சி – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிகர 1
சிகை 2
சிகையும் 2
சிகைவிட்டு 1
சிஞ்சை 1
சிதலை 1
சிதற 2
சிதறி 3
சிதறிய 1
சிதறுவது 1
சிதைத்து 1
சிதைந்து 1
சிந்தி 2
சிந்திய 1
சிந்துர 1
சிந்துரம் 1
சிந்தையது 1
சிந்தையின் 1
சிந்தையினும் 1
சிந்தையுள் 1
சிரம் 1
சிரல் 1
சிரலை 1
சில் 3
சில்லையும் 1
சில 2
சிலம்ப 1
சிலம்பினும் 1
சிலம்பும் 2
சிலை 4
சிவந்த 3
சிவந்தன 1
சிவந்தாங்கு 1
சிவந்து 3
சிற்றிடை 5
சிற்றிலில் 1
சிற்றிலை 1
சிறந்த 1
சிறந்து 1
சிறப்பும் 1
சிறப்பொடு 1
சிறிதிடை 1
சிறிது 6
சிறிதொரு 1
சிறியோன் 1
சிறு 5
சிறுக 2
சிறுகால் 1
சிறுகாற்று 1
சிறுகுடி 2
சிறுசொல் 1
சிறுநகை 4
சிறுபிறை 1
சிறுமதி 4
சிறுமதி_நுதலே 1
சிறுமைகொள்ளா 1
சிறுமையது 1
சிறுவனும் 1
சிறுவனை 1
சிறை 20
சின் 1
சின்னக்குறளும் 1
சின்னம் 2
சினத்தும் 1
சினை 10
சினைத்த 1
சினையொடு 1

சிகர (1)

செம்பொன் மணி குயிற்றிய சிகர கோயிலுள் – கல்லாடம்:2 28/8

மேல்

சிகை (2)

சூல தலையின் தொடர்ந்து சிகை படர்ந்து – கல்லாடம்:2 17/46
கவை துகிர் வடவையின் திரள் சிகை பரப்பி – கல்லாடம்:2 43/1

மேல்

சிகையும் (2)

ஊழி தீ படர்ந்து உடற்றுபு சிகையும்
பாச கரகம் விதி உடை முக்கோல் – கல்லாடம்:1 1/13,14
சுட்டியும் சிகையும் சேர்ந்து கண் பனித்தும் – கல்லாடம்:2 56/24

மேல்

சிகைவிட்டு (1)

என் உளம் சிகைவிட்டு எழும் அனல் புக்க – கல்லாடம்:2 79/17

மேல்

சிஞ்சை (1)

சிஞ்சை இடங்கரை பைம் சிலை சேலை – கல்லாடம்:2 26/24

மேல்

சிதலை (1)

தண்ணீர் வாய் தரும் செம் நிற சிதலை
அதவு உதிர் அரிசி அன்ன செந்தினை – கல்லாடம்:2 96/17,18

மேல்

சிதற (2)

சிவந்த வாய்-தொறும் வெண் பொரி சிதற
செம்மாந்து மணத்த அளிய கூர் எரி – கல்லாடம்:2 18/23,24
இதழும் கொட்டையும் சிதற குதர்ந்து – கல்லாடம்:2 67/15

மேல்

சிதறி (3)

எங்கும் சிதறி பொங்கி எழு வனப்பும் – கல்லாடம்:2 21/5
கரும் தேன் உடைத்து செம் மணி சிதறி
பாகல் கோட்டில் படர் கறி வணக்கி – கல்லாடம்:2 39/18,19
எடுத்தெடுத்து உந்தி மணி குலம் சிதறி
கிளைஞர்கள் நச்சா பொருளினர் போல – கல்லாடம்:2 68/17,18

மேல்

சிதறிய (1)

குடத்தியர் இழுக்கிய அளை சிதறிய போல் – கல்லாடம்:2 14/10

மேல்

சிதறுவது (1)

திரள் பளிங்கு உடைத்து சிதறுவது என்ன – கல்லாடம்:2 68/20

மேல்

சிதைத்து (1)

குறிஞ்சி பெரும் தேன் இறாலொடு சிதைத்து
மென் நடை பிடிக்கு கை பிடித்து உதவி – கல்லாடம்:2 25/6,7

மேல்

சிதைந்து (1)

சிதைந்து உறைந்து எழு பழி தீ மதி புரையாது – கல்லாடம்:2 60/24

மேல்

சிந்தி (2)

மணி நிரை சிந்தி மண் புக அலைப்ப – கல்லாடம்:1 2/22
விரி பொரி சிந்தி மண மலர் பரப்பி – கல்லாடம்:2 47/4

மேல்

சிந்திய (1)

கலை கலை சிந்திய காட்சியது என்ன – கல்லாடம்:2 68/15

மேல்

சிந்துர (1)

வெள்ளை கொள் சிந்துர நல் அணி ஆகி – கல்லாடம்:2 22/10

மேல்

சிந்துரம் (1)

முயலின் சோரி சிந்துரம் குன்றி – கல்லாடம்:2 98/32

மேல்

சிந்தையது (1)

தெய்வம் கொள்ளார் சிந்தையது என்ன – கல்லாடம்:2 83/14

மேல்

சிந்தையின் (1)

தே அருள் கல்லார் சிந்தையின் புரண்ட – கல்லாடம்:2 83/17

மேல்

சிந்தையினும் (1)

தெய்வம் விடுத்து பொய் கொள் சிந்தையினும்
கொலையினர்-கண்ணும் குன்றாது இயைந்து – கல்லாடம்:2 52/19,20

மேல்

சிந்தையுள் (1)

செய்குறி குணனும் சிந்தையுள் திரிவும் – கல்லாடம்:2 44/3

மேல்

சிரம் (1)

பாணியில் சிரம் பதித்து ஒரு நடை பதித்து – கல்லாடம்:2 99/8

மேல்

சிரல் (1)

சிரல் வானிலையும் கழை இலை வீழ்வதும் – கல்லாடம்:2 21/51

மேல்

சிரலை (1)

ஊடு உகள் சிரலை பச்சிறவு அருந்தும் – கல்லாடம்:2 93/14

மேல்

சில் (3)

அறிவு நிலை கூடா சில் மொழி கொண்டு – கல்லாடம்:1 2/58
இல்லில் செறிக்கும் சொல்லுடன் சில் மொழி – கல்லாடம்:2 1/25
நெடு மரை அதள் வேய் சில் இட குரம்பையில் – கல்லாடம்:2 96/25

மேல்

சில்லையும் (1)

புல்ல பாண்மகன் சில்லையும் இன்றி – கல்லாடம்:2 50/3

மேல்

சில (2)

தென் தமிழ் வட கலை சில கொடுத்து எனவும் – கல்லாடம்:2 73/22
குழமக குறித்தும் சில மொழி கொடுத்தும் – கல்லாடம்:2 85/5

மேல்

சிலம்ப (1)

மலர் பதம் நீங்கா உள பெரும் சிலம்ப
கல்லா கயவர்க்கு அரு நூல் கிளை மறை – கல்லாடம்:2 1/15,16

மேல்

சிலம்பினும் (1)

விடையா வடந்தை செய் வெள்ளி அம் சிலம்பினும்
தென்கால் விடுக்கும் செம்பின் பொருப்பினும் – கல்லாடம்:2 52/10,11

மேல்

சிலம்பும் (2)

செம் மணி சிலம்பும் மரகத பொருப்பும் – கல்லாடம்:2 6/29
பொன் அம் தோகையும் மணி அரி சிலம்பும்
நிரை தலை சுடிகை நெருப்பு உமிழ் ஆரமும் – கல்லாடம்:2 41/14,15

மேல்

சிலை (4)

முலை மூன்று அணைந்த சிலை நுதல் திருவினை – கல்லாடம்:2 12/12
பொன் சிலை வளைத்து வாயில் போக்கி – கல்லாடம்:2 14/4
சிஞ்சை இடங்கரை பைம் சிலை சேலை – கல்லாடம்:2 26/24
சிலை நுதல் கணை விழி தெரிவையர் உளம் என – கல்லாடம்:2 68/1

மேல்

சிவந்த (3)

சிவந்த வாய்-தொறும் வெண் பொரி சிதற – கல்லாடம்:2 18/23
தளிர்த்து சிவந்த தண்டை அம் துணை தாள் – கல்லாடம்:2 92/5
திட்டை ஏறு சிவந்த விதாயம் – கல்லாடம்:2 98/40

மேல்

சிவந்தன (1)

கறுத்து சிவந்தன கண் இணை மலரே – கல்லாடம்:2 1/23

மேல்

சிவந்தாங்கு (1)

நெய்த்து பார்வையின் நேர்ந்து சிவந்தாங்கு
ஒத்த நற்குணம் உடைய பன்னிரண்டும் – கல்லாடம்:2 98/19,20

மேல்

சிவந்து (3)

உள்ளம் கறுத்து கண் சிவந்து உருத்தே – கல்லாடம்:2 1/27
உள்ளம் கறுத்து கண் சிவந்து இட்ட – கல்லாடம்:2 33/13
எதிர்பெறின் கண் சிவந்து எடுத்து அவை களைந்தும் – கல்லாடம்:2 66/4

மேல்

சிற்றிடை (5)

சிற்றிடை பெரு முலை பொன் தொடி மடந்தை தன் – கல்லாடம்:2 6/21
வடி விழி சிற்றிடை பெரு முலை மடவீர் – கல்லாடம்:2 10/1
ஒப்புறு பொன் தொடி சிற்றிடை மடந்தை-தன் – கல்லாடம்:2 35/12
கரும் குழல் செவ் வாய் சிற்றிடை மடந்தைக்கு – கல்லாடம்:2 47/1
சிற்றிடை பெரும் தோள் தே_மொழி தானே – கல்லாடம்:2 98/58

மேல்

சிற்றிலில் (1)

மறி கண் பிணாவினர் இழைக்கும் சிற்றிலில்
சென்று அழியாது நின்று அயர் காண்பன் – கல்லாடம்:2 56/26,27

மேல்

சிற்றிலை (1)

சிற்றிலை நெரிஞ்சில் பொன் பூ என்ன – கல்லாடம்:2 62/15

மேல்

சிறந்த (1)

சிறந்த ஒரு சுனை இ மலை ஆட – கல்லாடம்:2 22/21

மேல்

சிறந்து (1)

கரு முகில் நிறத்த கண்ணனின் சிறந்து
நிறை உடல் அடங்க திரு விழி நிறைத்து – கல்லாடம்:2 71/2,3

மேல்

சிறப்பும் (1)

வாய்மையும் சிறப்பும் நிழல் என கடவார் – கல்லாடம்:2 58/9

மேல்

சிறப்பொடு (1)

தவல் அரும் சிறப்பொடு சால்புசெய்து அமைந்த – கல்லாடம்:2 100/9

மேல்

சிறிதிடை (1)

சிறிதிடை தெருள்வதும் உடனுடன் மருள்வதும் – கல்லாடம்:2 97/6

மேல்

சிறிது (6)

சிறிது நின்று இயம்ப உழை இனம் கேண்-மின் இன்று – கல்லாடம்:2 4/16
கடி மலர் பொழிலில் சிறிது கண்படுத்து – கல்லாடம்:2 17/31
சிறிது நின் குறுவெயர் பெறும் அணங்கு ஆறி – கல்லாடம்:2 22/25
எம்மையும் நோக்கி சிறிது கண்புரிந்தே – கல்லாடம்:2 57/28
சிறிது மலை உறைத்த மதி முடி அந்தணன் – கல்லாடம்:2 78/23
சிறிது உவா மதுவமும் குறைபெற அருந்தி அ – கல்லாடம்:2 95/21

மேல்

சிறிதொரு (1)

சிறிதொரு வாய்மை உதவினையாயில் – கல்லாடம்:2 68/13

மேல்

சிறியோன் (1)

சிறியோன் செரு என முறிய போகி – கல்லாடம்:2 54/34

மேல்

சிறு (5)

சிறு முகம் காணும் ஆடி ஆகி – கல்லாடம்:2 22/20
கரும் கை வெண் கோட்டு சிறு கண் பெரும் களிறு – கல்லாடம்:2 25/3
நண்ணுவன் சிறு நுதல் பெரு விழியோளே – கல்லாடம்:2 26/34
பேழ் வாய் புலி உகிர் சிறு குரல் விளங்க – கல்லாடம்:2 50/7
கடுக்கை சிறு காய் அமைத்த வால் கருப்பை – கல்லாடம்:2 63/12

மேல்

சிறுக (2)

கடல் திரை சிறுக மலக்கு துயர் காட்டும் – கல்லாடம்:1 1/29
மண் சிறுக விரித்த மணி படம் தூக்கி – கல்லாடம்:1 2/20

மேல்

சிறுகால் (1)

பெரு வெள்ளிடையில் சிறுகால் பட்டு என – கல்லாடம்:2 88/2

மேல்

சிறுகாற்று (1)

சிறுகாற்று உழலும் அசை குழை செவிய – கல்லாடம்:1 1/18

மேல்

சிறுகுடி (2)

மறைத்து ஒரு சிறுகுடி பரதவன் ஆகி – கல்லாடம்:2 15/26
பெரும் தேன் கவரும் சிறுகுடி மகளே – கல்லாடம்:2 51/12

மேல்

சிறுசொல் (1)

கேளா சிறுசொல் கிளக்கும் கலதியர் – கல்லாடம்:2 80/24

மேல்

சிறுநகை (4)

கார் உடல் சிறுநகை குறும் தாள் பாரிடம் – கல்லாடம்:2 10/20
சிறுநகை கொண்ட ஒரு பெரும் தீயின் – கல்லாடம்:2 25/27
சுழல் விழி சிறுநகை குட வயிற்று இரு குழை – கல்லாடம்:2 34/6
பெரும் தோள் சிறுநகை முன்னையள் அல்லள் – கல்லாடம்:2 98/49

மேல்

சிறுபிறை (1)

பெரு நகர் நிறைந்த சிறுபிறை சென்னியன் – கல்லாடம்:2 72/11

மேல்

சிறுமதி (4)

பெரு மலை சென்னியில் சிறுமதி கிடந்து என – கல்லாடம்:1 1/7
பெருமதி நீடுவர் சிறுமதி_நுதலே – கல்லாடம்:2 11/32
பெரு நதி சடை மிசை சிறுமதி சூடிய – கல்லாடம்:2 56/13
ஆயிரம் திரு முகத்து அருள் நதி சிறுமதி
பகை தவிர் பாம்பும் நகை பெறும் எருக்கமும் – கல்லாடம்:2 58/31,32

மேல்

சிறுமதி_நுதலே (1)

பெருமதி நீடுவர் சிறுமதி_நுதலே – கல்லாடம்:2 11/32

மேல்

சிறுமைகொள்ளா (1)

பனி சிறுமைகொள்ளா முள் அரை முளரி – கல்லாடம்:2 29/20

மேல்

சிறுமையது (1)

பெருமை நோக்கின் சிறுமையது உண்டே – கல்லாடம்:2 17/8

மேல்

சிறுவனும் (1)

விளரி உள் விளைக்கும் தளர் நடை சிறுவனும்
நின் நலம் புகழ்ந்து உணும் நீதியும் தோற்றமும் – கல்லாடம்:2 88/10,11

மேல்

சிறுவனை (1)

ஒரு வழி அளிக்கும் இரும் கதிர் சிறுவனை
தழல் விழி மடங்கல் கொலை அரி குருளையை – கல்லாடம்:2 50/11,12

மேல்

சிறை (20)

உடல் எனும் வாயில் சிறை நடுவு புக்கு – கல்லாடம்:1 1/30
ஓ அற போகிய சிறை விரி முதுகில் – கல்லாடம்:1 2/24
நான்மறை விதியை நடுங்கு சிறை வைத்து – கல்லாடம்:1 2/44
குழை பொடி கூவையின் சிறை சிறை தீந்த – கல்லாடம்:2 7/20
குழை பொடி கூவையின் சிறை சிறை தீந்த – கல்லாடம்:2 7/20
இட்ட வெம் கொடும் சிறை பட்ட கார் குலம் – கல்லாடம்:2 20/33
தேவர்_கோமான் சிறை அரி புண்ணினுக்கு – கல்லாடம்:2 28/17
அவன் என தோன்றி அரும் சிறை விடுத்த – கல்லாடம்:2 32/9
சிறை விரி தூவி செம் கால் அன்னம் – கல்லாடம்:2 34/22
கந்தி விரி படிந்த மென் சிறை வண்டும் – கல்லாடம்:2 50/22
சந்தன பொங்கர் தழை சிறை மயிலும் – கல்லாடம்:2 50/23
எழு சிறை தீயும் எருவையும் பருந்தும் – கல்லாடம்:2 59/16
பெரும் குலை மணந்த நிறை நீர் சிறை புனல் – கல்லாடம்:2 63/3
வெண் சிறை முடித்த செம் சடை பெருமான் – கல்லாடம்:2 67/23
ஆழ்ந்து அகன்று இருண்ட சிறை நீர் கயத்துள் – கல்லாடம்:2 68/2
மயில் சிறை ஆல வலி_முகம் பனிப்ப – கல்லாடம்:2 68/26
பசும் தழை தோகையும் செம் சிறை சேவலும் – கல்லாடம்:2 73/4
மரகதம் சினைத்த சிறை மயில் குலமே – கல்லாடம்:2 81/33
தாது உடல் துதைந்த மென் தழை சிறை வண்டு இனம் – கல்லாடம்:2 95/19
இரு சிறை கழுகினர்க்கு உலந்த கடன் கழித்து – கல்லாடம்:2 95/33

மேல்

சின் (1)

பொடித்து அரும்பாத சின் முலை கொடி மடந்தையள் – கல்லாடம்:2 7/1

மேல்

சின்னக்குறளும் (1)

சின்னக்குறளும் செழும் கார் போல – கல்லாடம்:2 52/24

மேல்

சின்னம் (2)

சின்னம் கிடந்த கொடிஞ்சி மா தேர் – கல்லாடம்:2 2/17
வேம் உடல் சின்னம் வெள்ளிடை தெறிப்ப – கல்லாடம்:2 7/27

மேல்

சினத்தும் (1)

தணந்தோர் சினத்தும் மணந்தோர்க்கு அளித்தும் – கல்லாடம்:2 60/8

மேல்

சினை (10)

கல் செறி பாசியின் சினை குழை பொதுளி – கல்லாடம்:1 2/9
உடை கவட்டு ஓமை உலர் சினை இருக்கும் – கல்லாடம்:2 7/22
சினை தழை விளைத்த பழுமரம் என்ன – கல்லாடம்:2 32/15
சினை முகம் ஏந்திய இணர்கொள் வாய் குடம்பையின் – கல்லாடம்:2 34/20
விரி சினை பொதுளிய பாசிலை ஒடுக்கி – கல்லாடம்:2 43/12
சினை மலர் துணை கரத்து அன்புடன் அணைத்து – கல்லாடம்:2 46/4
உலர் கவட்டு ஓமை பொரி சினை கூகையும் – கல்லாடம்:2 79/1
கொழும் சினை மிடைந்து குளிரொடு பொதுளிய – கல்லாடம்:2 81/4
சந்தன பொதும்பர் தழை சினை பொழிலே – கல்லாடம்:2 81/41
சேவல் மண்டலித்து சினை அடைகிடக்கும் – கல்லாடம்:2 92/12

மேல்

சினைத்த (1)

மரகதம் சினைத்த சிறை மயில் குலமே – கல்லாடம்:2 81/33

மேல்

சினையொடு (1)

பெடை குருகு அணங்கின் விடுத்த வெண் சினையொடு
காவல் அடைகிடக்கும் கைதை அம் பொழிலே – கல்லாடம்:2 23/8,9

மேல்