புறநானூறு 226 – 250

                                     
# 226 மாறோக்கத்து நப்பசலையார்# 226 மாறோக்கத்து நப்பசலையார்
செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்மனத்துள் கறுவிக்கொண்டோ, வெளிப்படையாக வெகுண்டோ,
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோமெய்தீண்டி வருத்தியோ இருந்திருந்தால் அதற்கு உய்வு இருந்திருக்காது;
பாடுநர் போல கைதொழுது ஏத்திபாடுவோர் போல் வந்து தொழுது வணங்கி, வாழ்த்தி,
இரந்தன்று ஆகல் வேண்டும் பொலம் தார்அவனை இரந்து கேட்டுத்தான் அவன் உயிரை நீ கொண்டு சென்றிருக்க வேண்டும். பொன்மாலையையும்,
மண்டு அமர் கடக்கும் தானை                        5உக்கிரமாகப் போரில் பகைவரை அழிக்கும் படையையும்,
திண் தேர் வளவன் கொண்ட கூற்றேதிண்மையான தேரையும் உடைய கிள்ளிவளவனின் உயிரைக் கொண்ட கூற்று.
                                     
# 227 ஆவடுதுறை மாசாத்தனார்# 227 ஆவடுதுறை மாசாத்தனார்
நனி பேதையே நயன் இல் கூற்றம்மிகவும் அறிவற்றவன் நீ, இரக்கமற்ற கூற்றமே!
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனைவிவேகம் இல்லாததால், நீ விதையைச் சமைத்து உண்டாய்,
இன்னும் காண்குவை நன் வாய் ஆகுதல்இன்னமும் காண்பாய் நான் சொல்லுவது மெய்யே என்று;
ஒளிறு வாள் மறவரும் களிறும் மாவும்ஒளிருகின்ற வாளையுடைய வீரர்களும், யானைகளும், குதிரைகளும்
குருதி அம் குரூஉ புனல் பொரு_களத்து ஒழிய 5இரத்தம் என்னும் அழகிய சிவப்பு நிற நீர் பெருகும் போர்க்களத்தில் இறந்துபட,
நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின்அதற்கும் நிறைவடையாமல், நாள்தோறும் பகைவர் படைகளை வென்று அழித்து, என்றும் உன்னை
வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல்வாட்டும் பசியைத் தீர்க்கும் பழியற்ற ஆற்றல் உடையவனாகிய,
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண்உன்னைப் போல் பொன்னால் செய்த பெரிய அணிகளை அணிந்த
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணிவளவன் என்னும் வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்த
இனையோன் கொண்டனை ஆயின்           10இத்தன்மையுடையவனின் உயிரைப் பறித்தாய்.
இனி யார் மற்று நின் பசி தீர்ப்போரேஇனி உன் பசியைத் தீர்ப்பவர் யார்?
                                     
# 228 ஐயூர் முடவனார்# 228 ஐயூர் முடவனார்
கலம் செய் கோவே கலம் செய் கோவேமண்பாத்திரங்களைச் செய்யும் குயவனே! மண்பாத்திரங்களைச் செய்யும் குயவனே!
இருள் திணிந்து அன்ன குரூஉ திரள் பரூஉ புகைஇருள் ஓரிடத்தில் செறிவாய் நின்றதைப் போல் கரிய நிறத்தில் திரண்ட மிகுந்த புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளைஅகன்ற பெரிய ஆகாயத்தில் சென்று தங்கும் சூளையையுடைய
நனம் தலை மூதூர் கலம் செய் கோவேஅகன்ற இடத்தையுடைய பழைய ஊரில் மண்பாத்திரங்கள் செய்யும் குயவனே!
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல்            5நீ என்ன பாடு படுவாயோ? நீ இரங்கத் தக்கவன்.
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானைநிலமெல்லாம் பரப்பிய மிகப் பெரிய படையையுடைய,
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசைபுலவர்களால் புகழப்பட்ட பொய்மை இல்லாத நல்ல புகழையுடைய,
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்னவிரிந்த கதிர்களையுடைய ஞாயிறு, வானத்தில் ஊர்ந்து ஏறுவது போன்ற
சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்தொலைவிலும் விளங்கும் சிறப்பையுடைய சோழர் குலத்தின் வழித்தோன்றல்
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்           10கொடி அசைந்தாடும் யானைகளையுடைய மிகப் பெரிய வளவன்
தேவர்_உலகம் எய்தினன் ஆதலின்தேவருலகம் அடைந்தானாக,
அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழிஅவனை அடக்கம் செய்வதற்கேற்ற இடம் அகன்ற தாழியைச்
வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம்செய்ய விரும்பினாய் என்றால், எப்படியும்
இரு நிலம் திகிரியா பெரு மலைபெரிய நில உலகத்தைச் சக்கரமாகவும், பெரிய இமயமலையை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே            15மண்ணாகவும் கொண்டு உன்னால் அந்தத் தாழியைச் செய்ய முடியுமா? – (நீ இரங்கத் தக்கவன்.)
                                     
# 229 கூடலூர் கிழார்# 229 கூடலூர் கிழார்
ஆடு இயல் அழல் குட்டத்துமேட இராசியில் உள்ள கார்த்திகை நாளில் முதல் கால்பகுதியில்
ஆர் இருள் அரை இரவில்இருள் நிறைந்த நடு இரவில்,
முட பனையத்து வேர் முதலாவளைந்த பனை போல் இருக்கும் அனுடத்தின் அடிப்பகுதிக்கு முந்திய மீனாகிய கேட்டை முதலாக,
கடை குளத்து கயம் காயகுளத்தைப்போல் தோற்றமளிக்கும் புனர்பூசத்தின் முடிவில் உள்ள திருவாதிரை எல்லையாக உள்ள
பங்குனி உயர் அழுவத்து                   5ஒரு பங்குனி மாதத்து முதற் பதினைந்து நாட்களுள்,  
தலை நாள்_மீன் நிலை திரியஉச்சமாகிய உத்தர நட்சத்திரம் உச்சியிலிருந்து சாய
நிலை நாள்_மீன் அதன்_எதிர் ஏர்தரஅந்த உத்தர நட்சத்திரத்திற்கு எட்டம் நட்சத்திரமாகிய மூலம் அதற்கு எதிராக எழ,
தொல் நாள்_மீன் துறை படியஅந்த உத்தரத்திற்கு முன் எட்டாம் நட்சத்திரமாகிய மிருகசீரிடம் மேற்கே சாய்ந்து மறையும் நேரத்தில்
பாசி செல்லாது ஊசி துன்னாதுகிழக்கும் போகாமல், வடக்கும் போகாமல்,
அளக்கர் திணை விளக்கு ஆக                 10கடல் சூழ்ந்த உலகுக்கு விளக்குப் போல்
கனை எரி பரப்ப கால் எதிர்பு பொங்கிதீப்பரந்து சிதறி விழ, காற்றில் கிளர்ந்து எழுந்து 
ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பினானேவானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் விழுந்தது,
அது கண்டு யாமும் பிறரும் பல் வேறு இரவலர்அதைக் கண்டு, நாமும் மற்றவரும் பல்வேறு இரவலரும்,
பறை இசை அருவி நன் நாட்டு பொருநன்“பறை ஓசைபோல் ஒலிக்கும் அருவிகள் நிறைந்த நல்ல மலைநாட்டின் தலைவன்
நோய் இலன் ஆயின் நன்று-மன் தில் என               15நோயின்றி இருப்பது நல்லது” என்று
அழிந்த நெஞ்சம் மடி உளம் பரப்பவருந்திய நெஞ்சத்துடன் வாடிக் கலங்கி
அஞ்சினம் எழு நாள் வந்தன்று இன்றேஅஞ்சினோம்; அந்த நட்சத்திரம் விழுந்து ஏழாம் நாள். இன்று,
மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும்வலிய யானை தன் தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்கவும்
திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும்வாரால் பிணிக்கப்பட்ட முரசு கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்             20காவலுக்கு அடையாளமாக இருக்கும் கொற்றக்குடையின் காம்பு ஒடிந்து சிதையவும்
கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும்காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள் நிலைகலங்கி நிற்கவும்
மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின்விண்ணுலகம் அடைந்தான், ஆகையால்
ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகிஒளி மிக்க வளையல்களையுடைய மகளிர்க்கு உற்ற துணையாகி
தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோதனக்குத் துணையாக வந்த பெண்களையும் மறந்தனனோ?
பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு             25பகைவரைக் கொல்லும் வலிமையும், தன்னை நாடி வந்தவர்களுக்கு
அளந்து கொடை அறியா ஈகைஅளக்காமல் பொருட்களை அளித்த கொடைவள்ளலும்,
மணி வரை அன்ன மாஅயோனேநீல மலையைப் போன்ற திருமால் போன்றவனுமாகிய சேரன் 
                                     
# 230 அரிசில்கிழார்# 230 அரிசில்கிழார்
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்கன்றுகளுடன் கூடிய பசுக்களின் கூட்டம் காட்டிலே பாதுகாப்பாகத் தங்கி இருக்கவும்,
வெம் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும்சூடேறிய கால்களுடன் நடந்து வந்த வழிப்போக்கர்கள் தாம் விரும்பிய இடங்களில் தங்கவும்,
களம் மலி குப்பை காப்பு இல வைகவும்களத்தில் நிறைந்த நெற்குவியல்கள் காவல் இன்றிக் கிடக்கவும்,
விலங்கு பகை கடிந்த கலங்கா செங்கோல்எதிர்த்து வந்த பகையை விரட்டி, நிலைகலங்காத செங்கோல் ஆட்சி புரிந்து,
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள்    5உலகம் புகழும் போரைச் செய்யும் ஒளி பொருந்திய வாளையுடைய,
பொய்யா எழினி பொருது களம் சேரபொய் கூறாத எழினி போர்க்களத்தில் இறக்க,
ஈன்றோள் நீத்த குழவி போலபெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தை போல்
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனையதன்னை விரும்பும் சுற்றத்தார் வேறுவேறு இடங்களில் இருந்து வருந்த,
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடுமிகுந்த பசியால் வருந்திய துன்பம் மிகுந்த நெஞ்சத்தோடு,
நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி              10அவனை இழந்து வருத்தமுற்றுக் கிடந்த உலகத்தைக் காட்டிலும் மிகப் பெரிதாக
நீ இழந்தனையே அறன் இல் கூற்றம்நீ இழந்துவிட்டாய், அறமில்லாத கூற்றமே!.
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான்தன் வாழ்க்கைக்கு ஏதுவாக விளையும் வயலின் வளத்தை அறியாதவனாய்
வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்குவறுமையுற்ற குடியில் உள்ள உழவன் விதைகளைச் சமைத்து உண்ட போல்
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின்இந்த ஒருவனது பெறுதற்கரிய உயிரை உண்ணாமல் இருந்திருப்பாயாயின்,
நேரார் பல் உயிர் பருகி                  15பல பகைவர்களுடைய உயிர்களை உண்டு
ஆர்குவை-மன்னோ அவன் அமர் அடு_களத்தேநீ நிறைவடைந்திருப்பாய், அவன் பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில்.
                                     
  
  
  
  
  
# 231 ஔவையார்# 231 ஔவையார்
எறி புன குறவன் குறையல் அன்னதினைப்புனத்திற்காகக் குறவன் வெட்டிய மரத்துண்டம் போல்
கரி புற விறகின் ஈம ஒள் அழல்கரிந்த வெளிப்பக்கம் உடைய விறகு அடுக்கிய ஈமத்தீயின் ஒளிநிறைந்த தீக்கொழுந்துகள்
குறுகினும் குறுகுக குறுகாது சென்றுஉடலை நெருங்கினாலும் நெருங்கட்டும்; நெருங்காமல் போய்
விசும்பு உற நீளினும் நீள்க பசும் கதிர்வானளாவ ஓங்கினும் ஓங்கட்டும், குளிர்ந்த சுடர் கொண்ட
திங்கள் அன்ன வெண்குடை                   5திங்களைப் போன்ற வெண்கொற்றக்குடையை உடைய,
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவேஓளிபொருந்திய ஞாயிற்றைப் போன்றவனது புகழ் அழியாது.
                                     
# 232 ஔவையார்# 232 ஔவையார்
இல் ஆகியரோ காலை மாலைஇல்லாமல் போகட்டும். காலையும் மாலையும் 
அல் ஆகியர் யான் வாழும் நாளேஇல்லாமல் போகட்டும் என் வாழ்நாட்களும்
நடுகல் பீலி சூட்டி நார் அரிநடுகல்லுக்கு மயில் தோகையைச் சூட்டி, நாரால் வடிக்கப்பட்ட மதுவை
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்-கொல்லோஒரு சிறிய கலத்தில் ஊற்றிக் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வானோ?
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய            5ஓங்கிய சிகரத்தையுடைய உயர்ந்த மலையுடன் கூடிய
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனேநாடு முழுவதும் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன்.
                                     
# 233 வெள்ளெருக்கிலையார்# 233 வெள்ளெருக்கிலையார்
பொய் ஆகியரோ பொய் ஆகியரோபொய்யாகட்டும், பொய்யாகட்டும்,
பா அடி யானை பரிசிலர்க்கு அருகாபெரிய பாதங்களையுடைய யானைகளைப் பரிசிலருக்குக் குறையாது வழங்கிய
சீர் கெழு நோன் தாள் அகுதை_கண் தோன்றியசிறந்த, வலிய முயற்சியையுடைய அகுதையிடத்து உள்ள(தாகச் சொல்லப்பட்ட)
பொன் புனை திகிரியின் பொய் ஆகியரோபொன்னால் செய்யப்பட்ட சக்கரப்படையைப் போல பொய்யாகட்டும்,
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண்            5பெரிய பாண் சுற்றத்துக்குத் தலைவனும், மிகுந்த அணிகலன்களை அணிந்தவனும்,
போர் அடு தானை எவ்வி மார்பின்போரில் பகைவரை அழிக்கும் பெரிய படையையுடையவனுமாகிய வேள் எவ்வியின் மார்பில்
எஃகு உறு விழுப்புண் பல எனவேலால் உண்டான விழுப்புண்கள் பல என்று
வைகுறு விடியல் இயம்பிய குரலேஇன்று அதிகாலையில் வந்த செய்தி – (பொய்யாகட்டும், பொய்யாகட்டும்.)
                                     
# 234 வெள்ளெருக்கிலையார்# 234 வெள்ளெருக்கிலையார்
நோகோ யானே தேய்கமா காலைமனம் நொந்துபோகிறேன் நான், என் வாழ்நாட்கள் இன்றோடு ஒழியட்டும்.
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகிஒரு பெண் யானையின் கால் அடி அளவே உள்ள சிறிய இடத்தை மெழுகி,
தன் அமர் காதலி புல் மேல் வைத்தஅவனை விரும்பும் அவன் மனைவி அங்கிருந்த புல் மேல் படைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல்இனிய, சிறிதளவு உணவை எப்படித்தான் உண்டானோ?
உலகு புக திறந்த வாயில்                  5உலகத்து மக்களெல்லம் நுழையும்படியாகத் திறந்த வாயிலை உடைய,
பலரோடு உண்டல் மரீஇயோனேபலரோடும் சேர்ந்து உண்பதை வழக்கமாகக் கொண்டவன்.
                                     
# 235 ஔவையார்# 235 ஔவையார்
சிறிய கள் பெறினே எமக்கு ஈயும்-மன்னேசிறிதளவு கள்ளைப் பெற்றால் எமக்குத் தருவான்;
பெரிய கள் பெறினேபெருமளவு கள்ளைப் பெற்றால்
யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும்-மன்னேஅதனை நாங்கள் உண்டு பாட, அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்;
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னேசிறிதளவு சோறாக இருந்தாலும் அதை மிகப் பல கலங்களில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்பான்;
பெரும் சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே  5பெருமளவு சோறாக இருந்தாலும், அதை மிகப் பல கலங்களில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்பான்;
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னேஎலும்போடு கூடிய தசை கிடைக்கும் இடம் முழுதும் எமக்கு அளிப்பான்;
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னேஅம்புடன் வேல் தைக்கும் இடமாகிய போர்க்களங்கள் எல்லாவற்றிலும் தானே சென்று நிற்பான்;
நரந்தம் நாறும் தன் கையால்நரந்தம் மணக்கும் தன் கையால்
புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னேபுலால் மணக்கும் என் தலையை அன்போடு தடவுவான்;
அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ      10அரிய தலைமையுடைய பெரிய பாணர் கூட்டத்தினரின் அகன்ற உண்கலங்களைத் துளைத்து
இரப்போர் கையுளும் போகிஇரப்போர் கைகளையும் ஊடுருவி,
புரப்போர் புன்கண் பாவை சோரஅவன் பாதுகாக்கும் சுற்றத்தாரின் துன்பம் மிகுந்த கண் பாவை ஒளி மழுங்கிப்போக,
அம் சொல் நுண் தேர்ச்சி புலவர் நாவில்அழகிய சொல்லும் ஆராய்ந்த அறிவும் உடைய புலவர்களின் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்சென்று வீழ்ந்தது அவன்
அரு நிறத்து இயங்கிய வேலே                        15அரிய மார்பைத் துளைத்த வேல்;
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோஎமக்குப் பற்றுக்கோடாக இருந்த எம் இறைவன் இப்பொழுது எங்குள்ளானோ?
இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லைஇனிப் பாடுவோரும் இல்லை; பாடுவோருக்கு ஒன்று ஈவோரும் இல்லை.
பனி துறை பகன்றை நறை கொள் மா மலர்குளிர்ந்த நீர்த்துறையில் உள்ள தேனொழுகும் பெரிய பகன்றை மலர்
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்றுபிறரால் சூடப்படாது கழிந்தாற் போல, பிறர்க்கு ஒன்றும்
ஈயாது வீயும் உயிர் தவ பலவே                      20கொடுக்காமல் வாழ்ந்து இறப்பவர் மிகப் பலர்.
                                     
# 236 கபிலர்# 236 கபிலர்
கலை உண கிழிந்த முழவு மருள் பெரும் பழம்குரங்கு பிளந்து உண்டதால் கிழிந்துபோன முழவு போன்ற பெரிய பலாப்பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்வில்லுடன் கூடிய குறவர்களுக்கு சில நாட்கள் வைத்து உண்ணக்கூடிய உணவாகும்
மலை கெழு நாட மா வண் பாரிமலைகள் பொருந்திய நாட்டையுடையவனே!, பெரிய வள்ளல் தன்மை வாய்ந்த பாரியே!
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்நீயும் நானும் கூடியிருந்த நட்பிற்குத் தகுந்தவாறு நீ நடவாமல் என்னை
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே             5வெறுத்தவன் ஆகிவிட்டாய்; பல ஆண்டுகள் நீ என்னைப் பாதுகாத்திருந்தாலும்
பெரும் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாதுபெருமைக்குரிய, சிறந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில்,
ஒருங்கு வரல் விடாஅது ஒழிக என கூறிநானும் உன்னுடன் கூட வருவதற்கு இசையாமல், “இங்கே இருந்து வருக” எனக் கூறி
இனையை ஆதலின் நினக்கு மற்று யான்இப்படி நீ வேறுபட்டவனாக ஆகிவிட்டதனால், உனக்கு நான்
மேயினேன் அன்மையானே ஆயினும்ஏற்றவனாக இல்லாமல் போய்விட்டேன் என்று நினைக்கிறேன். ஆயினும்,
இம்மை போல காட்டி உம்மை                  10இப் பிறவியில் நீயும் நானும் இன்புற்றிருந்ததைப் போல் காட்டி, மறுபிறவிலும்
இடை இல் காட்சி நின்னோடுஇடைவிடாமல் காட்சியளிக்கும் உன்னுடன்
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலேகூடி வாழ்வதை இயன்றதாக்குக உயர்ந்த நல்வினையே!
                                     
# 237 பெருஞ்சித்திரனார்# 237 பெருஞ்சித்திரனார்
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகிநெடுங்காலம் வாழ்க என்று நான் நெடிய வாயிலை அணுகிப்
பாடி நின்ற பசி நாள் கண்ணேபாடி நின்ற பசியையுடைய நாளில்,
கோடை காலத்து கொழு நிழல் ஆகிகோடைக்காலத்துக்கேற்ற கொழுத்த நிழலாக இருந்து,
பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல்யாரிடத்திலும் பொய் கூறாத அறிவுடையவன் செவிகளில்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என             5விதைத்த கேள்வியாகிய பயிர் நன்கு விளைந்தது என்று நினைத்துப்
நச்சி இருந்த நசை பழுது ஆகபரிசிலை விரும்பியிருந்த என் விருப்பம் பயனில்லாமல் போக,
அட்ட குழிசி அழல் பயந்து ஆஅங்குசமைத்த சோற்றுப் பானையிலிருந்து நெருப்பு புறப்பட்டது போல,
அளியர் தாமே ஆர்க என்னாஇரங்கத்தக்க இரவலர்கள் உண்ணட்டும் என்று எண்ணாத
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணியஅறமற்ற கூற்றுவன், இவன் உயிர் கொள்ளத்தக்கதா என்ற கூறுபாடு இன்றி கொல்லத் துணிய,
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்                    10முறைப்படி தம் மார்பில் வெப்பமுண்டாகுமாறு அடித்துக் கொண்ட மகளிரின்
வாழை பூவின் வளை முறி சிதறகை வளையல்களின் முறிந்த துண்டுகள் வாழைப் பூப்போல் சிதற,
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்கமுதிய வாக்கினையுடைய சுற்றத்தாரும் பரிசிலரும் வருந்த,
கள்ளி போகிய களரி அம் பறந்தலைகள்ளிச் செடிகள் விளையும் பாழிடங்களிலுள்ள சுடுகாட்டில்,
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனேஒளியுடைய வேலையுடைய வீரன் இறந்துபோய்ச் சேர்ந்தான்;
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை               15கூற்றுவன் நோயின்றி இருப்பானாக! உயர்ந்த மலையில்,
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின்புலி பார்த்துத் தாக்கிய யானையாகிய இரை தப்பிப் போனால்,
எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரைபுலி எலியைப் பார்த்துத் தாக்காது, அலைகள் மிகுந்த
கடல் மண்டு புனலின் இழுமென சென்றுகடலில் விரைந்து சென்று சேரும் ஆற்று நீர்போல், நாமும் விரைந்து சென்று
நனி உடை பரிசில் தருகம்மிகுந்த பரிசிலைப் பெற்று வருவோம்.
எழு-மதி நெஞ்சே துணிபு முந்துறுத்தே              20நெஞ்சே! துணிவை முன்வைத்து எழுவாயாக.
                                     
# 238 பெருஞ்சித்திரனார்# 238 பெருஞ்சித்திரனார்
கவி செம் தாழி குவி புறத்து இருந்தபிணமிட்டுக் கவிழ்த்துப் புதைக்கப்பட்ட சிவந்த தாழியின் குவிந்த மேற்புறத்தில் இருந்த
செவி செம் சேவலும் பொகுவலும் வெருவாசிவந்த காதுகளையுடைய ஆண்கழுகுகளும், பெண்கழுகுகளும், அச்சமில்லாமல்,
வாய் வன் காக்கையும் கூகையும் கூடிவலிய வாயையுடைய காக்கையும், கோட்டானும் கூடியிருக்க,
பேஎய் ஆயமொடு பெட்டு ஆங்கு வழங்கும்பேய்களின் கூட்டத்தோடு தாம் விரும்பியபடி திரிகின்ற
காடு முன்னினனே கள் காமுறுநன்            5இடுகாட்டைச் சேர்ந்துவிட்டான், கள்ளை விரும்புகின்றவன்;
தொடி_கழி_மகளிரின் தொல் கவின் வாடிஅவனை இழந்த, வளையல்களை நீக்கிய அவன் மனைவியர் போல் முன்பிருந்த அழகு அழிந்து,
பாடுநர் கடும்பும் பையென்றனவேபாடுபவர்களின் சுற்றத்தினரும் கண்களில் ஒளி மழுங்க வருந்தினர்;
தோடு கொள் முரசும் கிழிந்தன கண்ணேதொகுதியாக இருந்த முரசுகளின் கண்கள் கிழிந்தன;
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவேபாகர்கள் இல்லாத, மலைபோன்ற யானைகள் தம் தந்தங்களை இழந்தன;
வெம் திறல் கூற்றம் பெரும் பேது உறுப்ப           10கொடும் திறம் கொண்ட கூற்றுவன் கொடிய இறப்பைச் செய்துவிக்க,
எந்தை ஆகுல அதன் படல் அறியேன்என் தலைவன் இறந்துபட, அவ்வாறு அவன் படுதலை அறியாமல்
அந்தோ அளியேன் வந்தனென் மன்றஅந்தோ! இரக்கத்திற்குரியவனான நான் அவனைக் காண வந்தேன்.
என் ஆகுவர்-கொல் என் துன்னியோரேஎன்னைச் சேர்ந்த சுற்றத்தார் என்ன ஆவார்களோ?
மாரி இரவின் மரம் கவிழ் பொழுதின்மழைபொழியும் இரவில், மரக்கலம் கவிழ்ந்த நேரத்தில்,
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்கு         15பொறுக்கமுடியாத துன்பமுற்ற நெஞ்சத்துடனே, ஒருசேரக்
கண் இல் ஊமன் கடல் பட்டு ஆங்குகண்ணும் பேச்சும் இல்லாத ஒருவன் கடலில் விழுந்ததைப் போல்
வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்துஎல்லையைக் காணமுடியாத, அலைகள் இல்லாத வெள்ளத்தில்
அவல மறு சுழி மறுகலின்கொடிய துன்பமாகிய சுழலில் சுழலுவதைவிட
தவலே நன்று-மன் தகுதியும் அதுவேஇறப்பதே நல்லது, அது நமக்குத் தகுந்த செயலும் ஆகும்.
                                     
# 239 பேரெயில் முறுவலார்# 239 பேரெயில் முறுவலார்
தொடி உடைய தோள் மணந்தனன்வளையல்கள் அணிந்த மகளிரின் தோளைத் தழுவினான்;
கடி காவில் பூ சூடினன்காவலுடைய சோலையிலுள்ள மரங்களிலுள்ள பூக்களைச் சூடினான்;
தண் கமழும் சாந்து நீவினன்குளிர்ந்த, மணக்கும் சந்தனம் பூசினான்;
செற்றோரை வழி தபுத்தனன்பகைவரைக் கிளையோடு அழித்தான்;
நட்டோரை உயர்பு கூறினன்                  5நண்பர்களை உயர்வாகக் கூறினான்;
வலியர் என வழிமொழியலன்வலிமையுடையவர்கள் என்பதால் ஒருவரிடம் பணிந்து பேசமாட்டான்;
மெலியர் என மீக்கூறலன்தம்மைவிட வலிமை குறைந்தவர்களிடம் தன்னைப் பெரிதாகப் பேசமாட்டான்;
பிறரை தான் இரப்பு அறியலன்பிறரிடம் ஒன்றை இரப்பதை அறியாதவன்;
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்தன்னிடம் இரப்பவர்களுக்கு இல்லையென்று கொடுக்க மறுப்பதை அறியாதவன்;
வேந்து உடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்       10வேந்தர்களின் அவையில் தனது உயர்ந்த புகழ் தோன்றுமாறு செய்தான்;
வரு படை எதிர்தாங்கினன்தன்னை எதிர்த்துவரும் படையை முன்நின்று தடுத்தான்;
பெயர் படை புறங்கண்டனன்தோற்று ஓடும் படையைத் தொடர்ந்து பின் செல்லாமல் நின்றான்;
கடும் பரிய மா கடவினன்விரைந்து செல்லும் குதிரையைச் செலுத்தினான்;
நெடும் தெருவில் தேர் வழங்கினன்நெடிய தெருக்களில் தேரை ஓட்டினான்;
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்                       15உயர்ந்த இயல்புடைய யானையின்மீது சென்றான்;
தீம் செறி தசும்பு தொலைச்சினன்இனிமையான கள் நிரம்பிய குடங்களைப் பலரோடு பகிர்ந்து குடித்து முடித்தான்;
பாண் உவப்ப பசி தீர்த்தனன்பாணர்கள் மகிழுமாறு அவர்கள் பசியைப் போக்கினான்;
மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்குபிறரைக் குழப்பும் சொற்களைக் கூறுவதைத் தவிர்த்தான்; இவ்வாறு,
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்அவன் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தான், ஆகவே,
இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ                  20புதைத்தாலும் சரி; அல்லது எரித்தாலும் சரி,
படு வழி படுக இ புகழ் வெய்யோன் தலையேஇப் புகழை விரும்புவோனது தலையை – நடப்பது நடக்கட்டும்.
  
# 240 குட்டுவன் கீரனார்# 240 குட்டுவன் கீரனார்
ஆடு நடை புரவியும் களிறும் தேரும்வெற்றி நடைபோடும் குதிரையும், யானையும், தேரும்,
வாடா யாணர் நாடும் ஊரும்குறையாத வருவாய் உள்ள நாடும், ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்பாடுபவர்களுக்குக் குறையாது வழங்குபவன் ஆய் அண்டிரன்.
கோடு ஏந்து அல்குல் குறும் தொடி மகளிரொடுபக்கங்கள் ஏந்திய அல்குலையுடைய, சிறிய வளையல்களை அணிந்த மனைவியரோடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப            5காலன் என்று சொல்லப்படும் கருணை இல்லாதவன் கொண்டுபோக
மேலோர்_உலகம் எய்தினன் எனாஅவிண்ணுலகம் அடைந்தான் என்று
பொத்த அறையுள் போழ் வாய் கூகைபொந்தில் வாழும் பிளந்த வாயையுடைய ஆந்தை,
சுட்டு குவி என செத்தோர் பயிரும்“சுட்டுக் குவி” என்று செத்தவர்களை அழைப்பது போலக் கூவும்
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கிகள்ளியையுடைய பாழிடமாகிய காட்டில் ஒருபக்கத்தில் வைத்து
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது                  10ஒளிமிக்க தீச் சுடுவதால் அவனுடைய உடல் அழிந்துவிட்டது;
புல்லென் கண்ணர் புரவலர் காணாதுபொலிவிழந்த கண்களையுடையவர்களாய், தம்மைப் பாதுகாப்போனைக் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்ஆரவாரிக்கும் சுற்றத்துடன் செயலிழந்து நிற்கும் புலவர்கள்
வாடிய பசியர் ஆகி பிறர்தம் உடலை வாட்டும் பசியுள்ளவராய், வேறு
நாடு படு செலவினர் ஆயினர் இனியேநாடுகளுக்குச் செல்லும் பயணத்தை மேற்கொண்டனர், இப்பொழுது.
                                     
  
  
  
  
  
# 241 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்# 241 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார்உறுதியான தேர்களை இரவலர்க்கு அளித்த, குளிர்ந்த மாலையணிந்த
அண்டிரன் வரூஉம் என்ன ஒண் தொடிஆய் அண்டிரன் வருகிறான் என்று, ஒளி பொருந்திய வீர வளைகளையும்,
வச்சிர தட கை நெடியோன் கோயிலுள்வச்சிரம் என்னும் ஆயுதத்தையும், பெரிய கையையும் உடைய இந்திரனின் அரண்மனையில்,
போர்ப்பு_உறு முரசும் கறங்கபோர்த்தப்பட்ட முரசுகள் முழங்க,
ஆர்ப்பு எழுந்தன்றால் விசும்பினானே               5ஆரவார ஒலி வானத்தில் எழுந்தது.
                                     
# 242 குடவாயி தீரத்தனாரி# 242 குடவாயி தீரத்தனாரி
இளையோர் சூடார் வளையோர் கொய்யார்இளம் ஆடவர் தலைமாலையாய் சூடிக்கொள்ளார்; வளையல் அணிந்த மகளிர் கொய்யமாட்டார்கள்;
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கிநல்ல யாழின் தண்டால் மெதுவாக வளைத்துப் பறித்துப்
பாணன் சூடான் பாடினி அணியாள்பாணனும் சூடமாட்டன்; பாடினியும் அணிந்துகொள்ளமாட்டாள்.
ஆண்மை தோன்ற ஆடவர் கடந்ததன்னுடைய வீரம் வெளிப்படுமாறு பகைவர்களின் வீரர்களைக் கொன்ற,
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை         5வலிய வேலையுடைய சாத்தன் இறந்த பிறகு,
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டேமுல்லையே! ஒல்லையூர் நாட்டில் பூத்தாயோ?
                                     
# 243 தொடித்தலை விழுத்தண்டினார்# 243 தொடித்தலை விழுத்தண்டினார்
இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல்இப்பொழுது நினைத்தால் மனவருத்தமாக உள்ளது. செறிவான மணலால்
செய்வு_உறு பாவைக்கு கொய் பூ தைஇசெய்யப்பட்ட பொம்மைக்கு, பறித்த பூவைச் சூடி,
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்துகுளிர்ந்த பொய்கையில் விளையாடும் பெண்களோடு கை கோத்து,
தழுவு_வழி தழீஇ தூங்கு_வழி தூங்கிஅவர்கள் தழுவும் பொழுது தழுவி, அவர்கள் ஆடும் பொழுது ஆடி,
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு         5ஒளிவு மறைவு இல்லாமல் வஞ்சனை இல்லாத இளையோர் கூட்டத்தோடு
உயர் சினை மருத துறை உற தாழ்ந்துஉயர்ந்த கிளைகளையுடைய மருதமரத்தின் நீர்த்துறையில் படும்படி தாழ்வாக
நீர் நணி படி கோடு ஏறி சீர் மிகநீர்க்கு மிக அண்மையிலே படிந்த கிளையைப் பற்றி ஏறி, அழகு மிக,
கரையவர் மருள திரை_அகம் பிதிரகரைகளில் உள்ளோர் வியக்க, நீரலைகளிலிருந்து நீர்த்துளிகள் சிதற,
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்துஆழமான நீரையுடைய மடுவில், “துடும்” எனக் குதித்து,
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை          10மூழ்கி, அடிமணலை அள்ளிக்கொண்டுவந்து காட்டிய அறியாமை மிகுந்த இளமை
அளிதோ தானே யாண்டு உண்டு-கொல்லோஇரங்கத் தக்கது., அந்த இளமை இப்பொழுது எங்கு உள்ளதோ?
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு_உற்றுபூண் சூட்டிய நுனியையுடைய பருத்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து,
இரும் இடை மிடைந்த சில சொல்இருமல்களுக்கு இடைஇடையே வந்த சில சொற்களைக் கூறும்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கேபெரிய முதியவர்களாகிய எமக்கு – (அந்த இளமை இப்பொழுது எங்கு உள்ளதோ?)
                                     
# 244# 244
பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதாபாணர்களின் தலைகளில் வண்டுகள் சென்று தாது ஊதுவதில்லை,
விறலியர் முன்கையும் தொடியின் பொலியாவிறலியரின் முன்கைகளில் வளையல்கள் அழகு செய்யவில்லை.
இரவல் மாக்களும்இரவலர்களும் —
                                     
# 245 சேரமான் கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை# 245 சேரமான் கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை
யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தேஎவ்வளவு பெரியதாயினும், நான் உறும் துன்பம் அவ்வளவு வலிமை உடையதன்று.
உயிர் செகுக்க அல்லா மதுகைத்து அன்மையின்அது என் உயிரை அழிக்கும் வலிமை இல்லாததால்,
கள்ளி போகிய களரி அம் பறந்தலைகள்ளிச்செடிகள் ஓங்கி வளர்ந்த களர் நிலமாகிய பாழிடத்தில்,
வெள் இடை பொத்திய விளை விறகு ஈமத்துவெட்ட வெளியில் மூட்டிய தீயை விளைவிக்கும் விறகடுக்கான ஈமத்தின்
ஒள் அழல் பள்ளி பாயல் சேர்த்தி                   5ஒளி பெருகும் நெருப்பாகிய படுக்கையில் கிடத்தப்பட்டு
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தைமேலுலகம் சென்றாள் என் மனைவி,
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பேஆனால், நான் இன்னும் வாழ்கின்றேனே! என்ன இந்த உலகத்தின் இயற்கை?
                                     
# 246 பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு# 246 பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பல் சான்றீரே பல் சான்றீரேபலராய்க் கூடியிருக்கும் பெரியோர்களே! பலராய்க் கூடியிருக்கும் பெரியோர்களே!
செல்க என சொல்லாது ஒழிக என விலக்கும்”உன் கணவனோடு நீ இறந்து போ” என்று கூறாது, நானும் ஈமத்தீயில் இறப்பதைத் ”தவிர்க” என்று கூறும்
பொல்லா சூழ்ச்சி பல் சான்றீரேபொல்லாத சிந்தனையையுடைய பல பெரியோர்களே!
அணில்_வரி_கொடும்_காய் வாள் போழ்ந்திட்டஅணிலின் மேலுள்ளது போன்ற வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது           5விதைகளைப் போன்ற, வெள்ளை நிறமான, மணமுள்ள, நெய் கலவாத,
அடை இடை கிடந்த கை பிழி பிண்டம்பானையின் அடிப்பகுதியில் நீருடன் கிடந்ததைக் கையால் எடுத்துப் பிழிந்த சோற்றுத்திரளோடு,
வெள் என் சாந்தொடு புளி பெய்து அட்டவெள்ளை எள்ளை அரைத்து ஆக்கிய துவையலுடன், புளியிட்டுச் சமைத்த
வேளை வெந்ததை வல்சி ஆகவேகவைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு,
பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும்பருக்கைக் கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் படுத்துக்கிடக்கும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ           10கைம்மை நோன்பால் வருந்தும் பெண்களில் நான் ஒருத்தி அல்லள்;
பெரும் காட்டு பண்ணிய கரும் கோட்டு ஈமம்சுடுகாட்டில் கரிய கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை
நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம்உங்களுக்குத் தாங்க முடியாததாக இருக்கலாம்; எனக்கு என்
பெரும் தோள் கணவன் மாய்ந்து என அரும்பு அறபெரிய தோள்களையுடைய கணவர் இறந்ததால், அரும்புகளே இல்லாமல்,
வள் இதழ் அவிழ்ந்த தாமரைவளமான இதழ்களையுடைய மலர்ந்த தாமரைகளை உடைய
நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே           15நீர் செறிந்த பெரிய பொய்கையும் தீயும் ஒன்றேதான்.
                                     
# 247 மதுரை பேராலவாயர்# 247 மதுரை பேராலவாயர்
யானை தந்த முளி மர விறகின்யானை கொண்டுவந்து தந்த காய்ந்த மர விறகால்
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்துவேடர்கள் தீ மூட்டக் கடைந்து கொள்ளப்பட்ட நெருப்பின் வெளிச்சத்தில்
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பிபடுத்திருக்கும் மடப்பம் பொருந்திய மான்களின் கூட்டத்தை உறக்கத்திலிருந்து எழுப்பி,
மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில்குரங்குகள் அந்த இடத்தைச் சுத்தப்படுத்தும் பெண் தெய்வக் கோயில் முற்றத்தில்
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ               5நீர் வடியும் கூந்தல் பெரிய முதுகில் விழுந்து கிடக்க,
பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கிபெரும் துயரம் உடைய கண்களோடு, சுடுகாட்டை நோக்கி
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன்மனம் கலங்குகிறாள், தன் கணவனின்
முழவு கண் துயிலா கடி உடை வியன் நகர்ஓயாது முரசு ஒலிக்கும், காவலுடைய பெரிய அரண்மனையில்
சிறு நனி தமியள் ஆயினும்சிறுபொழுது தன் கணவனைவிட்டுப் பிரிந்து தனித்திருந்தாலும்
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே      10தன் இனிய உயிர் நடுங்கும் தன் இளமையைத் துறந்து – (சுடுகாட்டை நோக்கி மனம் கலங்குகிறாள்)
                                     
# 248 ஒக்கூர் மாசாத்தனார்# 248 ஒக்கூர் மாசாத்தனார்
அளிய தாமே சிறு வெள் ஆம்பல்இரங்கத் தக்கன இந்த சிறிய வெண்ணிறமான அல்லிப் பூக்கள்,
இளையம் ஆக தழை ஆயினவே இனியேசிறுவயதில் இந்த அல்லியின் இலைகள் எனக்கு தழையுடையாக உதவின; இப்பொழுது,
பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்துபெரிய செல்வமுடைய என் கணவன் இறந்ததால், உரிய பொழுதில் உண்ணாமல்,
இன்னா வைகல் உண்ணும்பொருந்தாத நேரத்தில் உண்ணும்
அல்லி படூஉம் புல் ஆயினவே                        5அல்லியிடத்தில் உண்டாகும் புல்லரிசியாக எமக்கு ஆயின.
                                     
# 249 தும்பி சொகினனார் தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்# 249 தும்பி சொகினனார் தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்பகதிர் நுனை போன்ற கூர்மையான மூக்கையுடைய ஆரல் மீன் கீழேயுள்ள சேற்றில் ஒளிந்துகொள்ள,
கணை கோட்டு வாளை மீ நீர் பிறழதிரண்ட மீசையையுடைய வாளைமீன் நீர்மேல் பிறழ,
எரி பூ பழனம் நெரித்து உடன் வலைஞர்நெருப்புப்போல் சிவந்த செந்தாமரை பூத்த பொய்கைகளை நெருங்கி ஒன்றுசேர்ந்து வலைஞர்கள்,
அரி குரல் தடாரியின் யாமை மிளிரமெல்லிய ஓசையையுடைய தடாரி போன்ற ஆமை புரள,
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு   5பனங்குருத்தைப் போன்ற சினை முற்றிய வரால் மீன்களோடு,
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்எதிரிடும் வேல் போன்ற கெண்டை மீன்களையும் முகந்து கொள்ளும்
அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநைஅகன்ற நாட்டின் தலைவனின் உணவு, நேற்று
பகல் இடம் கண்ணி பலரொடும் கூடிஒளி பொருந்திய இடத்தில், பலரோடு கூடி
ஒருவழிப்பட்டன்று-மன்னே இன்றேஒன்றாகக் கழிந்தது. இப்பொழுது,
அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை                10தன்னிடம் நிறைந்த கற்பினையும் அழகிய நெற்றியையும் உடைய அவன் மனைவி
உயர்_நிலை_உலகம் அவன் புக வாரஅவன் மேலுலகம் அடைந்ததால், அவனுக்கு உணவு கொடுப்பதற்காக
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கிபுழுதி படிந்த முறமளவு உள்ள சிறிய இடத்தைத் துடைத்து
அழுதல் ஆனா கண்ணள்அழுவதை நிறுத்தாத கண்ணையுடையவளாய்
மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானேதன்னுடைய கண்ணிலிருந்து ஒழுகும் நீரில் கலந்த பசுஞ்சாணத்தால் மெழுகுகிறாள்.
                                     
# 250 தாயம் கண்ணியார்# 250 தாயம் கண்ணியார்
குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில்மிகுந்த ஓசையுடன் தாளித்த வளமான துவையலோடு கூடிய உணவை அளித்து
இரவலர் தடுத்த வாயில் புரவலர்இரவலர்களை வேறு எங்கும் செல்லாமல் தடுத்து நிறுத்திய வாயிலையும், வேண்டி வந்தவர்களின்
கண்ணீர் தடுத்த தண் நறும் பந்தர்கண்ணீரைத் துடைக்கும் குளிர்ந்த நறுமணமுள்ள பந்தலையும் உடையதாக முன்பு இருந்த நீ,
கூந்தல் கொய்து குறும் தொடு நீக்கிகூந்தலைக் குறைத்து, குறிய வளையல்களை நீக்கி,
அல்லி உணவின் மனைவியொடு இனியே            5அல்லி அரிசியை உணவாகக் கொண்ட மனைவியுடன் இப்பொழுது
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்பொலிவிழந்து காணப்படுகிறாய், வளங்கள் பொருந்திய அழகிய மாளிகையே! 
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும்சுவையான சோற்றை உண்டு இனிய பாலை விரும்பும்
முனி தலை புதல்வர் தந்தைகுடுமித் தலையையுடைய புதல்வர்களின் தந்தை
தனித்தலை பெரும் காடு முன்னிய பின்னேதனியிடமாகிய சுடுகாட்டை அடைந்த பின்.
                                     

Related posts