கெ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெஞ்சி 1
கெஞ்சிக்கெஞ்சி 1
கெட்டனன் 1
கெட்டு 8
கெட்டேன் 1
கெட 24
கெடிகலங்கி 2
கெடிகள் 1
கெடு 3
கெடுக்கும் 1
கெடுக்குவன் 1
கெடுத்தனன் 1
கெடுத்தாய் 1
கெடுத்திட 1
கெடுத்தீர் 1
கெடுத்து 6
கெடுப்பன் 1
கெடும் 5
கெடுமதி 1
கெடுமவர் 1
கெடுவர் 2
கெடுவாய் 1
கெண்டி 1
கெதியா 1
கெந்த 1
கெந்தம் 1
கெழீஇ 1
கெழு 10
கெழும் 16
கெழும 1
கெழுமி 5
கெழுமிய 1
கெளிற்றின் 1
கெளிறு 1

கெஞ்சி (1)

கேட்டனர் மகர் என்று ஆதம் கிலேசமுற்று இறை-பால் கெஞ்சி
வாட்டமில்லவனே எந்த வகை மகர் கொடுப்பது என்றார் – சீறா:120/1,2

மேல்


கெஞ்சிக்கெஞ்சி (1)

நனை தரும் வதுவை வேண்டி நாள்-தொறும் கெஞ்சிக்கெஞ்சி
தனியனுக்கு உரைத்தாரல்லால் பிறர்க்கு உரை சாற்றிலாரே – சீறா:3067/3,4

மேல்


கெட்டனன் (1)

கேட்டனன் கேட்ட போதே கெட்டனன் கெட்டேன் என்றான் – சீறா:946/4

மேல்


கெட்டு (8)

நலன் உறு கொடை எனும் நாம வேந்து கெட்டு
இலன் எனும் அரசு வீற்றிருந்த காலமே – சீறா:300/3,4
நலம் தரும் கற்பு எனும் நாமம் கெட்டு உடல் – சீறா:304/1
இடைந்து கெட்டு இபுலீசு என்று எரி நரகு – சீறா:1187/3
எடுத்த நல் வழி கெட்டு எளிமைக்கும் கீழ்ப்படுத்தலாகப்பட – சீறா:1421/3
திருந்திய மதி கெட்டு அங்கமும் வேறாய் திரிந்தவன் நாட்குநாள் தேய்ந்தான் – சீறா:1444/2
முடங்கில சிறிதும் நீண்டில உணர்வு முழுதினும் இலது கெட்டு ஒடுங்கி – சீறா:1447/2
முகமலர்ச்சி கெட்டு அற தவித்து உடல் வெயர் முழுக – சீறா:1543/1
அரிவையர் தமக்கு நாணி ஆண்மை கெட்டு அலைந்தார் அன்றே – சீறா:4744/4

மேல்


கெட்டேன் (1)

கேட்டனன் கேட்ட போதே கெட்டனன் கெட்டேன் என்றான் – சீறா:946/4

மேல்


கெட (24)

மமதை கெட சாதி நீதி முறைமை தனக்கு ஆக ஓதும் மகனை வதைத்தோர் ஒறாமலே – சீறா:10/2
சவி கெட பெரும் தேவதம் தரை படிந்ததுவும் – சீறா:468/4
நம்-தம் மார்க்கமும் சமயமும் கெட நமர் நலிய – சீறா:571/2
மைந்தர் இங்கு இவர் மனத்து இருள் கெட ஒரு மணம் முடித்திட நாடி – சீறா:652/3
வாசியும் எருதும் கூன் தொறு தொகையும் வழி கெட தனித்தனி மறுக – சீறா:682/2
நானமும் புழுகும் பாளித குலமும் நறை கெட மிகுந்த வாசம்-அதாய் – சீறா:699/1
மறு துடைப்பன போல் மார்க்க வழி கெட நின்ற பேரை – சீறா:1346/2
உரம் கெட இடுக்கண் விளைத்தவர் யாவர் உரை என முகம்மதும் உரைத்தார் – சீறா:2319/4
தேயம் எங்கணும் இருள் கெட செழும் கதிர் குலவ – சீறா:2471/1
குவிதரும் குலத்தவர் சினம் கெட மதி குறிப்பாய் – சீறா:2491/1
செறுநராகிய விலங்கு இனம் கெட வரும் சீயம் – சீறா:2650/4
பற்றலார் குலம் கெட செழும் தீன் நிலை படர – சீறா:2696/3
பாவத்தின் திரள் கெட படுத்து தோன்றிய – சீறா:2954/3
மருவலர் வலி கெட உடைந்து மற்றொரு – சீறா:2987/1
போவது அன்று இகல் கெட புரிதல் வேண்டுமால் – சீறா:2999/4
செயும் அமர் வலி கெட செயித்து வம் என – சீறா:3265/3
சுமை கெட இரண்டு துண்டம்பட உடல் துணித்து நின்றார் – சீறா:3344/4
உதித்த திங்களின் சவி கெட கவிகைகள் ஒளிர – சீறா:3461/1
நீடும் வேல் கெட விடுத்து அவண் நிலத்திடை கிடந்த – சீறா:3496/2
சேரலர் அணி கெட சிதைத்து தீன் எனும் – சீறா:3620/2
உகைத்து அடர்ந்து வெம் காபிர்கள் திரள் கெட ஒடுக்கி – சீறா:3813/3
ஈனம் இன்றி வெம் திறன் மறம் கெட பொருது இகலி – சீறா:3820/2
படை கணம் தலை கெட குதித்து எழுந்து முன் பாயும் – சீறா:3888/1
அழிவு உறு வெம் காபிர் இகல் கெட ஒடுக்கி உள்பகையும் அமைத்து இப்போதே – சீறா:4539/3

மேல்


கெடிகலங்கி (2)

கேட்ட பேர்கள்-தம் மனம் பயந்து அற கெடிகலங்கி
காட்டின் இ பெரும் புதுமையை கருத்தினில் தெளிந்து – சீறா:456/1,2
கள்ளர் வந்து அவண் இருந்தனர் என கெடிகலங்கி
உள்ளம் நொந்தனம் முகம்மது இங்கு உறு பொருட்டதனால் – சீறா:849/1,2

மேல்


கெடிகள் (1)

அடையலர் கெடிகள் கோடி இடிபடு படல தூளி அலரியின் உடலில் மூழ்கவே – சீறா:12/3

மேல்


கெடு (3)

இறபியா தரும் புதல்வன் இரங்காத கெடு மனத்தன் என்றும் நீங்கா – சீறா:1641/3
கெடு நரகு அடைவர் சரதம் என்று எவர்க்கும் கிளத்தி நின்றது செழும் மதியம் – சீறா:1922/4
புகலும் என்றனர் அபூஜகில் கெடு மனம் புழுங்க – சீறா:2008/4

மேல்


கெடுக்கும் (1)

கெடுக்கும் என்பதும் அபூலகுபு எனும் அவன் கேட்டான் – சீறா:2046/4

மேல்


கெடுக்குவன் (1)

புரிந்த நின் வலி கெடுக்குவன் காண் என புகன்றார் – சீறா:2470/3

மேல்


கெடுத்தனன் (1)

நாமமும் கெடுத்தனன் நரகம் தேடிய – சீறா:4055/3

மேல்


கெடுத்தாய் (1)

பின்னர் அளவிலா நிதியும் கெடுத்தாய் திறனும் பிழைப்பித்தாய் – சீறா:4043/2

மேல்


கெடுத்திட (1)

கேடு அறு மழைதான் உலகு எலாம் பெய்து கெடுத்திட வந்தது என்று உரைப்பார் – சீறா:4756/4

மேல்


கெடுத்தீர் (1)

காட்டினில் விடுத்தீர் குடி அற கெடுத்தீர் கடு விட பாந்தளும் புலியும் – சீறா:2521/1

மேல்


கெடுத்து (6)

இகலொடும் கெடுத்து நின்றான் இவை இவண் விளைந்தது ஐயா – சீறா:1753/4
என்னையும் கெடுத்து என் அரசையும் அழித்திட்டு இத்தனைக்கு இயற்றிய சீமான் – சீறா:2323/3
கெடுத்து எழுந்து கிளத்தும் தனது மறை நெறியின் – சீறா:2562/2
மன்னவன் முகம்மது என்போன் வலி கெடுத்து அவனை வீழ்த்தி – சீறா:3390/3
மறைந்தன விழுந்து வலிகளும் கெடுத்து மண்டின அதில் தலைமயங்கி – சீறா:3556/3
நிறம் கெடுத்து அளறு ஆக்குவன் நேரலர் உயிர் உண்டு – சீறா:3770/3

மேல்


கெடுப்பன் (1)

நித்தமும் கெடுப்பன் தமரின் மேல் வாஞ்சை நினைவு அற கருத்தையும் கலைப்பன் – சீறா:4101/3

மேல்


கெடும் (5)

வேரொடும் கெடும் என்பது நிசம் என விரித்தான் – சீறா:951/4
ஆலமும் வெளிறிட கெடும் கொடும் மனத்து அப்து – சீறா:2221/1
நிலை கெடும் கரவுக்கு அன்பன் நிந்தனைக்கு உற்ற தம்பி – சீறா:2259/2
நிலை கெடும் கயினுக்காகவரை நீத்து இடர் – சீறா:3612/2
நல் நிலை கெடும் குயை என்னும் நாமத்தான் – சீறா:4560/2

மேல்


கெடுமதி (1)

அகம் மகிழ்ந்திட நடந்தனன் கெடுமதி அடைவதும் அறியானே – சீறா:673/4

மேல்


கெடுமவர் (1)

நல் நிலை கெடுமவர் நடத்தும் வல்வினை – சீறா:1468/1

மேல்


கெடுவர் (2)

கெடுவர் என்பதற்கு ஐயம் இல் என கிளத்தினரே – சீறா:851/4
நிரை பெரு நரகம் ஆழ கெடுவர் நீள் நிலத்தில் என்னால் – சீறா:1045/3

மேல்


கெடுவாய் (1)

மாறுபட்டு இதற்கோ குலத்தொடும் கெடுவாய் வரவழைத்தனை என சீறி – சீறா:1455/2

மேல்


கெண்டி (1)

படியகம் கெண்டி செம்பொன் பதும மென் கரத்தில் ஏந்தி – சீறா:407/1

மேல்


கெதியா (1)

பாதையில் புகு முதியவன் பத மலர் கெதியா
மோதி வீழ்ந்தது முகம் தரைபட முனங்கியதே – சீறா:464/3,4

மேல்


கெந்த (1)

கொதிப்பொடு கெந்த நான்கும் குறைபட சீறிச்சீறி – சீறா:2592/2

மேல்


கெந்தம் (1)

குறிப்பொடு கெந்தம் நான்கும் குழைவு அற நிமிர்த்து வாய் விண்டு – சீறா:2590/3

மேல்


கெழீஇ (1)

விறல் கெழீஇ வய வீரரும் துஞ்சினர் – சீறா:4227/2

மேல்


கெழு (10)

நிலை கெழு பொன்னும் உரக செம் மணியும் நித்தில ராசியும் கவர்ந்து – சீறா:29/2
விடுத்து அக பரிவாரத்தில் உரியவர் விறல் கெழு வயிர வீரம் – சீறா:660/3
கறை கெழு மன கொடும் காபிராகிய – சீறா:2142/1
பல வளம் கெழு மதினாவில் பண்புற – சீறா:3300/3
கறை கெழு வடி வேல் செம் கை கத்துபானவர் அறிந்தார் – சீறா:4185/4
கறை கெழு மனத்தன் கேண்-மின் ஈது என கழறலுற்றான் – சீறா:4377/4
வாசியும் ஒருபால் மன்னரும் ஒருபால் வயம் கெழு மாந்தர்கள் ஒருபால் – சீறா:4449/1
கொன் கெழு வேல் புகுந்து என்னும் கொள்கை போல் – சீறா:4569/4
என்று காபிர் இயம்பிட சீர் கெழு
வென்றி செய் வய வீரர் உருத்து உளம் – சீறா:4670/1,2
மணம் கெழு முரசம் முழங்கிடும் மதீன மா நகர் புறத்தினில் இருத்த – சீறா:5025/2

மேல்


கெழும் (16)

வில் கெழும் அறுசொடு குறுசு அந்தரம் விளங்க – சீறா:184/1
பெலன் கெழும் அதுனான் கிளை பேரொளி நபியாய் – சீறா:215/3
குலம் கெழும் கொறியின் பின்னே முகம்மதை கூட்டி சென்றார் – சீறா:400/4
திறல் கெழும் வேந்தர் யாரும் சிந்தையில் செல்வம் பெற்றார் – சீறா:1502/4
கறை கெழும் குருதி வை வேல் காவலர் உமறு கத்தாப் – சீறா:1544/3
நண்ணி விண் முகட்டின் நடு நிலை நோக்கி நலம் கெழும் கலை நிலா ஒழுக – சீறா:1917/3
கறை கெழும் வடி வேல் வல கரன் ஏந்தி கடைத்தலை அடுத்தனர் கடிதின் – சீறா:2545/4
பண் கெழும் கலிமா என்னும் பத்தி வேர் இதயத்து ஊன்றி – சீறா:2796/2
நலம் கெழும் அறிவால் குபிரினை அகற்றி நல் நெறி தீனினை பிடித்து – சீறா:2890/3
கறை கெழும் கொடு மன கருதலார்-தமை – சீறா:2988/3
தார் கெழும் புய நபி தருக்கின் மீண்டனர் – சீறா:3309/4
தார் கெழும் வடி வாள் ஏந்தும் தட புய அலியும் வந்தார் – சீறா:3363/4
பண் கெழும் இறசூல் வேத புகழ் முனம் படர்ந்தது என்ன – சீறா:3376/2
திறம் கெழும் செறுநர் நெஞ்சம் திடுக்கிட கனைத்து தாளை – சீறா:3845/3
மறம் கெழும் அன்சாரிகள் உவப்புற மகிழ்ந்தே – சீறா:4139/2
அலை தட குவலயத்தினில் திறம் கெழும் ஆசீம் – சீறா:4173/1

மேல்


கெழும (1)

குலம் கெழும மனை புகுந்து மனைவியர்க்கு மணமொழியை கூறினாரால் – சீறா:1096/4

மேல்


கெழுமி (5)

புகையுடன் கெழுமி பொறி பல தெரிப்ப புரிந்து எழும் அக்கினி கொழுந்து – சீறா:259/3
கீன்ற வேல் ஹமுசாவும் வெம் படை கொடு கெழுமி
மூன்று பேரும் அ மூவர்கள் எதிரின் முன்னினரால் – சீறா:3480/3,4
கிடந்து கொன்றனர் சிலர்சிலர் வீரர்கள் கெழுமி – சீறா:3552/4
திருக்குறும் கருத்து அடையலர் சினத்தொடும் கெழுமி
இருக்கும் நம்மிடத்தினும் வருவாரெனில் எதிர்ந்து – சீறா:3818/1,2
உரம் ததும்பிய படையுடன் கெழுமி இ ஊரின் – சீறா:3831/3

மேல்


கெழுமிய (1)

பொரியும் செம் தழல் கெழுமிய குழியிடை புகுவான் – சீறா:3530/4

மேல்


கெளிற்றின் (1)

மலி சினை கெளிற்றின் வனப்பினும் வனப்பாய் மணி அணி சுமந்த மெல் விரலாள் – சீறா:1965/2

மேல்


கெளிறு (1)

சேந்து இணைபொருவாதினம் என வெருவி செங்கயல் வரி வரால் கெளிறு
பாய்ந்து அயல் போய வனத்திடை ஒளித்து பங்கம் மெய்ப்பட பயப்படுமே – சீறா:54/3,4

மேல்