வீ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

வீ (1)

வெறி வீ சந்தின் நிரை இடை எறிந்து – கல்லாடம்:2 28/14

மேல்

வீங்காது (1)

விரல் நான்கு அமைத்த அணி குரல் வீங்காது
நான்மறை துள்ளும் வாய் பிளவாது – கல்லாடம்:2 21/40,41

மேல்

வீச (2)

அருவி வீச பறவை குடிபோகி – கல்லாடம்:2 22/14
சூடகம் தோள்வளை கிடந்து வில் வீச
யாவர்-தம் பகையும் யாவையின் பகையும் – கல்லாடம்:2 41/21,22

மேல்

வீசு (1)

வீசு கோட்டு ஆந்தையும் சேவலோடு அலமர – கல்லாடம்:2 79/2

மேல்

வீடுபெற (1)

கூடல் அம் பதி அகம் வீடுபெற இருந்தோன் – கல்லாடம்:2 22/51

மேல்

வீணை (1)

வீணை பதித்து தானம் தெரிக்க – கல்லாடம்:2 99/35

மேல்

வீதி (5)

வீதி வந்தது வரலால் நம்தம் – கல்லாடம்:2 10/27
மக்களொடு நெருங்கிய வீதி புறமும் – கல்லாடம்:2 41/29
வீதி போகிய வால் உளை பரவி – கல்லாடம்:2 42/15
வீதி கூறி விதித்த முன் வரத்தால் – கல்லாடம்:2 45/17
ஆவண வீதி அனையவர் அறிவுறின் – கல்லாடம்:2 78/25

மேல்

வீதி-வாய் (1)

வீதி-வாய் தென்றல் மெல்லென்று இயங்கும் – கல்லாடம்:2 17/36

மேல்

வீதிகுத்திய (1)

வீதிகுத்திய குறும் தாள் பாரிடம் – கல்லாடம்:2 41/1

மேல்

வீதியது (1)

அளப்பு அற பரந்த வீதியது ஆகி – கல்லாடம்:2 23/25

மேல்

வீதியும் (1)

வீதியும் கவலையும் மிக வளம் புகன்று – கல்லாடம்:2 43/19

மேல்

வீயா (2)

விண்ணவர் தலைவனும் வீயா மருந்தும் – கல்லாடம்:2 58/10
வீயா விந்தம் பதம் நிரை நாதம் – கல்லாடம்:2 98/8

மேல்

வீயாது (1)

வீயாது துவைக்கும் கடன் மலைநாடர் – கல்லாடம்:2 24/16

மேல்

வீரம் (1)

வீரம் அங்கு ஈந்த பின் விளிவது மானவும் – கல்லாடம்:2 73/20

மேல்

வீரனை (1)

சயம் பெறு வீரனை தந்து அவன்-தன்னால் – கல்லாடம்:2 4/4

மேல்

வீழ் (4)

வேட்கையின் நீயிர் வீழ் நாள்_பூ இனத்துள் – கல்லாடம்:2 35/6
முடங்கு வீழ் அன்ன வேணி முடி கட்டி – கல்லாடம்:2 40/5
வீழ் சுற்று ஒழுக்கிய பராரை திரு வட – கல்லாடம்:2 53/10
எறிந்து வீழ் அருவியும் எரி மணி ஈட்டமும் – கல்லாடம்:2 81/26

மேல்

வீழ்ந்த (1)

மூரி வீழ்ந்த நெறி சடை முனிவர் – கல்லாடம்:2 33/11

மேல்

வீழ்ந்து (1)

பிணங்கி வீழ்ந்து மாழ்குறும் மனனே – கல்லாடம்:2 45/28

மேல்

வீழ்வதும் (1)

சிரல் வானிலையும் கழை இலை வீழ்வதும்
அருவி ஓசையும் முழவின் முழக்கமும் – கல்லாடம்:2 21/51,52

மேல்

வீழாதாக (1)

விண் திரிந்து முழங்கி வீழாதாக
கருவொடு வாடும் பைங்கூழ் போல – கல்லாடம்:2 37/3,4

மேல்

வீழுநர்க்கு (1)

தம்மில் வீழுநர்க்கு இன்பம் என்று அறிந்தும் – கல்லாடம்:2 20/23

மேல்

வீற்றிருந்த (4)

கூடல் வீற்றிருந்த நாடக கடவுள் – கல்லாடம்:2 19/24
கைலை வீற்றிருந்த கண்_நுதல் விண்ணவன் – கல்லாடம்:2 68/30
வெள்ளி அம் குன்றம் விளங்க வீற்றிருந்த
முன்னவன் கூடல் முறை வணங்கார் என – கல்லாடம்:2 82/34,35
குளவன் வீற்றிருந்த வளர் புகழ் குன்றமும் – கல்லாடம்:2 100/4

மேல்

வீற்றிருந்து (1)

கந்தி தண்டலை வந்து வீற்றிருந்து
கடி மலர் பொழிலில் சிறிது கண்படுத்து – கல்லாடம்:2 17/30,31

மேல்