பெ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெடை 4
பெடையுடன் 1
பெடையும் 1
பெடையொடு 1
பெண் 5
பெண்டிர் 1
பெண்டிரும் 1
பெண்ணினர்க்கு 1
பெண்ணை 1
பெண்ணையும் 1
பெதும்பர் 1
பெம்மான் 1
பெய் 2
பெய்யும் 1
பெயர் 9
பெயர்தந்து 1
பெயர்ந்து 2
பெயர்பெற்று 1
பெயர்பெறும் 1
பெயர 1
பெயரிட்டு 1
பெயரிய 3
பெயரும் 2
பெயரொடு 1
பெயல் 1
பெரிதின் 1
பெரிது 2
பெரிதே 1
பெரியர் 1
பெரியவர் 1
பெரு 62
பெருக்க 1
பெருக்கிய 3
பெருக்கினர் 1
பெருக்கும் 2
பெருக்கெடுத்து 1
பெருக 1
பெருகலானும் 1
பெருகி 3
பெருகிய 2
பெருகு 1
பெருகுநர் 1
பெருகும் 1
பெருஞ்சூடகமும் 1
பெருத்தன 1
பெருத்து 1
பெருந்தகை 1
பெரும் 95
பெரும்பதம் 1
பெரும 1
பெருமகள் 1
பெருமணம் 1
பெருமதி 3
பெருமாற்கு 1
பெருமான் 34
பெருமை 1
பெருமையும் 1
பெருவிரல் 1
பெருவினை 1
பெற்ற 10
பெற்றவர் 1
பெற்றன 1
பெற்றாள் 1
பெற்று 12
பெற்றும் 1
பெற்றெடுத்த 1
பெற 18
பெறல் 2
பெறல்_இல் 1
பெறலாம் 1
பெறா 2
பெறாத 1
பெறாததோர் 1
பெறாது 1
பெறின் 1
பெறினே 1
பெறு 14
பெறுக 1
பெறுகுவது 1
பெறுதற்கு 1
பெறும் 15
பெறுமே 3
பெறுமோ 1
பெறுவது 1

பெடை (4)

கை பார்த்து இருக்கும் மட பெடை குருகே – கல்லாடம்:2 23/7
பெடை குருகு அணங்கின் விடுத்த வெண் சினையொடு – கல்லாடம்:2 23/8
அன்றில் புல் சேக்கை புக்கு அலகு பெடை அணைய – கல்லாடம்:2 38/10
வெள் உடல் ஓதிமம் தன்னுடை பெடை என – கல்லாடம்:2 74/13

மேல்

பெடையுடன் (1)

கூடல் அம் கானல் பெடையுடன் புல்லி – கல்லாடம்:2 49/17

மேல்

பெடையும் (1)

பிள்ளையும் பெடையும் பறை வர தழீஇ – கல்லாடம்:2 43/8

மேல்

பெடையொடு (1)

குறும் பார்ப்பு அணைக்கும் பெடையொடு வெரீஇ – கல்லாடம்:2 34/23

மேல்

பெண் (5)

பெண் இடம் கலந்த புண்ணியன் ஆகியும் – கல்லாடம்:2 11/19
பெண் உடல் பெற்ற சென்னி அம் பிறையோன் – கல்லாடம்:2 41/38
பெண் என பெயரிய பெருமகள் குலனுள் – கல்லாடம்:2 62/1
பேர் இருள் மாயை பெண் மகவு இரக்க – கல்லாடம்:2 81/18
பெண் வர சனகன் மிதிலையில் கொடுமரம் – கல்லாடம்:2 95/27

மேல்

பெண்டிர் (1)

முதுக்குறை பெண்டிர் வரத்து இயல் குறிப்ப – கல்லாடம்:2 93/1

மேல்

பெண்டிரும் (1)

மூதறி பெண்டிரும் தீதிலர் என்ப – கல்லாடம்:2 15/9

மேல்

பெண்ணினர்க்கு (1)

நண்ணிய பாதி பெண்ணினர்க்கு அமுதம் – கல்லாடம்:2 13/1

மேல்

பெண்ணை (1)

முன்றில் அம் பெண்ணை குடம்பை கொள் அன்றிலும் – கல்லாடம்:2 50/24

மேல்

பெண்ணையும் (1)

விளை கள் சுமந்த தலை விரி பெண்ணையும்
இன்னும் காணா காட்சிகொண்டு இருந்த – கல்லாடம்:2 21/21,22

மேல்

பெதும்பர் (1)

புன்னை அம் பெதும்பர் பூ நிறை கூடல் நும் – கல்லாடம்:2 40/23

மேல்

பெம்மான் (1)

பெம்மான் வாழும் பெரு நகர் கூடல் – கல்லாடம்:2 35/11

மேல்

பெய் (2)

பாணிக்குள் பெய் செம் தழல் பரப்ப – கல்லாடம்:2 16/13
அவ்வுழி அவ்வுழி பெய் உணவு உன்னி – கல்லாடம்:2 50/1

மேல்

பெய்யும் (1)

வெண் கார் பெய்யும் நாள் குறித்து உழுநரும் – கல்லாடம்:2 47/10

மேல்

பெயர் (9)

தன் பெயர் புணர்த்தி கற்பினொடு கொடுத்த – கல்லாடம்:1 2/14
பொன் பெயர் உடையோன் தன் பெயர் கடுப்ப – கல்லாடம்:2 5/15
பொன் பெயர் உடையோன் தன் பெயர் கடுப்ப – கல்லாடம்:2 5/15
இரண்டு பெயர் காத்த தோலா கற்பு – கல்லாடம்:2 18/29
குருகு பெயர் குன்றத்து உடல் பக எறிந்த – கல்லாடம்:2 24/2
பேழ் வாய் ஒளிப்ப வேட்டுவ பெயர் அளி – கல்லாடம்:2 27/21
நின்று அறிந்து உணர்த்தவும் தமிழ் பெயர் நிறுத்தவும் – கல்லாடம்:2 63/24
புள் பெயர் குன்றமும் எழு வகை பொருப்பும் – கல்லாடம்:2 70/1
அம்மை பெயர் பெறும் அருள் பேய் குனிப்ப – கல்லாடம்:2 99/40

மேல்

பெயர்தந்து (1)

சே கொள் கண்ணை செம் மொழி பெயர்தந்து
ஒன்றுடன் நில்லா மொழியை மறுத்த – கல்லாடம்:2 86/9,10

மேல்

பெயர்ந்து (2)

துணையுடன் சகோரம் களியுடன் பெயர்ந்து
விடும் அமுது அருந்த விண்ணத்து அணக்க – கல்லாடம்:2 64/30,31
பொலம் பூண் பெயர்ந்து உறை பூணை அருள் தரும் – கல்லாடம்:2 86/7

மேல்

பெயர்பெற்று (1)

வரையா கற்புடன் நான்கு என பெயர்பெற்று
ஆங்காங்கு ஆயிர கோடி சாகைகள் – கல்லாடம்:2 98/5,6

மேல்

பெயர்பெறும் (1)

மருத்துவ பெயர்பெறும் வான கருவி – கல்லாடம்:2 82/28

மேல்

பெயர (1)

இ நிலை பெயர உன்னும் அ கணத்தில் – கல்லாடம்:2 22/27

மேல்

பெயரிட்டு (1)

கூறு பெயரொடு வேறு பெயரிட்டு
மறி உயிர் உண்ண குறுகி வந்திருந்த – கல்லாடம்:2 16/38,39

மேல்

பெயரிய (3)

பெண் என பெயரிய பெருமகள் குலனுள் – கல்லாடம்:2 62/1
ஐந்து என பெயரிய நெடு மரம் ஒடித்து – கல்லாடம்:2 67/18
கிடங்கு என பெயரிய கரும் கடல் காண்க – கல்லாடம்:2 69/19

மேல்

பெயரும் (2)

ஏழ்_எழு பெயரும் கோது அற பருகவும் – கல்லாடம்:2 63/21
இளங்கோவினர்கள் இரண்டு அறி பெயரும்
அன்னமும் பன்றியும் ஒல்லையின் எடுத்து – கல்லாடம்:2 66/26,27

மேல்

பெயரொடு (1)

கூறு பெயரொடு வேறு பெயரிட்டு – கல்லாடம்:2 16/38

மேல்

பெயல் (1)

கரும் பெயல் குளிரின் களி மயில் என்ன – கல்லாடம்:2 84/13

மேல்

பெரிதின் (1)

பெரிதின் வாய்மை வெற்பனின் பெறினே – கல்லாடம்:2 8/38

மேல்

பெரிது (2)

பெறாததோர் திரு உருத்தான் பெரிது நிறுத்தி – கல்லாடம்:2 28/5
வரப்பெறு மா தவம் பெரிது உடையேமே – கல்லாடம்:2 80/34

மேல்

பெரிதே (1)

ஓதல் வேண்டும் வாழிய பெரிதே – கல்லாடம்:2 31/18

மேல்

பெரியர் (1)

வாய்ச்சொல் கேட்ட நல் மதியரும் பெரியர்
ஆய் மலர் தெரிந்திட்டு வான் பலி தூவி – கல்லாடம்:2 15/11,12

மேல்

பெரியவர் (1)

நறவு இரந்து அருளிய பெரியவர் பெருமான் – கல்லாடம்:2 77/13

மேல்

பெரு (62)

பெரு மலை சென்னியில் சிறுமதி கிடந்து என – கல்லாடம்:1 1/7
மாயா பெரு வரத்து ஒரு மயில் ஆகி – கல்லாடம்:1 2/18
பெரு நீர் வையை வளை நீர் கூடல் – கல்லாடம்:2 2/7
முந்துறும் பெரு மறை முளைத்து அருள் வாக்கால் – கல்லாடம்:2 3/12
இருள் மன தக்கன் பெரு மகம் உண்ண – கல்லாடம்:2 4/6
ஊற்று எழும் இரு கவுள் பெரு மத கொலை மலை – கல்லாடம்:2 4/17
சிற்றிடை பெரு முலை பொன் தொடி மடந்தை தன் – கல்லாடம்:2 6/21
பெரு வாய் ஒரு முக படகம் பெருக்க – கல்லாடம்:2 8/14
வடி விழி சிற்றிடை பெரு முலை மடவீர் – கல்லாடம்:2 10/1
திரு பெரு வதுவை பொருந்திய அ நாள் – கல்லாடம்:2 10/18
சொன்றி பெரு மலை தின்று நனி தொலைத்த – கல்லாடம்:2 10/19
மறி திரை பெரு நதி வரவழைத்து அருளிய – கல்லாடம்:2 10/22
பெரு நகர் கூடல் உறைதரு கடவுளை – கல்லாடம்:2 20/39
பன் மலர் சோலை விம்மிய பெரு மலர் – கல்லாடம்:2 22/49
நாளும் விளைக்கும் பெரு வயல் ஆகி – கல்லாடம்:2 23/23
முற்றிய பெரு நறவு எண்ணுடன் குடித்து – கல்லாடம்:2 24/11
கொடி புரை நுசுப்பின் பெரு முலையோளே – கல்லாடம்:2 24/36
கண்ணிய சுணங்கின் பெரு முலையவட்கே – கல்லாடம்:2 25/46
ஓவா பெரு மலை குஞ்சரம் மணக்க – கல்லாடம்:2 26/31
நண்ணுவன் சிறு நுதல் பெரு விழியோளே – கல்லாடம்:2 26/34
வெள்ள பெரு நதி கொள்ளை முகம் வைத்து – கல்லாடம்:2 27/2
கண் இவர் கூடல் பெரு வளம் பதியே – கல்லாடம்:2 27/32
ஆற்றாது பெரு முழை வாய் விட்டு கலுழ்ந்து என – கல்லாடம்:2 28/18
பெரு வளி மலக்க செயல் மறு மறந்தாங்கு – கல்லாடம்:2 29/6
இரு கரம் அடுக்கி பெரு நீர் வார்ப்ப – கல்லாடம்:2 30/13
அண்டம் விளர்ப்ப பெரு விளக்கு எடுப்ப – கல்லாடம்:2 30/15
பெரு நிலவு கான்ற நீறு கெழு பரப்பில் – கல்லாடம்:2 32/3
பெம்மான் வாழும் பெரு நகர் கூடல் – கல்லாடம்:2 35/11
கரும் குழல் பெரு மணம் போல – கல்லாடம்:2 35/17
நீங்கா பழன பெரு நகர் கூடல் – கல்லாடம்:2 36/4
உயிரொடும் வளர்ந்த பெரு நாண் தறியினை – கல்லாடம்:2 36/8
பேறு ஆங்கு ஒழிக பெரு நாண் கற்பினர் – கல்லாடம்:2 36/13
பெரு மறை நூல் பெறு கோன் முறை புரக்கும் – கல்லாடம்:2 51/1
திருக்களம் கறுத்த அருள் பெரு நாயகன் – கல்லாடம்:2 51/31
பெரு மறை முழங்கும் திரு நகர் கூடல் – கல்லாடம்:2 52/25
நுனி கவின் நிறைந்த திரு பெரு வடிவினள் – கல்லாடம்:2 53/1
பெரு முலை மூழ்க என் உளத்தினில் தொடா முன் – கல்லாடம்:2 53/9
பெரு நீர் ஊரர் நிறை நீர் விடுத்து – கல்லாடம்:2 54/36
பெரு நீர் ஆழி தொல் உலகுழிக்கே – கல்லாடம்:2 55/40
பெரு நதி சடை மிசை சிறுமதி சூடிய – கல்லாடம்:2 56/13
நரம்பு எடுத்து உமிழும் பெரு முலை தீம் பாற்கு – கல்லாடம்:2 56/19
பெரு நகை கூட்டமும் கழிவுசெய்து இவ்விடை – கல்லாடம்:2 57/18
பெரு மறை கூறி அறை விதி-தோறும் – கல்லாடம்:2 60/11
உடு நிறை வான பெரு முகடு உயர – கல்லாடம்:2 61/23
பெரு நிலவு எறித்த புகர் முக துளை கை – கல்லாடம்:2 62/21
பெரு மயல் எய்தா நிறையினள் ஆக – கல்லாடம்:2 65/8
இ பெரு நன்றி இன்று எற்கு உதவுதி – கல்லாடம்:2 65/25
பெரு முகில் வயிறளவு ஊட்டி – கல்லாடம்:2 65/30
தாங்கிய கூடல் பெரு நகர் – கல்லாடம்:2 69/34
பின்முன் குறித்த நம் பெரு மதி அழகு-கொல் – கல்லாடம்:2 70/18
பெரு நகர் நிறைந்த சிறுபிறை சென்னியன் – கல்லாடம்:2 72/11
பெரு மதில் பெற்றன அன்றோ – கல்லாடம்:2 74/28
அதற்கு அருள் கொடுத்த முதல் பெரு நாயகன் – கல்லாடம்:2 75/17
இடைநிலை அற்ற படர் பெரு வெளியகத்து – கல்லாடம்:2 78/7
உடல் முடக்கு எடுத்த தொழில் பெரு வாழ்க்கை – கல்லாடம்:2 78/8
பிலம் திறந்து அன்ன பெரு வாய் ஒரு பதும் – கல்லாடம்:2 78/18
நெடு விசும்பு அணவும் பெரு மதி தாங்கி – கல்லாடம்:2 81/8
பேர் அணி உடுத்த பெரு நகர் கூடல் – கல்லாடம்:2 81/15
பெரு வெள்ளிடையில் சிறுகால் பட்டு என – கல்லாடம்:2 88/2
ஈம பெரு விளக்கு எடுப்ப மற்று அதன் – கல்லாடம்:2 88/19
இருள் உடை பெரு முகில் வழி தெரிந்து ஏகன்-மின் – கல்லாடம்:2 93/9
பெரு நில தேவர்கள் மறை நீர் உகுப்ப – கல்லாடம்:2 95/1

மேல்

பெருக்க (1)

பெரு வாய் ஒரு முக படகம் பெருக்க
தடா உடல் உம்பர் தலைபெறும் முழவம் – கல்லாடம்:2 8/14,15

மேல்

பெருக்கிய (3)

அந்தணர் பெருக்கிய செம் தீ புகையும் – கல்லாடம்:2 50/20
செங்கோல் திருவுடன் தெளிந்து அறம் பெருக்கிய
மறுபுல வேந்தன் உறு படை எதிர்ந்த – கல்லாடம்:2 64/1,2
அடும் திறல் இனைய கொடும் தொழில் பெருக்கிய
மாயா வரத்த பெரும் குருகு அடித்து – கல்லாடம்:2 67/21,22

மேல்

பெருக்கினர் (1)

திருக்கண் கண்ட பெருக்கினர் போல – கல்லாடம்:2 50/30

மேல்

பெருக்கும் (2)

நின்றுநின்று ஓங்கி நிலை அறம் பெருக்கும்
ஆனா பெரும் புகழ் அருள் நகர் கூடல் – கல்லாடம்:2 41/36,37
முன் தவம் பெருக்கும் முதல் தாபதர்க்கும் – கல்லாடம்:2 63/23

மேல்

பெருக்கெடுத்து (1)

பெருக்கெடுத்து இழிதரும் வெள்ள பிரச – கல்லாடம்:2 97/3

மேல்

பெருக (1)

திக்கு விண் பெருக திருமதி கைலை – கல்லாடம்:2 57/13

மேல்

பெருகலானும் (1)

பேர் இதழ் தாமரை பெருகலானும்
நெடு விசும்பு அணவும் பெரு மதி தாங்கி – கல்லாடம்:2 81/7,8

மேல்

பெருகி (3)

ஒன்றி அழுங்க நின்ற நிலை பெருகி
மாதிர களிற்றினை செவிடுற கொடுக்கும் – கல்லாடம்:2 39/14,15
பல நாள் பெருகி ஒரு நாள் உடைந்து – கல்லாடம்:2 66/16
தேவர் நின்று இசைக்கும் தேவனின் பெருகி
குரு வளர் மரகத பறை தழை பரப்பி – கல்லாடம்:2 71/4,5

மேல்

பெருகிய (2)

ஒருவுக உள்ளத்து பெருகிய நடுக்கம் – கல்லாடம்:2 24/18
கரு முகில் வளைந்து பெருகிய போல – கல்லாடம்:2 51/28

மேல்

பெருகு (1)

திரு முத்தமிழும் பெருகு தென்மலையத்து – கல்லாடம்:2 81/28

மேல்

பெருகுநர் (1)

இரு சரண் பெருகுநர் போல – கல்லாடம்:2 11/31

மேல்

பெருகும் (1)

இரண்டு முகிழ்செய்து நெஞ்சுற பெருகும்
வற்றா மேனி வெள்ளத்துள் மறிய – கல்லாடம்:2 18/20,21

மேல்

பெருஞ்சூடகமும் (1)

பெருஞ்சூடகமும் ஒருங்கு பெற்று அணிக – கல்லாடம்:2 14/41

மேல்

பெருத்தன (1)

சொல்லினர் தோம் என துணை முலை பெருத்தன
பல உடம்பு அழிக்கும் பழி ஊன் உணவினர் – கல்லாடம்:2 1/17,18

மேல்

பெருத்து (1)

காண் குறி பெருத்து கச்சது கடிந்தே – கல்லாடம்:2 45/4

மேல்

பெருந்தகை (1)

பெருந்தகை வேந்தன் அரும் குணம் போல – கல்லாடம்:2 51/2

மேல்

பெரும் (95)

பெரும் காற்று விடுத்த நெடும் புழை கரத்த – கல்லாடம்:1 1/20
மணிக்கால் அறிஞர் பெரும் குடி தோன்றி – கல்லாடம்:1 2/52
பெரும் தமிழ் விரித்த அரும் தமிழ் புலவனும் – கல்லாடம்:1 2/54
மலர் பதம் நீங்கா உள பெரும் சிலம்ப – கல்லாடம்:2 1/15
ஈங்கு இவை நிற்க சீறூர் பெரும் தமர் – கல்லாடம்:2 1/24
கூடல் அம் பெரும் பதி கூறார் கிளை என – கல்லாடம்:2 3/18
ஏகவும் துணிந்தனம் எம் பெரும் படிறு – கல்லாடம்:2 4/15
அண்ட பெரும் திரன் அடைவு ஈன்று அளித்த – கல்லாடம்:2 6/35
மணி மிளிர் பெரும் கட்கு இமை காப்பு என்ன – கல்லாடம்:2 7/2
பெரும் கவின் முன் நாள் பேணிய அரும் தவம் – கல்லாடம்:2 10/9
கூடல் அம் பதி உறை குண பெரும் கடவுள் – கல்லாடம்:2 10/23
விருந்து கொண்டு உண்ணும் பெரும் தவர் போல – கல்லாடம்:2 14/46
பெரும் திரள் கண்ணுள் பேச்சு நின்று ஓர்ந்து – கல்லாடம்:2 15/10
கழு கடை அன்ன கூர் வாய் பெரும் கண் – கல்லாடம்:2 15/17
நெட்டு உடல் பேழ் வாய் பெரும் சுறவு தடியும் – கல்லாடம்:2 15/21
அ பெரும் கங்கை கக்கிய திரை என – கல்லாடம்:2 16/10
பெரும் சேற்று கழனி கரும்பு பெறு காலை – கல்லாடம்:2 17/26
முழங்க பெரும் குரல் கூஉய் – கல்லாடம்:2 17/57
மணம்கொள் பேரணி பெரும் கவின் மறைத்தது என்று – கல்லாடம்:2 18/16
இரும் திசை போக்கு பெரும் தோள் ஆக – கல்லாடம்:2 20/27
அன்ன திரளும் பெரும் கரி ஆக – கல்லாடம்:2 21/23
பெரும் தேன் இறாலொடு குறி விழ எறிந்தும் – கல்லாடம்:2 22/34
பெரும் சுனை விழித்த நீலம் கொய்தும் – கல்லாடம்:2 22/37
நுங்கள் இன்பம் பெரும் துணை என்-பால் – கல்லாடம்:2 23/39
பெரும் கிளை கூண்டு வெட்சி மலர் பரப்பி – கல்லாடம்:2 24/4
கோல் தலை பனிப்ப வான் விடு பெரும் குரல் – கல்லாடம்:2 24/15
பெரும் தவர் குழுவும் அரும் கதி இருப்பும் – கல்லாடம்:2 24/20
நிறைந்து உறை முக்கண் பெரும் திறல் அடிகள் – கல்லாடம்:2 24/34
கரும் கை வெண் கோட்டு சிறு கண் பெரும் களிறு – கல்லாடம்:2 25/3
குறிஞ்சி பெரும் தேன் இறாலொடு சிதைத்து – கல்லாடம்:2 25/6
சிறுநகை கொண்ட ஒரு பெரும் தீயின் – கல்லாடம்:2 25/27
குடமுழவு இசைப்ப பெரும் அருள் நல்கி – கல்லாடம்:2 25/32
பெரும் தேன் செவியும் கரும் தேன் தொடர்ச்சியும் – கல்லாடம்:2 26/30
எண்ணில் பெறாத அண்ட பெரும் திரள் – கல்லாடம்:2 27/16
வள்ளையில் கருவியில் பெரும் புகழ் விளைப்ப – கல்லாடம்:2 30/17
பெரும் பொருள் இன்பு எனின் பிறிது தடை இன்றே – கல்லாடம்:2 31/16
தாளி போந்தின் தரு மயிர் பெரும் தலை – கல்லாடம்:2 34/3
பழ உடல் காட்டும் தீரா பெரும் பழி – கல்லாடம்:2 35/9
கூர் வாய் பறை தபு பெரும் கிழ நாரை – கல்லாடம்:2 36/2
பெரும் கடல் முகந்து வயிறு நிறை நெடும் கார் – கல்லாடம்:2 37/2
தரும பெரும் பயிர் உலகு பெற விளைக்கும் – கல்லாடம்:2 37/14
சுருங்கை வழி அடைக்கும் பெரும் கழி பழன – கல்லாடம்:2 37/20
பேர் அருள் கூடல் பெரும் பதி நிறைந்த – கல்லாடம்:2 38/26
ஆனா பெரும் புகழ் அருள் நகர் கூடல் – கல்லாடம்:2 41/37
முடங்கு_உளை கண்ட பெரும் துயர் போல – கல்லாடம்:2 41/51
புனை பெரும் கவியுள் தரு பொருள் என்ன – கல்லாடம்:2 45/2
நெஞ்சு அறை பெரும் துயர் ஓவாது உடற்ற – கல்லாடம்:2 46/15
அற பெரும் கூடல் பிறை சடை பெருமான் – கல்லாடம்:2 48/13
திருவடி பெரும் தேன் பருகுநர் போல – கல்லாடம்:2 48/14
அவன் பகை முறித்த அருள் பெரும் கடவுள் – கல்லாடம்:2 49/16
அரும் தமிழ் கீரன் பெரும் தமிழ் பனுவல் – கல்லாடம்:2 50/28
பெரும் தேன் கவரும் சிறுகுடி மகளே – கல்லாடம்:2 51/12
ஆதலின் பெரும் புகழ் அணைகுதியாயின் – கல்லாடம்:2 51/25
வரை என நிறுத்திய திரு உறை பெரும் தோள் – கல்லாடம்:2 52/6
பிறந்தவர் பிறவா பெரும் பதி அகத்தும் – கல்லாடம்:2 52/14
மலை சூழ் கிடந்த பெரும் குல பரப்பை – கல்லாடம்:2 54/31
கரும் கடல் குடித்தலின் பெரும் தழல் கொழுந்தும் – கல்லாடம்:2 56/3
நாமகள் பெரும் கடல் நால் கோட்டு ஒருத்தல் – கல்லாடம்:2 57/14
பெரும் கத திருநதி ஒருங்குழி மடங்க – கல்லாடம்:2 57/23
கரும் கவை தீ நா பெரும் பொறி பகு வாய் – கல்லாடம்:2 60/5
ஏழ் கடல் வளைந்த பெரும் கடல் நாப்பண் – கல்லாடம்:2 61/1
இரு புல வேந்தர் மறுபுல பெரும் பகை – கல்லாடம்:2 61/19
உணா நிலன் உண்டு பராய அ பெரும் தவம் – கல்லாடம்:2 62/2
பெரும் குலை மணந்த நிறை நீர் சிறை புனல் – கல்லாடம்:2 63/3
வரும் தொழில் அனைத்தும் வளர் பெரும் பகலே – கல்லாடம்:2 64/22
தோன்றி நின்று அழியா துகள் அறு பெரும் தவம் – கல்லாடம்:2 65/10
பெரும் தமிழ் அமுதும் பிரியாது கொடுத்த – கல்லாடம்:2 65/19
ஆர்த்து எழு பெரும் குரல் அமைந்து நின்று ஒடுங்கி நின் – கல்லாடம்:2 65/23
பெரும் தீ குணனும் ஒழிந்து உளம் குளிரும் – கல்லாடம்:2 65/24
நிலை உடை பெரும் திரு நேர்படு காலை – கல்லாடம்:2 66/1
பெரும் கடல் வயிறு கிடங்கு எழ கடைந்த – கல்லாடம்:2 66/8
அருள் கரை காணா அன்பு எனும் பெரும் கடல் – கல்லாடம்:2 66/15
மாயா வரத்த பெரும் குருகு அடித்து – கல்லாடம்:2 67/22
பெரும் துயில் இன்பம் பொருந்துபு நடுநாள் – கல்லாடம்:2 68/9
பெரும் பகலிடையே பொதும்பரில் பிரிந்த – கல்லாடம்:2 71/17
பெரும் துயர் அகற்றி அறம் குடி நாட்டி – கல்லாடம்:2 75/1
பதுக்கைசெய் அம்பல திரு பெரும் பதியினும் – கல்லாடம்:2 76/14
அரும் தமிழ் கூடல் பெரும் தவர் காண – கல்லாடம்:2 76/19
கோயில்கொண்டிருந்த குண பெரும் குன்றம் – கல்லாடம்:2 81/16
பெரும் கார் கரும் கடு அரும்பிய மிடற்றோன் – கல்லாடம்:2 81/25
பின்னொடும் சென்ற என் பெரும் பீழை நெஞ்சம் – கல்லாடம்:2 82/46
பெரும் களவு இணர் தந்து அவை கீழ் குலவிய – கல்லாடம்:2 83/8
அன்னையின் போக்கிய அரும் பெரும் தவறு – கல்லாடம்:2 83/28
பெரும் திரு கூடல் அரும் தவர் பெருமான் – கல்லாடம்:2 84/8
நல் பெரும் தூது காட்டும் – கல்லாடம்:2 84/21
மன்னி நின்று அடங்கா குடுமி அம் பெரும் தழல் – கல்லாடம்:2 86/15
பேர் அருள் திருநூல் பெரும் துறவு எங்கும் – கல்லாடம்:2 86/32
பெரும் புனல் ஊர எம் இல்லம் – கல்லாடம்:2 87/41
நெட்டு உகிர் கரும் கால் தோல் முலை பெரும் பேய் – கல்லாடம்:2 88/15
கணிச்சி அம் கைத்தலத்து அருள் பெரும் காரணன் – கல்லாடம்:2 89/8
அகில் சுடு பெரும் புனம் உழு பதன் காட்ட – கல்லாடம்:2 94/21
பெரும் தேன் அருந்தி எ பேர் இசை அனைத்தினும் – கல்லாடம்:2 95/17
கூடல் பதி வரும் குண பெரும் குன்றினன் – கல்லாடம்:2 97/17
பெரும் தோள் சிறுநகை முன்னையள் அல்லள் – கல்லாடம்:2 98/49
சிற்றிடை பெரும் தோள் தே_மொழி தானே – கல்லாடம்:2 98/58

மேல்

பெரும்பதம் (1)

அரும் பெறல் உளதாம் பெரும்பதம் காட்டி – கல்லாடம்:2 25/34

மேல்

பெரும (1)

கல்லா மனனினும் செல்லுதி பெரும
இளமையும் இன்பமும் வளனும் காட்சியும் – கல்லாடம்:2 20/41,42

மேல்

பெருமகள் (1)

பெண் என பெயரிய பெருமகள் குலனுள் – கல்லாடம்:2 62/1

மேல்

பெருமணம் (1)

சீறிதழ் சாதி பெருமணம் போல – கல்லாடம்:2 99/44

மேல்

பெருமதி (3)

பெருமதி நீடுவர் சிறுமதி_நுதலே – கல்லாடம்:2 11/32
நின்றனை பெருமதி நின் தொழுது ஏற்கும் – கல்லாடம்:2 13/7
மதி நுதல் பெருமதி மலர் முகத்து ஒருத்தியை – கல்லாடம்:2 54/13

மேல்

பெருமாற்கு (1)

மாறி குனித்த நீறு அணி பெருமாற்கு
அமுத போனகம் கதுமென உதவும் – கல்லாடம்:2 23/35,36

மேல்

பெருமான் (34)

உழல் மதில் சுட்ட தழல் நகை பெருமான்
வணங்கி நின்று ஏத்த குரு மொழி வைத்தோய் – கல்லாடம்:1 2/41,42
கூடல் பெருமான் பொதிய பொருப்பகத்து – கல்லாடம்:2 4/9
பாரிடம் குனிப்ப ஆடிய பெருமான்
வையகத்து உருவினர் மலரா அறிவினை – கல்லாடம்:2 7/33,34
பாசடை மறைக்கும் கூடல் பெருமான்
செம் தாள் விடுத்து உறை அந்தர்கள்-தம்மினும் – கல்லாடம்:2 7/38,39
நாடு இரு முனிவர்க்கு ஆடிய பெருமான்
திருவடி வினவா கரு உறை மாக்கள் – கல்லாடம்:2 8/29,30
முழுதும் நிறைந்த முக்கண் பெருமான்
பனி கதிர் குலவன் பயந்து அருள் பாவையை – கல்லாடம்:2 10/16,17
முதல் கவி பாடிய முக்கண் பெருமான்
மாதுடன் தோன்றி கூடலுள் நிறைந்தோன் – கல்லாடம்:2 13/23,24
மிச்சிலுக்கு இன்னும் இச்சைசெய் பெருமான்
கூடல் நின்று ஏத்தினர் குல கிளை போல – கல்லாடம்:2 14/35,36
நாடக விதியொடு ஆடிய பெருமான்
மதுரை மா நகர் செழியன் ஆகி – கல்லாடம்:2 21/60,61
ஒருநாள் கண்ட பெருமான் இறைவன் – கல்லாடம்:2 22/42
மூவா திருப்பதத்து ஒரு தனி பெருமான்
எண்ணில் பெறாத அண்ட பெரும் திரள் – கல்லாடம்:2 27/15,16
வெள்ளியம்பலத்துள் துள்ளிய பெருமான்
கூடல் மா நகர் அன்ன பொன்_கொடி – கல்லாடம்:2 34/13,14
கரம் மான் தரித்த பெருமான் இறைவன் – கல்லாடம்:2 36/5
நால் படை வன்னியர் ஆக்கிய பெருமான்
முள் உடை பேழ் வாய் செம் கண் வரால் இனம் – கல்லாடம்:2 37/15,16
புண்ணிய கூடலுள் நிறை பெருமான்
திருவடி சுமந்த அருளினர் போல – கல்லாடம்:2 39/16,17
அருள் நிறை பெருமான் இருள் நிறை மிடற்றோன் – கல்லாடம்:2 40/21
திருநடம் நவின்ற உலகு உயிர் பெருமான்
கடல் மா கொன்ற தீ படர் நெடு வேல் – கல்லாடம்:2 41/9,10
கூடல் பெருமான் பொன் பிறழ் திருவடி – கல்லாடம்:2 42/29
நீங்காது உறையும் நிமிர் சடை பெருமான்
உரகன் வாய் கீண்ட மாதவன் போல – கல்லாடம்:2 47/20,21
அற பெரும் கூடல் பிறை சடை பெருமான்
திருவடி பெரும் தேன் பருகுநர் போல – கல்லாடம்:2 48/13,14
மஞ்சு அடை குழல் பெறு செம் சடை பெருமான்
அரும் தமிழ் கீரன் பெரும் தமிழ் பனுவல் – கல்லாடம்:2 50/27,28
கூடல் பெருமான் நீடு அருள் மூழ்கி – கல்லாடம்:2 53/18
கிடந்து ஒளி பிறழும் நெடும் சடை பெருமான்
படை நான்கு உடன்று பஞ்சவன் துரந்து – கல்லாடம்:2 55/11,12
கூடல் பெருமான் குரை கழல் கூறும் – கல்லாடம்:2 57/26
சூழ்கொள இருந்த கூடல் அம் பெருமான்
முழுதுற நிறைந்த இரு பதம் புகழார் – கல்லாடம்:2 59/33,34
தோடு அணி கடுக்கை கூடல் எம் பெருமான்
எவ்வுயிர் இருந்தும் அவ் உயிர் அதற்கு – கல்லாடம்:2 65/20,21
வெண் சிறை முடித்த செம் சடை பெருமான்
கூடற்கு இறையோன் குறி உரு கடந்த – கல்லாடம்:2 67/23,24
நிறைந்து உறை கறை மிடற்று அறம் கெழு பெருமான்
பேர் அருள் அளித்த மா தவர் போல – கல்லாடம்:2 70/9,10
நறவு இரந்து அருளிய பெரியவர் பெருமான்
கூக்குரல் கொள்ளா கொலை தரு நவ்வியும் – கல்லாடம்:2 77/13,14
மறிய புதைத்த மறம் கெழு பெருமான்
நீர் மா கொன்ற சேயோன் குன்றமும் – கல்லாடம்:2 80/16,17
பெரும் திரு கூடல் அரும் தவர் பெருமான்
இரு சரண் அகலா ஒருமையர் உளம் என – கல்லாடம்:2 84/8,9
ஆடிய பெருமான் அமர்ந்து நிறை கூடல் – கல்லாடம்:2 85/40
நான்மறை புகழும் கூடலம் பெருமான்
வான் முதல் ஈன்ற மலைமகள்-தன்னொடும் – கல்லாடம்:2 86/24,25
அமரர் கண் களிப்ப ஆடிய பெருமான்
மதுரை அம் பதி எனும் ஒரு கொடி மடந்தை – கல்லாடம்:2 99/42,43

மேல்

பெருமை (1)

பெருமை நோக்கின் சிறுமையது உண்டே – கல்லாடம்:2 17/8

மேல்

பெருமையும் (1)

தாரொடு மயங்கி பெருமையும் இலனே – கல்லாடம்:2 37/24

மேல்

பெருவிரல் (1)

திருவடி பெருவிரல் தலை நக நுதியால் – கல்லாடம்:2 78/22

மேல்

பெருவினை (1)

தொக்க தீ பெருவினை சூழ்ந்தன போலவும் – கல்லாடம்:2 38/28

மேல்

பெற்ற (10)

தாமரை தவம்செய்து அளியுடன் பெற்ற
திருமகட்கு அடுத்தது என் என்று – கல்லாடம்:2 3/20,21
செரு விழும் இச்சையர் தமது உடல் பெற்ற
இன்புகள் நோக்கா இயல்பது போல – கல்லாடம்:2 7/42,43
பள்ளி கணக்கர் உள்ளத்து பெற்ற
புறம் ஆர் கல்வி அற மா மகளை – கல்லாடம்:2 17/22,23
அணி வான் பெற்ற இ பிறையை – கல்லாடம்:2 19/34
நெடுமலை பெற்ற ஒரு மகள் காண – கல்லாடம்:2 21/27
கார் உடல் பெற்ற தீ விழி குறளினை – கல்லாடம்:2 33/17
பெண் உடல் பெற்ற சென்னி அம் பிறையோன் – கல்லாடம்:2 41/38
அரி கடல் மூழ்கி பெறும் அருள் பெற்ற
நிலமகள் கடந்தது நலனவள் பொறையே – கல்லாடம்:2 62/6,7
பிறந்து அருள் குன்றம் ஒருங்குற பெற்ற
மா தவ கூடல் மதி சடை காரணன் – கல்லாடம்:2 73/11,12
பாசுடல் உளை மா ஏழ் அணி பெற்ற
ஒரு கால் தேர் நிறைந்து இருள் உடைத்து எழுந்த – கல்லாடம்:2 95/14,15

மேல்

பெற்றவர் (1)

இரு தாள் பெற்றவர் பெறும் திரு போல – கல்லாடம்:2 22/52

மேல்

பெற்றன (1)

பெரு மதில் பெற்றன அன்றோ – கல்லாடம்:2 74/28

மேல்

பெற்றாள் (1)

உற்று இவள் பெற்றாள் என்பதும் தகுமே – கல்லாடம்:2 73/30

மேல்

பெற்று (12)

பெருஞ்சூடகமும் ஒருங்கு பெற்று அணிக – கல்லாடம்:2 14/41
பெற்று வளர்த்த கல் புடை ஆரம் – கல்லாடம்:2 17/19
பல குறி பெற்று இவ் உலகு உயிர் அளித்த – கல்லாடம்:2 39/6
பறைவர தழீஇ பெற்று உவை-தம் கம்பலைக்கு – கல்லாடம்:2 74/14
நிலம் பெற்று இமைத்து நெடு வரை இறும்பிடை – கல்லாடம்:2 78/12
எழு என உடம்பு பெற்று எண்பது அங்குலியின் – கல்லாடம்:2 82/19
சுற்றுடல் பெற்று துணை பதினாயிரம் – கல்லாடம்:2 83/5
கழுவிய திரு மணி கால் பெற்று என்ன – கல்லாடம்:2 84/20
அமரர் பெற்று உண்ணும் அமுது உரு கொண்டு – கல்லாடம்:2 88/8
அமர் பெற்று ஒன்னலர் அறிவுற படர – கல்லாடம்:2 88/16
பெற்று உயிர்த்த அரும் பொன் தொடி மடந்தை-தன் – கல்லாடம்:2 93/6
பாண்டரங்கத்து ஒரு பாடு பெற்று அமைந்த – கல்லாடம்:2 99/26

மேல்

பெற்றும் (1)

இவள் நடை பெற்றும் இவள் பயின்றும் இரங்கியும் – கல்லாடம்:2 92/20

மேல்

பெற்றெடுத்த (1)

உலகு பெற்றெடுத்த ஒரு தனி செல்வி – கல்லாடம்:2 58/29

மேல்

பெற (18)

பெற நிதி கொடுக்க என உற விடுத்து அருளிய – கல்லாடம்:2 11/29
தண்ணம் பிறையும் தலை பெற நிறுத்துக – கல்லாடம்:2 14/39
வால் பெற முளைத்த கூன் கோடானும் – கல்லாடம்:2 19/4
தலை பெற இருந்த நிலை புகழானும் – கல்லாடம்:2 19/18
ஒரு தாள் விண்ணத்து இருமை பெற நீட்டிய – கல்லாடம்:2 27/6
தரும பெரும் பயிர் உலகு பெற விளைக்கும் – கல்லாடம்:2 37/14
அரை பெற பிணித்த கல் குளி மாக்கள் – கல்லாடம்:2 43/2
முகன் தரும் இருசெயல் அகன் பெற கொளுவும் – கல்லாடம்:2 50/2
புக்குழிப்புக்குழி புலன் பெற கொடுக்கும் – கல்லாடம்:2 51/4
அறம் முதல் நான்கும் பெற அருள்செய்த – கல்லாடம்:2 53/17
மற்று அவர் மயக்கம் கண்டு அவர் கண் பெற
திரு நுதல் கிழித்த தனி விழி நாயகன் – கல்லாடம்:2 69/32,33
இரு பால் இலங்க உலகு பெற நிறைந்த – கல்லாடம்:2 71/12
ஓதல் வேண்டும் புலன் பெற குறித்தே – கல்லாடம்:2 71/39
புரை அறும் அன்பினர் விழி பெற தோற்றி – கல்லாடம்:2 76/12
கண்டன மகம்-தொறும் கலி பெற சென்று – கல்லாடம்:2 77/12
அ நரம்பு இருபத்தாறு அங்குலி பெற
இடக்கரம் துவக்கி இடக்கீழ் அமைத்து – கல்லாடம்:2 82/24,25
ஒன்று பத்து ஆயிரம் நன்று பெற புனைந்தும் – கல்லாடம்:2 89/20
குழவி அம் கதிர் பெற திருமலர் அணங்க – கல்லாடம்:2 94/25

மேல்

பெறல் (2)

அரும் பெறல் உளதாம் பெரும்பதம் காட்டி – கல்லாடம்:2 25/34
துறவால் அறனால் பெறல்_இல் மாந்தர் – கல்லாடம்:2 38/29

மேல்

பெறல்_இல் (1)

துறவால் அறனால் பெறல்_இல் மாந்தர் – கல்லாடம்:2 38/29

மேல்

பெறலாம் (1)

மகவினை பெறலாம் வரம் வேண்டினளே – கல்லாடம்:2 76/26

மேல்

பெறா (2)

மென் நடை குழை செவி பெறா வெறும் கரும் பிடி – கல்லாடம்:2 42/3
குறுமுனி பெறும் மறை நெடு மறை பெறா முதல் – கல்லாடம்:2 73/8

மேல்

பெறாத (1)

எண்ணில் பெறாத அண்ட பெரும் திரள் – கல்லாடம்:2 27/16

மேல்

பெறாததோர் (1)

பெறாததோர் திரு உருத்தான் பெரிது நிறுத்தி – கல்லாடம்:2 28/5

மேல்

பெறாது (1)

கண்ணினும் கொள்ளாது உண்ணவும் பெறாது
நிழல்-தலை மணந்த புனல் கிடவாது – கல்லாடம்:2 63/6,7

மேல்

பெறின் (1)

என பெறின் மாலை என் உயிர் உளைப்பதும் – கல்லாடம்:2 71/31

மேல்

பெறினே (1)

பெரிதின் வாய்மை வெற்பனின் பெறினே – கல்லாடம்:2 8/38

மேல்

பெறு (14)

முறிக்கலை சுருக்கு கரம் பெறு முனிவர் – கல்லாடம்:1 1/15
நிறை உடை கல்வி பெறு மதி மாந்தர் – கல்லாடம்:2 2/4
சயம் பெறு வீரனை தந்து அவன்-தன்னால் – கல்லாடம்:2 4/4
துணர் பெறு கோதையும் ஆரமும் புனைக – கல்லாடம்:2 14/37
பெரும் சேற்று கழனி கரும்பு பெறு காலை – கல்லாடம்:2 17/26
நின் பெறு தவத்தினை முற்றிய யானும் – கல்லாடம்:2 39/5
மஞ்சு அடை குழல் பெறு செம் சடை பெருமான் – கல்லாடம்:2 50/27
பெரு மறை நூல் பெறு கோன் முறை புரக்கும் – கல்லாடம்:2 51/1
இவளே கடம் பெறு கரி குலம் மடங்கல் புக்கு அகழ – கல்லாடம்:2 51/19
குறுமுனி தேறவும் பெறு முதல் புலவர்கள் – கல்லாடம்:2 63/20
மங்கையர் குழை பெறு வள்ளையில் தடைகொண்டு – கல்லாடம்:2 74/9
உறை சூர் பகையினன் பெறு திரு வயிற்றினள் – கல்லாடம்:2 79/13
தன் பரங்குன்றம் தமர் பெறு கூடற்கு – கல்லாடம்:2 87/39
சேயோன் குன்று அக திரு பெறு கூடல் – கல்லாடம்:2 91/4

மேல்

பெறுக (1)

இலங்கை அவ் அரக்கற்கு இளையோன் பெறுக என – கல்லாடம்:2 95/37

மேல்

பெறுகுவது (1)

பெறுகுவது என் பால் இன்று நின் பேறே – கல்லாடம்:2 56/29

மேல்

பெறுதற்கு (1)

உலகம் மூன்றும் பெறுதற்கு அரியது என்று – கல்லாடம்:2 18/38

மேல்

பெறும் (15)

கண் அருள் நிறைந்த கவின் பெறும் எயிற்ற – கல்லாடம்:1 1/8
நிறையும் பொறையும் பெறும் நிலையானும் – கல்லாடம்:2 11/3
முகில் உரு பெறும் ஓர் கொடுமர கிராதன் – கல்லாடம்:2 14/26
பெறும் உயிர் தந்து மருவி அளித்த – கல்லாடம்:2 16/35
சிறிது நின் குறுவெயர் பெறும் அணங்கு ஆறி – கல்லாடம்:2 22/25
இரு தாள் பெற்றவர் பெறும் திரு போல – கல்லாடம்:2 22/52
சொல்லா நிலை பெறும் சூளுறின் மயங்கி – கல்லாடம்:2 44/2
பகை தவிர் பாம்பும் நகை பெறும் எருக்கமும் – கல்லாடம்:2 58/32
அரி கடல் மூழ்கி பெறும் அருள் பெற்ற – கல்லாடம்:2 62/6
குறுமுனி பெறும் மறை நெடு மறை பெறா முதல் – கல்லாடம்:2 73/8
அவள் தர இவள் பெறும் அரந்தை அம் பேறினுக்கு – கல்லாடம்:2 73/27
மகிழ் நடம் பேய் பெறும் வடவன காட்டினும் – கல்லாடம்:2 76/16
திரு பெறும் அயலவர் காண – கல்லாடம்:2 80/33
எரி மழு நவ்வியும் பெறும் அருள் திருவுருவு – கல்லாடம்:2 87/25
அம்மை பெயர் பெறும் அருள் பேய் குனிப்ப – கல்லாடம்:2 99/40

மேல்

பெறுமே (3)

நன்னரில் கொண்டு குளிரும் பெறுமே – கல்லாடம்:2 86/38
தோட்டி நின்று அளிக்கும் தொன்மை அது பெறுமே – கல்லாடம்:2 89/25
கூறவும் பெறுமே ஆறது நிற்க – கல்லாடம்:2 92/19

மேல்

பெறுமோ (1)

அவ் வினை பயனுழி அரும் தவம் பெறுமோ
இடைவழி நீங்கி என் எதிர் உறும்-கொல்லோ – கல்லாடம்:2 82/48,49

மேல்

பெறுவது (1)

இவளோ துயரம் பெறுவது என் என்று – கல்லாடம்:2 23/48

மேல்