ச – முதல் சொற்கள்- சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கரமும் 1
சகடத்து 1
சகடம் 6
சகடமும் 2
சகடு 1
சகோடமும் 1
சங்கம் 2
சங்கமன் 3
சங்கமும் 3
சங்கரன் 1
சங்கரி 1
சங்கிலி 1
சங்கொடு 1
சஞ்சயன் 3
சஞ்சயன்-தன்னொடு 1
சடாமுடி 1
சடை 19
சடை_முடி 2
சடையாள் 1
சடையினர் 1
சடையும் 1
சடையோடு 2
சண்பக 3
சண்பகம் 7
சதங்கை 1
சதுக்க 1
சதுக்கத்து 1
சதுக்கமும் 3
சதுமுகன் 1
சந்தம் 1
சந்தன 1
சந்தனம் 3
சந்தி 1
சந்தியும் 1
சந்திர 2
சந்திர_குருவே 1
சந்தின் 4
சந்தின 1
சந்து 3
சமத்தானே 1
சமத்து 11
சமம் 37
சமரமும் 1
சமரி 1
சமழ்ப்பு 1
சமன் 2
சமனும் 1
சமைப்பின் 1
சமைப்பேன் 1
சயந்தன் 2
சயம்பு 1
சரணத்தர் 1
சரவண 1
சரிதை 1
சருமத்தின் 1
சல 1
சலதாரி 1
சலதியொடு 1
சலம் 4
சவட்டி 2
சவட்டும் 1
சனம் 2

சக்கரமும் (1)

சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி – சிலப்.மது 12/107

மேல்


சகடத்து (1)

ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து
ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை – அகம் 301/7,8

மேல்


சகடம் (6)

ஆரை வேய்ந்த அறை வாய் சகடம்
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப – பெரும் 50,51
கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனி – நற் 4/9,10
இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம்
பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள் – குறு 165/3,4
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து – அகம் 136/5
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே – புறம் 102/2
உருளும் சகடம் உதைத்து அருள் செய்குவாய் – சிலப்.மது 12/163

மேல்


சகடமும் (2)

சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி – பரி 10/17
கண்ணெழுத்து படுத்தன கை புனை சகடமும்
சஞ்சயன் முதலா தலைக்கீடு பெற்ற – சிலப்.வஞ்சி 26/136,137

மேல்


சகடு (1)

வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்து – சிலப்.புகார் 1/52

மேல்


சகோடமும் (1)

ஈர்_ஏழ் சகோடமும் இடநிலை பாலையும் – சிலப்.புகார் 10/263

மேல்


சங்கம் (2)

முள் வாய் சங்கம் முறை_முறை ஆர்ப்ப – சிலப்.புகார் 4/78
மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம்
மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய – சிலப்.புகார் 7/43,44

மேல்


சங்கமன் (3)

சங்கமன் என்னும் வாணிகன் மனைவி – சிலப்.புகார் 0/48
சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை – சிலப்.மது 23/151
கொலை_கள பட்ட சங்கமன் மனைவி – சிலப்.மது 23/158

மேல்


சங்கமும் (3)

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய – பரி 2/13,14
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும்
தகை பெறு தாமரை கையின் ஏந்தி – சிலப்.மது 11/47,48
சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி – சிலப்.மது 12/107

மேல்


சங்கரன் (1)

சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன் – சிலப்.புகார் 10/186

மேல்


சங்கரி (1)

சங்கரி அந்தரி நீலி சடாமுடி – சிலப்.மது 12/154

மேல்


சங்கிலி (1)

சங்கிலி நுண்_தொடர் பூண் ஞான் புனைவினை – சிலப்.புகார் 6/99

மேல்


சங்கொடு (1)

வால் வெண் சங்கொடு வகைபெற்று ஓங்கிய – சிலப்.மது 14/13

மேல்


சஞ்சயன் (3)

சஞ்சயன் முதலா தலைக்கீடு பெற்ற – சிலப்.வஞ்சி 26/137
சஞ்சயன் புகுந்து தாழ்ந்து பல ஏத்தி – சிலப்.வஞ்சி 26/145
சஞ்சயன் போன பின் கஞ்சுக மாக்கள் – சிலப்.வஞ்சி 26/166

மேல்


சஞ்சயன்-தன்னொடு (1)

சஞ்சயன்-தன்னொடு வருக ஈங்கு என – சிலப்.வஞ்சி 26/143

மேல்


சடாமுடி (1)

சங்கரி அந்தரி நீலி சடாமுடி
செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் – சிலப்.மது 12/154,155

மேல்


சடை (19)

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் – பட் 54
விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப – பரி 9/5
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து – பரி 11/2
தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து – கலி 1/2
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன் – கலி 38/1
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல் – கலி 104/11
பிறங்கு நீர் சடை கரந்தான் அணி அன்ன நின் நிறம் – கலி 150/9
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை
முதிரா திங்களொடு சுடரும் சென்னி – அகம் 0/10,11
தாழ் சடை பொலிந்த அரும் தவத்தோற்கே – புறம் 1/13
அவிர் சடை முனிவரும் மருள கொடும் சிறை – புறம் 43/4
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை
மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும் – புறம் 56/1,2
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது – புறம் 166/1,2
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே – புறம் 251/7
கொன்றை அம் சடை_முடி மன்ற பொதியிலில் – சிலப்.புகார் 0/40
நீல நிறத்து திரி செக்கர் வார் சடை
பால் புரை வெள் எயிற்று பார்ப்பன கோலத்து – சிலப்.மது 21/47,48
புன் மயிர் சடை_முடி புலரா உடுக்கை – சிலப்.வஞ்சி 25/126
தெள் நீர் கரந்த செம் சடை கடவுள் – சிலப்.வஞ்சி 26/64
செம் சடை வானவன் அருளினில் விளங்க – சிலப்.வஞ்சி 26/98
செம் சடை சென்று திசைமுகம் அலம்பவும் – சிலப்.வஞ்சி 28/70

மேல்


சடை_முடி (2)

கொன்றை அம் சடை_முடி மன்ற பொதியிலில் – சிலப்.புகார் 0/40
புன் மயிர் சடை_முடி புலரா உடுக்கை – சிலப்.வஞ்சி 25/126

மேல்


சடையாள் (1)

திங்கள் வாழ் சடையாள் திரு முன்றிலே – சிலப்.மது 12/82

மேல்


சடையினர் (1)

சடையினர் உடையினர் சாம்பல் பூச்சினர் – சிலப்.வஞ்சி 26/225

மேல்


சடையும் (1)

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி – சிலப்.மது 23/1

மேல்


சடையோடு (2)

நீடிய சடையோடு ஆடா மேனி – நற் 141/4
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள் இலை தாளி கொய்யுமோனே – புறம் 252/2,3

மேல்


சண்பக (3)

வண்டு அறைஇய சண்பக நிரை தண் பதம் – பரி 11/18
கோதை மாதவி சண்பக பொதும்பர் – சிலப்.புகார் 2/18
தாது சேர் கழுநீர் சண்பக கோதையொடு – சிலப்.மது 13/119

மேல்


சண்பகம் (7)

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு – திரு 27
செருந்தி அதிரல் பெரும் தண் சண்பகம்
கரந்தை குளவி கடி கமழ் கலி மா – குறி 75,76
மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம்
அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் – பரி 12/77,78
பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர் – கலி 150/21
சண்பகம் மாதவி தமாலம் கருமுகை – சிலப்.புகார் 8/45
சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் – சிலப்.புகார் 10/69
சண்பகம் கருவிளை செம் கூதாளம் – சிலப்.மது 22/40

மேல்


சதங்கை (1)

பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து – சிலப்.புகார் 6/84,85

மேல்


சதுக்க (1)

சதுக்க பூதரை வஞ்சியுள் தந்து – சிலப்.வஞ்சி 28/147

மேல்


சதுக்கத்து (1)

ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/5

மேல்


சதுக்கமும் (3)

சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும் – திரு 225
பூதம் புடைத்து உணும் பூத_சதுக்கமும் – சிலப்.புகார் 5/134
அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் – சிலப்.மது 14/213

மேல்


சதுமுகன் (1)

சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள் முனி – சிலப்.புகார் 10/186,187

மேல்


சந்தம் (1)

சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து – பதி 87/2

மேல்


சந்தன (1)

சந்தன குறையும் சிந்துர கட்டியும் – சிலப்.வஞ்சி 25/39

மேல்


சந்தனம் (3)

பொதிர்த்த முலை இடை பூசி சந்தனம்
உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும் – பரி 21/25,26
தென் மலை பிறந்த சந்தனம் மறுக – சிலப்.புகார் 4/38
வட்டிகை விளம்பொரி வன்னிகை சந்தனம்
கொட்டமோடு அரைத்து கொண்ட மார்பினன் – சிலப்.மது 22/23,24

மேல்


சந்தி (1)

சந்தி ஐந்தும் தம்முடன் கூடி – சிலப்.புகார் 10/19

மேல்


சந்தியும் (1)

சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும் – திரு 225

மேல்


சந்திர (2)

சந்திர பாணி தகை பெறு கடிப்பு இணை – சிலப்.புகார் 6/104
சந்திர_குருவே அங்காரகன் என – சிலப்.மது 14/195

மேல்


சந்திர_குருவே (1)

சந்திர_குருவே அங்காரகன் என – சிலப்.மது 14/195

மேல்


சந்தின் (4)

குறவர் தந்த சந்தின் ஆரமும் – அகம் 13/4
உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு – அகம் 102/3
தாரகை கோவையும் சந்தின் குழம்பும் – சிலப்.மது 13/19
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும் – சிலப்.வஞ்சி 26/168

மேல்


சந்தின (1)

சிறியிலை சந்தின வாடு பெரும் காட்டே – நற் 7/9

மேல்


சந்து (3)

சந்து நீவி புல் முடிந்து இடு-மின் – மலை 393
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை – அகம் 59/12
சந்து உரல் பெய்து தகை_சால் அணி முத்தம் – சிலப்.வஞ்சி 29/187

மேல்


சமத்தானே (1)

அரசு பட கடக்கும் அரும் சமத்தானே – ஐங் 426/4

மேல்


சமத்து (11)

முரசு உடை பெரும் சமத்து அரசு பட கடந்து – பதி 41/19
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர் – பதி 52/7
அரும் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் – பதி 71/20
ஒளிறு வாள் பொருப்பன் உடல் சமத்து இறுத்த – பரி 22/1
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப – கலி 101/10
பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த – அகம் 77/17
அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர் – அகம் 188/5
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த – அகம் 312/12
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே – புறம் 275/9
அரும் சமம் ததைய தாக்கி பெரும் சமத்து
அண்ணல் யானை அணிந்த – புறம் 326/13,14
பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி – புறம் 365/5

மேல்


சமம் (37)

செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 99
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – சிறு 112
சாணம் தின்ற சமம் தாங்கு தட கை – மது 593
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப – குறி 229
முனை கெட சென்று முன் சமம் முருக்கி – பட் 238
பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர் – பதி 30/41
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 34/10
வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம்
கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி – பதி 40/10,11
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 43/9
வேல் உடை குழூஉ சமம் ததைய நூறி – பதி 66/5
சமம் ததைந்த வேல் – பதி 70/3
களிறு உடை பெரும் சமம் ததைய எஃகு உயர்த்து – பதி 76/1
செல் சமம் தொலைத்த வினை நவில் யானை – பதி 82/4
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும் – பரி 19/42
பொரு சமம் கடந்த புகழ் சால் வேழம் – பரி 21/2
செல் சமம் கடந்த வில் கெழு தட கை – அகம் 25/19
களிறு உடை அரும் சமம் ததைய நூறும் – அகம் 46/12
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய – அகம் 149/12
கடாஅ யானை குழூஉ சமம் ததைய – அகம் 220/4
செல் சமம் கடந்த செல்லா நல் இசை – அகம் 231/11
வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி – அகம் 387/13
முன்பு துரந்து சமம் தாங்கவும் – புறம் 14/4
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – புறம் 39/11
அரும் சமம் சிதைய தாக்கி முரசமொடு – புறம் 72/8
அரும் சமம் ததைய நூறி நீ – புறம் 93/14
விரைந்து வந்து சமம் தாங்கிய – புறம் 125/13
அரும் சமம் ததைய தாக்கி நன்றும் – புறம் 126/21
அரும் சமம் வருகுவது ஆயின் – புறம் 139/14
சமம் கண் கூடி தாம் வேட்பவ்வே – புறம் 270/4
அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த – புறம் 284/5
இரும் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே – புறம் 309/2
ஒளிறு வாள் அரும் சமம் முருக்கி – புறம் 312/5
அரும் சமம் ததைய தாக்கி பெரும் சமத்து – புறம் 326/13
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் – புறம் 337/17
அரும் சமம் கடக்கும் ஆற்றல் அவன் – புறம் 397/26
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய – சிலப்.புகார் 10/247
உலையா வெம் சமம் ஊர்ந்து அமர் உழக்கி – சிலப்.வஞ்சி 27/27

மேல்


சமரமும் (1)

இலங்கையில் எழுந்த சமரமும் கடல்_வணன் – சிலப்.வஞ்சி 26/238

மேல்


சமரி (1)

அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை – சிலப்.மது 12/67,68

மேல்


சமழ்ப்பு (1)

தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்-மின் – பரி 20/36

மேல்


சமன் (2)

எ வழி பட்டாய் சமன் ஆக இ எள்ளல் – கலி 97/5
குரல் மந்தம் ஆக இளி சமன் ஆக – சிலப்.மது 17/78

மேல்


சமனும் (1)

வலிவும் மெலிவும் சமனும் எல்லாம் – சிலப்.புகார் 3/93

மேல்


சமைப்பின் (1)

மனைவியர் நிறை_வயின் வசி தடி சமைப்பின்
சாலார் தானே தரிக்க என அவர் அவி – பரி 5/39,40

மேல்


சமைப்பேன் (1)

முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான் என – சிலப்.மது 16/114

மேல்


சயந்தன் (2)

இந்திர_சிறுவன் சயந்தன் ஆக என – சிலப்.புகார் 3/119
சயந்தன் வடிவின் தலைக்கோல் ஆங்கு – சிலப்.வஞ்சி 28/100

மேல்


சயம்பு (1)

சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன் – சிலப்.புகார் 10/186

மேல்


சரணத்தர் (1)

தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை – பரி 10/10

மேல்


சரவண (1)

சரவண பூம் பள்ளி_அறை தாய்மார் அறுவர் – சிலப்.வஞ்சி 24/56

மேல்


சரிதை (1)

வால சரிதை நாடகங்களில் – சிலப்.மது 17/29

மேல்


சருமத்தின் (1)

தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை – பரி 21/3

மேல்


சல (1)

சல படையான் இரவில் தாக்கியது எல்லாம் – பரி 6/57

மேல்


சலதாரி (1)

தணிவு_உற தாங்கிய தனி நிலை சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/6,7

மேல்


சலதியொடு (1)

சலம் புணர் கொள்கை சலதியொடு ஆடி – சிலப்.புகார் 9/69

மேல்


சலம் (4)

சலம் புகன்று சுறவு கலித்த – மது 112
தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார் – பரி 10/90
சலம் புரி தண்டு ஏந்தினவை – பரி 15/58
சலம் புணர் கொள்கை சலதியொடு ஆடி – சிலப்.புகார் 9/69

மேல்


சவட்டி (2)

பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 217,218
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி
கொன்ற யானை கோட்டின் தோன்றும் – அகம் 375/14,15

மேல்


சவட்டும் (1)

மன்பதை சவட்டும் கூற்ற முன்ப – பதி 84/7

மேல்


சனம் (2)

புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி – பரி 10/9
பல் சனம் நாணி பதைபதைப்பு மன்னவர் – பரி 10/59

மேல்