பை – முதல் சொற்கள், சங்க இலக்கியம் தொடரடைவு

முழு நூலையும் காண இங்கே சொடுக்கவும்.

 1.திருமுருகாற்றுப்படை
 2.பொருநராற்றுப்படை
 3.சிறுபாணாற்றுப்படை
 4.பெரும்பாணாற்றுப்படை
 5.முல்லைப்பாட்டு
 6.மதுரைக்காஞ்சி
 7.நெடுநல்வாடை
 8.குறிஞ்சிப்பாட்டு
 9.பட்டினப்பாலை
 10.மலைபடுகடாம்
 11.நற்றிணை
 12.குறுந்தொகை
 13.ஐங்குறுநூறு
 14.பதிற்றுப்பத்து
 15.பரிபாடல்
 16.கலித்தொகை
 17.அகநானூறு
 18.புறநானூறு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

பை (18)

பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் – பெரும் 105
பை விரி அல்குல் கொய் தழை தைஇ – குறி 102
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு – மலை 40
கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண் – மலை 259
பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை/பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இது – நற் 75/2,3
ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி – நற் 142/3
பயன் தெரி பனுவல் பை தீர் பாண – நற் 167/6
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட – நற் 238/9
பாம்பு பை அவிந்தது போல கூம்பி – குறு 185/5
பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடு – குறு 268/4
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய – குறு 391/3
அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல் – அகம் 108/13
வெம் சின அரவின் பை அணந்து அன்ன – அகம் 154/6
சிறு பை நாற்றிய பல் தலை கொடும் கோல் – அகம் 195/13
உத்தி அரவின் பை தலை துமிய – அகம் 202/10
பை பட இடிக்கும் கடும் குரல் ஏற்றொடு – அகம் 323/11
காவினெம் கலனே சுருக்கினெம் கல பை/மரம் கொல் தச்சன் கைவல் சிறாஅர் – புறம் 206/10,11
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப – புறம் 332/6
TOP


பைஇ (1)

பைஇ பைய பசந்தனை பசப்பே – நற் 96/11
TOP


பைஞ்சாய் (2)

பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானே – ஐங் 155/5
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன – அகம் 62/1
TOP


பைஞ்ஞிலம் (2)

நனம் தலை பைஞ்ஞிலம் வருக இ நிழல் என – பதி 17/9
உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி – பதி 31/6
TOP


பைத்த (1)

பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப – பொரு 69
TOP


பைத்து (1)

துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் – குறு 294/5
TOP


பைதரு (1)

கால் ஏமுற்ற பைதரு காலை – நற் 30/7
TOP


பைதல் (31)

பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென – நற் 47/4
பைதல் நெஞ்சம் உய்யும் மாறே – நற் 75/10
நெய்தல் உண்கண் பைதல் கூர – நற் 113/7
வீங்கு மடல் குடம்பை பைதல் வெண்_குருகு – நற் 199/2
பைதல் ஒரு நிலை காண வைகல் – நற் 306/8
சிறை குவிந்து இருந்த பைதல் வெண்_குருகு – நற் 312/3
பயிர்தல் ஆனா பைதல் அம் குருகே – நற் 338/12
பைதல் ஒரு தலை சேக்கும் நாடன் – குறு 13/3
பறை வலம் தப்பிய பைதல் நாரை – குறு 125/5
பைதல் பிள்ளை கிளை பயிர்ந்து ஆஅங்கு – குறு 139/4
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து – குறு 180/4
பைதல் நோக்கம் நினையாய் தோழி – குறு 298/4
பனி படு பைதல் விதலை பருவத்து – பரி 11/75
பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ – கலி 5/13
பசந்தவர் பைதல் நோய் பகை என தணித்து நம் – கலி 32/14
பகலிட கண்ணியன் பைதல் குழலன் – கலி 101/39
பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின் – கலி 126/19
பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல் – கலி 129/16
படு_சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை – கலி 130/18
பரிசு அழி பைதல் நோய் மூழ்கி எரி பரந்த – கலி 138/21
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப – அகம் 25/14
மன்று நிறை பைதல் கூர பல உடன் – அகம் 63/11
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்-தொறும் – அகம் 283/7
பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென – அகம் 290/6
பனி மீக்கூரும் பைதல் பானாள் – அகம் 305/4
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு – புறம் 41/15
வருந்தலும் உண்டு என் பைதல் அம் கடும்பே – புறம் 139/15
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப – புறம் 194/4
பைதல் சுற்றத்து பசி பகை ஆகி – புறம் 212/7
பெரும் களிறு இழந்த பைதல் பாகன் – புறம் 220/2
பைதல் ஒக்கல் தழீஇ அதனை – புறம் 221/9
TOP


பைதல (5)

பனி வார் உண்கண் பைதல கலுழ – நற் 162/5
மை இரும் பனை மிசை பைதல உயவும் – நற் 335/7
பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்க – கலி 16/1
பைதல ஆகி பசக்குவ-மன்னோ என் – கலி 142/22
நெய்தல் உண்கண் பைதல கலுழ – அகம் 10/5
TOP


பைதலம் (1)

பைதலம் அல்லேம் பாண பணை தோள் – ஐங் 135/1
TOP


பைதலன் (1)

பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு – அகம் 38/15
TOP


பைதலேன் (2)

பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக – கலி 46/13
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக – கலி 46/17
TOP


பைதலை (1)

பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும் – அகம் 126/2
TOP


பைதிரம் (2)

வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம்/அன்ன ஆயின பழனம்-தோறும் – பதி 19/18,19
வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய – பதி 38/3
TOP


பைது (16)

பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின் – பெரும் 230
வையும் துரும்பும் நீக்கி பைது அற – பெரும் 239
கயம் கண் அற்ற பைது அறு காலை – நற் 22/9
பசி தின வருந்தும் பைது அறு குன்றத்து – ஐங் 305/2
பைது அற வெந்த பாலை வெம் காட்டு – ஐங் 317/2
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும் – பதி 23/3
பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற – கலி 20/1
அழல் போல் வெம் கதிர் பைது அற தெறுதலின் – அகம் 1/10
கோடை நீடிய பைது அறு காலை – அகம் 42/6
பைது அறு சிமைய பயம் நீங்கு ஆரிடை – அகம் 153/11
பைது அற தெறுதலின் பயம் கரந்து மாறி – அகம் 164/2
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் – அகம் 185/8
பயம் கெட திருகிய பைது அறு காலை – அகம் 263/4
பைது அறு நெடும் கழை பாய்தலின் ஒய்யென – அகம் 267/10
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம் – அகம் 371/9
கோடை நீடிய பைது அறு காலை – புறம் 174/26
TOP


பைது-உறு (1)

தண் பெயல் பொழிந்த பைது-உறு காலை – அகம் 74/3
TOP


பைப்பய (6)

உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி – அகம் 71/14
வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பய/பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் – அகம் 106/3,4
எல்லை பைப்பய கழிப்பி குட-வயின் – அகம் 120/4
பலர் அறிவுறுதல் அஞ்சி பைப்பய/நீர் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளி – அகம் 142/15,16
எல்லை பைப்பய கழிப்பி எல் உற – அகம் 260/10
மீது அழி கடு நீர் நோக்கி பைப்பய/பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர – அகம் 346/10,11
TOP


பைபய (21)

வைகுறு_மீனின் பைபய தோன்றும் – பெரும் 318
கை புனை குறும் தொடி தத்த பைபய/முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் – பெரும் 334,335
கை பிணி விடாஅது பைபய கழி-மின் – மலை 383
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று – நற் 37/3
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய/பாஅர் மலி சிறு கூவலின் தணியும் – நற் 41/3,4
பைபய இமைக்கும் துறைவன் – நற் 199/10
தந்தை வித்திய மென் தினை பைபய/சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ – நற் 306/1,2
எல்லை பைபய கழிப்பி முல்லை – நற் 369/3
முழங்கு திரை முழவின் பாணியின் பைபய/பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும் – நற் 378/3,4
படரும் பைபய பெயரும் சுடரும் – குறு 215/1
மணந்தனை அருளாய் ஆயினும் பைபய/தணந்தனை ஆகி உய்ம்மோ நும் ஊர் – ஐங் 83/1,2
பைபய எம்மை என்றனென் யானே – ஐங் 113/5
கதுப்பு அயல் அணியும் அளவை பைபய/சுரத்து இடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தை – ஐங் 396/2,3
புரி புனை பூம் கயிற்றின் பைபய வாங்கி – கலி 80/7
பைபய தூங்கும் நின் மெல் விரல் சீறடி – கலி 85/19
வெருவு-உற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய/இருள் தூர்பு புலம்பு ஊர கனை சுடர் கல் சேர – கலி 120/2,3
நெய்யுள் மெழுகின் நிலையாது பைபய/தேயும் அளித்து என் உயிர் – கலி 138/22,23
பைபய பசந்தன்று நுதலும் சாஅய் – அகம் 95/1
அடி அறிவுறுதல் அஞ்சி பைபய/கடி இலம் புகூஉம் கள்வன் போல – அகம் 276/3,4
உய் தகை இன்றால் தோழி பைபய/கோங்கும் கொய் குழை உற்றன குயிலும் – அகம் 341/1,2
பொய்கையும் போது கண் விழித்தன பைபய/சுடரும் சுருங்கின்று ஒளியே பாடு எழுந்து – புறம் 397/3,4
TOP


பைம் (193)

பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி – திரு 22
பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் – திரு 190
நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை – திரு 253
பைம் பாகல் பழம் துணரிய – பொரு 191
பைம் கறி நிவந்த பலவின் நீழல் – சிறு 43
பைம் நனை அவரை பவழம் கோப்பவும் – சிறு 164
பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி – பெரும் 112
பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின் – பெரும் 209
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – பெரும் 267
பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல் – பெரும் 283
பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர் – பெரும் 298
கஞ்சக நறு முறி அளைஇ பைம் துணர் – பெரும் 308
பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க – பெரும் 329
பைம் கொடி நுடங்கும் பலர் புகு வாயில் – பெரும் 337
நீல பைம் குடம் தொலைச்சி நாளும் – பெரும் 382
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு – பெரும் 458
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி – முல் 25
கள்ளின் இரும் பைம் கலம் செல உண்டு – மது 228
நீலத்து அன்ன பைம் பயிர் மிசை-தொறும் – மது 279
இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும் – மது 289
இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302
கொல் ஏற்று பைம் தோல் சீவாது போர்த்த – மது 732
பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 15
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 40
பாரம் பீரம் பைம் குருக்கத்தி – குறி 92
பைம் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி – குறி 117
பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில் – குறி 204
பைம் தழை மா மகளிரொடு – பட் 91
பைம் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர் – பட் 264
முளவு_மா தொலைச்சிய பைம் நிண பிளவை – மலை 176
குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி – மலை 251
முடுவல் தந்த பைம் நிண தடியொடு – மலை 563
அகல் வாய் பைம் சுனை பயிர் கால்யாப்ப – நற் 5/2
பயில் குரல் கவரும் பைம் புற கிளியே – நற் 13/9
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை – நற் 22/1
கம்பலத்து அன்ன பைம் பயிர் தாஅம் – நற் 24/4
ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில் – நற் 28/7
பாய் இரும் பனி கழி துழைஇ பைம் கால் – நற் 31/3
பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த – நற் 41/1
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் – நற் 43/9
குழையன் கோதையன் குறும் பைம் தொடியன் – நற் 50/2
துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு – நற் 97/6
கொடும் குரல் குறைத்த செம் வாய் பைம் கிளி – நற் 102/1
பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய் – நற் 103/6
பைம் தாள் செந்தினை படு கிளி ஓப்பும் – நற் 104/6
பைம் காய் நல் இடம் ஒரீஇய செங்காய் – நற் 126/1
செம் வாய் பைம் கிளி கவர நீ மற்று – நற் 147/3
படு வண்டு ஆர்க்கும் பைம் தார் மார்பின் – நற் 173/8
செ வாய் பைம் கிளி ஓப்பி அ வாய் – நற் 259/4
பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன் – நற் 269/2
பைம் தாது எருவின் வைகு துயில் மடியும் – நற் 271/2
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்த – நற் 287/2
தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினை – நற் 317/3
பவள செம் வாய் பைம் கிளி கவரும் – நற் 317/4
பைம் தொடி மகளிரொடு சிறுவர் பயந்து – நற் 330/9
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும் – நற் 340/8
கானல் கண்டல் கழன்று உகு பைம் காய் – நற் 345/1
அம் கண் அறைய அகல் வாய் பைம் சுனை – நற் 357/7
பைம் தழை சிதைய கோதை வாட – நற் 363/7
இறைஞ்சிய குரல பைம் தாள் செந்தினை – நற் 376/2
பைம் புற புறவின் செம் கால் சேவல் – நற் 384/1
பயறு போல் இணர பைம் தாது படீஇயர் – குறு 10/2
நீர் வார் பைம் புதல் கலித்த – குறு 98/4
நீல பைம் போது உளரி புதல – குறு 110/3
பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன – குறு 122/1
ஈரம் பட்ட செவ்வி பைம் புனத்து – குறு 131/4
பைம் கண் செந்நாய் படு பதம் பார்க்கும் – குறு 141/6
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் – குறு 181/5
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப – குறு 189/4
வெம் சின அரவின் பைம் தலை துமிய – குறு 190/4
வேம்பின் பைம் காய் என் தோழி தரினே – குறு 196/1
கரும்பு மருள் முதல பைம் தாள் செந்தினை – குறு 198/2
கரி குறட்டு இறைஞ்சிய செறி கோள் பைம் குரல் – குறு 198/4
பனி புதல் இவர்ந்த பைம் கொடி அவரை – குறு 240/1
வெண் மணல் பொதுளிய பைம் கால் கருக்கின் – குறு 281/1
குண்டு நீர் பைம் சுனை பூத்த குவளை – குறு 291/6
ஓங்கு மலை பைம் சுனை பருகும் நாடன் – குறு 317/4
பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன – குறு 331/6
புனம் உண்டு கடிந்த பைம் கண் யானை – குறு 333/2
பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும் – குறு 335/4
குன்ற நாட தகுமோ பைம் சுனை – குறு 342/4
பைம் கண் மா சுனை பல் பிணி அவிழ்ந்த – குறு 366/4
தண் துளிக்கு ஏற்ற பைம் கொடி முல்லை – குறு 382/1
புயல் புறந்தந்த புனிற்று வளர் பைம் காய் – ஐங் 25/1
அம்ம வாழி தோழி பைம் சுனை – ஐங் 225/1
பைம் புற படு கிளி ஒப்பலர் – ஐங் 260/3
பைம் புற சிறு கிளி கடியும் நாட – ஐங் 283/3
அளிய தாமே செ வாய் பைம் கிளி – ஐங் 284/1
குன்ற குறவர் கொய் தினை பைம் கால் – ஐங் 284/2
பைம் குரல் ஏனல் படர்தரும் கிளி என – ஐங் 289/2
பைம் சுனை பூத்த பகு வாய் குவளையும் – ஐங் 299/2
இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளி – ஐங் 375/2
இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளி – ஐங் 375/2
பைம் காய் நெல்லி பல உடன் மிசைந்து – ஐங் 381/1
பச்சூன் பெய்த பைம் நிண வல்சி – ஐங் 391/3
பைம் புதல் பல் பூ மலர – ஐங் 438/2
தளவின் பைம் கொடி தழீஇ பையென – ஐங் 454/1
வெண் கொடி ஈங்கை பைம் புதல் அணியும் – ஐங் 456/3
பைம் தினை உணங்கல் செம்பூழ் கவரும் – ஐங் 469/1
பருவம் செய்தன பைம் கொடி முல்லை – ஐங் 476/2
மார்பு மலி பைம் தார் ஓடையொடு விளங்கும் – பதி 11/17
வாடா பைம் மயிர் இளைய ஆடு நடை – பதி 12/11
வெண் பூ வேளையொடு பைம் சுரை கலித்து – பதி 15/9
பைம் கண் யானை புணர் நிரை துமிய – பதி 28/2
பாணர் பைம் பூ மலைய இளையர் – பதி 40/24
இஞ்சி வீ விராய பைம் தார் பூட்டி – பதி 42/10
ஒழுகை உய்த்தோய் கொழு இல் பைம் துணி – பதி 44/17
ஊர் பாட்டு எண்ணில் பைம் தலை துமிய – பதி 46/9
பைம் பொன் தாமரை பாணர் சூட்டி – பதி 48/1
தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி – பதி 74/8
அணி மணி பைம் பூண் அமரர்க்கு முதல்வன் நீ – பரி 3/53
பொன் கண் பச்சை பைம் கண் மாஅல் – பரி 3/82
பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான் – பரி 5/27
நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை – பரி 5/48
நல்லாள் கரை நிற்ப நான் குளித்த பைம் தடத்து – பரி 6/87
பைம் சுனை பாஅய் எழு பாவையர் – பரி 8/112
பிணி நெகிழ பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊர – பரி 21/58
பாயல் நோய் மிகும் ஆயின் பைம்_தொடி அளி என்னோ – கலி 28/19
நறு வடி மாவின் பைம் துணர் உழக்கி – கலி 41/14
பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை – கலி 83/8
நாறு இணர் பைம் தார் பரிந்தது அமையுமோ – கலி 90/16
அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின் – அகம் 1/12
கங்குல் வருதலும் உரியை பைம் புதல் – அகம் 2/15
பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ – அகம் 4/2
மணி பூ பைம் தழை தைஇ அணி தக – அகம் 20/9
மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண் – அகம் 21/17
செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின் – அகம் 21/20
கோடு உடைந்து அன்ன கோடல் பைம் பயிர் – அகம் 23/6
பைம் தாது அணிந்த போது மலி எக்கர் – அகம் 25/4
அருவி ஆன்ற பைம் கால்-தோறும் – அகம் 28/4
செம் தார் பைம் கிளி முன்கை ஏந்தி – அகம் 34/14
புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர் – அகம் 54/15
சிறு பைம் தூவி செம் கால் பேடை – அகம் 57/1
இன் தீம் பைம் சுனை ஈர் அணி பொலிந்த – அகம் 59/13
உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பைம் கால் – அகம் 61/6
பைம் கொடி முல்லை மென் பத புது வீ – அகம் 74/6
தீம் பெரும் பைம் சுனை பூத்த – அகம் 78/23
தண் நறும் பைம் தாது உறைக்கும் – அகம் 80/12
கன்று பசி களைஇய பைம் கண் யானை – அகம் 85/7
பாசி தின்ற பைம் கண் யானை – அகம் 91/5
படாஅ பைம் கண் பாடு பெற்று ஒய்யென – அகம் 102/8
ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப – அகம் 119/6
பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப – அகம் 120/3
வண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லை – அகம் 124/11
படாஅ பைம் கண் பா அடி கய வாய் – அகம் 125/7
கார் தலைமணந்த பைம் புதல் புறவின் – அகம் 133/5
தண் கார்க்கு ஈன்ற பைம் கொடி முல்லை – அகம் 144/3
கழனி ஆம்பல் முழு_நெறி பைம் தழை – அகம் 156/9
எல்லி மலர்ந்த பைம் கொடி அதிரல் – அகம் 157/6
பைம் கொடி பாகல் செம் கனி நசைஇ – அகம் 177/9
பைம் புதல் நளி சினை குருகு இருந்து அன்ன – அகம் 178/8
பனை வெளிறு அருந்து பைம் கண் யானை – அகம் 187/18
எய்யா வரி வில் அன்ன பைம் தார் – அகம் 192/4
குரூஉ பூ பைம் தார் அருக்கிய பூசல் – அகம் 208/16
படு பிண பைம் தலை தொடுவன குழீஇ – அகம் 215/13
பழன பைம் சாய் கொழுதி கழனி – அகம் 226/5
பைம் தாள் செந்தினை கொடும் குரல் வியன் புனம் – அகம் 242/5
நுண் கொடி மின்னின் பைம் பயிர் துமிய – அகம் 254/14
குடுமி கொக்கின் பைம் கால் பேடை – அகம் 290/1
அவரை பைம் பூ பயில அகல் வயல் – அகம் 294/9
திரி மருப்பு இரலை பைம் பயிர் உகள – அகம் 314/6
பைம் நிண வராஅல் குறைய பெயர்தந்து – அகம் 316/5
வார் பெயல் வளர்த்த பைம் பயிர் புறவில் – அகம் 324/5
பைம் நிணம் கவரும் படு பிண கவலை – அகம் 327/16
அரவின் பைம் தலை இடறி பானாள் – அகம் 328/4
பைம் குழை தழையர் பழையர் மகளிர் – அகம் 331/5
கவை கதிர் வரகின் யாணர் பைம் தாள் – அகம் 359/13
பைம் கண் வல்லியம் கல் அளை செறிய – அகம் 362/4
பகு வாய் பைம் சுனை மா உண மலிர – அகம் 364/8
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை – அகம் 367/8
தோடு வளர் பைம் தினை நீடு குரல் காக்கும் – அகம் 368/3
தண் அரும் பைம் தார் துயல்வர அந்தி – அகம் 370/11
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி – அகம் 375/14
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி – அகம் 399/14
புலவு நாற்றத்த பைம் தடி – புறம் 14/12
பொலம் தோட்டு பைம் தும்பை – புறம் 22/20
பன் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம் – புறம் 62/10
பொலம் பைம் தார் கெட பரிதலின் – புறம் 97/12
குவளை பைம் சுனை பருகி அயல – புறம் 132/5
பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை – புறம் 177/14
இடையோர் பழத்தின் பைம் கனி மாந்த – புறம் 225/2
பைம் கழை பொதி களைந்து அன்ன விளர்ப்பின் – புறம் 253/4
அம் வயிற்று அகன்ற மார்பின் பைம் கண் – புறம் 257/2
பச்சூன் தின்று பைம் நிணம் பெருத்த – புறம் 258/4
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை – புறம் 297/3
பைம் தழை துயல்வரும் செறு விறல் – புறம் 339/9
பைம் கால் கொக்கின் பகு வாய் பிள்ளை – புறம் 342/7
செந்நெல் உண்ட பைம் தோட்டு மஞ்ஞை – புறம் 344/1
ஒளிறு ஒள் வாள் அட குழைந்த பைம் தும்பை – புறம் 347/3
செரு படை மிளிர்ந்த திருத்து-உறு பைம் சால் – புறம் 369/12
விழு தலை சாய்த்த வெருவரு பைம் கூழ் – புறம் 369/14
மனை கோழி பைம் பயிரின்னே – புறம் 395/9
TOP


பைம்_சேறு (1)

பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர் – பெரும் 298
TOP


பைம்_தொடி (1)

பாயல் நோய் மிகும் ஆயின் பைம்_தொடி அளி என்னோ – கலி 28/19
TOP


பைய (8)

பைஇ பைய பசந்தனை பசப்பே – நற் 96/11
பசும்_பொன் அவிர் இழை பைய நிழற்ற – ஐங் 74/2
மை அணல் காளையொடு பைய இயலி – ஐங் 389/2
பைய விளையாடுவாரும் மென் பாவையர் – பரி 10/104
பைய முயங்கிய அ ஞான்று அவை எல்லாம் – கலி 19/2
பைய முயங்கி-உழி – கலி 144/36
அடி நிலன் உறுதல் அஞ்சி பைய/தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலி – அகம் 323/5,6
அணங்கு அயர் வியன் களம் பொலிய பைய/தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு – அகம் 382/6,7
TOP


பையாந்திசினே (1)

வைகி கேட்டு பையாந்திசினே/அளிதோ தானே தோழி அல்கல் – நற் 114/4,5
TOP


பையாந்து (1)

பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து/புகல் ஏக்கு அற்ற புல்லென் உலவை – அகம் 57/4,5
TOP


பையுள் (15)

படும்_கால் பையுள் தீரும் படாஅது – நற் 209/7
பனி கால்கொண்ட பையுள் யாமத்து – நற் 241/10
படையொடு வந்த பையுள் மாலை – நற் 343/7
பழு மரம் படரும் பையுள் மாலை – குறு 172/2
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை – குறு 195/2
கையற வந்த பையுள் மாலை – குறு 391/6
மன்றில் பையுள் தீரும் – ஐங் 246/5
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப – ஐங் 489/3
பையுள் உறுப்பின் பண்ணு பெயர்த்து ஆங்கு – பதி 65/15
மெல்லிய நெஞ்சு பையுள் கூர தம் – கலி 137/8
கடவுள் வாழ்த்தி பையுள் மெய்ந்நிறுத்து – அகம் 14/16
வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள – அகம் 145/4
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப – அகம் 214/13
நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட – அகம் 223/13
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப – அகம் 314/12
TOP


பையுளும் (1)

பலவே யாமம் பையுளும் உடைய – கலி 137/3
TOP


பையென் (2)

பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு – அகம் 365/2
பறையொடு தகைத்த கல பையென் முரவு வாய் – புறம் 371/5
TOP


பையென்ற (2)

பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய் – கலி 118/14
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று – கலி 143/2
TOP


பையென்றனவே (1)

பாடுநர் கடும்பும் பையென்றனவே/தோடு கொள் முரசும் கிழிந்தன கண்ணே – புறம் 238/7,8
TOP


பையென (27)

வறன்-உற்று ஆர முருக்கி பையென/மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என் – நற் 64/6,7
எல்லாம் தந்ததன்-தலையும் பையென/வடந்தை துவலை தூவ குடம்பை – நற் 152/5,6
கை புனை சிறு நெறி வாங்கி பையென/விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று – நற் 222/3,4
ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென/முன்றில் கொளினே நந்துவள் பெரிது என – நற் 236/3,4
தாழ் நறும் கதுப்பில் பையென முள்கும் – நற் 337/8
அன்றிலும் பையென நரலும் இன்று அவர் – குறு 177/4
தளவின் பைம் கொடி தழீஇ பையென/நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி – ஐங் 454/1,2
புனை_இழாய் நின் நிலை யான் கூற பையென/நிலவு வேல் நெடுந்தகை நீள் இடை – கலி 10/22,23
அனையன பல பாராட்டி பையென/வலைவர் போல சோர் பதன் ஒற்றி – கலி 55/16,17
யார் இவண் நின்றீர் என கூறி பையென/வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது – கலி 65/11,12
பையென காண்கு விழிப்ப யான் பற்றிய – கலி 142/35
பையென நோக்குவேன் தாழ் தானை பற்றுவேன் – கலி 147/49
செவ்வழி நல் யாழ் இசையினென் பையென/கடவுள் வாழ்த்தி பையுள் மெய்ந்நிறுத்து – அகம் 14/15,16
வெய்ய உகுதர வெரீஇ பையென/சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை – அகம் 19/14,15
பொய்யும் உளவோ என்றனன் பையென/பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து – அகம் 48/19,20
மை இல் மான் இனம் மருள பையென/வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப – அகம் 71/5,6
காவலர் அறிதல் ஓம்பி பையென/வீழா கதவம் அசையினன் புகுதந்து – அகம் 102/12,13
வெம் வரை அத்தம் சுட்டி பையென/வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன் – அகம் 189/7,8
கைவல் பாகன் பையென இயக்க – அகம் 230/12
பகல் அழி தோற்றம் போல பையென/நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தரும்-மார் – அகம் 277/2,3
வைகு நிலை மதியம் போல பையென/புலம்பு கொள் அவலமொடு புது கவின் இழந்த – அகம் 299/11,12
பகலும் கங்குலும் மயங்கி பையென/பெயல் உறு மலரின் கண் பனி வார – அகம் 307/3,4
கை மாண் தோணி கடுப்ப பையென/மயில்_இனம் பயிலும் மரம் பயில் கானம் – அகம் 344/5,6
நெடும் தேர் அகல நீக்கி பையென/குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி – அகம் 360/13,14
வையகம் முழுதுடன் வளைஇ பையென/என்னை வினவுதி ஆயின் மன்னர் – புறம் 69/7,8
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின் – புறம் 152/17
கையின் சுட்டி பையென எண்ணி – புறம் 257/9
TOP

Related posts