ப – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்க 1
பக்கத்து 1
பக்கம் 5
பக்கமும் 2
பக 1
பகட்டு 2
பகடு 5
பகல் 4
பகலிடையே 1
பகலே 1
பகழி 1
பகனும் 1
பகு 4
பகுத்த 1
பகுத்து 3
பகுவாம் 1
பகை 13
பகைக்கு 1
பகைத்த 1
பகைத்து 1
பகையினர் 1
பகையினன் 1
பகையுடன் 1
பகையும் 2
பங்கு 4
பங்குசெய்து 1
பச்சிணர் 1
பச்சிறவு 1
பச்சுடம்பும் 1
பச்சை 1
பசந்து 1
பசப்பு 1
பசி 2
பசிப்ப 1
பசியெடுத்து 1
பசு 1
பசுங்கிளி 1
பசும் 16
பசும்_கொடி 4
பசும்_கொடிக்கு 1
பசும்பொன் 1
பசுவும் 1
பஞ்சவன் 3
பஞ்சவனீச்சரம் 1
பஞ்சி 1
பஞ்சின் 1
பஞ்சு 2
பட்ட 1
பட்டடை 2
பட்டாங்கு 1
பட்டு 6
பட்டோர் 1
பட 4
படகம் 1
படப்பை 1
படம் 2
படர் 13
படர்ந்த 5
படர்ந்தது 1
படர்ந்தன 1
படர்ந்தனன் 1
படர்ந்து 6
படர்ந்தும் 1
படர 4
படராது 1
படரினும் 1
படரும் 4
படலிடம் 1
படாம் 2
படாஅ 1
படி 3
படிந்த 2
படிந்து 5
படியே 1
படிறர் 1
படிறு 2
படு 3
படுத்த 3
படும் 4
படை 16
படைக்க 2
படைக்கும் 1
படைக்குவன் 1
படைத்த 5
படைத்தவன் 1
படைத்து 4
படைப்பு 1
படையாது 1
படையால் 2
படையினை 1
படையுடன் 1
பண் 1
பண்டம் 1
பண்டையின் 1
பண்ணை 2
பண்புடன் 1
பண்பும் 1
பணாடவி 3
பணி 5
பணி_பகை 1
பணிக்கு 1
பணிகுவல் 1
பணித்த 1
பணிவர 1
பணிவாய் 1
பணை 2
பணைத்து 2
பத்தர் 1
பத்தினன் 1
பத்து 2
பத்துடை 1
பத்துடை_நூறு 1
பத்தும் 1
பத 3
பதஞ்சலி 1
பதத்த 1
பதம் 12
பதமும் 1
பதன் 1
பதி 17
பதித்த 1
பதித்து 4
பதியகத்து 1
பதியகம் 1
பதியினும் 1
பதியே 1
பதியோன் 2
பதின்மூன்று 1
பதினாயிரம் 1
பதினாறு 1
பதினான்கு 1
பதினெண் 1
பதுக்கைசெய் 1
பதும் 2
பதுமன் 2
பந்தர் 2
பந்தரின் 1
பந்து 2
பந்தும் 1
பயக்கும் 1
பயந்த 3
பயந்தருள் 1
பயந்தாங்கு 1
பயந்து 1
பயந்தோன் 1
பயவாது 1
பயன் 7
பயனாம் 1
பயனுழி 1
பயிர் 1
பயில் 1
பயில்தலின் 1
பயிலா 1
பயிலுதலானும் 1
பயிற்றி 2
பயிற்றிய 1
பயிற்றியும் 1
பயின்ற 1
பயின்றும் 1
பர 1
பரக்கும் 1
பரங்குன்றத்து 1
பரங்குன்றம் 5
பரங்குன்றமும் 1
பரங்குன்று 4
பரணர் 1
பரதவர் 2
பரதவன் 1
பரந்த 6
பரந்தது 1
பரந்தன 1
பரந்து 3
பரப்ப 2
பரப்பி 13
பரப்பிய 3
பரப்பில் 1
பரப்பின் 2
பரப்பினதானும் 1
பரப்பு 2
பரப்பும் 5
பரப்பே 1
பரப்பை 1
பரம் 1
பரல் 2
பரவ 1
பரவி 2
பரவு-மின் 1
பரவை 2
பரவையும் 1
பராய 2
பராரை 4
பராவ 1
பரி 4
பரித்தலும் 1
பரிதி 2
பரிதியின் 1
பரிதியும் 1
பரிந்த 1
பரிந்து 5
பரிந்தும் 1
பரிபுர 1
பரிபெறு 1
பரிய 1
பரியுநர் 1
பரியும் 1
பரியோன் 1
பரு 1
பருக 1
பருகவும் 1
பருகாத 1
பருகி 2
பருகிய 2
பருகுதல்செய்க 1
பருகுநர் 1
பருதி 1
பருந்து 3
பருந்தும் 2
பரும் 1
பரூஉ 1
பல் 20
பல்லவம் 1
பல 17
பலமாய் 1
பலர் 1
பலரே 1
பலவும் 1
பலி 4
பவ 2
பவம் 2
பவள 4
பவளம் 1
பழ 5
பழங்கண் 3
பழங்கண்கொண்டால் 1
பழங்கண்கொள்ள 1
பழம் 5
பழமும் 1
பழமை 1
பழவினை 1
பழன 6
பழனத்து 2
பழனம் 1
பழி 8
பழித்த 4
பழித்து 2
பழிநாட்டவளே 1
பழிநாட்டு 1
பழியும் 1
பழுத்த 3
பழுதறு 1
பழுது 2
பழுது_இல் 1
பழுமரம் 2
பள்ளி 2
பள்ளியறை 1
பள்ளியின் 1
பள்ளியும் 1
பளிங்க 1
பளிங்கு 2
பற்பல 1
பற்றலர் 1
பற்றி 8
பறந்து 1
பறந்தும் 2
பறவை 5
பறவையும் 2
பறித்த 1
பறித்து 3
பறிபட்டு 1
பறை 6
பறையும் 1
பறைவர 1
பன் 1
பன்மை 1
பன்றியும் 2
பன்னத்து 1
பன்னிய 1
பன்னிரண்டினை 1
பன்னிரண்டும் 1
பன்னிரு 2
பன்னு 1
பனி 5
பனிக்கதிர் 1
பனிக்கும் 2
பனிசெய்யும் 1
பனித்தும் 1
பனிப்ப 4
பனிப்பினும் 1
பனிப்புற 1
பனிமலை 2
பனியா 1
பனுவல் 1
பனை 3
பனைக்குடி 1
பனையும் 1

பக்க (1)

பாக பக்க நெடியோன் உறையுளும் – கல்லாடம்:2 41/27

மேல்

பக்கத்து (1)

தொகை இருள் கொல்லும் முன்றில் பக்கத்து
இணை முக பறை அறை கடிப்பு உடை தோகை – கல்லாடம்:2 83/22,23

மேல்

பக்கம் (5)

இடப்பால் நிறுத்தி பக்கம் சூழ – கல்லாடம்:2 18/31
குல வாழ்த்து விம்ம மண அணி பக்கம்
கண் புலம் கொண்ட இ பணி அளவும் – கல்லாடம்:2 18/33,34
அமுதொடு கிடக்கும் நிறைமதி பக்கம்
ஒருபால் கிடந்த துணை மதி ஆகி – கல்லாடம்:2 22/12,13
பக்கம் சூழ்ந்த நெடு நகர் முன்றில் – கல்லாடம்:2 47/8
பக்கம் சூழுநர் குரங்கம் மண் பட – கல்லாடம்:2 93/5

மேல்

பக்கமும் (2)

கடைக்கால் மடியும் பொங்கர் பக்கமும்
ஊடி ஆடுநர் திரையொடு பிணங்கி – கல்லாடம்:2 41/32,33
திரு நுதல் கண்ணும் மலைமகள் பக்கமும்
எரி மழு நவ்வியும் பெறும் அருள் திருவுருவு – கல்லாடம்:2 87/24,25

மேல்

பக (1)

குருகு பெயர் குன்றத்து உடல் பக எறிந்த – கல்லாடம்:2 24/2

மேல்

பகட்டு (2)

எழிலி வான் சுழல பிளிறு குரல் பகட்டு இனம் – கல்லாடம்:2 26/21
பகட்டு இனம் கொல்லும் பழிநாட்டவளே – கல்லாடம்:2 51/16

மேல்

பகடு (5)

பண் கால் உழவர் பகடு பிடர் பூண்ட – கல்லாடம்:2 27/24
வல்லியை பரியும் பகடு விடு குரலும் – கல்லாடம்:2 39/12
வலி அழி பகடு வாய் நீர் செந்நாய் – கல்லாடம்:2 59/18
செம் கண் பகடு தங்கும் வயல் ஊரர்க்கு – கல்லாடம்:2 63/15
தென் திசை கோமகன் பகடு பொலிந்து அன்ன – கல்லாடம்:2 96/3

மேல்

பகல் (4)

பகல் இரவு ஒடுங்கா விடு வளி ஆக – கல்லாடம்:2 20/31
பகல் வலிக்கு ஒதுங்கிய தோற்றம் போல – கல்லாடம்:2 32/2
நிலவு பகல் கான்ற புண்ணிய அருள் பொடி – கல்லாடம்:2 40/1
நெடும் பகல் ஊழி நினைவுடன் நீந்தினும் – கல்லாடம்:2 66/24

மேல்

பகலிடையே (1)

பெரும் பகலிடையே பொதும்பரில் பிரிந்த – கல்லாடம்:2 71/17

மேல்

பகலே (1)

வரும் தொழில் அனைத்தும் வளர் பெரும் பகலே
எரி விரிந்து அன்ன இதழ் பல் தாமரை – கல்லாடம்:2 64/22,23

மேல்

பகழி (1)

பகழி செய் கம்மியர் உள்ளம் போல – கல்லாடம்:2 98/52

மேல்

பகனும் (1)

முளைவரும் பகனும் அதனிடை மேகமும் – கல்லாடம்:2 6/31

மேல்

பகு (4)

பகு வாய் பாம்பு முடங்கல் ஆக – கல்லாடம்:2 46/9
விடம் கொதித்து உமிழும் படம் கெழு பகு வாய் – கல்லாடம்:2 55/1
கரும் கவை தீ நா பெரும் பொறி பகு வாய் – கல்லாடம்:2 60/5
பாசுடல் பகு வாய் பீழை அம் தவளையும் – கல்லாடம்:2 87/20

மேல்

பகுத்த (1)

நான்முகத்தவர்க்கும் இரு பால் பகுத்த
ஒரு நுதல் கண்ணவன் உறைதரு கூடல் – கல்லாடம்:2 95/39,40

மேல்

பகுத்து (3)

மருந்து பகுத்து உண்டு வல் உயிர் தாங்கும் – கல்லாடம்:2 40/12
பகுத்து உண்டு ஈகுநர் நிலை திரு முன்னர் – கல்லாடம்:2 75/23
பகுத்து உயிர்க்கு இன்பம் தொகுத்த மெய் துறவினன் – கல்லாடம்:2 89/10

மேல்

பகுவாம் (1)

எண் திகழ் பகுவாம் இன மணி பாந்தள் – கல்லாடம்:2 23/32

மேல்

பகை (13)

சென்னி வாரண கொடும் பகை ஆகி – கல்லாடம்:1 2/28
பொருத்தலும் பிரித்தலும் பொரு பகை காட்டலும் – கல்லாடம்:2 3/2
ஒரு தொழிற்கு இரு பகை தீராது வளர்த்தலும் – கல்லாடம்:2 3/4
மறுபுலத்து இடு பகை வேந்து அடக்கியது என – கல்லாடம்:2 5/29
ஆயிரம் தழல் கரத்து இருள்_பகை மண்டிலத்து – கல்லாடம்:2 13/9
சூர் பகை உலகில் தோன்றினர்க்கு அழகு – கல்லாடம்:2 22/3
மலை முலை பகை அட மாழ்குறும் நுசுப்பு – கல்லாடம்:2 41/45
இசை விதி பாடிய இசை_பகை துரந்த – கல்லாடம்:2 43/33
அவன் பகை முறித்த அருள் பெரும் கடவுள் – கல்லாடம்:2 49/16
பகை தவிர் பாம்பும் நகை பெறும் எருக்கமும் – கல்லாடம்:2 58/32
பணி_பகை ஊர்தி அருள் கொடி இரண்டுடன் – கல்லாடம்:2 59/30
இரு புல வேந்தர் மறுபுல பெரும் பகை
நீர் வடு பொருவ நிறுத்திட படரினும் – கல்லாடம்:2 61/19,20
ஆக்கிய பனி பகை கூற்று இவை நிற்க – கல்லாடம்:2 76/23

மேல்

பகைக்கு (1)

நுசுப்பின் பகைக்கு நூபுரம் அரற்ற – கல்லாடம்:2 28/28

மேல்

பகைத்த (1)

வில்லுடன் பகைத்த செம் திரு_நுதலே – கல்லாடம்:2 22/55

மேல்

பகைத்து (1)

மலை உறை பகைத்து வான் உறைக்கு அணக்கும் – கல்லாடம்:2 51/10

மேல்

பகையினர் (1)

நட்டு பகையினர் உட்குடி போல – கல்லாடம்:2 14/42

மேல்

பகையினன் (1)

உறை சூர் பகையினன் பெறு திரு வயிற்றினள் – கல்லாடம்:2 79/13

மேல்

பகையுடன் (1)

பகையுடன் கிடந்த நிலைபிரி வழக்கினை – கல்லாடம்:2 3/1

மேல்

பகையும் (2)

யாவர்-தம் பகையும் யாவையின் பகையும் – கல்லாடம்:2 41/22
யாவர்-தம் பகையும் யாவையின் பகையும்
வளனில் காத்து வருவன அருளும் – கல்லாடம்:2 41/22,23

மேல்

பங்கு (4)

கூறு இரண்டு ஆய ஒரு பங்கு எழுந்து – கல்லாடம்:1 2/17
போழ்பட கிடந்த ஒரு பங்கு எழுந்து – கல்லாடம்:1 2/26
பங்கு உடை செம் கால் பாட்டு அளி அரி பிடர் – கல்லாடம்:2 18/2
விதி நிறை தவறா ஒரு பங்கு உடைமையும் – கல்லாடம்:2 66/21

மேல்

பங்குசெய்து (1)

ஐந்தினில் பங்குசெய்து இன்பு வளர் குடியும் – கல்லாடம்:2 100/8

மேல்

பச்சிணர் (1)

பால் முக களவின் குறும் காய் பச்சிணர்
புள் கால் பாட்டினர்க்கு உறையுள் கொடுத்த – கல்லாடம்:2 43/14,15

மேல்

பச்சிறவு (1)

ஊடு உகள் சிரலை பச்சிறவு அருந்தும் – கல்லாடம்:2 93/14

மேல்

பச்சுடம்பும் (1)

பவள வாயும் கிளர் பச்சுடம்பும்
நெடும் கயல் விழியும் நிறை மலை முலையும் – கல்லாடம்:2 65/27,28

மேல்

பச்சை (1)

பாடல் சால் பச்சை கோடக காற்றை – கல்லாடம்:2 17/48

மேல்

பசந்து (1)

மண் உடல் பசந்து கறுத்தது விண்ணமும் – கல்லாடம்:2 71/25

மேல்

பசப்பு (1)

துன்பு பசப்பு ஊரும் கண் நிழல்-தன்னை – கல்லாடம்:2 20/8

மேல்

பசி (2)

ஆசையின் தணியா அழல் பசி தணிக்க – கல்லாடம்:2 7/24
பசி மயல் பிணித்த பிள்ளை வண்டு அரற்ற – கல்லாடம்:2 46/1

மேல்

பசிப்ப (1)

பனிக்கதிர் உண்ண சகோரம் பசிப்ப
உடை நறவு உண்டு வருடை வெறுப்ப – கல்லாடம்:2 94/19,20

மேல்

பசியெடுத்து (1)

உவட்டாது அணையாது உணர்வு எனும் பசியெடுத்து
உள்ளமும் செவியும் உருகி நின்று உண்ணும் – கல்லாடம்:2 65/17,18

மேல்

பசு (1)

பேர் அன்பு உருவ பசு காவலனை – கல்லாடம்:2 55/19

மேல்

பசுங்கிளி (1)

கரும் தலை சாரிகை செவ் வாய் பசுங்கிளி
தூவி அம் தோகை வெள் ஓதிமம் தொடர் உழை – கல்லாடம்:2 7/15,16

மேல்

பசும் (16)

ஒருபால் பசும்_கொடி நிறை பாட்டு அயர – கல்லாடம்:2 7/32
பற்றி உட்புகுந்து பசும் கடல் கண்டு – கல்லாடம்:2 8/5
பசும் தழை பரப்பி கண மயில் ஆல – கல்லாடம்:2 14/17
ஒருபால் பசும்_கொடி திரு நுதல் பொடித்த – கல்லாடம்:2 16/4
அடங்க படர்ந்த பசும்_கொடி அதனை – கல்லாடம்:2 17/42
செம் மணி கிடந்த நும் பசும் புனத்து உளறி – கல்லாடம்:2 32/12
பசும் தாள் சே கொள் ஆம்பல் மலர – கல்லாடம்:2 38/17
ஒற்றை அம் பசும் கழை ஒல்கிய போல – கல்லாடம்:2 69/26
பசும் தழை தோகையும் செம் சிறை சேவலும் – கல்லாடம்:2 73/4
பசும் தாள் தோன்றி மலர் நனி மறித்து – கல்லாடம்:2 77/2
இன்ப பசும்_கொடி இட பால் படர – கல்லாடம்:2 82/33
அரவ பசும் தலை அரும்பு அவிழ் கணை கால் – கல்லாடம்:2 82/36
பசும் பிறை அமுதொடு நிரம்பியது என்ன – கல்லாடம்:2 85/34
பசும் கடல் வளைந்து பருக கொதித்த – கல்லாடம்:2 86/16
உலகு உயிர் மகவு உடை பசும்_கொடிக்கு ஒரு பால் – கல்லாடம்:2 89/9
பசும் தாள் புல் இதழ் கரும் தாள் ஆம்பல் – கல்லாடம்:2 95/20

மேல்

பசும்_கொடி (4)

ஒருபால் பசும்_கொடி நிறை பாட்டு அயர – கல்லாடம்:2 7/32
ஒருபால் பசும்_கொடி திரு நுதல் பொடித்த – கல்லாடம்:2 16/4
அடங்க படர்ந்த பசும்_கொடி அதனை – கல்லாடம்:2 17/42
இன்ப பசும்_கொடி இட பால் படர – கல்லாடம்:2 82/33

மேல்

பசும்_கொடிக்கு (1)

உலகு உயிர் மகவு உடை பசும்_கொடிக்கு ஒரு பால் – கல்லாடம்:2 89/9

மேல்

பசும்பொன் (1)

வெண் முத்து அரும்பி பசும்பொன் மலர்ந்து – கல்லாடம்:2 34/17

மேல்

பசுவும் (1)

கண்ணனும் காவலும் முனியும் பசுவும்
ஒன்றினும் தவறா ஒழுங்கு இயைந்தன போல் – கல்லாடம்:2 58/12,13

மேல்

பஞ்சவன் (3)

பஞ்சவன் நிறைந்த அன்புடன் வேண்ட – கல்லாடம்:2 23/34
படை நான்கு உடன்று பஞ்சவன் துரந்து – கல்லாடம்:2 55/12
மண் திரு வேட்டு பஞ்சவன் பொருத – கல்லாடம்:2 80/11

மேல்

பஞ்சவனீச்சரம் (1)

பஞ்சவனீச்சரம் அஞ்செழுத்து அமைத்த – கல்லாடம்:2 59/24

மேல்

பஞ்சி (1)

சே இதழ் இலவத்து உடை காய் பஞ்சி
புகை முரிந்து எழுந்து என விண்ணத்து அலமர – கல்லாடம்:2 7/18,19

மேல்

பஞ்சின் (1)

பஞ்சின் மெல் அடி பாவை கூறு ஆகி – கல்லாடம்:2 39/7

மேல்

பஞ்சு (2)

பஞ்சு எழ பிழிந்து தண் புனல் பருகி – கல்லாடம்:2 67/17
வேலி அம் குறும் சூல் விளை காய் பஞ்சு இனம் – கல்லாடம்:2 88/1

மேல்

பட்ட (1)

இட்ட வெம் கொடும் சிறை பட்ட கார் குலம் – கல்லாடம்:2 20/33

மேல்

பட்டடை (2)

பட்டடை எடுக்க புலிதம் பரப்பி – கல்லாடம்:2 99/17
பட்டடை எடுத்து பாலையில் கொளுவி – கல்லாடம்:2 100/13

மேல்

பட்டாங்கு (1)

பள்ளி கணக்கர்-பால் பட்டாங்கு
குறிஞ்சி பெரும் தேன் இறாலொடு சிதைத்து – கல்லாடம்:2 25/5,6

மேல்

பட்டு (6)

வேயுள் அம் பட்டு பூவை கண் கறுக்க – கல்லாடம்:2 20/5
மானிட மாக்கள் அரக்கி கை பட்டு என – கல்லாடம்:2 42/7
பட்டு உலர் கள்ளி நெற்று உடை வாகை – கல்லாடம்:2 59/20
பாசிழை பட்டு நூல் கழி பரப்பிய – கல்லாடம்:2 81/36
பெரு வெள்ளிடையில் சிறுகால் பட்டு என – கல்லாடம்:2 88/2
பட்டு உலர் கள்ளியம்-பால் துயில்கொள்ளும் – கல்லாடம்:2 88/25

மேல்

பட்டோர் (1)

கண் எனும் தெய்வ காட்சியுள் பட்டோர்
வெண்_பொடி எருக்கம் என்பு பனை கிழியினை – கல்லாடம்:2 33/26,27

மேல்

பட (4)

ஏழ் உயர் வானம் பூழி பட கருக்கி – கல்லாடம்:2 25/28
உடல் புலவு மாற்றும் பட திரை வையை – கல்லாடம்:2 26/25
புனம் பட எறிந்த கார் அகில் தூமமும் – கல்லாடம்:2 50/19
பக்கம் சூழுநர் குரங்கம் மண் பட
பெற்று உயிர்த்த அரும் பொன் தொடி மடந்தை-தன் – கல்லாடம்:2 93/5,6

மேல்

படகம் (1)

பெரு வாய் ஒரு முக படகம் பெருக்க – கல்லாடம்:2 8/14

மேல்

படப்பை (1)

கிளை முள் செறிந்த வேலி அம் படப்பை
படர் காய்க்கு அணைந்த புன் கூழை அம் குறுநரி – கல்லாடம்:2 90/17,18

மேல்

படம் (2)

மண் சிறுக விரித்த மணி படம் தூக்கி – கல்லாடம்:1 2/20
விடம் கொதித்து உமிழும் படம் கெழு பகு வாய் – கல்லாடம்:2 55/1

மேல்

படர் (13)

ஒரு கால் சுமந்த விண் படர் பந்தரின் – கல்லாடம்:2 14/2
கொலை களவு என்னும் படர் களை கட்டு – கல்லாடம்:2 37/12
திக்கு படர் ஆணை வேலி கோலி – கல்லாடம்:2 37/13
பாகல் கோட்டில் படர் கறி வணக்கி – கல்லாடம்:2 39/19
கடல் மா கொன்ற தீ படர் நெடு வேல் – கல்லாடம்:2 41/10
அதர் விரிந்து எழுந்து படர் புகை நீழல் – கல்லாடம்:2 59/8
படர் மலை ஏழும் குருகு அமர் பொருப்பும் – கல்லாடம்:2 61/7
இடைநிலை அற்ற படர் பெரு வெளியகத்து – கல்லாடம்:2 78/7
முல்லை அம் படர் கொடி நீங்கி பிடவ – கல்லாடம்:2 84/16
புனமும் எம் உயிரும் படர் கரி தடிந்தும் – கல்லாடம்:2 85/10
பாசடை கரும் கழி படர் மணல் உலகமும் – கல்லாடம்:2 86/1
நிலம் படர் தோகை குலம் கொள் சேதாவும் – கல்லாடம்:2 87/22
படர் காய்க்கு அணைந்த புன் கூழை அம் குறுநரி – கல்லாடம்:2 90/18

மேல்

படர்ந்த (5)

பைம் கொடி வள்ளி படர்ந்த புய மலையோய் – கல்லாடம்:1 2/38
அடங்க படர்ந்த பசும்_கொடி அதனை – கல்லாடம்:2 17/42
திக்கு நிலை படர்ந்த முகில் பாசடையும் – கல்லாடம்:2 21/2
புயல் கார் பாசடை எண்பட படர்ந்த
வெள்ள பெரு நதி கொள்ளை முகம் வைத்து – கல்லாடம்:2 27/1,2
செரு படை வேந்தர் முனை மேல் படர்ந்த நம் – கல்லாடம்:2 74/5

மேல்

படர்ந்தது (1)

ஒருவழி படர்ந்தது என் அ திரு முகம் – கல்லாடம்:2 57/20

மேல்

படர்ந்தன (1)

பத மலர் மண் மிசை பற்றி படர்ந்தன
அமுதம் பொடித்த முழுமதி என்ன – கல்லாடம்:2 45/11,12

மேல்

படர்ந்தனன் (1)

தேம் படர்ந்தனன் எனின் திசை குறிக்குநரால் – கல்லாடம்:2 71/37

மேல்

படர்ந்து (6)

ஊழி தீ படர்ந்து உடற்றுபு சிகையும் – கல்லாடம்:1 1/13
சூல தலையின் தொடர்ந்து சிகை படர்ந்து
விடு தழல் உச்சம் படு கதிர் தாக்க – கல்லாடம்:2 17/46,47
ஆயிரம் எடுத்து வான் வழி படர்ந்து
மண் ஏழ் உருவி மறிய பாயும் – கல்லாடம்:2 57/21,22
படர்ந்து எறி கங்கை விடும் குளிர் அகற்றும் – கல்லாடம்:2 59/4
கொலை முதிர் கடமான் முதிர் முகம் படர்ந்து
கொழும் சினை மிடைந்து குளிரொடு பொதுளிய – கல்லாடம்:2 81/3,4
துணையும் இளவலும் தொடர கான் படர்ந்து
மா குகன் நதி விட ஊக்கி வனத்து – கல்லாடம்:2 95/30,31

மேல்

படர்ந்தும் (1)

குளிர் மணல் கேணியுள் கொம்பினர் படர்ந்தும்
முயங்கிய உள்ளம் போகி – கல்லாடம்:2 72/31,32

மேல்

படர (4)

நாரணன் படர தேவர் கெட்டு ஓட – கல்லாடம்:2 51/26
இன்ப பசும்_கொடி இட பால் படர
வெள்ளி அம் குன்றம் விளங்க வீற்றிருந்த – கல்லாடம்:2 82/33,34
அமர் பெற்று ஒன்னலர் அறிவுற படர
பேழ் வாய் இடாகினி கால் தொழுது ஏத்தி – கல்லாடம்:2 88/16,17
ஒன்னலர் முற்றி ஒருங்குபு படர
பாசறை சென்ற நாள் நிலம் குழிய – கல்லாடம்:2 94/37,38

மேல்

படராது (1)

நிலை விட்டு படராது காணியில் நிலைக்க – கல்லாடம்:1 1/17

மேல்

படரினும் (1)

நீர் வடு பொருவ நிறுத்திட படரினும்
ஏழ் உயர் இரட்டி மதலை நட்டு அமைத்த – கல்லாடம்:2 61/20,21

மேல்

படரும் (4)

செம் துகிர் படரும் திரை கடல் புக்கு – கல்லாடம்:1 2/6
வாசம் படரும் மருத்தினும் உறு-மின் – கல்லாடம்:2 10/8
உடலொடு படரும் நிலை நிழல் போல – கல்லாடம்:2 53/12
கோலுடன் படரும் குறுநகை ஒருவி – கல்லாடம்:2 57/11

மேல்

படலிடம் (1)

முடை உடல் அண்டர் படலிடம் புகுத – கல்லாடம்:2 94/12

மேல்

படாம் (2)

விண்ணுற விரித்த கரு முகில் படாம் கொடு – கல்லாடம்:2 29/17
மணி நிற படாம் முதுகு இடையற பூத்து – கல்லாடம்:2 63/4

மேல்

படாஅ (1)

அடாஅ கிளவியும் படாஅ பழியும் – கல்லாடம்:2 89/17

மேல்

படி (3)

படி முழுது அளந்த நெடியோன் ஆகியும் – கல்லாடம்:2 11/16
படி இது என்னா அடி முடி கண்டும் – கல்லாடம்:2 13/5
பறந்தும் அகழ்ந்தும் படி இது என்னாது – கல்லாடம்:2 66/28

மேல்

படிந்த (2)

கங்கையில் படிந்த பொங்கு தவத்தானும் – கல்லாடம்:2 19/31
கந்தி விரி படிந்த மென் சிறை வண்டும் – கல்லாடம்:2 50/22

மேல்

படிந்து (5)

சுரும்பு படிந்து உண்ணும் கழுநீர் போல – கல்லாடம்:2 1/22
மயிலும் கிளியும் குருவியும் படிந்து
நன்றிசெய்குநர் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும் – கல்லாடம்:2 4/11,12
வண்டு இனம் படிந்து மது கவர்ந்து உண்டு – கல்லாடம்:2 51/7
படிந்து சேடு எறியும் செம் கண் கவரியும் – கல்லாடம்:2 54/30
பருகிய முகில் குலம் படிந்து கண்படுத்தும் – கல்லாடம்:2 72/23

மேல்

படியே (1)

காலம் முடிய கணக்கின் படியே
மறலி விடுக்க வந்த தூதுவர் – கல்லாடம்:2 26/7,8

மேல்

படிறர் (1)

படிறர் சொல் என கடு நெஞ்சு இறைப்ப – கல்லாடம்:2 16/6

மேல்

படிறு (2)

ஏகவும் துணிந்தனம் எம் பெரும் படிறு
சிறிது நின்று இயம்ப உழை இனம் கேண்-மின் இன்று – கல்லாடம்:2 4/15,16
படிறு உளம் கமழும் செறிதரு தீ உறழ் – கல்லாடம்:2 97/10

மேல்

படு (3)

தன் படு துயரமும் அடைவு கெட்டு இறத்தலும் – கல்லாடம்:1 2/61
விடு தழல் உச்சம் படு கதிர் தாக்க – கல்லாடம்:2 17/47
மெய் படு கடும் சூள் மின் என துறந்தவர் – கல்லாடம்:2 82/43

மேல்

படுத்த (3)

நெடும் கடல் கலக்கும் ஒரு மீன் படுத்த
நிறை அருள் நாயகன் உறைதரு கூடல் – கல்லாடம்:2 15/28,29
நெடும் கால் பாய்ந்து படுத்த ஒண் தொழில் – கல்லாடம்:2 37/19
பொங்கருள் படுத்த மலர் கால் பொருந்துக – கல்லாடம்:2 69/3

மேல்

படும் (4)

படும் அழல் நீக்க குடகடல் குளிக்கும் – கல்லாடம்:2 17/52
நெடும் கார் கிடந்து படும் புனல் பிழியும் – கல்லாடம்:2 19/23
தலை மதில் வயிற்றுள் படும் அவர் உயிர் கணம் – கல்லாடம்:2 77/18
கன்றிய உடலுள் படும் நனி உயிரே – கல்லாடம்:2 79/27

மேல்

படை (16)

அடு படை பூழியன் கடு முரண் பற்றி – கல்லாடம்:2 20/32
சுறவ வேந்து நெடும் படை செய்ய – கல்லாடம்:2 23/26
முன் ஒரு நாளில் நால் படை உடன்று – கல்லாடம்:2 32/6
நால் படை வன்னியர் ஆக்கிய பெருமான் – கல்லாடம்:2 37/15
நால் படை வேந்தன் பாசறையோர்க்கும் – கல்லாடம்:2 38/33
படை நான்கு உடன்று பஞ்சவன் துரந்து – கல்லாடம்:2 55/12
உழவ கணத்தர் படை வாள் நிறுத்தும் – கல்லாடம்:2 60/20
கால் படை கொடியினன் கருணையொடு அமர்ந்த – கல்லாடம்:2 61/11
மறுபுல வேந்தன் உறு படை எதிர்ந்த – கல்லாடம்:2 64/2
கொடுங்கோல் கொற்றவன் நெடும் படை அனைத்தும் – கல்லாடம்:2 64/3
செரு படை வேந்தர் முனை மேல் படர்ந்த நம் – கல்லாடம்:2 74/5
காதலர் முனை படை கனன்று உடற்றும் எரியால் – கல்லாடம்:2 74/6
கிள்ளியும் கிளையும் கிளர் படை நான்கும் – கல்லாடம்:2 80/12
சோதியின் படை கண் செல உய்த்து அரும்பு செய் – கல்லாடம்:2 87/7
நாரணன் முதலாம் தேவர் படை தோற்ற – கல்லாடம்:2 95/9
குருத்து அயில் பேழ் வாய் பல் படை சீயம் – கல்லாடம்:2 96/5

மேல்

படைக்க (2)

வேதியன் படைக்க மாலவன் காக்க – கல்லாடம்:2 28/4
தமக்கும் படைக்க விதி பேற்று அடியவர் – கல்லாடம்:2 86/35

மேல்

படைக்கும் (1)

என் போல் இ நிலை நின்றவர் படைக்கும்
பேறு ஆங்கு ஒழிக பெரு நாண் கற்பினர் – கல்லாடம்:2 36/12,13

மேல்

படைக்குவன் (1)

பனையும் கிழியும் படைக்குவன் என்றும் – கல்லாடம்:2 85/8

மேல்

படைத்த (5)

அமுதமும் தருவும் பணிவர படைத்த
உடல கண்ணன் உலகு கவர்ந்து உண்ட – கல்லாடம்:2 1/1,2
தன்னால் படைத்த பொன் அணி அண்டம் – கல்லாடம்:2 16/14
அமுதமும் கடுவும் வாளும் படைத்த
மதர் விழி தாமரை மலர்ந்து இமைத்து அமர்ந்தன – கல்லாடம்:2 45/8,9
நின்றன கண்டு நெடும் பயன் படைத்த
திரு அஞ்செழுத்து குறையாது இரட்ட – கல்லாடம்:2 58/24,25
அவர் குறை அன்றால் ஒருவன் படைத்த
கால குறி-கொல் அன்றியும் முன்னை – கல்லாடம்:2 70/14,15

மேல்

படைத்தவன் (1)

பார் முதல் படைத்தவன் நடு தலை அறுத்து – கல்லாடம்:2 77/8

மேல்

படைத்து (4)

தன்னுழை பல உயிர் தனித்தனி படைத்து
பரப்பி காட்டலின் பதுமன் ஆகியும் – கல்லாடம்:2 9/1,2
மாசற படைத்து மணியுடன் நிறத்த – கல்லாடம்:2 65/29
கொலை கொண்டு ஆழி குறி உடன் படைத்து
மறிய புதைத்த மறம் கெழு பெருமான் – கல்லாடம்:2 80/15,16
விதியினும் பன்மை செய் முகம் படைத்து அளவா – கல்லாடம்:2 87/6

மேல்

படைப்பு (1)

படைப்பு முதல் மாய வான் முதல் கூடி – கல்லாடம்:1 2/45

மேல்

படையாது (1)

போக்கு வழி படையாது உள் உயிர் விடுத்தலின் – கல்லாடம்:1 1/27

மேல்

படையால் (2)

கூடற்கு இறையோன் குரை கழல் படையால்
ஈர்_எண் கலையும் பூழிபட்டு உதிர – கல்லாடம்:2 60/21,22
திரை விழி பருந்து இனம் வளை உகிர் படையால்
பார்ப்பு இரை கவர பயன் உறும் உலகில் – கல்லாடம்:2 79/3,4

மேல்

படையினை (1)

புக்க தேவர்கள் பொரு கடல் படையினை
ஆரிய ஊமன் கனவு என ஆக்கிய – கல்லாடம்:2 4/7,8

மேல்

படையுடன் (1)

ஆயிர மணி கரத்து அமைத்த வான் படையுடன்
சயம் பெறு வீரனை தந்து அவன்-தன்னால் – கல்லாடம்:2 4/3,4

மேல்

பண் (1)

பண் கால் உழவர் பகடு பிடர் பூண்ட – கல்லாடம்:2 27/24

மேல்

பண்டம் (1)

காலம் கோடா வரை வளர் பண்டம்
வருவன வாரி வண்டு இனம் தொடர – கல்லாடம்:2 42/21,22

மேல்

பண்டையின் (1)

பழுதறு தெய்வம் காட்ட பண்டையின்
உழுவல் நலத்தால் ஓர் உயிர் என்றும் – கல்லாடம்:2 85/1,2

மேல்

பண்ணை (2)

மருவிய பண்ணை இன்பமொடு விளை நலம் – கல்லாடம்:2 22/53
இனைய பல் நெறி பண்ணை எங்கும் – கல்லாடம்:2 28/32

மேல்

பண்புடன் (1)

தண் நடை கணவன் பண்புடன் புணரும் – கல்லாடம்:2 42/27

மேல்

பண்பும் (1)

இனிமையும் பண்பும் ஈண்டவும் நன்றே – கல்லாடம்:2 42/12

மேல்

பணாடவி (3)

ஆயிரம் பணாடவி அரும் தவத்து ஒருவனும் – கல்லாடம்:2 41/7
ஆயிரம் பணாடவி அரவு வாய் அணைத்து – கல்லாடம்:2 71/1
ஆயிரம் பணாடவி அரவு கடு வாங்க – கல்லாடம்:2 95/6

மேல்

பணி (5)

கண் புலம் கொண்ட இ பணி அளவும் – கல்லாடம்:2 18/34
அணுகாது அகற்றி பணி முனி நால்வர்க்கு – கல்லாடம்:2 53/16
அருகர் சார்ந்து நின்று அரன் பணி அடைப்ப – கல்லாடம்:2 55/14
பணி_பகை ஊர்தி அருள் கொடி இரண்டுடன் – கல்லாடம்:2 59/30
சேறி என்று இசைப்ப செல் பணி தூதினர்க்கு – கல்லாடம்:2 93/22

மேல்

பணி_பகை (1)

பணி_பகை ஊர்தி அருள் கொடி இரண்டுடன் – கல்லாடம்:2 59/30

மேல்

பணிக்கு (1)

வட்டம் கொடுக்கும் இந்திரை பணிக்கு
மாத்திரை ஆறுடன் கும்பம் பதித்து – கல்லாடம்:2 99/21,22

மேல்

பணிகுவல் (1)

எனின் பதம் பணிகுவல் அன்றே நன்கு அமர் – கல்லாடம்:2 65/26

மேல்

பணித்த (1)

இதழ் குவித்து பணித்த குதலையும் தெரியாது – கல்லாடம்:2 5/23

மேல்

பணிவர (1)

அமுதமும் தருவும் பணிவர படைத்த – கல்லாடம்:2 1/1

மேல்

பணிவாய் (1)

பணிவாய் புரிந்து தாமரை_மகளே – கல்லாடம்:2 19/35

மேல்

பணை (2)

பூம் பணை திரிந்து பொதி அவிழ் முளரியில் – கல்லாடம்:2 17/28
கணி பணை கவட்டும் மணல் சுனை புறத்தும் – கல்லாடம்:2 42/4

மேல்

பணைத்து (2)

செய்ததும் அன்றி திரு மனம் பணைத்து
காக்கவும் குரிசில் கருத்துறும் போலும் – கல்லாடம்:2 52/8,9
பணைத்து எழு சாலி நெருக்குபு புகுந்து – கல்லாடம்:2 69/12

மேல்

பத்தர் (1)

நடு உடல் வரிந்த கொடி காய் பத்தர்
சுத்தி அமர் நீறுடன் தோள் வலன் பூண்டு – கல்லாடம்:2 40/3,4

மேல்

பத்தினன் (1)

உழல் தேர் பத்தினன் மகவு என நாறி – கல்லாடம்:2 95/25

மேல்

பத்து (2)

பத்து திசையுள் எட்டு அவை உடைப்ப – கல்லாடம்:2 88/35
ஒன்று பத்து ஆயிரம் நன்று பெற புனைந்தும் – கல்லாடம்:2 89/20

மேல்

பத்துடை (1)

பத்துடை_நூறு பொற்பு அமர் பரப்பும் – கல்லாடம்:2 61/2

மேல்

பத்துடை_நூறு (1)

பத்துடை_நூறு பொற்பு அமர் பரப்பும் – கல்லாடம்:2 61/2

மேல்

பத்தும் (1)

பன்னு சாதரங்க ஒளி குணம் பத்தும்
செம்பஞ்சு அரத்தம் திலகம் உலோத்திரம் – கல்லாடம்:2 98/30,31

மேல்

பத (3)

பத மலர் மண் மிசை பற்றி படர்ந்தன – கல்லாடம்:2 45/11
முளரி நீர் புகுத்திய பத மலர் தாள் துணை – கல்லாடம்:2 89/11
பவளம் தழைத்த பத மலர் சுமந்த நம் – கல்லாடம்:2 91/6

மேல்

பதஞ்சலி (1)

சூயை கைவிட பதஞ்சலி ஆகிய – கல்லாடம்:2 41/6

மேல்

பதத்த (1)

இடம் கொள் ஞாலத்து வலம் கொளும் பதத்த
குண்டு நீர் உடுத்த நெடும் பார் எண்ணமும் – கல்லாடம்:1 1/22,23

மேல்

பதம் (12)

மலர் பதம் நீங்கா உள பெரும் சிலம்ப – கல்லாடம்:2 1/15
இரு பதம் உள் வைத்து இருந்தவர் வினை போல் – கல்லாடம்:2 53/19
பதம் இரண்டு அமைத்த உள்ள – கல்லாடம்:2 58/35
முழுதுற நிறைந்த இரு பதம் புகழார் – கல்லாடம்:2 59/34
எனின் பதம் பணிகுவல் அன்றே நன்கு அமர் – கல்லாடம்:2 65/26
இரு பதம் உள் வைத்தவர் போல – கல்லாடம்:2 67/25
இரு பதம் தேறா இருள் உளம் ஆம் என – கல்லாடம்:2 73/13
பவள சடையோன் பதம் தலை சுமந்த – கல்லாடம்:2 80/21
ஆரிய பதம் கொள் நாரத பேரியாழ் – கல்லாடம்:2 82/10
நுண் பதம் தண் தேன் விளங்கனி முயல் தசை – கல்லாடம்:2 96/19
வீயா விந்தம் பதம் நிரை நாதம் – கல்லாடம்:2 98/8
தூக்கல் வளையுடன் தொடர் பதம் எறிந்து – கல்லாடம்:2 99/5

மேல்

பதமும் (1)

சந்தமும் பதமும் சருக்கமும் அடக்கமும் – கல்லாடம்:2 52/23

மேல்

பதன் (1)

அகில் சுடு பெரும் புனம் உழு பதன் காட்ட – கல்லாடம்:2 94/21

மேல்

பதி (17)

கூடல் அம் பெரும் பதி கூறார் கிளை என – கல்லாடம்:2 3/18
குன்றம் உடுத்த கூடல் அம் பதி இறை – கல்லாடம்:2 8/8
மதுரை அம் பதி நிறை மைம்மலர் களத்தினன் – கல்லாடம்:2 9/19
கூடல் அம் பதி உறை குண பெரும் கடவுள் – கல்லாடம்:2 10/23
அணியும் மா மகிழ்நர் பதி உறை புகுந்தால் – கல்லாடம்:2 17/20
பொன் பதி நீங்கி உண்பதும் அடங்கி – கல்லாடம்:2 17/56
கூடல் அம் பதி அகம் வீடுபெற இருந்தோன் – கல்லாடம்:2 22/51
பேர் அருள் கூடல் பெரும் பதி நிறைந்த – கல்லாடம்:2 38/26
குழகன் குன்ற கூடல் அம் பதி நிறை – கல்லாடம்:2 50/26
பிறந்தவர் பிறவா பெரும் பதி அகத்தும் – கல்லாடம்:2 52/14
நின் பதி மறைந்த நெட்டு இரவகத்துள் – கல்லாடம்:2 68/6
பழன குருநாடு அளி பதி தோற்று – கல்லாடம்:2 93/15
முடித்து தமது முடியா பதி புக – கல்லாடம்:2 93/20
கூடல் பதி வரும் ஆடல் பரியோன் – கல்லாடம்:2 96/13
எண்பட நும் பதி ஏகுதல் கடனே – கல்லாடம்:2 96/28
கூடல் பதி வரும் குண பெரும் குன்றினன் – கல்லாடம்:2 97/17
மதுரை அம் பதி எனும் ஒரு கொடி மடந்தை – கல்லாடம்:2 99/43

மேல்

பதித்த (1)

ஆக்கி இடம் பதித்த வள்ளமும் ஆகி – கல்லாடம்:2 22/18

மேல்

பதித்து (4)

பாணியில் சிரம் பதித்து ஒரு நடை பதித்து – கல்லாடம்:2 99/8
பாணியில் சிரம் பதித்து ஒரு நடை பதித்து
கொடுகொட்டிக்கு குறி அடுத்து எடுக்கும் – கல்லாடம்:2 99/8,9
மாத்திரை ஆறுடன் கும்பம் பதித்து
வலவை இடாகினி மண் இருந்து எடுத்த – கல்லாடம்:2 99/22,23
வீணை பதித்து தானம் தெரிக்க – கல்லாடம்:2 99/35

மேல்

பதியகத்து (1)

திரு நகர் காசி பதியகத்து என்றும் – கல்லாடம்:2 87/36

மேல்

பதியகம் (1)

கூடல் அம் பதியகம் பரவி – கல்லாடம்:2 88/37

மேல்

பதியினும் (1)

பதுக்கைசெய் அம்பல திரு பெரும் பதியினும்
பிறவா பேர் ஊர் பழ நகரிடத்தும் – கல்லாடம்:2 76/14,15

மேல்

பதியே (1)

கண் இவர் கூடல் பெரு வளம் பதியே – கல்லாடம்:2 27/32

மேல்

பதியோன் (2)

குன்று உடுத்து ஓங்கிய கூடல் அம் பதியோன்
தாள் தலை தரித்த கோளினர் போல – கல்லாடம்:2 6/41,42
பேர் அருள் கொடுத்த கூடல் அம் பதியோன்
பதம் இரண்டு அமைத்த உள்ள – கல்லாடம்:2 58/34,35

மேல்

பதின்மூன்று (1)

ஆங்கு ஒரு பதின்மூன்று அடைந்தன குற்றமும் – கல்லாடம்:2 98/44

மேல்

பதினாயிரம் (1)

சுற்றுடல் பெற்று துணை பதினாயிரம்
மற்று அது நீண்டு மணி உடல் போகி – கல்லாடம்:2 83/5,6

மேல்

பதினாறு (1)

சந்தை நெய்ப்பிலி என தரு பதினாறு
முந்திய நூலில் மொழிந்தன குற்றமும் – கல்லாடம்:2 98/25,26

மேல்

பதினான்கு (1)

பதினான்கு அமைத்து விடு மாத்திரைக்கு – கல்லாடம்:2 99/19

மேல்

பதினெண் (1)

பதினெண் கிளவி ஊர் துஞ்சிய போல் – கல்லாடம்:2 38/3

மேல்

பதுக்கைசெய் (1)

பதுக்கைசெய் அம்பல திரு பெரும் பதியினும் – கல்லாடம்:2 76/14

மேல்

பதும் (2)

குறிபடு திங்கள் ஒரு பதும் புகாது – கல்லாடம்:2 5/14
பிலம் திறந்து அன்ன பெரு வாய் ஒரு பதும்
மலை நிரைத்து ஒழுக்கிய கரம் இருபத்தும் – கல்லாடம்:2 78/18,19

மேல்

பதுமன் (2)

பரப்பி காட்டலின் பதுமன் ஆகியும் – கல்லாடம்:2 9/2
முதல் தொழில் பதுமன் முன்னா அவ்வுழி – கல்லாடம்:2 99/3

மேல்

பந்தர் (2)

மௌவல் இதழ் விரிந்து மணம் சூழ் பந்தர் செய் – கல்லாடம்:2 80/26
இட்ட செம் பந்தர் இடையிடை கால் என – கல்லாடம்:2 88/24

மேல்

பந்தரின் (1)

ஒரு கால் சுமந்த விண் படர் பந்தரின்
மூடிய நால் திசை முகில் துகில் விரித்து – கல்லாடம்:2 14/2,3

மேல்

பந்து (2)

பந்து பயிற்றியும் பொன் கழங்கு உந்தவும் – கல்லாடம்:2 17/4
செம்பொன் செய்த வரி பந்து துரந்தும் – கல்லாடம்:2 28/31

மேல்

பந்தும் (1)

வளை வாய் கிள்ளையும் வரி புனை பந்தும்
பூவையும் கோங்கின் பொன் அலர் சூட்டிய – கல்லாடம்:2 29/2,3

மேல்

பயக்கும் (1)

பாரிடை இன்பம் நீள் இடை பயக்கும்
பெரு நீர் வையை வளை நீர் கூடல் – கல்லாடம்:2 2/6,7

மேல்

பயந்த (3)

தூணம் பயந்த மாண் அமர் குழவிக்கு – கல்லாடம்:2 5/16
உடனுடன் பயந்த கடல் ஒலி ஏற்றும் – கல்லாடம்:2 12/9
பனிமலை பயந்த மாதுடன் தீர்த்து அருள் – கல்லாடம்:2 35/10

மேல்

பயந்தருள் (1)

நெடும் சடை உக்கிரன் பயந்தருள் நிமலன் – கல்லாடம்:2 75/12

மேல்

பயந்தாங்கு (1)

ஒரு கடல் இரண்டு திரு பயந்தாங்கு
வளைத்த நெடும் கார் புனத்து இருவீரும் – கல்லாடம்:2 22/30,31

மேல்

பயந்து (1)

பனி கதிர் குலவன் பயந்து அருள் பாவையை – கல்லாடம்:2 10/17

மேல்

பயந்தோன் (1)

குனித்து அருள் நாயகன் குல மறை பயந்தோன்
அரும் தமிழ் கூடல் பெரும் தவர் காண – கல்லாடம்:2 76/18,19

மேல்

பயவாது (1)

செவ் வாய் திரிந்து வெள் வாய் பயவாது
மனை புகையுண்ட கரு மண் இடந்து – கல்லாடம்:2 5/7,8

மேல்

பயன் (7)

என் உளம் குடிகொண்டு இரும் பயன் அளிக்கும் – கல்லாடம்:2 1/13
புறன் பயன் கொடுக்கும் பொருட்கோ ஆழி – கல்லாடம்:2 31/14
உறுவதும் இ பயன் அன்றேல் – கல்லாடம்:2 56/28
நின்றன கண்டு நெடும் பயன் படைத்த – கல்லாடம்:2 58/24
பரங்குன்று உடுத்த பயன் கெழு கூடல் – கல்லாடம்:2 72/10
பார்ப்பு இரை கவர பயன் உறும் உலகில் – கல்லாடம்:2 79/4
அரும் துணை நெஞ்சம் நிற்கு உறும் பயன் கேள்-மதி – கல்லாடம்:2 88/5

மேல்

பயனாம் (1)

நான்மறை பயனாம் ஏழிசை அமைத்து – கல்லாடம்:2 21/36

மேல்

பயனுழி (1)

அவ் வினை பயனுழி அரும் தவம் பெறுமோ – கல்லாடம்:2 82/48

மேல்

பயிர் (1)

தரும பெரும் பயிர் உலகு பெற விளைக்கும் – கல்லாடம்:2 37/14

மேல்

பயில் (1)

இணை எயிறு என்ன இடையிடை முள் பயில்
குறும் புதல் முண்டகம் கரும்பு என துய்த்து – கல்லாடம்:2 63/13,14

மேல்

பயில்தலின் (1)

பாந்தளும் தரக்கும் பயில்தலின் குறிஞ்சியும் – கல்லாடம்:2 64/16

மேல்

பயிலா (1)

பாசடைக்கு உலகவர் பயிலா தாரியை – கல்லாடம்:2 95/22

மேல்

பயிலுதலானும் (1)

பல துறை முகத்தொடு பயிலுதலானும்
முள் உடை கோட்டு முனை எறி சுறவம் – கல்லாடம்:2 11/8,9

மேல்

பயிற்றி (2)

புருவம் கண் என உயிர்விட பயிற்றி
மலையினை தாங்கி அமுதினை கடைந்து – கல்லாடம்:2 33/4,5
பாலையில் எழுப்பி அமர் இசை பயிற்றி
தூங்கலும் துள்ளலும் சுண்டி நின்று எழுதலும் – கல்லாடம்:2 43/29,30

மேல்

பயிற்றிய (1)

ஐயர் பயிற்றிய விதி அழல் ஓம்பவும் – கல்லாடம்:2 76/7

மேல்

பயிற்றியும் (1)

பந்து பயிற்றியும் பொன் கழங்கு உந்தவும் – கல்லாடம்:2 17/4

மேல்

பயின்ற (1)

ஈன்ற என் உளமும் தோன்ற மொழி பயின்ற
வளை வாய் கிள்ளையும் வரி புனை பந்தும் – கல்லாடம்:2 29/1,2

மேல்

பயின்றும் (1)

இவள் நடை பெற்றும் இவள் பயின்றும் இரங்கியும் – கல்லாடம்:2 92/20

மேல்

பர (1)

அருச்சனை வணக்கம் பர உயிர்க்கு அன்பு அகம் – கல்லாடம்:2 86/31

மேல்

பரக்கும் (1)

கல்லென்று இழிந்து கொல்லையில் பரக்கும்
கறங்கு இசை அருவி அம் சாரல் – கல்லாடம்:2 39/20,21

மேல்

பரங்குன்றத்து (1)

இறால் நறவு அருவி எழு பரங்குன்றத்து
உறை சூர் பகையினன் பெறு திரு வயிற்றினள் – கல்லாடம்:2 79/12,13

மேல்

பரங்குன்றம் (5)

ஒரு பரங்குன்றம் மருவிய கூடல் – கல்லாடம்:2 56/12
அருவி அம் சாரல் ஒரு பரங்குன்றம்
சூழ்கொள இருந்த கூடல் அம் பெருமான் – கல்லாடம்:2 59/32,33
அருள் பரங்குன்றம் உடுத்து அணி கூடல் – கல்லாடம்:2 83/12
தழல் வேல் குமரன் சால் பரங்குன்றம்
மணியொடும் பொன்னொடும் மார்பு அணி அணைத்த – கல்லாடம்:2 84/6,7
தன் பரங்குன்றம் தமர் பெறு கூடற்கு – கல்லாடம்:2 87/39

மேல்

பரங்குன்றமும் (1)

களியுடன் நிறைந்த ஒரு பரங்குன்றமும்
பொன் அம் தோகையும் மணி அரி சிலம்பும் – கல்லாடம்:2 41/13,14

மேல்

பரங்குன்று (4)

கறங்கு கால் அருவி பரங்குன்று உடுத்த – கல்லாடம்:2 1/8
பரங்குன்று உடுத்த பயன் கெழு கூடல் – கல்லாடம்:2 72/10
வாழ் பரங்குன்று எனும் மணி அணி பூண்ட – கல்லாடம்:2 86/23
சேயோன் பரங்குன்று இழை என செறித்து – கல்லாடம்:2 92/6

மேல்

பரணர் (1)

இறையோன் பொருட்கு பரணர் முதல் கேட்ப – கல்லாடம்:1 2/53

மேல்

பரதவர் (2)

பனைக்குடி பரதவர் கலத்தொடும் மறிய – கல்லாடம்:2 15/15
புலவு உடல் பரதவர் தம் குடி ஓம்ப – கல்லாடம்:2 23/22

மேல்

பரதவன் (1)

மறைத்து ஒரு சிறுகுடி பரதவன் ஆகி – கல்லாடம்:2 15/26

மேல்

பரந்த (6)

நின்ற நாரணன் பரந்த மார்பில் – கல்லாடம்:2 17/33
கொண்டு குளிர் பரந்த மங்குல் வாவிக்குள் – கல்லாடம்:2 21/8
அளப்பு அற பரந்த வீதியது ஆகி – கல்லாடம்:2 23/25
புள்ளி பரந்த வள் உகிர் தரக்கின் – கல்லாடம்:2 26/13
துறை நீர் ஆட பரந்த கார் மதமும் – கல்லாடம்:2 26/22
நிலை கெட பரந்த கடல் கெழு விடத்தை – கல்லாடம்:2 51/29

மேல்

பரந்தது (1)

மங்கையர் உளம் என கங்குலும் பரந்தது
தெய்வம் கருதா பொய்யினர்க்கு உரைத்த – கல்லாடம்:2 26/4,5

மேல்

பரந்தன (1)

கிடந்தன ஆம்பி பரந்தன மறைப்ப – கல்லாடம்:2 14/11

மேல்

பரந்து (3)

ஈன்ற செம் கவி என தோன்றி நனி பரந்து
பாரிடை இன்பம் நீள் இடை பயக்கும் – கல்லாடம்:2 2/5,6
தண்டா மயல் கொடு வண்டு பரந்து அரற்ற – கல்லாடம்:2 20/6
ஓங்கி புடை பரந்து அமுதம் உள் ஊறி – கல்லாடம்:2 45/3

மேல்

பரப்ப (2)

பாணிக்குள் பெய் செம் தழல் பரப்ப
தன்னால் படைத்த பொன் அணி அண்டம் – கல்லாடம்:2 16/13,14
புலி குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப
குழவி அம் கதிர் பெற திருமலர் அணங்க – கல்லாடம்:2 94/24,25

மேல்

பரப்பி (13)

பரப்பி காட்டலின் பதுமன் ஆகியும் – கல்லாடம்:2 9/2
பிடவு அலர் பரப்பி பூவை பூ இட்டு – கல்லாடம்:2 14/12
பசும் தழை பரப்பி கண மயில் ஆல – கல்லாடம்:2 14/17
இல் உறை கல்லின் வெண் மலர் பரப்பி
இலவு அலர் வாட்டிய செம் கால் பிடித்து – கல்லாடம்:2 18/26,27
பெரும் கிளை கூண்டு வெட்சி மலர் பரப்பி
இறால் நறவு அளாய செந்தினை வெள் இடி – கல்லாடம்:2 24/4,5
மெய்யினை பரப்பி பொய்யினை காட்டி – கல்லாடம்:2 33/7
மற்று அவன் அசைத்த மாசுணம் பரப்பி
அமைத்தது கடுக்கும் மணி பாம்பு அல்குல் – கல்லாடம்:2 41/46,47
கவை துகிர் வடவையின் திரள் சிகை பரப்பி
அரை பெற பிணித்த கல் குளி மாக்கள் – கல்லாடம்:2 43/1,2
விரி பொரி சிந்தி மண மலர் பரப்பி
தெய்வ குல புகை விண்ணொடும் விம்ம – கல்லாடம்:2 47/4,5
வாலுகம் பரப்பி வலை வலிது ஒற்றினர்க்கு – கல்லாடம்:2 67/6
குரு வளர் மரகத பறை தழை பரப்பி
மணி திரை உகைக்கும் கடலினின் கவினி – கல்லாடம்:2 71/5,6
துடி எறிந்து இசைப்ப துகளம் பரப்பி
வள்ளம் பிணைத்த செம் கரடிகை மல்க – கல்லாடம்:2 85/30,31
பட்டடை எடுக்க புலிதம் பரப்பி
புற கால் மடித்து குறித்து எறி நிலையம் – கல்லாடம்:2 99/17,18

மேல்

பரப்பிய (3)

பொன் தகடு பரப்பிய கரு மணி நிரை என – கல்லாடம்:2 41/39
எடுத்து பரப்பிய இமையவர் நாயகன் – கல்லாடம்:2 63/25
பாசிழை பட்டு நூல் கழி பரப்பிய
கிளை வாய் கிளைத்த வளை வாய் கிளியே – கல்லாடம்:2 81/36,37

மேல்

பரப்பில் (1)

பெரு நிலவு கான்ற நீறு கெழு பரப்பில்
அண்டநாடவர்க்கு ஆருயிர் கொடுத்த – கல்லாடம்:2 32/3,4

மேல்

பரப்பின் (2)

அகல் திரை பரப்பின் சடை அசைந்து அலையாது – கல்லாடம்:1 2/10
பரப்பின் தமிழ் சுவை திரட்டி மற்று அவர்க்கு – கல்லாடம்:2 3/15

மேல்

பரப்பினதானும் (1)

அளக்க என்று அமையா பரப்பினதானும்
அமுதமும் திருவும் உதவுதலானும் – கல்லாடம்:2 11/6,7

மேல்

பரப்பு (2)

அளவா பாதம் மண் பரப்பு ஆக – கல்லாடம்:2 20/25
கட்டிய பொய் பரப்பு அனைத்தும் நிற்கு உறுத்தின் – கல்லாடம்:2 89/21

மேல்

பரப்பும் (5)

அளவியல் மண நிலை பரப்பும் காலம் – கல்லாடம்:2 5/2
உரல் குழி நிரைத்த கல் அறை பரப்பும்
மானிட மாக்கள் அரக்கி கை பட்டு என – கல்லாடம்:2 42/6,7
பத்துடை_நூறு பொற்பு அமர் பரப்பும்
ஆயிரத்து இரட்டி கீழ் மேல் நிலையும் – கல்லாடம்:2 61/2,3
நெடும் கடல் பரப்பும் அடும் தொழில் அரக்கரும் – கல்லாடம்:2 70/3
கதிர் நிரை பரப்பும் மணி முடி தேவர்கள் – கல்லாடம்:2 98/1

மேல்

பரப்பே (1)

வயல் வளை கக்கிய மணி நிரை பரப்பே
அதர் விரிந்து எழுந்து படர் புகை நீழல் – கல்லாடம்:2 59/7,8

மேல்

பரப்பை (1)

மலை சூழ் கிடந்த பெரும் குல பரப்பை
மலை கொடு மலைந்த முதுநீர் வெள்ளமும் – கல்லாடம்:2 54/31,32

மேல்

பரம் (1)

முழுது அனுக்கிரகம் கெழு பரம் அநாதி – கல்லாடம்:2 86/27

மேல்

பரல் (2)

கனல் தலை பழுத்த திரள் பரல் முரம்பு – கல்லாடம்:2 59/6
தழல் தலை பழுத்த பரல் முரம்பு அடுத்தனை – கல்லாடம்:2 69/14

மேல்

பரவ (1)

கூடிய கானம் அன்பொடு பரவ
பூதம் துள்ள பேய் கை மறிப்ப – கல்லாடம்:2 21/57,58

மேல்

பரவி (2)

வீதி போகிய வால் உளை பரவி
ஆக்கிய விஞ்சை பிறை முடி அந்தணன் – கல்லாடம்:2 42/15,16
கூடல் அம் பதியகம் பரவி
நீட நின்று எண்ணார் உளம் என நீயே – கல்லாடம்:2 88/37,38

மேல்

பரவு-மின் (1)

யாழில் பரவு-மின் ஈங்கு இவை அன்றி – கல்லாடம்:2 10/12

மேல்

பரவை (2)

மறி திரை பரவை புடை வயிறு குழம்ப – கல்லாடம்:2 29/12
நடை திரை பரவை நால் கடல் அணைத்து – கல்லாடம்:2 52/1

மேல்

பரவையும் (1)

கலி திரை பரவையும் கனன்று எழு வடவையும் – கல்லாடம்:2 73/2

மேல்

பராய (2)

தெய்வம் பராய மெய்யரும் திருவினர் – கல்லாடம்:2 15/13
உணா நிலன் உண்டு பராய அ பெரும் தவம் – கல்லாடம்:2 62/2

மேல்

பராரை (4)

ஒட்டுவிட்டு உலறிய பராரை நெட்டா கோட்டு – கல்லாடம்:2 6/25
தமனிய பராரை சயிலம் ஆகியும் – கல்லாடம்:2 11/5
சலியா பராரை தமனிய பொருப்பு எனும் – கல்லாடம்:2 14/1
வீழ் சுற்று ஒழுக்கிய பராரை திரு வட – கல்லாடம்:2 53/10

மேல்

பராவ (1)

பரு காடு உறுத்தி பலி முதல் பராவ
கிழமை அவ் அயலினர் நா உடன்று ஏத்த – கல்லாடம்:2 93/3,4

மேல்

பரி (4)

பூசி அணிந்து பூண்டு பரி கடவி – கல்லாடம்:2 33/28
தன் நிலை கடவாது அவன் பரி தேரே – கல்லாடம்:2 62/32
மண் புக மூழ்கிய வான் பரி பிணிக்க – கல்லாடம்:2 81/22
ஒரு கால் இரதத்து எழு பரி பூட்டி – கல்லாடம்:2 96/9

மேல்

பரித்தலும் (1)

பற்றலர் தெறுதலும் உவந்தோர் பரித்தலும்
வெம் சுடர் தண் மதி என புகழ் நிறீஇய – கல்லாடம்:2 28/1,2

மேல்

பரிதி (2)

நோக்கம் மறைத்த பரிதி கொள் நெடும் தேர் – கல்லாடம்:2 82/45
முதிர் திரை அடிக்கும் பரிதி அம் தோழம் – கல்லாடம்:2 89/23

மேல்

பரிதியின் (1)

பல் முக விளக்கின் பரிதியின் தோட்டிய – கல்லாடம்:2 81/23

மேல்

பரிதியும் (1)

திங்களும் புயலும் பரிதியும் சுமந்த – கல்லாடம்:2 2/2

மேல்

பரிந்த (1)

வட-பால் பரிந்த பலி மண கோட்டமும் – கல்லாடம்:2 41/20

மேல்

பரிந்து (5)

உயிர் பரிந்து அளித்தலின் புலம் மிசை போக்கலின் – கல்லாடம்:2 11/15
நெடும் கயிற்று ஊசல் பரிந்து கலுழ் காலை – கல்லாடம்:2 13/16
வளை வாய் தூண்டில் கரும் கயிறு பரிந்து
குவளை பாசடை முண்டகம் உழக்கி – கல்லாடம்:2 37/17,18
மக்கள் பறவை பரிந்து உளம் மாழ்கினள் – கல்லாடம்:2 40/16
பாசுபத கணை பரிந்து அருள்செய்தோன் – கல்லாடம்:2 48/7

மேல்

பரிந்தும் (1)

கோதை வகை பரிந்தும் மணி கலன் கொண்டு – கல்லாடம்:2 87/10

மேல்

பரிபுர (1)

பரிபுர கம்பலை இரு செவி உண்ணும் – கல்லாடம்:2 11/25

மேல்

பரிபெறு (1)

நெடு நிலை அரங்கில் பரிபெறு தரளமும் – கல்லாடம்:2 50/18

மேல்

பரிய (1)

ஒளிர் மணி ஊசல் பரிய இட்டு உயர்த்தும் – கல்லாடம்:2 85/12

மேல்

பரியுநர் (1)

பறவை மக்களை பரியுநர் கொடுத்து – கல்லாடம்:2 64/13

மேல்

பரியும் (1)

வல்லியை பரியும் பகடு விடு குரலும் – கல்லாடம்:2 39/12

மேல்

பரியோன் (1)

கூடல் பதி வரும் ஆடல் பரியோன்
எட்டெட்டு இயற்றிய கட்டு அமர் சடையோன் – கல்லாடம்:2 96/13,14

மேல்

பரு (1)

பரு காடு உறுத்தி பலி முதல் பராவ – கல்லாடம்:2 93/3

மேல்

பருக (1)

பசும் கடல் வளைந்து பருக கொதித்த – கல்லாடம்:2 86/16

மேல்

பருகவும் (1)

ஏழ்_எழு பெயரும் கோது அற பருகவும்
புலன் நெறி வழக்கில் புணர் உலகவர்க்கும் – கல்லாடம்:2 63/21,22

மேல்

பருகாத (1)

கண் பருகாத களவினர் உளம் போல் – கல்லாடம்:2 46/12

மேல்

பருகி (2)

பஞ்சு எழ பிழிந்து தண் புனல் பருகி
ஐந்து என பெயரிய நெடு மரம் ஒடித்து – கல்லாடம்:2 67/17,18
முள் எயிற்று அரவம் முறித்து உயிர் பருகி
பொள்ளென வானத்து அசனியின் பொலிந்து – கல்லாடம்:2 71/7,8

மேல்

பருகிய (2)

நெடும் கடல் கிடங்கும் ஒருங்கு உயிர் பருகிய
மணி வேல் குமரன் முதல் நிலை வாழும் – கல்லாடம்:2 6/39,40
பருகிய முகில் குலம் படிந்து கண்படுத்தும் – கல்லாடம்:2 72/23

மேல்

பருகுதல்செய்க (1)

முருக நாற பருகுதல்செய்க
வேலனும் வெறி களன் ஏறுதல் ஆக – கல்லாடம்:2 16/22,23

மேல்

பருகுநர் (1)

திருவடி பெரும் தேன் பருகுநர் போல – கல்லாடம்:2 48/14

மேல்

பருதி (1)

திருவுலகு அளிக்கும் பருதி வானவனே – கல்லாடம்:2 29/31

மேல்

பருந்து (3)

வளை வாய் கரும் பருந்து இடை பறித்து உண்ண – கல்லாடம்:2 6/27
நவத்தலை தாமரை வளை வாய் பருந்து என – கல்லாடம்:2 77/11
திரை விழி பருந்து இனம் வளை உகிர் படையால் – கல்லாடம்:2 79/3

மேல்

பருந்தும் (2)

பருந்தும் ஆந்தையும் பார்ப்புடன் தவழ – கல்லாடம்:2 7/21
எழு சிறை தீயும் எருவையும் பருந்தும்
குவளை அம் காட்டு குருகொடு புதாவே – கல்லாடம்:2 59/16,17

மேல்

பரும் (1)

பரும் குலை கயத்துள் கரும் தாள் கழுநீர் – கல்லாடம்:2 99/55

மேல்

பரூஉ (1)

குழி கண் பரூஉ தாள் கூர்ம் கோட்டு ஒருத்தல் – கல்லாடம்:2 32/14

மேல்

பல் (20)

முடங்கு உளை முகத்து பல் தோள் அவுணனொடு – கல்லாடம்:1 2/2
புடவி வைத்து ஆற்றிய பல் தலை பாந்தள் – கல்லாடம்:1 2/19
விழுங்கிய பல் கதிர் வாய்-தொறும் உமிழ்ந்து என – கல்லாடம்:1 2/21
முருந்து நிரைத்த திருந்து பல் தோன்றாது – கல்லாடம்:2 5/24
பல் மணி கலன்கள் உடற்கு அழகு அளித்து என – கல்லாடம்:2 7/5
பேச நீண்ட பல் மீன் நிலைஇய – கல்லாடம்:2 19/5
மண்ணகம் அனைத்தும் நிறைந்த பல் உயிர்கட்கு – கல்லாடம்:2 19/19
இனைய பல் நெறி பண்ணை எங்கும் – கல்லாடம்:2 28/32
குழி விழி பிறழ் பல் தெற்றல் கரும் கால் – கல்லாடம்:2 34/2
கொண்மூ பல் திரை புனலுடன் தாழ்த்தி – கல்லாடம்:2 40/10
எரி விரிந்து அன்ன இதழ் பல் தாமரை – கல்லாடம்:2 64/23
கடு_மான் கீழ்ந்த கட_மலை பல் மருப்பு – கல்லாடம்:2 68/16
பல் மணி ஆசனத்து இருந்து செவ்வானின் – கல்லாடம்:2 75/5
பல் மணி மிளிர் முடி பலர் தொழ கவித்து – கல்லாடம்:2 75/8
பல் தலை பாந்தள் சுமை திரு தோளில் – கல்லாடம்:2 75/9
பல் முக விளக்கின் பரிதியின் தோட்டிய – கல்லாடம்:2 81/23
பல் நாள் பல் நெறி அழுங்கினர் இன்று – கல்லாடம்:2 85/19
பல் நாள் பல் நெறி அழுங்கினர் இன்று – கல்லாடம்:2 85/19
பல் நெறி வளம் நிற பூட்சியின் புல்லும் – கல்லாடம்:2 92/9
குருத்து அயில் பேழ் வாய் பல் படை சீயம் – கல்லாடம்:2 96/5

மேல்

பல்லவம் (1)

அசோக பல்லவம் அலரி செம்பஞ்சு – கல்லாடம்:2 98/35

மேல்

பல (17)

திரை எறி மலைகளின் கவடு பல போக்கி – கல்லாடம்:1 2/8
பல உடம்பு அழிக்கும் பழி ஊன் உணவினர் – கல்லாடம்:2 1/18
தன்னுழை பல உயிர் தனித்தனி படைத்து – கல்லாடம்:2 9/1
பல உலகு எடுத்த ஒரு திறத்தானும் – கல்லாடம்:2 11/2
பல துறை முகத்தொடு பயிலுதலானும் – கல்லாடம்:2 11/8
இன்னும் பல தொழிற்கு இ நிலை நின்று – கல்லாடம்:2 16/27
பல தலைவைத்து முடியாது பாயும் – கல்லாடம்:2 21/6
பல தலை அரக்கர் பேரணி போல – கல்லாடம்:2 21/19
பல குறி பெற்று இவ் உலகு உயிர் அளித்த – கல்லாடம்:2 39/6
பொய் பல புகன்றும் மெய் ஒழித்து இன்பம் – கல்லாடம்:2 56/15
பல உயிர் தழைக்க ஒரு குடை நிழற்றும் – கல்லாடம்:2 61/18
பல நாள் பெருகி ஒரு நாள் உடைந்து – கல்லாடம்:2 66/16
எரி விரிந்து அன்ன பல இதழ் தாமரை – கல்லாடம்:2 68/3
இமையா சூரும் பல கண்டு ஒருங்கா – கல்லாடம்:2 83/19
கோளினர் போல குறி பல குறித்தே – கல்லாடம்:2 97/19
இனையவை விரித்து பல பொருள் கூறும் – கல்லாடம்:2 98/10
புனம் எரி கார் அகில் புகை பல கொள்ளும் – கல்லாடம்:2 100/3

மேல்

பலமாய் (1)

இன்னும் பலமாய் மன்னும் கடலே – கல்லாடம்:2 23/38

மேல்

பலர் (1)

பல் மணி மிளிர் முடி பலர் தொழ கவித்து – கல்லாடம்:2 75/8

மேல்

பலரே (1)

தனி பார்த்து உழலும் கிராதரும் பலரே
ஒரு கால் இரதத்து எழு பரி பூட்டி – கல்லாடம்:2 96/8,9

மேல்

பலவும் (1)

அரவின் வாய் அரியின் பலவும் நினைந்தும் – கல்லாடம்:2 23/43

மேல்

பலி (4)

ஆய் மலர் தெரிந்திட்டு வான் பலி தூவி – கல்லாடம்:2 15/12
வட-பால் பரிந்த பலி மண கோட்டமும் – கல்லாடம்:2 41/20
இரு நால் திசையும் உண் பலி தூவி – கல்லாடம்:2 47/6
பரு காடு உறுத்தி பலி முதல் பராவ – கல்லாடம்:2 93/3

மேல்

பவ (2)

பவ சுவர் இடித்து புதுக்க கட்டி – கல்லாடம்:2 22/46
நீங்கா பவ தொகை நிகழ் முதல் நான்கும் – கல்லாடம்:2 53/13

மேல்

பவம் (2)

நடு ஊர் நகர் செய்து அடு பவம் துடைக்கும் – கல்லாடம்:2 12/16
இருள் பவம் நடுங்கல் எனும் குணம் எட்டும் – கல்லாடம்:2 86/34

மேல்

பவள (4)

பவள வாயில் சுவை காணாது – கல்லாடம்:2 5/9
பவள வாயும் கிளர் பச்சுடம்பும் – கல்லாடம்:2 65/27
பவள மின் கவை கொடி வடவையின் கொழுந்து என – கல்லாடம்:2 72/24
பவள சடையோன் பதம் தலை சுமந்த – கல்லாடம்:2 80/21

மேல்

பவளம் (1)

பவளம் தழைத்த பத மலர் சுமந்த நம் – கல்லாடம்:2 91/6

மேல்

பழ (5)

புதிய நாயகன் பழ மறை தலைவன் – கல்லாடம்:2 18/9
செம் முகில் பழ நுரை வெண் முகில் புது நுரை – கல்லாடம்:2 21/4
பழ உடல் காட்டும் தீரா பெரும் பழி – கல்லாடம்:2 35/9
பிறவா பேர் ஊர் பழ நகரிடத்தும் – கல்லாடம்:2 76/15
இரு வடிவு ஆகி பழ மறை வேதியன் – கல்லாடம்:2 90/7

மேல்

பழங்கண் (3)

பழங்கண் எய்தியது பேதைமை அறிவே – கல்லாடம்:2 17/58
நடுங்கு அஞர் உற்ற பழங்கண் அன்னையரும் – கல்லாடம்:2 30/4
உழை நின்று அறிந்து பழங்கண் கவர்ந்தும் – கல்லாடம்:2 44/4

மேல்

பழங்கண்கொண்டால் (1)

விழி சொரி நீருடன் பழங்கண்கொண்டால்
உலகு இயல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க – கல்லாடம்:2 3/9,10

மேல்

பழங்கண்கொள்ள (1)

கற்பு நாண் மூடி பழங்கண்கொள்ள
உயர் மரம் முளைத்த ஊரி போல – கல்லாடம்:2 37/5,6

மேல்

பழம் (5)

பழம் புல் குரம்பை இடம் புக்கு இருந்தும் – கல்லாடம்:2 12/7
பழம் குறி கண்ட நெடும் கண் மாதரும் – கல்லாடம்:2 16/2
பழம் கொள் தத்தை வழங்கு சொல் போலும் – கல்லாடம்:2 50/9
தன் பழம் கூடம் தனி நிலை அன்றி – கல்லாடம்:2 61/22
முனி தழல் செல்வம் முற்றி பழம் கல் – கல்லாடம்:2 95/26

மேல்

பழமும் (1)

பாலும் சுவையும் பழமும் இரதமும் – கல்லாடம்:2 58/4

மேல்

பழமை (1)

பழமை நீண்ட குன்ற குடியினள் – கல்லாடம்:2 17/1

மேல்

பழவினை (1)

பழவினை புகுந்த பாடகம் போல – கல்லாடம்:2 8/2

மேல்

பழன (6)

நீங்கா பழன பெரு நகர் கூடல் – கல்லாடம்:2 36/4
சுருங்கை வழி அடைக்கும் பெரும் கழி பழன
கூடற்கு இறைவன் இரு தாள் விடுத்த – கல்லாடம்:2 37/20,21
அலை நீர் பழன முது நகர் கூடல் – கல்லாடம்:2 45/25
எறி திரை பழன கூடல் – கல்லாடம்:2 64/33
தரளம் சொரியும் பழன கூடல் – கல்லாடம்:2 74/23
பழன குருநாடு அளி பதி தோற்று – கல்லாடம்:2 93/15

மேல்

பழனத்து (2)

எடுத்து மூடி எறி திரை பழனத்து
பனி சிறுமைகொள்ளா முள் அரை முளரி – கல்லாடம்:2 29/19,20
அள்ளல் பழனத்து அணி நீர் கூடல் – கல்லாடம்:2 47/19

மேல்

பழனம் (1)

தண்ணம் பழனம் சூழ்ந்த – கல்லாடம்:2 27/31

மேல்

பழி (8)

பல உடம்பு அழிக்கும் பழி ஊன் உணவினர் – கல்லாடம்:2 1/18
பழி நாட்டு ஆர்ந்த பாவம் போல – கல்லாடம்:2 8/35
ஈயாது உண்ணுநர் நெடும் பழி போல – கல்லாடம்:2 30/6
பழ உடல் காட்டும் தீரா பெரும் பழி
பனிமலை பயந்த மாதுடன் தீர்த்து அருள் – கல்லாடம்:2 35/9,10
சிதைந்து உறைந்து எழு பழி தீ மதி புரையாது – கல்லாடம்:2 60/24
கழு கடை அன்ன தம் கூர் வாய் பழி புலவு – கல்லாடம்:2 78/3
கொடும் கொலை வடுத்து கடும் பழி சடை அலைந்து – கல்லாடம்:2 83/3
கரியுடன் உண்ணார் பழி உளம் ஒத்த – கல்லாடம்:2 93/8

மேல்

பழித்த (4)

தாமரை பழித்த கை மருங்கு அமைத்தோய் – கல்லாடம்:1 2/31
செம்மலர் பழித்த தாள் கீழ் கிடத்தி – கல்லாடம்:2 33/19
மதிஞரின் பழித்த வடு இரு_மூன்றும் – கல்லாடம்:2 53/15
தாமரை பழித்த இரு சரண் அடையா – கல்லாடம்:2 97/18

மேல்

பழித்து (2)

தேவர் மங்கையர் மலர் முகம் பழித்து
குறையா பாண்டில் வெண்மையின் மலர்ந்த – கல்லாடம்:2 21/10,11
பொன் பழித்து எடுத்த இன்புறு திருவடி – கல்லாடம்:2 36/6

மேல்

பழிநாட்டவளே (1)

பகட்டு இனம் கொல்லும் பழிநாட்டவளே
நீயே எழு நிலை மாடத்து இள முலை மகளிர் – கல்லாடம்:2 51/16,17

மேல்

பழிநாட்டு (1)

அவன் பழிநாட்டு நடுங்கும் நல் குடிகள் – கல்லாடம்:2 64/5

மேல்

பழியும் (1)

அடாஅ கிளவியும் படாஅ பழியும்
எங்கையர் புலவியில் இயம்பின நம்-பால் – கல்லாடம்:2 89/17,18

மேல்

பழுத்த (3)

கனல் தலை பழுத்த திரள் பரல் முரம்பு – கல்லாடம்:2 59/6
கற்பகம் போலும் அற்புதம் பழுத்த
நின் இலம் கடந்தது அன்னவள் இல்லம் – கல்லாடம்:2 62/10,11
தழல் தலை பழுத்த பரல் முரம்பு அடுத்தனை – கல்லாடம்:2 69/14

மேல்

பழுதறு (1)

பழுதறு தெய்வம் காட்ட பண்டையின் – கல்லாடம்:2 85/1

மேல்

பழுது (2)

மறை வாய் பார்ப்பான் மகனும் பழுது இலன் – கல்லாடம்:2 15/5
சொரி வெள் அலகரும் பழுது_இல் வாய்மையர் – கல்லாடம்:2 15/7

மேல்

பழுது_இல் (1)

சொரி வெள் அலகரும் பழுது_இல் வாய்மையர் – கல்லாடம்:2 15/7

மேல்

பழுமரம் (2)

கொலை களவு என்னும் பழுமரம் பிடுங்கி – கல்லாடம்:2 22/45
சினை தழை விளைத்த பழுமரம் என்ன – கல்லாடம்:2 32/15

மேல்

பள்ளி (2)

பள்ளி கணக்கர் உள்ளத்து பெற்ற – கல்லாடம்:2 17/22
பள்ளி கணக்கர்-பால் பட்டாங்கு – கல்லாடம்:2 25/5

மேல்

பள்ளியறை (1)

பாயற்கு அமைந்த பள்ளியறை ஆகி – கல்லாடம்:2 23/19

மேல்

பள்ளியின் (1)

அடு மடை பள்ளியின் நடு அவதரித்தும் – கல்லாடம்:2 13/2

மேல்

பள்ளியும் (1)

ஊழியும் கணம் என உயர் மகன் பள்ளியும்
உவாமதி கிடக்கும் குண்டு கடல் கலக்கி – கல்லாடம்:2 41/24,25

மேல்

பளிங்க (1)

பளிங்க பொருப்பின் திடர் கொள் மூதூர் – கல்லாடம்:2 61/5

மேல்

பளிங்கு (2)

திரள் பளிங்கு உடைத்து சிதறுவது என்ன – கல்லாடம்:2 68/20
செறி இருள் குழம்பகம் சென்று பளிங்கு எடுத்த – கல்லாடம்:2 85/17

மேல்

பற்பல (1)

பற்பல ஆசான் பாங்கு செல்பவர் போல் – கல்லாடம்:2 35/2

மேல்

பற்றலர் (1)

பற்றலர் தெறுதலும் உவந்தோர் பரித்தலும் – கல்லாடம்:2 28/1

மேல்

பற்றி (8)

பற்றி உட்புகுந்து பசும் கடல் கண்டு – கல்லாடம்:2 8/5
தவள மாடத்து அகல் முதுகு பற்றி
நெடும் கார் கிடந்து படும் புனல் பிழியும் – கல்லாடம்:2 19/22,23
அடு படை பூழியன் கடு முரண் பற்றி
இட்ட வெம் கொடும் சிறை பட்ட கார் குலம் – கல்லாடம்:2 20/32,33
கொடுமரம் பற்றி நெட்டு இதண் பொலிந்தும் – கல்லாடம்:2 22/38
பத மலர் மண் மிசை பற்றி படர்ந்தன – கல்லாடம்:2 45/11
பற்றி நின்று அடர்த்தல் உள் கையின் முறித்தல் – கல்லாடம்:2 49/11
ஆடக சயிலத்து ஓர் உடல் பற்றி
கலி திரை பரவையும் கனன்று எழு வடவையும் – கல்லாடம்:2 73/1,2
வினை உடல் புணர வரும் உயிர் பற்றி
புண்ணியம் தொடரும் புணர்ச்சி போல – கல்லாடம்:2 99/46,47

மேல்

பறந்து (1)

நடந்து புக்கு உண்டும் பறந்து புக்கு அயின்றும் – கல்லாடம்:2 84/3

மேல்

பறந்தும் (2)

மண்ணும் உம்பரும் அகழ்ந்தும் பறந்தும்
அளவா நோன்மையில் நெடுநாள் வருந்தி – கல்லாடம்:2 58/21,22
பறந்தும் அகழ்ந்தும் படி இது என்னாது – கல்லாடம்:2 66/28

மேல்

பறவை (5)

அருவி வீச பறவை குடிபோகி – கல்லாடம்:2 22/14
மக்கள் பறவை பரிந்து உளம் மாழ்கினள் – கல்லாடம்:2 40/16
பறவை மக்களை பரியுநர் கொடுத்து – கல்லாடம்:2 64/13
பறவை செல்லாது நெடு முகடு உருவிய – கல்லாடம்:2 66/22
பறவை உண்டு ஈட்டிய இறால் நறவு அருந்தி – கல்லாடம்:2 78/13

மேல்

பறவையும் (2)

அறுகால் கணமும் பறவையும் கணையும் – கல்லாடம்:2 32/16
பன்றியும் பறவையும் என்று உருவெடுத்து – கல்லாடம்:2 58/17

மேல்

பறித்த (1)

பேர் எறுழ் சகரர் ஏழ் என பறித்த
முதிர் திரை அடிக்கும் பரிதி அம் தோழம் – கல்லாடம்:2 89/22,23

மேல்

பறித்து (3)

வளை வாய் கரும் பருந்து இடை பறித்து உண்ண – கல்லாடம்:2 6/27
மது மலர் பறித்து திருவடி நிறைத்த – கல்லாடம்:2 54/7
எதிர் சுனை குவளை மலர் புறம் பறித்து
வரையுடன் நிறைய மாலையிட்டாங்கு – கல்லாடம்:2 68/27,28

மேல்

பறிபட்டு (1)

பறையும் தேரும் பறிபட்டு அணங்கியும் – கல்லாடம்:2 56/25

மேல்

பறை (6)

உதிர் பறை எருவை உணவு ஊன் தட்டி – கல்லாடம்:2 6/26
கூர் வாய் பறை தபு பெரும் கிழ நாரை – கல்லாடம்:2 36/2
பிள்ளையும் பெடையும் பறை வர தழீஇ – கல்லாடம்:2 43/8
வரை பறை அரிந்த வாசவன் தொழுது – கல்லாடம்:2 47/13
குரு வளர் மரகத பறை தழை பரப்பி – கல்லாடம்:2 71/5
இணை முக பறை அறை கடிப்பு உடை தோகை – கல்லாடம்:2 83/23

மேல்

பறையும் (1)

பறையும் தேரும் பறிபட்டு அணங்கியும் – கல்லாடம்:2 56/25

மேல்

பறைவர (1)

பறைவர தழீஇ பெற்று உவை-தம் கம்பலைக்கு – கல்லாடம்:2 74/14

மேல்

பன் (1)

பன் மலர் சோலை விம்மிய பெரு மலர் – கல்லாடம்:2 22/49

மேல்

பன்மை (1)

விதியினும் பன்மை செய் முகம் படைத்து அளவா – கல்லாடம்:2 87/6

மேல்

பன்றியும் (2)

பன்றியும் பறவையும் என்று உருவெடுத்து – கல்லாடம்:2 58/17
அன்னமும் பன்றியும் ஒல்லையின் எடுத்து – கல்லாடம்:2 66/27

மேல்

பன்னத்து (1)

மரகத பன்னத்து ஆம்பல் அம் குப்பையை – கல்லாடம்:2 54/28

மேல்

பன்னிய (1)

இன்னும் என்று இசைப்ப பன்னிய விதியொடு – கல்லாடம்:2 21/54

மேல்

பன்னிரண்டினை (1)

அரி தரு குட்டி ஆய பன்னிரண்டினை
செங்கோல் முளையிட்டு அருள் நீர் தேக்கி – கல்லாடம்:2 37/10,11

மேல்

பன்னிரண்டும் (1)

ஒத்த நற்குணம் உடைய பன்னிரண்டும்
கருகி நொய்தாதல் காற்று வெகுளி – கல்லாடம்:2 98/20,21

மேல்

பன்னிரு (2)

பன்னிரு கண் விழித்து என் வினை துரக்கும் – கல்லாடம்:2 83/11
முன்னுறும் உழு-வயின் பன்னிரு வருடம் – கல்லாடம்:2 93/16

மேல்

பன்னு (1)

பன்னு சாதரங்க ஒளி குணம் பத்தும் – கல்லாடம்:2 98/30

மேல்

பனி (5)

புல் நுனி பனி என மன்னுதல் இன்றி – கல்லாடம்:2 5/4
பனி கதிர் குலவன் பயந்து அருள் பாவையை – கல்லாடம்:2 10/17
ஒரொரு பனி கலை ஒடுங்கி நின்று அடைதலின் – கல்லாடம்:2 13/10
பனி சிறுமைகொள்ளா முள் அரை முளரி – கல்லாடம்:2 29/20
ஆக்கிய பனி பகை கூற்று இவை நிற்க – கல்லாடம்:2 76/23

மேல்

பனிக்கதிர் (1)

பனிக்கதிர் உண்ண சகோரம் பசிப்ப – கல்லாடம்:2 94/19

மேல்

பனிக்கும் (2)

உலகு விண் பனிக்கும் ஒரு சயமகட்கு – கல்லாடம்:2 73/18
மலரவன் பனிக்கும் கவினும் குலமீன் – கல்லாடம்:2 74/1

மேல்

பனிசெய்யும் (1)

சூர் அர கன்னியர் உடல் பனிசெய்யும்
கடைக்கால் மடியும் பொங்கர் பக்கமும் – கல்லாடம்:2 41/31,32

மேல்

பனித்தும் (1)

சுட்டியும் சிகையும் சேர்ந்து கண் பனித்தும்
பறையும் தேரும் பறிபட்டு அணங்கியும் – கல்லாடம்:2 56/24,25

மேல்

பனிப்ப (4)

கோல் தலை பனிப்ப வான் விடு பெரும் குரல் – கல்லாடம்:2 24/15
தேவர் கண் பனிப்ப முனிவர் வாய் குழற – கல்லாடம்:2 34/8
தரு நிழல் தேவர்-தம் உடல் பனிப்ப
படர்ந்து எறி கங்கை விடும் குளிர் அகற்றும் – கல்லாடம்:2 59/3,4
மயில் சிறை ஆல வலி_முகம் பனிப்ப
எதிர் சுனை குவளை மலர் புறம் பறித்து – கல்லாடம்:2 68/26,27

மேல்

பனிப்பினும் (1)

பொன்மலை பனிப்பினும் பனியா – கல்லாடம்:2 41/53

மேல்

பனிப்புற (1)

தேவர் மெய் பனிப்புற வான் மிடை உடு திரள் – கல்லாடம்:1 2/29

மேல்

பனிமலை (2)

பனிமலை பயந்த மாதுடன் தீர்த்து அருள் – கல்லாடம்:2 35/10
குருகு ஒலி ஓவா பனிமலை வாவி – கல்லாடம்:2 86/21

மேல்

பனியா (1)

பொன்மலை பனிப்பினும் பனியா
என் உயிர் வாட்டிய தொடி இளம்_கொடிக்கே – கல்லாடம்:2 41/53,54

மேல்

பனுவல் (1)

அரும் தமிழ் கீரன் பெரும் தமிழ் பனுவல்
வாவியில் கேட்ட காவி அம் களத்தினன் – கல்லாடம்:2 50/28,29

மேல்

பனை (3)

பனை கிடந்து அன்ன உடல் முதல் துணிய – கல்லாடம்:2 15/18
வெண்_பொடி எருக்கம் என்பு பனை கிழியினை – கல்லாடம்:2 33/27
பனை கை கட_மா எருத்து உறு பூழி – கல்லாடம்:2 68/24

மேல்

பனைக்குடி (1)

பனைக்குடி பரதவர் கலத்தொடும் மறிய – கல்லாடம்:2 15/15

மேல்

பனையும் (1)

பனையும் கிழியும் படைக்குவன் என்றும் – கல்லாடம்:2 85/8

மேல்