கு – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குகன் 1
குங்கும 3
குங்குமம் 2
குச்சையின் 1
குஞ்சர 3
குஞ்சரத்தின் 1
குஞ்சரம் 1
குஞ்சி 1
குட்டி 1
குட 3
குடகடல் 1
குடங்கை 1
குடத்தியர் 2
குடத்தில் 1
குடம் 1
குடம்பை 2
குடம்பையின் 1
குடம்பையூடு 1
குடமுழவு 2
குடி 9
குடிக்கு 1
குடிக்கும் 1
குடிகள் 1
குடிகொண்டு 1
குடித்த 3
குடித்தலின் 1
குடித்து 1
குடிபோகி 1
குடிபோகிய 1
குடியிருக்கும் 1
குடியிருந்து 1
குடியினள் 1
குடியும் 2
குடிலில் 1
குடுமி 5
குடை 1
குடைந்தும் 1
குண்டம் 2
குண்டு 4
குண 7
குணங்கு 4
குணத்தினர் 2
குணம் 6
குணமும் 1
குணனும் 2
குத்தி 1
குதட்டி 1
குதட்டிய 2
குதட்டினை 1
குதர்ந்து 1
குதலை 1
குதலையும் 1
குதி 1
குதை 1
குப்பையும் 1
குப்பையை 2
கும்பகம் 1
கும்பம் 2
குமட்டி 1
குமரன் 4
குமரியர் 1
குமிழ்த்த 1
குமிழும் 1
குமுத 1
குமுதம் 2
குமுதமும் 1
குயில் 1
குயிற்றி 1
குயிற்றிய 2
குரங்கம் 1
குரம்பை 1
குரம்பையில் 1
குரல் 21
குரலும் 2
குரலோன் 1
குரவம் 2
குரவு 1
குரவை 1
குராமலர் 1
குரிசில் 4
குரிசிலும் 1
குரு 4
குருகு 15
குருகும் 3
குருகே 2
குருகொடு 1
குருத்து 1
குருதி 3
குருநாடு 1
குரும்பையும் 1
குருவி 1
குருவிக்கு 1
குருவிந்தத்தில் 1
குருவிந்தம் 1
குருவியும் 3
குருவில் 1
குருவும் 1
குருளையை 1
குரை 2
குரைப்பு 1
குல 12
குலத்து 2
குலம் 10
குலமீன் 1
குலமே 1
குலவன் 1
குலவிய 2
குலவியும் 1
குலனும் 2
குலனுள் 1
குலனொடு 1
குலிதம் 1
குலை 5
குலைப்ப 1
குவட்டினும் 1
குவட்டு 1
குவடு 1
குவலய 1
குவளை 10
குவளையின் 1
குவளையும் 1
குவால் 1
குவி 1
குவித்த 2
குவித்து 2
குவித்தும் 3
குவிந்த 1
குவிந்தவும் 1
குவிய 1
குவை 2
குவையும் 1
குழகன் 1
குழந்தை 1
குழம்ப 1
குழம்பகம் 1
குழமக 1
குழல் 11
குழலி 1
குழலும் 2
குழலையும் 1
குழலொடும் 1
குழவி 4
குழவிக்கு 1
குழவியும் 1
குழவியொடு 1
குழற 2
குழி 6
குழிய 1
குழியாது 1
குழியும் 1
குழிவாங்கி 1
குழிவு 1
குழீஇ 1
குழு 1
குழுமி 1
குழுவினுக்கு 1
குழுவினை 1
குழுவுடன் 1
குழுவும் 4
குழை 11
குழை-முகம் 1
குழைத்து 2
குழைய 1
குளம் 1
குளவன் 3
குளி 1
குளிக்குநர் 1
குளிக்கும் 2
குளிசெய்யும் 1
குளித்து 2
குளிப்ப 1
குளிர் 10
குளிர்க்கு 1
குளிர்கொண்டு 1
குளிர்ச்சி 1
குளிர்ந்த 1
குளிர்ப்ப 1
குளிர 1
குளிரின் 1
குளிரும் 2
குளிரொடு 1
குளிறலும் 1
குளிறு 1
குளிறும் 1
குற்றம் 3
குற்றமும் 3
குற்றிலை 1
குற்றுழி 2
குற 2
குறத்தி 1
குறத்தியர் 1
குறமகள் 1
குறவ 1
குறவர் 2
குறவர்-தம் 1
குறவரும் 1
குறள் 1
குறளினை 1
குறி 23
குறி-கொல் 1
குறிக்குநரால் 1
குறிக்கும் 1
குறிஞ்சி 1
குறிஞ்சியும் 1
குறித்த 6
குறித்தன 2
குறித்து 10
குறித்தும் 2
குறித்தே 2
குறிப்ப 1
குறிபடு 1
குறியா 1
குறியாய் 1
குறியின் 2
குறியினர் 1
குறியினோளும் 1
குறியுடன் 1
குறியும் 2
குறியே 1
குறியை 2
குறியோ 1
குறு 1
குறுகி 1
குறுங்காய் 1
குறுந்தொடியினர் 1
குறுநகை 2
குறுநரி 2
குறும் 16
குறும்பிறை 2
குறுமறி 1
குறுமுனி 3
குறுமுனிக்கு 1
குறுமையும் 1
குறுவெயர் 1
குறுவெயிர்ப்பு 1
குறை 7
குறைகொள 1
குறைத்த 2
குறைபெற 1
குறையா 1
குறையாது 2
குறையினர் 1
குன்ற 3
குன்றகம் 1
குன்றத்து 2
குன்றம் 9
குன்றமும் 4
குன்றவர் 1
குன்றா 1
குன்றாது 1
குன்றி 1
குன்றில் 1
குன்றினன் 1
குன்று 5
குன்றும் 2
குனிக்கும் 1
குனித்த 2
குனித்து 2
குனிந்து 1
குனிப்ப 3

குகன் (1)

மா குகன் நதி விட ஊக்கி வனத்து – கல்லாடம்:2 95/31

மேல்

குங்கும (3)

குங்கும கொங்கையும் தலை கண் கறாது – கல்லாடம்:2 5/11
குங்கும கோட்டு அலர் உணங்கல் கடுக்கும் – கல்லாடம்:2 18/1
துருத்தி வாய் அதுக்கிய குங்கும காண்டமும் – கல்லாடம்:2 50/16

மேல்

குங்குமம் (2)

கலவா குங்குமம் நிலவியது என்ன – கல்லாடம்:2 17/34
குங்குமம் அஞ்சில் கோவாங்கு நிறமும் – கல்லாடம்:2 98/39

மேல்

குச்சையின் (1)

குச்சையின் மத்தக குறியின் ஓரத்தின் – கல்லாடம்:2 98/18

மேல்

குஞ்சர (3)

மீன் புகர் நிறைந்த வான் குஞ்சர முகம் – கல்லாடம்:2 19/3
குஞ்சர கொடியொடும் வள்ளி அம் கொழுந்தொடும் – கல்லாடம்:2 70/6
குஞ்சர கோதையும் குறமகள் பேதையும் – கல்லாடம்:2 73/9

மேல்

குஞ்சரத்தின் (1)

மலை குஞ்சரத்தின் கட குழி ஆகி – கல்லாடம்:2 22/7

மேல்

குஞ்சரம் (1)

ஓவா பெரு மலை குஞ்சரம் மணக்க – கல்லாடம்:2 26/31

மேல்

குஞ்சி (1)

எரி தழல் குஞ்சி பொறி விழி பிறழ் எயிற்று – கல்லாடம்:2 27/13

மேல்

குட்டி (1)

அரி தரு குட்டி ஆய பன்னிரண்டினை – கல்லாடம்:2 37/10

மேல்

குட (3)

பொன் குட முகட்டு கரு மணி அமைத்து என – கல்லாடம்:2 5/10
குட கோ சேரன் கிடைத்து இது காண்க என – கல்லாடம்:2 11/26
சுழல் விழி சிறுநகை குட வயிற்று இரு குழை – கல்லாடம்:2 34/6

மேல்

குடகடல் (1)

படும் அழல் நீக்க குடகடல் குளிக்கும் – கல்லாடம்:2 17/52

மேல்

குடங்கை (1)

வருந்தாது வளர்த்தும் குடங்கை துயிற்றியும் – கல்லாடம்:2 17/2

மேல்

குடத்தியர் (2)

குடத்தியர் இழுக்கிய அளை சிதறிய போல் – கல்லாடம்:2 14/10
குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து – கல்லாடம்:2 42/24

மேல்

குடத்தில் (1)

வாய் எனும் குடத்தில் வரம்பு அற எடுத்த – கல்லாடம்:2 14/29

மேல்

குடம் (1)

இடியும் துய்த்து சுரை குடம் எடுத்து – கல்லாடம்:2 12/5

மேல்

குடம்பை (2)

வரி உடல் சூழ குடம்பை நூல் தெற்றி – கல்லாடம்:1 1/26
முன்றில் அம் பெண்ணை குடம்பை கொள் அன்றிலும் – கல்லாடம்:2 50/24

மேல்

குடம்பையின் (1)

சினை முகம் ஏந்திய இணர்கொள் வாய் குடம்பையின்
எக்கர் புளினம் வெண்மையிட மறைக்கும் – கல்லாடம்:2 34/20,21

மேல்

குடம்பையூடு (1)

பாசடை குடம்பையூடு கண்படுப்ப – கல்லாடம்:2 64/29

மேல்

குடமுழவு (2)

முகம் வேறு இசைக்கும் குடமுழவு இரட்ட – கல்லாடம்:2 21/34
குடமுழவு இசைப்ப பெரும் அருள் நல்கி – கல்லாடம்:2 25/32

மேல்

குடி (9)

மணிக்கால் அறிஞர் பெரும் குடி தோன்றி – கல்லாடம்:1 2/52
புன குடி கணியர்-தம் மலர் கை ஏடு அவிழ்த்து – கல்லாடம்:2 4/22
குணம் குடி போய்வித்த ஆய் உளம் தவறே – கல்லாடம்:2 15/31
புலவு உடல் பரதவர் தம் குடி ஓம்ப – கல்லாடம்:2 23/22
வளம் தரும் உங்கள் தொல் குடி சீறூர்க்கு – கல்லாடம்:2 26/32
உழவ கணத்தை குல குடி புகுத்தும் – கல்லாடம்:2 54/35
கரு உயிர்த்து எடுத்த குடி முதல் அன்னை – கல்லாடம்:2 62/4
பெரும் துயர் அகற்றி அறம் குடி நாட்டி – கல்லாடம்:2 75/1
அ கடி குடி மனையவர் மனை புகுத்தி – கல்லாடம்:2 91/8

மேல்

குடிக்கு (1)

அன்ன ஊரர் புல்லமும் விழு குடிக்கு
அடாஅ கிளவியும் படாஅ பழியும் – கல்லாடம்:2 89/16,17

மேல்

குடிக்கும் (1)

கடு முரண் குடிக்கும் நெடு வில் கூட்டி – கல்லாடம்:2 25/19

மேல்

குடிகள் (1)

அவன் பழிநாட்டு நடுங்கும் நல் குடிகள்
கண்ணொடு கண்ணில் கழறிய போல – கல்லாடம்:2 64/5,6

மேல்

குடிகொண்டு (1)

என் உளம் குடிகொண்டு இரும் பயன் அளிக்கும் – கல்லாடம்:2 1/13

மேல்

குடித்த (3)

திரை கடல் குடித்த கரத்த மா முனிக்கும் – கல்லாடம்:2 17/14
கனை கடல் குடித்த முனிவனும் தமிழும் – கல்லாடம்:2 24/22
அதிர் உவர் கொக்கின் களவு உயிர் குடித்த
புகர் இலை நெடு வேல் அறு முக குளவன் – கல்லாடம்:2 98/54,55

மேல்

குடித்தலின் (1)

கரும் கடல் குடித்தலின் பெரும் தழல் கொழுந்தும் – கல்லாடம்:2 56/3

மேல்

குடித்து (1)

முற்றிய பெரு நறவு எண்ணுடன் குடித்து
நெட்டு இலை அரம்பை குறுங்காய் மானும் – கல்லாடம்:2 24/11,12

மேல்

குடிபோகி (1)

அருவி வீச பறவை குடிபோகி
விண்டு நறவு ஒழுக்கும் பாண்டில் இறாலாய் – கல்லாடம்:2 22/14,15

மேல்

குடிபோகிய (1)

முகம் கவிழ் வேலையில் அறம் குடிபோகிய
மாய வல் அரக்கர் தட்டி – கல்லாடம்:2 83/31,32

மேல்

குடியிருக்கும் (1)

குல மலை கன்னி என்று அருள் குடியிருக்கும்
விதி நிறை தவறா ஒரு பங்கு உடைமையும் – கல்லாடம்:2 66/20,21

மேல்

குடியிருந்து (1)

கமம் சூல் கொண்மூ முதுகு குடியிருந்து
வான் உட்க முரற்றும் மலை சுனை குடைந்தும் – கல்லாடம்:2 28/19,20

மேல்

குடியினள் (1)

பழமை நீண்ட குன்ற குடியினள்
வருந்தாது வளர்த்தும் குடங்கை துயிற்றியும் – கல்லாடம்:2 17/1,2

மேல்

குடியும் (2)

செங்கோல் வேந்தும் தங்கிய குடியும்
தவம் சூழ் இமயமும் கமம் சூல் மழையும் – கல்லாடம்:2 24/27,28
ஐந்தினில் பங்குசெய்து இன்பு வளர் குடியும்
தவல் அரும் சிறப்பொடு சால்புசெய்து அமைந்த – கல்லாடம்:2 100/8,9

மேல்

குடிலில் (1)

கோளகை குடிலில் குனிந்து இடைந்து அப்புறத்து – கல்லாடம்:2 78/6

மேல்

குடுமி (5)

குடுமி அம் தழலும் அவண் இருள் குவையும் – கல்லாடம்:2 6/30
குடுமி அம் சென்னியர் கரு முகில் விளர்ப்ப – கல்லாடம்:2 69/21
மன்னி நின்று அடங்கா குடுமி அம் பெரும் தழல் – கல்லாடம்:2 86/15
கவிர் அலர் பூத்த செம் செம்மை வில் குடுமி
மஞ்சு அடை கிளைத்த வரி குறு முள் தாள் – கல்லாடம்:2 89/4,5
குடுமி சேகர சமன் ஒளி சூழ்ந்த – கல்லாடம்:2 98/12

மேல்

குடை (1)

பல உயிர் தழைக்க ஒரு குடை நிழற்றும் – கல்லாடம்:2 61/18

மேல்

குடைந்தும் (1)

வான் உட்க முரற்றும் மலை சுனை குடைந்தும்
பிரசமும் வண்டும் இரவி தெறு மணியும் – கல்லாடம்:2 28/20,21

மேல்

குண்டம் (2)

தீ வளர் வட்ட குண்டம் ஆகி – கல்லாடம்:2 23/31
மறையவன் குண்டம் முறைமுறை வாய்ப்ப – கல்லாடம்:2 95/12

மேல்

குண்டு (4)

குண்டு நீர் உடுத்த நெடும் பார் எண்ணமும் – கல்லாடம்:1 1/23
உவாமதி கிடக்கும் குண்டு கடல் கலக்கி – கல்லாடம்:2 41/25
கரு நீர் குண்டு அகழ் உடுத்த – கல்லாடம்:2 55/39
வேலை குண்டு அகழ் வயிறு அலைத்து எழுந்த – கல்லாடம்:2 81/24

மேல்

குண (7)

கூடல் அம் பதி உறை குண பெரும் கடவுள் – கல்லாடம்:2 10/23
மணக்கோல் துரந்த குண கோ மதனை – கல்லாடம்:2 31/8
கொழுதி பாடும் குண சுரும்பு இனங்காள் – கல்லாடம்:2 35/4
குளிர் நிழல் இருந்து குண செயல் மூன்றும் – கல்லாடம்:2 53/11
தீ குண தக்கன் செருக்களம்-தன்னுள் – கல்லாடம்:2 60/15
கோயில்கொண்டிருந்த குண பெரும் குன்றம் – கல்லாடம்:2 81/16
கூடல் பதி வரும் குண பெரும் குன்றினன் – கல்லாடம்:2 97/17

மேல்

குணங்கு (4)

விண் புடைத்து அப்புறம் விளங்கு உடல் குணங்கு இனம் – கல்லாடம்:2 34/4
குணங்கு இனம் துள்ள கூளியும் கொட்ப – கல்லாடம்:2 41/3
பிணம் பிரித்து உண்ணும் குணங்கு இனம் கொடுப்ப – கல்லாடம்:2 79/8
கொள்ளிவாய் குணங்கு உள்ளு-தோறு இவரிய – கல்லாடம்:2 97/11

மேல்

குணத்தினர் (2)

கூடி உண்ணும் குணத்தினர் கிளை போல் – கல்லாடம்:2 35/15
கூடல் கூடா குணத்தினர் போல – கல்லாடம்:2 98/46

மேல்

குணம் (6)

குணம் குடி போய்வித்த ஆய் உளம் தவறே – கல்லாடம்:2 15/31
பெருந்தகை வேந்தன் அரும் குணம் போல – கல்லாடம்:2 51/2
அவிகார குறி ஆகிய தன் குணம்
எட்டும் தரித்து விட்டு அறு குற்றம் – கல்லாடம்:2 86/29,30
இருள் பவம் நடுங்கல் எனும் குணம் எட்டும் – கல்லாடம்:2 86/34
கூடல் கூடார் குணம் குறித்து எனவே – கல்லாடம்:2 93/25
பன்னு சாதரங்க ஒளி குணம் பத்தும் – கல்லாடம்:2 98/30

மேல்

குணமும் (1)

விரும்பிய குணமும் அரும் திரு உருவும் – கல்லாடம்:2 38/20

மேல்

குணனும் (2)

செய்குறி குணனும் சிந்தையுள் திரிவும் – கல்லாடம்:2 44/3
பெரும் தீ குணனும் ஒழிந்து உளம் குளிரும் – கல்லாடம்:2 65/24

மேல்

குத்தி (1)

பொரி என தாரகை கணன் உடல் குத்தி
அடும் திறல் இனைய கொடும் தொழில் பெருக்கிய – கல்லாடம்:2 67/20,21

மேல்

குதட்டி (1)

அமுதம் துளிக்கும் குமுத வாய் குதட்டி
பழம் கொள் தத்தை வழங்கு சொல் போலும் – கல்லாடம்:2 50/8,9

மேல்

குதட்டிய (2)

வெள் வாய் குதட்டிய விழுது உடை கரும் தடி – கல்லாடம்:2 14/33
குறும் சொல் குதட்டிய மழலை மென் கிளவியில் – கல்லாடம்:2 88/9

மேல்

குதட்டினை (1)

நீயும் குதட்டினை ஆயின் சேயாய் – கல்லாடம்:2 56/18

மேல்

குதர்ந்து (1)

இதழும் கொட்டையும் சிதற குதர்ந்து
வானவர் இறைவன் கடவு கார் பிடித்து – கல்லாடம்:2 67/15,16

மேல்

குதலை (1)

குதலை வாய் துடிப்ப குல கடை உணங்கியும் – கல்லாடம்:2 56/21

மேல்

குதலையும் (1)

இதழ் குவித்து பணித்த குதலையும் தெரியாது – கல்லாடம்:2 5/23

மேல்

குதி (1)

அதள் பிறக்கிட்டு குதி பாய் நவ்வியின் – கல்லாடம்:2 26/14

மேல்

குதை (1)

மாதவன் அங்கி வளி குதை எழு நுனி – கல்லாடம்:2 25/21

மேல்

குப்பையும் (1)

நிரை வளை ஈட்டமும் தரள குப்பையும்
அன்ன குழுவும் குருகு அணி இனமும் – கல்லாடம்:2 67/1,2

மேல்

குப்பையை (2)

குருகும் அன்னமும் வால் வளை குப்பையை
அண்டமும் பார்ப்பும் ஆம் என அணைக்கும் – கல்லாடம்:2 45/23,24
மரகத பன்னத்து ஆம்பல் அம் குப்பையை
சொரி எயிற்று பேழ் வாய் வாளைகள் துவைப்ப – கல்லாடம்:2 54/28,29

மேல்

கும்பகம் (1)

பூரகம் கும்பகம் புடை எழு விளரி – கல்லாடம்:2 100/24

மேல்

கும்பம் (2)

கும்பம் மூழ்கி உடல் குளித்து ஓட – கல்லாடம்:2 4/18
மாத்திரை ஆறுடன் கும்பம் பதித்து – கல்லாடம்:2 99/22

மேல்

குமட்டி (1)

குரலும் பாணியும் நெய்தலில் குமட்டி
விளரி எடுத்து மத்திமை விலக்கி – கல்லாடம்:2 100/15,16

மேல்

குமரன் (4)

மணி வேல் குமரன் முதல் நிலை வாழும் – கல்லாடம்:2 6/40
மணி வேல் குமரன் களி மகிழ்செய்த – கல்லாடம்:2 48/11
மணி வேல் குமரன் திரு வளர் குன்றம் – கல்லாடம்:2 81/14
தழல் வேல் குமரன் சால் பரங்குன்றம் – கல்லாடம்:2 84/6

மேல்

குமரியர் (1)

குமரியர் காமமும் கூவலும் வெதுப்புற – கல்லாடம்:2 94/27

மேல்

குமிழ்த்த (1)

புண்ணியம் குமிழ்த்த குன்று உடை கூடல் – கல்லாடம்:2 70/8

மேல்

குமிழும் (1)

குமுதமும் வள்ளையும் நீலமும் குமிழும்
தாமரை ஒன்றில் தடைந்து வளர்செய்த – கல்லாடம்:2 39/2,3

மேல்

குமுத (1)

அமுதம் துளிக்கும் குமுத வாய் குதட்டி – கல்லாடம்:2 50/8

மேல்

குமுதம் (2)

குமுதம் அலர்த்தியும் கமலம் குவித்தும் – கல்லாடம்:2 60/9
வண்டொடு குமுதம் மலர்ந்து இதழ் விரிப்ப – கல்லாடம்:2 64/27

மேல்

குமுதமும் (1)

குமுதமும் வள்ளையும் நீலமும் குமிழும் – கல்லாடம்:2 39/2

மேல்

குயில் (1)

மா குயில் மாழ்கி கூக்குரல் அடைப்ப – கல்லாடம்:2 94/18

மேல்

குயிற்றி (1)

கோடி மூன்றில் குறித்து மணி குயிற்றி
இரு நிலம் கிடத்தி மனம் கரம் கதுவ – கல்லாடம்:2 82/6,7

மேல்

குயிற்றிய (2)

மணி நிரை குயிற்றிய மண்டபம் ஆகி – கல்லாடம்:2 23/13
செம்பொன் மணி குயிற்றிய சிகர கோயிலுள் – கல்லாடம்:2 28/8

மேல்

குரங்கம் (1)

பக்கம் சூழுநர் குரங்கம் மண் பட – கல்லாடம்:2 93/5

மேல்

குரம்பை (1)

பழம் புல் குரம்பை இடம் புக்கு இருந்தும் – கல்லாடம்:2 12/7

மேல்

குரம்பையில் (1)

நெடு மரை அதள் வேய் சில் இட குரம்பையில்
மற்று அதன் தோலில் உற்று இருவீரும் – கல்லாடம்:2 96/25,26

மேல்

குரல் (21)

வரி புற அணில் வால் கரும் தினை வளை குரல்
கொய்யும் காலமும் நாள்பெற குறித்து – கல்லாடம்:2 4/23,24
செடி தலை கார் உடல் இடி குரல் கிராதர் – கல்லாடம்:2 6/12
முழங்க பெரும் குரல் கூஉய் – கல்லாடம்:2 17/57
விரல் நான்கு அமைத்த அணி குரல் வீங்காது – கல்லாடம்:2 21/40
நாசி காகுளி வெடி குரல் வெள்ளை – கல்லாடம்:2 21/45
தினை குரல் அறையும் கிளி கணம் கடிந்தும் – கல்லாடம்:2 22/39
கோல் தலை பனிப்ப வான் விடு பெரும் குரல்
வீயாது துவைக்கும் கடன் மலைநாடர் – கல்லாடம்:2 24/15,16
முன் புகு விதியின் என்பு குரல் பூண்டு – கல்லாடம்:2 26/16
எழிலி வான் சுழல பிளிறு குரல் பகட்டு இனம் – கல்லாடம்:2 26/21
வற்றிய நரம்பின் நெடும் குரல் பேழ் வாய் – கல்லாடம்:2 34/1
காருடன் மிடைந்த குளிறு குரல் கண முகில் – கல்லாடம்:2 46/13
பேழ் வாய் புலி உகிர் சிறு குரல் விளங்க – கல்லாடம்:2 50/7
தீ வாய் புலிப்பல் செறி குரல் எயிற்றியர் – கல்லாடம்:2 59/10
ஆர்த்து எழு பெரும் குரல் அமைந்து நின்று ஒடுங்கி நின் – கல்லாடம்:2 65/23
சுடு பொடி காப்பு உடல் துளங்க சுரி குரல்
ஆந்தையும் கூகையும் அணி தாலுறுத்த – கல்லாடம்:2 88/20,21
அளி தார் பாடும் குரல் நீர் வறந்த – கல்லாடம்:2 91/11
மலை புள் போல நிலை குரல் அணைந்து ஆங்கு – கல்லாடம்:2 91/12
வெறி மறி மடை குரல் தோல் காய்த்து என்ன – கல்லாடம்:2 92/1
இடி குரல் ஆனேற்று இனம் எதிர் செறுப்ப – கல்லாடம்:2 94/10
சாதகம் முரல் குரல் வாய் மடை திறப்ப – கல்லாடம்:2 94/17
புலி குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப – கல்லாடம்:2 94/24

மேல்

குரலும் (2)

வல்லியை பரியும் பகடு விடு குரலும்
யாணர் கொடிஞ்சி நெடும் தேர் இசைப்பும் – கல்லாடம்:2 39/12,13
குரலும் பாணியும் நெய்தலில் குமட்டி – கல்லாடம்:2 100/15

மேல்

குரலோன் (1)

குவளை நின்று அலர்ந்த மறை எழு குரலோன்
இமையவர் வேண்ட ஒரு நகை முகிழ்ப்ப – கல்லாடம்:2 74/24,25

மேல்

குரவம் (2)

குரவம் சுமந்த குழல் விரித்திருந்து – கல்லாடம்:2 6/23
குரவம் மலர்ந்த குவை இருள் குழலி – கல்லாடம்:2 12/1

மேல்

குரவு (1)

குரவு அரும்பு உடுத்த வால் எயிற்று அழல் விழி – கல்லாடம்:2 46/8

மேல்

குரவை (1)

இடை உறழ் நுசுப்பின் குரவை வாய் கடைசியர் – கல்லாடம்:2 27/22

மேல்

குராமலர் (1)

செங்கல் குராமலர் மஞ்சள் கோவை – கல்லாடம்:2 98/38

மேல்

குரிசில் (4)

ஓடா வென்றி பொலம் பூண் குரிசில்
சின்னம் கிடந்த கொடிஞ்சி மா தேர் – கல்லாடம்:2 2/16,17
தந்த எம் குரிசில் தனி வந்து எமது – கல்லாடம்:2 13/18
காக்கவும் குரிசில் கருத்துறும் போலும் – கல்லாடம்:2 52/9
உளது என குரிசில் ஒரு மொழி சாற்ற – கல்லாடம்:2 75/3

மேல்

குரிசிலும் (1)

கல் உயர் வரை தோள் செம் மன குரிசிலும்
கல்லா தவறு உளம் புல்லிய குழலும் – கல்லாடம்:2 15/1,2

மேல்

குரு (4)

வணங்கி நின்று ஏத்த குரு மொழி வைத்தோய் – கல்லாடம்:1 2/42
குரு மணி விரித்தலின் தேனொடு கிடந்து – கல்லாடம்:2 52/4
குரு மணி கொழிக்கும் புனல் மலை கோட்டுழி – கல்லாடம்:2 68/5
குரு வளர் மரகத பறை தழை பரப்பி – கல்லாடம்:2 71/5

மேல்

குருகு (15)

மீன் உணவு உள்ளியிருந்த வெண் குருகு என – கல்லாடம்:2 21/17
பெடை குருகு அணங்கின் விடுத்த வெண் சினையொடு – கல்லாடம்:2 23/8
குருகு பெயர் குன்றத்து உடல் பக எறிந்த – கல்லாடம்:2 24/2
சுற்றமும் சூழ்ந்து குருகு கண்படுப்ப – கல்லாடம்:2 43/9
குருகு அணி செறித்த தனி முதல் நாயகன் – கல்லாடம்:2 45/22
இன கயல் உண்ணும் களி குருகு இனமும் – கல்லாடம்:2 47/12
படர் மலை ஏழும் குருகு அமர் பொருப்பும் – கல்லாடம்:2 61/7
வெண் கார் கழனி குருகு எழ புகுந்து – கல்லாடம்:2 63/11
அன்ன குழுவும் குருகு அணி இனமும் – கல்லாடம்:2 67/2
மாயா வரத்த பெரும் குருகு அடித்து – கல்லாடம்:2 67/22
பிணர் முட தாழை விரி மலர் குருகு என – கல்லாடம்:2 72/17
வெள் இறவு உண்ண விழைந்து புகு குருகு இனம் – கல்லாடம்:2 72/26
வெள் உடல் கூர் வாய் செம் தாள் குருகு இனம் – கல்லாடம்:2 82/39
குருகு ஒலி ஓவா பனிமலை வாவி – கல்லாடம்:2 86/21
கைதை வெண் குருகு எழ மொய் திரை உகளும் – கல்லாடம்:2 92/13

மேல்

குருகும் (3)

குருகும் அன்னமும் வால் வளை குப்பையை – கல்லாடம்:2 45/23
குருகும் சேவலும் பார்ப்புடன் வெருவி – கல்லாடம்:2 64/28
குருகும் புள்ளும் அருகு அணி சூழ – கல்லாடம்:2 68/7

மேல்

குருகே (2)

கை பார்த்து இருக்கும் மட பெடை குருகே
பெடை குருகு அணங்கின் விடுத்த வெண் சினையொடு – கல்லாடம்:2 23/7,8
முன் கண்டு ஓதாது அவர்க்கு நம் குருகே – கல்லாடம்:2 43/36

மேல்

குருகொடு (1)

குவளை அம் காட்டு குருகொடு புதாவே – கல்லாடம்:2 59/17

மேல்

குருத்து (1)

குருத்து அயில் பேழ் வாய் பல் படை சீயம் – கல்லாடம்:2 96/5

மேல்

குருதி (3)

நெட்டு இலை குறும் புகர் குருதி வேலவ – கல்லாடம்:2 28/3
குருதி தாரை கல்லொடு பிறங்க – கல்லாடம்:2 55/17
ஒக்கல் புற்றாம் குருதி தொழுனை – கல்லாடம்:2 98/41

மேல்

குருநாடு (1)

பழன குருநாடு அளி பதி தோற்று – கல்லாடம்:2 93/15

மேல்

குரும்பையும் (1)

குருவியும் குன்றும் குரும்பையும் வெறுத்த நின் – கல்லாடம்:2 53/8

மேல்

குருவி (1)

குருவி விண் இசைக்கும் அந்தர குலிதம் – கல்லாடம்:2 100/19

மேல்

குருவிக்கு (1)

கரும் குருவிக்கு கண்ணருள் கொடுத்த – கல்லாடம்:2 39/8

மேல்

குருவிந்தத்தில் (1)

குருவிந்தத்தில் குறித்தன நிறமும் – கல்லாடம்:2 98/34

மேல்

குருவிந்தம் (1)

குருவிந்தம் செளகந்தி கோவாங்கு – கல்லாடம்:2 98/14

மேல்

குருவியும் (3)

மயிலும் கிளியும் குருவியும் படிந்து – கல்லாடம்:2 4/11
குருவியும் குன்றும் குரும்பையும் வெறுத்த நின் – கல்லாடம்:2 53/8
கொள்ளை அம் சுகமும் குருவியும் கடிய – கல்லாடம்:2 81/42

மேல்

குருவில் (1)

குருவில் தோய்ந்த அரி கெழு மரகத – கல்லாடம்:2 18/3

மேல்

குருவும் (1)

கரு வழி நீக்கலின் உயர் நிலை குருவும்
இரு நிலம் காத்தலின் மதி உடை வேந்தும் – கல்லாடம்:2 56/7,8

மேல்

குருளையை (1)

தழல் விழி மடங்கல் கொலை அரி குருளையை
பொன்மலை கண்ட பொலிவு போல – கல்லாடம்:2 50/12,13

மேல்

குரை (2)

கூடல் பெருமான் குரை கழல் கூறும் – கல்லாடம்:2 57/26
கூடற்கு இறையோன் குரை கழல் படையால் – கல்லாடம்:2 60/21

மேல்

குரைப்பு (1)

அதிர் குரைப்பு அடக்கி இல் புறத்து அணைந்த நம் – கல்லாடம்:2 83/26

மேல்

குல (12)

மணத்தலின் மதி குல மன்னவன் ஆகியும் – கல்லாடம்:2 9/13
கூடல் நின்று ஏத்தினர் குல கிளை போல – கல்லாடம்:2 14/36
குல வாழ்த்து விம்ம மண அணி பக்கம் – கல்லாடம்:2 18/33
ஆசையின் செறிந்த பொங்கர் குல தாய் – கல்லாடம்:2 46/2
தெய்வ குல புகை விண்ணொடும் விம்ம – கல்லாடம்:2 47/5
கூவிளம் கண்ணியில் குல கிளை முரற்றியும் – கல்லாடம்:2 54/3
மலை சூழ் கிடந்த பெரும் குல பரப்பை – கல்லாடம்:2 54/31
உழவ கணத்தை குல குடி புகுத்தும் – கல்லாடம்:2 54/35
குதலை வாய் துடிப்ப குல கடை உணங்கியும் – கல்லாடம்:2 56/21
குல மலை கன்னி என்று அருள் குடியிருக்கும் – கல்லாடம்:2 66/20
குனித்து அருள் நாயகன் குல மறை பயந்தோன் – கல்லாடம்:2 76/18
கூடல் ஒப்புடையாய் குல உடு தடவும் – கல்லாடம்:2 77/17

மேல்

குலத்து (2)

இறையவன் குலத்து முறையர் இன்மையினால் – கல்லாடம்:2 55/16
மறி குலத்து உழையின் விழி நோக்கினளே – கல்லாடம்:2 70/22

மேல்

குலம் (10)

மதி குலம் வாய்த்த மன்னவன் ஆகி – கல்லாடம்:2 12/14
திங்கள் வாழ் குலம் தங்கும் வேந்தற்கும் – கல்லாடம்:2 17/15
இட்ட வெம் கொடும் சிறை பட்ட கார் குலம்
தளையொடு நிறை நீர் விடுவன போல – கல்லாடம்:2 20/33,34
புள் குலம் பொய்கை-வாய் தாள்கொள – கல்லாடம்:2 38/4
புள் குலம் சூழ்ந்த பொருப்பு உடை குறவர்-தம் – கல்லாடம்:2 51/11
இவளே கடம் பெறு கரி குலம் மடங்கல் புக்கு அகழ – கல்லாடம்:2 51/19
எடுத்தெடுத்து உந்தி மணி குலம் சிதறி – கல்லாடம்:2 68/17
பருகிய முகில் குலம் படிந்து கண்படுத்தும் – கல்லாடம்:2 72/23
விளர்த்துநின்று அணங்கி வளை குலம் முழங்கும் – கல்லாடம்:2 75/15
நிலம் படர் தோகை குலம் கொள் சேதாவும் – கல்லாடம்:2 87/22

மேல்

குலமீன் (1)

மலரவன் பனிக்கும் கவினும் குலமீன்
அருகிய கற்பும் கருதி உள் நடுங்கி – கல்லாடம்:2 74/1,2

மேல்

குலமே (1)

மரகதம் சினைத்த சிறை மயில் குலமே
நீல போதும் பேதையும் விழித்த – கல்லாடம்:2 81/33,34

மேல்

குலவன் (1)

பனி கதிர் குலவன் பயந்து அருள் பாவையை – கல்லாடம்:2 10/17

மேல்

குலவிய (2)

பெரும் களவு இணர் தந்து அவை கீழ் குலவிய
விட மா கொன்ற நெடு வேல் குளவன் – கல்லாடம்:2 83/8,9
ஒரு நடம் குலவிய திருவடி உரவோன் – கல்லாடம்:2 88/36

மேல்

குலவியும் (1)

ஆட்டியும் அணைத்தும் கூட்டியும் குலவியும்
ஏந்தியும் எடுத்தும் ஒழுக்கியும் ஈர்த்தும் – கல்லாடம்:2 54/14,15

மேல்

குலனும் (2)

இறை இருந்து உதவா நிறை வளை குலனும்
பெருஞ்சூடகமும் ஒருங்கு பெற்று அணிக – கல்லாடம்:2 14/40,41
ஒழுக்கமும் குலனும் அமுக்கு அறு தவமும் – கல்லாடம்:2 42/11

மேல்

குலனுள் (1)

பெண் என பெயரிய பெருமகள் குலனுள்
உணா நிலன் உண்டு பராய அ பெரும் தவம் – கல்லாடம்:2 62/1,2

மேல்

குலனொடு (1)

கோவியர் அளையுடன் குலனொடு குளிர்ப்ப – கல்லாடம்:2 94/13

மேல்

குலிதம் (1)

குருவி விண் இசைக்கும் அந்தர குலிதம்
புறப்படு பொதுவுடன் முல்லையில் கூட்டி – கல்லாடம்:2 100/19,20

மேல்

குலை (5)

சூடு நிலை உயர்த்தும் கடும் குலை ஏற – கல்லாடம்:2 27/26
சுருள் விரி சாலியும் குலை அரம்பையுமே – கல்லாடம்:2 59/21
பெரும் குலை மணந்த நிறை நீர் சிறை புனல் – கல்லாடம்:2 63/3
மலை முதுகு அன்ன குலை முகடு ஏறி – கல்லாடம்:2 74/20
பரும் குலை கயத்துள் கரும் தாள் கழுநீர் – கல்லாடம்:2 99/55

மேல்

குலைப்ப (1)

காலம் கருதி தோன்றி கை குலைப்ப
துன்பு பசப்பு ஊரும் கண் நிழல்-தன்னை – கல்லாடம்:2 20/7,8

மேல்

குவட்டினும் (1)

கொண்டல் வந்து உலவும் நீல குவட்டினும்
கோடை சென்று உடற்றும் கொல்லி கிரியினும் – கல்லாடம்:2 52/12,13

மேல்

குவட்டு (1)

முலை குவட்டு ஒழுக்கிய அருவி தண் தரளம் – கல்லாடம்:2 44/9

மேல்

குவடு (1)

முலை என இரண்டு முரண் குவடு மரீஇ – கல்லாடம்:1 2/35

மேல்

குவலய (1)

குவலய திரு மலர் கொணர்ந்து கொடுத்தும் – கல்லாடம்:2 9/27

மேல்

குவளை (10)

மது இதழ் குவளை என்று அடு கண் மலர்ந்த – கல்லாடம்:2 13/13
பைம் குவளை துய்க்கும் செம் கண் கவரி – கல்லாடம்:2 27/27
குவளை பாசடை முண்டகம் உழக்கி – கல்லாடம்:2 37/18
பாசடை குவளை சுழல் மண காட்டினை – கல்லாடம்:2 54/24
குவளை அம் காட்டு குருகொடு புதாவே – கல்லாடம்:2 59/17
எதிர் சுனை குவளை மலர் புறம் பறித்து – கல்லாடம்:2 68/27
அவர் கரும் கண் என குவளை தழை பூத்த – கல்லாடம்:2 74/10
குவளை நின்று அலர்ந்த மறை எழு குரலோன் – கல்லாடம்:2 74/24
மரு வளர் குவளை மலர்ந்து முத்து அரும்பி – கல்லாடம்:2 77/1
குவளை வடி பூத்த கண் தவள வாள் நகை – கல்லாடம்:2 89/2

மேல்

குவளையின் (1)

சே இதழ் குவளையின் நிரைநிரை உறங்கும் – கல்லாடம்:2 51/8

மேல்

குவளையும் (1)

சே இதழ் முளரியும் கார் இதழ் குவளையும்
ஓர் உழை கண்ட உவகையது என்ன – கல்லாடம்:2 6/32,33

மேல்

குவால் (1)

குளிர் வெண் தரள குவால் இவை காண்க – கல்லாடம்:2 69/16

மேல்

குவி (1)

கண்ட நீள் கதுப்பினர் கை குவி பிடித்து – கல்லாடம்:2 45/21

மேல்

குவித்த (2)

விரித்த தாமரை குவித்த தாளோன் – கல்லாடம்:2 5/20
தாமரை குவித்த காமர் சீறடி – கல்லாடம்:2 90/2

மேல்

குவித்து (2)

இதழ் குவித்து பணித்த குதலையும் தெரியாது – கல்லாடம்:2 5/23
பொன்னம் பொகுட்டு தாமரை குவித்து
நிறை அளி புரக்கும் புது முகத்து அணங்கு நின் – கல்லாடம்:2 49/3,4

மேல்

குவித்தும் (3)

ஒரு விரல் தெறித்தும் ஐ விரல் குவித்தும்
பெரு வாய் ஒரு முக படகம் பெருக்க – கல்லாடம்:2 8/13,14
கண் மலர் கவர்ந்தும் கை மலர் குவித்தும்
நெட்டுயிர்ப்பு எறிய முலை-முகம் நெருக்கியும் – கல்லாடம்:2 48/18,19
குமுதம் அலர்த்தியும் கமலம் குவித்தும்
கடல் சூழ் உலகில் மதி நடு இகந்தும் – கல்லாடம்:2 60/9,10

மேல்

குவிந்த (1)

இரு தலை குவிந்த நெட்டு உடல் தண்ணுமை – கல்லாடம்:2 8/21

மேல்

குவிந்தவும் (1)

விரிந்தவும் குவிந்தவும் விளரியில் வைத்து – கல்லாடம்:2 100/21

மேல்

குவிய (1)

அருள் முக திருவொடு மலர் முகம் குவிய
மரகத பாசடை இடையிடை நாப்பண் – கல்லாடம்:2 64/24,25

மேல்

குவை (2)

பொன் குவை தருமிக்கு அற்புடன் உதவி – கல்லாடம்:2 1/12
குரவம் மலர்ந்த குவை இருள் குழலி – கல்லாடம்:2 12/1

மேல்

குவையும் (1)

குடுமி அம் தழலும் அவண் இருள் குவையும்
முளைவரும் பகனும் அதனிடை மேகமும் – கல்லாடம்:2 6/30,31

மேல்

குழகன் (1)

குழகன் குன்ற கூடல் அம் பதி நிறை – கல்லாடம்:2 50/26

மேல்

குழந்தை (1)

குழந்தை அன்பினொடு சென்னி-தலை கொள்ளுதும் – கல்லாடம்:1 2/57

மேல்

குழம்ப (1)

மறி திரை பரவை புடை வயிறு குழம்ப
துலக்கு மலை ஒருநாள் கலக்குவ போல – கல்லாடம்:2 29/12,13

மேல்

குழம்பகம் (1)

செறி இருள் குழம்பகம் சென்று பளிங்கு எடுத்த – கல்லாடம்:2 85/17

மேல்

குழமக (1)

குழமக குறித்தும் சில மொழி கொடுத்தும் – கல்லாடம்:2 85/5

மேல்

குழல் (11)

குழல் காடு சுமந்த யானைமகள் புணர்ந்தோய் – கல்லாடம்:1 2/36
கள் அவிழ் குழல் சேர் கருணை எம்பெருமான் – கல்லாடம்:2 1/14
குரவம் சுமந்த குழல் விரித்திருந்து – கல்லாடம்:2 6/23
வெண் நகை கரும் குழல் செம் தளிர் சீறடி – கல்லாடம்:2 26/3
வெண் நகை செவ் வாய் கரும் குழல் மகளிர் – கல்லாடம்:2 32/11
குழல் என மலர் என மயல்வர சுமந்து – கல்லாடம்:2 33/2
கரும் குழல் பெரு மணம் போல – கல்லாடம்:2 35/17
கரும் குழல் செவ் வாய் சிற்றிடை மடந்தைக்கு – கல்லாடம்:2 47/1
மஞ்சு அடை குழல் பெறு செம் சடை பெருமான் – கல்லாடம்:2 50/27
செம் மலர் குழல் இவள் போய் அறிவுறுத்த – கல்லாடம்:2 73/25
அமுத வாய் கடு விழி குறும் தொடி நெடும் குழல்
பெரும் தோள் சிறுநகை முன்னையள் அல்லள் – கல்லாடம்:2 98/48,49

மேல்

குழலி (1)

குரவம் மலர்ந்த குவை இருள் குழலி
இருவேம் ஒருகால் எரி அதர் இறந்து – கல்லாடம்:2 12/1,2

மேல்

குழலும் (2)

கடவுள் கூறார் உளம் என குழலும்
கொன்றை புறவு அகற்றி நின்ற இருள் காட்டின – கல்லாடம்:2 1/20,21
கல்லா தவறு உளம் புல்லிய குழலும்
இ மனை நிறை புகுந்து எழில் மணம் புணர – கல்லாடம்:2 15/2,3

மேல்

குழலையும் (1)

ஐம்பால் குழலையும் அணி நிலை கூட்டுக – கல்லாடம்:2 14/45

மேல்

குழலொடும் (1)

வெள்ளியம் பொதுவில் கள் அவிழ் குழலொடும்
இன்ப நடம் புரியும் தேவ நாயகன் – கல்லாடம்:2 26/27,28

மேல்

குழவி (4)

எரி தளிர்த்து அன்ன வேணியில் குழவி
பசும் பிறை அமுதொடு நிரம்பியது என்ன – கல்லாடம்:2 85/33,34
வயிறு வாய்த்து அழகு குழவி அம் கிழவோன் – கல்லாடம்:2 86/22
கையடை கொடுத்த வெள் நிண வாய் குழவி
ஈம பெரு விளக்கு எடுப்ப மற்று அதன் – கல்லாடம்:2 88/18,19
குழவி அம் கதிர் பெற திருமலர் அணங்க – கல்லாடம்:2 94/25

மேல்

குழவிக்கு (1)

தூணம் பயந்த மாண் அமர் குழவிக்கு
அரக்கர் கூட்டத்து அமர் விளையாட – கல்லாடம்:2 5/16,17

மேல்

குழவியும் (1)

திரு எனும் குழவியும் அமுது எனும் பிள்ளையும் – கல்லாடம்:2 65/3

மேல்

குழவியொடு (1)

மானின் குழவியொடு கெடவரல் வருத்தியும் – கல்லாடம்:2 17/3

மேல்

குழற (2)

வளை கண் கூகையும் மயங்கி வாய் குழற
ஆசையின் தணியா அழல் பசி தணிக்க – கல்லாடம்:2 7/23,24
தேவர் கண் பனிப்ப முனிவர் வாய் குழற
கல்லவடத்திரள் மணி வாய் தண்ணுமை – கல்லாடம்:2 34/8,9

மேல்

குழி (6)

குழி கண் கரும் பேய் மகவு கண் முகிழ்ப்ப – கல்லாடம்:2 7/26
மலை குஞ்சரத்தின் கட குழி ஆகி – கல்லாடம்:2 22/7
குழி கண் பரூஉ தாள் கூர்ம் கோட்டு ஒருத்தல் – கல்லாடம்:2 32/14
மந்திர தழல் குழி தொட்டு வயிறு வருந்தி – கல்லாடம்:2 33/14
குழி விழி பிறழ் பல் தெற்றல் கரும் கால் – கல்லாடம்:2 34/2
உரல் குழி நிரைத்த கல் அறை பரப்பும் – கல்லாடம்:2 42/6

மேல்

குழிய (1)

பாசறை சென்ற நாள் நிலம் குழிய
எண்ணி விரல் தேய்ந்த செம் கரம் கூப்புக – கல்லாடம்:2 94/38,39

மேல்

குழியாது (1)

வரி கொடு மதர்த்த கண் குழியாது
குறிபடு திங்கள் ஒரு பதும் புகாது – கல்லாடம்:2 5/13,14

மேல்

குழியும் (1)

அருவி உடல் கயிறும் சுனை மத குழியும்
பெரும் தேன் செவியும் கரும் தேன் தொடர்ச்சியும் – கல்லாடம்:2 26/29,30

மேல்

குழிவாங்கி (1)

வயிறு குழிவாங்கி அழு முகம் காட்டாது – கல்லாடம்:2 21/44

மேல்

குழிவு (1)

மத்தக குழிவு காசம் இலைச்சுமி – கல்லாடம்:2 98/23

மேல்

குழீஇ (1)

விழி உடை தொண்டர் குழீஇ முடி தேய்ப்ப – கல்லாடம்:2 92/4

மேல்

குழு (1)

சுரி முக குழு வளை நிலவு எழ சொரிந்த – கல்லாடம்:2 69/15

மேல்

குழுமி (1)

எங்கையர் குழுமி எமக்கும் தங்கையை – கல்லாடம்:2 90/14

மேல்

குழுவினுக்கு (1)

குழுவினுக்கு உடைந்து குளிர் மதி ஒதுங்க – கல்லாடம்:2 55/3

மேல்

குழுவினை (1)

விண் தொட எழுந்து விழும் திரை குழுவினை
அரி வினைக்கு அடங்கிய மலை இனம் வரவு என – கல்லாடம்:2 72/29,30

மேல்

குழுவுடன் (1)

வரை_அரமாதர் குழுவுடன் அருந்த – கல்லாடம்:2 22/17

மேல்

குழுவும் (4)

பெரும் தவர் குழுவும் அரும் கதி இருப்பும் – கல்லாடம்:2 24/20
நந்து இன குழுவும் வளம்-வயின் நந்தி – கல்லாடம்:2 60/19
அன்ன குழுவும் குருகு அணி இனமும் – கல்லாடம்:2 67/2
அதர்-தொறும் குழுவும் அவற்றினும் மற்றவன் – கல்லாடம்:2 96/6

மேல்

குழை (11)

சிறுகாற்று உழலும் அசை குழை செவிய – கல்லாடம்:1 1/18
கல் செறி பாசியின் சினை குழை பொதுளி – கல்லாடம்:1 2/9
குழை பொடி கூவையின் சிறை சிறை தீந்த – கல்லாடம்:2 7/20
குழை உடல் தலை விரி கைத்திரி கறங்க – கல்லாடம்:2 8/12
நெடும் குழை கிழிப்ப கடும் கயல் பாயும் – கல்லாடம்:2 27/30
சுழல் விழி சிறுநகை குட வயிற்று இரு குழை
சங்க குறும் தாள் பாரிடம் குனிப்ப – கல்லாடம்:2 34/6,7
இரு குழை கிழிக்கும் அரி மதர் மலர் கண் – கல்லாடம்:2 41/49
மென் நடை குழை செவி பெறா வெறும் கரும் பிடி – கல்லாடம்:2 42/3
மயிர்_குறை_கருவி துணை குழை அலைப்ப – கல்லாடம்:2 43/16
புன்னை அம் பொதும்பர் குழை முகம் குழை-முகம் – கல்லாடம்:2 72/19
மங்கையர் குழை பெறு வள்ளையில் தடைகொண்டு – கல்லாடம்:2 74/9

மேல்

குழை-முகம் (1)

புன்னை அம் பொதும்பர் குழை முகம் குழை-முகம்
கரும் திரை சுமந்து எறி வெண் தரளத்தினை – கல்லாடம்:2 72/19,20

மேல்

குழைத்து (2)

மை குழைத்து அன்ன தொள்ளி அம் செறுவில் – கல்லாடம்:2 36/1
இலவு அலர் தூற்றி அனிச்சம் குழைத்து
தாமரை குவித்த காமர் சீறடி – கல்லாடம்:2 90/1,2

மேல்

குழைய (1)

கழை தோள் நெகிழ தழை உடல் குழைய
திரை எதிர் தள்ளி மலர் துகில் கண் புதைத்து – கல்லாடம்:2 87/11,12

மேல்

குளம் (1)

சேண் குளம் மலர்ந்த செந்தாமரையும் – கல்லாடம்:2 29/27

மேல்

குளவன் (3)

விட மா கொன்ற நெடு வேல் குளவன்
குன்று அமர் வள்ளி அம் கொடியொடு துவக்கி – கல்லாடம்:2 83/9,10
புகர் இலை நெடு வேல் அறு முக குளவன்
தகரம் கமழும் நெடு வரை காட்சி – கல்லாடம்:2 98/55,56
குளவன் வீற்றிருந்த வளர் புகழ் குன்றமும் – கல்லாடம்:2 100/4

மேல்

குளி (1)

அரை பெற பிணித்த கல் குளி மாக்கள் – கல்லாடம்:2 43/2

மேல்

குளிக்குநர் (1)

சுரி வளை குளிக்குநர் கலனிடை செறிந்தும் – கல்லாடம்:2 72/25

மேல்

குளிக்கும் (2)

படும் அழல் நீக்க குடகடல் குளிக்கும்
நா வாய் குறியா தீ வாய் பாலையில் – கல்லாடம்:2 17/52,53
அறுகால் குளிக்கும் மது தொடை ஏந்த – கல்லாடம்:2 30/9

மேல்

குளிசெய்யும் (1)

பிடி குளிசெய்யும் களிறது போல – கல்லாடம்:2 55/27

மேல்

குளித்து (2)

கும்பம் மூழ்கி உடல் குளித்து ஓட – கல்லாடம்:2 4/18
நெய் குளித்து அகற்றும் நெடு வேல் விடலை – கல்லாடம்:2 6/3

மேல்

குளிப்ப (1)

கரு முகில் விளர்ப்ப அறல் நீர் குளிப்ப
கண் புதை யாப்பு திணி இருள் விடிய – கல்லாடம்:2 45/18,19

மேல்

குளிர் (10)

கொண்டு குளிர் பரந்த மங்குல் வாவிக்குள் – கல்லாடம்:2 21/8
குளிர் நிழல் இருந்து குண செயல் மூன்றும் – கல்லாடம்:2 53/11
குழுவினுக்கு உடைந்து குளிர் மதி ஒதுங்க – கல்லாடம்:2 55/3
படர்ந்து எறி கங்கை விடும் குளிர் அகற்றும் – கல்லாடம்:2 59/4
குளிர் வெண் தரள குவால் இவை காண்க – கல்லாடம்:2 69/16
குளிர் மணல் கேணியுள் கொம்பினர் படர்ந்தும் – கல்லாடம்:2 72/31
விதிர் ஒளி காற்ற கனல் குளிர் மழுவும் – கல்லாடம்:2 77/15
ஆர பொதும்பர் அடை குளிர் சாரல் – கல்லாடம்:2 81/29
மது குளிர் மத்தமும் மிலைத்து ஒரு மறு பிறை – கல்லாடம்:2 85/35
குளிர் நிழல் அடவி இறைகொண்டு அகன்ற பின் – கல்லாடம்:2 93/18

மேல்

குளிர்க்கு (1)

வளைந்து நின்று உடற்றும் மலி குளிர்க்கு உடைந்து – கல்லாடம்:2 100/1

மேல்

குளிர்கொண்டு (1)

குளிர்கொண்டு உறையும் தெளி நீர் வாவியை – கல்லாடம்:2 7/36

மேல்

குளிர்ச்சி (1)

குளிர்ச்சி நீங்கி கொடுங்கோல் வேந்து என – கல்லாடம்:2 86/8

மேல்

குளிர்ந்த (1)

நீடி செறிந்து நெய்த்து உடல் குளிர்ந்த
கரும் குழல் பெரு மணம் போல – கல்லாடம்:2 35/16,17

மேல்

குளிர்ப்ப (1)

கோவியர் அளையுடன் குலனொடு குளிர்ப்ப
காயா கண்கொள முல்லை எயிறு உறழ – கல்லாடம்:2 94/13,14

மேல்

குளிர (1)

நிலமகள் உடலமும் திங்களும் குளிர
ஒலி கடல் இப்பி தரளம் சூல்கொள – கல்லாடம்:2 94/28,29

மேல்

குளிரின் (1)

கரும் பெயல் குளிரின் களி மயில் என்ன – கல்லாடம்:2 84/13

மேல்

குளிரும் (2)

பெரும் தீ குணனும் ஒழிந்து உளம் குளிரும்
இ பெரு நன்றி இன்று எற்கு உதவுதி – கல்லாடம்:2 65/24,25
நன்னரில் கொண்டு குளிரும் பெறுமே – கல்லாடம்:2 86/38

மேல்

குளிரொடு (1)

கொழும் சினை மிடைந்து குளிரொடு பொதுளிய – கல்லாடம்:2 81/4

மேல்

குளிறலும் (1)

பொங்கர் கிடந்த சூல் கார் குளிறலும்
வல்லியை பரியும் பகடு விடு குரலும் – கல்லாடம்:2 39/11,12

மேல்

குளிறு (1)

காருடன் மிடைந்த குளிறு குரல் கண முகில் – கல்லாடம்:2 46/13

மேல்

குளிறும் (1)

முதிர் புயல் குளிறும் எழு மலை புக்க – கல்லாடம்:2 8/3

மேல்

குற்றம் (3)

பேசுறு குற்றம் அசைவொடும் மாற்றி – கல்லாடம்:2 21/49
இரு_நான்கு குற்றம் அடி அற காய்ந்து இவ் – கல்லாடம்:2 40/6
எட்டும் தரித்து விட்டு அறு குற்றம்
அருச்சனை வணக்கம் பர உயிர்க்கு அன்பு அகம் – கல்லாடம்:2 86/30,31

மேல்

குற்றமும் (3)

கோறல் என்று அயலினர் குறித்தன குற்றமும்
நன்று அறி கல்வியர் நாட்டுறு மொழி புக்கு – கல்லாடம்:2 75/26,27
முந்திய நூலில் மொழிந்தன குற்றமும்
சாதக புள்-கண் தாமரை கழுநீர் – கல்லாடம்:2 98/26,27
ஆங்கு ஒரு பதின்மூன்று அடைந்தன குற்றமும்
இவை என கூறிய நிறை அருள் கடவுள் – கல்லாடம்:2 98/44,45

மேல்

குற்றிலை (1)

நெடும் தாள் குற்றிலை வாகை நெற்று ஒலிப்ப – கல்லாடம்:2 7/28

மேல்

குற்றுழி (2)

நெடும் கால் குற்றுழி இதண் உழை காத்தும் – கல்லாடம்:2 28/16
நெடும் கால் குற்றுழி நிழல் வைப்பு இதணே – கல்லாடம்:2 81/44

மேல்

குற (2)

தழை குற மங்கையர் ஐவனம் துவைக்கும் – கல்லாடம்:2 42/5
குற மகார் கொழிக்கும் கழை நித்திலமும் – கல்லாடம்:2 50/17

மேல்

குறத்தி (1)

வேல்மகன் குறத்தி மா மதி முதியோள் – கல்லாடம்:2 7/11

மேல்

குறத்தியர் (1)

குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து – கல்லாடம்:2 42/24

மேல்

குறமகள் (1)

குஞ்சர கோதையும் குறமகள் பேதையும் – கல்லாடம்:2 73/9

மேல்

குறவ (1)

குறவரும் குறவ துணையரும் ஆகி – கல்லாடம்:2 78/11

மேல்

குறவர் (2)

செம் கண் குறவர் கரும் காட்டு வளர்த்த – கல்லாடம்:1 2/37
குன்ற குறவர் கொம்பினுக்கு இனியன் – கல்லாடம்:2 86/20

மேல்

குறவர்-தம் (1)

புள் குலம் சூழ்ந்த பொருப்பு உடை குறவர்-தம்
பெரும் தேன் கவரும் சிறுகுடி மகளே – கல்லாடம்:2 51/11,12

மேல்

குறவரும் (1)

குறவரும் குறவ துணையரும் ஆகி – கல்லாடம்:2 78/11

மேல்

குறள் (1)

இருள் குறள் ஊன்றி எம் அருள் களி ஆற்றி – கல்லாடம்:2 85/24

மேல்

குறளினை (1)

கார் உடல் பெற்ற தீ விழி குறளினை
உரிசெய்து உடுத்து செம் கரம் தரித்து – கல்லாடம்:2 33/17,18

மேல்

குறி (23)

மொழி குறி கூடா செவ் வேலோயே – கல்லாடம்:2 5/33
அடும் தழல் மாற்றிய கால் குறி இவணே – கல்லாடம்:2 6/44
வளர் குறி மயங்கா வணிகன் ஆகியும் – கல்லாடம்:2 9/15
அருள் குறி நிறுவி அருச்சனை செய்த – கல்லாடம்:2 12/17
பழம் குறி கண்ட நெடும் கண் மாதரும் – கல்லாடம்:2 16/2
பெரும் தேன் இறாலொடு குறி விழ எறிந்தும் – கல்லாடம்:2 22/34
பல குறி பெற்று இவ் உலகு உயிர் அளித்த – கல்லாடம்:2 39/6
கொண்டோற்கு ஏகும் குறி உடை நல் நாள் – கல்லாடம்:2 42/17
காண் குறி பெருத்து கச்சது கடிந்தே – கல்லாடம்:2 45/4
நால் நூல் மாக்கள் நணி குறி சொற்று – கல்லாடம்:2 47/7
விண்டு உயிர் சோர்ந்த குறி நிலை மயக்கே – கல்லாடம்:2 49/21
கூடற்கு இறையோன் குறி உரு கடந்த – கல்லாடம்:2 67/24
வந்தனை என்னில் வரு குறி கண்டிலன் – கல்லாடம்:2 71/34
கூடி நின்றனை எனின் குறி தவறாவால் – கல்லாடம்:2 71/36
கொலை கொண்டு ஆழி குறி உடன் படைத்து – கல்லாடம்:2 80/15
கவலையும் கால் குறி கண்டு பொழில் துள்ளும் – கல்லாடம்:2 83/18
தெரிந்து அலர் கொய்தும் பொழில் குறி வினவியும் – கல்லாடம்:2 85/15
அவிகார குறி ஆகிய தன் குணம் – கல்லாடம்:2 86/29
பொரி குறி மட மான் சுழி தலை கவிழ – கல்லாடம்:2 94/11
கோளினர் போல குறி பல குறித்தே – கல்லாடம்:2 97/19
கொடுகொட்டிக்கு குறி அடுத்து எடுக்கும் – கல்லாடம்:2 99/9
நால் குறி புலவர் கூட்டு எழு நனி புகழ் – கல்லாடம்:2 99/50
சேய் குறி இனிய ஆயின் – கல்லாடம்:2 100/36

மேல்

குறி-கொல் (1)

கால குறி-கொல் அன்றியும் முன்னை – கல்லாடம்:2 70/15

மேல்

குறிக்குநரால் (1)

தேம் படர்ந்தனன் எனின் திசை குறிக்குநரால்
ஆதலின் நின் வரவு எனக்கே – கல்லாடம்:2 71/37,38

மேல்

குறிக்கும் (1)

மருளொடு குறிக்கும் புனல் அணி ஊர – கல்லாடம்:2 95/23

மேல்

குறிஞ்சி (1)

குறிஞ்சி பெரும் தேன் இறாலொடு சிதைத்து – கல்லாடம்:2 25/6

மேல்

குறிஞ்சியும் (1)

பாந்தளும் தரக்கும் பயில்தலின் குறிஞ்சியும்
முடை தலை எரி பொடி உடைமையின் பாலையும் – கல்லாடம்:2 64/16,17

மேல்

குறித்த (6)

உடல் தொடு குறியின் வரும் வழி குறித்த
மூதறி பெண்டிரும் தீதிலர் என்ப – கல்லாடம்:2 15/8,9
அவளே நீயாய் என் கண் குறித்த
தெருமரல் தந்த அறிவு நிலை கிடக்க – கல்லாடம்:2 22/23,24
பின்முன் குறித்த நம் பெரு மதி அழகு-கொல் – கல்லாடம்:2 70/18
குறித்த இவ் இடைநிலை ஒன்றே – கல்லாடம்:2 70/21
கண் என குறித்த கரும் கயல் கணத்தை – கல்லாடம்:2 82/38
திருநடம் குறித்த நம் பொரு புனல் ஊரனை – கல்லாடம்:2 90/13

மேல்

குறித்தன (2)

கோறல் என்று அயலினர் குறித்தன குற்றமும் – கல்லாடம்:2 75/26
குருவிந்தத்தில் குறித்தன நிறமும் – கல்லாடம்:2 98/34

மேல்

குறித்து (10)

கொய்யும் காலமும் நாள்பெற குறித்து
நிழலும் கொடுத்து அவர் ஈன்ற – கல்லாடம்:2 4/24,25
கோளொடு குறித்து வரும் வழி கூறிய – கல்லாடம்:2 15/4
வெண் கார் பெய்யும் நாள் குறித்து உழுநரும் – கல்லாடம்:2 47/10
மறித்து அவர் உயிர்பெற குறித்து உண்டருளி – கல்லாடம்:2 51/30
விண் குறித்து எழுந்து மேலவர் புடைத்து – கல்லாடம்:2 67/13
கூறா கற்பம் குறித்து நிலைசெய்த – கல்லாடம்:2 70/7
கோடி மூன்றில் குறித்து மணி குயிற்றி – கல்லாடம்:2 82/6
என குறித்து அறிகிலம் யாமே எமது – கல்லாடம்:2 89/14
கூடல் கூடார் குணம் குறித்து எனவே – கல்லாடம்:2 93/25
புற கால் மடித்து குறித்து எறி நிலையம் – கல்லாடம்:2 99/18

மேல்

குறித்தும் (2)

கொன்றை அம் துணரில் செவ்வழி குறித்தும்
வால் உழை எருக்கில் வளர் உழை பாடியும் – கல்லாடம்:2 54/1,2
குழமக குறித்தும் சில மொழி கொடுத்தும் – கல்லாடம்:2 85/5

மேல்

குறித்தே (2)

ஓதல் வேண்டும் புலன் பெற குறித்தே – கல்லாடம்:2 71/39
கோளினர் போல குறி பல குறித்தே
ஐந்து அமர் கதுப்பினள் அமை தோள் நசைஇ – கல்லாடம்:2 97/19,20

மேல்

குறிப்ப (1)

முதுக்குறை பெண்டிர் வரத்து இயல் குறிப்ப
வழி முதல் தெய்வதம் வரைந்து மற்று அதற்கு – கல்லாடம்:2 93/1,2

மேல்

குறிபடு (1)

குறிபடு திங்கள் ஒரு பதும் புகாது – கல்லாடம்:2 5/14

மேல்

குறியா (1)

நா வாய் குறியா தீ வாய் பாலையில் – கல்லாடம்:2 17/53

மேல்

குறியாய் (1)

அறிவோர் காணும் குறியாய் இருந்தன – கல்லாடம்:2 18/13

மேல்

குறியின் (2)

உடல் தொடு குறியின் வரும் வழி குறித்த – கல்லாடம்:2 15/8
குச்சையின் மத்தக குறியின் ஓரத்தின் – கல்லாடம்:2 98/18

மேல்

குறியினர் (1)

கொன்று உணல் அஞ்சா குறியினர் போகும் – கல்லாடம்:2 53/4

மேல்

குறியினோளும் (1)

நெல் பிடித்து உரைக்கும் குறியினோளும்
நடுங்கு அஞர் உற்ற பழங்கண் அன்னையரும் – கல்லாடம்:2 30/3,4

மேல்

குறியுடன் (1)

கொடுத்த மெய் பிண்டம் குறியுடன் தோன்றிய – கல்லாடம்:2 81/20

மேல்

குறியும் (2)

இன்பு அமர் சொல்லி நண்பும் மன குறியும்
வாய்மையும் சிறப்பும் நிழல் என கடவார் – கல்லாடம்:2 58/8,9
நிறைதரு நான்கின் நிகழ்ந்தன குறியும்
குருவிந்தம் செளகந்தி கோவாங்கு – கல்லாடம்:2 98/13,14

மேல்

குறியே (1)

அன்னையர்க்கு உதவல் வேண்டும் இ குறியே – கல்லாடம்:2 40/25

மேல்

குறியை (2)

என் முகம் அளக்கும் கால் அ குறியை
தாமரை கண்ணால் உட்புக அறிந்தும் – கல்லாடம்:2 18/36,37
கால குறியை மனம் தடுமாறி – கல்லாடம்:2 70/17

மேல்

குறியோ (1)

கண்ட காட்சி சேணின் குறியோ
என்னுழி நிலையா உள்ளத்தின் மதியோ – கல்லாடம்:2 22/1,2

மேல்

குறு (1)

மஞ்சு அடை கிளைத்த வரி குறு முள் தாள் – கல்லாடம்:2 89/5

மேல்

குறுகி (1)

மறி உயிர் உண்ண குறுகி வந்திருந்த – கல்லாடம்:2 16/39

மேல்

குறுங்காய் (1)

நெட்டு இலை அரம்பை குறுங்காய் மானும் – கல்லாடம்:2 24/12

மேல்

குறுந்தொடியினர் (1)

தெளி வேல் கண் குறுந்தொடியினர் காணின் – கல்லாடம்:2 95/41

மேல்

குறுநகை (2)

இருள்மகள் கொண்ட குறுநகை போல – கல்லாடம்:2 38/6
கோலுடன் படரும் குறுநகை ஒருவி – கல்லாடம்:2 57/11

மேல்

குறுநரி (2)

வெடி வால் பைம் கண் குறுநரி இனத்தினை – கல்லாடம்:2 42/13
படர் காய்க்கு அணைந்த புன் கூழை அம் குறுநரி
உடையோர் திமிர்ப்ப வரும் உயிர்ப்பு ஒடுக்கி – கல்லாடம்:2 90/18,19

மேல்

குறும் (16)

கார் உடல் சிறுநகை குறும் தாள் பாரிடம் – கல்லாடம்:2 10/20
நெட்டு இலை குறும் புகர் குருதி வேலவ – கல்லாடம்:2 28/3
கடல் திரை உகளும் குறும் கயல் மானும் – கல்லாடம்:2 31/4
சங்க குறும் தாள் பாரிடம் குனிப்ப – கல்லாடம்:2 34/7
குறும் பார்ப்பு அணைக்கும் பெடையொடு வெரீஇ – கல்லாடம்:2 34/23
வீதிகுத்திய குறும் தாள் பாரிடம் – கல்லாடம்:2 41/1
பால் முக களவின் குறும் காய் பச்சிணர் – கல்லாடம்:2 43/14
நெடும் கயல் எறி விழி குறும் தொடி திருவினள் – கல்லாடம்:2 61/16
குறும் புதல் முண்டகம் கரும்பு என துய்த்து – கல்லாடம்:2 63/14
நெடும் கழி குறும் கயல் நெய்தலுள் மறைந்தும் – கல்லாடம்:2 72/18
நெடும் சடை குறும் சுடர் நீக்கி ஐந்து அடுக்கிய – கல்லாடம்:2 75/6
வேலி அம் குறும் சூல் விளை காய் பஞ்சு இனம் – கல்லாடம்:2 88/1
குறும் சொல் குதட்டிய மழலை மென் கிளவியில் – கல்லாடம்:2 88/9
குறும் தொடி மடந்தை நம் தோழியும் கேண்மோ – கல்லாடம்:2 89/3
வெறி குறும் கதுப்பின் வெள் எயிற்று எயிற்றியர் – கல்லாடம்:2 97/1
அமுத வாய் கடு விழி குறும் தொடி நெடும் குழல் – கல்லாடம்:2 98/48

மேல்

குறும்பிறை (2)

நெடும் சடை கிடந்த குறும்பிறை கொழுந்தும் – கல்லாடம்:2 15/23
குறும்பிறை முடித்த நெடும் சடை ஒருத்தனை – கல்லாடம்:2 83/13

மேல்

குறுமறி (1)

வேலன் சுழன்று குறுமறி அறுப்ப – கல்லாடம்:2 24/9

மேல்

குறுமுனி (3)

குறுமுனி தேற நெடு மறை விரித்தோய் – கல்லாடம்:1 2/49
குறுமுனி தேறவும் பெறு முதல் புலவர்கள் – கல்லாடம்:2 63/20
குறுமுனி பெறும் மறை நெடு மறை பெறா முதல் – கல்லாடம்:2 73/8

மேல்

குறுமுனிக்கு (1)

நிதி என கட்டிய குறுமுனிக்கு அருளுடன் – கல்லாடம்:2 65/11

மேல்

குறுமையும் (1)

குறுமையும் நெடுமையும் கோடல்பெற்று ஐதாய் – கல்லாடம்:2 82/4

மேல்

குறுவெயர் (1)

சிறிது நின் குறுவெயர் பெறும் அணங்கு ஆறி – கல்லாடம்:2 22/25

மேல்

குறுவெயிர்ப்பு (1)

குறுவெயிர்ப்பு ஒழுக்கு என பிறை அமுது எடுக்க – கல்லாடம்:2 16/5

மேல்

குறை (7)

குறை தரு பிறவியின் நிறை தரு கலக்கமும் – கல்லாடம்:1 1/37
மயிர்_குறை_கருவி துணை குழை அலைப்ப – கல்லாடம்:2 43/16
செய் குறை முடிப்பவர் செனனம் போல – கல்லாடம்:2 45/10
குறை மதி மனனே நிறைமதி புரையாது – கல்லாடம்:2 60/3
உவர் கடல் பிறந்தும் குறை உடல் கோடியும் – கல்லாடம்:2 60/4
குறை உளம் நீங்கி இன்பு ஆகுவனே – கல்லாடம்:2 68/34
அவர் குறை அன்றால் ஒருவன் படைத்த – கல்லாடம்:2 70/14

மேல்

குறைகொள (1)

கொலையினர் உள்ளமும் குறைகொள இருண்டு – கல்லாடம்:2 35/13

மேல்

குறைத்த (2)

எழு மதி குறைத்த முழுமதி கரும் கயல் – கல்லாடம்:2 18/17
மதியம் உடல் குறைத்த வெள்ளாங்குருகு இனம் – கல்லாடம்:2 78/1

மேல்

குறைபெற (1)

சிறிது உவா மதுவமும் குறைபெற அருந்தி அ – கல்லாடம்:2 95/21

மேல்

குறையா (1)

குறையா பாண்டில் வெண்மையின் மலர்ந்த – கல்லாடம்:2 21/11

மேல்

குறையாது (2)

கொள்ளுநர் கொள்ள குறையாது ஆதலின் – கல்லாடம்:2 11/21
திரு அஞ்செழுத்து குறையாது இரட்ட – கல்லாடம்:2 58/25

மேல்

குறையினர் (1)

நிறைய பேசா குறையினர் போலவும் – கல்லாடம்:2 20/40

மேல்

குன்ற (3)

பழமை நீண்ட குன்ற குடியினள் – கல்லாடம்:2 17/1
குழகன் குன்ற கூடல் அம் பதி நிறை – கல்லாடம்:2 50/26
குன்ற குறவர் கொம்பினுக்கு இனியன் – கல்லாடம்:2 86/20

மேல்

குன்றகம் (1)

வெள்ளி அம் குன்றகம் உள்ளுற புகுந்து ஒரு – கல்லாடம்:2 78/15

மேல்

குன்றத்து (2)

குருகு பெயர் குன்றத்து உடல் பக எறிந்த – கல்லாடம்:2 24/2
அருவி அம் குன்றத்து அணி அணி கூடற்கு – கல்லாடம்:2 71/13

மேல்

குன்றம் (9)

குன்றம் உடுத்த கூடல் அம் பதி இறை – கல்லாடம்:2 8/8
பொன் நெடும் குன்றம் மன்னிய தோளன் – கல்லாடம்:2 16/36
பேர் அருள் குன்றம் ஒரு-பால் பொலிந்த – கல்லாடம்:2 48/12
புண்ணிய குன்றம் புடை பொலி கூடல் – கல்லாடம்:2 61/12
பிறந்து அருள் குன்றம் ஒருங்குற பெற்ற – கல்லாடம்:2 73/11
மணி வேல் குமரன் திரு வளர் குன்றம்
பேர் அணி உடுத்த பெரு நகர் கூடல் – கல்லாடம்:2 81/14,15
கோயில்கொண்டிருந்த குண பெரும் குன்றம்
அரும் தவ கண்ணினோடு அடைந்த மா முனி-பால் – கல்லாடம்:2 81/16,17
வெள்ளி அம் குன்றம் விளங்க வீற்றிருந்த – கல்லாடம்:2 82/34
குன்றம் புடை வளர் கூடல் – கல்லாடம்:2 89/7

மேல்

குன்றமும் (4)

எம் ஊர் சேணும் நும் ஊர் குன்றமும்
பெரும் தவர் குழுவும் அரும் கதி இருப்பும் – கல்லாடம்:2 24/19,20
புள் பெயர் குன்றமும் எழு வகை பொருப்பும் – கல்லாடம்:2 70/1
நீர் மா கொன்ற சேயோன் குன்றமும்
கல்வியும் திருவும் காலமும் கொடியும் – கல்லாடம்:2 80/17,18
குளவன் வீற்றிருந்த வளர் புகழ் குன்றமும்
புதவு தொட்டு என தன் புயல் முதிர் கரத்தினை – கல்லாடம்:2 100/4,5

மேல்

குன்றவர் (1)

எம்முடை குன்றவர் தம் மனம் புகுத இ – கல்லாடம்:2 4/21

மேல்

குன்றா (1)

குன்றா வாய்மை நின்று நிலை காட்டி – கல்லாடம்:2 4/13

மேல்

குன்றாது (1)

கொலையினர்-கண்ணும் குன்றாது இயைந்து – கல்லாடம்:2 52/20

மேல்

குன்றி (1)

முயலின் சோரி சிந்துரம் குன்றி
கவிர் அலர் என்ன கவர் நிறம் எட்டும் – கல்லாடம்:2 98/32,33

மேல்

குன்றில் (1)

சருக்கரை குன்றில் தேன்மழை நான்று என – கல்லாடம்:2 21/37

மேல்

குன்றினன் (1)

கூடல் பதி வரும் குண பெரும் குன்றினன்
தாமரை பழித்த இரு சரண் அடையா – கல்லாடம்:2 97/17,18

மேல்

குன்று (5)

குன்று உடுத்து ஓங்கிய கூடல் அம் பதியோன் – கல்லாடம்:2 6/41
புண்ணியம் குமிழ்த்த குன்று உடை கூடல் – கல்லாடம்:2 70/8
குன்று அமர் வள்ளி அம் கொடியொடு துவக்கி – கல்லாடம்:2 83/10
நேமி அம் குன்று அகழ் நெடு வேல் காளையன் – கல்லாடம்:2 87/38
சேயோன் குன்று அக திரு பெறு கூடல் – கல்லாடம்:2 91/4

மேல்

குன்றும் (2)

குருவியும் குன்றும் குரும்பையும் வெறுத்த நின் – கல்லாடம்:2 53/8
குன்றும் அ சூளினர்-தம்மினும் கொடிதே – கல்லாடம்:2 92/23

மேல்

குனிக்கும் (1)

மனமும் கண்ணும் கனிய குனிக்கும்
புதிய நாயகன் பழ மறை தலைவன் – கல்லாடம்:2 18/8,9

மேல்

குனித்த (2)

மாறி குனித்த நீறு அணி பெருமாற்கு – கல்லாடம்:2 23/35
ஞெள்ளலில் குனித்த இரு மாத்திரைக்கு – கல்லாடம்:2 99/16

மேல்

குனித்து (2)

வில்லினை குனித்து கணையினை வாங்கி – கல்லாடம்:2 33/3
குனித்து அருள் நாயகன் குல மறை பயந்தோன் – கல்லாடம்:2 76/18

மேல்

குனிந்து (1)

கோளகை குடிலில் குனிந்து இடைந்து அப்புறத்து – கல்லாடம்:2 78/6

மேல்

குனிப்ப (3)

பாரிடம் குனிப்ப ஆடிய பெருமான் – கல்லாடம்:2 7/33
சங்க குறும் தாள் பாரிடம் குனிப்ப
தேவர் கண் பனிப்ப முனிவர் வாய் குழற – கல்லாடம்:2 34/7,8
அம்மை பெயர் பெறும் அருள் பேய் குனிப்ப
பூதமும் கூளியும் பேயும் நடிப்ப – கல்லாடம்:2 99/40,41

மேல்