நை – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

நைக்க (1)

நனம் தலை பேரூர் எரியும் நைக்க
மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் – புறம் 57/7,8

மேல்


நைத்த (1)

ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை – அகம் 395/6

மேல்


நைத்தலின் (1)

நறும் கள்ளின் நாடு நைத்தலின்
சுரை தழீஇய இரும் காழொடு – புறம் 97/5,6

மேல்


நைதல் (1)

நைதல் கண்டு உவந்தவள் நவையின் ஓங்கிய – கம்.அயோ:14 38/3

மேல்


நைந்தார் (2)

பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார்
பாரிடை உற்ற தன்மை பகர்வது என் பாரை தாங்கி – கம்.பால:13 35/2,3
நலம் கையில் அகன்றது-கொல் நம்மின் என நைந்தார்
கலங்கல் இல் கரும் கண் இணை வாரி கலுழ்கின்றார் – கம்.ஆரண்:10 44/3,4

மேல்


நைந்தான் (4)

தார் குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைந்து நைந்தான் – கம்.கிட்:11 50/4
நங்கையை கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தான் – கம்.கிட்:11 51/4
பொன் நெடும் திரள் தோள் ஐயன் மெய் உற புழுங்கி நைந்தான்
பல் நெடும் காதத்தேயும் சுட வல்ல பவள செ வாய் – கம்.யுத்1:9 22/2,3
எல்லாரும் இறந்தனரோ என ஏங்கி நைந்தான்
வில்லாளரை எண்ணின் விரற்கு முன் நிற்கும் வீரன் – கம்.யுத்2:19 5/3,4

மேல்


நைந்து (10)

நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி – கலி 33/16
நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி – புறம் 376/11
ஒன்று கொண்டு உள் நைந்து நைந்து இரங்கி விம்மி விம்மியே – கம்.பால:13 55/1
ஒன்று கொண்டு உள் நைந்து நைந்து இரங்கி விம்மி விம்மியே – கம்.பால:13 55/1
அறம் எனக்கு இலையோ என்னும் ஆவி நைந்து
இற அடுத்தது என் தெய்வதங்காள் என்னும் – கம்.அயோ:4 13/1,2
நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா – கம்.அயோ:4 153/2
ஊட்டில கறவை நைந்து உருகி சோர்ந்தவே – கம்.அயோ:4 207/4
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள் – கம்.அயோ:11 115/4
நன் புலன் நடுக்கு உற உணர்வு நைந்து அற – கம்.கிட்:14 21/1
நைந்து போக உயிர் நிலை நச்சிலேன் – கம்.யுத்4:41 77/3

மேல்


நைப்ப (4)

இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப
நிழத்த யானை மேய் புலம் படர – மது 302,303
பரந்து படு கூர் எரி கானம் நைப்ப
மரம் தீ உற்ற வறும் தலை அம் காட்டு – நற் 177/1,2
வினை புனை நல் இல் வெம் எரி நைப்ப
கனை எரி உரறிய மருங்கும் நோக்கி – புறம் 23/10,11
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது – புறம் 240/10

மேல்


நைப்பவும் (1)

குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும்
அருவி மா மலை நிழத்தவும் மற்று அ – பொரு 234,235

மேல்


நைய (7)

நைய நைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான் – கம்.அயோ:3 63/3
நைய நைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான் – கம்.அயோ:3 63/3
பொன் திணி போதினாளும் பூமியும் புலம்பி நைய
குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான் – கம்.அயோ:3 115/3,4
ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான் – கம்.ஆரண்:10 90/4
ஆம் ஆம் அது அடுக்கும் என் ஆக்கையொடு ஆவி நைய
வேமால் வினையேற்கு இனி என் விடிவு ஆகும் என்ன – கம்.ஆரண்:10 153/1,2
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நைய பூ நீர் – கம்.சுந்:2 101/3
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – கம்.யுத்4:38 28/3

மேல்


நையவே (1)

நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே – கம்.ஆரண்:13 3/4

மேல்


நையா (3)

நையா நின்றேன் நாவும் உலர்ந்தேன் நளினம் போல் – கம்.அயோ:3 37/2
நையா இடை நோவ நடந்தனளால் – கம்.ஆரண்:11 45/2
நையா நின்றனென் நான் இருந்து இங்ஙன் – கம்.கிட்:8 9/1

மேல்


நையாநின்றேன் (1)

நையாநின்றேன் நீ இது உரைத்து நலிவாயோ – கம்.ஆரண்:11 15/4

மேல்


நையாமல் (1)

இறந்து எரி நையாமல் பாஅய் முழங்கி – கலி 145/19

மேல்


நையும் (3)

நையும் நொய்ய மருங்குல் ஓர் நங்கைதான் – கம்.பால:21 35/2
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே – கம்.அயோ:3 61/4
புண்ணிடை எரி புக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும் – கம்.யுத்2:18 263/4

மேல்


நையுறு (1)

நையுறு சிந்தையள் நயன் வாரியின் – கம்.சுந்:4 96/1

மேல்


நைவதே (1)

நாடு ஒரு துயரிடை நைவதே எனும் – கம்.அயோ:11 92/3

மேல்


நைவர (1)

நல்காமையின் நைவர சாஅய் – புறம் 146/6

மேல்


நைவள (1)

நறை செவி பெய்வது என்ன நைவள அமுத பாடல் – கம்.பால:14 60/3

மேல்


நைவளம் (4)

நைவளம் பழுநிய நயம் தெரி பாலை – சிறு 36
நைவளம் பழுநிய பாலை வல்லோன் – குறி 146
நைவளம் பூத்த நரம்பு இயை சீர் பொய் வளம் – பரி 18/20
நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும் – கம்.பால:22 34/1

மேல்


நைவார் (1)

நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார்
செம் கணும் கரிய கோல மேனியும் தேரும் ஆகி – கம்.அயோ:3 90/2,3

மேல்


நைவாரா (2)

ஐ_வாய்_அரவின் இடைப்பட்டு நைவாரா
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை – கலி 62/13,14
நைவாரா ஆய_மகள் தோள் – கலி 103/67

மேல்


நைவாள் (1)

தொள்கின்-தலை எய்திய மான் என சோர்ந்து நைவாள்
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒரு சார்வு காணாள் – கம்.ஆரண்:13 44/2,3

மேல்


நைவான் (2)

பால் நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான் – கம்.ஆரண்:10 97/4
ஐவினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி – கம்.யுத்3:28 28/2

மேல்


நைவீர் (1)

நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி – கம்.அயோ:13 66/1

மேல்