கோ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 6
கோகிலம் 1
கோகுலத்தை 1
கோங்கு 3
கோட்டமும் 1
கோட்டி 10
கோட்டிக்கு 1
கோட்டிகள் 1
கோட்டில் 1
கோட்டினும் 2
கோட்டினை 1
கோட்டு 20
கோட்டு-வாய் 1
கோட்டை 1
கோட்டையை 1
கோட்பட 1
கோடற்கு 1
கோடி 16
கோடிகம் 4
கோடிகோடி 1
கோடின 1
கோடு 9
கோடுகின்ற 1
கோடும் 2
கோடை 4
கோணம் 2
கோத்த 1
கோத்திரத்தவர் 1
கோத்திரம் 1
கோத்திரை-கணின் 1
கோத்து 4
கோதாய் 1
கோதி 1
கோதில் 1
கோது 70
கோதும் 2
கோதும்பு 1
கோதும்பை 1
கோதும்பையும் 1
கோதுறாது 1
கோதை 6
கோதையர் 3
கோதையர்-தமை 1
கோதையர்க்கு 1
கோதையீர் 1
கோதையும் 1
கோதையே 1
கோதையை 1
கோப 6
கோபம் 6
கோபம்-தன்னால் 1
கோபமதாய் 1
கோபமா 1
கோபித்து 4
கோபுரத்து 1
கோபுரம் 1
கோமகன் 1
கோமான் 16
கோமானும் 1
கோமானே 1
கோயில் 1
கோயில்களிடத்தினும் 1
கோயிலில் 1
கோயிலின் 4
கோர 5
கோரத்தின் 1
கோரம் 1
கோரமாகிய 1
கோரமாய் 1
கோரமும் 1
கோரல் 1
கோல் 24
கோல்-தனை 1
கோல 9
கோலங்கள் 5
கோலத்தார் 1
கோலத்தின் 1
கோலம் 15
கோலம்-தன்னொடும் 1
கோலமும் 1
கோலமுமாய் 1
கோலமே 1
கோலமொடு 1
கோலாரி 2
கோலால் 4
கோலி 5
கோலிய 4
கோலில் 1
கோலினில் 1
கோலும் 3
கோலொடும் 1
கோவுக்கு 1
கோவுடன் 1
கோவே 9
கோவை 4
கோவையும் 1
கோள் 2
கோளரி 8
கோளரியின் 1
கோளார் 1
கோறல் 15
கோறல்செய்து 1
கோறலன்றி 1
கோறலின் 1
கோறலே 1
கோறலை 3
கோன் 29
கோன்_நகர் 1
கோன்_மகன் 1
கோனிடத்து 1
கோனொடு 1

கோ (6)

கோ குல வீதி நீந்தி கொழும் மனையிடத்தில் சார்ந்தார் – சீறா:640/4
கோ மறுகிடம்-தொறும் குறுகினார்களால் – சீறா:2765/4
கூர் அயில் தாங்கும் செம் கை கோ உதுமானும் வெற்றி – சீறா:3363/3
கோ மதத்து உறைந்தனன் குணம் என்று உன்னிய – சீறா:4055/2
கோ முறை வழுவா நீதி குலவிய அலியார் அப்போது – சீறா:4876/3
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார் – சீறா:5022/4

மேல்


கோகிலம் (1)

இன வளை முரலும் தடத்து அனம் இரைப்ப இசை குரல் கோகிலம் இயம்ப – சீறா:1938/1

மேல்


கோகுலத்தை (1)

குறைஷி அம் குல காவினில் உறைந்த கோகுலத்தை
பொறையும் நீதியும் ஒழுக்கமும் விளைத்த பொன்னிலத்தை – சீறா:3732/1,2

மேல்


கோங்கு (3)

கோங்கு அசோகு தேக்கு ஆசினி பாடலம் குறிஞ்சி – சீறா:26/2
சந்து அகில் திலகம் குரவு தேக்கு ஆரம் தான்றி கோங்கு ஏழிலைம்பாலை – சீறா:1002/1
கோங்கு இள முலையின் செம்பொன் கொடி என என்னை சூழ்ந்த – சீறா:3196/3

மேல்


கோட்டமும் (1)

கஞ்ச மென் முக கோட்டமும் கண்ணின் நீர் கவிழ்ப்பும் – சீறா:453/2

மேல்


கோட்டி (10)

குறித்த வேல் இணை கண்களில் அஞ்சனம் கோட்டி
செறித்த மான்மதம் சந்தன கலவையும் திமிர்ந்தே – சீறா:195/2,3
கூறிய கூற்றை தேற்றா விளைத்திடும் கோட்டி என்பார் – சீறா:1345/4
செறுநர் செய்திடும் தீய அ கோட்டி கண்டு – சீறா:1404/1
விண் படர் மாட வாயில் வெளியினில் படங்கு கோட்டி
பண் படர் இசையின் வாய்ந்த பழ குலை கதலி நாட்டி – சீறா:1744/2,3
விரித்து ஒளிர் படங்குகள் விளங்க கோட்டி நல் – சீறா:3632/2
குவியும் வெள்ளி அம் பொருப்பு என படங்குகள் கோட்டி
பவுரி வாம் பரி தொகை பல நிரைநிரைப்படுத்தி – சீறா:3808/1,2
கரை என படங்கு கோட்டி கால் பட கிடந்து உலாவி – சீறா:4184/2
வால் குழைத்து எழில் வளை நெடு மா முகம் கோட்டி
கால் வளைத்து இரு செவி நிமிர்த்து உந்து கந்துகங்கள் – சீறா:4251/1,2
குன்று என புயங்கள் ஓடி வளர்ந்தன புருவம் கோட்டி
தென் திகழ் அரிய கண்கள் சிவந்தன தீயது என்ன – சீறா:4386/3,4
திரு மலர் வதனம் கோட்டி செவ்விய நிறை போர்த்து அல்லா – சீறா:4701/3

மேல்


கோட்டிக்கு (1)

சீறுதல் தவிர்த்து இ கோட்டிக்கு ஏற்பவை செய்தல் வேண்டும் – சீறா:2829/4

மேல்


கோட்டிகள் (1)

தூண்டிடா பெரும் கோட்டிகள் தொடுத்து அவன் துணிவாய் – சீறா:1688/2

மேல்


கோட்டில் (1)

உறைந்திட தருக்கள் யாவும் தளிர்த்தன ஒண் பூ கோட்டில்
நிறைந்தன ஈன்ற பைம் காய் நெருங்கின கனிகள் எங்கும் – சீறா:800/2,3

மேல்


கோட்டினும் (2)

கடந்த மும்மத கரி இணை கோட்டினும் கதித்து – சீறா:337/2
வடத்தினுள் அடங்காது இணைத்த கச்சு அறுத்து மத கரி கோட்டினும் கதித்து – சீறா:1966/3

மேல்


கோட்டினை (1)

இரும் பனை கை மும்மத கரி கோட்டினை ஈழ்த்திட்டு – சீறா:757/2

மேல்


கோட்டு (20)

சின கரி முனை கோட்டு இள முலை புலவி திருத்தும் பொய் அலது பொய் இலையே – சீறா:76/3
உரல் அடி சிறு கண் பெரு மத பிறை கோட்டு ஒருத்தலின் இடி முழக்கு ஒலியும் – சீறா:81/3
கூன் கிடந்து அனைய பிறை கறை கோட்டு குஞ்சரத்து அரசர் கைகூப்ப – சீறா:146/3
கிம்புரி கோட்டு கட மலை துளைத்து கிளைத்திடும் வேல் கரர் ஹாஷீம் – சீறா:165/1
கொல் நுனை வெள் நிற கோட்டு வாரண – சீறா:169/1
செம்மை அம் கோட்டு கட கரி கலகம் தீர்ந்த பின் ஐம்பதாம் நாளில் – சீறா:254/1
கோட்டு மாம் குயில் ஆமினாக்கு இவை எலாம் கூறி – சீறா:344/3
பரல் பரந்து இடம் துகள் எழ படு முனை திரி கோட்டு
இரலை மென் பிணை கன்றுடன் திரிந்த கான் ஏகி – சீறா:787/1,2
கோட்டு மென் மலர் வாசமும் கொடி மலர் விரையும் – சீறா:866/1
கோட்டு வாரண தொகுதியும் அரசர்கள் குழுவும் – சீறா:1714/3
தனம் எனும் இரு கோட்டு அத்தி ஓர் ஆலில் தளைபட பிணித்த சங்கிலியோ – சீறா:1968/1
கவை முனை கோட்டு செவ்வி கலை உடல் உயிரும் ஈன்ற – சீறா:2078/1
சவி புறம் தவழும் கோட்டு சார்பில் இ வனத்தின்-கண்ணே – சீறா:2078/3
கோட்டு உடை கலையினோடும் கூடிற்றோ அலது ஓர்பாலில் – சீறா:2087/1
கோட்டு உடை மலரின் மன்றல் குலவிய மதீனம் புக்கி – சீறா:2356/1
விண் தலை தடவும் கோட்டு தருவின் வீற்றிருந்தார் அன்றே – சீறா:2358/4
கோட்டு உடை களிறும் கரடியின் குழுவும் கொணர்ந்து நம் பதியினில் விடுத்து – சீறா:2521/2
கத களி கரியின் கோட்டு கதிர் முலை பணிகள் மின்ன – சீறா:3172/2
கோட்டு அலர் கமழும் கூந்தல் குறத்தியர் கவண் கல் ஏந்தி – சீறா:3382/2
அன்பு உறு முதலில் கோட்டு என்று அகுமது வந்து கூற – சீறா:4877/2

மேல்


கோட்டு-வாய் (1)

குயில் புரை சொல்லாள் செல்ல கோட்டு-வாய் நிழலின் கண்ணே – சீறா:429/2

மேல்


கோட்டை (1)

பண்டை நாள் இனிய ஈந்தின் பழம் அறுபஃது கோட்டை
கொண்டனர் பலிசையாக ஆங்கு அவை கொடுக்கும் முன்னம் – சீறா:4286/2,3

மேல்


கோட்டையை (1)

கொடியவன் உறைந்த புவாத்து கோட்டையை
சடிலமும் சேனையும் சதுரின் சுற்றிட – சீறா:3282/2,3

மேல்


கோட்பட (1)

கோட்பட உரையும் என்ன ஜிபுறயீல் கூறினார் தேம் – சீறா:1733/3

மேல்


கோடற்கு (1)

பேதுறும் முன்னம் யாமே பெரும் பகை துடைத்து கோடற்கு
ஏது போதம் சொல் என்றான் இவன் அதற்கு எடுத்து சொல்வான் – சீறா:2364/3,4

மேல்


கோடி (16)

அடையலர் கெடிகள் கோடி இடிபடு படல தூளி அலரியின் உடலில் மூழ்கவே – சீறா:12/3
விரி தலை குறவர் குழாத்தொடும் வெருட்டி விளைந்த முக்கனி சத_கோடி – சீறா:28/3
குடம்பையின் பல பேதம் ஆகிய சத_கோடி – சீறா:37/3
விசும்பினை தடவ வரை சத_கோடி வீற்றிருந்தன என சிறக்கும் – சீறா:59/4
பெருகிய கோடி சந்திர பிரகாசமாய் – சீறா:166/1
அணித்து உலை கனலில் உருக்கிடாது ஒளிரும் ஆயிரம்_கோடி மாற்று எனவும் – சீறா:239/1
பெரு முத்த வாரி கோடி இறைத்தனள் பெரிய கண்ணால் – சீறா:1166/4
பதிக்கும் பூரணமாய் பல கோடி மா – சீறா:1177/3
பல்லவ துணர் பைம் காவும் வீதியும் பல்பல் கோடி
எல்லவன் இருந்தது என்ன மணி விளக்கு இயற்றினாரால் – சீறா:3225/3,4
அறை-தொறும் திறந்து வன்ன பேத பட்டாடை கோடி
முறைமுறை எடுத்து தேன் ஆர் முகிழ் நனை இருந்த செவ்வி – சீறா:3227/2,3
பிறந்த செம் தூளியினிடை பல கோடி
மின் பிறந்து என பிறந்தன வாள் ஒளி விளக்கம் – சீறா:3548/3,4
பெருகிய தாரா கணம் பல கோடி பிறந்து ஒளி விரிப்பன போலும் – சீறா:3576/3
மதி தவழ் சிகர கோடி வரை பல கடந்து நல் நீர் – சீறா:3669/1
கதிரவன்-தன்னை ஒத்த கணிப்பில் ஆலவட்டம் கோடி
மதிகளை ஒத்த சூடும் சருவந்த மௌலி அன்றே – சீறா:3854/3,4
அ பரிசு அங்கு அவர் நினைப்ப அந்தரத்திலிருந்து கதிர் அனேக கோடி
ஒப்பமுற வந்தது என உருவு திகழ் மலக்குகள் வந்து உற்றார் வேதம் – சீறா:4677/1,2
பரந்திடும் இருளை ஓட்டும் பானுவின் கதிர்கள் கோடி
விரிந்தன என்ன சோதி விளங்கிட நபி முன் வந்தார் – சீறா:4694/3,4

மேல்


கோடிகம் (4)

நிறைந்த பூண் சொரிந்த கோடிகம் சுமந்து நின்றனர் மடவியர் ஒருங்கே – சீறா:1206/4
தடம் கொள் கோடிகம் இல்லாதால் தாளினை நிமிர்த்து காலும் – சீறா:2599/2
இலங்கு இழை மடவார் அடை பை கோடிகம் சாந்து இரு மருங்கினும் எடுத்து ஏந்த – சீறா:3160/2
அணி கலம் கலவை செப்பு கோடிகம் அடைப்பை ஏந்தி – சீறா:3219/1

மேல்


கோடிகோடி (1)

உரம் பெற கனம் உண்டு என்ன ஓதியோர் கோடிகோடி
நிரம்பும் மானிடருக்கு உற்ற நிறை என்று நிகழ்த்தினாரே – சீறா:421/3,4

மேல்


கோடின (1)

கோடின புருவம் நிமிர்ந்தன புயங்கள் வாவுற கொலை செயும் நெடும் போர் – சீறா:4451/1

மேல்


கோடு (9)

கிடந்த சந்தனம் கார் அகில் கிளை மணி கரி கோடு
உடைந்த முத்தம் வெண் தந்தம் முச்சுடர் ஒளி ஒதுங்க – சீறா:32/1,2
சின மத கரி கோடு எனும் முலை தடத்தில் சேதகம் தெறிப்பது திரண்ட – சீறா:51/3
கோடு உறை நபி-வயின் குறுகினார் அரோ – சீறா:1326/4
பொறை மத கரி கோடு ஏற்ற புரவலர் உயிரை மாந்தி – சீறா:1544/2
எரி மணி வயிர கிம்புரி பெரும் கோடு இணை வளை பிறையினும் இலங்க – சீறா:3164/2
உடைமை கோடு உறைந்தான் நம்மால் காப்பது ஒன்று இன்மையாலே – சீறா:3393/2
இகல் அறும் தனி முதலவன் உதவி கோடு இவணில் – சீறா:3472/3
கோடு பட்டு மலர் காய் உதிர்த்து விளை கூவல் அற்று விடு வேரொடும் – சீறா:4211/3
கோடு கொண்டு எழுந்த நெடு வரை குடுமி இடங்களும் பலபல குறுகி – சீறா:4960/3

மேல்


கோடுகின்ற (1)

கோடுகின்ற துளை மூரல் நெட்டு உடல் குழைத்து இ வெம்மையில் நுணங்கி வெம் – சீறா:4215/3

மேல்


கோடும் (2)

கோடும் வில்லுடன் வில்லினர் அடர்த்தனர் குழுமி – சீறா:3546/4
கோது உறும் அஃது அன்றியும் முனை திறம் கோடும்
நீதம் அன்று இவண் இருத்தல் போய் பொருவது நினைவால் – சீறா:3822/3,4

மேல்


கோடை (4)

கோது கோடை மாருதம் உயிர்த்து உணங்கு குன்று அனைய – சீறா:771/3
கொற்ற வெம் கோடை என்ன திரிதரு குரகதங்கள் – சீறா:3955/4
கோடை நீள் தட நீரையும் வாரிக்கொண்டு எறிந்து – சீறா:4580/2
கோடை போல் சுழன்று வரும் பரி கடாவிக்கொண்டு எழும் தலைவரில் ஒருவன் – சீறா:4933/1

மேல்


கோணம் (2)

மின்னு கோணம் விரல்கள் சிவப்பு உற – சீறா:4228/2
எல் தாவு கதிர் கோணம் எடுத்தே மறை கற்றோர் – சீறா:4337/2

மேல்


கோத்த (1)

செதுக்கி பொன் இழையில் கோத்த வடத்தொடும் சேர்வையாக்கி – சீறா:3215/2

மேல்


கோத்திரத்தவர் (1)

கோத்திரத்தவர் செழு முகங்கள் கோது அற – சீறா:3247/3

மேல்


கோத்திரம் (1)

கோத்திரம் முழுதும் மாந்த கொடுப்பினும் குறையாது என்று – சீறா:4711/3

மேல்


கோத்திரை-கணின் (1)

கூட்டமும் விரைந்து போய் கோத்திரை-கணின்
பாட்டு உறை இலஞ்சியுள் படிந்த ஊற்றிடை – சீறா:4977/2,3

மேல்


கோத்து (4)

கோலம் மா கடல் ஈன்ற முத்து இலங்கிட கோத்து
நீல மா மணி இடையிடை தொடுத்தன நிகர்த்த – சீறா:1109/3,4
குலவு நீல மா மணியிடை கோத்து அவை தூக்கி – சீறா:1111/2
விரி கதிர் மணிமேகலை நடு கோத்து விளங்கிட நுடங்கு மெல் இழையோ – சீறா:1969/2
வந்து தீனவருடன் நின்று மணி கரம் கோத்து
நொந்து சென்னி வைத்து அடிக்கடி யாரையும் நோக்கி – சீறா:3985/1,2

மேல்


கோதாய் (1)

கூட்டிவிப்பதும் வலியதோ கூட்டுவன் கோதாய் – சீறா:456/4

மேல்


கோதி (1)

கோதி நின்றனன் இடர்க்கு அடங்கிலன் என குறித்தார் – சீறா:2919/4

மேல்


கோதில் (1)

கொடுவரி பதத்து உகிர் முனை அரிந்து என கோதில் வெண் நறு வாசத்து – சீறா:657/1

மேல்


கோது (70)

கோது அற எழுந்த நாற்றினை பறித்து குவித்திடு முடி இடம் அடுத்து – சீறா:49/1
கோது இல் பொன் நகர் திறந்த வாய் கதிர் என குலவும் – சீறா:93/4
கோது அற பெருகி முன்னிலை திரண்ட குழுவினை கண்டு கண் குளிர்ந்து – சீறா:126/3
கோது அற பழுத்து மதுரமே கனிந்த கொவ்வை வாய் அரம்பையர் வாழ்த்தி – சீறா:251/1
நல் நிலை சலிலம் கொணர்ந்து கோது அறவே நறை கமழ் முகம்மது நபியை – சீறா:282/2
கோது இலா குனையினில் செல கருத்தினில் குறித்து – சீறா:342/3
குலவிய நிறையும் பொறுமையும் விளங்க கோது இலா பெரும் புகழ் விளங்க – சீறா:377/2
கோது அறும் துணைவரும் வழித்துணையுடன் கூடி – சீறா:447/2
கோது அற பணிந்து இரு கரம் சிரத்தினில் குவித்தார் – சீறா:569/4
கோது இலா மறை உரைத்த சொல் உளத்தினில் குறித்து – சீறா:572/1
கோது அற தெளிந்தார் நசாறாக்கள்-தம் குலத்தோர் – சீறா:579/4
கோது கோடை மாருதம் உயிர்த்து உணங்கு குன்று அனைய – சீறா:771/3
கோது அறு கரிய மேக குடை நிழல் தொடர்ந்து வந்த – சீறா:796/2
கோது அறு கனிகள் துய்ப்பார் கொழும் தழை விலங்குக்கு ஈய்வார் – சீறா:805/2
கோது அற புனல் உண்டாகி குற்றியும் தளிர்ப்ப கண்ட – சீறா:821/1
கோது இல் வெண் சிறை பெடையொடும் குருகு இனம் இரிய – சீறா:854/2
கோது அற பழுத்த செழும் கனி கொடுத்து கொண்டல் அம் கவிகையை நோக்கி – சீறா:996/3
கோது அறு கருணை வள்ளல் குவவு தோள் வனப்பை கண்ணால் – சீறா:1160/1
கோது அற கொடுப்ப தீன் பயிர் விளைத்த கூறு எலாம் விரித்து எடுத்துரைப்பாம் – சீறா:1241/4
கோது இலா கதீஜா-தமை இரு கரம் குவித்து – சீறா:1295/3
கோது அறும் துகில் பொதிந்து அரு மணி பல குயிற்றி – சீறா:1360/1
கோது இல் கற்பக செழும் கொடி கொழும் கனி கதீஜா – சீறா:1373/1
கோது இலாது அபித்தாலிபு திரு கரம் கொடுத்து – சீறா:1388/2
கோது அடர்த்து அ குறிப்பு அரிதால் குலம் – சீறா:1416/2
கூயவன் தந்தை ஆசிறையும் கோது இலா – சீறா:1462/3
கோது அறு தீன் நிலை நிறுத்தும் கொற்றவர் – சீறா:1476/3
கூறிய மார்க்கமே மார்க்கம் கோது அற – சீறா:1630/2
குலத்தினுக்கும் அரசருக்கும் முதியோர்க்கும் மறையோர்க்கும் கோது இலாது இ – சீறா:1650/1
கோது அற தெளிந்து இ மொழி நன்கு என குறித்து – சீறா:1679/3
கோது இலாத விண்ணப்பம் என்று இரு கரம் குவித்தே – சீறா:1684/4
கோது அறு மக்கம் என்னும் கொழும் பதி தலைவமாரும் – சீறா:1748/2
கோது அறு மற கொடுவரி குழுவின் நாப்பண் – சீறா:1764/3
கோது இலாது உரை என உரைத்தனர் நபி குரிசில் – சீறா:1853/4
கோது இலாது இவண் கொடுவருவேன் என குறித்து – சீறா:1897/2
கோது அற மனமும் வாக்கும் ஒன்றாகி குதா-தனை அடிக்கடி புகழ்ந்தார் – சீறா:1900/4
கோது அற தெளிந்து எழுது பத்திரத்தையும் கொடுத்தான் – சீறா:2028/4
கோது அறு குறிப்பு எவை கூறுவீர் என்றான் – சீறா:2128/4
கோது அற செயும் சடங்குகள் குறைவு அற முடித்தார் – சீறா:2206/4
கோது அற மனத்துள் ஈமான் கொள்வது திண்ணம் என்ற – சீறா:2281/4
கோது அறும் கலிமா ஓதி குழுவொடும் ஈமான் கொண்டு – சீறா:2287/3
குவி குபிர் அகற்றி இருந்தனர் என்ன கோது இலா மன மகிழ்வுடனே – சீறா:2317/3
கோது அற எழுந்து தீனவர் எவர்க்கும் குறைவு அற சலாம் எடுத்துரைத்து – சீறா:2327/2
கோது இலாது உண்டு பாலும் குடித்து இனி – சீறா:2342/3
கோது அற கலிமா எடுத்து ஓதி மெய் குழைத்து – சீறா:2622/3
கோது இலாது அடர்ந்து எதிர் குவிந்த மன்னவர் – சீறா:2750/1
கொடி மதிள் மாட வாய் குறுகி கோது அற – சீறா:2755/1
குறைஷி அம் குலத்தில் உதித்து நல் நூல்கள் கோது அற தெரிந்து நம் நயினார் – சீறா:2900/2
கூடும் எண்பது பெயருடனும் கோது அற – சீறா:3027/1
கோது அற திரண்டு சோதி கொடி என உருக்கொண்டு ஓங்கி – சீறா:3043/3
கோது அறும் குளிர்ச்சி எய்தி நடுங்கின கொடிகள் எல்லாம் – சீறா:3133/4
கோத்திரத்தவர் செழு முகங்கள் கோது அற – சீறா:3247/3
கோது அற கூறினன் கூற அ தரு – சீறா:3326/3
கோது அறும் கொழுந்தும் குவலயம் படர்ந்தது இன்று என யாவர்க்கும் கூறி – சீறா:3589/2
கோது உறும் கயினுக்காகு எனும் அவர்கள் கூட்டத்தின் காரணமாக – சீறா:3611/1
கோது உறு மருவார் நாட்டின் கொள்ளையின் முதல்கள் எல்லாம் – சீறா:3676/1
கோது இலா உதுமான் மனம் களிப்புற கொடுத்தார் – சீறா:3734/3
கோது இல் அபூத்தல்காவோ அனுப்பினர் நீ கொணர்ந்தது எவை கூறு என்று ஓத – சீறா:3751/3
கோது உறும் அஃது அன்றியும் முனை திறம் கோடும் – சீறா:3822/3
கோது அறும் அமுதத்தொடும் உணவு அருந்தி குற்றுடைவாளினை ஏந்தி – சீறா:4109/3
குறைபடு துயரினை துடைத்து கோது இலாது – சீறா:4177/2
குறைவு இல் வாய்மையும் வணக்கமும் கோது அறு குணமும் – சீறா:4279/1
கொடுக்கும் மை முகிலின் அன்னீர் கோது உற தீனர் வெம் போர் – சீறா:4368/3
குலத்தினில் கிளையில் சான்றோர் கொள்கையில் கோது இலா நம் – சீறா:4385/1
கோது செய் நெடிய வேலினில் வாளில் கோலினில் கொடுத்திடலன்றி – சீறா:4476/2
குறைசி எனும் குல காபிர் பகை நாளும் வளருமெனில் கோது இலாது – சீறா:4526/1
குழுவொடும் இனையன மொழிந்து கோது இல் தன் – சீறா:4562/3
கொன்று தீர்குவர் என்றனர் கோது அறு மனத்தார் – சீறா:4639/4
கோது இலா மனத்து இருத்தினர் நபி அருள் கூர்ந்தே – சீறா:4643/4
கோது இலாது ஒசீவனம் தின்று உவந்தவர் கூண்டிராது – சீறா:4714/1
கோது உறும் பல சிற்றினத்தவரொடும் குழுமி – சீறா:4837/3

மேல்


கோதும் (2)

கோதும் கத வெம் குபிர் குலத்தை குறைப்ப மதீன மா நகரில் – சீறா:2549/1
கோதும் வாளில் தெறவோ கொடும் சர – சீறா:4506/2

மேல்


கோதும்பு (1)

மதுரம் ஒழுகிய கோதும்பு உறட்டி மூன்று உள என மான் வழங்க வாங்கி – சீறா:3750/3

மேல்


கோதும்பை (1)

இறுங்கு கோதும்பை நெல் முதலிய பல ஏற்றி – சீறா:3444/1

மேல்


கோதும்பையும் (1)

நெல்லொடு சாமை வரகு செந்தினையும் நீண்ட கோதும்பையும் இறுங்கும் – சீறா:4458/1

மேல்


கோதுறாது (1)

கோதுறாது அவுசு எனும் கூட்டத்தார்கட்கும் – சீறா:2148/2

மேல்


கோதை (6)

கோதை நின் குலம் பெயர் ஏது கூறு என – சீறா:322/1
கொடி இடை ஆமினா என்னும் கோதை ஓர் – சீறா:516/1
குறைவு அறா கற்பு எனும் கோதை மாதினை – சீறா:520/3
கோதை கதிஜா உரை மனத்திடை குறித்து – சீறா:894/1
தாது அவிழ் அலங்கல் கோதை தையலும் ஸஹீதும் உற்ற – சீறா:1580/3
கள் அவிழ் கோதை நல்லீர் கதிர் மணி முத்தம் என்பது – சீறா:3194/3

மேல்


கோதையர் (3)

கூலியின் முலை அமுது ஊட்டும் கோதையர்
நால் ஒரு பதின்மர் வந்தவரும் நன்கு உற – சீறா:317/1,2
கோதையர் உரைத்த மாற்றம் இஃது என கொண்டல் கூற – சீறா:3094/1
கூயவன் யாவன் என்று எழுந்து கோதையர்
நாயகி எதிர்ந்து பக்கீறை நன்குற – சீறா:3237/1,2

மேல்


கோதையர்-தமை (1)

குடங்கையின் மறைத்து அங்கு ஏகுவன் தீனின் கோதையர்-தமை அழைத்து இருத்தி – சீறா:4083/3

மேல்


கோதையர்க்கு (1)

கூரும் ஓர் கனவு கண்டனன் எனவே கோதையர்க்கு எடுத்து உரைத்தனரே – சீறா:365/4

மேல்


கோதையீர் (1)

கோதையீர் எனது உறு குல களிறு ஒரு குழந்தை – சீறா:455/2

மேல்


கோதையும் (1)

குரிசிலும் கதீஜா என்னும் கோதையும்
வரு மதிக்கு இன்புறும் மலர்கள் ஒப்பு என – சீறா:1033/2,3

மேல்


கோதையே (1)

கோதையே பெறின் முகம்மது என பெயர் கூறு என்று – சீறா:216/3

மேல்


கோதையை (1)

மட மா மயில் கதிஜா என வளர் கோதையை உதவும் – சீறா:987/1

மேல்


கோப (6)

பொங்கும் மா தவத்தோன் கோப புரை அற வேண்டும் அல்லால் – சீறா:815/3
பணி பனீமகுசூம் என்னும் திரளவர் பலரும் கோப
துணிவுடன் அமருக்கு ஏற்ற சுடர் படை கலன்கள் ஏற்றார் – சீறா:1497/3,4
கரும் கரி கரத்தின் நீண்ட கரம் தனி வீச்சும் கோப
நெருங்கிய நோக்கும் வேர்வை நித்தில பனிப்புமாக – சீறா:2367/2,3
கேட்டலும் தலைவர் எய்தா கோப தீ கிளர பொங்கி – சீறா:3397/2
தாங்கினர் வெம் மறம் ஊக்கம் அமையாத கோப தீ தழைப்ப மேன்மேல் – சீறா:4310/1
அயர்த்தனன் கறுபு மைந்தன் கோப தீ அடங்கிலாதால் – சீறா:4387/4

மேல்


கோபம் (6)

வரை திரண்டு அனைய பொன் தோள் மன்னவர் சஃது கோபம்
கரைகடந்து என்ன சோகத்து என்பினை கரத்தில் ஏந்தி – சீறா:1356/1,2
மனத்தினில் கோபம் மாற்றி மனை-வயின் புகுத செய்தார் – சீறா:1357/3
நம் குலத்தவர்க்கு கோபம் நடத்துதல் பழுது என்று ஓதி – சீறா:1499/3
ஆங்கு அது தைத்தும் கோபம் அனைத்தும் அகலாமல் – சீறா:3923/1
கோபம் முற்றிய வயவரும் பரியும் பின் குழும – சீறா:4263/2
நேசம் உற நீர் கோபம் இல்லாமல் சொல வேண்டும் நிசமாம் என்ன – சீறா:4681/3

மேல்


கோபம்-தன்னால் (1)

புரை தரு கோபம்-தன்னால் புருடர்கள் மனைவிமாரை – சீறா:4793/3

மேல்


கோபமதாய் (1)

கொதி கொண்டு உறு கோபமதாய் அரவம் – சீறா:718/2

மேல்


கோபமா (1)

கலி அமைச்சா துறை கணக்கர் கோபமா
கொலை அரசன் கொடுங்கோல் நடாத்தினான் – சீறா:299/3,4

மேல்


கோபித்து (4)

அடல் அரி ஹம்சா கோபித்து அபுஜகில் அவையை நீங்கி – சீறா:1500/1
மன்னிய சீலம் நீக்கி மைத்துனர் ஸஹீதை கோபித்து
இன் உயிர் தடிவேன் என்ன இரு விழி கனல நின்றார் – சீறா:1568/3,4
இறுக்குவன் கடுப்பன் கோபித்து எழுவன் மற்று இருப்பன் மன்னோ – சீறா:2811/4
குனிதர கண்ணால் கையால் கோபித்து விடுதலன்றி – சீறா:2815/2

மேல்


கோபுரத்து (1)

குணிப்ப அரும் கூட கோபுரத்து மீதினும் – சீறா:1148/2

மேல்


கோபுரம் (1)

குனித்து எழு மதியம் தவழ்தரு கூட கோபுரம் இலங்கும் இ ஊரில் – சீறா:4095/3

மேல்


கோமகன் (1)

குரிசில்-தன் வாயிலும் கடந்து கோமகன்
வரும் அகுத்தபு மகன் இல்லின் வாயிலின் – சீறா:3635/2,3

மேல்


கோமான் (16)

மிக்கு உயர் மறையின் வள்ளல் விளம்ப விண்ணவர்கள் கோமான்
இக்றவு எனும் சூறத்திலிருந்து நாலாயத்து இன்ப – சீறா:1267/1,2
குலம் சூழ் வரிசை நபிக்கு அமரர் கோமான் சலாம் முன் கூறிய பின் – சீறா:1331/2
சிலம்பில் உறைந்த முகம்மதுவை திருந்தும் அமரர் கோமான் கொண்டு – சீறா:1332/1
தெள் திரை புவனம் காக்கும் திறல் வலி அரசர் கோமான்
விண்ட நல் உரையினோடும் இரும் என விரைவில் சொன்னான் – சீறா:1747/3,4
தவிசினில் இருந்து வெற்றி தட முடி அரசர்_கோமான் – சீறா:1751/1
குன்றிலா பெரும் சிறை செறி வானவர்_கோமான் – சீறா:1873/4
வானவர் பரவும் கோமான் முகம்மது மானை நோக்கி – சீறா:2121/1
மனையிடத்து உறைந்தார் செவ்வியில் சிதையா மணி சிறை வானவர்_கோமான் – சீறா:2540/4
விண்-கணின் அமரர்_கோமான் மேதினிக்கு உரைத்த வேத – சீறா:3062/1
வரைந்த பாசுரத்தை ஏந்தி வான் இழிந்து அமரர்_கோமான் – சீறா:3096/1
அறிவுற வானோர்_கோமான் உரைத்தனர் அதனை கேட்டு – சீறா:3231/2
அனசு உரைத்த மொழி கேட்டு நன்கு என தீனவர் சூழ அரசர்_கோமான் – சீறா:3752/1
திடம் தரும் தூதர்_கோமான் சேனை அம் பரவை பாரில் – சீறா:3851/1
மதம் தரு நபிகள் கோமான் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:4293/4
அடிக்க இசை பிறக்க இறை ஏத்தி அறத்தோடு இருந்த நபிகள் கோமான்
அடி கமல மிசை வணங்கி எழுந்து ஒருபால் நின்று அகங்கை ஏந்தி வானத்து – சீறா:4533/2,3
உயர்த்தி மண் நிலம் புரந்து அளித்திடும் கோமான் – சீறா:4984/4

மேல்


கோமானும் (1)

கேட்டு வானவர் கோமானும் கிளர் ஒளி வனப்பு வாய்ந்த – சீறா:1265/1

மேல்


கோமானே (1)

வரிசை நபியை நோக்கி பின்னும் வந்தார் வானோர் கோமானே – சீறா:1330/4

மேல்


கோயில் (1)

திரு நகர் புறத்தும் கோயில் தெருவினும் செறிந்து தூளி – சீறா:1716/3

மேல்


கோயில்களிடத்தினும் (1)

கொடுமுடி பெரும் கோயில்களிடத்தினும் குறுகாருடன் – சீறா:2483/2

மேல்


கோயிலில் (1)

குரு நெறியவரை காண்-தொறும் வலிப்பன் கோயிலில் தேவதமிடத்தில் – சீறா:1443/1

மேல்


கோயிலின் (4)

செருகு பொன் மலர் கோயிலின் காவணத்தினில் நின்று – சீறா:462/2
கொடுமுடி விசும்பு தூண்டும் கோயிலின் வாயில் புக்கார் – சீறா:1556/4
அரசு தங்கிய கோயிலின் வாயிலின் ஆனான் – சீறா:1704/4
கதிர் கொள் பொன் முடி கோயிலின் வாயிலை கடந்த – சீறா:2002/2

மேல்


கோர (5)

கோர மா மத கரட வெம் களிறு என கொதித்து – சீறா:3525/2
கோர வாம் பரி ஒலீது செய் தவத்து உறும் குரிசில் – சீறா:3784/3
அடங்கலும் அசைந்து விண்ணும் அடிக்கடி அதிர்ந்த கோர
விடங்களை அரிதில் கக்கி அனந்தனும் வெருக்கொண்டானால் – சீறா:3851/3,4
கோர வாம் பரியின் வேக குணத்தையும் உண்ட வெய்ய – சீறா:3958/2
கோர வாம் பரி மேல் செல்லும் கொற்றவர்-தம்மில் மிக்க – சீறா:4997/1

மேல்


கோரத்தின் (1)

கோரத்தின் கடைக்கண் அங்கி கொழுந்து எழ உசைது நோக்கி – சீறா:2370/3

மேல்


கோரம் (1)

கோரம் என்று இதற்கோ பேரிட்டு உலகு எலாம் கூறிற்று என்பார் – சீறா:1158/4

மேல்


கோரமாகிய (1)

கோரமாகிய பழியை எண்ணா கொடும் கொலையாய் – சீறா:953/2

மேல்


கோரமாய் (1)

கோரமாய் வரும் கள்ளரும் குறுகிடார் எனவே – சீறா:845/3

மேல்


கோரமும் (1)

வந்தனன்-தன் வீரமும் கோரமும் நடுங்க பற்று என வாய் மலர்ந்து கூற – சீறா:2665/2

மேல்


கோரல் (1)

கொந்து ஆர் அரசே என போற்றி எழுந்து கோரல் மேல் கொண்டு – சீறா:4040/3

மேல்


கோல் (24)

கோல் தொடி கர காந்தள் தாமரை முகம் குழைக்க – சீறா:209/4
சிரசினில் நெய்யும் தேய்த்து செறி மணி கோல் கைக்கு ஈய்ந்து – சீறா:397/3
கொன்றையும் குருந்தும் கார் கோல் குறிஞ்சியும் வேயும் தெற்றி – சீறா:2054/1
கோல் வெறி துணியும் தோளில் கூன் பிறை வாளும் மென்மை – சீறா:2056/3
தறி கை கோல் கடை காலொடு சார்ந்து நோக்கினனால் – சீறா:2639/4
குறைவு அற மனு முறை கோல் நடாத்தி நீள் – சீறா:2711/2
நெட்டு இலை சூலம் கோல் பாலம் நேமி சூழ் – சீறா:3006/3
கோல் நடாத்திய செழும் முகில் கவிகை அம் கோவே – சீறா:3432/2
கோல் எடுத்து நம் நபியவர் கரத்தினில் கொடுப்ப – சீறா:3509/2
மன்னர் மன் நபி கொடுத்த கை கோல் ஒரு வாளாய் – சீறா:3510/1
கோல் வளையாது செய்து குவலயம் முழுதும் காத்த – சீறா:3674/3
குதை கொளும் கொடுமரம் கரம் பிடித்து வை கொழும் கோல்
புதையும் ஆவங்கள் வெரிநிடை பூட்டிய புருடர் – சீறா:3797/1,2
விரைவின் எய்து கோல் தூணியும் வெரிநிடை அணிந்தார் – சீறா:3826/4
வெய்ய கோல் நீக்கி நாளும் செய்ய கோல் விளைத்து நின்றோய் – சீறா:3928/4
வெய்ய கோல் நீக்கி நாளும் செய்ய கோல் விளைத்து நின்றோய் – சீறா:3928/4
கையினில் அசா கோல் ஒன்றினை தாங்கி கால் இணை கபுசினில் புகுத்தி – சீறா:4090/3
குடி புறம் தழுவும் தட கை அம் களிறே கோல் நிலைக்கு உரிய வெம் கோவே – சீறா:4094/2
பாய மர்க்கடம் அம் கோல் தேன் பகுப்புற உடைந்து சிந்தி – சீறா:4208/2
மன்னர் சகுதும் கோல் மடுத்த கையொடும் – சீறா:4520/3
மெத்த நன்று என்று அவர்கள் வியப்ப கோல்
தைத்த காயம் திகழ் கர சஃதுவை – சீறா:4652/1,2
கோல் தொடியாரை நோக்கி கொழுநர்கள் ஒருகாலத்தும் – சீறா:4787/3
கூறுபடு புண்ணில் ஒரு கோல் இடுதல் போல – சீறா:4891/2
கோல் நெறி தவறா குரிசிலும் எழுந்தார் குரை கடல் சேனையும் எழுந்த – சீறா:4998/4
அடை உடைத்து எறியும் கோல் உடை தொறுவர் அனைவரும் மெலிதர வீழ்த்தி – சீறா:5018/3

மேல்


கோல்-தனை (1)

கரதலத்து உறை கோல்-தனை பெரு மலை கடுப்ப – சீறா:1850/2

மேல்


கோல (9)

கோல வட்ட அம் சிறை அளி குழுவுடன் பாடும் – சீறா:62/2
கோல வார் கழல் குரிசில் நும் அடி கொழும் கமலத்தால் – சீறா:778/1
கோல வார் கழல் குறைஷிகள் குழு கண நாப்பண் – சீறா:856/2
கோல மென் துகில் நாடகர் கரத்தினில் கொடுப்பார் – சீறா:1125/2
கோல வார் குவவு புய குங்கும – சீறா:1190/3
கோல முள் ஈந்தின் கானும் குரிசில் நம் நபியை மேலும் – சீறா:2566/3
வடிவு உறும் புது மண கோல வாயிலின் – சீறா:3235/4
கோல வட்ட வெண் கவிகையும் நெடும் கொடி காடும் – சீறா:3457/1
கோல மா நபி வீந்தனர் என்றதும் குறித்து – சீறா:3989/3

மேல்


கோலங்கள் (5)

பொலன் கொள் நல் நகர் சுவர்-தொறும் கோலங்கள் புனை-மின் – சீறா:3114/4
இறங்கி எங்கணும் வழிந்து என கோலங்கள் இடுவார் – சீறா:3120/4
இகல் படை கோலங்கள் இயற்றி யாவரும் – சீறா:3279/3
மன்னர் யாவரும் போர் அமர் கோலங்கள் வனைந்தார் – சீறா:3460/4
அறம் தரா மனத்தொடும் சமர் கோலங்கள் ஆனார் – சீறா:3787/4

மேல்


கோலத்தார் (1)

கூட்டியது என உருவெடுத்த கோலத்தார் – சீறா:3011/4

மேல்


கோலத்தின் (1)

மரு மண கோலத்தின் வனைய வேண்டும் என்று – சீறா:3245/3

மேல்


கோலம் (15)

கோலம் ஆர் புலி வந்ததும் முகம்மதை யாம் கூட்டி வந்துறு பவம் என்ன – சீறா:692/3
கோலம் ஆர் பொருப்பு திண் தோள் குரிசில்-தன் கதிர்கள் தாக்கி – சீறா:924/2
பெரும் புவி மணத்தின் கோலம் பெற்றிலாது என்-கொல் என்றார் – சீறா:1061/4
கோலம் மா கடல் ஈன்ற முத்து இலங்கிட கோத்து – சீறா:1109/3
குலிகம் ஆர்ப்பு அற அரைத்து எடுத்து எழுதிய கோலம்
மலைகள் மீதினும் பவளங்கள் படர்ந்து என வயங்கும் – சீறா:1118/3,4
அண்ணல்-தன் மணத்தின் கோலம் ஆமினா என்னும் அந்த – சீறா:1153/3
முன்னுறு கோலம் போல முகத்து எதிர் நிற்ப பேதம்-தன்னை – சீறா:1735/2
கோலம் ஆர்ந்து எழ தீபமும் தூபமும் கொடுத்து – சீறா:1999/3
கொற்ற வெண் கவிகையும் கோலம் ஆர் துகில் – சீறா:3003/1
ஆதி-தன் தூதர் ஈன்ற அரிவை-தம் மணத்தின் கோலம்
பேதம் ஒன்று இன்றி காணப்பெற்றதே அழகு என்பாரால் – சீறா:3187/3,4
வானவர் மகளிர் எல்லா மணவினை கோலம் செய்து – சீறா:3226/1
கோலம் ஆர் கதிர் வாளினில் கூறுசெய்தனரால் – சீறா:3507/4
குலவிய அனத்தின் குலங்கள் வீற்றிருந்த கோலம் ஒத்தனவும் கண்டனரால் – சீறா:3575/4
கோலம் ஆர் குரகதத்தொடும் கூட்டமிட்டனனால் – சீறா:3785/4
ஆகையால் அமர் கோலம் விட்டு இருப்பது அன்று அடங்கா – சீறா:3834/1

மேல்


கோலம்-தன்னொடும் (1)

குவிதர பொரும் அமர் கோலம்-தன்னொடும்
புவி துகள் எழ எதிர் புறப்பட்டான் அரோ – சீறா:3268/3,4

மேல்


கோலமும் (1)

கோலமும் காட்சி என்று உணர்ந்து கூறினார் – சீறா:505/4

மேல்


கோலமுமாய் (1)

அடிக்கடி இளைப்பில் குலுக்கிய கனைப்பும் அற தவித்து எழுந்த கோலமுமாய்
இடுக்கணுற்று ஒருவன் முகம்மது நயினார் இருந்திடும் அவையகத்து எதிர்ந்தான் – சீறா:2299/3,4

மேல்


கோலமே (1)

பொருத்தினன் தவிர்த்தனன் போரின் கோலமே – சீறா:3272/4

மேல்


கோலமொடு (1)

கோலமொடு கூறு மொழி கொண்டு உடல் களித்து – சீறா:895/1

மேல்


கோலாரி (2)

கொடி நிறைத்து அசைந்த கோலாரி வண்டில்கள் – சீறா:1143/3
கணித்து உரைக்கு அடங்கா தெரு தலை நெருங்க கலித்த கோலாரி வண்டில்களே – சீறா:3166/4

மேல்


கோலால் (4)

பால் நிற வளை வெண் திரை கடல் பரப்பில் பகை அற ஒரு தனி கோலால்
தான் என செலுத்தி அரசு வீற்றிருந்தோன் தணப்பு இலா பெரும் படை உடையோன் – சீறா:2303/2,3
நால் வகை கதத்த தளத்தொடும் ஒரு தனி கோலால்
மன்னிய திசைகள் பொது அற புரந்து மருவலர் இலை என தடிந்திட்டு – சீறா:2307/2,3
எடுத்தனன் பெரும் கல் விண்ணென துரத்தி எறிந்தனன் ஆர்த்தனன் கோலால்
புடைத்தனன் கொறியை கைவசப்படுத்தி புலியினை ஒருபுறம் போக்கி – சீறா:2883/1,2
கலி புறம் துரக்கு ஒரு தனி கோலால் காத்திடும் நபி உளம் வெதும்பி – சீறா:5020/1

மேல்


கோலி (5)

கூர் தவா வெளிப்படாமல் கற்பு எனும் வேலி கோலி
சேர்த்த தம் உளம் காணாது திருந்து_இழை வருந்தி நின்றார் – சீறா:637/3,4
மரகத பத்தி கோலி வச்சிர தாரை சாத்தி – சீறா:1258/1
தினம்-தொறும் கோலில் கோலி தீயிடை அமிழ்த்தி காய்த்தி – சீறா:2055/2
கோலி நின்ற மன்னவன்-தனை எதிரினில் குறுகி – சீறா:3503/3
குறி வரை கோலி கதிர் விசித்து இலகும் கூன் செறி வாளினால் ஈர்ந்தான் – சீறா:5026/3

மேல்


கோலிய (4)

கோலிய பெரும் பகை குலத்தினில் விளைத்தல் – சீறா:1770/3
கோலிய பழியை முடித்திட துணிந்த குறிப்பு எலாம் படிப்படி உரைத்து – சீறா:2527/2
கோலிய வெகுளியோடும் கொடுத்தனன் என்னை அன்றே – சீறா:2840/4
கோலிய பகையை விடுத்து நன்கு உரையை கூறு என கூறலும் கொதித்து – சீறா:3584/3

மேல்


கோலில் (1)

தினம்-தொறும் கோலில் கோலி தீயிடை அமிழ்த்தி காய்த்தி – சீறா:2055/2

மேல்


கோலினில் (1)

கோது செய் நெடிய வேலினில் வாளில் கோலினில் கொடுத்திடலன்றி – சீறா:4476/2

மேல்


கோலும் (3)

கோலும் வன் கதம் வர சில மொழி கொளுத்தினனால் – சீறா:2221/4
காத்திர கோலும் நீள் கடைகாலும் தரித்திடும் சுரத்தினில் சிரத்தை – சீறா:2879/1
கோலும் வாளும் குந்தமும் கொண்டு ஓச்சினர் அம்ம – சீறா:3921/2

மேல்


கோலொடும் (1)

கையினில் தரித்த கோலொடும் இருந்த தொறுவனை கடிதினில் நோக்கி – சீறா:2884/2

மேல்


கோவுக்கு (1)

கொடுத்து நல் மொழி கொடுத்து நசாசிய்யாம் கோவுக்கு
அடுத்து நின்று அளித்திடும் வரிசைகள் இவை அவன் சொல் – சீறா:2029/1,2

மேல்


கோவுடன் (1)

கோவுடன் குடியும் கூடும் கூட்டமும் குலைந்து தத்தம் – சீறா:3670/3

மேல்


கோவே (9)

மறக்க அரும் பொருளே வேதம் வரு முறைக்கு உரிய கோவே
பெறற்கு அரும் சுவன வானோர் அனைவரும் பெரிது கூண்டு என் – சீறா:123/2,3
இறையவன் தூதரே இ இரு நிலத்து அரசர் கோவே
குறைபடாது இருந்த வெற்றி கொழும் மணி குன்றமே யான் – சீறா:822/2,3
இல்லிடை புகுத்த பூவினிடத்தினில் உதித்த கோவே
ஒல்லையின் எனது சொல் கேட்டு வந்து அருள் அளிக்க வேண்டும் – சீறா:2068/3,4
வண்ண மலர் வாய் திறந்து பெரியோன்-தன் திருத்தூதாய் வந்த கோவே
பண் அரு நல் மறை நபியே வானவர் பொன் அடி பரவ படியின் வந்தோய் – சீறா:2189/2,3
கோல் நடாத்திய செழும் முகில் கவிகை அம் கோவே
காலம் மூன்றையும் தெரிந்த நும் கருத்தினுக்கு இசைவ – சீறா:3432/2,3
குடி புறம் தழுவும் தட கை அம் களிறே கோல் நிலைக்கு உரிய வெம் கோவே
வட_வரை குவடு சாயினும் சாயா மனம் நிறைந்து எழும் மதி மலையே – சீறா:4094/2,3
ஊனம் அற விளையாடி எவ்விடத்தும் எந்நாளும் உறையும் கோவே – சீறா:4522/4
மிஞ்சு கதி வினை பயனோ உலகம் எங்கும் பெரும் காட்சி விரித்த கோவே
தஞ்சமுற உனை அடைந்தேன் இனி தகைமை பொறுத்து இரக்கம் தாங்குவாயே – சீறா:4528/3,4
இறையவன் தூதே செல்வம் இலங்கிய கோவே வேத – சீறா:4785/1

மேல்


கோவை (4)

வெறி மது அருந்தி மரகத கோவை மென் பிடர் கிடந்து உருண்டு அசைய – சீறா:53/1
மண் முழுதும் மாறு அரிய சிவந்த கதிர் மணி கோவை மறு இலாத – சீறா:1133/1
கொடி கரும்பு எழுது தோள் மேல் கொழும் மணி கோவை சேர்த்தார் – சீறா:3213/4
குரை கழல் கோவை கொன்றார் எனும் மொழி பிறந்தது அன்றே – சீறா:4904/4

மேல்


கோவையும் (1)

தன்னிடத்து உறைந்த பொன் சரக்கும் கோவையும்
முன்னிய விலைக்கு விற்று ஒடுக்கி அ நகர் – சீறா:900/1,2

மேல்


கோள் (2)

கொலையினுக்கு உரிய தந்தை கோள் உயிர் துணைவன் மாறா – சீறா:2259/1
வெய்ய கோள் அரியே மருவலர் இடியே வேண்டி யான் செய்த புண்ணியமே – சீறா:4120/2

மேல்


கோளரி (8)

மறு மன்னர் குல கோளரி என பிறந்த மா மணி முதுறக்கத்து எனுமால் – சீறா:157/4
கூடு கோளரி திரள் என வர நெறி குறுகி – சீறா:204/2
கொடுத்ததில் செவந்த செம் கை கோளரி உமறு கத்தாப் – சீறா:1583/2
கொறிகள் மேய்த்து ஆமிறு என்னும் கோளரி எவர்க்கும் தோன்றாது – சீறா:2569/1
குமரன் முன் எதிர்ந்து தாவ கோளரி அப்துல்லா கண்டு – சீறா:3344/2
கொடுத்தது ஈது என உரைத்தனர் கோளரி அனையார் – சீறா:4434/4
மோக்குரைத்த வெம் கோளரி முன்னமே – சீறா:4504/4
ஏறு கோளரி இவன் ஆர் என்று ஓதிட – சீறா:4946/2

மேல்


கோளரியின் (1)

புனை மயிர் புரவி ஆயிரம் நடப்ப அசன் பெறும் புதல்வன் கோளரியின்
சினம் உறு மனத்தன் உயையினா என்னும் செம்மலும் ஏகினன் சிறப்ப – சீறா:4442/3,4

மேல்


கோளார் (1)

குனி ஆர் சிலை கை வேந்தரொடும் சென்று கோளார் குறும்பு அடக்கி – சீறா:4033/3

மேல்


கோறல் (15)

கோறல் என் குறிப்பு என்னவும் கூறினார் – சீறா:1408/4
கோறல் செய்குவன் யான் என குவலயம் குலுங்க – சீறா:1538/3
கொற்றவர் அப்துல்லா-தம் குமரரை கோறல் வேண்டி – சீறா:1555/2
பதியினில் புகுந்தும் பின்முன் பார்ப்பது பழுது கோறல்
விதி இது சரதம் என்ன சகுது உளம் வெகுண்டு செம் தேன் – சீறா:2363/2,3
பழிபட கோறல் வேண்டி வந்தனர் பகைஞர் என்றே – சீறா:2386/4
கூண்ட தீனவரொடு முகம்மது-தமை கோறல்
வேண்டி வந்தனன் வளைந்தனன் வளைந்திடும் வேலை – சீறா:3983/3,4
கோறல் செய்தனன் காண் என திரும்பினன் குழறி – சீறா:4017/2
கூடி கொண்டு அங்ஙன் மூட்டுதல் துணிந்தது கோறல்
நேடி பாய் புலி அடங்கிய போல் நபி நின்றான் – சீறா:4019/2,3
கொன் ஆர் வாளால் இங்கு இவனை கோறல் செய்-மின் என சொன்னார் – சீறா:4050/2
இதம் உற நின்றனன் கோறல் எய்தும் முன் – சீறா:4066/1
தீமையே நினைந்தான் செய்வது துணிந்தான் தீனரை கோறல் மேல் கொண்டான் – சீறா:4075/2
இன்று கோறல் கருமம் என்று எண்ணியே – சீறா:4224/2
சுந்தர தூதர் கோறல் துணிவது விருப்பமுற்றோன் – சீறா:4359/2
கொல் உலை வேலினால் கோறல் செய்து யான் – சீறா:4994/3
கோறல் செய்திடு-மின் என்றனர் அறு_கால் குளித்திடும் மிதித்தலில் பிதிர்ந்து – சீறா:5024/3

மேல்


கோறல்செய்து (1)

இழிவு மற்று இடரும் நீங்க கோறல்செய்து இவணின் நீவிர் – சீறா:3693/3

மேல்


கோறலன்றி (1)

தீனவர்கள்-தமை காணில் கோறலன்றி வேறு மொழி செப்பிலாதார் – சீறா:4298/3

மேல்


கோறலின் (1)

கொலையும் வஞ்சமும் கொண்டு வெம் கோறலின்
நிலையில் நின்றனர் நின் அபயம் என – சீறா:4243/1,2

மேல்


கோறலே (1)

குருதி நீர் படியில் சிந்த கோறலே அழகு இது என்றான் – சீறா:4191/4

மேல்


கோறலை (3)

கோறலை விரும்பி முன்னும் நரர் கையில் கூடிற்று உண்டோ – சீறா:2105/2
சொன்ன சொல் மறாது உசைது கோறலை துணிந்து சென்றான் – சீறா:2366/3
முற்றும் கோறலை துணிந்து இருக்கின்றது மொய்ம்பீர் – சீறா:4607/4

மேல்


கோன் (29)

கோன்_மகன் ககுபு-தம்மிடத்து இலங்கி குன்றினிலிடும் விளக்கு ஆகி – சீறா:162/2
நெய் நிணம் கமழ்ந்த செம் கதிர் வடி வேல் நிருபர் கோன் அப்துல் முத்தலிபு – சீறா:386/1
வடிவால் ஒளி வீசிய வானவர்_கோன் – சீறா:702/1
அகம் மகிழ்ந்திட செலும் என அரசர்_கோன் களித்து – சீறா:775/3
இடைவரும் அமரர்_கோன் ஈய்ந்த பட்டமே – சீறா:1296/4
சிந்தை குளிர வானவர்_கோன் திருத்தி உரைத்த வணக்க முறை – சீறா:1336/2
ஆதி-தன் பருமான் மேற்கொண்டு அமரர்_கோன் உரைத்து போனார் – சீறா:1340/4
தேற்றும் வானவர்_கோன் உரை நிலைபடும் திறத்தால் – சீறா:1371/4
அலைவு இலாது அமரர்_கோன் இழிந்து அவனியின் புகன்று அவணில் ஏகினார் – சீறா:1422/4
திரு மறை மொழி ஒன்று உரைத்து விண்ணவர்_கோன் சேணிடை உறைந்த பின் மாறா – சீறா:1450/1
அமரர்_கோன் இழிந்து அரு நபி எனும் பெயர் அளித்து – சீறா:1503/2
நிருபர்_கோன் எழுக என்ன நிகழ்த்த மந்திரத்தின் மிக்கார் – சீறா:1715/1
அமரர்_கோன் இனைய மாற்றம் ஆதி-தன் பருமான் மேற்கொண்டு – சீறா:1734/1
கோன் அபுதுல் முத்தலிபு புத்திரரும் உற்றே – சீறா:1781/3
அரியவன் அருளினால் அமரர்_கோன் எனக்கு – சீறா:2157/1
உயர் புகழ் முகம்மதுக்கு உம்பர்_கோன் நபி – சீறா:2411/1
கோன்_நகர் மதீனத்து உற்ற சூதர்கள் குழூஉக்கொண்டு ஏத்தும் – சீறா:2779/3
வானவர்_கோன் புவியிடையின் மாட்டலால் – சீறா:2962/2
வெற்றி வாள் அலி என்று ஓதும் வேந்தர்_கோன் பவனி போந்து – சீறா:3181/3
வீதியின் அழகோ வந்த வேந்தர்_கோன் அழகோ சூழ்ந்த – சீறா:3187/1
மைந்தரை அவணிடை அனுப்பி மன்னர்_கோன் – சீறா:3321/2
கோன் நிலை பொருந்தி வாழும் கத்துபான் கூட்டத்தாரை – சீறா:3677/2
எம் கோன் முகம்மது எனும் நயினார் எழில் சேர் மதீனத்து இனிது இருப்ப – சீறா:4028/2
கோன் நிலை புரந்தோன் ககுபு எனும் நாம கொடுமையன் குறித்தவை உரைப்பாம் – சீறா:4074/4
உம்பர்_கோன் அகத்து அணைத்திட ஆரணம் உணர்ந்த – சீறா:4282/1
இம்பர்_கோன் நபி கமல செம் சேவடி இறைஞ்சி – சீறா:4282/2
செவியில் கேட்டலும் தீனர்_கோன் நபி – சீறா:4519/2
கோன் உவந்தவர் அதிசயித்து உளம் களி கூர்ந்தே – சீறா:4633/3
உரைத்தனர் காலை இறையவன் அருளால் உயர் நிலை இழிந்து வானவர்_கோன் – சீறா:5023/3

மேல்


கோன்_நகர் (1)

கோன்_நகர் மதீனத்து உற்ற சூதர்கள் குழூஉக்கொண்டு ஏத்தும் – சீறா:2779/3

மேல்


கோன்_மகன் (1)

கோன்_மகன் ககுபு-தம்மிடத்து இலங்கி குன்றினிலிடும் விளக்கு ஆகி – சீறா:162/2

மேல்


கோனிடத்து (1)

தூதினன் உணர்ந்து போய் சூதர்_கோனிடத்து – சீறா:4566/1

மேல்


கோனொடு (1)

முரண் உறும் வானர்_கோனொடு மூவாயிரம் – சீறா:1796/1

மேல்