மு – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மு 10
முக்கண் 5
முக்கணன் 1
முக்கவர் 1
முக்குறியாக 1
முக்கோணம் 1
முக்கோல் 1
முக 19
முகக்கும் 1
முகட்டு 1
முகடு 4
முகத்த 2
முகத்தினும் 2
முகத்து 8
முகத்தை 1
முகத்தொடு 1
முகந்து 2
முகம் 34
முகமன் 4
முகமும் 1
முகன் 3
முகனிற்கு 1
முகனுற 1
முகில் 22
முகிழ் 2
முகிழ்செய்து 1
முகிழ்த்த 1
முகிழ்ப்ப 3
முகிற்கு 1
முகை 1
முகையின் 1
முசுக்கலை 1
முட்டிய 1
முட 5
முடக்கு 1
முடங்கல் 1
முடங்கு 5
முடங்கு_உளை 2
முடம்படு 1
முடி 29
முடித்த 3
முடித்தல் 1
முடித்து 2
முடிந்தவர் 1
முடிப்பவர் 1
முடிப்பை 1
முடிய 1
முடியா 2
முடியாது 1
முடியினன் 1
முடியினும் 2
முடியும் 2
முடிவு 1
முடை 2
முண்டக 3
முண்டகத்து 1
முண்டகம் 8
முத்தம் 2
முத்தமிழ் 2
முத்தமிழும் 1
முத்தமும் 1
முத்தழல் 1
முத்தழற்கு 1
முத்திரைக்கு 1
முத்து 4
முத்தொழில் 1
முதல் 31
முதல்வன் 1
முதல்வனை 1
முதலா 2
முதலாம் 2
முதலில் 1
முதலோர் 1
முதியவன் 1
முதியோள் 4
முதிர் 9
முதிரா 2
முதிராது 1
முது 2
முதுக்குறை 2
முதுக்கொள 1
முதுகில் 1
முதுகு 6
முதுநீர் 1
முந்திய 1
முந்துறும் 1
முந்நான்கு 1
முயங்கிய 1
முயங்கியும் 1
முயல் 5
முயலின் 1
முயன்று 1
முரசம் 1
முரசு 1
முரண் 4
முரணே 1
முரம்பு 2
முரல் 1
முரல 1
முரலும் 1
முரற்றி 1
முரற்றிய 1
முரற்றியும் 1
முரற்றும் 1
முரன்று 1
முரிந்து 1
முரியவும் 1
முருக 1
முருகியம் 2
முருகு 2
முருங்க 1
முருந்து 2
முல்லை 5
முல்லையில் 1
முல்லையும் 2
முலை 28
முலை-முகம் 2
முலையவட்கே 1
முலையாட்டியும் 1
முலையின் 1
முலையினும் 1
முலையும் 1
முலையோள் 1
முலையோளே 1
முழக்கமும் 1
முழக்கமொடு 1
முழக்காது 1
முழக்கி 2
முழக்கும் 1
முழங்க 1
முழங்கி 1
முழங்கும் 2
முழம் 1
முழவம் 2
முழவின் 1
முழவு 1
முழு 2
முழுக்கியும் 1
முழுது 5
முழுதும் 2
முழுதுற 1
முழுமதி 3
முழை 4
முள் 15
முளரி 7
முளரியில் 1
முளரியின் 1
முளரியும் 1
முளியம் 1
முளைத்த 9
முளைத்தருள் 1
முளைத்து 2
முளையா 1
முளையிட்டு 1
முளைவரும் 1
முற்றி 3
முற்றிய 3
முறம் 1
முறி 1
முறிக்கலை 1
முறித்த 1
முறித்தல் 1
முறித்திட்டும் 1
முறித்து 2
முறிய 1
முறை 8
முறைபெற 1
முறைமுறை 2
முறையர் 1
முறையே 1
முன் 31
முன்கை 1
முன்கையில் 1
முன்பவை 1
முன்பின் 1
முன்வாழ்த்து 1
முன்றில் 6
முன்றிலின் 1
முன்றிலும் 1
முன்னம் 2
முன்னர் 1
முன்னவன் 3
முன்னா 1
முன்னி 3
முன்னும் 1
முன்னுறும் 1
முன்னை 1
முன்னையள் 3
முன்னையின் 1
முனி 5
முனி-பால் 1
முனிக்கும் 1
முனியும் 1
முனிவர் 7
முனிவர்க்கு 1
முனிவர்கள் 1
முனிவரும் 1
முனிவன் 1
முனிவனும் 2
முனிவாக 1
முனை 5
முனைதல் 1
முனைப்பது 1

மு (10)

மு கண் மேல் பொங்கும் வெள்ளம் எறி கடத்த – கல்லாடம்:1 1/6
மு முக கயலுடன் மயிர் கயிறு விசித்த – கல்லாடம்:2 8/25
மு கணில் அருள் கண் முறைபெற முயங்கியும் – கல்லாடம்:2 13/4
மு முறை சுழன்று தாயர் உள் மகிழ – கல்லாடம்:2 18/25
மு முலை ஒருத்தியை மணந்து உலகு ஆண்ட – கல்லாடம்:2 30/20
வான் உடைத்து உண்ணும் மற கொலை அரக்கர் மு
பெரு மதில் பெற்றன அன்றோ – கல்லாடம்:2 74/27,28
மூ உடல் அணைத்த மு முகத்து ஒரோ முகத்து – கல்லாடம்:2 85/22
மு தொழிலில் தன் முதல் தொழில் ஆக்கி – கல்லாடம்:2 87/33
ஒரு தாள் தாரை கொள் மு கவை சுடர் வேல் – கல்லாடம்:2 87/34
மு கண் பிறை எயிற்று எண் தோள் செல்வி – கல்லாடம்:2 88/31

மேல்

முக்கண் (5)

முழுதும் நிறைந்த முக்கண் பெருமான் – கல்லாடம்:2 10/16
முதல் கவி பாடிய முக்கண் பெருமான் – கல்லாடம்:2 13/23
நிறைந்து உறை முக்கண் பெரும் திறல் அடிகள் – கல்லாடம்:2 24/34
முக்கண் கடவுள் முதல்வனை வணங்கார் – கல்லாடம்:2 38/27
முத்தழற்கு உடையோன் முக்கண் கடவுள் என்று – கல்லாடம்:2 60/12

மேல்

முக்கணன் (1)

மூதூர் கூடல் வந்து அருள் முக்கணன்
காமனை அயனை நாம காலனை – கல்லாடம்:2 17/37,38

மேல்

முக்கவர் (1)

முக்கவர் திருநதி துணையுடன் மூழ்கி – கல்லாடம்:2 44/17

மேல்

முக்குறியாக (1)

உலகினில் தமது முக்குறியாக
மணி முடி வேணியும் உருத்திர கலனும் – கல்லாடம்:2 55/20,21

மேல்

முக்கோணம் (1)

வட்டம் முக்கோணம் சதுரம் கார் முகம் – கல்லாடம்:2 77/10

மேல்

முக்கோல் (1)

பாச கரகம் விதி உடை முக்கோல்
முறிக்கலை சுருக்கு கரம் பெறு முனிவர் – கல்லாடம்:1 1/14,15

மேல்

முக (19)

ஆம்பல் முக அரக்கன் கிளையொடு மறிய – கல்லாடம்:1 1/19
பெரு வாய் ஒரு முக படகம் பெருக்க – கல்லாடம்:2 8/14
மு முக கயலுடன் மயிர் கயிறு விசித்த – கல்லாடம்:2 8/25
புகர்_முக புழை கை ஒருவிசை தடிந்தும் – கல்லாடம்:2 13/12
சுரி முக செவ் வாய் சூல் வளை தெறிப்ப – கல்லாடம்:2 15/16
புகர் முக புழை_கை துயில்தரு கனவில் – கல்லாடம்:2 41/50
பால் முக களவின் குறும் காய் பச்சிணர் – கல்லாடம்:2 43/14
வளை உமிழ் ஆரமும் சுரி முக சங்கும் – கல்லாடம்:2 60/17
நின் முக கிளையினர் தம்மையும் கடந்தனர் – கல்லாடம்:2 62/16
பெரு நிலவு எறித்த புகர் முக துளை கை – கல்லாடம்:2 62/21
அருள் முக திருவொடு மலர் முகம் குவிய – கல்லாடம்:2 64/24
சுரி முக குழு வளை நிலவு எழ சொரிந்த – கல்லாடம்:2 69/15
மேல் கடல் கவிழ் முக பொரி உடல் மாவும் – கல்லாடம்:2 70/2
சரவணத்து உதித்த அறு முக புதல்வன் – கல்லாடம்:2 72/9
உமிழ்வன போல சுரி முக சூல் வளை – கல்லாடம்:2 74/22
பல் முக விளக்கின் பரிதியின் தோட்டிய – கல்லாடம்:2 81/23
இணை முக பறை அறை கடிப்பு உடை தோகை – கல்லாடம்:2 83/23
முழக்கி மெய் கவரும் முக கொலை ஞாளி – கல்லாடம்:2 83/25
புகர் இலை நெடு வேல் அறு முக குளவன் – கல்லாடம்:2 98/55

மேல்

முகக்கும் (1)

முகில் முழவு அதிர ஏழிசை முகக்கும்
முல்லை யாழொடு சுருதி வண்டு அலம்ப – கல்லாடம்:2 14/14,15

மேல்

முகட்டு (1)

பொன் குட முகட்டு கரு மணி அமைத்து என – கல்லாடம்:2 5/10

மேல்

முகடு (4)

வளி சுழல் விசும்பின் கிளர் முகடு அணவி – கல்லாடம்:2 51/27
உடு நிறை வான பெரு முகடு உயர – கல்லாடம்:2 61/23
பறவை செல்லாது நெடு முகடு உருவிய – கல்லாடம்:2 66/22
மலை முதுகு அன்ன குலை முகடு ஏறி – கல்லாடம்:2 74/20

மேல்

முகத்த (2)

வண்டு இனம் புரளும் வயங்கு புகர் முகத்த
செங்கதிர் திரள் எழு கரும் கடல் போல – கல்லாடம்:1 1/4,5
தந்திரி நூறு தழங்கிய முகத்த
கீசக பேரியாழ் கிளையுடன் முரல – கல்லாடம்:2 82/20,21

மேல்

முகத்தினும் (2)

முகத்தினும் தட்ட மூக்கினும் தாக்க – கல்லாடம்:2 8/28
முகத்தினும் கண்ணினும் முண்டக முலையினும் – கல்லாடம்:2 63/27

மேல்

முகத்து (8)

முடங்கு உளை முகத்து பல் தோள் அவுணனொடு – கல்லாடம்:1 2/2
பிணிமுக மஞ்ஞை செரு முகத்து ஏந்திய – கல்லாடம்:2 7/7
முள் தாள் செம் மலர் நான் முகத்து ஒருவன் – கல்லாடம்:2 30/10
நிறை அளி புரக்கும் புது முகத்து அணங்கு நின் – கல்லாடம்:2 49/4
மதி நுதல் பெருமதி மலர் முகத்து ஒருத்தியை – கல்லாடம்:2 54/13
ஆயிரம் திரு முகத்து அருள் நதி சிறுமதி – கல்லாடம்:2 58/31
மூ உடல் அணைத்த மு முகத்து ஒரோ முகத்து – கல்லாடம்:2 85/22
மூ உடல் அணைத்த மு முகத்து ஒரோ முகத்து
எண் கடிப்பு விசித்த கல்லல் செறிய – கல்லாடம்:2 85/22,23

மேல்

முகத்தை (1)

கவிழ்ந்த முகத்தை எக்-கண் மனம் தோன்ற – கல்லாடம்:2 86/12

மேல்

முகத்தொடு (1)

பல துறை முகத்தொடு பயிலுதலானும் – கல்லாடம்:2 11/8

மேல்

முகந்து (2)

திசை-நின்று எழாது தழல் முகந்து ஏறி – கல்லாடம்:2 7/29
பெரும் கடல் முகந்து வயிறு நிறை நெடும் கார் – கல்லாடம்:2 37/2

மேல்

முகம் (34)

கால் முகம் ஏற்ற துளை கொள் வாய் கறங்கும் – கல்லாடம்:1 1/33
கிடந்து எரி வடவையின் தளிர் முகம் ஈன்று – கல்லாடம்:1 2/7
நான் முகம் தட்டி நடு முகம் உரப்ப – கல்லாடம்:2 8/16
நான் முகம் தட்டி நடு முகம் உரப்ப – கல்லாடம்:2 8/16
ஒரு முகம் தாழ்த்தி இரு கடிப்பு ஒலிப்ப – கல்லாடம்:2 8/22
என் முகம் அளக்கும் கால் அ குறியை – கல்லாடம்:2 18/36
மீன் புகர் நிறைந்த வான் குஞ்சர முகம்
வால் பெற முளைத்த கூன் கோடானும் – கல்லாடம்:2 19/3,4
இரண்டு_ஐஞ்ஞூறு திரண்ட முகம் எடுத்து – கல்லாடம்:2 19/28
எங்கும் முகம் வைத்த கங்கை காலும் – கல்லாடம்:2 21/7
தேவர் மங்கையர் மலர் முகம் பழித்து – கல்லாடம்:2 21/10
முகம் வேறு இசைக்கும் குடமுழவு இரட்ட – கல்லாடம்:2 21/34
வயிறு குழிவாங்கி அழு முகம் காட்டாது – கல்லாடம்:2 21/44
சிறு முகம் காணும் ஆடி ஆகி – கல்லாடம்:2 22/20
கொண்டனள் என் என என் முகம் நாடி – கல்லாடம்:2 23/45
வெள்ள பெரு நதி கொள்ளை முகம் வைத்து – கல்லாடம்:2 27/2
பொன்மலை பிடுங்கி கார் முகம் என்ன – கல்லாடம்:2 33/22
சினை முகம் ஏந்திய இணர்கொள் வாய் குடம்பையின் – கல்லாடம்:2 34/20
முகம் வியர்ப்பு உறுத்தின உள்ளமும் சுழன்றன – கல்லாடம்:2 45/13
ஒருவழி படர்ந்தது என் அ திரு முகம்
ஆயிரம் எடுத்து வான் வழி படர்ந்து – கல்லாடம்:2 57/20,21
முளையா வென்றி இவள் முகம் மதிக்கே – கல்லாடம்:2 60/29
கண் முகம் காட்டிய காட்சியது என்ன – கல்லாடம்:2 63/2
அருள் முக திருவொடு மலர் முகம் குவிய – கல்லாடம்:2 64/24
மயில் சிறை ஆல வலி_முகம் பனிப்ப – கல்லாடம்:2 68/26
ஆற்றாது அழன்று காற்றின் முகம் மயங்கி – கல்லாடம்:2 71/26
நான் முகம் கொண்டு அறி நன்னர் நெஞ்சு இருந்து – கல்லாடம்:2 72/2
புன்னை அம் பொதும்பர் குழை முகம் குழை-முகம் – கல்லாடம்:2 72/19
முடம்படு நாஞ்சில் பொன் முகம் கிழித்த – கல்லாடம்:2 74/7
வட்டம் முக்கோணம் சதுரம் கார் முகம்
நவத்தலை தாமரை வளை வாய் பருந்து என – கல்லாடம்:2 77/10,11
கொலை முதிர் கடமான் முதிர் முகம் படர்ந்து – கல்லாடம்:2 81/3
வெறி முதிர் செம்மல் முறி முகம் கொடுக்கும் – கல்லாடம்:2 81/40
நன்னர் கொள் அன்பால் நனி முகம் புலம்ப – கல்லாடம்:2 82/11
முகம் கவிழ் வேலையில் அறம் குடிபோகிய – கல்லாடம்:2 83/31
விதியினும் பன்மை செய் முகம் படைத்து அளவா – கல்லாடம்:2 87/6
தனி முகம் மலர்ந்து தம் இசை பாட – கல்லாடம்:2 100/27

மேல்

முகமன் (4)

முன்னையின் புனைந்தும் முகமன் அளித்தும் – கல்லாடம்:2 13/17
உளத்து வேறு அடக்கி முகமன் கூறாது – கல்லாடம்:2 35/5
யாழொடு முகமன் பாணனும் நீயும் – கல்லாடம்:2 80/32
முனிவர் அஞ்சலியுடன் முகமன் இயம்ப – கல்லாடம்:2 82/31

மேல்

முகமும் (1)

துறை கொள் ஆயிரம் முகமும் சுழல – கல்லாடம்:2 16/9

மேல்

முகன் (3)

கண் எதிர் வைகி முகன் கொளின் கலங்கியும் – கல்லாடம்:2 44/5
முகன் தரும் இருசெயல் அகன் பெற கொளுவும் – கல்லாடம்:2 50/2
முகன் ஐந்து மணத்த முழவம் துவைக்க – கல்லாடம்:2 85/20

மேல்

முகனிற்கு (1)

இரு கால் முகனிற்கு அருகா துரந்து – கல்லாடம்:2 17/51

மேல்

முகனுற (1)

முகனுற காணும் கரியோர் போல – கல்லாடம்:2 18/30

மேல்

முகில் (22)

செவ்வி கொள் கரு முகில் செல்வன் ஆகியும் – கல்லாடம்:2 9/4
மூடிய நால் திசை முகில் துகில் விரித்து – கல்லாடம்:2 14/3
முகில் முழவு அதிர ஏழிசை முகக்கும் – கல்லாடம்:2 14/14
முகில் உரு பெறும் ஓர் கொடுமர கிராதன் – கல்லாடம்:2 14/26
கரு முகில் வெளுத்த திரு மிடற்று இருளும் – கல்லாடம்:2 15/24
திக்கு நிலை படர்ந்த முகில் பாசடையும் – கல்லாடம்:2 21/2
செம் முகில் பழ நுரை வெண் முகில் புது நுரை – கல்லாடம்:2 21/4
செம் முகில் பழ நுரை வெண் முகில் புது நுரை – கல்லாடம்:2 21/4
விண்ணுற விரித்த கரு முகில் படாம் கொடு – கல்லாடம்:2 29/17
கரு முகில் விளர்ப்ப அறல் நீர் குளிப்ப – கல்லாடம்:2 45/18
காருடன் மிடைந்த குளிறு குரல் கண முகில்
எம் உயிர் அன்றி இடை கண்டோர்க்கும் – கல்லாடம்:2 46/13,14
திரு மிடற்று இருள் என செறிதரும் மா முகில்
எனது கண் கடந்து நீங்கி – கல்லாடம்:2 47/29,30
கரு முகில் வளைந்து பெருகிய போல – கல்லாடம்:2 51/28
பெரு முகில் வயிறளவு ஊட்டி – கல்லாடம்:2 65/30
முகில் தலை சுமந்த ஞிமிறு எழுந்து இசைக்கும் – கல்லாடம்:2 69/2
குடுமி அம் சென்னியர் கரு முகில் விளர்ப்ப – கல்லாடம்:2 69/21
கரு முகில் நிறத்த கண்ணனின் சிறந்து – கல்லாடம்:2 71/2
நிலம் இரண்டு அளந்த நெடு முகில் மான – கல்லாடம்:2 72/4
பருகிய முகில் குலம் படிந்து கண்படுத்தும் – கல்லாடம்:2 72/23
இருள் உடை பெரு முகில் வழி தெரிந்து ஏகன்-மின் – கல்லாடம்:2 93/9
காலமுற்று ஒடுங்கும் நீள் முகில் கூட்டமும் – கல்லாடம்:2 99/48
முகில் துகில் மூடி மணி நெருப்பு அணைத்து – கல்லாடம்:2 100/2

மேல்

முகிழ் (2)

முடங்கு அதள் உறுத்த முகிழ் நகை எய்தியும் – கல்லாடம்:2 12/8
அணந்து எடுத்து ஏந்திய அரும்பு முகிழ் முலையோள் – கல்லாடம்:2 54/12

மேல்

முகிழ்செய்து (1)

இரண்டு முகிழ்செய்து நெஞ்சுற பெருகும் – கல்லாடம்:2 18/20

மேல்

முகிழ்த்த (1)

வெள்ளி முகிழ்த்த ஒரு கண் பார்ப்பான் – கல்லாடம்:2 57/10

மேல்

முகிழ்ப்ப (3)

குழி கண் கரும் பேய் மகவு கண் முகிழ்ப்ப
வேம் உடல் சின்னம் வெள்ளிடை தெறிப்ப – கல்லாடம்:2 7/26,27
இமையவர் வேண்ட ஒரு நகை முகிழ்ப்ப
ஓருழி கூடாது உம்பரில் புகுந்து – கல்லாடம்:2 74/25,26
முனிவரும் தேவரும் கர மலர் முகிழ்ப்ப
தருவன அன்றி மலரவன் அவன் தொழில் – கல்லாடம்:2 87/29,30

மேல்

முகிற்கு (1)

கரு முகிற்கு அணி நிற தழல் கண் பிறை எயிற்று – கல்லாடம்:2 37/9

மேல்

முகை (1)

புல் இதழ் தாமரை புது முகை அவிழ்ப்ப – கல்லாடம்:2 51/6

மேல்

முகையின் (1)

முண்டக முகையின் முலை-முகம் தரு-மின் – கல்லாடம்:2 10/4

மேல்

முசுக்கலை (1)

முசுக்கலை பிணவுடன் முழை உறை அடங்க – கல்லாடம்:2 94/15

மேல்

முட்டிய (1)

புன் தலை மேதி புனல் எழ முட்டிய
வரி உடல் செம் கண் வரால் உடன் மயங்க – கல்லாடம்:2 57/3,4

மேல்

முட (5)

முட உடல் கைதை மடல் முறித்திட்டும் – கல்லாடம்:2 9/25
முட புது நாஞ்சில் அள்ளல் புக நிறுத்தி – கல்லாடம்:2 27/25
முட வெண் தாழை ஊழ்த்த முள் மலரும் – கல்லாடம்:2 67/4
பிணர் முட தாழை விரி மலர் குருகு என – கல்லாடம்:2 72/17
அரவு எயிறு அணைத்த முள் இலை முட கைதைகள் – கல்லாடம்:2 82/40

மேல்

முடக்கு (1)

உடல் முடக்கு எடுத்த தொழில் பெரு வாழ்க்கை – கல்லாடம்:2 78/8

மேல்

முடங்கல் (1)

பகு வாய் பாம்பு முடங்கல் ஆக – கல்லாடம்:2 46/9

மேல்

முடங்கு (5)

முடங்கு உளை முகத்து பல் தோள் அவுணனொடு – கல்லாடம்:1 2/2
முடங்கு அதள் உறுத்த முகிழ் நகை எய்தியும் – கல்லாடம்:2 12/8
முடங்கு வீழ் அன்ன வேணி முடி கட்டி – கல்லாடம்:2 40/5
முடங்கு_உளை கண்ட பெரும் துயர் போல – கல்லாடம்:2 41/51
முடங்கு_உளை அகழ்ந்த கொடும் கரி கோடும் – கல்லாடம்:2 65/13

மேல்

முடங்கு_உளை (2)

முடங்கு_உளை கண்ட பெரும் துயர் போல – கல்லாடம்:2 41/51
முடங்கு_உளை அகழ்ந்த கொடும் கரி கோடும் – கல்லாடம்:2 65/13

மேல்

முடம்படு (1)

முடம்படு நாஞ்சில் பொன் முகம் கிழித்த – கல்லாடம்:2 74/7

மேல்

முடி (29)

திங்கள் முடி பொறுத்த பொன்மலை அருவி – கல்லாடம்:1 1/1
கூடம் சுமந்த நெடு முடி நேரி – கல்லாடம்:1 2/47
விரி சடை மறைத்து மணி முடி கவித்து – கல்லாடம்:2 2/11
விரிதரு கூழையும் திரு முடி கூடாது – கல்லாடம்:2 5/26
படி இது என்னா அடி முடி கண்டும் – கல்லாடம்:2 13/5
தரு மலர் விண் புக மணி முடி நிறைத்து – கல்லாடம்:2 14/32
மேருவின் முடி சூழ் சூரியராக – கல்லாடம்:2 16/17
பிதிர் கனல் மணி சூழ் முடி நடுங்காது – கல்லாடம்:2 21/43
கதிர் முடி கவித்த இறைவன் மா மணி – கல்லாடம்:2 21/62
கூடம் சூழ்ந்த நெடு முடி பொதியத்து – கல்லாடம்:2 28/12
கலவையும் பூவும் தோள் முடி கமழ – கல்லாடம்:2 38/13
முடங்கு வீழ் அன்ன வேணி முடி கட்டி – கல்லாடம்:2 40/5
ஆக்கிய விஞ்சை பிறை முடி அந்தணன் – கல்லாடம்:2 42/16
மைந்தனும் கேளிரும் மதி முடி கடவுள் நின் – கல்லாடம்:2 44/22
ஆலவாய் பொதிந்த மதி_முடி தனி முதல் – கல்லாடம்:2 46/10
நிரைநிரை விளம்பி வழி முடி நடுநரும் – கல்லாடம்:2 47/14
முடி தலை திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும் – கல்லாடம்:2 47/18
முடி தலை மன்னர் செருக்கு நிலை ஒருவி – கல்லாடம்:2 50/5
மணி முடி வேணியும் உருத்திர கலனும் – கல்லாடம்:2 55/21
பொன் முடி சயில கணவன் புணர்ந்து – கல்லாடம்:2 65/2
நெடு முடி அருவி அகிலொடு கொழிக்கும் – கல்லாடம்:2 68/29
பல் மணி மிளிர் முடி பலர் தொழ கவித்து – கல்லாடம்:2 75/8
வானவர் நெடு முடி மணி தொகை திரட்டி – கல்லாடம்:2 76/13
தேவனும் அதன் முடி மேவும் உளனாம் – கல்லாடம்:2 78/16
சிறிது மலை உறைத்த மதி முடி அந்தணன் – கல்லாடம்:2 78/23
மணி முடி சுமந்த நம் வயல் அணி ஊரர் பின் – கல்லாடம்:2 89/12
விழி உடை தொண்டர் குழீஇ முடி தேய்ப்ப – கல்லாடம்:2 92/4
தமது ஊர் புகுந்து முடி சுமந்தோர்க்கும் – கல்லாடம்:2 95/38
கதிர் நிரை பரப்பும் மணி முடி தேவர்கள் – கல்லாடம்:2 98/1

மேல்

முடித்த (3)

வெள்ளை மதி முடித்த செம் சடை ஒருத்தன் – கல்லாடம்:1 1/10
வெண் சிறை முடித்த செம் சடை பெருமான் – கல்லாடம்:2 67/23
குறும்பிறை முடித்த நெடும் சடை ஒருத்தனை – கல்லாடம்:2 83/13

மேல்

முடித்தல் (1)

அளந்து கொடு முடித்தல் நின் கடன் ஆதலின் – கல்லாடம்:1 1/25

மேல்

முடித்து (2)

நீளாது இம்பரின் முடித்து
மீளா காட்சி தருதி இன்று எனவே – கல்லாடம்:1 2/64,65
முடித்து தமது முடியா பதி புக – கல்லாடம்:2 93/20

மேல்

முடிந்தவர் (1)

முடிந்தவர் முடியா மூதூரிடத்தும் – கல்லாடம்:2 52/15

மேல்

முடிப்பவர் (1)

செய் குறை முடிப்பவர் செனனம் போல – கல்லாடம்:2 45/10

மேல்

முடிப்பை (1)

தெருளுற ஐய முடிப்பை இன்று எனவே – கல்லாடம்:1 1/40

மேல்

முடிய (1)

காலம் முடிய கணக்கின் படியே – கல்லாடம்:2 26/7

மேல்

முடியா (2)

முடிந்தவர் முடியா மூதூரிடத்தும் – கல்லாடம்:2 52/15
முடித்து தமது முடியா பதி புக – கல்லாடம்:2 93/20

மேல்

முடியாது (1)

பல தலைவைத்து முடியாது பாயும் – கல்லாடம்:2 21/6

மேல்

முடியினன் (1)

பிறை சடை முடியினன் பேர் அருள் அடியவர்க்கு – கல்லாடம்:2 61/13

மேல்

முடியினும் (2)

அடியினும் முடியினும் அணைந்தன போல – கல்லாடம்:2 73/3
அரு மறை முடியினும் அடியவர் உளத்தினும் – கல்லாடம்:2 76/17

மேல்

முடியும் (2)

கல்வியில் அறிவில் காணும் முடியும்
அளவு சென்று எட்டா அளவினர் ஆகி – கல்லாடம்:2 58/19,20
அறிவு அகன்று உயர்ந்த கழல் மணி முடியும்
உடைமையன் பொன் கழல் பேணி – கல்லாடம்:2 66/29,30

மேல்

முடிவு (1)

பாய் திரை உடுத்த ஞால முடிவு என்ன – கல்லாடம்:1 2/1

மேல்

முடை (2)

முடை தலை எரி பொடி உடைமையின் பாலையும் – கல்லாடம்:2 64/17
முடை உடல் அண்டர் படலிடம் புகுத – கல்லாடம்:2 94/12

மேல்

முண்டக (3)

முண்டக முகையின் முலை-முகம் தரு-மின் – கல்லாடம்:2 10/4
முகத்தினும் கண்ணினும் முண்டக முலையினும் – கல்லாடம்:2 63/27
முண்டக முலையின் சாந்து அழித்து அமை தோள் – கல்லாடம்:2 87/8

மேல்

முண்டகத்து (1)

எரி அலர் முண்டகத்து அடவி திக்கு எறிய – கல்லாடம்:2 54/26

மேல்

முண்டகம் (8)

முண்டகம் அலர்த்தும் முதிரா சேவடி – கல்லாடம்:2 10/24
முண்டகம் மலர்த்தி முருகு அவிழ் இரு தாள் – கல்லாடம்:2 12/19
முண்டகம் மலர்த்தி மாந்தளிர் மூடி – கல்லாடம்:2 33/9
குவளை பாசடை முண்டகம் உழக்கி – கல்லாடம்:2 37/18
முண்டகம் விளர்த்தி முதிராது அலர்ந்தும் – கல்லாடம்:2 60/25
குறும் புதல் முண்டகம் கரும்பு என துய்த்து – கல்லாடம்:2 63/14
முதிரா நாள் செய் முண்டகம் மலர்ந்து – கல்லாடம்:2 86/11
முள் தாள் மறுத்த முண்டகம் தலை அமைத்து – கல்லாடம்:2 91/14

மேல்

முத்தம் (2)

தெறித்திடு முத்தம் திரட்டு வைப்பினளே – கல்லாடம்:2 51/20
கண்ணொடு முத்தம் கலுழ்ந்து உடல் கலங்கி – கல்லாடம்:2 65/5

மேல்

முத்தமிழ் (2)

முத்தமிழ் நான்மறை முளைத்தருள் வாக்கால் – கல்லாடம்:2 45/16
முத்தமிழ் கூடல் முதல்வன் பொன் தாள் – கல்லாடம்:2 75/21

மேல்

முத்தமிழும் (1)

திரு முத்தமிழும் பெருகு தென்மலையத்து – கல்லாடம்:2 81/28

மேல்

முத்தமும் (1)

ஆற்றாது உடலமும் இமைக்குறும் முத்தமும்
விளர்த்துநின்று அணங்கி வளை குலம் முழங்கும் – கல்லாடம்:2 75/14,15

மேல்

முத்தழல் (1)

நான்மறை தாபதர் முத்தழல் களம் புக்கு – கல்லாடம்:2 90/8

மேல்

முத்தழற்கு (1)

முத்தழற்கு உடையோன் முக்கண் கடவுள் என்று – கல்லாடம்:2 60/12

மேல்

முத்திரைக்கு (1)

எடுத்து துள்ளிய இன முத்திரைக்கு
மங்கல பாணி மாத்திரை நான்குடன் – கல்லாடம்:2 99/13,14

மேல்

முத்து (4)

முத்து மணி கிடக்கும் செறி இருள் அரங்காய் – கல்லாடம்:2 23/21
வெண் முத்து அரும்பி பசும்பொன் மலர்ந்து – கல்லாடம்:2 34/17
ஈங்கு இது காண்க முத்து எழில் நகை கொடியே – கல்லாடம்:2 69/35
மரு வளர் குவளை மலர்ந்து முத்து அரும்பி – கல்லாடம்:2 77/1

மேல்

முத்தொழில் (1)

முத்தொழில் தேவரும் முருங்க உள் உறுத்தும் – கல்லாடம்:2 84/4

மேல்

முதல் (31)

படைப்பு முதல் மாய வான் முதல் கூடி – கல்லாடம்:1 2/45
படைப்பு முதல் மாய வான் முதல் கூடி – கல்லாடம்:1 2/45
இறையோன் பொருட்கு பரணர் முதல் கேட்ப – கல்லாடம்:1 2/53
மணி வேல் குமரன் முதல் நிலை வாழும் – கல்லாடம்:2 6/40
அவை முதல் ஆகி இருவினை கெடுக்கும் – கல்லாடம்:2 11/23
முதல் கவி பாடிய முக்கண் பெருமான் – கல்லாடம்:2 13/23
பனை கிடந்து அன்ன உடல் முதல் துணிய – கல்லாடம்:2 15/18
தென்கீழ்த்திசையோன் ஆக்கிய தனி முதல்
திரு மா மதுரை எனும் திரு பொன்_தொடி – கல்லாடம்:2 31/10,11
முதல் எண் கிளவியும் விதமுடன் நிரையே – கல்லாடம்:2 38/21
குருகு அணி செறித்த தனி முதல் நாயகன் – கல்லாடம்:2 45/22
ஆலவாய் பொதிந்த மதி_முடி தனி முதல்
சே கொள் முளரி அலர்த்திய திருவடி – கல்லாடம்:2 46/10,11
நீங்கா பவ தொகை நிகழ் முதல் நான்கும் – கல்லாடம்:2 53/13
அறம் முதல் நான்கும் பெற அருள்செய்த – கல்லாடம்:2 53/17
புண்ணியம் இவை முதல் வெள் உடல் கொடுக்கும் – கல்லாடம்:2 57/15
முன் ஒரு நாளில் முதல் தொழில் இரண்டினர் – கல்லாடம்:2 58/16
கரு உயிர்த்து எடுத்த குடி முதல் அன்னை – கல்லாடம்:2 62/4
குறுமுனி தேறவும் பெறு முதல் புலவர்கள் – கல்லாடம்:2 63/20
முன் தவம் பெருக்கும் முதல் தாபதர்க்கும் – கல்லாடம்:2 63/23
குறுமுனி பெறும் மறை நெடு மறை பெறா முதல்
குஞ்சர கோதையும் குறமகள் பேதையும் – கல்லாடம்:2 73/8,9
அதற்கு அருள் கொடுத்த முதல் பெரு நாயகன் – கல்லாடம்:2 75/17
பார் முதல் படைத்தவன் நடு தலை அறுத்து – கல்லாடம்:2 77/8
உவர் முதல் கிடந்த சுவை ஏழ் அமைத்து – கல்லாடம்:2 81/19
வான் முதல் ஈன்ற மலைமகள்-தன்னொடும் – கல்லாடம்:2 86/25
மு தொழிலில் தன் முதல் தொழில் ஆக்கி – கல்லாடம்:2 87/33
வழி முதல் தெய்வதம் வரைந்து மற்று அதற்கு – கல்லாடம்:2 93/2
பரு காடு உறுத்தி பலி முதல் பராவ – கல்லாடம்:2 93/3
இவை முதல் மணக்க எழுந்த கார் கண்டை – கல்லாடம்:2 94/30
முதல் இசை செவ்வழி விதிபெற பாடி அ – கல்லாடம்:2 95/18
முதல் தொழில் பதுமன் முன்னா அவ்வுழி – கல்லாடம்:2 99/3
முதல் ஏழ் அதனை ஒன்றினுக்கு ஏழ் என – கல்லாடம்:2 99/34
முது நகர் கூடலுள் மூவா தனி முதல்
ஏழிசை முதலில் ஆயிரம் கிளைத்த – கல்லாடம்:2 100/10,11

மேல்

முதல்வன் (1)

முத்தமிழ் கூடல் முதல்வன் பொன் தாள் – கல்லாடம்:2 75/21

மேல்

முதல்வனை (1)

முக்கண் கடவுள் முதல்வனை வணங்கார் – கல்லாடம்:2 38/27

மேல்

முதலா (2)

வேதியன் முதலா அமரரும் அரசனும் – கல்லாடம்:2 25/13
நான்முகன் முதலா மூவரும் போற்ற – கல்லாடம்:2 82/30

மேல்

முதலாம் (2)

நெடியோன் முதலாம் தேவர் கூடி – கல்லாடம்:2 19/12
நாரணன் முதலாம் தேவர் படை தோற்ற – கல்லாடம்:2 95/9

மேல்

முதலில் (1)

ஏழிசை முதலில் ஆயிரம் கிளைத்த – கல்லாடம்:2 100/11

மேல்

முதலோர் (1)

உருப்பசி முதலோர் முன்வாழ்த்து எடுப்ப – கல்லாடம்:2 30/19

மேல்

முதியவன் (1)

திருமலர் இருந்த முதியவன் போல – கல்லாடம்:2 72/1

மேல்

முதியோள் (4)

வேல்மகன் குறத்தி மா மதி முதியோள்
தொண்டகம் துவைப்ப முருகியம் கறங்க – கல்லாடம்:2 7/11,12
அணங்காட்டு முதியோள் முறம் கொள் நெல் எடுக்க – கல்லாடம்:2 16/24
மனவு அணி முதியோள் வரை அணங்கு அயர்ந்து – கல்லாடம்:2 24/7
நரை தலை முதியோள் இடித்து அடு கூலிகொண்டு – கல்லாடம்:2 47/24

மேல்

முதிர் (9)

முதிர் புயல் குளிறும் எழு மலை புக்க – கல்லாடம்:2 8/3
அரி முதிர் அமரர்க்கு அரசன் ஆகியும் – கல்லாடம்:2 9/8
முதிர் கனி மூலம் முனி கணம் மறுப்ப – கல்லாடம்:2 38/12
மால் கழித்து அடுத்த நரை முதிர் தாடி செய் – கல்லாடம்:2 57/9
கொலை முதிர் கடமான் முதிர் முகம் படர்ந்து – கல்லாடம்:2 81/3
கொலை முதிர் கடமான் முதிர் முகம் படர்ந்து – கல்லாடம்:2 81/3
வெறி முதிர் செம்மல் முறி முகம் கொடுக்கும் – கல்லாடம்:2 81/40
முதிர் திரை அடிக்கும் பரிதி அம் தோழம் – கல்லாடம்:2 89/23
புதவு தொட்டு என தன் புயல் முதிர் கரத்தினை – கல்லாடம்:2 100/5

மேல்

முதிரா (2)

முண்டகம் அலர்த்தும் முதிரா சேவடி – கல்லாடம்:2 10/24
முதிரா நாள் செய் முண்டகம் மலர்ந்து – கல்லாடம்:2 86/11

மேல்

முதிராது (1)

முண்டகம் விளர்த்தி முதிராது அலர்ந்தும் – கல்லாடம்:2 60/25

மேல்

முது (2)

அலை நீர் பழன முது நகர் கூடல் – கல்லாடம்:2 45/25
முது நகர் கூடலுள் மூவா தனி முதல் – கல்லாடம்:2 100/10

மேல்

முதுக்குறை (2)

சேர மறுக முதுக்குறை உறுத்தி – கல்லாடம்:2 29/7
முதுக்குறை பெண்டிர் வரத்து இயல் குறிப்ப – கல்லாடம்:2 93/1

மேல்

முதுக்கொள (1)

முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த – கல்லாடம்:2 59/31

மேல்

முதுகில் (1)

ஓ அற போகிய சிறை விரி முதுகில்
புவனம் காண பொருளொடு பொலிந்தோய் – கல்லாடம்:1 2/24,25

மேல்

முதுகு (6)

பொதிய பொருப்பும் நெடு முதுகு வருந்தி – கல்லாடம்:2 17/18
தவள மாடத்து அகல் முதுகு பற்றி – கல்லாடம்:2 19/22
கமம் சூல் கொண்மூ முதுகு குடியிருந்து – கல்லாடம்:2 28/19
மிடைந்து வயல் திரிந்து முதுகு சரிந்து உடைந்து – கல்லாடம்:2 54/33
மணி நிற படாம் முதுகு இடையற பூத்து – கல்லாடம்:2 63/4
மலை முதுகு அன்ன குலை முகடு ஏறி – கல்லாடம்:2 74/20

மேல்

முதுநீர் (1)

மலை கொடு மலைந்த முதுநீர் வெள்ளமும் – கல்லாடம்:2 54/32

மேல்

முந்திய (1)

முந்திய நூலில் மொழிந்தன குற்றமும் – கல்லாடம்:2 98/26

மேல்

முந்துறும் (1)

முந்துறும் பெரு மறை முளைத்து அருள் வாக்கால் – கல்லாடம்:2 3/12

மேல்

முந்நான்கு (1)

முந்நான்கு அங்குலி முழு உடல் சுற்றும் – கல்லாடம்:2 82/12

மேல்

முயங்கிய (1)

முயங்கிய உள்ளம் போகி – கல்லாடம்:2 72/32

மேல்

முயங்கியும் (1)

மு கணில் அருள் கண் முறைபெற முயங்கியும்
படி இது என்னா அடி முடி கண்டும் – கல்லாடம்:2 13/4,5

மேல்

முயல் (5)

முயல் எனும் வண்டு உண அமுத நறவு ஒழுக்கி – கல்லாடம்:2 21/9
ஒற்றை ஆழியன் முயல் உடல் தண்_சுடர் – கல்லாடம்:2 30/14
வியர் அமுது அரும்பி முயல் கண் கறுத்து – கல்லாடம்:2 49/1
நிறைமதி வட்டத்து முயல் உரி விசித்து – கல்லாடம்:2 82/22
நுண் பதம் தண் தேன் விளங்கனி முயல் தசை – கல்லாடம்:2 96/19

மேல்

முயலின் (1)

முயலின் சோரி சிந்துரம் குன்றி – கல்லாடம்:2 98/32

மேல்

முயன்று (1)

முரன்று எழு காநம் முயன்று வாது இயைந்த – கல்லாடம்:2 43/24

மேல்

முரசம் (1)

இரும் திண் போர்வை பிணி விசி முரசம்
முன்னம் எள்ளினர் நெஞ்சு கெட துவைப்ப – கல்லாடம்:2 18/14,15

மேல்

முரசு (1)

முழக்காது தழங்கும் மா முரசு ஆகி – கல்லாடம்:2 23/17

மேல்

முரண் (4)

முலை என இரண்டு முரண் குவடு மரீஇ – கல்லாடம்:1 2/35
அடு படை பூழியன் கடு முரண் பற்றி – கல்லாடம்:2 20/32
வெள்ள முரண் அரக்கர் கள்ள மதில் மூன்றும் – கல்லாடம்:2 25/17
கடு முரண் குடிக்கும் நெடு வில் கூட்டி – கல்லாடம்:2 25/19

மேல்

முரணே (1)

திருகல் முரணே செம்மண் இறுகல் – கல்லாடம்:2 98/22

மேல்

முரம்பு (2)

கனல் தலை பழுத்த திரள் பரல் முரம்பு
வயல் வளை கக்கிய மணி நிரை பரப்பே – கல்லாடம்:2 59/6,7
தழல் தலை பழுத்த பரல் முரம்பு அடுத்தனை – கல்லாடம்:2 69/14

மேல்

முரல் (1)

சாதகம் முரல் குரல் வாய் மடை திறப்ப – கல்லாடம்:2 94/17

மேல்

முரல (1)

கீசக பேரியாழ் கிளையுடன் முரல
நிறைமதி வட்டத்து முயல் உரி விசித்து – கல்லாடம்:2 82/21,22

மேல்

முரலும் (1)

சூல் வயிறு உளைந்து வளை கிடந்து முரலும்
புன்னை அம் பொதும்பரில் தம்முடை நெஞ்சமும் – கல்லாடம்:2 21/15,16

மேல்

முரற்றி (1)

வண்டும் தேனும் மருள் கிளை முரற்றி
உடைந்து உமிழ் நறவு உண்டு உறங்கு தார் கொன்றையன் – கல்லாடம்:2 41/40,41

மேல்

முரற்றிய (1)

வண்டு கிளை முரற்றிய பாசிலை துளவும் – கல்லாடம்:2 41/16

மேல்

முரற்றியும் (1)

கூவிளம் கண்ணியில் குல கிளை முரற்றியும்
வெண்கூதளத்தில் விளரி நின்று இசைத்தும் – கல்லாடம்:2 54/3,4

மேல்

முரற்றும் (1)

வான் உட்க முரற்றும் மலை சுனை குடைந்தும் – கல்லாடம்:2 28/20

மேல்

முரன்று (1)

முரன்று எழு காநம் முயன்று வாது இயைந்த – கல்லாடம்:2 43/24

மேல்

முரிந்து (1)

புகை முரிந்து எழுந்து என விண்ணத்து அலமர – கல்லாடம்:2 7/19

மேல்

முரியவும் (1)

விண் உடைத்து அரற்றவும் திசை உட்க முரியவும்
தாமரை அக-வயின் சே இதழ் வாட்டிய – கல்லாடம்:2 78/20,21

மேல்

முருக (1)

முருக நாற பருகுதல்செய்க – கல்லாடம்:2 16/22

மேல்

முருகியம் (2)

தொண்டகம் துவைப்ப முருகியம் கறங்க – கல்லாடம்:2 7/12
பிணிதர விசித்த முருகியம் துவைக்க – கல்லாடம்:2 16/25

மேல்

முருகு (2)

முண்டகம் மலர்த்தி முருகு அவிழ் இரு தாள் – கல்லாடம்:2 12/19
முல்லையும் மௌவலும் முருகு உயிர்த்து அவிழ – கல்லாடம்:2 38/7

மேல்

முருங்க (1)

முத்தொழில் தேவரும் முருங்க உள் உறுத்தும் – கல்லாடம்:2 84/4

மேல்

முருந்து (2)

முருந்து நிரைத்த திருந்து பல் தோன்றாது – கல்லாடம்:2 5/24
முருந்து எயிற்று இளம்பிறை கோலம் – கல்லாடம்:2 42/33

மேல்

முல்லை (5)

முல்லை யாழொடு சுருதி வண்டு அலம்ப – கல்லாடம்:2 14/15
முல்லை அம் திருமகள் கோபம் வாய் மலர்ந்து – கல்லாடம்:2 14/18
நல் அறம் பூத்த முல்லை அம் திருவினள் – கல்லாடம்:2 50/32
முல்லை அம் படர் கொடி நீங்கி பிடவ – கல்லாடம்:2 84/16
காயா கண்கொள முல்லை எயிறு உறழ – கல்லாடம்:2 94/14

மேல்

முல்லையில் (1)

புறப்படு பொதுவுடன் முல்லையில் கூட்டி – கல்லாடம்:2 100/20

மேல்

முல்லையும் (2)

முல்லையும் மௌவலும் முருகு உயிர்த்து அவிழ – கல்லாடம்:2 38/7
தாளியும் கொன்றையும் தழைத்தலின் முல்லையும்
பாந்தளும் தரக்கும் பயில்தலின் குறிஞ்சியும் – கல்லாடம்:2 64/15,16

மேல்

முலை (28)

முலை என இரண்டு முரண் குவடு மரீஇ – கல்லாடம்:1 2/35
அறிவின் தங்கி அறு தாய் முலை உண்டு – கல்லாடம்:1 2/40
சொல்லினர் தோம் என துணை முலை பெருத்தன – கல்லாடம்:2 1/17
வடுத்து எழு கொலை முலை பொடித்தன அன்றே – கல்லாடம்:2 5/30
சிற்றிடை பெரு முலை பொன் தொடி மடந்தை தன் – கல்லாடம்:2 6/21
பொடித்து அரும்பாத சின் முலை கொடி மடந்தையள் – கல்லாடம்:2 7/1
வடி விழி சிற்றிடை பெரு முலை மடவீர் – கல்லாடம்:2 10/1
விரி தலை தோல் முலை வெள் வாய் எயிற்றியர்க்கு – கல்லாடம்:2 12/3
முலை மூன்று அணைந்த சிலை நுதல் திருவினை – கல்லாடம்:2 12/12
இடை வளி போகாது நெருங்கு முலை கொடிச்சியர் – கல்லாடம்:2 22/19
அண்ணாந்த வன முலை சுண்ணமும் அளறும் – கல்லாடம்:2 26/20
மு முலை ஒருத்தியை மணந்து உலகு ஆண்ட – கல்லாடம்:2 30/20
என் உயிர் அடைத்த பொன் முலை செப்பின் – கல்லாடம்:2 31/12
வளர் முலை இன்பு எனின் மறித்து நோக்கு-மதி – கல்லாடம்:2 31/15
முலை என சொல் என வர வர வைத்து – கல்லாடம்:2 33/6
தழல் விழி பேழ் வாய் தரக்கின் துளி முலை
பைம் கண் புல்வாய் பால் உண கண்ட – கல்லாடம்:2 40/19,20
அண்ணாந்து எடுத்த அணிவுறு வன முலை
அவன் கழல் சொல்லுநர் அருவினை மானும் – கல்லாடம்:2 41/43,44
மலை முலை பகை அட மாழ்குறும் நுசுப்பு – கல்லாடம்:2 41/45
முலை குவட்டு ஒழுக்கிய அருவி தண் தரளம் – கல்லாடம்:2 44/9
அணிபெறு முலை மேல் கோதையும் ஒடுங்கின – கல்லாடம்:2 45/6
அருப்பு முலை கண் திறந்து உமிழ் மது பால் – கல்லாடம்:2 46/3
நீயே எழு நிலை மாடத்து இள முலை மகளிர் – கல்லாடம்:2 51/17
பெரு முலை மூழ்க என் உளத்தினில் தொடா முன் – கல்லாடம்:2 53/9
முழுக்கியும் தபுத்தியும் முலை ஒளி நோக்கியும் – கல்லாடம்:2 54/16
நரம்பு எடுத்து உமிழும் பெரு முலை தீம் பாற்கு – கல்லாடம்:2 56/19
இணை முலை நன்னர் இழந்தன அது போல் – கல்லாடம்:2 78/27
பொம்மல் அம் கதிர் முலை புணர்வுறும்-கொல் என – கல்லாடம்:2 88/13
நெட்டு உகிர் கரும் கால் தோல் முலை பெரும் பேய் – கல்லாடம்:2 88/15

மேல்

முலை-முகம் (2)

முண்டக முகையின் முலை-முகம் தரு-மின் – கல்லாடம்:2 10/4
நெட்டுயிர்ப்பு எறிய முலை-முகம் நெருக்கியும் – கல்லாடம்:2 48/19

மேல்

முலையவட்கே (1)

கண்ணிய சுணங்கின் பெரு முலையவட்கே – கல்லாடம்:2 25/46

மேல்

முலையாட்டியும் (1)

உந்தி ஒழுக்கு ஏந்திய வன முலையாட்டியும்
வரை பொரும் மருமத்து ஒரு திறன் நீயும் – கல்லாடம்:2 27/9,10

மேல்

முலையின் (1)

முண்டக முலையின் சாந்து அழித்து அமை தோள் – கல்லாடம்:2 87/8

மேல்

முலையினும் (1)

முகத்தினும் கண்ணினும் முண்டக முலையினும்
சொல்லினும் தொடக்கும் புல்லம் போல – கல்லாடம்:2 63/27,28

மேல்

முலையும் (1)

நெடும் கயல் விழியும் நிறை மலை முலையும்
மாசற படைத்து மணியுடன் நிறத்த – கல்லாடம்:2 65/28,29

மேல்

முலையோள் (1)

அணந்து எடுத்து ஏந்திய அரும்பு முகிழ் முலையோள்
மதி நுதல் பெருமதி மலர் முகத்து ஒருத்தியை – கல்லாடம்:2 54/12,13

மேல்

முலையோளே (1)

கொடி புரை நுசுப்பின் பெரு முலையோளே – கல்லாடம்:2 24/36

மேல்

முழக்கமும் (1)

அருவி ஓசையும் முழவின் முழக்கமும்
வலம்புரி சத்தமும் வெருகின் புணர்ச்சியும் – கல்லாடம்:2 21/52,53

மேல்

முழக்கமொடு (1)

முழக்கமொடு வளைத்த அமர் களம் ஆகி – கல்லாடம்:2 23/27

மேல்

முழக்காது (1)

முழக்காது தழங்கும் மா முரசு ஆகி – கல்லாடம்:2 23/17

மேல்

முழக்கி (2)

நீயே ஆயமொடு ஆர்ப்ப அரிகிணை முழக்கி
மாயா நல் அறம் வளர் நாட்டினையே – கல்லாடம்:2 51/13,14
முழக்கி மெய் கவரும் முக கொலை ஞாளி – கல்லாடம்:2 83/25

மேல்

முழக்கும் (1)

கிடையில் தாபதர் தொடை மறை முழக்கும்
பொங்கர் கிடந்த சூல் கார் குளிறலும் – கல்லாடம்:2 39/10,11

மேல்

முழங்க (1)

முழங்க பெரும் குரல் கூஉய் – கல்லாடம்:2 17/57

மேல்

முழங்கி (1)

விண் திரிந்து முழங்கி வீழாதாக – கல்லாடம்:2 37/3

மேல்

முழங்கும் (2)

பெரு மறை முழங்கும் திரு நகர் கூடல் – கல்லாடம்:2 52/25
விளர்த்துநின்று அணங்கி வளை குலம் முழங்கும்
கரும் கடல் பொரிய ஒருங்கு வேல் விடுத்த – கல்லாடம்:2 75/15,16

மேல்

முழம் (1)

மெய் அணி அளறா கை முழம் தேய்த்த – கல்லாடம்:2 55/18

மேல்

முழவம் (2)

தடா உடல் உம்பர் தலைபெறும் முழவம்
நான் முகம் தட்டி நடு முகம் உரப்ப – கல்லாடம்:2 8/15,16
முகன் ஐந்து மணத்த முழவம் துவைக்க – கல்லாடம்:2 85/20

மேல்

முழவின் (1)

அருவி ஓசையும் முழவின் முழக்கமும் – கல்லாடம்:2 21/52

மேல்

முழவு (1)

முகில் முழவு அதிர ஏழிசை முகக்கும் – கல்லாடம்:2 14/14

மேல்

முழு (2)

முந்நான்கு அங்குலி முழு உடல் சுற்றும் – கல்லாடம்:2 82/12
முன் ஒரு நாளில் முழு கதி அடைந்த – கல்லாடம்:2 99/39

மேல்

முழுக்கியும் (1)

முழுக்கியும் தபுத்தியும் முலை ஒளி நோக்கியும் – கல்லாடம்:2 54/16

மேல்

முழுது (5)

வழுதி ஆகி முழுது உலகு அளிக்கும் – கல்லாடம்:2 2/13
படி முழுது அளந்த நெடியோன் ஆகியும் – கல்லாடம்:2 11/16
முழுது உற நிறைந்த பொருள் மனம் நிறுத்தி முன் – கல்லாடம்:2 66/13
முழுது உணர் ஞானம் எல்லாம் உடைமை – கல்லாடம்:2 86/26
முழுது அனுக்கிரகம் கெழு பரம் அநாதி – கல்லாடம்:2 86/27

மேல்

முழுதும் (2)

முழுதும் நிறைந்த முக்கண் பெருமான் – கல்லாடம்:2 10/16
தலை இருந்து அரும் கதி முழுதும் நின்று அளிக்கும் – கல்லாடம்:2 87/35

மேல்

முழுதுற (1)

முழுதுற நிறைந்த இரு பதம் புகழார் – கல்லாடம்:2 59/34

மேல்

முழுமதி (3)

எழு மதி குறைத்த முழுமதி கரும் கயல் – கல்லாடம்:2 18/17
அமுதம் பொடித்த முழுமதி என்ன – கல்லாடம்:2 45/12
முழுமதி உடு கணம் அக-வயின் விழுங்கி – கல்லாடம்:2 74/21

மேல்

முழை (4)

அருவி ஏற்றும் முழை மலை கூஉயும் – கல்லாடம்:2 22/36
முழை வாய் அரக்கர் பாடு கிடந்து ஒத்த – கல்லாடம்:2 27/11
ஆற்றாது பெரு முழை வாய் விட்டு கலுழ்ந்து என – கல்லாடம்:2 28/18
முசுக்கலை பிணவுடன் முழை உறை அடங்க – கல்லாடம்:2 94/15

மேல்

முள் (15)

முள் உடை கோட்டு முனை எறி சுறவம் – கல்லாடம்:2 11/9
பனி சிறுமைகொள்ளா முள் அரை முளரி – கல்லாடம்:2 29/20
முள் தாள் செம் மலர் நான் முகத்து ஒருவன் – கல்லாடம்:2 30/10
கைதை முள் செறிந்த கூர் எயிற்று அரவினை – கல்லாடம்:2 33/16
முள் உடை பேழ் வாய் செம் கண் வரால் இனம் – கல்லாடம்:2 37/16
கீழ் அரும்பு அணைந்த முள் அரை முளரி – கல்லாடம்:2 43/10
கண்டல் முள் முளைத்த கடி எயிற்று அரவ – கல்லாடம்:2 55/2
இணை எயிறு என்ன இடையிடை முள் பயில் – கல்லாடம்:2 63/13
முட வெண் தாழை ஊழ்த்த முள் மலரும் – கல்லாடம்:2 67/4
முள் எயிற்று அரவம் முறித்து உயிர் பருகி – கல்லாடம்:2 71/7
அரவு எயிற்று அணி முள் கைதையுள் அடங்கியும் – கல்லாடம்:2 72/28
அரவு எயிறு அணைத்த முள் இலை முட கைதைகள் – கல்லாடம்:2 82/40
மஞ்சு அடை கிளைத்த வரி குறு முள் தாள் – கல்லாடம்:2 89/5
கிளை முள் செறிந்த வேலி அம் படப்பை – கல்லாடம்:2 90/17
முள் தாள் மறுத்த முண்டகம் தலை அமைத்து – கல்லாடம்:2 91/14

மேல்

முளரி (7)

பனி சிறுமைகொள்ளா முள் அரை முளரி
வண்டொடு மலர்ந்த வண்ணம் போல – கல்லாடம்:2 29/20,21
முளரி நிறை செம்மகள் முன்னி ஆடுக – கல்லாடம்:2 39/4
கீழ் அரும்பு அணைந்த முள் அரை முளரி
இதழ் கதவு அடைத்து மலர் கண் துயில – கல்லாடம்:2 43/10,11
சே கொள் முளரி அலர்த்திய திருவடி – கல்லாடம்:2 46/11
முளரி அம் கோயில் தளைவிட வந்து – கல்லாடம்:2 50/31
முளரி நீர் புகுத்திய பத மலர் தாள் துணை – கல்லாடம்:2 89/11
பாசடை மறைத்து எழு முளரி அம் கயத்துள் – கல்லாடம்:2 90/10

மேல்

முளரியில் (1)

பூம் பணை திரிந்து பொதி அவிழ் முளரியில்
காம்பு பொதி நறவம் விளரியோடு அருந்தி – கல்லாடம்:2 17/28,29

மேல்

முளரியின் (1)

மது பொழி முளரியின் மாழ்கின என்றால் – கல்லாடம்:2 79/18

மேல்

முளரியும் (1)

சே இதழ் முளரியும் கார் இதழ் குவளையும் – கல்லாடம்:2 6/32

மேல்

முளியம் (1)

முளியம் தறிந்த கணைகொள் வாய் திரிகல் – கல்லாடம்:2 24/13

மேல்

முளைத்த (9)

திரு நுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில் – கல்லாடம்:2 4/2
கொலை நுதி எயிறு என்று இரு பிறை முளைத்த
புகர்_முக புழை கை ஒருவிசை தடிந்தும் – கல்லாடம்:2 13/11,12
அன்றியும் விடிமீன் முளைத்த தரளம் – கல்லாடம்:2 17/12
வால் பெற முளைத்த கூன் கோடானும் – கல்லாடம்:2 19/4
விளைக்கும் காலம் முளைத்த காலை – கல்லாடம்:2 20/16
திருக்குளம் முளைத்த கண் தாமரை கொடு – கல்லாடம்:2 31/9
உயர் மரம் முளைத்த ஊரி போல – கல்லாடம்:2 37/6
கண்டல் முள் முளைத்த கடி எயிற்று அரவ – கல்லாடம்:2 55/2
வேதம் முளைத்த ஏதம்_இல் வாக்கால் – கல்லாடம்:2 98/11

மேல்

முளைத்தருள் (1)

முத்தமிழ் நான்மறை முளைத்தருள் வாக்கால் – கல்லாடம்:2 45/16

மேல்

முளைத்து (2)

முந்துறும் பெரு மறை முளைத்து அருள் வாக்கால் – கல்லாடம்:2 3/12
வயிற்றில் இருந்து வாய் முளைத்து என்ன – கல்லாடம்:2 17/50

மேல்

முளையா (1)

முளையா வென்றி இவள் முகம் மதிக்கே – கல்லாடம்:2 60/29

மேல்

முளையிட்டு (1)

செங்கோல் முளையிட்டு அருள் நீர் தேக்கி – கல்லாடம்:2 37/11

மேல்

முளைவரும் (1)

முளைவரும் பகனும் அதனிடை மேகமும் – கல்லாடம்:2 6/31

மேல்

முற்றி (3)

வேதியர் நிதி மிக விதி மகம் முற்றி
அவ் விரத துறையாடுதல் கெழுமி – கல்லாடம்:2 69/8,9
ஒன்னலர் முற்றி ஒருங்குபு படர – கல்லாடம்:2 94/37
முனி தழல் செல்வம் முற்றி பழம் கல் – கல்லாடம்:2 95/26

மேல்

முற்றிய (3)

ஒருங்கு வந்து இமையா அரும் கடன் முற்றிய
பின்னர் நின்று எற்ற கைத்தாயையும் பிழைக்குக – கல்லாடம்:2 7/13,14
முற்றிய பெரு நறவு எண்ணுடன் குடித்து – கல்லாடம்:2 24/11
நின் பெறு தவத்தினை முற்றிய யானும் – கல்லாடம்:2 39/5

மேல்

முறம் (1)

அணங்காட்டு முதியோள் முறம் கொள் நெல் எடுக்க – கல்லாடம்:2 16/24

மேல்

முறி (1)

வெறி முதிர் செம்மல் முறி முகம் கொடுக்கும் – கல்லாடம்:2 81/40

மேல்

முறிக்கலை (1)

முறிக்கலை சுருக்கு கரம் பெறு முனிவர் – கல்லாடம்:1 1/15

மேல்

முறித்த (1)

அவன் பகை முறித்த அருள் பெரும் கடவுள் – கல்லாடம்:2 49/16

மேல்

முறித்தல் (1)

பற்றி நின்று அடர்த்தல் உள் கையின் முறித்தல்
ஆநநத்து ஒட்டல் அணி மயில் புரோகம் – கல்லாடம்:2 49/11,12

மேல்

முறித்திட்டும் (1)

முட உடல் கைதை மடல் முறித்திட்டும்
கவை துகிர் பாவை கண்ணி சூட்ட – கல்லாடம்:2 9/25,26

மேல்

முறித்து (2)

ஒரு மதி முறித்து ஆண்டு இரு கவுள் செருகிய – கல்லாடம்:2 16/31
முள் எயிற்று அரவம் முறித்து உயிர் பருகி – கல்லாடம்:2 71/7

மேல்

முறிய (1)

சிறியோன் செரு என முறிய போகி – கல்லாடம்:2 54/34

மேல்

முறை (8)

மு முறை சுழன்று தாயர் உள் மகிழ – கல்லாடம்:2 18/25
கனை கதிர் திருகி கல் சேர்ந்து முறை புக – கல்லாடம்:2 38/2
செங்கோல் அரசன் முறை தொழில் போல – கல்லாடம்:2 45/7
பெரு மறை நூல் பெறு கோன் முறை புரக்கும் – கல்லாடம்:2 51/1
கிடை முறை எடுக்கும் மறை ஒலி கேள்-மதி – கல்லாடம்:2 69/22
முன்னவன் கூடல் முறை வணங்கார் என – கல்லாடம்:2 82/35
மோக புயங்க முறை துறை தூக்கி – கல்லாடம்:2 99/27
கிளையில் காட்டி ஐ முறை கிளத்தி – கல்லாடம்:2 100/14

மேல்

முறைபெற (1)

மு கணில் அருள் கண் முறைபெற முயங்கியும் – கல்லாடம்:2 13/4

மேல்

முறைமுறை (2)

காலம் கோடா முறைமுறை தோற்ற – கல்லாடம்:2 23/12
மறையவன் குண்டம் முறைமுறை வாய்ப்ப – கல்லாடம்:2 95/12

மேல்

முறையர் (1)

இறையவன் குலத்து முறையர் இன்மையினால் – கல்லாடம்:2 55/16

மேல்

முறையே (1)

ஊடி முறையே எமக்கு உள மண் கருதி – கல்லாடம்:2 93/21

மேல்

முன் (31)

காளி முன் காவல் காட்டிவைத்து ஏகும் – கல்லாடம்:2 7/25
புண்ணியம் தழைத்த முன் ஓர் நாளில் – கல்லாடம்:2 8/10
பெரும் கவின் முன் நாள் பேணிய அரும் தவம் – கல்லாடம்:2 10/9
வள்ளுவன்-தனக்கு வளர் கவி புலவர் முன்
முதல் கவி பாடிய முக்கண் பெருமான் – கல்லாடம்:2 13/22,23
எள்ளினர் உட்க வள் இனம் மடக்கி முன்
தோன்றினர் ஆதலின் நீயே மட மகள் – கல்லாடம்:2 14/23,24
முன் ஒரு காலத்து அடு கொலைக்கு அணைந்த – கல்லாடம்:2 14/25
வைத்து அமையா முன் மகிழ்ந்து உணவு உண்டு அவன் – கல்லாடம்:2 14/34
ஒரு கால் முன் வைத்து இரு கால் வளைப்ப – கல்லாடம்:2 25/25
முன் புகு விதியின் என்பு குரல் பூண்டு – கல்லாடம்:2 26/16
முன் ஒரு நாளில் நால் படை உடன்று – கல்லாடம்:2 32/6
முன் கண்டு ஓதாது அவர்க்கு நம் குருகே – கல்லாடம்:2 43/36
முன் ஒரு வணிகன் மகப்பேறு இன்மையின் – கல்லாடம்:2 44/14
வீதி கூறி விதித்த முன் வரத்தால் – கல்லாடம்:2 45/17
பெரு முலை மூழ்க என் உளத்தினில் தொடா முன்
வீழ் சுற்று ஒழுக்கிய பராரை திரு வட – கல்லாடம்:2 53/9,10
முன் ஒரு நாளில் முதல் தொழில் இரண்டினர் – கல்லாடம்:2 58/16
முன் தவம் பெருக்கும் முதல் தாபதர்க்கும் – கல்லாடம்:2 63/23
முழுது உற நிறைந்த பொருள் மனம் நிறுத்தி முன்
வேடம் துறவா விதி உடை சாக்கியன் – கல்லாடம்:2 66/13,14
அமரர்கள் முனி கணத்தவை முன் தவறு – கல்லாடம்:2 69/23
முன் ஒருநாளில் உடல் உயிர் நீ என – கல்லாடம்:2 70/11
மருவலர் அடைந்த முன் மறம் கெழு மதிலே – கல்லாடம்:2 74/29
இரு சுடர் ஒரு சுடர் புணர் விழி ஆக்கி முன்
விதியவன் தாரா உடலொடு நிலைத்த – கல்லாடம்:2 75/19,20
முன் இடைக்காடன் பின் எழ நடந்து – கல்லாடம்:2 76/9
திரை கடல் தெய்வம் முன் தெளி சூள் வாங்கியும் – கல்லாடம்:2 79/21
போக்கு அரும் கடும் சுரம் போக முன் இறந்தும் – கல்லாடம்:2 79/23
கிளர்ந்து அயர்வாட்கு முன் கிளர் வினை சென்றோர் – கல்லாடம்:2 84/14
முன் உறின் அவள் மனம் ஆங்கே – கல்லாடம்:2 86/37
தனது முன் புன்மொழி நீள தந்தும் – கல்லாடம்:2 89/19
கண்படுத்து இரவி கீறும் முன்
எண்பட நும் பதி ஏகுதல் கடனே – கல்லாடம்:2 96/27,28
முன் துடி மணியில் ஒற்றிய பாணியை – கல்லாடம்:2 99/36
முன் ஒரு நாளில் முழு கதி அடைந்த – கல்லாடம்:2 99/39
நின்று முன் இட்ட நிறை அணி பொறுத்து – கல்லாடம்:2 99/54

மேல்

முன்கை (1)

வரி வளை முன்கை வரவர இறப்ப – கல்லாடம்:2 14/20

மேல்

முன்கையில் (1)

தோகையும் சூலமும் தோளில் முன்கையில்
மருங்கில் கரத்தினில் வாடாது இருத்தி – கல்லாடம்:2 88/28,29

மேல்

முன்பவை (1)

பின்புற நேடின முன்பவை அன்றி – கல்லாடம்:2 20/43

மேல்

முன்பின் (1)

முன்பின் ஈன்ற பேழ் வாய் புலியினை – கல்லாடம்:2 33/15

மேல்

முன்வாழ்த்து (1)

உருப்பசி முதலோர் முன்வாழ்த்து எடுப்ப – கல்லாடம்:2 30/19

மேல்

முன்றில் (6)

நெடுவேள் கடவுள் மயில் கொடி முன்றில்
பெரும் கிளை கூண்டு வெட்சி மலர் பரப்பி – கல்லாடம்:2 24/3,4
பக்கம் சூழ்ந்த நெடு நகர் முன்றில்
கோடு அகழ்ந்து எடுத்த மறி நீர் காலும் – கல்லாடம்:2 47/8,9
முன்றில் அம் பெண்ணை குடம்பை கொள் அன்றிலும் – கல்லாடம்:2 50/24
முன்றிலும் எம்முடை முன்றில் ஆக – கல்லாடம்:2 80/27
தொகை இருள் கொல்லும் முன்றில் பக்கத்து – கல்லாடம்:2 83/22
மணி ஒளிர் முன்றில் ஒருபுடை நிலை நின்று – கல்லாடம்:2 89/15

மேல்

முன்றிலின் (1)

வானுற நிமிர்ந்த மலை தலை முன்றிலின்
மனவு அணி மடந்தை வெறியாட்டாளன் – கல்லாடம்:2 7/9,10

மேல்

முன்றிலும் (1)

முன்றிலும் எம்முடை முன்றில் ஆக – கல்லாடம்:2 80/27

மேல்

முன்னம் (2)

முன்னம் எள்ளினர் நெஞ்சு கெட துவைப்ப – கல்லாடம்:2 18/15
முன்னம் கண்டவன் அன்று என்று – கல்லாடம்:2 81/53

மேல்

முன்னர் (1)

பகுத்து உண்டு ஈகுநர் நிலை திரு முன்னர்
இல் எனும் தீ சொல் இறுத்தனர் தோமும் – கல்லாடம்:2 75/23,24

மேல்

முன்னவன் (3)

முன்னவன் கூடல் மூதூர் அன்ன – கல்லாடம்:2 32/10
முன்னவன் கூடல் முறை வணங்கார் என – கல்லாடம்:2 82/35
விடையோன் அருச்சனைக்கு உரிமையின் முன்னவன்
அன்னவன்-தன்னுடன் கடிகை ஏழ் அமர – கல்லாடம்:2 95/3,4

மேல்

முன்னா (1)

முதல் தொழில் பதுமன் முன்னா அவ்வுழி – கல்லாடம்:2 99/3

மேல்

முன்னி (3)

முன்னி ஆடுக முன்னி ஆடுக – கல்லாடம்:2 39/1
முன்னி ஆடுக முன்னி ஆடுக – கல்லாடம்:2 39/1
முளரி நிறை செம்மகள் முன்னி ஆடுக – கல்லாடம்:2 39/4

மேல்

முன்னும் (1)

முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த – கல்லாடம்:2 59/31

மேல்

முன்னுறும் (1)

முன்னுறும் உழு-வயின் பன்னிரு வருடம் – கல்லாடம்:2 93/16

மேல்

முன்னை (1)

கால குறி-கொல் அன்றியும் முன்னை
தியங்கி உடல் ஈட்டிய கரும் கடு வினையால் – கல்லாடம்:2 70/15,16

மேல்

முன்னையள் (3)

முன்னையள் அல்லள் முன்னையள் அல்லள் – கல்லாடம்:2 98/47
முன்னையள் அல்லள் முன்னையள் அல்லள் – கல்லாடம்:2 98/47
பெரும் தோள் சிறுநகை முன்னையள் அல்லள் – கல்லாடம்:2 98/49

மேல்

முன்னையின் (1)

முன்னையின் புனைந்தும் முகமன் அளித்தும் – கல்லாடம்:2 13/17

மேல்

முனி (5)

முதிர் கனி மூலம் முனி கணம் மறுப்ப – கல்லாடம்:2 38/12
அணுகாது அகற்றி பணி முனி நால்வர்க்கு – கல்லாடம்:2 53/16
அமரர்கள் முனி கணத்தவை முன் தவறு – கல்லாடம்:2 69/23
உடல் முனி செருவினர் உடல் வழி நடப்ப – கல்லாடம்:2 95/8
முனி தழல் செல்வம் முற்றி பழம் கல் – கல்லாடம்:2 95/26

மேல்

முனி-பால் (1)

அரும் தவ கண்ணினோடு அடைந்த மா முனி-பால்
பேர் இருள் மாயை பெண் மகவு இரக்க – கல்லாடம்:2 81/17,18

மேல்

முனிக்கும் (1)

திரை கடல் குடித்த கரத்த மா முனிக்கும்
திங்கள் வாழ் குலம் தங்கும் வேந்தற்கும் – கல்லாடம்:2 17/14,15

மேல்

முனியும் (1)

கண்ணனும் காவலும் முனியும் பசுவும் – கல்லாடம்:2 58/12

மேல்

முனிவர் (7)

முறிக்கலை சுருக்கு கரம் பெறு முனிவர்
விழி விடும் எரியும் சாப வாய் நெருப்பும் – கல்லாடம்:1 1/15,16
மூன்று அழல் நான் மறை முனிவர் தோய்ந்து – கல்லாடம்:2 9/9
முனிவர் ஏமுற வெள்ளி அம் பொதுவில் – கல்லாடம்:2 18/7
முனிவர் செம் கரம் சென்னி ஆக – கல்லாடம்:2 30/18
மூரி வீழ்ந்த நெறி சடை முனிவர்
சருக்கம் காட்டும் அரு மறை சொல்லி – கல்லாடம்:2 33/11,12
தேவர் கண் பனிப்ப முனிவர் வாய் குழற – கல்லாடம்:2 34/8
முனிவர் அஞ்சலியுடன் முகமன் இயம்ப – கல்லாடம்:2 82/31

மேல்

முனிவர்க்கு (1)

நாடு இரு முனிவர்க்கு ஆடிய பெருமான் – கல்லாடம்:2 8/29

மேல்

முனிவர்கள் (1)

ஏழு முனிவர்கள் தாழும் மாதவர் – கல்லாடம்:2 21/38

மேல்

முனிவரும் (1)

முனிவரும் தேவரும் கர மலர் முகிழ்ப்ப – கல்லாடம்:2 87/29

மேல்

முனிவன் (1)

ஐம்பகை அடக்கிய அரும் தவ முனிவன்
இரந்தன வரத்தால் ஒரு சடை இருத்திய – கல்லாடம்:2 57/24,25

மேல்

முனிவனும் (2)

கனை கடல் குடித்த முனிவனும் தமிழும் – கல்லாடம்:2 24/22
தில்லை கண்ட புலிக்கால்_முனிவனும் – கல்லாடம்:2 41/5

மேல்

முனிவாக (1)

அண்டம் ஈன்று அளித்த கன்னி முனிவாக
திரு நுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில் – கல்லாடம்:2 4/1,2

மேல்

முனை (5)

முள் உடை கோட்டு முனை எறி சுறவம் – கல்லாடம்:2 11/9
முனைப்பது நோக்கி என் முனை அவிழ் அற்றத்து – கல்லாடம்:2 71/16
செரு படை வேந்தர் முனை மேல் படர்ந்த நம் – கல்லாடம்:2 74/5
காதலர் முனை படை கனன்று உடற்றும் எரியால் – கல்லாடம்:2 74/6
கோடல் ஈன்று கொழு முனை கூம்ப – கல்லாடம்:2 94/3

மேல்

முனைதல் (1)

வாளுடன் நெருக்கல் மார்பொடு முனைதல்
பற்றி நின்று அடர்த்தல் உள் கையின் முறித்தல் – கல்லாடம்:2 49/10,11

மேல்

முனைப்பது (1)

முனைப்பது நோக்கி என் முனை அவிழ் அற்றத்து – கல்லாடம்:2 71/16

மேல்