பதிற்றுப்பத்து 51-94

  
ஆறாம் பத்து             ஆறாம் பத்து             
      காக்கைபாடினியார் நச்செள்ளையார்      காக்கைபாடினியார் நச்செள்ளையார்
  
# 51 பாட்டு 51# 51 பாட்டு 51
துளங்கு நீர் வியல்_அகம் கலங்க கால் பொரஅசைகின்ற நீரையுடைய அகன்ற கடற்பரப்பு கலங்கும்படி காற்று மோதுவதால்
விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும்ஒளிவிட்டு எழுகின்ற பெரிய அலைகள் இடி போல முழங்கும்
கடல் சேர் கானல் குட புலம் முன்னிகடலைச் சேர்ந்த கடற்கரைச் சோலையுள்ள மேற்கு நிலப்பகுதியை நோக்கிச் சென்று,
கூவல் துழந்த தடம் தாள் நாரைபள்ளங்களில் மீனைத் தேடித் துழாவிய பெரிய கால்களையுடைய நாரை,
குவி இணர் ஞாழல் மா சினை சேக்கும்குவிந்த பூங்கொத்துகளையுடைய ஞாழல் மரத்தின் பெரிய கிளையில் சென்றுதங்கும்,ழ்ர்
வண்டு இறைகொண்ட தண் கடல் பரப்பின்வண்டுகள் தங்கியிருக்கின்ற குளிர்ந்த கடற்பரப்பில்,
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடியஅடம்பங்கொடிகள் நெருங்கி வளர்ந்த இறுகிய கரையினில் நண்டுகள் ஊர்ந்துதிரிந்ததனால் ஏற்பட்ட
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும்சுவடுகளை அழிக்கும்படியாக நுண்ணிய குறுமணலை ஊதைக் காற்று வீசியெறியும்
தூ இரும் போந்தை பொழில் அணி பொலிதந்துதூய்மையான பெரிய பனைமரத் தோப்பினில், அலங்காரத்தால் பொலிவுற்று விளங்க,
இயலினள் ஒல்கினள் ஆடும் மட மகள்நடந்துகொண்டும், நடுங்கிக்கொண்டும் ஆடுகின்ற இளைய மகள்
வெறி_உறு நுடக்கம் போல தோன்றிதெய்வம் ஏறும்போது வளைந்து வளைந்து ஆடுதல் போன்று தோன்றி,
பெரு மலை வயின்_வயின் விலங்கும் அரு மணிபெரிய மலையின் இடங்கள்தோறும் குறுக்கிட்டு ஓடும், அரிய மணிகளைக் கொண்ட,
அர வழங்கும் பெரும் தெய்வத்துபாம்புகள் நடமாடும் பெரும் தெய்வங்கள் உறையும் இமயமலை,
வளை ஞரலும் பனி பௌவத்துசங்குகள் ஒலிக்கும் குளிர்ந்த பெருங்கடல்,
குண குட கடலோடு ஆயிடை மணந்தகிழக்கிலும், மேற்கிலும் கடல்கள் ஆகிய இவற்றிடையே உள்ளோர் கூடிச் சேர்ந்த
பந்தர் அந்தரம் வேய்ந்துபந்தலின் உள்புறத்தை வேய்ந்தாற்போல,
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்வளமை மிக்க மலர்ந்த கண்போன்ற நெய்தல் மலர்கள்
நனை உறு நறவின் நாடு உடன் கமழதேனைக் கொண்ட நறவம் பூக்களோடு, நாடு முழுவதும் மணங்கமழ,
சுடர் நுதல் மட நோக்கின்ஒளி திகழும் நெற்றியினையும், கபடமற்ற பார்வையினையும்,
வாள் நகை இலங்கு எயிற்றுமிகுந்த ஒளியினால் பொலிவுபெற்ற பளிச்சிடும் பற்களையும்,
அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர்அமுதம் போன்ற மொழியினைக் கொண்ட சிவந்த வாயினையும், அசைகின்ற நடையினையும் உடைய விறலியரின்
பாடல் சான்று நீடினை உறைதலின்பாடல்களை நிரம்பக் கேட்டு நீண்டநேரம் இருத்தலால்
வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் எனவெள்ளிய வேலினை ஏந்திய வேந்தன் மென்மையான இயல்பினன் போலும் என்று
உள்ளுவர்-கொல்லோ நின் உணராதோரேநினைப்பார்களோ உன்னை நன்கு தெரிந்துவைத்திராதவர்கள்? –
மழை தவழும் பெரும் குன்றத்துமேகங்கள் தவழும் பெரிய குன்றுகளில் வாழும்
செயிர் உடைய அரவு எறிந்துவருத்துதலையுடைய பாம்புகளைத் தாக்கி,
கடும் சினத்த மிடல் தபுக்கும்மிக்க சினத்தையுடைய அவற்றின் வலிமையை அழிக்கும்
பெரும் சின புயல்_ஏறு அனையைபெரும் முழக்கத்தையுடைய மேகங்களினின்றும் இறங்கும் இடியைப் போன்றவன் நீ!
தாங்குநர் தட கை யானை தொடி கோடு துமிக்கும்எதிர்த்துவரும் பகைவரின் பெரிய கையையுடைய யானையின் பூண் அணிந்த கொம்புகளை முறிக்கும்
எஃகு உடை வலத்தர் நின் படை வழி வாழ்நர்வாளையுடைய வெற்றிவீரர்கள் உன் படையினில் வாழ்பவர்கள்;
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்துவீரம் பொருந்திய பனையின் வெண்மையான தோடுகளால் செய்யப்பட்டு
நிறம் பெயர் கண்ணி பருந்து ஊறு அளப்பபகைவரின் இரத்தத்தால் நிறம் மாறிப்போன உன் தலைமாலையைப் பருந்துகள் கொத்திச் செல்ல நேரம் பார்த்திருக்க,
தூ கணை கிழித்த மா கண் தண்ணுமைஉன் வலிமையான அம்புகள் பாய்ந்து கிழித்த, பகைவரின் கரிய கண்ணையுடைய தண்ணுமையை,
கைவல் இளையர் கை அலை அழுங்கஇசைக்கும் தொழிலில் வல்ல இளையர்கள் கையால் தட்டி இசைப்பதைத் தவிர்க்க,
மாற்று அரும் சீற்றத்து மா இரும் கூற்றம்மாற்றமுடியாத சீற்றத்தையுடைய கரிய, பெரிய கூற்றுவன்
வலை விரித்து அன்ன நோக்கலைகொல்வதற்காக வலைவிரிப்பதைப் போன்ற பார்வையினை உடையவனே!
கடியையால் நெடுந்தகை செருவத்தானேஅச்சத்தையூட்டுகின்றாய்! நெடுந்தகையே! போர்க்களத்தில்.
  
# 52 பாட்டு 52# 52 பாட்டு 52
கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்துகொடிகள் அசையும் நிலையையுடைய கொல்லுகின்ற போர்யானைகள் நெருக்கமாகத் திரிவதால்
வடி மணி நெடும் தேர் வேறு புலம் பரப்பிநன்றாக வடிவமைக்கப்பட்ட மணிகளைக் கொண்ட நெடிய தேர்களை வேறு இடங்களில் பரவச்செய்து,
அரும் கலம் தரீஇயர் நீர் மிசை நிவக்கும்அரிய பொருள்களைக் கொணர்வதற்காக, கடலின்மேல் நிமிர்ந்து செல்லும்
பெரும் கலி வங்கம் திசை திரிந்து ஆங்குபெருத்த ஆரவாரத்தையுடைய கப்பல்கள் தத்தம் திசைகளில் திரிந்துகொண்டிருப்பதைப் போலப் படைகளை இயக்கி,
மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல்மழைமேகத்தை அணிந்துகொண்டிருப்பதைப் போல எழுந்துநிற்கும் கரிய, பெரிய பலவான கேடகங்களுடன்,
மெய் புதை அரணம் எண்ணாது எஃகு சுமந்துமெய்யை மறைக்கும் கவசங்கள் வேண்டுமென்று எண்ணாமல், வேல்களைச் சுமந்துகொண்டு
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்போரின் முன்னணியில் நிற்கும் மனவுரம் மிகுந்த வீரர்களின்
தொலையா தும்பை தெவ்_வழி விளங்கதோற்காத நிலையுள்ள தும்பைப்பூ மாலை, பகைவர் நடுவே விளங்கித் தோன்ற,
உயர்_நிலை_உலகம் எய்தினர் பலர் படவிண்ணுலகை அடைந்தனராகப் பகைவர் பலரும் மடிய,
நல் அமர் கடந்த நின் செல் உறழ் தட கைநல்ல போர்களைப் போரிட்டு வென்ற உன் இடி போன்ற பெரிய கை,
இரப்போர்க்கு கவிதல் அல்லதை இரைஇயவேண்டிக் கைநீட்டுவோருக்காகக் கவிகிறதேயன்றி, பிறரிடம் வேண்டி
மலர்பு அறியா என கேட்டிகும் இனியேஉன் கைகள் விரிந்திருப்பதை அறியமாட்டா என்பதைக் கேள்விட்டிருக்கிறோம்; இப்பொழுது
சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்துஒளிர்கின்ற பாண்டில் விளக்கின் இறைத்தன்மை இனிமையாக வெளிப்படும் வெளிச்சத்தில்,
முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆகமுழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்தில் தழுவியாடுவோருக்குத் துணையாக,
சிலைப்பு வல் ஏற்றின் தலைக்கை தந்து நீமுழங்குகின்ற வலிமையான காளையினைப் போல, முதல்கை கொடுத்து, நீ
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகிபெண்களுடன் நெருக்கமாக நின்று சுற்றிவருவதைக் கண்டு, ஊடல்கொண்டவளாய்,
உயவும் கோதை ஊரல் அம் தித்திஅங்குமிங்கும் அலைப்பதால் வருந்தும் மாலையினையும், மேனியில் ஊர்ந்துநிற்கும் அழகிய தேமலையும்,
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவைஈரப்பசையுள்ள இதழ்களைக் கொண்ட குளிர்ந்த கண்களையும், பெருமை பொருந்திய இயல்பினையும் உடைய உன் மனைவி
ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடிஒளிவிடும் இதழ்கள் விரிந்த பூவின் உட்புறத்தைப் போன்ற சிறிய அடிகளில் அணிந்துள்ள
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்பபல மணிகளைக் கொண்ட இரண்டு சதங்கைகளும் தன் சிறிய கணுக்காலை வருத்த,
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின்கரையை இடிக்கும் காட்டாற்று வெள்ளத்தில் நடுங்கும் தளிரைப் போல, கோபத்தால் மேனி நடுங்க நின்று, உன்மீது
எறியர் ஓக்கிய சிறு செங்குவளைஎறிவதற்காக ஓங்கிய சிறிய செங்குவளை மலரை,
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்குஎனக்குத் தா என்று இரு கை நீட்டி வேண்டவும், சினம் குறையாதவளாய், “நீ எமக்கு
யாரையோ என பெயர்வோள் கையதைஇனி யாரோ?” என்று அந்த இடத்தை விட்டு நீங்கிச் செல்பவளின் கையினில் இருந்த குவளை மலரைச்
கதுமென உருத்த நோக்கமோடு அது நீசட்டென்று வெகுண்ட பார்வையுடன் அதனை நீ
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்பறித்துக்கொள்ளுவதற்கு இயலாதவனாய் ஆகிவிட்டாய்; ஆனால் இதனைப் பறித்துக்கொள்ள
யாங்கு வல்லுநையோ வாழ்க நின் கண்ணிஎவ்வாறு உன்னால் முடிந்தது? வாழ்க! உன் தலைமாலை!
அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்அகன்ற கரிய வானத்தில் பகல்காலத்துக்கு இடம் தருவதற்காக,
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்றுசுடுகின்ற கதிர்கள் ஒளிர்கின்ற நிறம் பொருந்திய ஞாயிற்றின்
உருபு கிளர் வண்ணம் கொண்டஉருவத்தையும், எழுச்சியுற்ற இயல்பினையும் கொண்ட,
வான் தோய் வெண்குடை வேந்தர்_தம் எயிலேவெண்கொற்றக்குடையையுடைய வேந்தரின் வானளாவ நிற்கும் கோட்டைகளை –
  
# 53 பாட்டு 53# 53 பாட்டு 53
வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து அவர்பகைவரை வென்று, அவரின் செல்வத்தைக் கொணர்வதற்காக, அவர் நாட்டில் நினைத்த இடத்தில் தங்கி, அவர் தம்
வாடா யாணர் நாடு திறை கொடுப்பகுன்றாத புதுவருவாயையுடைய நாட்டையே திறையாகக் கொடுத்து,
நல்கினை ஆகு-மதி எம் என்று அருளி‘அருள்செய்பவனாய் இருப்பாய் எம்மிடம்” என்று வேண்டி நிற்க, அவருக்கு அருள்செய்து,
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின்மலைகள் சுடரிட்டு விளங்கும் நாட்டினில், இடுப்பில் கட்டியது போல் காடு சூழ்ந்துள்ள உன்
தொல் புகழ் மூதூர் செல்குவை ஆயின்பழமையான புகழையுடைய முதிய ஊருக்குச் செல்வாயென்றால்,
செம் பொறி சிலம்பொடு அணி தழை தூங்கும்செம்மையாகச் சேர்த்து மூட்டப்பட்ட கால்சிலம்போடு, ஆடையாகத் தொடுக்கப்பட்ட தழையுடையும் தொங்குகின்ற,
எந்திர தகைப்பின் அம்பு உடை வாயில்வில் இல்லாமல் எந்திரக் கட்டுமானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அம்புகளை உடைய வாயில் –
கோள் வல் முதலைய குண்டு கண் அகழிபிடிப்பதில் வல்ல முதலைகளைக் கொண்ட ஆழமான இடத்தையுடை அகழி –
வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசைவானைத் தொடும்படி உயர்ந்துநிற்கும் வளைவு வளைவாக அமைக்கப்பட்ட மதில் – ஆகியவற்றைக் கொண்டு,
ஒன்னா தெவ்வர் முனை கெட விலங்கிஒத்துவராத பகைவர் மேற்கொள்ளும் போரினை அழிக்கும்படியாகக் குறுக்கிட்டு நிற்கின்ற,
நின்னின் தந்த மன் எயில் அல்லதுஉன்னால் சிறிய வேந்தருக்குக் கொடுக்கப்பட்ட, இப்போது உனக்கு அடங்காமற்போன, கோட்டைகளை அல்லாமல்,
முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பியஉன் முன்னோர்களுக்கு முன்னிருந்தோராலும், அவருக்குப் பின்வந்தோராலும் பேணிப் பாதுகாக்கப்பட்ட
எயில் முகப்படுத்தல் யாவது வளையினும்கோட்டையின் எதிரில் நிற்பது எதற்காக? இதனைக் கைப்பற்றி, இதன் வழியே செல்லாமல் வளைந்து,
பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில்வேறு சுற்றுவழியில் செல்வாயாக! சினம் பொருந்திய வேந்தனே!
எழூஉ புறந்தரீஇ பொன் பிணி பலகைகணைய மரத்தால் காக்கப்பட்டு, இரும்பு ஆணிகள் தைத்த பலகைகளால் ஆன
குழூஉ நிலை புதவின் கதவு மெய் காணின்பற்பல நிலைகளையுடைய சிறிய நுழைவாயில்களையுடைய கதவுகளின் உருவத்தைக் கண்டாலே,
தேம் பாய் கடாத்தொடு காழ் கைநீவிதேனீக்கள் மொய்க்கும் மதநீரோடு, பாகரின் குத்துக்கோலுக்கும் கைமீறிக்கொண்டு,
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல்வேங்கை மரத்தைப் புலி என்று நினைத்து அழித்த வடுக்கள் அமைந்த புள்ளிகளையுடைய நெற்றியையுடையவாய்,
ஏந்து கை சுருட்டி தோட்டி நீவிஏந்திய கையைச் சுருட்டிக்கொண்டு, மேலிருப்போர் வழிநடத்தும் அங்குசத்தையும் மீறிக்கொண்டு,
மேம்படு வெல் கொடி நுடங்கஉயர்ந்து நிற்கும் வெற்றிக்கொடிஅசைந்தாட,
தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறேஅடக்கமாட்டாமற் செல்லும் அங்கு உன் களிறு.
  
# 54 பாட்டு 54# 54 பாட்டு 54
வள்ளியை என்றலின் காண்கு வந்திசினேஈகை நெஞ்சுடையவன் என்று சொல்லப்படுவதால் உன்னைக் காண்பதற்காக வந்திருக்கிறேன்,
உள்ளியது முடித்தி வாழ்க நின் கண்ணிநான் நினைப்பதை முடித்துத்தருவாய்! வாழ்க! உன் தலைமாலை!
வீங்கு இறை தடைஇய அமை மருள் பணை தோள்புடைத்தெழுந்து இறங்கும், பெருத்த, மூங்கில் போன்ற பருத்த தோள்களையும்,
ஏந்து எழில் மழை கண் வனைந்து வரல் இள முலைஏந்திய அழகினைக் கொண்ட குளிர்ந்த கண்களையும், பருத்துப் புடைத்து வரும் இளம் முலைகளையும்,
பூ துகில் அல்குல் தேம் பாய் கூந்தல்பூப்போட்ட துகில் மூடிய அல்குலையும், தேனொழுகும் கூந்தலையும்,
மின் இழை விறலியர் நின் மறம் பாடமின்னுகின்ற அணிகலன்களையும் கொண்ட விறலியர் உன் வீரத்தைப் புகழ்ந்து பாட
இரவலர் புன்கண் தீர நாள்-தொறும்இரந்து வருவோரின் இன்னல்கள் தீரும்படியாக, நாள்தோறும்
உரை சால் நன் கலம் வரைவு இல வீசிபுகழ்ந்துரைக்கும்படியான பெருஞ் செல்வத்தை வரையாது வழங்கி,
அனையை ஆகல் மாறே எனையதூஉம்அப்படிப்பட்டவனாய் நீ இருப்பதனால் – சிறிதளவு காலத்திற்குக்கூட,
உயர்_நிலை_உலகத்து செல்லாது இவண் நின்றுஉயர்நிலை உலகமாம் விண்ணுலகிற்குச் செல்லாமல், இங்கேயே இருந்து
இரு நிலம் மருங்கின் நெடிது மன்னியரோபெரிய நிலவுலகத்தில் நெடுங்காலம் வாழ்வாயாக!
நிலம் தப இடூஉம் ஏணி புலம் படர்ந்துஎதிர்ப்பாரின் நிலப்பகுதி குறைவுபடும்படி அமைக்கப்பட்ட, அவரின் எல்லைக்குட்பட்ட நிலத்துப் பாசறையில் தங்கி,
படு கண் முரசம் நடுவண் சிலைப்பஒலிக்கின்ற முகப்பையுடைய முரசம் பாசறையின் நடுவில் முழங்க,
தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார்வலக்கையில் தண்டினை ஏந்தியவராய், போரினைச் செய்வதற்காக,
ஏவல் வியம் கொண்டு இளையரொடு எழுதரும்முரசின் ஏவலை மேற்கொண்டு இளைய வீரருடன் நிற்கின்ற,
ஒல்லார் யானை காணின்உன்னுடன் உடன்படாதோரின் யானைப் படையைக் கண்டால்,
நில்லா தானை இறை கிழவோயேநில்லாமல் சென்று தாக்கும் சேனைகளையுடைய அரசுரிமை உடையவனே!
  
# 55 பாட்டு 55# 55 பாட்டு 55
ஆன்றோள் கணவ சான்றோர் புரவலகற்பிற் சிறந்தவளின் கணவனே! நற்குணம் நிரம்பியவரை ஆதரிப்பவனே!
நின் நயந்து வந்தனென் அடு போர் கொற்றவஉன்னை விரும்பிக் காண வந்தேன், கொல்லுகின்ற போரைச் செய்யும் கொற்றவனே!
இன் இசை புணரி இரங்கும் பௌவத்துஇனிய ஓசையுள்ள அலைகள் முழங்கும் கடல் வழியே வந்த
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்நிறைந்த அணிகலன்களாகிய செல்வம் தேங்கியிருக்கும் பண்டகசாலைகள் உள்ள
கமழும் தாழை கானல் அம் பெரும் துறைகமழ்கின்ற தாழைகள் பூத்திருக்கும் கடற்கரைச் சோலை இருக்கும் அழகிய பெரிய துறையையுடைய
தண் கடல் படப்பை நன் நாட்டு பொருநகுளிர்ந்த கடற்கரைப் பகுதியாகிய நல்ல நாட்டுக்குத் தலைவனே!
செ ஊன் தோன்றா வெண் துவை முதிரைதன்னில் கலந்த சிவந்த இறைச்சி வெளியில் தெரியாதவாறு அரைத்த வெண்மையான துவரைச் துவையலையும்,
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறைவெண்மையான நிணம் கலந்த ஊன்சோற்றினையும் உணவாகக் கொண்ட மழவர்களின் கவசம் போன்றவனே!
குடவர் கோவே கொடி தேர் அண்ணல்குடநாட்டாரின் கோமகனே! கொடிகள் பறக்கும் தேரையுடைய அண்ணலே!
வாரார் ஆயினும் இரவலர் வேண்டிஇரந்து வருபவர் வராமற்போனாலும், இரவலர் வருவதை விரும்பி
தேரின் தந்து அவர்க்கு ஆர் பதம் நல்கும்வெளியூரிலிருந்து தேரில் வரவழைத்து, அவர்களுக்கு நிறைய உணவை வழங்கும்,
நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல்கேட்பதற்கு விருப்பமுள்ள உண்மையான மொழியினையுடைய புகழ் நிறைந்த தோன்றலே!
வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய– நீ வேண்டும் கால அளவுக்கு, ஆண்டுகள் பல கழிய,
பெய்து புறந்தந்து பொங்கல் ஆடிமழையைப் பெய்து உலகைக் காத்த பின்பு, பஞ்சுப் பிசிறுகளாய்ப் பொங்கி மேலெழுந்து,
விண்டு சேர்ந்த வெண் மழை போலமலை உச்சியை அடையும் வெண் மேகத்தைப் போல,
சென்றாலியரோ பெரும அல்கலும்சென்று கெடாமல் இருப்பதாக, பெருமானே! நாள்தோறும்
நனம் தலை வேந்தர் தார் அழிந்து அலறஅகன்ற இடத்தையுடைய வேந்தரின் முன்னணிப்படையினர் அழிந்து அலறும்படியாக,
நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டுநீண்ட மலையில் பல மலையிடுக்குகளைக் கொண்ட நாடுகளைக் கைப்பற்றிப்
பொருது சினம் தணிந்த செரு புகல் ஆண்மைபோரிட்டு, அவர் மேலெழுந்த சினம் தணிந்துபோன போரை விரும்பும் ஆண்மையினையும்,
தாங்குநர் தகைத்த ஒள் வாள்எதிர்நின்று தடுக்கும் பகைவரை முற்றிலும் அழிக்கும் ஒளிரும் வாளினையும்,
ஓங்கல் உள்ளத்து குருசில் நின் நாளேஎழுச்சிமிக்க உள்ளத்தினையும் கொண்ட வேந்தனே! உனது வாழ்நாள் –
  
# 56 பாட்டு 56# 56 பாட்டு 56
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்விழா நடைபெறுகின்ற அகன்ற உள்ளிடத்தைக் கொண்ட ஊரில்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்கூத்தரின் முழவுக்கு முன்னால் ஆடுவதில்
வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணிவல்லவன் அல்லன்; வாழ்க! அவன் தலைமாலை!
வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்துவெற்றியையுடைய முரசத்தை ஓங்கி அறைய, வாளினை உயர்த்திக்கொண்டு
இலங்கும் பூணன் பொலம் கொடி உழிஞையன்மின்னிடும் பூணினை அணிந்தவனாயும், பொன்னாலான கொடியாகிய உழிஞையைச் சூடியவனாயும்,
மடம் பெருமையின் உடன்று மேல் வந்தஅறியாமை மிகுதியால் பகைகொண்டு மேலேறி வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சிவேந்தர்கள் தம் உடம்பை விட்டு மேலுலகத்துக்குச் சென்று வாழும்படி
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவேஇறந்து விழும் போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன் –
  
# 57 பாட்டு 57# 57 பாட்டு 57
ஓடா பூட்கை மறவர் மிடல் தபதோற்று ஓடக்கூடாது என்ற உறுதிப்பாட்டையுடைய வீரரின் வலிமை கெடும்படியாக,
இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்பபெரிய பனந்தோட்டால் செய்த மாலையோடு, வெண்மையான வீரக் கழலும் சிவந்துபோகுமாறு
குருதி பனிற்றும் புலவு களத்தோனேஇரத்தம் சிதறித்தெளிக்கும் புலால் நாறும் போர்க்களத்தில் இருக்கிறான்,
துணங்கை ஆடிய வலம் படு கோமான்துணங்கைக் கூத்து ஆடிய வெற்றி பொருந்திய சேரமான்;
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிமென்மையான நிலத்து வழியினில், தன் சிறிய கால்களால் ஒதுங்கி நடந்து
செல்லாமோ தில் சில் வளை விறலிசெல்வோமா, ஒருசில வளையல்களை அணிந்த விறலியே? –
பாணர் கையது பணி தொடை நரம்பின்பாணர் கையிலுள்ள கீழே இழுத்துக்கட்டிய நரம்பினையுடைய
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணிவிரலால் வாசிக்கப்படும் பேரியாழில், பாலைப் பண்ணை அமைத்து,
குரல் புணர் இன் இசை தழிஞ்சி பாடிகுரல் என்ற நரம்போடு சேர்த்த இனிய இசையில் தழிஞ்சி என்னும் துறையைப் பாடி,
இளம் துணை புதல்வர் நல் வளம் பயந்தஇளமையான துணையாகிய புதல்வராகிய நல்ல செல்வத்தைப் பெற்றளித்த
வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கைவளமை பொருந்திய சிலம்பையும், அடக்கத்தால் உயர்ந்த ஒழுக்கத்தையும்,
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசைநிறைந்த அறிவையும், நற்குணங்களால் உண்டாகிய நல்ல புகழையும் உடைய,
ஒண் நுதல் மகளிர் துனித்த கண்ணினும்ஒளிவிடும் நெற்றியைக் கொண்ட மகளிர் புலவியால் கோபங்கொண்டு பார்க்கும் பார்வையைக் காட்டிலும்,
இரவலர் புன்கண் அஞ்சும்இரந்து வருவோரின் இன்னலுள்ள பார்வைக்கு அஞ்சுகின்ற,
புரவு எதிர்கொள்வனை கண்டனம் வரற்கேநம்மைப் பாதுகாத்தலை மேற்கொண்டுள்ளவனைப் பார்த்து வருவதற்கு –
  
# 58 பாட்டு 58# 58 பாட்டு 58
ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்ஆடுவீர்களாக விறலியர்களே! பாடுவீர்களாக பரிசில் மாக்களே!
வெண் தோட்டு அசைத்த ஒண் பூ குவளையர்வெண்மையான பனந்தோட்டில் கட்டிய ஒளிவிடும் குவளைப்பூவையுடையவராய்,
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்வாளின் கூரிய பக்கம் ஏற்படுத்திய சிறப்புப் பொருந்திய தழும்பினைக் கொண்ட உடம்பினராய்,
செல் உறழ் மறவர் தம் கொல் படை தரீஇயர்இடியைப் போன்ற மறவர்கள் தம்முடைய கொல்லுகின்ற ஆயுதங்களைக் கொண்டுவர,
இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளைஇன்று இனிதே நுகர்ந்தோம் என்றாலும், நாளை
மண் புனை இஞ்சி மதில் கடந்து அல்லதுமண்ணால் கட்டப்பட்ட கோட்டைமதில்களைக் கடந்தபின் அன்றி
உண்குவம் அல்லேம் புகா என கூறிஉண்ண மாட்டோம் உணவினை என்று கூறி
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்போருக்கான தலைமாலையை சூடக் கருதிய வீரர்களின் பெருமகன்,
பொய் படுபு அறியா வயங்கு செம் நாவின்தம்முடைய கூற்று பொய்யாவதனை அறியாத தெளிவானதும் செம்மையானதுமான நாவினையும்,
எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கைபகைவரின் மதில்களை அழிக்கும் வலிய வில்லும், அம்பும் விளங்குகின்ற பெரிய கையினையும்,
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறைஉயர்ந்த அழகிய மார்பினையும் கொண்ட, சான்றோரின் கவசம் போன்ற,
வானவரம்பன் என்ப கானத்துவானவரம்பனாகிய சேரமன்னன் என்று கூறுவர்; காட்டினில்
கறங்கு இசை சிதடி பொரி அரை பொருந்தியஒலிக்கின்ற ஓசையையுடைய சிள்வண்டுகள் பொரிப்பொரியான அடிப்பகுதியில் தங்கியிருக்கும்
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்சிறிய இலைகளைக் கொண்ட வேல மரங்கள் மிகுதியாய் இருக்கும்
புன்_புலம் வித்தும் வன் கை வினைஞர்புன்செய் நிலங்களை உழுது விதைக்கும் வலிமையான கைகளையுடைய உழவர்கள்
சீர் உடை பல் பகடு ஒலிப்ப பூட்டிசிறப்பினை உடைய பல காளைகள் ஒலியெழுப்ப அவற்றைக் கலப்பையில் பூட்டி உழுது
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின்கலப்பையின் கொழுச் சென்ற சாலின் பக்கத்தில்
அலங்கு கதிர் திரு மணி பெறூஉம்அசைகின்ற கதிர்களில் அழகிய தானிய மணிகளைப் பெறுகின்ற
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனேஅகன்ற இடங்களைக் கொண்ட ஊர்களையுடைய நாட்டுக்குரியவன்.
  
# 59 பாட்டு 59# 59 பாட்டு 59
பகல் நீடு ஆகாது இரவு பொழுது பெருகிபகற்பொழுது நீண்டு அமையாமல், இரவுப்பொழுது நீண்டு உள்ள
மாசி நின்ற மா கூர் திங்கள்மாசி மாதத்து, விலங்குகளும் குளிர் மிகுந்து வருந்தும் காலத்தில்
பனி சுரம் படரும் பாண்_மகன் உவப்பமிகுந்த குளிர் உள்ள பாலைவழியில் செல்லும் பாணன் மகிழும்படியாக,
புல் இருள் விடிய புலம்பு சேண் அகலபுன்மையான இருள் முடிந்து விடிய, தனிமைத்துயர் நெடுந்தொலைவுக்கு விட்டகல,
பாய் இருள் நீங்க பல் கதிர் பரப்பிபரவிக்கிடக்கும் இருள் அகன்றுபோகும்படி, தனது பலவான கதிர்களைப் பரப்பி
ஞாயிறு குண முதல் தோன்றி ஆங்குஞாயிறு கீழ் வானத்தில் தோன்றியதைப் போல,
இரவல் மாக்கள் சிறுகுடி பெருகஇரந்துண்ணும் மக்கள் வாழும் ஊர்களில் வளம் சிறக்கும்படியாக
உலகம் தாங்கிய மேம்படு கற்பின்உலகத்து உயிர்களைத் தாங்குகின்ற, மேம்பட்ட கல்வியறிவையுடைய
வில்லோர் மெய்ம்மறை வீற்று இரும் கொற்றத்துவில்வீரர்களுக்குக் கவசம் போன்றவனே! வீறுபெற்று இருக்கும் பெரும் அரசாண்மையுடைய
செல்வர் செல்வ சேர்ந்தோர்க்கு அரணம்வேந்தர்க்கெல்லாம் வேந்தனே! உன்னைச் சேர்ந்திருப்போருக்கு அரணம் போன்றவனே!
அறியாது எதிர்ந்து துப்பில் குறை_உற்றுஅறியாமல் உன்னை எதிர்த்துப் போரிட்டு, தம் வலிமையில் குறைவுற்று,
பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின்உன்னைப் பணிந்துகொண்டு உனக்குத் திறை கொடுப்பர் உன் பகைவர் என்றால்
சினம் செல தணியுமோ வாழ்க நின் கண்ணிஉன் சினம் உன்னிடத்திலிருந்து சென்றுவிடத் தணியுமோ? வாழ்க உன் தலைமாலை!
பல் வேறு வகைய நனம் தலை ஈண்டியபல்வேறு வகைப்பட்ட அகன்ற நாடுகளிலிருந்து வந்து குவிந்த,
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும்மலையில் கிடைப்பனவும், கடலில் கிடைப்பனவும் ஆகிய பொருள்களைப் பகிர்ந்தளிக்கும்
ஆறு முட்டு_உறாஅது அறம் புரிந்து ஒழுகும்வழிகளால், குன்றாமல் அறத்தைச் செய்து ஒழுகும்
நாடல் சான்ற துப்பின் பணை தோள்பகைவர் நாடுதற்குரிய வலிமை பொருந்திய பருத்த தோள்களால்,
பாடு சால் நன் கலம் தரூஉம்பாடற்குரிய உயர்ந்த செல்வங்களை அளிக்கும்
நாடு புறந்தருதல் நினக்கு-மார் கடனேநாடுகளைப் பாதுகாத்தல் உனக்குக் கடமையாகும்.
  
# 60 பாட்டு 60# 60 பாட்டு 60
கொலை வினை மேவற்று தானை தானேகொலைத்தொழிலை விரும்பியது சேனை; தானும்
இகல் வினை மேவலன் தண்டாது வீசும்போர்த்தொழிலையே விரும்புவான்; குறைவின்றி வாரி வழங்குவான்;
செல்லாமோ தில் பாண்_மகள் காணியர்போவோமா? பாண்மகளே! அவனைக் காண்பதற்கு –
மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாதுவண்டுகள் புறத்தே மொய்த்துநிற்கவும், இனிய சுவையில் மாறுபடாது,
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனிஅரம்பத்தால் அறுக்கமுடியாத மரத்தில் உண்டாகிய சுவையான கனியாகிய
அம் சேறு அமைந்த முண்டை விளை பழம்அழகிய குழைவான சதைப்பற்று அமைந்த முட்டை போன்ற முதிர்ந்த பழங்கள்
ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும்வழியில் செல்லும் மக்களுக்கு தளர்வான நிலையைத் தடுத்து நிறுத்தும்,
மறாஅ விளையுள் அறாஅ யாணர்மாறாத விளைச்சலுள்ள அற்றுப்போகாத புதுவருவாயையுடைய,
தொடை மடி களைந்த சிலை உடை மறவர்அம்பினைத் தொடுப்பதில் சோம்பலைக் களைந்த வில்லையுடைய மறவர்கள்
பொங்கு பிசிர் புணரி மங்குலொடு மயங்கிபொங்குகின்ற சிறு திவலைகளைச் சிதறும் அலைகளோடு, தாழ்ந்து வரும் மேகங்கள் கலந்து
வரும் கடல் ஊதையின் பனிக்கும்வரும் கடலின் குளிர்ந்த காற்றில் மிகவும் நடுக்கம்கொள்ளும்,
துவ்வா நறவின் சாய் இனத்தானே நுகரமுடியாத நறவாகிய நறவு என்னும் ஊரில் உள்ள மென்மையான மகளிர் நடுவே –
  
  
ஏழாம் பத்து             ஏழாம் பத்து             
      கபிலர்      கபிலர்
  
# 61 பாட்டு 61# 61 பாட்டு 61
பலா அம் பழுத்த பசும் புண் அரியல்பலா மரத்தில் பழுத்து வெடித்த புதிய வெடிப்பிலிருந்து ஒழுகும் கள்போன்ற சாற்றின் மணத்தை
வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல்வாடைக்காற்று அந்த வெளியெல்லாம் பரப்பும் நாட்டினைப் பொருந்திய பெரிய திறம் படைத்தவனும்,
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்ஓவியத்தில் வரைந்தது போன்ற வேலைப்பாட்டுடன் கட்டப்பட்ட நல்ல இல்லத்தில் இருக்கும்,
பாவை அன்ன நல்லோள் கணவன்பாவையைப் போன்ற நல்ல அழகும் நலமும் அமைந்தவளின் கணவனும்,
பொன்னின் அன்ன பூவின் சிறியிலைபொன்னைப் போன்ற பூவைக் கொண்ட சிறிய இலைகளையுடைய
புன் கால் உன்னத்து பகைவன் எம் கோபுன்மையான அடிமரத்தையுடைய உன்ன மரத்துக்குப் பகைவனும், எமக்கு அரசனும்,
புலர்ந்த சாத்தின் புலரா ஈகைபூசப்பட்டுப் புலர்ந்துபோன சந்தனத்தையும், அப்படிப் புலர்ந்து போகாத ஈகைத்திறத்தையும்
மலர்ந்த மார்பின் மா வண் பாரிகொண்ட அகன்ற மார்பினையுடைய பெரிய வள்ளல்தன்மையுடைய பாரி
முழவு மண் புலர இரவலர் இனையமுழவின் கண்ணில் பூசப்பட்ட கரிய சாந்து புலர்ந்துபோகவும், கொடுப்போர் இல்லாததால் இரவலர்கள் வருந்தவும்,
வாரா சேண் புலம் படர்ந்தோன் அளிக்க எனதிரும்பி வரமுடியாத தொலைதூரத்து மேலுலகுக்குச் சென்றுவிட்டான்; அருள்செய்வாயாக என்று
இரக்கு வாரேன் எஞ்சி கூறேன்உன்னிடன் இரந்து வரவில்லை; உன்னை மிகைபடக் கூறமாட்டேன்;
ஈத்தது இரங்கான் ஈத்-தொறும் மகிழான்கொடுப்பதினால் மனம் குன்றிப்போவதில்லை; கொடுத்துக்கொண்டே இருப்பதினால் மகிழ்ந்துபோவதுமில்லை;
ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின்கொடுக்கக் கொடுக்க இன்னும் பெரிதும் கொடுப்பவன் என்று உலகத்தவர் கூறும் உன்னுடைய
நல் இசை தர வந்திசினே ஒள் வாள்நல்ல புகழ் என்னை ஈர்க்க உன்னிடம் வந்துள்ளேன்; ஒளிரும் வாட்படையும்,
உரவு களிற்று புலா அம் பாசறைவலிமை மிக்க யானைகளும் உள்ள புலால் நாற்றமுள்ள பாசறையில்,
நிலவின் அன்ன வெள் வேல் பாடினிநிலாவின் ஒளியைப் போன்ற வெண்மையான உன் வேலினைப் பாடும் பாடினி,
முழவில் போக்கிய வெண்கைமுழவின் ஓசைக்கேற்ப வெறுங்கையை அசைத்து ஆடும்,
விழவின் அன்ன நின் கலி மகிழானேதிருவிழாவைப் போன்ற உன்னுடைய ஆரவாரமிக்க அரசிருப்பில் –
  
# 62 பாட்டு 62# 62 பாட்டு 62
இழை அணிந்து எழுதரும் பல் களிற்று தொழுதியொடுநெற்றிப்பட்டமும், மாலைகளுமாகிய அணிகலன்கள் அணிந்து நிற்கும் பல யானைகளின் தொகுதியும்,
மழை என மருளும் மா இரும் பல் தோல்மேகங்களோ என்று மருண்டு நோக்கக்கூடிய கரிய பெரிய பல தோல் கேடகங்களும்,
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடுவேற்படையை அழித்த கொய்யப்பட்ட பிடரி மயிரையுடைய குதிரைப் படையும் ஆகிய உன் சேனை
மைந்து உடை ஆர் எயில் புடை பட வளைஇவலிமை உடைய கடப்பதற்கரிய கோட்டை மதிலைப் பக்கவாட்டில் வளைத்து
வந்து புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல்வந்து கோட்டைக்கு வெளியே தங்கியிருக்கின்றது; பகைப்புலத்தைச் சுட்டெரித்த பசிய பிசிர்களுடன் ஒளிவிடும் நெருப்பானது
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்புபல ஞாயிறுகளைப் போன்ற மாயத்தோற்றத்துடன் சுடர்விட்டுத் திகழ,
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்உயிர்களுக்குப் பொறுக்கமுடியாத கலக்கத்தைத் தந்து, பெரும் முழக்கத்தோடு திரியும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடும் திறல்கூற்றுவனின் இயல்பினைக் கொண்டகடுமையான வலிமைமிக்க,
துப்பு துறைபோகிய கொற்ற வேந்தேபோர்த்துறையில் சிறப்பெய்திய வெற்றியையுடைய வேந்தனே!
புனல் பொரு கிடங்கின் வரை போல் இஞ்சிவெள்ளமாய் நீர் மோதும் அகழியையும், மலை போன்ற மதிலினையும் கொண்டு,
அணங்கு உடை தட கையர் தோட்டி செப்பிதெய்வமாய் நின்றுவருத்தும் பெரிய கையினையுடையவராய் உனது அதிகாரமிக்க ஆளுமையைக் கூறியவாறு
பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின்பணிந்து திறை தருவர் உன் பகைவர் என்றால்,
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பிபுற்களையுடைய அகன்ற வெளியில் பலவான பசுக்களை மேயவிட்டு,
வளன் உடை செறுவின் விளைந்தவை உதிர்ந்தவளப்பத்தையுடைய வயல்களில் விளைந்தவற்றைக் கதிர்களிலிருந்து உதிர்க்கும்
களன் அறு குப்பை காஞ்சி சேர்த்திகளத்தில் தூற்றப்படுவதில்லாத நெல்மணிக் குவியலைக் காஞ்சி மரத்தடியில் கூட்டிச் சேர்த்து,
அரியல் ஆர்கை வன் கை வினைஞர்கள்ளை நிறைய உண்ணும் வலிமையான கைகளைக் கொண்ட உழவர்கள்
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்அருவிநீரில் செழித்து வளர்ந்த ஆம்பல் பூவை உச்சந்தலையில் சூடியவராய்
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும்அசைகின்ற சிறகுகளையுடைய வரிகளைக் கொண்ட வண்டுகளை விரட்டும்,அ
பாடல் சான்ற அவர் அகன் தலை நாடேபுலவர் பாடும் சிறப்பைப் பெறுவனவாகும் அந்தப் பகைவரின் அகன்ற இடங்களைக் கொண்ட நாடுகள்.
  
# 63 பாட்டு 63# 63 பாட்டு 63
பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையேபார்ப்பனரைத் தவிர பிறரைப் பணிதலை அறியாய்;
பணியா உள்ளமொடு அணி வர கெழீஇஇவ்வாறு பணியாத உள்ளத்தோடு அழகுவரப் பொருந்தி,
நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சலையேஉன்னுடன் நட்புக்கொண்டோரைத் தவிர பிறருக்குப் பரிவுகொண்டு அஞ்சமாட்டாய்;
வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம்வளைந்த வானவில்லோடு போட்டிபோடும் பூமாலையின் மணம் கமழ்கின்ற உன் மார்பானது
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையேமகளிரைத் தவிர வேறு யாருக்கும் திறந்து காட்டுவதனை அறியாது;
நிலம் திறம் பெயரும் காலை ஆயினும்நிலங்கள் தம் இயல்பினின்றும் மாறுபடும் காலம் என்றாலும்
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையேசொன்ன சொல்லை நீ பொய்த்தலை அறியமாட்டாய்;
சிறியிலை உழிஞை தெரியல் சூடிசிறிய இலைகளையுடைய உழிஞைப்பூ மாலையைச் சூடிக்கொண்டு
கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்துபகைவர் நாட்டுக் கொள்ளைப்பொருள் மிகுந்திருக்க, அருளுள்ளம் கொண்ட தமிழ்வீரர்களை நிறையக் கொண்டு
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறிகுன்றின் நிலையையே தளரச்செய்யும் இடியைப் போலச் சீற்றங்கொண்டு,
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள்ஒரு முற்றுகையில் இரு பெரும் வேந்தர்களை ஓட்டிய ஒளிரும் வாளையுடைய,
செரு மிகு தானை வெல் போரோயேபோரில் மேம்பட்ட சேனையைக் கொண்டு வெல்லுகின்ற போரினையுடையவனே!
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறிமுன்னர் பல போர்களில் பகைவரைக் கொல்வதைப் பெற்று, உன்னிடம் தோற்றழிந்த வீரர்கள், பகைமை மாறி,
நீ கண்டனையேம் என்றனர் நீயும்‘உன் சொற்படி நடப்போம்’ என்று கூறினர்; நீயும்
நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் அதனால்உன் வலிமையைக் கொண்டு மேலும் பல போர்களை வென்றாய்! அதனால்
செல்வக்கோவே சேரலர் மருகசெல்வக் கடுங்கோவே! சேரர் குடித்தோன்றலே!
கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலிகாற்றால் அலைகள் திரண்டெழ, முழங்குகின்ற ஓசையையுடைய கடலே வேலியாகக் கொண்ட
நனம் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின்அகன்ற இடத்தையுடைய உலகத்து மக்கள் செய்த நன்மை நிலைபெறுவதென்றால்,
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல்இலைகள் அடுத்தடுத்து இருப்பதில்லாத, அரிதான பூ ஆகிய ஆம்பல் என்ற எண்ணளவும்,
ஆயிர வெள்ள ஊழிஆயிரம் வெள்ளம் என்ற எண்ணளவும் சேர்ந்த ஊழிகள் பல
வாழி ஆத வாழிய பலவேவாழ்க! வாழியாதனே! வாழ்க!
  
# 64 பாட்டு 64# 64 பாட்டு 64
வலம் படு முரசின் வாய் வாள் கொற்றத்துவெற்றியுண்டாக முழங்கும் முரசினையும், குறி தப்பாமல் வாய்க்கின்ற வாளினால் பெறும் அரசாண்மையையும்
பொலம் பூண் வேந்தர் பலர் தில் அம்மபொன்னாற் செய்த பூண்களையும் உடைய வேந்தர் பலர் இருக்கின்றனர்;
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கியஅறநூல்களை ஓதியதால் தெளிவான நாவினையுடைய, உயர்ந்த
உரை சால் வேள்வி முடித்த கேள்விபுகழ் நிறைந்த வேள்விகள் செய்து முடித்த கேள்வியறிவையுடைய
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டுஅந்தணர்கள் அரிய கலன்களை நீர் வார்க்க ஏற்றுக்கொள்வதால், நீர் ஒழுகி ஏற்பட்ட
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்துமிகுந்த சேற்றினில் கால்பதித்த, மணல் நிறைந்த முற்றத்தில்,
களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின்களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய
புறஞ்சிறை வயிரியர் காணின் வல்லேஅரண்மனையின் வெளிப்புறத்தில் கூத்தர்கள் வரக் காணும்போது, விரைந்து
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவிவேற்படையைக் கொன்று கொணரப்பட்ட, கொய்யப்பட்ட பிடரியினைக் கொண்ட குதிரைகளையும்,
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் எனஅசைகின்ற தேர்களையும், அவற்றுக்குரிய அணிகளை அணிந்து கொடுங்கள் என்று கூறும்
ஆனா கொள்கையை ஆதலின் அ வயின்குறைவுபடாத கொள்கையை உடையவனாதலின், அவ்விடத்தில் –
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெடகரிய பெரிய ஆகாயத்தில் பல விண்மீன்களின் ஒளி குன்றும்படி,
ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார்ஞாயிறு உதிப்பதைப்போல், பகைவரின்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்திமிகுந்த பகையைச் சிதைத்த உன் வலிய கால்களை வாழ்த்திக்
காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல்– காண்பதற்கு வந்திருக்கிறேன் – காலில் கழலையும், தோளில் தொடியையும் அணிந்திருக்கும் அண்ணலே!
மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல்கரிய நிறம் உண்டாகின்ற மலர்களையுடைய கழியில் மலர்ந்த நெய்தல் பூவின்
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்தஇதழின் வனப்பைக் கொண்ட தோற்றத்தோடு, உயர்ந்த
மழையினும் பெரும் பயம் பொழிதி அதனால்மழையைக் காட்டிலும் பெரிதான பயனைப் பொழிகிறாய், அதனால்
பசி உடை ஒக்கலை ஒரீஇயபசித்திருக்கும் சுற்றத்தாரை அப் பசி நீங்கும்படி செய்ய
இசை மேம் தோன்றல் நின் பாசறையானேபுகழ் மேம்பட்ட தோன்றலே! உன் பாசறையினில் –
  
# 65 பாட்டு 65# 65 பாட்டு 65
எறி பிணம் இடறிய செம் மறு குளம்பின்வெட்டப்பட்டு வீழ்ந்த பிணங்களை இடறிக்கொண்டு செல்வதால் சிவந்துபோன கறை படிந்த குளம்புகளையுடைய,
பரி உடை நன் மா விரி உளை சூட்டிவிரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரைகளுக்கு விரிந்த தலையாட்டத்தைச் சூட்டி,
மலைத்த தெவ்வர் மறம் தப கடந்தஎதிர்த்துப் போரிட்ட பகைவரின் வீரம் அழியும்படி வென்ற,
காஞ்சி சான்ற வயவர் பெருமகாஞ்சித்திணைக்கு அமைந்த வீரர்களுக்குத் தலைவனே!
வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வவில்லோருக்குக் கவசமானவனே! தன்னை அடைந்தவருக்குச் செல்வமாயிருப்பவனே!
பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலைபூண்கள் அணியப்பெற்று அழகு பெற்ற, வடிவமைக்கப்பட்டதைப் போன்ற இளமையான முலைகளையுடைய,
மாண் வரி அல்குல் மலர்ந்த நோக்கின்மாட்சிமைப்பட்ட வரிகளைக் கொண்ட அல்குலையுடைய, மலர்ச்சியான கண்களையுடைய,
வேய் புரைபு எழிலிய விளங்கு இறை பணை தோள்மூங்கிலைப் போன்று அழகாய் அமைந்த, நலம்பெற்றதாய் இறங்குகின்ற பருத்த தோள்களையுடைய,
காமர் கடவுளும் ஆளும் கற்பின்எல்லாரும் விரும்பும் கடவுளரையும் ஏவல்கொள்ளும் கற்பினையுடைய,
சேண் நாறு நறு நுதல் சே_இழை கணவமிக்க தொலைவுக்கும் மணக்கும் நறிய நெற்றியையுடைய, செம்மையான அணிகலன்களை அணிந்தவளின் கணவனே!
பாணர் புரவல பரிசிலர் வெறுக்கைபாணர்களின் பாதுகாவலனே! பரிசிலர்களின் செல்வமாயிருப்பவனே!
பூண் அணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப நின்பூண்கள் அணியப்பெற்று விளங்கும் புகழ் நிறைந்த மார்பினனே! உன்னுடைய
நாள்_மகிழ் இருக்கை இனிது கண்டிகுமேநாளோலக்கம் என்னும் இன்பமான அரச இருக்கையை இனிதே கண்டோம் –
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன்இனிய முறுக்கமைந்த நரம்பினால் அமைந்த பாலை யாழை இசைப்பதில் வல்லவன்
பையுள் உறுப்பின் பண்ணு பெயர்த்து ஆங்குஅழுகைச் சுவைக்குரிய உறுப்பினையுடைய பண்களை மாறிமாறி வாசிப்பதைப் போல,
சேறு செய் மாரியின் அளிக்கும் நின்சேற்றை உண்டாக்கும் மழையைப் போல, அள்ளிக்கொடுக்கும் – உன்னுடைய
சாறு படு திருவின் நனை மகிழானேதிருவிழாக் காலத்து செல்வத்தைப் போன்ற கள்ளுண்ணும் இன்ப இருக்கையின்போது –
  
# 66 பாட்டு 66# 66 பாட்டு 66
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனியவளைந்த கரிய கொம்புபோன்ற தண்டினையுடைய, இனிய இசைக்குரிய நரம்புகளால் நிறைந்த,
இடன் உடை பேரியாழ் பாலை பண்ணிஇசை இன்பத்துக்கு இடமாக உள்ள, பெரிய யாழினில் பாலைப் பண்ணை அமைத்து,
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவலசேர மன்னனை நினைத்துச் செல்லுகின்ற முதுமை வாய்க்கப்பெற்ற இரவலனே!
இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார்இடியைப் போன்ற ஓசையையுடைய முரசத்தோடு, வஞ்சினம் கூறி, பகைவரின்
வேல் உடை குழூஉ சமம் ததைய நூறிவேலை உடைய திரண்ட கூட்டத்தின் போரைச் சிதையும்படி அழித்து,
கொன்று புறம்பெற்ற பிணம் பயில் அழுவத்துஅவரைக் கொன்று, மீந்துள்ளோரின் புறமுதுகிடுதலைப் பெற்ற, பிணங்கள் செறிவாய்க் கிடக்கும் போர்க்களத்தில்
தொன்று திறை தந்த களிற்றொடு நெல்லின்பகைவர் பழைய திறையாகத் தந்த களிற்றோடு, நெல்லின்
அம்பண அளவை விரிந்து உறை போகியமரக்காலின் அளவையால் அளந்து உறையிட முடியாத
ஆர் பதம் நல்கும் என்ப கறுத்தோர்நிறைந்த உணவை அளிப்பான் என்று சொல்லுவர்; தான் கோபங்கொண்ட பகைவரின்
உறு முரண் தாங்கிய தார் அரும் தகைப்பின்மிகுந்த பகைமையைத் தடுக்க வல்ல ஒழுங்கான அரிய அணிவகுப்பையுடைய,
நாள் மழை குழூஉ சிமை கடுக்கும் தோன்றல்நாள்காலையில் மேகங்கள் கூடியுள்ள மலையுச்சியைப் போன்ற தோற்றத்தில்
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்தோலால் ஆன கேடயங்களின் மேல் எழுந்துநிற்கும் பரந்து ஒளிவீசுகின்ற வேலையுடைய,
தார் புரிந்து அன்ன வாள் உடை விழவின்மாலைகள் முறுக்கிக்கொள்வதைப் போல சுழல்கின்ற வாள்களை உடைய விழாவையுடைய,
போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்தபோரை மேற்கொள்ளும் வீரர்கள் பனங்குருத்தோடு சேர்ந்து தொடுத்த
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்பகொற்றவை வாழும் வாகை மரத்தின் உச்சியில் பஞ்சினைக் கொண்ட பூவைப் போலப்
பூத்த முல்லை புதல் சூழ் பறவைபூத்திருக்கும் முல்லைக் கொடி படர்ந்த புதர்களைச் சூழவரும் வண்டினங்கள்
கடத்து இடை பிடவின் தொடை குலை சேக்கும்காட்டுவெளியில் உள்ள பிடவமரத்தின் மாலைபோன்ற பூக்குலையில் சென்று தங்கும்
வான் பளிங்கு விரைஇய செம் பரல் முரம்பின்வெண் பளிங்குக் கற்கள் கலந்துகிடக்கும் சிவந்த பருக்கைக் கற்களைக் கொண்ட மேட்டுநிலத்தில்
இலங்கு கதிர் திரு மணி பெறூஉம்பளிச்சிடும் கதிர்களைக் கொண்ட அழகிய மணியை அங்குவாழ்வோர் பெறுகின்ற,
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனேஅகன்ற இடத்தையுடைய ஊர்களையுடைய – நாட்டுக்கு உரியவன்.
  
# 67 பாட்டு 67# 67 பாட்டு 67
கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடுகொடுமணம் என்ற ஊரில் இருக்கும் உயர்ந்த புகழைக்கொண்ட உன் சுற்றத்தாருடன்,
பந்தர் பெயரிய பேர் இசை மூதூர்பந்தல் என்ற பெயரைக் கொண்ட பெரிய புகழ்படைத்த முதிய ஊரைச் சேர்ந்த
கடன் அறி மரபின் கைவல் பாணபாணர்க்குரிய கடமைகளை அறிந்த மரபில் வந்த கைதேர்ந்த பாணனே!
தெண் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவைதெளிந்த கடலில் விளைந்த முத்துக்களோடு, நல்ல அணிகலன்களையும் பெறுவாய்!
கொல் படை தெரிய வெல் கொடி நுடங்கவீரர்கள் கொல்லுகின்ற படைக்கலன்களைத் தெரிவுசெய்ய, வெற்றிக்கொடி அசைந்தாட,
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்பஒளிர்கின்ற கதிர்களையுடைய மணிகள் பதித்த கொம்புகளுடன், வலம்புரிச் சங்குகளும் முழங்க,
பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வரபலவான களிறுகளின் கூட்டம் வரிசை வரிசையாக தமக்குரிய இடத்தைவிட்டுப் பெயர்ந்து நடக்க,
அமர் கண் அமைந்த அவிர் நிண பரப்பின்போரிடும் இடமாக அமைந்த மின்னுகின்ற கொழுப்புகள் பரந்து கிடக்கின்ற களத்தில்
குழூஉ சிறை எருவை குருதி ஆரகூட்டமான, பெரிய சிறகுகள் கொண்ட பருந்துகள் குருதியைக் குடிக்க,
தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடுதலை துண்டிக்கப்பட்டதால் எஞ்சி நிற்கும் ஆண்மை ததும்பும் குறையுடலோடு
உரு இல் பேய்_மகள் கவலை கவற்றஅழகிய வடிவம் இல்லாத பேய்மகள் பார்ப்போருக்கு வருத்தத்தை உண்டாக்க,
நாடு உடன் நடுங்க பல் செரு கொன்றுநாடு முழுதும் நடுங்க, பல போர்களில் சிறப்பாகச் செயல்பட்டு,
நாறு இணர் கொன்றை வெண் போழ் கண்ணியர்மணங்கமழும் பூங்கொத்தான கொன்றையுடன் வெண்மையான பனந்தோடு சேர்ந்து கட்டிய தலைமாலையும்,
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்வாளின் கூரிய பக்கம் ஏற்படுத்திய சிறப்புப் பொருந்திய தழும்பினைக் கொண்ட உடம்பினையும் கொண்ட,
நெறி படு மருப்பின் இரும் கண் மூரியொடுவளைவு வளைவாக அமைந்த கொம்பினையுடைய எருமை எருதுகளினுடையதும்
வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர்வேறு வளைந்த தலைகளையுடைய விலங்குகளினுடையதுமான தாழ்ந்த இழிவான இறைச்சியை விற்போரின்
எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்துவெட்டரிவாள் கொத்தியெடுத்த மரப்பலகையைப் போல மேனி சிதைவுற்று
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன்பூசியிருக்கும் சந்தனத்தின் அழகை மறைக்கும்படியாயிருக்கின்ற வீரருடைய பெருமகனான –
மலர்ந்த காந்தள் மாறாது ஊதியபூத்திருக்கும் காந்தள் பூவில், அது தெய்வத்திற்குரியது என்று உணராமல், அதை விட்டு விலகாமல் தேனையுண்ட
கடும் பறை தும்பி சூர் நசை தாஅய்விரைவாகப் பறக்கும் தும்பியானது, அந்தப் பூக்களைத் தெய்வம் விரும்புவதால்
பறை பண் அழியும் பாடு சால் நெடு வரைதமது பறக்கின்ற பண்பினை இழக்கும் பெருமை சான்ற நெடிய மலையாகிய
கல் உயர் நேரி பொருநன்பாறைகளால் உயர்ந்த நேரி என்னும் மலைக்கு உரியவனான,
செல்வக்கோமான் பாடினை செலினேசெல்வக் கோனுமாகிய வாழியாதனைப் பாடினவனாகச் சென்றால் –
  
# 68 பாட்டு 68# 68 பாட்டு 68
கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்குகாற்றே குறுந்தடியாய் மோதியடிக்க, கடல் பேரொலி எழுப்புவதைப் போல
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண்பகைவர் நாட்டினில் எழுப்பித் தங்கியிருக்கும் பாசறையின் நடுவே
கடும் சிலை கடவும் தழங்கு குரல் முரசம்மிகுந்த முழக்கத்தைச் செய்யும் ஒலிக்கின்ற ஓசையையுடைய முரசமானது
அகல் இரு விசும்பின் ஆகத்து அதிரவிரிந்த பெரிய வானத்து நடுவில் அதிர்ந்து முழங்க,
வெ வரி நிலைஇய எயில் எறிந்து அல்லதுகண்டோர் விரும்பும் அழகிய கோலங்கள் நிலையாய் அமைந்த பகைவர் மதிலை அழித்தாலொழிய
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழியஉண்பதில்லை என்று அடுக்கிக்கொண்டே சென்ற நாள்கள் பல கழிய,
நெஞ்சு புகல் ஊக்கத்தர் மெய் தயங்கு உயக்கத்துநெஞ்சம் போரையே விரும்பும் ஊக்கத்தையுடையவராய், உடல்வலிமை குன்றி துன்புற்று இருக்கும்
இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லதுபகைவரின் உறைவிடத்தைத் தாம் கைப்பற்றினால்தான்,
வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டுபகை மன்னர் ஏறிவரும் யானையைக் கொன்று அதன் வெண்மையான கொம்பினைத் தோண்டியெடுத்து,
கள் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன்கள்ளுக்கடையின் கொடி அசைந்தாடும் கடைத்தெருவில் நுழைந்து உடனே
அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்துஅரிய கள்ளுக்கு விலையாகத் தந்து கள்ளைப் பெற்று, பின் அதனைக் குடித்து மகிழ்ந்து
நாமம் அறியா ஏம வாழ்க்கைஅச்சம் என்பதே அறியாத இன்பமான வாழ்க்கையையுடைய
வட புலம் வாழ்நரின் பெரிது அமர்ந்து அல்கலும்வட நாட்டில் வாழ்பவரைப் போன்று பெரிதும் அமைதியாக இருந்து நாள்தோறும்
இன் நகை மேய பல் உறை பெறுப-கொல்இனிய மகிழ்ச்சி பொங்கும் பல பொழுதுகளைப் பெறுவார்களோ?
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழபிரிவுத் துயரத்தால் தூக்கம் இல்லாததால், தம் பசிய இழைகள் நெகிழ்ந்துபோக
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்உயரமான, மண்ணால் செய்யப்பட்ட மதில் சூழ்ந்த நீண்ட பெரிய வீட்டின் எல்லையில்
ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதிஓவியத்தில் உள்ளதைப் போன்ற நெடிய சுவரில் நாள்கள் பலவற்றைக் கோட்டால் குறித்துவைப்பதால்
செ விரல் சிவந்த அம் வரி குடைச்சூல்சிவந்த விரல்கள் மேலும் சிவந்து போன அழகிய வரிகளையும், சிலம்பையும்
அணங்கு எழில் அரிவையர் பிணிக்கும்காண்பாரை வருத்தும் அழகையும் உடைய மகளிரின் மனத்தைத் தன்வயப்படுத்தும்
மணம் கமழ் மார்ப நின் தாள் நிழலோரேசந்தனத்தின் மணம் கமழும் மார்பினையுடையவனே! உன் காலடி நிழலில் வாழும் உன் வீரர்கள் –
  
# 69 பாட்டு 69# 69 பாட்டு 69
மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடிமலை போன்ற யானைகளின் மேல் வானத் தொடும்படி எடுத்த வெற்றிக்கொடி
வரை மிசை அருவியின் வயின்_வயின் நுடங்கமலை மேலிருந்து இறங்கும் அருவியைப் போல அங்கங்கே அசைந்தாடிக்கொண்டிருக்க,
கடல் போல் தானை கடும் குரல் முரசம்கடல் போன்ற சேனையின் நடுவே பெரும் முழக்கத்தை எழுப்பும் முரசம்
கால் உறு கடலின் கடிய உரறகாற்றால் அலைகழிக்கப்படும் கடலைப் போல பெரியதாய் முழங்க,
எறிந்து சிதைந்த வாள்பகைவரை வெட்டியதால் சிதைந்துபோன வாள்வீரரும்,
இலை தெரிந்த வேல்இலையைப் போன்ற வேலின்தலையை உயர்த்திப் பிடித்த வேல்வீரரும்,
பாய்ந்து ஆய்ந்த மாபகைவர் மேல் பாய்வதால் வருத்தமடைந்த குதிரைகளும்,
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடுபகைவரைத் தேடிப்பிடித்துப் போரிடும் போரவா மிகுந்த வீரர்களும் ஆகிய படையுடன் சென்று,
படு பிணம் பிறங்க நூறி பகைவர்வெட்டுப்பட்டு விழுகின்ற பிணங்கள் குவிந்து உயரும்படி பகைவர்களைக் கொன்று, அவரின்
கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தேகெட்டுப்போன குடிமக்களை வாழச்செய்த வெற்றி வேந்தனே!
நின் போல் அசைவு இல் கொள்கையர் ஆகலின் அசையாதுஉன்னைப்போல் தோல்வி இல்லாத நெறிமுறையை உடையவராதலால், தளர்வின்றி
ஆண்டோர் மன்ற இ மண் கெழு ஞாலம்ஆண்டார்கள், உறுதியாக, இந்த மண் செறிந்த நிலவுலகத்தை –
நிலம் பயம் பொழிய சுடர் சினம் தணியநிலங்கள் மிக்க பலனை விளைவிக்க, வெயிலின் வெம்மை தணிந்து நிலவ,
பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்பஉலகுக்கு நல்ல பயனைத் தரும் வெள்ளியாகிய கோள் மழைக்குரிய நிலையில் நிற்க,
விசும்பு மெய் அகல பெயல் புரவு எதிரஆகாயம் தன் இடம் அகன்று தோன்றுமாறு மேகங்கள் மழைபெய்து உலகைக் காக்க,
நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்தநான்காக வேறுபட்டு நிற்கும் அகன்ற இடங்களாகிய திசைகள் ஒன்றுபோல ஈட்டம் பெற,
இலங்கு கதிர் திகிரி முந்திசினோரேஒளிரும் கதிர்களைக் கொண்ட அரசாணையாகிய அரசசக்கரத்தைச் செலுத்திய உன் முன்னோர்கள்.
  
# 70 பாட்டு 70# 70 பாட்டு 70
களிறு கடைஇய தாள்களிறுகளைச் செலுத்திய கால்களையும்,
மா உடற்றிய வடிம்புகுதிரைகளைப் போரிடுவதற்குச் செலுத்திய காலின் முன்பகுதியையும்,
சமம் ததைந்த வேல்பகைவரின் போரைச் சிதைத்த வேலினையும்,
கல் அலைத்த தோள்பெரிய கற்களைத் தூக்கிப் பயிற்சிசெய்த தோள்களையும்,
வில் அலைத்த நல் வலத்துவில்லினால் பகைவரை வருத்திய நல்ல வெற்றியினையும் கொண்ட,
வண்டு இசை கடாவா தண் பனம் போந்தைவண்டுகள் மொய்த்து இசையை வெளிப்படுத்தாத குளிர்ச்சியான பனையாகிய போந்தையின்,
குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டுகுவிந்த அரும்புகளைக் கொண்ட, ஊசிபோல் கூர்மையான, வெண்மையான குருத்தினைக் கொண்டு
தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கிஇனிய சுவையுள்ள சுனைநீரின் மலர்களைக் கண்ணியாகச் செய்து சூடி, இறுமாப்புடன் செருக்கி,
உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்துதனக்கே உரித்தானதாகப் பெற்ற நிலையையுடைய நல்ல போர்களை வென்று, எதிர்ப்போரின் வீரத்தை அழித்து,
கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்தமிக்க சினத்தையுடைய வேந்தர்களின் தலைமையினையும் இல்லாமற்செய்த
வலம் படு வான் கழல் வயவர் பெருமவெற்றி பொருந்திய பெரிய கழல் அணிந்த வீரர்களுக்குத் தலைவனே!
நகையினும் பொய்யா வாய்மை பகைவர்விளையாட்டுக்கும் பொய்கூறாத வாய்மையினையும், பகைவரின்
புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மைஒளிவுமறைவான இகழ்ச்சிப்பேச்சையும் கேளாத குற்றம் நீங்கிய அறிவினையும் கொண்ட –
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇநாணம் நிறைந்து, பெருமளவு கபடமின்மை நிலைபெற்று,
கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல்கற்பு நிலையாகத் தங்கின, மணங்கமழும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய,
புரையோள் கணவ பூண் கிளர் மார்பசிறந்தவளுக்குக் கணவனே! – பூண்கள் அணிந்த மார்பினையுடையவனே!
தொலையா கொள்கை சுற்றம் சுற்றகொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்கும் சான்றோராகிய சுற்றம் உன்னைச் சூழ இருக்க,
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்விவேள்விகளைச் செய்து இறைவர்க்குப் பலியூட்டினாய்! முன்னோர் சொல்லக் கேள்விப்பட்ட
உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினைஉயர்ந்த நிலையுள்ள உலகமான விண்ணுலகில் இருப்போரை மகிழ்வித்தாய்!
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மைசான்றோரை வணங்கும் மென்மையான உள்ளமும், பகைவரை வணங்காத ஆண்மைத் திறமும் கொண்டு,
இளம் துணை புதல்வரின் முதியர் பேணிஇளம் துணைவராகிய புதல்வரைப் பெற்று, முதியோரைப் பேணி,
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்தொன்றுதொட்ட உன் கடமையைத் தவறாது செய்யும், வெல்லுகின்ற போரையுடைய அண்ணலே!
மாடோர் உறையும் உலகமும் கேட்பதேவர்கள் வாழும் விண்ணுலகத்திலும் கேட்கும்படியாக
இழுமென இழிதரும் பறை குரல் அருவிஇழும் என்ற ஒலியுடன் விழுகின்ற பறை முழக்கத்தைக் கொண்ட அருவியோசை
முழு_முதல் மிசைய கோடு-தொறும் துவன்றும்மிகப் பெரிதான உச்சியையுடைய மலைச் சிகரமெங்கும் நிறைந்து விளங்கும்
அயிரை நெடு வரை போலஅயிரை என்னும் நெடிய மலையைப் போல
தொலையாது ஆக நீ வாழும் நாளே குறையாது பெருகுவதாக நீ வாழும் நாள்கள்.
  
  
எட்டாம் பத்து           எட்டாம் பத்து           
      அரிசில் கிழார்      அரிசில் கிழார்
  
# 71 பாட்டு 71# 71 பாட்டு 71
அறாஅ யாணர் அகன் கண் செறுவின்தீர்ந்துபோகாத புதுவருவாயையுடைய அகன்ற இடமான வயல்களில்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்துநிறைந்து இருக்கும் ஆம்பல், நெய்தல் ஆகிய பூக்களை நெற்கதிர்களோடு அறுத்து,
செறு வினை மகளிர் மலிந்த வெக்கைவயல்வேலை செய்யும் மகளிர் மிகுந்திருக்கும் நெற்களத்தில்
பரூஉ பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்பெருத்த எருதுகள் போரடிக்குபோது மிதித்து உதிர்த்த மென்மையான செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவித்து ஆங்குமரக்கால் அளவைகளைப் பத்தாயத்தில் குவித்து வைத்ததைப் போன்ற,
கடும் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும்கடுமையாகக் கொட்டுதலைச் செய்யும் கூட்டமான குளவிகள் மொய்த்தவாறு தங்கியிருக்கும்
செழும் கூடு கிளைத்த இளம் துணை மகாரின்செழுமையான குளவிக்கூட்டைக் கலைத்த பெற்றோர்க்கு இளமைத் துணையான சிறுவர்களைப் போன்று
அலந்தனர் பெரும நின் உடற்றியோரேதுன்பப்பட்டனர், பெருமானே! உன்னைக் கோபப்படுத்தியவர்கள்;
ஊர் எரி கவர உருத்து எழுந்து உரைஇநெருப்பு, பகைவர் ஊர்களைக் கவர்ந்துகொள்ளுமாறு, சினந்து மேலெழுந்து உன் கோபத்தைத் தெரிவிக்க,
போர் சுடு கமழ் புகை மாதிரம் மறைப்பபோரில் சுடுகின்ற புகைநாற்றம் கமழும் புகை திசைகளையெல்லாம் மறைக்க,
மதில் வாய் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர்மதில்களுக்குள்ளே இருந்து, வெளியில் வராமல், தமது பழியை மிகுதிப்படுத்திக்கொள்பவர்களின்
குண்டு கண் அகழிய குறும் தாள் ஞாயில்ஆழமான இடத்தையுடைய அகழியையும், குறுகிய படிகளையும் கொண்ட கோட்டை முகப்பினையுடைய
ஆர் எயில் தோட்டி வௌவினை ஏறொடுகடத்தற்கு அரிய மதிலின் காவலை அழித்துக் கவர்ந்துகொண்டாய்! காளைகளுடன்
கன்று உடை ஆயம் தரீஇ புகல் சிறந்துகன்றுகளையும் உடைய பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொண்டுவந்து, அவற்றின் மேல் விருப்பம் மிக்கு,
புலவு வில் இளையர் அங்கை விடுப்பபுலால் நாறும் வில்லையுடைய வெட்சிவீரர் அவற்றை விடுவிக்க
மத்து கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉதயிர் கடையும் மத்து கயிற்றினில் சுழலாத விடியற்காலத்தே, உன்னை நினைத்து வந்து,
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கபசுக்களின் பயனைக் கொண்டு வாழும் இடையர்களின் கழுவுள் என்னும் தலைவன் தலைவணங்கி நிற்க,
பதி பாழ் ஆக வேறு புலம் படர்ந்துசெல்லுகின்ற ஊர்கள் பாழ்பட்டுப்போகும்படி, வேறு இடத்தை நோக்கிச் சென்று,
விருந்தின் வாழ்க்கையொடு பெரும் திரு அற்று எனபுதிதாகத் தாம் தேடிய செல்வத்தோடு, தமது முன்னோர் தேடிவத்த பெரும் செல்வமும் அழிந்துபோயின என்று,
அரும் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல்வெல்லுதற்கரிய போரில் அரிய நிலையை எதிர்த்து நின்று தடுக்கும் புள்ளிகள் கொண்ட நெற்றியையுடைய
பெரும் களிற்று யானையொடு அரும் கலம் தராஅர்பெரிய ஆண்யானைகளோடு, அருமையான அணிகலன்களையும் திறையாகத் தந்து,
மெய் பனி கூரா அணங்கு என பராவலின்மேனி மிகவும் நடுக்கமுற்று, தெய்வமேயென்று உன்னைப் புகழ்ந்து நிற்க,
பலி கொண்டு பெயரும் பாசம் போலபலியுணவை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லும் பேய் போல,
திறை கொண்டு பெயர்தி வாழ்க நின் ஊழிபகைவரின் திறையைமட்டும் எடுத்துக்கொண்டு மீளுகின்றாய்! வாழ்க உன் வாழ்நாள்!
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணிஅறிவுடையோர்க்கும், அறிவில்லாதோர்க்கும், அவரின் அறிவின் அளவைத் தெரிந்து எண்ணி
அறிந்தனை அருளாய் ஆயின்அவரவர் தகுதிக்கேற்பச் செய்யாவிட்டால்
யார் இவண் நெடுந்தகை வாழுமோரேநெடுந்தகையே! யார்தாம் இங்கு வாழ்வார்?
  
# 72 பாட்டு 72# 72 பாட்டு 72
இகல் பெருமையின் படை கோள் அஞ்சார்பகைமையுணர்வு மிகுந்திருப்பதால் படையெடுத்து வருவதற்கு அஞ்சாதவராய்,
சூழாது துணிதல் அல்லது வறிது உடன்ஆராயாமல் போர்செய்யத் துணிவதே அல்லாமல், சிறிதளவும், பலரும் கூடி
காவல் எதிரார் கறுத்தோர் நாடு நின்தம் நாட்டைக் காப்பதற்கு இயலாதவர் உன்னைப் பகைத்தவர்; உன்
முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்துகுலத்தில் முன்னாக இருந்த முன்னோர்களுக்குப் பாதுகாப்பாயிருந்து
மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்உலகத்து மக்களைக் காக்கும் நெறிமுறைகளை எடுத்துக்கூறும்
நன்று அறி உள்ளத்து சான்றோர் அன்ன நின்நல்லவற்றை அறிந்த உள்ளத்தையுடைய சான்றோரைப் போன்ற உன்
பண்பு நன்கு அறியார் மடம் பெருமையின்பண்புகளை நன்கு அறியமாட்டார், அறியாமை மிகுந்திருப்பதால்
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலைஎல்லா உயிர்களும் இறக்கின்ற ஊழிக்காலம் நுழைகின்ற போதில்
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டிநிலம் தன் பாரத்தைக் குறைத்துக்கொள்ளும் வகையில், வெள்ளம் பரந்து நிறைந்து வந்து கூடி,
உரவு திரை கடுகிய உருத்து எழு வெள்ளம்வலிய அலைகள் கடுமையாகச் சினந்து எழுந்துவருமாறு, ஊழிப் பெருவெள்ளம்
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்துஎல்லைகளே தோன்றாத திசைகளிலெல்லாம் இருளுடன் சேர்ந்து பரவி நிற்க,
ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்துஞாயிறு தோன்றி, பன்னிரண்டாய் விரிந்து வரும் கூட்டத்தில்,
அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்துஅழகிய விழாவைப் போன்று இன்பந்தரும் உன் வழக்கமான தொழிலை விடுத்து,
பொங்கு பிசிர் நுடக்கிய செம் சுடர் நிகழ்வின்பொங்கியெழும் பிசிரினையுடைய வெள்ளத்தை வற்றச் செய்யும் சிவந்த சுவாலைகளோடு தோன்றும்
மடங்கல் தீயின் அனையைஊழிப்பெருந்தீயைப் போன்றவன்,
சினம் கெழு குருசில் நின் உடற்றிசினோர்க்கேசினம் பொருந்திய குருசிலே! உன்னைக் கோபப்படுத்தியவர்களுக்கு.
  
# 73 பாட்டு 73# 73 பாட்டு 73
உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்அறிவுடையோர் நினைத்துப்பார்த்தாலும், அறிவில்லாதர் நினைத்துப்பார்த்தாலும்
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்குபிறர்க்கு நீ ஒப்புமையாக அமைவதல்லாமல், உனக்குப்
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தேபிறர் ஒப்புமை ஆகாத தனிச் சிறப்பு வாய்ந்த வேந்தனே!
கூந்தல் ஒண் நுதல் பொலிந்த— கூந்தலிலும், ஒளிவிடும் நெற்றியிலும் அழகுற அமைந்த
நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும்வண்ணமயமான புதிய அணிகலன்களை அணிந்த குல மகளிரும்,
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர்தெய்வத்தன்மையைத் தரும் நெஞ்சினைக் கொண்ட ஆன்றோர் —-
மருதம் சான்ற மலர் தலை விளை வயல்மருத வளம் அமைந்த விரிந்த இடத்தையுடைய விளைநிலங்களாகிய
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்வயல்களுக்குள் நாரைகளை விரட்டும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்இரவும் பகலும் தம் புத்தம்புதிய அணிகலன்களைக் கழற்றாதவராய்
குறும் பல் யாணர் குரவை அயரும்அருகருகே அமைந்துள்ள பல புதுப்புது இடங்களில் குரவைக் கூத்தினை ஆடி மகிழும்,
காவிரி மண்டிய சேய் விரி வனப்பின்காவிரி பெருக்கெடுத்துச் சென்று தொலைவில் பரந்து விரிகின்ற அழகினையுடைய
புகாஅர் செல்வ பூழியர் மெய்ம்மறைபுகார் நகரத்தையுடைய செல்வனே! பூழி நாட்டிலுள்ளவர்களின் கவசம் போன்றவனே!
கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடும் கோட்டுமூங்கில்கள் விரிந்து எழுகின்ற மேகங்கள் தவழும் உயர்ந்த சிகரங்களையுடைய
கொல்லி பொருந கொடி தேர் பொறைய நின்கொல்லி மலைக்குத் தலைவனே! கொடிகளையுடைய தேரையுடைய சேரனே! உன்
வளனும் ஆண்மையும் கைவண்மையும்செல்வமும், வீரமும், வள்ளண்மையும்
மாந்தர் அளவு இறந்தன என பல் நாள்மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாயின என்று பல நாள்கள்
யான் சென்று உரைப்பவும் தேறார் பிறரும்நான் சென்று உன் பகைவரிடம் சொல்லவும் அவர்கள் அவற்றை உணரமாட்டார்; வேறு
சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் எனசான்றோர்கள் சொன்னால் உணர்ந்துகொள்வாரோ என்று கருதினால்
ஆங்கும் மதி மருள காண்குவல்அவ்வாறு சொன்னபோதும் மதி மயங்கி இருக்கக் கண்டேன்;
யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானேஎவ்விதம் அவருக்கு எடுத்துச் சொல்வேன் என்று வருந்துகிறேன் நான்.
  
# 74 பாட்டு 74# 74 பாட்டு 74
கேள்வி கேட்டு படிவம் ஒடியாதுவேதங்களைச் சொல்லக்கேட்டு, விரதங்களை இடைவிடாமல் கைக்கொண்டு
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பவேள்விகளைச் செய்து முடித்தாய், உயர்ந்தவர்கள் மனம் மகிழ;
சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல்நுண்ணிய கருமணலைப் போன்ற, தாழ்ந்து இறங்கும் கரிய கூந்தலைக் கொண்ட
வேறு படு திருவின் நின் வழி வாழியர்திருமகளினின்றும் வேறு பட்ட மற்றொரு திருமகளாகிய உன் தேவி உன் குலம் வாழும்பொருட்டு –
கொடுமணம் பட்ட வினை மாண் அரும் கலம்கொடுமணம் என்ற ஊரில் இருக்கும் வேலைப்பாட்டினில் சிறந்த அரிய அணிகலன்களையும்,
பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்பந்தல் என்ற ஊர் தந்த பலரும் புகழும் முத்துக்களையும்,
வரை_அகம் நண்ணி குறும் பொறை நாடிபெரிய மலைகளின் சென்று, சிறிய குன்றுகளில் தேடி,
தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறிஅலைந்துதிரிவோர் பிடித்துக்கொண்டு வந்த பரவலான பளிச்சென்ற புள்ளிகளையுடைய,
கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின்கிளைத்துப் பிரிந்த கோலைப் போன்ற பிளவுபட்ட கொம்பினையுடைய,
புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்துபுள்ளி மானின் தோலை உரித்து, அதினின்றும் ஊனை நீக்கி,
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில்தீய பாகங்களைக் களைந்துபோட்டு, எஞ்சிய வட்டமாக அறுத்த ஒளிவிடும் தோலின்
பருதி போகிய புடை கிளை கட்டிசுற்றளவாய் அமைந்த விளிம்பில் வகை வகையாகக் கட்டி,
எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன்கூர்மையை உடைய ஊசியால், உள்புறத்தில் தைத்து, தொழிலில் வல்லவன்
சூடு நிலை உற்று சுடர்விடு தோற்றம்சூடுவதற்குரிய நிலையை உண்டாக்கி, ஒளி திகழும் தோற்றத்தை உண்டாக்குவதால்
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்பவிசும்பில் பறக்கும் வழக்கத்தையுடைய பருந்து ஊன் என்று கொத்தித்தின்ன முனையும்படியாக
நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள்மணிகளுக்குரிய இலக்கணங்களைப் பெற்ற அழகிய மணி சேர்ந்த நல்ல தோளையும்,
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் கருவில்ஒடுங்கிய சுருள் என்னும் பகுதியான கூந்தலையும், ஒளிவிடும் நெற்றியையும் கொண்ட உன் தேவி – கருவில் அமைத்து
எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்துஎண்ணப்படும் மாதங்கள் பத்தும் முடிவடைந்து, இருவகை அறிவும் அமைந்து,
சால்பும் செம்மையும் உளப்பட பிறவும்நற்பண்புகளும் நடுவுநிலைமையும் உள்ளிட்ட பிற பண்புகளும்,
காவற்கு அமைந்த அரசு துறைபோகியநாட்டினைக் காப்பதற்கு அமைந்த அரசியலறிவு முதலியவற்றையும் கற்றுத் தேர்ந்த
வீறு சால் புதல்வன் பெற்றனை இவணர்க்குசிறப்பு நிறைந்த புதல்வனைப் பெற்றுள்ளாய், இந்த உலகத்து மக்களுக்கு;
அரும் கடன் இறுத்த செரு புகல் முன்பஅரசர்க்குரிய அரிய கடமைகளைச் செய்து முடித்த, போரினை விரும்பும் வலிமையுடையவனே!
அன்னவை மருண்டனென் அல்லேன் நின்_வயின்மேற்கூறிய கேள்வி, வேள்வி, மக்கட்பேறு ஆகிய அவற்றைக் கண்டு வியப்புறவில்லை, உன்னிடம்;
முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனைஉணரத் தக்கவற்றை முழுதும் உணர்ந்து, பிறரையும் நன்னெறியில் ஒழுகச்செய்யும் நரை கொண்ட முதுமையான புரோகிதனை,,
வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்கொடையும், மாட்சிமையும், செல்வமும், மகப்பேறும்,
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு எனதெய்வ உணர்வும் ஆகிய யாவையும் தவப்பயன் பெறுவோர்க்கே என்று அறிவுறுத்தி
வேறு படு நனம் தலை பெயரநாட்டிலிருந்து வேறுபட்ட அகன்ற இடமாகிய காட்டுக்குத் தவத்தினை மேற்கொண்டு செல்லும்படி
கூறினை பெரும நின் படிமையானேகூறி அனுப்பிவைத்தாய், பெருமானே! உன் தவ ஒழுக்கத்தால்.
  
# 75 பாட்டு 75# 75 பாட்டு 75
இரும் புலி கொன்று பெரும் களிறு அடூஉம்பெரிய புலியைக் கொன்று, அதன்மேலும் பெரிய ஆண்யானையைக் கொல்லும்
அரும் பொறி வய_மான் அனையை பல் வேல்அரிய வரிவரியான மயிரினைக் கொண்ட வலிமையான சிங்கத்தைப் போன்றவனே! பலவான வேற்படையினையும்,
பொலம் தார் யானை இயல் தேர் பொறையபொன்னால்செய்த மாலையை அணிந்த யானையையும், இலக்கணம் அமைந்த தேரினையும் உடைய இரும்பொறையே!
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்துமுடியுடை வேந்தரும், குறுநில மன்னரும், பிறரும் உன்னைக் கீழ்ப்பணிந்து
நின் வழிப்படார் ஆயின் நெல் மிக்குஉன் விருப்பப்படி நடக்காவிட்டால், நெல் மிகுதியாய் விளைய,
அறை_உறு கரும்பின் தீம் சேற்று யாணர்வெட்டப்பட்ட கரும்பின் இனிய சாறாகிய புதுவருவாயினை
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கைவருவோர்க்கு அளவின்றிக் கொடுக்கும் செல்வம் பெருகியிருக்கும் குடியிருப்புகள்
வன்_புலம் தழீஇ மென்பால்-தோறும்வன்புலத் தன்மை பெற்று, மருதநிலங்கள்தோறும்
அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்துஅரிய பறையையுடைய வேட்டுவர் புல்லிய போரில் ஈடுபட்டு,
கள் உடை நியமத்து ஒள் விலை கொடுக்கும்கள் இருக்கும் கடைத்தெருவில் நல்ல விலைக்குக் கொடுக்கும்
வெள் வரகு உழுத கொள் உடை கரம்பைஉழுது விதைத்துப் பெற்ற வெள்ளை வரகும், கொள்ளும் உடைய களர்நிலம் ஆகி,
செந்நெல் வல்சி அறியார் தத்தம்அங்குள்ளோர் செந்நெல் உணவினை அறியமாட்டார்; எனவே, அவரவருடைய,
பாடல் சான்ற வைப்பின்புகழ் பெற்ற ஊர்களையுடைய
நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கேநாடுகளை ஒருசேர ஆளுவது எவ்வாறு இயலும் அவருக்கு.
  
 76 பாட்டு 76 76 பாட்டு 76
களிறு உடை பெரும் சமம் ததைய எஃகு உயர்த்துகளிறுகளைக் கொண்டு செய்யும் பெரும் போர் சிதைந்துபோகும்படி, வேலையும் வாளையும் உயர்த்திப் பிடித்து,
ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்றுஒளிவிடும் வாளையுடைய பகைமன்னர்கள் சேர்ந்துவந்து போரிடும் நிலையை அழித்து,
முரசு கடிப்பு அடைய அரும் துறை போகிவெற்றி முரசு குறுந்தடியால் அடிக்கப்பெற, அரிய பல போர்த்துறைகளைக் கடந்துசென்று,
பெரும் கடல் நீந்திய மரம் வலி_உறுக்கும்பெரிய கடலில் சென்றுவந்த மரக்கலத்தினைப் பழுதுநீக்கி மீண்டும் வலிமைப்படுத்தும்
பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇபொருள்கள் விற்கும் கடல்வாணிகர் போலப் போரில் ஏற்பட்ட புண்களை ஆற்றி,
பெரும் கை தொழுதியின் வன் துயர் கழிப்பிபெரிய கைகளைக் கொண்ட கூட்டமான யானைகளின் கடுமையான துயரத்தைப் போக்கி,
இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்குஇரந்து வந்தவர் வாழும்படியாக அவர்களுக்குக் கொடுத்து, பின்னர் வந்து இரப்போர்க்கும்
ஈதல் தண்டா மா சிதறு இருக்கைஈதலில் குறையாத குதிரைகளை வாரி வழங்கும் உன் பாசறை இருப்பினைக்
கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டுகண்டு செல்வதற்கு வந்தேன்!
கருவி வானம் தண் தளி சொரிந்து எனஇடிமின்னலோடு மேகங்கள் குளிர்ந்த நீர்த்துளிகளைச் சொரிய
பல் விதை உழவின் சில் ஏராளர்மிகுதியாக விதைப்பதற்கேற்ற உழவடையை உடைய சில ஏர்களை உடைய உழவர்கள்
பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல்குளிர்ந்த நீர்த்துறையில் மலர்ந்துள்ள பகன்றை மலரால் தொடுத்த அழகான மாலையை
கழுவு_உறு கலிங்கம் கடுப்ப சூடிவெளுக்கப்பட்ட வெள்ளை ஆடையைப் போல் தலையில் சூடிக்கொண்டு,
இலங்கு கதிர் திரு மணி பெறூஉம்உழுவதால் புரண்டு விழுகின்ற மண்ணில் ஒளிரும் கதிர்களையுடைய அழகிய மணிகளைப் பெறுகின்ற
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயேஅகன்ற இடத்தையுடைய ஊர்கள் நிறைந்த நாட்டின் உரிமையாளனே!
  
# 77 பாட்டு 77# 77 பாட்டு 77
எனை பெரும் படையனோ சின போர் பொறையன்எந்த அளவு பெரிய படையைக் கொண்டவன், சினத்துடன் போரிடும் இரும்பொறை?
என்றனிர் ஆயின் ஆறு செல் வம்பலீர்என்று கேட்பீராகில், வழியே செல்லும் புதியவர்களே!
மன்பதை பெயர அரசு களத்து ஒழியஉலகமக்கள் நிலைகுலைந்துபோக, அரசர்கள் போர்க்களத்தில் அழிந்துபோக
கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கைஅவரைக் கொன்று தோள்களை உயர்த்தி வெற்றி ஆட்டமான துணங்கைக்கூத்தாடிய
மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின்பகைவரின் பிணத்தின் மீது உருண்டோடியும் தேய்ந்துபோகாத சக்கரங்களையுடைய
பண் அமை தேரும் மாவும் மாக்களும்சிறப்பாகச் செய்யப்பட்ட தேரினையும், குதிரைகளையும், காலாட்படையினரையும்
எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனேஎண்ணுவதற்கு அரிதாதலால் அவற்றை நான் எண்ணிக் கணக்கிடேன்;
கந்து கோள் ஈயாது காழ் பல முருக்கிதறிகளில் கட்டிப்போட இடம்தராமல், தன்னை அடக்குவதற்குக் குத்தும் குத்துக்கோல்களை முறித்துப்போட்டு,
உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடிஉயரப்பறக்க மேலெழும் பருந்தின் நிலத்தில் படியும் நிழலைப் பார்த்துச் சீறி,
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படை கொங்கர்வெகு தொலைவுக்கு பரல்கற்களையுடைய மேட்டுநிலத்தில், வளைத்து இழுக்கும் தொறட்டிக் கம்பினையுடைய கொங்கர்களின்
ஆ பரந்து அன்ன செலவின் பல்பசு மாடுகள் பரந்து செல்வதைப் போன்று நடந்துபோகின்ற, பலவான
யானை காண்பல் அவன் தானையானேயானைகளைக் காண்கிறேன் அவனுடய சேனையில்.
  
# 78 பாட்டு 78# 78 பாட்டு 78
வலம் படு முரசின் இலங்குவன விழூஉம்வெற்றி முழக்கமிடும் முரசினைப் போல, ஒளிர்வனவாய் விழுகின்ற
அம் வெள் அருவி உ வரையதுவேஅழகிய வெண்மையான அருவி அந்த எல்லையில் உள்ளது –
சில் வளை விறலி செல்குவை ஆயின்சிலவான வளையல்களை அணிந்த விறலியே! அங்கு நீ செல்லவிரும்பினால்,
வள் இதழ் தாமரை நெய்தலொடு அரிந்துவளமையான இதழ்களையுடைய தாமரைப் பூவை நெய்தற்பூவோடு சேர்த்துக் கொய்துகொண்டு
மெல் இயல் மகளிர் ஒல்குவனர் இயலிமென்மையான இயல்பினையுடைய மகளிர் அசைந்தசைந்து நடந்து
கிளி கடி மேவலர் புறவு-தொறும் நுவலதினைக் கதிர்களில் வந்து படியும் கிளிகளை ஓட்டுவதற்கு விருப்பமுடையோராய், தினைப்புனங்கள்தோறும் குரலெழுப்ப,
பல் பயம் நிலைஇய கடறு உடை வைப்பின்பலவகையான பயன்களும் நிலைபெற்ற காடுகளில் இருக்கும் ஊர்களையும்,
வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும்வெல்லுகின்ற போரையுடைய ஆடவர் வீர்ச் செயல்கள் புரிந்து காக்கின்ற
வில் பயில் இறும்பின் தகடூர் நூறிவிற்படையினர் நிறைந்த காவற்காட்டையுடைய தகடூரைத் தகர்த்து,
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர்கண்டார்க்கு அச்சத்தை உண்டாக்கும்படி பிறழ நோக்கும் பார்வையையும், பல இசைக்கருவிகளையுமுடைய பகைவரின்,
ஓடு_உறு கடு முரண் துமிய சென்றுபிறரைத் தோற்று ஓடும்படியாகச் செய்யக்கூடிய கடும் பகைமை அழிந்துபோகச் சென்று
வெம் முனை தபுத்த_காலை தம் நாட்டுஅவரின் கொடிய போர்முனையை அழித்த போது, அவருடைய நாட்டில்
யாடு பரந்து அன்ன மாவின்ஆடுகள் சிதறிப் பரந்து செல்வதைப் போன்ற குதிரைகளையும்,
ஆ பரந்து அன்ன யானையோன் குன்றேபசுக்களும் சிதறுண்டு பரந்து செல்வதைப் போன்ற யானைகளையும் உடையவனின் குன்று –
  
# 79 பாட்டு 79# 79 பாட்டு 79
உயிர் போற்றலையே செருவத்தானேஉயிரை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை, போர்க்களத்தில்;
கொடை போற்றலையே இரவலர் நடுவண்கொடுக்கின்ற பொருள்களின் அளவை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை, இரவலர்களின் நடுவில்;
பெரியோர் பேணி சிறியோரை அளித்திபெரியோரைப் பேணிக்காத்துச் சிறியோருக்கும் அருள் செய்கின்றாய்!
நின்_வயின் பிரிந்த நல் இசை கனவினும்உன்னிடமிருந்து புறப்பட்டுச் சென்ற உனது நல்ல புகழ், கனவிலும்
பிறர் நசை அறியா வயங்கு செம் நாவின்வேறு யாரையும் விரும்பிச் செல்லுதலை அறியமாட்டாது! தெளிவான பேச்சைக்கொண்ட செம்மையான நாவினையும்,
படியோர் தேய்த்த ஆண்மை தொடியோர்படிந்துவராதவரை முற்றிலும் அழிக்கின்ற ஆண்மையையும், தோள்வளை அணிந்த மகளிரின்
தோள் இடை குழைந்த கோதை மார்பதோள்களின் இடையே குழைந்துபோன மாலையையுடைய மார்பினையும் கொண்ட வேந்தனே!
அனைய அளப்பு அரும்-குரையை அதனால்அத்தன்மைகளில் அளத்தற்கரியவனாய் இருக்கிறாய்! அதனால்
நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்துஉன் விருப்பப்படி நடப்பதற்கு இசையாமல், தங்கள் நாட்டிலேயே இருந்து,
கொல் களிற்று யானை எருத்தம் புல்லெனஅவர் ஏறிவருகின்ற கொல்லுகின்ற ஆண்யானையின் பிடரி புல்லென்று வெற்றிடம் ஆகும்படியாக,
வில் குலை அறுத்து கோலின் வாராஅதன் மீது வருவோரின் வில்லின் நாணை அறுத்து அவரை வீழ்த்தி, தனது செங்கோலுக்கு அடங்கிவராத
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர்வெல்லும் போரினைக் கொண்ட வேந்தர்களின் முரசுகளின் முகப்பைக் கிழித்து, அவருடைய
அரசு உவா அழைப்ப கோடு அறுத்து இயற்றியபட்டத்து யானை கதறக்கதற அதனுடைய கொம்புகளை அறுத்தெடுத்துச் செய்த
அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்துஅச்சம் தரும் தன்மையையுடைய கட்டிலின் மேலிருந்து
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்துதும்பைப் போரின் தன்மை பொருந்திய போரைச் செய்ததால் உடல் சோர்வினில் ஓய்ந்திருக்க,
நிறம் படு குருதி புறம்படின் அல்லதுமார்பினைக் கிழித்து வரும் குருதி மேலே பட்டாலல்லது
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்பலியுணவை ஏற்றுக்கொள்ளாத அச்சம்தரும் இயல்பினையுடைய
கடவுள் அயிரையின் நிலைஇகடவுளான கொற்றவை இருக்கும் அயிரை மலையைப் போல நிலைபெற்று
கேடு இல ஆக பெரும நின் புகழேஅழியாதது ஆகுக பெருமானே! உன் புகழ்!
  
# 80 பாட்டு 80# 80 பாட்டு 80
வான் மருப்பின் களிற்று யானை– வெண்மையான கொம்புகளைக் கொண்ட போர்யானைகள்
மா மலையின் கணம்_கொண்டு அவர்பெரிய மலை போலக் கூட்டமாய் நிற்க, அவர்கள்
எடுத்து எறிந்த விறல் முரசம்தூக்கிவைத்து முழக்கிய வெற்றி முரசம்
கார் மழையின் கடிது முழங்ககார்கால மேகங்கள் போல் மிக அதிகமாக முழங்க,
சாந்து புலர்ந்த வியல் மார்பின்பூசிய சந்தனம் புலர்ந்துபோன அகன்ற மார்பினையும்,
தொடி சுடர் வரும் வலி முன்கைதோள்வளை ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் வலிமை மிக்க முன்கையினையும்,
புண் உடை எறுழ் தோள் புடையல் அம் கழல் கால்விழுப்புண் பட்ட வலிமையான தோள்களில் மாலையையும், அழகிய கழலணிந்த கால்களையும்,
பிறக்கு அடி ஒதுங்கா பூட்கை ஒள் வாள்காலைப் பின்னெடுத்து வைக்காத கோட்பாட்டையுடைய ஒளிரும் வாட்படையினையும் உடைய
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇவணங்காத பகைவர் முன்னே அவருக்கு எதிரே நின்று, இரண்டு பக்கங்களிலும் உலாவி,
இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு என“செலுத்துவீராக திறையை, உமக்குப் பாதுகாப்பினை வழங்குவதற்காக வந்திருப்பவருக்கு” என்று
அம்பு உடை வலத்தர் உயர்ந்தோர் பரவவலக்கையில் அம்பினை உடைய வீரர்கள் புகழ்ந்து கூற,
அனையை ஆகன் மாறே பகைவர்நீயும் அப்படிப்பட்டவன் ஆதலினாலே, உன் பகைவரின்
கால் கிளர்ந்து அன்ன கதழ் பரி புரவிகாற்று மேலெழுந்ததைப் போன்ற விரைவான ஓட்டத்தையுடைய குதிரைகள் பூட்டிய
கடும் பரி நெடும் தேர் மீமிசை நுடங்கு கொடிவேகமாகச் செல்லும் நெடிய தேர் மீது கட்டிய அசைந்தாடும் கொடி
புல வரை தோன்றல் யாவது சின போர்அவரது நாட்டின் எல்லையில் தோன்றுவது எவ்வாறு? சினங்கொண்ட போரினையும்
நிலவரை நிறீஇய நல் இசைநிலத்தின் எல்லைவரை நிறுவிய நல்ல புகழினையும்
தொலையா கற்ப நின் தெம் முனையானேகேடில்லாத கல்வியினையும் உடையவனே! நீ பகைகொண்ட போர் முனையில் –
  
  
ஒன்பதாம் பத்து          ஒன்பதாம் பத்து          
      பெருங்குன்றூர்க் கிழார்      பெருங்குன்றூர்க் கிழார்
  
# 81 பாட்டு 81# 81 பாட்டு 81
உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின்உலகத்து உயிர்களைக் காக்கும், அச்சம் தரக்கூடிய சிறப்பினையுடைய
வண்ண கருவிய வளம் கெழு கமம் சூல்கரிய நிறத்துடன் தொகுதியாய் இருக்கும் வளம் பொருந்திய நிறைந்த நீரையுடைய மழைமேகங்கள்,
அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்துஅகன்ற கரிய வானத்தில் அதிரும்படி மின்னிக் குமுறி,
கடும் சிலை கழறி விசும்பு அடையூ நிவந்துமிக்க முழக்கத்தை எழுப்பி, வானத்தையே அடைத்துக்கொண்டு உயர்ந்தெழுந்து,
காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொளகார்காலத்தை அறிவிக்கும் பருவத்தால் உயிர்கள் வருத்தம் கொள்ள,
களிறு பாய்ந்து இயல கடு மா தாங்ககளிறுகள் பாசறையில் விரைவாக அங்குமிங்கும் நடந்து திரிய, விரைந்து செல்லும் குதிரைகள் கட்டுப்பாட்டுடன் நடக்க,
ஒளிறு கொடி நுடங்க தேர் திரிந்து கொட்பஒளிவீசும் கொடிகள் அசைந்தசைந்து ஆடிக்கொண்டிருக்க, தேர்கள் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு சுழன்றுவர,
அரசு புறத்து இறுப்பினும் அதிர்வு இலர் திரிந்துபகையரசர் சுற்றிலும் முற்றுகையிட்டுத் தங்கியிருந்தாலும், சிறிதும் நடுக்கமில்லாதவராய் நடமாடிக்கொண்டு
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்தமக்குக் கொடுக்கப்பட்ட இடங்களைக் காவல் காக்காத வன்மையினராகிய வீரர்கள்
மா இரும் கங்குலும் விழு தொடி சுடர்வரபெரும் இருள் நிறைந்த இரவுநேரத்திலும் தம் தோளின் வீரவளை ஒளிவீசத்
தோள் பிணி மீகையர் புகல் சிறந்து நாளும்தம் கைகளால் தோள்களை மாறி மாறிப் பிடித்துக்கொண்டவராய், போர் மீது பெரு விருப்பம் கொண்டு, ஒவ்வொரு நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉபோரில் தம் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் வேட்கையினை உடையவராய், வஞ்சினம் கூறி
கெடாஅ நல் இசை தம் குடி நிறும்-மார்கெடாத நல்ல புகழையுடைய தம் குடியின் சிறப்பை நிலைநிறுத்துவதற்கு,
இடாஅ ஏணி வியல் அறை கொட்பஅளவிடப்படாத எல்லையைக் கொண்ட அகன்ற பாசறையில் சுழன்று திரிய,
நாடு அடிப்படுத்தலின் கொள்ளை மாற்றிபகைவர் நாட்டை வென்று கீழ்ப்படுத்தியதால் அந் நாட்டில் கொள்ளவேண்டியவற்றைக் கொள்ளாமல் விட்டு
அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டிநெருப்பிலிட்டு உருக்கி உருவாக்கிய ஒளிவிடும் தங்கக் கட்டிகளை,
கட்டளை வலிப்ப நின் தானை உதவிஇன்னின்னாருக்கு இன்னளவு தரவேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டவாறு, உன் படைவீரருக்கு உதவி,
வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல்வேற்று நாடுகளில் வேண்டுமளவு தங்கிய வெல்லுகின்ற போரையுடைய அண்ணலே!
முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்துமுழவைப் போன்று அமைந்த பெரிய பலாப்பழத்தை உண்டு,
சாறு அயர்ந்து அன்ன கார் அணி யாணர்விழாக் கொண்டாடும் காலத்தில் குடிப்பதைப் போன்று, கரிய, அழகிய புதுமையினை உடைய
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்திமூங்கில் குழாயினுள்ளே முதிர்வடைந்த இனிய கள்ளினை நிறைய அருந்தி,
காந்தள் அம் கண்ணி செழும் குடி செல்வர்காந்தள் பூ மாலையைத் தலையில் சூடிய, செழித்த குடியினைச் சேர்ந்த செல்வர்கள்
கலி மகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும்ஆரவாரத்தையுடைய மகிழ்ச்சியை விரும்பியவராய், இரப்போர்க்கு அள்ளிக்கொடுக்கும்,
சுரும்பு ஆர் சோலை பெரும் பெயல் கொல்லிவண்டுகள் ஆரவாரிக்கும் சோலைகள் சூழ்ந்த பெரும் புகழையுடைய கொல்லி மலையில் உண்டாகிய
பெரு_வாய்_மலரொடு பசும்பிடி மகிழ்ந்துஇருவாட்சிப் பூக்களோடு, பச்சிலையைத் தொடுத்து அணிந்து,
மின் உமிழ்ந்து அன்ன சுடர் இழை ஆயத்துமின்னல் வெட்டியதைப் போன்ற ஒளிவிடும் அணிகலன்களை அணிந்த ஆயமகளிர் சூழ்ந்திருக்க,
தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின்தனது நிறத்தையே மறைக்குமளவுக்கு வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய,
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்_நுதல் அணி கொளசுருண்டிருக்கும் முன்மயிர் தவழும் ஒளி பொருந்திய நெற்றியும் அழகு பெறும்படியான
கொடும் குழைக்கு அமர்த்த நோக்கின் நயவரவளைந்த காதணியுடன் போட்டிபோடும் பார்வையினையும், இன்பம் வரும்படி
பெருந்தகைக்கு அமர்ந்த மென் சொல் திரு முகத்துதன் பெருங்குணங்களுக்கு ஏற்பப் பேசும் மென்மையான சொற்களையும், அழகிய முகத்தையும்,
மாண் இழை அரிவை காணிய ஒரு நாள்மிகச் சிறந்த அணிகலன்களையும் உடைய உன் தேவியைக் காண்பதற்கு ஒரு நாள்
பூண்க மாள நின் புரவி நெடும் தேர்பூட்டுக! உன் புரவிகளையுடைய நெடிய தேரினை!
முனை கைவிட்டு முன்னிலை செல்லாதுபோரைக் கைவிட்டு உன் முன்னே வணங்கி நில்லாமல்
தூ எதிர்ந்து பெறாஅ தா இல் மள்ளரொடுஉன் வலிமையினை எதிர்த்து நிற்கமுடியாத வன்மை இல்லாத வீரரோடு
தொன் மருங்கு அறுத்தல் அஞ்சி அரண் கொண்டுஅவரின் பழமையான குலத்தை நீ வேரறுப்பாய் என்று அஞ்சி, அரண்களுக்குள் பதுங்கிக்கொண்டு
துஞ்சா வேந்தரும் துஞ்சுகதூங்காமல் இருக்கும் வேந்தர்களும் கொஞ்சம் தூங்கிக்கொள்ளட்டும்;
விருந்தும் ஆக நின் பெரும் தோட்கேஉன் தேவியைத் தழுவும் விருந்தும் கிடைக்கட்டும் உன் பெரிய தோள்களுக்கு.
  
# 82 பாட்டு 82# 82 பாட்டு 82
பகை பெருமையின் தெய்வம் செப்பஉன்னுடைய பகைமை பெரிதாகையால், உன் பகைவர் தெய்வத்தை வழிபட,
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர்இனிதாகத் தங்குவதற்கு அரிதான இருப்பிடமாயினும் வீரர்கள் அஞ்சாத, பகைவர்க்கு அச்சந்தரக்கூடிய பாசறையில்,
பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர்பல வகைக் கொடிகள் அசைந்தாடும் வலிமையினையுடைய பகைவரின்
செல் சமம் தொலைத்த வினை நவில் யானைபடையெடுத்துச் சென்று போரிடும் போர்களை அழித்த போர்த்தொழிலில் நன்கு பயிற்சிபெற்ற யானைகள்,
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்திமதநீர் பொழிந்து மிகுந்த சினக் கொண்டு
வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயலவண்டுகள் மொய்க்கும் தலையினையுடையவாய், பெண்யானைகளைச் சேர்ந்து திரிய
மறவர் மறல மா படை உறுப்பவீரர்கள் போர்வெறிகொண்டு திரிய, குதிரைகள் போர்க் கவசங்கள் பூண்டு இருக்க,
தேர் கொடி நுடங்க தோல் புடை ஆர்ப்பதேரின்மீது கொடிகள் அசைந்தாட, கேடகப் படைகள் ஒருபக்கத்தில் ஆரவாரிக்க,
காடு கை_காய்த்திய நீடு நாள் இருக்கைகாட்டு மரங்களை வெட்டிக் குளிர்காய்ந்த நீண்ட நாட்களாக இருக்கின்ற பாசறை இருப்பில்
இன்ன வைகல் பல் நாள் ஆகஇப்படியாகத் தங்குதல் பல நாள்களாக இருக்க,
பாடி காண்கு வந்திசின் பெரும– பாடிக் காண்பதற்கு வந்திருக்கிறேன், பெருமானே!
பாடுநர் கொள_கொள குறையா செல்வத்து செற்றோர்பாடி வருவோர் பெற்றுக்கொண்டே இருந்தாலும் குறையாத செல்வத்தையும், பகைவர்
கொல_கொல குறையா தானை சான்றோர்கொன்றுகொண்டே இருந்தாலும் குறையாத சேனையையும், சான்றோரானவர்
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்உனது கொடை, செங்கோன்மை, நற்பண்புகள், வீரம் ஆகிய இவற்றை
புகன்று புகழ்ந்து அசையா நல் இசைவிரும்பிப் புகழ்வதால் கிடைக்கும் குன்றாத நல்ல புகழையும்
நிலம்தருதிருவின்நெடியோய் நின்னேமாற்றார் நிலத்தைப் போரிட்டுச் சேர்த்துக்கொள்ளும் செல்வத்தையும் உடைய நெடியவனான சேரமானே, உன்னை –
  
# 83 பாட்டு 83# 83 பாட்டு 83
கார் மழை முன்பின் கைபரிந்து எழுதரும்கரிய மேகங்களுக்கு முன்பாக, ஒழுங்கு குலைந்து எழுகின்ற
வான் பறை குருகின் நெடு வரி பொற்பவெண்மையான சிறகுகளைக் கொண்ட கொக்குகள் பின்பு நீண்ட வரிசையாய்ச் செல்வதைப் போன்ற
கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடுகொல்லுகின்ற யானைப்படைகளினூடே செறிந்து கலந்த பலவான கேடகப் படையுடன்
நெடும் தேர் நுடங்கு கொடி அவிர்வர பொலிந்துநெடிய தேரின் மீது அசைந்தாடும் கொடி ஒளிவீசிப் பறக்க, அழகுபட
செலவு பெரிது இனிது நின் காணுமோர்க்கேபடையெடுத்துச் செல்வது பெரிதும் இன்பம் தருவதாகும் உன்னைக் காணுவோர்க்கு;
இன்னாது அம்ம அது தானே பன் மா– துன்பத்தைத் தருகிறது அதுவே! பலபடியாக
நாடு கெட எருக்கி நன் கலம் தரூஉம் நின்பகைவரின் நாடுகள் கெட்டழிய, திறையாக நல்ல அணிகலன்களைக் கொண்டுவருகின்ற உன்
போர் அரும் கடும் சினம் எதிர்ந்துபோரிடுவதற்கு அரிய கடுமையான சினத்தை எதிர்கொண்டு
மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கேபகைமை கொண்ட வேந்தரின் பாசறையில் உள்ளவர்க்கெல்லாம் –
  
# 84 பாட்டு 84# 84 பாட்டு 84
எடுத்தேறு ஏய கடி புடை அதிரும்போர்க்களத்தில் வீரரை முன்னேறிச் செல்ல ஏவுகின்ற வகையில் குறுந்தடியால் புடைக்கப்பட்டு அதிர்கின்ற
போர்ப்பு_உறு முரசம் கண் அதிர்ந்து ஆங்குதோலால் போர்த்தப்பட்ட முரசின் முகப்பு அதிர்வதைப் போன்ற
கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவிகார்காலத்து மேகங்களின் முழக்கத்தைக் கேட்டாலும், கட்டிவைக்கப்பட்டிருக்கும் தறியின் பிணிப்பினை அறுத்துக்கொண்டு
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானைநெற்றியை மேலே தூக்கி அண்ணாந்து பார்த்து நடக்கத்தொடங்கும் போர்த்தொழிலில் நல்ல பயிற்சியையுடைய யானைப்படை
பார்வல் பாசறை தரூஉம் பல் வேல்கண்காணிப்புக் கூடாரத்துக்கு வந்து சேருகின்ற, பல வேற்படையினைக் கொண்ட
பூழியர் கோவே பொலம் தேர் பொறையபூழிநாட்டவர்க்கு வேந்தனே! பொன்தகட்டால் மூடிய தேரினையுடைய சேரமானே!
மன்பதை சவட்டும் கூற்ற முன்பமக்களைப் பெரிதாய்த் துன்புறுத்தும் கூற்றுவனைப் போன்ற வலிமையுடையவனே!
கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியாஉன் பகைவரின் கொடிகள் அசைந்தாடும் வெல்வதற்கு அரிய மதில்களைக் கணக்கிட்டால் எண்ணிமுடியாது;
பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாதுபலவான குதிரைகளும் யானைகளும் பரந்திருக்கின்றன; எனினும் உன்னுடைய நாட்டைக் கொள்வது எளிய செயல் என்று எண்ணாமல்
வலியை ஆதல் நற்கு அறிந்தனர் ஆயினும்நீ மிக்க வலிமையுடையவன் என்பதனை நன்கு அறிந்திருக்கின்றனர் உன் பகைவர்; ஆயினும்
வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன்நீண்ட மேகத்தின் முழக்கம் போல இளமையான களிறுகள் பிளிறிக்கொண்டு செருக்குடன் வர, தன்
கால் முளை மூங்கில் கவர் கிளை போலகாலில் அகப்பட்ட முளையாகிய மூங்கிலின் கவர்த்த கிளையைப் போல,
உய்தல் யாவது நின் உடற்றியோரேதப்பிப்பிழைப்பது எவ்வாறு உன்னைச் சினமூட்டியவர்கள்? –
வணங்கல் அறியார் உடன்று எழுந்து உரைஇஉன்னை வணங்கி வாழ்தலை அறியமாட்டார் – சினந்தெழுந்து உன் முன் வந்து
போர்ப்பு_உறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவலதோலால் போர்க்கப்பட்ட தண்ணுமையின் மிகுந்த ஓசை எழுந்து போரைத் தெரிவிக்க,
நோய் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்துஉயிர்களுக்குத் துன்பத்தைச் செய்யும் போர்த்தொழிலை மேற்கொண்ட வேற்படை செறிந்திருக்கும் போர்க்களத்தில்
முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடுபோரை விரும்பும் விருப்பத்தில் மாறா வீரருடன்,
உரும் எறி வரையின் களிறு நிலம் சேரஇடி வீழ்ந்த மலை போல களிறுகள் கொலையுண்டு நிலத்தில் விழ,
காஞ்சி சான்ற செரு பல செய்து நின்நிலையாமை உணர்வே நிறைந்த போர்கள் பலவற்றைச் செய்த உன்
குவவு குரை இருக்கை இனிது கண்டிகுமே– திரண்ட ஆரவாரத்தையுடைய உன் படைகளின் இருப்பை இனிதே கண்டுமகிழ்ந்தோம்,
காலை மாரி பெய்து தொழில் ஆற்றிஉரிய காலத்தில் மழை பெய்து உழவுத்தொழில் நடக்கச்செய்து
விண்டு முன்னிய புயல் நெடும் காலைமலையுச்சியை நோக்கிச் சென்ற மேகங்கள், நீண்ட நேரங் கழித்து,
கல் சேர்பு மா மழை தலைஇமலையை அடைந்து மிகுந்த மழையைப் பெய்யத்தொடங்கியதால்
பல் குரல் புள்ளின் ஒலி எழுந்து ஆங்கேபல குரல்களையுடைய பறவைகளின் ஒலி எழுந்ததைப் போன்ற –
  
# 85 பாட்டு 85# 85 பாட்டு 85
நன் மரம் துவன்றிய நாடு பல தரீஇநல்ல மரங்கள் செறிந்து வளர்ந்த நாடுகள் பலவற்றை வென்றெடுத்து,
பொன் அவிர் புனை செயல் இலங்கும் பெரும் பூண்ஒளிவிடும் பொன்னால் செய்த அழகிய வேலைப்படுள்ள பளிச்சிடும் பெரிய அணிகலன்களைக் கொண்ட,
ஒன்னா பூட்கை சென்னியர் பெருமான்எம்மோடு ஒன்றிவராத கொள்கையையுடைய சோழர்களின் வேந்தனை
இட்ட வெள் வேல் முத்தை தம் எனஎன் முன்னே கொண்டுவருவீராக என்ற சொல் கேட்டவுடன், சோழரின் படைவீரர் கீழே எறிந்த வெண்மையான வேல், 
முன் திணை முதல்வர் போல நின்றுஉன் முன்னிருந்த உன் குலத்து முன்னோர்களைப் போல நிலைபெற்றிருந்து,
தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின்இனிய நீரினையுடைய சுனைகள் வற்றாமல் இருக்கும், மலைவளம் பெருகிய பக்கங்களைக் கொண்ட,
கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரைசிகரங்கள் பல பரவலாய் இருக்கும், ஏறி நின்று பார்த்தால் நாடு முழுவதும் தெரியுமளவுக்கு உயரமான நீண்ட மலையில் உள்ள
சூடா நறவின் நாள்_மகிழ் இருக்கைசூடிக்கொள்ளாத நறவு ஆகிய நறவு என்னும் ஊரில் நாள்காலத்துக்குரிய கொலுவிருக்கையில்,
அரசவை பணிய அறம் புரிந்து வயங்கியஅவையிலுள்ளோர் பணிந்து நிற்க, அறத்தை விரும்பிச் செய்து புகழ்பெற்ற,
மறம் புரி கொள்கை வயங்கு செம் நாவின்வீரத்தையும் விரும்புகின்ற உன் கொள்கையினை, தெளிந்த பேச்சினையுடைய செம்மையான நாவினையும்,
உவலை கூரா கவலை இல் நெஞ்சின்சிறுமைகூராத கவலை அற்ற நெஞ்சினையும்,
நனவில் பாடிய நல் இசைமெய்யாகவே புகழ்ந்து பாடிய நல்ல புகழையும் கொண்ட
கபிலன் பெற்ற ஊரினும் பலவேகபிலன் பெற்ற ஊரின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகப் பலவாகும்.
  
# 86 பாட்டு 86# 86 பாட்டு 86
உறல் உறு குருதி செரு_களம் புலவகொட்டிப்படிந்த குருதியால் போர்க்களம் புலால்நாற்றம் வீச,
கொன்று அமர் கடந்த வெம் திறல் தட கைபகைவரைக் கொன்று போரில் வென்ற மிகுந்த திறம் பொருந்திய பெரிய கையையும்,
வென் வேல் பொறையன் என்றலின் வெருவரவெற்றியையுடைய வேலினையும் கொண்ட பொறையன் என்று எல்லாரும் சொல்லுவதால், உள்ளம் அஞ்சும்படியான
வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான்கடுமை மிகுந்த ஆண்மகன் என்று கருதிக்கொண்டிருந்தேன் நான்;
நல் இசை நிலைஇய நனம் தலை உலகத்துநல்ல புகழை நிலைநிறுத்தும்பொருட்டு, அகன்ற இடத்தையுடைய உலகத்தில்
இல்லோர் புன்கண் தீர நல்கும்பொருளில்லாதவரின்  துன்பம் நீங்குமாறு அள்ளிக்கொடுக்கும்
நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின்அறத்தின் மீதான நாட்டம் மிகுந்த அன்புடைய நெஞ்சினையும்,
பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல்பாடிவரும் பாணர், புலவர் ஆகியோரின் பாதுகாவலன் இந்த அசைந்த நடையையுடைய அண்ணல்,
கழை நிலை பெறாஅ குட்டத்து ஆயினும்ஓடக்கோல் ஊன்ற முடியாத அளவுக்கு ஆழமானது என்றாலும்,
புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்தஅந்த நீரில் பாய்ந்து மகளிர் நீர்விளையாட்டு ஆட, அவர் காதிலிருந்தி விழுந்த
பொன் செய் பூம் குழை மீமிசை தோன்றும்பொன்னாற் செய்த அழகிய குழையானது மேலே நன்றாகத் தெரியும்
சாந்து வரு வானின் நீரினும்சந்தன மரங்கள் மிதந்து வரும் வானியாற்றின் நீரைக் காட்டிலும்
தீம் தண் சாயலன் மன்ற தானேஇனிய குளிர்ந்த இயல்பினன், உறுதியாக.
  
# 87 பாட்டு 87# 87 பாட்டு 87
சென்மோ பாடினி நன் கலம் பெறுகுவைசெல்வாயாக பாடினியே! நல்ல அணிகலன்களைப் பெறுவாய்!
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்துசந்தனம், அகில் ஆகியவற்றின் கட்டைகளோடு பொங்குகின்ற நுரையையும் சுமந்துகொண்டு,
தெண் கடல் முன்னிய வெண் தலை செம் புனல்தெளிந்த கடலை நோக்கிச் செல்லும், நுரையால் வெண்மையான தலையைக் கொண்ட சிவந்த புதுவெள்ளம்
ஒய்யும் நீர் வழி கரும்பினும்இழுத்துக்கொண்டுவரும் நீர்மேல் மிதந்து வரும் வேழக் கரும்பைக் காட்டிலும்
பல் வேல் பொறையன் வல்லனால் அளியேபல வேற்படையினைக் கொண்ட பொறையன் வல்லவன் துணைபுரிவதில்.
  
# 88 பாட்டு 88# 88 பாட்டு 88
வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாதுஉலகம் சிறப்பதற்கான தொழில்முறையில் வழுவாமல் இருந்து,
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்துவிந்தை என்னும் கொற்றவையின் பெயரைக் கொண்ட விந்தாடவி என்ற காட்டோடு இருக்கும் விந்திய மலை உயர்ந்து நிற்க,
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்துதெளிந்த கடல் சூழ்ந்திருக்கும் அகன்ற இடத்தையுடைய உலகத்தில்,
தம் பெயர் போகிய ஒன்னார் தேயதங்கள் புகழை எங்கும் பரப்பிய பகைவராகிய கடம்பர்கள் தம் நிலையில் தாழ்வுற,
துளங்கு இரும் குட்டம் தொலைய வேல் இட்டுஅசைவாடும் அலைகளைக் கொண்ட பெரிய கடலை அரணாகக் கொண்ட நிலை அழியுமாறு வேற்படையைச் செலுத்தி வென்று
அணங்கு உடை கடம்பின் முழு_முதல் தடிந்துதெய்வத்தன்மை பொருந்திய அவர்களின் காவல்மரமான கடம்பமரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்து,
பொரு முரண் எய்திய கழுவுள் புறம்பெற்றுபோரிடும் பகைமை கொண்ட கழுவுள் என்பானைப் புறமுதுகிடச் செய்து,
நாம மன்னர் துணிய நூறிஅவனுக்குத் துணையாய் வந்த அச்சந்தரக்கூடிய மன்னர்களைத் துண்டுதுண்டாக வெட்டிச் சாய்த்து,
கால் வல் புரவி அண்டர் ஓட்டிவலிமையான கால்களை உடைய குதிரைகளைக் கொண்ட அண்டர் என்னும் இடையர்களை விரட்டி,
சுடர் வீ வாகை நன்னன் தேய்த்துஒளிவிடும் பூவான வாகையினைச் சூடிய நன்னனை அழித்து,
குருதி விதிர்த்த குவவு சோற்று குன்றோடுஇரத்தம் கலந்து குவிக்கப்பட்டிருக்கும் குன்று போன்ற சோற்றுக் குவியலுடன்
உரு கெழு மரபின் அயிரை பரைஇஅச்சந்தரும் இயல்புடைய அயிரை மலையிலுள்ள கொற்றவையைப் போற்றிப்பாடி,
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியமுடியுடை வேந்தரும், குறுநில மன்னரும் பின்னால் நின்று பணிந்துகொள்ள,
கொற்றம் எய்திய பெரியோர் மருகவெற்றி எய்திய பெருமக்களின் வழிவந்தவனே!
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்அகன்ற பிடரிமயிரினை உடைய சிங்கம் போன்ற வீரம் பொருந்திய குருசிலே!
விரவு பணை முழங்கு நிரை தோல் வரைப்பின்பலவகையான முரசுகள் முழங்குகின்ற, வரிசையாகத் தோலாலான கேடயங்கள் பரப்பிய இடத்தையுடைய,
உரவு களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறைவலிமையான களிறுகளின் மேல் வெற்றிக் கொடிகள் அசைந்தாடும் பாசறையில்,
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணைபகைவரின் அரிய மதிலைச் சீர்குலைத்த கற்களை வீசியெறியும் கவணைப் பொறியையும்,
நார் அரி நறவின் கொங்கர் கோவேநார்க்கூடையால் வடிக்கப்பட்ட கள்ளையும் உடைய கொங்குநாட்டவர் அரசனே!
உடலுநர் தபுத்த பொலம் தேர் குருசில்உன்மேல் சினங்கொண்டவரைக் கொன்றழித்த, பொன்தகடால் வேய்ந்த தேரினை உடைய குருசிலே!
வளை கடல் முழவின் தொண்டியோர் பொருநசங்குகளையுடைய கடலின் முழக்கத்தைப் போன்ற முழவினையுடைய, தொண்டி நகரத்தார்க்குத் தலைவனே!
நீ நீடு வாழிய பெரும நின்_வயின்நீ நீண்ட காலம் வாழ்வாயாக பெருமானே! உன்னை நோக்கி வரும் –
துவைத்த தும்பை நனவு_உற்று வினவும்பல வாத்தியங்கள் முழங்குகின்ற, தும்பைப்பூ சூடிக்கொண்டு செய்யும் போரில், மெய்யான வெற்றியை வேண்டிக்கொண்டு
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னியமாற்றுதற்கு அரிய தெய்வங்கள் கூடியிருக்கும் அயிரை மலையில் தோன்றிய
புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்குநீர் நிறைந்த பேரியாறு இறங்கி வந்ததைப் போன்று –
வருநர் வரையா செழும் பல் தாரம் – பெருங்கூட்டமான இரவலருக்கும்  – வரையாது வழங்கும் செழுமையான, பலவாகிய செல்வம்,
கொள_கொள குறையாது தலைத்தலை சிறப்பஅந்த இரவலர் வாங்கிக்கொண்டேயிருக்கவும் குறைந்துபோகாமல் மேலும் மேலும் மிகுந்திருக்க,
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர்ஓவியத்தில் வரைந்தாற் போன்ற உருவம் பொருந்திய நெடிய அரண்மனையில்
பாவை அன்ன மகளிர் நாப்பண்கொல்லிப்பாவை போன்ற அழகிய மகளிர் நடுவில் –
புகன்ற மாண் பொறி பொலிந்த சாந்தமொடுஆடவர்க்குரிய இலக்கணமாகக் கூறப்பட்ட மாட்சிமைப்பட்ட வரிகள் பொருந்தி, பொலிவுடன் திகழும் சந்தனத்துடன்
தண் கமழ் கோதை சூடி பூண் சுமந்துகுளிர்ந்த, மணங்கமழும் மாலையைச் சூடி, அணிகலன்களைப் பூண்டு,
திருவில் குலைஇ திரு மணி புரையும்வானவில்லை வளைத்து, அழகிய நீல மணி போன்ற,
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்துஅச்சந்தரும் இடிமின்னலோடு கூட்டமாய்ச் சேர்ந்த பெரிய மேகங்கள் ஒன்றுசேர,
வேங்கை விரிந்து விசும்பு உறு சேண் சிமைவேங்கைப்பூக்கள் மலர்ந்திருக்க, விண்ணைத்தொடும் தொலைவிலுள்ள சிகரத்திலிருந்து விழும்
அருவி அரு வரை அன்ன மார்பின்அருவியையுடைய அரிய மலையைப் போன்ற மார்பினையுடையவனாய் –
சேண் நாறு நல் இசை சே_இழை கணவநெடுந்தொலைவுக்கும் சென்று மணம்வீசும் நல்ல புகழைக்கொண்ட செம்மையான இழைகளை அணிந்தவளுக்குக் கணவனே!
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்– திசைகளெல்லாம் ஒளியால் விளங்க கரிய வானத்தில் உயரே எழுகின்ற
ஞாயிறு போல விளங்குதி பல் நாள்ஞாயிற்றைப் போல சிறப்புடன் வாழ்வாயாக, பல நாட்கள்;
ஈங்கு காண்கு வந்தனென் யானேஇங்கு காண வந்திருக்கிறேன் நான்,
உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரிபெரிய காற்றினால் எழுந்து, ஓங்கி உயர்ந்து வரும் அலை,
நுண் மணல் அடைகரை உடைதரும்நுண்ணிய மணலையுடைய அடைத்தகரையில் மோதி உடைந்துபோகும்
தண் கடல் படப்பை நாடு கிழவோயேகுளிர்ந்த கடலோரப் பகுதிகளைக் கொண்ட நாட்டுக்கு உரியவனே!
  
# 89 பாட்டு 89# 89 பாட்டு 89
வானம் பொழுதொடு சுரப்ப கானம்மழை உரிய காலத்தில் பொழிய, காடுகளில்
தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயலகூட்டமான இளைய மான்கள் தத்தம் ஆணோடு கூடி இனிதிருக்க,
புள்ளும் மிஞிறும் மா சினை ஆர்ப்பபறவைகளும் வண்டினமும் பெரிய மரக்கிளைகளிலிருந்து ஆரவாரிக்க,
பழனும் கிழங்கும் மிசை அறவு அறியாதுபழங்களும், கிழங்குகளும் உண்பதால் தீர்ந்துபோகாமலிருக்க,
பல் ஆன் நன் நிரை புல் அருந்து உகளபலவாகிய பசுவின் நல்ல கூட்டம் புல்லை மேய்ந்து துள்ளி மகிழ,
பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின்எல்லையறியாப் பயன்களைக் கொண்ட வளம் பொருந்திய சிறப்பினால்,
பெரும் பல் யாணர் கூலம் கெழுமபெரிய அளவில் பலவகையான புதுப்புது தானியங்கள் நிறைந்திருக்க,
நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுகநல்ல பலவான ஊழிக்காலமாய் வளங்கள் நிறைவும், குறைவும் இன்றி நிலைபெற்றிருக்க,
பல் வேல் இரும்பொறை நின் கோல் செம்மையின்பலவான வேற்படையை உடைய இரும்பொறையே! உனது செங்கோலாட்சி செம்மையாக நடைபெறுவதால்
நாளின்_நாளின் நாடு தொழுது ஏத்தநாள்தோறும் நாட்டு மக்களெல்லாம் உன்னைத் தொழுது புகழ,
உயர்_நிலை_உலகத்து உயர்ந்தோர் பரவவிண்ணுலகில் இருக்கும் உயர்ந்தவர்கள் உன்னைப் போற்றிப் பாட,
அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி– அரசுமுறையில் பிழையாமல், போரில் வெற்றியால் மேம்பட்டு,
நோய் இலை ஆகியர் நீயே நின்_மாட்டுநோயின்றி இருப்பாயாக நீயே! உன்னிடத்தில்
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாதுஅன்புகொண்டு அடங்கிய நெஞ்சம் குற்றப்படுதலை அறியாமல்,
கனவினும் பிரியா உறையுளொடு தண்ணெனகனவிலும் பிரியாத வாழ்க்கையோடு, குளிர்ச்ச்சியுண்டாக
தகரம் நீவிய துவரா கூந்தல்மணம்வீசும் கலவைகள் பூசிய எண்ணெய்ப்பசை நீங்காத கூந்தலையுடைய
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்துமணமகளிர் திருமணநாளில் பார்த்துப் பின்னரும்
வாழ்நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்துதம் வாழ்நாளை உறுதிசெய்துகொள்ளும் ஒளிர்கின்ற சுடர் போன்ற தோற்றத்தையுடைய
மீனொடு புரையும் கற்பின்அருந்ததி என்ற விண்மீனைப் போன்ற கற்பினையுடைய 
வாள் நுதல் அரிவையொடு காண்வர பொலிந்தேஒளிபொருந்திய நெற்றியையுடைய உன் மனைவியுடன் அழகுற விளங்கி –
  
# 90 பாட்டு 90# 90 பாட்டு 90
மீன் வயின் நிற்ப வானம் வாய்ப்பநாள் மீன்களும், கோள்மீன்களும் தத்தம் இடத்தில் நிற்க, மழை பொய்க்காமல் பொழிய,
அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்துஅச்சமே இல்லாமற்போய், பாதுகாப்பு உணர்வு பெருக, துன்பம் தீர்ந்து
இன்பம் பெருக தோன்றி தம் துணைஇன்பம் பெருகத் தோன்றி, தமக்கு அளவாக வகுக்கப்பட்ட
துறையின் எஞ்சாமை நிறைய கற்றுதுறைகளையெல்லாம் மீதமின்றி நிறையக் கற்று,
கழிந்தோர் உடற்றும் கடும் தூ அஞ்சாவலிமையில் மிகுந்தோர் சினமூட்டும் போரின் கடுமையான வன்மைக்கு அஞ்சாத
ஒளிறு வாள் வய வேந்தர்ஒளிவிடும் வாளையுடைய வலிய வேந்தர்கள்
களிறொடு கலம் தந்துகளிறுகளோடு கலன்கள் பலவற்றையும் தந்து
தொன்று மொழிந்து தொழில் கேட்பதமது பழைமையைச் சொல்லிப் பணிந்து நடக்க,
அகல் வையத்து பகல் ஆற்றிஅகன்ற நிலவுலகில் நடுவுநிலைமையை நிலைநிறுத்தி,
மாயா பல் புகழ் வியல் விசும்பு ஊர்தரஅழியாத, பலவகையில் சிறந்த புகழ், அகன்ற வானமெங்கும் பரவ,
வாள் வலியுறுத்து செம்மை பூஉண்டுதன் வாள் வலிமை தெரியக் காட்டி, செங்கோன்மை மேற்கொண்டு
அறன் வாழ்த்த நற்கு ஆண்டஅறவோர் வாழ்த்த, நன்றாக ஆண்ட
விறல் மாந்தரன் விறல் மருகவெற்றியையுடைய மாந்தரன் என்பவனின் சிறந்த வழித்தோன்றலே!
ஈரம் உடைமையின் நீர் ஓர் அனையைநெஞ்சிலே இரக்கம் கொண்டிருப்பதால் தண்ணீரின் தன்மையைப் போன்றிருக்கிறாய்;
அளப்பு அருமையின் இரு விசும்பு அனையைஉன் திறனை அளப்பதற்கு அரிது என்பதால் பெரிய விசும்பினைப் போன்றிருக்கிறாய்;
கொள குறைபடாமையின் முந்நீர் அனையைஇரவலர் எடுத்துக்கொள்ள குறைவுபடாதிருப்பதால் கடலைப் போன்றிருக்கிறாய்;
பல் மீன் நாப்பண் திங்கள் போலபல விண்மீன்களின் நடுவே விளங்கும் திங்களைப் போல
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலைமலர்ந்த சுற்றத்தாரோடு பொலிவுடன் திகழ்கிறாய்;
உரு கெழு மரபின் அயிரை பரவியும்அச்சந்தரும் மரபினையுடைய அயிரை மலையிலிருக்கும் கொற்றவையைப் போற்றித் துதித்தும்,
கடல் இகுப்ப வேல் இட்டும்கடற்பகைவர் தாழ்ச்சியுற வேற்படையைச் செலுத்தியும்,
உடலுநர் மிடல் சாய்த்தும்சினந்து வந்தவரின் வலிமையை அழித்தும்,
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவிமலையிலும், நிலத்திலும் பகைவரின் அரண்களைக் கைப்பற்றி,
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇயஅங்குப் பெற்ற பெருமளவு பொருளைப் பலருக்கும் வழங்கியும்,
கொற்ற திருவின் உரவோர் உம்பல்வெற்றியும் செல்வமும் பெற்றிருக்கும் உரமுடைய முன்னோர்களின் வழித்தோன்றலே!
கட்டி புழுக்கின் கொங்கர் கோவேசர்க்கரைக் கட்டியுடன் அவரை விதைகளை வேகவைத்து உண்ணும் கொங்கர்களின் அரசனே!
மட்ட புகாவின் குட்டுவர் ஏறேகள்ளுடன் கூடிய உணவினையுடைய குட்டுவரின் தலைவனே!
எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறைதம்மிடம் தோற்றவரிடம் போர்க்கு எழாத இரு தோள்களையுடைய பூழியருக்குக் கவசம் போன்றவனே!
இரங்கு நீர் பரப்பின் மரந்தையோர் பொருநஒலிக்கின்ற கடற்பரப்பைக் கொண்ட மரந்தை நகரத்தாரின் பொருநனே!
வெண் பூ வேளையொடு சுரை தலைமயக்கியவெள்ளையான பூவைக்கொண்ட வேளைக் கொடியுடன் சுரைக்கொடியும் பின்னிக்கிடக்கும்
விரவு மொழி கட்டூர் வயவர் வேந்தேபல்வேறு மொழிகளைப் பேசுவோர் கலந்திருக்கும் பாடிவீடுகளில் இருக்கும் வீரர்களுக்கு வேந்தனே!
உரவு கடல் அன்ன தாங்கு அரும் தானையொடுமிகுந்த பரப்பினைக் கொண்ட கடலைப் போன்ற தடுப்பதற்கு முடியாத சேனையுடன்,
மாண் வினை சாபம் மார்பு உற வாங்கிசிறந்த வேலைப்பாட்டையுடைய வில்லை மார்பினைத் தொடுமாறு இழுத்து வளைக்கும்போது
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தட கைவில்லின் நாண் தேய்ப்பதால் ஒளிர்ந்து பிரகாசிக்கும் வலி பொருந்திய பெரிய கையினையும்,
வார்ந்து புனைந்து அன்ன ஏந்து குவவு மொய்ம்பின்நீண்டு ஒப்பனை செய்ததைப் போன்ற உயர்ந்த திரண்ட தோளினையும் கொண்டு,
மீன் பூத்து அன்ன விளங்கு மணி பாண்டில்விண்மீன் பூத்திருப்பதைப் போன்ற ஒளி விளங்கும் மணிகள் தைக்கபெற்ற சேணத்தையும்,
ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டுஅழகிய கவரி மயிராலாகிய தலையாட்டத்தையும் உடைய பாய்ந்து செல்லும் குதிரையின் மேலேறி
காழ் எஃகம் பிடித்து எறிந்துகாம்பையுடைய வேலினைப் பிடித்துப் பகைவர் மீது எறிந்து
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மைஅவர் எய்தும் துன்பத்தையே மேலும் விரும்புகின்ற நீங்காத ஆண்மையினையுடைய –
காஞ்சி சான்ற வயவர் பெருமநிலையாமையை நெஞ்சிற்கொண்ட வீரர்களின் – பெருமானே!
வீங்கு பெரும் சிறப்பின் ஓங்கு புகழோயேபெருகிவரும் பெரும் சிறப்பினால் உயர்ந்த புகழைக் கொண்டவனே!
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்வயல்வெளிகளிலிருக்கும் உழவர்கள் தண்ணுமையை முழக்கினால்
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும்நீர்நிலைகளில் வாழும் மயில்கள் மேகங்களின் முழக்கம் என்று எண்ணி ஆடுகின்ற,
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கிகுளிர்ந்த நீரில் ஆடுவோர் செய்யும் ஆரவார ஒலியுடன் கலந்து,
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்ககொடிய போரைச் செய்யும் வீரர்களின் தெளிந்த ஓசையமைந்த கிடாரிப்பறை ஒலிக்கின்ற,
கூழ் உடை நல் இல் ஏறு மாறு சிலைப்பசெல்வமுடைய நல்ல இல்லங்களில் காளைகள் தம்முள் மாறுபட்டு செருக்கி முழங்குகின்ற,
செழும் பல இருந்த கொழும் பல் தண் பணைசெழுமையான பல ஊர்களையுடைய, வளம் மிக்க பல குளிர்ந்த வயல்களைக் கொண்ட,
காவிரி படப்பை நன் நாடு அன்னகாவிரியாற்றால் வளம்பெறும் நிலப்பகுதிகளைக் கொண்ட, நல்ல சோழநாட்டைப் போன்றவளும்,
வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கைதொழில்வளம் பொருந்திய சிலம்பையும், அடக்கமே கொள்கையாகவும், 
ஆறிய கற்பின் தேறிய நல் இசைசினமற்ற கற்பினையும், தெளிவாய் விளங்கும் நல்ல புகழையும்
வண்டு ஆர் கூந்தல் ஒண்_தொடி கணவவண்டு மொய்க்கும் கூந்தலையும், ஒளிவிடும் தொடிகளையும் உடையவளுக்குக் கணவனே!
நின் நாள் திங்கள் அனைய ஆக திங்கள்உனது ஒருநாள் ஒரு மாதத்தைப் போல் இருப்பதாக, உனது ஒரு மாதம்
யாண்டு ஓர் அனைய ஆக யாண்டேஓர் ஆண்டைப் போல் இருப்பதாக, உனது ஓர் ஆண்டு
ஊழி அனைய ஆக ஊழிஓர் ஊழியைப் போல் இருப்பதாக, உனது ஓர் ஊழி
வெள்ள வரம்பின ஆக என உள்ளிபேரெண்ணாகிய வெள்ளம் என்பதன் எல்லையாக இருப்பதாக என்று நினைத்து வாழ்த்தி
காண்கு வந்திசின் யானே செரு மிக்குஉன்னைக் காண வந்திருக்கிறேன் நான்; போர்க்காலத்தில் மேம்பட்டு
உரும் என முழங்கும் முரசின்இடியைப் போல முழங்கும் முரசினையும்,
பெரு நல் யானை இறை கிழவோயேபெரிய நல்ல யானைகளையும் உடைய இறைத்தன்மைக்குரியவனே!
  
  
  
பதிற்றுப்பத்தில்பதிற்றுப்பத்தில்
முதல் பத்தும் (1 – 10) இறுதிப் பத்தும் (91 – 100)முதல் பத்தும் (1 – 10) இறுதிப் பத்தும் (91 – 100)
கிடைக்கவில்லை.கிடைக்கவில்லை.
  
தொல்காப்பியப் பொருளதிகார உரையிலும்தொல்காப்பியப் பொருளதிகார உரையிலும்
புறத்திரட்டிலும் காணப்பட்ட சில பாடல்களும்புறத்திரட்டிலும் காணப்பட்ட சில பாடல்களும்
பாடல் வரிகளும் இடம் விளங்காத பாடல்கள்பாடல் வரிகளும் இடம் விளங்காத பாடல்கள்
என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு இங்கே ஆசிரியரால் அவற்றுக்கு இங்கே ஆசிரியரால் 
எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  
  
# 91# 91
இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்துஇரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்து
பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர்பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர்
வணங்கார் ஆதல் யாவதோ மற்றேவணங்கார் ஆதல் யாவதோ மற்றே
உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்து ஆங்குஉரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்து ஆங்கு
கண் அதிர்பு முழங்கும் கடும் குரல் முரசமொடுகண் அதிர்பு முழங்கும் கடும் குரல் முரசமொடு
கால் கிளர்ந்து அன்ன ஊர்தி கால் முளைகால் கிளர்ந்து அன்ன ஊர்தி கால் முளை
எரி நிகழ்ந்து அன்ன நிறை அரும் சீற்றத்துஎரி நிகழ்ந்து அன்ன நிறை அரும் சீற்றத்து
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னிநளி இரும் பரப்பின் மா கடல் முன்னி
நீர் துனைந்து அன்ன செலவின்நீர் துனைந்து அன்ன செலவின்
நிலம் திரைப்பு அன்ன தானையோய் நினக்கேநிலம் திரைப்பு அன்ன தானையோய் நினக்கே
  
# 92# 92
இலங்கு தொடி மருப்பின் கடாஅம் வார்ந்துஇலங்கு தொடி மருப்பின் கடாஅம் வார்ந்து
நிலம் புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம்நிலம் புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம்
எரி அவிழ்ந்து அன்ன விரி உளை சூட்டிஎரி அவிழ்ந்து அன்ன விரி உளை சூட்டி
கால் கிளர்ந்து அன்ன கடும் செலவு இவுளிகால் கிளர்ந்து அன்ன கடும் செலவு இவுளி
கோல் முனை கொடி இனம் விரவா வல்லோடுகோல் முனை கொடி இனம் விரவா வல்லோடு
ஊன் வினை கடுக்கும் தோன்றல பெரிது எழுந்துஊன் வினை கடுக்கும் தோன்றல பெரிது எழுந்து
அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடும் தேர்அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடும் தேர்
கண் வேட்டனவே முரசம் கண் உற்றுகண் வேட்டனவே முரசம் கண் உற்று
கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்பகதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்பகறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப
நெடு மதில் நிரை ஞாயில்நெடு மதில் நிரை ஞாயில்
கடி மிளை குண்டு கிடங்கின்கடி மிளை குண்டு கிடங்கின்
மீ புடை ஆர் அரண் காப்பு உடை தேஎம்மீ புடை ஆர் அரண் காப்பு உடை தேஎம்
நெஞ்சு புகல் அழிந்து நிலை தளர்பு ஒரீஇநெஞ்சு புகல் அழிந்து நிலை தளர்பு ஒரீஇ
ஒல்லா மன்னர் நடுங்கஒல்லா மன்னர் நடுங்க
நல்ல மன்ற இவண் வீங்கிய செலவேநல்ல மன்ற இவண் வீங்கிய செலவே
  
# 93# 93
பேணு_தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும்பேணு_தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும்
என்னொடு புரையுநள் அல்லள்என்னொடு புரையுநள் அல்லள்
தன்னொடு புரையுநர் தான் அறிகுநளேதன்னொடு புரையுநர் தான் அறிகுநளே
  
# 94# 94
வந்தனென் பெரும கண்டனென் செலற்கேவந்தனென் பெரும கண்டனென் செலற்கே
களிறு கலி_மான் தேரொடு சுரந்துகளிறு கலி_மான் தேரொடு சுரந்து
நன் கலன் ஈயும் நகை சால் இருக்கைநன் கலன் ஈயும் நகை சால் இருக்கை
மாரி என்னாய் பனி என மடியாய்மாரி என்னாய் பனி என மடியாய்
பகை வெம்மையின் அசையா ஊக்கலைபகை வெம்மையின் அசையா ஊக்கலை
வேறு புலத்து இறுத்த விறல் வெம் தானையொடுவேறு புலத்து இறுத்த விறல் வெம் தானையொடு
மாறா மைந்தர் மாறு நிலை தேயமாறா மைந்தர் மாறு நிலை தேய
மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்துமைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து
கடாஅ யானை முழங்கும்கடாஅ யானை முழங்கும்
இடாஅ ஏணி நின் பாசறை யானேஇடாஅ ஏணி நின் பாசறை யானே