அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களில் காணப்படும் அரிய சொற்களை, அவற்றுக்கான தமிழ், ஆங்கிலப் பொருள்களுடன், அச்சொற்கள் அப் பாடல்களில் பயின்று வருகின்ற இடங்களில் சிலவற்றையும் கொடுத்து, தேவையான இடங்களில் படங்களையும் கொடுத்து, விளக்க முற்படும் பகுதி இது.

இப்போது ‘அ’ முதல் ‘ஔ’ முடிய உள்ள உயிர் எழுத்துக்களுக்குரிய 756 சொற்களும்
‘க’ முதல் ‘கௌ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 469 சொற்களும்
‘ச’ முதல் ‘சோ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 263 சொற்களும்,
‘ஞ’,’ஞா’,’ஞி’,’ஞெ’,’ஞொ’- வுக்குரிய 40 சொற்களும்
‘த’ முதல் ‘தௌ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 446 சொற்களும்,
‘ந’ முதல் ‘நௌ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 319 சொற்களும்,
‘ப’ முதல் ‘பௌ’முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 797 சொற்களும்
‘ம’ முதல் ‘மௌ’முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 631 சொற்களும்
’ய’,’யா’,’யூ’ – வுக்குரிய 35 சொற்களும்
’வ’,’வா’,’வி’,’வீ’,’வெ’,’வே’,’வை’’வௌ’-க்குரிய 610 சொற்களும்

ஆக மொத்தம் 4366 சொற்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

விளக்கப்படங்கள் 455 ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

அவற்றைக் காண மேலேயுள்ள அட்டவணையில் சிவப்பாக உள்ள ஏதேனும் ஒரு எழுத்தைச் சொடுக்கவும்.

`இப்பணி முடிய ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆயின. இரண்டு மாத காலம் இவை முழுக்க மீள் ஆய்வு செய்யப்பட்டு விட்டுப்போன சொற்கள் அல்லது தேவையான படங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
தொடர்புள்ள சொற்களுக்கு இணைப்புகள் தரப்பட்டன.