சொ – முதல் சொற்கள், சங்க இலக்கியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொரி 8
சொரிதர 1
சொரிதரும் 1
சொரிதலின் 2
சொரிந்த 14
சொரிந்ததூஉம் 1
சொரிந்தன்றே 1
சொரிந்து 13
சொரிபு 1
சொரிய 2
சொரியும் 3
சொரியும்மே 1
சொரிவது 1
சொரிவன 1
சொரிவு 1
சொல் 101
சொல்_கண் 1
சொல்_இடம் 1
சொல்கொண்டு 1
சொல்மலை 1
சொல்ல 7
சொல்லகிற்றாம் 1
சொல்லர் 2
சொல்லல் 5
சொல்லலும் 1
சொல்லலை-கொல்லோ 1
சொல்லவும் 4
சொல்லள் 1
சொல்லா 1
சொல்லாட்டி 1
சொல்லாடி 1
சொல்லாதி 1
சொல்லாது 5
சொல்லாய் 1
சொல்லால் 2
சொல்லாள் 3
சொல்லான் 2
சொல்லி 16
சொல்லிக்காட்டி 1
சொல்லிய 14
சொல்லியது 2
சொல்லியாள் 1
சொல்லியும் 1
சொல்லின் 10
சொல்லினம் 1
சொல்லினவும் 1
சொல்லினான் 1
சொல்லினும் 2
சொல்லினுள் 2
சொல்லினேன் 1
சொல்லினையே 1
சொல்லீர் 1
சொல்லு-தோறு 1
சொல்லு-மதி 1
சொல்லுக 1
சொல்லுதல்-உற்று 1
சொல்லுநர் 1
சொல்லுப 1
சொல்லுபு 2
சொல்லும் 12
சொல்லுவது 1
சொல்லுவாய் 1
சொல்லுள்ளும் 1
சொல்லே 1
சொல்லேம் 1
சொல்லை 1
சொல்லோ 3
சொலாது 1
சொலித்த 1
சொலித்து 1
சொலிய 4
சொலியின் 1
சொலின் 1
சொற்கள் 1
சொற்கு 1
சொற்றதூஉம் 1
சொறிந்த 1
சொறியும் 1
சொன்றி 7
சொன்றியொடு 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சொரி (8)

செம்பு சொரி பானையின் மின்னி எ வாயும் – நற் 153/3
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ – நற் 335/5
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் – பதி 47/5
பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி – பரி 10/127
வில்லு சொரி பகழியின் மென் மலர் தாயின – பரி 18/40
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன மற்றும் – கலி 82/14
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி – அகம் 39/6
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து – அகம் 121/8
TOP


சொரிதர (1)

வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர/புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி – கலி 44/5,6
TOP


சொரிதரும் (1)

முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி – முல் 87
TOP


சொரிதலின் (2)

வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின்/பலம் பெறு நசையொடு பதி-வயின் தீர்ந்த நும் – மலை 410,411
செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின்/தணிவு இல் வெம் கோடைக்கு தண் நயந்து அணி கொள்ளும் – கலி 20/2,3
TOP


சொரிந்த (14)

பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு – மது 681
வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த/சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ் – மலை 435,436
கைவல் வினைவன் தையுபு சொரிந்த/சுரிதக உருவின ஆகி பெரிய – நற் 86/5,6
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் – நற் 142/1
பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல – குறு 169/4
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் – குறு 233/5
முள் எயிற்று பாண்_மகள் இன் கெடிறு சொரிந்த/அகன் பெரு வட்டி நிறைய மனையோள் – ஐங் 47/1,2
வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் – ஐங் 48/2
அருவி சொரிந்த திரையின் துரந்து – பரி 20/103
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை – அகம் 19/15
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி – அகம் 86/15
நிதியம் சொரிந்த நீவி போல – அகம் 313/11
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள் – புறம் 33/2
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை – புறம் 261/8
TOP


சொரிந்ததூஉம் (1)

சொரிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள் நிறம் திரிந்தாள் – பரி 12/52
TOP


சொரிந்தன்றே (1)

மா மழை இடியூஉ தளி சொரிந்தன்றே/வாள் நுதல் பசப்ப செலவு அயர்ந்தனையே – ஐங் 423/1,2
TOP


சொரிந்து (13)

கருவி வானம் துளி சொரிந்து ஆங்கு – பெரும் 24
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து/பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி – நெடு 102,103
சில் மீன் சொரிந்து பல் நெல் பெறூஉம் – ஐங் 49/2
ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு – பதி 43/18
கருவி வானம் தண் தளி சொரிந்து என – பதி 76/10
பவள செப்பில் பொன் சொரிந்து அன்ன – அகம் 25/11
அயிலை துழந்த அம் புளி சொரிந்து/கொழு மீன் தடியொடு குறு_மகள் கொடுக்கும் – அகம் 60/5,6
நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து/காலை வானத்து கடும் குரல் கொண்மூ – அகம் 174/6,7
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து/தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல் – அகம் 201/5,6
அதிர் குரல் ஏறோடு துளி சொரிந்து ஆங்கு – புறம் 160/3
வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என – புறம் 325/2
பூவும் பொன்னும் புனல் பட சொரிந்து/பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய – புறம் 367/5,6
மாரி அன்ன வண்மையின் சொரிந்து/வேனில் அன்ன என் வெப்பு நீங்க – புறம் 397/16,17
TOP


சொரிபு (1)

அளறு சொரிபு நிலம் சோர – பரி 2/47
TOP


சொரிய (2)

குடர் சொரிய குத்தி குலைப்பதன் தோற்றம் காண் – கலி 101/23
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய/இரும் பனம் குடையின் மிசையும் – புறம் 177/15,16
TOP


சொரியும் (3)

தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும்/கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ் – நற் 91/7,8
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் – அகம் 215/15
இடை புல பெரு வழி சொரியும்/கடல் பல் தாரத்த நாடு கிழவோயே – புறம் 30/14,15
TOP


சொரியும்மே (1)

திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே/வான் கண் அற்று அவன் மலையே வானத்து – புறம் 109/8,9
TOP


சொரிவது (1)

பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப – அகம் 108/5
TOP


சொரிவன (1)

சோர்ந்த போல சொரிவன பயிற்றி – அகம் 374/6
TOP


சொரிவு (1)

பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு-உழி – குறி 57
TOP


சொல் (101)

உவலை கண்ணி வன் சொல் இளைஞர் – மது 311
சொல்_இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது – நற் 25/7
வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய் – நற் 32/4
சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின் – நற் 39/1
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில் – நற் 61/6
சொல் இனி மடந்தை என்றனென் அதன்_எதிர் – நற் 155/8
சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பி – நற் 175/7
பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவே – நற் 200/11
சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள் – நற் 201/3
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண – நற் 204/5
சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல – நற் 254/4
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே – நற் 283/8
சொல் புடைபெயர்தலோ இலரே வானம் – நற் 289/3
தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல்/கொள்ளல் மாதோ முள் எயிற்றோயே – நற் 290/4,5
யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல்/செறி தோட்டு எல் வளை குறு_மகள் – நற் 306/9,10
காமர் நனி சொல் சொல்லி – நற் 396/10
நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து – குறு 6/1
நசை ஆகு பண்பின் ஒரு சொல்/இசையாது-கொல்லோ காதலர் தமக்கே – குறு 48/6,7
நின் சொல் கொண்ட என் சொல் தேறி – குறு 81/2
நின் சொல் கொண்ட என் சொல் தேறி – குறு 81/2
கண்டன-மன் எம் கண்ணே அவன் சொல்/கேட்டன-மன் எம் செவியே மற்று அவன் – குறு 299/5,6
நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே – குறு 300/5
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் – ஐங் 38/2
தன் சொல் உணர்ந்தோர் மேனி – ஐங் 41/3
செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள் – ஐங் 84/1
கானல் அம் துறைவற்கு சொல் உகுப்போயே – ஐங் 136/3
துறைவன் சொல்லிய சொல் என் – ஐங் 165/3
வன்கண் கானவன் மென் சொல் மட_மகள் – ஐங் 283/1
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று – ஐங் 375/3
மென் சொல் கலப்பையர் திருந்து தொடை வாழ்த்த – பதி 15/26
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று – பதி 21/1
அச்சம் பொய் சொல் அன்பு மிக உடைமை – பதி 22/2
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து – பதி 40/25
சொல் பல நாட்டை தொல் கவின் அழித்த – பதி 43/10
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே – பதி 63/7
பெருந்தகைக்கு அமர்ந்த மென் சொல் திரு முகத்து – பதி 81/30
துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம் – பரி 8/53
நீடன்-மின் வாரும் என்பவர் சொல் போன்றனவே – பரி 14/9
நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று – பரி 20/43
மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை – பரி 20/69
அ சொல் நல்லவை நாணாமல் – பரி 20/74
சொல் வரை தங்கினர் காதலோரே – கலி 2/29
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/13
பொருந்தி யான் தான் வேட்ட பொருள்-வயின் நினைந்த சொல்/திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய – கலி 17/18,19
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல்/இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள் – கலி 24/2,3
போயின்று சொல் என் உயிர் – கலி 24/17
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ – கலி 35/18
சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும் – கலி 47/8
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் – கலி 47/10
ஏழையர் என பலர் கூறும் சொல் பழி ஆயின் – கலி 47/16
கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம் – கலி 60/24
கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம் – கலி 62/17
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ – கலி 68/13
செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாயோ – கலி 69/19
கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல்/ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை – கலி 76/8,9
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாக – கலி 76/12
புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல்/உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை – கலி 76/16,17
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி – கலி 83/28
ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய் சொல்/பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை – கலி 96/1,2
அன்னை கடும் சொல் அறியாதாய் போல நீ – கலி 97/1
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள் – கலி 100/9
நெட்டு இரும் கூந்தலாய் கண்டை இஃது ஓர் சொல்/கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு – கலி 105/57,58
வழூஉ சொல் கோவலர் தத்தம் இன நிரை – கலி 106/4
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் – கலி 106/44
சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் – கலி 108/18
நீ மருட்டும் சொல்_கண் மருள்வார்க்கு உரை அவை – கலி 108/47
சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா – கலி 114/8
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – கலி 133/10
வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர் – கலி 141/19
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம் – அகம் 1/6
மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன் – அகம் 14/14
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்/யாவரும் விழையும் பொலம் தொடி புதல்வனை – அகம் 16/4,5
மழலை இன் சொல் பயிற்றும் – அகம் 34/17
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் – அகம் 74/13
இன் சொல் அளைஇ பெயர்ந்தனன் தோழி – அகம் 102/15
எள்ளல் நெஞ்சத்து ஏஎ சொல் நாணி – அகம் 111/2
தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் – அகம் 111/9
அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெம் சொல்/சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக – அகம் 115/3,4
வல் உரை கடும் சொல் அன்னை துஞ்சாள் – அகம் 122/4
அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள் – அகம் 126/9
இன் சொல் பிணிப்ப நம்பி நம்-கண் – அகம் 153/6
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே – அகம் 205/24
சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே – அகம் 220/22
கலங்கா மனத்தை ஆகி என் சொல்/நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி – அகம் 259/11,12
மழலை இன் சொல் கழறல் இன்றி – அகம் 275/7
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – அகம் 281/3
செய்வோர் ஏ சொல் வாட காதலர் – அகம் 323/2
அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல்/வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு – அகம் 332/11,12
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே – அகம் 349/14
பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவி – அகம் 379/17
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே – அகம் 382/13
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து – அகம் 396/8
நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் – புறம் 3/14
சிறு_சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை – புறம் 72/7
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை – புறம் 176/7
தேற்றா புன் சொல் நோற்றிசின் பெரும – புறம் 202/16
அம் சொல் நுண் தேர்ச்சி புலவர் நாவில் – புறம் 235/13
இரும் இடை மிடைந்த சில சொல்/பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே – புறம் 243/13,14
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே – புறம் 252/5
முளவு_மா தொலைச்சிய முழு_சொல் ஆடவர் – புறம் 325/6
சொல் நிழல் இன்மையின் நன் நிழல் சேர – புறம் 373/15
TOP


சொல்_கண் (1)

நீ மருட்டும் சொல்_கண் மருள்வார்க்கு உரை அவை – கலி 108/47
TOP


சொல்_இடம் (1)

சொல்_இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது – நற் 25/7
TOP


சொல்கொண்டு (1)

கொடிது அறி பெண்டிர் சொல்கொண்டு அன்னை – அகம் 20/12
TOP


சொல்மலை (1)

அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை/மங்கையர் கணவ மைந்தர் ஏறே – திரு 263,264
TOP


சொல்ல (7)

சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/6
ஒல்லுவ சொல்லாது உரை வழுவ சொல்ல/உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானை – பரி 12/65,66
சொல்ல தளரும் கிளியும் அன்று – கலி 55/14
கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று – கலி 88/5
சொல்ல கேட்டனை ஆயின் வல்லே – கலி 135/16
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து – அகம் 32/15
சொல்ல வேண்டா தோன்றல் முந்து அறிந்த – புறம் 361/21
TOP


சொல்லகிற்றாம் (1)

சொல்லகிற்றாம் மெல் இயலோயே – குறு 368/4
TOP


சொல்லர் (2)

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் – நற் 1/1
சொல்லர் சுடரும் கனம் குழை காதினர் – கலி 103/8
TOP


சொல்லல் (5)

சொல்லல் பாணி நின்றனன் ஆக – குறி 152
சொல்லல் ஓம்பு என்றார் எமர் – கலி 112/4
சொல்லல் ஓம்பு என்றமை அன்றி அவனை நீ – கலி 112/18
மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன் – அகம் 14/14
சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால் – அகம் 170/8
TOP


சொல்லலும் (1)

சொல்லலும் பழியோ மெல்லியலீர் என – குறி 145
TOP


சொல்லலை-கொல்லோ (1)

சொல்லலை-கொல்லோ நீயே வல்லை – நற் 310/8
TOP


சொல்லவும் (4)

சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென – நற் 213/7
சொல்லவும் ஆகாது அஃகியோனே – குறு 346/8
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய் – அகம் 21/6
சொல்லவும் தேறீர் ஆயின் மெல் இயல் – புறம் 97/22
TOP


சொல்லள் (1)

மறுத்த சொல்லள் ஆகி – அகம் 207/16
TOP


சொல்லா (1)

சொல்லா முன்னர் நில்லா ஆகி – குறு 256/6
TOP


சொல்லாட்டி (1)

சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் – கலி 108/18
TOP


சொல்லாடி (1)

இவளை சொல்லாடி காண்பேன் தகைத்து – கலி 56/13
TOP


சொல்லாதி (1)

சொல்லாதி/நின்னை தகைத்தனென் அல்லல் காண்-மன் – கலி 108/19,20
TOP


சொல்லாது (5)

சொல்லாது பெயர்தந்தேனே பல் பொறி – ஐங் 355/3
ஒல்லுவ சொல்லாது உரை வழுவ சொல்ல – பரி 12/65
சொல்லாது இறப்ப துணிந்தனிர்க்கு ஒரு பொருள் – கலி 8/7
சொல்லாது இருப்பேன் ஆயின் ஒல்லென – கலி 75/15
செல்க என சொல்லாது ஒழிக என விலக்கும் – புறம் 246/2
TOP


சொல்லாய் (1)

அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய்/செம்மை புது புனல் – பரி 9/75,76
TOP


சொல்லால் (2)

சொல்லால் தரப்பட்டவள் – கலி 102/12
சில சொல்லால் பல கேள்வியர் – புறம் 360/2
TOP


சொல்லாள் (3)

அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து – நற் 55/8
சொல்லாள் மெல்_இயல் சிலவே நல் அகத்து – நற் 398/8
யாம் பல புணர்ப்ப சொல்லாள் காம்பொடு – அகம் 385/7
TOP


சொல்லான் (2)

எ நாடோ என நாடும் சொல்லான்/யாரீரோ என பேரும் சொல்லான் – புறம் 150/22,23
யாரீரோ என பேரும் சொல்லான்/பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே – புறம் 150/23,24
TOP


சொல்லி (16)

கல்லா இளைஞர் சொல்லி காட்ட – பொரு 100
எல்லி வந்தன்றோ தேர் என சொல்லி/அலர் எழுந்தன்று இ ஊரே பலருளும் – நற் 191/6,7
காமர் நனி சொல் சொல்லி/ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே – நற் 396/10,11
நல்ல சொல்லி மணந்து இனி – ஐங் 22/3
நல்ல-மன் அளியதாம் என சொல்லி/காணுநர் கை புடைத்து இரங்க – பதி 19/25,26
இனிய சொல்லி இன்_ஆங்கு பெயர்ப்பது – கலி 14/8
செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு – கலி 19/1
சேய் நின்று செய்யாத சொல்லி சினவல் நின் – கலி 81/27
மண்டாத சொல்லி தொடாஅல் தொடீஇய நின் – கலி 90/2
அணை மென் தோளாய் செய்யாத சொல்லி சினவுவது ஈங்கு எவன் – கலி 91/6
வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல் – கலி 144/6
சிறிய சொல்லி பெரிய புலப்பினும் – அகம் 144/8
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே – அகம் 236/21
இகழ்ந்த சொல்லும் சொல்லி சிவந்த – அகம் 306/11
சொல்லி கழிந்த வல் வில் காளை – அகம் 388/15
வேட்டது சொல்லி வேந்தனை தொடுத்தலும் – புறம் 275/2
TOP


சொல்லிக்காட்டி (1)

சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி – மலை 79
TOP


சொல்லிய (14)

சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும் – நற் 364/1
சொல்லிய வன்மை தெளிய காட்டி – குறு 283/3
சொல்லிய பருவமோ இதுவே பல் ஊழ் – குறு 285/4
துறைவன் சொல்லிய சொல் என் – ஐங் 165/3
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி – கலி 31/23
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி – கலி 33/29
சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப – கலி 111/20
சொல்லிய சொல்லும் வியம் கொள கூறு – கலி 114/11
சொல்லிய அளவை நீடாது வல்லென – அகம் 254/18
சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து – அகம் 300/9
புறவின் அல்லல் சொல்லிய கறை அடி – புறம் 39/1
சிறு_சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை – புறம் 72/7
பண்ட சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய/விரி மணல் ஞெமர கல் பக நடக்கும் – புறம் 90/7,8
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே – புறம் 305/4
TOP


சொல்லியது (2)

சொல்லியது உரை-மதி நீயே – ஐங் 478/4
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது – அகம் 396/6
TOP


சொல்லியாள் (1)

சொல்லியாள் அன்றே வனப்பு – கலி 109/8
TOP


சொல்லியும் (1)

அரிய வஞ்சினம் சொல்லியும் பல் மாண் – அகம் 175/7
TOP


சொல்லின் (10)

கல்_அக வெற்பன் சொல்லின் தேறி – நற் 36/4
சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின் – நற் 39/1
சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் – நற் 164/5
சொல்லின் எவனோ தோழி கொல்லை – குறு 141/3
சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரி – குறு 185/4
சொல்லின் எவனோ மற்றே வெல் வேல் – ஐங் 399/3
சொல்லின் மறாதீவாள்-மன்னோ இவள் – கலி 61/10
நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன் – கலி 113/12
சொல்லின் எவனோ பாண எல்லி – அகம் 50/10
சில சொல்லின் பல கூந்தல் நின் – புறம் 166/16
TOP


சொல்லினம் (1)

சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோ – குறு 350/3
TOP


சொல்லினவும் (1)

நின்னை யான் சொல்லினவும் பேணாய் நினைஇ – கலி 116/13
TOP


சொல்லினான் (1)

சொல்லினான் எய்தமை அல்லது அவர் நம்மை – கலி 137/9
TOP


சொல்லினும் (2)

இவை மொழியாம் என சொல்லினும் அவை நீ – குறு 306/2
சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/16
TOP


சொல்லினுள் (2)

கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ – பரி 3/64
வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய் – கலி 137/12
TOP


சொல்லினேன் (1)

சொல்லினேன் இரக்கும் அளவை – ஐங் 364/3
TOP


சொல்லினையே (1)

அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே/நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி – கலி 21/5,6
TOP


சொல்லீர் (1)

சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென – நற் 213/7
TOP


சொல்லு-தோறு (1)

சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனிய – ஐங் 479/1
TOP


சொல்லு-மதி (1)

சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனிய – ஐங் 479/1
TOP


சொல்லுக (1)

சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார் – கலி 102/13
TOP


சொல்லுதல்-உற்று (1)

சொல்லுதல்-உற்று உரைக்கல்லாதவர் போல – கலி 61/4
TOP


சொல்லுநர் (1)

வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே – நற் 68/6
TOP


சொல்லுப (1)

சொல்லுப அன்ன முல்லை வெண் முகையே – குறு 358/7
TOP


சொல்லுபு (2)

எல்லி விட்டு அன்று வேந்து என சொல்லுபு/பரியல் வாழ்க நின் கண்ணி காண்வர – நற் 121/6,7
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி – புறம் 152/19
TOP


சொல்லும் (12)

பண்பு இல சொல்லும் தேறுதல் செத்தே – ஐங் 267/5
புல்லிய சொல்லும் பொருளும் போலவும் – பரி 15/12
அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே – கலி 21/5
ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம் – கலி 47/1
சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும் – கலி 47/8
இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ – கலி 55/8
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் – கலி 106/44
சொல்லிய சொல்லும் வியம் கொள கூறு – கலி 114/11
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம் – அகம் 65/2
இகழ்ந்த சொல்லும் சொல்லி சிவந்த – அகம் 306/11
என் வாய் சொல்லும் அன்ன ஒன்னார் – புறம் 92/4
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா – புறம் 280/7
TOP


சொல்லுவது (1)

சொல்லுவது உடையேன் கேண்-மின் மற்று ஐஇய – கலி 8/8
TOP


சொல்லுவாய் (1)

இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய்/நின்றாய் நீ சென்றீ எமர் காண்பர் நாளையும் – கலி 110/21,22
TOP


சொல்லுள்ளும் (1)

எழுதாக்கற்பின் நின் சொல்லுள்ளும்/பிரிந்தோர் புணர்க்கும் பண்பின் – குறு 156/5,6
TOP


சொல்லே (1)

உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே – நற் 310/11
TOP


சொல்லேம் (1)

சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கி – குறி 143
TOP


சொல்லை (1)

நல்ல என்னும் சொல்லை மன்னிய – குறு 357/4
TOP


சொல்லோ (3)

துறைவன் சொல்லோ பிற ஆயினவே – குறு 316/8
துறைவன் சொல்லோ பிற ஆயினவே – ஐங் 162/4
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே – புறம் 305/4
TOP


சொலாது (1)

குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது/தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய – அகம் 333/9,10
TOP


சொலித்த (1)

சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் – அகம் 393/10
TOP


சொலித்து (1)

காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇ – சிறு 236
TOP


சொலிய (4)

படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய/பிடி படி முறுக்கிய பெரு மர பூசல் – அகம் 8/10,11
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து – அகம் 248/4
உண்ணா பிணவின் உயக்கம் சொலிய/நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/3,4
ஒக்கல் ஒற்கம் சொலிய தன் ஊர் – புறம் 327/5
TOP


சொலியின் (1)

கழை படு சொலியின் இழை அணி வாரா – புறம் 383/11
TOP


சொலின் (1)

நிறத்து எறி புன் சொலின் திறத்து அஞ்சுவலே – நற் 229/4
TOP


சொற்கள் (1)

திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப – கலி 81/13
TOP


சொற்கு (1)

சேறும் என்ற சிறு சொற்கு இவட்கே – அகம் 143/9
TOP


சொற்றதூஉம் (1)

சொரிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள் நிறம் திரிந்தாள் – பரி 12/52
TOP


சொறிந்த (1)

மரை ஏறு சொறிந்த மா தாள் கந்தின் – அகம் 287/4
TOP


சொறியும் (1)

ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும்/தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை – சிறு 80,81
TOP


சொன்றி (7)

சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி/ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் – பெரும் 131,132
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி/புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன – பெரும் 193,194
இழித்து ஆனா பல சொன்றி/உண்டு ஆனா கூர் நறவின் – மது 212,213
சாறு அயர்ந்து அன்ன மிடாஅ சொன்றி/வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப – குறி 201,202
அடங்கா சொன்றி அம் பல் யாணர் – நற் 281/5
வரை கோள் அறியா சொன்றி/நிரை கோல் குறும்_தொடி தந்தை ஊரே – குறு 233/6,7
கண்டு மதி மருளும் வாடா சொன்றி/வயங்கு கதிர் விரிந்து வான்_அகம் சுடர்வர – பதி 24/22,23
TOP


சொன்றியொடு (1)

புன்_புல வரகின் சொன்றியொடு பெறூஉம் – புறம் 197/12
TOP