ஞா – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாங்கர் 17
ஞாட்பில் 2
ஞாட்பின் 9
ஞாட்பினும் 1
ஞாட்புறு 1
ஞாண் 11
ஞாயர் 3
ஞாயில் 9
ஞாயில்-தொறும் 1
ஞாயிற்றது 1
ஞாயிற்று 37
ஞாயிற்றை 1
ஞாயிறு 58
ஞாயிறும் 5
ஞாயிறே 7
ஞாயும் 1
ஞாயையும் 1
ஞால் 1
ஞால்வ 1
ஞால 5
ஞால_நாயகன் 1
ஞாலத்தவர் 2
ஞாலத்தால் 1
ஞாலத்தாள் 1
ஞாலத்து 23
ஞாலத்து_அகத்தும் 1
ஞாலத்தும் 1
ஞாலத்துள் 3
ஞாலத்தை 5
ஞாலத்தொடு 1
ஞாலம் 63
ஞாலம்-தனில் 1
ஞாலம்_தன்னில் 1
ஞாலமும் 8
ஞாலமே 1
ஞாழல் 34
ஞாழலும் 4
ஞாழலொடு 7
ஞாளி 2
ஞாளிகள் 1
ஞாளியும் 1
ஞாளியோடு 1
ஞாறிய 1
ஞான் 1
ஞான்ற 2
ஞான்றினும் 3
ஞான்றினோடு 1
ஞான்று 11
ஞான்றும் 3
ஞான்றே 11
ஞான்றை 19
ஞான 15
ஞானத்தர் 1
ஞானத்தாலும் 1
ஞானத்தின் 2
ஞானத்து 3
ஞானம் 11
ஞானமும் 8
ஞானமே 1
ஞானி 1
ஞானிகள் 1
ஞானியர் 1
ஞானீயும் 1

ஞாங்கர் (17)

இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர்
குடி நிறை வல்சி செம் சால் உழவர் – பெரும் 196,197
யாங்கு வல்லுந மற்றே ஞாங்கர்
வினை பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்ப – நற் 171/7,8
ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினை – நற் 288/2
குலவு குரல் ஏனல் மாந்தி ஞாங்கர்
விடர் அளை பள்ளி வேங்கை அஞ்சாது – நற் 386/3,4
யாங்கு மறந்து அமைகோ யானே ஞாங்கர்
கடும் சுரை நல் ஆன் நடுங்கு தலை குழவி – குறு 132/3,4
காவல் மறந்த கானவன் ஞாங்கர்
கடி உடை மரம்-தொறும் படு வலை மாட்டும் – குறு 342/2,3
தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர்
வருடை மட மறி ஊர்வு இடை துஞ்சும் – கலி 50/3,4
ஞாங்கர் மலர் சூழ்தந்து ஊர் புகுந்த வரி வண்டு – கலி 66/2
கண் திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்
தேன் இமிர் அகன் கரை பகுக்கும் – அகம் 280/12,13
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர் போக்கி – அகம் 391/5
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் – புறம் 70/12
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை – புறம் 245/6
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
வேந்து விடு தொழிலொடு சென்றனன் வந்து நின் – புறம் 319/12,13
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
மன்ற பலவின் மால் வரை பொருந்தி என் – புறம் 374/4,5
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி – புறம் 376/22
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி – புறம் 383/2,3
ஞாங்கர் உற்பலம் உழத்தியர் பித்திகை நாற – கம்.கிட்:10 47/4

மேல்


ஞாட்பில் (2)

நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய – குறு 73/3
படு புலா கமழும் ஞாட்பில் துடி இகுத்து – அகம் 89/14

மேல்


ஞாட்பின் (9)

உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்
இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும் – நற் 113/9,10
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து – அகம் 57/16,17
ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின்
பலர் அறிவுறுதல் அஞ்சி பைப்பய – அகம் 142/14,15
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொரு_களத்து ஒழிய – அகம் 246/10,11
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்
ஒளிறு வேல் தானை கடும் தேர் திதியன் – அகம் 322/7,8
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின்
கள் உடை கலத்தர் உள்ளூர் கூறிய – புறம் 178/7,8
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர – புறம் 288/5
எடுத்து எறி ஞாட்பின் இமையான் தச்சன் – புறம் 290/4
தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின்
வரு படை போழ்ந்து வாய் பட விலங்கி – புறம் 295/3,4

மேல்


ஞாட்பினும் (1)

பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது – நற் 14/5

மேல்


ஞாட்புறு (1)

பந்த ஞாட்புறு பாசறை பொருள்-வயின் பருவம் – கம்.அயோ:9 46/1

மேல்


ஞாண் (11)

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலரா காழகம் புலர உடீஇ – திரு 183,184
திரு மணி விளக்கம் காட்டி திண் ஞாண்
எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் – முல் 63,64
வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை – நற் 74/1
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தட கை – பதி 90/33
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே – கலி 7/6
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்
நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு – அகம் 0/3,4
வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ – அகம் 61/7
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் – அகம் 186/2
நுண் ஞாண் அம் வலை சேவல் பட்டு என – அகம் 290/4
சாப நோன் ஞாண் வடு கொள வழங்கவும் – புறம் 14/9
ஓங்கு மலை பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ – புறம் 55/1

மேல்


ஞாயர் (3)

பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற – கலி 81/12
ஞாயர் பால் உண்டி சில – கலி 85/28
தண்டுவென் ஞாயர் மாட்டை பால் – கலி 85/36

மேல்


ஞாயில் (9)

நெடு மதில் நிரை ஞாயில்
அம்பு உமிழ் அயில் அருப்பம் – மது 66,67
நெடு மதில் நிலை ஞாயில்
அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து உண்ட – பதி 20/18,19
குண்டு கண் அகழிய குறும் தாள் ஞாயில்
ஆர் எயில் தோட்டி வௌவினை ஏறொடு – பதி 71/12,13
நெடு மதில் நிரை ஞாயில்
கடி மிளை குண்டு கிடங்கின் – பதி 92/11,12
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே – அகம் 124/16
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல – அகம் 373/17,18
மீன் பூத்து அன்ன உருவ ஞாயில்
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை – புறம் 21/4,5
தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்
சிதைந்த இஞ்சி கதுவாய் மூதூர் – புறம் 350/1,2
மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும் – புறம் 355/1

மேல்


ஞாயில்-தொறும் (1)

ஞாயில்-தொறும் புதை நிறீஇ – பட் 288

மேல்


ஞாயிற்றது (1)

புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே – ஐங் 71/5

மேல்


ஞாயிற்று (37)

காலை ஞாயிற்று கதிர் கடா-உறுப்ப – சிறு 10
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவா திரிதரும் – மது 385
வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்று
செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின் – மது 431,432
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று
இலங்கு கதிர் இள வெயில் தோன்றி அன்ன – மது 702,703
இளம் கதிர் ஞாயிற்று களங்கள்-தொறும் பெறுகுவிர் – மலை 464
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று
வைகுறு வனப்பின் தோன்றும் – நற் 163/10,11
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் – நற் 219/8
கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார் – நற் 258/3,4
பாசறை மீமிசை கணம்_கொள்பு ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன் – நற் 396/6,7
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று
உருபு கிளர் வண்ணம் கொண்ட – பதி 52/29,30
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள – பரி 4/25
ஞாயிற்று ஏர் நிற தகை நளினத்து பிறவியை – பரி 5/12
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
அணி வனப்பு அமைந்த பூ துகில் புனை முடி – பரி 13/1,2
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் – கலி 42/31
ஞாயிற்று புத்தேள்_மகன் – கலி 108/13
ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும் – கலி 121/17
வளியே எதிர்போம் பல கதிர் ஞாயிற்று
ஒளி உள்-வழி எல்லாம் சென்று முனிபு எம்மை – கலி 144/40,41
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் – கலி 145/65
பகல் இடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை – அகம் 101/13,14
காயா ஞாயிற்று ஆக தலைப்பெய – அகம் 156/10
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு – அகம் 181/7,8
செல் கதிர் மழுகிய உருவ ஞாயிற்று
செக்கர் வானம் சென்ற பொழுதில் – அகம் 184/15,16
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி – அகம் 208/10,11
செம் ஞாயிற்று கவினை மாதோ – புறம் 4/16
செல் சுடர் ஞாயிற்று செக்கரின் தோன்ற – புறம் 16/8
செம் ஞாயிற்று தெறல் அல்லது – புறம் 20/8
செம் ஞாயிற்று வெயில் முனையின் – புறம் 24/2
செம் ஞாயிற்று செலவும் – புறம் 30/1
அ ஞாயிற்று பரிப்பும் – புறம் 30/2
செம் ஞாயிற்று நிலவு வேண்டினும் – புறம் 38/7
ஞாயிற்று அன்ன வெம் திறல் ஆண்மையும் – புறம் 55/15
நாள் போல் கழியல ஞாயிற்று பகலே – புறம் 65/12
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது – புறம் 82/2,3
உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த – புறம் 160/1
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த – புறம் 362/1
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி – புறம் 366/10
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று
பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி – புறம் 376/1,2

மேல்


ஞாயிற்றை (1)

நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யானும் – கலி 146/29

மேல்


ஞாயிறு (58)

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு – திரு 2
இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து – சிறு 243
சென்ற ஞாயிறு நன் பகல் கொண்டு – மது 546
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் – மது 768
ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும் – மலை 85
ஞாயிறு தெறாஅ மாக நனம் தலை – மலை 272
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே – நற் 218/1
ஞான்ற ஞாயிறு குட மலை மறைய – நற் 239/1
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய – நற் 241/7,8
கடும் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே – நற் 338/1
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் – குறு 58/3
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து – குறு 92/1
ஞாயிறு அனையன் தோழி – குறு 315/3
ஞாயிறு காணாத மாண் நிழல் படீஇய – குறு 378/1
கடும் கதிர் ஞாயிறு கல் பக தெறுதலின் – ஐங் 322/2
நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல் – பதி 14/3
ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின் – பதி 17/10
ஞாயிறு கோடா நன் பகல் அமயத்து – பதி 22/34
ஞாயிறு குண முதல் தோன்றி ஆங்கு – பதி 59/6
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு – பதி 62/6
ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார் – பதி 64/13
ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து – பதி 72/12
ஞாயிறு போல விளங்குதி பல் நாள் – பதி 88/38
ஞாயிறு காயா நளி மாரி பின் குளத்து – பரி 11/76
வெண் சுடர் வேல் வேள் விரை மயில் வேல் ஞாயிறு நின் – பரி 18/26
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின் – கலி 8/2,3
செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின் – கலி 20/2
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர – கலி 118/4
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின் – கலி 134/4
இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி – கலி 145/35
தொல் இயல் ஞாலத்து தொழில் ஆற்றி ஞாயிறு
வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல் – கலி 148/1,2
ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது – அகம் 9/15
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின் – அகம் 89/1
விளங்கு பகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின் – அகம் 91/1,2
உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் – அகம் 114/4,5
கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு
மதர் எழில் மழை கண் கலுழ இவளே – அகம் 120/5,6
கதிர் கை ஆக வாங்கி ஞாயிறு
பைது அற தெறுதலின் பயம் கரந்து மாறி – அகம் 164/1,2
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
வயம் தொழில் தரீஇயர் வலன் ஏர் விளங்கி – அகம் 298/1,2
சுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு
குட கடல் சேரும் படர் கூர் மாலையும் – அகம் 378/14,15
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் – புறம் 2/9
ஒண் கதிர் ஞாயிறு போலவும் – புறம் 6/28
உரவு சினம் திருகிய உரு கெழு ஞாயிறு
நிலவு திகழ் மதியமொடு நிலம் சேர்ந்து ஆஅங்கு – புறம் 25/3,4
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ – புறம் 35/17
ஞாயிறு அனையை நின் பகைவர்க்கு – புறம் 59/6
இருளும் உண்டோ ஞாயிறு சினவின் – புறம் 90/5
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது – புறம் 174/2
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்ன – புறம் 228/8
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே – புறம் 231/6
வண்மையும் உடையையோ ஞாயிறு
கொன் விளங்குதியால் விசும்பினானே – புறம் 374/17,18
அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கி செய்ய – கம்.அயோ:8 23/3
கண் தாமரை போல் கரு ஞாயிறு என – கம்.ஆரண்:2 24/2
முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள் – கம்.ஆரண்:14 44/4
தொல்லை கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன – கம்.கிட்:7 37/4
குழவி ஞாயிறு குன்று இவர்ந்தனையன குரு மணி நெடு மோலி – கம்.சுந்:2 205/1
உதயம் அது ஒழிய தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஒத்தான் – கம்.யுத்1:10 3/4
கட்டு ஆர் சிலை கரு ஞாயிறு புரைவான் கடையுகநாள் – கம்.யுத்3:31 108/2
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி – கம்.யுத்4:32 50/2
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற – கம்.யுத்4:37 195/3

மேல்


ஞாயிறும் (5)

பகல் செய்யும் செம் ஞாயிறும்
இரவு செய்யும் வெண் திங்களும் – மது 7,8
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே – நற் 398/2
ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் – பரி 3/5
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் – பரி 3/22
எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த – கம்.யுத்2:15 247/2

மேல்


ஞாயிறே (7)

கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி ஆயின் – கலி 142/37
பழி தபு ஞாயிறே பாடு அறியாதார் கண் – கலி 143/22
கொள்வது போலும் கடும் பகல் ஞாயிறே
எல்லா கதிரும் பரப்பி பகலொடு – கலி 145/26,27
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன் – கலி 147/27
நீர் உள்ளும் தோன்றுதி ஞாயிறே அ வழி – கலி 147/31
செல் கதிர் ஞாயிறே நீ – கலி 147/35
நனவினான் ஞாயிறே காட்டாய் நீ ஆயின் – கலி 147/58

மேல்


ஞாயும் (1)

யாயும் ஞாயும் யார் ஆகியரோ – குறு 40/1

மேல்


ஞாயையும் (1)

ஞாயையும் அஞ்சுதி ஆயின் அரிது அரோ – கலி 107/25

மேல்


ஞால் (1)

ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை – கலி 96/11

மேல்


ஞால்வ (1)

இடுக்கியன ஒத்தன எயிற்றின் இடை ஞால்வ – கம்.சுந்:6 13/4

மேல்


ஞால (5)

சுடு நீர் வினை குழையின் ஞால சிவந்த – பரி 12/87
ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய – கம்.அயோ:2 27/3
இடியின் தொடர கடல் ஏழும் மடுத்து இ ஞால
முடிவில் குமுறும் மழை மும்மையின் மேல் முழங்க – கம்.அயோ:4 115/3,4
ஞால_நாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான் – கம்.சுந்:14 7/4
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக – கம்.யுத்3:31 93/3

மேல்


ஞால_நாயகன் (1)

ஞால_நாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான் – கம்.சுந்:14 7/4

மேல்


ஞாலத்தவர் (2)

ஞாலத்தவர் கோ_மகன் அ நகரத்து நாப்பண் – கம்.அயோ:4 119/2
கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார் – கம்.சுந்:4 84/1

மேல்


ஞாலத்தால் (1)

நல் நுதல் சீதையால் என் ஞாலத்தால் பயன் என் நம்பீ – கம்.யுத்1:12 38/2

மேல்


ஞாலத்தாள் (1)

மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி – கம்.யுத்3:31 226/2

மேல்


ஞாலத்து (23)

மலை நாறிய வியன் ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப – மது 4,5
இரும் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவி – நற் 157/1
இரும் கண் ஞாலத்து ஈண்டு பய பெரு வளம் – குறு 267/1
ஆறே அ அனைத்து அன்றியும் ஞாலத்து
கூலம் பகர்நர் குடி புறந்தராஅ – பதி 13/22,23
மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது – பதி 15/35
மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு – பதி 31/2
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து – பரி 3/27
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள – பரி 4/28
பெரும் கலி ஞாலத்து தொன்று இயல் புகழது – பரி 15/36
வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய – கலி 33/1
மாண்ட நின் ஒழுக்கத்தான் மறு இன்றி வியன் ஞாலத்து
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய் – கலி 100/5,6
தெளிய விசும்பினும் ஞாலத்து_அகத்தும் – கலி 144/39
தொல் இயல் ஞாலத்து தொழில் ஆற்றி ஞாயிறு – கலி 148/1
வியன் ஞாலத்து அகலமும் – புறம் 20/2
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பை கொள் பருவரல் தீர கடும் திறல் – புறம் 174/3,4
கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும் – புறம் 185/1
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – கம்.பால:3 6/4
அம் கண் ஞாலத்து அரசு மிடைந்து அவர் – கம்.பால:14 27/1
தானும் தன தம்முனும் அல்லது மும்மை ஞாலத்து
ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க – கம்.அயோ:4 116/3,4
ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல் – கம்.ஆரண்:14 24/2
நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர் – கம்.சுந்:12 92/1
மா இரு ஞாலத்து வைத்த மா படை – கம்.யுத்1:5 31/2
மறுமை கண்ட மெய்ம் ஞானியர் ஞாலத்து வரினும் – கம்.யுத்1:6 11/1

மேல்


ஞாலத்து_அகத்தும் (1)

தெளிய விசும்பினும் ஞாலத்து_அகத்தும்
வளியே எதிர்போம் பல கதிர் ஞாயிற்று – கலி 144/39,40

மேல்


ஞாலத்தும் (1)

இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி – கம்.கிட்:12 5/3

மேல்


ஞாலத்துள் (3)

ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின் – கலி 143/44
வீழ்வார் கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள்
வாழ்வார்கட்கு எல்லாம் வரும் – கலி 145/16,17
நல்லை நல்லை இ ஞாலத்துள் நின் ஒக்க நல்லார் – கம்.சுந்:11 37/1

மேல்


ஞாலத்தை (5)

மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர் – கம்.ஆரண்:7 37/2
அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர் – கம்.ஆரண்:13 109/3
மா இரு ஞாலத்தை சுமப்ப வாங்குவது – கம்.யுத்2:16 99/3
இம்பர் ஞாலத்தை நெளிப்பது மாருதி எடுத்தான் – கம்.யுத்3:22 111/4
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர் – கம்.யுத்3:31 172/2

மேல்


ஞாலத்தொடு (1)

ஞாலத்தொடு விண் முதல் யாவையும் நாவின் நக்கும் – கம்.ஆரண்:10 141/3

மேல்


ஞாலம் (63)

மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 91
ஏமுறு ஞாலம்_தன்னில் தோன்றி – திரு 163
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர் – நற் 153/2
வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசி – ஐங் 452/1
மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட – பதி 18/9
ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று – பதி 24/9
ஆண்டோர் மன்ற இ மண் கெழு ஞாலம்
நிலம் பயம் பொழிய சுடர் சினம் தணிய – பதி 69/12,13
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம்
அணி போல் பொறுத்தாரும் தாஅம் பணிபு இல் சீர் – பரி 23/80,81
பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம்
புல்லிய புனிறு ஒரீஇ புது நலம் ஏர்தர – கலி 29/3,4
மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று – கலி 34/1
ஞாலம் வறம் தீர பெய்ய குணக்கு ஏர்பு – கலி 82/1
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ – கலி 106/27
அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக – கலி 119/1
ஞாலம் மூன்று அடி தாய முதல்வற்கு முது முறை – கலி 124/1
எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண் – கலி 146/38
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப – அகம் 4/5
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை – அகம் 181/15
பரந்துபட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து தம் புகழ் நிறீஇ – புறம் 18/2,3
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி – புறம் 18/14
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை – புறம் 23/15
காவலர் பழிக்கும் இ கண் அகன் ஞாலம்
அது நற்கு அறிந்தனை ஆயின் நீயும் – புறம் 35/29,30
ஞாலம் காக்கும் கால முன்பின் – புறம் 56/9
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து என – புறம் 179/1
ஞாலம் காவலர் கடை தலை – புறம் 225/13
அகன் ஞாலம் பெரிது வெம்பினும் – புறம் 395/33
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால் – கம்.பால:3 21/3
மா இரு ஞாலம் உண்டோன் கலுழன் மேல் சரணம் வைத்தான் – கம்.பால:5 22/4
ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் – கம்.பால:8 8/2
இமிழ் திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – கம்.பால:22 3/4
என்னை நிகழ்ந்தது இ ஏழு ஞாலம் வாழ்வார் – கம்.அயோ:3 9/2
நாரியர் இல்லை இ ஞாலம் எங்கும் என்ன – கம்.அயோ:3 26/1
நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம்
பாவம் பாராது இன் உயிர் கொள்ள படுகின்றாய் – கம்.அயோ:3 42/3,4
இமிழ் திரை பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர – கம்.அயோ:3 71/1
கேகயன் மடந்தை கிளர் ஞாலம் இவன் ஆள – கம்.அயோ:3 101/2
இவன் இ ஞாலம் இறந்து இரும் கானிடை – கம்.அயோ:4 27/2
கேட்டான் இளையோன் கிளர் ஞாலம் வரத்தினாலே – கம்.அயோ:4 111/1
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா – கம்.அயோ:9 26/2
துறந்தான் தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும் – கம்.அயோ:11 76/3
சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம்
மூன்றும் காண மா தவம் யானே முயல்கின்றேன் – கம்.அயோ:11 84/3,4
ஏந்து ஞாலம் இனிது அளியாது இவண் – கம்.ஆரண்:4 31/2
வேலை ஞாலம் வெருவுறும் ஆர்ப்பினார் – கம்.ஆரண்:7 11/3
நள்ளா இருள் வந்து அகன் ஞாலம் விழுங்கலோடும் – கம்.ஆரண்:10 140/2
ஞாலம் படுப்பான் தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில் – கம்.ஆரண்:13 31/1
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறும் சோலை ஞாலம்
எண்ணிய இன்பம் அன்றி துன்பங்கள் இல்லை ஆன – கம்.ஆரண்:16 1/2,3
ஞாலம் நல் அறத்தோர் உன்னும் நல் பொருள் – கம்.கிட்:13 18/1
மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா-வகையின் அ – கம்.கிட்:14 5/1
உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒரு மகட்கு இரங்கி ஞாலம்
அழுகின்ற கலுழி மாரி ஆம் என பொலிந்தது அன்றே – கம்.கிட்:15 28/3,4
பாய் திரை பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின் – கம்.கிட்:16 53/3
ஞாலம் அறியும் நளன் சங்கன் விந்தன் துவிந்தன் மதன் என்பான் – கம்.சுந்:4 116/4
இருளும் ஞாலம் இராவணனால் இது – கம்.சுந்:5 28/1
ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறா – கம்.சுந்:5 63/3
மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ – கம்.சுந்:12 83/4
விழுங்கி நீங்கியது ஒத்தது வேலை சூழ் ஞாலம் – கம்.யுத்1:6 1/4
கேள் இல் ஞாலம் கிளத்திய தொல் முறை – கம்.யுத்2:15 40/1
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன் – கம்.யுத்2:16 24/3
ஞாலம் உண்டவ நல்கினான் – கம்.யுத்2:16 117/4
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் – கம்.யுத்2:19 245/3
ஞாலம் உடையான் அது நாம் அற ஓர் – கம்.யுத்3:20 77/3
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இயற்கை தாங்கும் – கம்.யுத்3:27 71/1
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் – கம்.யுத்3:31 76/3
குருதி செம் கண் தீ உக ஞாலம் குலைவு எய்த – கம்.யுத்4:37 137/4
கடித்தே தீரும் கண் அகன் ஞாலம் கடலோடும் – கம்.யுத்4:37 140/1
வென்றியாய் பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம் ஆண்டு ஓர் – கம்.யுத்4:37 214/1

மேல்


ஞாலம்-தனில் (1)

நள்ளாது இந்த நானிலம் ஞாலம்-தனில் என்றும் – கம்.அயோ:3 30/2

மேல்


ஞாலம்_தன்னில் (1)

ஏமுறு ஞாலம்_தன்னில் தோன்றி – திரு 163

மேல்


ஞாலமும் (8)

மூவர் ஆய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய – கம்.அயோ:3 66/1
மொய் பெரும் சேனையும் மூரி ஞாலமும்
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட – கம்.அயோ:12 56/1,2
ஞாலமும் நால் திசை புனலும் நாகரும் – கம்.கிட்:7 21/1
அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ் – கம்.சுந்:3 122/1
ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும் – கம்.யுத்2:16 311/3
ஞாலமும் விசும்பும் காத்த நானில கிழவன் மைந்தன் – கம்.யுத்3:22 19/3
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அற – கம்.யுத்4:37 145/3
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறா – கம்.யுத்4:40 43/3

மேல்


ஞாலமே (1)

வெள்_அணி ஒத்தது வேலை ஞாலமே – கம்.பால:19 4/4

மேல்


ஞாழல் (34)

ஞாழல் மௌவல் நறும் தண் கொகுடி – குறி 81
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே – நற் 31/5
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணி புறம் தைவரும் – நற் 54/9,10
சிறு வீ ஞாழல் பெரும் கடல் சேர்ப்பனை – நற் 74/5
இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய் – நற் 96/1
ஞாழல் அம் சினை தாழ் இணர் கொழுதி – நற் 106/7
சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் – நற் 191/1
உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் – நற் 267/4,5
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே – நற் 311/7
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய் – குறு 50/1,2
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை – குறு 81/3
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணம் துறைவற்கு உரைக்குநர் பெறினே – குறு 310/6,7
சிறு வீ ஞாழல் வேர் அளை பள்ளி – குறு 328/1
நனை முதிர் ஞாழல் தினை மருள் திரள் வீ – குறு 397/1
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன் – ஐங் 103/2
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ – ஐங் 141/1
எக்கர் ஞாழல் இறங்கு இணர் படு சினை – ஐங் 142/1
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை – ஐங் 143/1
எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர் – ஐங் 144/1
எக்கர் ஞாழல் சிறியிலை பெரும் சினை – ஐங் 145/1
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர் – ஐங் 146/1
எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர் – ஐங் 147/1
எக்கர் ஞாழல் இகந்து படு பெரும் சினை – ஐங் 148/1
எக்கர் ஞாழல் பூவின் அன்ன – ஐங் 149/1
எக்கர் ஞாழல் நறு மலர் பெரும் சினை – ஐங் 150/1
பொன் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ் – ஐங் 169/2
கானல் ஞாழல் கவின் பெறும் தழையள் – ஐங் 191/3
இணர் ததை ஞாழல் கரை கெழு பெரும் துறை – பதி 30/1
குவி இணர் ஞாழல் மா சினை சேக்கும் – பதி 51/5
கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு – கலி 56/2
கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப தோழி என் – கலி 131/19
ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடும் கழி – அகம் 20/5
செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை – அகம் 240/1
வாழலென் என்றி ஆயின் ஞாழல்
வண்டு பட ததைந்த கண்ணி நெய்தல் – அகம் 370/9,10

மேல்


ஞாழலும் (4)

தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி – பரி 12/6
ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்
ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு – கலி 26/4,5
தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும் – கலி 127/1
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்
கழனி உழவர் குற்ற குவளையும் – அகம் 216/8,9

மேல்


ஞாழலொடு (7)

நனை ஞாழலொடு மரம் குழீஇய – பொரு 197
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் – நற் 167/8
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் – நற் 315/7
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய் – குறு 318/2
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் – அகம் 70/9
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ – அகம் 180/12
இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும் – அகம் 270/3

மேல்


ஞாளி (2)

வலம் சுரி தோகை ஞாளி மகிழும் – அகம் 122/8
ஞாளி போன்று உள என்பது என் நள் இருள் அடைந்த – கம்.யுத்4:32 17/2

மேல்


ஞாளிகள் (1)

ஞாளிகள் பூண்டன நரிகள் பூண்டன – கம்.ஆரண்:7 31/3

மேல்


ஞாளியும் (1)

கோர ஆளி சீயம் மீளி கூளியோடு ஞாளியும்
போர ஆளினோடு தேர்கள் நூறு கோடி பொன்றுமால் – கம்.யுத்3:31 93/1,2

மேல்


ஞாளியோடு (1)

ஞாளியோடு நின்று உளைக்கின்ற நரி குலம் பலவால் – கம்.ஆரண்:7 70/4

மேல்


ஞாறிய (1)

மணி புரை மா மலை ஞாறிய ஞாலம் – பரி 23/80

மேல்


ஞான் (1)

சுவல் பூண் ஞான் மிசை பொலிய – புறம் 166/12

மேல்


ஞான்ற (2)

ஞான்ற ஞாயிறு குட மலை மறைய – நற் 239/1
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று – புறம் 82/2

மேல்


ஞான்றினும் (3)

முன் தான் கண்ட ஞான்றினும்
பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே – அகம் 178/21,22
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் – புறம் 277/4
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே – புறம் 278/9

மேல்


ஞான்றினோடு (1)

அன்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும் – புறம் 376/17

மேல்


ஞான்று (11)

ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே – நற் 218/1
மை இருநூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று
ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண் – பரி 9/8,9
பைய முயங்கிய அ ஞான்று அவை எல்லாம் – கலி 19/2
ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை – கலி 37/14
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல் – கலி 103/44
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்-கொல் – கலி 103/54
அளை மாறி பெயர்தருவாய் அறிதியோ அ ஞான்று
தளவ மலர் ததைந்தது ஓர் கான சிற்றாற்று அயல் – கலி 108/26,27
நீர் அலர் நீலம் என அவர்க்கு அ ஞான்று
பேர் அஞர் செய்த என் கண் – கலி 143/50,51
புது_திங்கள் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன நின் – கலி 150/17
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என – அகம் 39/13
இன்ன மருந்து ஒரு நான்கும் பயோததியை கலக்கிய ஞான்று எழுந்த தேவர் – கம்.யுத்3:24 28/1

மேல்


ஞான்றும் (3)

புணரிய இருந்த ஞான்றும்
இன்னது-மன்னோ நன் நுதல் கவினே – குறு 109/3,4
எல்லை ஏற்ற நெடும் செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃது இன்றி – கம்.சுந்:4 58/2
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள் – கம்.சுந்:4 72/4

மேல்


ஞான்றே (11)

வதுவை என்று அவர் வந்த ஞான்றே – நற் 386/10
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே – குறு 25/5
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே – குறு 41/6
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே – குறு 303/7
பெரும் பெயர் முருக நின் பயந்த ஞான்றே
அரிது அமர் சிறப்பின் அமரர்_செல்வன் – பரி 5/50,51
பிறந்த ஞான்றே நின்னை உட்கி – பரி 14/25
நெடும் சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே – அகம் 3/18
தமர் விரைந்து உரைப்ப கேட்கும் ஞான்றே – அகம் 144/19
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே – அகம் 150/14
தாழிய பெரும் காடு எய்திய ஞான்றே – புறம் 364/13
புல்லலர் உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற – கம்.யுத்1:4 120/2,3

மேல்


ஞான்றை (19)

காமம் பெருமையின் வந்த ஞான்றை
அருகாது ஆகி அவன்-கண் நெஞ்சம் – நற் 287/7,8
நல்_தோள் மணந்த ஞான்றை மற்று அவன் – குறு 36/4
புணர் குறி வாய்த்த ஞான்றை கொண்கன் – குறு 299/4
வேந்தரொடு பொருத ஞான்றை பாணர் – குறு 328/6
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 393/5,6
கொன்று களம் வேட்ட ஞான்றை
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 36/22,23
புன்னை குறைத்த ஞான்றை வயிரியர் – அகம் 45/11
ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றை
களிறு கவர் கம்பலை போல – அகம் 96/16,17
ஓடு புறம் கண்ட ஞான்றை
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 116/18,19
பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல் – அகம் 233/9
மொய் வலி அறுத்த ஞான்றை
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 246/13,14
தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர் – அகம் 251/10
நீறு தலைப்பெய்த ஞான்றை
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 256/20,21
தோள் புதிது உண்ட ஞான்றை
சூளும் பொய்யோ கடல் அறி கரியே – அகம் 320/13,14
நும் மனை சேர்ந்த ஞான்றை அ மனை – அகம் 346/17
மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை
பூ மலி இரும் கழி துயல்வரும் அடையொடு – அகம் 400/19,20
குட கடல் ஓட்டிய ஞான்றை
தலைப்பெயர்த்து இட்ட வேலினும் பலவே – புறம் 130/6,7
வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் – புறம் 378/19,20
சென்ற ஞான்றை சென்று படர் இரவின் – புறம் 390/10

மேல்


ஞான (15)

ஞான முனிக்கு ஒரு நாண் இலை என்பார் – கம்.பால:13 31/1
ஞான நீரவர் ஆகுதல் நன்று-அரோ – கம்.பால:18 20/2
நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி – கம்.ஆரண்:2 30/3
ஞான நாயகன் நவை உற நோக்கினர் நல்க – கம்.கிட்:10 43/2
ஞான நாயகன் இருந்தனன் அந்தணன் நடுங்கி – கம்.யுத்1:3 23/4
தீபமே அனைய ஞான திரு மறை முனிவர் செப்பும் – கம்.யுத்1:7 18/3
ஞான நாயகன் சேனை நடத்தலால் – கம்.யுத்1:8 68/2
உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞான
தம்பியே சாற்றி போனான் என்பதும் சமைய சொன்னார் – கம்.யுத்1:9 80/3,4
ஞான நாயகன் உருவமே ஆதலின் நடுங்கி – கம்.யுத்3:22 199/4
அறத்தினை பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞான
திறத்தினும் உறும் என்று எண்ணி தேவர்க்கும் தேவை சேர்ந்தேன் – கம்.யுத்3:27 176/1,2
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக – கம்.யுத்3:31 93/3
துரத்தியால் என ஞான மா கடும் கணை துரந்தான் – கம்.யுத்4:37 123/3
துறத்தல் ஆற்று உறு ஞான மா கடும் கணை தொடர – கம்.யுத்4:37 124/1
நினையும் ஞான கண் உடையார்-மேல் நினையாதார் – கம்.யுத்4:37 129/3
ஞான நாதனை திருவொடு நன் மனை கொணர்ந்தான் – கம்.யுத்4:41 39/3

மேல்


ஞானத்தர் (1)

நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர்
உணர்வு என ஒளி திகழ் உத்தரீயம்தான் – கம்.பால:23 59/1,2

மேல்


ஞானத்தாலும் (1)

நாள் படா மறைகளாலும் நவை படா ஞானத்தாலும்
கோட்படா பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான் – கம்.கிட்:2 33/3,4

மேல்


ஞானத்தின் (2)

கண்ணின் சிந்தையின் கல்வியின் ஞானத்தின் கருதி – கம்.கிட்:12 34/3
தொழும் கர துணையினன் சுருதி ஞானத்தின்
கொழுந்தினை பூசலிட்டு அரற்றும் கொள்கையான் – கம்.யுத்4:40 73/3,4

மேல்


ஞானத்து (3)

ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும் – கம்.பால:17 36/3
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கம்.கிட்:13 27/3,4
நித்தம் நியம தொழிலர் ஆய் நிறையும் ஞானத்து
உத்தமர் உறங்கினர்கள் யோகியர் துயின்றார் – கம்.சுந்:2 163/1,2

மேல்


ஞானம் (11)

இறையும் ஞானம் இலாத என் புன் கவி – கம்.பால:0 9/3
ஞானம் முன்னிய நான்மறையாளர் கை – கம்.பால:1 5/3
பட்டவர் அல்லரேல் பரம ஞானம் போய் – கம்.அயோ:1 19/2
விள்ள ஞானம் வீசு தாள் – கம்.ஆரண்:1 62/2
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – கம்.ஆரண்:2 26/3
நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு – கம்.ஆரண்:3 43/2
கற்றவர் ஞானம் இன்றேல் காமத்தை கடக்கல் ஆமோ – கம்.ஆரண்:10 84/4
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என – கம்.சுந்:6 23/2
இற்றை நாள் அளவும் யாரும் இருடிகள் இமையோர் ஞானம்
முற்றினார் அன்பு பூண்டார் வேள்விகள் முடித்து நின்றார் – கம்.யுத்1:4 151/1,2
தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான் – கம்.யுத்2:15 213/1
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால் – கம்.யுத்2:19 255/2

மேல்


ஞானமும் (8)

பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன – கம்.பால:3 6/2
ஞானமும் நல்லவர் பேணும் நன்மையும் – கம்.அயோ:1 80/2
பரவு கேள்வியும் பழுது_இல் ஞானமும்
விரவு சீலமும் வினையின் மேன்மையும் – கம்.அயோ:14 104/1,2
ஞானமும் துயரும் தம்முள் மலைந்து என நலிந்த அன்றே – கம்.ஆரண்:14 2/4
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார் – கம்.கிட்:3 22/4
எல்லை இலா ஞானமும் ஈறு இலா எ பொருளும் – கம்.யுத்1:3 173/2
தருமமும் ஞானமும் தவமும் வேலியாய் – கம்.யுத்1:4 47/1
கருமமும் கடைக்கண் உறு ஞானமும்
அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும் – கம்.யுத்4:37 24/1,2

மேல்


ஞானமே (1)

சான்றலோ எம் தவ பெரு ஞானமே – கம்.ஆரண்:3 24/4

மேல்


ஞானி (1)

நாயகன் தனி ஞானி நல் அறத்துக்கு நாதன் – கம்.யுத்1:3 19/3

மேல்


ஞானிகள் (1)

நட்பினின் இடையறாவாய் ஞானிகள் உணர்வின் ஒன்றாய் – கம்.பால:10 12/3

மேல்


ஞானியர் (1)

மறுமை கண்ட மெய்ம் ஞானியர் ஞாலத்து வரினும் – கம்.யுத்1:6 11/1

மேல்


ஞானீயும் (1)

ஞானீயும் உய்கலான் என்னாதே நாயகனை – கம்.அயோ:4 99/1

மேல்