ச – முதல் சொற்கள், சங்க இலக்கியம் தொடரடைவு

முழு நூலையும் காண இங்கே சொடுக்கவும்.

 1.திருமுருகாற்றுப்படை
 2.பொருநராற்றுப்படை
 3.சிறுபாணாற்றுப்படை
 4.பெரும்பாணாற்றுப்படை
 5.முல்லைப்பாட்டு
 6.மதுரைக்காஞ்சி
 7.நெடுநல்வாடை
 8.குறிஞ்சிப்பாட்டு
 9.பட்டினப்பாலை
 10.மலைபடுகடாம்
 11.நற்றிணை
 12.குறுந்தொகை
 13.ஐங்குறுநூறு
 14.பதிற்றுப்பத்து
 15.பரிபாடல்
 16.கலித்தொகை
 17.அகநானூறு
 18.புறநானூறு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சகடத்து (1)

ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து/ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை – அகம் 301/7,8
TOP


சகடம் (5)

ஆரை வேய்ந்த அறை வாய் சகடம்/வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப – பெரும் 50,51
கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம்/மணல் மடுத்து உரறும் ஓசை கழனி – நற் 4/9,10
இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம்/பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள் – குறு 165/3,4
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து – அகம் 136/5
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே – புறம் 102/2
TOP


சகடமும் (1)

சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி – பரி 10/17
TOP


சங்கமும் (1)

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்/மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய – பரி 2/13,14
TOP


சடை (13)

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் – பட் 54
விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப – பரி 9/5
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து – பரி 11/2
தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து – கலி 1/2
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன் – கலி 38/1
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல் – கலி 104/11
பிறங்கு நீர் சடை கரந்தான் அணி அன்ன நின் நிறம் – கலி 150/9
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை/முதிரா திங்களொடு சுடரும் சென்னி – அகம் 0/10,11
தாழ் சடை பொலிந்த அரும் தவத்தோற்கே – புறம் 1/13
அவிர் சடை முனிவரும் மருள கொடும் சிறை – புறம் 43/4
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை/மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும் – புறம் 56/1,2
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை/முது முதல்வன் வாய் போகாது – புறம் 166/1,2
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே – புறம் 251/7
TOP


சடையோடு (2)

நீடிய சடையோடு ஆடா மேனி – நற் 141/4
தில்லை அன்ன புல்லென் சடையோடு/அள் இலை தாளி கொய்யுமோனே – புறம் 252/2,3
TOP


சண்பக (1)

வண்டு அறைஇய சண்பக நிரை தண் பதம் – பரி 11/18
TOP


சண்பகம் (4)

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு – திரு 27
செருந்தி அதிரல் பெரும் தண் சண்பகம்/கரந்தை குளவி கடி கமழ் கலி மா – குறி 75,76
மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம்/அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் – பரி 12/77,78
பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர் – கலி 150/21
TOP


சதுக்கத்து (1)

ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/5
TOP


சதுக்கமும் (1)

சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும் – திரு 225
TOP


சந்தம் (1)

சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து – பதி 87/2
TOP


சந்தனம் (1)

பொதிர்த்த முலை இடை பூசி சந்தனம்/உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும் – பரி 21/25,26
TOP


சந்தியும் (1)

சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும் – திரு 225
TOP


சந்தின் (2)

குறவர் தந்த சந்தின் ஆரமும் – அகம் 13/4
உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு – அகம் 102/3
TOP


சந்தின (1)

சிறியிலை சந்தின வாடு பெரும் காட்டே – நற் 7/9
TOP


சந்து (2)

சந்து நீவி புல் முடிந்து இடு-மின் – மலை 393
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை – அகம் 59/12
TOP


சமத்தானே (1)

அரசு பட கடக்கும் அரும் சமத்தானே – ஐங் 426/4
TOP


சமத்து (11)

முரசு உடை பெரும் சமத்து அரசு பட கடந்து – பதி 41/19
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர் – பதி 52/7
அரும் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் – பதி 71/20
ஒளிறு வாள் பொருப்பன் உடல் சமத்து இறுத்த – பரி 22/1
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப – கலி 101/10
பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த – அகம் 77/17
அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர் – அகம் 188/5
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த – அகம் 312/12
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே – புறம் 275/9
அரும் சமம் ததைய தாக்கி பெரும் சமத்து/அண்ணல் யானை அணிந்த – புறம் 326/13,14
பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி – புறம் 365/5
TOP


சமம் (35)

செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 99
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – சிறு 112
சாணம் தின்ற சமம் தாங்கு தட கை – மது 593
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப – குறி 229
முனை கெட சென்று முன் சமம் முருக்கி – பட் 238
பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர் – பதி 30/41
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 34/10
வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம்/கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி – பதி 40/10,11
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 43/9
வேல் உடை குழூஉ சமம் ததைய நூறி – பதி 66/5
சமம் ததைந்த வேல் – பதி 70/3
களிறு உடை பெரும் சமம் ததைய எஃகு உயர்த்து – பதி 76/1
செல் சமம் தொலைத்த வினை நவில் யானை – பதி 82/4
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும் – பரி 19/42
பொரு சமம் கடந்த புகழ் சால் வேழம் – பரி 21/2
செல் சமம் கடந்த வில் கெழு தட கை – அகம் 25/19
களிறு உடை அரும் சமம் ததைய நூறும் – அகம் 46/12
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய – அகம் 149/12
கடாஅ யானை குழூஉ சமம் ததைய – அகம் 220/4
செல் சமம் கடந்த செல்லா நல் இசை – அகம் 231/11
வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி – அகம் 387/13
முன்பு துரந்து சமம் தாங்கவும் – புறம் 14/4
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – புறம் 39/11
அரும் சமம் சிதைய தாக்கி முரசமொடு – புறம் 72/8
அரும் சமம் ததைய நூறி நீ – புறம் 93/14
விரைந்து வந்து சமம் தாங்கிய – புறம் 125/13
அரும் சமம் ததைய தாக்கி நன்றும் – புறம் 126/21
அரும் சமம் வருகுவது ஆயின் – புறம் 139/14
சமம் கண் கூடி தாம் வேட்பவ்வே – புறம் 270/4
அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த – புறம் 284/5
இரும் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே – புறம் 309/2
ஒளிறு வாள் அரும் சமம் முருக்கி – புறம் 312/5
அரும் சமம் ததைய தாக்கி பெரும் சமத்து – புறம் 326/13
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் – புறம் 337/17
அரும் சமம் கடக்கும் ஆற்றல் அவன் – புறம் 397/26
TOP


சமழ்ப்பு (1)

தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்-மின் – பரி 20/36
TOP


சமன் (1)

எ வழி பட்டாய் சமன் ஆக இ எள்ளல் – கலி 97/5
TOP


சமைப்பின் (1)

மனைவியர் நிறை-வயின் வசி தடி சமைப்பின்/சாலார் தானே தரிக்க என அவர் அவி – பரி 5/39,40
TOP


சரணத்தர் (1)

தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை – பரி 10/10
TOP


சருமத்தின் (1)

தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை – பரி 21/3
TOP


சல (1)

சல படையான் இரவில் தாக்கியது எல்லாம் – பரி 6/57
TOP


சலதாரி (1)

தணிவு-உற தாங்கிய தனி நிலை சலதாரி/மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/6,7
TOP


சலம் (3)

சலம் புகன்று சுறவு கலித்த – மது 112
தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார் – பரி 10/90
சலம் புரி தண்டு ஏந்தினவை – பரி 15/58
TOP


சவட்டி (2)

பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி/புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 217,218
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி/கொன்ற யானை கோட்டின் தோன்றும் – அகம் 375/14,15
TOP


சவட்டும் (1)

மன்பதை சவட்டும் கூற்ற முன்ப – பதி 84/7
TOP


சனம் (2)

புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி – பரி 10/9
பல் சனம் நாணி பதைபதைப்பு மன்னவர் – பரி 10/59
TOP

Related posts