கெ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கெட்டு (2)

தன் படு துயரமும் அடைவு கெட்டு இறத்தலும் – கல்லாடம்:1 2/61
நாரணன் படர தேவர் கெட்டு ஓட – கல்லாடம்:2 51/26

மேல்

கெட (3)

முன்னம் எள்ளினர் நெஞ்சு கெட துவைப்ப – கல்லாடம்:2 18/15
கட்புலன் காணாது காட்டை கெட உந்தலின் – கல்லாடம்:2 36/11
நிலை கெட பரந்த கடல் கெழு விடத்தை – கல்லாடம்:2 51/29

மேல்

கெடலும் (1)

தமக்கு என காட்டும் ஒளி கண் கெடலும்
மற்று அவர் மயக்கம் கண்டு அவர் கண் பெற – கல்லாடம்:2 69/31,32

மேல்

கெடவரல் (1)

மானின் குழவியொடு கெடவரல் வருத்தியும் – கல்லாடம்:2 17/3

மேல்

கெடுக்கும் (1)

அவை முதல் ஆகி இருவினை கெடுக்கும்
புண்ணிய கல்வி உள் நிகழ் மாக்கள் – கல்லாடம்:2 11/23,24

மேல்

கெழு (19)

தொடர்ந்து உயிர் வவ்விய விடம் கெழு மிடற்றோன் – கல்லாடம்:2 8/9
குருவில் தோய்ந்த அரி கெழு மரகத – கல்லாடம்:2 18/3
பெரு நிலவு கான்ற நீறு கெழு பரப்பில் – கல்லாடம்:2 32/3
வடமீன் கற்பின் எம் பீடு கெழு மடந்தை – கல்லாடம்:2 37/1
மணி கெழு மார்பத்து அணிபெற புகுத்தலின் – கல்லாடம்:2 50/14
நீயே அணி கெழு நவமணி அலர் என தொடுத்த – கல்லாடம்:2 51/21
நிலை கெட பரந்த கடல் கெழு விடத்தை – கல்லாடம்:2 51/29
விடம் கொதித்து உமிழும் படம் கெழு பகு வாய் – கல்லாடம்:2 55/1
களவு உடல் பிளந்த ஒளி கெழு திரு வேல் – கல்லாடம்:2 59/29
இரு நிலம் தாங்கிய வலி கெழு நோன்மை – கல்லாடம்:2 65/1
தரளமும் சந்தும் எரி கெழு மணியும் – கல்லாடம்:2 65/12
எழு கதிர் விரிக்கும் மணி கெழு திருந்து_இழை – கல்லாடம்:2 66/11
மந்திர திரு வேல் மறம் கெழு மயிலோன் – கல்லாடம்:2 70/5
நிறைந்து உறை கறை மிடற்று அறம் கெழு பெருமான் – கல்லாடம்:2 70/9
இறையவன் பிறையவன் கறை கெழு மிடற்றோன் – கல்லாடம்:2 71/14
பரங்குன்று உடுத்த பயன் கெழு கூடல் – கல்லாடம்:2 72/10
மருவலர் அடைந்த முன் மறம் கெழு மதிலே – கல்லாடம்:2 74/29
மறிய புதைத்த மறம் கெழு பெருமான் – கல்லாடம்:2 80/16
முழுது அனுக்கிரகம் கெழு பரம் அநாதி – கல்லாடம்:2 86/27

மேல்

கெழுமி (2)

தேனொடும் வண்டொடும் திருவொடும் கெழுமி
பெரும் துயில் இன்பம் பொருந்துபு நடுநாள் – கல்லாடம்:2 68/8,9
அவ் விரத துறையாடுதல் கெழுமி
பொன் உருள் வையம் போவது காண்க – கல்லாடம்:2 69/9,10

மேல்

கெழுமிய (1)

கெழுமிய விழவுள் புகு-மதி நீயே – கல்லாடம்:2 87/18

மேல்