பெருநராற்றுப்படை

சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரை
அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்இடையறாத (செல்வ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து,
சாறு கழி வழி நாள் சோறு நசையுறாதுவிழாக்கழிந்த அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது,
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருநவேற்றுப்புலத்தை எய்த நினைத்த விவேகத்தை அறிந்த பொருநனே,
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்(மானின்)குளம்பு (பதிந்த)இடத்தைப் போன்று பகுக்கப்பட்ட (இரண்டு பக்கமும் தாழ்ந்து நடுவுயர்ந்த)பத்தலினையும்;
விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை     5விளக்குப் பிழம்பின் (நிறத்தை ஒத்த)நிறமுடையதும் விசித்துப் போர்க்கப்பட்டதும் ஆகிய தோல்,   5
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று(பிறரால் நன்கு)அறியப்படாத இளைய கருவினையுடைய சிவந்த நிறமுடையவளின் அழகிய வயிற்றின்மேல்
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போலமென்மையாகிய மயிர் ஒழுங்குபடக் கிடந்த தோற்றத்தைப்போல,
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வைஇரண்டு தலைப்பையும் கூட்டித் தைத்த (மரத்தைத் தன் அகத்தே)பொதிதலுறும் போர்வையினையும்;
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்னவளையில் வாழ்கின்ற நண்டின் கண்னைக் கண்டது போன்ற
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி       10(பத்தலிரண்டும் சேர்த்தற்குத் திறந்த)துளைகளின் வாய் மறைய முடுக்குதலமைந்த ஆணியினையும்;    10
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி(உவாவிற்கு)எட்டாம் நாள் (தோன்றும்)திங்களின் வடிவினையுடையது ஆகி,
அண்நா இல்லா அமைவரு வறு வாய்உள்நாக்கு இல்லாத (நன்றாக)அமைதல் பொருந்திய வறிய வாயினையும்;
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின்பாம்பு தலையெடுத்தாற் போன்ற ஓங்கிய கரிய தண்டினையும்;
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்கருநிறப்பெண்ணின் முன்கையில் (அணியப்பட்ட)அழகிய வளையலை ஒத்ததும்,
கண்கூடு இருக்கை திண் பிணி திவவின்       15(ஒன்றோடொன்று)நெருங்கின இருப்பையுடையதும், திண்ணிய பிணிப்புடையதும் ஆகிய வார்க்கட்டினையும்; 15
ஆய் தினை அரிசி அவையல் அன்னஆய்ந்தெடுத்த தினை அரிசியின் குற்றலைப் போன்ற
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்(யாழ் நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசி தொடையல்இசை முற்றுப்பெறுமாறு இழுத்துக்கட்டிய விசித்தலையுடைய, தொடர்ச்சியையும்,
மணம் கமழ் மாதரை மண்ணீ அன்ன(புது)மணக்கோலம் பொலிவு பெற்ற மாதரை ஒப்பனைசெய்து கண்டாற் போன்ற,
அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி 20(யாழ்க்குரிய)தெய்வம் நிலைத்துநின்ற (நன்கு)அமைந்துவரப்பெற்ற தோற்றத்தையுடைய,              20
ஆறலை கள்வர் படை விட அருளின்வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலைமாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை –
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்(நரம்புகளை)(சுட்டுவிரலால்)தெறித்தும், (பெருவிரலும் சேர்த்து)உருவியும், உந்திவிட்டும், ஒன்றுவிட்டுத் தெறித்தும்,
சீர் உடை நன் மொழி நீரொடு சிதறிசீர்களை உடைய பண்ணை நீர்மையுடன் பரப்பி –
அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல்  25(ஆற்றின்)அறல் போலும் கூந்தலினையும், பிறை போல் அழகிய நுதலினையும்,                        25
கொலை வில் புருவத்து கொழும் கடை மழை கண்கொலை செய்யும் வில் (போன்ற)புருவத்தினையும், அழகிய கடையையுடைய குளிர்ச்சியுள்ள கண்ணினையும்,
இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய்இலவின் இதழை ஒக்கும் இனிய சொல்லையுடைய சிவந்த வாயினையும்,
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல்பலவும் சேர்ந்த முத்துக்கள் போல் குற்றம் தீர்ந்த வெண்மையான பல்லினையும்,
மயிர் குறை கருவி மாண் கடை அன்னமயிரைக் குறைக்கின்ற கத்தரிகையின் சிறப்பாயமைந்த கடைப்பகுதியை ஒத்ததும்,
பூ குழை ஊசல் பொறை சால் காதின்   30பொலிவினையுடைய மகரக்குழையின் அசைவினைப் பொறுத்தல் அமைந்ததும் ஆகிய காதினையும்,     30
நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின்நாணம் (தன்னை)அழுத்த (பிறரை நோக்காது)கவிழ்ந்த அழகு மிகுந்த கழுத்தினையும்,
ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கைஅசைகின்ற மூங்கில் (போன்ற)பெருத்த தோளினையும், ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும்,
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல்நெடிய மலையின் உச்சியிடத்தனவாகிய காந்தள் (போலும்)மெல்லிய விரலினையும்,
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர்கிளியின் வாயோடு ஒப்பினையுடைய ஒளிவிடுகின்ற பெரிய நகங்களையும்,
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து     35(பிறர்க்கு)வருத்தம் எனத் தோற்றின தேமல் அணிந்த மார்பினில்                                        35
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலைஈர்க்கு(ம்) நடுவே போகாத எழுச்சியையும் இளமையையும் உடைய அழகிய முலையினையும்,
நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ்நீரிடத்துப் பெயர்தலையுடைய சுழி போலச் சிறந்த இலக்கணம் அமைந்த கொப்பூழினையும்,
உண்டு என உணரா உயவும் நடுவின்உண்டென்று பிறரால் உணரப்படாத வருந்துகின்ற இடையினையும்,
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல்(பல)வண்டினங்களின் இருப்பை ஒத்த பலமணி (கோத்த வடங்களையுடைய மேகலை அணிந்த)அல்குலையும்,
இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின்   40பெரிய பெண் யானையின் பெரிய கை போல நெருங்கி ஒன்றித் திரண்ட துடையினையும்,  40
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்பபொருந்தின மயிர் ஒழுங்குபட்ட திருத்தமான கணைக்காலுக்குப் பொருந்த அமைந்த
வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடிஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களையும்,(அப்பாதங்களில் ஏற்பட்ட)-
அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின்சாதிலிங்கத்தை உருக்கின தன்மையை ஒத்த சிவந்த நிலத்தே நடக்கையினால்
பரல் பகை உழந்த நோயொடு சிவணிபரல் கல்லாகைய பகையால் வருந்தின நோயுடன் பொருந்தி,
மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள்   45மரல் பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்களையும்,                             45
நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின்நல்ல உச்சிக்காலமான சந்தியிலே நடத்தலை நடுவே தவிர்த்தலால்
பெடை மயில் உருவின் பெரும் தகு பாடினிபெடை மயிலின் சாயலினையும் உடைய கல்விப்பெருமை தக்கிருக்கின்ற பாடினி
பாடின பாணிக்கு ஏற்ப நாள்தொறும்பாடின தாளத்திற்கு ஏற்ப, நாள்தோறும்
களிறு வழங்கு அதர கானத்து அல்கியானை உலாவரும் வழிகளை உடைய காட்டிடத்தே தங்கி,
இலை இல் மராத்த எவ்வம் தாங்கி    50இலையில்லாத மரத்தின் அடியில், (ஆறுசெல்) வருத்தம் தாங்கி,                                 50
வலை வலந்து அன்ன மெல் நிழல் மருங்கில்வலையைப் போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில்,
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றைகாட்டில் தங்குகின்ற தெய்வத்திற்குச் செய்யும் முறைமைகளைச் செய்துவிட்ட பின்பு –
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்பெருமை பொருந்தின செல்வத்தையும், பெரும் புகழையும், வலிய முயற்சியினையும்,
முரசு முழங்கு தானை மூவரும் கூடிமுரசு முழங்கும் படையினையும் உடைய மூவேந்தர்களும் சேர்ந்து
அரசவை இருந்த தோற்றம் போல                55(திருவோலக்க மண்டபத்தே)அரசு வீற்றிருக்கும் காட்சியைப் போல –                              55
பாடல் பற்றிய பயன் உடை எழாஅல்(பல்வேறுவகைப்)பாடல்களையும் பற்றி(த் தோன்றும்) இசைப்பயனையுடைய யாழை உடைய
கோடியர் தலைவ கொண்டது அறிநகூத்தர்கட்குத் தலைவனே, (பிறர் மனத்துக்)கொண்டதை(க் குறிப்பால்) அறிய வல்லோய்,
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது(வழி)அறியாமையினால் (இவ்)வழியைத் தப்பி (வேறொரு வழியில்) போகாமல்,
ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனேஇவ்வழிக்கண் (என்னை நீ)சந்தித்ததுவும் (நீ முற்பிறப்பில்)தவம்செய்ததன் பயனே,
போற்றி கேள்மதி புகழ் மேம்படுந           60விரும்பிக் கேட்பாயாக, புகழை மேம்படுத்த வல்லோய்,                                         60
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடுகொல்லுகின்ற பசியால் வருந்தின உன் கரிய பெரிய சுற்றத்தோடு,
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்றுநீடித்த நாட்களாய் இருக்கும் பசி (உன்னை)விட்டு நீங்குதலை விரும்பினால், கால நீட்டித்தல் இன்றி
எழுமதி வாழி ஏழின் கிழவஎழுவாயாக, நீ வாழ்வாயாக, (நரம்பு)ஏழின் கண்ணும் உரிமை உடையோய்,
பழு மரம் உள்ளிய பறவையின் யானும் அவன்பழுத்த மரத்தை நினைத்துச் செல்லும் பறவையைப் போல, யானும், அவனுடைய
இழுமென் சும்மை இடன் உடை வரைப்பின்       65இழுமென்றெழும் ஓசையினையுடைய (அகலமான)வெளியை உடைய மதிலில்,                 65
நசையுநர் தடையா நன் பெரு வாயில்விரும்பி வந்தாரைத் தடுக்காத நல்ல பெரிய (கோபுர)வாயிலினுள்
இசையேன் புக்கு என் இடும்பை தீர(வாயிலோனுக்குக்)கூறாமற் புகுந்து, என்னுடைய துன்பம் தீர,
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகிஇளைத்த உடம்பையுடையேன் இளைப்பில்லாதவனாய் ஆகி,
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்பபடம் விரித்த பாம்பினது பொறியை ஒப்ப,
கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி       70கை அழுக்கு இருந்த என் கண் அகன்ற உடுக்கையில் (தோற்றுவித்த)                               70
இரு சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர்இரட்டைத் தாளத்திற்கு ஏற்ப, விரிகின்ற (ஒளிக்)கதிர்களையுடைய
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே,
ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றியஒரு பாட்டினை யான் பேணிப் பாடி முடிக்கும் முன்னே – (தன்னோடு)பொருந்திய
கேளிர் போல கேள் கொளல் வேண்டிஉறவினரைப் போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி,
வேளாண் வாயில் வேட்ப கூறி                        75(தன்)உபசரிப்பிற்கு வழிமுறையாக (யான்)விரும்புமாறு (முகமன்)பொழிந்து,                      75
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ(தன்)கண்ணில் படும்படியாக (தனக்குப்) பக்கத்து இடத்தில் (என்னை)இருத்தி,
பருகு அன்ன அருகா நோக்கமோடு(என்னைக்)கண்ணால் விழுங்குவது போன்ற குறையாத பார்வையால்,
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇஉருக்கக்கூடிய(வெண்ணெய் முதலிய)வை போன்று (என்)எலும்பு(ம்) (நெகிழும்படி)குளிர் மூட்டி,
ஈரும் பேனும் இருந்து இறைகூடிஈரும் பேனும் இருந்து ஆட்சிசெய்து,
வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த       80வேர்வையால் நனைந்து, பிற (நூல்)இழைகள் உள்ளே ஒடுமாறு                              80
துன்னல் சிதாஅர் துவர நீக்கிதைத்தல் (உடைய)கந்தையை முழுதும் போக்கி,
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூ கனிந்துபார்வை நுழைய முடியாத நுண்மையை உடையதும், பூத்தொழில் நன்கமைந்ததும்,
அரவு உரி அன்ன அறுவை நல்கி(மென்மையால்)பாம்பின் தோலை ஒத்ததும் ஆன துகிலை நல்கி,
மழை என மருளும் மகிழ் செய் மாடத்துமுகில்களோ என்று மருளுதற்குக் காரணமான மகிழ்ச்சியை விளைவிக்கும் மாடத்தில்,
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் 85இழைகளை அணிந்த இனிய புன்னகையினையுடைய மகளிர்,                                     85
போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால்குற்றம் அற்ற பொன்(னால் செய்த)வட்டில் நிறைய, பல முறையும்
வாக்குபு தரத்தர வருத்தம் வீடவார்த்துத் தந்துகொண்டே இருக்க, (வழிப்போன)வருத்தம் போம்படி,
ஆர உண்டு பேர் அஞர் போக்கிநிறைய உண்டு, பெரிய வருத்தத்தைப் போக்கி,
செருக்கொடு நின்ற காலை மற்று அவன்மகிழ்ச்சியோடே (யான்)நின்ற போது – மேலும், அம் மன்னனுடைய
திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி                90செல்வம் விளங்குகின்ற அரண்மனையில் ஒரு பக்கத்தில் தங்கியிருந்து,                          90
தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது(மிக்க)தவத்தைச் செய்யும் மக்கள் தம்முடைய (தவம் செய்த)உடம்பைப் பிரியாமல் இருந்தே
அதன் பயம் எய்திய அளவை மான(இம்மை உடம்போடு)அத்தவத்தால் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப,
ஆறு செல் வருத்தம் அகல நீக்கிவழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமல் போக்கி,
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்கள்ளின் செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு
மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து              95மனக்கவர்ச்சி (சிறிதும்)இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து)எழுந்து,                    95
மாலை அன்னதோர் புன்மையும் காலை(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில்
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும்,
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்பகனவோ என்று கலங்கின என்னுடைய நெஞ்சு துணியும்படி,
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்பவலிய வறுமையாலுண்டாகிய வருத்தம் பொதிந்த (என்)உள்ளம் உவக்கும்படியும்,
கல்லா இளைஞர் சொல்லி காட்ட               100(அரச முறைமையை இன்னும்)கற்றுக்கொள்ளாத (எம்)இளைஞர் (எம் வரவைக்)கூவி எடுத்துக்கூற, 100
கதுமென கரைந்து வம் என கூஉய்விரைவாக அழைத்து, ‘வருக வருக’ என்று உரத்துச் சொல்லி,
அதன் முறை கழிப்பிய பின்றை பதன் அறிந்துஅரசனைக் காணும் முறைகளைச் செய்து முடித்த பின்னர், காலமறிந்து,
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
பராஅரை வேவை பருகு என தண்டிபெரிய (மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் ‘உண்பாயாக’ என்று வற்புறுத்தி,
காழின் சுட்ட கோழ் ஊன் கொழு குறை 105இரும்புக் கம்பியில் (கோத்துச்)சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத் துண்டுகளை     105
ஊழின்ஊழின் வாய் வெய்து ஒற்றிமாற்றி மாற்றி வாயின் (இடத்திலும் வலத்திலும்)(அத்தசைகளின்)வெப்பத்தை ஒற்றியெடுத்து,
அவையவை முனிகுவம் எனினே சுவையபுழுக்கினவும் சுட்டனவும் ஆகிய அவற்றை(த் திகட்டிப்போய்) வெறுக்கிறோம் என்கையில், இனிமையுடைய
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇவெவ்வேறான பல வடிவினையுடைய தின்பண்டங்களைக் கொணர்ந்து (எங்களை)இருத்தி,
மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்மார்ச்சனை அமைந்த முழவினோடே பண் (நன்கு)அமைந்த சிறிய யாழையுடைய
ஒள் நுதல் விறலியர் பாணி தூங்க   110ஒளிவிடும் நெற்றியையுடைய விறலியர் தாளத்திற்கேற்ப ஆட,                                     110
மகிழ் பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள்(இவ்விதமாய்)மகிழ்கின்ற செவ்வியைப் பலநாளும் பெற்றுக்கழித்து, ஒருநாள்,
அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை‘சோற்று உணவை(யும்) கொள்வாயாக’ என்று வேண்ட, (முல்லை)அரும்பின் தன்மையையுடைய
முரவை போகிய முரியா அரிசி(தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்விரல் என்னும்படி நெடுகின, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)சோற்றையும்,
பரல் வறை கருனை காடியின் மிதப்ப  115பருக்கைக் கற்கள் போன்று (நன்கு)பொரித்த பொரிக்கறிகளையும், தொண்டையில் மிதக்கும்படி        115
அயின்ற காலை பயின்று இனிது இருந்துஉண்டபொழுதின், இடையறாது பழகி இனிதாக உடனுறைந்து,
கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லேகொல்லை நிலத்தில் உழுத கொழுப் போன்று, (எம்)பற்கள்
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கிபகலும் இரவும் இறைச்சியைத் தின்று (முனை)மழுங்கி,
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள்மூச்சு விடுவதற்கும் இடம்பெறாமையால், அவ்வுணவுகளை வெறுத்து, ஒருநாள்,
செயிர்த்து எழு தெவ்வர் திறை துறைபோகிய    120‘குற்றத்தைச் செய்து எழுந்த பகைவரிடம் திறைகொள்ளும் முறைகளில் தேர்ச்சிபெற்ற               120
செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து எனசெல்வனே, (யாங்கள்)செல்வேம் – எம்முடைய (பழைய)சுற்றத்தாரிடம், (உம்மை)விட்டு’ என்று
மெல்லென கிளந்தனம் ஆக வல்லேமெதுவாகச் சொன்னேமாக, ‘(இவ்வளவு)சீக்கிரம்
அகறிரோ எம் ஆயம் விட்டு எனபோகின்றீரோ (எம்)கூட்டத்தைவிட்டு’ என்று கூற
சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடுவெகுண்டவனைப் போன்று (எமக்கு)வருத்தத்தைச் செய்த பார்வையுடன்,
துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு      125‘துடி போலும் அடிகளையும் அசைந்த நடையினையும் உடைய கன்றுகளுடன்,                    125
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க எனபிடிகளைக் கூடின களிற்றியானைகளையும், (நீவிர்)விரும்பிய ஏனையவற்றையும் கொள்வீராக’ என்று
தன் அறி அளவையின் தரத்தர யானும்தான் அறிந்த அளவால் தரத்தர, யானும்
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டுயான் அறிந்த அளவில் (எனக்கு)வேண்டுவனவற்றை வாரிக்கொண்டு,
இன்மை தீர வந்தனென் வென் வேல்(என்)இல்லாமை (முற்றிலும்)அற்றுப்போக வந்தேன், வென்ற வேலினையும்
உருவ பல் தேர் இளையோன் சிறுவன்   130அழகினையும் பல தேர்களையும் உடைய இளயவனான சிறுவன்,                         130
முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில்முருகனது (சீற்றம் போலும்)சீற்றத்தையுடைய அஞ்சுதல் பொருந்திய தலைவன்,                      
தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி(தன்)தாய் வயிற்று இருந்த போதே அரசவுரிமை பெற்று(ப் பிறந்து),
எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப(தன் வலிமை)அறியாத பகைவர் ஏவின தொழிலைச் செய்ய,
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப(ஏவல்)செய்யாத பகைவர் நாடு மனக்கவற்சி பெருக,
பவ்வமீமிசை பகல் கதிர் பரப்பி            135கடல் மேற்பரப்பு முழுக்கப் பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி,                                135
வெவ் வெம் செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு(எல்லோராலும்)விரும்பப்படும் வெம்மையையுடைய ஞாயிறு விண்ணில் (மெல்லச்)சென்றாற் போன்று,
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நல்பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி, சிறந்த நல்ல
நாடு செகில் கொண்டு நாள்தொறும் வளர்ப்பநாட்டை(த் தன்) தோளில் வைத்துக்கொண்டு, (அதனை)நாள்தோறும் வளர்த்தலால்,
ஆளி நன் மான் அணங்கு உடை குருளைசிங்கம் (ஆகிய)நல்ல விலங்கின், வருத்துதலை உடைய குருளையானது –
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி       140இளமை(பொங்கும்) தோள்களின் மிகுந்த வலிமையால் செருக்கி,                            140
முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனமுலையுண்டலைக் கைவிடாத அளவிலே(யே) கடுகப் பாய்ந்து,                                       
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு(தன்)கன்னிவேட்டையிலேயே களிற்றியானையைக் கொன்றாற் போன்று,
இரும் பனம் போந்தை தோடும் கரும் சினைகரிய பனையாகிய போந்தையின் மாலையினையும், கரிய கொம்பினையுடைய,
அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும்அர(த்தின்) வாய் (போலும் வாயையுடைய)வேம்பின் அழகிய தளிரால் செய்த மாலையினையும்,
ஓங்கு இரும் சென்னி மேம்பட மிலைந்த       145உயர்ந்த பெரிய தலையில் சிறப்பாகச் சூடிய                                                  145
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவியஇரு பெரிய மன்னர்களும் ஒரே களத்தில் பட்டழியும்படி,                                               
வெண்ணி தாக்கிய வெருவரு நோன் தாள்வெண்ணி என்கிற ஊரில் பொருத அச்சந் தோன்றுகின்ற வலிமையையுடைய முயற்சியையும்,
கண் ஆர் கண்ணி கரிகால்வளவன்கண்-நிறைந்த ஆத்தி மாலையினையும் உடைய கரிகாற்சோழனின்,
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகிதிருவடி நிழலின் பக்கத்தை அணுகிக் கிட்டே நெருங்கி
தொழுது முன் நிற்குவிர் ஆயின் பழுது இன்று   150  வணங்கி (அவன்)முன்னே நிற்பீராயின், (உம்)வறுமை நீங்க                                      150
ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும்ஈன்ற பசு (அதன் கன்றை நோக்கும்)விருப்பம் போன்ற விருப்பத்தோடு உம்மை விரும்பிப் பார்த்து, உம்
கையது கேளா அளவை ஒய்யெனகைத்திறனை(கலையை)(த் தான்) கேட்டு முடிவதற்கு முன்னரே, விரைந்து
பாசி வேரின் மாசொடு குறைந்தபாசியின் வேர் போல் அழுக்குடன் சுருங்கிப்போன,
துன்னல் சிதாஅர் நீக்கி தூயதையலையுடைய துணிகளை நீக்கி, தூய
கொட்டை கரைய பட்டு உடை நல்கி     155(பட்டுக்)குஞ்சம் (உள்ள)கரையையுடைய பட்டு உடைகளைத் தந்து,                         155
பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என‘பெறுதற்கரிய (பொற்)கலத்தில் விரும்பியபடி உண்பாயாக’ என்று,
பூ கமழ் தேறல் வாக்குபு தரத்தரபூ மணக்கின்ற கள்தெளிவை (மேலும்மேலும்)வார்த்துத் தரத்தர,
வைகல்வைகல் கை கவி பருகிதினம் தினம் (வேண்டாம் வேண்டாம் எனக்)கையைக் கவிழ்க்கும் அளவிற்குக் குடித்து,
எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரைநெருப்புத் தழைத்தாற் போன்ற, இதழ் இல்லாத தாமரையை,
சுரி இரும் பித்தை பொலிய சூட்டி          160சுருண்ட கரிய மயிரில் பொலிவுபெறச் சூட்டி,                                                        160
நூலின் வலவா நுணங்கு அரில் மாலைநூலால் கட்டாத நுண்மையினையும் பிணக்கத்தையும் உடைய பொன்னரிமாலையை
வால் ஒளி முத்தமொடு பாடினி அணியவெண்மையான ஒளியையுடைய முத்தத்தோடு பாடினி சூடத் தந்து,
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடும் தேர்(யானைக்)கொம்பாற் செய்த தாமரை முகையினையுடைய நெடிய தேரில்,
ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க(சாதிலிங்கம்)ஊட்டின தலைச்சிறகுகள் அலையாட, பிடரி மயிர் அசையப்,
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி      165பாலை ஒத்த (நிறத்தினையுடைய)குதிரைகள் நான்கினைச் சேரப் பூட்டி,                            165
காலின் ஏழ் அடி பின் சென்று கோலின்(தன்)காலால் ஏழு அடி பின்னே வந்து, தார்க்குச்சியில்
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறுமுள்ளை அகற்றி, ‘(இவ்வாறு)ஏறுவாயாக’ என(க்காட்டி) ஏறச்செய்து, வீறுபெற்ற
பேர் யாழ் முறையுளி கழிப்பி நீர் வாய்யாழ்ப்பாணர்க்குக் கொடுக்கும் முறைகளை (உனக்குத்)தந்துவிட்டு, நீர் (நன்கு)வாய்க்கப்பெற்ற
தண் பணை தழீஇய தளரா இருக்கைகுளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய
நன் பல் ஊர நாட்டொடு நன் பல்             170நல்ல பல ஊர்களையுடைய நாடுகளுடனே, நல்ல பல,                                                170
வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கைவெருட்டும் பறைகள் (போன்று)முழங்கும், பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும்,
வெருவரு செலவின் வெகுளி வேழம்அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை
தரவு இடை தங்கல் ஓவு இலனே வரவு இடை(இவன் பிறர்க்குக் கொடை)தரும்போது(அதில்)நிலைகொள்ளலில் ஒழிதல் இலன், (உமக்கு வந்த)வரவின் போது
பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி தெற்றெனபெற்ற பொருளை மற்ற ஒவ்வொருவருக்கும் நிறையத் தந்து, விரைவாக
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து  175(உமது இந்த)பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவீராயின், பலமுறை வருத்தப்பட்டு,                175
நில்லா உலகத்து நிலைமை தூக்கி(ஒன்றும் நிலைத்து)நில்லாத (இவ்)உலகத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து,
செல்க என விடுக்குவன் அல்லன் ஒல்லென‘(நீயிர்)செல்வீராக’ என விடுவான் அல்லன், ஒல் எனும் ஓசையுண்டாகத்
திரை பிறழிய இரும் பௌவத்துதிரை முரிந்த கரிய கடலின்
கரை சூழ்ந்த அகன் கிடக்கைகரைகள் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில்,
மாமாவின் வயின்வயின் நெல்                180ஒவ்வொரு மா அளவிலான சிறு நிலங்கள்தோறும், நெல்லின் –                                      180
தாழ் தாழை தண் தண்டலைதாழ்ந்த தெங்கினையுடைய குளிர்ந்த மரச்சோலைகளிடத்தே,
கூடு கெழீஇய குடி வயினான்– கூடு பொருந்தின வளமிக்க குடியிருப்புகளில்,
செம் சோற்ற பலி மாந்திய(உதிரத்தால்)சிவந்த சோற்றையுடைய படையலை விழுங்கின
கரும் காக்கை கவவு முனையின்கரிய காக்கை அகத்தீடான உணவை வெறுத்ததாயின்,
மனை நொச்சி நிழல் ஆங்கண்         185மனை(யைச் சூழ்ந்த) நொச்சியின் நிழலில்,                                                   185
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும்(மணலுக்குள் முட்டை)பொரித்து வந்த ஆமையின் குஞ்சைப் பின்னர் தின்பதற்காக பாதுகாத்து வைப்பவும்,
இளையோர் வண்டல் அயரவும் முதியோர்இளையோர் மணல்வீடு(கட்டி) விளையாடவும், முதியோர்
அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும்(நீதி வேண்டி)அவைக்களம் புகும்பொழுதிலேயே பகையின் மாறுபாடு (அகன்று அன்பு)கொள்ளவும்,
முட காஞ்சி செம் மருதின்முடக்காஞ்சி மரத்திலும், செம்மருத மரத்திலும் இருந்த,
மட கண்ண மயில் ஆல                190மடப்பம் பொருந்திய கண்ணையுடைய மயில்கள் ஆரவாரிக்க –                                       190
பைம் பாகல் பழம் துணரியபசிய பாகலான பலாப்பழத்தினுள் கொத்தாகவுள்ள,
செம் சுளைய கனி மாந்திசிவந்த சுளைகளைக் கொண்ட பழத்தைத் தின்று – (இந்த ஆரவாரத்துடன்)
அறை கரும்பின் அரி நெல்லின்அறைத்தலைச் செய்யும் கரும்புக் கழனிகளிடத்தும், அரிதலைச் செய்யும் நெற் கழனிகளிடத்தும்,
இன களமர் இசை பெருகதிரண்ட உழவருடைய பண்ணொலி மிகுதியாய் ஒலிப்பதால் –
வறள் அடும்பின் இவர் பகன்றை              195நீரற்ற இடத்தில் எழுந்த அடும்பினையும், படர்கின்ற பகன்றையினையும்,                 195
தளிர் புன்கின் தாழ் காவின்தளிரையுடைய புன்கினையும், தாழ்ந்த சோலைகளும்,
நனை ஞாழலொடு மரம் குழீஇயதளிர்விட்ட ஞாழலோடு, (ஏனை)மரங்களும் கூட்டமாய் உள்ள
அவண் முனையின் அகன்று மாறிஅந்நாட்டை வெறுத்தனவாயின், அவ்விடத்தைவிட்டு அகன்று மாறிப்போய்,
அவிழ் தளவின் அகன் தோன்றிமலர்கின்ற செம்முல்லையினையும், பரந்த காந்தள் மலரினையும்,
நகு முல்லை உகு தேறு வீ          200மலர்ந்து சிரிக்கின்ற முல்லையினையும், சிந்துகின்ற தேற்றா மலரினையும்,                     200
பொன் கொன்றை மணி காயாபொன்னிறம் போன்ற நிறமுடைய கொன்றை மலரினையும், மணி போன்ற காயா மலரினையும் உடைய,
நல் புறவின் நடை முனையின்நல்ல முல்லைக் காட்டில் சென்றும் (அந்நில ஒழுக்கத்தையும்)வெறுத்தனவாயின்,
சுற வழங்கும் இரும் பௌவத்துசுறாமீன் திரியும் கரிய கடலில்
இறவு அருந்திய இன நாரைஇறவினைத் தின்ற திரண்ட நாரைகள் (இருக்கும்)
பூ புன்னை சினை சேப்பின்         205பூக்களையுடைய புன்னையின் கொம்புகளில் தங்கின்,                                            205
ஓங்கு திரை ஒலி வெரீஇஉயர்ந்த அலையின் ஆரவாரத்திற்கு வெருவி,
தீம் பெண்ணை மடல் சேப்பவும்இனிய பனையின் மடலில் தங்கவும்,
கோள் தெங்கின் குலை வாழைகொத்துக்கொத்தான (காய்களைக் காய்க்கும்)தெங்கினையும், குலையினையுடைய வாழையினையும்,
கொழும் காந்தள் மலர் நாகத்துகொழுவிய காந்தளினையும், மலர்ந்த சுரபுன்னையினையும்,
துடி குடிஞை குடி பாக்கத்து              210துடி(யின் ஓசை போன்ற ஓசையையுடைய) பேராந்தையையுடைய குடி(யிருப்பை உடைய) பாக்கத்தில்,        210
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்பயாழ்(ஓசை போலும்) வண்டின் பாட்டுக்கேற்ப,
கலவம் விரித்த மட மஞ்ஞைதோகையை விரித்த மடப்பத்தையுடைய மயில் (இருக்கும்)
நிலவு எக்கர் பல பெயரநிலவு (போலும்) இடுமணல் பலவற்றில் இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்து செல்ல,
தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்தேனாகிய நெய்யோடு, கிழங்கை(யும்) விற்றவர்கள்
மீன் நெய்யொடு நறவு மறுகவும்             215மீனின் நெய்யோடு நறவையும் மாறாகக் கொண்டுபோகவும்,                                 215
தீம் கரும்போடு அவல் வகுத்தோர்இனிய கரும்போடு அவலைக் கூறுபடுத்தி விற்றோர்,
மான் குறையொடு மது மறுகவும்மானின் தசையோடு கள்ளையும் மாறாகக் கொள்ளவும்,
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்குறிஞ்சிப்பண்ணைப் பரதவர் பாடவும், நெய்தலாகிய
நறும் பூ கண்ணி குறவர் சூடநறிய பூவால் புனைந்த கண்ணியைக் குறவர்கள் சூடவும்,
கானவர் மருதம் பாட அகவர்         220முல்லை நிலத்து மக்கள் மருதப்பண்ணைப் பாட, உழவர்கள்                                       220
நீல் நிற முல்லை பல் திணை நுவலநீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவாகிய காட்டுநிலத்தைக் கொண்டாடவும்,
கானக்கோழி கதிர் குத்தகாட்டுக் கோழிகள் நெற்கதிரைத் கொத்தித் தின்னவும்,
மனை கோழி தினை கவரவீட்டுக் கோழிகள் தினையைத் தின்னவும்,
வரை மந்தி கழி மூழ்கமலையின் மந்திகள் கழியில் மூழ்கவும்,
கழி நாரை வரை இறுப்ப             225கழியில் திரியும் நாரைகள் மலையில் கிடக்கவும்,                                            225
தண் வைப்பின் நால் நாடு குழீஇகுளிர்ந்த நிலப்பகுதிகளையுடைய நான்கு கூறாகிய நாடுகள் திரண்டு,
மண் மருங்கினான் மறு இன்றி(இம்)மண்ணுலகத்தே, குற்றமின்றி,
ஒரு குடையான் ஒன்று கூறஒரு குடைக்கீழ்(ஒரே ஆட்சியில்) ஒன்றெனச் சாற்ற,
பெரிது ஆண்ட பெரும் கேண்மைநெடுங்காலம் ஆண்ட பெரிய நட்பையும்,
அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல்      230அறத்தோடு பொருந்திய சார்பினை அறிந்த செங்கோலையும் உடைய,                           230
அன்னோன் வாழி வென் வேல் குரிசில்அத் தன்மையையுடையோனே (நீ)வாழ்வாயாக, வெல்கின்ற வேலையுடைய தலைவனே,
மன்னர் நடுங்க தோன்றி பல் மாண்(பகை)அரசர் நடுங்கும்படி விளங்கி, பல்வேறு மாண்புகளையுடைய
எல்லை தருநன் பல் கதிர் பரப்பிபகற்பொழுதைத் தருகின்ற ஞாயிறு பலவாகிய கதிர்களைப் பரப்புகையினால்,
குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும்கஞ்சங் குல்லை தீயவும், மரங்களின் கொம்புகளை நெருப்புத் தின்னவும்,
அருவி மா மலை நிழத்தவும் மற்று அ 235அருவிகள் — பெரிய மலைகளில் — கொஞ்சம் கொஞ்சமாக வற்றிப்போகவும், இவை ஒழிந்த       235
கருவி வானம் கடல் கோள் மறப்பவும்கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்,
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்பெரும் பஞ்சம் உண்டாகிய நற்குணமில்லாத காலத்தும் –
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்நறைக்கொடியும், நரந்தம் புல்லும், அகிலும், சந்தனமும்,
துறைதுறைதோறும் பொறை உயிர்த்து ஒழுகிதுறைகள்தோறும் துறைகள்தோறும், (தனக்குச்)சுமையானவற்றை ஒதுக்கி, இளைப்பாற நடந்து –
நுரை தலை குரை புனல் வரைப்பகம் புகுதொறும் 240நுரையைத் தலையில் உடைய ஆரவாரத்தையுடைய நீர் குளத்திலும் கோட்டகத்திலும் புகுதொறும்,        240
புனல் ஆடு மகளிர் கதுமென குடையநீராடும் மகளிர் கடுகக் குடைந்து விளையாட –
கூனி குயத்தின் வாய் நெல் அரிந்துகுனிந்துநின்று, அரிவாளின் வாயால் நெல்லை அறுத்துச்,
சூடு கோடு ஆக பிறக்கி நாள்தொறும்சூட்டை மலையாக அடுக்கி, நாள்தோறும்
குன்று என குவைஇய குன்றா குப்பைமலை என்னும்படி குவித்த குறையாத நெற்பொலி
கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் 245உலுக்கிக் குலுக்கிக் கட்டிய மூடைகள் வெற்றிடம் இல்லையாகும்படி (எங்கும்)கிடக்கும்,                245
சாலி நெல்லின் சிறை கொள் வேலிசெந்நெல் விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம்,
ஆயிரம் விளையுட்டு ஆகஓராயிரம் கலம் என்னும் அளவில் நெல்லை விளைச்சல் ஆக – (இவ்வாறான)
காவிரி புரக்கும் நாடு கிழவோனேகாவிரியாறு பாதுகாக்கும் நாட்டை உரித்தவன்.

Related posts