ஈ – முதல் சொற்கள், சங்க இலக்கியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈ 6
ஈஇயாமையின் 1
ஈக 1
ஈகுநரும் 1
ஈகுவன் 1
ஈகை 41
ஈகையின் 2
ஈகையும் 1
ஈங்கண் 1
ஈங்கனம் 1
ஈங்கு 68
ஈங்கும் 1
ஈங்கே 8
ஈங்கை 19
ஈங்கைய 2
ஈங்கோ 1
ஈங்ஙனம் 1
ஈட்டம் 2
ஈட்டிய 1
ஈட்டியும் 1
ஈட்டியோன் 1
ஈட்டு 3
ஈண் 1
ஈண்டல 1
ஈண்டவும் 1
ஈண்டி 24
ஈண்டிய 9
ஈண்டு 48
ஈண்டுக 1
ஈண்டும் 1
ஈண்டுவன 1
ஈண்டே 2
ஈண்டையேனே 2
ஈண்டோர் 1
ஈத்-தொறும் 2
ஈத்த 22
ஈத்தது 2
ஈத்தல் 1
ஈத்தவை 1
ஈத்தனன் 1
ஈத்தனனே 1
ஈத்தனையே 1
ஈத்தார்-கொல்லோ 1
ஈத்தான் 1
ஈத்து 5
ஈத்தும் 1
ஈத்தை 1
ஈத்தோன் 3
ஈதல் 16
ஈதல்லே 1
ஈதலில் 1
ஈதலும் 4
ஈதா 1
ஈது 4
ஈதும் 1
ஈதோளி 1
ஈந்த 3
ஈந்தின் 5
ஈந்து 3
ஈப 1
ஈபவை 1
ஈம் 1
ஈம 4
ஈமத்து 1
ஈமம் 1
ஈய்ந்து 1
ஈய்ந்தும் 1
ஈய 5
ஈயல் 8
ஈயல்_மூதாய் 3
ஈயலன் 1
ஈயலின் 1
ஈயா 7
ஈயாது 9
ஈயாமை 3
ஈயாய் 1
ஈயும் 20
ஈயும்-மன்னே 2
ஈயும்மே 1
ஈயேன் 1
ஈர் 100
ஈர்_அமை_சுற்றொடு 1
ஈர்_இரண்டின் 1
ஈர்_இரண்டு 1
ஈர்_எழு 1
ஈர்_ஏழின் 1
ஈர்_ஐம்பதின்மரும் 2
ஈர்_ஐம்பதின்மரொடு 1
ஈர்க்கவும் 1
ஈர்க்கின் 1
ஈர்க்கு 1
ஈர்க்கும் 5
ஈர்த்த 1
ஈர்த்தது 1
ஈர்த்து 4
ஈர்ந்து 1
ஈர்ந்தையோனே 1
ஈர்ப்ப 2
ஈர்ப்பு 1
ஈர்ம் 31
ஈர 11
ஈரணி 2
ஈரணிக்கு 1
ஈரத்தின் 1
ஈரத்து 5
ஈரத்துள் 1
ஈரம் 12
ஈரமும் 1
ஈரா 1
ஈரிய 6
ஈரும் 1
ஈருளின் 1
ஈவது 1
ஈவாய் 2
ஈவாரை 1
ஈவு 1
ஈவோர் 5
ஈழத்து 1
ஈற்று 4
ஈற்று-உற்று 1
ஈன் 6
ஈன்ம் 1
ஈன்மரோ 1
ஈன்ற 38
ஈன்றணி 1
ஈன்றதன் 1
ஈன்றவள் 2
ஈன்றன்றே 1
ஈன்றன 4
ஈன்றனென் 1
ஈன்றாட்கு 2
ஈன்று 20
ஈன்றேன் 1
ஈன்றோள் 1
ஈன 4
ஈனல் 3
ஈனா 4
ஈனாள் 1
ஈனில் 1
ஈனும் 7
ஈனும்மோ 1

முழு நூலையும் காண இங்கே சொடுக்கவும்.

 1.திருமுருகாற்றுப்படை
 2.பொருநராற்றுப்படை
 3.சிறுபாணாற்றுப்படை
 4.பெரும்பாணாற்றுப்படை
 5.முல்லைப்பாட்டு
 6.மதுரைக்காஞ்சி
 7.நெடுநல்வாடை
 8.குறிஞ்சிப்பாட்டு
 9.பட்டினப்பாலை
 10.மலைபடுகடாம்
 11.நற்றிணை
 12.குறுந்தொகை
 13.ஐங்குறுநூறு
 14.பதிற்றுப்பத்து
 15.பரிபாடல்
 16.கலித்தொகை
 17.அகநானூறு
 18.புறநானூறு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஈ (6)

ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – நற் 264/9
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு – பதி 52/23
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என – பரி 24/58
ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை – புறம் 73/2
ஈ என இரத்தலோ அரிதே நீ அது – புறம் 154/8
ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்_எதிர் – புறம் 204/1
TOP


ஈஇயாமையின் (1)

இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்/தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே – புறம் 165/4,5
TOP


ஈக (1)

இவற்கு ஈக என்னும் அதுவும் அன்றிசினே – புறம் 289/7
TOP


ஈகுநரும் (1)

இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை – புறம் 235/17
TOP


ஈகுவன் (1)

வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டு – புறம் 338/9
TOP


ஈகை (41)

எழுவர் பூண்ட ஈகை செம் நுகம் – சிறு 113
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி – பெரும் 460
இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல் – குறி 126
புலவோர்க்கு சுரக்கும் அவன் ஈகை மாரியும் – மலை 72
மழை சுரந்து அன்ன ஈகை நல்கி – மலை 580
பெரு நல் ஈகை நம் சிறுகுடி பொலிய – நற் 91/9
செ உளை கலி_மா ஈகை வான் கழல் – பதி 38/7
இரும் பனம் புடையல் ஈகை வான் கழல் – பதி 42/1
புலர்ந்த சாத்தின் புலரா ஈகை/மலர்ந்த மார்பின் மா வண் பாரி – பதி 61/7,8
கரையே கைவண் தோன்றல் ஈகை போன்ம் என – பரி 16/1
பண்ணிய ஈகை பயன் கொள்வான் ஆடலால் – பரி 16/51
அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல் – கலி 32/4
உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும் – கலி 32/11
புதுவன ஈகை வளம் பாடி காலின் – கலி 95/9
ஈகை போர் கண்டாயும் போறி மெய் எண்ணின் – கலி 95/12
இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ் – அகம் 152/11
மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ் – அகம் 238/13
தவிரா ஈகை கவுரியர் மருக – புறம் 3/5
தண்டா ஈகை தகை மாண் குடுமி – புறம் 6/26
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை/கடந்து அடு தானை சேரலாதனை – புறம் 8/4,5
வரையா ஈகை குடவர் கோவே – புறம் 17/40
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி – புறம் 24/18
இரவன் மாக்கள் ஈகை நுவல – புறம் 24/30
ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் – புறம் 42/1
வரையா ஈகை உரவோன் மருக – புறம் 43/8
கைவள் ஈகை பண்ணன் சிறுகுடி – புறம் 70/13
தலைப்பாடு அன்று அவன் ஈகை/நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளே – புறம் 70/18,19
ஈகை அம் கழல் கால் இரும் பனம் புடையல் – புறம் 99/5
ஈகை அரிய இழை அணி மகளிரொடு – புறம் 127/5
கைவள் ஈகை கடு மான் பேக – புறம் 143/6
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே – புறம் 152/32
மாரி ஈகை மற போர் மலையனும் – புறம் 158/7
கைவள் ஈகை கடு மான் கொற்ற – புறம் 168/17
மா வள் ஈகை கோதையும் – புறம் 172/10
உவரா ஈகை துவரை ஆண்டு – புறம் 201/10
அளந்து கொடை அறியா ஈகை/மணி வரை அன்ன மாஅயோனே – புறம் 229/26,27
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை/வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள் – புறம் 323/3,4
தாங்கா ஈகை நெடுந்தகை ஊரே – புறம் 325/15
ஈகை கண்ணி இலங்க தைஇ – புறம் 353/3
தாழா ஈகை தகை வெய்யோயே – புறம் 369/28
பொய்யா ஈகை கழல் தொடி ஆஅய் – புறம் 375/11
TOP


ஈகையின் (2)

ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து – பதி 42/13
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க – கலி 47/5
TOP


ஈகையும் (1)

தேற்றா ஈகையும் உளது-கொல் – புறம் 140/9
TOP


ஈங்கண் (1)

ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் – நற் 70/7
TOP


ஈங்கனம் (1)

ஈங்கனம் செல்க தான் என என்னை – புறம் 208/4
TOP


ஈங்கு (68)

ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே – நற் 55/12
பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இது – நற் 75/3
ஈங்கு ஆகின்றால் தோழி பகு வாய் – நற் 144/5
சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே – நற் 168/11
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல் – நற் 238/6
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல் – நற் 378/8
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே – குறு 11/3
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் – குறு 140/4
எமியம் ஆக ஈங்கு துறந்தோர் – குறு 172/3
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே – குறு 173/7
இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று – குறு 175/5
எழில் மிக உடையது ஈங்கு அணிப்படூஉம் – குறு 247/1
ஈங்கு ஆகின்றே தோழி கானல் – குறு 248/3
தொல் நிலை நெகிழ்ந்த வளையன் ஈங்கு/பசந்தனள்-மன் என் தோழி என்னொடும் – குறு 303/4,5
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே – ஐங் 285/5
ஈங்கு காண்கு வந்தனென் யானே – பதி 88/39
நகுதலும் தகுதி ஈங்கு ஊங்கு நின் கிளப்ப – பரி 4/5
தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார் – கலி 16/5
புனை_இழாய் ஈங்கு நாம் புலம்பு உற பொருள் வெஃகி – கலி 16/9
ஒளி_இழாய் ஈங்கு நாம் துயர் கூர பொருள்-வயின் – கலி 16/13
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/14
ஈங்கு நீர் அளிக்கும்-கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/17
அளியரோ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார் – கலி 47/14
இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/13
அணங்கு உடை ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/17
களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/21
பல் கலை சில் பூ கலிங்கத்தள் ஈங்கு இது ஓர் – கலி 56/11
கரும்பு எழுது தொய்யிற்கு செல்வல் ஈங்கு ஆக – கலி 63/8
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ – கலி 69/15
செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாயோ – கலி 69/19
கரி கூறும் கண்ணியை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/14
மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/18
தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/22
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனை கொள்ளாதி – கலி 79/7
ஈங்கு எம் புதல்வனை தந்து – கலி 79/23
எள்ளும்-மார் வந்தாரே ஈங்கு/ஏதப்பாடு எண்ணி புரிசை வியல் உள்ளோர் – கலி 81/24,25
நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ – கலி 85/20
வருக என்றார் யார்-கொலோ ஈங்கு/என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என் – கலி 85/31,32
போர் யானை வந்தீக ஈங்கு/செம்மால் வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை – கலி 86/10,11
ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு/ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம் – கலி 86/29,30
பெண்டிர் உளர்-மன்னோ ஈங்கு/ஒண்_தொடி நீ கண்டது எவனோ தவறு – கலி 90/3,4
அணை மென் தோளாய் செய்யாத சொல்லி சினவுவது ஈங்கு எவன் – கலி 91/6
பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய – கலி 93/3
ஈங்கு உரு சுருங்கி – கலி 94/3
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி – கலி 96/4
சீத்தை பயம் இன்றி ஈங்கு கடித்தது நன்றே – கலி 96/30
எருமை பெடையோடு எமர் ஈங்கு அயரும் – கலி 114/13
ஈங்கு எவன் அஞ்சுவது – கலி 115/16
தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை – கலி 116/2
இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய் – கலி 143/42
வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர் – அகம் 7/11
தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே – அகம் 112/8
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் – அகம் 253/7
ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து – அகம் 307/5
ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து – அகம் 329/2
ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின் – அகம் 337/4
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் – அகம் 388/17
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின் – புறம் 36/11
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல் – புறம் 44/9
வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயலே – புறம் 50/17
வாள் வடக்கிருந்தனன் ஈங்கு/நாள் போல் கழியல ஞாயிற்று பகலே – புறம் 65/11,12
ஈங்கு எவன் செய்தியோ பாண பூண் சுமந்து – புறம் 68/4
நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர் – புறம் 152/23
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் – புறம் 217/2
இனையது ஓர் காலை ஈங்கு வருதல் – புறம் 217/6
நாள் முறை தபுத்தீர் வம்-மின் ஈங்கு என – புறம் 294/6
ஈங்கு இருந்தீமோ முது வாய் பாண – புறம் 319/9
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 391/8
TOP


ஈங்கும் (1)

ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப – அகம் 18/8
TOP


ஈங்கே (8)

ஈங்கே வருவர் இனையல் அவர் என – குறு 192/1
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே/வல்லா கூறி இருக்கும் அள் இலை – குறு 219/4,5
வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கே/எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு – குறு 358/1,2
ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர் – கலி 56/6
ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின் – கலி 64/24
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று ஈங்கே/தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன்-கொலோ – கலி 76/20,21
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே/வருக எம் பாக_மகன் – கலி 80/8,9
வதுவையும் ஈங்கே அயர்ப அதுவே யாம் – கலி 115/20
TOP


ஈங்கை (19)

ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை – குறி 86
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ – நற் 79/1
கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை/நல் தளிர் நயவர நுடங்கும் – நற் 86/7,8
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை/முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் – நற் 124/4,5
நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன – நற் 181/4
அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை/துய் தலை புது மலர் துளி தலை கலாவ – நற் 193/1,2
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் – நற் 205/9
பனி புதல் ஈங்கை அம் குழை வருட – நற் 312/2
நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த – குறு 110/5
வெண் கொடி ஈங்கை பைம் புதல் அணியும் – ஐங் 456/3
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக – கலி 31/3
மாரி ஈங்கை மா தளிர் அன்ன – அகம் 75/17
இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை/ஆலி அன்ன வால் வீ தாஅய் – அகம் 125/3,4
மாரி ஈங்கை மா தளிர் அன்ன – அகம் 206/7
வாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்ப – அகம் 243/2
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கை/துய் அவிழ் பனி மலர் உதிர வீசி – அகம் 252/9,10
துய் தலை பூவின் புதல் இவர் ஈங்கை/நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர் – அகம் 294/6,7
முள் கொம்பு ஈங்கை துய் தலை புது வீ – அகம் 306/3
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த – அகம் 357/1
TOP


ஈங்கைய (2)

மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே – நற் 2/6
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கைய/வண்ண துய்ம் மலர் உதிர – குறு 380/5,6
TOP


ஈங்கோ (1)

யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ/சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் – நற் 397/6,7
TOP


ஈங்ஙனம் (1)

ஈங்ஙனம் வருபவோ தேம் பாய் துறைவ – குறு 336/2
TOP


ஈட்டம் (2)

செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/15
கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம்/நிவந்தது நீத்தம் கரை மேலா நீத்தம் – பரி 12/33,34
TOP


ஈட்டிய (1)

ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை – அகம் 60/9
TOP


ஈட்டியும் (1)

செறி இலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும் – பரி 5/66
TOP


ஈட்டியோன் (1)

இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் – அகம் 276/13
TOP


ஈட்டு (3)

மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப – அகம் 5/10
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் – அகம் 222/6
ஈட்டு அரும்-குரைய பொருள்-வயின் செலினே – அகம் 239/11
TOP


ஈண் (1)

ஈண் பல் நாற்றம் வேண்டு-வயின் உவப்ப – அகம் 379/12
TOP


ஈண்டல (1)

கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி – நற் 186/1
TOP


ஈண்டவும் (1)

விலைஞர் குரம்பை மா ஈண்டவும்/கொலை கடிந்தும் களவு நீக்கியும் – பட் 198,199
TOP


ஈண்டி (24)

அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி/கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப – மது 240,241
பல் வேறு தாரமொடு கல்_அகத்து ஈண்டி/தினை விளை சாரல் கிளி கடி பூசல் – மது 290,291
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின் – குறி 189
வரம்பு அறியாமை வந்து ஈண்டி/அரும் கடி பெரும் காப்பின் – பட் 132,133
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி/வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் – பட் 192,193
என்று இ அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி/அவலவும் மிசையவும் துவன்றி பல உடன் – மலை 345,346
குழைவான் கண்ணிடத்து ஈண்டி தண்ணென – நற் 229/9
ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி/கலி கெழு மறுகின் விழவு அயரும்மே – நற் 348/3,4
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி/உரவு திரை கடுகிய உருத்து எழு வெள்ளம் – பதி 72/9,10
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும் – பரி 2/11
விரைபு_விரைபு மிகை_மிகை ஈண்டி/ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல் – பரி 12/30,31
ஆனாது வந்து தொகுபு ஈண்டி மற்று அவன் – பரி 22/9
காவு நிறைய கரை நெரிபு ஈண்டி/வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் – பரி 22/25,26
திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டி/திரு நய_தக்க வயல் – பரி 23/16,17
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி/அறத்தின் திரியா பதி – பரி 23/20,21
இடை ஒழிவு இன்றி அடியுறையார் ஈண்டி/விளைந்து ஆர் வினையின் விழு பயன் துய்க்கும் – பரி 23/45,46
புரிபு நீ புறம்மாறி போக்கு எண்ணி புதிது ஈண்டி/பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ – கலி 15/10,11
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி/நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப – கலி 101/11,12
இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த-கால் – கலி 136/1
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி/காடு கால்யாத்த நீடு மர சோலை – அகம் 109/4,5
காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி/எக்கர் இட்ட குப்பை வெண் மணல் – அகம் 181/12,13
இமையத்து ஈண்டி இன் குரல் பயிற்றி – புறம் 34/21
இரு நிலம் நெளிய ஈண்டி/உரும் உரறு கருவிய மழை பொழிந்து ஆங்கே – புறம் 174/27,28
வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டி/கடல் ஒலி கொண்ட தானை – புறம் 377/28,29
TOP


ஈண்டிய (9)

நாள் ஈண்டிய நல் அகவர்க்கு – மது 223
பல் வேறு வகைய நனம் தலை ஈண்டிய/மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் – பதி 59/14,15
நிலம் வகுந்து உறாஅ ஈண்டிய தானையொடு – அகம் 124/4
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் – அகம் 393/15
காண்கு வந்திசின் பெரும ஈண்டிய/மழை என மருளும் பல் தோல் மலை என – புறம் 17/33,34
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை – புறம் 23/15
கடு வளி தொகுப்ப ஈண்டிய/வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே – புறம் 55/22,23
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை – புறம் 62/11
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய/இருளும் உண்டோ ஞாயிறு சினவின் – புறம் 90/4,5
TOP


ஈண்டு (48)

இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி – பெரும் 406
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு – முல் 90
வேல் ஈண்டு தொழுதி இரிவு-உற்று என்ன – மலை 116
காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் – நற் 23/5
நெஞ்சே நல்வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்து – நற் 107/8
வழுதி வாழிய பல என தொழுது ஈண்டு/மன் எயில் உடையோர் போல அஃது யாம் – நற் 150/4,5
நெஞ்சம் அவர்-வயின் சென்று என ஈண்டு ஒழிந்து – நற் 153/6
இரும் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவி – நற் 157/1
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய – நற் 161/4
தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினை – நற் 161/8
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய – நற் 205/6
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல் – நற் 267/10
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என – நற் 315/1
அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே – குறு 99/6
சிறியவும் உள ஈண்டு விலைஞர் கை வளையே – குறு 117/6
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே – குறு 151/6
இரும் கண் ஞாலத்து ஈண்டு பய பெரு வளம் – குறு 267/1
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர் – குறு 285/3
குவளை தண் தழை இவள் ஈண்டு வருந்த – குறு 342/5
ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே – ஐங் 46/4
ஆண்டு செய் குறியோடு ஈண்டு நீ வரலே – ஐங் 48/5
ஆண்டு நீர் பெற்ற தாரம் ஈண்டு இவர் – பதி 48/5
நோய் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து – பதி 84/16
மறப்ப அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய – கலி 2/9
பேதாய் பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை யாழ – கலி 61/15
பணிந்தாய் போல் வந்து ஈண்டு பயனில மொழிவாயோ – கலி 69/11
ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல் – கலி 100/1
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின் – கலி 143/44
நோய் தணி காதலர் வர ஈண்டு/ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே – அகம் 22/20,21
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என – அகம் 103/11
எருவை சேவல் ஈண்டு கிளை பயிரும் – அகம் 161/6
வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை – அகம் 336/21
ஈண்டு அரும்-குரையள் நம் அணங்கியோளே – அகம் 372/16
எருவை சேவல் ஈண்டு கிளை தொழுதி – அகம் 381/10
வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி – அகம் 387/13
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு/உடம்பும் உயிரும் படைத்திசினோரே – புறம் 18/22,23
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகல் கிடக்கை – புறம் 19/1
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது – புறம் 25/2
முறை வேண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு/உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோறே – புறம் 35/15,16
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய – புறம் 41/2
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ஆண்டு அவர் – புறம் 78/9
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே – புறம் 107/4
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறு வரை – புறம் 114/1
ஈண்டு செலல் கொண்மூ வேண்டு வயின் குழீஇ – புறம் 161/2
ஈண்டு செய் நல் வினை ஆண்டு சென்று உணீஇயர் – புறம் 174/19
யாண்டும் நாளும் பெருகி ஈண்டு திரை – புறம் 198/18
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி – புறம் 214/2
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே – புறம் 359/18
TOP


ஈண்டுக (1)

ஈண்டுக இவள் நலம் ஏறுக தேரே – கலி 136/21
TOP


ஈண்டும் (1)

ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் – புறம் 38/16
TOP


ஈண்டுவன (1)

இரும் பிடி தொழுதியின் ஈண்டுவன குழீஇ – அகம் 334/6
TOP


ஈண்டே (2)

ஈண்டே காண கடவு-மதி பூ கேழ் – அகம் 334/15
ஈண்டே போல வேண்டுவன் ஆயின் – புறம் 292/5
TOP


ஈண்டையேனே (2)

யானே ஈண்டையேனே என் நலனே – குறு 54/1
யானே ஈண்டையேனே என் நலனே – குறு 97/1
TOP


ஈண்டோர் (1)

ஈண்டோர் இன் சாயலனே வேண்டார் – புறம் 178/6
TOP


ஈத்-தொறும் (2)

ஈத்தது இரங்கான் ஈத்-தொறும் மகிழான் – பதி 61/12
ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் – பதி 61/13
TOP


ஈத்த (22)

இரு நிலத்தோரும் இயைக என ஈத்த நின் – பரி 19/4
எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆர பூண் – பரி 20/76
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ – கலி 59/17
பொறை என் வரைத்து அன்றி பூ_நுதல் ஈத்த/நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற – கலி 138/14,15
தோளாள் எமக்கு ஈத்த பூ – கலி 138/19
உறீஇயாள் ஈத்த இ மா – கலி 139/19
எழில்_நுதல் ஈத்த இ மா – கலி 139/25
நேர்_இழை ஈத்த இ மா – கலி 139/31
நல்_நுதல் ஈத்த இ மா – கலி 140/16
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் – அகம் 136/18
ஓரி கொன்று சேரலர்க்கு ஈத்த/செம் வேர் பலவின் பயம் கெழு கொல்லி – அகம் 209/14,15
செம் நீர் பசும்_பொன் வயிரியர்க்கு ஈத்த/முந்நீர் விழவின் நெடியோன் – புறம் 9/9,10
மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர் – புறம் 123/4
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று – புறம் 129/6
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ – புறம் 141/11
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை – புறம் 145/2
ஈத்த நின் புகழ் ஏத்தி தொக்க என் – புறம் 159/20
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை – புறம் 201/3
காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர் – புறம் 208/6
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே – புறம் 221/1
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே – புறம் 221/2
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார் – புறம் 241/1
TOP


ஈத்தது (2)

ஈத்தது இரங்கான் ஈத்-தொறும் மகிழான் – பதி 61/12
விரி கதிர் மணி பூணவற்கு தான் ஈத்தது/அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின் – பரி 5/32,33
TOP


ஈத்தல் (1)

ஊண் முறை ஈத்தல் அன்றியும் கோள் முறை – புறம் 392/18
TOP


ஈத்தவை (1)

ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன் சீத்தை – கலி 84/18
TOP


ஈத்தனன் (1)

மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன்/எ நாடோ என நாடும் சொல்லான் – புறம் 150/21,22
TOP


ஈத்தனனே (1)

என்று ஈத்தனனே இசை சால் நெடுந்தகை – புறம் 389/6
TOP


ஈத்தனையே (1)

சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே – புறம் 91/11
TOP


ஈத்தார்-கொல்லோ (1)

உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்-கொல்லோ/படை இடுவான்-மன் கண்டீர் காமன் மடை அடும் – கலி 109/18,19
TOP


ஈத்தான் (1)

இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக – பரி 20/33
TOP


ஈத்து (5)

ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88
ஈத்து கை தண்டா கை கடும் துப்பின் – பதி 15/36
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் – பதி 32/6
ஈத்து இலை குப்பை ஏறி உமணர் – புறம் 116/7
தாயின் நன்று பலர்க்கு ஈத்து/தெருள் நடை மா களிறொடு தன் – புறம் 361/6,7
TOP


ஈத்தும் (1)

தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்/புரி மாலையர் பாடினிக்கு – புறம் 361/10,11
TOP


ஈத்தை (1)

ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம் – கலி 86/30
TOP


ஈத்தோன் (3)

இரவினானே ஈத்தோன் எந்தை – புறம் 376/16
ஈத்தோன் எந்தை இசை தனது ஆக – புறம் 386/9
அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை – புறம் 396/24
TOP


ஈதல் (16)

ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே – மது 205
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் – பதி 24/7
ஈதல் தண்டா மா சிதறு இருக்கை – பதி 76/8
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/21
செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் – கலி 61/11
ஈதல் மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/22
ஈதல் இன்பம் வெஃகி மேவர – அகம் 69/5
இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என – அகம் 131/5
அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல்/பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல் – அகம் 335/2,3
ஈதல் நின் புகழும் அன்றே சார்தல் – புறம் 39/4
ஈதல் எளிதே மா வண் தோன்றல் – புறம் 121/4
ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்கு – புறம் 139/11
எ துணை ஆயினும் ஈதல் நன்று என – புறம் 141/13
செல்வத்து பயனே ஈதல்/துய்ப்பேம் எனினே தப்புந பலவே – புறம் 189/7,8
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே – புறம் 205/2
ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை – புறம் 337/5
TOP


ஈதல்லே (1)

யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே/தொலையா நல் இசை விளங்கு மலயன் – புறம் 123/2,3
TOP


ஈதலில் (1)

ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய – கலி 27/1
TOP


ஈதலும் (4)

இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் – நற் 214/1
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என – குறு 63/1
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடா – பரி 9/17
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் – புறம் 38/14
TOP


ஈதா (1)

அரியளோ ஆவது அறிந்திலேன் ஈதா/வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் – பரி 8/60,61
TOP


ஈது (4)

வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே – நற் 323/11
என் நீ பெறாதது ஈது என் – கலி 61/9
தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் – கலி 82/23
நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு – புறம் 208/3
TOP


ஈதும் (1)

ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ – நற் 200/5
TOP


ஈதோளி (1)

எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேனால் – கலி 117/13
TOP


ஈந்த (3)

ஈர நன் மொழி இரவலர்க்கு ஈந்த/அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல் – சிறு 93,94
அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த/உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல் – சிறு 101,102
குறும் பொறை நன் நாடு கோடியர்க்கு ஈந்த/காரி குதிரை காரியொடு மலைந்த – சிறு 109,110
TOP


ஈந்தின் (5)

களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130
ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு – நற் 2/2
கரும் களி ஈந்தின் வெண் புற களரி – நற் 126/2
கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன – நற் 174/1
செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின்/பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த – அகம் 21/20,21
TOP


ஈந்து (3)

ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை – அகம் 55/2
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து/நார் பிழி கொண்ட வெம் கள் தேறல் – புறம் 170/11,12
இவற்கு ஈந்து உண்-மதி கள்ளே சின போர் – புறம் 290/1
TOP


ஈப (1)

பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என – புறம் 136/21
TOP


ஈபவை (1)

நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே – பரி 20/85
TOP


ஈம் (1)

அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என – பதி 64/10
TOP


ஈம (4)

கரி புற விறகின் ஈம ஒள் அழல் – புறம் 231/2
வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி – புறம் 256/5
ஈம விளக்கின் பேஎய்_மகளிரொடு – புறம் 356/3
ஈம விளக்கின் வெருவர பேரும் – புறம் 359/7
TOP


ஈமத்து (1)

வெள் இடை பொத்திய விளை விறகு ஈமத்து/ஒள் அழல் பள்ளி பாயல் சேர்த்தி – புறம் 245/4,5
TOP


ஈமம் (1)

பெரும் காட்டு பண்ணிய கரும் கோட்டு ஈமம்/நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம் – புறம் 246/11,12
TOP


ஈய்ந்து (1)

யார்க்கும் ஈய்ந்து துயில் ஏற்பினனே – புறம் 317/7
TOP


ஈய்ந்தும் (1)

உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும்/மகிழ்கம் வம்மோ மற போரோயே – புறம் 364/7,8
TOP


ஈய (5)

வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய/கண் களி பெறூஉம் கவின் பெறு காலை – நற் 56/2,3
வாள் தந்தனனே தலை எனக்கு ஈய/தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் – புறம் 165/12,13
இரவல் மாக்களுக்கு ஈய தொலைந்தன – புறம் 328/4
பரிசில் பரிசிலர்க்கு ஈய/உரவு வேல் காளையும் கைதூவானே – புறம் 334/10,11
இழிபிறப்பினோன் ஈய பெற்று – புறம் 363/14
TOP


ஈயல் (8)

நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி – நற் 59/2
நெடும் செம் புற்றம் ஈயல் பகர – ஐங் 497/2
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த – அகம் 8/1
ஈயல்_மூதாய் வரிப்ப பவளமொடு – அகம் 14/3
அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய் – அகம் 139/13
ஈயல்_மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப – அகம் 304/15
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு – அகம் 394/5
செம் புற்று ஈயல் போல – புறம் 51/10
TOP


ஈயல்_மூதாய் (3)

ஈயல்_மூதாய் வரிப்ப பவளமொடு – அகம் 14/3
அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய்/பரப்பியவை போல் பாஅய் பல உடன் – அகம் 139/13,14
ஈயல்_மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப – அகம் 304/15
TOP


ஈயலன் (1)

வயிறு பசி கூர ஈயலன்/வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே – பதி 20/26,27
TOP


ஈயலின் (1)

செம் புற்று ஈயலின் இன் அளை புளித்து – புறம் 119/3
TOP


ஈயா (7)

வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம் – பதி 19/18
இரவலர்க்கு அரும் கலம் அருகாது ஈயா/யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் – புறம் 56/17,18
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே – புறம் 72/18
ஈயா மன்னர் நாண – புறம் 168/21
கண்படை ஈயா வேலோன் ஊரே – புறம் 322/10
நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா/வல்லன் எந்தை பசி தீர்த்தல் என – புறம் 379/9,10
ஈயா மன்னர் புறங்கடை தோன்றி – புறம் 381/11
TOP


ஈயாது (9)

கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல் – நற் 378/2
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயில் ஈயாது/மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ் – பதி 12/7,8
மதில் வாய் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர் – பதி 71/11
கந்து கோள் ஈயாது காழ் பல முருக்கி – பதி 77/8
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது/ஊர்க பாக ஒருவினை கழிய – அகம் 44/5,6
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் – அகம் 276/13
ஈயாது வீயும் உயிர் தவ பலவே – புறம் 235/20
முயக்கு இடை ஈயாது மொய்த்தன பருந்தே – புறம் 288/9
நீரும் புல்லும் ஈயாது உமணர் – புறம் 307/7
TOP


ஈயாமை (3)

தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/11
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/15
திடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/19
TOP


ஈயாய் (1)

ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன் – புறம் 209/13
TOP


ஈயும் (20)

ஓவாது ஈயும் மாரி வண் கை – குறு 91/5
கொள்ளா பாடற்கு எளிதின் ஈயும்/கல்லா வாய்மையன் இவன் என தத்தம் – பதி 48/6,7
கலி மகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும்/சுரும்பு ஆர் சோலை பெரும் பெயல் கொல்லி – பதி 81/23,24
நன் கலன் ஈயும் நகை சால் இருக்கை – பதி 94/3
தேர் ஈயும் வண் கையவன் – கலி 42/21
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்/வள் வாய் அம்பின் கோடை பொருநன் – அகம் 13/9,10
நன் கலன் ஈயும் நாள்_மகிழ்_இருக்கை – அகம் 76/4
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் – அகம் 208/4
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்/உரை சால் வண் புகழ் பாரி பறம்பின் – அகம் 303/9,10
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்/பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன – அகம் 366/11,12
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ – புறம் 22/33
ஆனாது ஈயும் கவிகை வண்மை – புறம் 54/7
பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி – புறம் 113/3
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே – புறம் 119/7
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும்/சுடர்விடு பசும் பூண் சூர்ப்பு அமை முன்கை – புறம் 153/2,3
தள்ளாது ஈயும் தகை சால் வண்மை – புறம் 158/15
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்/மடவர் மகிழ் துணை நெடுமான்_அஞ்சி – புறம் 315/2,3
அருகாது ஈயும் வண்மை – புறம் 320/17
அருகாது ஈயும் வண்மை – புறம் 329/8
தலைப்பெய்து வருநர்க்கு ஈயும்/புனல் அம் கள்ளின் பொலம் தார் குட்டுவன் – புறம் 343/8,9
TOP


ஈயும்-மன்னே (2)

சிறிய கள் பெறினே எமக்கு ஈயும்-மன்னே/பெரிய கள் பெறினே – புறம் 235/1,2
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே/அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னே – புறம் 235/6,7
TOP


ஈயும்மே (1)

நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே – புறம் 109/18
TOP


ஈயேன் (1)

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று – புறம் 204/2
TOP


ஈர் (100)

துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி – திரு 20
ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை – திரு 157
ஈர் உடை இரும் தலை ஆர சூடி – பெரும் 219
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி – பெரும் 341
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய – பெரும் 415
எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் – முல் 64
இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ – நெடு 42
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு – நெடு 119
நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் – மலை 106
இரு வெதிர் ஈர் கழை தத்தி கல்லென – மலை 207
புலரா ஈர் மணல் மலிர கெண்டி – நற் 21/10
மை ஈர் ஓதி பெரு மட தகையே – நற் 29/11
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி – நற் 40/7
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த – நற் 40/9
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே – நற் 57/10
ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு – நற் 114/9
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் – நற் 121/2
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் – நற் 123/10
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே – நற் 133/2
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை – நற் 194/4
பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ – நற் 227/4
சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம் – நற் 232/1
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற – நற் 241/3
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப – நற் 242/1
நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண் – நற் 284/2
ஈர் மண் செய்கை நீர் படு பசும் கலம் – நற் 308/9
மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி – நற் 314/3
ஈர் அளை புற்றம் கார் என முற்றி – நற் 336/9
நீர் அலை கலைஇய ஈர் இதழ் தொடையல் – நற் 339/7
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப – நற் 364/8
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும் – குறு 11/1
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த – குறு 31/5
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறு_மகள் – குறு 70/1
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு – குறு 117/2
மை ஈர் ஓதி மாஅயோள்-வயின் – குறு 199/5
ஈர் மணல் காட்டாறு வரூஉம் – குறு 275/7
ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமென – குறு 351/3
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும் – குறு 365/1
ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு – குறு 401/3
கோடு ஈர் எல் வளை கொழும் பல் கூந்தல் – ஐங் 196/1
தேம் பலி செய்த ஈர் நறும் கையள் – ஐங் 259/4
இணை_ஈர்_ஓதி நீ அழ – ஐங் 269/4
ஈர் இதழ் உண்கண் உகுத்த – ஐங் 480/4
போர் தலைமிகுத்த ஈர்_ஐம்பதின்மரொடு – பதி 14/5
ஒடுங்கு ஈர் ஓதி கொடும்_குழை கணவ – பதி 14/15
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை – பதி 52/18
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் கருவில் – பதி 74/17
எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து – பதி 74/18
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்_நுதல் அணி கொள – பதி 81/28
அணி நிழல் வயங்கு ஒளி ஈர் எண் தீம் கதிர் – பரி 3/51
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் – பரி 7/58
இருள் மை ஈர் உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு – பரி 8/59
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர – பரி 11/86
ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் – பரி 22/22
ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல் – கலி 21/2
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும் – கலி 32/7
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி – கலி 36/23
ஈர் தண் ஆடையை எல்லி மாலையை – கலி 52/11
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி – கலி 64/3
இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும் எல்லாம் – கலி 64/21
ஈர் அணி சிதையாது எம் இல் வந்து நின்றதை – கலி 66/16
காலவை சுடு பொன் வளைஇய ஈர்_அமை_சுற்றொடு – கலி 85/1
செறிய கட்டி ஈர் இடை தாழ்ந்த – கலி 85/9
ஈர் அணிக்கு ஏற்ற ஒடியா படிவத்து – கலி 93/25
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி – கலி 104/21
மை ஈர் ஓதி மட மொழியோயே – கலி 150/23
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை – அகம் 19/11
மை ஈர் ஓதி மடவீர் நும் வாய் – அகம் 48/18
இன் தீம் பைம் சுனை ஈர் அணி பொலிந்த – அகம் 59/13
விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதர – அகம் 64/9
ஈர் உயிர் பிணவின் வயவு பசி களைஇய – அகம் 72/12
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி – அகம் 86/15
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே – அகம் 86/31
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே – அகம் 107/22
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின் – அகம் 114/3
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த – அகம் 135/12
நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ – அகம் 139/15
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி – அகம் 155/12
ஒடுங்கு_ஈர்_ஓதி நினக்கும் அற்றோ – அகம் 160/1
வதுவை ஈர் அணி பொலிந்து நம்மொடு – அகம் 166/13
மை_ஈர்_ஓதி அரும் படர் உழத்தல் – அகம் 173/5
மை ஈர் ஓதி வாள் நுதல் குறு_மகள் – அகம் 230/5
இளம் துணை மகளிரொடு ஈர் அணி கலைஇ – அகம் 266/5
மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர – அகம் 267/8
மை ஈர் ஓதி மாஅயோளே – அகம் 279/17
மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும் – அகம் 295/19
நீரொடு பொருத ஈர் இதழ் மழை கண் – அகம் 299/14
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப – அகம் 334/14
துணை ஈர் ஓதி மாஅயோள்-வயின் – அகம் 338/8
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப – அகம் 350/4
மின் ஈர் ஓதி என்னை நின் குறிப்பே – அகம் 356/20
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின் – அகம் 386/10
மை ஈர் ஓதி மட நல்லீரே – அகம் 388/10
முதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டு – அகம் 393/4
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய் புற்றத்து – அகம் 394/4
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய – புறம் 2/15
ஈர் குழாத்தொடு இறைகூர்ந்த – புறம் 136/4
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என் – புறம் 164/6
ஒன்று புரிந்த ஈர்_இரண்டின் – புறம் 166/3
ஈர்_ஏழின் இடம் முட்டாது – புறம் 166/20
TOP


ஈர்_அமை_சுற்றொடு (1)

காலவை சுடு பொன் வளைஇய ஈர்_அமை_சுற்றொடு/பொடி அழல் புறந்தந்த செய்வு-உறு கிண்கிணி – கலி 85/1,2
TOP


ஈர்_இரண்டின் (1)

ஒன்று புரிந்த ஈர்_இரண்டின்/ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் – புறம் 166/3,4
TOP


ஈர்_இரண்டு (1)

ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை – திரு 157
TOP


ஈர்_எழு (1)

ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த – அகம் 135/12
TOP


ஈர்_ஏழின் (1)

ஈர்_ஏழின் இடம் முட்டாது – புறம் 166/20
TOP


ஈர்_ஐம்பதின்மரும் (2)

ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய – பெரும் 415
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய – புறம் 2/15
TOP


ஈர்_ஐம்பதின்மரொடு (1)

போர் தலைமிகுத்த ஈர்_ஐம்பதின்மரொடு/துப்பு துறைபோகிய துணிவு உடை ஆண்மை – பதி 14/5,6
TOP


ஈர்க்கவும் (1)

பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல் – கலி 143/32
TOP


ஈர்க்கின் (1)

ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று – மது 708
TOP


ஈர்க்கு (1)

ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை – பொரு 36
TOP


ஈர்க்கும் (5)

பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்/கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு – அகம் 8/7,8
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் – அகம் 18/5
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்/வாள் நடந்து அன்ன வழக்கு அரும் கவலை – அகம் 72/15,16
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்/மீன் முதிர் இலஞ்சி கலித்த தாமரை – அகம் 186/2,3
இரும் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்/பெரும் கல் நாட பிரிதி ஆயின் – அகம் 238/9,10
TOP


ஈர்த்த (1)

அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என் – கலி 131/29
TOP


ஈர்த்தது (1)

ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க – கலி 98/27
TOP


ஈர்த்து (4)

அம் வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன – நற் 25/1
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல – குறு 61/3
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே – கலி 80/8
ஈர்த்து உய்ப்ப கண்டார் உளர் – கலி 98/26
TOP


ஈர்ந்து (1)

ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தட கையின் – சிறு 19
TOP


ஈர்ந்தையோனே (1)

ஈர்ந்தையோனே பாண் பசி பகைஞன் – புறம் 180/7
TOP


ஈர்ப்ப (2)

வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப/ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய – பெரும் 414,415
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப/குருதி ஆரும் எருவை செம் செவி – அகம் 111/11,12
TOP


ஈர்ப்பு (1)

ஈர்ப்பு உடை கராஅத்து அன்ன என் ஐ – புறம் 104/4
TOP


ஈர்ம் (31)

துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் – நற் 87/7
வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ – நற் 120/5
இரும் கழி துழைஇய ஈர்ம் புற நாரை – நற் 127/1
இல்லமொடு மிடைந்த ஈர்ம் தண் கண்ணியன் – நற் 376/6
இருள் திணிந்து அன்ன ஈர்ம் தண் கொழு நிழல் – குறு 123/1
எறி திரை திவலை ஈர்ம் புறம் நனைப்ப – குறு 334/2
ஈர்ம் தண் பெரு வடு பாலையில் குறவர் – ஐங் 213/2
இரு வெதிர் ஈர்ம் கழை ஏறி சிறு கோல் – ஐங் 280/2
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை – ஐங் 354/1
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படை கொங்கர் – பதி 77/10
இலையும் மயிரும் ஈர்ம் சாந்து நிழத்த – பரி 6/19
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன் – கலி 38/1
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த – அகம் 8/1
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப – அகம் 56/6
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி – அகம் 64/10
இவர் திரை தந்த ஈர்ம் கதிர் முத்தம் – அகம் 130/9
மிளை நாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த – அகம் 133/16
ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப – அகம் 186/11
இரவு பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறே – அகம் 222/15
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றை – அகம் 243/3
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய – அகம் 269/9
ஈயல்_மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப – அகம் 304/15
ஈர்ம் புறவு இயம் வழி அறுப்ப தீம் தொடை – அகம் 314/11
ஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்து – அகம் 316/3
மாரி ஈர்ம் தளிர் அன்ன மேனி – அகம் 337/2
மாரி சுதையின் ஈர்ம் புறத்து அன்ன – அகம் 346/2
ஈர்ம் தண் சிலம்பின் இருள் தூங்கும் நளி முழை – புறம் 158/10
ஈர்ம் தண் முழவின் பாணி ததும்ப – புறம் 194/2
எச்சில் ஈர்ம் கை வில் புறம் திமிரி – புறம் 258/5
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய – புறம் 367/4
ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 393/10
TOP


ஈர (11)

ஈர நன் மொழி இரவலர்க்கு ஈந்த – சிறு 93
இரும் களி பரந்த ஈர வெண் மணல் – நெடு 16
ஈர நன் மொழி தீர கூறி – குறி 234
இரும் கழி பொருத ஈர வெண் மணல் – நற் 145/1
ஈர நெஞ்சின் தன்-வயின் விளிப்ப – நற் 181/8
மறு கால் உழுத ஈர செறுவின் – நற் 210/2
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க – நற் 381/8
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து – பரி 14/27
ஈர மாலை இயல் அணியார் – பரி 17/36
ஈர செவ்வி உதவின ஆயினும் – புறம் 289/1
ஈர செறு வயின் தேர் ஏர் ஆக – புறம் 369/10
TOP


ஈரணி (2)

ஈரணி அணியின் இகல் மிக நவின்று – பரி 6/28
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர – பரி 7/61
TOP


ஈரணிக்கு (1)

எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற – பரி 22/18
TOP


ஈரத்தின் (1)

இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின் – கலி 10/18
TOP


ஈரத்து (5)

களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து/பால் வீ தோல் முலை அகடு நிலம் சேர்த்தி – நற் 103/4,5
புறம் மாறுபெற்ற பூவல் ஈரத்து/ஊன் கிழித்து அன்ன செம் சுவல் நெடும் சால் – அகம் 194/3,4
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து/தோடு வளர் பைம் தினை நீடு குரல் காக்கும் – அகம் 368/2,3
கார் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து/பூழி மயங்க பல உழுது வித்தி – புறம் 120/2,3
நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து/அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும் – புறம் 392/7,8
TOP


ஈரத்துள் (1)

ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல் கயத்து – கலி 41/30
TOP


ஈரம் (12)

ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா – குறி 109
நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி – நற் 233/7
ஈரம் பட்ட செவ்வி பைம் புனத்து – குறு 131/4
ஈரம் உடைமையின் நீர் ஓர் அனையை – பதி 90/14
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர – பரி 7/61
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள் – கலி 84/8
ஈரம் ஆய்விட்டன புண் – கலி 95/18
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி – கலி 120/13
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ – கலி 144/61
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழி – அகம் 65/3
ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்-வயின் – அகம் 277/12
ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை – அகம் 395/6
TOP


ஈரமும் (1)

அறிவும் ஈரமும் பெரும் கணோட்டமும் – புறம் 20/6
TOP


ஈரா (1)

இரும் கோள் ஈரா பூட்கை – புறம் 381/25
TOP


ஈரிய (6)

ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் – குறி 248
பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ – நற் 29/9
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே – நற் 195/9
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த – நற் 379/8
மாரி அம் குருகின் ஈரிய குரங்க – அகம் 235/13
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர – அகம் 294/8
TOP


ஈரும் (1)

ஈரும் பேனும் இருந்து இறைகூடி – பொரு 79
TOP


ஈருளின் (1)

இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர – அகம் 294/8
TOP


ஈவது (1)

ஈவது இலாளன் என்னாது நீயும் – புறம் 316/8
TOP


ஈவாய் (2)

நன்றும் தடைஇய மென் தோளாய் கேட்டு ஈவாய் ஆயின் – கலி 93/5
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி – கலி 93/16
TOP


ஈவாரை (1)

ஈவாரை கொண்டாடி ஏற்பாரை பார்த்து உவக்கும் – பரி 34/1
TOP


ஈவு (1)

பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி – புறம் 127/8
TOP


ஈவோர் (5)

எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர் – புறம் 136/20
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்/பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என – புறம் 136/20,21
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என – புறம் 136/21
ஈவோர் உண்மையும் காண் இனி நின் ஊர் – புறம் 162/4
ஈவோர் அரிய இ உலகத்து – புறம் 171/14
TOP


ஈழத்து (1)

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட் 191
TOP


ஈற்று (4)

ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும் – பொரு 151
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 186
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என – நற் 179/1
நீ நீங்கு கன்று சேர்ந்தார்-கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு – கலி 116/8
TOP


ஈற்று-உற்று (1)

சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று-உற்று என – புறம் 82/1
TOP


ஈன் (6)

ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ் – பெரும் 90
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினை – நற் 3/1
ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி – நற் 332/6
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை – குறு 38/1
காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/3
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் – அகம் 13/19
TOP


ஈன்ம் (1)

அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என – நற் 214/2
TOP


ஈன்மரோ (1)

ஈன்மரோ இ உலகத்தானே – புறம் 74/7
TOP


ஈன்ற (38)

உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற/கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் – சிறு 60,61
பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி – பெரும் 243
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே – நற் 8/10
இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை – நற் 116/4
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை – நற் 188/2
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை – நற் 225/3
வன்கண் காளையை ஈன்ற தாயே – நற் 293/9
புதல்வன் ஈன்ற பூ கண் மடந்தை – நற் 355/1
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மட பிடி – நற் 399/6
நறவு மலி பாக்கத்து குற_மகள் ஈன்ற/குறி இறை புதல்வரொடு மறுவந்து ஓடி – குறு 394/2,3
புதல்வனை ஈன்ற எம் மேனி – ஐங் 65/3
நெடும் புதல் கானத்து மட பிடி ஈன்ற/நடுங்கு நடை குழவி கொளீஇய பலவின் – ஐங் 216/2,3
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே – ஐங் 399/5
வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே – பதி 20/27
நின் ஈன்ற நிரை இதழ் தாமரை – பரி 8/13
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா – பரி 8/14
சான்றாளர் ஈன்ற தகாஅ தகாஅ மகாஅன் – பரி 8/57
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல் – கலி 29/7
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை – கலி 94/6
படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை – கலி 138/12
மணி பொரு பசும்_பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல் – கலி 143/4
பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர காமன் – கலி 147/59
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற/கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் – அகம் 13/18,19
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற/மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை – அகம் 136/12,13
தண் கார்க்கு ஈன்ற பைம் கொடி முல்லை – அகம் 144/3
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த – அகம் 147/4
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும் – அகம் 195/7
கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற/முளை ஓர் அன்ன முள் எயிற்று துவர் வாய் – அகம் 212/4,5
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கின – அகம் 229/16
ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட – அகம் 306/4
ஈன்ற வயிறோ இதுவே – புறம் 86/5
மனை தலை மகவை ஈன்ற அமர் கண் – புறம் 117/4
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையை – புறம் 176/3
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் – புறம் 277/4
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே – புறம் 278/9
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை – புறம் 342/9
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள் – புறம் 346/2
ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் – புறம் 393/15
TOP


ஈன்றணி (1)

இரு மருப்பு எருமை ஈன்றணி காரான் – குறு 181/3
TOP


ஈன்றதன் (1)

ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே – புறம் 35/26
TOP


ஈன்றவள் (2)

அல்லாந்தார் அலவு-உற ஈன்றவள் கிடக்கை போல் – கலி 29/2
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும் – கலி 32/7
TOP


ஈன்றன்றே (1)

மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே – குறு 90/7
TOP


ஈன்றன (4)

வேங்கையும் புலி ஈன்றன அருவியும் – நற் 389/1
ஈன்றன ஆய_மகள் தோள் – கலி 101/38
குறு முறி ஈன்றன மரனே நறு மலர் – அகம் 259/5
மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும் – அகம் 355/1
TOP


ஈன்றனென் (1)

பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானே – ஐங் 155/5
TOP


ஈன்றாட்கு (2)

ஈன்றாட்கு ஒரு பெண் இவள் – பரி 8/58
இருள் மை ஈர் உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு/அரியளோ ஆவது அறிந்திலேன் ஈதா – பரி 8/59,60
TOP


ஈன்று (20)

ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என – நற் 29/3
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி – நற் 370/5
முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட – நற் 384/3
கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க – நற் 393/2
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் – பரி 11/121
மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று/பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின் – கலி 34/1,2
தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று/முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும் – கலி 101/1,2
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று/ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும் – கலி 101/3,4
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட – அகம் 3/3
இரும் கல் விடர்_அகத்து ஈன்று இளைப்பட்ட – அகம் 21/16
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள் – அகம் 35/1
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி – அகம் 85/6
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி – அகம் 112/5
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை – அகம் 139/6
நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த – அகம் 160/5
ஈன்று அணி இரும் பிடி தழீஇ களிறு தன் – அகம் 168/9
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என – அகம் 238/2
மழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்று/கழை தின் யாக்கை விழை களிறு தைவர – அகம் 328/12,13
மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப – அகம் 345/13
ஈன்று புறந்தருதல் என் தலை கடனே – புறம் 312/1
TOP


ஈன்றேன் (1)

ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே – நற் 198/12
TOP


ஈன்றோள் (1)

ஈன்றோள் நீத்த குழவி போல – புறம் 230/7
TOP


ஈன (4)

புணர்ந்தவர் முகம் போல பொய்கை பூ புதிது ஈன/மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால் – கலி 31/5,6
மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி – கலி 35/3
உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன/அயம் நந்தி அணி பெற அருவி ஆர்த்து இழிதரும் – கலி 53/5,6
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன/பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை – அகம் 71/8,9
TOP


ஈனல் (3)

ஈனல் எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 95/9
ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின் – அகம் 331/3
ஈனல் செல்லா ஏனற்கு இழுமென – புறம் 159/18
TOP


ஈனா (4)

ஈனா பாவை தலையிட்டு ஓரும் – நற் 127/7
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர் – கலி 39/14
ஈனா தாயர் மடுப்பவும் உண்ணாள் – அகம் 105/6
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட – புறம் 372/8
TOP


ஈனாள் (1)

ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது – புறம் 348/7
TOP


ஈனில் (1)

சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர் – குறு 85/3
TOP


ஈனும் (7)

பண் அழி பழம் பார் வெண்_குருகு ஈனும்/தண்ணம் துறைவன் முன்_நாள் நம்மொடு – நற் 138/4,5
துறை படி அம்பி அகம்_அணை ஈனும்/தண்ணம் துறைவன் நல்கின் – ஐங் 168/2,3
எரி கால் இளம் தளிர் ஈனும் பொழுதே – ஐங் 349/3
ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே – ஐங் 401/5
புலி புக்கு ஈனும் வறும் சுனை – அகம் 329/13
கான வாரணம் ஈனும்/காடு ஆகி விளியும் நாடு உடையோரே – புறம் 52/16,17
துறை நணி கெழீஇ கம்புள் ஈனும்/தண்ணடை பெறுதலும் உரித்தே வை நுதி – புறம் 297/7,8
TOP


ஈனும்மோ (1)

இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ/நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு – புறம் 130/2,3
TOP

Related posts