சூ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், திருக்குறள் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூட்ட 3
சூட்டி 24
சூட்டிய 7
சூட்டியும் 1
சூட்டின் 2
சூட்டினீர் 1
சூட்டு 7
சூட்டும் 2
சூட்டுவன் 1
சூட்டொடு 5
சூட 2
சூடவும் 1
சூடா 3
சூடாது 2
சூடாய் 1
சூடார் 1
சூடான் 1
சூடி 45
சூடி_சூடி 1
சூடிய 13
சூடியும் 1
சூடின 1
சூடினர் 1
சூடினன் 2
சூடினும் 1
சூடு 18
சூடு_உற்ற 1
சூடு_உறு 2
சூடுநர் 1
சூடுப 1
சூதர் 1
சூதர்க்கும் 1
சூதின் 1
சூதினை 1
சூது 3
சூதே 1
சூர் 42
சூர்_மகள் 2
சூர்_அர_மகளிர் 1
சூர்_உறு 1
சூர்த்த 1
சூர்ப்பின் 1
சூர்ப்பு 2
சூர்ப்பு_உறு 1
சூரல் 5
சூரலொடு 1
சூரும் 1
சூல் 49
சூல்_மகள் 1
சூலிக்கு 1
சூலினரே 1
சூழ் 58
சூழ்கம் 1
சூழ்குவம் 1
சூழ்ச்சி 4
சூழ்ச்சியது 1
சூழ்ச்சியின் 1
சூழ்ச்சியும் 1
சூழ்தந்து 1
சூழ்தர 1
சூழ்தல் 1
சூழ்தலின் 1
சூழ்தலும் 1
சூழ்ந்த 23
சூழ்ந்தவன் 1
சூழ்ந்தவை 1
சூழ்ந்தனளால் 1
சூழ்ந்தனை 5
சூழ்ந்தார் 2
சூழ்ந்திசின் 3
சூழ்ந்து 6
சூழ்ந்தும் 4
சூழ்ந்துவிடும் 1
சூழ்ப்ப 1
சூழ்பு 3
சூழ்வது 1
சூழ்வதை 1
சூழ்வரு 1
சூழ்வல் 1
சூழ்வலோ 1
சூழ்வன 1
சூழ்வாய் 1
சூழ்வார் 2
சூழ்வாரை 1
சூழ்வான் 1
சூழ 5
சூழல் 1
சூழலன் 1
சூழற்க 1
சூழாதி 1
சூழாது 8
சூழாதே 1
சூழாதோயே 1
சூழாமல் 1
சூழான்-மன்னே 1
சூழி 4
சூழிய 1
சூழியின் 1
சூழின் 4
சூழினும் 1
சூழும் 14
சூழும்_கால் 4
சூள் 28
சூள்_உற்று 1
சூள்_உறுவானை 1
சூளாள் 1
சூளின் 2
சூளினனே 1
சூளும் 1
சூளே 7
சூளேல் 1
சூளை 1
சூன்று 1

சூட்ட (3)

வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட
ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி – திரு 117,118
விரகு அறியாளர் மரபின் சூட்ட
நிரை இவண் தந்து நடுகல் ஆகிய – புறம் 261/14,15
பல் ஆன் கோவலர் படலை சூட்ட
கல் ஆயினையே கடு மான் தோன்றல் – புறம் 265/4,5
மேல்


சூட்டி (24)

சுரி இரும் பித்தை பொலிய சூட்டி
நூலின் வலவா நுணங்கு அரில் மாலை – பொரு 160,161
நீடு இரும் பித்தை பொலிய சூட்டி
உரவு கடல் முகந்த பருவ வானத்து – பெரும் 482,483
நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி
காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி – மது 738,739
பீலி சூட்டி மணி அணிபவ்வே – நற் 177/6
அரலை மாலை சூட்டி
ஏமுற்றன்று இ அழுங்கல் ஊரே – குறு 214/6,7
பைம் பொன் தாமரை பாணர் சூட்டி
ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி – பதி 48/1,2
பரி உடை நன் மா விரி உளை சூட்டி
மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த – பதி 65/2,3
எரி அவிழ்ந்து அன்ன விரி உளை சூட்டி
கால் கிளர்ந்து அன்ன கடும் செலவு இவுளி – பதி 92/3,4
களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி
வள நகர் சிலம்ப பாடி பலி கொடுத்து – அகம் 22/8,9
நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து – அகம் 35/8
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி
தூ உடை பொலிந்து மேவர துவன்றி – அகம் 136/14,15
தாழி குவளை வாடு மலர் சூட்டி
தரு மணல் கிடந்த பாவை என் – அகம் 165/11,12
பின்னு புறம் தாழ கொன்னே சூட்டி
நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து – அகம் 180/7,8
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால் – அகம் 269/12
கடம்பு கொடி யாத்து கண்ணி சூட்டி
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் – அகம் 382/3,4
பொலம் குழை உழிஞையொடு பொலிய சூட்டி
குருதி வேட்கை உரு கெழு முரசம் – புறம் 50/4,5
இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டி
கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து – புறம் 95/1,2
நடுகல் பீலி சூட்டி நார் அரி – புறம் 232/3
மடம் சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி
இடம் பிறர் கொள்ளா சிறு வழி – புறம் 260/26,27
அணி மயில் பீலி சூட்டி பெயர் பொறித்து – புறம் 264/3
மை இரும் பித்தை பொலிய சூட்டி
புத்து அகல் கொண்ட புலி கண் வெப்பர் – புறம் 269/3,4
மணி மருள் மாலை சூட்டி அவன் தலை – புறம் 291/7
கொடும் குழை மகளிர் கோதை சூட்டி
நடுங்கு பனி களைஇயர் நார் அரி பருகி – புறம் 304/1,2
மங்கல மகளிரொடு மாலை சூட்டி
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப – புறம் 332/5,6
மேல்


சூட்டிய (7)

மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை – கலி 138/8
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் – அகம் 67/10
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் – அகம் 131/11
இமையம் சூட்டிய ஏம வில் பொறி – புறம் 39/15
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல – புறம் 99/3,4
வாடா தாமரை சூட்டிய விழு சீர் – புறம் 126/3
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை – புறம் 228/6
மேல்


சூட்டியும் (1)

பொலம் தாமரை பூ சூட்டியும்
நலம் சான்ற கலம் சிதறும் – மது 103,104
மேல்


சூட்டின் (2)

வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் – சிறு 163
ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர் – சிறு 177
மேல்


சூட்டினீர் (1)

காட்டிய சூட்டினீர் என்று – குறள் 132/6
மேல்


சூட்டு (7)

கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து – பெரும் 46
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய – நற் 400/3
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி – குறு 227/1
செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர – அகம் 86/27
இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு
பனி படு சாய் புறம் பரிப்ப கழனி – அகம் 236/5,6
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே – அகம் 253/26
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப – அகம் 334/14
மேல்


சூட்டும் (2)

சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் – பரி 20/30
முரசு உடை செல்வர் புரவி சூட்டும்
மூட்டு_உறு கவரி தூக்கி அன்ன – அகம் 156/1,2
மேல்


சூட்டுவன் (1)

வாடா தாமரை சூட்டுவன் நினக்கே – புறம் 319/15
மேல்


சூட்டொடு (5)

தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் – பெரும் 282
எலி வான் சூட்டொடு மலிய பேணுதும் – நற் 83/6
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் – புறம் 13/11
குறு முயலின் குழை சூட்டொடு
நெடு வாளை பல் உவியல் – புறம் 395/3,4
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி – புறம் 395/37
மேல்


சூட (2)

நறும் பூ கண்ணி குறவர் சூட
கானவர் மருதம் பாட அகவர் – பொரு 219,220
ஆடு உடை இடை_மகன் சூட பூக்கும் – நற் 266/3
மேல்


சூடவும் (1)

மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
மகளிர் கோதை மைந்தர் மலையவும் – பட் 109,110
மேல்


சூடா (3)

சூடா நறவின் நாள்_மகிழ் இருக்கை – பதி 85/8
சூடா நறவொடு காமம் விரும்ப – பரி 23/56
சூடா வாகை பறந்தலை ஆடு பெற – அகம் 125/19
மேல்


சூடாது (2)

தும்பை சூடாது மலைந்த மாட்சி – பதி 42/6
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று – புறம் 235/19
மேல்


சூடாய் (1)

சூடாய் ஆதல் அதனினும் இலையே – புறம் 69/21
மேல்


சூடார் (1)

இளையோர் சூடார் வளையோர் கொய்யார் – புறம் 242/1
மேல்


சூடான் (1)

பாணன் சூடான் பாடினி அணியாள் – புறம் 242/3
மேல்


சூடி (45)

புது பூ செம்மல் சூடி புடை நெறித்து – சிறு 5
ஈர் உடை இரும் தலை ஆர சூடி
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின் – பெரும் 219,220
அம் வாய் வளர் பிறை சூடி செ வாய் – பெரும் 412
கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின் – மது 613
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி
பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 235,236
திரங்கு மரல் நாரில் பொலிய சூடி
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென – மலை 431,432
கார் நறும் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறி மனை வந்தோய் – நற் 34/8,9
வில்லா பூவின் கண்ணி சூடி
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு – நற் 146/1,2
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நற் 200/2,3
குறு முகிழ் எருக்கம் கண்ணி சூடி
உண்ணா நன் மா பண்ணி எம்முடன் – நற் 220/2,3
மணி குரல் நொச்சி தெரியல் சூடி
பலி கள் ஆர்கை பார் முது குயவன் – நற் 293/1,2
இளையரும் சூடி வந்தனர் நமரும் – நற் 367/10
மடல்_மா_ஊர்ந்து மாலை சூடி
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் – நற் 377/1,2
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி
குன்று தலைமணந்த கானம் – குறு 281/4,5
வெண் தலை மா மழை சூடி
தோன்றல் ஆனாது அவர் மணி நெடும் குன்றே – ஐங் 209/4,5
சுடு பொன் அன்ன கொன்றை சூடி
கடி புகுவனர் போல் மள்ளரும் உடைத்தே – ஐங் 432/2,3
உவலை சூடி உருத்து வரு மலிர் நிறை – பதி 28/12
சிறியிலை உழிஞை தெரியல் சூடி
கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து – பதி 63/8,9
கழுவு_உறு கலிங்கம் கடுப்ப சூடி
இலங்கு கதிர் திரு மணி பெறூஉம் – பதி 76/13,14
தண் கமழ் கோதை சூடி பூண் சுமந்து – பதி 88/31
சூடி அசையும் சுவல் மிசை தானையின் – பரி 19/25
சூடி_சூடி தொழுது தொழுது – பரி 24/79
சூடி_சூடி தொழுது தொழுது – பரி 24/79
புல் இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர் – கலி 115/4
தாஅம் தளிர் சூடி தம் நலம் பாடுப – கலி 143/28
சாரல் பல் பூ வண்டு பட சூடி
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் – அகம் 22/13,14
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி
கறை அடி மட பிடி கானத்து அலற – அகம் 83/2,3
வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர் – அகம் 98/16
தேம் கமழ் இணர வேங்கை சூடி
தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ – அகம் 118/2,3
சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி
கல்லா மழவர் வில் இடம் தழீஇ – அகம் 127/14,15
குறும் சுனை குவளை வண்டு பட சூடி
கான நாடன் வரூஉம் யானை – அகம் 128/9,10
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி
உடலுநர் கடந்த கடல் அம் தானை – அகம் 138/5,6
சுரி இரும் பித்தை சுரும்பு பட சூடி
இகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரை – அகம் 213/5,6
ஆடு இயல் இள மழை சூடி தோன்றும் – அகம் 271/13
குரூஉ கொடி பகன்றை சூடி மூதூர் – அகம் 316/6
பாடு இன் அருவி சூடி
வான் தோய் சிமையம் தோன்றலானே – அகம் 378/23,24
பாறு மயிர் இரும் தலை பொலிய சூடி
பாண் முற்றுக நின் நாள்_மகிழ் இருக்கை – புறம் 29/4,5
ஒலியல் மாலையொடு பொலிய சூடி
பாடு இன் தெண் கிணை கறங்க காண்_தக – புறம் 76/7,8
சுரி இரும் பித்தை பொலிய சூடி
வரி வயம் பொருத வய களிறு போல – புறம் 100/6,7
அறம் புகழ்ந்த வலை சூடி
சிறு நுதல் பேர் அகல் அல்குல் – புறம் 166/14,15
கெடு இல் நல் இசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே – புறம் 221/12,13
நூல் அரி மாலை சூடி காலின் – புறம் 284/3
தயங்கு இரும் பித்தை பொலிய சூடி
பறையொடு தகைத்த கல பையென் முரவு வாய் – புறம் 371/4,5
குடர் தலை மாலை சூடி உண தின – புறம் 371/23
புதல் தளவின் பூ சூடி
அரி_பறையால் புள் ஓப்பி – புறம் 395/6,7
மேல்


சூடி_சூடி (1)

சூடி_சூடி தொழுது தொழுது – பரி 24/79
மேல்


சூடிய (13)

புலவு கடல் உடுத்த வானம் சூடிய
மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ – பெரும் 409,410
விசி பிணி முழவின் வேந்தர் சூடிய
பசு மணி பொருத பரேர் எறுழ் கழல் கால் – பட் 293,294
சூடிய எல்லாம் சிறு பசு முகையே – குறு 221/5
துளவம் சூடிய அறிதுயிலோனும் – பரி 13/30
கொலைவன் சூடிய குழவி திங்கள் போல் – கலி 103/15
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறை கண் – கலி 103/25
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
காணான் திரிதரும்-கொல்லோ மணி மிடற்று – கலி 142/26,27
அய வெள் அருவி சூடிய உயர் வரை – அகம் 38/16
கோடு உடை தலைக்குடை சூடிய வினைஞர் – அகம் 194/7
பெரிய சூடிய கவர் கோல் கோவலர் – அகம் 264/4
உவலை சூடிய தலையர் கவலை – அகம் 291/13
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கை தண் தமிழ் கிழவர் – புறம் 35/2,3
பாணன் சூடிய பசும்_பொன் தாமரை – புறம் 141/1
மேல்


சூடியும் (1)

புனல் ஆம்பல் பூ சூடியும்
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் – பட் 66,67
மேல்


சூடின (1)

சூடின இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு – கலி 85/12
மேல்


சூடினர் (1)

சூடினர் இட்ட பூ ஓர் அன்னர் – கலி 23/13
மேல்


சூடினன் (2)

தானும் சூடினன் இளைஞரும் மலைந்தனர் – நற் 361/2
கடி காவில் பூ சூடினன்
தண் கமழும் சாந்து நீவினன் – புறம் 239/2,3
மேல்


சூடினும் (1)

கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை – குறள் 132/5
மேல்


சூடு (18)

சூடு கோடு ஆக பிறக்கி நாள்-தொறும் – பொரு 243
சூடு_உற்ற சுடர் பூவின் – மது 225
சூடு_உறு நன் பொன் சுடர் இழை புனைநரும் – மது 512
கடல் இறவின் சூடு தின்றும் – பட் 63
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புது பூ – நற் 290/1
சூடு நிலை உற்று சுடர்விடு தோற்றம் – பதி 74/14
அக வயல் இள நெல் அரி கால் சூடு
தொகு புனல் பரந்த என துடி பட ஒருசார் – பரி 7/27,28
சூடு நறவொடு தாமம் முகிழ் விரிய – பரி 23/55
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு
கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும் – அகம் 84/12,13
தொடு தோல் கானவன் சூடு_உறு வியன் புனம் – அகம் 368/1
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு – புறம் 34/11
நீடு கதிர் கழனி சூடு தடுமாறும் – புறம் 61/7
ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ – புறம் 212/4
விடை வீழ்த்து சூடு கிழிப்ப – புறம் 366/17
அரவு வெகுண்டு அன்ன தேறலொடு சூடு தருபு – புறம் 376/14
சூடு கிழித்து வாடூன் மிசையவும் – புறம் 386/4
கொழும் தடிய சூடு என்கோ – புறம் 396/15
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு
மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் – புறம் 397/13,14
மேல்


சூடு_உற்ற (1)

சூடு_உற்ற சுடர் பூவின் – மது 225
மேல்


சூடு_உறு (2)

சூடு_உறு நன் பொன் சுடர் இழை புனைநரும் – மது 512
தொடு தோல் கானவன் சூடு_உறு வியன் புனம் – அகம் 368/1
மேல்


சூடுநர் (1)

சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு-தொறும் – நற் 278/4
மேல்


சூடுப (1)

குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப – குறு 17/2,3
மேல்


சூதர் (1)

சூதர் வாழ்த்த மாகதர் நுவல – மது 670
மேல்


சூதர்க்கும் (1)

ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல் – குறள் 94/3
மேல்


சூதின் (1)

சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல் – குறள் 94/7,8
மேல்


சூதினை (1)

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் – குறள் 94/1
மேல்


சூது (3)

அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும் – குறள் 94/11
அல்லல் உழப்பிக்கும் சூது
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும் – குறள் 94/16,17
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து – ஐங் 71/1
மேல்


சூதே (1)

இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம் – குறள் 94/19
மேல்


சூர் (42)

சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 41
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி – திரு 275
வெண் திரை பரப்பின் கடும் சூர் கொன்ற – பெரும் 457
சூர்_உறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல் – குறி 169
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் – மலை 239
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 7/1
பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள் – நற் 34/4
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 268/1
சூர் உடை அடுக்கத்த கொயற்கு அரும் தழையே – நற் 359/9
சூர் உடை பலியொடு கவரிய குறும் கால் – நற் 367/4
சூர் உடை சிலம்பின் அருவி ஆடி – நற் 373/5
சூர் நசைந்த அனையை யாய் நடுங்கல் கண்டே – குறு 52/2
சூர் அர_மகளிரோடு உற்ற சூளே – குறு 53/7
சூர் மலை நாடன் கேண்மை – குறு 105/5
சூர் உடை அடுக்கத்து ஆரம் கடுப்ப – குறு 376/2
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து – ஐங் 71/1
சூர் மலை நாடனை அறியாதோனே – ஐங் 249/4
சூர் உடை முழு_முதல் தடிந்த பேர் இசை – பதி 11/5
சூர் நிகழ்ந்து அற்று நின் தானை – பதி 31/35
கடும் பறை தும்பி சூர் நசை தாஅய் – பதி 67/20
நோய் உடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து – பரி 5/4
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் – பரி 7/62
கடும் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் – பரி 9/70
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே – பரி 14/18
சூர் நிரந்து சுற்றிய மா தபுத்த வேலோய் நின் – பரி 18/4
சூர் ததும்பு வரைய காவால் – பரி 18/31
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல் – பரி 19/23
சூர் கொன்ற செ வேலால் பாடி பல நாளும் – கலி 93/26
சூர் அர_மகளிரின் நின்ற நீ மற்று – அகம் 32/7
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல் – அகம் 59/10
சுட்டுநர் பனிக்கும் சூர் உடை முதலைய – அகம் 72/8
சூர் சுனை துழைஇ நீர் பயம் காணாது – அகம் 91/4
சூர் உறை வெற்பன் மார்பு உற தணிதல் – அகம் 98/5
சூர் உடை சிலம்பில் சுடர் பூ வேய்ந்து – அகம் 158/8
சூர் அர_மகளிரின் பெறற்கு அரியோளே – அகம் 162/25
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே – அகம் 198/17
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின் – அகம் 297/11
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை – அகம் 303/5
சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு – அகம் 304/3
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும் – அகம் 359/11
சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின் – புறம் 23/4
மேல்


சூர்_மகள் (2)

பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன் – நற் 34/4,5
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே – அகம் 198/17
மேல்


சூர்_அர_மகளிர் (1)

சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 41
மேல்


சூர்_உறு (1)

சூர்_உறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல் – குறி 169
மேல்


சூர்த்த (1)

சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின் – திரு 48
மேல்


சூர்ப்பின் (1)

விறல் விளங்கிய விழு சூர்ப்பின்
தொடி தோள் கை துடுப்பு ஆக – மது 33,34
மேல்


சூர்ப்பு (2)

சூர்ப்பு_உறு கோல் வளை செறித்த முன்கை – அகம் 142/17
சுடர்விடு பசும் பூண் சூர்ப்பு அமை முன்கை – புறம் 153/3
மேல்


சூர்ப்பு_உறு (1)

சூர்ப்பு_உறு கோல் வளை செறித்த முன்கை – அகம் 142/17
மேல்


சூரல் (5)

சாரல் சூரல் தகைபெற வலந்த – குறி 42
விரி மலர் ஆவிரை வேரல் சூரல்
குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி – குறி 71,72
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை – ஐங் 275/2
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று – அகம் 1/17
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று – அகம் 228/9
மேல்


சூரலொடு (1)

கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த – அகம் 357/1
மேல்


சூரும் (1)

உருமும் சூரும் இரை தேர் அரவமும் – குறி 255
மேல்


சூல் (49)

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று – பொரு 6
கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் – சிறு 148
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் – பெரும் 132
சூல்_மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை – பெரும் 136
சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன – பெரும் 381
கடும் சூல் மந்தி கவரும் காவில் – பெரும் 395
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது – மது 609
விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி – நற் 12/1
நெடும் சினை புன்னை கடும் சூல் வெண்_குருகு – நற் 31/10
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை – நற் 89/3
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை – நற் 99/6
சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும் – நற் 116/5
வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம் – நற் 261/3
கடும் சூல் வயவொடு கானல் எய்தாது – நற் 263/5
கடும் சூல் வதிந்த காமர் பேடைக்கு – நற் 272/4
சூல் பொறை இறுத்த கோல் தலை இருவி – நற் 306/6
முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை – நற் 347/1
கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி – நற் 370/2
கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க – நற் 393/2
சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன – குறு 35/2
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர் – குறு 85/3
காலொடு வந்த கமம் சூல் மா மழை – குறு 158/3
கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு – குறு 164/1
கடும் சூல் மகளிர் போல நீர் கொண்டு – குறு 287/5
கரும் கால் அன்றில் காமர் கடும் சூல்
வயவு பெடை அகவும் பானாள் கங்குல் – குறு 301/3,4
சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல்
தண் குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப – குறு 314/1,2
நின் நயந்து உறைவி கடும் சூல் சிறுவன் – ஐங் 309/3
இடும்பை உறுவி நின் கடும் சூல் மகளே – ஐங் 386/4
வளி பாய்ந்து அட்ட துளங்கு இரும் கமம் சூல்
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி – பதி 11/2,3
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை – பதி 24/28
விலங்கு வளி கடவும் துளங்கு இரும் கமம் சூல்
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு – பதி 45/20,21
வண்ண கருவிய வளம் கெழு கமம் சூல்
அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து – பதி 81/2,3
வரு மழை இரும் சூல் மூன்றும் புரையும் மா மெய் – பரி 4/7
கார் எதிர்ந்து ஏற்ற கமம் சூல் எழிலி போல் – பரி 18/2
முற்றுபு_முற்றுபு பெய்து சூல் முதிர் முகில் – பரி 20/3
கடும் சூல் வயாவிற்கு அமர்ந்து நெடும் சினை – கலி 40/27
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் – கலி 110/14
கடல் முகந்து கொண்ட கமம் சூல் மா மழை – அகம் 43/1
கடும் சூல் மட பிடி நடுங்கும் சாரல் – அகம் 78/6
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என – அகம் 134/2
கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண்_குருகு – அகம் 141/19
நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த – அகம் 160/5
கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை – அகம் 177/10
கடும் சூல் மட பிடி தழீஇய வெண் கோட்டு – அகம் 197/13
மழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்று – அகம் 328/12
கமம் சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு – அகம் 383/10
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ – புறம் 130/2
பெரு மலை அன்ன தோன்றல சூல் முதிர்பு – புறம் 161/3
மேல்


சூல்_மகள் (1)

சூல்_மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை – பெரும் 136
மேல்


சூலிக்கு (1)

விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்கு
கடனும் பூணாம் கை நூல் யாவாம் – குறு 218/1,2
மேல்


சூலினரே (1)

நிறை_வயின் வழா அது நின் சூலினரே
நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை – பரி 5/47,48
மேல்


சூழ் (58)

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து – திரு 139
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் – பொரு 97
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி – பெரும் 108
வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை – பெரும் 126
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் – பெரும் 189
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி – பெரும் 215
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை-தொறும் – பெரும் 261
தாழ் கோள் பலவின் சூழ் சுளை பெரும் பழம் – பெரும் 356
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய் – பெரும் 364
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் – பெரும் 378
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் – பெரும் 385
அடையா வாயில் மிளை சூழ் படப்பை – பெரும் 401
கமம் சூழ் கோடை விடர்_அகம் முகந்து – மது 308
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் – மது 338
மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர் – மது 456
கழி சூழ் படப்பை கலி யாணர் – பட் 32
புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் – மலை 203
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர் – மலை 409
குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே – மலை 583
இரும் சூழ் ஓதி பெரும் தோளாட்கே – நற் 26/9
கழி சூழ் கானல் ஆடியது அன்றி – நற் 27/4
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ – நற் 37/5
கழி சூழ் படப்பை காண்ட_வாயில் – நற் 38/7
வண்டு சூழ் வட்டியள் திரிதரும் – நற் 97/8
சுற்றிய பிணர சூழ் கழி இறவின் – நற் 101/2
கண்டல் வேலி கழி சூழ் படப்பை – நற் 207/1
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து – நற் 214/7
பிச்சை சூழ் பெரும் களிறு போல எம் – நற் 300/11
வீழ் காவோலை சூழ் சிறை யாத்த – நற் 354/3
கண்டல் வேலி கழி சூழ் படப்பை – நற் 363/1
வண்டு சூழ் மாலையும் வாரார் – குறு 220/6
துகள் சூழ் யானையின் பொலிய தோன்றும் – குறு 279/6
கடல் சூழ் மண்டிலம் பெறினும் – குறு 300/7
சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇ – ஐங் 111/2
பல சூழ் பதப்பர் பரிய வெள்ளத்து – பதி 30/18
பூத்த முல்லை புதல் சூழ் பறவை – பதி 66/16
உருமு சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட – பரி 9/3
சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ்
சினை எலாம் செயலை மலர காய் கனி – பரி 15/30,31
புகர் இணர் சூழ் வட்டத்தவை புகர் வாளவை – பரி 15/61
பல் வரி வண்டு_இனம் வாய் சூழ் கவினொடும் – பரி 16/41
கடி நகர் சூழ் நுவலும்_கால் – பரி 19/29
அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்து தம் – கலி 25/10
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் – கலி 67/5
புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர – கலி 68/5
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு – கலி 69/2
சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூலாக – கலி 85/14
தாது சூழ் கூந்தல் தகைபெற தைஇய – கலி 111/12
மகிழ் செய் தே_மொழி தொய்யில் சூழ் இள முலை – கலி 125/8
ஊசி போகிய சூழ் செய் மாலையன் – அகம் 48/9
இரும் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பே – அகம் 102/19
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த – அகம் 161/12
சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின் – அகம் 257/7
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் – அகம் 297/15
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் – அகம் 306/5
நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து – அகம் 366/2
மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் – புறம் 103/7
நீர் சூழ் நிலவரை உயர நின் – புறம் 160/29
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க – புறம் 283/8
மேல்


சூழ்கம் (1)

சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டு – ஐங் 317/1
மேல்


சூழ்குவம் (1)

சூழும்_கால் நறு_நுதால் நம்முளே சூழ்குவம்
அவனை – கலி 47/18,19
மேல்


சூழ்ச்சி (4)

சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு – குறள் 68/1
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி
வில் நவில் தட கை மேவரும் பெரும் பூண் – மலை 62,63
இரு_பால் பட்ட சூழ்ச்சி ஒரு_பால் – அகம் 52/11
பொல்லா சூழ்ச்சி பல் சான்றீரே – புறம் 246/3
மேல்


சூழ்ச்சியது (1)

போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் – புறம் 2/7
மேல்


சூழ்ச்சியின் (1)

சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்
புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன் – அகம் 113/2,3
மேல்


சூழ்ச்சியும் (1)

வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே – குறு 73/5
மேல்


சூழ்தந்து (1)

ஞாங்கர் மலர் சூழ்தந்து ஊர் புகுந்த வரி வண்டு – கலி 66/2
மேல்


சூழ்தர (1)

பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல் – கலி 129/16
மேல்


சூழ்தல் (1)

நீயே சூழ்தல் வேண்டும் – நற் 122/10
மேல்


சூழ்தலின் (1)

பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ – நற் 79/6
மேல்


சூழ்தலும் (1)

பிரிய சூழ்தலும் உண்டோ – அகம் 75/22
மேல்


சூழ்ந்த (23)

கரை சூழ்ந்த அகன் கிடக்கை – பொரு 179
வாள் நிற விசும்பின் கோள்_மீன் சூழ்ந்த
இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து – சிறு 242,243
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு – சிறு 253
நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை – பெரும் 321
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள் – நற் 141/10,11
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த
வினை இடை விலங்கல போலும் புனை சுவர் – நற் 252/5,6
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை – நற் 390/3,4
பாசி சூழ்ந்த பெரும் கழல் – ஐங் 206/4
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/12
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/16
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/20
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை – கலி 92/12
பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை – கலி 98/10
கொடி நறை சூழ்ந்த தொழூஉ – கலி 103/21
நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை – கலி 104/27
அல்கலும் சூழ்ந்த வினை – கலி 115/21
பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர் – அகம் 117/17
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் – அகம் 181/18
இள மழை சூழ்ந்த மட மயில் போல – அகம் 198/7
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின் – அகம் 293/3
பரிப்பு சூழ்ந்த மண்டிலமும் – புறம் 30/3
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் – புறம் 71/10
பருதி சூழ்ந்த இ பயம் கெழு மா நிலம் – புறம் 358/1
மேல்


சூழ்ந்தவன் (1)

அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – குறள் 21/8
மேல்


சூழ்ந்தவை (1)

சூழ்ந்தவை செய்து மற்று எம்மையும் உள்ளுவாய் – கலி 69/23
மேல்


சூழ்ந்தனளால் (1)

கொலை சூழ்ந்தனளால் நோகோ யானே – நற் 185/12
மேல்


சூழ்ந்தனை (5)

பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று – நற் 137/3
ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது – அகம் 19/7
ஒழிய சூழ்ந்தனை ஆயின் முனாஅது – அகம் 33/13
பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னா – அகம் 77/3
பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின் – அகம் 181/2
மேல்


சூழ்ந்தார் (2)

பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு – கலி 107/33
அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன் கண் – கலி 115/18
மேல்


சூழ்ந்திசின் (3)

வழிபடல் சூழ்ந்திசின் அவர்_உடை நாட்டே – குறு 11/8
கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே – அகம் 76/13
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்து_உற – அகம் 77/4
மேல்


சூழ்ந்து (6)

சூழ்வாரை சூழ்ந்து கொளல் – குறள் 45/10
ஊதியமும் சூழ்ந்து செயல் – குறள் 47/2
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும் – ஐங் 254/2
கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு – கலி 25/4
பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர் துருத்தி சூழ்ந்து
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் – கலி 30/15,16
புகை என புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா – கலி 31/19
மேல்


சூழ்ந்தும் (4)

முறைப்பட சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர் – குறள் 64/19
பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும் – பட் 102
பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் மற்று இவள் – குறு 276/2
புனை இழை நோக்கியும் புனல் ஆட புறம் சூழ்ந்தும்
அணி வரி தைஇயும் நம் இல் வந்து வணங்கியும் – கலி 76/1,2
மேல்


சூழ்ந்துவிடும் (1)

சுற்றமா சூழ்ந்துவிடும்
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு – குறள் 46/2,3
மேல்


சூழ்ப்ப (1)

வெண் துகில் சூழ்ப்ப குழல் முறுக்குநர் – பரி 10/80
மேல்


சூழ்பு (3)

வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப கானம் – குறி 227
சூழ்பு ஆங்கே சுட்ட_இழாய் கரப்பென்-மன் கை நீவி – கலி 29/15
விரவு_உறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சி – அகம் 379/10
மேல்


சூழ்வது (1)

அன்பு இன்மை சூழ்வது உடைத்து – குறள் 128/12
மேல்


சூழ்வதை (1)

சூழ்வதை எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/12
மேல்


சூழ்வரு (1)

சுடரொடு சூழ்வரு தாரகை மேரு – பரி 19/19
மேல்


சூழ்வல் (1)

நின்னொடு சூழ்வல் தோழி நயம் புரிந்து – கலி 54/18
மேல்


சூழ்வலோ (1)

தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலை சூழ்வலோ
என ஆங்கு – கலி 20/18,19
மேல்


சூழ்வன (1)

தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் – அகம் 23/11
மேல்


சூழ்வாய் (1)

பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை – கலி 3/15
மேல்


சூழ்வார் (2)

சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன் – குறள் 45/9
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே – குறள் 130/7
மேல்


சூழ்வாரை (1)

சூழ்வாரை சூழ்ந்து கொளல் – குறள் 45/10
மேல்


சூழ்வான் (1)

கொல்லாமை சூழ்வான் தலை – குறள் 33/10
மேல்


சூழ (5)

பொல்லாத சூழ கெடும் – குறள் 18/12
பெரு மூதாளர் ஏமம் சூழ
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் – முல் 54,55
சுரந்த வான் பொழிந்து அற்றா சூழ நின்று யாவர்க்கும் – கலி 100/11
வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று – அகம் 78/16
காய் சின யானை கங்குல் சூழ
அஞ்சுவர இறுத்த தானை – அகம் 264/13,14
மேல்


சூழல் (1)

புடை வரு சூழல் புலம் மாண் வழுதி – பரி 19/20
மேல்


சூழலன் (1)

விடல் சூழலன் யான் நின் உடை நட்பே – குறு 300/8
மேல்


சூழற்க (1)

மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – குறள் 21/7
மேல்


சூழாதி (1)

பிரிந்து உறை சூழாதி ஐய விரும்பி நீ – கலி 18/2
மேல்


சூழாது (8)

வகை அற சூழாது எழுதல் பகைவரை – குறள் 47/9
சூழாது செய்யும் அரசு – குறள் 56/8
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை – பதி 21/3
சூழாது துணிதல் அல்லது வறிது உடன் – பதி 72/2
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு – அகம் 128/7
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது
முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த – அகம் 268/10,11
சூழாது சுரக்கும் நன்னன் நன் நாட்டு – அகம் 349/8
இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் – புறம் 163/5,6
மேல்


சூழாதே (1)

அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு – கலி 6/9
மேல்


சூழாதோயே (1)

வாழாள் ஆதல் சூழாதோயே – நற் 183/11
மேல்


சூழாமல் (1)

சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை – குறள் 103/7
மேல்


சூழான்-மன்னே (1)

பிரிதல் சூழான்-மன்னே இனியே – நற் 72/7
மேல்


சூழி (4)

அரை வரை மேகலை அணி நீர் சூழி
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம் – பரி 21/14,15
சூழி யானை சுடர் பூண் நன்னன் – அகம் 15/10
சூழி மென் முகம் செப்புடன் எதிரின – அகம் 315/2
அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி
நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலை பல் கால் – புறம் 375/1,2
மேல்


சூழிய (1)

விழு சூழிய விளங்கு ஓடைய – மது 43
மேல்


சூழியின் (1)

சூழியின் பொலிந்த சுடர் பூ இலஞ்சி – மலை 228
மேல்


சூழின் (4)

மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – குறள் 21/7,8
பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என – கலி 3/14
ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று – கலி 8/20
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள் – அகம் 319/11
மேல்


சூழினும் (1)

சூழினும் தான் முந்துறும் – குறள் 38/20
மேல்


சூழும் (14)

அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – குறள் 21/8
கொல்லாமை சூழும் நெறி – குறள் 33/8
சூழும்_கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/20
நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர – கலி 36/2
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக – கலி 46/17
சூழும்_கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல் – கலி 47/17
சூழும்_கால் நறு_நுதால் நம்முளே சூழ்குவம் – கலி 47/18
நின்னொடு சூழும்_கால் நீயும் நிலம் கிளையா – கலி 63/15
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் – கலி 71/3
முகை சூழும் தும்பியும் போன்ம் – கலி 105/42
கொடும் தொழுவினுள் பட்ட கன்றிற்கு சூழும்
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் – கலி 110/13,14
வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 124/4
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 127/5
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப – கலி 132/7
மேல்


சூழும்_கால் (4)

சூழும்_கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/20
சூழும்_கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல் – கலி 47/17
சூழும்_கால் நறு_நுதால் நம்முளே சூழ்குவம் – கலி 47/18
நின்னொடு சூழும்_கால் நீயும் நிலம் கிளையா – கலி 63/15
மேல்


சூள் (28)

அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ – நற் 386/6
பூ கஞல் ஊரன் சூள் இவண் – ஐங் 8/5
தேற்றான் உற்ற சூள் வாய்த்தல்லே – ஐங் 37/4
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை – பரி 6/73
மாலைக்கு மாலை வரூஉம் வரை சூள் நில் – பரி 8/49
துனியல் நனி நீ நின் சூள்
என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் – பரி 8/55,56
என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள்
சான்றாளர் ஈன்ற தகாஅ தகாஅ மகாஅன் – பரி 8/56,57
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின் – பரி 8/65
வையைக்கு தக்க மணல் சீர் சூள் கூறல் – பரி 8/71
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல் – பரி 8/84
நிரை வளை ஆற்று இரும் சூள்
வளி பொரு சேண் சிமை வரை_அகத்தால் – பரி 8/89,90
மெய் சூள்_உறுவானை மெலியல் பொய் சூள் என்று – பரி 12/64
மெய் சூள்_உறுவானை மெலியல் பொய் சூள் என்று – பரி 12/64
சூள் பேணான் பொய்த்தான் மலை – கலி 41/20
எடுத்து சூள் பல உற்ற பாணன் வந்தீயான்-கொல் – கலி 71/14
பொய் சூள் அஞ்சி புலவேன் ஆகுவல் – கலி 75/21
விருந்து எதிர்கொள்ளவும் பொய் சூள் அஞ்சவும் – கலி 75/27
நுந்தை வாய் மாய சூள் தேறி மயங்கு நோய் கைமிக – கலி 85/26
நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி – கலி 88/20
பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா – கலி 90/24
மற்றது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார் – கலி 91/9
தலையினால் தொட்டு உற்றேன் சூள்
ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின் – கலி 108/56,57
பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை – கலி 147/23
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன் – கலி 149/10
கடும் சூள் தருகுவன் நினக்கே கானல் – அகம் 110/5
திறன் இல் வெம் சூள் அறி கரி கடாஅய் – அகம் 256/18
உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்_உற்று – புறம் 178/4
மேல்


சூள்_உற்று (1)

உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்_உற்று
உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன் – புறம் 178/4,5
மேல்


சூள்_உறுவானை (1)

மெய் சூள்_உறுவானை மெலியல் பொய் சூள் என்று – பரி 12/64
மேல்


சூளாள் (1)

பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து – பரி 12/63
மேல்


சூளின் (2)

என்னை அருளி அருள் முருகு சூள் சூளின்
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும் – பரி 8/65,66
ஐய சூளின் அடி தொடு குன்றொடு – பரி 8/70
மேல்


சூளினனே (1)

பாணன் பொய்யன் பல் சூளினனே – ஐங் 43/4
மேல்


சூளும் (1)

சூளும் பொய்யோ கடல் அறி கரியே – அகம் 320/14
மேல்


சூளே (7)

சூர் அர_மகளிரோடு உற்ற சூளே – குறு 53/7
கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே – குறு 238/5
மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூளே – குறு 384/4
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே – ஐங் 31/4
பழன ஊர நீ உற்ற சூளே – ஐங் 53/4
விட்டனையோ அவர் உற்ற சூளே – ஐங் 227/5
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே – அகம் 266/21
மேல்


சூளேல் (1)

அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல்
குறவன்_மகள் ஆணை கூறு ஏலா கூறேல் – பரி 8/68,69
மேல்


சூளை (1)

அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே – புறம் 228/3,4
மேல்


சூன்று (1)

நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை – அகம் 381/6
மேல்