ஐ – முதல் சொற்கள், சங்க இலக்கியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 28
ஐ_வாய்_அரவின் 1
ஐ_இரு 1
ஐ_இருநூற்று 1
ஐஇய 4
ஐக்கு 5
ஐக்கும் 1
ஐது 46
ஐதே 1
ஐந்தனுள்ளும் 1
ஐந்தால் 1
ஐந்து 5
ஐந்துடன் 1
ஐந்தும் 3
ஐம் 14
ஐம்_கூந்தல் 5
ஐம்பதின்மரும் 2
ஐம்பதின்மரொடு 1
ஐம்பால் 31
ஐம்பாலார் 1
ஐம்பாலாள் 1
ஐய 45
ஐயத்தால் 1
ஐயம் 9
ஐயர் 14
ஐயர்க்கு 2
ஐயர்க்கும் 1
ஐயரும் 1
ஐயவி 14
ஐயள் 3
ஐயன்மார் 1
ஐயனை 1
ஐயும் 2
ஐயென 9
ஐயை 3
ஐயோ 1
ஐவகை 2
ஐவர் 4
ஐவர்கள் 1
ஐவரும் 1
ஐவருள் 1
ஐவரோடு 1
ஐவன 4
ஐவனம் 6

முழு நூலையும் காண இங்கே சொடுக்கவும்.

 1.திருமுருகாற்றுப்படை
 2.பொருநராற்றுப்படை
 3.சிறுபாணாற்றுப்படை
 4.பெரும்பாணாற்றுப்படை
 5.முல்லைப்பாட்டு
 6.மதுரைக்காஞ்சி
 7.நெடுநல்வாடை
 8.குறிஞ்சிப்பாட்டு
 9.பட்டினப்பாலை
 10.மலைபடுகடாம்
 11.நற்றிணை
 12.குறுந்தொகை
 13.ஐங்குறுநூறு
 14.பதிற்றுப்பத்து
 15.பரிபாடல்
 16.கலித்தொகை
 17.அகநானூறு
 18.புறநானூறு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஐ (28)

ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய – திரு 83
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 102
என் ஐ வாழிய பலவே பன்னிய – நற் 136/4
என் ஐ இன்றியும் கழிவது-கொல்லோ – குறு 24/2
என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே – குறு 223/7
என் ஐ என்றும் யாமே இ ஊர் – ஐங் 110/3
அன்னாய் வாழி வேண்டு அன்னை என் ஐ/தானும் மலைந்தான் எமக்கும் தழை ஆயின – ஐங் 201/1,2
ஐ அமர் அடுக என அருச்சிப்போரும் – பரி 8/108
ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண் – பரி 9/9
ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி – பரி 10/97
யாம தன்மை இ ஐ இருங்குன்றத்து – பரி 15/26
ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின் மேல் – பரி 18/15
ஐ எனும் ஆவியர் ஆடையர் – பரி 24/12
ஐ_இரு தலையின் அரக்கர் கோமான் – கலி 38/3
ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று – கலி 55/9
ஐ_வாய்_அரவின் இடைப்பட்டு நைவாரா – கலி 62/13
இன்று நன்று என் ஐ அணி – கலி 91/5
பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு – அகம் 38/15
ஐ அறிவு அகற்றும் கையறு படரோடு – அகம் 71/7
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ – அகம் 289/13
அணங்கு அரும் கடும் திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து – புறம் 78/2
என் ஐ புற்கை உண்டும் பெரும் தோளன்னே – புறம் 84/1
போர் எதிர்ந்து என் ஐ போர்_களம் புகினே – புறம் 84/3
திரண்டு நீடு தட கை என் ஐ இளையோற்கு – புறம் 96/2
ஈர்ப்பு உடை கராஅத்து அன்ன என் ஐ/நுண் பல் கருமம் நினையாது – புறம் 104/4,5
என் ஐ மார்பில் புண்ணும் வெய்ய – புறம் 280/1
வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே – புறம் 309/7
TOP


ஐ_வாய்_அரவின் (1)

ஐ_வாய்_அரவின் இடைப்பட்டு நைவாரா – கலி 62/13
TOP


ஐ_இரு (1)

ஐ_இரு தலையின் அரக்கர் கோமான் – கலி 38/3
TOP


ஐ_இருநூற்று (1)

ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண் – பரி 9/9
TOP


ஐஇய (4)

ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று – மது 413
செல்லல் ஐஇய உது எம் ஊரே – குறு 179/3
இறப்ப துணிந்தனிர் கேண்-மின் மற்று ஐஇய/தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/10,11
சொல்லுவது உடையேன் கேண்-மின் மற்று ஐஇய/வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் – கலி 8/8,9
TOP


ஐக்கு (5)

ஒரீஇனன் ஒழுகும் என் ஐக்கு/பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலே – குறு 203/5,6
புனத்து உளான் என் ஐக்கு புகா உய்த்து கொடுப்பதோ – கலி 108/31
என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும் – புறம் 85/1
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும் – புறம் 85/2
நிரையோடு வரூஉம் என் ஐக்கு/உழையோர் தன்னினும் பெரும் சாயலரே – புறம் 262/5,6
TOP


ஐக்கும் (1)

எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது – குறு 27/3
TOP


ஐது (46)

நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து – திரு 228
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல – பொரு 7
அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து – சிறு 7
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி – சிறு 13
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே – நற் 52/11
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை – நற் 69/9
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின் – நற் 101/7
ஐது ஏகு அம்ம யானே ஒய்யென – நற் 143/1
ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் நம்மொடு – நற் 145/5
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன – நற் 178/1
ஒண் பொறி சுணங்கின் ஐது பட தாஅம் – நற் 191/4
ஐது அகல் அல்குல் மகளிர் இவன் – நற் 200/10
ஐது ஏகு அம்ம இ உலகு படைத்தோனே – நற் 240/1
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து – நற் 252/8
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் – நற் 264/3
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட – நற் 344/1
ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ – நற் 390/5
ஐது தொடை மாண்ட கோதை போல – குறு 62/3
ஐது ஏகு அம்ம மெய் தோய் நட்பே – குறு 401/6
ஐது அமைந்து அகன்ற அல்குல் – ஐங் 135/2
ஐது அமைந்து அகன்ற அல்குல் – ஐங் 176/3
ஐது ஆக நெறித்து அன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் – கலி 32/3
ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின் – கலி 52/16
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/18
தைஇய பூ துகில் ஐது கழல் ஒரு திரை – கலி 85/5
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் – அகம் 64/5
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை – அகம் 64/15
அம் மா மேனி ஐது அமை நுசுப்பின் – அகம் 75/18
ஐது படு கொள்ளி அங்கை காய – அகம் 94/7
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும் – அகம் 95/2
ஐது அமை பாணி இரீஇ கைபெயரா – அகம் 98/17
ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா – அகம் 102/4
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை – அகம் 119/11
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு-உறுத்த – அகம் 224/12
ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும் – அகம் 225/8
ஐது அகல் அல்குல் தழை அணி கூட்டும் – அகம் 275/16
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்-தொறும் – அகம் 283/7
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் – அகம் 345/9
வெய்து-உற்று புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா – அகம் 373/12
ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த – அகம் 390/6
ஐது அடர்ந்த நூல் பெய்து – புறம் 29/2
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல் – புறம் 271/3
ஐது அமை பாணி வணர் கோட்டு சீறியாழ் – புறம் 302/5
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய – புறம் 337/10
திரு உடை திரு மனை ஐது தோன்று கமழ் புகை – புறம் 379/16
ஐது அகல் அல்குல் மகளிர் – புறம் 389/16
TOP


ஐதே (1)

ஐதே காமம் யானே – குறு 217/6
TOP


ஐந்தனுள்ளும் (1)

முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்/ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே – பரி 13/17,18
TOP


ஐந்தால் (1)

மூ_ஐந்தால் முறை முற்ற – புறம் 400/2
TOP


ஐந்து (5)

மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய – மது 454
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை – பதி 14/4
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக – பதி 21/2
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/78
ஐந்து இருள் அற நீக்கி நான்கினுள் துடைத்து தம் – பரி 4/1
TOP


ஐந்துடன் (1)

ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே – பரி 13/22
TOP


ஐந்தும் (3)

நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும்/அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின் – பதி 24/15,16
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்/ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் – பரி 3/4,5
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை – பரி 13/44
TOP


ஐம் (14)

ஐம் பால் திணையும் கவினி அமைவர – மது 326
ஐம் தலை உயிரிய அணங்கு உடை அரும் திறல் – பரி 1/46
ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள் – பரி 3/37
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன இனம் – பரி 8/22
ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த – பரி 19/72
பெண்மை பொதுமை பிணையிலி ஐம் புலத்தை – பரி 20/50
பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல் – கலி 96/8
நறு_நுதால் என்-கொல் ஐம்_கூந்தல் உளர – கலி 105/53
நாறு ஐம்_கூந்தல் கொம்மை வரி முலை – அகம் 65/18
சில்_ஐம்_கூந்தல் நல் அகம் பொருந்தி – அகம் 123/6
இருள் ஐம்_கூந்தல் இன் துயில் மறந்தே – அகம் 233/15
சில் ஐம்_கூந்தல் அழுத்தி மெல் இணர் – அகம் 261/3
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல – புறம் 2/6
நஞ்சு உடை வால் எயிற்று ஐம் தலை சுமந்த – புறம் 37/1
TOP


ஐம்_கூந்தல் (5)

பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல் – கலி 96/8
நறு_நுதால் என்-கொல் ஐம்_கூந்தல் உளர – கலி 105/53
நாறு ஐம்_கூந்தல் கொம்மை வரி முலை – அகம் 65/18
இருள் ஐம்_கூந்தல் இன் துயில் மறந்தே – அகம் 233/15
சில் ஐம்_கூந்தல் அழுத்தி மெல் இணர் – அகம் 261/3
TOP


ஐம்பதின்மரும் (2)

ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய – பெரும் 415
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய – புறம் 2/15
TOP


ஐம்பதின்மரொடு (1)

போர் தலைமிகுத்த ஈர்_ஐம்பதின்மரொடு – பதி 14/5
TOP


ஐம்பால் (31)

உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற – சிறு 60
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி ஒண் தொடி – குறி 139
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால்/மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து – மலை 30,31
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்/துவரினர் அருளிய துறையே அதுவே – நற் 96/5,6
தேம் கமழ் ஐம்பால் பற்றி என்-வயின் – நற் 100/4
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று – நற் 133/5
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி – நற் 140/3
ஐம்பால் வகுத்த கூந்தல் செம் பொறி – நற் 160/6
மணி மருள் ஐம்பால் வண்டு பட தைஇ – நற் 245/3
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால்/தாழ் நறும் கதுப்பில் பையென முள்கும் – நற் 337/7,8
மணி ஏர் ஐம்பால் மாசு அற கழீஇ – நற் 366/4
இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன் – குறு 229/1
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் – ஐங் 84/3
இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால்/ஏந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல் – பதி 18/4,5
இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார – கலி 29/6
எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால் போல் – கலி 32/1
ஐது ஆக நெறித்து அன்ன அறல் அவிர் நீள் ஐம்பால்/அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல் – கலி 32/3,4
வேய் என திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால்/மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி – கலி 57/1,2
வார்-உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள் – கலி 58/1
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால – கலி 59/8
இன் மணி சிலம்பின் சில் மொழி ஐம்பால்/பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் – கலி 125/16,17
துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால்/சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ – அகம் 8/15,16
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்/மின் நேர் மருங்குல் குறு_மகள் – அகம் 126/20,21
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால்/சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது – அகம் 145/18,19
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்/நுண் கோல் அகவுநர் புரந்த பேர் இசை – அகம் 152/3,4
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே – அகம் 155/4
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால்/தேம் கமழ் வெறி மலர் பெய்ம்-மார் காண்பின் – அகம் 177/5,6
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்/பணை தகை தடைஇய காண்பு இன் மென் தோள் – அகம் 181/23,24
மிகு கவின் எய்திய தொகு குரல் ஐம்பால்/கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற – அகம் 212/3,4
அரி_இனம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்/நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட – அகம் 223/12,13
மணம் கமழ் ஐம்பால் மடந்தை நின் – அகம் 295/21
TOP


ஐம்பாலார் (1)

மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே – கலி 131/39
TOP


ஐம்பாலாள் (1)

வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இ காமம் – கலி 140/23
TOP


ஐய (45)

ஐய குறு_மகள் கண்டிகும் வைகி – நற் 20/1
பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி – நற் 46/4
பிரிதல் வல்லிரோ ஐய செல்வர் – நற் 71/6
ஐய சிறு கண் செம் கடை சிறு மீன் – நற் 91/5
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை – நற் 124/4
கௌவை ஆகின்றது ஐய நின் அருளே – நற் 227/9
கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு – நற் 266/7
வாழேன் ஐய மை கூர் பனியே – நற் 292/9
நினைத்தலும் நினைதிரோ ஐய அன்று நாம் – நற் 318/1
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே – நற் 354/11
ஐய அஞ்சினம் அளியம் யாமே – நற் 368/10
வாரல் வாழியர் ஐய எம் தெருவே – குறு 139/6
தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம் – குறு 169/2
ஐய அற்றால் அன்பின் பாலே – குறு 196/6
அதுவே ஐய நின் மார்பே – ஐங் 44/3
செல்லல் ஐய என்னாது அவ்வே – ஐங் 332/5
சென்றனள் என்றிர் ஐய/ஒன்றினவோ அவள் அம் சிலம்பு அடியே – ஐங் 389/4,5
ஐய ஆயின செய்யோள் கிளவி – ஐங் 441/1
ஐய சூளின் அடி தொடு குன்றொடு – பரி 8/70
பெய்ய உழக்கும் மழை கா மற்று ஐய/கரையா வெம் நோக்கத்தான் கை சுட்டி பெண்டின் – பரி 9/34,35
உசாவுகோ ஐய சிறிது – கலி 7/4
பிரிந்து உறை சூழாதி ஐய விரும்பி நீ – கலி 18/2
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று ஐய/அகல் நகர் கொள்ளா அலர் தலைத்தந்து – கலி 19/3,4
பறிமுறை பாராட்டினையோ ஐய/நெய் இடை நீவி மணி ஒளி விட்டு அன்ன – கலி 22/11,12
செய்_வினை பாராட்டினையோ ஐய/குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும் – கலி 22/14,15
தளர் முலை பாராட்டினையோ ஐய/என ஆங்கு – கலி 22/17,18
இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீ-மின் – கலி 25/12
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர – கலி 29/8
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற – கலி 37/15
இரவின் வாரல் ஐய விரவு வீ – கலி 49/23
ஐய எமக்கு நின் மார்பு – கலி 68/25
ஐய அமைந்தன்று அனைத்து ஆக புக்கீமோ – கலி 78/24
ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின் – கலி 80/14
ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை – கலி 80/18
ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும் – கலி 80/22
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல் – கலி 111/16
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள் – கலி 125/7
ஐய சேறிரோ அகன்று செய்பொருட்கே – அகம் 81/15
வாரல் வாழியர் ஐய நேர் இறை – அகம் 92/5
வெம் மலை அரும் சுரம் நீந்தி ஐய/சேறும் என்ற சிறு சொற்கு இவட்கே – அகம் 143/8,9
ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று – அகம் 230/4
ஐய அமர்த்த உண்கண் நின் – அகம் 237/16
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை – அகம் 307/6
ஐய ஆக வெய்ய உயிரா – அகம் 313/5
ஐய செய்ய மதன் இல சிறிய நின் – அகம் 323/4
TOP


ஐயத்தால் (1)

ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை – கலி 91/7
TOP


ஐயம் (9)

ஐயம் இன்றி கடும் கவவினளே – நற் 297/11
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின் – பதி 21/16
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய எம் போல – கலி 82/33
ஐயம் தீர்ந்து யார்-கண்ணும் அரும் தவ முதல்வன் போல் – கலி 100/7
ஐயம் கொண்டு என்னை அறியான் விடுவானேல் – கலி 147/50
ஐயம் தெளியரோ நீயே பல உடன் – அகம் 303/16
கைவண் தோன்றல் ஐயம் உடையேன் – புறம் 43/12
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி – புறம் 214/2
ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர் – புறம் 216/5
TOP


ஐயர் (14)

இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத – நற் 122/1
கல்லா கதவர் தன் ஐயர் ஆகவும் – நற் 127/5
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே – குறு 123/5
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர்/சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி – குறு 272/4,5
கண மா தொலைச்சி தன் ஐயர் தந்த – ஐங் 365/1
உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை – பதி 70/19
ஐயர் வாய்பூசுறார் ஆறு – பரி 24/63
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் – கலி 130/9
மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர்/காலை தந்த கணை கோட்டு வாளைக்கு – அகம் 126/7,8
பன் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய – அகம் 240/6
அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர்/புலி மருள் செம்மல் நோக்கி – அகம் 259/16,17
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத – அகம் 302/9
வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர்/பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் – புறம் 337/16,17
எண்ணா மையலன் தந்தை தன் ஐயர்/கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி – புறம் 355/4,5
TOP


ஐயர்க்கு (2)

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது – திரு 107
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய் – கலி 39/22
TOP


ஐயர்க்கும் (1)

ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை – குறி 17
TOP


ஐயரும் (1)

தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும்/தாம் பிழையார் தாம் தொடுத்த கோல் – கலி 39/18,19
TOP


ஐயவி (14)

நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து – திரு 228
குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவி/ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி – மது 287,288
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 86
ஐயவி அமன்ற வெண் கால் செறுவில் – மலை 123
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி – நற் 40/7
நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ் – நற் 370/3
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் – குறு 50/1
பூணா_ஐயவி தூக்கிய மதில – பதி 16/4
வில் விசை மாட்டிய விழு சீர் ஐயவி/கடி மிளை குண்டு கிடங்கின் – பதி 22/23,24
நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென – புறம் 98/15
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி – புறம் 281/4
நெய் உடை கையர் ஐயவி புகைப்பவும் – புறம் 296/2
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை – புறம் 342/9
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின் – புறம் 358/4
TOP


ஐயள் (3)

வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று – நற் 2/7
ஐயள் மாயோள் அணங்கிய – நற் 146/10
ஐயள் அரும்பிய முலையள் – ஐங் 255/3
TOP


ஐயன்மார் (1)

ஐயன்மார் எல்லாம் ஒருங்கு – கலி 107/34
TOP


ஐயனை (1)

ஐயனை ஏத்துவாம் போல அணி பெற்ற – கலி 43/5
TOP


ஐயும் (2)

அன்னையும் அமர்ந்து நோக்கினளே என் ஐயும்/களிற்று முகம் திறந்த கல்லா விழு தொடை – நற் 389/3,4
அது போர் என்னும் என் ஐயும் உளனே – புறம் 89/9
TOP


ஐயென (9)

நள்ளென் யாமத்து ஐயென கரையும் – குறு 261/4
செம் வாய் வானத்து ஐயென தோன்றி – குறு 307/2
வாங்கு கதிர் தொகுப்ப கூம்பி ஐயென/அலங்கு வெயில் பொதிந்த தாமரை – குறு 376/4,5
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் – அகம் 114/5
அரி கோல் பறையின் ஐயென ஒலிக்கும் – அகம் 151/10
அழல் பொழி யானையின் ஐயென தோன்றும் – அகம் 223/7
தவல் இல் நீத்தமொடு ஐயென கழிய – அகம் 305/2
அணங்கு என உருத்த நோக்கின் ஐயென/நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமை – அகம் 319/6,7
ஐயென உரைத்தன்றி நல்கி தன் மனை – புறம் 395/29
TOP


ஐயை (3)

கோள் வல் என் ஐயை மறைத்த குன்றே – ஐங் 312/4
இழை அணி பணை தோள் ஐயை தந்தை – அகம் 6/3
முழவு தோள் என் ஐயை காணா ஊங்கே – புறம் 88/6
TOP


ஐயோ (1)

ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே – புறம் 255/1
TOP


ஐவகை (2)

ஐவகை பாராட்டினாய் மற்று எம் கூந்தல் – கலி 22/13
ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் – அகம் 48/17
TOP


ஐவர் (4)

ஆரா செருவின் ஐவர் போல – பெரும் 417
பொலம் பூண் ஐவர் உட்பட புகழ்ந்த – மது 775
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா – கலி 25/3
வரி புனை வல் வில் ஐவர் அட்ட – கலி 104/58
TOP


ஐவர்கள் (1)

தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல – கலி 26/6
TOP


ஐவரும் (1)

ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும்/திதியின் சிறாரும் விதியின் மக்களும் – பரி 3/5,6
TOP


ஐவருள் (1)

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப – திரு 254
TOP


ஐவரோடு (1)

அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ – புறம் 2/13
TOP


ஐவன (4)

ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி – மது 288
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு – நற் 373/4
ஐவன சிறு கிளி கடியும் நாட – ஐங் 285/3
ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து இருவாம் – கலி 43/4
TOP


ஐவனம் (6)

வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 115
அருவி பரப்பின் ஐவனம் வித்தி – குறு 100/1
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி – குறு 371/2
ஐவனம் கவரும் குன்ற நாடன் – ஐங் 267/3
ஐவனம் வித்தி மை உற கவினி – புறம் 159/17
ஐவனம் காவல் பெய் தீ நந்தின் – புறம் 172/6
TOP

Related posts