உ முதல் சொற்கள் பகுதி – 3, சங்க இலக்கியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உணக்கல் 1
உணக்கிய 1
உணக்கும் 2
உணங்க 4
உணங்கல் 10
உணங்கல-கொல்லோ 1
உணங்கலின் 1
உணங்கிய 1
உணங்கு 10
உணங்கும் 5
உணப்பட்ட 1
உணப்பட்டாள் 1
உணப்பட்டு 1
உணப்பட்டோர் 2
உணர் 3
உணர்-மின் 1
உணர்க 2
உணர்கல்லாள் 1
உணர்குவார் 1
உணர்குவென் 1
உணர்கோ 1
உணர்ச்சி 1
உணர்த்த 3
உணர்த்தர 1
உணர்த்தல் 1
உணர்த்தலின் 1
உணர்த்தலும் 1
உணர்த்திய 2
உணர்த்தினவும் 1
உணர்த்து 1
உணர்த்தும் 1
உணர்த்துவானை 1
உணர்தல் 1
உணர்தலும் 1
உணர்தியோ 2
உணர்ந்த 9
உணர்ந்தமை 1
உணர்ந்தமையின் 1
உணர்ந்தவர் 1
உணர்ந்தனள்-கொல் 1
உணர்ந்தனள்-கொல்லோ 1
உணர்ந்தனை 3
உணர்ந்தனையே 1
உணர்ந்தார் 1
உணர்ந்தாரை 1
உணர்ந்திசினோரே 1
உணர்ந்தீயாய் 1
உணர்ந்து 21
உணர்ந்தும் 1
உணர்ந்தேன் 2
உணர்ந்தோர் 2
உணர்ந்தோர்க்கு 1
உணர்ந்தோரே 1
உணர்ந்தோன் 1
உணர்ப்பவள் 1
உணர்ப்பான் 1
உணர்ப்பித்தல் 1
உணர்பு 1
உணர்வினால் 1
உணர்வினும் 1
உணர்வு 1
உணர்வோர் 1
உணர 7
உணரா 9
உணராதாய் 2
உணராதார் 1
உணராது 1
உணராதோரே 1
உணராம் 1
உணராமை 1
உணராய் 3
உணராயோ 1
உணரார் 3
உணராவே 1
உணராள் 2
உணரான் 1
உணரிய 1
உணரும் 7
உணரேன் 4
உணல் 4
உணவின் 7
உணவினோர் 1
உணவினோரும் 1
உணவு 6
உணவும் 1
உணா 6
உணா-கால் 1
உணாவும் 1
உணின் 1
உணினே 1
உணீஇய 17
உணீஇயர் 6
உத்தரிய 1
உத்தி 10
உத்தியொடு 1
உதவ 2
உதவா 2
உதவாதான் 1
உதவாது 3
உதவாதே 1
உதவாய் 1
உதவி 17
உதவிய 5
உதவியார்க்கு 1
உதவியும் 4
உதவியோயே 1
உதவின 1
உதவு-மின் 1
உதவுதல் 1
உதவும் 2
உதள 1
உதியஞ்சேரல் 2
உதியன் 3
உதிர் 4
உதிர்க்கும் 4
உதிர்த்த 21
உதிர்த்தலின் 1
உதிர்த்து 3
உதிர்தரு 1
உதிர்ந்த 5
உதிர்ந்தன 1
உதிர்ந்து 5
உதிர்ப்ப 3
உதிர்பு 2
உதிர்வ 1
உதிர்வன 5
உதிர்வை 1
உதிர 22
உதிரலொடு 1
உதிரா 1
உதிரும் 5
உது 20
உதுவ 1
உதுவே 2
உதைத்த 8
உதைத்தலின் 1
உதைத்து 2
உதைத்தும் 1
உதைப்ப 1
உதைப்பு 1
உந்தி 11
உந்திய 1
உந்தியும் 2
உந்தியொடு 1
உந்து 1
உந்துவோர் 1
உந்தூழ் 2
உப்பால் 1
உப்பின் 13
உப்பு 22
உப்பும் 1
உப்பை 1
உம் 1
உம்பர் 18
உம்பரஃது 1
உம்பரும் 2
உம்பல் 8
உம்மை 1
உமக்கு 2
உமட்டியர் 1
உமண் 7
உமண்_மகன் 1
உமணர் 24
உமணர்க்கு 1
உமிழ் 30
உமிழ்ந்த 3
உமிழ்ந்து 2
உமிழ்பு 2
உமிழ 1
உமை 2
உமையே 1
உமையொடு 1
உய் 2
உய்-மார் 1
உய்க்கும் 2
உய்க்குமோ 1
உய்கம் 2
உய்குவம் 1
உய்குவள்-கொல் 1
உய்குவை 1
உய்த்த 5
உய்த்தர 2
உய்த்தல் 1
உய்த்தவன் 1
உய்த்தன்று 1
உய்த்தன்று-மன்னே 1
உய்த்தனர் 1
உய்த்தார் 1
உய்த்தியோ 1
உய்த்து 12
உய்த்தோய் 1
உய்தல் 4
உய்தலும் 1
உய்தி 1
உய்ந்த 2
உய்ந்தன்று 1
உய்ந்தன்றோ 1
உய்ந்தனர் 2
உய்ந்தனவே 1
உய்ந்தனன் 1
உய்ந்தனனே 1
உய்ந்தனென் 1
உய்ந்து 2
உய்ப்ப 5
உய்ம்-மார் 1
உய்ம்மோ 1
உய்யலென் 1
உய்யா 4
உய்யாது 1
உய்யாமை 1
உய்யாமையின் 1
உய்யும் 2
உய்யுமாம் 1
உய்யுமோ 2
உய்யேன் 1
உய்வு 4
உய்வு_இடம் 1
உய 2
உயக்கத்த 1
உயக்கத்து 3
உயக்கம் 2
உயக்கமும் 1
உயக்கமொடு 2
உயங்க 3
உயங்கல் 1
உயங்கி 5
உயங்கிய 3
உயங்கின்று 1
உயங்கினள் 1
உயங்கினாள் 1
உயங்கினை 1
உயங்கு 21
உயங்கு-தொறும் 1
உயங்கு-வயின் 1
உயங்கும் 5

முழு நூலையும் காண இங்கே சொடுக்கவும்.

 1.திருமுருகாற்றுப்படை
 2.பொருநராற்றுப்படை
 3.சிறுபாணாற்றுப்படை
 4.பெரும்பாணாற்றுப்படை
 5.முல்லைப்பாட்டு
 6.மதுரைக்காஞ்சி
 7.நெடுநல்வாடை
 8.குறிஞ்சிப்பாட்டு
 9.பட்டினப்பாலை
 10.மலைபடுகடாம்
 11.நற்றிணை
 12.குறுந்தொகை
 13.ஐங்குறுநூறு
 14.பதிற்றுப்பத்து
 15.பரிபாடல்
 16.கலித்தொகை
 17.அகநானூறு
 18.புறநானூறு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


உணக்கல் (1)

நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி – நற் 45/6
TOP


உணக்கிய (1)

மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் – நற் 63/2
TOP


உணக்கும் (2)

அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு – நற் 4/4
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள – புறம் 219/2
TOP


உணங்க (4)

நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார் – அகம் 300/2
அணங்கு அரும் பறந்தலை உணங்க பண்ணி – புறம் 25/6
மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்க/கோடை நீடிய பைது அறு காலை – புறம் 174/25,26
கொய் அடகு வாட தரு விறகு உணங்க/மயில் அம் சாயல் மாஅயோளொடு – புறம் 318/1,2
TOP


உணங்கல் (10)

புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி – நற் 331/4
செந்தினை உணங்கல் தொகுக்கும் – நற் 344/11
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து – குறு 46/3
வெண்ணெய் உணங்கல் போல – குறு 58/5
பைம் தினை உணங்கல் செம்பூழ் கவரும் – ஐங் 469/1
கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி – அகம் 20/2
பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும் – அகம் 80/6
இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல்/நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண் – அகம் 107/5,6
படலை முன்றில் சிறுதினை உணங்கல்/புறவும் இதலும் அறவும் உண்கு என – புறம் 319/5,6
சுளகு இடை உணங்கல் செவ்வி கொண்டு உடன் – புறம் 321/3
TOP


உணங்கல-கொல்லோ (1)

உணங்கல-கொல்லோ நின் தினையே உவ காண் – ஐங் 207/2
TOP


உணங்கலின் (1)

பெரும் கடல் பரதவர் கோள்_மீன் உணங்கலின்/இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு – குறு 320/1,2
TOP


உணங்கிய (1)

அரி செத்து உணங்கிய பெரும் செந்நெல்லின் – பெரும் 473
TOP


உணங்கு (10)

நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் – பட் 22
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி – நற் 37/2
கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி – நற் 101/3
உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல் – நற் 267/4
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி – பதி 25/8
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் – அகம் 207/2
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு-உறுத்த – அகம் 224/12
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி – புறம் 320/10
குரல் உணங்கு விதை தினை உரல் வாய் பெய்து – புறம் 333/12
உணங்கு கலன் ஆழியின் தோன்றும் – புறம் 338/11
TOP


உணங்கும் (5)

வலை உணங்கும் மணல் முன்றில் – பட் 83
கணம்_கொள் சிமைய உணங்கும் கானல் – குறு 372/3
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும்/உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை – அகம் 29/18,19
வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும்/பனி படு சோலை வேங்கடத்து உம்பர் – அகம் 211/6,7
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு – அகம் 245/17
TOP


உணப்பட்ட (1)

நலன் உணப்பட்ட நல்கூர் பேடை – நற் 178/3
TOP


உணப்பட்டாள் (1)

பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்/பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ – கலி 48/16,17
TOP


உணப்பட்டு (1)

பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த-கால் – கலி 15/13
TOP


உணப்பட்டோர் (2)

நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர்/அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர் – கலி 23/10,11
கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்/சூடினர் இட்ட பூ ஓர் அன்னர் – கலி 23/12,13
TOP


உணர் (3)

மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி – மலை 62
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர் – பரி 6/92
முழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானே – புறம் 361/22
TOP


உணர்-மின் (1)

மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை – கலி 140/3
TOP


உணர்க (2)

தாம் அறிந்து உணர்க என்ப மாதோ – நற் 116/2
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் – அகம் 203/2
TOP


உணர்கல்லாள் (1)

நாணும் நிறையும் உணர்கல்லாள் தோள் ஞெகிழ்பு – கலி 146/6
TOP


உணர்குவார் (1)

ஊடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார்/ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு – பரி 24/20,21
TOP


உணர்குவென் (1)

உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம் – அகம் 226/1
TOP


உணர்கோ (1)

யாங்கு என உணர்கோ யானே வீங்குபு – அகம் 273/9
TOP


உணர்ச்சி (1)

உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம் – புறம் 197/16
TOP


உணர்த்த (3)

காதலன் தந்தமை அறியாது உணர்த்த/அணங்கு உறு கழங்கின் முது வாய் வேலன் – நற் 282/4,5
உணர்த்த உணரா ஒள் இழை மாதரை – பரி 7/36
ஊடி_ஊடி உணர்த்த புகன்று – பரி 24/76
TOP


உணர்த்தர (1)

வல்லவர் ஊடல் உணர்த்தர நல்லாய் – பரி 6/102
TOP


உணர்த்தல் (1)

புலவி உணர்த்தல் வன்மையானே – நற் 217/9
TOP


உணர்த்தலின் (1)

ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு – பரி 2/17
TOP


உணர்த்தலும் (1)

கூறி உணர்த்தலும் வேண்டாது மற்று நீ – கலி 91/21
TOP


உணர்த்திய (2)

முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன் – கலி 73/15
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் – புறம் 28/9
TOP


உணர்த்தினவும் (1)

முன் அடி ஒல்கி உணர்த்தினவும் பன் மாண் – கலி 92/56
TOP


உணர்த்து (1)

வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என – நற் 71/2
TOP


உணர்த்தும் (1)

மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது – அகம் 13/8
TOP


உணர்த்துவானை (1)

உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானை/புல்லாது ஊடி புலந்து நின்றவள் – பரி 12/66,67
TOP


உணர்தல் (1)

அரிதே தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல்/பெரிதே காமம் என் உயிர் தவ சிறிதே – கலி 137/1,2
TOP


உணர்தலும் (1)

ஒரு வழி படாமையும் ஓடியது உணர்தலும்/அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த – சிறு 214,215
TOP


உணர்தியோ (2)

நின்னை புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ/முன்னை மரபின் முதுமொழி முதல்வ – பரி 3/46,47
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ – கலி 56/26
TOP


உணர்ந்த (9)

நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் – மது 517
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து – நற் 47/9
வெறி என உணர்ந்த அரிய அன்னையை – நற் 173/4
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் – நற் 316/5
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு – நற் 349/4
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த/குன்ற நாடன் தன்னினும் நன்றும் – குறு 327/2,3
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து – குறு 360/1
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் – அகம் 303/15
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் – புறம் 166/4
TOP


உணர்ந்தமை (1)

சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர் – புறம் 394/14
TOP


உணர்ந்தமையின் (1)

ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே – குறு 173/7
TOP


உணர்ந்தவர் (1)

உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும் – கலி 32/11
TOP


உணர்ந்தனள்-கொல் (1)

அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்/கொண்ட கொழுநன் குடி வறன்-உற்று என – நற் 110/9,10
TOP


உணர்ந்தனள்-கொல்லோ (1)

எளிது என உணர்ந்தனள்-கொல்லோ முளி சினை – குறு 396/3
TOP


உணர்ந்தனை (3)

அது மற்று உணர்ந்தனை போலாய் – ஐங் 471/4
உணர்ந்தனை புணர்ந்த நீயும் நின் தோள் – அகம் 178/14
உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம் – அகம் 327/4
TOP


உணர்ந்தனையே (1)

நீ உணர்ந்தனையே தோழி வீ உக – நற் 91/1
TOP


உணர்ந்தார் (1)

இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு – கலி 68/23
TOP


உணர்ந்தாரை (1)

ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல் – கலி 86/15
TOP


உணர்ந்திசினோரே (1)

உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே – புறம் 365/11
TOP


உணர்ந்தீயாய் (1)

ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை – கலி 3/11
TOP


உணர்ந்து (21)

இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து/வானமும் நிலனும் தாம் முழுது உணரும் – மது 478,479
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து/அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி – நற் 47/7,8
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த – நற் 55/10
நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து/வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ – நற் 250/8,9
ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து/என்றூழ் விடர் அகம் சிலம்ப – நற் 318/7,8
முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை – பதி 74/24
நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து/வசித்ததை கண்டம் ஆக மாதவர் – பரி 5/37,38
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை – கலி 25/23
அது என உணர்ந்து அதன் அணி நலம் முருக்கி – கலி 49/6
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின் – கலி 77/10
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே – கலி 126/9
மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே – கலி 126/13
கனவு என உணர்ந்து பின் கையற்று கலங்குமே – கலி 126/17
யான் என உணர்ந்து நீ நனி மருள – கலி 131/44
நம் உணர்ந்து ஆறிய கொள்கை – அகம் 95/14
முருகு என உணர்ந்து முகமன் கூறி – அகம் 272/13
கூறாய் செய்வது தோழி வேறு உணர்ந்து/அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென் முறி – அகம் 292/1,2
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர் – புறம் 3/25
மெய் அன்ன பொய் உணர்ந்து/பொய் ஓராது மெய் கொளீஇ – புறம் 166/6,7
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற – புறம் 391/13
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற – புறம் 391/13
TOP


உணர்ந்தும் (1)

உணர்ந்தும் உணராது இ ஊர் – கலி 140/24
TOP


உணர்ந்தேன் (2)

உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே – குறு 297/7
உள்ளியது உணர்ந்தேன் அஃது உரை இனி நீ எம்மை – பரி 18/9
TOP


உணர்ந்தோர் (2)

தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் – ஐங் 38/2
தன் சொல் உணர்ந்தோர் மேனி – ஐங் 41/3
TOP


உணர்ந்தோர்க்கு (1)

புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு/ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம் – அகம் 108/1,2
TOP


உணர்ந்தோரே (1)

இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே – புறம் 194/7
TOP


உணர்ந்தோன் (1)

வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே – புறம் 386/25
TOP


உணர்ப்பவள் (1)

ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல – கலி 72/4
TOP


உணர்ப்பான் (1)

வணங்கி உணர்ப்பான் துறை – கலி 131/40
TOP


உணர்ப்பித்தல் (1)

ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல்/ஆய் தேரான் குன்ற இயல்பு – பரி 18/13,14
TOP


உணர்பு (1)

நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ – பரி 20/15
TOP


உணர்வினால் (1)

நுண் உணர்வினால் பெரும் கொடையர் – புறம் 360/3
TOP


உணர்வினும் (1)

வலியினும் மனத்தினும் உணர்வினும் எல்லாம் – பரி 3/49
TOP


உணர்வு (1)

ஒல்கத்து நல்கிலா உணர்வு இலார் தொடர்பு போல் – கலி 25/20
TOP


உணர்வோர் (1)

உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என – புறம் 155/2
TOP


உணர (7)

நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர/செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ – குறி 33,34
நுண்ணிதின் உணர நாடி நண்ணார் – பட் 225
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் – நற் 54/8
புணர்ந்தனன் போல உணர கூறி – நற் 145/6
அணங்கு என உணர கூறி வேலன் – நற் 322/10
எந்தையும் யாயும் உணர காட்டி – குறு 374/1
வெம் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர/அரிய வஞ்சினம் சொல்லியும் பல் மாண் – அகம் 175/6,7
TOP


உணரா (9)

உண்டு என உணரா உயவும் நடுவின் – பொரு 38
வண்டு எனும் உணரா ஆகி – நற் 326/9
உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே – குறு 297/7
ஊழி யாவரும் உணரா/ஆழி முதல்வ நின் பேணுதும் தொழுது – பரி 2/18,19
உணர்த்த உணரா ஒள் இழை மாதரை – பரி 7/36
கண்ணியது உணரா அளவை ஒண்_நுதல் – அகம் 5/6
ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து – அகம் 200/3
உண்க என உணரா உயவிற்று ஆயினும் – புறம் 333/6
பெரிய ஓதினும் சிறிய உணரா/பீடு இன்று பெருகிய திருவின் – புறம் 375/19,20
TOP


உணராதாய் (2)

இளமையான் உணராதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/8
மடமையான் உணராதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/12
TOP


உணராதார் (1)

கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்/தங்காது தகைவு இன்றி தாம் செய்யும் வினைகளுள் – கலி 125/1,2
TOP


உணராது (1)

உணர்ந்தும் உணராது இ ஊர் – கலி 140/24
TOP


உணராதோரே (1)

உள்ளுவர்-கொல்லோ நின் உணராதோரே/மழை தவழும் பெரும் குன்றத்து – பதி 51/24,25
TOP


உணராம் (1)

கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம்/தேறல் எளிது என்பாம் நாம் – கலி 60/24,25
TOP


உணராமை (1)

கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே – கலி 99/21
TOP


உணராய் (3)

பசந்தனள் என்பது உணராய் பல் நாள் – நற் 351/3
ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை – கலி 76/9
உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை – கலி 76/17
TOP


உணராயோ (1)

உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ/என ஆங்கு – கலி 56/26,27
TOP


உணரார் (3)

நன்று என உணரார் மாட்டும் – குறு 78/5
எம்மின் உணரார் ஆயினும் தம்-வயின் – ஐங் 472/3
ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின் – கலி 108/57
TOP


உணராவே (1)

எருதே இளைய நுகம் உணராவே/சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே – புறம் 102/1,2
TOP


உணராள் (2)

தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்/இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை – அகம் 373/9,10
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்/நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறி என – அகம் 388/17,18
TOP


உணரான் (1)

நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை – நற் 344/5
TOP


உணரிய (1)

அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் – கலி 75/20
TOP


உணரும் (7)

இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி – பெரும் 445
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்/சான்ற கொள்கை சாயா யாக்கை – மது 479,480
இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்து என – மலை 542
அது என உணரும் ஆயின் ஆயிடை – குறு 111/3
இரண்டின் உணரும் வளியும் நீயே – பரி 13/19
மூன்றின் உணரும் தீயும் நீயே – பரி 13/20
நான்கின் உணரும் நீரும் நீயே – பரி 13/21
TOP


உணரேன் (4)

நகை என உணரேன் ஆயின் – குறு 96/3
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன்/எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன் – கலி 144/51,52
யானும் தெற்றென உணரேன் மேல் நாள் – அகம் 48/4
கொடியோள் முன்னியது உணரேன் தொடியோய் – அகம் 369/10
TOP


உணல் (4)

உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு – குறு 262/5
கொன்று உணல் அஞ்சா கொடு வினை கொல் தகை – பரி 5/6
ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் – கலி 20/11
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து – கலி 45/3
TOP


உணவின் (7)

சில்_பத_உணவின் கொள்ளை சாற்றி – பெரும் 64
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி – பெரும் 163
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்/குமரி_மூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 246,247
நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு – மது 458
தன் பாடிய தளி உணவின்/புள் தேம்ப புயல் மாறி – பட் 3,4
உண்டி முதற்றே உணவின் பிண்டம் – புறம் 18/20
அல்லி உணவின் மனைவியொடு இனியே – புறம் 250/5
TOP


உணவினோர் (1)

அவி உணவினோர் புறம்காப்ப – புறம் 377/5
TOP


உணவினோரும் (1)

நாற்ற_உணவினோரும் ஆற்ற – புறம் 62/17
TOP


உணவு (6)

உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து – பட் 267
சிறு புல் உணவு நெறி பட மறுகி – அகம் 377/2
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே – புறம் 18/21
கால் உணவு ஆக சுடரொடு கொட்கும் – புறம் 43/3
முகந்து கொள்ளும் உணவு என்கோ – புறம் 396/20
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் – புறம் 399/26
TOP


உணவும் (1)

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட் 191
TOP


உணா (6)

பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட – மது 660
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 94
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் – பட் 22
சிறப்பு உணா கேட்டி செவி – பரி 19/96
சில் உணா தந்த சீறூர் பெண்டிர் – அகம் 283/5
இல் உணா துறத்தலின் இல் மறந்து உறையும் – புறம் 160/17
TOP


உணா-கால் (1)

குறுகி சிறப்பு உணா-கால்/குற_பிணா_கொடியை கூடியோய் வாழ்த்து – பரி 19/94,95
TOP


உணாவும் (1)

இ நான்கு அல்லது உணாவும் இல்லை – புறம் 335/6
TOP


உணின் (1)

வயவு-உறு மகளிர் வேட்டு உணின் அல்லது – புறம் 20/14
TOP


உணினே (1)

நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே/வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் – புறம் 184/3,4
TOP


உணீஇய (17)

கனி பொழி கானம் கிளையொடு உணீஇய/துனை பறை நிவக்கும் புள்_இனம் மான – மலை 54,55
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய/மன்றம் போழும் புன்கண் மாலை – நற் 73/3,4
ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினை – நற் 288/2
உயவு நடை பேடை உணீஇய மன்னர் – நற் 384/4
வள மலை சிறுதினை உணீஇய கானவர் – ஐங் 268/2
குறும் சினை வேம்பின் நறும் பழம் உணீஇய/வாவல் உகக்கும் மாலையும் – ஐங் 339/2,3
விருந்து கண்மாறாது உணீஇய பாசவர் – பதி 21/9
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇய/களிறு பரந்து இயல கடு மா தாங்க – பதி 49/3,4
தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய/உடங்கு கொட்பன போல் புகுத்தனர் தொழூஉ – கலி 105/21,22
ஓங்கு வணர் பெரும் குரல் உணீஇய பாங்கர் – அகம் 88/2
உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி – அகம் 119/17
பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய/கரும் கோட்டு இருப்பை ஊரும் – அகம் 171/13,14
வாளை வெண் போத்து உணீஇய நாரை தன் – அகம் 276/2
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி – அகம் 291/18
கதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு – அகம் 321/4
படு மணி இன நிரை உணீஇய கோவலர் – அகம் 321/7
வெய்ய மன்ற நின் வை எயிறு_உணீஇய – அகம் 325/11
TOP


உணீஇயர் (6)

பசலை உணீஇயர் வேண்டும் – குறு 27/4
வளை உடை கையள் எம்மொடு உணீஇயர்/வருக தில் அம்ம தானே – குறு 56/3,4
மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர்/பொறித்த போலும் புள்ளி எருத்தின் – பதி 36/7,8
புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை – அகம் 59/7
வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பய – அகம் 106/3
ஈண்டு செய் நல் வினை ஆண்டு சென்று உணீஇயர்/உயர்ந்தோர்_உலகத்து பெயர்ந்தனன் ஆகலின் – புறம் 174/19,20
TOP


உத்தரிய (1)

உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி – கலி 96/13
TOP


உத்தி (10)

கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப – நற் 129/7
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம் – பரி 12/4
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் – பரி 23/48
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து – கலி 45/3
உத்தி எறிந்துவிடற்கு – கலி 64/30
உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி – கலி 96/13
உத்தி பொறித்த புனை பூண் பருமத்து – கலி 97/14
உத்தி அரவின் பை தலை துமிய – அகம் 202/10
நூல் அமை பிறப்பின் நீல உத்தி/கொய்ம் மயிர் எருத்தம் பிணர் பட பெருகி – அகம் 400/5,6
யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி/கண் கேள்வி கவை நாவின் – புறம் 382/12,13
TOP


உத்தியொடு (1)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23
TOP


உதவ (2)

மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்க – மது 10
கடலும் கானமும் பல பயம் உதவ/பிறர்_பிறர் நலியாது வேற்று பொருள் வெஃகாது – பதி 22/6,7
TOP


உதவா (2)

பொன் நேர் பசலைக்கு உதவா மாறே – நற் 47/11
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே – நற் 225/9
TOP


உதவாதான் (1)

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன் – கலி 149/6
TOP


உதவாது (3)

எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது/பசலை உணீஇயர் வேண்டும் – குறு 27/3,4
நனவினுள் உதவாது நள்ளிருள் வேறு ஆகும் – கலி 145/2
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும் – புறம் 142/2
TOP


உதவாதே (1)

இறைவன் தாட்கு உதவாதே அதனால் – புறம் 18/26
TOP


உதவாய் (1)

இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே_இழாய் – கலி 59/24
TOP


உதவி (17)

நிலம் தந்த பேர் உதவி/பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல் – மது 60,61
உயர்ந்த உதவி ஊக்கலர் தம்-மின் – மது 743
தோள் பழி மறைக்கும் உதவி/போக்கு இல் பொலம் தொடி செறீஇயோனே – நற் 136/8,9
இரும் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவி/பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து – நற் 157/1,2
கண் உறு விழுமம் கை போல் உதவி/நம் உறு துயரம் களையார் ஆயினும் – நற் 216/3,4
கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி/நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ் – நற் 370/2,3
திருந்து இழை அல்குற்கு பெரும் தழை உதவி/செயலை முழு_முதல் ஒழிய அயலது – குறு 214/4,5
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் – குறு 225/3
நன்றே செய்த உதவி நன்று தெரிந்து – ஐங் 288/1
பாசறை அரும் தொழில் உதவி நம் – ஐங் 446/3
கட்டளை வலிப்ப நின் தானை உதவி/வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல் – பதி 81/17,18
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் – கலி 93/6
கற்பினின் வழாஅ நன் பல உதவி/பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/13,14
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும் – அகம் 231/2
பாணர் ஆர்ப்ப பல் கலம் உதவி/நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன் – அகம் 331/11,12
உதவி ஆற்றும் நண்பின் பண்பு உடை – புறம் 29/21
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி/இரவின் எல்லை வருவது நாடி – புறம் 366/10,11
TOP


உதவிய (5)

பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் – கலி 29/3
விளங்கு பகல் உதவிய பல் கதிர் ஞாயிறு – அகம் 91/1
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை – அகம் 314/7
அல்குல் தழை கூட்டு அம் குழை உதவிய/வினை அமை வரல் நீர் விழு தொடி தத்த – அகம் 383/8,9
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய/நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி – புறம் 202/7,8
TOP


உதவியார்க்கு (1)

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன் – கலி 149/6
TOP


உதவியும் (4)

நலம் புனை உதவியும் உடையன்-மன்னே – அகம் 195/10
படை வேண்டு-வழி வாள் உதவியும்/வினை வேண்டு-வழி அறிவு உதவியும் – புறம் 179/6,7
வினை வேண்டு-வழி அறிவு உதவியும்/வேண்டுப_வேண்டுப வேந்தன் தேஎத்து – புறம் 179/7,8
உற்று-உழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் – புறம் 183/1
TOP


உதவியோயே (1)

இரவு பெயல் பொழிந்த உதவியோயே – நற் 139/10
TOP


உதவின (1)

ஈர செவ்வி உதவின ஆயினும் – புறம் 289/1
TOP


உதவு-மின் (1)

பெற்றது உதவு-மின் தப்பு இன்று பின்னும் – பதி 18/7
TOP


உதவுதல் (1)

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்/போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை – கலி 133/6,7
TOP


உதவும் (2)

புனல் ஆடு மகளிர்க்கு புணர் துணை உதவும்/வேழ மூதூர் ஊரன் – ஐங் 15/2,3
தா இன்று உதவும் பண்பின் பேயொடு – புறம் 373/36
TOP


உதள (1)

அதளோன் துஞ்சும் காப்பின் உதள/நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில் – பெரும் 151,152
TOP


உதியஞ்சேரல் (2)

நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்/பாடி சென்ற பரிசிலர் போல – அகம் 65/5,6
முதியர் பேணிய உதியஞ்சேரல்/பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல் – அகம் 233/8,9
TOP


உதியன் (3)

உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் – நற் 113/9
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து – அகம் 168/7
நன்னன் உதியன் அரும் கடி பாழி – அகம் 258/1
TOP


உதிர் (4)

உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப – கலி 81/31
முடி உதிர் பூ தாது மொய்ம்பின ஆக – கலி 88/2
உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீ – அகம் 99/7
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி – அகம் 129/4
TOP


உதிர்க்கும் (4)

மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்/நரை உருமின் ஏறு அனையை – மது 62,63
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்/யாணர் ஊர நின் மனையோள் – ஐங் 87/2,3
புலம் கடி கவணையின் பூ சினை உதிர்க்கும்/விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம் – கலி 23/2,3
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு – புறம் 29/16
TOP


உதிர்த்த (21)

கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த/புது பூ செம்மல் சூடி புடை நெறித்து – சிறு 4,5
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் – பெரும் 496
பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி – மலை 516
முறி திமிர்ந்து உதிர்த்த கையள் – நற் 106/8
புலர்வு_இடத்து உதிர்த்த துகள் படு கூழை – நற் 140/4
புலி வரிபு எக்கர் புன்னை உதிர்த்த/மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி – நற் 323/7,8
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த/ஈர்ம் தண் பெரு வடு பாலையில் குறவர் – ஐங் 213/1,2
பரூஉ பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் – பதி 71/4
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய – பரி 19/69
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம் – பரி 20/10
கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த/புயல் புரை கதுப்பு_அகம் உளரிய வளியும் – பரி 21/48,49
ஆய் சுளை பலவின் மேய் கலை உதிர்த்த/துய் தலை வெண் காழ் பெறூஉம் – அகம் 7/20,21
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த/புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு – அகம் 230/6,7
மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு – அகம் 237/10
உதிர்த்த கோடை உட்கு வரு கடத்து இடை – அகம் 267/5
கொந்தொடு உதிர்த்த கதுப்பின் – அகம் 288/16
கோடை உதிர்த்த குவி கண் பசும் காய் – அகம் 315/11
ஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடை – அகம் 353/8
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் – அகம் 353/19
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த/கனி கவின் சிதைய வாங்கி கொண்டு தன் – அகம் 380/4,5
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை – புறம் 297/3
TOP


உதிர்த்தலின் (1)

வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய் – அகம் 324/9
TOP


உதிர்த்து (3)

கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்து/சாந்து உளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி – குறு 312/5,6
புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து/தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில் – பதி 74/10,11
உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும் – பரி 21/26
TOP


உதிர்தரு (1)

பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி – நற் 132/3
TOP


உதிர்ந்த (5)

வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் – நற் 76/7
வளன் உடை செறுவின் விளைந்தவை உதிர்ந்த/களன் அறு குப்பை காஞ்சி சேர்த்தி – பதி 62/14,15
சினை விரிந்து உதிர்ந்த வீ புதல் விரி போதொடும் – பரி 20/102
செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின் – அகம் 21/20
வாழை வான் பூ ஊழ்-உறுபு உதிர்ந்த/ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு – அகம் 134/10,11
TOP


உதிர்ந்தன (1)

காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல் – மலை 135
TOP


உதிர்ந்து (5)

வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து/சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய் – மது 280,281
முழு_முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்து என – குறி 188
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக – கலி 33/4
கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழ்-உற்ற கோடல் வீ – கலி 121/13
நீர் நிறம் கரப்ப ஊழ் உறுபு உதிர்ந்து/பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்று – அகம் 18/1,2
TOP


உதிர்ப்ப (3)

ஊழ்-உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து – குறு 278/5
சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப/உதிர்த்த சுனையின் எடுத்த தலைய – பரி 19/68,69
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப/பொலம் செய் காசின் பொற்ப தாஅம் – அகம் 363/7,8
TOP


உதிர்பு (2)

உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை – பரி 1/28
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக – கலி 31/3
TOP


உதிர்வ (1)

பல பதினாயிரம் குலை தரை உதிர்வ போல் – பரி 2/44
TOP


உதிர்வன (5)

ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர் – கலி 2/7
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன் – அகம் 5/11
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று – அகம் 291/17
உகாஅ மென் சினை உதிர்வன கழியும் – அகம் 293/8
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல – அகம் 317/9
TOP


உதிர்வை (1)

கவட்டு அடி பொருத பல் சினை உதிர்வை/அகன் கண் பாறை செம்-வயின் தெறீஇ – அகம் 393/6,7
TOP


உதிர (22)

நாக நறு மலர் உதிர யூகமொடு – திரு 302
இளநீர் விழு குலை உதிர தாக்கி – திரு 308
விரவு மலர் உதிர வீசி – நற் 139/9
பொன்னின் அன்ன நறும் தாது உதிர/புலி பொறி கொண்ட பூ நாறு குரூஉ சுவல் – நற் 249/4,5
நீடு சினை புன்னை நறும் தாது உதிர/கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும் – நற் 375/1,2
வண்ண துய்ம் மலர் உதிர தண்ணென்று – குறு 110/6
இறவு சினை அன்ன நளி கனி உதிர/விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு – குறு 274/2,3
வண்ண துய்ம் மலர் உதிர/முன்னர் தோன்றும் பனி கடு நாளே – குறு 380/6,7
நெடும் கொடி முல்லையொடு தளவ மலர் உதிர/விரையுபு கடைஇ நாம் செல்லின் – ஐங் 422/2,3
குருகு இலை உதிர குயில்_இனம் கூவ – பரி 15/41
பொரி உரு உறழ புன்கு பூ உதிர/புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப – கலி 33/11,12
முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள் – அகம் 78/8
ஊழ்-உறு விளை நெற்று உதிர காழியர் – அகம் 89/7
வறன்-உறல் அம் கோடு உதிர வலம் கடந்து – அகம் 97/2
நரந்த நறும் பூ நாள்_மலர் உதிர/கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை – அகம் 141/26,27
நாள்_பூ வேங்கை நறு மலர் உதிர/மேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலை – அகம் 205/20,21
கழல் துளை முத்தின் செம் நிலத்து உதிர/மழை துளி மறந்த அம் குடி சீறூர் – அகம் 225/12,13
அவரை ஆய் மலர் உதிர துவரின – அகம் 243/1
துய் அவிழ் பனி மலர் உதிர வீசி – அகம் 252/10
முதிரா பல் இதழ் உதிர பாய்ந்து உடன் – அகம் 317/6
நன் பொன் அன்ன நறும் தாது உதிர/காமர் பீலி ஆய் மயில் தோகை – அகம் 378/4,5
பூ வாள் கோவலர் பூ உடன் உதிர/கொய்து கட்டு அழித்த வேங்கையின் – புறம் 224/15,16
TOP


உதிரலொடு (1)

ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு/துளியின் உழந்த தோய்வு அரும் சிமை-தொறும் – பரி 7/12,13
TOP


உதிரா (1)

ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா/தேன் செய் இறாஅல் துளைபட போகி – கலி 41/12,13
TOP


உதிரும் (5)

வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும்/தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் – நற் 350/3,4
நறு வீ முல்லை நாள்_மலர் உதிரும்/புறவு அடைந்து இருந்த அரு முனை இயவின் – அகம் 84/8,9
தண் கார் ஆலியின் தாவன உதிரும்/பனி படு பன் மலை இறந்தோர்க்கு – அகம் 101/16,17
நிரை கால் ஒற்றலின் கல் சேர்பு உதிரும்/வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து – அகம் 199/2,3
வறு நிலத்து உதிரும் அத்தம் கதுமென – அகம் 315/13
TOP


உது (20)

ஏ-மதி வலவ தேரே உது காண் – நற் 21/5
உருகி உகுதல் அஞ்சுவல் உது காண் – நற் 88/5
அல்கலர் வாழி தோழி உது காண் – நற் 329/9
உறை கழி வாளின் மின்னி உது காண் – நற் 387/9
உது காண் தெய்ய உள்ளல் வேண்டும் – குறு 81/5
செல்லல் ஐஇய உது எம் ஊரே – குறு 179/3
உது காண் அதுவே இது என மொழிகோ – குறு 191/1
வருவேம் என்ற பருவம் உது காண் – குறு 358/4
அன்னை வாழி வேண்டு அன்னை உது காண் – ஐங் 101/1
வெம் குரல் புள் இனம் ஒலிப்ப உது காண் – ஐங் 453/2
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண் – கலி 108/39
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம் – கலி 144/30
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும் – கலி 144/32
உது காண் தொய்யில் பொறித்த வழி – கலி 144/34
உது காண் தையால் தேறு என தேற்றி அறன் இல்லான் – கலி 144/35
உது காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து – அகம் 204/8
உது காண் தோன்றும் தேரே இன்றும் – அகம் 380/9
விடுத்தேன் வாழியர் குருசில் உது காண் – புறம் 210/12
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உது காண் – புறம் 301/11
வம்பலன் போல தோன்றும் உது காண் – புறம் 307/3
TOP


உதுவ (1)

உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே – அகம் 330/11
TOP


உதுவே (2)

புதுவது புணர்ந்த பொழிலே உதுவே/பொம்மல் படு திரை நம்மோடு ஆடி – நற் 96/3,4
உதுவே மடந்தை நாம் உள்ளிய புறவே – ஐங் 415/2
TOP


உதைத்த (8)

பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த/வெண் புற களரி விடு நீறு ஆடி – நற் 41/1,2
புலவு திரை உதைத்த கொடும் தாள் கண்டல் – நற் 123/9
பசி பிடி உதைத்த ஓமை செம் வரை – நற் 279/7
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து – நற் 340/6
முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி – அகம் 63/5
குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின் – அகம் 207/6
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை – அகம் 287/8
அத்த நடுகல் ஆள் என உதைத்த/கான யானை கதுவாய் வள் உகிர் – அகம் 365/4,5
TOP


உதைத்தலின் (1)

எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு – நற் 203/5
TOP


உதைத்து (2)

களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு – நற் 302/7
உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும் – அகம் 317/13
TOP


உதைத்தும் (1)

வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும்/குன்று ஓங்கு வெண் மணல் கொடி அடும்பு கொய்தும் – நற் 254/1,2
TOP


உதைப்ப (1)

நீல் நிற பரப்பில் தயங்கு திரை உதைப்ப/கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து – நற் 215/6,7
TOP


உதைப்பு (1)

கழி பிணி கறை தோல் பொழி கணை உதைப்பு/தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து – அகம் 24/14,15
TOP


உந்தி (11)

குண கடற்கு இவர்தரும் குரூஉ புனல் உந்தி/நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி – மது 245,246
அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி/மட மதர் மழை கண் இளையீர் இறந்த – குறி 140,141
கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி/நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை – மலை 34,35
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி/பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் – நற் 68/4,5
நின் நிலை கொடிதால் தீம் கலுழ் உந்தி/நம் மனை மட_மகள் இன்ன மென்மை – குறு 327/4,5
இழைக்கு விளக்கு ஆகிய அம் வாங்கு உந்தி/விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த – பதி 31/26,27
பாய் திரை உந்தி தருதலான் ஆய் கோல் – பரி 11/24
அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள் – அகம் 126/9
வருவது மாதோ வண் பரி உந்தி/நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை – அகம் 278/9,10
அம் வாங்கு உந்தி அமை தோளாய் நின் – அகம் 390/10
வசிந்து வாங்கு நுசுப்பின் அம் வாங்கு உந்தி/கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல – புறம் 383/13,14
TOP


உந்திய (1)

வலஞ்சுழி உந்திய திணை பிரி புதல்வர் – பரி 16/7
TOP


உந்தியும் (2)

வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் – பொரு 23
தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும் – பரி 13/53
TOP


உந்தியொடு (1)

மாலை பெய்த மணம் கமழ் உந்தியொடு/காலை வந்த முழு_முதல் காந்தள் – குறு 361/3,4
TOP


உந்து (1)

உந்து வளி கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும் – பரி 2/7
TOP


உந்துவோர் (1)

மா மலி ஊர்வோர் வய பிடி உந்துவோர்/வீ மலி கான்யாற்றின் துருத்தி குறுகி – பரி 10/29,30
TOP


உந்தூழ் (2)

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் – குறி 65
ஊழ்-உற்று அலமரு உந்தூழ் அகல் அறை – மலை 133
TOP


உப்பால் (1)

இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன் – பரி 11/8
TOP


உப்பின் (13)

வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி – பட் 29
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி – நற் 4/8
உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை – நற் 138/1
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி – நற் 183/2
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் – நற் 331/1
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி – அகம் 140/3
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்/கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை – அகம் 159/1,2
உப்பின் குப்பை ஏறி எல் பட – அகம் 190/2
நெடு வெள் உப்பின் நிரம்பா குப்பை – அகம் 206/14
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் – அகம் 295/9
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி – அகம் 390/1
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் என – அகம் 390/11
கழியே சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி – புறம் 386/16
TOP


உப்பு (22)

குப்பை வேளை உப்பு இலி வெந்ததை – சிறு 137
இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு – மது 117
இரும் கழி செறுவின் தீம் புளி வெள் உப்பு/பரந்து ஓங்கு வரைப்பின் வன் கை திமிலர் – மது 318,319
ஓதம் சென்ற உப்பு உடை செறுவில் – நற் 211/2
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் – நற் 254/6
இரும் கழி செறுவின் வெள் உப்பு விளையும் – நற் 311/4
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு/நெடு நெறி ஒழுகை நிரை செல பார்ப்போர் – நற் 354/8,9
இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம் – குறு 165/3
உப்பு விளை கழனி சென்றனள் அதனால் – குறு 269/6
உப்பு இயல் பாவை உறை உற்றது போல – கலி 138/16
உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும் – அகம் 30/5
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு – அகம் 60/4
நெல்லின் நேரே வெண் கல் உப்பு என – அகம் 140/7
உப்பு சிறை நில்லா வெள்ளம் போல – அகம் 208/19
இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும் – அகம் 280/8
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த – அகம் 310/14
தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினைஇ – அகம் 366/7
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் – புறம் 60/7
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ – புறம் 116/8
முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று – புறம் 159/10
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட – புறம் 313/5
உப்பு இலாஅ அவி புழுக்கல் – புறம் 363/12
TOP


உப்பும் (1)

நெல்லும் உப்பும் நேரே ஊரீர் – அகம் 390/8
TOP


உப்பை (1)

உப்பை மாறி வெண்ணெல் தரீஇய – குறு 269/5
TOP


உம் (1)

இ மனை அன்று அஃது உம் மனை என்ற – அகம் 56/14
TOP


உம்பர் (18)

பன் மலர் கான்யாற்று உம்பர் கரும் கலை – நற் 119/6
முன்_நாள் உம்பர் கழிந்த என் மகள் – நற் 198/3
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர்/மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் – குறு 11/6,7
எம் இல் அயலது ஏழில் உம்பர்/மயில் அடி இலைய மா குரல் நொச்சி – குறு 138/2,3
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் – பரி 11/70
வாய்வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்ப – பரி 17/31
நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்/விசி பிணி முழவின் குட்டுவன் காப்ப – அகம் 91/12,13
எழாஅ பாணன் நன் நாட்டு உம்பர்/நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர் – அகம் 113/17,18
காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர்/அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து – அகம் 209/9,10
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்/மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர் – அகம் 211/7,8
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்/கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி – அகம் 213/3,4
விலங்கு இரும் சிமைய குன்றத்து உம்பர்/வேறு பன் மொழிய தேஎம் முன்னி – அகம் 215/1,2
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்/விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர் – அகம் 227/18,19
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்/மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை – அகம் 251/14,15
புல்லி நன் நாட்டு உம்பர் செல் அரும் – அகம் 311/12
பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் நாள் – அகம் 368/12
வானவரம்பன் நன் நாட்டு உம்பர்/வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல் – அகம் 389/16,17
தேன் தூங்கு உயர் வரை நன் நாட்டு உம்பர்/வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் – அகம் 393/19,20
TOP


உம்பரஃது (1)

கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே – நற் 62/10
TOP


உம்பரும் (2)

ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே – ஐங் 401/5
இமையத்து உம்பரும் விளங்குக எனவே – கலி 105/74
TOP


உம்பல் (8)

திரை தரு மரபின் உரவோன் உம்பல்/மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் – பெரும் 31,32
பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல்/மரம் தின்னூஉ வரை உதிர்க்கும் – மது 61,62
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் – மலை 429
குன்றா நல் இசை சென்றோர் உம்பல்/இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப – மலை 540,541
ஊழி உய்த்த உரவோர் உம்பல்/பொன் செய் கணிச்சி திண் பிணி உடைத்து – பதி 22/11,12
கொற்ற திருவின் உரவோர் உம்பல்/கட்டி புழுக்கின் கொங்கர் கோவே – பதி 90/24,25
தீம் சுளை பலவின் தொழுதி உம்பல்/பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் – அகம் 357/9,10
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்/ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய – புறம் 18/4,5
TOP


உம்மை (1)

இம்மை போல காட்டி உம்மை/இடை இல் காட்சி நின்னோடு – புறம் 236/10,11
TOP


உமக்கு (2)

வச்சிய மானே மறலினை மாற்று உமக்கு/நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே – பரி 20/84,85
சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற – கலி 139/4
TOP


உமட்டியர் (1)

உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற – சிறு 60
TOP


உமண் (7)

ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி – நற் 374/2
உமண் எருத்து ஒழுகை தோடு நிரைத்து அன்ன – குறு 388/4
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் – அகம் 119/8
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின் – அகம் 159/4
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ – அகம் 173/10
மரம் கோள் உமண்_மகன் பேரும் பருதி – அகம் 343/4
பெரும் கல் நன் நாட்டு உமண் ஒலிக்குந்து – புறம் 386/17
TOP


உமண்_மகன் (1)

மரம் கோள் உமண்_மகன் பேரும் பருதி – அகம் 343/4
TOP


உமணர் (24)

நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த – சிறு 55
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பெரும் 65
கொண்டும் செல்வர்-கொல் தோழி உமணர்/வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி – நற் 4/7,8
கணம்_கொள் உமணர் உயங்கு-வயின் ஒழித்த – நற் 138/3
உமணர் போகலும் இன்னாது ஆகும் – நற் 183/5
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் – நற் 254/6
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி – நற் 331/2
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன் தலை – குறு 124/1
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி – அகம் 17/13
உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும் – அகம் 30/5
கதழ் கோல் உமணர் காதல் மட_மகள் – அகம் 140/5
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்/சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் – அகம் 169/6,7
தோல் புதை சிரற்று அடி கோல் உடை உமணர்/ஊர் கண்டு அன்ன ஆரம் வாங்கி – அகம் 191/4,5
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்/உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து – அகம் 295/9,10
வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்/கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து – அகம் 303/17,18
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த – அகம் 310/14
படு மணி இயம்ப பகல் இயைந்து உமணர்/கொடு நுகம் பிணித்த செம் கயிற்று ஒழுகை – அகம் 329/5,6
அவணது ஆக பொருள் என்று உமணர்/கண நிரை அன்ன பல் கால் குறும் பொறை – அகம் 337/5,6
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறி – அகம் 390/3
உமணர் வெரூஉம் துறை அன்னன்னே – புறம் 84/6
அவணது அறியுநர் யார் என உமணர்/கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன – புறம் 102/4,5
ஈத்து இலை குப்பை ஏறி உமணர்/உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ – புறம் 116/7,8
நீரும் புல்லும் ஈயாது உமணர்/யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த – புறம் 307/7,8
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட – புறம் 313/5
TOP


உமணர்க்கு (1)

கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும் – அகம் 257/17
TOP


உமிழ் (30)

நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ – முல் 48
அம்பு உமிழ் அயில் அருப்பம் – மது 67
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர – குறி 172
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல் – மலை 206
மாரியின் இகுதரு வில் உமிழ் கடும் கணை – மலை 226
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – மலை 310
பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை – நற் 75/2
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே – நற் 236/2
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே – குறு 231/6
பாம்பு உமிழ் மணியின் தோன்றும் – குறு 239/5
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின் – பதி 11/8
தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர – பரி 1/2
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம் – பரி 1/27
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என – பரி 5/52
திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்-கால் – கலி 15/21
கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழா-கால் – கலி 53/11
இடி உமிழ் வானத்து இரவு இருள் போழும் – கலி 141/17
நிலவு உமிழ் வான் திங்காள் ஆய்_தொடி கொட்ப – கலி 145/47
நெய் உமிழ் சுடரின் கால் பொர சில்கி – அகம் 17/20
புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர் – அகம் 31/10
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி – அகம் 31/11
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும் – அகம் 77/5
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள் – அகம் 162/6
கயல் உமிழ் நீரின் கண் பனி வார – அகம் 169/12
அருவி தந்த அரவு உமிழ் திரு மணி – அகம் 192/11
புண் உமிழ் குருதி புலவு கடல் மறுப்பட – அகம் 210/3
எல் உமிழ் ஆவணத்து அன்ன – அகம் 227/21
இடி உமிழ் முரசம் பொரு_களத்து இயம்ப – அகம் 354/2
வில் உமிழ் கடும் கணை மூழ்க – புறம் 263/7
அரவு உமிழ் மணியின் குறுகார் – புறம் 294/8
TOP


உமிழ்ந்த (3)

வில் விசை உமிழ்ந்த வை முள் அம்பின் – பதி 33/8
நாம நல்_அரா கதிர்பட உமிழ்ந்த/மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் – அகம் 72/14,15
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள் – அகம் 138/17
TOP


உமிழ்ந்து (2)

செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து/உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் – நற் 68/7,8
மின் உமிழ்ந்து அன்ன சுடர் இழை ஆயத்து – பதி 81/26
TOP


உமிழ்பு (2)

அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க – பதி 39/15
இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள் – கலி 41/5
TOP


உமிழ (1)

பாம்பு மணி உமிழ பல்-வயின் கோவலர் – குறி 221
TOP


உமை (2)

உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண் – திரு 153
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக – கலி 38/2
TOP


உமையே (1)

ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே/செ வான் அன்ன மேனி அ வான் – அகம் 0/7,8
TOP


உமையொடு (1)

உமையொடு புணர்ந்து காம வதுவையுள் – பரி 5/28
TOP


உய் (2)

உய் தகை இன்றால் தோழி பைபய – அகம் 341/1
வள்ளியோர் காணாது உய் திறன் உள்ளி – புறம் 370/1
TOP


உய்-மார் (1)

குட புல மருங்கின் உய்-மார் புள் ஓர்த்து – அகம் 207/3
TOP


உய்க்கும் (2)

உறு முறை மரபின் புறம் நின்று உய்க்கும்/கூற்றத்து அனையை ஆகலின் போற்றார் – புறம் 98/16,17
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும்/அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று – புறம் 381/23,24
TOP


உய்க்குமோ (1)

தன் மனை உய்க்குமோ யாது அவன் குறிப்பே – அகம் 195/19
TOP


உய்கம் (2)

நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்/கேட்டிசின் வாழி தோழி தெண் கழி – நற் 78/6,7
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம் – அகம் 65/2
TOP


உய்குவம் (1)

ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே – குறு 11/3
TOP


உய்குவள்-கொல் (1)

யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த – நற் 55/10
TOP


உய்குவை (1)

துறுகல் மறையினும் உய்குவை போலாய் – புறம் 300/2
TOP


உய்த்த (5)

வெம் சுரம் என் மகள் உய்த்த/அம்பு அமை வல் வில் விடலை தாயே – ஐங் 373/4,5
ஊழி உய்த்த உரவோர் உம்பல் – பதி 22/11
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம் – கலி 106/31
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து – அகம் 131/7
நேமி உய்த்த நேஎ நெஞ்சின் – புறம் 3/4
TOP


உய்த்தர (2)

கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர/இன்னே வருகுவர் தாயர் என்போள் – முல் 15,16
அருள் புரி நெஞ்சம் உய்த்தர/இருள் பொர நின்ற இரவினானே – ஐங் 362/4,5
TOP


உய்த்தல் (1)

உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும் – புறம் 185/4
TOP


உய்த்தவன் (1)

வெருவு-உற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய – கலி 120/2
TOP


உய்த்தன்று (1)

நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று/பைதல் ஒக்கல் தழீஇ அதனை – புறம் 221/8,9
TOP


உய்த்தன்று-மன்னே (1)

உய்த்தன்று-மன்னே நெஞ்சே செ வேர் – நற் 77/4
TOP


உய்த்தனர் (1)

உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் – குறு 305/5
TOP


உய்த்தார் (1)

ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் – கலி 71/11
TOP


உய்த்தியோ (1)

எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே – குறு 63/4
TOP


உய்த்து (12)

புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும் – நற் 101/4
மலை உய்த்து பகரும் நிலையா வாழ்க்கை – நற் 138/2
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு – நற் 236/5
தணந்தனை ஆயின் எம் இல் உய்த்து கொடுமோ – குறு 354/3
இல் உய்த்து நடுதலும் கடியாதோளே – குறு 361/6
தண் புனல் வண்டல் உய்த்து என – ஐங் 69/3
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய் – கலி 39/22
புனத்து உளான் என் ஐக்கு புகா உய்த்து கொடுப்பதோ – கலி 108/31
அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என – அகம் 309/3
மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்து என – புறம் 75/1
பாடு இன் பனுவல் பாணர் உய்த்து என – புறம் 127/2
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து/துறை-தொறும் பிணிக்கும் நல் ஊர் – புறம் 400/20,21
TOP


உய்த்தோய் (1)

ஒழுகை உய்த்தோய் கொழு இல் பைம் துணி – பதி 44/17
TOP


உய்தல் (4)

பெய் பனி நலிய உய்தல் செல்லாது – ஐங் 457/1
உய்தல் யாவது நின் உடற்றியோரே – பதி 84/13
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடம் தாள் – புறம் 97/17
உண்ணா வறும் கடும்பு உய்தல் வேண்டின் – புறம் 181/7
TOP


உய்தலும் (1)

ஓடி உய்தலும் கூடும்-மன் – புறம் 193/3
TOP


உய்தி (1)

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என – புறம் 34/6
TOP


உய்ந்த (2)

வை எயிற்று உய்ந்த மதியின் மறவர் – புறம் 260/17
கையகத்து உய்ந்த கன்று உடை பல் ஆன் – புறம் 260/18
TOP


உய்ந்தன்று (1)

உய்ந்தன்று ஆகும் இவள் ஆய் நுதல் கவினே – நற் 181/13
TOP


உய்ந்தன்றோ (1)

சிதைதல் உய்ந்தன்றோ நின் வேல் செழிய – புறம் 25/9
TOP


உய்ந்தனர் (2)

வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ – புறம் 93/11
உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றியோரே – புறம் 100/9
TOP


உய்ந்தனவே (1)

தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே/வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் – நற் 23/1,2
TOP


உய்ந்தனன் (1)

உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்து உடை – புறம் 73/8
TOP


உய்ந்தனனே (1)

உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல் – நற் 17/9
TOP


உய்ந்தனென் (1)

உய்ந்தனென் வாழி தோழி அல்கல் – அகம் 236/10
TOP


உய்ந்து (2)

கரும் கால் குருகின் கோள் உய்ந்து போகிய – நற் 211/4
திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்து ஆங்கு – கலி 134/25
TOP


உய்ப்ப (5)

சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து – பரி 7/74
உரிமை_மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப/மைந்தர் மார்வம் வழி வந்த – பரி 8/121,122
தாழ்வு-உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப/ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ – பரி 11/110,111
ஈர்த்து உய்ப்ப கண்டார் உளர் – கலி 98/26
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப/மேலோர்_உலகம் எய்தினன் எனாஅ – புறம் 240/5,6
TOP


உய்ம்-மார் (1)

நனம் தலை தேஎத்து நன் கலன் உய்ம்-மார்/புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும் – மது 322,323
TOP


உய்ம்மோ (1)

தணந்தனை ஆகி உய்ம்மோ நும் ஊர் – ஐங் 83/2
TOP


உய்யலென் (1)

சில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்து – அகம் 253/8
TOP


உய்யா (4)

உள் கரந்து உறையும் உய்யா அரும் படர் – குறி 11
கைம்மை உய்யா காமர் மந்தி – குறு 69/2
உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல் – கலி 139/18
ஊர் அலர் தூற்றும் இ உய்யா விழுமத்து – கலி 143/48
TOP


உய்யாது (1)

தாழ்வு-உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப – பரி 11/110
TOP


உய்யாமை (1)

யாமம் உய்யாமை நின்றன்று – நற் 335/10
TOP


உய்யாமையின் (1)

செய்யாம் ஆயினும் உய்யாமையின்/செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண் – அகம் 106/7,8
TOP


உய்யும் (2)

பைதல் நெஞ்சம் உய்யும் மாறே – நற் 75/10
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல் – கலி 113/3
TOP


உய்யுமாம் (1)

பாம்பும் அவை படில் உய்யுமாம் பூ கண் – கலி 140/22
TOP


உய்யுமோ (2)

பாயல் உய்யுமோ தோன்றல் தா இன்று – பதி 16/14
தாவல் உய்யுமோ மற்றே தாவாது – பதி 41/17
TOP


உய்யேன் (1)

உய்யேன் போல்வல் தோழி யானே – குறு 108/5
TOP


உய்வு (4)

உய்வு_இடம் அறியேம் ஆகி ஒய்யென – குறி 166
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது – நற் 203/8
உய்வு இன்றி நுந்தை நலன் உண சாஅய் சாஅய்-மார் – கலி 80/16
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ – புறம் 226/2
TOP


உய்வு_இடம் (1)

உய்வு_இடம் அறியேம் ஆகி ஒய்யென – குறி 166
TOP


உய (2)

இரவின் வரூஉம் இடும்பை நாம் உய/வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப – நற் 393/8,9
உள்ளத்து கிளைகளோடு உய போகுவான் போல – கலி 25/8
TOP


உயக்கத்த (1)

பிணி தெறல் உயக்கத்த பெரும் களிற்று இனம் தாங்கும் – கலி 20/4
TOP


உயக்கத்து (3)

நெஞ்சு புகல் ஊக்கத்தர் மெய் தயங்கு உயக்கத்து/இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது – பதி 68/7,8
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து/நிறம் படு குருதி புறம்படின் அல்லது – பதி 79/15,16
உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன – அகம் 392/3
TOP


உயக்கம் (2)

உண்ணா பிணவின் உயக்கம் சொலிய – அகம் 336/3
உண்ணா பிணவின் உயக்கம் தீரிய – அகம் 357/3
TOP


உயக்கமும் (1)

தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால் – புறம் 381/16
TOP


உயக்கமொடு (2)

உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் – அகம் 85/2
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் – அகம் 147/11
TOP


உயங்க (3)

கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க/பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து – நற் 393/2,3
மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க/உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை – கலி 13/5,6
முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு – அகம் 328/10
TOP


உயங்கல் (1)

உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர – அகம் 199/4
TOP


உயங்கி (5)

சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல – நற் 254/4
நல் அகம் நயந்து தான் உயங்கி/சொல்லவும் ஆகாது அஃகியோனே – குறு 346/7,8
உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும் – கலி 92/5
பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கி/செல்வேன் விழுமம் உழந்து – கலி 146/49,50
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி – அகம் 295/6
TOP


உயங்கிய (3)

உண்ணாமையின் உயங்கிய மருங்கின் – அகம் 123/1
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் – அகம் 229/5
உயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டு – அகம் 358/8
TOP


உயங்கின்று (1)

உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ – அகம் 17/3
TOP


உயங்கினள் (1)

உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு – கலி 135/19
TOP


உயங்கினாள் (1)

உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ – கலி 143/18
TOP


உயங்கினை (1)

உயங்கினை மடந்தை என்றி தோழி – நற் 174/7
TOP


உயங்கு (21)

உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ – சிறு 17
ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி – நற் 43/3
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது – நற் 47/2
கயம் தலை மட பிடி உயங்கு பசி களைஇயர் – நற் 137/6
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ – நற் 152/7
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் – நற் 322/5
மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடை – குறு 255/3
உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது – குறு 307/5
உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர – குறு 308/4
வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு – கலி 7/1
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை – கலி 12/4
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை – கலி 13/6
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே – அகம் 19/19
உயங்கு படர் அகலம் முயங்கி தோள் மணந்து – அகம் 102/14
கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர் – அகம் 288/12
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து – அகம் 295/10
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் – அகம் 308/1
உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி – அகம் 353/11
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர் – அகம் 367/9
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை – அகம் 398/23
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி – புறம் 150/4
TOP


உயங்கு-தொறும் (1)

உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே – குறு 244/6
TOP


உயங்கு-வயின் (1)

கணம்_கொள் உமணர் உயங்கு-வயின் ஒழித்த – நற் 138/3
TOP


உயங்கும் (5)

உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும் – முல் 74
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என – அகம் 60/11
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால் – அகம் 145/18
ஊன் இல் யானை உயங்கும் வேனில் – அகம் 233/5
இன்னாது உயங்கும் கங்குலும் – அகம் 270/14
TOP

Related posts