கி – முதல் சொற்கள், சங்க இலக்கியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிடக்கினும் 1
கிடக்கும் 5
கிடக்கை 18
கிடக்கைய 2
கிடங்கில் 2
கிடங்கின் 11
கிடங்கும் 1
கிடத்தி 1
கிடந்த 15
கிடந்தது 1
கிடந்தான் 1
கிடந்து 6
கிடந்தும் 1
கிடந்தேன்-மன் 1
கிடந்தோர் 2
கிடந்தோள் 2
கிடந்தோன் 1
கிடப்ப 3
கிடப்பி 4
கிடப்பின் 1
கிடப்பினும் 1
கிடர் 1
கிடவாது 1
கிடவாதோ 3
கிடாஅய் 1
கிடின் 1
கிடுகின் 1
கிடுகு 2
கிடை 4
கிண்கிணி 13
கிண்டி 1
கிணற்றின் 1
கிணற்று 2
கிணை 29
கிணை_மகட்கு 1
கிணை_மகள் 2
கிணை_மகன் 1
கிணைஞனை 1
கிணைப்ப 1
கிணையர் 1
கிணையின் 1
கிணையேம் 3
கிணையோடு 1
கிணைவ 1
கிணைவன் 1
கிம்புரி 1
கில்லா 1
கிலுகிலி 1
கிழக்கு 3
கிழங்கின் 1
கிழங்கினர் 1
கிழங்கினொடு 1
கிழங்கு 10
கிழங்கும் 3
கிழங்கொடு 3
கிழத்தி 1
கிழமை 7
கிழமையர் 1
கிழமையும் 2
கிழமையொடு 1
கிழமையோன் 1
கிழவ 5
கிழவர் 3
கிழவரின் 1
கிழவரை 1
கிழவன் 12
கிழவனும் 4
கிழவனை 2
கிழவியர் 1
கிழவிர் 1
கிழவோயே 15
கிழவோர்க்கே 1
கிழவோற்கு 1
கிழவோற்கே 6
கிழவோன் 12
கிழவோனே 18
கிழான் 1
கிழாஅர் 1
கிழி 2
கிழிக்கும் 1
கிழித்த 7
கிழித்து 2
கிழிந்த 2
கிழிந்தன 1
கிழிந்து 1
கிழிப்ப 3
கிழிப்பது 1
கிழிப்பு 1
கிழிய 2
கிழியா 1
கிள்ளி 11
கிள்ளிவளவன் 4
கிள்ளுபு 1
கிள்ளை 10
கிள்ளையும் 2
கிள்ளையொடு 1
கிளக்கும் 2
கிளக்கும்-கால் 1
கிளக்கும்-காலை 1
கிளக்குவம் 1
கிளக்குவல் 1
கிளத்தல் 1
கிளத்தலின் 1
கிளந்த 4
கிளந்தனம் 1
கிளந்து 3
கிளப்ப 1
கிளர் 61
கிளர்க்கும் 1
கிளர்ந்த 4
கிளர்ந்து 11
கிளர்ப்ப 1
கிளர்பு 2
கிளர 5
கிளரினும் 1
கிளவி 28
கிளவியள் 1
கிளவியளே 1
கிளவியன் 1
கிளவியனே 1
கிளவியாய் 4
கிளவியார் 1
கிளவியாள் 1
கிளவியின் 1
கிளவியும் 1
கிளவியொடு 1
கிளவியோடு 1
கிளி 60
கிளிக்கே 1
கிளிஞ்சில் 1
கிளியும் 3
கிளியே 2
கிளை 77
கிளை-வயின் 2
கிளைக்கு 1
கிளைக்கும் 1
கிளைகளோடு 1
கிளைஞர் 2
கிளைஞரேம் 1
கிளைஞன் 1
கிளைத்த 2
கிளைத்திட்ட 1
கிளைத்து 2
கிளைதந்து 1
கிளைப்பின் 1
கிளைமை 1
கிளைய 1
கிளையா 4
கிளையுடன் 5
கிளையுள் 2
கிளையேம் 1
கிளையை-மன் 1
கிளையொடு 17
கிளையொடும் 1
கிளையோடு 3
கிளைஇய 4
கிறுகு 1
கின்னரம் 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கிடக்கினும் (1)

குரம்பை கூரை கிடக்கினும் கிடக்கும் – புறம் 332/4
TOP


கிடக்கும் (5)

கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும்/சாலி நெல்லின் சிறை கொள் வேலி – பொரு 245,246
வாடு பூ சினையின் கிடக்கும்/உயர் வரை நாடனொடு பெயரும் ஆறே – குறு 343/6,7
குருகு இரை தேர கிடக்கும் பொழி காரில் – பரி 6/76
தொடுத்து உண கிடப்பினும் கிடக்கும் அஃதான்று – புறம் 156/4
குரம்பை கூரை கிடக்கினும் கிடக்கும்/மங்கல மகளிரொடு மாலை சூட்டி – புறம் 332/4,5
TOP


கிடக்கை (18)

கரை சூழ்ந்த அகன் கிடக்கை/மாமாவின் வயின்வயின் நெல் – பொரு 179,180
முருகு அமர் பூ முரண் கிடக்கை/வரி அணி சுடர் வான் பொய்கை – பட் 37,38
மனை உற காக்கும் மாண் பெரும் கிடக்கை/நுண் முள் வேலி தாதொடு பொதுளிய – நற் 277/5,6
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி – ஐங் 401/3
நசையினன் வதிந்த கிடக்கை பாணர் – ஐங் 402/2
இனிது மன்ற அவர் கிடக்கை/நனி இரும் பரப்பின் இ உலகுடன் உறுமே – ஐங் 409/3,4
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கை/குளவாய் அமர்ந்தான் நகர் – பரி 23/68,69
அல்லாந்தார் அலவு-உற ஈன்றவள் கிடக்கை போல் – கலி 29/2
வால் நீர் கிடக்கை வயங்கு நீர் சேர்ப்பனை – கலி 131/43
இருந்து அணை மீது பொருந்து-உழி கிடக்கை/வருந்து தோள் பூசல் களையும் மருந்து என – அகம் 351/14,15
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை/வருநர் இன்மையின் களையுநர் காணா – அகம் 365/7,8
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை/பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி – அகம் 379/6,7
திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர் – அகம் 386/7
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகல் கிடக்கை/தமிழ் தலைமயங்கிய தலையாலம்கானத்து – புறம் 19/1,2
மண் திணி கிடக்கை தண் தமிழ் கிழவர் – புறம் 35/3
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே – புறம் 63/15
படு மகன் கிடக்கை காணூஉ – புறம் 278/8
கணை துளி பொழிந்த கண் அகன் கிடக்கை/ஈர செறு வயின் தேர் ஏர் ஆக – புறம் 369/9,10
TOP


கிடக்கைய (2)

அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே – புறம் 370/27
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே – புறம் 373/39
TOP


கிடங்கில் (2)

கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான் – சிறு 160
கிடங்கில் அன்ன இட்டு கரை கான்யாற்று – நற் 65/2
TOP


கிடங்கின் (11)

அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் – சிறு 188
அரும் குழு மிளை குண்டு கிடங்கின்/உயர்ந்து ஓங்கிய நிரை புதவின் – மது 64,65
மண் உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின்/விண் உற ஓங்கிய பல் படை புரிசை – மது 351,352
கல் இடித்து இயற்றிய இட்டு வாய் கிடங்கின்/நல் எயில் உழந்த செல்வர் தம்-மின் – மது 730,731
திரை பட குழிந்த கல் அகழ் கிடங்கின்/வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி – மலை 91,92
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த – நற் 379/8
கடி மிளை குண்டு கிடங்கின்/நெடு மதில் நிலை ஞாயில் – பதி 20/17,18
கடி மிளை குண்டு கிடங்கின்/நெடு மதில் நிரை பதணத்து – பதி 22/24,25
புனல் பொரு கிடங்கின் வரை போல் இஞ்சி – பதி 62/10
கடி மிளை குண்டு கிடங்கின்/மீ புடை ஆர் அரண் காப்பு உடை தேஎம் – பதி 92/12,13
தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில் – புறம் 350/1
TOP


கிடங்கும் (1)

மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்/நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும் – புறம் 355/1,2
TOP


கிடத்தி (1)

தொடி உடை மகளிர் அல்குலும் கிடத்தி/காப்பு உடை புரிசை புக்கு மாறு அழித்தலின் – புறம் 272/5,6
TOP


கிடந்த (15)

நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின் – மலை 246
யாறு என கிடந்த தெருவின் சாறு என – மலை 481
நிலம் தின கிடந்த நிதியமோடு அனைத்தும் – மலை 575
சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊர – பரி 7/70
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ – அகம் 86/22
தரு மணல் கிடந்த பாவை என் – அகம் 165/12
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ – அகம் 387/9
இரை நசைஇ கிடந்த முது வாய் பல்லி – அகம் 387/16
காடு இடை கிடந்த நாடு நனி சேஎய – புறம் 31/10
அடை இடை கிடந்த கை பிழி பிண்டம் – புறம் 246/6
வாள் மிசை கிடந்த ஆண்மையோன் திறத்தே – புறம் 270/13
தோல் மிசை கிடந்த புல் அணலோனே – புறம் 310/8
முன்றில் கிடந்த பெரும் களியாளற்கு – புறம் 317/2
வடி நவில் எஃகம் பாய்ந்து என கிடந்த/தொடி உடை தட கை ஓச்சி வெருவார் – புறம் 370/22,23
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை – புறம் 399/23
TOP


கிடந்தது (1)

பெண்டிர் அருள கிடந்தது எவன்-கொலோ – கலி 61/19
TOP


கிடந்தான் (1)

அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல் – கலி 123/4
TOP


கிடந்து (6)

யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – மது 359
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 30
வில் கிடந்து அன்ன கொடிய பல்-வயின் – நெடு 109
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நற் 200/3
தாய் இல் முட்டை போல உள் கிடந்து/சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே – குறு 152/2,3
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின் – அகம் 29/2
TOP


கிடந்தும் (1)

இடை முலை கிடந்தும் நடுங்கல் ஆனீர் – குறு 178/4
TOP


கிடந்தேன்-மன் (1)

மெய் அறியாதேன் போல் கிடந்தேன்-மன் ஆயிடை – கலி 37/19
TOP


கிடந்தோர் (2)

புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர்/கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி – அகம் 31/10,11
எந்தையோடு கிடந்தோர் எம் புன் தலை புதல்வர் – புறம் 19/13
TOP


கிடந்தோள் (2)

இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்/அம் செவி நிறைய ஆலின வென்று பிறர் – முல் 88,89
விளங்கு நகர் விளங்க கிடந்தோள் குறுகி – நற் 370/4
TOP


கிடந்தோன் (1)

மெல் அணை கிடந்தோன்/என் பெயர்ந்த நோக்கி – புறம் 383/15,16
TOP


கிடப்ப (3)

அலர் முகிழ் உற அவை கிடப்ப/தெரி மலர் நனை உறுவ – பரி 19/70,71
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப/இடி உறழ் இசை இன் இயம் எழுந்து ஆர்ப்ப – கலி 104/53,54
வெளிற்று பனம் துணியின் வீற்று_வீற்று கிடப்ப/களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை – புறம் 35/22,23
TOP


கிடப்பி (4)

நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி/நின் குறி வந்தனென் இயல் தேர் கொண்க – குறு 114/1,2
கரும் கல் வியல் அறை கிடப்பி வயிறு தின்று – அகம் 107/4
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி/மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த – புறம் 93/8,9
கால்_கழி_கட்டிலில் கிடப்பி/தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே – புறம் 286/4,5
TOP


கிடப்பின் (1)

இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின்/வில் அக விரலின் பொருந்தி அவன் – குறு 370/3,4
TOP


கிடப்பினும் (1)

தொடுத்து உண கிடப்பினும் கிடக்கும் அஃதான்று – புறம் 156/4
TOP


கிடர் (1)

நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு – பரி 1/16
TOP


கிடவாது (1)

சென்றோர் முகப்ப பொருளும் கிடவாது/ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார் – கலி 18/5,6
TOP


கிடவாதோ (3)

குடிமை கண் பெரியது ஓர் குற்றமாய் கிடவாதோ/ஆய் மலர் புன்னை கீழ் அணி நலம் தோற்றாளை – கலி 135/8,9
வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமாய் கிடவாதோ/திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை – கலி 135/11,12
புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ/என ஆங்கு – கலி 135/14,15
TOP


கிடாஅய் (1)

நிலை கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய்/நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி – அகம் 156/14,15
TOP


கிடின் (1)

கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் – நற் 48/6
TOP


கிடுகின் (1)

காழ் ஊன்றிய கவி கிடுகின்/மேல் ஊன்றிய துகில் கொடியும் – பட் 167,168
TOP


கிடுகு (2)

பூ தலை குந்தம் குத்தி கிடுகு நிரைத்து – முல் 41
கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி – பட் 78
TOP


கிடை (4)

வெண் கிடை மிதவையர் நன் கிடை தேரினர் – பரி 6/35
வெண் கிடை மிதவையர் நன் கிடை தேரினர் – பரி 6/35
அறு கய மருங்கின் சிறு கோல் வெண் கிடை/என்றூழ் வாடு வறல் போல நன்றும் – புறம் 75/8,9
எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை – புறம் 382/18
TOP


கிண்கிணி (13)

கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி – திரு 13
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில் – நற் 250/2
குரும்பை மணி பூண் பெரும் செம் கிண்கிணி/பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன் – நற் 269/1,2
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி/காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/2,3
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப – பதி 52/20
கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி – கலி 74/13
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப – கலி 81/6
பொடி அழல் புறந்தந்த செய்வு-உறு கிண்கிணி/உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல் – கலி 85/2,3
தேரை வாய் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என் – கலி 86/9
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ – கலி 96/17
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி – அகம் 254/3
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு – புறம் 77/1
கிண்கிணி புதல்வர் பொலிக என்று ஏத்தி – புறம் 198/5
TOP


கிண்டி (1)

கொழும் கிழங்கு மிளிர கிண்டி கிளையொடு – புறம் 168/3
TOP


கிணற்றின் (1)

பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவியே – புறம் 132/3
TOP


கிணற்று (2)

குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று/வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை – பெரும் 97,98
உறை_கிணற்று புற_சேரி – பட் 76
TOP


கிணை (29)

வளை கை கிணை_மகள் வள் உகிர் குறைத்த – சிறு 136
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க – பதி 90/44
கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன் – பரி 8/81
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/15
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை/இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும் – அகம் 249/3,4
பாடு இன் தெண் கிணை கறங்க காண்வர – அகம் 301/10
வள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்கு – அகம் 325/9
நுண் கோல் தகைத்த தெண் கண் மா கிணை/இனிய காண்க இவண் தணிக என கூறி – புறம் 70/3,4
பாடு இன் தெண் கிணை கறங்க காண்_தக – புறம் 76/8
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே – புறம் 78/12
தெண் கிணை முன்னர் களிற்றின் இயலி – புறம் 79/3
கிணை_மகட்கு எளிதால் பாடினள் வரினே – புறம் 111/4
அம் கண் மா கிணை அதிர ஒற்ற – புறம் 373/31
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 374/6
தோன்றல் செல்லாது என் சிறு கிணை குரலே – புறம் 376/23
இனையல் அகற்ற என் கிணை தொடா குறுகி – புறம் 377/4
அரி கூடு மா கிணை இரிய ஒற்றி – புறம் 378/8
எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை/கண்_அகத்து யாத்த நுண் அரி சிறு கோல் – புறம் 382/18,19
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி – புறம் 383/3
தெண் கண் மா கிணை இயக்கி என்றும் – புறம் 387/4
இரும் பறை கிணை_மகன் சென்றவன் பெரும் பெயர் – புறம் 388/3
வினை பகடு ஏற்ற மேழி கிணை தொடா – புறம் 388/11
ஒரு கண் மா கிணை ஒற்றுபு கொடாஅ – புறம் 392/5
மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 393/20
ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 394/7
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 397/10
கிணை_மகள் அட்ட பாவல் புளிங்கூழ் – புறம் 399/16
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை/விசிப்பு-உறுத்து அமைந்த புது காழ் போர்வை – புறம் 399/23,24
கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே – புறம் 400/8
TOP


கிணை_மகட்கு (1)

கிணை_மகட்கு எளிதால் பாடினள் வரினே – புறம் 111/4
TOP


கிணை_மகள் (2)

வளை கை கிணை_மகள் வள் உகிர் குறைத்த – சிறு 136
கிணை_மகள் அட்ட பாவல் புளிங்கூழ் – புறம் 399/16
TOP


கிணை_மகன் (1)

இரும் பறை கிணை_மகன் சென்றவன் பெரும் பெயர் – புறம் 388/3
TOP


கிணைஞனை (1)

சேய் நாட்டு செல் கிணைஞனை/நீ புரவலை எமக்கு என்ன – புறம் 377/14,15
TOP


கிணைப்ப (1)

யாவரும் இன்மையின் கிணைப்ப தவாது – புறம் 375/12
TOP


கிணையர் (1)

கணையர் கிணையர் கை புனை கவணர் – நற் 108/4
TOP


கிணையின் (1)

தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் – அகம் 356/4
TOP


கிணையேம் (3)

வில்லியாதன் கிணையேம் பெரும – புறம் 379/7
கரும்பனூரன் கிணையேம் பெரும – புறம் 384/10
கிணையேம் பெரும – புறம் 396/14
TOP


கிணையோடு (1)

நாரும் போழும் கிணையோடு சுருக்கி – புறம் 375/5
TOP


கிணைவ (1)

இதன் கொண்டு அறிநை வாழியோ கிணைவ/சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை – புறம் 381/20,21
TOP


கிணைவன் (1)

கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற – புறம் 379/11
TOP


கிம்புரி (1)

கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய – நெடு 96
TOP


கில்லா (1)

கில்லா கேள்வி கேட்டன சில_சில – பரி 12/39
TOP


கிலுகிலி (1)

கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் – சிறு 61
TOP


கிழக்கு (3)

பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப – நற் 297/1
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே – குறு 337/2
குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய – பதி 36/10
TOP


கிழங்கின் (1)

நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்/கழை கண்டு அன்ன தூம்பு உடை திரள் கால் – அகம் 176/2,3
TOP


கிழங்கினர் (1)

தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர் – மலை 152
TOP


கிழங்கினொடு (1)

பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு/கண் அகன் தூ மணி பெறூஉம் நாடன் – குறு 379/2,3
TOP


கிழங்கு (10)

தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர் – பொரு 214
முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல் – பெரும் 362
கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி – நற் 328/1
கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை – ஐங் 208/2
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் – ஐங் 270/1
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி – அகம் 178/5
கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற – அகம் 212/4
மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே – புறம் 109/6
கொழும் கிழங்கு மிளிர கிண்டி கிளையொடு – புறம் 168/3
கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர – புறம் 225/3
TOP


கிழங்கும் (3)

தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ – மலை 425
பழனும் கிழங்கும் மிசை அறவு அறியாது – பதி 89/4
வேரும் தூரும் காயும் கிழங்கும்/பூரிய மாக்கள் உண்பது மண்டி – பரி 6/47,48
TOP


கிழங்கொடு (3)

கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் – மது 534
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு/காந்தள் அம் சிறுகுடி பகுக்கும் – நற் 85/9,10
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம் – புறம் 176/4
TOP


கிழத்தி (1)

இளமை தகைமையை வள மனை கிழத்தி/பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என – அகம் 275/4,5
TOP


கிழமை (7)

கற்பு இணை நெறியூடு அற்பு இணை கிழமை/நய_தகு மரபின் விய_தகு குமர – பரி 9/81,82
நீடு கிளர் கிழமை நிறை குறை தோன்ற – பரி 17/18
கய தக்க பூ பெய்த காம கிழமை/நய_தகு நல்லாளை கூடுமா கூடும் – பரி 24/41,42
சாய் இறை பணை தோள் கிழமை தனக்கே – அகம் 32/18
இ மனை கிழமை எம்மொடு புணரின் – அகம் 230/9
தொல் நில கிழமை சுட்டின் நன் மதி – புறம் 32/7
இன் உயிர் விரும்பும் கிழமை/தொல் நட்பு உடையார் தம் உழை செலினே – புறம் 223/5,6
TOP


கிழமையர் (1)

வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும் – புறம் 216/3
TOP


கிழமையும் (2)

காதல் கிழமையும் உடையவன் அதன்_தலை – புறம் 216/10
பீடு கெழு சென்னி கிழமையும் நினதே – புறம் 272/8
TOP


கிழமையொடு (1)

ஆளும் கிழமையொடு புணர்ந்த – கலி 103/78
TOP


கிழமையோன் (1)

ஓடா பூட்கை நின் கிழமையோன் கண்டே – புறம் 165/15
TOP


கிழவ (5)

விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ/பலர் புகழ் நன் மொழி புலவர் ஏறே – திரு 267,268
எழு-மதி வாழி ஏழின் கிழவ/பழு மரம் உள்ளிய பறவையின் யானும் அவன் – பொரு 63,64
அதிரா யாணர் முதிரத்து கிழவ/இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர் குமண – புறம் 158/25,26
ஊரா குதிரை கிழவ கூர் வேல் – புறம் 168/14
பொன் படு மால் வரை கிழவ வென் வேல் – புறம் 201/18
TOP


கிழவர் (3)

கிழவர் கிழவியர் என்னாது ஏழ்-காறும் – பரி 11/120
கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான் – கலி 21/10
மண் திணி கிடக்கை தண் தமிழ் கிழவர்/முரசு முழங்கு தானை மூவருள்ளும் – புறம் 35/3,4
TOP


கிழவரின் (1)

பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே – நற் 291/9
TOP


கிழவரை (1)

நாறு இரும் கூந்தல் கிழவரை படர்ந்தே – புறம் 113/9
TOP


கிழவன் (12)

கையதை சேரி கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர் – கலி 117/6
தீம் சுளை பலவின் மா மலை கிழவன்/ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் – புறம் 129/4,5
மழை கணம் சேக்கும் மா மலை கிழவன்/வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன் – புறம் 131/1,2
கிழவன் சேண் புலம் படரின் இழை அணிந்து – புறம் 151/3
சாரல் அருவி பய மலை கிழவன்/ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோ – புறம் 152/11,12
மழை அணி குன்றத்து கிழவன் நாளும் – புறம் 153/1
கொண்பெரும்கானத்து கிழவன்/தண் தார் அகலம் நோக்கின மலர்ந்தே – புறம் 155/7,8
பழம் தூங்கு முதிரத்து கிழவன்/திருந்து வேல் குமணன் நல்கிய வளனே – புறம் 163/8,9
தோலா நல் இசை நாலை_கிழவன் – புறம் 179/10
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் – புறம் 184/7
தண் பணை கிழவன் இவள் தந்தையும் வேந்தரும் – புறம் 342/11
காவிரி கிழவன் மாயா நல் இசை – புறம் 399/12
TOP


கிழவனும் (4)

குழை விளங்கு ஆய்_நுதல் கிழவனும் அவனே – குறு 34/8
மென் தோள் கிழவனும் வந்தனன் நுந்தையும் – கலி 41/42
மா நிதி கிழவனும் போன்ம் என மகனொடு – அகம் 66/17
வரு விருந்து அயரும் விருப்பினள் கிழவனும்/அரும் சமம் ததைய தாக்கி பெரும் சமத்து – புறம் 326/12,13
TOP


கிழவனை (2)

வான் தோய் மா மலை கிழவனை/சான்றோய் அல்லை என்றனம் வரற்கே – நற் 365/8,9
நீயே தண் புனல் காவிரி கிழவனை இவனே – புறம் 58/1
TOP


கிழவியர் (1)

கிழவர் கிழவியர் என்னாது ஏழ்-காறும் – பரி 11/120
TOP


கிழவிர் (1)

கிழவிர் போல கேளாது கெழீஇ – மலை 166
TOP


கிழவோயே (15)

நில்லா தானை இறை கிழவோயே – பதி 54/17
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே – பதி 76/15
தண் கடல் படப்பை நாடு கிழவோயே – பதி 88/42
பெரு நல் யானை இறை கிழவோயே – பதி 90/57
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே – புறம் 30/15
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே – புறம் 40/11
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே – புறம் 126/23
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே – புறம் 135/22
எல்லோர்க்கும் கொடு-மதி மனை கிழவோயே/பழம் தூங்கு முதிரத்து கிழவன் – புறம் 163/7,8
மடங்கா விளையுள் நாடு கிழவோயே – புறம் 200/17
கெடல் அரும்-குரைய நாடு கிழவோயே – புறம் 201/20
பெரும் கல் வைப்பின் நாடு கிழவோயே – புறம் 202/21
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே – புறம் 370/27
குருதி துகள் ஆடிய களம் கிழவோயே – புறம் 371/27
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே – புறம் 373/39
TOP


கிழவோர்க்கே (1)

தீயேன் தில்ல மலை கிழவோர்க்கே – ஐங் 204/5
TOP


கிழவோற்கு (1)

அம் மலை கிழவோற்கு உரை-மதி இ மலை – நற் 102/7
TOP


கிழவோற்கே (6)

வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே – நற் 51/11
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே – நற் 54/11
முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே – குறு 239/6
மன்றம் நண்ணிய மலை கிழவோற்கே – குறு 332/6
பிரசம் தூங்கு மலை கிழவோற்கே – குறு 392/8
மணம் நயந்தனன் அ மலை கிழவோற்கே – கலி 41/44
TOP


கிழவோன் (12)

வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்/பழையன் வேல் வாய்த்து அன்ன நின் – நற் 10/7,8
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும் – நற் 32/3
அ மலை கிழவோன் செய்தனன் இது எனின் – நற் 173/7
பெரு வரை அடுக்கத்து கிழவோன் என்றும் – குறு 385/5
மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன்/ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள் – ஐங் 250/3,4
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்/வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் – அகம் 266/10,11
புனல் மலி புதவின் போஒர் கிழவோன்/பழையன் ஓக்கிய வேல் போல் – அகம் 326/11,12
நெடும் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்/நல் அடி உள்ளான் ஆகவும் ஒல்லார் – அகம் 356/13,14
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்/வில்லியாதன் கிணையேம் பெரும – புறம் 379/6,7
நெல் விளை கழனி அம்பர் கிழவோன்/நல் அருவந்தை வாழியர் புல்லிய – புறம் 385/9,10
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன்/செல்வு-உழி எழாஅ நல் ஏர் முதியன் – புறம் 389/11,12
ஒலி கதிர் கழனி வெண்குடை கிழவோன்/வலி துஞ்சு தட கை வாய் வாள் குட்டுவன் – புறம் 394/2,3
TOP


கிழவோனே (18)

பழம் முதிர் சோலை மலை கிழவோனே – திரு 317
காவிரி புரக்கும் நாடு கிழவோனே – பொரு 248
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே – பெரும் 500
குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே – மலை 583
கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே – நற் 28/9
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே – நற் 228/9
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே – ஐங் 40/5
பொன் போல் செய்யும் ஊர் கிழவோனே – ஐங் 41/4
குறும் பல் பொறைய நாடு கிழவோனே – ஐங் 404/4
போது ஆர் புறவின் நாடு கிழவோனே – ஐங் 406/4
மென்_புல வைப்பின் நாடு கிழவோனே – ஐங் 407/4
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 58/19
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 66/20
செம்மலை ஆகிய மலை கிழவோனே – கலி 40/34
சென்றோன் மன்ற அ குன்று கிழவோனே/பகல் மாய் அந்தி படு_சுடர் அமையத்து – அகம் 48/22,23
மை ஆடு சென்னிய மலை கிழவோனே – அகம் 108/18
விழு நீர் வேலி நாடு கிழவோனே – புறம் 13/13
உறைவு இன் யாணர் நாடு கிழவோனே – புறம் 400/22
TOP


கிழான் (1)

சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தி – புறம் 388/4
TOP


கிழாஅர் (1)

மென் தொடை வன் கிழாஅர்/அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி – மது 93,94
TOP


கிழி (2)

எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது – நற் 328/8
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை – அகம் 285/9
TOP


கிழிக்கும் (1)

ஓடு மழை கிழிக்கும் சென்னி – நற் 28/8
TOP


கிழித்த (7)

வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை – சிறு 182
வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடும் கோட்டு – பெரும் 430
ஓங்கு வரை அடுக்கத்து தீம் தேன் கிழித்த/குவை உடை பசும் கழை தின்ற கய வாய் – குறு 179/4,5
தூ கணை கிழித்த மா கண் தண்ணுமை – பதி 51/33
கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை – அகம் 340/21
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின் – புறம் 13/3
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு – புறம் 34/11
TOP


கிழித்து (2)

ஊன் கிழித்து அன்ன செம் சுவல் நெடும் சால் – அகம் 194/4
சூடு கிழித்து வாடூன் மிசையவும் – புறம் 386/4
TOP


கிழிந்த (2)

கரை இடை கிழிந்த நின் காழகம் வந்து உரையா-கால் – கலி 73/17
கலை உண கிழிந்த முழவு மருள் பெரும் பழம் – புறம் 236/1
TOP


கிழிந்தன (1)

தோடு கொள் முரசும் கிழிந்தன கண்ணே – புறம் 238/8
TOP


கிழிந்து (1)

திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும் – புறம் 229/19
TOP


கிழிப்ப (3)

வெயில் உருப்பு-உற்ற வெம் பரல் கிழிப்ப/வேனில் நின்ற வெம் பத வழி நாள் – சிறு 8,9
விடை வீழ்த்து சூடு கிழிப்ப/மடை வேண்டுநர்க்கு அடை அருகாது – புறம் 366/17,18
கூர்ந்த எவ்வம் விட கொழு நிணம் கிழிப்ப/கோடை பருத்தி வீடு நிறை பெய்த – புறம் 393/11,12
TOP


கிழிப்பது (1)

இருள் கிழிப்பது போல் மின்னி வானம் – அகம் 72/1
TOP


கிழிப்பு (1)

வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பி – நற் 154/2
TOP


கிழிய (2)

ஆம்பல் மெல் அடை கிழிய குவளை – அகம் 36/3
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை – அகம் 56/4
TOP


கிழியா (1)

குலை உடை வாழை கொழு மடல் கிழியா/பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனை – கலி 41/15,16
TOP


கிள்ளி (11)

பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி/தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 22,23
ஏந்து கோட்டு யானை இசை வெம் கிள்ளி/வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த – நற் 141/9,10
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த – நற் 390/3
கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி/மதில் கொல் யானையின் கதழ்பு நெறி வந்த – ஐங் 78/1,2
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி/பூ விரி நெடும் கழி நாப்பண் பெரும் பெயர் – அகம் 205/10,11
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட – அகம் 389/4
தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல் – புறம் 43/10
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர் – புறம் 67/11
கழல் புனை திருந்து அடி கடு மான் கிள்ளி/நின்னை வியக்கும் இ உலகம் அஃது – புறம் 167/10,11
தேர் வண் கிள்ளி போகிய – புறம் 220/6
கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி – புறம் 355/5
TOP


கிள்ளிவளவன் (4)

கிள்ளிவளவன் நல் அமர் சாஅய் – அகம் 346/22
கிள்ளிவளவன் படர்குவை ஆயின் – புறம் 69/16
கிள்ளிவளவன் நல் இசை உள்ளி – புறம் 70/10
கிள்ளிவளவன் உள்ளி அவன் படர்தும் – புறம் 399/13
TOP


கிள்ளுபு (1)

வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா – திரு 37
TOP


கிள்ளை (10)

கொடு வாய் கிள்ளை படு பகை வெரூஉம் – பெரும் 227
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும் – பெரும் 300
கிள்ளை ஓப்பியும் கிளை இதழ் பறியா – குறி 101
உள்ளார்-கொல்லோ தோழி கிள்ளை/வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம் – குறு 67/1,2
கிள்ளை வாழிய பலவே ஒள் இழை – ஐங் 281/2
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட – ஐங் 287/2
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய – ஐங் 290/2
கிள்ளை தெள் விளி இடையிடை பயிற்றி – அகம் 28/10
செம் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன் – அகம் 242/6
தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த – அகம் 324/3
TOP


கிள்ளையும் (2)

கிள்ளையும் கிளை என கூஉம் இளையோள் – நற் 143/5
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல் – அகம் 369/4
TOP


கிள்ளையொடு (1)

நறும் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு/குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன் – குறு 333/3,4
TOP


கிளக்கும் (2)

ஓ என கிளக்கும் கால_முதல்வனை – பரி 3/61
கிளக்கும் பாண கேள் இனி நயத்தின் – புறம் 155/3
TOP


கிளக்கும்-கால் (1)

நின் புகழ் விரித்தனர் கிளக்கும்-கால் அவை நினக்கு – பரி 4/3
TOP


கிளக்கும்-காலை (1)

தன் பெயர் கிளக்கும்-காலை என் பெயர் – புறம் 216/8
TOP


கிளக்குவம் (1)

நின்-வயின் கிளக்குவம் ஆயின் கங்குல் – புறம் 126/6
TOP


கிளக்குவல் (1)

கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல் – மது 207
TOP


கிளத்தல் (1)

செய்யா கூறி கிளத்தல்/எய்யாது ஆகின்று எம் சிறு செம் நாவே – புறம் 148/6,7
TOP


கிளத்தலின் (1)

ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம் – பரி 3/62
TOP


கிளந்த (4)

ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின் – குறு 374/2
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே – பதி 63/7
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் – பரி 2/61
ஆதிரை முதல்வனின் கிளந்த/நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும் – பரி 8/6,7
TOP


கிளந்தனம் (1)

மெல்லென கிளந்தனம் ஆக வல்லே – பொரு 122
TOP


கிளந்து (3)

மெல்லிய இனிய மேவர கிளந்து எம் – குறி 138
கேள் அணங்கு உற மனை கிளந்து உள சுணங்கறை – பரி 9/21
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும் – கலி 131/23
TOP


கிளப்ப (1)

நகுதலும் தகுதி ஈங்கு ஊங்கு நின் கிளப்ப/திரு மணி திரை பாடு அவிந்த முந்நீர் – பரி 4/5,6
TOP


கிளர் (61)

எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் – திரு 159
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 193
நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் – பொரு 31
திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி – பொரு 90
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் – சிறு 61
அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ – மது 439
நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து – மது 493
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு – நெடு 166
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் – மலை 36
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட – நற் 41/7
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு – நற் 55/4
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி – நற் 66/4
நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகே – நற் 70/3
கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப – நற் 129/7
நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன – நற் 181/4
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் – நற் 264/3
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் – நற் 344/6
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல – நற் 381/4
நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன் – நற் 393/7
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர் – நற் 394/4
நலம் கிளர் பணை தோள் விலங்கின செலவே – ஐங் 421/4
ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு – பதி 31/14
பொலம் பூ தும்பை பொறி கிளர் தூணி – பதி 45/1
உருபு கிளர் வண்ணம் கொண்ட – பதி 52/30
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல் – பதி 53/18
புரையோள் கணவ பூண் கிளர் மார்ப – பதி 70/16
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண் – பரி 2/32
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவு-உற்று – பரி 10/46
சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி – பரி 11/69
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் – பரி 11/70
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை – பரி 13/44
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை – பரி 16/40
நீடு கிளர் கிழமை நிறை குறை தோன்ற – பரி 17/18
அணி கிளர் நெடும் திண் தேர் அயர்-மதி பணிபு நின் – கலி 30/19
மை தபு கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம் – கலி 74/4
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅய்_சாஅய் செல்லும் – கலி 80/10
நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அம் வாய் – கலி 86/4
புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை – கலி 104/3
அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து – கலி 135/17
மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர – கலி 135/18
வரி கிளர் வய_மான் உரிவை தைஇய – அகம் 0/14
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் – அகம் 26/14
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின் – அகம் 78/2
உருவு கிளர் ஏர் வினை பொலிந்த பாவை – அகம் 142/21
பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை – அகம் 147/6
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை – அகம் 201/2
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப – அகம் 236/11
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை – அகம் 245/8
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே – அகம் 278/15
களரி ஆவிரை கிளர் பூ கோதை – அகம் 301/14
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை – அகம் 332/2
ஆரத்து அன்ன அணி கிளர் புது பூ – அகம் 335/18
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின் – அகம் 358/1
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு – புறம் 15/12
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின் – புறம் 59/1
நிறம் கிளர் உருவின் பேஎய்_பெண்டிர் – புறம் 62/4
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம் – புறம் 282/4
சிறு கொடி கொள்ளே பொறி கிளர் அவரையொடு – புறம் 335/5
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின் – புறம் 341/12
இழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாது – புறம் 359/15
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன் – புறம் 388/13
TOP


கிளர்க்கும் (1)

கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம் – நற் 4/9
TOP


கிளர்ந்த (4)

கேழல் உழுது என கிளர்ந்த எருவை – ஐங் 269/1
உந்து வளி கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும் – பரி 2/7
வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும் – கலி 105/18
கிளர்ந்த வேங்கை சேண் நெடும் பொங்கர் – அகம் 52/2
TOP


கிளர்ந்து (11)

கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 82
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை – திரு 170
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க – மது 9
தோடு இடம் கோடாய் கிளர்ந்து/நீடினை விளைமோ வாழிய தினையே – நற் 251/10,11
அரவு கிளர்ந்து அன்ன விரவு-உறு பல் காழ் – நற் 366/1
கால் கிளர்ந்து அன்ன கதழ் பரி புரவி – பதி 80/13
கால் கிளர்ந்து அன்ன ஊர்தி கால் முளை – பதி 91/6
கால் கிளர்ந்து அன்ன கடும் செலவு இவுளி – பதி 92/4
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு – அகம் 201/9
உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம் – அகம் 255/1
கடல் கிளர்ந்து அன்ன கட்டூர் நாப்பண் – புறம் 295/1
TOP


கிளர்ப்ப (1)

கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப/வை நுதி வான் மருப்பு ஒடிய உக்க – அகம் 282/5,6
TOP


கிளர்பு (2)

ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும் – கலி 26/4
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க – கலி 105/25
TOP


கிளர (5)

நன் பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா – திரு 306
ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர/எழுந்த கடற்றில் நன் பொன் கொழிப்ப – மது 273,274
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து – அகம் 141/7
மண்டிலம் மழுக மலை நிறம் கிளர/வண்டு_இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசை – அகம் 260/1,2
கடறு மணி கிளர சிதறு பொன் மிளிர – புறம் 202/3
TOP


கிளரினும் (1)

பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின் – நற் 201/10
TOP


கிளவி (28)

காமுறு தோழி காதலம் கிளவி/இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த – நற் 133/8,9
நல்லேம் என்னும் கிளவி வல்லோன் – நற் 146/8
அம் தீம் கிளவி கேட்கம் நாமே – நற் 221/13
தெளி தீம் கிளவி யாரையோ என் – நற் 245/6
கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள் – நற் 301/5
சில மெல்லியவே கிளவி/அனை மெல்லியல் யான் முயங்கும்-காலே – குறு 70/4,5
தீது இல் நெஞ்சத்து கிளவி நம்-வயின் – குறு 106/3
இன்னர் என்னும் இன்னா கிளவி/இரு மருப்பு எருமை ஈன்றணி காரான் – குறு 181/2,3
அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி/அன்ன இனியோள் குணனும் இன்ன – குறு 206/1,2
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே – குறு 250/6
அம் தீம் கிளவி பொலிக நின் சிறப்பே – ஐங் 300/4
தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே – ஐங் 350/3
ஐய ஆயின செய்யோள் கிளவி/கார் நாள் உருமொடு கையற பிரிந்து என – ஐங் 441/1,2
பொய் படு கிளவி நாணலும் – ஐங் 472/4
அம்_தீம்_கிளவி தான் தர எம்-வயின் – ஐங் 490/1
அம்_தீம்_கிளவி நின் ஆய் நலம் கொண்டே – ஐங் 499/5
உடம்பட்டு நீப்பார் கிளவி மடம்பட்டு – கலி 113/15
திருந்து_இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே – கலி 141/23
சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப – கலி 143/38
அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை – அகம் 3/16
அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி/அன்ன ஆக என்னுநள் போல – அகம் 5/17,18
அம் தீம் கிளவி குறு_மகள் – அகம் 9/25
நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி/நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே – அகம் 109/2,3
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ – அகம் 153/2
இசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவி/அணங்கு சால் அரிவையை நசைஇ பெரும் களிற்று – அகம் 212/7,8
அம் தீம் கிளவி வந்த மாறே – அகம் 262/18
அம் தீம் கிளவி தந்தை காப்பே – அகம் 288/17
சிறு புன் கிளவி செல்லல் பாழ்பட – அகம் 389/14
TOP


கிளவியள் (1)

விம்மு-உறு கிளவியள் என் முகம் நோக்கி – நற் 33/10
TOP


கிளவியளே (1)

பாணர் நரம்பினும் இன் கிளவியளே – ஐங் 100/4
TOP


கிளவியன் (1)

வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும் – அகம் 250/8
TOP


கிளவியனே (1)

நரம்பு ஆர்த்து அன்ன தீம் கிளவியனே – ஐங் 185/4
TOP


கிளவியாய் (4)

கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின் – கலி 13/18
கிளி புரை கிளவியாய் நின் அடிக்கு எளியவோ – கலி 20/7
இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள் – கலி 24/3
வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும் – கலி 29/19
TOP


கிளவியார் (1)

செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும் – கலி 118/15
TOP


கிளவியாள் (1)

அன்பு உறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் – கலி 138/27
TOP


கிளவியின் (1)

கிளவியின் தணியின் நன்று-மன் சாரல் – நற் 282/6
TOP


கிளவியும் (1)

என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும் – அகம் 225/2
TOP


கிளவியொடு (1)

நா நடுக்கு-உற்ற நவிலா கிளவியொடு/அறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டு – அகம் 299/17,18
TOP


கிளவியோடு (1)

துயர் அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்தே – கலி 32/19
TOP


கிளி (60)

கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் – பொரு 34
தினை விளை சாரல் கிளி கடி பூசல் – மது 291
கிளி கடி மரபின ஊழ்_ஊழ் வாங்கி – குறி 44
கிளி மழலை மென் சாயலோர் – பட் 150
பைம் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர் – பட் 264
கிளி கடி மகளிர் விளி படு பூசல் – மலை 329
கிளை மலி சிறுதினை கிளி கடிந்து அசைஇ – நற் 25/6
கொடும் குரல் குறைத்த செம் வாய் பைம் கிளி/அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு – நற் 102/1,2
பைம் தாள் செந்தினை படு கிளி ஓப்பும் – நற் 104/6
செம் வாய் பைம் கிளி கவர நீ மற்று – நற் 147/3
செ வாய் பைம் கிளி ஓப்பி அ வாய் – நற் 259/4
சிறு கிளி கடிகம் சென்றும் இ – நற் 288/9
கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள் – நற் 301/5
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் – நற் 304/3
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ – நற் 306/2
பவள செம் வாய் பைம் கிளி கவரும் – நற் 317/4
தினை கிளி கடியும் பெரும் கல் நாடன் – நற் 328/3
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி – நற் 368/1
சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல் – நற் 389/6
கிளி குறைத்து உண்ட கூழை இருவி – குறு 133/2
வளை வாய் சிறு கிளி விளை தினை கடீஇயர் – குறு 141/1
புன கிளி கடியும் பூ கண் பேதை – குறு 142/2
படு கிளி கடிகம் சேறும் அடு போர் – குறு 198/5
தினை கிளி கடிதலின் பகலும் ஒல்லும் – குறு 217/1
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர் – குறு 240/2
படு கிளி கடியும் கொடிச்சி கை குளிரே – குறு 291/2
கிளி அவள் விளி என விழல் ஒல்லாவே – குறு 291/4
தினை புன மருங்கில் படு கிளி ஓப்பியும் – குறு 346/5
உண் கிளி கடியும் கொடிச்சி கை குளிரே – குறு 360/6
பைம் புற படு கிளி ஒப்பலர் – ஐங் 260/3
சோலை சிறு கிளி உன்னு நாட – ஐங் 282/3
பைம் புற சிறு கிளி கடியும் நாட – ஐங் 283/3
அளிய தாமே செ வாய் பைம் கிளி/குன்ற குறவர் கொய் தினை பைம் கால் – ஐங் 284/1,2
ஐவன சிறு கிளி கடியும் நாட – ஐங் 285/3
காய்த்த அவரை படு கிளி கடியும் – ஐங் 286/2
கொடிச்சி இன் குரல் கிளி செத்து அடுக்கத்து – ஐங் 289/1
பைம் குரல் ஏனல் படர்தரும் கிளி என – ஐங் 289/2
இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளி – ஐங் 375/2
இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளி/இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று – ஐங் 375/2,3
கிளி கடி மேவலர் புறவு-தொறும் நுவல – பதி 78/6
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை – பரி 9/42
கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின் – கலி 13/18
கிளி புரை கிளவியாய் நின் அடிக்கு எளியவோ – கலி 20/7
இன கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் – கலி 37/13
படி கிளி பாயும் பசும் குரல் ஏனல் – கலி 50/9
ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல – கலி 72/4
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை – அகம் 12/7
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என – அகம் 28/12
சிறுதினை படு கிளி கடீஇயர் பன் மாண் – அகம் 32/5
செம் தார் பைம் கிளி முன்கை ஏந்தி – அகம் 34/14
கிளி போல் காய கிளை துணர் வடித்து – அகம் 37/8
மட கிளி எடுத்தல் செல்லா தட குரல் – அகம் 38/12
கிளி கடி பாடலும் ஒழிந்தனள் – அகம் 118/13
விளிகுவை-கொல்லோ நீயே கிளி என – அகம் 126/17
செம் வாய் சிறு கிளி சிதைய வாங்கி – அகம் 192/5
கிளி கடி மகளிரின் விளி பட பயிரும் – அகம் 194/15
கிளி பட விளைந்தமை அறிந்தும் செல்க என – அகம் 302/11
சிறுதினை படு கிளி எம்மொடு ஓப்பி – அகம் 308/10
கிளி மரீஇய வியன் புனத்து – புறம் 138/9
கிளி கடியின்னே – புறம் 395/14
TOP


கிளிக்கே (1)

பெரும் குரல் கொள்ளா சிறு பசும் கிளிக்கே – நற் 194/10
TOP


கிளிஞ்சில் (1)

மீன் நெய் அட்டி கிளிஞ்சில் பொத்திய – நற் 175/3
TOP


கிளியும் (3)

கிளியும் தாம் அறிபவ்வே எனக்கே – நற் 209/6
சொல்ல தளரும் கிளியும் அன்று – கலி 55/14
கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள் – அகம் 49/1
TOP


கிளியே (2)

பயில் குரல் கவரும் பைம் புற கிளியே – நற் 13/9
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே – ஐங் 288/4
TOP


கிளை (77)

கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு – திரு 29
கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான் – சிறு 160
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி – பெரும் 163
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன – பெரும் 167
பல்_கால்_பறவை கிளை செத்து ஓர்க்கும் – பெரும் 183
இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி – பெரும் 406
இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் – மது 751
கிள்ளை ஓப்பியும் கிளை இதழ் பறியா – குறி 101
இரும் கிளை இனன் ஒக்கல் – பட் 61
கிளை கலித்து பகை பேணாது – பட் 196
கிளை மலி சிறுதினை கிளி கடிந்து அசைஇ – நற் 25/6
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்து – நற் 35/3
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை – நற் 42/4
பல் கிளை குறவர் அல்கு அயர் முன்றில் – நற் 44/8
வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ – நற் 54/1
நின் கிளை மருங்கின் சேறி ஆயின் – நற் 102/6
கிள்ளையும் கிளை என கூஉம் இளையோள் – நற் 143/5
முறி ஆர் பெரும் கிளை அறிதல் அஞ்சி – நற் 151/6
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய – நற் 161/4
தேன் செய் பெரும் கிளை இரிய வேங்கை – நற் 202/5
எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதி – நற் 267/2
சாரல் வரைய கிளை உடன் குழீஇ – நற் 304/2
கரு விரல் மந்தி செம் முக பெரும் கிளை/பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி – நற் 334/1,2
நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து – நற் 367/2
கிளை குருகு இரியும் துறைவன் வளை கோட்டு – நற் 372/5
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி – குறு 69/3
முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளை/புணரி இகு திரை தரூஉம் துறைவன் – குறு 109/1,2
பைதல் பிள்ளை கிளை பயிர்ந்து ஆஅங்கு – குறு 139/4
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை – குறு 197/2
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என – குறு 247/3
உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும் – ஐங் 7/4
மான் இன பெரும் கிளை மேயல் ஆரும் – ஐங் 217/2
இரும் சிறை வண்டின் பெரும் கிளை மொய்ப்ப – ஐங் 370/2
துப்பு துவர் போக பெரும் கிளை உவப்ப – பதி 32/5
அளகு உடை சேவல் கிளை புகா ஆர – பதி 35/5
கோடியர் பெரும் கிளை வாழ ஆடு இயல் – பதி 42/14
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇய – பதி 49/3
கடும் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் – பதி 71/6
பருதி போகிய புடை கிளை கட்டி – பதி 74/12
கால் முளை மூங்கில் கவர் கிளை போல – பதி 84/12
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று – கலி 34/18
மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண் – கலி 52/5
தாது தேர் வண்டின் கிளை பட தைஇய – கலி 80/25
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை – கலி 133/9
கிளி போல் காய கிளை துணர் வடித்து – அகம் 37/8
நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு – அகம் 39/18
புல் அளை புற்றின் பல் கிளை சிதலை – அகம் 81/3
ஈனல் எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 95/9
பெரும் கை எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 149/4
எருவை சேவல் ஈண்டு கிளை பயிரும் – அகம் 161/6
பாறு கிளை பயிர்ந்து படு முடை கவரும் – அகம் 175/5
கிளை அமல் சிறுதினை விளை குரல் மேய்ந்து – அகம் 178/12
இரும் கிளை கொண்மூ ஒருங்குடன் துவன்றி – அகம் 183/9
பெரும் கடல் முகந்த இரும் கிளை கொண்மூ – அகம் 188/1
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த – அகம் 193/3
கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற – அகம் 212/4
கிளை பாராட்டும் கடு நடை வய களிறு – அகம் 218/1
பிரச பல் கிளை ஆர்ப்ப கல்லென – அகம் 228/1
கிளை விரி கரும்பின் கணை கால் வான் பூ – அகம் 235/12
இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை – அகம் 247/4
பாறு கிளை சேக்கும் சேண் சிமை – அகம் 247/12
முறி ஆர் பெரும் கிளை செறிய பற்றி – அகம் 256/19
குருளை எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 275/12
மணி வாய் காக்கை மா நிற பெரும் கிளை/பிணி வீழ் ஆலத்து அலம் சினை ஏறி – அகம் 319/1,2
பல் கிளை தலைவன் கல்லா கடுவன் – அகம் 352/2
கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும் – அகம் 363/14
எருவை சேவல் ஈண்டு கிளை தொழுதி – அகம் 381/10
பல் கிளை கொடி கொம்பு அலமர மலர்ந்த – அகம் 383/7
உளை குரல் சிறுதினை கவர்தலின் கிளை அமல் – அகம் 388/4
கிளை புகல தலைக்கூடி ஆங்கு – புறம் 17/19
இளையது ஆயினும் கிளை அரா எறியும் – புறம் 58/6
பல்லி ஆடிய பல் கிளை செவ்வி – புறம் 120/4
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும் – புறம் 163/2
இரும் கிளை சிறாஅர் காண்டும் கண்டும் – புறம் 173/9
செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு – புறம் 378/21
இரும் கிளை தலைமை எய்தி – புறம் 378/23
கண்மாறு இலியர் என் பெரும் கிளை புரவே – புறம் 388/16
TOP


கிளை-வயின் (2)

எருவை சேவல் கிளை-வயின் பெயரும் – நற் 298/4
புன்கண் அந்தி கிளை-வயின் செறிய – நற் 343/6
TOP


கிளைக்கு (1)

கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் – பரி 11/127
TOP


கிளைக்கும் (1)

மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும்/யாணர் ஊரன் மகள் இவள் – ஐங் 100/2,3
TOP


கிளைகளோடு (1)

உள்ளத்து கிளைகளோடு உய போகுவான் போல – கலி 25/8
TOP


கிளைஞர் (2)

வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்/திண் திமில் எண்ணும் தண் கடல் சேர்ப்ப – நற் 331/7,8
கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் – அகம் 93/1
TOP


கிளைஞரேம் (1)

யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி – புறம் 144/10
TOP


கிளைஞன் (1)

கிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅது – அகம் 342/3
TOP


கிளைத்த (2)

முதை சுவல் கிளைத்த பூழி மிக பல – நற் 389/9
செழும் கூடு கிளைத்த இளம் துணை மகாரின் – பதி 71/7
TOP


கிளைத்திட்ட (1)

சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் – புறம் 325/4
TOP


கிளைத்து (2)

வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில் – குறு 56/1
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட – அகம் 137/1
TOP


கிளைதந்து (1)

அகுதை கிளைதந்து ஆங்கு மிகு பெயல் – அகம் 208/18
TOP


கிளைப்பின் (1)

கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின்/யாமை ஈன்ற புலவு நாறு முட்டையை – புறம் 176/2,3
TOP


கிளைமை (1)

கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை – நற் 323/5
TOP


கிளைய (1)

வளை உடை முன்கை அளைஇ கிளைய/பயில் இரும் பிணையல் பசும் காழ் கோவை – அகம் 385/11,12
TOP


கிளையா (4)

அலையா உலவை ஓச்சி சில கிளையா/குன்ற குறவனொடு குறு நொடி பயிற்றும் – நற் 341/4,5
நின்னொடு சூழும்-கால் நீயும் நிலம் கிளையா/என்னொடு நிற்றல் எளிது அன்றோ மற்று அவன் – கலி 63/15,16
களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா/நாணி நின்றோள் நிலை கண்டு யானும் – அகம் 16/15,16
நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா/நீரொடு பொருத ஈர் இதழ் மழை கண் – அகம் 299/13,14
TOP


கிளையுடன் (5)

குன்றக சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து – திரு 196
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி – பெரும் 268
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ – நற் 207/7
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி – அகம் 30/4
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ – அகம் 348/12
TOP


கிளையுள் (2)

கிளையுள் ஒய்வலோ கூறு நின் உரையே – புறம் 253/6
வளை இல் வறும் கை ஓச்சி கிளையுள்/இன்னன் ஆயினன் இளையோன் என்று – புறம் 254/4,5
TOP


கிளையேம் (1)

அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும – புறம் 395/21
TOP


கிளையை-மன் (1)

கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என – புறம் 144/7
TOP


கிளையொடு (17)

கனி பொழி கானம் கிளையொடு உணீஇய – மலை 54
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என கிளையொடு/நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – மலை 309,310
முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி – மலை 313
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து – நற் 54/3
கிளையொடு மகிழும் குன்ற நாடன் – நற் 165/5
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி – நற் 388/8
கிளையொடு காக்க தன் கொழுநன் மார்பே – குறு 80/7
சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ – பரி 7/38
விளிவு இன்று கிளையொடு மேல் மலை முற்றி – பரி 12/2
எழு நின் கிளையொடு போக என்று தத்தம் – கலி 109/24
பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து – அகம் 172/12
வளை சிறை வாரணம் கிளையொடு கவர – அகம் 192/7
இளையர் எய்துதல் மடக்கி கிளையொடு/நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து – அகம் 248/3,4
முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த – அகம் 268/11
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை – அகம் 332/2
கசிவு-உற்ற என் பல் கிளையொடு/பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ – புறம் 136/8,9
கொழும் கிழங்கு மிளிர கிண்டி கிளையொடு/கடுங்கண் கேழல் உழுத பூழி – புறம் 168/3,4
TOP


கிளையொடும் (1)

தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய – புறம் 126/9
TOP


கிளையோடு (3)

கிளையோடு உண்ணும் வளை வாய் பாசினம் – நற் 376/4
தண் நறும் பழனத்து கிளையோடு ஆலும் – ஐங் 85/2
அன்பு உடை மரபின் நின் கிளையோடு ஆர – ஐங் 391/2
TOP


கிளைஇய (4)

விண் பொரும் சென்னி கிளைஇய காந்தள் – குறி 196
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே – குறு 337/2
அம் கலுழ் மாமை கிளைஇய/நுண் பல் தித்தி மாஅயோளே – அகம் 41/15,16
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள் – அகம் 158/4
TOP


கிறுகு (1)

இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர் – பரி 1/22
TOP


கின்னரம் (1)

கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல் – பெரும் 494
TOP