புறநானூறு 351-375

  
# 351 மதுரை படைமங்க மன்னியார்# 351 மதுரை படைமங்க மன்னியார்
படு மணி மருங்கின பணை தாள் யானையும்படு மணி மருங்கின பணை தாள் யானையும்
கொடி நுடங்கு மிசைய தேரும் மாவும்கொடி நுடங்கு மிசைய தேரும் மாவும்
படை அமை மறவரொடு துவன்றி கல்லெனபடை அமை மறவரொடு துவன்றி கல்லென
கடல் கண்டு அன்ன கண் அகன் தானைகடல் கண்டு அன்ன கண் அகன் தானை
வென்று எறி முரசின் வேந்தர் என்றும்வென்று எறி முரசின் வேந்தர் என்றும்
வண் கை எயினன் வாகை அன்னவண் கை எயினன் வாகை அன்ன
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்
என் ஆவது-கொல் தானே தெண் நீர்என் ஆவது-கொல் தானே தெண் நீர்
பொய்கை மேய்ந்த செ வரி நாரைபொய்கை மேய்ந்த செ வரி நாரை
தேம் கொள் மருதின் பூ சினை முனையின்தேம் கொள் மருதின் பூ சினை முனையின்
காமரு காஞ்சி துஞ்சும்காமரு காஞ்சி துஞ்சும்
ஏமம் சால் சிறப்பின் இ பணை நல் ஊரேஏமம் சால் சிறப்பின் இ பணை நல் ஊரே
  
# 352 பரணர்# 352 பரணர்
தேஎம் கொண்ட வெண் மண்டையான்தேஎம் கொண்ட வெண் மண்டையான்
வீங்கு முலை கறக்குந்துவீங்கு முலை கறக்குந்து
அவல் வகுத்த பசும் குடையான்அவல் வகுத்த பசும் குடையான்
புதன் முல்லை பூ பறிக்குந்துபுதன் முல்லை பூ பறிக்குந்து
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர்ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர்
குன்று ஏறி புனல் பாயின்குன்று ஏறி புனல் பாயின்
புற வாயால் புனல் வரையுந்துபுற வாயால் புனல் வரையுந்து
நொடை நறவின்நொடை நறவின்
மா வண் தித்தன் வெண்ணெல் வேலிமா வண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரை சால் நன் கலம்உறந்தை அன்ன உரை சால் நன் கலம்
கொடுப்பவும் கொளாஅகொடுப்பவும் கொளாஅ
விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின்விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின்
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின்கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின்
மா கண் மலர்ந்த முலையள் தன்னையும்மா கண் மலர்ந்த முலையள் தன்னையும்
சிறு கோல் உளையும் புரவியொடுசிறு கோல் உளையும் புரவியொடு
யாரேயாரே
  
# 353 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்# 353 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
ஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்தஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்த
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல்பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல்
ஈகை கண்ணி இலங்க தைஇஈகை கண்ணி இலங்க தைஇ
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கிதருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி
தவிர்த்த தேரை விளர்த்த கண்ணைதவிர்த்த தேரை விளர்த்த கண்ணை
வினவல் ஆனா வெல் போர் அண்ணல்வினவல் ஆனா வெல் போர் அண்ணல்
யார் மகள் என்போய் கூற கேள் இனியார் மகள் என்போய் கூற கேள் இனி
குன்று கண்டு அன்ன நிலை பல் போர்புகுன்று கண்டு அன்ன நிலை பல் போர்பு
நாள் கடா அழித்த நனம் தலை குப்பைநாள் கடா அழித்த நனம் தலை குப்பை
வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றாவல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா
தொல் குடி மன்னன் மகளே முன்_நாள்தொல் குடி மன்னன் மகளே முன்_நாள்
கூறி வந்த மா முது வேந்தர்க்குகூறி வந்த மா முது வேந்தர்க்கு
உழக்கு குருதி ஓட்டிஉழக்கு குருதி ஓட்டி
கதுவாய் போகிய நுதி வாய் எஃகமொடுகதுவாய் போகிய நுதி வாய் எஃகமொடு
பஞ்சியும் களையா புண்ணர்பஞ்சியும் களையா புண்ணர்
அஞ்சு_தகவு உடையர் இவள் தன்னைமாரேஅஞ்சு_தகவு உடையர் இவள் தன்னைமாரே
  
# 354 பரணர்# 354 பரணர்
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனாஅரைசு தலைவரினும் அடங்கல் ஆனா
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கநிரை காழ் எஃகம் நீரின் மூழ்க
புரையோர் சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும்புரையோர் சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும்
வயல் அமர் கழனி வாயில் பொய்கைவயல் அமர் கழனி வாயில் பொய்கை
கயல் ஆர் நாரை உகைத்த வாளைகயல் ஆர் நாரை உகைத்த வாளை
புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும்புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும்
ஊர் கவின் இழப்பவும் வருவது-கொல்லோஊர் கவின் இழப்பவும் வருவது-கொல்லோ
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலைசுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை
வீங்கு இறை பணை தோள் மடந்தைவீங்கு இறை பணை தோள் மடந்தை
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கேமான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே
  
# 355# 355
மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும்நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும்
ஊரது நிலைமையும் இதுவே மற்றேஊரது நிலைமையும் இதுவே மற்றே
எண்ணா மையலன் தந்தை தன் ஐயர்எண்ணா மையலன் தந்தை தன் ஐயர்
கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளிகண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி
  
# 356 தாயங்கண்ணனார்# 356 தாயங்கண்ணனார்
களரி பரந்து கள்ளி போகிகளரி பரந்து கள்ளி போகி
பகலும் கூஉம் கூகையொடு பிறழ் பல்பகலும் கூஉம் கூகையொடு பிறழ் பல்
ஈம விளக்கின் பேஎய்_மகளிரொடுஈம விளக்கின் பேஎய்_மகளிரொடு
அஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடுஅஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடு
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர்நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர்
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்பஎன்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப
எல்லார் புறனும் தான் கண்டு உலகத்துஎல்லார் புறனும் தான் கண்டு உலகத்து
மன்பதை எல்லாம் தானாய்மன்பதை எல்லாம் தானாய்
தன் புறம் காண்போர் காண்பு அறியாதேதன் புறம் காண்போர் காண்பு அறியாதே
  
# 357 பிரமனார்# 357 பிரமனார்
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண்குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்
மாண்ட அன்றே ஆண்டுகள் துணையேமாண்ட அன்றே ஆண்டுகள் துணையே
வைத்தது அன்றே வெறுக்கைவைத்தது அன்றே வெறுக்கை
புணை கைவிட்டோர்க்கு அரிதே துணை அழபுணை கைவிட்டோர்க்கு அரிதே துணை அழ
தொக்கு உயிர் வௌவும்_காலைதொக்கு உயிர் வௌவும்_காலை
இ கரை நின்று இவர்ந்து உ கரை கொளலேஇ கரை நின்று இவர்ந்து உ கரை கொளலே
  
# 358 வான்மீகியார்# 358 வான்மீகியார்
பருதி சூழ்ந்த இ பயம் கெழு மா நிலம்பருதி சூழ்ந்த இ பயம் கெழு மா நிலம்
ஒரு பகல் எழுவர் எய்தி அற்றேஒரு பகல் எழுவர் எய்தி அற்றே
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்குவையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்
கைவிட்டனரே காதலர் அதனால்கைவிட்டனரே காதலர் அதனால்
விட்டோரை விடாஅள் திருவேவிட்டோரை விடாஅள் திருவே
விடாஅதோர் இவள் விடப்பட்டோரேவிடாஅதோர் இவள் விடப்பட்டோரே
  
# 359 கரவட்டனாரி# 359 கரவட்டனாரி
பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின்பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின்
வேறு படு குரல வெம் வாய் கூகையொடுவேறு படு குரல வெம் வாய் கூகையொடு
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்லபிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல
பேஎய் மகளிர் பிணம் தழூஉ பற்றிபேஎய் மகளிர் பிணம் தழூஉ பற்றி
விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர்விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர்
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடிகளரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி
ஈம விளக்கின் வெருவர பேரும்ஈம விளக்கின் வெருவர பேரும்
காடு முன்னினரே நாடு கொண்டோரும்காடு முன்னினரே நாடு கொண்டோரும்
நினக்கும் வருதல் வைகல் அற்றேநினக்கும் வருதல் வைகல் அற்றே
வசையும் நிற்கும் இசையும் நிற்கும்வசையும் நிற்கும் இசையும் நிற்கும்
அதனால் வசை நீக்கி இசை வேண்டியும்அதனால் வசை நீக்கி இசை வேண்டியும்
நசை வேண்டாது நன்று மொழிந்தும்நசை வேண்டாது நன்று மொழிந்தும்
நிலவு கோட்டு பல களிற்றோடுநிலவு கோட்டு பல களிற்றோடு
பொலம் படைய மா மயங்கிடபொலம் படைய மா மயங்கிட
இழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாதுஇழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாது
கொள் என விடுவை ஆயின் வெள்ளெனகொள் என விடுவை ஆயின் வெள்ளென
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழேஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே
  
# 360 சங்க வருணர் என்னும் நாகரியர்# 360 சங்க வருணர் என்னும் நாகரியர்
பெரிது ஆரா சிறு சினத்தர்பெரிது ஆரா சிறு சினத்தர்
சில சொல்லால் பல கேள்வியர்சில சொல்லால் பல கேள்வியர்
நுண் உணர்வினால் பெரும் கொடையர்நுண் உணர்வினால் பெரும் கொடையர்
கலுழ் நனையால் தண் தேறலர்கலுழ் நனையால் தண் தேறலர்
கனி குய்யான் கொழும் துவையர்கனி குய்யான் கொழும் துவையர்
தாழ் உவந்து தழூஉ மொழியர்தாழ் உவந்து தழூஉ மொழியர்
பயன் உறுப்ப பலர்க்கு ஆற்றிபயன் உறுப்ப பலர்க்கு ஆற்றி
ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர்ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர்
சிலரே பெரும கேள் இனி நாளும்சிலரே பெரும கேள் இனி நாளும்
பலரே தகையஃது அறியாதோரேபலரே தகையஃது அறியாதோரே
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாதுஅன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
இன்னும் அற்று அதன் பண்பே அதனால்இன்னும் அற்று அதன் பண்பே அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டு இலை பரிசில்நிச்சமும் ஒழுக்கம் முட்டு இலை பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வரநச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர
பாறு இறைகொண்ட பறந்தலை மா கதபாறு இறைகொண்ட பறந்தலை மா கத
கள்ளி போகிய களரி மருங்கின்கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடுவெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு
புல்_அகத்து இட்ட சில் அவிழ் வல்சிபுல்_அகத்து இட்ட சில் அவிழ் வல்சி
புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டுபுலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு
அழல் வாய் புக்க பின்னும்அழல் வாய் புக்க பின்னும்
பலர் வாய்த்து இராஅர் பகுத்து உண்டோரேபலர் வாய்த்து இராஅர் பகுத்து உண்டோரே
  
  
  
  
  
  
# 361# 361
கார் எதிர் உருமின் உரறி கல்லெனகார் எதிர் உருமின் உரறி கல்லென
ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம்ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம்
நின் வரவு அஞ்சலன் மாதோ நன் பலநின் வரவு அஞ்சலன் மாதோ நன் பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்குகேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகைஅரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை
தாயின் நன்று பலர்க்கு ஈத்துதாயின் நன்று பலர்க்கு ஈத்து
தெருள் நடை மா களிறொடு தன்தெருள் நடை மா களிறொடு தன்
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்
உருள் நடை பஃறேர் ஒன்னார் கொன்ற தன்உருள் நடை பஃறேர் ஒன்னார் கொன்ற தன்
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்
புரி மாலையர் பாடினிக்குபுரி மாலையர் பாடினிக்கு
பொலம் தாமரை பூ பாணரொடுபொலம் தாமரை பூ பாணரொடு
கலந்து அளைஇய நீள் இருக்கையால்கலந்து அளைஇய நீள் இருக்கையால்
பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின்பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின்
வில் என விலங்கிய புருவத்து வல்லெனவில் என விலங்கிய புருவத்து வல்லென
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர்நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ மெல்லெனஅல்குல் தாங்கா அசைஇ மெல்லென
கலம்_கலம் தேறல் பொலம் கலத்து ஏந்திகலம்_கலம் தேறல் பொலம் கலத்து ஏந்தி
அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன்அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன்
நில்லா உலகத்து நிலையாமை நீநில்லா உலகத்து நிலையாமை நீ
சொல்லா வேண்டா தோன்றல் முந்து அறிந்தசொல்லா வேண்டா தோன்றல் முந்து அறிந்த
முழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானேமுழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானே
  
# 362 சிறுவெண்டேரையார்# 362 சிறுவெண்டேரையார்
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்தஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த
மதி உறழ் ஆரம் மார்பில் புரளமதி உறழ் ஆரம் மார்பில் புரள
பலி பெறு முரசம் பாசறை சிலைப்பபலி பெறு முரசம் பாசறை சிலைப்ப
பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர்பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர்
செரு புகன்று எடுக்கும் விசய வெண் கொடிசெரு புகன்று எடுக்கும் விசய வெண் கொடி
அணங்கு உருத்து அன்ன கணம்_கொள் தானைஅணங்கு உருத்து அன்ன கணம்_கொள் தானை
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின்கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின்
ஆ குரல் காண்பின் அந்தணாளர்ஆ குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின்நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின்
அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின்அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின்
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇமருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ
கை பெய்த நீர் கடல் பரப்பகை பெய்த நீர் கடல் பரப்ப
ஆம் இருந்த அடை நல்கிஆம் இருந்த அடை நல்கி
சோறு கொடுத்து மிக பெரிதும்சோறு கொடுத்து மிக பெரிதும்
வீறு சால் நன் கலம் வீசி நன்றும்வீறு சால் நன் கலம் வீசி நன்றும்
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்
வாய் வன் காக்கை கூகையொடு கூடிவாய் வன் காக்கை கூகையொடு கூடி
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடுகாடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல் என்று இல் வயின் பெயர மெல்லஇல் என்று இல் வயின் பெயர மெல்ல
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சிஇடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டேஉடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே
  
# 363 ஐயாதி சிறுவெண்டேரையார்# 363 ஐயாதி சிறுவெண்டேரையார்
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் மா நிலம்இரும் கடல் உடுத்த இ பெரும் கண் மா நிலம்
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றிஉடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி
தாமே ஆண்ட ஏமம் காவலர்தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடு திரை மணலினும் பலரே சுடு பிணஇடு திரை மணலினும் பலரே சுடு பிண
காடு பதி ஆக போகி தத்தம்காடு பதி ஆக போகி தத்தம்
நாடு பிறர் கொள சென்று மாய்ந்தனரேநாடு பிறர் கொள சென்று மாய்ந்தனரே
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாதுஅதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லைஉடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றேமடங்கல் உண்மை மாயமோ அன்றே
கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டுகள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பு இலாஅ அவி புழுக்கல்உப்பு இலாஅ அவி புழுக்கல்
கை கொண்டு பிறக்கு நோக்காதுகை கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈய பெற்றுஇழிபிறப்பினோன் ஈய பெற்று
நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும்நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னேஇன்னா வைகல் வாரா முன்னே
செய் நீ முன்னிய வினையேசெய் நீ முன்னிய வினையே
முந்நீர் வரைப்பு_அகம் முழுது உடன் துறந்தேமுந்நீர் வரைப்பு_அகம் முழுது உடன் துறந்தே
  
# 364 கூகை கோரியார்# 364 கூகை கோரியார்
வாடா மாலை பாடினி அணியவாடா மாலை பாடினி அணிய
பாணன் சென்னி கேணி பூவாபாணன் சென்னி கேணி பூவா
எரி மருள் தாமரை பெரு மலர் தயங்கஎரி மருள் தாமரை பெரு மலர் தயங்க
மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்திமை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி
காயம் கனிந்த கண் அகன் கொழும் குறைகாயம் கனிந்த கண் அகன் கொழும் குறை
நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்பநறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப
உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும்உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும்
மகிழ்கம் வம்மோ மற போரோயேமகிழ்கம் வம்மோ மற போரோயே
அரிய ஆகலும் உரிய பெருமஅரிய ஆகலும் உரிய பெரும
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர்நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர்
முது மர பொத்தின் கதுமென இயம்பும்முது மர பொத்தின் கதுமென இயம்பும்
கூகை கோழி ஆனாகூகை கோழி ஆனா
தாழிய பெரும் காடு எய்திய ஞான்றேதாழிய பெரும் காடு எய்திய ஞான்றே
  
# 365 மார்க்கண்டேயனார்# 365 மார்க்கண்டேயனார்
மயங்கு இரும் கருவிய விசும்பு முகன் ஆகமயங்கு இரும் கருவிய விசும்பு முகன் ஆக
இயங்கிய இரு சுடர் கண் என பெயரியஇயங்கிய இரு சுடர் கண் என பெயரிய
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்
வயிர குறட்டின் வயங்கு மணி ஆரத்துவயிர குறட்டின் வயங்கு மணி ஆரத்து
பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டிபொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி
பொருநர் காணா செரு மிகு முன்பின்பொருநர் காணா செரு மிகு முன்பின்
முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
விலை_நல_பெண்டிரின் பலர் மீக்கூறவிலை_நல_பெண்டிரின் பலர் மீக்கூற
உள்ளேன் வாழியர் யான் என பன் மாண்உள்ளேன் வாழியர் யான் என பன் மாண்
நிலமகள் அழுத காஞ்சியும்நிலமகள் அழுத காஞ்சியும்
உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரேஉண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே
  
# 366 கோதமனாரி# 366 கோதமனாரி
விழு கடிப்பு அறைந்த முழு குரல் முரசம்விழு கடிப்பு அறைந்த முழு குரல் முரசம்
ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆகஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்பஅரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப
ஒரு தாம் ஆகிய பெருமையோரும்ஒரு தாம் ஆகிய பெருமையோரும்
தம் புகழ் நிறீஇ சென்று மாய்ந்தனரேதம் புகழ் நிறீஇ சென்று மாய்ந்தனரே
அதனால் அறிவோன் மகனே மறவோர் செம்மால்அதனால் அறிவோன் மகனே மறவோர் செம்மால்
உரைப்ப கேள்-மதிஉரைப்ப கேள்-மதி
நின் ஊற்றம் பிறர் அறியாதுநின் ஊற்றம் பிறர் அறியாது
பிறர் கூறிய மொழி தெரியாபிறர் கூறிய மொழி தெரியா
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவிஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி
இரவின் எல்லை வருவது நாடிஇரவின் எல்லை வருவது நாடி
உரைத்திசின் பெரும நன்றும்உரைத்திசின் பெரும நன்றும்
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்குஉழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்கு
செம் கண் மகளிரொடு சிறு துளி அளைஇசெம் கண் மகளிரொடு சிறு துளி அளைஇ
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்பஅம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப
கெடல் அரும் திருவ உண்மோகெடல் அரும் திருவ உண்மோ
விடை வீழ்த்து சூடு கிழிப்பவிடை வீழ்த்து சூடு கிழிப்ப
மடை வேண்டுநர்க்கு இடை அருகாதுமடை வேண்டுநர்க்கு இடை அருகாது
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளிஅவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
நீர்நிலை பெருத்த வார் மணல் அடைகரைநீர்நிலை பெருத்த வார் மணல் அடைகரை
காவு-தோறு இழைத்த வெறி அயர் களத்தின்காவு-தோறு இழைத்த வெறி அயர் களத்தின்
இடம் கெட தொகுத்த விடையின்இடம் கெட தொகுத்த விடையின்
மடங்கல் உண்மை மாயமோ அன்றேமடங்கல் உண்மை மாயமோ அன்றே
  
# 367 ஔவையார்# 367 ஔவையார்
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லாதமவே ஆயினும் தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறையஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய
பூவும் பொன்னும் புனல் பட சொரிந்துபூவும் பொன்னும் புனல் பட சொரிந்து
பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்தியபாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய
நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்துநார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
இரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசிஇரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
வாழ செய்த நல்வினை அல்லதுவாழ செய்த நல்வினை அல்லது
ஆழும்_காலை புணை பிறிது இல்லைஆழும்_காலை புணை பிறிது இல்லை
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீ புரைய காண்_தக இருந்தமுத்தீ புரைய காண்_தக இருந்த
கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர்கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர்
யான் அறி அளவையோ இதுவே வானத்துயான் அறி அளவையோ இதுவே வானத்து
வயங்கி தோன்றும் மீனினும் இம்மெனவயங்கி தோன்றும் மீனினும் இம்மென
பரந்து இயங்கும் மா மழை உறையினும்பரந்து இயங்கும் மா மழை உறையினும்
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளேஉயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே
  
# 368 கழா தலையார்# 368 கழா தலையார்
களிறு முகந்து பெயர்குவம் எனினேகளிறு முகந்து பெயர்குவம் எனினே
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போலஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல
கைம்_மா எல்லாம் கணை இட தொலைந்தனகைம்_மா எல்லாம் கணை இட தொலைந்தன
கொடுஞ்சி நெடும் தேர் முகக்குவம் எனினேகொடுஞ்சி நெடும் தேர் முகக்குவம் எனினே
கடும் பரி நன் மான் வாங்கு_வயின் ஒல்கிகடும் பரி நன் மான் வாங்கு_வயின் ஒல்கி
நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்தனவேநெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்தனவே
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினேகொய் சுவல் புரவி முகக்குவம் எனினே
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகிமெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி
வளி வழக்கு அறுத்த வங்கம் போலவளி வழக்கு அறுத்த வங்கம் போல
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே ஆங்ககுருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே ஆங்க
முகவை இன்மையின் உகவை இன்றிமுகவை இன்மையின் உகவை இன்றி
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்துஇரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ
கடாஅ யானை கால்_வழி அன்ன என்கடாஅ யானை கால்_வழி அன்ன என்
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றிதெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி
பாடி வந்தது எல்லாம் கோடியர்பாடி வந்தது எல்லாம் கோடியர்
முழவு மருள் திரு மணி மிடைந்த நின்முழவு மருள் திரு மணி மிடைந்த நின்
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவேஅரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே
  
# 369 பரணர்# 369 பரணர்
இருப்பு முகம் செறிந்த ஏந்து எழில் மருப்பின்இருப்பு முகம் செறிந்த ஏந்து எழில் மருப்பின்
கரும் கை யானை கொண்மூ ஆககரும் கை யானை கொண்மூ ஆக
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்தநீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள் மின் நாக வயங்கு கடிப்பு அமைந்தவாள் மின் நாக வயங்கு கடிப்பு அமைந்த
குருதி பலிய முரசு முழக்கு ஆககுருதி பலிய முரசு முழக்கு ஆக
அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின்அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின்
வெம் விசை புரவி வீசு வளி ஆகவெம் விசை புரவி வீசு வளி ஆக
விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்தவிசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த
கணை துளி பொழிந்த கண் அகன் கிடக்கைகணை துளி பொழிந்த கண் அகன் கிடக்கை
ஈர செறு வயின் தேர் ஏர் ஆகஈர செறு வயின் தேர் ஏர் ஆக
விடியல் புக்கு நெடிய நீட்டி நின்விடியல் புக்கு நெடிய நீட்டி நின்
செரு படை மிளிர்ந்த திருத்து_உறு பைம் சாலிசெரு படை மிளிர்ந்த திருத்து_உறு பைம் சாலி
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்திபிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி
விழு தலை சாய்த்த வெருவரு பைம் கூழ்விழு தலை சாய்த்த வெருவரு பைம் கூழ்
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்புபேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு
கண நரியோடு கழுது களம் படுப்பகண நரியோடு கழுது களம் படுப்ப
பூதம் காப்ப பொலி_களம் தழீஇபூதம் காப்ப பொலி_களம் தழீஇ
பாடுநர்க்கு இருந்த பீடு உடையாளபாடுநர்க்கு இருந்த பீடு உடையாள
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணிதேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி
வேய்வை காணா விருந்தின் போர்வைவேய்வை காணா விருந்தின் போர்வை
அரி குரல் தடாரி உருப்ப ஒற்றிஅரி குரல் தடாரி உருப்ப ஒற்றி
பாடி வந்திசின் பெரும பாடு ஆன்றுபாடி வந்திசின் பெரும பாடு ஆன்று
எழிலி தோயும் இமிழ் இசை அருவிஎழிலி தோயும் இமிழ் இசை அருவி
பொன் உடை நெடும் கோட்டு இமையத்து அன்னபொன் உடை நெடும் கோட்டு இமையத்து அன்ன
ஓடை நுதல ஒல்குதல் அறியாஓடை நுதல ஒல்குதல் அறியா
துடி அடி குழவிய பிடி இடை மிடைந்ததுடி அடி குழவிய பிடி இடை மிடைந்த
வேழ முகவை நல்கு-மதிவேழ முகவை நல்கு-மதி
தாழா ஈகை தகை வெய்யோயேதாழா ஈகை தகை வெய்யோயே
  
# 370 ஊன்பொதி பசுங்குடையார்# 370 ஊன்பொதி பசுங்குடையார்
வள்ளியோர் காணாது உய் திறன் உள்ளிவள்ளியோர் காணாது உய் திறன் உள்ளி
நாரும் போழும் செய்து உண்டு ஓராங்குநாரும் போழும் செய்து உண்டு ஓராங்கு
பசி தின திரங்கிய இரும் பேர் ஒக்கற்குபசி தின திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு
ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ
வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்துவேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து
அத்த குடிஞை துடி மருள் தீம் குரல்அத்த குடிஞை துடி மருள் தீம் குரல்
உழுஞ்சில் அம் கவட்டு இடை இருந்த பருந்தின்உழுஞ்சில் அம் கவட்டு இடை இருந்த பருந்தின்
பெடை பயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்பெடை பயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடைகழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை
வரி மரல் திரங்கிய கானம் பிற்படவரி மரல் திரங்கிய கானம் பிற்பட
பழு மரம் உள்ளிய பறவை போலபழு மரம் உள்ளிய பறவை போல
ஒண் படை மாரி வீழ் கனி பெய்து எனஒண் படை மாரி வீழ் கனி பெய்து என
துவைத்து எழு குருதி நில மிசை பரப்பதுவைத்து எழு குருதி நில மிசை பரப்ப
விளைந்த செழும் குரல் அரிந்து கால் குவித்துவிளைந்த செழும் குரல் அரிந்து கால் குவித்து
படு பிண பல் போர்பு அழிய வாங்கிபடு பிண பல் போர்பு அழிய வாங்கி
எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சிஎருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்அதரி திரித்த ஆள் உகு கடாவின்
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றிஅகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி
வெம் திறல் வியன் களம் பொலிக என்று ஏத்திவெம் திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின்இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின்
வரை மருள் முகவைக்கு வந்தனென் பெருமவரை மருள் முகவைக்கு வந்தனென் பெரும
வடி நவில் எஃகம் பாய்ந்து என கிடந்தவடி நவில் எஃகம் பாய்ந்து என கிடந்த
தொடி உடை தட கை ஓச்சி வெருவார்தொடி உடை தட கை ஓச்சி வெருவார்
இனத்து அடி விராய வரி குடர் அடைச்சிஇனத்து அடி விராய வரி குடர் அடைச்சி
அழு குரல் பேய்_மகள் அயர கழுகொடுஅழு குரல் பேய்_மகள் அயர கழுகொடு
செம் செவி எருவை திரிதரும்செம் செவி எருவை திரிதரும்
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயேஅஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே
  
  
  
  
  
  
# 371 கல்லாடனார்# 371 கல்லாடனார்
அகன் தலை வையத்து புரவலர் காணாதுஅகன் தலை வையத்து புரவலர் காணாது
மரம் தலை சேர்ந்து பட்டினி வைகிமரம் தலை சேர்ந்து பட்டினி வைகி
போது அவிழ் அலரி நாரின் தொடுத்துபோது அவிழ் அலரி நாரின் தொடுத்து
தயங்கு இரும் பித்தை பொலிய சூடிதயங்கு இரும் பித்தை பொலிய சூடி
பறையொடு தகைத்த கல பையென் முரவு வாய்பறையொடு தகைத்த கல பையென் முரவு வாய்
ஆடு_உறு குழிசி பாடு இன்று தூக்கிஆடு_உறு குழிசி பாடு இன்று தூக்கி
மன்ற வேம்பின் ஒண் பூ உரைப்பமன்ற வேம்பின் ஒண் பூ உரைப்ப
குறை செயல் வேண்டா நசைஇய இருக்கையேன்குறை செயல் வேண்டா நசைஇய இருக்கையேன்
அரிசி இன்மையின் ஆரிடை நீந்திஅரிசி இன்மையின் ஆரிடை நீந்தி
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்பகூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப
வரு கணை வாளி அன்பு இன்று தலைஇவரு கணை வாளி அன்பு இன்று தலைஇ
இரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறைஇரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறை
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளிவில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி
குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்துகுறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சியானை எருத்தின் வாள் மடல் ஓச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்அதரி திரித்த ஆள் உகு கடாவின்
மதியத்து அன்ன என் விசி_உறு தடாரிமதியத்து அன்ன என் விசி_உறு தடாரி
அகன் கண் அதிர ஆகுளி தொடாலின்அகன் கண் அதிர ஆகுளி தொடாலின்
பணை மருள் நெடும் தாள் பல் பிணர் தட கைபணை மருள் நெடும் தாள் பல் பிணர் தட கை
புகர்_முக முகவைக்கு வந்திசின் பெருமபுகர்_முக முகவைக்கு வந்திசின் பெரும
களிற்று கோட்டு அன்ன வால் எயிறு அழுத்திகளிற்று கோட்டு அன்ன வால் எயிறு அழுத்தி
விழுக்கொடு விரைஇய வெள் நிண சுவையினள்விழுக்கொடு விரைஇய வெள் நிண சுவையினள்
குடர் தலை மாலை சூடி உண தினகுடர் தலை மாலை சூடி உண தின
ஆனா பெரு வளம் செய்தோன் வானத்துஆனா பெரு வளம் செய்தோன் வானத்து
வயங்கு பன் மீனினும் வாழியர் பல எனவயங்கு பன் மீனினும் வாழியர் பல என
உரு கெழு பேய்_மகள் அயரஉரு கெழு பேய்_மகள் அயர
குருதி துகள் ஆடிய களம் கிழவோயேகுருதி துகள் ஆடிய களம் கிழவோயே
  
# 372 மாங்குடி கிழார்# 372 மாங்குடி கிழார்
விசி பிணி தடாரி விம்மென ஒற்றிவிசி பிணி தடாரி விம்மென ஒற்றி
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்தஏத்தி வந்தது எல்லாம் முழுத்த
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னிஇலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி
கணை துளி பொழிந்த கண்கூடு பாசறைகணை துளி பொழிந்த கண்கூடு பாசறை
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்
ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின்ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்டஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்தமா மறி பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெம் வாய் பெய்த பூத நீர் சால்க எனவெம் வாய் பெய்த பூத நீர் சால்க என
புலவு களம் பொலிய வேட்டோய் நின்புலவு களம் பொலிய வேட்டோய் நின்
நிலவு திகழ் ஆரம் முகக்குவம் எனவேநிலவு திகழ் ஆரம் முகக்குவம் எனவே
  
# 373 கோவூர்கிழார்# 373 கோவூர்கிழார்
உரு மிசை முழக்கு என முரசும் இசைப்பஉரு மிசை முழக்கு என முரசும் இசைப்ப
செரு நவில் வேழம் கொண்மூ ஆகசெரு நவில் வேழம் கொண்மூ ஆக
தேர் மா அழி துளி தலைஇ நாம் உறதேர் மா அழி துளி தலைஇ நாம் உற
கணை காற்று எடுத்த கண் அகன் பாசறைகணை காற்று எடுத்த கண் அகன் பாசறை
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள்இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள்
பிழிவது போல பிட்டை ஊறு உவப்பபிழிவது போல பிட்டை ஊறு உவப்ப
மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானைமைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானை
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தேகொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே
தண்ட மா பொறிதண்ட மா பொறி
மட கண் மயில் இயல் மறலி ஆங்குமட கண் மயில் இயல் மறலி ஆங்கு
நெடும் சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்துநெடும் சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்து
மென் தோள் மகளிர் மன்றம் பேணார்மென் தோள் மகளிர் மன்றம் பேணார்
புண் உவந்துபுண் உவந்து
உளை அணி புரவி வாழ்க எனஉளை அணி புரவி வாழ்க என
சொல் நிழல் இன்மையின் நன் நிழல் சேரசொல் நிழல் இன்மையின் நன் நிழல் சேர
நுண் பூண் மார்பின் புன் தலை சிறாஅர்நுண் பூண் மார்பின் புன் தலை சிறாஅர்
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணாஅம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா
வாளில் தாக்கான்வாளில் தாக்கான்
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலைவேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை
மாடம் மயங்கு எரி மண்டி கோடு இறுபுமாடம் மயங்கு எரி மண்டி கோடு இறுபு
உரும் எறி மலையின் இரு நிலம் சேரஉரும் எறி மலையின் இரு நிலம் சேர
சென்றோன் மன்ற கொலைவன் சென்று எறிசென்றோன் மன்ற கொலைவன் சென்று எறி
வெம் புண் அறிநர் கண்டு கண் அலைப்பவெம் புண் அறிநர் கண்டு கண் அலைப்ப
வஞ்சி முற்றம் வய களன் ஆகவஞ்சி முற்றம் வய களன் ஆக
அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்துஅஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து
கொண்டனை பெரும குட புலத்து அதரிகொண்டனை பெரும குட புலத்து அதரி
பொலிக அத்தை நின் பணை தயங்கு வியன் களம்பொலிக அத்தை நின் பணை தயங்கு வியன் களம்
விளங்கு திணை வேந்தர் களம்-தொறும் சென்றுவிளங்கு திணை வேந்தர் களம்-தொறும் சென்று
புகர்_முக முகவை பொலிக என்று ஏத்திபுகர்_முக முகவை பொலிக என்று ஏத்தி
கொண்டனர் என்ப பெரியோர் யானும்கொண்டனர் என்ப பெரியோர் யானும்
அம் கண் மா கிணை அதிர ஒற்றஅம் கண் மா கிணை அதிர ஒற்ற
முற்றிலென் ஆயினும் காதலின் ஏத்திமுற்றிலென் ஆயினும் காதலின் ஏத்தி
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின்நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின்
மன் எயில் முகவைக்கு வந்திசின் பெருமமன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும
பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்குபகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்கு
தா இன்று உதவும் பண்பின் பேயொடுதா இன்று உதவும் பண்பின் பேயொடு
கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்துகண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து
செம் செவி எருவை குழீஇசெம் செவி எருவை குழீஇ
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயேஅஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே
  
# 374 உறையூர் ஏணிச்சேர் முடமோசியார்# 374 உறையூர் ஏணிச்சேர் முடமோசியார்
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும்கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்னபுல்வாய் இரலை நெற்றி அன்ன
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியபொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவிய
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
மன்ற பலவின் மால் வரை பொருந்தி என்மன்ற பலவின் மால் வரை பொருந்தி என்
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றிதெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி
இரும் கலை ஓர்ப்ப இசைஇ காண்வரஇரும் கலை ஓர்ப்ப இசைஇ காண்வர
கரும் கோல் குறிஞ்சி அடுக்கம் பாடகரும் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட
புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர்புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர்
மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவாமான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா
சிலை_பால் பட்ட முளவு_மான் கொழும் குறைசிலை_பால் பட்ட முளவு_மான் கொழும் குறை
விடர் முகை அடுக்கத்து சினை முதிர் சாந்தம்விடர் முகை அடுக்கத்து சினை முதிர் சாந்தம்
புகர் முக வேழத்து மருப்பொடு மூன்றும்புகர் முக வேழத்து மருப்பொடு மூன்றும்
இரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇஇரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇ
விரிந்து இறை நல்கும் நாடன் எம் கோன்விரிந்து இறை நல்கும் நாடன் எம் கோன்
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போலகழல் தொடி ஆஅய் அண்டிரன் போல
வண்மையும் உடையையோ ஞாயிறுவண்மையும் உடையையோ ஞாயிறு
கொன் விளங்குதியால் விசும்பினானேகொன் விளங்குதியால் விசும்பினானே
  
# 375 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்# 375 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழிஅலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி
நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலை பல் கால்நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலை பல் கால்
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆகபொதியில் ஒரு சிறை பள்ளி ஆக
முழா அரை போந்தை அர வாய் மா மடல்முழா அரை போந்தை அர வாய் மா மடல்
நாரும் போழும் கிணையோடு சுருக்கிநாரும் போழும் கிணையோடு சுருக்கி
ஏரின்_வாழ்நர் குடி முறை புகாஅஏரின்_வாழ்நர் குடி முறை புகாஅ
ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வை
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் எனபுரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என
புரசம் தூங்கும் அறாஅ யாணர்புரசம் தூங்கும் அறாஅ யாணர்
வரை அணி படப்பை நன் நாட்டு பொருநவரை அணி படப்பை நன் நாட்டு பொருந
பொய்யா ஈகை கழல் தொடி ஆஅய்பொய்யா ஈகை கழல் தொடி ஆஅய்
யாவரும் இன்மையின் கிணைப்ப தவாதுயாவரும் இன்மையின் கிணைப்ப தவாது
பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும்பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும்
ஒரு நின் உள்ளி வந்தனென் அதனால்ஒரு நின் உள்ளி வந்தனென் அதனால்
புலவர் புக்கில் ஆகி நிலவரைபுலவர் புக்கில் ஆகி நிலவரை
நிலீஇயர் அத்தை நீயே ஒன்றேநிலீஇயர் அத்தை நீயே ஒன்றே
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்துநின் இன்று வறுவிது ஆகிய உலகத்து
நிலவன்மாரோ புரவலர் துன்னிநிலவன்மாரோ புரவலர் துன்னி
பெரிய ஓதினும் சிறிய உணராபெரிய ஓதினும் சிறிய உணரா
பீடு இன்று பெருகிய திருவின்பீடு இன்று பெருகிய திருவின்
பாடு இல் மன்னரை பாடன்மார் எமரேபாடு இல் மன்னரை பாடன்மார் எமரே