ஞ – முதல் சொற்கள், சங்க இலக்கியம் தொடரடைவு

முழு நூலையும் காண இங்கே சொடுக்கவும்.

 1.திருமுருகாற்றுப்படை
 2.பொருநராற்றுப்படை
 3.சிறுபாணாற்றுப்படை
 4.பெரும்பாணாற்றுப்படை
 5.முல்லைப்பாட்டு
 6.மதுரைக்காஞ்சி
 7.நெடுநல்வாடை
 8.குறிஞ்சிப்பாட்டு
 9.பட்டினப்பாலை
 10.மலைபடுகடாம்
 11.நற்றிணை
 12.குறுந்தொகை
 13.ஐங்குறுநூறு
 14.பதிற்றுப்பத்து
 15.பரிபாடல்
 16.கலித்தொகை
 17.அகநானூறு
 18.புறநானூறு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஞமலி (9)

ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் – பெரும் 132
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது – பெரும் 299
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி/திளையா கண்ண வளைகுபு நெரிதர – குறி 131,132
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை – பட் 140
மதம் தபு ஞமலி நாவின் அன்ன – மலை 42
மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட – நற் 285/5
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின் – அகம் 122/9
விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய – அகம் 140/9
சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட – அகம் 388/14
TOP


ஞமலியின் (1)

தொடர் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய – புறம் 74/3
TOP


ஞமலியும் (1)

எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன – குறு 179/2
TOP


ஞமலியொடு (1)

பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி – பெரும் 112
TOP


ஞமன் (1)

திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து – பரி 5/61
TOP


ஞமன்ன் (1)

தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம் – புறம் 6/9
TOP


ஞமனும் (1)

தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும்/மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் – பரி 3/21,22
TOP


ஞரல (2)

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல/உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு – திரு 120,121
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல/இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் – பதி 30/6,7
TOP


ஞரலும் (1)

வளை ஞரலும் பனி பௌவத்து – பதி 51/14
TOP

Related posts