கொ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கரை 1
கொக்கின் 3
கொங்கு 1
கொங்கையும் 1
கொட்டாள் 1
கொட்டி 1
கொட்டையும் 1
கொட்ப 2
கொட்புற்று 1
கொடி 25
கொடிக்கு 1
கொடிக்கே 1
கொடிச்சியர் 1
கொடிஞ்சி 2
கொடிதே 2
கொடியினன் 2
கொடியும் 3
கொடியே 6
கொடியொடு 1
கொடியொடும் 1
கொடியோன் 4
கொடு 11
கொடுக்க 2
கொடுக்கும் 8
கொடுகொட்டிக்கு 1
கொடுங்கோல் 2
கொடுத்த 12
கொடுத்தலின் 1
கொடுத்தவன் 1
கொடுத்தனன் 1
கொடுத்து 9
கொடுத்தும் 3
கொடுப்ப 1
கொடுப்பதும் 1
கொடுபோம் 1
கொடும் 13
கொடுமர 3
கொடுமரம் 3
கொண்ட 9
கொண்டல் 1
கொண்டன 1
கொண்டனள் 1
கொண்டிருந்த 1
கொண்டு 18
கொண்டும் 1
கொண்டோர் 1
கொண்டோற்கு 1
கொண்மூ 2
கொணர்ந்து 1
கொத்து 1
கொதித்த 1
கொதித்தனள் 1
கொதித்து 1
கொப்புள் 1
கொம்பினர் 1
கொம்பினுக்கு 1
கொய் 4
கொய்தும் 4
கொய்யும் 1
கொல்லி 1
கொல்லும் 3
கொல்லையில் 1
கொலை 16
கொலைக்கு 1
கொலைஞர் 2
கொலையினர் 2
கொலையினர்-கண்ணும் 1
கொழிக்கும் 3
கொழித்த 1
கொழித்து 2
கொழு 2
கொழுதி 1
கொழுந்து 4
கொழுந்தும் 2
கொழுந்தொடும் 1
கொழுநர் 1
கொழும் 3
கொள் 26
கொள்கை 1
கொள்வதும் 1
கொள்வோர்க்கு 1
கொள்ள 1
கொள்ளம் 1
கொள்ளவும் 1
கொள்ளா 3
கொள்ளாது 3
கொள்ளார் 3
கொள்ளிவாய் 1
கொள்ளுதும் 1
கொள்ளுநர் 1
கொள்ளும் 1
கொள்ளை 3
கொள 1
கொளின் 1
கொளும் 1
கொளுவ 1
கொளுவி 2
கொளுவிய 1
கொளுவும் 2
கொற்ற 1
கொற்றத்து 1
கொற்றவன் 1
கொறிப்ப 1
கொன்ற 6
கொன்று 2
கொன்றை 3
கொன்றையன் 1
கொன்றையும் 2

கொக்கரை (1)

உருள் வாய் கொக்கரை உம்பர்நாட்டு ஒலிக்க – கல்லாடம்:2 85/25

மேல்

கொக்கின் (3)

கீழ்மேல் நின்ற அ கொடும் தொழில் கொக்கின்
கூறு இரண்டு ஆய ஒரு பங்கு எழுந்து – கல்லாடம்:1 2/16,17
கொக்கின் தூவல் அப்புறம் ஆக – கல்லாடம்:2 16/11
அதிர் உவர் கொக்கின் களவு உயிர் குடித்த – கல்லாடம்:2 98/54

மேல்

கொங்கு (1)

கொங்கு தேர் வாழ்க்கை செந்தமிழ் கூறி – கல்லாடம்:2 1/11

மேல்

கொங்கையும் (1)

குங்கும கொங்கையும் தலை கண் கறாது – கல்லாடம்:2 5/11

மேல்

கொட்டாள் (1)

கூலம் சுமக்க கொட்டாள் ஆகி – கல்லாடம்:2 47/23

மேல்

கொட்டி (1)

என புயம் கொட்டி நகைத்து எடுத்து ஆர்க்க – கல்லாடம்:2 78/17

மேல்

கொட்டையும் (1)

இதழும் கொட்டையும் சிதற குதர்ந்து – கல்லாடம்:2 67/15

மேல்

கொட்ப (2)

குணங்கு இனம் துள்ள கூளியும் கொட்ப
மத்தியந்தணன் வரம்சொலி விடுப்ப – கல்லாடம்:2 41/3,4
இவள் உளம் கொட்ப அயல் உளம் களிப்ப – கல்லாடம்:2 73/14

மேல்

கொட்புற்று (1)

ஆற்றாது அலந்து காற்று என கொட்புற்று
உடை திரை அருவி ஒளி மணி காலும் – கல்லாடம்:2 91/2,3

மேல்

கொடி (25)

பைம் கொடி வள்ளி படர்ந்த புய மலையோய் – கல்லாடம்:1 2/38
விடை கொடி நிறுத்தி கயல் கொடி எடுத்து – கல்லாடம்:2 2/12
விடை கொடி நிறுத்தி கயல் கொடி எடுத்து – கல்லாடம்:2 2/12
பொடித்து அரும்பாத சின் முலை கொடி மடந்தையள் – கல்லாடம்:2 7/1
ஒருபால் பசும்_கொடி நிறை பாட்டு அயர – கல்லாடம்:2 7/32
கரும் கொடி அடம்பும் கண்டலும் சூழ்ந்த – கல்லாடம்:2 15/14
ஒருபால் பசும்_கொடி திரு நுதல் பொடித்த – கல்லாடம்:2 16/4
அடங்க படர்ந்த பசும்_கொடி அதனை – கல்லாடம்:2 17/42
களவு அலர் தூற்ற தளவு கொடி நடுங்க – கல்லாடம்:2 20/4
நெடுவேள் கடவுள் மயில் கொடி முன்றில் – கல்லாடம்:2 24/3
கொடி புரை நுசுப்பின் பெரு முலையோளே – கல்லாடம்:2 24/36
கூடல் மா நகர் அன்ன பொன்_கொடி – கல்லாடம்:2 34/14
நடு உடல் வரிந்த கொடி காய் பத்தர் – கல்லாடம்:2 40/3
பொன் கொடி தேர் மிசை பொலிகுவை அன்றே – கல்லாடம்:2 51/22
மை புற கூந்தல் கொடி வணங்கு இடையே – கல்லாடம்:2 52/27
பணி_பகை ஊர்தி அருள் கொடி இரண்டுடன் – கல்லாடம்:2 59/30
கொலைஞர் பொலிந்த கொடி தேர்க்கு அணங்கினை – கல்லாடம்:2 69/7
கரும் கண் கொடி இனம் கண் அற சூழ்ந்து – கல்லாடம்:2 71/19
பவள மின் கவை கொடி வடவையின் கொழுந்து என – கல்லாடம்:2 72/24
இன்ப பசும்_கொடி இட பால் படர – கல்லாடம்:2 82/33
முல்லை அம் படர் கொடி நீங்கி பிடவ – கல்லாடம்:2 84/16
தனி கொடி காண எவ்விடத்து உயிர் தழைப்ப – கல்லாடம்:2 85/39
நீலமும் கரும் கொடி அடம்பும் சங்கமும் – கல்லாடம்:2 92/15
மதுரை அம் பதி எனும் ஒரு கொடி மடந்தை – கல்லாடம்:2 99/43
மணி தரு தெருவில் கொடி தரு தேரும் – கல்லாடம்:2 99/49

மேல்

கொடிக்கு (1)

உலகு உயிர் மகவு உடை பசும்_கொடிக்கு ஒரு பால் – கல்லாடம்:2 89/9

மேல்

கொடிக்கே (1)

என் உயிர் வாட்டிய தொடி இளம்_கொடிக்கே – கல்லாடம்:2 41/54

மேல்

கொடிச்சியர் (1)

இடை வளி போகாது நெருங்கு முலை கொடிச்சியர்
சிறு முகம் காணும் ஆடி ஆகி – கல்லாடம்:2 22/19,20

மேல்

கொடிஞ்சி (2)

சின்னம் கிடந்த கொடிஞ்சி மா தேர் – கல்லாடம்:2 2/17
யாணர் கொடிஞ்சி நெடும் தேர் இசைப்பும் – கல்லாடம்:2 39/13

மேல்

கொடிதே (2)

மனனால் நாடில் சொல்லினும் கொடிதே – கல்லாடம்:2 23/50
குன்றும் அ சூளினர்-தம்மினும் கொடிதே – கல்லாடம்:2 92/23

மேல்

கொடியினன் (2)

கால் படை கொடியினன் கருணையொடு அமர்ந்த – கல்லாடம்:2 61/11
உவண_கொடியினன் உந்தி மலர் தோன்றி – கல்லாடம்:2 77/7

மேல்

கொடியும் (3)

மீனும் கொடியும் விரி திணை ஐந்தும் – கல்லாடம்:2 9/11
கல்வியும் திருவும் காலமும் கொடியும்
மாடமும் ஓங்கிய மணி நகர் கூடல் – கல்லாடம்:2 80/18,19
ஓரி பாட்டு எடுப்ப உவணமும் கொடியும்
செம் செவி சேவல் கவர் வாய் கழுகும் – கல்லாடம்:2 88/22,23

மேல்

கொடியே (6)

கூறாம் மதிய திரு நுதல் கொடியே – கல்லாடம்:2 2/25
ஒருமை காண்குவர் துகிர் கிளை கொடியே – கல்லாடம்:2 3/22
திருந்திய திருநுதல் துகிர் இளம்_கொடியே – கல்லாடம்:2 42/34
ஈங்கு இது காண்க முத்து எழில் நகை கொடியே – கல்லாடம்:2 69/35
சுரும்புடன் விரிந்த துணை மலர் கொடியே
விண் விரித்து ஒடுக்கும் இரவி வண் கவிகைக்கு – கல்லாடம்:2 81/30,31
மொய் இழை பூத்த கவின் மலர்_கொடியே – கல்லாடம்:2 94/41

மேல்

கொடியொடு (1)

குன்று அமர் வள்ளி அம் கொடியொடு துவக்கி – கல்லாடம்:2 83/10

மேல்

கொடியொடும் (1)

குஞ்சர கொடியொடும் வள்ளி அம் கொழுந்தொடும் – கல்லாடம்:2 70/6

மேல்

கொடியோன் (4)

சேவல் அம் கொடியோன் காவல்கொண்டு இருந்த – கல்லாடம்:2 8/7
ஆகிய மணி வேல் சேவல் அம் கொடியோன்
வானக மங்கையும் தேன் வரை வள்ளியும் – கல்லாடம்:2 56/9,10
களவு உடை வாழ்க்கை உள மன கொடியோன்
படர் மலை ஏழும் குருகு அமர் பொருப்பும் – கல்லாடம்:2 61/6,7
கூர் அரிவாளின் தோகை அம் சேவல்_கொடியோன் – கல்லாடம்:2 89/6

மேல்

கொடு (11)

அளந்து கொடு முடித்தல் நின் கடன் ஆதலின் – கல்லாடம்:1 1/25
வரி கொடு மதர்த்த கண் குழியாது – கல்லாடம்:2 5/13
தண்டா மயல் கொடு வண்டு பரந்து அரற்ற – கல்லாடம்:2 20/6
அன்பு கொடு வேய்ந்த நெஞ்ச மண்டபத்து – கல்லாடம்:2 22/47
விண்ணுற விரித்த கரு முகில் படாம் கொடு
மண்ணகம் உருக கனற்றும் அழல் மேனியை – கல்லாடம்:2 29/17,18
திருக்குளம் முளைத்த கண் தாமரை கொடு
தென்கீழ்த்திசையோன் ஆக்கிய தனி முதல் – கல்லாடம்:2 31/9,10
உயிரினும் நுனித்த அவ் உரு கொடு
பொன்மலை பனிப்பினும் பனியா – கல்லாடம்:2 41/52,53
மலை கொடு மலைந்த முதுநீர் வெள்ளமும் – கல்லாடம்:2 54/32
உலகு உயிர் கவரும் கொடு நிலை கூற்றம் – கல்லாடம்:2 67/11
வளை கரம் கொடு கண் புதைப்ப அவ்வுழியே – கல்லாடம்:2 69/28
கொடு வழி இவ் வரவு என்றும் – கல்லாடம்:2 97/25

மேல்

கொடுக்க (2)

பெற நிதி கொடுக்க என உற விடுத்து அருளிய – கல்லாடம்:2 11/29
தழல் உண கொடுக்க அதன் உணவிடையே – கல்லாடம்:2 79/6

மேல்

கொடுக்கும் (8)

கரும் கழி கொடுக்கும் வெள் இறவு அருந்த – கல்லாடம்:2 23/6
புறன் பயன் கொடுக்கும் பொருட்கோ ஆழி – கல்லாடம்:2 31/14
மாதிர களிற்றினை செவிடுற கொடுக்கும்
புண்ணிய கூடலுள் நிறை பெருமான் – கல்லாடம்:2 39/15,16
முடி தலை திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும்
அள்ளல் பழனத்து அணி நீர் கூடல் – கல்லாடம்:2 47/18,19
புக்குழிப்புக்குழி புலன் பெற கொடுக்கும்
மலைய தமிழ் கால் வாவியுள் புகுந்து – கல்லாடம்:2 51/4,5
புண்ணியம் இவை முதல் வெள் உடல் கொடுக்கும்
புகழ் கவி பாடகர் புணர்ச்சி இன்பு அகற்றி – கல்லாடம்:2 57/15,16
வெறி முதிர் செம்மல் முறி முகம் கொடுக்கும்
சந்தன பொதும்பர் தழை சினை பொழிலே – கல்லாடம்:2 81/40,41
வட்டம் கொடுக்கும் இந்திரை பணிக்கு – கல்லாடம்:2 99/21

மேல்

கொடுகொட்டிக்கு (1)

கொடுகொட்டிக்கு குறி அடுத்து எடுக்கும் – கல்லாடம்:2 99/9

மேல்

கொடுங்கோல் (2)

கொடுங்கோல் கொற்றவன் நெடும் படை அனைத்தும் – கல்லாடம்:2 64/3
குளிர்ச்சி நீங்கி கொடுங்கோல் வேந்து என – கல்லாடம்:2 86/8

மேல்

கொடுத்த (12)

தன் பெயர் புணர்த்தி கற்பினொடு கொடுத்த
அமையா வென்றி அரத்த நெடு வேலோய் – கல்லாடம்:1 2/14,15
நாரதன் ஓம்பிய செம் தீ கொடுத்த
திருகு புரி கோட்டு தகர் வரு மதியோய் – கல்லாடம்:1 2/33,34
தெளிதர கொடுத்த தென் தமிழ் கடவுள் – கல்லாடம்:2 3/16
அண்டநாடவர்க்கு ஆருயிர் கொடுத்த
கண்ட கறையோன் கண் தரு நுதலோன் – கல்லாடம்:2 32/4,5
கரும் குருவிக்கு கண்ணருள் கொடுத்த
வெண் திருநீற்று செக்கர் மேனியன் – கல்லாடம்:2 39/8,9
புள் கால் பாட்டினர்க்கு உறையுள் கொடுத்த
மயிர்_குறை_கருவி துணை குழை அலைப்ப – கல்லாடம்:2 43/15,16
அவ் அடி கொடுத்த அருள் நிறை நாயகன் – கல்லாடம்:2 47/28
பேர் அருள் கொடுத்த கூடல் அம் பதியோன் – கல்லாடம்:2 58/34
பெரும் தமிழ் அமுதும் பிரியாது கொடுத்த
தோடு அணி கடுக்கை கூடல் எம் பெருமான் – கல்லாடம்:2 65/19,20
அதற்கு அருள் கொடுத்த முதல் பெரு நாயகன் – கல்லாடம்:2 75/17
கொடுத்த மெய் பிண்டம் குறியுடன் தோன்றிய – கல்லாடம்:2 81/20
கையடை கொடுத்த வெள் நிண வாய் குழவி – கல்லாடம்:2 88/18

மேல்

கொடுத்தலின் (1)

நச்சின கொடுத்தலின் நளிர் தரு ஐந்தும் – கல்லாடம்:2 56/6

மேல்

கொடுத்தவன் (1)

கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல – கல்லாடம்:2 94/35

மேல்

கொடுத்தனன் (1)

ஒரு நீ விடுத்தனை யான் அவை கொடுத்தனன்
அவ் வழி கூறின் அ தழை வந்து – கல்லாடம்:2 48/16,17

மேல்

கொடுத்து (9)

நிழலும் கொடுத்து அவர் ஈன்ற – கல்லாடம்:2 4/25
அல்குல் இடை என நெஞ்சு உழல கொடுத்து
முண்டகம் மலர்த்தி மாந்தளிர் மூடி – கல்லாடம்:2 33/8,9
கால் கொடுத்து அன்ன கந்திகள் நிமிர்ந்து – கல்லாடம்:2 33/24
அணிவித்து அருள் கொடுத்து அரசன் ஆக்கி – கல்லாடம்:2 55/23
அன்ன ஊரனை எம் இல் கொடுத்து
தேரினும் காவினும் அடிக்கடி கண்டு – கல்லாடம்:2 55/34,35
பறவை மக்களை பரியுநர் கொடுத்து
கிடைப்பல் வல் யானே நும்மை தழைத்து எழு – கல்லாடம்:2 64/13,14
வரை_அரமகளிர்க்கு அணி அணி கொடுத்து
பனை கை கட_மா எருத்து உறு பூழி – கல்லாடம்:2 68/23,24
தென் தமிழ் வட கலை சில கொடுத்து எனவும் – கல்லாடம்:2 73/22
கொடுத்து உண்டவர் பின் கரந்தமை கடுக்கும் – கல்லாடம்:2 81/48

மேல்

கொடுத்தும் (3)

சாய் தாள் பிள்ளை தந்து கொடுத்தும்
முட உடல் கைதை மடல் முறித்திட்டும் – கல்லாடம்:2 9/24,25
குவலய திரு மலர் கொணர்ந்து கொடுத்தும்
நின்றான் உண்டு ஒரு காளை – கல்லாடம்:2 9/27,28
குழமக குறித்தும் சில மொழி கொடுத்தும்
கையுறை சுமந்தும் கடி தழை தாங்கியும் – கல்லாடம்:2 85/5,6

மேல்

கொடுப்ப (1)

பிணம் பிரித்து உண்ணும் குணங்கு இனம் கொடுப்ப
சூல் பேய் ஏற்ப இடாகினி கரப்ப – கல்லாடம்:2 79/8,9

மேல்

கொடுப்பதும் (1)

கொள்வதும் உளதோ கொடுப்பதும் உளதோ – கல்லாடம்:2 100/35

மேல்

கொடுபோம் (1)

மனத்தொடு கண்ணும் அடிக்கடி கொடுபோம்
செம்பொன் செய்த வரி பந்து துரந்தும் – கல்லாடம்:2 28/30,31

மேல்

கொடும் (13)

கீழ்மேல் நின்ற அ கொடும் தொழில் கொக்கின் – கல்லாடம்:1 2/16
சென்னி வாரண கொடும் பகை ஆகி – கல்லாடம்:1 2/28
பொன் தலை புணர் வலை கொடும் கரம் ஆக்கி – கல்லாடம்:2 15/27
இட்ட வெம் கொடும் சிறை பட்ட கார் குலம் – கல்லாடம்:2 20/33
எரி தெறும் கொடும் சுரத்து இறந்தனளாக – கல்லாடம்:2 29/8
தணியா கொடும் சுரம் தரும் தழல் தாவி – கல்லாடம்:2 40/8
முடங்கு_உளை அகழ்ந்த கொடும் கரி கோடும் – கல்லாடம்:2 65/13
அடும் திறல் இனைய கொடும் தொழில் பெருக்கிய – கல்லாடம்:2 67/21
கரும் கடத்து எறிந்த கொடும் புலிக்கு ஒதுங்கினை – கல்லாடம்:2 69/4
கொடும் கொலை வடுத்து கடும் பழி சடை அலைந்து – கல்லாடம்:2 83/3
நோன் தலை கொடும் சூர் களவு உயிர் நுகர்ந்த – கல்லாடம்:2 84/5
கொடும் சூர் கொன்ற கூரிய நெடு வேல் – கல்லாடம்:2 86/19
கோபம் மின்மினி கொடும் கதிர் விளக்கு – கல்லாடம்:2 98/28

மேல்

கொடுமர (3)

கொடுமர கொலைஞர் ஆற்றிடை கவர – கல்லாடம்:2 6/18
முகில் உரு பெறும் ஓர் கொடுமர கிராதன் – கல்லாடம்:2 14/26
கொடுமர தழும்பு திருமுடிக்கு அணிந்து – கல்லாடம்:2 48/5

மேல்

கொடுமரம் (3)

பிறை மதி அன்ன கொடுமரம் வாங்கி – கல்லாடம்:2 4/19
கொடுமரம் பற்றி நெட்டு இதண் பொலிந்தும் – கல்லாடம்:2 22/38
பெண் வர சனகன் மிதிலையில் கொடுமரம்
இறுத்து அவன் மகள் புணர்ந்து எரி மழு_இராமன் – கல்லாடம்:2 95/27,28

மேல்

கொண்ட (9)

மலை உரு கொண்ட உடல் வாள் அரக்கர் – கல்லாடம்:2 6/37
அண்ட பொன் சுவர் கொண்ட அழுக்கை – கல்லாடம்:2 16/7
கண் புலம் கொண்ட இ பணி அளவும் – கல்லாடம்:2 18/34
வற்றா காதலில் கொண்ட மதி அன்றி – கல்லாடம்:2 20/3
சிறுநகை கொண்ட ஒரு பெரும் தீயின் – கல்லாடம்:2 25/27
இருள்மகள் கொண்ட குறுநகை போல – கல்லாடம்:2 38/6
அ புலத்து உயிர்கொடுத்து அருள் பொருள் கொண்ட பின் – கல்லாடம்:2 44/18
வாய் வலம் கொண்ட வயிற்று எழு தழலுக்கு – கல்லாடம்:2 91/1
நாணமும் கொண்ட நடுவினர் இன்னும் – கல்லாடம்:2 100/34

மேல்

கொண்டல் (1)

கொண்டல் வந்து உலவும் நீல குவட்டினும் – கல்லாடம்:2 52/12

மேல்

கொண்டன (1)

ஓட்டம் கொண்டன கடுக்கும் – கல்லாடம்:2 90/21

மேல்

கொண்டனள் (1)

கொண்டனள் என் என என் முகம் நாடி – கல்லாடம்:2 23/45

மேல்

கொண்டிருந்த (1)

கன்னி கொண்டிருந்த மன் அருள் கடவுள் – கல்லாடம்:2 6/36

மேல்

கொண்டு (18)

அறிவு நிலை கூடா சில் மொழி கொண்டு
கடவுள் கூற உலவா அருத்தியும் – கல்லாடம்:1 2/58,59
விருந்து கொண்டு உண்ணும் பெரும் தவர் போல – கல்லாடம்:2 14/46
கொண்டு வாழுநர் கண்டு அருகிடத்தும் – கல்லாடம்:2 17/24
மயக்கம் நிறை காமத்து இயக்கம் கொண்டு
நின்ற நாரணன் பரந்த மார்பில் – கல்லாடம்:2 17/32,33
வளர்த்த சேண் மலை உள துயர் கொண்டு
தொடர்ந்ததும் இலை கீழ் நடந்த சொல் கிடக்க – கல்லாடம்:2 17/43,44
கொண்டு குளிர் பரந்த மங்குல் வாவிக்குள் – கல்லாடம்:2 21/8
மூ அடி வழக்கிற்கு ஓர் அடி மண் கொண்டு
ஒரு தாள் விண்ணத்து இருமை பெற நீட்டிய – கல்லாடம்:2 27/5,6
மருந்து கை கொண்டு வானவர்க்கு ஊட்டிய – கல்லாடம்:2 41/26
என் ஒரு மயிலும் நின் மகள் கொண்டு
தோன்றி நின்று அழியா துகள் அறு பெரும் தவம் – கல்லாடம்:2 65/9,10
அகிலும் கனகமும் அருவி கொண்டு இறங்கி – கல்லாடம்:2 65/14
நான் முகம் கொண்டு அறி நன்னர் நெஞ்சு இருந்து – கல்லாடம்:2 72/2
புனித கலன் என உலகு தொழ கொண்டு
வட்டம் முக்கோணம் சதுரம் கார் முகம் – கல்லாடம்:2 77/9,10
கொலை கொண்டு ஆழி குறி உடன் படைத்து – கல்லாடம்:2 80/15
நூறு உடை மகத்தில் பேறு கொண்டு இருந்த – கல்லாடம்:2 81/12
எண் திசை சாகை கொண்டு இருள் மனம் பொதுளி – கல்லாடம்:2 83/2
நன்னரில் கொண்டு குளிரும் பெறுமே – கல்லாடம்:2 86/38
கோதை வகை பரிந்தும் மணி கலன் கொண்டு
கழை தோள் நெகிழ தழை உடல் குழைய – கல்லாடம்:2 87/10,11
அமரர் பெற்று உண்ணும் அமுது உரு கொண்டு
குறும் சொல் குதட்டிய மழலை மென் கிளவியில் – கல்லாடம்:2 88/8,9

மேல்

கொண்டும் (1)

அருவி தூங்க கண்ணீர் கொண்டும்
அரவின் வாய் அரியின் பலவும் நினைந்தும் – கல்லாடம்:2 23/42,43

மேல்

கொண்டோர் (1)

கொள்ளார் அறுதியும் கொண்டோர் இசைத்தலும் – கல்லாடம்:2 44/12

மேல்

கொண்டோற்கு (1)

கொண்டோற்கு ஏகும் குறி உடை நல் நாள் – கல்லாடம்:2 42/17

மேல்

கொண்மூ (2)

கமம் சூல் கொண்மூ முதுகு குடியிருந்து – கல்லாடம்:2 28/19
கொண்மூ பல் திரை புனலுடன் தாழ்த்தி – கல்லாடம்:2 40/10

மேல்

கொணர்ந்து (1)

குவலய திரு மலர் கொணர்ந்து கொடுத்தும் – கல்லாடம்:2 9/27

மேல்

கொத்து (1)

பொன் சுடர் விரித்த கொத்து அலர் கொன்றையும் – கல்லாடம்:2 19/25

மேல்

கொதித்த (1)

பசும் கடல் வளைந்து பருக கொதித்த
தோற்றமும் கடந்தது என்றால் ஆற்றல் செய் – கல்லாடம்:2 86/16,17

மேல்

கொதித்தனள் (1)

புறன் வழங்காது நெஞ்சொடு கொதித்தனள்
மாறா கற்பின் அன்னை – கல்லாடம்:2 2/23,24

மேல்

கொதித்து (1)

விடம் கொதித்து உமிழும் படம் கெழு பகு வாய் – கல்லாடம்:2 55/1

மேல்

கொப்புள் (1)

உடு என கொப்புள் உடல் நிறை பொடித்தது – கல்லாடம்:2 71/27

மேல்

கொம்பினர் (1)

குளிர் மணல் கேணியுள் கொம்பினர் படர்ந்தும் – கல்லாடம்:2 72/31

மேல்

கொம்பினுக்கு (1)

குன்ற குறவர் கொம்பினுக்கு இனியன் – கல்லாடம்:2 86/20

மேல்

கொய் (4)

மை_இல் காட்சி கொய் உளை நிற்ப – கல்லாடம்:2 17/49
கொய் உளை கடு மான் கொளுவிய தேரொடு – கல்லாடம்:2 68/11
பேழ் வாய் கொய் உளை அரி சுமந்து எடுத்த – கல்லாடம்:2 75/4
கொய் தளிர் அன்ன மேனி – கல்லாடம்:2 94/40

மேல்

கொய்தும் (4)

சுட்டும் கொய்தும் உதைத்தும் தணித்த – கல்லாடம்:2 17/40
பெரும் சுனை விழித்த நீலம் கொய்தும்
கொடுமரம் பற்றி நெட்டு இதண் பொலிந்தும் – கல்லாடம்:2 22/37,38
பைம் காடு நகைத்த எண் மலர் கொய்தும்
மனத்தொடு கண்ணும் அடிக்கடி கொடுபோம் – கல்லாடம்:2 28/29,30
தெரிந்து அலர் கொய்தும் பொழில் குறி வினவியும் – கல்லாடம்:2 85/15

மேல்

கொய்யும் (1)

கொய்யும் காலமும் நாள்பெற குறித்து – கல்லாடம்:2 4/24

மேல்

கொல்லி (1)

கோடை சென்று உடற்றும் கொல்லி கிரியினும் – கல்லாடம்:2 52/13

மேல்

கொல்லும் (3)

பகட்டு இனம் கொல்லும் பழிநாட்டவளே – கல்லாடம்:2 51/16
தொகை இருள் கொல்லும் முன்றில் பக்கத்து – கல்லாடம்:2 83/22
திரை நிரை திரைத்து கரை கரை கொல்லும்
வையை நீர் விழவு புகுந்தனம் என ஒரு – கல்லாடம்:2 86/4,5

மேல்

கொல்லையில் (1)

கல்லென்று இழிந்து கொல்லையில் பரக்கும் – கல்லாடம்:2 39/20

மேல்

கொலை (16)

ஊற்று எழும் இரு கவுள் பெரு மத கொலை மலை – கல்லாடம்:2 4/17
வடுத்து எழு கொலை முலை பொடித்தன அன்றே – கல்லாடம்:2 5/30
மறைந்து கண்டு அ கொலை மகிழ்வுழி இ நிலை – கல்லாடம்:2 6/13
கொலை நுதி எயிறு என்று இரு பிறை முளைத்த – கல்லாடம்:2 13/11
கொலை களவு என்னும் பழுமரம் பிடுங்கி – கல்லாடம்:2 22/45
நதி கடம் தறுகண் புகர் கொலை மறுத்த – கல்லாடம்:2 29/9
கொலை களவு என்னும் படர் களை கட்டு – கல்லாடம்:2 37/12
தழல் விழி மடங்கல் கொலை அரி குருளையை – கல்லாடம்:2 50/12
கொலை மதில் மூன்றும் இகல் அற கடந்து – கல்லாடம்:2 62/20
வான் உடைத்து உண்ணும் மற கொலை அரக்கர் மு – கல்லாடம்:2 74/27
கூக்குரல் கொள்ளா கொலை தரு நவ்வியும் – கல்லாடம்:2 77/14
கொலை கொண்டு ஆழி குறி உடன் படைத்து – கல்லாடம்:2 80/15
கொலை முதிர் கடமான் முதிர் முகம் படர்ந்து – கல்லாடம்:2 81/3
கொடும் கொலை வடுத்து கடும் பழி சடை அலைந்து – கல்லாடம்:2 83/3
முழக்கி மெய் கவரும் முக கொலை ஞாளி – கல்லாடம்:2 83/25
எடுத்து உடன் அந்த கடு கொலை அரவினை – கல்லாடம்:2 87/26

மேல்

கொலைக்கு (1)

முன் ஒரு காலத்து அடு கொலைக்கு அணைந்த – கல்லாடம்:2 14/25

மேல்

கொலைஞர் (2)

கொடுமர கொலைஞர் ஆற்றிடை கவர – கல்லாடம்:2 6/18
கொலைஞர் பொலிந்த கொடி தேர்க்கு அணங்கினை – கல்லாடம்:2 69/7

மேல்

கொலையினர் (2)

கொலையினர் நெஞ்சம் கூண்ட வல் இருள் எனும் – கல்லாடம்:2 14/44
கொலையினர் உள்ளமும் குறைகொள இருண்டு – கல்லாடம்:2 35/13

மேல்

கொலையினர்-கண்ணும் (1)

கொலையினர்-கண்ணும் குன்றாது இயைந்து – கல்லாடம்:2 52/20

மேல்

கொழிக்கும் (3)

குற மகார் கொழிக்கும் கழை நித்திலமும் – கல்லாடம்:2 50/17
குரு மணி கொழிக்கும் புனல் மலை கோட்டுழி – கல்லாடம்:2 68/5
நெடு முடி அருவி அகிலொடு கொழிக்கும்
கைலை வீற்றிருந்த கண்_நுதல் விண்ணவன் – கல்லாடம்:2 68/29,30

மேல்

கொழித்த (1)

கரு மணி கொழித்த தோற்றம் போல – கல்லாடம்:1 1/2

மேல்

கொழித்து (2)

வெண் துகில் நுடங்கி பொன் கொழித்து இழியும் – கல்லாடம்:2 22/35
வயிரமும் பொன்னும் நிரைநிரை கொழித்து
துகில் நான்று நுடங்கும் அருவி ஏற்றும் – கல்லாடம்:2 28/22,23

மேல்

கொழு (2)

மூன்று வகை அடுத்த தேன் தரு கொழு மலர் – கல்லாடம்:2 35/3
கோடல் ஈன்று கொழு முனை கூம்ப – கல்லாடம்:2 94/3

மேல்

கொழுதி (1)

கொழுதி பாடும் குண சுரும்பு இனங்காள் – கல்லாடம்:2 35/4

மேல்

கொழுந்து (4)

கை வளர் கொழுந்து மெய் பொடியாகு என – கல்லாடம்:2 6/20
நெடும் சடை காட்டினை அடும் தீ கொழுந்து என – கல்லாடம்:2 55/6
பவள மின் கவை கொடி வடவையின் கொழுந்து என – கல்லாடம்:2 72/24
மற்று அவன்-தன்னால் வடவையின் கொழுந்து சுட்டு – கல்லாடம்:2 75/13

மேல்

கொழுந்தும் (2)

நெடும் சடை கிடந்த குறும்பிறை கொழுந்தும்
கரு முகில் வெளுத்த திரு மிடற்று இருளும் – கல்லாடம்:2 15/23,24
கரும் கடல் குடித்தலின் பெரும் தழல் கொழுந்தும்
மா உயிர் வௌவலின் தீ விழி கூற்றும் – கல்லாடம்:2 56/3,4

மேல்

கொழுந்தொடும் (1)

குஞ்சர கொடியொடும் வள்ளி அம் கொழுந்தொடும்
கூறா கற்பம் குறித்து நிலைசெய்த – கல்லாடம்:2 70/6,7

மேல்

கொழுநர் (1)

கொழுநர் கூடும் காம உததியை – கல்லாடம்:2 19/7

மேல்

கொழும் (3)

ஆலவாய் உறைதரும் மூல கொழும் சுடர் – கல்லாடம்:2 28/10
கொழும் சினை மிடைந்து குளிரொடு பொதுளிய – கல்லாடம்:2 81/4
கொழும் சுடர் கிளைத்த நெடும் சடை புயங்கன் – கல்லாடம்:2 91/5

மேல்

கொள் (26)

இடம் கொள் ஞாலத்து வலம் கொளும் பதத்த – கல்லாடம்:1 1/22
கால் முகம் ஏற்ற துளை கொள் வாய் கறங்கும் – கல்லாடம்:1 1/33
நன்னர் கொள் ஆசி நாட்டியது இவ் உழை – கல்லாடம்:2 6/15
எவ்வுயிர் நிறைந்த செவ்வி கொள் மேனியின் – கல்லாடம்:2 6/34
செவ்வி கொள் கரு முகில் செல்வன் ஆகியும் – கல்லாடம்:2 9/4
துறை கொள் ஆயிரம் முகமும் சுழல – கல்லாடம்:2 16/9
அணங்காட்டு முதியோள் முறம் கொள் நெல் எடுக்க – கல்லாடம்:2 16/24
கார் வான் தந்த பேர் கொள் செக்கரில் – கல்லாடம்:2 17/35
கண்ணால் உகிரால் மலர் கொள் காலால் – கல்லாடம்:2 17/39
நாள் இழைத்திருக்கும் செயிர் கொள் அற்றத்து – கல்லாடம்:2 21/25
வெள்ளை கொள் சிந்துர நல் அணி ஆகி – கல்லாடம்:2 22/10
கருவி நுனி கொள் நெறி இலை ஈந்தின் – கல்லாடம்:2 24/10
பசும் தாள் சே கொள் ஆம்பல் மலர – கல்லாடம்:2 38/17
நிரைத்து கிளை கொள் நெடு வழக்கு உய்த்தலும் – கல்லாடம்:2 44/21
சே கொள் முளரி அலர்த்திய திருவடி – கல்லாடம்:2 46/11
பழம் கொள் தத்தை வழங்கு சொல் போலும் – கல்லாடம்:2 50/9
முன்றில் அம் பெண்ணை குடம்பை கொள் அன்றிலும் – கல்லாடம்:2 50/24
தெய்வம் விடுத்து பொய் கொள் சிந்தையினும் – கல்லாடம்:2 52/19
விருந்து கொள் மலரும் புரிந்து உறை மணமும் – கல்லாடம்:2 58/2
பளிங்க பொருப்பின் திடர் கொள் மூதூர் – கல்லாடம்:2 61/5
ஆரிய பதம் கொள் நாரத பேரியாழ் – கல்லாடம்:2 82/10
நன்னர் கொள் அன்பால் நனி முகம் புலம்ப – கல்லாடம்:2 82/11
நோக்கம் மறைத்த பரிதி கொள் நெடும் தேர் – கல்லாடம்:2 82/45
சே கொள் கண்ணை செம் மொழி பெயர்தந்து – கல்லாடம்:2 86/9
நிலம் படர் தோகை குலம் கொள் சேதாவும் – கல்லாடம்:2 87/22
ஒரு தாள் தாரை கொள் மு கவை சுடர் வேல் – கல்லாடம்:2 87/34

மேல்

கொள்கை (1)

கூற்றம் உருத்து எழுந்த கொள்கை போல – கல்லாடம்:2 15/20

மேல்

கொள்வதும் (1)

கொள்வதும் உளதோ கொடுப்பதும் உளதோ – கல்லாடம்:2 100/35

மேல்

கொள்வோர்க்கு (1)

கொள்வோர்க்கு அன்றி அவ் வயல் சாயா – கல்லாடம்:2 17/27

மேல்

கொள்ள (1)

கொள்ளுநர் கொள்ள குறையாது ஆதலின் – கல்லாடம்:2 11/21

மேல்

கொள்ளம் (1)

கொள்ளம் புகுந்து வள் உறை வானத்து – கல்லாடம்:2 74/17

மேல்

கொள்ளவும் (1)

கையினில் கொள்ளவும் கரி உரி மூடவும் – கல்லாடம்:2 76/22

மேல்

கொள்ளா (3)

கால் தலை கொள்ளா கையினர் போல – கல்லாடம்:2 21/63
கூக்குரல் கொள்ளா கொலை தரு நவ்வியும் – கல்லாடம்:2 77/14
திரு மனம் கொள்ளா சேக்கையது ஆக – கல்லாடம்:2 80/29

மேல்

கொள்ளாது (3)

பார்வையில் தொழில்கள் கூர் விழி கொள்ளாது
மறுபுலத்து இடு பகை வேந்து அடக்கியது என – கல்லாடம்:2 5/28,29
கண்ணினும் கொள்ளாது உண்ணவும் பெறாது – கல்லாடம்:2 63/6
பேதை கொள்ளாது ஒழி மனம் கடுத்தே – கல்லாடம்:2 82/52

மேல்

கொள்ளார் (3)

தெய்வம் கொள்ளார் திணி மனம் என்ன – கல்லாடம்:2 5/25
கொள்ளார் அறுதியும் கொண்டோர் இசைத்தலும் – கல்லாடம்:2 44/12
தெய்வம் கொள்ளார் சிந்தையது என்ன – கல்லாடம்:2 83/14

மேல்

கொள்ளிவாய் (1)

கொள்ளிவாய் குணங்கு உள்ளு-தோறு இவரிய – கல்லாடம்:2 97/11

மேல்

கொள்ளுதும் (1)

குழந்தை அன்பினொடு சென்னி-தலை கொள்ளுதும்
அறிவு நிலை கூடா சில் மொழி கொண்டு – கல்லாடம்:1 2/57,58

மேல்

கொள்ளுநர் (1)

கொள்ளுநர் கொள்ள குறையாது ஆதலின் – கல்லாடம்:2 11/21

மேல்

கொள்ளும் (1)

புனம் எரி கார் அகில் புகை பல கொள்ளும்
குளவன் வீற்றிருந்த வளர் புகழ் குன்றமும் – கல்லாடம்:2 100/3,4

மேல்

கொள்ளை (3)

கஞ்ச கொள்ளை இடையற மலர்ந்து – கல்லாடம்:2 23/4
வெள்ள பெரு நதி கொள்ளை முகம் வைத்து – கல்லாடம்:2 27/2
கொள்ளை அம் சுகமும் குருவியும் கடிய – கல்லாடம்:2 81/42

மேல்

கொள (1)

அளவா புலன் கொள விஞ்சையர் எண்மரும் – கல்லாடம்:2 30/16

மேல்

கொளின் (1)

கண் எதிர் வைகி முகன் கொளின் கலங்கியும் – கல்லாடம்:2 44/5

மேல்

கொளும் (1)

இடம் கொள் ஞாலத்து வலம் கொளும் பதத்த – கல்லாடம்:1 1/22

மேல்

கொளுவ (1)

ஒரு நாள் மூன்று புரம் தீ கொளுவ
பொன்மலை பிடுங்கி கார் முகம் என்ன – கல்லாடம்:2 33/21,22

மேல்

கொளுவி (2)

ஆயிரம் தீ வாய் அரவு நாண் கொளுவி
மாதவன் அங்கி வளி குதை எழு நுனி – கல்லாடம்:2 25/20,21
பட்டடை எடுத்து பாலையில் கொளுவி
கிளையில் காட்டி ஐ முறை கிளத்தி – கல்லாடம்:2 100/13,14

மேல்

கொளுவிய (1)

கொய் உளை கடு மான் கொளுவிய தேரொடு – கல்லாடம்:2 68/11

மேல்

கொளுவும் (2)

முகன் தரும் இருசெயல் அகன் பெற கொளுவும்
புல்ல பாண்மகன் சில்லையும் இன்றி – கல்லாடம்:2 50/2,3
இடங்கரும் ஆமையும் எழு வெயில் கொளுவும்
மலை முதுகு அன்ன குலை முகடு ஏறி – கல்லாடம்:2 74/19,20

மேல்

கொற்ற (1)

மற்று அவள் ஊரன் கொற்ற வெண்குடையே – கல்லாடம்:2 62/13

மேல்

கொற்றத்து (1)

கடும் கால் கொற்றத்து அடும் தூதுவர் என – கல்லாடம்:2 96/7

மேல்

கொற்றவன் (1)

கொடுங்கோல் கொற்றவன் நெடும் படை அனைத்தும் – கல்லாடம்:2 64/3

மேல்

கொறிப்ப (1)

பொரியின் கொறிப்ப புரிந்த பொருள் நாடி – கல்லாடம்:1 2/30

மேல்

கொன்ற (6)

மாவொடும் கொன்ற மணி நெடும் திரு வேல் – கல்லாடம்:2 8/6
கடல் மா கொன்ற தீ படர் நெடு வேல் – கல்லாடம்:2 41/10
மரக்கால் ஆடி அரக்கர் கொன்ற
கவை தலை மணி வேல் பிறை தலை கன்னி – கல்லாடம்:2 41/18,19
நீர் மா கொன்ற சேயோன் குன்றமும் – கல்லாடம்:2 80/17
விட மா கொன்ற நெடு வேல் குளவன் – கல்லாடம்:2 83/9
கொடும் சூர் கொன்ற கூரிய நெடு வேல் – கல்லாடம்:2 86/19

மேல்

கொன்று (2)

கார் உடல் பிறை எயிற்று அரக்கனை கொன்று
வச்சிர தட கை வரைப்பகை சுமந்த – கல்லாடம்:2 35/7,8
கொன்று உணல் அஞ்சா குறியினர் போகும் – கல்லாடம்:2 53/4

மேல்

கொன்றை (3)

கொன்றை புறவு அகற்றி நின்ற இருள் காட்டின – கல்லாடம்:2 1/21
திரு மலர் எடுத்து கொன்றை காட்ட – கல்லாடம்:2 20/9
கொன்றை அம் துணரில் செவ்வழி குறித்தும் – கல்லாடம்:2 54/1

மேல்

கொன்றையன் (1)

உடைந்து உமிழ் நறவு உண்டு உறங்கு தார் கொன்றையன்
திருவடி புகழுநர் செல்வம் போலும் – கல்லாடம்:2 41/41,42

மேல்

கொன்றையும் (2)

பொன் சுடர் விரித்த கொத்து அலர் கொன்றையும்
தாளியும் அறுகும் வால் உழை எருக்கமும் – கல்லாடம்:2 19/25,26
தாளியும் கொன்றையும் தழைத்தலின் முல்லையும் – கல்லாடம்:2 64/15

மேல்