சீ – முதல் சொற்கள்- சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீ-மின் 2
சீஇ 1
சீக்கும் 6
சீத்த 1
சீத்து 2
சீத்தை 4
சீதையை 1
சீப்ப 4
சீப்பு 1
சீப்பும் 2
சீயா 3
சீர் 137
சீர்_சால் 1
சீர்க்கு 3
சீர்க்கும் 1
சீர்சால் 1
சீர்த்தகு 1
சீர்த்தி 3
சீர்த்து 1
சீர்தூக்கி 1
சீர்ப்பட 1
சீர 1
சீரார் 2
சீரான் 1
சீரின் 1
சீருடன் 1
சீரும் 5
சீரை 2
சீரொடு 1
சீவாது 2
சீவும் 2
சீற்றத்தவன் 1
சீற்றத்தவை 1
சீற்றத்து 6
சீற்றம் 6
சீற்றமொடு 2
சீற 2
சீறடி 27
சீறடியவர் 1
சீறி 2
சீறிடம் 3
சீறிதழ் 1
சீறிய 1
சீறியாழ் 29
சீறில் 2
சீறின் 1
சீறினேன் 1
சீறினை 1
சீறு 2
சீறும் 1
சீறும்_கால் 1
சீறுரல் 1
சீறூர் 54
சீறூர்க்கே 2
சீறூரேமே 1
சீறூரோளே 3

சீ-மின் (2)

சிறைப்படு கோட்டம் சீ-மின் யாவதும் – சிலப்.மது 23/126
சிறையோர் கோட்டம் சீ-மின் யாங்கணும் – சிலப்.வஞ்சி 28/203

மேல்


சீஇ (1)

சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ
ஏறு தொழூஉ புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு – கலி 101/8,9

மேல்


சீக்கும் (6)

மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில் – பெரும் 497
வேழ வெண் பூ வெள் உகை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி – ஐங் 19/3,4
நூற்று இதழ் தாமரை பூ சினை சீக்கும்
காம்பு கண்டு அன்ன தூம்பு உடை வேழத்து – ஐங் 20/2,3
ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல் – கலி 100/1
கல் கண் சீக்கும் அத்தம் – அகம் 345/20
மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில் – புறம் 247/4

மேல்


சீத்த (1)

செது மொழி சீத்த செவி செறு ஆக – கலி 68/3

மேல்


சீத்து (2)

வளி சீத்து வரித்த புன்னை முன்றில் – நற் 159/6
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து – புறம் 400/20

மேல்


சீத்தை (4)

ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன் சீத்தை
செறு தக்கான் மன்ற பெரிது – கலி 84/18,19
ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம் – கலி 86/30
போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி தொக்க – கலி 94/22
சீத்தை பயம் இன்றி ஈங்கு கடித்தது நன்றே – கலி 96/30

மேல்


சீதையை (1)

கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை – புறம் 378/18,19

மேல்


சீப்ப (4)

மென் பூ செம்மலொடு நன் கலம் சீப்ப
இரவு தலைப்பெயரும் ஏம வைகறை – மது 685,686
தெரி மலர் தாரர் தெரு இருள் சீப்ப நின் – பரி 19/14
ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்ப
குடை_நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும் – கலி 118/6,7
மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப
இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப – கலி 148/5,6

மேல்


சீப்பு (1)

கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது – பரி 8/54

மேல்


சீப்பும் (2)

ஏணியும் சீப்பும் மாற்றி – புறம் 305/5
எழுவும் சீப்பும் முழு விறல் கணையமும் – சிலப்.மது 15/215

மேல்


சீயா (3)

காட்டொடு மிடைந்த சீயா முன்றில் – புறம் 316/2
கனை சுடர் கால் சீயா முன் – சிலப்.புகார் 9/79
கனை சுடர் கால் சீயா முன் – சிலப்.புகார் 9/84

மேல்


சீர் (137)

சீர் திகழ் சிலம்பு_அகம் சிலம்ப பாடி – திரு 40
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர்
அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று – திரு 124,125
ஊர்_ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – திரு 220
சீர் உடை நன் மொழி நீரொடு சிதறி – பொரு 24
இரு சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர் – பொரு 71
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் – பெரும் 388
அன்றே விடுக்கும் அவன் பரிசில் இன் சீர்
கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல் – பெரும் 493,494
இணை ஒலி இமிழ் துணங்கை சீர்
பிணை யூபம் எழுந்து ஆட – மது 26,27
சீர் சான்ற உயர் நெல்லின் – மது 87
சீர் உடைய விழு சிறப்பின் – மது 134
துணங்கை அம் சீர் தழூஉ மறப்ப – மது 160
விழு சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து – மது 469
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ – மது 614
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி – மது 657
கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக – குறி 162
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் – பட் 104
நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் – மலை 13
பொருது தொலை யானை கோடு சீர் ஆக – மலை 154
சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய – மலை 570
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த – நற் 40/9
முழங்கு திரை இன் சீர் தூங்கும் – நற் 138/10
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி – நற் 339/6
இரண்டும் தூக்கின் சீர் சாலாவே – குறு 101/3
நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர்
கலி மயில் கலாவத்து அன்ன இவள் – குறு 225/5,6
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை – குறு 295/4
விசும்பு இழி தோகை சீர் போன்றிசினே – ஐங் 74/1
சீர் உடை நன் நாட்டு செல்லும் அன்னாய் – ஐங் 214/5
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை – ஐங் 459/3
சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின – பதி 15/20
ஏமம் ஆகிய சீர் கெழு விழவின் – பதி 15/38
காலை அன்ன சீர் சால் வாய்மொழி – பதி 21/4
சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கிய – பதி 21/28
வில் விசை மாட்டிய விழு சீர் ஐயவி – பதி 22/23
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் கால் வெள்ளி – பதி 24/24
சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர் – பதி 28/11
சீர் மிகு முத்தம் தைஇய – பதி 39/16
சீர் உடை பல் பகடு ஒலிப்ப பூட்டி – பதி 58/16
விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும் – பரி 1/40
சேரா அறத்து சீர் இலோரும் – பரி 5/74
வையைக்கு தக்க மணல் சீர் சூள் கூறல் – பரி 8/71
மென் சீர் மயில் இயலவர் – பரி 9/56
ஆடுவார் ஆடல் அமர்ந்த சீர் பாணி – பரி 10/117
சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி – பரி 11/69
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே – பரி 14/26
சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின் – பரி 15/22
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர்
சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ் – பரி 15/29,30
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி – பரி 15/63
ஒருதிறம் ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற – பரி 17/19
தொய்யா விழு சீர் வளம் கெழு வையைக்கும் – பரி 17/44
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர்நிரந்து – பரி 18/5
நைவளம் பூத்த நரம்பு இயை சீர் பொய் வளம் – பரி 18/20
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து – பரி 18/43
சீர் தகு கேள்வன் உருட்டும் துடி சீரான் – பரி 21/60
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை_தன் – பரி 22/32
ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசை – பரி 22/40
துடி சீர் நடத்த வளி நடன் – பரி 22/42
துளங்கா விழு சீர் துறக்கம் புரையும் – பரி 23/47
நல்லவை எல்லாம் இயைதரும் தொல் சீர்
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கை – பரி 23/67,68
திகழ்பு எழ வாங்கி தம் சீர் சிரத்து ஏற்றி – பரி 23/71
அணி போல் பொறுத்தாரும் தாஅம் பணிபு இல் சீர்
செல் விடை பாகன் திரிபுரம் செற்று_உழி – பரி 23/81,82
பொங்கு புரவி புடை_போவோரும் பொங்கு சீர்
வையமும் தேரும் அமைப்போரும் எ வாயும் – பரி 24/16,17
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின் – பரி 30/2
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ – கலி 1/7
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை – கலி 9/15
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை – கலி 30/11
சீர் முற்றி புலவர் வாய் சிறப்பு எய்தி இரு நிலம் – கலி 67/2
சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும் – கலி 75/3
சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப சிவந்து நின் – கலி 90/11
சீர் தக வந்த புது புனல் நின்னை கொண்டு – கலி 98/25
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான் – கலி 101/18
பண் அமை இன் சீர் குரவையுள் தெண் கண்ணி – கலி 102/35
வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன் – கலி 104/4
தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக தண்டா சீர்
வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர் – கலி 104/60,61
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து என – கலி 105/3
சீர் கெழு சிலை நிலை செயிர் இகல் மிகுதியின் சின பொதுவர் – கலி 105/27
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை – கலி 131/24
அசை வரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை – கலி 131/34
சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கைசேர்த்த – கலி 133/3
அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர்
செறிந்து ஏர் முறுவலாள் செய்த இ காமம் – கலி 140/26,27
விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும் – அகம் 61/13
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை – அகம் 66/22
வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர்
ஐது அமை பாணி இரீஇ கைபெயரா – அகம் 98/16,17
தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ – அகம் 118/3
ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது – அகம் 138/9
அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர்
அன்னி குறுக்கை பறந்தலை திதியன் – அகம் 145/10,11
ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு – அகம் 154/13
சீர் மிகு குருசில் நீ வந்து நின்றதுவே – அகம் 184/19
சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி – அகம் 219/1
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் – அகம் 246/10
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை – அகம் 265/5
தேரை ஒலியின் மாண சீர் அமைத்து – அகம் 301/19
இன் தீம் குரல துவன்றி மென் சீர்
ஆடு தகை எழில் நலம் கடுப்ப கூடி – அகம் 358/3,4
பசும் புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து – அகம் 378/9
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப – அகம் 393/22
சீர் கெழு கொடியும் அ ஏறு என்ப – புறம் 1/4
உருவும் புகழும் ஆகி விரி சீர்
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம் – புறம் 6/8,9
சீர் உடைய இழை பெற்றிசினே – புறம் 11/13
குரல் புணர் சீர் கொளை வல் பாண்_மகனும்மே – புறம் 11/15
தண் குரவை சீர் தூங்குந்து – புறம் 24/6
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற – புறம் 53/4
எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க – புறம் 62/5
ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை – புறம் 73/2
வாடா தாமரை சூட்டிய விழு சீர்
ஓடா பூட்கை உரவோன் மருக – புறம் 126/3,4
சீர் கெழு விழு புகழ் ஏத்துகம் பலவே – புறம் 160/30
சீர் மிகு செல்வமும் ஏந்துகம் பலவே – புறம் 161/32
பெரும் புலர் வைகறை சீர் சாலாதே – புறம் 177/17
படு திரை இன் சீர் பாணி தூங்கும் – புறம் 209/5
சீர் கெழு நோன் தாள் அகுதை_கண் தோன்றிய – புறம் 233/3
நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக – புறம் 243/7
பெரும் சீர் அரும் கொண்டியளே கரும் சினை – புறம் 338/5
சீர் சான்ற விழு சிறப்பின் – புறம் 395/17
ஊர்தியொடு நல்கியோனே சீர் கொள – புறம் 399/32
பாடல்_சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர்
மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு – சிலப்.புகார் 0/19,20
ஊர்காண் காதையும் சீர்_சால் நங்கை – சிலப்.புகார் 0/75
சீர் இயல் வெண்குடை காம்பு நனி கொண்டு – சிலப்.புகார் 3/115
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 3/135
சீர் வாய் துவலை திரு நீர் மாந்தி – சிலப்.புகார் 5/209
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 6/38
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டு_அரும் சீர்
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று – சிலப்.புகார் 9/40,41
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்த சீர்
மாட மதுரை அகத்து சென்று என்னோடு இங்கு – சிலப்.புகார் 9/75,76
கொல்லன் துடியன் கொளை புணர் சீர் வல்ல – சிலப்.மது 12/130
சீர் இள வன முலை சேராது ஒழியவும் – சிலப்.மது 13/20
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும் – சிலப்.மது 15/2,3
வேந்து உறு சிறப்பின் விழு சீர் எய்திய – சிலப்.மது 15/21
மாயவன் சீர் உளார் பிஞ்ஞையும் தாரமும் – சிலப்.மது 17/61
தண்டா குரவை-தான் உள்படுவாள் கொண்ட சீர்
வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்கா – சிலப்.மது 17/67,68
அ நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார் முன்னை – சிலப்.மது 17/73
பொதி அவிழ் மலர் கூந்தல் பிஞ்ஞை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/107
கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/111
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் – சிலப்.மது 17/112
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே – சிலப்.மது 17/146
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே – சிலப்.மது 17/147
சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் – சிலப்.வஞ்சி 24/48
சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால் – சிலப்.வஞ்சி 26/20
சீர் கெழு நல் நாட்டு செல்க என்று ஏவி – சிலப்.வஞ்சி 27/178
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண – சிலப்.வஞ்சி 28/97
சீர் இயல் வெண்குடை காம்பு நனி சிறந்த – சிலப்.வஞ்சி 28/99

மேல்


சீர்_சால் (1)

ஊர்காண் காதையும் சீர்_சால் நங்கை – சிலப்.புகார் 0/75

மேல்


சீர்க்கு (3)

வாளி புரள்பவை போலும் துடி சீர்க்கு
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண் – பரி 21/64,65
செய்யாட்கு இழைத்த திலகம் போல் சீர்க்கு ஒப்ப – பரி 32/1
ஆய் வளை சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த – சிலப்.மது 17/115

மேல்


சீர்க்கும் (1)

கொண்ட இன் இசை தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும் – பரி 11/129

மேல்


சீர்சால் (1)

ஊர்சூழ்வரியும் சீர்சால் வேந்தனொடு – சிலப்.புகார் 0/79

மேல்


சீர்த்தகு (1)

சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் – சிலப்.மது 23/90

மேல்


சீர்த்தி (3)

வலம் படு சீர்த்தி ஒருங்கு உடன் இயைந்து – பதி 41/24
சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி
ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா – கலி 83/13,14
அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை – புறம் 15/18

மேல்


சீர்த்து (1)

சீர்த்து விளங்கி திரு பூத்தல் அல்லது – பரி 33/2

மேல்


சீர்தூக்கி (1)

ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார் – பரி 12/42

மேல்


சீர்ப்பட (1)

மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண் – கலி 97/26

மேல்


சீர (1)

நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப – கலி 36/2,3

மேல்


சீரார் (2)

சீரார் செவ்வியும் வந்தன்று – கலி 36/10
வால் வெள்ளை சீரார் உழையும் விளரியும் – சிலப்.மது 17/62

மேல்


சீரான் (1)

சீர் தகு கேள்வன் உருட்டும் துடி சீரான்
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர் – பரி 21/60,61

மேல்


சீரின் (1)

கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி – அகம் 194/8

மேல்


சீருடன் (1)

சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் – சிலப்.புகார் 7/13

மேல்


சீரும் (5)

சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் – நெடு 118
பாடுவார் பாணி சீரும் ஆடுவார் அரங்க தாளமும் – பரி 8/109
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை – கலி 1/15
சிறப்பும் சீரும் இன்றி சீறூர் – அகம் 369/22
யாழும் குழலும் சீரும் மிடறும் – சிலப்.புகார் 3/26

மேல்


சீரை (2)

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு – திரு 126
தபுதி அஞ்சி சீரை புக்க – புறம் 43/7

மேல்


சீரொடு (1)

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால் நரை முடியினர் – திரு 126,127

மேல்


சீவாது (2)

கொல் ஏற்று பைம் தோல் சீவாது போர்த்த – மது 732
வென்றதன் பச்சை சீவாது போர்த்த – புறம் 288/3

மேல்


சீவும் (2)

மீன் சீவும் பாண்_சேரியொடு – மது 269
மீன் சீவும் பாண் சேரி – புறம் 348/4

மேல்


சீற்றத்தவன் (1)

அரசு பட கடந்த ஆனா சீற்றத்தவன்
முரசு அதிர்பவை போல் முழங்கு இடி பயிற்றி – பரி 22/3,4

மேல்


சீற்றத்தவை (1)

செரு செய்த வாளி சீற்றத்தவை அன்ன – பரி 20/37

மேல்


சீற்றத்து (6)

முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில் – பொரு 131
மாற்று அரும் சீற்றத்து மா இரும் கூற்றம் – பதி 51/35
எரி நிகழ்ந்து அன்ன நிறை அரும் சீற்றத்து
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி – பதி 91/7,8
முருகன் அன்ன சீற்றத்து கடும் திறல் – அகம் 158/16
அன்ன சீற்றத்து அனையை ஆகலின் – புறம் 15/11
முருகன் சீற்றத்து உரு கெழு குருசில் – புறம் 16/12

மேல்


சீற்றம் (6)

கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம்
வலி ஒத்தீயே வாலியோனை – புறம் 56/11,12
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் – சிலப்.புகார் 0/44
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன் – சிலப்.வஞ்சி 27/79,80
கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் – சிலப்.வஞ்சி 28/106
அரைசர் ஏறே அமைக நின் சீற்றம்
மண் ஆள் வேந்தே நின் வாழ்நாட்கள் – சிலப்.வஞ்சி 28/124,125
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து – சிலப்.வஞ்சி 28/219

மேல்


சீற்றமொடு (2)

முனை எரி பரப்பிய துன் அரும் சீற்றமொடு
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி – பதி 15/2,3
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல் – கலி 103/44

மேல்


சீற (2)

சிரறுபு சீற சிவந்த நின் மார்பும் – கலி 88/13
பொரு முரண் சீற சிதைந்து நெருநையின் – கலி 91/4

மேல்


சீறடி (27)

கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி
கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள் – திரு 13,14
வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி
அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் – பொரு 42,43
நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி
கல்லா இளையர் மெல்ல தைவர – சிறு 32,33
துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி
கணம்_கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ – மலை 43,44
நடை நாள் செய்த நவிலா சீறடி
பூ கண் புதல்வன் உறங்கு_வயின் ஒல்கி – நற் 221/10,11
நன் நா புரையும் சீறடி
பொம்மல் ஓதி புனை_இழை குணனே – நற் 252/11,12
நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி
அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணை – நற் 256/1,2
செல்வ சிறாஅர் சீறடி பொலிந்த – குறு 148/1
முறி கண்டு அன்ன மெல்லென் சீறடி
சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார் – குறு 278/2,3
ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப – பதி 52/19,20
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கி – பதி 57/5
மெல் இயல் மே வந்த சீறடி தாமரை – கலி 13/11
பைபய தூங்கும் நின் மெல் விரல் சீறடி
நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ – கலி 85/19,20
சீறடி தோயா இறுத்தது அமையுமோ – கலி 90/18
வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள்-மன்னோ இனி மன்னும் – கலி 147/3,4
எந்தையும் நிலன் உற பொறாஅன் சீறடி சிவப்ப – அகம் 12/2
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
வல்ல-கொல் செல்ல தாமே கல்லென – அகம் 17/9,10
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப – அகம் 257/3
அம் செம் சீறடி பஞ்சி ஊட்டியும் – அகம் 389/7
அம் செம் சீறடி அணி சிலம்பு ஒழிய – சிலப்.புகார் 4/47
அலத்தகம் ஊட்டிய அம் செம் சீறடி
நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇ – சிலப்.புகார் 6/82,83
பாடக சீறடி பரல் பகை உழவா – சிலப்.புகார் 10/52
ஆறு செல் வருத்தத்து சீறடி சிவப்ப – சிலப்.மது 12/2
இணை மலர் சீறடி இனைந்தனள் வருந்தி – சிலப்.மது 12/45
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி
வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை – சிலப்.மது 12/63,64
படிந்தில சீறடி பரல் வெம் கானத்து – சிலப்.மது 13/4
வண்ண சீறடி மண்_மகள் அறிந்திலள் – சிலப்.மது 15/138

மேல்


சீறடியவர் (1)

சீறடியவர் சாறு கொள எழுந்து – பரி 8/96

மேல்


சீறி (2)

தென்னவன் திறல் கெட சீறி மன்னர் – பட் 277
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள் – பதி 63/10,11

மேல்


சீறிடம் (3)

ஒரு பிடி படியும் சீறிடம்
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே – புறம் 40/10,11
விளை_பத சீறிடம் நோக்கி வளை கதிர் – புறம் 190/1
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி – புறம் 249/12

மேல்


சீறிதழ் (1)

செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு – திரு 21

மேல்


சீறிய (1)

திருந்து தொழில் வயவர் சீறிய நாடே – பதி 26/14

மேல்


சீறியாழ் (29)

மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க – பொரு 109,110
இன் குரல் சீறியாழ் இட_வயின் தழீஇ – சிறு 35
ஏழ் புணர் சிறப்பின் இன் தொடை சீறியாழ்
தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப பண்ணு பெயர்த்து – மது 559,560
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப – நெடு 70
மருதம் பண்ணிய கரும் கோட்டு சீறியாழ்
நரம்பு மீது இறவாது உடன்புணர்ந்து ஒன்றி – மலை 534,535
பாணன் கையது பண்பு உடை சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும் – நற் 30/2,3
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ்
நரம்பு இசைத்து அன்ன இன் குரல் குருகின் – நற் 189/3,4
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல் – நற் 380/7,8
கைவல் சீறியாழ் பாண நுமரே – ஐங் 472/1
பெரிது புலம்பினனே சீறியாழ் பாணன் – ஐங் 475/3
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலி பூ பொங்கர் மகிழ் குரல் குயிலொடு – அகம் 279/11,12
அரும் துறை முற்றிய கரும் கோட்டு சீறியாழ்
பாணர் ஆர்ப்ப பல் கலம் உதவி – அகம் 331/10,11
தேஎம் தீம் தொடை சீறியாழ் பாண – புறம் 70/1
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி – புறம் 109/15
களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்து என – புறம் 127/1,2
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடை தழீஇ – புறம் 135/7,8
உள்ளி வந்த வள் உயிர் சீறியாழ்
சிதாஅர் உடுக்கை முதாஅரி பாண – புறம் 138/4,5
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின் – புறம் 144/2
களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ்
நயம் புரிந்து உறையுநர் நடுங்க பண்ணி – புறம் 145/5,6
சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்_புல – புறம் 146/3
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை – புறம் 147/2
வணர் கோட்டு சீறியாழ் வாடு புடை தழீஇ – புறம் 155/1
பெரு மாவிலங்கை தலைவன் சீறியாழ்
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை – புறம் 176/6,7
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை சீறியாழ்
பாணன் கையது தோலே காண்வர – புறம் 285/3,4
ஐது அமை பாணி வணர் கோட்டு சீறியாழ்
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய – புறம் 302/5,6
மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண – புறம் 308/2,3
கரும் கோட்டு சீறியாழ் பணையம் இது கொண்டு – புறம் 316/7
கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க – புறம் 398/5
வணர் கோட்டு சீறியாழ் வாங்குபு தழீஇ – சிலப்.வஞ்சி 28/31

மேல்


சீறில் (2)

செம் கண் சில் நீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முது வாய் சாடி – புறம் 319/2,3
சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார் – புறம் 325/8

மேல்


சீறின் (1)

மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த – கலி 89/10

மேல்


சீறினேன் (1)

கோ_நகர் சீறினேன் குற்றம் இலேன் யான் என்று – சிலப்.மது 21/42

மேல்


சீறினை (1)

நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின் – பதி 22/31

மேல்


சீறு (2)

சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அ எயில் – கலி 2/6
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ – கலி 101/8

மேல்


சீறும் (1)

அழிய துறந்தானை சீறும்_கால் என்னை – கலி 143/25

மேல்


சீறும்_கால் (1)

அழிய துறந்தானை சீறும்_கால் என்னை – கலி 143/25

மேல்


சீறுரல் (1)

துளை அரை சீறுரல் தூங்க தூக்கி – பெரும் 54

மேல்


சீறூர் (54)

கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர்
நெடும் குரல் பூளை பூவின் அன்ன – பெரும் 191,192
வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர்
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை – நற் 3/5,6
ஊர்_அல்_அம்_சேரி சீறூர் வல்லோன் – நற் 77/8
வேட்ட சீறூர் அகன் கண் கேணி – நற் 92/5
குன்றகத்ததுவே குழு மிளை சீறூர்
சீறூரோளே நாறு மயிர் கொடிச்சி – நற் 95/7,8
தண் குடி வாழ்நர் அம் குடி சீறூர்
இனிது மன்று அம்ம தானே பனி படு – நற் 135/4,5
அடையாது இருந்த அம் குடி சீறூர்
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும் – நற் 343/2,3
அழிந்த வேலி அம் குடி சீறூர்
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட – நற் 346/4,5
பெண்ணை வேலி உழை கண் சீறூர்
நன் மனை அறியின் நன்று-மன் தில்ல – நற் 392/6,7
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் – குறு 41/3,4
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்
சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு – குறு 79/5,6
எல் இடை அசைந்த கல்லென் சீறூர்
புனை இழை மகளிர் பயந்த – ஐங் 382/3,4
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய – அகம் 9/10,11
மலை கெழு சீறூர் புலம்ப கல்லென – அகம் 52/7
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ – அகம் 63/13
கல் அதர் கவலை போகின் சீறூர்
புல் அரை இத்தி புகர் படு நீழல் – அகம் 77/12,13
நல்கூர் சீறூர் எல்லி தங்கி – அகம் 87/4
சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை – அகம் 104/13
மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர்
மாலை இன் துணை ஆகி காலை – அகம் 107/18,19
கலங்கு முனை சீறூர் கை தலைவைப்ப – அகம் 129/11
குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண் – அகம் 152/2
அரவ சீறூர் காண – அகம் 160/17
மால் வரை சீறூர் மருள் பல் மாக்கள் – அகம் 171/8
புல்லென் மா மலை புலம்பு கொள் சீறூர்
செல் விருந்து ஆற்றி துச்சில் இருத்த – அகம் 203/15,16
மழை துளி மறந்த அம் குடி சீறூர்
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே பூ புனை – அகம் 225/13,14
மரா அம் சீறூர் மருங்கில் தூங்கும் – அகம் 265/20
சில் உணா தந்த சீறூர் பெண்டிர் – அகம் 283/5
சுரை இவர் பொதியில் அம் குடி சீறூர்
நாள்_பலி மறந்த நரை கண் இட்டிகை – அகம் 287/5,6
புன் தலை மன்றத்து அம் குடி சீறூர்
துணையொடு துச்சில் இருக்கும்-கொல்லோ – அகம் 321/10,11
குவிந்த குரம்பை அம் குடி சீறூர்
படு மணி இயம்ப பகல் இயைந்து உமணர் – அகம் 329/4,5
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய – அகம் 331/8
முனை உழை இருந்த அம் குடி சீறூர்
கரும் கால் வேங்கை செம் சுவல் வரகின் – அகம் 367/5,6
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர்
எவன்-கொல் வாழி தோழி கொங்கர் – அகம் 368/15,16
சிறப்பும் சீரும் இன்றி சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை – அகம் 369/22,23
கவை கதிர் வரகின் சீறூர் ஆங்கண் – அகம் 384/6
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப – புறம் 65/5
நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண் – புறம் 143/10
பரல் உடை முன்றில் அம் குடி சீறூர்
எல் அடிப்படுத்த கல்லா காட்சி – புறம் 170/2,3
சீறூர் மன்னர் ஆயினும் எம்_வயின் – புறம் 197/13
கரம்பை சீறூர் நல்கினன் எனவே – புறம் 285/17
கன்று உடை மரையா துஞ்சும் சீறூர்
கோள் இவண் வேண்டேம் புரவே நார் அரி – புறம் 297/4,5
பருத்தி வேலி சீறூர் மன்னன் – புறம் 299/1
நிரம்பா இயல்பின் கரம்பை சீறூர்
நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கி – புறம் 302/7,8
அரிது உண் கூவல் அம் குடி சீறூர்
ஒலி மென் கூந்தல் ஒண் நுதல் அரிவை – புறம் 306/2,3
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் – புறம் 308/4
புன் காழ் நெல்லி வன்_புல சீறூர்
குடியும் மன்னும் தானே கொடி எடுத்து – புறம் 314/4,5
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர் – புறம் 319/12
புன்_புலம் தழீஇய அம் குடி சீறூர்
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த – புறம் 324/8,9
புன்_புல சீறூர் நெல் விளையாதே – புறம் 328/2
சீறூர் மன்னனை பாடினை செலினே – புறம் 328/16
இல் அடு கள்ளின் சில் குடி சீறூர்
புடை நடுகல்லின் நாள்_பலி ஊட்டி – புறம் 329/1,2
புரவிற்கு ஆற்றா சீறூர்
தொன்மை சுட்டிய வண்மையோனே – புறம் 330/6,7
வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலி – புறம் 331/2
உட்கு உடை சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்ற-காலை – சிலப்.மது 12/120

மேல்


சீறூர்க்கே (2)

திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே – சிலப்.புகார் 7/64,65
கடும் கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே
மடம் கெழு மென் சாயல் மகள் ஆயதுவே – சிலப்.புகார் 7/68,69

மேல்


சீறூரேமே (1)

அகலுள் ஆங்கண் சீறூரேமே
அதுவே சாலும் காமம் அன்றியும் – நற் 266/4,5

மேல்


சீறூரோளே (3)

சீறூரோளே நாறு மயிர் கொடிச்சி – நற் 95/8
சீறூரோளே மடந்தை வேறு ஊர் – குறு 242/4
சீறூரோளே ஒண்_நுதல் யாமே – அகம் 84/10

மேல்