குவிதரும் இரவினில் குணம் கொள் சூழ்ச்சியார் – சீறா:4554/4

மேல்


சூழ்ச்சியால் (3)

உறையு-மின் வேறு ஒரு உபாய சூழ்ச்சியால்
மறைபட வரவழைத்து அவன்-தன் வல் உயிர் – சீறா:907/2,3
தொடர்ந்து வந்தது இங்கு என் என சூழ்ச்சியால் தேற்றி – சீறா:1362/2
பரிவின் வேறு ஒரு சூழ்ச்சியால் தீனவர் பாங்கின் – சீறா:4601/3

மேல்


சூழ்ச்சியாலே (1)

தொடர்வுற எனக்கு நீர் ஓர் நன்றி செய் சூழ்ச்சியாலே
உடன் உரையாது நின்றேன் அன்றியேல் உரைசெய்வேனால் – சீறா:4857/3,4

மேல்


சூழ்ச்சியானும் (1)

விஞ்சையின் விதத்தினானும் வேண்டிய சூழ்ச்சியானும்
துஞ்சிட தீனோர் ஆவி மண்ணினில் தொலைப்போம் என்ன – சீறா:4382/2,3

மேல்


சூழ்ச்சியில் (3)

சோர்வு இலாது உரைத்தான் மிக்க சூழ்ச்சியில் தெளிந்த நீரான் – சீறா:1070/4
அகம் பொருந்த வேறு சூழ்ச்சியில் சாற்றுவாரால் – சீறா:2827/4
வலிய வீரத்தில் சூழ்ச்சியில் திறத்தினில் மதிக்கும் – சீறா:3781/1

மேல்


சூழ்ச்சியின் (4)

விரைவில் காண்குவது உண்டு என சூழ்ச்சியின் விரித்தார் – சீறா:1713/3
கதித்த சூழ்ச்சியின் வேறு ஒரு வினை கருதினனே – சீறா:2026/4
உரையினும் வழக்கினும் ஒத்த சூழ்ச்சியின்
புரவலன் ஒருவனை தூது போக்கினான் – சீறா:3018/3,4
தோகைமார் மதி சூழ்ச்சியின் மைந்தர்கள் – சீறா:4665/1

மேல்


சூழ்ச்சியினன் (1)

புத்தியினன் சூழ்ச்சியினன் என்று ஒருவன் வந்து அவணில் புக்கினானால் – சீறா:4532/4

மேல்


சூழ்ச்சியும் (5)

தொடர்ந்து மாயவன் சூழ்ச்சியும் கொடு மன துணிவும் – சீறா:567/2
விந்தை ஏற்று உரு மந்திர சூழ்ச்சியும் வீறும் – சீறா:1696/3
பொன் அடி அடைந்தேன் என்றார் சூழ்ச்சியும் பொறையும் மிக்கார் – சீறா:2777/4
தொடுத்திடும் வினையமும் செயலும் சூழ்ச்சியும்
விடுத்திடும் ஒற்றரால் தெரிய வேண்டுமால் – சீறா:2989/3,4
சூரமும் இருப்ப தேரும் சூழ்ச்சியும் இருப்ப காபிர் – சீறா:4378/1

மேல்


சூழ்ச்சியே (1)

வினையம் உள் நிறைந்து நின்றோன் சூழ்ச்சியே விளைக்கும் நீரான் – சீறா:4194/2

மேல்


சூழ்ச்சியை (3)

கொடியவன் கவடமாய் ஓர் சூழ்ச்சியை குறித்து நீண்ட – சீறா:808/2
நினைத்த சூழ்ச்சியை உரைதரும் நிருபர்கள்-தமையும் – சீறா:1712/2
புவியினில் எவர் நின் சூழ்ச்சியை நிகர்ப்பர் என புகழ்ந்து இருந்து இபுலீசு – சீறா:2525/2

மேல்


சூழ்ச்சியோ (1)

தூய விஞ்சையின் இயற்றும் சூழ்ச்சியோ மாட்சியோ வெம் – சீறா:4204/3

மேல்


சூழ்தர (29)

செறிந்து சூழ்தர சொரிந்தமை கனியையும் தீண்டாள் – சீறா:69/4
துப்பு உறழ் மதுர வாய் சிறுவர் சூழ்தர
மை புயல் முகம்மது ஓர் வாவி நண்ணினார் – சீறா:487/3,4
ஏத்து மெய் புகழ் முகம்மதை சூழ்தர இயைந்து – சீறா:549/2
ஒக்கல் சூழ்தர இன் உயிர் புதல்வரோடு உறைந்தார் – சீறா:552/4
கான் அறை பொழில் சூழ்தர சிறந்த மக்காவில் – சீறா:589/1
பரிசனங்களும் வணிகரும் சூழ்தர பாத மென் மலர் பாரில் – சீறா:668/3
செட்டர் சூழ்தர இருந்தனர் செழும் மலர் காவில் – சீறா:855/4
உள்ளகம் மகிழ்வொடும் உழையர் சூழ்தர
நள் உறை முகம்மது நபியை நோக்கினான் – சீறா:1609/3,4
பொருந்துற கண்டு பொன் புரிசை சூழ்தர
வரும் திமஸ்கவர் சில வசனம் கூறுவார் – சீறா:1834/3,4
துன்பமும் ஒழியாது இனம் பெரும் கேடு சூழ்தர விளைந்திடும் என்பார் – சீறா:1906/2
சுருதியின் முறை வழி துணைவர் சூழ்தர
கரு முகில் நிழலொடும் கருணை பொங்கிட – சீறா:2124/1,2
திரை பெரும் கடல் என இனம் சூழ்தர இறந்தார் – சீறா:2198/3
துணைவரும் சூழ்தர எழுந்து திண் சுடர் – சீறா:2414/3
வெற்றி மன்னவர் சூழ்தர இறந்தனர் மேலோய் – சீறா:2912/4
தெருளும் மாந்தர்கள் சூழ்தர மதீனத்தில் செறிந்த – சீறா:2914/1
சொன்னவை அனைத்தையும் மறுத்து சூழ்தர
இன்னலை பொருந்தினிர் ஈது அலால் இனி – சீறா:2981/2,3
என்றவன் இனையன இயம்ப சூழ்தர
நின்றவர் கேட்டு இவை நினைவு இதாம் என – சீறா:2992/1,2
துரகத குழுவொடும் சேனை சூழ்தர
நரலையின் வள மதீனாவை நண்ணினார் – சீறா:3029/3,4
குரகத பேர் அணி குழுமி சூழ்தர
விரி கதிர் எஃகினர் விரைவின் முன் செல – சீறா:3628/1,2
இறங்கிய பாசறை இடத்தில் சூழ்தர
மறம் கிளர் வீரரை வைத்து யாவரும் – சீறா:3633/2,3
மள்ளர்கள் சூழ்தர வள்ளல் நம் நபி – சீறா:3664/3
ஆரண திரு நாவினர் சூழ்தர அடுத்த – சீறா:3741/1
பல்லர் சூழ்தர காலிது போரினில் படுப்ப – சீறா:3979/2
புண் தரு படையொடு புரவி சூழ்தர
எண் திசையினும் துகள் எழுந்து போர்த்திட – சீறா:4059/1,2
தங்கிய அறிவு என தானை சூழ்தர
வெம் கடு மனத்தினன் விரைவின் எய்தினான் – சீறா:4067/3,4
தீனர் சூழ்தர அகழ் ஒன்று திருத்துவம் என்றார் – சீறா:4400/4
அடி பெயர்த்து ஆடும் கவன வாம் பரி ஐந்தாயிரம் சூழ்தர அபசி – சீறா:4444/1
பவ்வம் ஒத்து அகரம் சூழ்தர இருப்ப பால் மதி கதிர் முகம்மது நல் – சீறா:4459/2
தொடங்கி மீளியர் சூழ்தர தோன்றினார் – சீறா:4485/4

மேல்


சூழ்தரு (9)

புரிசை சூழ்தரு மக்க மா நகரியில் புதுமை – சீறா:1713/2
மரை மலர் தடம் சூழ்தரு திமஸ்கு மன்னனுக்கே – சீறா:1713/4
வந்து சூழ்தரு பவ களை தவிர்த்து மண் நிலத்தில் – சீறா:2216/3
மட்டு வார் பொழில் சூழ்தரு மக்க மா நகரம் – சீறா:2635/1
உததி சூழ்தரு பாரிடை திசை-தொறும் உலவி – சீறா:2908/1
சேனையும் வாசியும் செருமி சூழ்தரு
கான் அரண் அனைத்தையும் கடந்து சென்று கனானியர் – சீறா:3016/1,2
நாடி நீர் மக்க மா நகரை சூழ்தரு
பாடிகள் அனைத்தும் பாழ்படுத்தும் சூறைகள் – சீறா:3027/2,3
குதி வரால் வனச வாவி சூழ்தரு குதிரி என்னும் – சீறா:3666/2
பாலில் சூழ்தரு பாடியில் பெரும் படை திரட்டி – சீறா:3785/3

மேல்


சூழ்தரும் (1)

முகம்மதின் உறை மதினாவில் சூழ்தரும்
திகைதிகை சிறுகுடி நிரைகள் சேர்த்து அவண் – சீறா:3646/1,2

மேல்


சூழ்ந்த (33)

இருந்த சூல் வலம்புரியினை சூழ்ந்த சங்கு இனங்கள் – சீறா:210/3
குரிசிலை குறித்து சூழ்ந்த குமரரை விளித்து சொல்வார் – சீறா:397/4
துலங்கு செம் மணியை சூழ்ந்த பல மணி போல சூழ்ந்து – சீறா:400/3
இரும் என இருத்தி சூழ்ந்த இளையரில் சிலர் புல் கானில் – சீறா:401/3
சூத மென் பொழில் வளைதரு ஷாமினை சூழ்ந்த
பாதை நான்கினும் ஒற்றரை அனுப்பி இ பாதைக்கு – சீறா:572/2,3
மன்றல் அம் துடவை சூழ்ந்த மக்க மா நகரில் வாழ்வோன் – சீறா:605/1
தேன் கடல் அமிர்தும் திக்கில் திகழ் வரை அமிர்தும் சூழ்ந்த
மீன் கடல் நடுவில் தோன்றும் வெண் மதி அமிர்தும் துய்ய – சீறா:607/1,2
இனம் எனும் சோலை சூழ்ந்த இகுளையர் எனும் வாவிக்குள் – சீறா:610/1
செம்மலும் சூழ்ந்த தேசிகரும் நீங்கிலா – சீறா:725/2
துறையில் முத்து இறைக்கும் திரை தடம் சூழ்ந்த சோலையில் இருந்தனர் இப்பால் – சீறா:1008/4
மரு மலர் சோலை சூழ்ந்த மால் வரை இடத்தை நீங்கி – சீறா:1272/2
மண்ணினில் திசையில் சூழ்ந்த மறி திரை கடற்குள் வானோர் – சீறா:1545/1
வகையறா வழக்கு தீர்த்து தருக என மன்னர் சூழ்ந்த
தொகையினில் உமறு என்று ஓதும் தோன்றலும் இருப்ப கண்டு – சீறா:1559/1,2
குறைபடும் குபிரை சூழ்ந்த குலத்தொடும் வெறுத்து நின்றார் – சீறா:1578/4
போது அலர் கழனி சூழ்ந்த திமஸ்கினை புரந்த வேந்தும் – சீறா:1748/1
புகலும் நல் மறையும் சூழ்ந்த பொருவு அரும் குலமும் மற்றும் – சீறா:1753/3
மண் எலாம் நனைப்ப சூழ்ந்த வனம் எலாம் திரிந்து தேடி – சீறா:2101/2
பாய் திரை பரவை சூழ்ந்த படிக்கு அணி திலதம் ஆவி – சீறா:2348/1
மா தவமுடையீர் பித்தோ வஞ்சனை தொழிலோ சூழ்ந்த
தீது எவை குறிப்பு நோக்கி செப்பும் என்று இனைய கூறி – சீறா:2799/2,3
நகரவர் உரையும் சூழ்ந்த நாட்டவர் விடுக்கும் தூதர் – சீறா:3058/1
பத சிலம்பு அலம்ப சூழ்ந்த பைம் பொன் மேகலைகள் ஆர்ப்ப – சீறா:3172/1
வீதியின் அழகோ வந்த வேந்தர்_கோன் அழகோ சூழ்ந்த
மா தவர் அழகோ யாது பெரிது என மதித்து சொல்வார் – சீறா:3187/1,2
கனை கடல் படையும் நீண்ட கவிகையும் கொடியும் சூழ்ந்த
வனை கழல் அரசர் நாப்பண் வரும் திறல் அலியும் நோக்கி – சீறா:3189/1,2
கோங்கு இள முலையின் செம்பொன் கொடி என என்னை சூழ்ந்த
பாங்கியர் எங்கே என்ன பாங்கியர்-தம்மை கேட்டாள் – சீறா:3196/3,4
குரவை எம்மருங்கும் சூழ்ந்த குரை கடல் என்ன பம்ப – சீறா:3206/2
மடை செறி தடங்கள் சூழ்ந்த மருதம் விட்டு அகன்று போனார் – சீறா:3381/4
வரி வய போத்து சூழ்ந்த மடங்கலின் வைகினாரால் – சீறா:3416/4
பூ அலர் பொய்கை வேலி புறம் படர்ந்து இலங்க சூழ்ந்த
கா அணி மதீன மூதூர் காவலர் வரவு கேட்டு – சீறா:3670/1,2
பானல் அம் கழனி சூழ்ந்த நசுது எனும் பதியில் நாளும் – சீறா:3677/1
நறா கனி துடவை சூழ்ந்த மக்க மா நகரில் வாழ்வோர் – சீறா:3680/1
நெடி படு கானம் சூழ்ந்த நெறியிடை மறித்து நின்றார் – சீறா:3685/4
கொடிய வஞ்சகத்தை சூழ்ந்த குணத்து அபீறாபிகு ஆவி – சீறா:3726/1
சூழ்ந்த வாய்மை துணைவரை கூவியே – சீறா:4234/3

மேல்


சூழ்ந்தது (1)

மரு மலர் செறியும் சோலை சூழ்ந்தது ஓர் வரையை சார்ந்தார் – சீறா:2053/4

மேல்


சூழ்ந்ததோ (1)

ஈறு நாள் இவையோ வினை சூழ்ந்ததோ எதிர்ந்தாய் – சீறா:3516/3

மேல்


சூழ்ந்தவர் (2)

கூடி சூழ்ந்தவர் விதி பயன் என குலைகுலைந்து – சீறா:208/1
சூதர்-தம்மொடும் இருப்பதும் இனம் என சூழ்ந்தவர் வரலாறும் – சீறா:665/4

மேல்


சூழ்ந்தனர் (1)

சூல் முதிர் ஆமினா மனையிடத்தில் சூழ்ந்தனர் விண்ணவர் மகளிர் – சீறா:237/4

மேல்


சூழ்ந்தனவே (1)

தூறு தேன் துளித்து கனிகளும் காயும் சொரிதர சோலை சூழ்ந்தனவே – சீறா:697/4

மேல்


சூழ்ந்தார் (1)

அரு வரை அனையார் உருவமும் சிறிதாய் ஆமினா திரு மனை சூழ்ந்தார் – சீறா:236/4

மேல்


சூழ்ந்திடும் (1)

சுரும்பு இனம் கடைவாய் தவழ்ந்து பண் அலம்பி சூழ்ந்திடும் கழனியும் கண்டார் – சீறா:5007/4

மேல்


சூழ்ந்திருந்து (1)

எரி சிகை கிரண பதும மா மணியின் இனம் பல சூழ்ந்திருந்து இலங்க – சீறா:78/2

மேல்


சூழ்ந்து (24)

சோலை வட்ட வாய் மயில் இனம் சூழ்ந்து கார் நீல – சீறா:62/3
கொண்டதும் தாகம் தீர்ந்ததும் அலிமா குழந்தையால் ஆம் என சூழ்ந்து
முண்டக மலர் தாளினில் விழி சேர்த்தி முகம்மதை போற்றி வாழ்த்தினரே – சீறா:359/3,4
துலங்கு செம் மணியை சூழ்ந்த பல மணி போல சூழ்ந்து
குலம் கெழும் கொறியின் பின்னே முகம்மதை கூட்டி சென்றார் – சீறா:400/3,4
தொல் விதி பயனால் வந்து சூழ்ந்து கை கருவி-தன்னால் – சீறா:411/2
சொரிதல் கண்டு அகுமதை சூழ்ந்து நோக்கினார் – சீறா:504/4
சுற்றமும் கிளையும் சிறப்பொடு தழைத்து சூழ்ந்து இருந்து அணி திகழ்வது போல் – சீறா:698/3
மாற்றலர் போல சூழ்ந்து மன்னவர் சஃதை நோக்கி – சீறா:1350/2
தணிவு இலா வெகுளி மாற்றம் சாற்றலும் அவனை சூழ்ந்து
பணி பனீமகுசூம் என்னும் திரளவர் பலரும் கோப – சீறா:1497/2,3
முகம்மதினை முகம் நோக்கி சூழ்ந்து இருந்த பெரியோரை மதித்து போற்றி – சீறா:1645/2
வயிர ஒண் கதிர் ககுபத்துல்லா வலம் சூழ்ந்து
செயிர் அற தொழுதிருந்து இனத்தவருடன் சிறப்ப – சீறா:1886/2,3
சொல தகா பெரும் பகை தொடுத்து இனத்தொடும் சூழ்ந்து
குலத்தினும் பிரித்து அற நெறி தீன் நிலைக்கு உரியோர் – சீறா:2018/1,2
சிலை தட கை வய வேந்தர் இனிது சூழ்ந்து இருக்கும் நபி செவ்வி நோக்கி – சீறா:2180/3
சொற்ற துணிவும் மருவார்கள் சூழ்ந்து மனையை வளைந்ததுவும் – சீறா:2548/2
கொள்ளாத நலிதல் ஐயம் துன்பமுடன் சூழ்ந்து குடிகொண்டு தோன்ற – சீறா:2666/2
சுணங்கன் வெம் கான் புக சூழ்ந்து நின்றிடும் – சீறா:2983/2
ஈழ்த்தனள் வாராதாலோ என்னையோ பாலில் சூழ்ந்து
வாழ்த்தி நின்றவரை எல்லாம் வைதுகொண்டு அரிவை நின்றாள் – சீறா:3197/3,4
கன்னியர் சூழ்ந்து வாழ்த்தி கண்ணெச்சில் கழித்திட்டாரால் – சீறா:3217/4
ஒலி கடல் கிளர்ந்தது என்ன உற்றவர் எவரும் சூழ்ந்து
பலனுற வாழ்த்தி வாழ்த்தி பாத்திகா ஓதும் காலை – சீறா:3221/3,4
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து – சீறா:3580/1
வடிவு ஆர் சோலை சூழ்ந்து இருந்த மதீனா நகரில் வந்தனரால் – சீறா:4051/4
முப்புவியும் விளங்க வரும் மெய் பதவியும் அடைந்தேன் முழுதும் சூழ்ந்து
வெப்பு உறும் தீமையும் துலைந்தேன் கிடையாத திரு சுவன வீடும் பெற்றேன் – சீறா:4537/3,4
எம்மருங்கும் சூழ்ந்து நிற்கும் காலாள்கட்கு ஓர் கூறும் ஈந்திட்டாரால் – சீறா:4673/4
செல்வமுடன் நபியும் அவர் சேனைகளும் சூழ்ந்து இருப்ப செபுறயீலும் – சீறா:4674/1
முலை திகழ் அயில் வேல் மன்னர்கள் சூழ்ந்து மொய்த்திட பரியின் மீது ஏறி – சீறா:4959/3

மேல்


சூழ்ந்தே (2)

துறவின் மிக்கவர் திக்கிறின் ஓசையும் சூழ்ந்தே
இறைவனை தொழுது இரு கையும் ஏந்திய ஆமீன் – சீறா:98/2,3
சுறுகும் என்னும் அ கூட்டத்தின் அரசர்கள் சூழ்ந்தே
இறைவன் நேர் வழி ககுபத்துல்லா-தனை இயல்பாய் – சீறா:1226/2,3

மேல்


சூழ்வர (11)

நல் நயம் பெறும் தோழர்கள் சூழ்வர நயினார் – சீறா:2013/3
தொடைக்கு இணங்கிய புயத்தவர் சூழ்வர நெறியின் – சீறா:2042/2
சூல் முகில் கவிகையில் பல்லர் சூழ்வர
மீன் நடு மதி என விளங்கி தோன்றிய – சீறா:2716/1,2
மன்னவர் யாவரும் மருங்கு சூழ்வர
கன்னியும் தொடும் பத கபுசு-தன்னொடு – சீறா:3256/1,2
வயிர் ஒலித்திட படை மன்னர் சூழ்வர
அயிலொடும் சென்று அவண் அடர்ந்து அபூஜகல் – சீறா:3265/1,2
புள்ளினும் நனி விசை புரவி சூழ்வர
கள் அவிழ் மலர் பொழில் கடந்து போயினார் – சீறா:3303/3,4
பரிகளும் மன்னவர் பலரும் சூழ்வர
நரலையை நிகர் திரு நகரை நோக்கியே – சீறா:3310/2,3
தூயவர் எண்மரும் பரிவில் சூழ்வர
பாய் அரி துவசம் முன் படர போயினர் – சீறா:3320/2,3
வீரர் சூழ்வர வரவு கண்டவர் விளம்புவரால் – சீறா:3458/4
மன்னர் சூழ்வர வந்தனன் – சீறா:4143/4
தொக்க காபிர் தொகுதியும் சூழ்வர
கக்கன் தூதர் கடிது எழுந்தார் அரோ – சீறா:4659/3,4

மேல்


சூழ்வீர் (1)

வடி கண்ணீர் பணித்து நிற்கும் மாதையும் நோக்கி சூழ்வீர்
இடுக்கண் ஏது என்ன கேட்ப யாது ஒன்றும் அறியேம் என்றார் – சீறா:2801/3,4

மேல்


சூழ (82)

பூண் அணிந்து அழகுறும் இளையவர் புடை சூழ
சேண் அடைந்து அபுவா எனும் தலத்தினை சேர்ந்தார் – சீறா:206/3,4
துன்று வெம் படை தலைவரும் பரியுடன் சூழ
குன்று உலாவுகொள் அரி குல குறைஷிகள் நடந்து – சீறா:593/2,3
பூத்த மென் மலர் செறிதரு பொழில் புடை சூழ
வாய்த்த நல் குடி பெயருடன் வழியிடை நெடு நாள் – சீறா:788/2,3
துணைவரும் உயிர் துணைவியும் புதல்வரும் சூழ
பணர் விரிந்து அன கேளிரும் பாங்கினில் இருப்ப – சீறா:837/1,2
கால வேல் கரத்தில் ஏந்தி காளையர் மருங்கு சூழ
மாலை ஒண் புயத்தில் ஓங்க முகம்மதும் இனிதின் வந்தார் – சீறா:1035/3,4
பாங்கினில் கணக்கர் சூழ பரிசன குழு வந்து ஈண்ட – சீறா:1041/1
சின மத கரியும் தேரும் சிவிகையும் பரியும் சூழ
புனல் முகில் கவிகை வள்ளல் வருவதும் பொருந்த நோக்கி – சீறா:1163/2,3
வரி விழி செம் கனி துவர் வாய் கொடியிடையார் புடை சூழ வளரும் செல்வம் – சீறா:1216/3
நல்லறிவுடையவர் சூழ நம் நபி – சீறா:1606/1
கந்து அடர் வெம் கரி இரதம் பரி நெருங்க படை சூழ கவிகை ஓங்க – சீறா:1651/3
தேன் இதழ் மடவார் சூழ சீயம் ஒத்து எழுந்தான் அன்றே – சீறா:1717/4
நால் வகை பதாதி சூழ நனி பல திறைகள் ஈய்ந்து – சீறா:1746/2
வீதியிடை புக்கு விறல் மன்னர் புடை சூழ
கோது அறு மற கொடுவரி குழுவின் நாப்பண் – சீறா:1764/2,3
துன்றும் அடல் வெம் புரவி சேனை புடை சூழ
வன் திறல் அமச்சரொடு இருந்து மதி வல்லோன் – சீறா:1784/1,2
வட_வரை அனைய திண் தோள் வயவர்கள் இனிது சூழ
கடி மனையிடத்தில் புக்கார் ஹபீபு இறசூலூம் அன்றே – சீறா:2123/3,4
மக்கள்-தம் குழுவின் வைகி மந்திர தலைவர் சூழ
மிக்க ஜின் சிலதை கூவி விறல் முகம்மதுவை நீவி – சீறா:2261/1,2
பெரும் தொகை குழுவினோடும் பெரிது எழுந்து ஆழி சூழ
இருந்த வையக திகாந்தம் எட்டினும் தேடி சென்று – சீறா:2262/2,3
இறைவன் ஏவலினால் வானோர் எண்ணிலர் சூழ செல்வம் – சீறா:2273/2
பாட்டு அளி முரலும் தாம தலைவர் பன்னிருவர் சூழ
வேட்டமுற்று ஆதி தூதர் விரித்த தீன் விளக்கம் செய்தார் – சீறா:2356/3,4
அரசரும் சூழ அலி எனும் அரி ஏறு ஆடல் அம் பரி நடத்தினரால் – சீறா:3170/4
கடல் பெரும் சேனை சூழ கட கரி மலைகள் நாப்பண் – சீறா:3180/1
காழ் தட களிறு சூழ வந்த காவலரை நோக்கி – சீறா:3197/1
பெரும் படை தலைவர் சூழ வரும் பிரான் வதனம் நோக்கி – சீறா:3198/1
பிணைக்கு அரும் கண்ணார் சூழ பிறங்கு சாமரைகள் தூங்க – சீறா:3219/2
கட்டுடன் நடத்தி செ வேல் காளையர் இனிது சூழ
மட்டு அவிழ் அலங்கல் திண் தோள் மன்னவர் புறப்பட்டாரால் – சீறா:3347/3,4
இரு நிதி செல்வர் நாற்பது இலக்கு உறும் தலைவர் சூழ
மரு மலர் தொடையல் வேய்ந்த வரை புயன் கறுபு மைந்தன் – சீறா:3358/1,2
விரி கடல் தானை சூழ வேந்தர்கள் திரண்டு மொய்த்தார் – சீறா:3365/4
வரையிடை வயவர் சூழ முகம்மது உற்று இறங்கினாரால் – சீறா:3384/4
ஷாம் எனும் பதியை நீந்தி தலைவர் நாற்பதின்மர் சூழ
ஏமமும் பண்டம் யாவும் கொண்டு யான் வருவ கேட்டு – சீறா:3389/1,2
அணியணி வீரர் சூழ ஆலயம் புகுந்து தாழ்ந்து – சீறா:3404/3
குரகதம் நடத்தி வெல் வேல் குமரர்கள் பல்லர் சூழ
வரி என வெகுளி பொங்கி ஆண்மையும் வலியும் கூறி – சீறா:3405/2,3
அ நகர் அறபி காபிர் ஆயிரம் பெயர்கள் சூழ
மன்னிய சீறூர் உற்ற மைந்தர்கள் எவரும் ஈண்ட – சீறா:3406/2,3
சுருதி நூல் முறை பெருக்கிய நாவினர் சூழ
விருது நீள் கொடி இரு புறம் உலவி மேல் விளங்க – சீறா:3469/2,3
கை கடுத்தலை விதிர்த்து வெம் காபிர்கள் சூழ
மிக்க சைபத்து என்று ஓதிய விறல் அரி வீரன் – சீறா:3514/2,3
கொதி நுனை வடி வேல் மன்னவர் சூழ குதிரையின் தொகுதிகள் ஈண்ட – சீறா:3593/3
அறபினின் மலீக்கு சபுறாவாம் தலம் விட்டு அற பெரும் படை புறம் சூழ
இறௌகா எனும் அ தலத்தினில் வரும் போழ்து இயல் பெறு மதீன மன்னவரும் – சீறா:3598/1,2
புறநகரவரும் திரண்டு எதிர் பணிந்து பொங்கிய முழக்கொடும் சூழ
நறவு கொப்பிளிக்கும் துடவை சூழ் நகரில் நண்ணினர் முகம்மது நபியே – சீறா:3598/3,4
கறை கொளும் கதிர் வேல் காளையர் சூழ கவிகையும் கவரியும் மலிய – சீறா:3599/2
சாயக சிலை கை வீரரும் சூழ தட கதிர் வேல் எடுத்து ஏந்தி – சீறா:3609/2
மரு மலர் அணிந்த தீனவர் சூழ வந்தனர் முகம்மது நபியே – சீறா:3610/4
விட்டு முன் நடத்தி வேந்தர் வீரர் வெம் பரியில் சூழ
கட்டழகு எறிக்கும் சோதி காவலர் புறப்பட்டாரால் – சீறா:3673/3,4
பல கதி பரியினோடும் படைக்கலத்து அரசர் சூழ
புலவர்கள் இனிது வாழ்த்த முகம்மது புறப்பட்டாரால் – சீறா:3678/3,4
கறை நிணம் குருதி மாறா கதிர் வை வேல் வீரர் சூழ
நறை மலர் துடவை போர்த்த மதீன மா நகரில் வந்தார் – சீறா:3679/3,4
தீட்டும் வேலவர்கள் சூழ மதீன மா நகரம் சேர்ந்தார் – சீறா:3687/4
ஆரண நெறி மறா அன்சாரிகள் பதின்மர் சூழ
வார் அணி முலையார் சிந்தை மயக்கு உறும் வனப்பு வாய்ந்த – சீறா:3694/1,2
மருவலர்கள் உயிர் அருந்தி ஊன் உணங்கும் கதிர் இலை வேல் மன்னர் சூழ
திரு மறை நம் நபி இருக்கும் பள்ளியிடத்து எய்தி முக செவ்வி நோக்கி – சீறா:3749/1,2
அனசு உரைத்த மொழி கேட்டு நன்கு என தீனவர் சூழ அரசர்_கோமான் – சீறா:3752/1
துனிவிலாது மூவாயிரம் பெயரவர் சூழ
குனி சிலை கை கனானத்து என்பவர் பல குழும்ப – சீறா:3790/2,3
கனை பரி சூழ மற்ற காவலர் எவரும் தத்தம் – சீறா:3844/3
வாவிய பரியும் சூழ உகுது எனும் மலையில் போந்தார் – சீறா:3876/3
போரின் மிகுத்தார் சூழ வளைத்தார் பொருவு இல்லா – சீறா:3920/3
துனியே பெருக உறைந்திடுதல் சூழ சமன்று சேனையொடும் – சீறா:4033/2
தடியோடு ஊன் உண்டு உடல் சிவந்த தட வேல் வேந்தர் பல சூழ
படியோடு எழுந்த மலையோடும் பகர்ந்த திரு நம் நபி இறசூல் – சீறா:4051/2,3
மல் அணி புயத்தினர் சூழ வஞ்சகன் – சீறா:4063/1
புறத்திடை சூழ ககுபு எனும் சூதன் புரவியின் ஏறி அங்கு எளிதில் – சீறா:4078/2
நறை தடம் சூழ கவின் பெறு மக்க நல் நகர் அடைந்தனன் அன்றே – சீறா:4078/4
கொல் உலை வேல் கை மள்ளர்கள் சூழ நடந்தனன் குவவு தோள் வீரன் – சீறா:4080/4
குருதி நீர் துடைத்து வாள் உறை புகுத்தி கூடிய நால்வரும் சூழ
விரைவுடன் எழுந்து அங்கு அவர் மனை போந்தார் வீந்தவன் மனையிடத்து உறையும் – சீறா:4117/1,2
மிஞ்சு பயகாம்பர் மற வேந்தர் படை சூழ
வஞ்சம் அறவே மதின மா நகரின் வந்தார் – சீறா:4138/3,4
உண் நிறை உடைய வேந்தர் ஒண் திறல் பரியில் சூழ
கண் அகன் ஞாலம் காக்கும் காரண தூதர் போந்தார் – சீறா:4182/3,4
புறத்திடை சூழ சாபிர் பொறி வரி வண்டு கிண்ட – சீறா:4290/3
விந்தை பெற பீடிகையும் வகுத்து மறை மாந்தரொடு வேந்தர் சூழ
கந்தம் உலவிய தூதர் உறைந்தனர் நல் தரும நெறி கடந்திலாதார் – சீறா:4308/3,4
கைத்தலத்தின் ஏந்தி விசை பரி சூழ ஈண்டினர் வெண் கடி வாய் பாந்தள் – சீறா:4311/3
போர் உடை தலைவர் சூழ எழுந்தனன் இயங்கள் பொங்க – சீறா:4373/4
மறையினை தெருண்டு நின்றோர் யாவரும் மருங்கு சூழ
கறை கெழு மனத்தன் கேண்-மின் ஈது என கழறலுற்றான் – சீறா:4377/3,4
திருந்திட அ இடம் நீந்தி சேவகர் மருங்கில் சூழ
வருந்திட நரகத்து எய்தும் பனீக்குறைலா என்று ஓதும் – சீறா:4391/2,3
அரிய வேந்தரும் தோழரும் அருகினில் சூழ
கரிய மை முகில் நிழற்றிட காரணம் காட்டும் – சீறா:4436/2,3
அருள் அவுபு என்னும் எறுழ் வலி அரசன் அசத்து எனும் குலத்தவர் சூழ
வரு விசை புரவி ஆயிரம் சூழ ஏகினன் மலர் குடை கவிப்ப – சீறா:4441/3,4
வரு விசை புரவி ஆயிரம் சூழ ஏகினன் மலர் குடை கவிப்ப – சீறா:4441/4
குனி தரு வாளும் மருங்கினில் விசித்து கத்துபான் குழுவினர் சூழ
புனை மயிர் புரவி ஆயிரம் நடப்ப அசன் பெறும் புதல்வன் கோளரியின் – சீறா:4442/2,3
வெம் திறலவரும் இரு புறம் சூழ ஓர் புறத்து இறங்கினன் விளைந்த – சீறா:4454/3
நலிறு எனும் குழுவினர் சூழ நாப்பண் ஓர் – சீறா:4542/1
சாரும் வெண் கொடி ஒன்று ஏக சார்ந்தனர் தானை சூழ
ஆரண நயினார் பின்னர் ஆதி-தன் அருளில் போனார் – சீறா:4630/3,4
அரு மறை உணரும் தீன் அன்சாரிகள் எவரும் சூழ
கரு முகில் இடியேறு என்ன பல்லியம் கலிப்ப நாளும் – சீறா:4631/1,2
உன்னி அருளுடன் எழுந்து யார்கள் அசுகாபிகளும் ஒருங்கு சூழ
மின் இலகும் அயில் வடி வாள் மஆது மகன் சகுது-தம்பால் விரைவில் சென்று – சீறா:4675/2,3
செப்பு நெறிப்படியாக மலக்குகளும் அசுகாபி திரளும் சூழ
மெய் புகழின் சகுது-தமை தொழுவித்தார் அடக்குவித்தார் மேன்மையோரே – சீறா:4677/3,4
தானை சூழ தலைக்கடைக்கு எய்தவே – சீறா:4806/4
எவரும் சூழ நபி விரைந்து ஏகினார் – சீறா:4813/4
விரி கடல் சேனை சூழ விரைந்து எழுந்து ஏகி சீத – சீறா:4904/1
தொடை மழை பொழியும் வில் தோள் துணைவர்கள் இருவர் சூழ
கடை மணி கலின பாய் மா காவலர் சல்மா என்னும் – சீறா:4920/1,2
மணி குடம் துரந்த வாங்கு வில் தடம் தோள் வய அசுகாபிகள் சூழ
துணித்து இருள் துரக்கும் கதிர் எழும் மேனி தூயவர் இருக்கும் காலையினில் – சீறா:4957/2,3
நடம் உடை கவன பரி புடை சூழ வதிந்தனர் நபி முகம்மதுவே – சீறா:4987/4

மேல்


சூழல் (1)

புடைபடும் கதலி சூழல் பூம் கரும்பு அடவி மாய – சீறா:3381/3

மேல்


சூழலும் (2)

சொரி மது சோலையும் கதலி சூழலும்
தெரிதர கண்டு சென்று இன்ப செல்வமே – சீறா:2726/2,3
செல் அடை நெடு வரை திகரி சூழலும்
எல்லவன் கதிர் கிடந்து எரியும் பாலையும் – சீறா:3315/2,3

மேல்


சூழவரல்லால் (1)

குறுமறி ஆயராரும் குரிசிலை சூழவரல்லால்
பிறது ஒரு நெறியும் செல்லார் பெய் பரல் கானில் ஆங்கு ஓர் – சீறா:404/1,2

மேல்


சூழவே (2)

மருப்பு இடித்த மதாசலம் சூழவே – சீறா:4807/4
பாயும் வேக பரி புடை சூழவே – சீறா:4808/4

மேல்


சூழி (2)

துவசமும் துலங்கிட சூழி மா கரி – சீறா:3269/3
பைத்தல் சூழி படு மலர் யாவையும் – சீறா:4829/2

மேல்


சூழு (2)

மரு கமழ் சோலை சூழு மக்க மா நகரின் வாழ்வு – சீறா:3356/1
பரவி இரு பதம் போற்ற உயிர் துணைவர் எனும் அரசர் பலரும் சூழு
குரிசில் நபி எழுந்தருளி உவந்த திரு மனை குறுகி குறைகள் தீர – சீறா:3759/2,3

மேல்


சூழுடன் (1)

சூழுடன் விரதம் செய்ய துன்பு உறு கிழவன் எந்தநாளினும் – சீறா:4796/2

மேல்


சூழும் (6)

இறையவன் முனிவும் பாரில் எண்ணிலா பழியும் சூழும்
முறையல விடு-மின் என்ன மொழிந்து நெஞ்சு அழிந்து நிற்பார் – சீறா:413/3,4
மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில் – சீறா:1638/3
குருகு ஆலும் மலர் வாவி புடை சூழும் மக்க நகர் குரிசில்-தன்-பால் – சீறா:1643/3
செந்நெல் அம் கழனி சூழும் திமஸ்கினின் ஹபீபு வேந்தன் – சீறா:1730/1
மரு மலர் சோலை சூழும் மக்க மா நகரம் சேர்ந்து – சீறா:1749/3
தீம் கரும்பு எருத்தில் தூங்கு தேன் உடைந்து சிதறிடும் பணை புடை சூழும்
தாங்கல் சேர் வளமை செறிந்திடும் காபா என்னும் அ தலத்தினை சார்ந்தார் – சீறா:4923/3,4

மேல்


சூழுமால் (1)

சூதும் பொய் மன நன்மையும் சூழுமால் – சீறா:4249/4

மேல்


சூழுமே (1)

பிந்திடாத பெரும் பழி சூழுமே – சீறா:1394/4

மேல்


சூறத்தில் (1)

சொலும் சூறத்தில் முஸம்மில் எனும் சுருதி வசனம் இறங்கினவே – சீறா:1331/4

மேல்


சூறத்திலிருந்து (1)

இக்றவு எனும் சூறத்திலிருந்து நாலாயத்து இன்ப – சீறா:1267/2

மேல்


சூறத்தின் (1)

சூறத்தின் பொருளை முகம்மதும் உரைப்ப துணுக்குறாது உனது உரை உலகில் – சீறா:1457/1

மேல்


சூறத்து (2)

துடங்கு தப்பத்யதா என தோன்றும் சூறத்து ஒன்று இறங்கியது உலகில் – சீறா:1456/3
வேதம் எனும் புறுக்கானில் ஒரு சூறத்து எடுத்து ஓதி விரிவதாக – சீறா:1655/2

மேல்


சூறைகள் (1)

பாடிகள் அனைத்தும் பாழ்படுத்தும் சூறைகள்
ஆடி இங்கு அடைக என அறைந்திட்டார் அரோ – சீறா:3027/3,4

மேல்


சூறையாடி (1)

துகள்பட பல பொருள் சூறையாடி நின்று – சீறா:3646/3

மேல்


சூறையாடியபோது (1)

சூதர் பாசறை சூறையாடியபோது
ஒலீது அருள் பூசல் ஏறு அனான் – சீறா:3973/1,2

மேல்


சூறையாடினார் (2)

துன்று பாசறை சூறையாடினார் – சீறா:3965/4
துற்ற எங்கணும் சூறையாடினார் – சீறா:3972/4

மேல்


சூறையிட்டு (1)

சூறையிட்டு உதறி நெய் முடை கமழும் சுரி குழல் தொறுவியர் உடுத்த – சீறா:34/2

மேல்


சூறையிடல் (1)

சூறையிடல் போல அழல் சூறைவளி வீச – சீறா:4891/4

மேல்


சூறையில் (3)

இரு நில மாந்தர்கள் யாரும் சூறையில்
சொரிதரு பூளை ஒத்திடுவர் சொல்லினே – சீறா:1814/3,4
தொடர்ந்து சூறையில் திரித்து வெம் பரியினை துரத்தி – சீறா:3515/3
சுரிகையை கரத்தின் ஏந்தி சூறையில் சுழலும் வேக – சீறா:3951/1

மேல்


சூறையின் (2)

தொட்டிடாது ஒழியாது அரும் சூறையின் சுழலும் – சீறா:1531/4
கால சூறையின் ஒத்து எதிர்ந்து எழு குரகதத்தின் – சீறா:3491/1

மேல்


சூறைவளி (1)

சூறையிடல் போல அழல் சூறைவளி வீச – சீறா:4891/4

மேல்


சூனியம் (1)

கைதவ சூனியம் கற்று மந்திரம் – சீறா:1824/3

மேல்