மௌ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மௌவல் 8
மௌவலும் 1
மௌவலொடு 2

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

மௌவல் (8)

ஞாழல் மௌவல் நறும் தண் கொகுடி – குறி 81
மலரின் மௌவல் நலம் வர காட்டி – நற் 316/2
எல்-உறு மௌவல் நாறும் – குறு 19/4
மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம் – பரி 12/77
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் – கலி 14/3
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப – கலி 27/4
மனை இள நொச்சி மௌவல் வால் முகை – அகம் 21/1
மௌவல் மா சினை காட்டி – அகம் 23/12

மேல்


மௌவலும் (1)

மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின – நற் 122/4

மேல்


மௌவலொடு (2)

மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ – நற் 115/6
மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சியும் – அகம் 117/1

மேல்