வி – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விசி 1
விசித்த 4
விசித்து 3
விசிப்ப 1
விசும்பின் 1
விசும்பு 3
விசை 1
விசைத்த 2
விஞ்சை 2
விஞ்சையர் 1
விஞ்சையன் 1
விட்ட 2
விட்டு 11
விட 5
விடத்தை 2
விடம் 4
விடலை 1
விடாது 2
விடிமீன் 1
விடிய 1
விடு 5
விடு-மதி 1
விடுக்க 1
விடுக்கும் 1
விடுத்த 8
விடுத்தலின் 1
விடுத்தனை 1
விடுத்து 6
விடுத்தோய் 1
விடுத்தோர் 1
விடுப்ப 1
விடும் 4
விடுவது 1
விடுவன 1
விடை 1
விடைக்கு 1
விடையா 1
விடையோன் 1
விண் 17
விண்டு 2
விண்ணகம் 1
விண்ணத்து 3
விண்ணம் 1
விண்ணமும் 1
விண்ணவர் 1
விண்ணவன் 1
விண்ணுழை 1
விண்ணுற 1
விண்ணொடு 1
விண்ணொடும் 1
வித்தும் 1
விதமுடன் 1
விதலையின் 1
விதாயம் 1
விதி 10
விதி-தோறும் 1
விதிக்க 1
விதிக்கும் 1
விதித்த 2
விதித்தும் 1
விதிப்பட 1
விதிப்பவன் 1
விதிபெற 1
விதியவன் 1
விதியா 1
விதியின் 2
விதியினும் 1
விதியும் 2
விதியே 1
விதியை 1
விதியொடு 2
விதியோ 1
விதிர் 1
விதிவர 1
விந்தம் 1
விம்ம 2
விம்மி 1
விம்மிய 1
வியப்பு 1
வியர் 1
வியர்ப்பு 1
விரத 1
விரதியர் 1
விரல் 9
விரி 15
விரிக்கும் 3
விரித்த 9
விரித்தலின் 1
விரித்திருந்து 1
விரித்து 9
விரித்தோய் 1
விரிதரு 2
விரிந்த 3
விரிந்தவும் 1
விரிந்து 5
விரிப்ப 1
விருந்தினன் 1
விருந்தினை 1
விருந்து 3
விருப்புடன் 1
விருப்பெடுத்து 1
விரும்பி 1
விரும்பிய 2
வில் 7
வில்லானும் 1
வில்லினை 1
வில்லுடன் 1
விலக்கி 1
விலை 2
விழ 2
விழவில் 1
விழவு 1
விழவுள் 1
விழி 37
விழிக்க 1
விழித்த 5
விழித்து 2
விழித்தும் 1
விழித்துழி 1
விழியில் 1
விழியும் 1
விழியோளே 1
விழு 2
விழுங்காத 1
விழுங்கி 1
விழுங்கிய 2
விழுது 1
விழுந்தும் 1
விழும் 3
விழைதரும் 1
விழைந்து 1
விள் 1
விள்ளா 1
விள்ளும் 1
விளக்கமும் 1
விளக்கின் 2
விளக்கு 9
விளக்கும் 2
விளங்க 2
விளங்கனி 1
விளங்கு 1
விளம்பி 1
விளர் 1
விளர்த்தி 1
விளர்த்துநின்று 1
விளர்ப்ப 3
விளரி 4
விளரியில் 1
விளரியோடு 1
விளி 1
விளிவது 1
விளை 6
விளைக்கும் 4
விளைத்த 1
விளைந்து 1
விளைப்ப 2
விளைபொருள் 1
விளையா 1
விளையாட்டு 1
விளையாட 1
விளைவாய் 1
விற்று 1
விறகுடன் 1
வினவா 1
வினவாதவரினும் 1
வினவாது 1
வினவியும் 1
வினவினள் 1
வினை 11
வினைக்கு 1
வினையகத்து 1
வினையால் 1
வினையுள் 1

விசி (1)

இரும் திண் போர்வை பிணி விசி முரசம் – கல்லாடம்:2 18/14

மேல்

விசித்த (4)

ஒரு வாய் திறந்து உள் கடிப்பு உடல் விசித்த
சல்லரி அங்கை தலைவிரல் தாக்க – கல்லாடம்:2 8/17,18
மு முக கயலுடன் மயிர் கயிறு விசித்த
கல்லவடத்திரள் விரல் தலை கறங்க – கல்லாடம்:2 8/25,26
பிணிதர விசித்த முருகியம் துவைக்க – கல்லாடம்:2 16/25
எண் கடிப்பு விசித்த கல்லல் செறிய – கல்லாடம்:2 85/23

மேல்

விசித்து (3)

விசித்து மிறை பாசத்து இடக்கை விசிப்ப – கல்லாடம்:2 21/30
ஆயிரம் தந்திரி நிறை பொது விசித்து
கோடி மூன்றில் குறித்து மணி குயிற்றி – கல்லாடம்:2 82/5,6
நிறைமதி வட்டத்து முயல் உரி விசித்து
நாப்பண் ஒற்றை நரம்பு கடிப்பு அமைத்து – கல்லாடம்:2 82/22,23

மேல்

விசிப்ப (1)

விசித்து மிறை பாசத்து இடக்கை விசிப்ப
மூன்று புரத்து ஒன்றில் அரசு உடை வாணன் – கல்லாடம்:2 21/30,31

மேல்

விசும்பின் (1)

வளி சுழல் விசும்பின் கிளர் முகடு அணவி – கல்லாடம்:2 51/27

மேல்

விசும்பு (3)

நின் திரு நுதலை ஒளி விசும்பு உடலில் – கல்லாடம்:2 19/15
தனி நெடு விசும்பு திருவுடல் ஆக – கல்லாடம்:2 20/26
நெடு விசும்பு அணவும் பெரு மதி தாங்கி – கல்லாடம்:2 81/8

மேல்

விசை (1)

கடு விசை துரந்த கான்யாற்று ஒலியின் – கல்லாடம்:2 14/22

மேல்

விசைத்த (2)

விசைத்த நடை போகும் சகட காலும் – கல்லாடம்:1 1/34
கண்-தொறும் விசைத்த கருப்பு தரளமும் – கல்லாடம்:2 60/16

மேல்

விஞ்சை (2)

ஆக்கிய விஞ்சை பிறை முடி அந்தணன் – கல்லாடம்:2 42/16
விஞ்சை வந்தருளிய நஞ்சு அணி மிடற்றோன் – கல்லாடம்:2 52/22

மேல்

விஞ்சையர் (1)

அளவா புலன் கொள விஞ்சையர் எண்மரும் – கல்லாடம்:2 30/16

மேல்

விஞ்சையன் (1)

வட புல விஞ்சையன் வைகு இடத்து அகன் கடை – கல்லாடம்:2 43/25

மேல்

விட்ட (2)

வளை காய் விட்ட புளி அருந்தாது – கல்லாடம்:2 5/6
ஒரு தாள் மிதித்து விண் உற விட்ட
மறு தாள் மலரில் மலர் கரம் துடக்கி – கல்லாடம்:2 99/30,31

மேல்

விட்டு (11)

நிலை விட்டு படராது காணியில் நிலைக்க – கல்லாடம்:1 1/17
களவு உடை நெடும் சூர் கிளை களம் விட்டு ஒளித்த – கல்லாடம்:2 1/3
ஐ_வாய் காப்பு விட்டு அணி பூண் அணிந்து – கல்லாடம்:2 2/10
மருங்கு பின் நோக்காது ஒருங்கு விட்டு அகல – கல்லாடம்:2 7/44
பின்னல் விட்டு அமைத்த தன் தலை மலர் இணைஇ – கல்லாடம்:2 14/31
விட்டு ஒளிர் மாணிக்க மலையின் ஒருபால் – கல்லாடம்:2 17/41
ஆற்றாது பெரு முழை வாய் விட்டு கலுழ்ந்து என – கல்லாடம்:2 28/18
இட்டுறை காம்பு என விட்டு எழு காம்பே – கல்லாடம்:2 81/32
எட்டும் தரித்து விட்டு அறு குற்றம் – கல்லாடம்:2 86/30
ஒன்றை விட்டு ஒரு சீர் இரண்டுற உறுத்தி – கல்லாடம்:2 99/12
கவ்வையின் கூறுவிர் மறைகள் விட்டு எமக்கே – கல்லாடம்:2 100/37

மேல்

விட (5)

கரை விட உகையும் நாவாயானும் – கல்லாடம்:2 19/8
மணந்தோர் நெஞ்சத்து அமுத நீர் விட
அன்றில் புல் சேக்கை புக்கு அலகு பெடை அணைய – கல்லாடம்:2 38/9,10
புகை உடல் புடைத்த விட வினை போல – கல்லாடம்:2 71/20
விட மா கொன்ற நெடு வேல் குளவன் – கல்லாடம்:2 83/9
மா குகன் நதி விட ஊக்கி வனத்து – கல்லாடம்:2 95/31

மேல்

விடத்தை (2)

கறை அணல் புயங்கன் எரி தழல் விடத்தை
மலை மறை அதகம் மாற்றிய அது போல் – கல்லாடம்:2 6/16,17
நிலை கெட பரந்த கடல் கெழு விடத்தை
மறித்து அவர் உயிர்பெற குறித்து உண்டருளி – கல்லாடம்:2 51/29,30

மேல்

விடம் (4)

தொடர்ந்து உயிர் வவ்விய விடம் கெழு மிடற்றோன் – கல்லாடம்:2 8/9
விடம் கொதித்து உமிழும் படம் கெழு பகு வாய் – கல்லாடம்:2 55/1
அவ் அரண் இழந்தோர்க்கு அரு விடம் ஆயதும் – கல்லாடம்:2 75/28
உளை கடல் சேர்ப்பன் அளி விடம் தணிப்ப – கல்லாடம்:2 92/14

மேல்

விடலை (1)

நெய் குளித்து அகற்றும் நெடு வேல் விடலை
அந்தணர் உகும் நீர்க்கு அருள் கருவிருந்து – கல்லாடம்:2 6/3,4

மேல்

விடாது (2)

அருச்சனை விடாது அங்கு ஒருப்படும் மூவரில் – கல்லாடம்:2 25/29
விற்று உணும் சேரி விடாது உறை ஊரன் – கல்லாடம்:2 56/16

மேல்

விடிமீன் (1)

அன்றியும் விடிமீன் முளைத்த தரளம் – கல்லாடம்:2 17/12

மேல்

விடிய (1)

கண் புதை யாப்பு திணி இருள் விடிய
உடல்-தொறும் பிணித்த பாவமும் புலர – கல்லாடம்:2 45/19,20

மேல்

விடு (5)

விடு தழல் உச்சம் படு கதிர் தாக்க – கல்லாடம்:2 17/47
பகல் இரவு ஒடுங்கா விடு வளி ஆக – கல்லாடம்:2 20/31
கோல் தலை பனிப்ப வான் விடு பெரும் குரல் – கல்லாடம்:2 24/15
வல்லியை பரியும் பகடு விடு குரலும் – கல்லாடம்:2 39/12
பதினான்கு அமைத்து விடு மாத்திரைக்கு – கல்லாடம்:2 99/19

மேல்

விடு-மதி (1)

வறு நீர் மலர் என மாழ்கலை விடு-மதி
மறை அடி வழுத்திய மறைவனத்து ஒருநாள் – கல்லாடம்:2 94/31,32

மேல்

விடுக்க (1)

மறலி விடுக்க வந்த தூதுவர் – கல்லாடம்:2 26/8

மேல்

விடுக்கும் (1)

தென்கால் விடுக்கும் செம்பின் பொருப்பினும் – கல்லாடம்:2 52/11

மேல்

விடுத்த (8)

பெரும் காற்று விடுத்த நெடும் புழை கரத்த – கல்லாடம்:1 1/20
ஓர் உடல் இரண்டு கூறுபட விடுத்த
அழியா பேர் அளி உமை கண் நின்று – கல்லாடம்:1 2/12,13
உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த
இருள் மன தக்கன் பெரு மகம் உண்ண – கல்லாடம்:2 4/5,6
பெடை குருகு அணங்கின் விடுத்த வெண் சினையொடு – கல்லாடம்:2 23/8
அறிவு நிலை போகி அருச்சனை விடுத்த
வெள்ள முரண் அரக்கர் கள்ள மதில் மூன்றும் – கல்லாடம்:2 25/16,17
அவன் என தோன்றி அரும் சிறை விடுத்த
முன்னவன் கூடல் மூதூர் அன்ன – கல்லாடம்:2 32/9,10
கூடற்கு இறைவன் இரு தாள் விடுத்த
பொய்யினர் செய்யும் புல்லம் போல – கல்லாடம்:2 37/21,22
கரும் கடல் பொரிய ஒருங்கு வேல் விடுத்த
அதற்கு அருள் கொடுத்த முதல் பெரு நாயகன் – கல்லாடம்:2 75/16,17

மேல்

விடுத்தலின் (1)

போக்கு வழி படையாது உள் உயிர் விடுத்தலின்
அறிவு புறம்போய உலண்டது போல – கல்லாடம்:1 1/27,28

மேல்

விடுத்தனை (1)

ஒரு நீ விடுத்தனை யான் அவை கொடுத்தனன் – கல்லாடம்:2 48/16

மேல்

விடுத்து (6)

செம் தாள் விடுத்து உறை அந்தர்கள்-தம்மினும் – கல்லாடம்:2 7/39
பெற நிதி கொடுக்க என உற விடுத்து அருளிய – கல்லாடம்:2 11/29
களை கடும் தொழில் விடுத்து உழவு செறு மண்ட – கல்லாடம்:2 27/23
தெய்வம் விடுத்து பொய் கொள் சிந்தையினும் – கல்லாடம்:2 52/19
பெரு நீர் ஊரர் நிறை நீர் விடுத்து
செறிந்தது என் என கேட்டி – கல்லாடம்:2 54/36,37
அரிக்கு கரும் கடற்கு ஒரோவொரு கணை விடுத்து
அ கடல் வயிறடைத்து அரக்கன் உயிர் வௌவி – கல்லாடம்:2 95/35,36

மேல்

விடுத்தோய் (1)

தாதையும் இரப்ப தளையது விடுத்தோய்
கூடம் சுமந்த நெடு முடி நேரி – கல்லாடம்:1 2/46,47

மேல்

விடுத்தோர் (1)

கூடற்கு இறையோன் தாள் விடுத்தோர் என – கல்லாடம்:2 43/34

மேல்

விடுப்ப (1)

மத்தியந்தணன் வரம்சொலி விடுப்ப
தில்லை கண்ட புலிக்கால்_முனிவனும் – கல்லாடம்:2 41/4,5

மேல்

விடும் (4)

விழி விடும் எரியும் சாப வாய் நெருப்பும் – கல்லாடம்:1 1/16
படர்ந்து எறி கங்கை விடும் குளிர் அகற்றும் – கல்லாடம்:2 59/4
விடும் அமுது அருந்த விண்ணத்து அணக்க – கல்லாடம்:2 64/31
கடும் சுடர் இரவி விடும் கதிர் தேரினை – கல்லாடம்:2 97/14

மேல்

விடுவது (1)

விடுவது நெடும் புகழ் அடு வேலோயே – கல்லாடம்:2 97/26

மேல்

விடுவன (1)

தளையொடு நிறை நீர் விடுவன போல – கல்லாடம்:2 20/34

மேல்

விடை (1)

விடை கொடி நிறுத்தி கயல் கொடி எடுத்து – கல்லாடம்:2 2/12

மேல்

விடைக்கு (1)

வேந்து விடைக்கு அணங்கியும் விளை பொருட்கு உருகியும் – கல்லாடம்:2 79/25

மேல்

விடையா (1)

விடையா வடந்தை செய் வெள்ளி அம் சிலம்பினும் – கல்லாடம்:2 52/10

மேல்

விடையோன் (1)

விடையோன் அருச்சனைக்கு உரிமையின் முன்னவன் – கல்லாடம்:2 95/3

மேல்

விண் (17)

விண் தடையாது மண் புக புதைத்த – கல்லாடம்:1 2/48
ஒரு கால் சுமந்த விண் படர் பந்தரின் – கல்லாடம்:2 14/2
தரு மலர் விண் புக மணி முடி நிறைத்து – கல்லாடம்:2 14/32
வளைத்த ஞான்று நெடு விண் தடைய – கல்லாடம்:2 33/23
விண் புடைத்து அப்புறம் விளங்கு உடல் குணங்கு இனம் – கல்லாடம்:2 34/4
விண் திரிந்து முழங்கி வீழாதாக – கல்லாடம்:2 37/3
விண் தலை உடைத்து பிறை வாய் வைப்ப – கல்லாடம்:2 41/2
திக்கு விண் பெருக திருமதி கைலை – கல்லாடம்:2 57/13
விண் உடைத்து உண்ணும் கண்ணிலி ஒருத்தன் – கல்லாடம்:2 59/27
விண் உடைத்து உண்ணும் வினை சூர் கவர்ந்த – கல்லாடம்:2 63/8
விண் குறித்து எழுந்து மேலவர் புடைத்து – கல்லாடம்:2 67/13
விண் தொட எழுந்து விழும் திரை குழுவினை – கல்லாடம்:2 72/29
உலகு விண் பனிக்கும் ஒரு சயமகட்கு – கல்லாடம்:2 73/18
விண் உடைத்து அரற்றவும் திசை உட்க முரியவும் – கல்லாடம்:2 78/20
விண் விரித்து ஒடுக்கும் இரவி வண் கவிகைக்கு – கல்லாடம்:2 81/31
ஒரு தாள் மிதித்து விண் உற விட்ட – கல்லாடம்:2 99/30
குருவி விண் இசைக்கும் அந்தர குலிதம் – கல்லாடம்:2 100/19

மேல்

விண்டு (2)

விண்டு நறவு ஒழுக்கும் பாண்டில் இறாலாய் – கல்லாடம்:2 22/15
விண்டு உயிர் சோர்ந்த குறி நிலை மயக்கே – கல்லாடம்:2 49/21

மேல்

விண்ணகம் (1)

விண்ணகம் புடைத்து நெடு வரை கரக்கும் – கல்லாடம்:2 86/18

மேல்

விண்ணத்து (3)

புகை முரிந்து எழுந்து என விண்ணத்து அலமர – கல்லாடம்:2 7/19
ஒரு தாள் விண்ணத்து இருமை பெற நீட்டிய – கல்லாடம்:2 27/6
விடும் அமுது அருந்த விண்ணத்து அணக்க – கல்லாடம்:2 64/31

மேல்

விண்ணம் (1)

விண்ணம் சுமந்து தோற்றம் செய்து என – கல்லாடம்:2 2/19

மேல்

விண்ணமும் (1)

மண் உடல் பசந்து கறுத்தது விண்ணமும்
ஆற்றாது அழன்று காற்றின் முகம் மயங்கி – கல்லாடம்:2 71/25,26

மேல்

விண்ணவர் (1)

விண்ணவர் தலைவனும் வீயா மருந்தும் – கல்லாடம்:2 58/10

மேல்

விண்ணவன் (1)

கைலை வீற்றிருந்த கண்_நுதல் விண்ணவன்
நாடக கடவுள் கூடல் நாயகன் – கல்லாடம்:2 68/30,31

மேல்

விண்ணுழை (1)

உள்ளது மொழிமோ நீயே விண்ணுழை
வந்தனை என்னில் வரு குறி கண்டிலன் – கல்லாடம்:2 71/33,34

மேல்

விண்ணுற (1)

விண்ணுற விரித்த கரு முகில் படாம் கொடு – கல்லாடம்:2 29/17

மேல்

விண்ணொடு (1)

வெண்சுடர் செஞ்சுடர் ஆகிய விண்ணொடு
புவி புனல் அனல் கால் மதி புலவோன் என – கல்லாடம்:2 10/14,15

மேல்

விண்ணொடும் (1)

தெய்வ குல புகை விண்ணொடும் விம்ம – கல்லாடம்:2 47/5

மேல்

வித்தும் (1)

விழைதரும் உழவும் வித்தும் நாறும் – கல்லாடம்:2 9/16

மேல்

விதமுடன் (1)

முதல் எண் கிளவியும் விதமுடன் நிரையே – கல்லாடம்:2 38/21

மேல்

விதலையின் (1)

விளி மொழி ஏற்றும் விதலையின் திளைத்தும் – கல்லாடம்:2 54/17

மேல்

விதாயம் (1)

திட்டை ஏறு சிவந்த விதாயம்
ஒக்கல் புற்றாம் குருதி தொழுனை – கல்லாடம்:2 98/40,41

மேல்

விதி (10)

பாச கரகம் விதி உடை முக்கோல் – கல்லாடம்:1 1/14
மேதினி புரக்கும் விதி உடை நல் நாள் – கல்லாடம்:2 12/15
இசை விதி பாடிய இசை_பகை துரந்த – கல்லாடம்:2 43/33
வேத தலையினும் விதி ஆகமத்தினும் – கல்லாடம்:2 52/17
வேடம் துறவா விதி உடை சாக்கியன் – கல்லாடம்:2 66/14
விதி நிறை தவறா ஒரு பங்கு உடைமையும் – கல்லாடம்:2 66/21
வேதியர் நிதி மிக விதி மகம் முற்றி – கல்லாடம்:2 69/8
ஐயர் பயிற்றிய விதி அழல் ஓம்பவும் – கல்லாடம்:2 76/7
காய் பார் உகுத்த விதி ஒத்ததுவே – கல்லாடம்:2 83/33
தமக்கும் படைக்க விதி பேற்று அடியவர் – கல்லாடம்:2 86/35

மேல்

விதி-தோறும் (1)

பெரு மறை கூறி அறை விதி-தோறும்
முத்தழற்கு உடையோன் முக்கண் கடவுள் என்று – கல்லாடம்:2 60/11,12

மேல்

விதிக்க (1)

அரு மறை விதிக்க திருமணம் புணர்ந்து – கல்லாடம்:2 12/13

மேல்

விதிக்கும் (1)

விதிக்கும் அடங்கா என்பன விதியோ – கல்லாடம்:2 22/4

மேல்

விதித்த (2)

வீதி கூறி விதித்த முன் வரத்தால் – கல்லாடம்:2 45/17
வடமொழி விதித்த இசை நூல் வழக்குடன் – கல்லாடம்:2 82/1

மேல்

விதித்தும் (1)

இலது எனின் உளது என்று உள்ளமொடு விதித்தும்
சொல்லா நிலை பெறும் சூளுறின் மயங்கி – கல்லாடம்:2 44/1,2

மேல்

விதிப்பட (1)

கருத்து உறை பொருளும் விதிப்பட நினைந்து – கல்லாடம்:2 63/17

மேல்

விதிப்பவன் (1)

விதிப்பவன் விதியா ஓவம் நின்று என என் – கல்லாடம்:2 77/5

மேல்

விதிபெற (1)

முதல் இசை செவ்வழி விதிபெற பாடி அ – கல்லாடம்:2 95/18

மேல்

விதியவன் (1)

விதியவன் தாரா உடலொடு நிலைத்த – கல்லாடம்:2 75/20

மேல்

விதியா (1)

விதிப்பவன் விதியா ஓவம் நின்று என என் – கல்லாடம்:2 77/5

மேல்

விதியின் (2)

முன் புகு விதியின் என்பு குரல் பூண்டு – கல்லாடம்:2 26/16
தள்ளா விதியின் செல்குநள் என்று – கல்லாடம்:2 40/18

மேல்

விதியினும் (1)

விதியினும் பன்மை செய் முகம் படைத்து அளவா – கல்லாடம்:2 87/6

மேல்

விதியும் (2)

வழுவா விதியும் எழுதா மறையும் – கல்லாடம்:2 24/26
அரு மறை விதியும் உலகியல் வழக்கும் – கல்லாடம்:2 63/16

மேல்

விதியே (1)

நான்முக விதியே தாளம் தாக்க – கல்லாடம்:2 21/28

மேல்

விதியை (1)

நான்மறை விதியை நடுங்கு சிறை வைத்து – கல்லாடம்:1 2/44

மேல்

விதியொடு (2)

இன்னும் என்று இசைப்ப பன்னிய விதியொடு
மந்தரம் மத்திமம் தாரம் இவை மூன்றில் – கல்லாடம்:2 21/54,55
நாடக விதியொடு ஆடிய பெருமான் – கல்லாடம்:2 21/60

மேல்

விதியோ (1)

விதிக்கும் அடங்கா என்பன விதியோ
என்னுடை கண்ணும் உயிரும் ஆகி – கல்லாடம்:2 22/4,5

மேல்

விதிர் (1)

விதிர் ஒளி காற்ற கனல் குளிர் மழுவும் – கல்லாடம்:2 77/15

மேல்

விதிவர (1)

விதிவர திருத்திய மேதினி பொறையை – கல்லாடம்:2 52/3

மேல்

விந்தம் (1)

வீயா விந்தம் பதம் நிரை நாதம் – கல்லாடம்:2 98/8

மேல்

விம்ம (2)

குல வாழ்த்து விம்ம மண அணி பக்கம் – கல்லாடம்:2 18/33
தெய்வ குல புகை விண்ணொடும் விம்ம
இரு நால் திசையும் உண் பலி தூவி – கல்லாடம்:2 47/5,6

மேல்

விம்மி (1)

மணி புறம் கான்ற புரி வளை விம்மி
விதிப்பவன் விதியா ஓவம் நின்று என என் – கல்லாடம்:2 77/4,5

மேல்

விம்மிய (1)

பன் மலர் சோலை விம்மிய பெரு மலர் – கல்லாடம்:2 22/49

மேல்

வியப்பு (1)

உறவு இணை நட்பு கிளை வியப்பு எய்த – கல்லாடம்:2 14/13

மேல்

வியர் (1)

வியர் அமுது அரும்பி முயல் கண் கறுத்து – கல்லாடம்:2 49/1

மேல்

வியர்ப்பு (1)

முகம் வியர்ப்பு உறுத்தின உள்ளமும் சுழன்றன – கல்லாடம்:2 45/13

மேல்

விரத (1)

அவ் விரத துறையாடுதல் கெழுமி – கல்லாடம்:2 69/9

மேல்

விரதியர் (1)

நோன்புறு விரதியர் நுகர உள் இருந்து என – கல்லாடம்:2 76/10

மேல்

விரல் (9)

இரு விரல் நிமிர்த்து புரிவொடு சேர்த்து – கல்லாடம்:2 8/11
ஒரு விரல் தெறித்தும் ஐ விரல் குவித்தும் – கல்லாடம்:2 8/13
ஒரு விரல் தெறித்தும் ஐ விரல் குவித்தும் – கல்லாடம்:2 8/13
இரு விரல் உயர்த்தி செரு நிலை இரட்ட – கல்லாடம்:2 8/20
கல்லவடத்திரள் விரல் தலை கறங்க – கல்லாடம்:2 8/26
விரல் நான்கு அமைத்த அணி குரல் வீங்காது – கல்லாடம்:2 21/40
புற விரல் மூன்றின் நுனி விரல் அகத்தும் – கல்லாடம்:2 82/26
புற விரல் மூன்றின் நுனி விரல் அகத்தும் – கல்லாடம்:2 82/26
எண்ணி விரல் தேய்ந்த செம் கரம் கூப்புக – கல்லாடம்:2 94/39

மேல்

விரி (15)

ஓ அற போகிய சிறை விரி முதுகில் – கல்லாடம்:1 2/24
விரி சடை மறைத்து மணி முடி கவித்து – கல்லாடம்:2 2/11
குழை உடல் தலை விரி கைத்திரி கறங்க – கல்லாடம்:2 8/12
மீனும் கொடியும் விரி திணை ஐந்தும் – கல்லாடம்:2 9/11
விரி திரை வையை திரு நதி சூழ்ந்த – கல்லாடம்:2 9/18
விரி தலை தோல் முலை வெள் வாய் எயிற்றியர்க்கு – கல்லாடம்:2 12/3
விளை கள் சுமந்த தலை விரி பெண்ணையும் – கல்லாடம்:2 21/21
சிறை விரி தூவி செம் கால் அன்னம் – கல்லாடம்:2 34/22
விரி வலை நுளையர் நெய்தல் ஏந்தி – கல்லாடம்:2 38/14
விரி சினை பொதுளிய பாசிலை ஒடுக்கி – கல்லாடம்:2 43/12
விரி பொரி சிந்தி மண மலர் பரப்பி – கல்லாடம்:2 47/4
கந்தி விரி படிந்த மென் சிறை வண்டும் – கல்லாடம்:2 50/22
நெடு மதில் கூடல் விரி புனல் வையையுள் – கல்லாடம்:2 55/26
சுருள் விரி சாலியும் குலை அரம்பையுமே – கல்லாடம்:2 59/21
பிணர் முட தாழை விரி மலர் குருகு என – கல்லாடம்:2 72/17

மேல்

விரிக்கும் (3)

எழு கதிர் விரிக்கும் மணி கெழு திருந்து_இழை – கல்லாடம்:2 66/11
உள சுருள் விரிக்கும் நல தகு கல்வி ஒன்று – கல்லாடம்:2 75/2
எழு கதிர் விரிக்கும் திரு மணி எடுத்து – கல்லாடம்:2 98/4

மேல்

விரித்த (9)

மண் சிறுக விரித்த மணி படம் தூக்கி – கல்லாடம்:1 2/20
பெரும் தமிழ் விரித்த அரும் தமிழ் புலவனும் – கல்லாடம்:1 2/54
விரித்த தாமரை குவித்த தாளோன் – கல்லாடம்:2 5/20
பொன் சுடர் விரித்த கொத்து அலர் கொன்றையும் – கல்லாடம்:2 19/25
பூத்து அலர் விரித்த சேப்படு தாமரை – கல்லாடம்:2 24/32
விண்ணுற விரித்த கரு முகில் படாம் கொடு – கல்லாடம்:2 29/17
பொலன் மணி விரித்த உடை மணி இழுக்கியும் – கல்லாடம்:2 56/23
எழில் மதி விரித்த வெண் தளை இதழ் தாமரை – கல்லாடம்:2 78/4
செங்கதிர் விரித்த செம் திரு மலர் தாமரை – கல்லாடம்:2 95/16

மேல்

விரித்தலின் (1)

குரு மணி விரித்தலின் தேனொடு கிடந்து – கல்லாடம்:2 52/4

மேல்

விரித்திருந்து (1)

குரவம் சுமந்த குழல் விரித்திருந்து
பாடலம் புனைந்த கற்பதுக்கை இவ்விடனே – கல்லாடம்:2 6/23,24

மேல்

விரித்து (9)

கார் விரித்து ஓங்கிய மலை தலை கதிர் என – கல்லாடம்:1 2/23
மூடிய நால் திசை முகில் துகில் விரித்து
பொன் சிலை வளைத்து வாயில் போக்கி – கல்லாடம்:2 14/3,4
தேக்கு இலை விரித்து நால் திசை வைத்து – கல்லாடம்:2 24/6
விரித்து கூறி பொருத்தமும் காண்டி – கல்லாடம்:2 25/43
உரிவை மூடி கரி தோல் விரித்து
புள்ளி பரந்த வள் உகிர் தரக்கின் – கல்லாடம்:2 26/12,13
விண் விரித்து ஒடுக்கும் இரவி வண் கவிகைக்கு – கல்லாடம்:2 81/31
மிடலொடு விரித்து சருக்கம் பாழி – கல்லாடம்:2 98/7
இனையவை விரித்து பல பொருள் கூறும் – கல்லாடம்:2 98/10
ஒன்றினுக்கு ஏழு நின்று நனி விரித்து
தனி முகம் மலர்ந்து தம் இசை பாட – கல்லாடம்:2 100/26,27

மேல்

விரித்தோய் (1)

குறுமுனி தேற நெடு மறை விரித்தோய்
ஆறு திரு எழுத்தும் கூறு நிலை கண்டு – கல்லாடம்:1 2/49,50

மேல்

விரிதரு (2)

விரிதரு கூழையும் திரு முடி கூடாது – கல்லாடம்:2 5/26
பொதியமும் களிப்ப விரிதரு தென்றலும் – கல்லாடம்:2 24/21

மேல்

விரிந்த (3)

மணத்துடன் விரிந்த கைதை அம் கானத்து – கல்லாடம்:2 2/15
பாசடை உம்பர் நெடும் சுனை விரிந்த
பேர் இதழ் தாமரை பெருகலானும் – கல்லாடம்:2 81/6,7
சுரும்புடன் விரிந்த துணை மலர் கொடியே – கல்லாடம்:2 81/30

மேல்

விரிந்தவும் (1)

விரிந்தவும் குவிந்தவும் விளரியில் வைத்து – கல்லாடம்:2 100/21

மேல்

விரிந்து (5)

வடவை நெடு நாக்கின் கிளைகள் விரிந்து என்ன – கல்லாடம்:1 2/5
அதர் விரிந்து எழுந்து படர் புகை நீழல் – கல்லாடம்:2 59/8
எரி விரிந்து அன்ன இதழ் பல் தாமரை – கல்லாடம்:2 64/23
எரி விரிந்து அன்ன பல இதழ் தாமரை – கல்லாடம்:2 68/3
மௌவல் இதழ் விரிந்து மணம் சூழ் பந்தர் செய் – கல்லாடம்:2 80/26

மேல்

விரிப்ப (1)

வண்டொடு குமுதம் மலர்ந்து இதழ் விரிப்ப
குருகும் சேவலும் பார்ப்புடன் வெருவி – கல்லாடம்:2 64/27,28

மேல்

விருந்தினன் (1)

அண்ணிய விருந்தினன் ஆகி – கல்லாடம்:2 26/33

மேல்

விருந்தினை (1)

ஊர் நகைத்து உட்க ஊக்கும் ஓர் விருந்தினை
குவளை வடி பூத்த கண் தவள வாள் நகை – கல்லாடம்:2 89/1,2

மேல்

விருந்து (3)

அரும் புது விருந்து என பொருந்தி மற்று அவர் தரும் – கல்லாடம்:2 12/4
விருந்து கொண்டு உண்ணும் பெரும் தவர் போல – கல்லாடம்:2 14/46
விருந்து கொள் மலரும் புரிந்து உறை மணமும் – கல்லாடம்:2 58/2

மேல்

விருப்புடன் (1)

செருப்பு உடை தாளால் விருப்புடன் தள்ளி – கல்லாடம்:2 14/28

மேல்

விருப்பெடுத்து (1)

நெருப்பொடு சுழலவும் விருப்பெடுத்து அவ் அழல் – கல்லாடம்:2 76/21

மேல்

விரும்பி (1)

அரிமகள் விரும்பி பாகம் செய்து – கல்லாடம்:2 41/12

மேல்

விரும்பிய (2)

விரும்பிய குணமும் அரும் திரு உருவும் – கல்லாடம்:2 38/20
வேங்கையின் தாதுடன் விரும்பிய சுரும்பும் – கல்லாடம்:2 50/21

மேல்

வில் (7)

கடு முரண் குடிக்கும் நெடு வில் கூட்டி – கல்லாடம்:2 25/19
சென்னி மலை ஈன்ற கன்னி வில் பிடிப்ப – கல்லாடம்:2 25/24
வளைத்த வில் வட்டம் கிடைத்தது கண்டு – கல்லாடம்:2 25/26
சூடகம் தோள்வளை கிடந்து வில் வீச – கல்லாடம்:2 41/21
வில் எடுத்து ஒன்னலர் புரம் எரியூட்டி – கல்லாடம்:2 72/7
கவிர் அலர் பூத்த செம் செம்மை வில் குடுமி – கல்லாடம்:2 89/4
வில் கவர்ந்து அன்னை வினையுள் வைத்து ஏவ – கல்லாடம்:2 95/29

மேல்

வில்லானும் (1)

இழைத்து வளைத்த கருப்பு வில்லானும்
நெடியோன் முதலாம் தேவர் கூடி – கல்லாடம்:2 19/11,12

மேல்

வில்லினை (1)

வில்லினை குனித்து கணையினை வாங்கி – கல்லாடம்:2 33/3

மேல்

வில்லுடன் (1)

வில்லுடன் பகைத்த செம் திரு_நுதலே – கல்லாடம்:2 22/55

மேல்

விலக்கி (1)

விளரி எடுத்து மத்திமை விலக்கி
ஒற்றை தாரி ஒரு நரம்பு இரட்ட – கல்லாடம்:2 100/16,17

மேல்

விலை (2)

வளை விலை மாக்கள் வடிவு எடுத்தருளி – கல்லாடம்:2 45/15
பூ விலை தொழில்மகன் காவல் கைவிட்டு – கல்லாடம்:2 57/12

மேல்

விழ (2)

பெரும் தேன் இறாலொடு குறி விழ எறிந்தும் – கல்லாடம்:2 22/34
நிறைமதி கிடக்கும் இறால் விழ எறிந்தும் – கல்லாடம்:2 28/25

மேல்

விழவில் (1)

கள் அமர் கோதையர் வெள்_அணி_விழவில் – கல்லாடம்:2 19/9

மேல்

விழவு (1)

வையை நீர் விழவு புகுந்தனம் என ஒரு – கல்லாடம்:2 86/5

மேல்

விழவுள் (1)

கெழுமிய விழவுள் புகு-மதி நீயே – கல்லாடம்:2 87/18

மேல்

விழி (37)

விழி விடும் எரியும் சாப வாய் நெருப்பும் – கல்லாடம்:1 1/16
விழி சொரி நீருடன் பழங்கண்கொண்டால் – கல்லாடம்:2 3/9
பார்வையில் தொழில்கள் கூர் விழி கொள்ளாது – கல்லாடம்:2 5/28
துணை விளக்கு எரியும் நிலை விழி பேழ் வாய் – கல்லாடம்:2 6/9
வடி விழி சிற்றிடை பெரு முலை மடவீர் – கல்லாடம்:2 10/1
அருள் வழி காட்டலின் இரு விழி ஆகியும் – கல்லாடம்:2 11/20
திரு உடல் நிறை விழி ஆயிர திரளும் – கல்லாடம்:2 23/2
எரியிடை மாய்ந்த கனல் விழி அரக்கர்க்கு – கல்லாடம்:2 25/35
வெள் உடல் பேழ் வாய் தழல் விழி மடங்கல் – கல்லாடம்:2 26/11
எரி தழல் குஞ்சி பொறி விழி பிறழ் எயிற்று – கல்லாடம்:2 27/13
அமுத வாய் மொழிச்சியர் நச்சு விழி போல – கல்லாடம்:2 27/29
கார் உடல் பெற்ற தீ விழி குறளினை – கல்லாடம்:2 33/17
குழி விழி பிறழ் பல் தெற்றல் கரும் கால் – கல்லாடம்:2 34/2
சுழல் விழி சிறுநகை குட வயிற்று இரு குழை – கல்லாடம்:2 34/6
தழல் விழி பேழ் வாய் தரக்கின் துளி முலை – கல்லாடம்:2 40/19
வெறி விழி பிணர் மருப்பு ஆமான் கன்றினை – கல்லாடம்:2 42/2
மதர் விழி தாமரை மலர்ந்து இமைத்து அமர்ந்தன – கல்லாடம்:2 45/9
குரவு அரும்பு உடுத்த வால் எயிற்று அழல் விழி
பகு வாய் பாம்பு முடங்கல் ஆக – கல்லாடம்:2 46/8,9
தழல் விழி மடங்கல் கொலை அரி குருளையை – கல்லாடம்:2 50/12
மா உயிர் வௌவலின் தீ விழி கூற்றும் – கல்லாடம்:2 56/4
நால் கரம் நுதல் விழி தீ புகை கடு களம் – கல்லாடம்:2 58/28
தழல் விழி பாந்தள் தான் இரை மாந்தியும் – கல்லாடம்:2 60/6
நெடும் கயல் எறி விழி குறும் தொடி திருவினள் – கல்லாடம்:2 61/16
சிலை நுதல் கணை விழி தெரிவையர் உளம் என – கல்லாடம்:2 68/1
திரு நுதல் கிழித்த தனி விழி நாயகன் – கல்லாடம்:2 69/33
மறி குலத்து உழையின் விழி நோக்கினளே – கல்லாடம்:2 70/22
நிறை உடல் அடங்க திரு விழி நிறைத்து – கல்லாடம்:2 71/3
இரு சுடர் ஒரு சுடர் புணர் விழி ஆக்கி முன் – கல்லாடம்:2 75/19
புரை அறும் அன்பினர் விழி பெற தோற்றி – கல்லாடம்:2 76/12
இரு கரம் தரித்த ஒரு விழி நுதலோன் – கல்லாடம்:2 77/16
திரை விழி பருந்து இனம் வளை உகிர் படையால் – கல்லாடம்:2 79/3
பேழ் வாய் தழல் விழி தரக்கு அடித்து அவிந்த – கல்லாடம்:2 87/21
விழி உடை தொண்டர் குழீஇ முடி தேய்ப்ப – கல்லாடம்:2 92/4
இரு விழி பொலி அ திரு நகர்ப்புறத்து – கல்லாடம்:2 93/7
பொறி விழி பாந்தள் புற்று அளை வதிய – கல்லாடம்:2 94/8
வெறி விழி சவரர் மா அடி ஒற்ற – கல்லாடம்:2 94/22
அமுத வாய் கடு விழி குறும் தொடி நெடும் குழல் – கல்லாடம்:2 98/48

மேல்

விழிக்க (1)

மன் உயிர் விழிக்க கண்ணிய கண்ணும் – கல்லாடம்:2 29/24

மேல்

விழித்த (5)

நெடு மலை விழித்த கண்ணே ஆகி – கல்லாடம்:2 22/8
பெரும் சுனை விழித்த நீலம் கொய்தும் – கல்லாடம்:2 22/37
இமையாது விழித்த தோற்றம் போல – கல்லாடம்:2 23/3
மறிந்துழை விழித்த மறி நோக்கினளே – கல்லாடம்:2 54/38
நீல போதும் பேதையும் விழித்த
பொறி உடல் உழையே எறி புன மணியே – கல்லாடம்:2 81/34,35

மேல்

விழித்து (2)

கண் கயல் விழித்து பூ துகில் மூடி – கல்லாடம்:2 42/23
பன்னிரு கண் விழித்து என் வினை துரக்கும் – கல்லாடம்:2 83/11

மேல்

விழித்தும் (1)

விழித்துழி விழித்தும் அடங்குழி அடங்கியும் – கல்லாடம்:2 7/3

மேல்

விழித்துழி (1)

விழித்துழி விழித்தும் அடங்குழி அடங்கியும் – கல்லாடம்:2 7/3

மேல்

விழியில் (1)

அமுதமும் கடுவும் விழியில் வைத்து அளிக்கும் – கல்லாடம்:2 87/3

மேல்

விழியும் (1)

நெடும் கயல் விழியும் நிறை மலை முலையும் – கல்லாடம்:2 65/28

மேல்

விழியோளே (1)

நண்ணுவன் சிறு நுதல் பெரு விழியோளே – கல்லாடம்:2 26/34

மேல்

விழு (2)

எழு மலை விழு மலை புடை மணி ஆக – கல்லாடம்:2 19/2
அன்ன ஊரர் புல்லமும் விழு குடிக்கு – கல்லாடம்:2 89/16

மேல்

விழுங்காத (1)

உளம் விழுங்காத களவினர் போல என் – கல்லாடம்:2 36/7

மேல்

விழுங்கி (1)

முழுமதி உடு கணம் அக-வயின் விழுங்கி
உமிழ்வன போல சுரி முக சூல் வளை – கல்லாடம்:2 74/21,22

மேல்

விழுங்கிய (2)

விழுங்கிய பல் கதிர் வாய்-தொறும் உமிழ்ந்து என – கல்லாடம்:1 2/21
உலகு அற விழுங்கிய நள்ளென் கங்குல் – கல்லாடம்:2 43/5

மேல்

விழுது (1)

வெள் வாய் குதட்டிய விழுது உடை கரும் தடி – கல்லாடம்:2 14/33

மேல்

விழுந்தும் (1)

விழுந்தும் எழுந்தும் செவ்வழி சேர்த்தி – கல்லாடம்:2 100/18

மேல்

விழும் (3)

செரு விழும் இச்சையர் தமது உடல் பெற்ற – கல்லாடம்:2 7/42
விண் தொட எழுந்து விழும் திரை குழுவினை – கல்லாடம்:2 72/29
புகல் விழும் அன்பு அதற்கு இன்றி – கல்லாடம்:2 76/25

மேல்

விழைதரும் (1)

விழைதரும் உழவும் வித்தும் நாறும் – கல்லாடம்:2 9/16

மேல்

விழைந்து (1)

வெள் இறவு உண்ண விழைந்து புகு குருகு இனம் – கல்லாடம்:2 72/26

மேல்

விள் (1)

உள்ளமும் தொடாது விள் அமுது ஒழுகும் – கல்லாடம்:2 56/20

மேல்

விள்ளா (1)

விள்ளா அறிவின் உள்ளமும் என்னவும் – கல்லாடம்:2 38/30

மேல்

விள்ளும் (1)

விள்ளும் தமியில் கூறினர் – கல்லாடம்:2 1/26

மேல்

விளக்கமும் (1)

விளக்கமும் புதுமையும் அளப்பு_இல் காட்சியும் – கல்லாடம்:2 18/11

மேல்

விளக்கின் (2)

தூண்டா விளக்கின் ஈண்டு அவள் உதவும் – கல்லாடம்:2 22/28
பல் முக விளக்கின் பரிதியின் தோட்டிய – கல்லாடம்:2 81/23

மேல்

விளக்கு (9)

துணை விளக்கு எரியும் நிலை விழி பேழ் வாய் – கல்லாடம்:2 6/9
மரகத தண்டின் தோன்றி விளக்கு எடுப்ப – கல்லாடம்:2 14/9
வடமீன் காட்டி விளக்கு அணி எடுத்து – கல்லாடம்:2 18/32
மணி விளக்கு நிறைந்த ஆலயம் ஆகி – கல்லாடம்:2 23/29
அண்டம் விளர்ப்ப பெரு விளக்கு எடுப்ப – கல்லாடம்:2 30/15
கை விளக்கு எடுத்து கரை இனம் கரைய – கல்லாடம்:2 79/7
சுடர் விளக்கு எடு-மின் கோதைகள் தூக்கு-மின் – கல்லாடம்:2 84/10
ஈம பெரு விளக்கு எடுப்ப மற்று அதன் – கல்லாடம்:2 88/19
கோபம் மின்மினி கொடும் கதிர் விளக்கு
வன்னி மாதுளம் பூவிதை என்ன – கல்லாடம்:2 98/28,29

மேல்

விளக்கும் (2)

மலர் தலை உலகத்து இருள் எறி விளக்கும்
மன் உயிர் விழிக்க கண்ணிய கண்ணும் – கல்லாடம்:2 29/23,24
அடியவர் உளத்து இருள் அகற்றலின் விளக்கும்
எழு மலை பொடித்தலின் அனல் தெறும் அசனியும் – கல்லாடம்:2 56/1,2

மேல்

விளங்க (2)

பேழ் வாய் புலி உகிர் சிறு குரல் விளங்க
அமுதம் துளிக்கும் குமுத வாய் குதட்டி – கல்லாடம்:2 50/7,8
வெள்ளி அம் குன்றம் விளங்க வீற்றிருந்த – கல்லாடம்:2 82/34

மேல்

விளங்கனி (1)

நுண் பதம் தண் தேன் விளங்கனி முயல் தசை – கல்லாடம்:2 96/19

மேல்

விளங்கு (1)

விண் புடைத்து அப்புறம் விளங்கு உடல் குணங்கு இனம் – கல்லாடம்:2 34/4

மேல்

விளம்பி (1)

நிரைநிரை விளம்பி வழி முடி நடுநரும் – கல்லாடம்:2 47/14

மேல்

விளர் (1)

அங்குலி இரண்டிரண்டு அணைத்து விளர் நிறீஇ – கல்லாடம்:2 8/24

மேல்

விளர்த்தி (1)

முண்டகம் விளர்த்தி முதிராது அலர்ந்தும் – கல்லாடம்:2 60/25

மேல்

விளர்த்துநின்று (1)

விளர்த்துநின்று அணங்கி வளை குலம் முழங்கும் – கல்லாடம்:2 75/15

மேல்

விளர்ப்ப (3)

அண்டம் விளர்ப்ப பெரு விளக்கு எடுப்ப – கல்லாடம்:2 30/15
கரு முகில் விளர்ப்ப அறல் நீர் குளிப்ப – கல்லாடம்:2 45/18
குடுமி அம் சென்னியர் கரு முகில் விளர்ப்ப
கிடை முறை எடுக்கும் மறை ஒலி கேள்-மதி – கல்லாடம்:2 69/21,22

மேல்

விளரி (4)

வெண்கூதளத்தில் விளரி நின்று இசைத்தும் – கல்லாடம்:2 54/4
விளரி உள் விளைக்கும் தளர் நடை சிறுவனும் – கல்லாடம்:2 88/10
விளரி எடுத்து மத்திமை விலக்கி – கல்லாடம்:2 100/16
பூரகம் கும்பகம் புடை எழு விளரி
துத்தம் தாரம் கைக்கிளை அதனுக்கு – கல்லாடம்:2 100/24,25

மேல்

விளரியில் (1)

விரிந்தவும் குவிந்தவும் விளரியில் வைத்து – கல்லாடம்:2 100/21

மேல்

விளரியோடு (1)

காம்பு பொதி நறவம் விளரியோடு அருந்தி – கல்லாடம்:2 17/29

மேல்

விளி (1)

விளி மொழி ஏற்றும் விதலையின் திளைத்தும் – கல்லாடம்:2 54/17

மேல்

விளிவது (1)

வீரம் அங்கு ஈந்த பின் விளிவது மானவும் – கல்லாடம்:2 73/20

மேல்

விளை (6)

துணை மீன் காட்சியில் விளை கரு என்ன – கல்லாடம்:2 5/27
விளை வயல் ஒடுங்கும் உதிர் நெல் உணவினும் – கல்லாடம்:2 20/22
விளை கள் சுமந்த தலை விரி பெண்ணையும் – கல்லாடம்:2 21/21
மருவிய பண்ணை இன்பமொடு விளை நலம் – கல்லாடம்:2 22/53
வேந்து விடைக்கு அணங்கியும் விளை பொருட்கு உருகியும் – கல்லாடம்:2 79/25
வேலி அம் குறும் சூல் விளை காய் பஞ்சு இனம் – கல்லாடம்:2 88/1

மேல்

விளைக்கும் (4)

விளைக்கும் காலம் முளைத்த காலை – கல்லாடம்:2 20/16
நாளும் விளைக்கும் பெரு வயல் ஆகி – கல்லாடம்:2 23/23
தரும பெரும் பயிர் உலகு பெற விளைக்கும்
நால் படை வன்னியர் ஆக்கிய பெருமான் – கல்லாடம்:2 37/14,15
விளரி உள் விளைக்கும் தளர் நடை சிறுவனும் – கல்லாடம்:2 88/10

மேல்

விளைத்த (1)

சினை தழை விளைத்த பழுமரம் என்ன – கல்லாடம்:2 32/15

மேல்

விளைந்து (1)

ஒன்றி விளைந்து சென்றாட்கு உடைத்து – கல்லாடம்:2 17/55

மேல்

விளைப்ப (2)

வள்ளையில் கருவியில் பெரும் புகழ் விளைப்ப
முனிவர் செம் கரம் சென்னி ஆக – கல்லாடம்:2 30/17,18
துத்தம் கைக்கிளை அளவையின் விளைப்ப
நீர்_அரமகளிர் செவ் வாய் காட்டி – கல்லாடம்:2 38/15,16

மேல்

விளைபொருள் (1)

மெய் தவ கூடல் விளைபொருள் மங்கையர் – கல்லாடம்:2 63/26

மேல்

விளையா (1)

பேர் அருள் விளையா சீரிலர் போல – கல்லாடம்:2 5/21

மேல்

விளையாட்டு (1)

மூன்று புரம் வேவ திரு நகை விளையாட்டு
ஒருநாள் கண்ட பெருமான் இறைவன் – கல்லாடம்:2 22/41,42

மேல்

விளையாட (1)

அரக்கர் கூட்டத்து அமர் விளையாட
நெருப்பு உமிழ் ஆழி ஈந்து அருள் நிமலன் – கல்லாடம்:2 5/17,18

மேல்

விளைவாய் (1)

நிலை நீர் மொக்குளின் விளைவாய் தோன்றி – கல்லாடம்:2 80/1

மேல்

விற்று (1)

விற்று உணும் சேரி விடாது உறை ஊரன் – கல்லாடம்:2 56/16

மேல்

விறகுடன் (1)

போகா விறகுடன் தலைக்கடை பொருந்தி – கல்லாடம்:2 43/27

மேல்

வினவா (1)

திருவடி வினவா கரு உறை மாக்கள் – கல்லாடம்:2 8/30

மேல்

வினவாதவரினும் (1)

கனவினும் வினவாதவரினும் நீங்கி – கல்லாடம்:2 85/41

மேல்

வினவாது (1)

வினவாது இருக்கும் கேண்மை – கல்லாடம்:2 23/49

மேல்

வினவியும் (1)

தெரிந்து அலர் கொய்தும் பொழில் குறி வினவியும்
உடலொடும் பிணைந்த கை ஆய் துயில் ஒற்றி – கல்லாடம்:2 85/15,16

மேல்

வினவினள் (1)

தாய் கால் தாழ்ந்தனள் ஆயம் வினவினள்
பாங்கியை புல்லினள் அயலும் சொற்றனள் – கல்லாடம்:2 40/14,15

மேல்

வினை (11)

வினை தரும் அடைவின் அல்லது – கல்லாடம்:2 20/45
கவையா நெஞ்சமொடு பொரு வினை சென்றோர் – கல்லாடம்:2 46/16
இரு பதம் உள் வைத்து இருந்தவர் வினை போல் – கல்லாடம்:2 53/19
விண் உடைத்து உண்ணும் வினை சூர் கவர்ந்த – கல்லாடம்:2 63/8
புகை உடல் புடைத்த விட வினை போல – கல்லாடம்:2 71/20
வெம்மையும் தண்மையும் வினை உடற்கு ஆற்றும் – கல்லாடம்:2 75/18
அவ் வினை பயனுழி அரும் தவம் பெறுமோ – கல்லாடம்:2 82/48
கடு வினை அங்குரம் காட்டி உள் அழுக்காறு – கல்லாடம்:2 83/1
பன்னிரு கண் விழித்து என் வினை துரக்கும் – கல்லாடம்:2 83/11
கிளர்ந்து அயர்வாட்கு முன் கிளர் வினை சென்றோர் – கல்லாடம்:2 84/14
வினை உடல் புணர வரும் உயிர் பற்றி – கல்லாடம்:2 99/46

மேல்

வினைக்கு (1)

அரி வினைக்கு அடங்கிய மலை இனம் வரவு என – கல்லாடம்:2 72/30

மேல்

வினையகத்து (1)

வன்மீன் நெடும் கயல் பொது வினையகத்து
கிடங்கு என பெயரிய கரும் கடல் காண்க – கல்லாடம்:2 69/18,19

மேல்

வினையால் (1)

தியங்கி உடல் ஈட்டிய கரும் கடு வினையால்
கால குறியை மனம் தடுமாறி – கல்லாடம்:2 70/16,17

மேல்

வினையுள் (1)

வில் கவர்ந்து அன்னை வினையுள் வைத்து ஏவ – கல்லாடம்:2 95/29

மேல்