வௌ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், திருக்குறள் கூட்டுத் தொடரடைவு

வௌவ (1)

தெண் திரை பாவை வௌவ
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – ஐங் 125/2,3
மேல்


வௌவல் (3)

ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்
பருவத்து பல் மாண் நீ சேறலின் காண்டை – பரி 8/84,85
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் – பரி 15/50
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல் – கலி 133/13,14
மேல்


வௌவலின் (5)

தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி – நற் 379/5
வண்டல் பாவை வௌவலின்
நுண் பொடி அளைஇ கடல் தூர்ப்போளே – ஐங் 124/2,3
துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின்
புள்ளும் வழங்கா புலம்பு கொள் ஆரிடை – கலி 4/5,6
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை – கலி 5/6,7
மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட – கலி 104/1,2
மேல்


வௌவி (11)

அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து – மது 149,150
நாடு அழிய எயில் வௌவி
சுற்றமொடு தூ அறுத்தலின் – மது 187,188
நெருநை புணர்ந்தோர் புது நலம் வௌவி
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர் – நற் 360/3,4
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய – பதி 90/22,23
மயங்கு அமர் மாறு அட்டு மண் வௌவி வருபவர் – கலி 31/9
பெண்டிர் நலம் வௌவி தண் சாரல் தாது உண்ணும் – கலி 40/24
வௌவி கொளலும் அறன் என கண்டன்று – கலி 62/15
என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி
தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ – கலி 138/6,7
போய் அவர் மண் வௌவி வந்தனர் – கலி 148/23
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி
கன்று உடை பெரு நிரை மன்று நிறை தரூஉம் – அகம் 253/16,17
உரை செல முரசு வௌவி
முடி தலை அடுப்பு ஆக – புறம் 26/7,8
மேல்


வௌவிக்கொண்டு (1)

ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள் – கலி 58/6
மேல்


வௌவிய (4)

வான் கோல் எல் வளை வௌவிய பூசல் – நற் 100/5
விண் உயர் அரண் பல வௌவிய
மண்_உறு முரசின் வேந்து தொழில் விடினே – ஐங் 443/4,5
ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின் – பரி 3/15
வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை – புறம் 378/19
மேல்


வௌவியோனே (1)

வள மனை வருதலும் வௌவியோனே – ஐங் 66/4
மேல்


வௌவினர் (1)

அரி நிற கொழும் குறை வௌவினர் மாந்தி – அகம் 236/3
மேல்


வௌவினன் (1)

வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என – கலி 47/22
மேல்


வௌவினை (1)

ஆர் எயில் தோட்டி வௌவினை ஏறொடு – பதி 71/13
மேல்


வௌவுநர் (1)

வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய – அகம் 1/14
மேல்


வௌவுபு (1)

வளர தொடினும் வௌவுபு திரிந்து – புறம் 260/1
மேல்


வௌவும் (9)

கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை – பெரும் 40
நின்று நோக்கினும் கண் வாள் வௌவும்
மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு – மலை 369,370
யானை இன நிரை வௌவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே – நற் 240/9,10
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே – குறு 271/5
தண் தளிர் வௌவும் மேனி – ஐங் 38/3
ஆன் நீர் பத்தல் யானை வௌவும்
கல் அதர் கவலை செல்லின் மெல் இயல் – ஐங் 304/2,3
வரைவு இன்றி செறும் பொழுதில் கண்ணோடாது உயிர் வௌவும்
அரைசினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ – கலி 8/16,17
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம் – கலி 58/17
தொக்கு உயிர் வௌவும்_காலை – புறம் 357/7
மேல்


வௌவும்_காலை (1)

தொக்கு உயிர் வௌவும்_காலை
இ கரை நின்று இவர்ந்து உ கரை கொளலே – புறம் 357/7,8
மேல்