இ முதல் சொற்கள் பகுதி – 5, சங்க இலக்கியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இழை_மகள் 1
இழைக்க 1
இழைக்கு 2
இழைக்கும் 1
இழைகளும் 1
இழைத்த 17
இழைத்தனையே 1
இழைத்து 5
இழைத்தும் 1
இழைந்த 1
இழைய 1
இழையர் 1
இழையவரோடு 1
இழையா 1
இழையாய் 1
இழையியர் 1
இழையினை 1
இழையீர் 1
இழையும் 2
இழையை 1
இழையொடு 1
இழையோளே 2
இள 70
இள_நாள் 1
இளக்கும் 1
இளக 1
இளநீர் 2
இளம் 37
இளமை 14
இளமைக்கு 1
இளமையான் 2
இளமையின் 2
இளமையும் 5
இளவேனில் 6
இளவேனிலும் 1
இளி 4
இளிவரல் 1
இளிவரவு 2
இளிவு 2
இளிவே 1
இளை 2
இளைக்கும் 1
இளைஞர் 4
இளைஞரின் 1
இளைஞரும் 1
இளைஞருமே 1
இளைத்தன 1
இளைப்பட்ட 4
இளைப்படூஉம் 1
இளைய 2
இளையது 1
இளையம் 1
இளையர் 36
இளையர்க்கு 1
இளையரும் 13
இளையரொடு 7
இளையவர் 4
இளையள் 3
இளையன் 5
இளையாரும் 1
இளையீர் 1
இளையை 1
இளையோய் 1
இளையோர் 8
இளையோர்க்கு 1
இளையோள் 7
இளையோற்கு 1
இளையோன் 4
இற்கிழத்தி 1
இற்செறிந்து 1
இற்ற 1
இற்றவை 1
இற்றா 1
இற்றால் 1
இற்றி 5
இற்று 1
இற்றே 1
இற்றை 2
இற 3
இறக்கி 1
இறக்கும் 1
இறக்குவை 1
இறகின் 1
இறகு 3
இறங்கு 10
இறடி 2
இறத்தல் 2
இறத்தலும் 1
இறத்தி 3
இறத்திரால் 1
இறந்த 29
இறந்தது 1
இறந்தவர் 1
இறந்தவன் 1
இறந்தன்றே 1
இறந்தன 1
இறந்தனம் 1
இறந்தனர் 11
இறந்தனரே 3
இறந்தனரோ 1
இறந்தனள் 6
இறந்தான்-கொல்லோ 1
இறந்திசினோரே 1
இறந்திசினோளே 1
இறந்தீவாய் 2
இறந்து 55
இறந்தும் 2
இறந்தே 3
இறந்தேற்கே 1
இறந்தோர் 11
இறந்தோர்க்கு 3
இறந்தோரே 43
இறந்தோளே 3
இறந்தோன் 1
இறப்ப 10
இறப்பர்-கொல் 1
இறப்பல் 1
இறப்பாய் 1
இறப்பின் 4
இறப்பினும் 2
இறப்பு 1
இறப்போர் 1
இறப்போன் 1
இறல் 1
இறவாது 2
இறவின் 9
இறவு 7
இறவொடு 3
இறா 10
இறாயினிர் 1
இறால் 2
இறாலொடு 1
இறாஅ 1
இறாஅல் 7
இறாஅலியரோ 1
இறீஇயர் 5
இறீஇயரோ 1
இறு 4
இறுக்கல் 1
இறுக்கும் 12
இறுகிறுக்கி 1
இறுகிறுக 2
இறுகு 2
இறுத்த 39
இறுத்தது 2
இறுத்தந்த 4
இறுத்தந்தது 1
இறுத்தலின் 1
இறுத்தன்று 1
இறுத்தன 2
இறுத்தார் 1
இறுத்து 10
இறுதி 2
இறுதி-கண் 1
இறுப்ப 5
இறுப்பினும் 1
இறுப்போரும் 1
இறுபு 12
இறும்-மார் 1
இறும்பில் 8
இறும்பின் 11
இறும்பு 2
இறும்பூதால் 2
இறும்பூது 6
இறுவரை 7
இறை 117
இறை_இறை 1
இறைகூடி 1
இறைகூடிய 1
இறைகூர்தலின் 1
இறைகூர்ந்த 1
இறைகூரும் 1
இறைகொண்ட 9
இறைகொண்டன்று 1
இறைகொண்டனவே 1
இறைகொண்டனன் 1
இறைகொண்டு 1
இறைகொள்பு 1
இறைகொள்ளும் 4
இறைகொள 4
இறைச்சியாய் 2
இறைஞ்ச 2
இறைஞ்சி 10
இறைஞ்சிய 10
இறைஞ்சியோளே 3
இறைஞ்சியோனே 1
இறைஞ்சின 1
இறைஞ்சினள் 2
இறைஞ்சினளே 1
இறைஞ்சினெம் 1
இறைஞ்சுக 1
இறைஞ்சுபு 1
இறைஞ்சும் 3
இறைஞ்சுவார் 1
இறைத்து 1
இறைப்பேன் 1
இறைய 2
இறையார் 1
இறையும் 2
இறையே 1
இறைவ 2
இறைவன் 5
இன் 338
இன்_நகை 2
இன்_ஆங்கு 1
இன்சொல் 1
இன்ப 4
இன்பத்தின் 1
இன்பத்து 1
இன்பத்துள் 1
இன்பம் 10
இன்பமும் 10
இன்புற்றனெம் 1
இன்புற்றார்க்கு 1
இன்புற்று 2
இன்புற 8
இன்புறாமை 1
இன்புறாய் 1
இன்புறாஅர் 1
இன்புறு 7
இன்புறுக 1
இன்புறுத்தன்று 1
இன்புறுத்தினை 1
இன்புறூஉம் 2
இன்புறேஎம் 1
இன்முகம் 2
இன்மை 23
இன்மையது 1
இன்மையான் 1
இன்மையின் 36
இன்மையும் 4
இன்மையே 1
இன்றாம் 1
இன்றாய் 1
இன்றால் 3
இன்றி 74
இன்றியும் 1
இன்றின் 2

முழு நூலையும் காண இங்கே சொடுக்கவும்.

 1.திருமுருகாற்றுப்படை
 2.பொருநராற்றுப்படை
 3.சிறுபாணாற்றுப்படை
 4.பெரும்பாணாற்றுப்படை
 5.முல்லைப்பாட்டு
 6.மதுரைக்காஞ்சி
 7.நெடுநல்வாடை
 8.குறிஞ்சிப்பாட்டு
 9.பட்டினப்பாலை
 10.மலைபடுகடாம்
 11.நற்றிணை
 12.குறுந்தொகை
 13.ஐங்குறுநூறு
 14.பதிற்றுப்பத்து
 15.பரிபாடல்
 16.கலித்தொகை
 17.அகநானூறு
 18.புறநானூறு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

இழை_மகள் (1)

உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள்/பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம் – நற் 274/3,4
TOP


இழைக்க (1)

நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்க/சோபன நிலை அது துணி பரங்குன்றத்து – பரி 19/55,56
TOP


இழைக்கு (2)

இழைக்கு விளக்கு ஆகிய அம் வாங்கு உந்தி – பதி 31/26
திருந்து_இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே – கலி 141/23
TOP


இழைக்கும் (1)

பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே – குறு 3/4
TOP


இழைகளும் (1)

மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்/கோலம் கொள நீர்க்கு கூட்டுவார் அ புனல் – பரி 10/92,93
TOP


இழைத்த (17)

கலி கெழு மரம் மிசை சேணோன் இழைத்த/புலி அஞ்சு இதணம் ஏறி அவண – குறி 40,41
பறவை இழைத்த பல் கண் இறாஅல் – நற் 185/9
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த/வண்டல் பாவை வன முலை முற்றத்து – நற் 191/2,3
ஓவு கண்டு அன்ன இல் வரை இழைத்த/நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு – நற் 268/4,5
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில் – நற் 276/5
கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பை – குறு 301/2
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த/சிறு_மனை புணர்ந்த நட்பே தோழி – குறு 326/2,3
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த/தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட – பதி 31/18,19
எரி நகை இடை இடுபு இழைத்த நறும் தார் – பரி 13/60
பூண்டதை சுருள் உடை வள்ளி இடை இடுபு இழைத்த/உருள் இணர் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார் – பரி 21/10,11
செய்யாட்கு இழைத்த திலகம் போல் சீர்க்கு ஒப்ப – பரி 32/1
திருந்து இழை மென் தோள் இழைத்த மற்று இஃதோ – கலி 64/13
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு – கலி 64/19
கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை – அகம் 18/14
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த/திண் சுவர் நோக்கி நினைந்து கண் பனி – அகம் 289/9,10
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை – புறம் 318/6
காவு-தோறு இழைத்த வெறி அயர் களத்தின் – புறம் 366/21
TOP


இழைத்தனையே (1)

வல்லே எம்மையும் வர இழைத்தனையே – ஐங் 445/5
TOP


இழைத்து (5)

கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து/கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் – நற் 3/3,4
ஒண் நகை தகை வகை நெறிபெற இடையிடை இழைத்து யாத்த – பரி 21/55
தேனின் இறால் என ஏணி இழைத்து இருக்கும் – கலி 39/10
களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி – அகம் 22/8
கூடு கொள் இன் இயம் கறங்க களன் இழைத்து/ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர் – அகம் 98/14,15
TOP


இழைத்தும் (1)

சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும் – அகம் 110/7
TOP


இழைந்த (1)

முளி கழை இழைந்த காடு படு தீயின் – மலை 248
TOP


இழைய (1)

வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய/பொறித்த போலும் புள்ளி எருத்தின் – பதி 39/9,10
TOP


இழையர் (1)

இழையர் குழையர் நறும் தண் மாலையர் – பதி 46/1
TOP


இழையவரோடு (1)

விறல் இழையவரோடு விளையாடுவான்-மன்னோ – கலி 30/14
TOP


இழையா (1)

வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய – பதி 39/9
TOP


இழையாய் (1)

நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்வி – பரி 24/38
TOP


இழையியர் (1)

சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர்/தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின் – குறு 85/3,4
TOP


இழையினை (1)

இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி – பரி 12/59
TOP


இழையீர் (1)

கலங்கல் ஓம்பு-மின் இலங்கு இழையீர் என – குறி 233
TOP


இழையும் (2)

வடிவு ஆர் குழையும் இழையும் பொறையா – கலி 90/8
தழையும் கோதையும் இழையும் என்று இவை – கலி 102/5
TOP


இழையை (1)

இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை/தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி கெட்டதை – பரி 20/57,58
TOP


இழையொடு (1)

இடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வர – அகம் 142/19
TOP


இழையோளே (2)

விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோளே – நற் 361/9
விருந்து ஏர் பெற்றனள் திருந்து இழையோளே – அகம் 384/14
TOP


இள (70)

குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர் – திரு 35
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – திரு 290
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை – பொரு 36
தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை – மது 416
பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற – மது 601
இலங்கு கதிர் இள வெயில் தோன்றி அன்ன – மது 703
வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என – நற் 29/7
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை – நற் 160/4
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின் – நற் 192/10
ஆடிய இள மழை பின்றை – நற் 229/10
ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினை – நற் 288/2
இள நலம் இல்_கடை ஒழிய – நற் 295/8
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன் – நற் 396/7
யாணர் இள முலை நனைய – நற் 398/9
அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன் – குறு 33/1
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை – குறு 71/2
இன் உறல் இள முலை ஞெமுங்க – குறு 314/5
தும்பை மாலை இள முலை – ஐங் 127/2
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு – ஐங் 149/2
பூண் தாங்கு இள முலை அணங்கியோனே – ஐங் 250/5
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன் – ஐங் 252/2
பொங்கல் இள மழை புடைக்கும் நாட – ஐங் 276/3
எழில் தகை இள முலை பொலிய – ஐங் 347/2
இள மா எயிற்றிக்கு நின் நிலை அறிய – ஐங் 364/2
செய்யோள் இள முலை படீஇயர் என் கண்ணே – ஐங் 450/4
ஏந்து எழில் மழை கண் வனைந்து வரல் இள முலை – பதி 54/4
பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை – பதி 65/6
அக வயல் இள நெல் அரி கால் சூடு – பரி 7/27
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என – பரி 15/27
ஆங்கு இள மகளிர் மருள பாங்கர் – பரி 19/74
பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல் – பரி 19/75
காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை – கலி 4/9
இள முலை பாராட்டினாய் மற்று எம் மார்பில் – கலி 22/16
இள மழை ஆடும் இள மழை ஆடும் – கலி 41/25
இள மழை ஆடும் இள மழை ஆடும் – கலி 41/25
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை – கலி 41/26
தொய்யில் இள முலை இனிய தைவந்து – கலி 54/12
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/24
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய் அதன்_தலை – கலி 57/13
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் – கலி 57/17
கதவவால் தக்கதோ காழ் கொண்ட இள முலை – கலி 57/19
இள மணலுள் படல் ஓம்பு முளை நேர் – கலி 98/37
இள மாங்காய் போழ்ந்து அன்ன கண்ணினால் என் நெஞ்சம் – கலி 108/28
முதிரா இள முகை ஒப்ப எதிரிய – கலி 117/3
மகிழ் செய் தே_மொழி தொய்யில் சூழ் இள முலை – கலி 125/8
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல் – கலி 143/32
பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை – அகம் 16/9
மனை இள நொச்சி மௌவல் வால் முகை – அகம் 21/1
இகழுநர் இகழா இள_நாள் அமையம் – அகம் 25/12
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ் – அகம் 58/7
நல்_நாள் பூத்த நாகு இள வேங்கை – அகம் 85/10
நல் வரல் இள முலை நனைய – அகம் 161/13
நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து – அகம் 180/8
இள மழை சூழ்ந்த மட மயில் போல – அகம் 198/7
விண் தவழ் இள வெயில் கொண்டு நின்று அன்ன – அகம் 212/2
மூங்கில் இள முளை திரங்க காம்பின் – அகம் 241/6
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ் – அகம் 242/16
நல் எழில் இள நலம் தொலையினும் நல்கார் – அகம் 249/10
மணம் கமழ் இள மணல் எக்கர் காண்வர – அகம் 250/4
ஆடு இயல் இள மழை சூடி தோன்றும் – அகம் 271/13
முலை இடை தோன்றிய நோய் வளர் இள முளை – அகம் 273/11
சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை – அகம் 302/13
நல் எழில் இள நலம் தொலைய ஒல்லென – அகம் 340/8
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும் – அகம் 389/5
புனல் தரும் இள மணல் நிறைய பெய்ம்-மின் – புறம் 262/3
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் – புறம் 266/5
முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை – புறம் 336/10
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே – புறம் 337/22
விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின் – புறம் 352/12
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை – புறம் 354/8
TOP


இள_நாள் (1)

இகழுநர் இகழா இள_நாள் அமையம் – அகம் 25/12
TOP


இளக்கும் (1)

வெளில் இளக்கும் களிறு போல – பட் 172
TOP


இளக (1)

சோறு அடு குழிசி இளக விழூஉம் – பெரும் 366
TOP


இளநீர் (2)

இளநீர் விழு குலை உதிர தாக்கி – திரு 308
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு – புறம் 29/16
TOP


இளம் (37)

எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று – பொரு 6
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா – சிறு 45
இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து – சிறு 243
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால் – பெரும் 204
இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி – மது 572
கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர் – மது 773
இளம் கதிர் ஞாயிற்று களங்கள்-தொறும் பெறுகுவிர் – மலை 464
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி – குறு 189/3
முதை சுவல் கலித்த முற்றா இளம் புல் – குறு 204/3
நாகு பிடி நயந்த முளை கோட்டு இளம் களிறு – குறு 346/1
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்பு – ஐங் 44/1
இளம் பிறை அன்ன கோட்ட கேழல் – ஐங் 264/1
எரி கால் இளம் தளிர் ஈனும் பொழுதே – ஐங் 349/3
இலங்கு நிலவின் இளம் பிறை போல – ஐங் 443/2
இளம் துணை புதல்வர் நல் வளம் பயந்த – பதி 57/10
இளம் துணை புதல்வரின் முதியர் பேணி – பதி 70/21
செழும் கூடு கிளைத்த இளம் துணை மகாரின் – பதி 71/7
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என – பரி 19/73
நோனாது குத்தும் இளம் காரி தோற்றம் காண் – கலி 104/36
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில் – கலி 109/4
இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் – அகம் 17/2
இளம் கள் கமழும் நெய்தல் அம் செறுவின் – அகம் 113/6
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி – அகம் 129/8
ஒண் சுடர் முதிரா இளம் கதிர் அமையத்து – அகம் 187/19
பல் இளம் கோசர் கண்ணி அயரும் – அகம் 216/11
இளம் துணை மகளிரொடு ஈர் அணி கலைஇ – அகம் 266/5
கண் அகை இளம் குழை கால் முதல் கவினி – அகம் 283/10
மறு மருப்பு இளம் கோடு அதிர கூஉம் – அகம் 291/20
ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட – அகம் 306/4
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெரும் சென்னி – அகம் 375/11
கோடு முற்று இளம் தகர் பாடு விறந்து அயல – அகம் 378/7
விளையா இளம் கள் நாற பல உடன் – அகம் 400/22
வட்கர் போகிய வளர் இளம் போந்தை – புறம் 100/3
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ – புறம் 130/2
முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று – புறம் 159/10
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார் – புறம் 169/9
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை – புறம் 326/2
TOP


இளமை (14)

அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 179
இளமை கழிந்த பின்றை வளமை – நற் 126/9
முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார் – நற் 314/1
இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை – நற் 351/1
இளமை பாரார் வளம் நசைஇ சென்றோர் – குறு 126/1
இனிது உடன் கழிக்கின் இளமை/இனிதால் அம்ம இனியவர் புணர்வே – ஐங் 415/3,4
வறியவன் இளமை போல் வாடிய சினையவாய் – கலி 10/1
சென்ற இளமை தரற்கு – கலி 18/12
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும் – கலி 20/13
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள் வைகறை – கலி 38/15
இளமை சென்று தவ தொல்லஃதே – அகம் 6/21
இளமை தகைமையை வள மனை கிழத்தி – அகம் 275/4
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை/அளிதோ தானே யாண்டு உண்டு-கொல்லோ – புறம் 243/10,11
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே – புறம் 247/10
TOP


இளமைக்கு (1)

இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே – குறு 151/6
TOP


இளமையான் (2)

இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய் கேள் இனி – கலி 57/7
இளமையான் உணராதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/8
TOP


இளமையின் (2)

இளமையின் இகந்தன்றும் இலனே வளமையின் – குறி 244
இளமையின் சிறந்த வளமையும் இல்லை – நற் 126/8
TOP


இளமையும் (5)

வைகல்-தோறும் இன்பமும் இளமையும்/எய் கணை நிழலின் கழியும் இ உலகத்து – நற் 46/1,2
இளமையும் காமமும் நின் பாணி நில்லா – கலி 12/12
இளமையும் தருவதோ இறந்த பின்னே – கலி 15/26
முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ – கலி 17/16
இளமையும் காமமும் ஓராங்கு பெற்றார் – கலி 18/7
TOP


இளவேனில் (6)

இன் இளவேனில் இது அன்றோ வையை நின் – பரி 6/77
நோ_தக வந்தன்றால் இளவேனில் மே தக – கலி 26/8
ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில்/நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள – கலி 27/8,9
மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண் – கலி 29/9
நயந்தார்க்கோ நல்லை-மன் இளவேனில் எம் போல – கலி 32/13
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் – கலி 34/7
TOP


இளவேனிலும் (1)

இன் இளவேனிலும் வாரார் – அகம் 229/20
TOP


இளி (4)

இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 7
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும் – பரி 19/42
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் – அகம் 33/7
இன்புற புணர்ந்தும் இளி வர பணிந்தும் – அகம் 330/3
TOP


இளிவரல் (1)

இல்லத்து நீ தனி சேறல் இளிவரல்/என ஆங்கு – பரி 11/44,45
TOP


இளிவரவு (2)

இல்லது நோக்கி இளிவரவு கூறா முன் – பரி 10/87
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு/போற்றாய் காண் அன்னை புரையோய் புரை இன்று – பரி 20/71,72
TOP


இளிவு (2)

எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என – நற் 284/6
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என – குறு 283/2
TOP


இளிவே (1)

அரிது மன்று அம்ம இன்மையது இளிவே – நற் 262/10
TOP


இளை (2)

இளை இனிது தந்து விளைவு முட்டு-உறாது – பதி 28/5
இளை படு பேடை இரிய குரைத்து எழுந்து – அகம் 310/15
TOP


இளைக்கும் (1)

வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி – அகம் 285/7
TOP


இளைஞர் (4)

கல்லா இளைஞர் சொல்லி காட்ட – பொரு 100
கல்லா இளைஞர் கவளம் கைப்ப – முல் 36
உவலை கண்ணி வன் சொல் இளைஞர்/சிலை உடை கையர் கவலை காப்ப – மது 311,312
எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற – புறம் 327/1
TOP


இளைஞரின் (1)

பகை புறங்கண்ட பல் வேல் இளைஞரின்/உரவு சினம் செருக்கி துன்னு-தொறும் வெகுளும் – குறி 129,130
TOP


இளைஞரும் (1)

தானும் சூடினன் இளைஞரும் மலைந்தனர் – நற் 361/2
TOP


இளைஞருமே (1)

சில் ஓதி பல் இளைஞருமே/அடி வருந்த நெடிது ஏறிய – புறம் 139/2,3
TOP


இளைத்தன (1)

எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன/செல்லல் ஐஇய உது எம் ஊரே – குறு 179/2,3
TOP


இளைப்பட்ட (4)

முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட/உயவு நடை பேடை உணீஇய மன்னர் – நற் 384/3,4
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட/கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய – அகம் 3/3,4
இரும் கல் விடர்_அகத்து ஈன்று இளைப்பட்ட/மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண் – அகம் 21/16,17
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என – அகம் 238/2
TOP


இளைப்படூஉம் (1)

பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை – அகம் 21/15
TOP


இளைய (2)

வாடா பைம் மயிர் இளைய ஆடு நடை – பதி 12/11
எருதே இளைய நுகம் உணராவே – புறம் 102/1
TOP


இளையது (1)

இளையது ஆயினும் கிளை அரா எறியும் – புறம் 58/6
TOP


இளையம் (1)

இளையம் ஆக தழை ஆயினவே இனியே – புறம் 248/2
TOP


இளையர் (36)

கல்லா இளையர் மெல்ல தைவர – சிறு 33
இளையர் தரூஉம் வாடையொடு – நற் 5/8
விரை பரி வருந்திய வீங்கு செலல் இளையர்/அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ – நற் 21/1,2
ஏகு-மின் என்ற இளையர் வல்லே – நற் 42/6
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை என – நற் 161/6
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன் – குறு 258/6
வல் வில் இளையர் பக்கம் போற்ற – குறு 275/6
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து – குறு 322/4
இளையர் ஆடும் தளை அவிழ் கானல் – ஐங் 198/2
பாணர் பைம் பூ மலைய இளையர்/இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து – பதி 40/24,25
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப – பதி 41/2
கைவல் இளையர் கடவுள் பழிச்ச – பதி 41/6
கைவல் இளையர் நேர் கை நிரைப்ப – பதி 48/8
கைவல் இளையர் கை அலை அழுங்க – பதி 51/34
புலவு வில் இளையர் அங்கை விடுப்ப – பதி 71/15
சேரி இளையர் செல அரு நிலையர் – பரி 6/38
முதியர் இளையர் முகை பருவத்தர் – பரி 10/19
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக – அகம் 64/6
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த – அகம் 74/2
கல்லா இளையர் பெருமகன் புல்லி – அகம் 83/9
வென் வேல் இளையர் இன்புற வலவன் – அகம் 104/3
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று – அகம் 122/7
வல் வில் இளையர் பெருமகன் நள்ளி – அகம் 152/15
வல் வில் இளையர் தலைவர் எல் உற – அகம் 245/7
இளையர் எய்துதல் மடக்கி கிளையொடு – அகம் 248/3
இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர் – அகம் 269/13
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன் – அகம் 338/18
ஏவல் இளையர் தலைவன் மேவார் – அகம் 342/7
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலை-மார் – அகம் 345/12
இளையர் ஏகுவனர் பரிய விரி உளை – அகம் 354/6
கல்லா இளையர் கலித்த கவலை – அகம் 375/5
இளையர் அருந்த பின்றை நீயும் – அகம் 394/7
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே – புறம் 150/10
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப – புறம் 253/2
கல்லா இளையர் நீங்க நீங்கான் – புறம் 263/6
தன்னோர் அன்ன இளையர் இருப்ப – புறம் 286/2
TOP


இளையர்க்கு (1)

வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா – புறம் 353/10
TOP


இளையரும் (13)

இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி – பெரும் 268
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ – நற் 207/7
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர் – நற் 307/2
இளையரும் சூடி வந்தனர் நமரும் – நற் 367/10
இளையரும் மடவரும் உளரே – குறு 246/7
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும் – பரி 6/27
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி – அகம் 30/4
வேலும் விளங்கின இளையரும் இயன்றனர் – அகம் 259/1
இளையரும் புரவியும் இன்புற நீயும் – அகம் 300/20
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ – அகம் 348/12
இறங்கு கதிர் கழனி நின் இளையரும் கவர்க – புறம் 57/6
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும் – புறம் 191/4
இளையரும் முதியரும் வேறு புலம் படர – புறம் 254/1
TOP


இளையரொடு (7)

ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என – நற் 389/5
ஏவல் வியம் கொண்டு இளையரொடு எழுதரும் – பதி 54/15
வல் வில் இளையரொடு எல்லி செல்லாது – அகம் 120/12
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் – அகம் 160/16
வீளை அம்பின் இளையரொடு மாந்தி – அகம் 182/4
கொடுஞ்சி நெடும் தேர் இளையரொடு நீக்கி – அகம் 250/6
கடும் தேர் இளையரொடு நீக்கி நின்ற – அகம் 310/1
TOP


இளையவர் (4)

வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு – நற் 111/5
இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார – கலி 29/6
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலை தாது சோர்ந்து – கலி 73/8
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் – கலி 83/3
TOP


இளையள் (3)

சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள் – நற் 201/3
இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே – ஐங் 256/4
மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள் – அகம் 319/14
TOP


இளையன் (5)

இளையன் முளை வாள் எயிற்றள் – குறு 119/3
இளையன் என்போர்க்கு இளையை ஆதலும் – பரி 2/21
இளையன் இவன் என உளைய கூறி – புறம் 72/2
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என – புறம் 78/6
இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே – புறம் 104/6
TOP


இளையாரும் (1)

இளையாரும் ஏதிலவரும் உளைய யான் – கலி 138/24
TOP


இளையீர் (1)

மட மதர் மழை கண் இளையீர் இறந்த – குறி 141
TOP


இளையை (1)

இளையன் என்போர்க்கு இளையை ஆதலும் – பரி 2/21
TOP


இளையோய் (1)

இனைதல் ஆனாள் ஆக இளையோய்/கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என – புறம் 144/6,7
TOP


இளையோர் (8)

இளையோர் வண்டல் அயரவும் முதியோர் – பொரு 187
இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல் – நற் 68/2
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல – குறு 61/3
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும் – அகம் 90/2
விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும் – அகம் 254/7
இளையோர் செல்ப எல்லும் எல்லின்று – அகம் 370/2
எண் இல் காட்சி இளையோர் தோற்பின் – புறம் 213/15
இளையோர் சூடார் வளையோர் கொய்யார் – புறம் 242/1
TOP


இளையோர்க்கு (1)

இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் – சிறு 232
TOP


இளையோள் (7)

கிள்ளையும் கிளை என கூஉம் இளையோள்/வழு இலள் அம்ம தானே குழீஇ – நற் 143/5,6
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல் – நற் 320/4
முருந்து ஏர் முறுவல் இளையோள்/பெரும் தோள் இன் துயில் கைவிடுகலனே – அகம் 193/13,14
இன் நகை இளையோள் கவவ – அகம் 314/21
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள்/மா மகள் – புறம் 340/2,3
செம் பொறி சிலம்பின் இளையோள் தந்தை – புறம் 341/3
தொடி பிறழ் முன்கை இளையோள்/அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே – புறம் 350/10,11
TOP


இளையோற்கு (1)

திரண்டு நீடு தட கை என் ஐ இளையோற்கு/இரண்டு எழுந்தனவால் பகையே ஒன்றே – புறம் 96/2,3
TOP


இளையோன் (4)

உருவ பல் தேர் இளையோன் சிறுவன் – பொரு 130
எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம் – நற் 2/8
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன் உற – அகம் 203/10
இன்னன் ஆயினன் இளையோன் என்று – புறம் 254/5
TOP


இற்கிழத்தி (1)

பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர – அகம் 86/19
TOP


இற்செறிந்து (1)

இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல் – நற் 68/2
TOP


இற்ற (1)

இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி – நற் 329/5
TOP


இற்றவை (1)

நறு வடி ஆர் இற்றவை போல் அழிய – கலி 84/2
TOP


இற்றா (1)

இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை – கலி 144/65
TOP


இற்றால் (1)

மற்று இவர் மறனும் இற்றால் தெற்றென – புறம் 337/19
TOP


இற்றி (5)

வேனில் இற்றி தோயா நெடு வீழ் – நற் 162/9
புல் வீழ் இற்றி கல் இவர் வெள் வேர் – குறு 106/1
கல் இவர் இற்றி புல்லுவன ஏறி – ஐங் 279/1
குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ் – அகம் 57/6
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் – அகம் 345/19
TOP


இற்று (1)

இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் – நற் 54/8
TOP


இற்றே (1)

பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய – நற் 35/8
TOP


இற்றை (2)

இற்றை திங்கள் இ வெண் நிலவில் – புறம் 112/3
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர என – புறம் 161/12
TOP


இற (3)

இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம் – நற் 27/8
இருந்தாயோ என்று ஆங்கு இற/அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும் – கலி 63/9,10
எருத்து இடை அடங்கியும் இமில் இற புல்லியும் – கலி 105/31
TOP


இறக்கி (1)

நரை மூதாளர் அதிர் தலை இறக்கி/கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய – அகம் 377/7,8
TOP


இறக்கும் (1)

அ நாள் கொண்டு இறக்கும் இவள் அரும் பெறல் உயிரே – கலி 5/19
TOP


இறக்குவை (1)

அ வரை இறக்குவை ஆயின் – ஐங் 301/3
TOP


இறகின் (1)

குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும் – குறு 228/2
TOP


இறகு (3)

ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து – சிறு 76
இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து – நற் 127/2
இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி – நற் 329/5
TOP


இறங்கு (10)

முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப – குறி 36
இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் – நற் 209/4
எக்கர் ஞாழல் இறங்கு இணர் படு சினை – ஐங் 142/1
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து – அகம் 132/1
ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன பானாள் – அகம் 192/8
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றை – அகம் 243/3
இறங்கு கதிர் அலமரு கழனியும் – புறம் 49/5
இறங்கு கதிர் கழனி நின் இளையரும் கவர்க – புறம் 57/6
இறங்கு கதிர் அலம்வரு கழனி – புறம் 98/19
படு மழை உருமின் இறங்கு முரசின் – புறம் 350/4
TOP


இறடி (2)

குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் – மலை 169
பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ் – குறு 214/2
TOP


இறத்தல் (2)

வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே – நற் 43/6
இன்னா அரும் சுரம் இறத்தல்/இனிதோ பெரும இன் துணை பிரிந்தே – குறு 363/5,6
TOP


இறத்தலும் (1)

எம்மொடு இறத்தலும் செல்லாய் பின் நின்று – அகம் 19/6
TOP


இறத்தி (3)

இடை கொண்டு பொருள்-வயின் இறத்தி நீ என கேட்பின் – கலி 10/8
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின் – கலி 10/12
பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்தி/மாறி வருதி மலை மறைந்து ஒளித்தி – புறம் 8/7,8
TOP


இறத்திரால் (1)

இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீ-மின் – கலி 25/12
TOP


இறந்த (29)

எறிந்து உரும் இறந்த ஏற்று அரும் சென்னி – சிறு 266
அரும் சுரம் இறந்த அம்பர் பருந்து பட – பெரும் 117
வன்_புலம் இறந்த பின்றை மென் தோல் – பெரும் 206
மட மதர் மழை கண் இளையீர் இறந்த/கெடுதியும் உடையேன் என்றனன் அதன்_எதிர் – குறி 141,142
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து – நற் 103/4
வையக வரை அளவு இறந்த/எவ்வ நோய் பிறிது உயவு துணை இன்றே – நற் 130/11,12
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல் – நற் 320/4
இறப்பு அரும் குன்றம் இறந்த யாமே – குறு 209/3
செழும் பல் குன்றம் இறந்த என் மகளே – ஐங் 372/4
வெம் சுரம் இறந்த அம்_சில்_ஓதி – ஐங் 394/3
எண் இறந்த புகழவை எழில் மார்பினவை – பரி 1/63
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின் – கலி 9/22
இளமையும் தருவதோ இறந்த பின்னே – கலி 15/26
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின் – கலி 34/2
ஒருத்தி இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள் – கலி 92/48
விளியா நோய் செய்து இறந்த அன்பு இலவனை – கலி 144/38
அரும் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும் – அகம் 97/8
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் – அகம் 119/8
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின் – அகம் 159/4
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு – அகம் 165/6
வெம் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர – அகம் 175/6
அரும் சுரம் இறந்த என் பெரும் தோள் குறு_மகள் – அகம் 195/1
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த/புன் தலை மன்றம் காணின் வழி நாள் – அகம் 301/23,24
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே – அகம் 327/19
நாடும் தேயமும் நனி பல இறந்த/சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என – அகம் 383/4,5
புல வரை இறந்த புகழ் சால் தோன்றல் – புறம் 21/1
நில வரை இறந்த குண்டு கண் அகழி – புறம் 21/2
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை – புறம் 265/1
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று – புறம் 376/1
TOP


இறந்தது (1)

பெரு மலை இறந்தது நோவேன் நோவல் – அகம் 63/3
TOP


இறந்தவர் (1)

பிறங்கு மலை அரும் சுரம் இறந்தவர் படர்ந்து – குறு 329/4
TOP


இறந்தவன் (1)

பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர – கலி 143/58
TOP


இறந்தன்றே (1)

விய-தொறும் விய-தொறும் வியப்பு இறந்தன்றே/அதனால் தன் கோல் இயங்கா தேயத்து உறையும் – புறம் 217/9,10
TOP


இறந்தன (1)

மாந்தர் அளவு இறந்தன என பல் நாள் – பதி 73/16
TOP


இறந்தனம் (1)

எவ்வம் கூர இறந்தனம் யாமே – அகம் 361/16
TOP


இறந்தனர் (11)

ஒதுக்கு அரும் வெம் சுரம் இறந்தனர் மற்றவர் – நற் 177/3
அத்தம் இறந்தனர் ஆயினும் நம் துறந்து – நற் 329/8
கோடு உயர் பன் மலை இறந்தனர் ஆயினும் – ஐங் 358/1
கவலை காதலர் இறந்தனர் என நனி – அகம் 159/11
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும் – அகம் 197/8
இறந்தனர் ஆயினும் காதலர் நம்-வயின் – அகம் 223/9
வெம் சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருக – அகம் 231/9
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து – அகம் 253/20
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் – அகம் 295/17
பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் – அகம் 357/10
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் – அகம் 393/20
TOP


இறந்தனரே (3)

காடு இறந்தனரே காதலர் – ஐங் 311/3
காடு இறந்தனரே காதலர் மாமை – அகம் 45/6
காடு இறந்தனரே காதலர் அடு போர் – அகம் 135/10
TOP


இறந்தனரோ (1)

இறந்தனரோ நம் காதலர் – ஐங் 319/3
TOP


இறந்தனள் (6)

அரும் சுரம் இறந்தனள் என்ப தன் – நற் 179/9
காடு இறந்தனள் நம் காதலோளே – ஐங் 313/5
ஆரிடை இறந்தனள் என்-மின் – ஐங் 384/4
வேறு பல் அரும் சுரம் இறந்தனள் அவள் என – ஐங் 385/3
அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர் – அகம் 145/10
அறன் இலாளனொடு இறந்தனள் இனி என – அகம் 219/10
TOP


இறந்தான்-கொல்லோ (1)

கறாஅ எருமைய காடு இறந்தான்-கொல்லோ/உறாஅ தகை செய்து இ ஊர் உள்ளான்-கொல்லோ – கலி 147/38,39
TOP


இறந்திசினோரே (1)

வழங்கு அரும் கானம் இறந்திசினோரே – நற் 302/10
TOP


இறந்திசினோளே (1)

மணல் மலி மறுகின் இறந்திசினோளே – அகம் 306/15
TOP


இறந்தீவாய் (2)

யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி – கலி 56/29
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி – கலி 59/9
TOP


இறந்து (55)

மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல் – மது 437
துவலை தண் துளி பேணார் பகல் இறந்து/இரு கோட்டு அறுவையர் வேண்டு-வயின் திரிதர – நெடு 34,35
மறந்து அமைகல்லா பழனும் ஊழ் இறந்து/பெரும் பயன் கழியினும் மாந்தர் துன்னார் – மலை 263,264
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து/சிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை – மலை 405,406
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் – மலை 475
கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த – நற் 34/1
எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்து/நன் வாய் அல்லா வாழ்க்கை – நற் 46/9,10
இரும் கழி ஓதம் இல் இறந்து மலிர – நற் 117/2
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின் – நற் 126/7
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து/செய்_பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர் – நற் 214/7,8
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது – நற் 252/3
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து – நற் 333/5
மனை வரை இறந்து வந்தனை ஆயின் – நற் 362/2
பெரும் கடை இறந்து மன்றம் போகி – நற் 365/2
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் – நற் 369/9
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய் – நற் 378/6
வருவர் வாழி தோழி செரு இறந்து/ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த – நற் 387/6,7
துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து/இலங்கு வளை நெகிழ சாஅய் – குறு 50/3,4
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து/எய்தினர்-கொல்லோ பொருளே அல்குல் – குறு 180/4,5
பால் வார்பு குழவி உள்ளி நிரை இறந்து/ஊர்-வயின் பெயரும் புன்கண் மாலை – குறு 344/5,6
செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள் – ஐங் 84/1
வேனில் திங்கள் வெம் சுரம் இறந்து/செலவு அயர்ந்தனையால் நீயே நன்றும் – ஐங் 309/1,2
இறுவரை நாட நீ இறந்து செய் பொருளே – ஐங் 309/5
மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து/தாம் வேண்டும் பட்டினம் எய்தி கரை சேரும் – பரி 10/37,38
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ் தாமரை – பரி 13/51
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/12
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/16
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/20
இறந்து நீர் செய்யும் பொருளினும் யாம் நுமக்கு – கலி 5/4
வாயில் வரை இறந்து போத்தந்து தாயர் – கலி 84/14
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து – கலி 104/46
இறந்து எரி நையாமல் பாஅய் முழங்கி – கலி 145/19
இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால் – கலி 150/7
உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 46/8
அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம் – அகம் 69/12
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த – அகம் 123/5
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும் – அகம் 177/12
பனி துறை பெரும் கடல் இறந்து நீர் பருகி – அகம் 183/6
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து – அகம் 209/10
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து/உள்ளார் ஆதலோ அரிதே செம் வேல் – அகம் 209/10,11
பல இறந்து அகன்றனர் ஆயினும் நிலைஇ – அகம் 227/12
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி – அகம் 233/12
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து/உள்ளுப தில்ல தாமே பணை தோள் – அகம் 253/20,21
அறை இறந்து அவரோ சென்றனர் – அகம் 281/12
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு – அகம் 291/21
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து/அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர் – அகம் 303/18,19
சுரம் இறந்து ஏகினும் நீடலர் – அகம் 311/13
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து/உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய – அகம் 353/15,16
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் – அகம் 357/14
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து/ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின் – அகம் 396/8,9
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து – அகம் 400/2
செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு – புறம் 257/4
வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என – புறம் 325/2
தன் இறந்து வாராமை விலக்கலின் பெரும் கடற்கு – புறம் 330/3
மீ படர்ந்து இறந்து வன் கோல் மண்ணி – புறம் 399/22
TOP


இறந்தும் (2)

பெரும் காடு இறந்தும் எய்த வந்தனவால் – நற் 113/4
பணை கெழு வேந்தரை இறந்தும்/இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே – புறம் 119/6,7
TOP


இறந்தே (3)

மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே – அகம் 31/15
பனி படு சிமைய பல் மலை இறந்தே – அகம் 329/14
வாள் வாய் அன்ன வறும் சுரம் இறந்தே – அகம் 331/14
TOP


இறந்தேற்கே (1)

கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கே – ஐங் 328/4
TOP


இறந்தோர் (11)

அஞ்சுவர பனிக்கும் வெம் சுரம் இறந்தோர்/தாம் வர தெளித்த பருவம் காண்வர – நற் 99/3,4
துன் அரும் கவலை அரும் சுரம் இறந்தோர்/வருவர் வாழி தோழி செரு இறந்து – நற் 387/5,6
இறந்தோர் மன்ற தாமே பிறங்கு மலை – ஐங் 316/3
அரும் சுரம் இறந்தோர் தேஎத்து – ஐங் 317/3
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்/கைப்பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு – அகம் 109/10,11
வெம் முனை அரும் சுரம் இறந்தோர்/நம்மினும் வலிதா தூக்கிய பொருளே – அகம் 265/22,23
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்/தாம் பழி உடையர் அல்லர் நாளும் – அகம் 267/13,14
இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர்/தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் – அகம் 269/13,14
ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்-வயின் – அகம் 277/12
இன்னா வெம் சுரம் இறந்தோர் முன்னிய – அகம் 363/15
அஞ்சுவரு மரபின் வெம் சுரம் இறந்தோர்/நோய் இலர் பெயர்தல் அறியின் – அகம் 375/16,17
TOP


இறந்தோர்க்கு (3)

வெம் மலை அரும் சுரம் இறந்தோர்க்கு/என் நிலை உரையாய் சென்று அவண் வரவே – நற் 277/11,12
பனி படு பன் மலை இறந்தோர்க்கு/முனி_தகு பண்பு யாம் செய்தன்றோ இலமே – அகம் 101/17,18
வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்கு/இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர என – புறம் 161/11,12
TOP


இறந்தோரே (43)

கடு மான் புல்லிய காடு இறந்தோரே – நற் 14/11
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே – நற் 18/10
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே – நற் 92/9
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே – நற் 189/10
பெரும் கல் வைப்பின் சுரன் இறந்தோரே – நற் 274/9
அம் கால் கள்ளி அம் காடு இறந்தோரே – குறு 16/5
நிலம் கரி கள்ளி அம் காடு இறந்தோரே – குறு 67/5
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே – குறு 211/7
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே – குறு 215/7
வாடா வள்ளி அம் காடு இறந்தோரே/யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும் – குறு 216/2,3
மா இரும் சோலை மலை இறந்தோரே – குறு 232/6
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 253/8
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே – குறு 260/8
பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே – குறு 278/7
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 285/8
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே – குறு 314/6
கழை முதிர் சோலை காடு இறந்தோரே – ஐங் 315/4
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – ஐங் 318/5
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே – ஐங் 336/4
மா இரும் சோலை மலை இறந்தோரே – ஐங் 353/4
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே – ஐங் 462/5
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே – அகம் 1/19
கல் மிசை அருவிய காடு இறந்தோரே – அகம் 25/22
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 111/15
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே – அகம் 133/18
வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 141/29
கணி வாய் பல்லிய காடு இறந்தோரே – அகம் 151/15
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 155/16
பெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே – அகம் 171/15
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 173/18
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 185/13
வேனில் நீடிய சுரன் இறந்தோரே – அகம் 201/19
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே – அகம் 205/24
நன் மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 241/16
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 247/13
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 249/19
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 313/17
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 347/16
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே – அகம் 349/14
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 389/24
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 391/14
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே – அகம் 395/15
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 399/18
TOP


இறந்தோளே (3)

கடுவனும் அறியா காடு இறந்தோளே – ஐங் 374/4
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே – ஐங் 387/6
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே – அகம் 321/17
TOP


இறந்தோன் (1)

இறந்தோன் தானே அளித்து இ உலகம் – புறம் 224/11
TOP


இறப்ப (10)

இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல் – நற் 33/8
அரும் சுரம் இறப்ப என்ப – நற் 148/11
இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை – நற் 338/4
எல்லா துனியும் இறப்ப தன் காதலன் – பரி 12/73
வாய்வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்ப/தேயா_மண்டிலம் காணுமாறு இன்று – பரி 17/31,32
இறப்ப துணிந்தனிர் கேண்-மின் மற்று ஐஇய – கலி 2/10
சொல்லாது இறப்ப துணிந்தனிர்க்கு ஒரு பொருள் – கலி 8/7
தனியே இறப்ப யான் ஒழிந்து இருத்தல் – கலி 23/4
இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு – அகம் 5/16
இறப்ப எண்ணினர் என்பது சிறப்ப – அகம் 161/8
TOP


இறப்பர்-கொல் (1)

இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி – குறு 331/5
TOP


இறப்பல் (1)

இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே – குறு 151/6
TOP


இறப்பாய் (1)

ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள் – கலி 58/6
TOP


இறப்பின் (4)

பன் மலை அரும் சுரம் இறப்பின் நம் விட்டு – நற் 171/6
வெல் போர் குருசில் நீ வியன் சுரம் இறப்பின்/பல் காழ் அல்குல் அம் வரி வாட – ஐங் 306/1,2
சிறு வரை இறப்பின் காண்குவை செறி தொடி – ஐங் 388/3
இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள் – கலி 109/21
TOP


இறப்பினும் (2)

மொழிபெயர் பல் மலை இறப்பினும்/ஒழிதல் செல்லாது ஒண்_தொடி குணனே – ஐங் 321/4,5
குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும் – புறம் 74/1
TOP


இறப்பு (1)

இறப்பு அரும் குன்றம் இறந்த யாமே – குறு 209/3
TOP


இறப்போர் (1)

சிறு பல் குன்றம் இறப்போர்/அறிவார் யார் அவர் முன்னியவ்வே – நற் 269/8,9
TOP


இறப்போன் (1)

இயன்ற அணியன் இ தெரு இறப்போன்/மாண் தொழில் மா மணி கறங்க கடை கழிந்து – அகம் 66/9,10
TOP


இறல் (1)

தாது தேர் பறவையின் அருந்து இறல் கொடுக்கும்-கால் – கலி 22/7
TOP


இறவாது (2)

நரம்பு மீது இறவாது உடன்புணர்ந்து ஒன்றி – மலை 535
எண்ணிய நாள் வரை இறவாது காதலர் – கலி 34/22
TOP


இறவின் (9)

கடல் இறவின் சூடு தின்றும் – பட் 63
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்/கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி – நற் 101/2,3
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை – நற் 211/5
பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல் – நற் 358/8
முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளை – குறு 109/1
இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு – குறு 160/2
இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு – குறு 320/2
சிறு வெள் இறவின் குப்பை அன்ன – அகம் 152/8
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம் – புறம் 342/10
TOP


இறவு (7)

இறவு அருந்திய இன நாரை – பொரு 204
இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் – நற் 19/1
இறவு அருந்தி எழுந்த கரும் கால் வெண்_குருகு – நற் 67/3
இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும் – நற் 131/6
இறவு சினை அன்ன நளி கனி உதிர – குறு 274/2
நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை – பரி 10/85
நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்து – அகம் 96/1
TOP


இறவொடு (3)

துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் – நற் 111/2
இறவொடு வந்து கோதையொடு பெயரும் – அகம் 123/12
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் – அகம் 220/17
TOP


இறா (10)

சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை – நற் 31/2
முடி வலை முகந்த முடங்கு இறா பாவை – நற் 49/3
குளம்பினும் சே_இறா ஒடுங்கின – நற் 278/8
அலவன் தாக்க துறை இறா பிறழும் – ஐங் 179/2
இரும் கழி சே_இறா இன புள் ஆரும் – ஐங் 188/1
தெண் கழி சே_இறா படூஉம் – ஐங் 196/3
பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்க – அகம் 60/1
வெள் இறா கனவும் நள்ளென் யாமத்து – அகம் 170/12
சே இறா துழந்த நுரை பிதிர் படு திரை – அகம் 270/5
துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை – அகம் 376/16
TOP


இறாயினிர் (1)

நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து – மலை 249
TOP


இறால் (2)

தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல – திரு 300
தேனின் இறால் என ஏணி இழைத்து இருக்கும் – கலி 39/10
TOP


இறாலொடு (1)

இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் – அகம் 348/5
TOP


இறாஅ (1)

இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும் – மலை 274
TOP


இறாஅல் (7)

நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை – மது 624
நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல்/உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும் – மலை 525,526
பெரும் சினை தொடுத்த கொழும் கண் இறாஅல்/புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளை – நற் 168/2,3
பறவை இழைத்த பல் கண் இறாஅல்/தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய – நற் 185/9,10
பெரும் தேன் இறாஅல் சிதறும் நாடன் – ஐங் 214/3
தேன் செய் இறாஅல் துளைபட போகி – கலி 41/13
வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல்/மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ – கலி 42/22,23
TOP


இறாஅலியரோ (1)

இறாஅலியரோ பெரும நின் தானை – பதி 40/2
TOP


இறீஇயர் (5)

நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே – குறு 169/6
தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும் – குறு 255/6
முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என – அகம் 49/3
இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என – அகம் 165/8
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என – புறம் 210/9
TOP


இறீஇயரோ (1)

தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம் – குறு 169/2
TOP


இறு (4)

இறு முறை என ஒன்று இன்றி – குறு 199/7
வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற – பரி 11/40
குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32
இறு முறை செய்யும் உருவொடு நும் இல் – கலி 93/19
TOP


இறுக்கல் (1)

இறுக்கல் வேண்டும் திறையே மறுப்பின் – புறம் 97/20
TOP


இறுக்கும் (12)

வந்து புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல் – பதி 62/5
பெரும் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்/அரும் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும் – அகம் 97/7,8
பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்/அறன் இல் வேந்தன் ஆளும் – அகம் 109/13,14
கை செய் பாவை துறை-கண் இறுக்கும்/மகர நெற்றி வான் தோய் புரிசை – அகம் 181/19,20
அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும்/திரு மணி விளக்கின் அலைவாய் – அகம் 266/19,20
கரும் கால் யாத்து பருந்து வந்து இறுக்கும்/சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டு – அகம் 397/13,14
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும்/முத்தீ விளக்கில் துஞ்சும் – புறம் 2/22,23
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும்/பொன் போல் புதல்வர் பெறாஅதீரும் – புறம் 9/3,4
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை – புறம் 16/9
வேறு புலத்து இறுக்கும் தானையோடு – புறம் 22/37
பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய் – புறம் 203/11
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு – புறம் 344/3
TOP


இறுகிறுக்கி (1)

இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி – பரி 12/59
TOP


இறுகிறுக (2)

இறுகிறுக யாத்து புடைப்ப – பரி 9/40
ஏணிப்படுகால் இறுகிறுக தாள் இடீஇ – பரி 10/11
TOP


இறுகு (2)

இறுகு குலை முறுக பழுத்த பயம் புக்கு – மலை 132
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் – நற் 265/1
TOP


இறுத்த (39)

கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த/வேள்வி தூணத்து அசைஇ யவனர் – பெரும் 315,316
கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து – பெரும் 446
வெடி பட கடந்து வேண்டு புலத்து இறுத்த/பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர் – மது 233,234
மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த/தாது அவிழ் அலரி தா சினை பிளந்து – குறி 148,149
கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும் – மலை 89
கொடை கடன் இறுத்த செம்மலோய் என – மலை 543
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல் – நற் 99/7
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை – நற் 215/3
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் – நற் 257/2
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்த/நல் எயில் உடையோர் உடையம் என்னும் – நற் 287/2,3
சூல் பொறை இறுத்த கோல் தலை இருவி – நற் 306/6
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த/வேல் கெழு தானை செழியன் பாசறை – நற் 387/7,8
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம் – பதி 13/12
மூழ்த்து இறுத்த வியன் தானையொடு – பதி 33/5
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் – பதி 68/2
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல் – பதி 70/22
அரும் கடன் இறுத்த செரு புகல் முன்ப – பதி 74/22
வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல் – பதி 81/18
வேறு புலத்து இறுத்த விறல் வெம் தானையொடு – பதி 94/6
ஒளிறு வாள் பொருப்பன் உடல் சமத்து இறுத்த/களிறு நிரைத்தவை போல் கொண்மூ நெரிதர – பரி 22/1,2
செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல – கலி 13/1
எழுதி இறுத்த பெரும் பொன் படுகம் – கலி 64/9
மாரி இறுத்த கடவுளை கண்டாயோ – கலி 93/28
இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல – கலி 108/1
சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த/வினை வரு பருவரல் போல – கலி 149/14,15
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த/குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை – அகம் 8/1,2
குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி – அகம் 38/13
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த/பெரு வள கரிகால் முன்னிலை செல்லார் – அகம் 125/17,18
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை – அகம் 243/8
அஞ்சுவர இறுத்த தானை – அகம் 264/14
வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த/கிள்ளிவளவன் நல் அமர் சாஅய் – அகம் 346/21,22
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல – புறம் 19/8
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானை – புறம் 19/9
இடை சுரத்து இறுத்த மள்ள விளர்த்த – புறம் 254/3
அரும் கடன் இறுத்த பெருஞ்செயாளனை – புறம் 282/2
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை – புறம் 294/2
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை – புறம் 343/14
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 391/8
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் – புறம் 398/8
TOP


இறுத்தது (2)

ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே – நற் 156/10
சீறடி தோயா இறுத்தது அமையுமோ – கலி 90/18
TOP


இறுத்தந்த (4)

மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண் – கலி 29/9
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் – கலி 34/7
இடை நின்ற காலம் போல் இறுத்தந்த மருள் மாலை – கலி 118/8
செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை – கலி 148/7
TOP


இறுத்தந்தது (1)

ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில் – கலி 27/8
TOP


இறுத்தலின் (1)

பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்/களையுநர் காணாது கலங்கிய உடை மதில் – நற் 43/9,10
TOP


இறுத்தன்று (1)

ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே – நற் 68/10
TOP


இறுத்தன (2)

நறை வலம் செய விடா இறுத்தன ஏறு – கலி 104/31
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து – அகம் 132/1
TOP


இறுத்தார் (1)

அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டும் மற்று இன்றும் – கலி 102/31
TOP


இறுத்து (10)

ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து/அரசு பட அமர் உழக்கி – மது 127,128
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து/மேம்பட மரீஇய வெல் போர் குருசில் – மது 150,151
வேற்று முனை வெம்மையின் சாத்து வந்து இறுத்து என – குறு 390/3
யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து/முனை எரி பரப்பிய துன் அரும் சீற்றமொடு – பதி 15/1,2
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து/தடம் தாள் நாரை படிந்து இரை கவரும் – பதி 32/11,12
ஓடா பீடர் உள்_வழி இறுத்து/முள் இடுபு அறியா ஏணி தெவ்வர் – பதி 45/14,15
வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து அவர் – பதி 53/1
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என – அகம் 134/2
விழவு உடை ஆங்கண் வேற்று புலத்து இறுத்து/குண கடல் பின்னது ஆக குட கடல் – புறம் 31/12,13
உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்து/வள மழை மாறிய என்றூழ் காலை – புறம் 161/4,5
TOP


இறுதி (2)

யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல் – கலி 10/3
எறி திரை பெரும் கடல் இறுதி கண் செலினும் – புறம் 397/23
TOP


இறுதி-கண் (1)

முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதி-கண்/பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் – கலி 34/4,5
TOP


இறுப்ப (5)

கழி நாரை வரை இறுப்ப/தண் வைப்பின் நால் நாடு குழீஇ – பொரு 225,226
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப/இன்ன சில் நாள் கழியின் பல் நாள் – நற் 364/4,5
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப/காய்த்த கரந்தை மா கொடி விளை வயல் – பதி 40/4,5
முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப/தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை – அகம் 392/22,23
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப/முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர் – அகம் 397/2,3
TOP


இறுப்பினும் (1)

அரசு புறத்து இறுப்பினும் அதிர்வு இலர் திரிந்து – பதி 81/8
TOP


இறுப்போரும் (1)

விரகியர் வினவ வினா இறுப்போரும்/இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் – பரி 19/49,50
TOP


இறுபு (12)

ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு/கம்பலத்து அன்ன பைம் பயிர் தாஅம் – நற் 24/3,4
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு/அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என – நற் 372/3,4
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த – ஐங் 213/1
கொடி அறுபு இறுபு செவி செவிடு படுபு – பரி 2/38
தலை இறுபு தாரொடு புரள – பரி 2/41
அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி தன் – கலி 104/40
அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி தன் – கலி 104/40
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப – கலி 104/53
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப – கலி 104/53
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு – அகம் 217/18
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது – அகம் 333/9
மாடம் மயங்கு எரி மண்டி கோடு இறுபு/உரும் எறி மலையின் இரு நிலம் சேர – புறம் 373/20,21
TOP


இறும்-மார் (1)

அரும் கடன் இறும்-மார் வயவர் எறிய – புறம் 282/5
TOP


இறும்பில் (8)

அகல் மலை இறும்பில் துவன்றிய யானை – மலை 205
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த – நற் 154/4
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த – நற் 264/7
காம்பு அமல் இறும்பில் பாம்பு பட துவன்றி – அகம் 88/13
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்/தீ இல் அடுப்பின் அரங்கம் போல – அகம் 137/10,11
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்/பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி – அகம் 322/9,10
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்/புலி புக்கு ஈனும் வறும் சுனை – அகம் 329/12,13
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்/கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் – அகம் 368/9,10
TOP


இறும்பின் (11)

மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின்/கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் – பெரும் 495,496
மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின்/ஞாயிறு தெறாஅ மாக நனம் தலை – மலை 271,272
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் – நற் 213/5
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப சுரன் இழிபு – குறு 155/5
வில் பயில் இறும்பின் தகடூர் நூறி – பதி 78/9
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்/ஒண் செம்_காந்தள் அவிழ்ந்து ஆங்கண் – அகம் 92/8,9
இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த – அகம் 97/9
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த – அகம் 171/2
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின்/ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என – அகம் 238/1,2
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த – அகம் 357/2
துயில் மடிந்து அன்ன தூங்கு இருள் இறும்பின்/பறை இசை அருவி முள்ளூர் பொருந – புறம் 126/7,8
TOP


இறும்பு (2)

தலை இறும்பு கதழும் நாறு கொடி புறவின் – மலை 407
இறும்பு பட்டு இருளிய இட்டு அரும் சிலம்பில் – அகம் 128/8
TOP


இறும்பூதால் (2)

சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே – பதி 32/17
இறும்பூதால் பெரிதே கொடி தேர் அண்ணல் – பதி 33/1
TOP


இறும்பூது (6)

இறும்பூது சான்ற நறும் பூ சேக்கையும் – மது 487
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர் – மலை 358
எறும்பும் மூசா இறும்பூது மரபின் – பதி 30/38
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம் ஆயினும் – பரி 4/4
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி – அகம் 152/18
இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே – புறம் 97/25
TOP


இறுவரை (7)

இரும் கல் இகுப்பத்து இறுவரை சேராது – மலை 367
இறுவரை நாட நீ இறந்து செய் பொருளே – ஐங் 309/5
இறுவரை புரையுமாறு இரு கரை ஏமத்து – பரி 7/40
இறுவரை இழிதரும் பொன் மணி அருவியின் – பரி 13/3
இறுவரை வேங்கையின் ஒள் வீ சிதறி – கலி 41/11
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் – கலி 43/13
இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர – அகம் 322/4
TOP


இறை (117)

குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 265
இறை உறை புறவின் செம் கால் சேவல் – பெரும் 439
முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி – முல் 87
வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள் – மது 414
வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் – நெடு 36
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறை தட கையின் – குறி 123
நேர் இறை முன்கை பற்றி நுமர் தர – குறி 231
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என – மலை 319
விருந்து இறை அவரவர் எதிர்கொள குறுகி – மலை 496
அஞ்சல் என்ற இறை கைவிட்டு என – நற் 43/8
வகை அமர் நல் இல் அக இறை உறையும் – நற் 71/7
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை – நற் 113/1
மெல் இறை பணை தோள் துயில் அமர்வோயே – நற் 121/12
இறை ஏர் எல் வளை குறு_மகள் – நற் 167/10
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே – நற் 172/10
உள் இறை குரீஇ கார் அணல் சேவல் – நற் 181/1
முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை – நற் 207/2
இறை வரை நில்லா வளையும் மறையாது – நற் 263/2
இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை – நற் 307/6
இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும் – குறு 46/5
துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து – குறு 50/3
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே – குறு 52/5
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே – குறு 52/5
நேர் இறை முன்கை பற்றி – குறு 53/6
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த – குறு 92/3
புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள் – குறு 168/5
திருந்து இறை பணை தோள் உள்ளாதோரே – குறு 279/8
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு – குறு 289/2
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் – குறு 364/5
குறி இறை புதல்வரொடு மறுவந்து ஓடி – குறு 394/3
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே – ஐங் 20/5
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே – ஐங் 140/3
புள் இறை கூரும் துறைவனை – ஐங் 142/2
இறை ஏர் முன்கை நீங்கிய வளையே – ஐங் 163/4
இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே – ஐங் 165/4
நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள் – ஐங் 181/1
நேர் இறை பணை தோள் ஞெகிழ – ஐங் 239/4
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே – ஐங் 384/5
மெல் இறை பணை தோள் பசலை தீர – ஐங் 459/1
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக – ஐங் 468/3
சாய் இறை பணை தோள் அம் வரி அல்குல் – ஐங் 481/1
நேர்_இறை_முன்கை நின் உள்ளி யாம் வரவே – ஐங் 493/4
வீங்கு இறை தடைஇய அமை மருள் பணை தோள் – பதி 54/3
நில்லா தானை இறை கிழவோயே – பதி 54/17
வேய் புரைபு எழிலிய விளங்கு இறை பணை தோள் – பதி 65/8
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் – பதி 82/2
பெரு நல் யானை இறை கிழவோயே – பதி 90/57
சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் – பரி 8/79
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி – பரி 9/4
பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி – பரி 10/127
இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன் – பரி 11/8
பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து – பரி 11/66
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் – பரி 12/43
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின் – பரி 12/92
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை/இருங்குன்றத்து அடியுறை இயைக என – பரி 15/64,65
இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்க – கலி 3/3
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே – கலி 7/16
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர – கலி 16/2
ஈங்கு நீர் அளிக்கும்-கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/17
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ – கலி 28/11
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ – கலி 28/15
வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே – கலி 38/26
இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன் – கலி 53/9
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நின் கண்டார்க்கு – கலி 56/21
வார்-உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள் – கலி 58/1
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் – கலி 60/4
வீங்கு இறை வடு கொள வீழுநர் புணர்ந்தவர் – கலி 66/5
வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி – கலி 76/14
இறை பகை தணிப்ப அ குடி பதி பெயர்ந்து ஆங்கு – கலி 78/8
தந்தை இறை தொடி மற்று இவன் தன் கை-கண் – கலி 84/31
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும்-கால் – கலி 100/14
நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு – கலி 120/24
இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு – கலி 121/14
இறை வரை நில்லா வளையள் இவட்கு இனி – கலி 125/22
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர – கலி 127/19
நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை – கலி 132/15
இறை இறை பொத்திற்று தீ – கலி 145/58
இறை இறை பொத்திற்று தீ – கலி 145/58
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை – அகம் 19/15
சாய் இறை பணை தோள் கிழமை தனக்கே – அகம் 32/18
நுணங்கு அமை புரையும் வணங்கு இறை பணை தோள் – அகம் 33/15
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு – அகம் 59/16
வாரல் வாழியர் ஐய நேர் இறை/நெடு மென் பணை தோள் இவளும் யானும் – அகம் 92/5,6
நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு – அகம் 97/10
இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும் – அகம் 103/9
போர் மடி நல் இறை பொதியிலானே – அகம் 167/20
குறி இறை குரம்பை கொலை வெம் பரதவர் – அகம் 210/1
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள் – அகம் 213/16
ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள் – அகம் 220/20
நெகிழ்ந்த முன்கை நேர் இறை பணை தோள் – அகம் 242/14
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு – அகம் 250/13
மெல் இறை பணை தோள் விளங்க வீசி – அகம் 257/11
குறி இறை குரம்பை நம் மனை-வயின் புகுதரும் – அகம் 272/11
சாய் இறை திரண்ட தோள் பாராட்டி – அகம் 282/14
நல் இறை மெல் விரல் கூப்பி – அகம் 282/17
மெல் இறை பணை தோள் விளங்கும் மாண் கவினே – அகம் 291/25
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் – அகம் 334/7
நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால் – அகம் 335/12
நேர் இறை முன்கை வீங்கிய வளையே – அகம் 336/23
வாங்கு அமை புரையும் வீங்கு இறை பணை தோள் – அகம் 343/1
நகை நன்று அம்ம தானே இறை மிசை – அகம் 346/1
எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய் – அகம் 388/20
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே – அகம் 388/26
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து – அகம் 396/8
ஏந்து கொடி இறை புரிசை – புறம் 17/27
வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள் – புறம் 32/3
கொடியன் எம் இறை என கண்ணீர் பரப்பி – புறம் 72/11
குறி இறை குரம்பை குறவர் மாக்கள் – புறம் 129/1
நீயே பேர் எண்ணலையே நின் இறை/மாறி வா என மொழியலன் மாதோ – புறம் 138/6,7
தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்ப – புறம் 171/6
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை/மா வள் ஈகை கோதையும் – புறம் 172/9,10
இறை உறு விழுமம் தாங்கி அமர்_அகத்து – புறம் 180/3
சிறையும் தானே தன் இறை விழுமுறினே – புறம் 314/7
இல் இறை செரீஇய ஞெலி_கோல் போல – புறம் 315/4
வீங்கு இறை பணை தோள் மடந்தை – புறம் 354/9
விருந்து இறை நல்கும் நாடன் எம் கோன் – புறம் 374/15
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து – புறம் 392/19
TOP


இறை_இறை (1)

பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே – குறு 52/5
TOP


இறைகூடி (1)

ஈரும் பேனும் இருந்து இறைகூடி/வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த – பொரு 79,80
TOP


இறைகூடிய (1)

விருந்து இறைகூடிய பசலைக்கு – நற் 247/8
TOP


இறைகூர்தலின் (1)

தெறல் மறவர் இறைகூர்தலின்/பொறை மலிந்து நிலன் நெளிய – புறம் 345/5,6
TOP


இறைகூர்ந்த (1)

ஈர் குழாத்தொடு இறைகூர்ந்த/பேஎன் பகை என ஒன்று என்கோ – புறம் 136/4,5
TOP


இறைகூரும் (1)

புள் இறைகூரும் மெல்லம்புலம்ப – அகம் 10/4
TOP


இறைகொண்ட (9)

வண்டு இறைகொண்ட கமழ் பூ பொய்கை – மது 253
மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து – குறி 121
வண்டு இறைகொண்ட தண் கடல் பரப்பின் – பதி 51/6
கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல் – பதி 70/15
புள் இறைகொண்ட முள் உடை நெடும் தோட்டு – அகம் 180/11
உரும் இறைகொண்ட உயர் சிமை – அகம் 192/14
வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு – அகம் 218/20
நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு – அகம் 235/17
பாறு இறைகொண்ட பறந்தலை மாறு தக – புறம் 360/15
TOP


இறைகொண்டன்று (1)

வந்து இறைகொண்டன்று தானை அந்தில் – பதி 40/6
TOP


இறைகொண்டனவே (1)

கரும் கோட்டு புன்னை இறைகொண்டனவே/கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி – நற் 67/5,6
TOP


இறைகொண்டனன் (1)

பெண்டிர் ஊர் இறைகொண்டனன் என்ப – ஐங் 40/3
TOP


இறைகொண்டு (1)

இறைகொண்டு இருந்து அன்ன நல்லாரை கண்டேன் – கலி 92/19
TOP


இறைகொள்பு (1)

பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு/தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய – குறு 15/1,2
TOP


இறைகொள்ளும் (4)

வால் இணர் படு சினை குருகு இறைகொள்ளும்/அல்கு-உறு கானல் ஓங்கு மணல் அடைகரை – பதி 30/4,5
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு – கலி 78/6
எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 126/5
தேன் இறைகொள்ளும் இரும் பல் யானை – புறம் 17/35
TOP


இறைகொள (4)

இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும் – நற் 131/6
இரும் தும்பி இறைகொள எதிரிய வேனிலான் – கலி 30/4
பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள/நிறை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/12,13
இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள/முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப – கலி 132/3,4
TOP


இறைச்சியாய் (2)

வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் – கலி 8/9
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன் – கலி 148/9
TOP


இறைஞ்ச (2)

அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க – பரி 23/66
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச/சிதர் சினை தூங்கும் அற்சிர அரைநாள் – அகம் 294/10,11
TOP


இறைஞ்சி (10)

எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சி/பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய – குறி 215,216
வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி/இரும்பு கவர்வு-உற்றன பெரும் புன வரகே – மலை 112,113
கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி/குறை அறை வாரா நிவப்பின் அறை-உற்று – மலை 117,118
திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென – நற் 39/2
துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி/தோடு அலை கொண்டன ஏனல் என்று – நற் 206/1,2
முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோளே – ஐங் 197/2
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு – கலி 71/5
கோதை கோலா இறைஞ்சி நின்ற – கலி 128/18
நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி/தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக – கலி 147/69,70
நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா – அகம் 299/13
TOP


இறைஞ்சிய (10)

தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் – நெடு 174
இறைஞ்சிய குரல பைம் தாள் செந்தினை – நற் 376/2
கரி குறட்டு இறைஞ்சிய செறி கோள் பைம் குரல் – குறு 198/4
பசி பிணிக்கு இறைஞ்சிய பரூஉ பெரும் ததரல் – குறு 213/3
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி – பதி 24/24
புல்லு விட்டு இறைஞ்சிய பூம்_கொடி தகைப்பன – கலி 3/13
இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி – அகம் 110/15
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர் கழனி – அகம் 243/6
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல் – அகம் 288/5
குலை இறைஞ்சிய கோள் தாழை – புறம் 17/9
TOP


இறைஞ்சியோளே (3)

ஒய்யென இறைஞ்சியோளே மாவின் – அகம் 86/29
நாணினள் இறைஞ்சியோளே பேணி – அகம் 136/26
நின்று தலை இறைஞ்சியோளே அது கண்டு – அகம் 261/10
TOP


இறைஞ்சியோனே (1)

இறைஞ்சியோனே குருசில் பிணங்கு கதிர் – புறம் 285/14
TOP


இறைஞ்சின (1)

முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே – மலை 144
TOP


இறைஞ்சினள் (2)

திரு முகம் இறைஞ்சினள் வீழ்பவற்கு இனைபவள் – கலி 77/3
சிறிய இறைஞ்சினள் தலையே – அகம் 230/15
TOP


இறைஞ்சினளே (1)

தலை இறைஞ்சினளே அன்னை – நற் 147/11
TOP


இறைஞ்சினெம் (1)

பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம் – பரி 13/63
TOP


இறைஞ்சுக (1)

இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த – புறம் 6/19
TOP


இறைஞ்சுபு (1)

இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி – கலி 57/21
TOP


இறைஞ்சும் (3)

தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் – நற் 300/4
நாணி இறைஞ்சும் நன் மலை நன் நாட – கலி 49/9
மெல்ல இறைஞ்சும் தலை – கலி 61/6
TOP


இறைஞ்சுவார் (1)

இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்/நிகழ்வது அறியாது நில்லு நீ நல்லாய் – பரி 20/89,90
TOP


இறைத்து (1)

இறைத்து உண சென்று அற்று ஆங்கு – குறு 99/5
TOP


இறைப்பேன் (1)

புறங்காலின் போக இறைப்பேன் முயலின் – கலி 144/47
TOP


இறைய (2)

தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர் – குறு 367/2
முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ – குறு 374/5
TOP


இறையார் (1)

வளை முன்கை வணங்கு இறையார்/அணை மென் தோள் அசைபு ஒத்தார் – பரி 17/33,34
TOP


இறையும் (2)

இறையும் அரும் தொழில் முடித்து என பொறைய – நற் 161/1
இறையும் பெயரும் தோற்றி நுமருள் – புறம் 294/5
TOP


இறையே (1)

இறையே தவறு உடையான் – கலி 56/34
TOP


இறைவ (2)

பிணிமுகம் ஊர்ந்த வெல் போர் இறைவ/பணி ஒரீஇ நின் புகழ் ஏத்தி – பரி 17/49,50
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார் – புறம் 6/21
TOP


இறைவன் (5)

நல் இறைவன் பொருள் காக்கும் – பட் 120
இறைவன் தாட்கு உதவாதே அதனால் – புறம் 18/26
அஃது எம் ஊரே அவன் எம் இறைவன்/அன்னோன் படர்தி ஆயின் நீயும் – புறம் 48/5,6
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி – புறம் 152/19
அவன் எம் இறைவன் யாம் அவன் பாணர் – புறம் 316/4
TOP


இன் (338)

நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப – திரு 65
பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை – திரு 115
மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர – திரு 142
பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை – திரு 145
நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு – திரு 212
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 22
இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் – பொரு 27
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் – பொரு 85
இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என – சிறு 28
இன் குரல் சீறியாழ் இட-வயின் தழீஇ – சிறு 35
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து – சிறு 76
எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு – சிறு 175
இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும் – சிறு 208
இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி – சிறு 220
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக – சிறு 229
விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து – பெரும் 56
இல் அடு கள் இன் தோப்பி பருகி – பெரும் 142
இன் தீம் பாலை முனையின் குமிழின் – பெரும் 180
இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர் – பெரும் 196
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 218
கரும் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழி-மின் – பெரும் 392
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் – பெரும் 440
அன்றே விடுக்கும் அவன் பரிசில் இன் சீர் – பெரும் 493
வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து – முல் 33
இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து – முல் 80
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் – முல் 88
இன் இசைய முரசம் முழங்க – மது 80
கம்புள் சேவல் இன் துயில் இரிய – மது 254
வன் கை வினைஞர் அரி_பறை இன் குரல் – மது 262
இன் கலி யாணர் குழூஉ பல பயின்று ஆங்கு – மது 330
இன் இசை முரசம் இடை புலத்து ஒழிய – மது 349
தகை செய் தீம் சேற்று இன் நீர் பசும் காய் – மது 400
இன் உயிர் அஞ்சி இன்னா வெய்து_உயிர்த்து – மது 403
இன் சோறு தருநர் பல்-வயின் நுகர – மது 535
காதல் இன் துணை புணர்-மார் ஆய் இதழ் – மது 550
ஏழ் புணர் சிறப்பின் இன் தொடை சீறியாழ் – மது 559
நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து – மது 575
அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து – மது 612
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை – நெடு 68
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 114
இன்னே வருகுவர் இன் துணையோர் என – நெடு 155
முரசு அதிர்ந்து அன்ன இன் குரல் ஏற்றொடு – குறி 49
இன் இசை முரசின் சுடர் பூண் சேஎய் – குறி 51
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு_மகள் – குறி 193
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும் – குறி 242
இன் புளி கலந்து மா மோர் ஆக – மலை 179
பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை – மலை 278
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை – மலை 296
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை – மலை 315
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர் – மலை 358
இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி – மலை 381
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் – மலை 476
கடவது அறிந்த இன் குரல் விறலியர் – மலை 536
கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று – மலை 555
இரும் கழி சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 4/12
இன் கடும் கள்ளின் இழை அணி நெடும் தேர் – நற் 10/5
அருவி இன் இயத்து ஆடும் நாடன் – நற் 34/5
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும் – நற் 59/5
உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே – நற் 67/12
இன் தீம் பால் பயம் கொள்-மார் கன்று விட்டு – நற் 80/2
முறுவல் இன் நகை காண்கம் – நற் 81/9
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரை – நற் 91/2
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை – நற் 108/7
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர் – நற் 115/3
இன் முசு பெரும் கலை நன் மேயல் ஆரும் – நற் 119/5
முழங்கு திரை இன் சீர் தூங்கும் – நற் 138/10
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே – நற் 142/11
இன்னா இன் உரை கேட்ட சில் நாள் – நற் 143/8
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து – நற் 148/8
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி – நற் 153/4
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய் – நற் 168/7
யாழ் ஓர்த்து அன்ன இன் குரல் இன வண்டு – நற் 176/8
குன்ற வேலி தம் உறைவு இன் ஊரே – நற் 176/11
இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த – நற் 181/10
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே – நற் 187/10
நரம்பு இசைத்து அன்ன இன் குரல் குருகின் – நற் 189/4
இன் இசை முரசின் இரங்கி மன்னர் – நற் 197/10
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண – நற் 204/5
இன் துணை பிரிந்தோர் நாடி – நற் 208/11
கவவு கொள் இன் குரல் கேள்-தொறும் – நற் 212/9
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம் – நற் 219/3
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே – நற் 227/2
இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர் – நற் 237/3
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என – நற் 245/7
இன் இசை வானம் இரங்கும் அவர் – நற் 246/9
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி – நற் 247/3
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை – நற் 264/2
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் – நற் 267/3
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல் – நற் 267/6
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் – நற் 275/5
நெடும் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே – நற் 311/11
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர – நற் 321/2
இன் இயம் கறங்க பாடி – நற் 322/11
வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர் – நற் 323/9
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் – நற் 330/5
என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே – நற் 334/9
நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றா – நற் 338/3
விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து – நற் 341/3
இன் கல் யாணர் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 344/12
இன் கல் யாணர் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 344/12
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப – நற் 364/8
உயர் மணல் படப்பை எம் உறைவு இன் ஊரே – நற் 375/9
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் – நற் 380/7
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை – குறு 5/2
இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு – குறு 93/2
ஏம இன் துயில் எடுப்பியோயே – குறு 107/7
இன் துயில் எடுப்புதி கனவே – குறு 147/4
இன் இசை உருமின முரலும் – குறு 200/6
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு – குறு 202/3
இன் துயில் முனிநர் சென்ற ஆறே – குறு 213/7
மின்னும் தோழி என் இன் உயிர் குறித்தே – குறு 216/7
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர் – குறு 254/4
இன்னா இரவின் இன் துணை ஆகிய – குறு 266/2
புன் புற பெடையொடு பயிரி இன் புறவு – குறு 285/5
இசையின் இசையா இன் பாணித்தே – குறு 291/3
இன் கடும் கள்ளின் அகுதை தந்தை – குறு 298/5
மன்றம் போழும் இன் மணி நெடும் தேர் – குறு 301/5
இன் இணர் புன்னை அம் புகர் நிழல் – குறு 303/6
இன் உறல் இள முலை ஞெமுங்க – குறு 314/5
என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே – குறு 319/8
மடவரல் அரிவை நின் மார்பு அமர் இன் துணை – குறு 321/4
இன் கடும் கள்ளின் மணம் இல கமழும் – குறு 330/5
இன் உயிர் அல்லது பிறிது ஒன்று – குறு 334/5
இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே – குறு 349/7
இன் நகை ஆயத்தாரோடு – குறு 351/7
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே – குறு 353/3
இனிதோ பெரும இன் துணை பிரிந்தே – குறு 363/6
பனி துயில் செய்யும் இன் சாயற்றே – ஐங் 14/4
முள் எயிற்று பாண்_மகள் இன் கெடிறு சொரிந்த – ஐங் 47/1
பழன ஊரன் பாயல் இன் துணையே – ஐங் 96/4
பாணர் நரம்பினும் இன் கிளவியளே – ஐங் 100/4
திரை இமிழ் இன் இசை அளைஇ அயலது – ஐங் 171/1
முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும் – ஐங் 171/2
இரவினானும் இன் துயில் அறியாது – ஐங் 173/1
இன் ஒலி தொண்டி அற்றே – ஐங் 179/3
படல் இன் பாயல் வௌவியோளே – ஐங் 195/4
இன் இனி வாரா மாறு-கொல் – ஐங் 222/3
என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையே – ஐங் 228/4
கொடிச்சி இன் குரல் கிளி செத்து அடுக்கத்து – ஐங் 289/1
பாயல் இன் துணை ஆகிய பணை தோள் – ஐங் 293/3
மடவரல் இன் துணை ஒழிய – ஐங் 328/3
குயில் பெடை இன் குரல் அகவ – ஐங் 341/2
இன் துணை இனிது பாராட்ட – ஐங் 387/5
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே – ஐங் 397/5
முறுவலின் இன் நகை பயிற்றி – ஐங் 403/4
ஊடினும் இனிய கூறும் இன் நகை – பதி 16/11
புரையோர் உண்கண் துயில் இன் பாயல் – பதி 16/18
மத்து உரறிய மனை இன் இயம் இமிழா – பதி 26/3
இன் இசை இமிழ் முரசு இயம்ப கடிப்பு இகூஉ – பதி 40/3
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து – பதி 40/25
ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் – பதி 43/21
இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் – பதி 46/7
இன் இசை புணரி இரங்கும் பௌவத்து – பதி 55/3
குரல் புணர் இன் இசை தழிஞ்சி பாடி – பதி 57/9
இன் நகை மேய பல் உறை பெறுப-கொல் – பதி 68/14
சேரார் இன் உயிர் செகுக்கும் – பரி 2/48
இன் இளவேனில் இது அன்றோ வையை நின் – பரி 6/77
புரி நரம்பு இன் கொளை புகல் பாலை ஏழும் – பரி 7/77
யாம குறை ஊடல் இன் நசை தேன் நுகர்வோர் – பரி 10/32
கொண்ட இன் இசை தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும் – பரி 11/129
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் – பரி 11/137
ஏவல் இன் முதுமொழி கூறும் – பரி 13/41
மாயோன் ஒத்த இன் நிலைத்தே – பரி 15/33
ஏர் அணி இலங்கு எயிற்று இன் நகையவர் – பரி 22/31
மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு – பரி 22/36
ஏம இன் துயில் எழுதல் அல்லதை – பரி 30/9
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ – கலி 7/20
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/23
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை – கலி 9/18
இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு – கலி 11/16
அணை மருள் இன் துயில் அம் பணை தட மென் தோள் – கலி 14/1
இனிய சொல்லி இன்_ஆங்கு பெயர்ப்பது – கலி 14/8
இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ – கலி 16/8
இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள் – கலி 24/3
இன் உயிர் செய்யும் மருந்து ஆகி பின்னிய – கலி 32/15
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் – கலி 34/7
சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர – கலி 42/30
இன் நுரை செதும்பு அரற்றும் செவ்வியுள் நின் சோலை – கலி 48/18
இன் நகை இலங்கு எயிற்று தே மொழி துவர் செம் வாய் – கலி 55/4
கண்ணும் நீர் ஆக நடுங்கினன் இன் நகாய் – கலி 60/8
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக – கலி 65/5
இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்பி – கலி 78/2
கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல் – கலி 86/5
ஆய்_இழாய் நின் கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா – கலி 88/8
இன்_நகை தீதோ இலேன் – கலி 89/11
இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக – கலி 92/24
ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ – கலி 94/37
இன் உறல் வியன் மார்ப இனையையால் கொடிது என – கலி 100/21
பண் அமை இன் சீர் குரவையுள் தெண் கண்ணி – கலி 102/35
இடி உறழ் இசை இன் இயம் எழுந்து ஆர்ப்ப – கலி 104/54
இன் இசை முரசின் பொருப்பன் மன்னி – கலி 105/72
சாயல் இன் மார்பில் கமழ் தார் குழைத்த நின் – கலி 112/23
இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகி – கலி 121/15
எறி திரை தந்திட இழிந்த மீன் இன் துறை – கலி 121/20
இன் மணி சிலம்பின் சில் மொழி ஐம்பால் – கலி 125/16
இன் துணை பிரிந்தாரை உடையையோ நீ – கலி 129/15
இன் துணை அன்றில் இரவின் அகவாவே – கலி 131/28
இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின் – கலி 137/25
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் – கலி 139/28
தம் காதல் காட்டுவர் சான்றவர் இன் சாயல் – கலி 140/18
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை – கலி 143/20
இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்றும் – கலி 143/54
இன் நகை எய்தினள் இழந்த தன் நலனே – கலி 143/60
உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் என்று – கலி 144/13
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை – அகம் 3/2
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செ வாய் – அகம் 3/15
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை – அகம் 7/9
சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின் – அகம் 13/14
இன் துணை படர்ந்த கொள்கையொடு ஒராங்கு – அகம் 15/17
எக்கர் புன்னை இன் நிழல் அசைஇ – அகம் 20/3
இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து – அகம் 22/18
இன் இசை இயத்தின் கறங்கும் – அகம் 25/21
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க – அகம் 29/13
மழலை இன் சொல் பயிற்றும் – அகம் 34/17
இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின் – அகம் 39/19
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே – அகம் 40/17
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன – அகம் 41/14
இன் துணை பிரியும் மடமையோரே – அகம் 43/15
பண்பு உடை ஆகத்து இன் துயில் பெறவே – அகம் 44/19
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே – அகம் 45/12
இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள் – அகம் 52/13
எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும் – அகம் 53/11
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் – அகம் 55/13
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ – அகம் 58/1
இன் தீம் பைம் சுனை ஈர் அணி பொலிந்த – அகம் 59/13
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை – அகம் 64/15
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை – அகம் 66/22
இன் இசை அருவி பாடும் என்னதூஉம் – அகம் 68/3
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே – அகம் 69/20
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் – அகம் 74/13
இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு – அகம் 76/3
பாடு இன் அருவி பனி நீர் இன் இசை – அகம் 82/3
பாடு இன் அருவி பனி நீர் இன் இசை – அகம் 82/3
இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து – அகம் 82/7
இன் நகை இருக்கை பின் யான் வினவலின் – அகம் 86/26
கூடு கொள் இன் இயம் கறங்க களன் இழைத்து – அகம் 98/14
வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர் – அகம் 98/16
இன் சொல் அளைஇ பெயர்ந்தனன் தோழி – அகம் 102/15
மாலை இன் துணை ஆகி காலை – அகம் 107/19
நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி – அகம் 109/2
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்கு – அகம் 109/12
கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன் – அகம் 113/10
பெரும் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கே – அகம் 132/14
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண் – அகம் 137/6
ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது – அகம் 138/9
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை – அகம் 139/8
இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ – அகம் 151/2
இன் சொல் பிணிப்ப நம்பி நம்-கண் – அகம் 153/6
இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என – அகம் 165/8
இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மென – அகம் 172/3
இன் களி நறவின் இயல் தேர் நன்னன் – அகம் 173/16
சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை – அகம் 179/10
பணை தகை தடைஇய காண்பு இன் மென் தோள் – அகம் 181/24
இரும்பின் இன் உயிர் உடையோர் போல – அகம் 185/4
நன்னராளர் கூடு கொள் இன் இயம் – அகம் 189/13
அறல் என விரிந்த உறல் இன் சாயல் – அகம் 191/15
பன் மாண் தங்கிய சாயல் இன் மொழி – அகம் 193/12
பெரும் தோள் இன் துயில் கைவிடுகலனே – அகம் 193/14
இன் நகை முறுவல் ஏழையை பல் நாள் – அகம் 195/8
இசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவி – அகம் 212/7
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே – அகம் 213/24
விறல் இழை பொலிந்த காண்பு இன் சாயல் – அகம் 218/7
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என – அகம் 224/15
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/15
இன் இளவேனிலும் வாரார் – அகம் 229/20
இருள் ஐம்_கூந்தல் இன் துயில் மறந்தே – அகம் 233/15
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர் – அகம் 234/15
இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட – அகம் 240/12
இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும் – அகம் 249/4
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க – அகம் 251/9
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் – அகம் 253/7
இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய – அகம் 262/11
இன் சிலை எழில் ஏறு கெண்டி புரைய – அகம் 265/12
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது – அகம் 268/10
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே – அகம் 274/14
மழலை இன் சொல் கழறல் இன்றி – அகம் 275/7
இன் உயிர் கலப்ப கூறி நல்_நுதல் – அகம் 275/8
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து – அகம் 282/11
இன் துயில் எழுந்து துணையொடு போகி – அகம் 284/5
அம் மா அரிவை உறைவு இன் ஊரே – அகம் 284/13
பாடு இன் தெண் கிணை கறங்க காண்வர – அகம் 301/10
கரும் கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கே – அகம் 308/16
இன் இசை முரசின் இரங்கி ஒன்னார் – அகம் 312/10
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப – அகம் 314/4
இன் நகை இளையோள் கவவ – அகம் 314/21
அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல் – அகம் 332/11
நின் வாய் இன் மொழி நன் வாய் ஆக – அகம் 333/16
இன்னா வேனில் இன் துணை ஆர – அகம் 335/6
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி – அகம் 340/2
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே – அகம் 340/24
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே – அகம் 344/13
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் – அகம் 351/4
இன் துணை பயிரும் குன்ற நாடன் – அகம் 352/7
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும் – அகம் 355/2
இன் தீம் குரல துவன்றி மென் சீர் – அகம் 358/3
செயிர் தீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கே – அகம் 367/16
இன் குரல் அழி துளி தலைஇ நன் பல – அகம் 374/9
தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை – அகம் 376/6
இன்னா ஒரு சிறை தங்கி இன் நகை – அகம் 377/11
பாடு இன் அருவி சூடி – அகம் 378/23
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் – அகம் 382/4
இன் இசை ஓரா இருந்தனம் ஆக – அகம் 388/9
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே – அகம் 393/26
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு – அகம் 394/5
நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம் – அகம் 399/3
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை – அகம் 399/8
ஒதுக்கு இன் திணி மணல் புது பூ பள்ளி – புறம் 33/20
இமையத்து ஈண்டி இன் குரல் பயிற்றி – புறம் 34/21
எம் அளவு எவனோ மற்றே இன் நிலை – புறம் 38/11
மிக்கு வரும் இன் நீர் காவிரி – புறம் 43/22
இன் நகை விறலியொடு மென்மெல இயலி – புறம் 70/15
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ – புறம் 71/16
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென் இ நிலத்து – புறம் 73/4
பாடு இன் தெண் கிணை கறங்க காண்_தக – புறம் 76/8
இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண் – புறம் 80/1
ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர் – புறம் 116/3
கார் பெயல் தலைஇய காண்பு இன் காலை – புறம் 119/1
செம் புற்று ஈயலின் இன் அளை புளித்து – புறம் 119/3
பாடு இன் பனுவல் பாணர் உய்த்து என – புறம் 127/2
பாடு இன் தெண் கண் கனி செத்து அடிப்பின் – புறம் 128/3
கார் வான் இன் உறை தமியள் கேளா – புறம் 147/3
கூடு கொள் இன் இயம் கறங்க – புறம் 153/11
ஈண்டோர் இன் சாயலனே வேண்டார் – புறம் 178/6
படு திரை இன் சீர் பாணி தூங்கும் – புறம் 209/5
நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று – புறம் 221/8
இன் உயிர் விரும்பும் கிழமை – புறம் 223/5
இன் இசை பறையொடு வென்றி நுவல – புறம் 225/10
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல் – புறம் 234/4
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே – புறம் 247/10
இன் இசை கேட்ட துன் அரும் மறவர் – புறம் 270/9
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப – புறம் 332/6
இன் இசைய விறல் வென்றி – புறம் 380/4
பல் சோற்றான் இன் சுவைய – புறம் 382/9
மருவ இன் நகர் அகன் கடை தலை – புறம் 387/17
இன் துயில் பெறுக-தில் நீயே வளம் சால் – புறம் 391/19
உறைவு இன் யாணர் நாடு கிழவோனே – புறம் 400/22
TOP


இன்_நகை (2)

இன்_நகை தீதோ இலேன் – கலி 89/11
இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின் – அகம் 39/19
TOP


இன்_ஆங்கு (1)

இனிய சொல்லி இன்_ஆங்கு பெயர்ப்பது – கலி 14/8
TOP


இன்சொல் (1)

இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும – புறம் 40/9
TOP


இன்ப (4)

இன்ப வேனிலும் வந்தன்று நம்-வயின் – நற் 224/6
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி – ஐங் 368/3
மார்பின் ஊரும் மகிழ் நகை இன்ப/பொழுதிற்கு ஒத்தன்று-மன்னே – ஐங் 410/3,4
தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி கெட்டதை – பரி 20/58
TOP


இன்பத்தின் (1)

இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால் – கலி 11/10
TOP


இன்பத்து (1)

கண்டு தண்டா கட்கு இன்பத்து/உண்டு தண்டா மிகு வளத்தான் – மது 16,17
TOP


இன்பத்துள் (1)

இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்பு உற்று – கலி 138/29
TOP


இன்பம் (10)

இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின் – நற் 126/7
இல்லோன் இன்பம் காமுற்று ஆஅங்கு – குறு 120/1
இன்பம் பெருக தோன்றி தம் துணை – பதி 90/3
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்/இயல் கொள நண்ணியவை – பரி 23/28,29
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் – கலி 141/3
குறியா இன்பம் எளிதின் நின் மலை – அகம் 2/8
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய – அகம் 2/10
ஈதல் இன்பம் வெஃகி மேவர – அகம் 69/5
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் – அகம் 112/12
இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம்/ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள் – அகம் 200/4,5
TOP


இன்பமும் (10)

வைகல்-தோறும் இன்பமும் இளமையும் – நற் 46/1
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் – நற் 214/1
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ – நற் 294/2
இன்பமும் துன்பமும் உடைத்தே – நற் 304/9
தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே – ஐங் 434/3
இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர் – பரி 12/100
இன்பமும் உண்டோ எமக்கு – கலி 6/11
இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் – அகம் 327/1
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் – புறம் 28/15
சிறப்பு உடை மரபின் பொருளும் இன்பமும்/அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல – புறம் 31/1,2
TOP


இன்புற்றனெம் (1)

செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே – குறு 61/6
TOP


இன்புற்றார்க்கு (1)

இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன் – கலி 148/9
TOP


இன்புற்று (2)

இன்புற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும் – பரி 28/2
இன்புற்று அயர்வர் தழூஉ – கலி 106/33
TOP


இன்புற (8)

இன்புற இசைக்கும் அவர் தேர் மணி குரலே – ஐங் 102/4
புன் புற பேடை சேவல் இன்புற/மன்னர் இயவரின் இரங்கும் கானம் – ஐங் 425/1,2
இன்புற தகுந பண்பும்-மார் உடைத்தே – ஐங் 438/3
இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/14
வென் வேல் இளையர் இன்புற வலவன் – அகம் 104/3
இளையரும் புரவியும் இன்புற நீயும் – அகம் 300/20
இன்புற புணர்ந்தும் இளி வர பணிந்தும் – அகம் 330/3
இன்புற விடுதி ஆயின் சிறிது – புறம் 159/24
TOP


இன்புறாமை (1)

கவவு இன்புறாமை கழிக வள வயல் – அகம் 13/17
TOP


இன்புறாய் (1)

நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அது நீ – நற் 355/9
TOP


இன்புறாஅர் (1)

ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின் – குறு 61/2
TOP


இன்புறு (7)

இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 46
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக – மலை 390
இன்புறு துணையொடு மறுவந்து உகள – குறு 65/2
இன்புறு புணர்ச்சி நுகரும் – ஐங் 407/3
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என – அகம் 361/7
இன்புறு பேடை அணிய தன் – புறம் 67/13
இன்புறு புணர் நிலை கண்ட மனையோள் – புறம் 320/6
TOP


இன்புறுக (1)

இனியது கேட்டு இன்புறுக இ ஊரே – குறு 34/3
TOP


இன்புறுத்தன்று (1)

இன்புறுத்தன்று பொழுதே – ஐங் 494/3
TOP


இன்புறுத்தினை (1)

உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை/வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை – பதி 70/19,20
TOP


இன்புறூஉம் (2)

ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல – குறு 61/3
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் – கலி 99/2
TOP


இன்புறேஎம் (1)

உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர் – குறு 61/4
TOP


இன்முகம் (2)

வருவதோர் காலை இன்முகம் திரியாது – குறு 252/3
இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த – புறம் 130/4
TOP


இன்மை (23)

இன்மை தீர வந்தனென் வென் வேல் – பொரு 129
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே – நற் 247/9
நாண் இன்மை செய்தேன் நறு_நுதால் ஏனல் – கலி 37/12
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றா-கால் – கலி 43/26
தன் எவ்வம் கூரினும் நீ செய்த அருள் இன்மை/என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/8,9
கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருள் இன்மை/சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு – கலி 44/11,12
நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை/ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/14,15
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி – கலி 44/16
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டு ஆங்கு அளி இன்மை/கண்டும் நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார் – கலி 74/8,9
அது தக்கது வேற்றுமை என்-கண்ணோ ஓராதி தீது இன்மை/தேற்ற கண்டீயாய் தெளிக்கு – கலி 88/15,16
ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை/தெய்வத்தான் கண்டீ தெளிக்கு – கலி 91/7,8
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை/ஆற்றின் நிறுப்பல் பணிந்து – கலி 91/16,17
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி – கலி 108/54
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை/என் உயிர் காட்டாதோ மற்று – கலி 143/20,21
பிறிது ஒன்று இன்மை அறிய கூறி – அகம் 110/3
இன்மை தீர்த்தல் வன்மையானே – புறம் 3/26
உயர்_நிலை_உலகத்து உறையுள் இன்மை/விளங்க கேட்ட மாறு-கொல் – புறம் 50/15,16
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே – புறம் 72/18
இன்மை துரப்ப இசை தர வந்து நின் – புறம் 126/17
இன்மை துரப்ப இசைதர வந்து நின் – புறம் 161/21
இன்மை தீர்க்கும் குடி பிறந்தோயே – புறம் 164/13
இன்மை தீர வேண்டின் எம்மொடு – புறம் 180/8
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே – புறம் 199/7
TOP


இன்மையது (1)

அரிது மன்று அம்ம இன்மையது இளிவே – நற் 262/10
TOP


இன்மையான் (1)

இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு – கலி 11/16
TOP


இன்மையின் (36)

நயன் இன்மையின் பயன் இது என்னாது – நற் 75/1
நின் கரந்து உறையும் உலகம் இன்மையின்/என் கரந்து உறைவோர் உள்_வழி காட்டாய் – நற் 196/5,6
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் – நற் 248/6
நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் – நற் 277/8
கைதூவு இன்மையின் எய்தா மாறே – நற் 280/10
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன் – நற் 381/2
வாய் புணர்வு இன்மையின் வாரார்-கொல்லோ – குறு 232/2
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்/யானை கை மடித்து உயவும் – குறு 388/5,6
அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார் – குறு 395/2
உடல்_அகம் கொள்வோர் இன்மையின்/தொடலைக்கு உற்ற சில பூவினரே – ஐங் 187/4,5
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ – பதி 68/15
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய – அகம் 1/14
காணுநர் இன்மையின் செத்தனள் பேணி – அகம் 16/8
அளி இன்மையின் அவண் உறை முனைஇ – அகம் 40/11
பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம் – அகம் 71/2
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே – அகம் 147/14
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்/நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ – அகம் 273/7,8
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே – அகம் 350/5
உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர – அகம் 353/14
வருநர் இன்மையின் களையுநர் காணா – அகம் 365/8
பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தனவே – புறம் 63/8
புரவலர் இன்மையின் பசியே அரையது – புறம் 69/2
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி – புறம் 164/3
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின் – புறம் 165/4
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்/ஆடு மலி உவகையோடு வருவல் – புறம் 165/13,14
வல்சி இன்மையின் வயின்_வயின் மாறி – புறம் 211/18
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து – புறம் 211/20
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை – புறம் 227/2
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி – புறம் 261/16
நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும் – புறம் 355/2
முகவை இன்மையின் உகவை இன்றி – புறம் 368/11
அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி – புறம் 371/9
சொல் நிழல் இன்மையின் நன் நிழல் சேர – புறம் 373/15
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின்/மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும – புறம் 373/33,34
யாவரும் இன்மையின் கிணைப்ப தவாது – புறம் 375/12
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின்/வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என – புறம் 393/5,6
TOP


இன்மையும் (4)

செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்/இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும் – சிறு 207,208
அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும்/ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் – சிறு 210,211
நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும் – அகம் 279/1
மாறி பிறப்பின் இன்மையும் கூடும் – புறம் 214/10
TOP


இன்மையே (1)

அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே – புறம் 199/7
TOP


இன்றாம் (1)

அரைசினும் அன்பு இன்றாம் காமம் புரை தீர – கலி 146/3
TOP


இன்றாய் (1)

தமியர் உறங்கும் கௌவை இன்றாய்/இனியது கேட்டு இன்புறுக இ ஊரே – குறு 34/2,3
TOP


இன்றால் (3)

தேர் தொடங்கு இன்றால் நம் வயினானே – ஐங் 453/5
பல் முட்டு இன்றால் தோழி நம் களவே – அகம் 122/23
உய் தகை இன்றால் தோழி பைபய – அகம் 341/1
TOP


இன்றி (74)

மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 91
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147
மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து – பொரு 95
மண் மருங்கினான் மறு இன்றி/ஒரு குடையான் ஒன்று கூற – பொரு 227,228
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள் – சிறு 121
வைகல்-தொறும் அசைவு இன்றி/உல்கு செய குறைபடாது – பட் 124,125
சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி – மலை 79
ஐயம் இன்றி கடும் கவவினளே – நற் 297/11
இறு முறை என ஒன்று இன்றி/மறுமை உலகத்து மன்னுதல் பெறினே – குறு 199/7,8
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி/நீல் நிற வியல்_அகம் கவைஇய – ஐங் 401/3,4
சிறப்போய் சிறப்பு இன்றி பெயர்குவை – பரி 5/18
இடை ஒழிவு இன்றி அடியுறையார் ஈண்டி – பரி 23/45
திடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/19
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும் – கலி 3/1
பிரியும்-கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும் – கலி 8/13
வரைவு இன்றி செறும் பொழுதில் கண்ணோடாது உயிர் வௌவும் – கலி 8/16
சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி/யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல் – கலி 10/2,3
அலவு-உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி – கலி 10/5
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின் – கலி 10/12
இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின் – கலி 10/18
அடி தாங்கும் அளவு இன்றி அழல் அன்ன வெம்மையால் – கலி 11/6
பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்க – கலி 16/1
தாம் இடை கொண்டது அது ஆயின் தம் இன்றி/யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் – கலி 24/13,14
ஆறு இன்றி பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர் – கலி 26/20
துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி – கலி 30/5
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/9
கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற – கலி 54/1
தெருவின்-கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ – கலி 60/12
அறனும் அது கண்டு அற்று ஆயின் திறன் இன்றி/கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம் – கலி 62/16,17
அலைத்த புண் வடு காட்டி அன்பு இன்றி வரின் எல்லா – கலி 67/7
பாடு அழி சாந்தினன் பண்பு இன்றி வரின் எல்லா – கலி 67/11
நனி சிவந்த வடு காட்டி நாண் இன்றி வரின் எல்லா – கலி 67/15
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு – கலி 68/1
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாக – கலி 76/12
துணை இன்றி தளைவிட்ட தாமரை தனி மலர் – கலி 77/2
உய்வு இன்றி நுந்தை நலன் உண சாஅய் சாஅய்-மார் – கலி 80/16
பால் கொளல் இன்றி பகல் போல் முறைக்கு ஒல்கா – கலி 86/17
சீத்தை பயம் இன்றி ஈங்கு கடித்தது நன்றே – கலி 96/30
மாண்ட நின் ஒழுக்கத்தான் மறு இன்றி வியன் ஞாலத்து – கலி 100/5
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட – கலி 104/2
தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றி தலைச்சென்று – கலி 104/45
இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய் – கலி 110/21
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றி/சிறிய துனித்தனை துன்னா செய்து அமர்ந்தனை – கலி 122/3,4
தங்காது தகைவு இன்றி தாம் செய்யும் வினைகளுள் – கலி 125/2
குறி இன்றி பல் நாள் நின் கடும் திண் தேர் வரு பதம் கண்டு – கலி 127/10
சிதைவு இன்றி சென்று-உழி சிறப்பு எய்தி வினை வாய்த்து – கலி 132/6
பன் மலர் நறும் பொழில் பழி இன்றி புணர்ந்த-கால் – கலி 132/12
திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்து ஆங்கு – கலி 134/25
கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண் இன்றி/யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண் பல் – கலி 142/8,9
இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய் – கலி 143/42
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும் – அகம் 13/9
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய – அகம் 235/16
மழலை இன் சொல் கழறல் இன்றி/இன் உயிர் கலப்ப கூறி நல்_நுதல் – அகம் 275/7,8
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு – அகம் 301/5
சிறப்பும் சீரும் இன்றி சீறூர் – அகம் 369/22
இடியும் முழக்கும் இன்றி பாணர் – அகம் 374/7
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி/நனவின் இயன்றது ஆயினும் கங்குல் – அகம் 379/7,8
திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார் – அகம் 399/5
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை அடுக்கத்து – புறம் 2/20
எழு உறழ் திணி தோள் வழு இன்றி மலைந்தோர் – புறம் 61/16
களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவர – புறம் 62/12
விளைக்கும் வினை இன்றி படை ஒழிந்தனவே – புறம் 63/2
மதுகை இன்றி வயிற்று_தீ தணிய – புறம் 74/5
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி/பரந்து இசை நிற்க பாடினன் அதன் கொண்டு – புறம் 126/12,13
பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி – புறம் 127/8
ஒரு வழி கரு வழி இன்றி/பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே – புறம் 129/8,9
வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து – புறம் 180/6
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி/வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும் – புறம் 189/1,2
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே – புறம் 205/2
அது பழுது இன்றி வந்தவன் அறிவும் – புறம் 217/8
கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும் – புறம் 229/21
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும் – புறம் 357/3
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி/தாமே ஆண்ட ஏமம் காவலர் – புறம் 363/2,3
முகவை இன்மையின் உகவை இன்றி/இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து – புறம் 368/11,12
TOP


இன்றியும் (1)

என் ஐ இன்றியும் கழிவது-கொல்லோ – குறு 24/2
TOP


இன்றின் (2)

இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை – புறம் 76/3
அன்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும் – புறம் 376/17
TOP

Related posts