சே – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 7
சேக்கை 2
சேக்கையது 1
சேக்கையுள் 1
சேகர 1
சேகரத்து 2
சேகரம் 2
சேடியர் 1
சேடு 2
சேண் 2
சேணின் 1
சேணும் 1
சேதாவும் 1
சேப்படு 1
சேம 1
சேய் 1
சேயாய் 1
சேயோன் 3
சேர் 3
சேர்க்கின் 1
சேர்த்தி 2
சேர்த்து 1
சேர்ந்து 2
சேர்ப்பன் 1
சேர 4
சேரன் 2
சேரா 2
சேரி 2
சேலை 1
சேவடி 2
சேவல் 6
சேவல்_கொடியோன் 1
சேவலும் 3
சேவலோடு 1
சேவற்கு 1
சேற்று 1
சேறலும் 1
சேறி 1
சேறு 1

சே (7)

சே இதழ் முளரியும் கார் இதழ் குவளையும் – கல்லாடம்:2 6/32
சே இதழ் இலவத்து உடை காய் பஞ்சி – கல்லாடம்:2 7/18
பசும் தாள் சே கொள் ஆம்பல் மலர – கல்லாடம்:2 38/17
சே கொள் முளரி அலர்த்திய திருவடி – கல்லாடம்:2 46/11
சே இதழ் குவளையின் நிரைநிரை உறங்கும் – கல்லாடம்:2 51/8
தாமரை அக-வயின் சே இதழ் வாட்டிய – கல்லாடம்:2 78/21
சே கொள் கண்ணை செம் மொழி பெயர்தந்து – கல்லாடம்:2 86/9

மேல்

சேக்கை (2)

அன்றில் புல் சேக்கை புக்கு அலகு பெடை அணைய – கல்லாடம்:2 38/10
மலர் சுமை சேக்கை மது மலர் மறுத்த இ – கல்லாடம்:2 80/28

மேல்

சேக்கையது (1)

திரு மனம் கொள்ளா சேக்கையது ஆக – கல்லாடம்:2 80/29

மேல்

சேக்கையுள் (1)

மற்ற தன் சேக்கையுள் வதிபெறும் செம் கால் – கல்லாடம்:2 74/12

மேல்

சேகர (1)

குடுமி சேகர சமன் ஒளி சூழ்ந்த – கல்லாடம்:2 98/12

மேல்

சேகரத்து (2)

அகன்று கட்டு அவிழ்ந்த சேகரத்து இருத்தி – கல்லாடம்:2 43/18
சேகரத்து இறங்கும் திருநதி துறையும் – கல்லாடம்:2 66/23

மேல்

சேகரம் (2)

சேகரம் கிழித்த நிறைமதி உடலம் – கல்லாடம்:2 68/14
ஆடக சயில சேகரம் தொடர்ந்த – கல்லாடம்:2 69/25

மேல்

சேடியர் (1)

கரும் கால் மள்ளர் உழவ சேடியர்
நிரைநிரை வணங்கி மதகு எதிர்கொள்ள – கல்லாடம்:2 42/25,26

மேல்

சேடு (2)

படிந்து சேடு எறியும் செம் கண் கவரியும் – கல்லாடம்:2 54/30
காரான் இனங்கள் சேடு எறிந்து உழக்கும் – கல்லாடம்:2 90/11

மேல்

சேண் (2)

வளர்த்த சேண் மலை உள துயர் கொண்டு – கல்லாடம்:2 17/43
சேண் குளம் மலர்ந்த செந்தாமரையும் – கல்லாடம்:2 29/27

மேல்

சேணின் (1)

கண்ட காட்சி சேணின் குறியோ – கல்லாடம்:2 22/1

மேல்

சேணும் (1)

எம் ஊர் சேணும் நும் ஊர் குன்றமும் – கல்லாடம்:2 24/19

மேல்

சேதாவும் (1)

நிலம் படர் தோகை குலம் கொள் சேதாவும்
அவ்வுழி மாத்திரை அரை எழு காலை – கல்லாடம்:2 87/22,23

மேல்

சேப்படு (1)

பூத்து அலர் விரித்த சேப்படு தாமரை – கல்லாடம்:2 24/32

மேல்

சேம (1)

சலபதி ஆய்ந்து சேம நிலை வைத்த – கல்லாடம்:2 23/20

மேல்

சேய் (1)

சேய் குறி இனிய ஆயின் – கல்லாடம்:2 100/36

மேல்

சேயாய் (1)

நீயும் குதட்டினை ஆயின் சேயாய்
நரம்பு எடுத்து உமிழும் பெரு முலை தீம் பாற்கு – கல்லாடம்:2 56/18,19

மேல்

சேயோன் (3)

நீர் மா கொன்ற சேயோன் குன்றமும் – கல்லாடம்:2 80/17
சேயோன் குன்று அக திரு பெறு கூடல் – கல்லாடம்:2 91/4
சேயோன் பரங்குன்று இழை என செறித்து – கல்லாடம்:2 92/6

மேல்

சேர் (3)

கள் அவிழ் குழல் சேர் கருணை எம்பெருமான் – கல்லாடம்:2 1/14
கைதை அம் கரை சேர் பொய்தல் பாவையோடு – கல்லாடம்:2 9/21
சொல் தவறு உவக்கும் பித்தினர் சேர் புலன் – கல்லாடம்:2 97/5

மேல்

சேர்க்கின் (1)

தேக்கின் நெருப்பின் சேர்க்கின் அங்கையின் – கல்லாடம்:2 98/16

மேல்

சேர்த்தி (2)

களி தூங்கு உளத்தொடும் மெல்லென சேர்த்தி
இரண்டு பெயர் காத்த தோலா கற்பு – கல்லாடம்:2 18/28,29
விழுந்தும் எழுந்தும் செவ்வழி சேர்த்தி
குருவி விண் இசைக்கும் அந்தர குலிதம் – கல்லாடம்:2 100/18,19

மேல்

சேர்த்து (1)

இரு விரல் நிமிர்த்து புரிவொடு சேர்த்து
குழை உடல் தலை விரி கைத்திரி கறங்க – கல்லாடம்:2 8/11,12

மேல்

சேர்ந்து (2)

கனை கதிர் திருகி கல் சேர்ந்து முறை புக – கல்லாடம்:2 38/2
சுட்டியும் சிகையும் சேர்ந்து கண் பனித்தும் – கல்லாடம்:2 56/24

மேல்

சேர்ப்பன் (1)

உளை கடல் சேர்ப்பன் அளி விடம் தணிப்ப – கல்லாடம்:2 92/14

மேல்

சேர (4)

சேர மறைந்த கூர் இருள் நடுநாள் – கல்லாடம்:2 8/36
சேர மறுக முதுக்குறை உறுத்தி – கல்லாடம்:2 29/7
சேர வறந்த திரு தகு நாளில் – கல்லாடம்:2 64/4
சேர துடைக்கும் பேர் அருள் நாளின் – கல்லாடம்:2 87/32

மேல்

சேரன் (2)

குட கோ சேரன் கிடைத்து இது காண்க என – கல்லாடம்:2 11/26
சென்னி மா புரம் சேரன் திருத்தளி – கல்லாடம்:2 59/25

மேல்

சேரா (2)

செய்யா அமைச்சுடன் சேரா அரசன் – கல்லாடம்:2 3/5
திளையா தாரைகள் சேரா
முளையா வென்றி இவள் முகம் மதிக்கே – கல்லாடம்:2 60/28,29

மேல்

சேரி (2)

விற்று உணும் சேரி விடாது உறை ஊரன் – கல்லாடம்:2 56/16
மாது உடை கழிக்கரை சேரி ஓர் பாங்கர் – கல்லாடம்:2 67/8

மேல்

சேலை (1)

சிஞ்சை இடங்கரை பைம் சிலை சேலை
உடல் புலவு மாற்றும் பட திரை வையை – கல்லாடம்:2 26/24,25

மேல்

சேவடி (2)

முண்டகம் அலர்த்தும் முதிரா சேவடி
தரித்த உள்ள தாமரை ஊரன் – கல்லாடம்:2 10/24,25
தாமரை உடைத்த காமர் சேவடி
நிறை உளம் தரித்தவர் போல – கல்லாடம்:2 68/32,33

மேல்

சேவல் (6)

சேவல் அம் கொடியோன் காவல்கொண்டு இருந்த – கல்லாடம்:2 8/7
சேவல் அன்னம் திரு மலர் கள்ளினை – கல்லாடம்:2 49/18
ஆகிய மணி வேல் சேவல் அம் கொடியோன் – கல்லாடம்:2 56/9
செம் செவி சேவல் கவர் வாய் கழுகும் – கல்லாடம்:2 88/23
கூர் அரிவாளின் தோகை அம் சேவல்_கொடியோன் – கல்லாடம்:2 89/6
சேவல் மண்டலித்து சினை அடைகிடக்கும் – கல்லாடம்:2 92/12

மேல்

சேவல்_கொடியோன் (1)

கூர் அரிவாளின் தோகை அம் சேவல்_கொடியோன்
குன்றம் புடை வளர் கூடல் – கல்லாடம்:2 89/6,7

மேல்

சேவலும் (3)

சேவலும் இனமும் சூழும் – கல்லாடம்:2 34/24
குருகும் சேவலும் பார்ப்புடன் வெருவி – கல்லாடம்:2 64/28
பசும் தழை தோகையும் செம் சிறை சேவலும்
தாங்கியும் மலர் கரம் தங்கியும் நிலைத்த – கல்லாடம்:2 73/4,5

மேல்

சேவலோடு (1)

வீசு கோட்டு ஆந்தையும் சேவலோடு அலமர – கல்லாடம்:2 79/2

மேல்

சேவற்கு (1)

இறடி அம் சேவற்கு எறி கவண் கூட்டியும் – கல்லாடம்:2 85/9

மேல்

சேற்று (1)

பெரும் சேற்று கழனி கரும்பு பெறு காலை – கல்லாடம்:2 17/26

மேல்

சேறலும் (1)

சென்றுழி சென்றுழி சேறலும் உளவோ – கல்லாடம்:2 82/47

மேல்

சேறி (1)

சேறி என்று இசைப்ப செல் பணி தூதினர்க்கு – கல்லாடம்:2 93/22

மேல்

சேறு (1)

கூடமும் கந்தும் சேறு நின்று அலைப்ப – கல்லாடம்:2 20/36

மேல்